என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 25 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 25ம் திருநாள்

2


நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும் 

25ம் திருநாள்

25.06.2015


139. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


தீபங்கள் ஒளிவீசும் திருக்கார்த்திகை-70


திருவாதிரைத் திருநாள்-71 பச்சைக்கிளிகள் பரவும் பக்த அனுமன்!-72140.  திரு.   சொ. ஞான சம்பந்தம் அவர்கள்
வலைத்தளம்: இலக்கியச் சாரல்


என் கப்பல் பயணம்
என்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை
நூற்பா வரிசை
புதிரோ புதிர் - நகைச்சுவைக் கதை

இவரின் மகளும், மருமகளும்
தமிழ் வலையுலகில் மிகப்பிரபலமான
இரு பதிவர்கள் என்பதில் என் மகிழ்ச்சிகள்
பலமடங்குகள் அதிகமாகியுள்ளன.

141. களம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்
வலைத்தளம்: 


http://gperumal1974.blogspot.in/2014/01/24.html
அபிராமி அந்தாதி
http://gperumal1974.blogspot.in/2014/03/blog-post_9.html
இரும்பைக்காய்ச்சி உருக்கிடுவீரே !
நீங்கள் செல்வந்தராக ஓர் யோசனை
திருவெம்பாவை

பல இதிகாச புராணங்களை 
பல கோணங்களில் மிக அழகாக 
அலசி ஆராய்ந்துள்ளவர்
என்பது இவரின் தனிச்சிறப்பாக
நான் உணர்கிறேன்.

142.   திரு. GMB ஐயா அவர்கள்
வலைத்தளம்: gmb writes


77 years young and vibrant, 
particular about values in life, love all,
always try to do better the next time, 
am an open book.

- G.M.B


http://gmbat1649.blogspot.in/2011/08/blog-post_23.html
ஜப்பானில் நான்
http://gmbat1649.blogspot.in/2014/04/blog-post_22.html
களவு கொடுத்த மற்றும் ஏமாந்த நிகழ்வுகள்
http://gmbat1649.blogspot.in/2015/03/blog-post_30.html
என்னையும் ஒரு பொருட்டாக
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

’வாழ்வின் விளிம்பில்’ 
என்ற தலைப்பில்
சிறுகதைத் தொகுப்பு நூல் 
வெளியிட்டுள்ளார்கள்.கடந்த ஐந்தே ஆண்டுகளில்
சுமார் 620க்கும் மேற்பட்ட 
பதிவுகளை 
மிகுந்த உற்சாகத்துடன் 
தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
143. புலவர் திரு. சா. இராமாநுசம் ஐயா அவர்கள்
வலைத்தளம்: புலவர் கவிதைகள்


ஆயிரம் ஆயிரம் பக்தர்கள் தினம் ஆடிப்பாடி வருகின்றார்

கந்துவட்டி மேலாகும் நாளு முயர்வே-

எம்மைக் கடங்காரன் ஆக்காதீர் கருணை காட்டும்!

பருவங்கள் மாறிட உலகமே மாறும்-

இதை படிக்கின்ற மாணவர் உணரவே கூறும்

விண்முட்டும் பலமாடி அடுக்கே எங்கும்-

நீண்ட வீதிகளின் இருமருங்கும் பெலிவாய் ஓங்கும்


மரபுக்கவிதைகள் படைப்பதில்
வல்லவர் + நல்லவர் இவர்144. திரு. சென்னை பித்தன் அவர்கள்
வலைத்தளம்: நான் பேச நினைப்பதெல்லாம்

சொடக்குப்போடும் நேரத்தில்
சிவப்பு விளக்கும் சின்னப் பையனும்
வாலிப, வயோதிக அன்பர்களே
வெவகாரம் வேலுச்சாமியும் செருப்பும்
நான் தான் சமையல்காரி அலமேலு!
என் விகடனில் என் வலைப்பூ

இவரின் படைப்புகள் மிகச்சிறியதாகவும்
அதே சமயம் நம்மை சிந்திக்க வைப்பதாகவும் 
இருப்பது உண்டு. 
மிகவும் உற்சாகமான எழுத்தாளர்.


145.  திரு. வே. நடன சபாபதி அவர்கள்
வலைத்தளம்: நினைத்துப்பார்க்கிறேன்


நினைவோட்டம் தொடர் - பகுதி-1
நினைவோட்டம் தொடர் - பகுதி-80

படித்தால் மட்டும் போதுமா

எல்லோரும் நல்லவரே

BOSSகள் பலவிதம்

வாடிக்கையாளர்களும் நானும்

மீண்டும் சந்தித்தோம்

போன்ற பல தலைப்புகளில் தன் அனுபவத்தினை 
தொடர் பதிவுகளாகக் கொடுத்துள்ளார்கள்.

தற்சமயம் இவர் எழுதிவரும் 
சுவாரஸ்யமானதோர் தொடரின் தலைப்பு:
’ஏமாற்றுவதும் ஒரு கலைதான்’

- பகுதி-1 க்கான இணைப்பு
- பகுதி-30 க்கான இணைப்பு

இந்தக்கட்டுரை மேலும் தொடர்கிறது .....


இவரின் அனுபவபூர்வமான பல படைப்புகள்
நம்மை நம் வாழ்க்கையில் ஏமாறாமல்
உஷாராக இருக்க மிகவும் உதவக்கூடியவை.146.  டாக்டர் திரு. M K முருகானந்தன்  அவர்கள்
வலைத்தளம்: ஹாய் நலமா?


நீரழிவினால் ஏற்படும் கண் பார்வை பாதிப்புகள்
செயற்கை இனிப்புகளை உபயோகிக்கலாமா?
அவை ஆபத்து அற்றவையா?
உயர் இரத்த அழுத்தம்
சில புதிய தகவல்கள்

உடல் ஆரோக்யம் பற்றிய 
இன்னும் ஏராளமான சுவையான செய்திகள் 
தாராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன
இவரின் பதிவுகளில்.

அனைவரும் படித்து பயன்பெறலாம்.


அமைதியான சாதனையாளர் 
147.  முனைவர் திரு. B. ஜம்புலிங்கம்  அவர்கள்
வலைத்தளங்கள்: 
Dr. B. Jambulingam
சோழ நாட்டில் பெளத்தம்

விக்கிபீடியா: 200ஆவது பதிவு, 5000ஆவது தொகுப்பு

இளைய மஹாமகம் தேரோட்டம்
திரிவேணி சங்கமம்

தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்
நாவுக்கரசர் தேவாரம் - ஐந்தாம் திருமுறை

இவர் வெளியிட்டுள்ள நூல்கள்

  
  
   
  

முழுக்க முழுக்க இவரின் பௌத்த ஆய்வு 
தொடர்பானவைகளைப் படிக்க: 

பௌத்தம் தவிர இவரின் 
பிற வாசிப்புகள் + அனுபவங்கள் படிக்க:

 

தணிக்கைக் குழு ஒன்று, மிகப்பெரியக் கத்திரிக்கோலுடன், எப்பொழுதும் தயாராய்க் காத்திருக்கும் விக்கிப்பீடியால் எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆதாரத்தைக் காட்டியாக வேண்டும், அடிக்குறிப்பு அவசியம் சேர்த்தே ஆக வேண்டும்.
இருப்பினும் நம் 


முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் 

ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாக 

தமிழ் விக்கிபீடியாவில் முழுதாய் 200 பதிவுகளை 

பதிவேற்றிச் சாதனை படைத்திருக்கிறார்.


அவருக்கு நம் ஸ்பெஷல் பாராட்டுகள்.


 148. சுய அறிமுகத்தில் சில ...

 

பெருங்’குடி’ மகன்களையும், ’குடி’வெறியர்களையும், 

அந்தக்குடிப்பழக்கம் மறக்க இப்போதெல்லாம் 

மன நோய்  மருத்துவ மனைகளுக்குக் கூட்டிச் சென்று 

ஏதேதோ வைத்தியம் செய்கிறார்கள். 


அந்தக்காலத்தில் நான் என் குடியை மறக்கவே 

என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்களாம். ஆமாங்க ............... :)மேலும் இதைப்பற்றி சுவாரஸ்யமாகப் படிக்க 


இதோ இணைப்புகள் ! 
       


 oooooOooooo 

மீண்டும் நாளை சந்திப்போம் !என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

50 கருத்துகள்:

 1. முதல் இருவரைத் தவிர மற்றவை நான் தொடரும் தளங்கள்....அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

  நினைவில் நிற்போர் - கலக்கலாக போய் கொண்கிருக்கிறது ஐயா.

  தங்களின் துள்ளலுக்கு வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்...

  நான் தானே 1 ஸ்ட்.....ஹஹஹா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. R.Umayal Gayathri June 25, 2015 at 12:22 AM

   வாங்கோ .. வணக்கம்.

   //முதல் இருவரைத் தவிர மற்றவை நான் தொடரும் தளங்கள்....அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   //நினைவில் நிற்போர் - கலக்கலாக போய் கொண்டிருக்கிறது ஐயா.//

   அப்படியா, சந்தோஷம். :)

   //தங்களின் துள்ளலுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்...//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! துள்ளலா !!

   ‘துள்ளாத மனமும் துள்ளும்...........
   சொல்லாத கதைகள் சொல்லும்....’

   என்ற திரைப்படப் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

   //நான் தானே 1 ஸ்ட்.....ஹஹஹா....//

   சாக்ஷாத் தாங்கள் மட்டுமே தான், ஃபர்ஸ்டூஊஊ :)

   மிக்க மகிழ்ச்சி எனக்கும்கூட.

   நீக்கு
 2. அப்பாடா...!! இப்போதுதான் எனக்கு தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அய்யா ஞான சம்பந்தன், அய்யா ஜி.எம்.பி., அய்யா ராமானுசம், அய்யா சென்னை பித்தன், அய்யா நடனசபாபதி, அய்யா ஜம்புலிங்கம் என்று இன்றைய பதிவர்களில் நிறைய பேர் எனக்கு அறிமுகமானவர்களே, அவர்களுக்கும் மற்றைய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  வழக்கம் போல் சினிமா பார்ப்பது போல் உற்சாகமாக இருக்கிறது தங்களின் பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @S.P. Senthil Kumar

   :) வாங்கோ, வணக்கம். :)

   //இன்றைய பதிவர்களில் நிறைய பேர் எனக்கு அறிமுகமானவர்களே//

   அப்பாடா !! இதைக்கேட்க எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

   //வழக்கம் போல் சினிமா பார்ப்பது போல் உற்சாகமாக இருக்கிறது தங்களின் பதிவு!//

   உற்சாகமான தங்களின் தினசரி வருகைக்கும் உற்சாகமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. செவ்வந்தித் தோட்டமா!.. நடந்;து சென்ற வலைப்பூவில் அய்யா ஞான சம்பந்தன், அய்யா ஜி.எம்.பி., அய்யா ராமானுசம், அய்யா சென்னை பித்தன், அய்யா நடனசபாபதி, அய்யா என்று எனக்கும் கருத்திடும் பலர் உள்ளனர். எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள் தாங்கள், மணிராஜ் உட்பட.
  அவர்கள் திறமைகள் வியக்க வைக்கின்றன.ஜம்புலிங்கம் என்று இன்றைய பதிவர்களில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @kovaikkavi

   :) வாங்கோ மேடம், வணக்கம்.

   ஹைய்யோ ... எவ்ளோ ’அய்யா’க்கள் போட்டுள்ளீர்கள் !!!!!

   ஆனால் ’ஐயா’ என்பதே மிகச்சரியான சொல் என அடித்துச் சொல்கிறார்கள், சில தமிழ் அறிஞர்கள் !

   எனினும் செவ்வந்தித்தோட்டத்திற்குள்ளும் இன்று வருகை தந்துள்ள, தங்களின் தொடர் வருகையும் கருத்துக்களும், அவர்கள் பலரின் திறமைகள்போல என்னையும் வியக்க வைக்கின்றன.

   தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 4. அறிமுகப்படுத்திய அனைவரும் நல்ல நல்ல பதிவுகளைத் தருவதில் வல்லவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @பழனி. கந்தசாமி

   :) வாங்கோ சார், வணக்கம்.

   வல்லவரும், நல்லவருமான தங்கள் மூலம் இதனைக் கேட்பதில் எனக்கோர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. :)

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 5. இன்றைய அறிமுகங்கள் எல்லாம்
  இளமைத் துள்ளலுடன் முதிர்ச்சியான
  பயனுள்ள தகவல்களைத் தருபவர்கள்
  என்பதால் நான் விரும்பித் தொடரும் பதிவர்கள்
  எனச் சொல்லிக் கொள்வத்ல் பெருமை கொள்கிறேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Ramani S

   :) வாங்கோ சார், வணக்கம்.

   இளமைத்துள்ளலுடன் முதிர்ச்சியான பயனுள்ள கருத்துக்களை தாங்கள் இங்கு பகிர்ந்துகொண்டுள்ளதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி + பெருமையே. :) மிக்க நன்றி, சார்.

   நீக்கு
 6. ஜி எம் பி ஸார், புலவர் ஐயா, சென்னை பித்தன், மருத்துவர் முருகானந்தம், முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் தளங்களுக்குச் சென்றிருக்கிறேன். பெருமாள் செட்டியார் அவர்கள் தளம் பார்க்க ஆவல் இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ஸ்ரீராம்.

   ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி. :)

   நீக்கு
 7. எனது தளங்களை அறிமுகப்படுத்தி, பெருமைப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள். தங்களது எழுத்து என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது. தங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்குவிப்பே என்னுடைய இவை போன்ற சிறு முயற்சிகளுக்குக் காரணம். அன்பிற்கு நன்றி. தொடர்ந்து எழுதுவேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dr B Jambulingam June 25, 2015 at 6:58 AM

   வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

   //எனது தளங்களை அறிமுகப்படுத்தி, பெருமைப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள். தங்களது எழுத்து என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது. தங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்குவிப்பே என்னுடைய இவை போன்ற சிறு முயற்சிகளுக்குக் காரணம். அன்பிற்கு நன்றி. தொடர்ந்து எழுதுவேன். நன்றி.//

   தங்களின் வலைத்தளங்கள் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். தங்களாலும் என் இந்தப் பதிவு புதிய பொலிவுடன் திகழ்வதாக நான் நினைத்து மகிழ்கிறேன். அதற்காகத் தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   தங்களின் தொடர் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   நீக்கு
 8. திருவாளர்கள் ஞானசம்பந்தம், பெருமாள் செட்டியார், முருகானந்தம் ஆகியோர் எனக்குப் புதியவர்கள். மற்றவர்கள் தொடர்பில உள்ளவர்களே. புதியவர்களின் தளங்களைச் சென்று பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி. நாளை சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 9. நினைவில் நிற்போர்
  போற்றுதலுக்கு உரியவர்கள்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @கரந்தை ஜெயக்குமார்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 10. என்னையும் நினைவில் வைத்திருப்பதற்கும் , மறவாமல் இங்கே குறிப்பிட்டு அறிமுகப்படத்திய அன்புக்கும் , என்றும் தலைவணங்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலவர் இராமாநுசம் June 25, 2015 at 7:17 AM

   வாங்கோ என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய புலவர் ஐயா, வணக்கம் ஐயா. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஐயா.

   //என்னையும் நினைவில் வைத்திருப்பதற்கும் , மறவாமல் இங்கே குறிப்பிட்டு அறிமுகப்படுத்திய அன்புக்கும் , என்றும் தலைவணங்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!//

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

   நீக்கு
 11. மூத்த பதிவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @திண்டுக்கல் தனபாலன்

   :) வாங்கோ Mr. DD Sir, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி :)

   நீக்கு
 12. ஐயா! தங்களது நினைவில் நிற்போர் வரிசையில் நானும் இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தங்களது தளத்தில் மிக பிரபலமான பதிவர்களோடு என்னையும் எனது பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசபாபதி June 25, 2015 at 7:33 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //ஐயா! தங்களது நினைவில் நிற்போர் வரிசையில் நானும் இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தங்களது தளத்தில் மிக பிரபலமான பதிவர்களோடு என்னையும் எனது பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல!//

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், சார்.

   தங்களின் அன்பான தினசரி வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிகள் சார்.

   நீக்கு
 13. உங்கள் நெஞ்சில் நின்ற பதிவர்களில் ஒருவனாக என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி கோபு சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. G.M Balasubramaniam June 25, 2015 at 7:45 AM

   வாங்கோ சார், வணக்கம்.

   //உங்கள் நெஞ்சில் நின்ற பதிவர்களில் ஒருவனாக என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி கோபு சார்//

   தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், சார்.

   நீக்கு
 14. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! இன்று அறிமுகமான வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள். எல்லோரும் எனக்கு அறிமுகம் ஆனவர்களே என்பது முக்கியமான தகவல்.

  அய்யா சொ. ஞான சம்பந்தம் அவர்களது இலக்கியம் சம்பந்த கட்டுரைகளை படித்து இருக்கிறேன். திரு G. பெருமாள் செட்டியார் அவர்களை, நீங்கள் நடத்திய சிறுகதை விமர்சனப் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற முறையில் எனக்கு அறிமுகம்.

  எனது ஆரம்பகால வலைப்பதிவுகளில் நான் தொடர்ந்து எழுத எனக்கு ஊக்கம் தந்தவர்களில் முக்கியமானவர் சென்னை பித்தன் அவர்கள். இன்றும் அவரது படைப்புகளை தொடர்ந்து படிக்கின்றேன்.

  அய்யா G.M.B அவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை; இவரது அனுபவங்கள் மற்றும் வாழ்வியல் கட்டுரைகளை தவறாமல் படிப்பவன் நான். மரபுக் கவிதைகள் படைத்து வரும் புலவர் ராமானுஜம் அய்யாவின் வாசகர்களில் நானும் ஒருவன்.

  அய்யா V.N.S (வே.நடனசபாபதி) அவர்களது ஒவ்வொரு கட்டுரையும் விழிப்புணர்வு தருபவை. படிக்கும் போதெல்லாம் “ஏ மா ற் றா தே ஏமாற்றாதே - ஏமாறாதே ஏமாறாதே “ – என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வரும்.

  மரியாதைக்குரிய டாக்டர் M K முருகானந்தன் அய்யா அவர்களது மருத்துவக் கட்டுரைகளை தமிழ்மணத்தில் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

  முனைவர் திரு. B. ஜம்புலிங்கம் அவர்களை புதுக்கோட்டையில் சந்தித்து இருக்கிறேன். இவரது விக்கிபீடியா மறும் பவுத்தம் பற்றிய கட்டுரைகள், இவர் தமிழ் உலகத்திற்கு செய்யும் தமிழ்ப்பணியை பறைசாற்றுவன.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @தி.தமிழ் இளங்கோ

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   தங்களின் தொடர் வருகையும் பல்வேறு உதவிகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இன்று இங்கு என்னால் அடையாளம் காட்டப்பட்டுள்ள ஒவ்வொருவரைப்பற்றியும் தாங்கள் மிகவும் விரிவாக விலாவரியாக எடுத்துச் சொல்லி அசத்தியுள்ளது, எனக்கே அவர்களைப்பற்றி மேலும் கொஞ்சம் அறிய மிகவும் உதவக்கூடியதாக உள்ளன.

   தங்களின் பேரன்புக்கு என் நன்றிகள். மிக்க மகிழ்ச்சி சார். :)

   என்றும் அன்புடன் தங்கள் VGK

   நீக்கு
 15. இன்றைக்கு அடையாளம் காட்டப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @வெங்கட் நாகராஜ்

   :) வாங்கோ, வெங்கட்ஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 16. அறிமுகத்துக்கு மிக்க நன்றி ஐயா.உற்சாகமான எழுத்தாளர் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.உங்கள் அறிமுகத்தைப் படித்தபின் உற்சாகம் பலமடங்காகி விட்டது.நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை பித்தன் June 25, 2015 at 11:32 AM

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   //அறிமுகத்துக்கு மிக்க நன்றி ஐயா. //

   இது அறிமுகமே அல்ல. என் நெஞ்சில் நிற்போரை, இதுவரை அறியாமல் இருக்கும் புதிய பதிவர்கள் சிலருக்கு அடையாளம் காட்டி சிறப்பித்து கெளரவித்தல் மட்டுமே.

   In fact, தங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. பெருமையே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   //உற்சாகமான எழுத்தாளர் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் அறிமுகத்தைப் படித்தபின் உற்சாகம் பலமடங்காகி விட்டது. நன்றி//

   தங்கள் உற்சாகம் [எழுச்சி / பேரெழுச்சி] என்றும் எப்போதும் கரைபுரண்டு வெள்ளமாகப் பெருகட்டும்.

   தங்களின் படத்தினை முகநூல் பக்கம் பார்க்கும் போதெல்லாம் நம் திரைப்பட இயக்குனர் / வசன கர்த்தா / நடிகர் / அரட்டை அரங்கம் / மக்கள் அரங்கம் ’விசு’ அவர்கள் ஞாபகமே எனக்கு வருகிறது. எனக்குப் பிடித்தமான ‘விசு’ அவர்கள் போலவே, தங்கள் உற்சாகமான எழுத்துக்களும் சமயத்தில் என்னை சொக்கத்தான் வைக்கின்றன.

   இங்கு இன்று தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

   நீக்கு
 17. தங்கள் நினைவில் நின்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @mageswari balachandran

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 18. வலையுலகை சிறப்பிக்கும் அருமையான பதிவர்களின் அணிவகுப்பு இன்று பார்த்து ரசித்தேன்! அருமையான தொகுப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @‘தளிர்’ சுரேஷ்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 19. இன்றைக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் பதிவர்கள் அனைவருமே சிறப்பான பதிவர்கள். எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kalayarassy G June 25, 2015 at 7:22 PM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   //இன்றைக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் பதிவர்கள் அனைவருமே சிறப்பான பதிவர்கள்.//

   இதைத்தங்கள் மூலம் கேட்டதில் தனியொரு மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி மேடம்.

   //எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்!//

   அனைவர் சார்பிலும், தங்கள் பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 20. வணக்கம் ஐயா !

  நான் சென்று பார்க்காத பலதளங்கள் இங்கே பகிரப்பட்டிருப்பதை இட்டு மகிழ்வு கொள்கிறேன் நேரம் கிடைக்கும்போதேல்லாம்
  சென்று பார்க்கிறேன்
  வாழ்க தமிழ் வளரட்டும் தலைமுறை
  எல்லோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @சீராளன்

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 21. முதல் அடையாளம் தவிர மற்றவர்கள் அனைவரும் நண்பர்களே....மிக்க நன்றி சார்...நிறைய பேரை நீங்கள் அடையாளப்படுத்துகின்றீர்கள் மிக்க நன்றி சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Thulasidharan V Thillaiakathu

   :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார் :)

   நீக்கு
 22. தோழர் தி . தமிழ் இளங்கோ அவர்களின் தகவலால் இதனை அறிந்தேன் . சாதனையாளர்கள் பலரைத் தெரிந்துகொண்டேன் .முன்பின் தெரியாதவர்களை அறிமுகப்படுத்திப் பாராட்டுவதற்குப் பெரிய மனம் வேண்டும் ; அது உங்களிடம் இருக்கிறது . என்னைப் பொருட்படுத்தி வெளிச்சப்படுத்தியமைக்கு எந் நாளும் நன்றி உடையேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொ.ஞானசம்பந்தன் June 28, 2015 at 4:15 PM

   வாங்கோ சார், நமஸ்காரங்கள். வணக்கம். தங்களின்
   அன்பான முதல் வருகையால் என் வலைத்தளமே இன்று
   மிகவும் பெருமை பெறுவதாக உணர்கிறேன்.

   //தோழர் தி . தமிழ் இளங்கோ அவர்களின் தகவலால்
   இதனை அறிந்தேன் .//

   மிக்க மகிழ்ச்சி சார். நம் இனிய நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள், தங்களுக்கு தகவல் அளித்துள்ளது நினைத்து நானும் மிகவும் மகிழ்கிறேன். அவருக்கு மீண்டும் என் நன்றிகளை இங்கு நானும் பதிவு செய்துகொள்கிறேன்.

   //சாதனையாளர்கள் பலரைத் தெரிந்துகொண்டேன். முன்பின் தெரியாதவர்களை அறிமுகப்படுத்திப்
   பாராட்டுவதற்குப் பெரிய மனம் வேண்டும்; அது உங்களிடம் இருக்கிறது.//

   தன்யனானேன். மிகவும் சந்தோஷம் சார். தங்களின் வலைத்தளத்தினை நானும் சமீபத்தில்தான் தெரிந்துகொள்ள நேர்ந்தது. அதை என் மாபெரும் பாக்யமாக நினைத்து மகிழ்கிறேன்.

   இன்று இங்கு தங்கள் வலைத்தளத்தை அடியேன் காட்சிப்படுத்தியால் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், சார்.

   // என்னைப் பொருட்படுத்தி வெளிச்சப்படுத்தியமைக்கு
   எந் நாளும் நன்றி உடையேன் .//

   இது தங்களால் எனக்குக் கிடைத்ததோர் மாபெரும், பெருமையாகவும் நானும் நினைத்து மகிழ்கிறேன். அதனால் தங்களுக்குத்தான் நான் நன்றிசொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

   என்றும் அன்பு கலந்த நன்றியுடன்
   வை. கோபாலகிருஷ்ணன்

   நீக்கு
 23. அன்புள்ள ஐயா !
  என்னையும் அறிமுகப்படுத்தி, பெருமைப்படுத்தியமைக்கு
  மனமார்ந்த நன்றிகள் !

  // பல இதிகாச புராணங்களை பல கோணங்களில் மிக அழகாக
  அலசி ஆராய்ந்துள்ளவர் என்பது இவரின் தனிச்சிறப்பாக
  நான் உணர்கிறேன். //

  என்னை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் . மகுடமும்
  சூட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. G Perumal Chettiar June 29, 2015 at 11:49 AM

   //அன்புள்ள ஐயா !//

   வாங்கோ, வணக்கம். நலம். நலமறிய ஆவல். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //என்னையும் அறிமுகப்படுத்தி, பெருமைப்படுத்தியமைக்கு
   மனமார்ந்த நன்றிகள் !//

   தங்களின் வலைத்தளம் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   **பல இதிகாச புராணங்களை பல கோணங்களில் மிக அழகாக அலசி ஆராய்ந்துள்ளவர் என்பது இவரின் தனிச்சிறப்பாக நான் உணர்கிறேன்.** - vgk

   //என்னை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், மகுடமும் சூட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி ! //

   என்னைப்பொறுத்தவரை தாங்கள் மகுடம் சூட்டப்பட வேண்டியவரேதான். அதற்கான அத்தாட்சிகள் இதோ:


   1) http://gopu1949.blogspot.in/2014/04/vgk-11-02-03-second-prize-winners.html

   2) http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-02-03-second-prize-winners.html

   3) http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-02-03-second-prize-winners.html

   4) http://gopu1949.blogspot.in/2014/05/vgk-14-02-03-second-prize-winners.html

   5) http://gopu1949.blogspot.in/2014/05/vgk-15-02-03-second-prize-winners.html

   6) http://gopu1949.blogspot.in/2014/06/vgk-20-02-03-second-prize-winners.html

   தங்களுக்கு மகுடம் சூட்ட இதுபோன்றதோர் அரிய வாய்ப்புக் கிட்டியமைக்கு நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மிக்க நன்றி, சார்.

   என்றும் அன்புடன் VGK

   நீக்கு
 24. அறிஞ்ர்கள் பலரின்
  அருமையான பதிவுகளின் தொகுப்பு..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 12:46 PM

   //அறிஞர்கள் பலரின் அருமையான பதிவுகளின் தொகுப்பு.. பாராட்டுக்கள்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 25. அறுமுகமாகியுள்ள அனுபவமிக்க, மூத்த பதிவர்களுக்கு வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு