About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, June 13, 2015

.வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்

2


வலைச்சர ஆசிரியராக

வை. கோபாலகிருஷ்ணன்

13ம் திருநாள்

13.06.2015


67. இறை வணக்க + 
இயற்கை வணக்க
 இடுகைகள்:


ஞானத்தலைவி கோதை-34


கருத்தான கருவேப்பிலை-35செல்லப்பிராணிகள்-36


68. திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்
வலைத்தளம்: காரஞ்சன் (சேஷ்)


  

நம்பிக்கைக் கீற்று 

http://www.esseshadri.blogspot.com/2012/10/blog-post_4.html
மீட்டிட வருவானோ?

http://esseshadri.blogspot.com/2012/04/blog-post_12.html
வேர்களை மறவா விழுதுகள்

http://esseshadri.blogspot.com/2011/12/blog-post_18.html
புற்றுநோயைப் புரையோட விடலாமா?


69. திரு.  ரியாஸ் அஹமத் அவர்கள்
வலைத்தளம்: நுனிப்புல்லில் ஓர் பனித்துளி


கொலை + தற்கொலை = சிறை
[இந்தப்பதிவும், அதிலுள்ள பின்னூட்டங்களும் அனைவரும் 
அவசியமாகப் படிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்]

விஸ்வரூபம் விஷப்பரீட்சையே
[இந்தப்பதிவும், அதிலுள்ள பின்னூட்டங்களும் அனைவரும் 
அவசியமாகப் படிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்]

வெள்ளை மாளிகையும் முதலாளியின் தற்கொலையும்

இசை ஆர்வமுண்டோ? வாங்க நீங்களும் பாடலாம்

மீண்டும் ஒரு காதல் Take off


70. திரு. தியாகராஜா சிவநேசன் அவர்கள்
வலைத்தளம்: தனிமரம்

http://www.thanimaram.org/2012/07/blog-post_31.html
உருகும் பிரெஞ்சுக் காதலி - அறிமுகம்

http://www.thanimaram.org/2012/01/1.html?m=1
மலையகத்தில் முகம் தொலைத்தவன் - 1

http://www.thanimaram.org/2012/04/blog-post_01.html?m=1
நிஜம் சொல்லும் கதை
71.  திரு. விமலன் அவர்கள்
வலைத்தளம்: சிட்டுக்குருவி

  

தரைதொட்ட வண்ணத்துப்பூச்சி
பூப்பதெல்லாம்
பிரம்படி

இவர் இதுவரை ஐந்து சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளார்.


 
1) காக்காச் சோறு
3) வேர்களற்று
 
4) பூப்பதெல்லாம்
5) பந்தக்கால்


72. கவிஞர் திரு. நா. முத்துநிலவன் அவர்கள் 
வலைத்தளம்: வளரும் கவிதைகள்இதுவரை இவர் தமிழில் மூன்று நூல்கள் 
வெளியிட்டுள்ளார்கள் எனத்தெரிகிறது. 


பட்டதாரி தமிழாசிரியராகவே 
பல்லாண்டுகள் மகிழ்ச்சியுடன் பணியாற்றி 
சமீபத்தில் பணிஓய்வு பெற்றவர்.

மிகச்சிறப்பான எழுத்தாளர் ... கவிஞர் ...
தொலைகாட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி 
கலந்துகொள்ளும் மிகச்சிறப்பான பேச்சாளரும்கூட.

தமிழ் ஆர்வம் மிக்க இவரின் வலைப்பக்கம் 
ஏராளமான பதிவுகள் தாராளமாக உள்ளன.

சமீபத்தில் நான் படிக்க நேர்ந்த ஒரு பதிவு இதோ:

பணி ஓய்வு பெற்றேன், நன்றி, வணக்கம்.

அதில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:


”எந்த வேலையாக இருந்தாலும் 

தன்னார்வமாய் அதைச் செய்யும் போது 

கிடைக்கும் மனநிறைவு, 

பதவி உயர்வால் கிடைக்கும் தற்காலிகப் 

பெருமையில் நிச்சயம் கிடைக்காது.” 


”எதையும் கஷ்டப்பட்டுச் செய்தால் சரியாக வராது, 

இஷ்டப்பட்டுச் செய்தால் நிறைவாக அமையும்“ 
தமிழ் எழுத்தாளர்களுக்கும்,  


வாசகர்களுக்கும் ஓர் இனிய செய்தி !
துணைவியார் திருமதி டோரதி அவர்களுடன் 

”ஞானாலயா” திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.


oooooOooooo


இவர்களைத் தொடர்பு கொள்ள 


திரு. பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா ஆய்வு நூலகம்

6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், 

புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

oooooOooooo


இவர்களின் வாழ்க்கை வரலாறு +

சமூக சேவைகளை அறிய
இன்னொரு ’உ.வே.சா’ மற்றும் 


தமிழ்நூல் தகவல் களஞ்சியமான


புதுக்கோட்டை “ஞானாலயா” 


திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரின் 


’75ஆம் அகவை - பவளவிழா’15.08.2015 அன்று மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.


-oOo-இந்த இனிய விழாவினையொட்டி 


15.08.2015 மற்றும் 16.08.2015 ஆகிய இருநாட்களுக்கு


புதுக்கோட்டையில் 


நூல்கள் மற்றும் மலர் வெளியீடுகள் என


பெரிய அளவில் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தமிழ் எழுத்தாளர் + வாசிப்பை நேசிப்பவர் என


அனைவர் பங்கும் ஏதாவது ஒரு வகையில்


வரவேற்கப்படுகிறது.
-oOo-இந்த இனிய விழாவினைப்பற்றி 

மேலும் தகவல்கள் அறிய

விழாவின் ஒருங்கிணைப்பாளர்

நண்பர் ’வைகறைவாணன்’ அவர்களுடன் 


9445182142


அலைபேசியில்

 தொடர்பு கொள்ளவும்.
ஓர் முக்கிய அறிவிப்பு

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

சில தவிர்க்க இயலாத காரணங்களால் 
இன்றுடன் நான் என் வலைச்சர ஆசிரியர் பணியினை 
நிறைவு செய்துகொண்டு விடைபெற்றுக்கொள்கிறேன். 
இதுவரை எனக்கு, வலைச்சர ஆசிரியராகப் பணியாற்ற 
வாய்ப்பளித்த வலைச்சர நிர்வாகிகளுக்கு
என் அன்பான இனிய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.


நாளை அறிவிக்கப்பட உள்ள 
அடுத்தவார வலைச்சர ஆசிரியர் அவர்களை
வருக! வருக!! வருக!!! 
என இருகரம் கூப்பி வரவேற்று மகிழ்கிறேன்.

இதுவரை வலைச்சரத்திற்கு தினமும் வருகை தந்து 
எனக்கு ஒத்துழைப்பும், ஊக்கமும், உற்சாகமும் அளித்துள்ள 
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் 
என் மனம் நிறைந்த இனிய நன்றிகளை 
அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 வலைச்சரத்தில் அன்றாடம் என்னால் இதுவரை
அடையாளம் காட்டப்பட்டவர்களின்
வலைத்தளங்களுக்குச் சென்று, 
தினமும் தகவல் தெரிவித்து உதவிய 
திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்
திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
திரு. புதுவை வேலு அவர்கள்
ஆகிய மூவருக்கும் என் கூடுதல் ஸ்பெஷல் 
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வலைச்சரம் இன்றுபோல என்றுமே ஜொலிக்க
பதிவர்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு 
அளிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


நாளை முதல் வழக்கம்போல் என் 
வலைத்தளத்தினில் 
நாம் தினமும் சந்தித்து மகிழ்வோம். 
என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]வலைச்சர வெளியீடு:


வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்

Secured Tamilmanam Votes: 13 

Total No. of Comments :  52  +21 comments:

 1. வணக்கம்,வலைச்சரம் புதுபொலிவுடன் வலம் வரட்டும். தங்களுக்கு நன்றிகள் பல,

  ReplyDelete
  Replies
  1. @mageswari balachandran

   :) மிக்க நன்றி, மேடம் :)

   Delete
 2. இந்தப் பதிவில் நான் ஏன் பின்னூட்டம் போடவில்லை? வலைச்சரப் பதிவில்தான் பின்னூட்டம் போட்டேனோ? கொஞ்சம் தலை சுத்துதே?

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி June 14, 2015 at 5:48 AM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //இந்தப் பதிவில் நான் ஏன் பின்னூட்டம் போடவில்லை? வலைச்சரப் பதிவில்தான் பின்னூட்டம் போட்டேனோ? கொஞ்சம் தலை சுத்துதே?//

   :)

   இது வலைச்சரத்தில் நேற்று 13.06.2015 என்னால் வெளியிடப்பட்டுள்ள பதிவின் நகல் மட்டுமே. தாங்கள் அங்கு ஏற்கனவே கருத்தளித்துள்ளீர்கள். :)

   -=-=-=-=-
   Reference:

   வலைச்சர வெளியீடு:

   http://blogintamil.blogspot.in/2015/06/13.html

   வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்

   Secured Tamilmanam Votes: 13

   Total No. of Comments : 52 + ( as on 13.06.2015 Night )

   -=-=-=-=-

   அதனை ஓர் ஆவணமாக இங்கும் நான் பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ளேன். இங்கு என் பதிவுகளுக்குத் தொடர்ச்சியாக வருகை தந்து வாசிப்பவர்களுக்கு ஓர் Continuity வேண்டுமே என்பதற்காக மட்டுமே. :)

   மிக்க நன்றி, சார்.

   அன்புடன் VGK

   Delete
 3. அட...
  இதுவும் நல்லாயிருக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் June 14, 2015 at 8:32 PM

   //அட... இதுவும் நல்லாயிருக்குங்க...//

   வாருங்கள் நண்பரே. மிக்க நன்றி ! :)

   Delete
 4. வணக்கம் ஐயா !
  வாழ்த்துக்கள் மிகச் சிறப்பாக வலைச்சர வாரத்தினை நிறைவு செய்துள்ளீர்கள் !தங்களின் வலைச்சர வாரத்திற்கு என்னால் வருகை தர முடியாமல் போய்விட்டது மன்னிக்கவும் மிகுந்த பணிச் சுமையும் உடல்நலக் குறைபாடும் சமீப காலமாக
  தொடர்ந்து இருப்பதனால் தான் முன்பு போல் என்னால் ஆக்கங்களை இடுவதற்கோ கருத்துரைகள் இடுவதற்கோ முடிவதில்லை தவிர வேறு எந்தக் காரணமும் கிடையாது
  இப்போது ஓரிரு மாதங்கள் தோள்மூட்டு வலிக்காவும் வலது கை உளைவுக்காவும் தெரப்பி செய்த வண்ணம் உள்ளேன் இருப்பினும் எந்த முன்னேற்றமும் தெரிய வில்லை மிகுத்த சிரமப் பட்டே எதையும் எழுத முடிகிறது .நன்றி தங்களின் நலன் விசாரிப்பிற்கு .

  ReplyDelete
  Replies
  1. அம்பாளடியாள் June 15, 2015 at 10:47 AM

   //வணக்கம் ஐயா !//

   வாங்கோ, வணக்கம்

   //வாழ்த்துக்கள் மிகச் சிறப்பாக வலைச்சர வாரத்தினை நிறைவு செய்துள்ளீர்கள் !//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //தங்களின் வலைச்சர வாரத்திற்கு என்னால் வருகை தர முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். மிகுந்த பணிச் சுமையும் உடல்நலக் குறைபாடும் சமீப காலமாக தொடர்ந்து இருப்பதனால் தான் முன்பு போல் என்னால் ஆக்கங்களை இடுவதற்கோ கருத்துரைகள் இடுவதற்கோ முடிவதில்லை தவிர வேறு எந்தக் காரணமும் கிடையாது.//

   இதற்கெல்லாம் மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் எதற்கும்மா ? தங்களின் உடல் அசெளகர்யங்கள் பற்றி முற்றிலும் நான் அறிந்துள்ளவன் தானே! அதனால் பரவாயில்லை. என்னால் எதையுமே நன்கு புரிந்துகொள்ள இயலும்.

   //இப்போது ஓரிரு மாதங்கள் தோள்மூட்டு வலிக்காவும் வலது கை உளைவுக்காவும் தெரப்பி செய்த வண்ணம் உள்ளேன் இருப்பினும் எந்த முன்னேற்றமும் தெரிய வில்லை மிகுத்த சிரமப் பட்டே எதையும் எழுத முடிகிறது. நன்றி தங்களின் நலன் விசாரிப்பிற்கு.//

   தயவுசெய்து தங்கள் உடம்பைப் பார்த்துக்கொள்ளவும். முடிந்தபோது, அதுவும் ஒருபொழுதுபோக்காக மட்டும், தினமும் அரைமணிக்கு மேல் இல்லாமல், தங்கள் பதிவுகளை மட்டும் வெளியிட்டுக்கொள்ளவும்.

   மற்றபதிவுகளுக்குப்போவதோ, பின்னூட்டமிடுவதோ போன்ற வேலைகளை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கோ. பிறகு உடல்நலம் பரிபூரண குணம் ஆன பிறகு அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். விரைவில் உடல்நலம் குணமாகவும், மன மகிழ்ச்சி ஏற்படவும் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

   இப்படிக்கு VGK

   Delete
 5. இந்த அறிமுகப் பதிவர்களில் இருவர் அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்கள். தங்களால் அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். நன்றி கோபு சார்.

  விமலன் அவர்களின் எழுத்தில் வெளிப்படும் மண்மணமும் மனிதநேயமும் எப்போதும் என்னை வசீகரிக்கும் விஷயங்கள். அனைவருக்கும் மனங்கனிந்த வாழ்த்துகள்.

  ஞானாலயாவின் பெருமுயற்சி போற்றுதற்குரியது. ஞானாலயா தம்பதியினருக்கு இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. @கீத மஞ்சரி

   வாங்கோ, வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 6. மிக்க நன்றி ஐயா தாங்கள் என் மீது கொண்டுள்ள அன்பிற்கும் புரிந்துணர்விற்கும் !

  ReplyDelete
  Replies
  1. அம்பாளடியாள் June 16, 2015 at 2:48 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மிக்க நன்றி ஐயா தாங்கள் என் மீது கொண்டுள்ள அன்பிற்கும் புரிந்துணர்விற்கும் !//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்வளிக்கிறது. :)

   என்றும் அன்புடன் VGK

   Delete
 7. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/13.html


  Thulasidharan V Thillaiakathu Sun Jun 14, 09:12:00 AM

  //ஓ! இத்தனை சீக்கிரமா! எனினும் தங்கள் உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளவும் சார்....தொடர்கின்றோம்....

  அறிமுகங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! இதில் முதல் இருவரைத் தவிர மற்றவர்களின் தளத்திற்குச் செல்வதுண்டு....//

  :) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

  ReplyDelete
 8. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/13.html

  அம்பாளடியாள் Mon Jun 15, 10:31:00 AM

  //வணக்கம் ஐயா !//

  வாங்கோ, வணக்கம்.

  //வாழ்த்துக்கள் மிகச் சிறப்பாக வலைச்சர வாரத்தினை நிறைவு செய்துள்ளீர்கள் !//

  மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

  ReplyDelete
 9. In continuation to
  வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/13.html


  Thenammai Lakshmanan Wed Jun 17, 03:34:00 PM

  இன்று ராஜியைத் தவிர அனைவரும் புதிய பதிவர்கள். முத்து நிலவன் சார் கேள்விப்பட்டிருக்கிறேன். பதிவுக்குச் சென்றதில்லை. :)

  புதிய அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.//

  மேலும் மிகுந்த சிரத்தை எடுத்துத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. ஆதி, வேலு சகோ, இளங்கோ சகோ ஆகியோருக்கும். வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் நன்றி :)

  மிகச் சிறப்பாக இப்பணியை நிறைவேற்றிய விஜிகே சாருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

  வலைச்சரத்தை மீண்டும் ஒளிரச் செய்தமைக்கு நன்றிகள். :)//

  :) வாங்கோ ஹனி மேடம். வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அனைத்துக் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

  அன்புடன் கோபு

  ReplyDelete
 10. // சில தவிர்க்க இயலாத காரணங்களால்
  இன்றுடன் நான் என் வலைச்சர ஆசிரியர் பணியினை
  நிறைவு செய்துகொண்டு விடைபெற்றுக்கொள்கிறேன். //

  நட்டம் உங்களுக்கு அல்ல.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya November 1, 2015 at 3:50 PM

   **சில தவிர்க்க இயலாத காரணங்களால்
   இன்றுடன் நான் என் வலைச்சர ஆசிரியர் பணியினை
   நிறைவு செய்துகொண்டு விடைபெற்றுக்கொள்கிறேன்.**

   //நட்டம் உங்களுக்கு அல்ல.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! கரெக்ட்.

   அங்கு தொடர்வதால் இலாபமோ, தொடராததால் நட்டமோ நமக்கு ஒன்றும் இல்லைதான்.

   ’நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ... நான் ... நான்’ என்ற பாடல்போல, 35 நாட்களுக்கு தொடர்ந்து நான் மிகச்சிறப்பாகவே என் திறமையை நிரூபித்தும் காட்டி விட்டேன்.

   என்னைப்பொறுத்தவரை எனக்கு இதில் மாபெரும் வெற்றி மட்டுமே. வந்து குவிந்திருக்கும் பின்னூட்டங்களே அதற்கு சாட்சியாகும்.

   இப்போதும்கூட 14.09.2015 க்கு பிறகு இன்று 01.11.2015 வரை, கடந்த 8 வாரங்களாக அந்த அமைப்பு உறுப்படியாக ஒன்றும் இயங்கவில்லை. அதைப்பற்றி யாரும் எந்தக்கவலையும் படுவதாகவும் தெரியவில்லை.

   பெரிய திண்டுக்கல் பூட்டாகப்போட்டு ஒருவழியாக ‘மூடுவிழா’வே நடத்தி சாதனை புரிந்து விட்டார்களோ என்னவோ என நினைக்கத் தோன்றுகிறது.

   இதெல்லாம் இவ்வாறு இருக்க, இதன் தொடர்ச்சியான அடுத்த பகுதியில், அவர்களின் கடைசி பின்னூட்டத்தில் வெட்டியாக வீராப்புப் பேச்சுவேறு பேசியிருக்கிறார்கள்..

   அதாவது, ஏதோ ஏராளமான பதிவர்கள் இந்த வாய்ப்புக்காக ஏங்கி ரேஷன் கடை க்யூவில் நிற்பதுபோல படையெடுத்து வந்து நிற்பது போலவும், இவரால் தான் யாருக்கு வாய்ப்பு தருவது என்ற மாபெரும் குழப்பம் இருப்பதுபோலவும் எழுதியிருப்பதுதான் இந்த 2015ம் ஆண்டின் மிகப்பெரிய ஜோக் ஆகும் ! :)))))

   Delete
 11. ஆமாம் நட்டம் உங்களுக்கல்ல. எங்களுக்குத்தான். ஹ்ம்ம்.

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan November 2, 2015 at 10:47 AM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

   //ஆமாம் நட்டம் உங்களுக்கல்ல. எங்களுக்குத்தான். ஹ்ம்ம்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், புரிதலுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, மேடம்.

   Delete
 12. ஞானாலயா தம்பதியினருக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 3:23 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //ஞானாலயா தம்பதியினருக்கு வாழ்த்துகள்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   இத்துடன் As on Date (06.11.2015) என்னால் என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து 793 பதிவுகளிலும் தங்களின் தங்கத்தாமரை மலர்ந்துள்ளதைக் காண என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

   Delete