என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

எங்கள் பயணம் [துபாய்-14]


DUBAI WATER TAXI STATION 

[ Visited on 28.11.2014 evening ]

 


  

இங்கு வெள்ளை நிறத்தில் பறக்கும் 
ஆலாப்பறவைகள் ? 
மிகவும் அதிகமாக உள்ளன.

இங்கிருந்து கடல் மார்க்கமாக பல இடங்களுக்கு
வெகு வேகமாக படகில் [Steam Boats] 
சென்று வர ஏற்பாடுகள் செய்துள்ளனர்.


படகினில் நாம் செல்லக்கூடிய இடங்களும், 
அதற்கான கட்டண விபரங்களும்
வரைபடமாகவும், பட்டியலாகவும்
காட்சிப்படுத்தியுள்ளனர்.


பயணம் தொடரும்


 

திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் 
வேண்டுகோளுக்காக இவை இங்கு இப்போது
புதிதாக இணைக்கப்பட்டுள்ளன


 
இந்தப்பதிவினில் உள்ள அனைத்துப் படங்களும் 
இந்தக் கேமராவினால் எடுக்கப்பட்டவைகளாகும்.
LUMIX/PANASONIC BATTERY  + BATTERY CHARGER + WIRE 
+ PLUG + SD 2 GB CAPACITY

’DON'Ts’ 
MENTIONED IN REVERSE SIDE OF THE BATTERY அன்புடன் VGK

 

21 கருத்துகள்:

 1. Like to travel after reading this.Very nice experience you had sir.
  viji

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. viji December 30, 2014 at 2:30 PM

   Welcome Viji

   //Like to travel after reading this.Very nice experience you had sir. - viji//

   Thanks a Lot for your kind visit & Comments Viji.

   - VG

   நீக்கு
 2. ஆலாப்பறவைகள்? - சீகல் பறவைகளாக இருக்கலாம் என்பது என் கணிப்பு. படங்கள் அனைத்தும் பிரமாதம். பகிர்வுக்கு நன்றி கோபு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி December 30, 2014 at 4:46 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆலாப்பறவைகள்? - சீகல் பறவைகளாக இருக்கலாம் என்பது என் கணிப்பு.//

   நீங்கள் சொல்வது மிகச்சரியாக இருக்கலாம். எனக்கு அதன் பெயர் சரியாகத்தெரியவில்லை.

   பம்பாயிலிருந்து கோவா தலைநகர் பனாஜிக்கு ஒருமுறை [DECEMBER 1975 WHEN I WAS 24-25 YEARS OLD] 24 மணி நேரப்பயணமாக கப்பலில் சென்றுள்ளேன்.

   அப்போதும் இதே போன்ற பறவைகள் பம்பாய்த் துறைமுகத்தில் நிறைய எண்ணிக்கையில் பறந்த வண்ணம் இருந்தன.

   அப்போது அருகில் இருந்த என்னுடன் கூடவே வந்த BHEL நண்பர்தான் [சிவலிங்கம் என்று பெயர்] சொன்னார்: “இதன் பெயர் ஆலாப்பறவை. ஒரு இடத்திலும் உட்காராமல் ஆலாய்ப்பறக்குது பார். மனிதர்களிலும் சிலர் பணம் பணம் என்று ஆலாய்ப்பறப்பது உண்டல்லவா. அது போலவே இந்தப்பறவைகளும் ஓய்வில்லாமல் இருப்பதால், இவற்றின் பெயர் : ஆலாப்பறவை” என்றார்.

   அவர் அன்று என்னிடம் சொன்ன அது உண்மையோ பொய்யோ, சரியோ தவறோ, எனக்குத்தெரியாது. அவர் சொன்ன உதாரணம் என் மனதில் அப்படியே பதிந்துபோய் விட்டது. :)

   // படங்கள் அனைத்தும் பிரமாதம். பகிர்வுக்கு நன்றி கோபு சார்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
  2. ஆலா என்னும் பறவை குறித்து சரியான விளக்கம் எங்கும் காணப்படவில்லை. சில இடங்களில் பருந்து என்றும் சில இடங்களில் கடற்பறவை வகை என்றும் குறிப்பிடப்படுகிறது. எனவே தங்கள் நண்பர் குறிப்பிட்டது போல் இந்த sea gull என்னும் கடற்பறவைகளை ஆலா என்று குறிப்பிடுவது சரியாகவே இருக்கக்கூடும். விளக்கத்துக்கு நன்றி கோபு சார்.

   நீக்கு
  3. கீத மஞ்சரி January 4, 2015 at 11:45 AM

   வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

   //எனவே தங்கள் நண்பர் குறிப்பிட்டது போல் இந்த sea gull என்னும் கடற்பறவைகளை ஆலா என்று குறிப்பிடுவது சரியாகவே இருக்கக்கூடும். விளக்கத்துக்கு நன்றி கோபு
   சார்.//

   BHEL அலுவலக நண்பர்களாகிய நாங்கள் ஒரு ஆறு ஆண்கள் மட்டுமே 1975 டிஸம்பர் 24ம் தேதி புறப்பட்டு, பம்பாய், கோவா, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு ரயிலில் சுற்றுலாப்பயணம் போய் வந்தோம். அப்போது என் சின்ன அக்கா பம்பாயில் மாதுங்கா என்ற இடத்தில் வசித்து வந்தார்கள். நேராக அவர்கள் வீட்டுக்கு நாங்கள் அனைவரும் சென்று குளியல் போட்டுவிட்டு, அவர் வீட்டிலேயே தடபுடலாக விருந்து சாப்பிட்டுவிட்டு, அருகே ஒரு லாட்ஜில் ரூம் புக் செய்துகொண்டு, சுமார் 3 நாட்கள் பம்பாயை மட்டும் சுற்றிப்பார்த்துவிட்டு பிறகு கப்பலில் ஏறி கோவா பனாஜிக்குப் போய்ச்சேர்ந்தோம்.

   அன்று 25 வயதுக்கு உட்பட்ட எங்களில் திரு. சிவலிங்கம் மட்டுமே சற்று நடுத்தர வயதுள்ளவர். அவருக்கு அன்று சுமார் 40 வயது இருக்கும். சினிமா காமெடி நடிகர் V.K. ராமசாமி போல இருப்பார், ஜாலியாகவும் பேசுபவர். எங்கள் எல்லோரையும்விட உலக அனுபவம் அவருக்கு மிகவும் அதிகம். நிறைய இடங்களுக்கு ஏற்கனவே சுற்றுலா போய் வந்துள்ளவர். ஏதேதோ சொந்த சைடு பிஸிநெஸ் செய்து வந்தவரும் ஆவார். திருவெறும்பூரில் அன்று ஓர் செருப்புக் கடையும் வைத்திருந்தவர். கடைக்கு சாமான்கள் கொள்முதல் செய்யவே முக்கியமாக எங்களுடன் பயணம் வந்திருந்தவர். எங்கள் எல்லோரையும் விட அன்று கையில் பசை :) [ பணம் ] அதிகம் எடுத்து வந்தவர்.

   எங்கள் ஆறு பேர்களுக்கு மட்டும் நாங்கள் போன தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை>>>>>மும்பைக்கு கூபே [தனி ரூம்] கிடைத்திருந்தது, எங்கள் பயணம் மிகவும் ஜாலியாக இருந்தது.

   வண்டி புனே தாண்டியது ஓரிடத்தில் மிகப்பெரிய கொய்யாப்பழங்கள் ரயிலிலேயே விற்கப்பட்டன. மிகவும் ருசியோ ருசியாக இருந்தன. ஒரு கூடை கொய்யாப்பழம் அவர் [சிவலிங்கம்] வாங்கினார். நன்றாகத் தின்று தீர்த்தோம். அதன் விதையை திருச்சிக்குப்போய் ஊன்ற வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆனால் எங்கள் பயணத்திலேயே அனைத்துப்பழங்களும் காலியாகி விட்டன.

   கடைசியாக பெங்களூரில் ஓர் மிகப்பெரிய செருப்பு [Whole Sale] கடையில் சுமார் 100 ஜோடிக்கு மேல் புதுசெருப்புகள் வாங்கிக்கொண்டு, திருச்சிக்கு எங்களுடன் ரயிலில் வந்தார்.

   அந்தப்பயணமும் ஒரே ஜாலியாகவே இருந்தது.

   சமீபத்தில் அவரை நான் ஒரு நாள் BHEL HOSPITAL இல் அவர் மனைவியுடன் சந்தித்தேன். செட்டிநாடு பக்கம் கானாடுகாத்தான் என்ற இடத்தில் இருப்பதாகச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. அவரும் எதையும் மறக்கவில்லை. பழைய பயணக்கதைகளை எல்லாம் வெகு நேரம் பேசி மகிழ்ந்தோம்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 3. அருமையான படங்களும் தகவல்களும். உங்கள் தொடரைப் படிக்கப் படிக்கத் துபாய் பார்க்கவேண்டும் என்ற ஆசை அதிகமாகிக் கொண்டு வருகிறது.

  பதிலளிநீக்கு
 4. ஆலாப் பறவை விளக்கம் அறிந்தேன்! இரசித்தேன்! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 5. படகு சவாரி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்தமான் சென்றிருந்த போது தண்ணீரிலேயே (அட படகு, கப்பல்களில்தான் அண்ணா) மிதந்தோம். இன்னும் பசுமையான நினைவில்.

  “இதன் பெயர் ஆலாப்பறவை. ஒரு இடத்திலும் உட்காராமல் ஆலாய்ப்பறக்குது பார். மனிதர்களிலும் சிலர் பணம் பணம் என்று ஆலாய்ப்பறப்பது உண்டல்லவா. அது போலவே இந்தப்பறவைகளும் ஓய்வில்லாமல் இருப்பதால், இவற்றின் பெயர் : ஆலாப்பறவை” என்றார். //

  அருமையான விளக்கம். உங்கள் நண்பர் அல்லவா? அதான் நகைச்சுவை காத்து அடிச்சிருக்கு உங்க கிட்டேந்து அவருக்கு.

  உங்க பதிவுகளைப் பார்த்ததும் ரொம்பவே மனம் விழைகிறது. ATLEAST சீக்கிரம் ஒரு LOCAL TRIP ஆவது போயிட்டு வரணும்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
 6. படங்கள் யாவும் துல்லியமாக உள்ளன. என்ன கேமராக்கள் என்று சொல்வீர்களா? ஒரு ஆர்வம்தான் வேறொன்றும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ January 2, 2015 at 6:05 PM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //படங்கள் யாவும் துல்லியமாக உள்ளன. என்ன கேமராக்கள் என்று சொல்வீர்களா? ஒரு ஆர்வம்தான் வேறொன்றும் இல்லை.//

   இந்தப்பதிவினில் உள்ள அனைத்துமே என்னிடம் உள்ள
   கேமராவில் தான் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்கள்:

   PANASONIC DMC-F3

   MODEL: DMC F-3

   SERIAL. NO. SDOJC001616

   4X OPTICAL ZOOM

   1.28 - 6.2 / 5.0 - 20.0 ASPH

   28mm WIDE

   LUMIX

   12 MEGA PIXELS

   என்ற விபரங்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. வேறு
   ஒன்றும் எனக்கு இதுபற்றி அதிகம் தெரியாது, ஐயா.

   இதுவும் என் மூத்த மகன் + மருமகள் முன்னொரு
   காலத்தில் [அதாவது சுமார் 4-5 வருஷங்கள் முன்பு] இங்கு திருச்சி வந்தபோது அன்பளிப்பாகக் கொடுத்துச்
   சென்றதுதான்.

   அதனை அப்படியே என் சாம்சங் ஸ்மார்ட் போன் மூலம் போட்டோ பிடித்து இப்போது மேலே இந்தப்பதிவிலேயே இணைத்துள்ளேன். பாருங்கள் ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
 7. அனைத்துப் படங்களும் அழகாக வந்துள்ளன. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. ஆலா பறவை பேரே வித்தியாசமா இருக்கே. உங்க பார்வையில் இருந்து யாருமே தப்ப முடியாது போல இருக்கு

  பதிலளிநீக்கு
 9. இந்த கடல் ப்றவைகளையும் , கங்காருகளையும் பார்க்கவே ஒரு இடத்திற்குச்சென்றிருந்தோம்..எந்தப்பறவையாவது, சிறிய மிருகங்களாவது காரின் சக்கரங்களுக்கு அருகில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க சக்கரக்களுக்கு அருகில் காமிரா அமைத்து காரோட்டுபவர் எச்சரிக்கையாக இருக்கச்செய்யும் பாதுகாப்பு ஏற்பாடு வியக்கச்செய்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:34 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இந்த கடல் பறவைகளையும் , கங்காருகளையும் பார்க்கவே ஒரு இடத்திற்குச் சென்றிருந்தோம்.. எந்தப்பறவையாவது, சிறிய மிருகங்களாவது காரின் சக்கரங்களுக்கு அருகில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க சக்கரக்களுக்கு அருகில் காமிரா அமைத்து காரோட்டுபவர் எச்சரிக்கையாக இருக்கச்செய்யும் பாதுகாப்பு ஏற்பாடு வியக்கச்செய்தது...//

   பொதுவாக வெளிநாடுகளில் (Advance Countries களில்) மட்டுமே ஆரம்பிக்கப்படும் இதுபோன்ற நிறைய மாடர்ன் டெக்னாலஜிகள் நம்மை வியக்கத்தான் வைக்கின்றன. படிப்படியாக அது எல்லா நாடுகளுக்கும், நம் நாட்டுக்கும் தாமதமாகவே பயன்பாட்டுக்கு வருகின்றன. இப்போது நம் நாட்டில் ஓடும் புதிய கார்களில் எவ்வளவோ Modern Technology Developments இடம் பெற்றுள்ளன என்பதே பார்க்கவும் கேட்கவும் மிகவும் சந்தோஷமாகவே உள்ளன.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அனுபவங்களைச்சொல்லி பகிர்ந்துகொண்டுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம் .

   நீக்கு
 10. படங்கலா சூப்பராகீது. கேமராவ கூட போட்டுபிட்டீக. துபாய நல்லா சுத்தி வந்துகிட்டே இருக்கேன்

  பதிலளிநீக்கு
 11. படங்களும் பகிர்வும் மிக மிக நல்லா இருக்கு. ஆலா பறவை பேரு புதுசா இருக்கு.

  பதிலளிநீக்கு
 12. காகிராவை அக்கு வேற ஆணிவேறயா கழட்டி அதையே ஃபோட்டோவா. கலக்குங்க...

  பதிலளிநீக்கு