About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, December 15, 2014

இன்பச்சுற்றுலா இனிதே நிறைவடைந்தது. [துபாய்-1]


அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். 

நாங்கள் மேற்கொண்ட [15.11.2014 to 14.12.2014] ஒரு மாத துபாய் பயணம் இனிதே நிறைவடைந்தது. 

ரஜனிகாந்த் பிறந்தநாளன்று [12/12/2014] பகல் முழுவதும் பல இடங்களைச்சுற்றிப் பார்த்துவிட்டு, அன்று இரவு 11 மணிக்கு DUBAI VOX YASMALL THEATRE இல் ”லிங்கா” திரைப்படமும் துபாயிலேயே கண்டு களித்து விட்டு மறுநாள் விடியற்காலம் வீடு திரும்பி நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டோம்.  

13.12.2014 இரவு துபாயிலிருந்து விமானம் ஏறி, 14.12.2014 விடியற்காலம் திருச்சிக்கு செளகர்யமாக வந்து சேர்ந்தோம். 

பகிர்ந்துகொள்ள ஏராளமான படங்களும், தாராளமான செய்திகளும் என்னிடம் இருப்பினும், எனக்கு பல்வேறு சொந்த வேலைகள் உள்ளதாலும், மேலும் எனக்கு நிறைய ஓய்வு தேவைப்படுவதாலும், பிராப்தம் இருந்தால் பிறகு நாம் பதிவுகளில் சந்திப்போம். 

இப்போதைக்கு ஒருசில படங்கள் மட்டும் தங்களின் பார்வைக்காக இணைத்துள்ளேன்.VERY BEAUTIFUL FLOWER GARDEN AT DUBAI

{ ENTRANCE FEE 30 AED [RS. 510] PER HEAD }   
Mrs. VGK at 124th Floor 
with her Grand Children


WORLD'S TALLEST BUILDING 
"AT THE TOP - 
BURJ KHALIFA"ENTRANCE FEES TO GO TO THE TOP 
125 - 200 AED [RS. 2125 to 3400] PER HEAD
DAILY 8 TIMES ONLY ALLOWED 
MORNING RS. 2125
EVENING  RS. 3400

We will be taken by Lift from 
Ground Floor to 124th floor.

Within 1 minute and 8 seconds 
we will reach the 124th floor 


கட்டடத்தின் மொத்த உயரம்: 
829.8 மீட்டர் [ 2766 அடி ]

2004ம்  ஆண்டு அஸ்திவாரம் போடப்பட்டு 
2009ம் ஆண்டுக்குள் முழுவதுமாகக் 
கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதுவே இன்று உலகிலேயே 
மிக உயரமான கட்டடமாகும்.

இதன் மிக அருகேயுள்ளது 
’துபாய் மால்’ 
அதுவே உலகிலேயே மிகப்பெரிய 
வணிக வளாகமாகும்.12.12.2004 இரவு துபாயில் 
‘லிங்கா’ தமிழ் திரைப்படம் பார்த்தோம்.

AT 'VOX YASMALL' THEATRE
TICKET : FIRST CLASS 50 AED [RS. 850] PER HEAD
SECOND CLASS 35 AED [RS.595] PER HEAD 

 ஊரைச்சுற்றிப்பார்க்க உதவிய கார்


பேரன் பேத்திகளிடமிருந்து 
பிரியா விடைபெறும் நேரம்
13.12.2014 - Evening 5 o' clock - UAE Time  


2004ம் ஆண்டு 45 நாட்கள் துபாயில் தங்கி 
ஷார்ஜா / துபாய் / அபுதாபி போன்ற
பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து வந்த 
நாங்கள் மீண்டும் இப்போது 2014ம் ஆண்டு சென்று
மேலும் 30 நாட்கள் தங்கி வந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே !

[ September/October 2004 ]

10 ஆண்டுகளுக்குள் அங்கு பல்வேறு 
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


திருச்சியிலிருந்து 
துபாய்க்கு அழைத்துச் சென்று 
நல்லபடியாக 
திருச்சிக்கு திரும்பி 
அழைத்து வந்த விமானம்

 

A SAMSUNG MOBILE PHONE WITH ALL LATEST TECHNOLOGIES 
HAS BEEN GIFTED BY MY SON AT DUBAI. 
THE ABOVE PHOTO IS TAKEN WITH THE HELP OF THAT MOBILE PHONE 
AT DUBAI INTERNATIONAL AIRPORT ON 13.12.2014 NIGHT, 
JUST BEFORE BOARDING INTO OUR FLIGHT.
எங்களின் ஒரு மாத இன்பச்சுற்றுலா பயண நேரத்திலும் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு வாழ்த்திய நல் இதயங்களுக்கும், அவர்கள் சிலரின் பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 


 
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

72 comments:

 1. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! வருக! வருக! என்று வரவேற்கிறேன். மீண்டும் வருவேன்.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ December 15, 2014 at 5:19 AM

   வாங்கோ ... வணக்கம்.
   //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! வருக! வருக! என்று வரவேற்கிறேன். மீண்டும் வருவேன்.//

   மிக்க மகிழ்ச்சி. மீண்டும் நம் வீட்டுப்பக்கம் வாங்கோ. அன்பளிப்புகள் சில அளிக்கக் காத்திருக்கிறேன்.

   அன்புடன் VGK

   Delete
 2. வெல்கம்.பேக் ஸார்.....

  அங்கு பதிவுலக நண்பர்களைச் சந்திக்க நேரம் இருந்ததா? பார்த்தீர்களா?

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். December 15, 2014 at 5:43 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //வெல்கம்.பேக் ஸார்.....//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //அங்கு பதிவுலக நண்பர்களைச் சந்திக்க நேரம் இருந்ததா? பார்த்தீர்களா?//

   திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களை நேரில் சந்திக்க மனதில் ஆசை மட்டும் இருந்தது. ஆனால் நேரம் இல்லை.
   இந்தமுறை ஷார்ஜா பக்கம் மட்டும் நான் போகவில்லை.

   அதுபோல மஞ்சுவை நேரில் சந்திக்க குவைத் வரை ஓரிரு மணி நேரங்கள் விமானத்தில் செல்ல வேண்டும். அதற்கு தனியாக விசா வேறு எடுக்க வேண்டும். அதனால் சந்திக்க முடியவில்லை. தொடர்புகொண்டு பேச மட்டும் முடிந்தது.

   முக்கியமான வேறுபல வேலைகளை உத்தேசித்து நாங்கள் சென்றதால், பதிவர் சந்திப்புகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போய்விட்டது.

   அன்புடன் VGK

   Delete
 3. இனிய பயணத்திற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி December 15, 2014 at 5:47 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இனிய பயணத்திற்கு வாழ்த்துகள்..//

   இனிய பயனுள்ள வாழ்த்துகளுக்கு
   என் மனமார்ந்த நன்றிகள். - VGK

   Delete
 4. தாய் மண்ணிற்கு அன்புடன் வரவேற்கிறோம்
  தேவையான ஓய்வினை எடுத்துக் கொள்ளுங்கள்
  பிறகு வாருங்கள் ஓர் அருமையான
  பயணக் கட்டுரையோடு
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. கரந்தை ஜெயக்குமார் December 15, 2014 at 6:10 AM

   வாருங்கள், வணக்கம்.

   //தாய் மண்ணிற்கு அன்புடன் வரவேற்கிறோம். தேவையான ஓய்வினை எடுத்துக் கொள்ளுங்கள்
   பிறகு வாருங்கள் ஓர் அருமையான பயணக் கட்டுரையோடு ... நன்றி ஐயா//

   மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்.

   Delete
 5. அற்புதமான படங்கள்
  விரைவில் சுற்றுலாக் குறித்த பதிவுகள்
  வரும் என நம்புகிறேன்
  நானும் குடுமபத்துடன் புத்தாண்டில் துபாய்
  சென்றுவர உத்தேசித்துள்ளதால்
  தங்கள் பதிவுகள் ஒரு வழிகாட்டிப் பதிவுகளாக
  நிச்சயம் இருக்கும் என்பதால் கூடுதல் ஆர்வத்தோடு
  சுற்றுலாப் பதிவுகளை எதிர்பார்த்து உள்ளேன்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. Ramani S December 15, 2014 at 6:20 AM

   வாருங்கள், வணக்கம்.
   //அற்புதமான படங்கள். விரைவில் சுற்றுலாக் குறித்த பதிவுகள் வரும் என நம்புகிறேன். நானும் குடுமபத்துடன் புத்தாண்டில் துபாய் சென்றுவர உத்தேசித்துள்ளதால்
   தங்கள் பதிவுகள் ஒரு வழிகாட்டிப் பதிவுகளாக நிச்சயம் இருக்கும் என்பதால் கூடுதல் ஆர்வத்தோடு சுற்றுலாப் பதிவுகளை எதிர்பார்த்து உள்ளேன். வாழ்த்துக்களுடன்...//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களின் ஆர்வத்திற்காகவே துபாய் பற்றிய மேலும் சில பதிவுகள் தர முயற்சிக்கிறேன்.

   அன்புடன் VGK

   Delete
 6. படங்களும் படங்களுக்குமான விளக்கமும் அருமை ஐயா.
  கண்டிப்பாக நீங்கள் இந்த சுற்றாலவைப் பற்றி பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. Chokkan Subramanian December 15, 2014 at 6:21 AM

   வாருங்கள், வணக்கம்.

   //படங்களும் படங்களுக்குமான விளக்கமும் அருமை ஐயா.
   கண்டிப்பாக நீங்கள் இந்த சுற்றாலவைப் பற்றி பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம். //

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களின் நம்பிக்கைக்காகவே துபாய் சுற்றுலா பற்றிய மேலும் சில பதிவுகள் தர முயற்சிக்கிறேன்.

   VGK

   Delete
 7. பயணம் இனிதாய்...வாருங்கள் வாருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. R.Umayal Gayathri December 15, 2014 at 9:22 AM

   //பயணம் இனிதாய்...வாருங்கள் வாருங்கள்..//

   சந்தோஷம். மிக்க நன்றி.

   Delete
 8. மனத்துக்கு நிறைவான பயணமாக அமைந்ததிலும் நல்லபடியாக போய்வந்ததிலும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி கோபு சார். நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக தங்களுக்கு எங்களுடன் பகிர ஏராளமான விஷயங்கள் இருக்கும். மெல்ல மெல்ல பகிருங்கள். படங்கள் அனைத்தும் பிரமாதம். பேரன் பேத்தியோடு இருக்கும் படத்தில் தங்கள் பெருமிதம் தெரிகிறது. நல்வரவு கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி December 15, 2014 at 11:36 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மனத்துக்கு நிறைவான பயணமாக அமைந்ததிலும் நல்லபடியாக போய்வந்ததிலும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி கோபு சார்.//

   மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

   //நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். //

   ஆகட்டும்.

   //நிச்சயமாக தங்களுக்கு எங்களுடன் பகிர ஏராளமான விஷயங்கள் இருக்கும்.//

   ஆமாம். நிறையவே உள்ளன. :)))))

   //மெல்ல மெல்ல பகிருங்கள்.//

   ஆகட்டும்.

   //படங்கள் அனைத்தும் பிரமாதம். பேரன் பேத்தியோடு இருக்கும் படத்தில் தங்கள் பெருமிதம் தெரிகிறது. நல்வரவு கோபு சார்.//

   மிக்க மகிழ்ச்சி. :))))) மிக்க நன்றி.

   அன்புடன் கோபு

   Delete
 9. இனிய பயணப்பகிர்வுக்கு நன்றி! படங்கள் அழகு! தகவல்கள் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ‘தளிர்’ சுரேஷ் December 15, 2014 at 12:16 PM
   //இனிய பயணப்பகிர்வுக்கு நன்றி! படங்கள் அழகு! தகவல்கள் சிறப்பு! நன்றி!//

   நன்றி.

   Delete
 10. நன்றாக ஓய்வு எடுத்து விட்டு வந்தால் போதும். காத்திருக்கிறோம். அதென்ன, பிராப்தம் இருந்தால் என்று ஒரு வார்த்தை. எங்களுக்கு பிராப்தம் இருக்கிறது உங்கள் துபாய் அனுபவங்களைக் கேட்க.

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி December 15, 2014 at 12:51 PM

   வாங்கோ, வணக்கம் ஐயா.

   //நன்றாக ஓய்வு எடுத்து விட்டு வந்தால் போதும். //

   OK Sir.

   //காத்திருக்கிறோம். //

   அடடா ! :)

   //அதென்ன, பிராப்தம் இருந்தால் என்று ஒரு வார்த்தை.//

   எதற்குமே ஒரு பிராப்தம் இருக்க வேண்டும்தானே, ஐயா.

   //எங்களுக்கு பிராப்தம் இருக்கிறது உங்கள் துபாய் அனுபவங்களைக் கேட்க.//

   சபாஷ் ! நானும் முயற்சிக்கிறேன், ஐயா. பார்ப்போம்.

   பிரியமுள்ள VGK

   Delete
 11. பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார். பகிர்வுக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. Asiya Omar December 15, 2014 at 3:17 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார். பகிர்வுக்கு மகிழ்ச்சி.//

   மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

   அன்புடன் VGK

   Delete
 12. மீண்டும் ஒரு வணக்கம்! நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொன்னாலும், நீங்கள் ஓய்வை விரும்பினாலும், உங்களுக்குள் இருக்கும் வலைப்பதிவர் சும்மா இருக்க மாட்டார். இனி வலையுலகம் களைகட்டி விடும்.

  போட்டோக்கள் எல்லாமே அருமை. பேரன் – பேத்தியை அங்கேயே விட்டுவிட்டு வருகின்றோமே என்ற ஏக்கம் உங்கள் இருவரது கண்களிலும் தெரிகிறது.

  அங்கேயும் உங்களை ரஜினி காந்த் விடவில்லை போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ December 15, 2014 at 6:16 PM

   வாருங்கள் ஐயா, தங்களின் மீண்டும் வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

   //மீண்டும் ஒரு வணக்கம்! //

   வணக்கம். வணக்கம். :)

   //நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொன்னாலும், நீங்கள் ஓய்வை விரும்பினாலும், உங்களுக்குள் இருக்கும் வலைப்பதிவர் சும்மா இருக்க மாட்டார்.//

   அது என்னவோ உண்மை தான்.

   //இனி வலையுலகம் களைகட்டி விடும். //

   அப்படியா சொல்கிறீர்கள்? ஏற்கனவே களைகட்டித்தான் உள்ளது என நினைக்கிறேன். அவ்வப்போது கொஞ்சம் களை எடுத்தால் நல்லதோ என நினைத்துக்கொள்வேன். :)

   //போட்டோக்கள் எல்லாமே அருமை. பேரன் – பேத்தியை அங்கேயே விட்டுவிட்டு வருகின்றோமே என்ற ஏக்கம் உங்கள் இருவரது கண்களிலும் தெரிகிறது.//

   ஆமாம். கொஞ்சம் வருத்தம் தான். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் இங்கு ஒரு மாதம் வந்து செல்வதால் சற்றே ஒரு ஆறுதலும் உள்ளது.

   //அங்கேயும் உங்களை ரஜினி காந்த் விடவில்லை போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.!//

   இங்கேயே தியேட்டருக்குப்போய் நான் படம் பார்த்து பல வருடங்கள் ஆச்சு. அங்குபோய் அன்று இரவு முழுவதும் கண் விழித்துப் படம் பார்க்க வேண்டும் என்பது எனக்கு விதிக்கப்பட்ட விதி என்று நினைத்துக்கொண்டேன்.

   அவர்கள் [என்னை தவிர 10 பேர்கள்] சந்தோஷத்திற்காக மட்டுமே நானும் சென்று வந்தேன்.

   ரஜினி தோன்றும் முதல் காட்சியில் அங்கும் [விசில் அடிச்சான் குஞ்சுகள்] விசில் அடித்து ஆரவாரம் செய்யும் ஒருசில ஆசாமிகளைக்கண்டு வியந்து போனேன். :)

   அன்புடன் VGK

   Delete
 13. இன்பச் சுற்றுலா வெற்றிகரமாக முடிந்து, பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக கழித்த இனிய நினைவுகளுடன் தாயகம் மீண்டிருக்கும் தங்களுக்கும் துணைவியாருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!
  போதுமான ஓய்வு எடுத்துக்கொண்ட பின் பயண அனுபவங்களைப் பகிருங்கள். அவசரம் ஏதுமில்லை!
  அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. Kalayarassy G December 15, 2014 at 7:30 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இன்பச் சுற்றுலா வெற்றிகரமாக முடிந்து, பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக கழித்த இனிய நினைவுகளுடன் தாயகம் மீண்டிருக்கும் தங்களுக்கும் துணைவியாருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!//

   சந்தோஷம், வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

   //போதுமான ஓய்வு எடுத்துக்கொண்ட பின் பயண அனுபவங்களைப் பகிருங்கள். அவசரம் ஏதுமில்லை!//

   சரி, ஆகட்டும். அப்படியே செய்கிறேன் ! :)

   //அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! //

   மிக்க நன்றி. தங்களுக்கு தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   நன்றியுடன் கோபு

   Delete
 14. தாங்கள் சௌகர்யமாக திருச்சி வந்து சேர்ந்ததற்கு மகிழ்ச்சி.

  புகைப் படங்களும், அதற்கான விளக்கங்களும் அருமை சார்.

  நன்கு ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள். துபாய் பயணம் பற்றிய பதிவை நிதானமாக எழுதுங்கள்.

  அடுத்த பயணம் துபாய் செல்லலாம் என்றிருக்கிறோம். தங்கள் பதிவு அதற்கு உதவியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Radha Balu December 15, 2014 at 7:45 PM

   வாங்கோ அன்புக்குரிய ராதாபாலு மேடம். வணக்கம்.

   //தாங்கள் சௌகர்யமாக திருச்சி வந்து சேர்ந்ததற்கு மகிழ்ச்சி.//

   எனக்கும் மகிழ்ச்சியே ! :)))))

   //புகைப் படங்களும், அதற்கான விளக்கங்களும் அருமை சார்.//

   மேலும் ஓர் படமும் அதற்கான விளக்கமும் புதிதாகச் சேர்த்துள்ளேன். பாருங்கோ, ப்ளீஸ்.

   //நன்கு ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள். துபாய் பயணம் பற்றிய பதிவை நிதானமாக எழுதுங்கள்.//

   சரி, ஆகட்டும். தங்களின் உத்தரவு போலவே ! :)))))

   //அடுத்த பயணம் துபாய் செல்லலாம் என்றிருக்கிறோம். தங்கள் பதிவு அதற்கு உதவியாக இருக்கும்.//

   ஆஹா, அருமை. தங்களுக்கு உதவுவதற்காகவே மேலும் துபாய் பற்றிய பதிவுகளை நான் தர வேண்டும் போலிருக்கிறதே ! முயற்சிக்கிறேன்.

   ஆமாம், அது என்ன நான் ஊரில் இல்லாத ஒரு மாதத்திற்குள் இவ்வளவு இளமையாக மாறி விட்டீர்கள் !!!!! அந்த இரகசியத்தை எனக்கும் சொல்லக்கூடாதா?

   [Profile Photo மாற்றத்தைத்தான் சொல்கிறேன் :)))))) ]

   பிரியமுள்ள கோபு

   Delete

  2. அட...செல் ஃ பீ....ஜமாய்ங்கோ சார்....சிம்பிளா துபாய் போயிட்டு ஹை ஃபையா திரும்பி வந்திருக்கேள்! மகன் தந்தைக்காற்றும் உதவி இந்த நவீன செல் ஃபோன்...கரெக்டா?!

   Delete
  3. [Profile Photo மாற்றத்தைத்தான் சொல்கிறேன் :)))))) ]

   மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவை!!!

   Delete
  4. Radha Balu December 17, 2014 at 10:36 AM

   //அட...செல் ஃ பீ....ஜமாய்ங்கோ சார்....சிம்பிளா துபாய் போயிட்டு ஹை ஃபையா திரும்பி வந்திருக்கேள்! மகன் தந்தைக்காற்றும் உதவி இந்த நவீன செல் ஃபோன்... கரெக்டா?!//

   கரெக்டூஊஊஊஊ. நீங்க எது சொன்னாலும் அது கரெக்டாகத்தான் இருக்கும். :)))))

   - அன்புடன் கோபு

   Delete
  5. Radha Balu December 17, 2014 at 10:37 AM
   [Profile Photo மாற்றத்தைத்தான் சொல்கிறேன் :)))))) ]

   //மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாதவை!!!//

   தங்களின் Latest Profile Photo போலவே அழகான பதில் :)
   மிகவும் சந்தோஷம்.

   அன்புடன் கோபு

   Delete
 15. உங்கள் பயணம் இனிதே நிறைவடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
  வருக வருக! புகைப்படங்களுடன் கூடியப் பதிவுகள் உங்கள் ஓய்விற்குப் பிறகு விரைவில் வலம் வரும் என எதிர் பார்க்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. rajalakshmi paramasivam December 15, 2014 at 8:19 PM

   வாங்கோ, வணக்கம்.

   //உங்கள் பயணம் இனிதே நிறைவடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.//

   மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

   //வருக வருக! புகைப்படங்களுடன் கூடியப் பதிவுகள் உங்கள் ஓய்விற்குப் பிறகு விரைவில் வலம் வரும் என எதிர் பார்க்கிறோம்.//

   ஆகட்டும். முயற்சிக்கிறேன்.

   நவம்பர் மாதம் நான் வெளியிட்டிருந்த [சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழாப்பதிவுகள்] ஒன்பது பதிவுகளுக்கும் தாங்கள் ஏனோ வருகை தராமல் இருந்துள்ளீர்கள். குறிப்பாக அதில் மூன்று பதிவுகளில் தங்களுக்கான சில செய்திகள் உள்ளன. முடிந்தால் பாருங்கோ, ப்ளீஸ்.

   அன்புடன் கோபு

   Delete
  2. கோபு சார்,
   பதிவுகளைப் பார்த்தேன். கருத்திடவில்லை. இன்று அல்லது நாளை செய்து விடுவேன் என்று நினைக்கிறேன்.
   மனம் பதிவு பக்கம் செல்ல முடியாமல் வேறு சில சிந்தனைகள் தடுக்கின்றது. அதனால் தான் இந்த டிலே .

   Delete
  3. rajalakshmi paramasivam December 19, 2014 at 1:19 PM

   வாங்கோ, வணக்கம்.
   //கோபு சார், பதிவுகளைப் பார்த்தேன். கருத்திடவில்லை. இன்று அல்லது நாளை செய்து விடுவேன் என்று நினைக்கிறேன். மனம் பதிவு பக்கம் செல்ல முடியாமல் வேறு சில சிந்தனைகள் தடுக்கின்றது. அதனால் தான் இந்த டிலே.//

   பரவாயில்லை. NO PROBLEM AT ALL. அப்படியே பரிசுத் தொகைகள் எல்லாம் சரியாகக் கிடைத்தனவா என்பதையும் தயவுசெய்து CONFIRM பண்ணுங்கோ. அவசரமே இல்லை. மெதுவாக ஒழிந்தபோது மட்டும்.

   அன்புடன் கோபு

   Delete
 16. ஆஹா பத்திரமா வந்து சேர்ந்தாச்சா அண்ணா மன்னி .. இருவருக்கும் அன்பு நமஸ்காரங்கள்...

  ஆஹா படங்கள் எல்லாம் மிக அருமை...

  எங்களையும் கூட்டிட்டு போயிட்டீங்க கார்டன், மால், உயரமான டவர் எல்லாவற்றிற்கும்...

  ஹை லிங்கா படமும் பார்த்தாச்சா.. பேஷ் பேஷ்...

  பிள்ளைகளுடன் இருப்பதே சந்தோஷம்..

  நன்றாக ஓய்வெடுங்கள் அண்ணா...

  இருவரின் உடல்நலம் என்றென்றும் ஆரோக்கியத்துடன் இருக்க அன்பு பிரார்த்தனைகள் அண்ணா மன்னி...

  ReplyDelete
  Replies
  1. Manjubashini Sampathkumar December 15, 2014 at 10:01 PM

   வாங்கோ மஞ்சூஊஊஊஊஊ, வணக்கம்.

   //ஆஹா பத்திரமா வந்து சேர்ந்தாச்சா அண்ணா மன்னி .. இருவருக்கும் அன்பு நமஸ்காரங்கள்...//

   ஒருவழியாக நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டோம், மஞ்சு

   //ஆஹா படங்கள் எல்லாம் மிக அருமை... //

   சரி .... சரி .... நீங்க ஏற்கனவே பார்க்காத படமாக்கும் ! :)

   //எங்களையும் கூட்டிட்டு போயிட்டீங்க கார்டன், மால், உயரமான டவர் எல்லாவற்றிற்கும்... //

   ஆஹா ! அந்த டவர் போலவே உயர்ந்த எழுத்துக்கள் :)

   //ஹை லிங்கா படமும் பார்த்தாச்சா.. பேஷ் பேஷ்...//

   ஆமாம் மஞ்சு. படத்தை விட துபாய் தியேட்டர் ஒன்றுக்குள் போய் படம் பார்த்தது புதிய அனுபவமாக இருந்தது, மஞ்சு.

   //பிள்ளைகளுடன் இருப்பதே சந்தோஷம்..//

   ஆமாம் மஞ்சு. கரெக்டூஊஊஊ ! :)

   //நன்றாக ஓய்வெடுங்கள் அண்ணா...//

   ஆகட்டும் மஞ்சு. ஓய்வேதும் இல்லாமல் [வலையுலகிலிருந்து] ஓய்வெடுக்கத்தான் ஆசையாக உள்ளது.

   //இருவரின் உடல்நலம் என்றென்றும் ஆரோக்கியத்துடன் இருக்க அன்பு பிரார்த்தனைகள் அண்ணா மன்னி...//

   மிக்க மகிழ்ச்சி மஞ்சு. எங்களின் அன்பான ஆசிகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete
 17. தங்களின் பயணம் சிறப்பாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு நிதானமாக வாருங்கள். ஏராளமான செய்திகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.படங்கள் அனைத்தும் அழகு. பேரன் பேத்தியுடன் உள்ள படங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.

  ReplyDelete
  Replies
  1. ADHI VENKAT December 16, 2014 at 1:08 PM

   வாங்கோ, வணக்கம்.

   //தங்களின் பயணம் சிறப்பாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு நிதானமாக வாருங்கள். ஏராளமான செய்திகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். படங்கள் அனைத்தும் அழகு. பேரன் பேத்தியுடன் உள்ள படங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான, ஆறுதலான, எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   Delete
 18. பகிர்வும் படங்களும் மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. gsanthanam1610 December 16, 2014 at 6:49 PM

   //பகிர்வும் படங்களும் மிக அருமை//

   சந்தோஷம். மிக்க நன்றி, சந்தானம்.

   அன்புடன் கோபு மாமா

   Delete
 19. வெல்கம் பக் கோபு அண்ணன்.. அழகிய படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. athira December 17, 2014 at 1:29 AM

   ஆஆஆஆ வாங்கோ ..... அதிரடி அதிராஆஆஆஆ

   //வெல்கம் பக் கோபு அண்ணன்.. அழகிய படங்கள்...//

   மிக்க நன்றி, அதிரா.

   அன்புடன் கோபு அண்ணன்

   Delete
 20. நலமாக ஊருக்கு வந்து சேர்ந்தது அறிந்து மகிழ்ச்சி.
  ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பதிவுகள் தாருங்கள்.
  படங்கள் எல்லாம் மிக அழகு.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு December 17, 2014 at 7:18 AM

   வாங்கோ, வணக்கம்.

   //நலமாக ஊருக்கு வந்து சேர்ந்தது அறிந்து மகிழ்ச்சி.
   ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பதிவுகள் தாருங்கள்.
   படங்கள் எல்லாம் மிக அழகு.//

   மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு [VGK]

   Delete
 21. இன்று என் பின்னூட்டம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.
  பேரன் பேத்தியுடன் உள்ள படங்கள் உங்கள் இருவரின் மகிழ்ச்சியை காட்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு December 17, 2014 at 7:20 AM

   வாங்கோ, மீண்டும் வருகைக்கு மீண்டும் நன்றிகள்.

   //இன்று என் பின்னூட்டம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.//

   ஆம் .... இன்று அது சரியாக வந்து சேர்ந்துள்ளது.

   //பேரன் பேத்தியுடன் உள்ள படங்கள் உங்கள் இருவரின் மகிழ்ச்சியை காட்டுகிறது.//

   :))))) சந்தோஷம், மேடம். - VGK

   Delete
 22. திண்டுக்கல் தனபாலன் December 15, 2014 at 7:41 AM

  வாங்கோ Mr DD Sir, வணக்கம்.

  //வாழ்த்துக்கள் ஐயா...//

  மிக்க நன்றி. அன்புடன் VGK

  ReplyDelete
 23. அப்போ நான் அனுப்பின பின்னூட்டம் தான் வந்து சேரலை போலிருக்கு. நானும் ஒண்ணும் புதுசா சொல்லிடலைங்கறது
  விஷயமே.

  ReplyDelete
  Replies
  1. ஜீவி December 17, 2014 at 10:05 PM

   வாங்கோ சார், நமஸ்காரம் / வணக்கம்.

   //அப்போ நான் அனுப்பின பின்னூட்டம் தான் வந்து சேரலை போலிருக்கு.//

   சிலர் அனுப்பும் பின்னூட்டங்கள் மட்டும் சில சமயம் இதுபோல வராமல் எங்கோ காணாமல் போய்விடுகின்றன. ஏற்கனவே திருமதி. கோமதி அரசு அவர்களும் மெயில் மூலம் இதுபோலச் சொல்லியிருந்தார்கள். பிறகு அவர்கள் மீண்டும் எழுதி அனுப்பிய இரண்டும் வந்துசேர்ந்துள்ளன.

   //நானும் ஒண்ணும் புதுசா சொல்லிடலைங்கறது விஷயமே.//

   :) ஏதோ தங்களின் ஆசீர்வாதம் + வாழ்த்துகள் நல்லபடியாக போய் வர முடிந்தது. அதுவே எனக்குப் போதும். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி, சார்.

   பிரியமுள்ள கோபு [VGK]

   Delete
 24. OMG ! What a clicks.... I am super excited after seeing your photos. Thanks for sharing this....
  Stay Blessed !

  ReplyDelete
  Replies
  1. Sangeetha Nambi December 18, 2014 at 10:42 PM

   WELCOME To you Madam :)

   //OMG ! What a clicks.... I am super excited after seeing your photos. Thanks for sharing this.... Stay Blessed !//

   Thanks a Lot for your Kind Visit & for the Sweet Comments. - vgk

   Delete
 25. பதிவு போட்டதே தெரியலை. எனக்கு அப்டேட்டும் ஆகலை. நானும் இணையத்துக்கு அதிகமா வர முடியலை. என்னோட பதிவை மட்டும் பார்த்துட்டுப் போயிடுவேன். :))))

  ஜி+ இல் பார்த்தேன். ஆனால் பதிவைப் பார்க்கத் தோணலை. பயணம் சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி. பேரன், பேத்தியை விட்டுவிட்டு வந்ததில் கொஞ்சம் வருத்தமாகவே இருக்கும். என்ன செய்வது! உங்கள் அனுபவங்களை முடிந்தபோது பகிருங்கள். காத்திருக்கோம். நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டு நிதானமாக வாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam December 19, 2014 at 6:13 AM

   வாங்கோ, வணக்கம். செளக்யமா ? சந்தோஷம்.

   //பதிவு போட்டதே தெரியலை. எனக்கு அப்டேட்டும் ஆகலை. நானும் இணையத்துக்கு அதிகமா வர முடியலை. என்னோட பதிவை மட்டும் பார்த்துட்டுப் போயிடுவேன். :)))) //

   மிகவும் நல்ல கொள்கை. நானும் இப்போது அதுபோலவே மாறிவிட்டேன். சிறுகதை விமர்சனப்போட்டிகள் போல யாரையும் வாங்கோ வாங்கோ என வெற்றிலை பாக்கு [பரிசுகள்] வைத்து அழைத்து தொந்தரவு கொடுப்பது இல்லை. :))))) கவலையே படாதீங்கோ. நீங்களாகவே என் பதிவுகள் பக்கம் வந்தால் தான் உண்டு. :)))))

   //ஜி+ இல் பார்த்தேன். ஆனால் பதிவைப் பார்க்கத் தோணலை.//

   அதனால் பரவாயில்லை. என்னாலும் யார் பக்கமும் செல்ல முடியவில்லை. சென்றாலும் கருத்தளிக்க இயலவில்லை. :))))) அலுத்து சலித்துப்போய் விட்டது :)))))

   //பயணம் சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி.//

   சந்தோஷம். மிக்க நன்றி.

   //பேரன், பேத்தியை விட்டுவிட்டு வந்ததில் கொஞ்சம் வருத்தமாகவே இருக்கும். என்ன செய்வது! //

   ஆமாம். என்ன செய்வது !

   //உங்கள் அனுபவங்களை முடிந்தபோது பகிருங்கள். காத்திருக்கோம்.//

   அப்படித்தான் நினைத்தேன். ஆனால் ஆறின கஞ்சி பழைய கஞ்சியாகிவிடும் அல்லவா !

   திரு. ரமணி சார், திரு. தமிழ் இளங்கோ ஐயா, திரு. பழனி கந்தசாமி ஐயா, திரு. கரந்தை ஜெயக்குமார், திரு. சொக்கன் சுப்ரமணியன், திருமதி. ராதாபாலு, திருமதி கீதா மதிவாணன், திருமதி ஆதி வெங்கட், திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம், திருமதி கோமதி அரசு, திருமதி ஞா. கலையரசி போன்ற ஒருசிலர் ஆவலுடன் காத்திருப்பதாக மேலே எழுதியுள்ளார்கள்.

   இப்போ நீங்களும் எழுதியுள்ளீர்கள். அதனால் ஆற விடாமல் சுடச்சுட எழுதி முடித்து விடலாம் என நினைத்து ஆரம்பித்துள்ளேன்.

   //நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டு நிதானமாக வாருங்கள்.//

   இந்தத் துபாய் தொடரும், கைவசம் தயாராக உள்ள வலைச்சர 108 அறிமுகங்கள் பற்றிய தொடரும் முடிந்ததும் முழுவதுமாக நன்கு ஓய்வு எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். :))))) இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் கோபு [VGK]

   Delete
 26. தங்கள் பயணம் மிகச் சிறப்பாக இருந்தது தெரிந்து மிக்க மகிழ்ச்சி. பயணத்தில் தாங்கள் கண்ட இடங்கள், பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றை உங்கள் தளத்தில் விரிவாக படிக்கும் ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் December 19, 2014 at 11:07 PM

   வாங்கோ, வெங்கட்ஜி, வணக்கம்.

   //தங்கள் பயணம் மிகச் சிறப்பாக இருந்தது தெரிந்து மிக்க மகிழ்ச்சி. பயணத்தில் தாங்கள் கண்ட இடங்கள், பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றை உங்கள் தளத்தில் விரிவாக படிக்கும் ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்.//

   மிகவும் சந்தோஷம், மிக்க நன்றி ஜி.

   Delete
 27. பயணம் இனிமையாக அமைந்ததில் மகிழ்ச்சி! அனுபவக் கட்டுரைக்குக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்! நன்றி ஐயா!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. December 20, 2014 at 2:34 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பயணம் இனிமையாக அமைந்ததில் மகிழ்ச்சி! அனுபவக் கட்டுரைக்குக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்! நன்றி ஐயா!//

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கும், காத்திருப்புக்கும் மிக்க நன்றி. தினமும் வாருங்கள்.

   அன்புடன் VGK

   Delete
 28. கோபு அண்ணா,
  உங்க கதை எப்படியோ தெரியல.

  நானும், எங்காத்துக்காரரும் தேன் நிலவுன்னு எங்கயும் போகலை. அதனால இப்ப எங்க போனாலும் தேன் நிலவா நினைச்சுக்கறோம்.

  //இன்பச்சுற்றுலா இனிதே நிறைவடைந்தது.//

  இந்த வரிகளைப் படிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. சின்ன வயசுல எப்படியோ, இப்ப தான் இன்பச் சுற்றுலா போகணும், அதை இன்பமா நினைக்கணும்.

  இதய வடிவ ஆர்ச்சுகளுக்குப் பின்னாடி நிக்கறேளே. இது நியாயமா? அப்படியே மன்னியோட தோள்ல கை போட்டுண்டு நின்னாதான் என்ன. நாங்க ரசிக்க மாட்டோமா?

  //மேலும் எனக்கு நிறைய ஓய்வு தேவைப்படுவதாலும், பிராப்தம் இருந்தால் பிறகு நாம் பதிவுகளில் சந்திப்போம். //

  என்னா ஓய்வு எடுத்துண்டு வாங்கோ. பயணம் இனிதே முடிந்ததற்கும், பேரக் குழந்தைகளுடன் ஒரு மாத காலம் மகிழ்வுடன் கழித்ததற்கும் வாழ்த்துக்கள்.

  பயண அனுபவக் கட்டுரைகளை விரைவில் எதிர்பார்க்கலாம் அல்லவா? புத்தாண்டில் கண்டிப்பாக உங்கள் பதிவுகளுக்கு பதில் கொடுப்பதை ஒரு தீர்மானவாகவே எடுத்துக் கொண்டிருக்கிறேன். அது நல்லபடி நிறைவேற உங்கள் ஆசிதான் முக்கியமாகத் தேவை.

  மன்னியிடம் என் நமஸ்காரங்களைச் சொல்லுங்கள்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya December 20, 2014 at 10:09 PM

   வாம்மா ஜெயா, வணக்கம்மா !

   //கோபு அண்ணா,, உங்க கதை எப்படியோ தெரியல.
   நானும், எங்காத்துக்காரரும் தேன் நிலவுன்னு எங்கயும் போகலை. அதனால இப்ப எங்க போனாலும் தேன் நிலவா நினைச்சுக்கறோம். //

   அதே அதே .... சபாபதே ! இங்கும் அப்படியே அதே கதைதான். முதன் முதலாக 1972 ஜூலை மாதம் சேர்ந்து பட்டிக்காடா பட்டணமா [சிவாஜி படம்] பார்த்துவிட்டு வந்தோம். அதுதான் அன்று தேன் நிலவு :)

   பிறகு எவ்வளவோ படங்கள் பார்த்தோம். எவ்வளவோ ஊர்களுக்குப்போனோம். அதெல்லாம் தனிக்கதை. :)

   **இன்பச்சுற்றுலா இனிதே நிறைவடைந்தது.**

   //இந்த வரிகளைப் படிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. சின்ன வயசுல எப்படியோ, இப்ப தான் இன்பச் சுற்றுலா போகணும், அதை இன்பமா நினைக்கணும்.//

   கரெக்ட். அதே அதே ! அப்படியே தான் நானும் நினைக்கிறேன்.

   //இதய வடிவ ஆர்ச்சுகளுக்குப் பின்னாடி நிக்கறேளே. இது நியாயமா? அப்படியே மன்னியோட தோள்ல கை போட்டுண்டு நின்னாதான் என்ன. நாங்க ரசிக்க மாட்டோமா?//

   நீங்க ரசிப்பேள், நானும் மிகவும் ரசிப்பேன். ஆனாக்க மன்னி அதை ரசிக்க வேண்டாமா? மாடு முட்டுமே ... எதையாவது கிளப்பிவிடாதீங்கோ, ஜெ. :)

   **மேலும் எனக்கு நிறைய ஓய்வு தேவைப்படுவதாலும், பிராப்தம் இருந்தால் பிறகு நாம் பதிவுகளில் சந்திப்போம்.**

   //நன்னா ஓய்வு எடுத்துண்டு வாங்கோ. பயணம் இனிதே முடிந்ததற்கும், பேரக் குழந்தைகளுடன் ஒரு மாத காலம் மகிழ்வுடன் கழித்ததற்கும் வாழ்த்துக்கள். //

   மிகவும் சந்தோஷம், ஜெ.

   //பயண அனுபவக் கட்டுரைகளை விரைவில் எதிர்பார்க்கலாம் அல்லவா? புத்தாண்டில் கண்டிப்பாக உங்கள் பதிவுகளுக்கு பதில் கொடுப்பதை ஒரு தீர்மானவாகவே எடுத்துக் கொண்டிருக்கிறேன். அது நல்லபடி நிறைவேற உங்கள் ஆசிதான் முக்கியமாகத் தேவை.//

   பயண அனுபவக்கட்டுரைகள் தினமும் ஒன்று வீதம் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். ஏற்கனவே நான்கு கொடுத்தாச்சு. இன்னும் ஒரு 10-15 வரக்கூடும். முடிந்தால் தினமும் வாங்கோ. தனியா அழைப்பெல்லாம் என்னிடமிருந்து ஏதும் வரவே வராது. பயணக்கட்டுரை முடிந்தபின் ஒருவழியா ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளேன். ஏனெனில் இதில் டிலே செய்தால் அப்புறம் ஆறிய கஞ்சி பழங்கஞ்சியாக ஆகிவிடுமோள்யோ :)

   //மன்னியிடம் என் நமஸ்காரங்களைச் சொல்லுங்கள்.

   அன்புடன் ஜெயந்தி ரமணி//

   ஆகட்டும். மனம் நிறைந்த ஆசிகள்.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 29. romba santhoshama irukku. ithu pola inpa sutrula adikkadi poyitu vango. engalukellam nalla padipu anupavam kidaikum.unga koodave naanum sutripaththathu pola irunthathu

  ReplyDelete
  Replies
  1. sreevadsan December 21, 2014 at 6:20 PM

   //romba santhoshama irukku. ithu pola inpa sutrula adikkadi poyitu vango. engalukellam nalla padipu anupavam kidaikum.unga koodave naanum sutripaththathu pola irunthathu//

   வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete
 30. இனிய பயணம், அழகான படங்கள். வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. வேல் December 22, 2014 at 10:10 PM
   //இனிய பயணம், அழகான படங்கள். வாழ்த்துகள் ஐயா.//

   வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete
 31. பயணம் நலபடி அமைத்ததில் சந்தோஷம்.
  உங்கள் பதிவு முலம் என்னையும் எல்லாவற்றையும் அறிய வைப்பீர்கள் என்ன்று நமுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. viji December 25, 2014 at 2:00 PM

   அன்புள்ள விஜி, வாங்கோம்மா, வணக்கம். நீண்ட நாட்களுக்குபின் தங்களை இங்கு என் பதிவினில் காண்பதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியாக உள்ளது.

   //பயணம் நல்லபடி அமைந்ததில் சந்தோஷம்.
   உங்கள் பதிவு முலம் என்னையும் எல்லாவற்றையும் அறிய வைப்பீர்கள் என்று நம்புகிறேன்.//

   நிச்சயமாக விஜி. இந்தத்தொடர் மேலும் சுமார் 20 நாட்களுக்கு தினமும் ஒரு பதிவு வீதம் இரவு 10 மணி சுமாருக்கு வெளியிடப்படும். முதல் 8 பகுதிவரை பத்திரிகைச் செய்திகளாக இருக்கும். அதன் பிறகு இன்று 25.12.2014 வெளியாகும் பதிவுகளில் எங்களின் சொந்த அனுபவங்களும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்படும். முடிந்தால் தினமும் பாருங்கோ.

   பிரியமுள்ள கோபு

   Delete
 32. படங்களுடன் பகிர்வும் சூப்பரா இருக்கு

  ReplyDelete
 33. ஆஹா பயணம் முடிஞ்சி திரும்பியாச்சா. எனக்குனு இன்னா வாங்கியாந்திக?? அட்லீஸ்ட் ஒரு ஒஸ்தி சாக்லட் பாராவது கெடக்குமா( சரியான தீனி பண்டாரம்)

  ReplyDelete
 34. வெல்கம் பேக் சார். ஆடறகாலும் பாடற(ர) வாயும் சும்மா இருக்கதுன்னு சொல்வாங்க. கூடவே வலைப்பதிவு எழுதற கோபால் சாரின் கையும் மனமும் சும்மா இருக்காதுன்னு சேர்த்துக்கலாம். படங்கள் பகிர்வு எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 35. ஆஹா. வாங்க வாத்யாரே. மொதல் படமே பேக்கிரவுண்ட்ல ஹார்ட்ஸ். பின்னுங்க. ஒரு வருஷம் மிஷின் மாதிரி வேல பாத்தாக்க ஒரு மாசமாவது ரிலாக்ஸ் பண்ணத்தான் வேண்டும். உயர்ந்த மனிதர்...உயர்ந்த கட்டிடம்...காம்பினேஷன் சூப்பர். துபாய்ல எங்கயாச்சும் விவேகானந்தர் தெரு கண்ணுல தட்டுப்பட்டுச்சா???

  ReplyDelete
 36. பயணம் குறித்த பதிவுகளுடன் மீண்டும் VGK!! வருக! வருக!

  ReplyDelete