என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 24 டிசம்பர், 2014

உலகைக் கவரும் உன்னதமான துபாய்-8

துபாயில் இந்தியப்
பொருட்களின் கண்காட்சி
மூன்று நாட்கள் 11-13.12.2014

இந்தியப்பொருட்களின் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் துபாயில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கண்காட்சி 11.12.2014 முதல் 13.12.2014 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற்றன. இந்தக்கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 70 பேர் உருவாக்கிய அரங்குகளில் 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம் பெற்றிருந்தன. 

இந்தக்கண்காட்சியில் 2012-ம் ஆண்டு சுமார் 16 ஆயிரம் பேரும், 2013-ம் ஆண்டு சுமார் 14,700 பேர்களும் பங்கேற்றனர். அதேபோல இந்த ஆண்டும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். 

துபாயில் ஷாப்பிங் திருவிழா 
01 01 2015 தொடக்கம்
ஏற்பாடுகள் தீவிரம்.


 


 

‘கொண்டாட்டத்தின் 
ஒரு பயணம்’ 


துபாயில் கடந்த 1996-ம் ஆண்டு, சில்லரை வர்த்தகத்துக்குப் புத்துணர்வு கொடுக்கும் வண்ணம் ஷாப்பிங் திருவிழா தொடங்கப்பட்டது. பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தத்திருவிழா மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.

கடந்த 19 ஆண்டுகளாக துபாயில் நடந்துவரும் இந்த ஷாப்பிங் திருவிழா தற்போது 20-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த ஆண்டுத்திருவிழா ஜனவரி-1ம் தேதி துபாயில் கோலாகலமாக தொடங்குகிறது. 32 நாட்கள் நடக்கும் இந்தத்திருவிழா இந்த முறை ‘கொண்டாட்டத்தின் ஒரு பயணம்’ என்ற தலைப்பில்  2015 பிப்ரவரி-1ம் தேதி வரை நடக்கிறது.

குவிந்து கிடக்கும் பொருட்கள்:

இந்த ஷாப்பிங் திருவிழாவில் உலகில் உள்ள அத்தனை நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும் தேவையான விதவிதமான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். அந்த அளவுக்குப் பொருட்கள் குவிந்து கிடக்கும். இந்தத்திருவிழாவை ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இந்தத் திருவிழாவுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நுழைவுக்கட்டணத்துடன் ஒரு கூப்பன் வழங்கப்படும். பின்னர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். மேலும் மெகா குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு கிலோ தங்கம், விலை உயர்ந்த கார் போன்ற பரிசுகள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன.  

இறுதிக்கட்ட எற்பாடுகள்:

20-வது ஆண்டு ஷாப்பிங் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இது குறித்து சுற்றுலா மற்றும் வர்த்தக மார்க்கெட்டிங் துறையின் துபாய் ஷாப்பிங் திருவிழா மற்றும் சில்லறை ஸ்தாபன தலைமை நிர்வாக அதிகாரி லைலா முஹமது சுஹைல் கூறியதாவது:

துபாய் ஷாப்பிங் திருவிழா அதன் 20-ம் ஆண்டு நிறைவு விழாவை நோக்கி பயணிக்கிறது. இது நம் அனைவருக்கும் பெருமை தரும் தருணமாகும். இந்த இலக்கை நாம் அடைந்ததன் காரணம் ஷாப்பிங் துறையில் தலைமைத்துவத்தை பராமரிக்கும் துபாயின் திறமையால் மட்டும் தான். இந்த அளப்பறிய சாதனையை நிகழ்த்த முதன்மைக்காரணம், உலகப் பொருளாதார வீழ்ச்சியின் போது  கூட துபாய் ஷாப்பிங் திருவிழாவை தவறாது நடத்திய நமது நிர்வாகத்தன்மையே ஆகும்.

பிரபலங்களின் நிகழ்ச்சிகள்: 

உலகில் பல நிகழ்ச்சிகள் நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் போய் இருக்கின்றன. ஆனால் துபாய் ஷாப்பிங் திருவிழா  அனைத்துத் தருணங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. துபாய் ஷாப்பிங் திருவிழாவில் பொருட்கள் வாங்குவது மட்டுமின்றி நிகழ்வுகளின் தூண்களாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், வெற்றிகளும் இடம் பெறுகின்றன. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  


துபாயின் ஷாப்பிங் திருவிழாவின்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொழுதுபோக்குக் கலைஞர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு ஒரே மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


துபாயில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில்
செயற்கையாக உருவாக்கப்பட்ட ‘பாம் ஐலண்டு’


துபாய் நகரின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள 
வானுயர்ந்த கட்டடங்கள்துபாய் மரீனாவில் இருந்து அல்சுபோ வரை 
10.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 
டிராம் வண்டிகள் இயங்குகின்றன.
துபாயில் இயங்கும் டிராம் வண்டி இதுமட்டும்தான்.


இதிலுள்ள பெரும்பாலான தகவல்கள்
துபாயில் முதன்முதலாக 10.12.2014 அன்று வெளியிடப்பட்ட
’தினத்தந்தி’ தமிழ் செய்தித்தாளின் 
தொடக்கவிழா சிறப்பு மலரிலிருந்து
எடுத்துப் பகிரப்பட்டுள்ளன. துபாய் ’தினத்தந்தி’
தொடக்க விழா
சிறப்பு மலருக்கு 
என் நன்றிகள்


World's Tallest Building - Height 2766 feet
’At the Top - Burj Khalifa - Dubai’இனி நாங்கள் இந்தமுறைசென்று வந்த 
ஒருசில இடங்களைப்பற்றிய
படங்களும் தகவல்களும் மட்டும் 
தினமும் தொடர்ந்து வெளியிடப்படும்.

23 கருத்துகள்:

 1. துபாய்‍ .8 பகிர்வுக்கு நன்றி. அடுத்த பதிவுளைக் காண ஆவலாய் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. துபாய் ஷாப்பிங் திருவிழாவைப்பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. துபாய் ஷாப்பிங் திருவிழாப் பற்றி தெரிந்து கொண்டோம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. ஷாப்பிங் திருவிழா கு


  ஷாப்பிங் திருவிழா குறித்த தகவல்களுக்கு நன்றி. இவை எல்லாம் தெரியாத செய்திகள்.


  பதிலளிநீக்கு
 5. பிரமிப்பூட்டும் படங்கள்,

  சரி நீங்க அந்த ஷாப்பிங் திருவிழாவுக்கு போனேளான்னு சொல்லவே இல்லையே.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya December 25, 2014 at 6:38 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்.

   //பிரமிப்பூட்டும் படங்கள், சரி நீங்க அந்த ஷாப்பிங் திருவிழாவுக்கு போனேளான்னு சொல்லவே இல்லையே.
   அன்புடன் ஜெயந்தி ரமணி//

   அது [ஷாப்பிங் திருவிழா] இனிமேல் தான் 01.01.2015 அன்று தான் ஆரம்பிக்க உள்ளது. மீண்டும் போனால் தான் நான் பார்க்க முடியும். நீங்க முடிந்தால் போய்ட்டு வாங்கோ.

   2016 விழாவுக்கு வேண்டுமானால் சொல்லுங்கோ, நாம் எல்லோரும் சேர்ந்து போவோம். :)

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 6. உங்கள் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது. ஒரு பொருளை ப் பற்றி எழுத எடுத்துக் கொண்டால் அது பற்றி தனக்குத் தெரிந்ததெல்லாம் எழுதி விட வேண்டும் என்கிற ஆர்வம் எல்லோருக்கும் இருக்காது. ஆனால் நீங்கள் அப்படியில்லை என்பது தான் விசேஷம்.

  நீங்கள் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் பொழுது நான் கூட
  இதை எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்தது இரண்டு மாச காலம் இருக்குமா?.. அதற்கேற்ற மாதிரி துபாயைப் பற்றி மேலோட்டமாக ஓரிரண்டு செய்திகள் எழுதி விட்டு முடித்துக் கொள்வீர்கள் என்பது என் நினைப்பு. நீங்களோ தகவல் சுரங்கமாய் இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள்.
  அதற்கேற்ப புகைப்படங்கள் வேறே.ஆச்சரியமாய் இருக்கிறது. இது தான் உங்கள் ஈடுபாடு.

  நிறைய தடவைகள் நான் USA சென்று வந்திருக்கிறேன்.
  இப்படியெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றியதே இல்லை. உங்கள் திறமையும் சுவாரஸ்யமாக எழுதும் கலையும் வாசிக்க வாசிக்க சந்தோஷமாக இருக்கிறது.

  தவறாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள், கோபு சார்!  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி December 26, 2014 at 8:12 PM

   வாங்கோ, நமஸ்காரம், வணக்கம்.

   //அங்கிருந்தது இரண்டு மாச காலம் இருக்குமா?..//

   இந்தமுறை அங்கு நான் தங்கியது 15.11.2014 இரவு முதல் 13.12.2014 இரவு வரை சுமார் 28-29 நாட்கள் மட்டுமே. அதிலும் ஒரு வாரம் எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போய் விட்டது. ஆஸ்பத்தரி தவிர வேறு எங்கும் வெளியே நான் செல்லவில்லை.

   அதுபோல என் மகன் 2 முறை அருகே உள்ள வெளிநாடுகளுக்கு அலுவலக நிமித்தமாக ஓரிரு நாட்கள் விமானப்பயணம் மேற்கொண்டு விட்டதால், அவன் இல்லாமல் வெளியே எங்கும் என்னால் தனியாகச் சுற்றப்போக இயலவில்லை. மகனுடன் சேர்ந்து வெளியே சுற்றிய நாட்கள் மொத்தமாக ஒரு பத்து நாட்களுக்கு மேல் இருக்காது. மேலும் ஓரிரு மாதம் தங்கச் சொல்லி வற்புருத்தினார்கள். இருப்பினும் நான் புறப்பட்டு வந்துவிட்டேன்.

   அதனால் இந்தத்தொடர் மிகச்சுருக்கமாக சீக்கரமாகவே முடிந்து விடக்கூடும். :)))))

   19 அல்லது 20 பகுதிகளுடன் நின்றுவிடக்கூடும்.

   தங்கள் தொடர்வாசிப்புக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 7. ஷாப்பிங் திருவிழா பற்றிய பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 8. சுற்றுலா பயணிகளைக் கவர இம்மாதிரி ஷாப்பிங்க் திருவிழாவை அரசே நடத்துவது பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
 9. மிகவும் சிரத்தையுடன் பல அரிய தகவல்களைச் சேகரித்து அளிக்கும் தங்கள் பெருமுயற்சிக்குப் பாராட்டுகள் கோபு சார். எவ்வளவு விவரங்கள்... ஷாப்பிங் திருவிழாவின் பிரமாண்டத்தை அறிய முடிகிறது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் சமயம் வருமாறு எனக்கு அழைப்பு வந்தும் நான் போகவில்லை.
  அதனை செலவு தேவையில்லை என்ன்று.
  உங்கள் பதிவை படித்ததும் போய்வந்திருகலாமோ என்ன்று தோன்றுகிறது.


  பதிலளிநீக்கு
 11. தங்களின் அயராத உழைப்பும் திட்டமிடலும் பதிவுகளில் பரிமளிக்கிரது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 12. ஷாப்பிங்க் பெஸ்டிவெல் தகவல்கள் வெகு சுவாரசியமாக சொல்லி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 13. உன்னதமான திருவிழா பற்றி அருமையான பகிர்வுகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரிOctober 17, 2015 at 7:02 PM

   வாங்கோ, வணக்கம்.

   //உன்னதமான திருவிழா பற்றி அருமையான பகிர்வுகள்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 14. ஷாப்பிங்கு கூடவா திருவிளா பண்ணுவாங்க. கை நெறயா காச வச்சி கிட்டு என்னத்த பண்ணுதுன்னுபிட்டு புதுசு புதுசா யோசிப்பாய்ங்க போல.

  பதிலளிநீக்கு
 15. ஷாப்பிங்க் திருவிழா கலக்கல் சுற்றுலா பயணிகளை கவர எப்படில்லாம் யோசிச்சு செயல் படுத்தி வராங்க.

  பதிலளிநீக்கு
 16. கண்ணுல நிக்குது...என்ன உலகமடா...? ஏழைக்கே நரகமடா...!!!

  பதிலளிநீக்கு