About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, December 27, 2014

எங்கள் பயணம் [துபாய்-11]

பேரக்குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு 
ஒருநாள் (18.11.2014) விஜயம் செய்தோம்

பள்ளிக்கு அருகேயுள்ள 
வானளாவிய கட்டடங்கள்
 DEIRA MAIN POST OFFICE
இதன் அருகேயுள்ள ஓர் அலுவலகத்தில் 
எங்கள் பேத்தி USA செல்ல விசா வாங்கி வந்தோம்.
பள்ளியின் பிரதான நுழைவாயில்
சுமார் 50 பள்ளிப் பேருந்துகள் 
பள்ளியின் வாசலில் 
வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
 SECURITY GATE AT THE ENTRANCE OF THE SCHOOL
வெற்றிக்கோப்பைகள் அடுக்கப்பட்டிருந்தன

குழந்தைகளைக் காரிலேயே எங்களுடன் அழைத்து வர 
பள்ளி வகுப்பு முடியும்வரை சற்றுநேரம் காத்திருந்தோம்.
[ Informed to School Bus Driver also ]

அதற்குள் என் மருமகளின் சினேகிதி ஒருத்தி
பள்ளி நிர்வாகத்தால் எங்களுக்கு 
சூடான சுவையான தரமான தேநீர் 
வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

[தேநீருக்கு ஏற்பாடு செய்த + தேநீர் அளித்த 
அன்புள்ளங்களுக்கு எங்கள்  நன்றிகள்]





பள்ளியின் வரவேற்பு அறையில் உள்ள 
அழகிய மீன் தொட்டி

  
அந்தப் பள்ளியையும் அங்குள்ள 
ஒழுங்கு முறைகளையும் பார்த்ததும்
மீண்டும் குழந்தையாகி பள்ளிக்குப் போகமாட்டோமா 
என என்னை ஏங்க வைத்தது.

நகைச்சுவையுடன் கூடிய 
சுவாரஸ்யமான 
என் பள்ளி வாழ்க்கையைப் படிக்க 


 




குழந்தைகளுடன் வீடு திரும்பல்
 

 

காலை 6.45 க்கு ஸ்கூல் பஸ் வீட்டருகே வந்துவிடும்.
அதற்குள் புறப்படத் தயாராகிவிட வேண்டும்.
மதியம் 3 மணிக்கு அல்லது சில நாட்கள் மட்டும் 
மாலை 5 மணிக்குத் திரும்ப பஸ் 
அவர்களை அழைத்து வந்துவிடும்.

பயணம் தொடரும்



24 comments:

  1. பேரக் குழந்தைகளின் பள்ளிக்கும் சென்று பல தகவல்களை தந்த உங்களுக்கு என் பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அருமையான படங்கள்... குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  3. எனக்கும் தான்.
    பள்ளிக்கு சென்று படிக்க ஆசை.
    அதுவும் இந்த பள்ளிக்கு.

    ReplyDelete
  4. பள்ளியின் Vision மற்றும் Mission ஸ்டேட்மென்ட்டுகள் கச்சிதமாகவும் தொலை நோக்குடனும் இருக்கின்றன.

    ReplyDelete
  5. 'OUR VISSION'-னும் 'OUR MISSION'-னும் பிரமாதம்.

    'world citizen'-- இந்த உலக பிரஜை உணர்வும், உத்வேகமும் உயர்வானது. USA சென்ற போதெல்லாம் நான் உணர்ந்தது.

    ReplyDelete
  6. துபாய் பள்ளி அழகாகவும் தூய்மையாகவும் இருப்பதை படங்கள் மூலம் அறிய முடிகிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. உங்கள் பேரக் குழந்தைகள் படிக்கும் ’தி மில்லேனியம் ஸ்கூல்’ பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். ”பள்ளிக்கூடம் போகலாமா?” என்று பாடியபடி மீண்டும் உங்கள் பதிவுகளை, நேரம் கிடைக்கும் போது படிக்கப் போகிறேன். நான் படித்ததும் நீங்கள் படித்த அதே நேஷனல் உயர்நிலைப் பள்ளி அல்லவா? அதுதான் காரணம்.

    ( ஒரு சின்ன சந்தேகம். உங்கள் பதிவுகளில் அடிக்கடி வந்து கருத்துரை தரும் வலைப்பதிவு நண்பர்கள் என்ன ஆனார்கள். உங்கள் பதிவுகள் நிறைபேரை சென்று சேரவில்லை என்று நினைக்கிறேன்)


    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா,

      வாருங்கள், வணக்கம் ஐயா.

      //உங்கள் பேரக் குழந்தைகள் படிக்கும் ’தி மில்லேனியம் ஸ்கூல்’ பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். ”பள்ளிக்கூடம் போகலாமா?” என்று பாடியபடி மீண்டும் உங்கள் பதிவுகளை, நேரம் கிடைக்கும் போது படிக்கப் போகிறேன். நான் படித்ததும் நீங்கள் படித்த அதே நேஷனல் உயர்நிலைப் பள்ளி அல்லவா? அதுதான் காரணம்.//

      மிகவும் சந்தோஷம், ஐயா. அப்படியே செய்யுங்கள் ஐயா, அவை என்றும் நமக்கு நீங்காத நினைவலைகள் தான்.

      >>>>>

      Delete
    2. VGK to திரு. தி. தமிழ் இளங்கோ [2]

      //( ஒரு சின்ன சந்தேகம். உங்கள் பதிவுகளில் அடிக்கடி வந்து கருத்துரை தரும் வலைப்பதிவு நண்பர்கள் என்ன ஆனார்கள். உங்கள் பதிவுகள் நிறைபேரை சென்று சேரவில்லை என்று நினைக்கிறேன்)//

      இது மிகவும் நியாயமான சந்தேகம் தான் ஐயா.

      சிறுகதை விமர்சனப்போட்டிகள் நடபெற்ற 10 மாதங்களில் அதில் விருப்பமிருந்த பலருக்கும் நான் அடிக்கடி நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி அவர்களைப் போட்டியில் தொடர்ச்சியாக கலந்துகொள்ளச் செய்தேன்.

      இந்தப்பயணக்கட்டுரைக்கு போட்டி ஏதும் இல்லாததால் நானும் யாருக்கும் தனியே மெயில் மூலம் லிங்க் அனுப்பி நினைவூட்டல் கொடுக்கவில்லை. அதனால் ஒருவேளை பலருக்கும் தகவல் தெரியாமல் இருக்கக்கூடுமோ என்னவோ.

      ஆனால் G+, Face Book, Twitter ஆகியவற்றில் என் அன்றாட புதிய பதிவுகள் பற்றி விளம்பரங்கள் மட்டும் கொடுத்துவிட்டு, வெளியேறிவிடுகிறேன்.

      ஓரளவு இதுவரையிலான முதல் 11 பதிவுகளும் நல்லவேளையாக டேஷ் போர்டில் காட்சியளித்துள்ளன.

      பிறர் பதிவுகள் பக்கம் என்னாலும் இப்போதெல்லாம் போய் கருத்துகள் சொல்ல முடியாத நிலைமை எனக்கு ஏற்பட்டுள்ளதால், பிறர் நம் பக்கம் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயமில்லை அல்லவா ! சிலருக்கு இதனால் என் மீது ஒருவேளைக் கோபமாகக்கூட இருக்கலாம். அதிலும் நியாயம் உள்ளது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.

      இருப்பினும் சிலர் என் பதிவுகளுக்கு தற்சமயம் வருகை தந்து கருத்தளிக்க இயலாத குடும்ப சூழ்நிலைகளில் உள்ளனர் என்பதும் அவர்களின் இதரத் தொடர்புகள் மூலம் நான் நன்கு அறிவேன். பிறகு என்றாவது ஒருநாள் அவர்கள் கட்டாயமாக வருகை தந்து நிச்சயமாகக் கருத்தளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

      இன்னும் சிலருக்கு பயணக்கட்டுரை என்றாலே பிடிக்காமலும் இருக்கலாம்.

      உலகம் பலவிதம் அல்லவா !

      >>>>>

      Delete
    3. VGK to திரு. தி. தமிழ் இளங்கோ [3]

      மேலும் என் இந்தப்பயணக்கட்டுரைகளை பலரும் ஆர்வமாக வாசித்து வருகிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களில் சிலருக்கு தமிழில் பின்னூட்டம் கொடுக்க இயலாமல் உள்ளது. மெயில் மூலம் என்னை அவ்வப்போது பாராட்டி வருகிறார்கள்.

      யார் கருத்தளித்தாலும் கருத்தளிக்காவிட்டாலும் என் இந்தப்பயணக் கட்டுரை மொத்தம் சுமார் 20 பகுதிகள் வரை தொடர்ந்து தினமும் வந்துகொண்டே இருக்கும்.

      இது என் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு காட்டி மகிழவும், எனக்கே ஓர் இனிய நினைவலைகளாக என்றும் பசுமையாக நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஓர் ஆத்ம திருப்திக்காக மட்டுமே, சூட்டோடு சூடாக தினமும் வெளியிட்டு வருகிறேன்.

      என்றும் ஓர் நிரந்தர ஆவணமாக இது இருக்கக்கூடும்.

      >>>>>

      Delete
    4. VGK to திரு. தி. தமிழ் இளங்கோ [4]

      இருப்பினும் தாங்கள் இவ்வாறு ஒரு கேள்வி கேட்டுவிட்டதால் இன்று 28.12.2014 இரவு 7.45 நிலவரமாக ஓர் புள்ளி விபரம் தயாரித்துள்ளேன். அதன்படி இதுவரை வெளியிட்டுள்ள 11 பகுதிகளில் இதுவரை 19 ஆண்களும், 18 பெண்களுமாக ஆகமொத்தம் 37 நபர்கள் கருத்தளித்துள்ளார்கள் என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

      >>>>>

      Delete
  8. VGK to திரு. தி. தமிழ் இளங்கோ [5]

    இதுவரையிலான 11 பகுதிகளுக்கு அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்துள்ள அவர்கள் பெயர்கள் + அவர்கள் வருகை தந்துள்ள பதிவுகளின் மொத்த மதிப்பெண்கள் இதோ: [Position as on 28.12.2014 - 7.45 PM]

    திருவாளர்கள்:

    01] தமிழ் இளங்கோ அவர்கள் 11/11
    02] திண்டுக்கல் தனபாலன் அவர்கள் 11/11
    03] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் 11/11
    04] ஸ்ரீராம் அவர்கள் 1/11
    05] கரந்தை ஜெயக்குமார் அவர்கள் 6/11
    06] S. ரமணி அவர்கள் 4/11
    07] சொக்கன் சுப்ரமணியன் அவர்கள் 3/11
    08] தளிர் சுரேஷ் அவர்கள் 9/11
    09] சந்தானம் அவர்கள் 1/11
    10] ஜீவி ஐயா அவர்கள் 3/11
    11] வெங்கட் நாகராஜ் அவர்கள் 6/11
    12] E.S. சேஷாத்ரி அவர்கள் 4/11
    13] வேல் அவர்கள் 1/11
    14] ஸ்ரீவத்ஸன் அவர்கள் 1/11
    15] பரிவை சே. குமார் அவர்கள் 5/11
    16] ரூபன் அவர்கள் 1/11
    17] கில்லர்ஜி அவர்கள் 1/11
    18] ரிஷபன் அவர்கள் 4/11
    19] விச்சு அவர்கள் 1/11

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. VGK to திரு. தி. தமிழ் இளங்கோ [6]

      [Position as on 28.12.2014 - 7.45 PM]

      திருமதிகள்:

      20] ஆதி வெங்கட் அவர்கள் 11/11
      21] ஜெயந்தி ஜெயா அவர்கள் 10/11
      22] சங்கீதா நம்பி அவர்கள் 2/11
      23] கோமதி அரசு அவர்கள் 8/11
      24] அதிரா அவர்கள் 7/11
      25] ஆச்சி அவர்கள் 1/11
      26] மஞ்சு அவர்கள் 1/11
      27] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 3/11
      28] ராதாபாலு அவர்கள் 5/11
      29] கலையரசி அவர்கள் 1/11
      30] ஆசியா உமர் அவர்கள் 2/11
      31] கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள் 7/11
      32] உமையாள் காயத்ரி அவர்கள் 1/11
      33] கீதா சாம்பசிவம் அவர்கள் 7/11
      34] விஜி அவர்கள் 8/11
      35] மனோ சுவாமிநாதன் அவர்கள் 1/11
      36] அனுராதா பிரேம் அவர்கள் 1/11
      37] இராஜராஜேஸ்வரி அவர்கள் 4/11

      >>>>>

      Delete
    2. VGK to திரு. தி. தமிழ் இளங்கோ [7]

      ஏதோ இவ்வாறு இதுவரை ஒரு 37 பேர்களுக்காவது இந்தப்பயணக்கட்டுரை வெளியிட்டு வருவதுபற்றி தெரியவந்துள்ளதில் எனக்கும் ஓர் திருப்தியே.

      தொடர்ந்து வருகை தருவதோ கருத்தளிப்பதோ அவரவர்கள் விருப்பமாகவும், தற்சமயம் அவரவர்களுக்குள்ள சூழ்நிலைகளைப் பொறுத்தும் இருக்கட்டும்.

      நாம் ஏதும் தனியாக தகவல் தந்து வற்புருத்தி அழைக்க வேண்டாம் என்பது என் எண்ணமாகும்.

      இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

      என்றும் அன்புடன் தங்கள்
      VGK
      ooooooooooooooooooooooooo

      Delete
  9. பெயர் சொல்லத்தானே பேரன் பேத்திகள்! பெற்றவரையும் பெற்றவர்களைப் பெற்றவர்களையும் தங்கள் சிறப்பான செய்கைகளால் பெருமையுறச் செய்வது எவ்வளவு மகிழ்வுக்கும் பெருமிதத்துக்கும் உரிய விஷயம். பேத்திக்கு எங்கள் வாழ்த்துகள். பள்ளி வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் தாத்தா பாட்டிகளின் முகத்தில்தான் எவ்வளவு பீடு! நானும் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  10. அடடா! ரொம்ப அவசரப்பட்டு பிறந்துட்டோமோன்னு நினைக்கிறேன். ஒரு 50 வருஷம் கழிச்சு பிறந்திருந்தா........... நானும் இந்த மாதிரி பள்ளியில் படிச்சிருப்பேனே.

    நாங்க ரெண்டு பேரும் (அதான் நானும், எங்காத்துக்காரரும் தினமும் SCHOOLக்கு போயிட்டு வரோம். இப்ப ரெண்டு வாரம் லயாக்குட்டிக்கு LEAVE. எனக்கு எப்படா ஜனவரி 5ம் தேதி வரும்ன்னு இருக்கு. பல தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா எல்லாரையும் சந்திக்கலாமே. அதான்.

    உங்கள் பேரக் குழந்தைகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

    தாத்தாக்களும், பாட்டிகளும் தன் கூட பள்ளிக்கு வரது ரொம்ப மகிழ்ச்சின்னு உங்க பேரன், பேத்தி முகத்தை பார்த்தாலே தெரியறது.

    அருமையான புகைப்படங்கள்.

    பகிர்விற்கு நன்றி

    அன்புடன்

    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  11. பள்ளி அமைந்துள்ள சுழலே மிக அருமை! தங்கள் புகைப்படங்கள் மூலம் நகரம் எவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கப் படுகிறது என்பதை உணரமுடிந்தது! நன்றி ஐயா!

    ReplyDelete
  12. பள்ளி வளாகம் அதுபற்றிய விவரங்கள் படித்ததும் நாமும் சட்டுனு வயசு குறைந்து அந்த பள்ளியில் படிக்கலாம் போல இருக்கு

    ReplyDelete
  13. பேரக் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

    பள்ளி அனுபவங்கள் அருமை..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:49 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பேரக் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.//

      மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. குழந்தைகளுக்கான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

      //பள்ளி அனுபவங்கள் அருமை..//

      ஆம் .... திரும்ப நாம் பள்ளிக்குச்சென்று படிக்க மாட்டோமா என என்னை ஏங்க வைத்தது. :)

      Delete
    2. இஸ்கோலுலா பாத்தா காட்டி அங்கன போயி படிச்சுகிடலாம்னு தோணுச்சி ஆச இருக்கு தாசில் பண்ண அதிஸ்டமிருக்கு---------------------- (ஃபில் இன் த ப்ளாங்க்ஸ்)

      Delete
  14. பேரக்குழந்தைகளின் பள்ளியும் பள்ளி வளாகமும் நல்லா இருக்கு. படிப்பின் தரமும் உசத்தியாகத்தான் இருகும்.

    ReplyDelete
  15. //அதற்குள் என் மருமகளின் சினேகிதி ஒருத்தி
    பள்ளி நிர்வாகத்தால் எங்களுக்கு
    சூடான சுவையான தரமான தேநீர்
    வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

    [தேநீருக்கு ஏற்பாடு செய்த + தேநீர் அளித்த
    அன்புள்ளங்களுக்கு எங்கள் நன்றிகள்]// எதிலும் ஒரு ரசனை. ஒரு நன்றி அறிவிப்பு. அதுதான் நீங்கள். அருமையான பள்ளி. பள்ளிச்சீருடையில் பவித்ரா கன்னக்குழியுடன் - அழகு. அவளது வாழ்க்கை சிறக்கட்டும். மகிழ்ச்சி!!!

    ReplyDelete