2004-ம் ஆண்டு செப்டம்பர் / அக்டோபரில் துபாய் சென்று 45 நாட்கள் தங்கி வந்தோம். முதன் முதலான விமானப்பயணம் + வெளிநாட்டுப்பயணம் என்பதால் மிகுந்த ஆர்வத்துடனும் பேரெழுச்சியுடனும் பல இடங்களைச் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தோம். பல போட்டோக்கள் வீடியோக்கள் எடுத்து வந்தோம். ஒரு டயரி நிறைய அன்றாடம் கண்டு களித்த செய்திகளைப்பதிவு செய்தும் வைத்திருந்தேன். அப்போது நான் பதிவுலகத்தில் இல்லாததால் அவற்றை என்னால் பதிவாக எழுதி வெளியிட இயலவில்லை.
இப்போது இரண்டாம் முறையாக துபாய் செல்ல நேர்ந்தது. இம்முறையும் மூன்று மாத விசா எடுத்திருந்தும், அங்கு 28-29 நாட்கள் [15.11.2014 - 13.12.2014] மட்டுமே தங்கியிருந்தேன். சென்ற முறை பார்க்காத ஒருசில புதிய இடங்களை மட்டுமே இந்தமுறை பார்த்து வந்தோம். பேரன்புக்குரிய என் மூத்த மகன், மருமகள், ஒரு பேத்தி, ஒரு பேரன் அவ்விடம் துபாயில் உள்ளார்கள்.
சென்றமுறை 04.09.2004 திருச்சியிலிருந்து மதியம் மிகச்சரியாக பகல் 12 மணிக்குப் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 12.30 க்கு திருவனந்தபுரத்தில் இறங்கியது. அங்கிருந்து மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு 5 மணிக்கு ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தது. [அப்போது அங்கு துபாய் நேரம் பிற்பகல் 3.30 மணி] விமானத்தில் என் கூடவே என் மகனும், மருமகளும், பேரன் பேத்தியும் திருச்சியிலிருந்து புறப்பட்டு வந்திருந்தார்கள். ஷார்ஜாவிலிருந்து எங்களை அழைத்துச்செல்ல என் மகனின் 3 நண்பர்கள் [சத்யன், சந்திரசேகர், முத்துகிருஷ்ணன்] ஆளுக்கு ஒரு காரை எடுத்துக்கொண்டு, ஷார்ஜா விமான நிலையம் வந்திருந்தனர். சுமார் 40 நிமிட நேர கார்ப்பயணத்தில் ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து துபாய் வீட்டுக்கு அனைவரும் வந்து சேர்ந்தோம்.
இந்தமுறை என் மூத்த மகனின் மாமனாரும், மாமியாரும் திருச்சியிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் எங்களுடன் கூடவே துபாய்க்கு வந்தனர்.
இவர்கள் எங்களுக்கு சம்பந்தி ஆனது 1998-இல் மட்டுமே. ஆனால் 1976-லிருந்து [கடந்த 38 வருடங்களாக] நாங்கள் இருவரும் நெருங்கிய குடும்ப நண்பர்கள். ஆங்காங்கே அண்டைவீட்டிலேயே குடியிருந்தவர்கள். நானும் அவரும் திருச்சி BHEL இல் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாகவே ஒரே துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள்.
சம்பந்தி அவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் 1977-இல் பிறந்தவள். மூத்த மகளான அவள் சம்பந்தியம்மாளின் வயிற்றில் இருந்தபோதே 1977-இல் சீமந்தம் வளைகாப்பு என முதன் முதலாக எங்களை அழைத்திருந்தனர். நாங்களும் சென்று விழாவில் கலந்துகொண்டு வந்தோம். [அப்போது என் பெரிய மகனுக்கு 3 வயதும், இரண்டாம் மகனுக்கு 1-1/2 வயதும் மட்டுமே. ]
பிறகு அவர்களுக்கு அழகானதோர் பெண் குழந்தை பிறந்து புண்யாஹாவாசனம், ஆயுஷ்ஹோமம் என அனைத்துக்கும் நாங்களும் அழைக்கப்பட்டு எங்கள் நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.
1979-இல் அந்தப்பெண் குழந்தைக்கு 2 வயதாக இருக்கும் போது, குழந்தையின் அப்பாவழித் தாத்தா திரு. பஞ்சாபகேச ஐயர் என்பவர் குழந்தையை அடிக்கடித் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வெளியே வருவார்.
திருச்சி பட்டர்வொர்த் ரோடு என்னும் இடத்தில், தேனி பிரஸ் அருகே நானும் அந்தக்குழந்தையின் அப்பாவும் தினமும் காலை 7.15க்கு எங்கள் அலுவலகமான BHEL செல்லும் [ON CONTRACT BUS ROUTE No. 5] பஸ்ஸைப் பிடிக்க காத்திருப்போம்.
அப்போதெல்லாம் குழந்தையின் தாத்தா பேத்தியைக்கூட்டிக்கொண்டு எங்களுக்கு டாட்டா காண்பிக்க அங்கு வருவார். குழந்தை ரோஸ் கலர் கவுனில் பளிச்சுன்னு, சிவப்பாக, அன்று மலர்ந்த ரோஜாப்பூப்போல நன்றாக ஜோராக இருக்கும்.
நாங்கள் எல்லோரும் எங்கள் பஸ் வரும்வரை குழந்தையைத் தூக்கிக்கொண்டு கொஞ்சி மகிழ்வோம். பஸ் வந்த பிறகு குழந்தைக்கு டாட்டா சொல்லிவிட்டு, குழந்தையை அதன் தாத்தாவிடம் ஒப்படைத்து விட்டு பஸ்ஸில் ஏறுவோம்.
அதே குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து 10th and +2 வில் SCHOOL FIRST MARKS வாங்கி, பின்பு திருச்சி SRC யில் கல்லூரிப்படிப்பும் முடித்த கையோடு, டிகிரி சர்டிஃபிகேட் கையில் கிடைக்கும் முன்பே, 1998 இல் எனக்கு மூத்த மருமகளாக வருமாறு பிராப்தம் அமைந்ததில் எங்களுக்கோர் தனி மகிழ்ச்சிதான். திருமணம் ஆன கையோடு தேன் நிலவுக்கு சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்று வந்த என் மகனும், மருமகளும் பிறகு துபாயில் செட்டில் ஆகிவிட்டார்கள்.
நாங்கள் சம்பந்தியாவதற்கு முன்பே, காசி, இராமேஸ்வரம், மும்பை, சென்னை, சேலம், பெங்களூர், கர்நூல், திருப்பதி, கோவை, பாலக்காடு, குற்றாலம், கன்யாகுமரி, கொச்சின், திருவனந்தபுரம், திருவண்ணாமலை, சோளிங்கர் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நவக்கிரஹ ஸ்தலங்கள், என சேர்ந்து எங்கள் குடும்பத்தோடு நாங்கள் சுற்றாத இடங்களே ஏதும் கிடையாது. அதுபோலவே இப்போதும் நாங்கள் சேர்ந்தே விமானத்தில் துபாய்க்கும் சென்றோம்.

’சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்துக்குப் போனாப்போலே’ன்னு
ஒரு பழமொழி சொல்வார்கள்.
ஆனால் நாங்கள் சத்திரத்திற்குச் செல்லாமல்
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள
எங்கள் இருவர் வீடுகளிலிருந்தும் புறப்பட்டு
ஒன்றாகச் சேர்ந்தே துபாய் செல்ல நேர்ந்துள்ளது. :)
இந்தமுறை திருச்சியிலிருந்து 15.11.2014 சனிக்கிழமை மதியம் 2.10க்குக் கிளம்பிய விமானம் எங்கும் இடையில் நிற்காமல் நேரிடையாக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு இந்திய நேரம் மாலை 6.15க்குப் போய்ச்சேர்ந்தது. [அப்போது அங்கு துபாய் நேரம் பிற்பகல் 4.45]ஒரு பழமொழி சொல்வார்கள்.
ஆனால் நாங்கள் சத்திரத்திற்குச் செல்லாமல்
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள
எங்கள் இருவர் வீடுகளிலிருந்தும் புறப்பட்டு
ஒன்றாகச் சேர்ந்தே துபாய் செல்ல நேர்ந்துள்ளது. :)
எங்களைப்போன்ற மிகவும் ஒற்றுமையான, ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் உள்ள, ஆத்மார்த்தமான நட்புள்ள சம்பந்திகள் அமைவது மிகவும் அபூர்வமாகும். நெருங்கிய நண்பர்களாகிய எங்கள் இருவரைவிடவும், குறிப்பாக சம்பந்தி மாமிகள் இருவரும் [என் சம்சாரமும், அவரின் சம்சாரமும் ] அன்று முதல் இன்று வரை ஆத்மார்த்தமான ஆருயிர்த் தோழிகளாக உள்ளனர் என்பதுதான் மேலும் இங்கு குறிப்பிடத்தக்கது. :)
சர்வதேச விமான நிலையம், திருச்சி
எங்கள் விமானப்பயணத்தின் போது
எங்கள் சம்பந்தி அவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம்.
எங்களை வரவேற்று அழைத்துச்செல்ல குடும்ப சஹிதமாக என் மகனும், சென்றமுறை போலவே அவருடைய நண்பர் திரு. முத்துகிருஷ்ணனும் ஆளுக்கு ஒரு பெரிய காரினை எடுத்து துபாய் விமான நிலையத்திற்கு வந்து கூட்டிச் சென்றனர்.
சென்றமுறை நாங்கள் 2004-இல் சென்றபோது முத்துகிருஷ்ணனுக்குக் கல்யாணம் ஆகவில்லை. இப்போது ஆறுவயதிலும் நான்கு வயதிலும் இரு பிள்ளைகள் அழகாக உள்ளனர். பார்க்க சந்தோஷமாக இருந்தது. துபாயில் அவர்கள் வீட்டுக்கு நாங்கள் ஒருநாள் சென்றபோது, சதாபிஷேகம் ஆன தம்பதியினராகிய அவரின் அப்பா+அம்மா இருவரையும் பார்த்து நமஸ்கரிக்க முடிந்தது. அவர்கள் இருவரையும் நான் டெல்லியில் அவர்கள் வீட்டில் ஏற்கனவே ஒருமுறை 2006-இல் சந்தித்திருக்கிறேன்.
என் பிள்ளைக்கு துபாயில் பல நெருங்கிய நண்பர்கள் இருப்பதில் எனக்கும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. அவர்களில் கிரிராஜன், சத்யன், முத்துகிருஷ்ணன் ஆகிய ஒருசிலர் வீடுகளுக்கு மட்டும் நாங்கள் அவர்களின் அழைப்பினை ஏற்று சென்று விருந்து சாப்பிட்டு வந்தோம். நாங்கள் அங்கு தங்கிய குறுகிய காலம் + நேரப்பற்றாக்குறையினால், மற்ற சில குடும்ப நண்பர்களான கேப்டன் சந்திரசேகர், அவரின் மனைவி, அவரின் தாயார்; ஸ்ரீராம் + அவரின் தாயார்; பாலாஜி அவரின் மனைவி+மகன் ஆகியோர் எங்களைப்பார்க்க எங்கள் வீட்டுக்கே வந்து எங்களுடன் சேர்ந்து விருந்து சாப்பிட்டுச் சென்றார்கள்.
2004 இல் நான் துபாய் தமிழ்ச்சங்கத்தில் சந்தித்த மேலும் பல நண்பர்கள் http://gopu1949.blogspot.in/ 2011/07/5.html இப்போது அங்கு இல்லாமல் இந்தியாவுக்கே திரும்ப வந்து செட்டில் ஆகிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். எனினும் அவர்களில் பலரை திருச்சி ஸ்ரீரங்கத்தில் சமீபத்தில் நடந்த ஓர் திருமண நிகழ்ச்சியில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.
சென்றமுறை நாங்கள் 2004-இல் சென்றபோது முத்துகிருஷ்ணனுக்குக் கல்யாணம் ஆகவில்லை. இப்போது ஆறுவயதிலும் நான்கு வயதிலும் இரு பிள்ளைகள் அழகாக உள்ளனர். பார்க்க சந்தோஷமாக இருந்தது. துபாயில் அவர்கள் வீட்டுக்கு நாங்கள் ஒருநாள் சென்றபோது, சதாபிஷேகம் ஆன தம்பதியினராகிய அவரின் அப்பா+அம்மா இருவரையும் பார்த்து நமஸ்கரிக்க முடிந்தது. அவர்கள் இருவரையும் நான் டெல்லியில் அவர்கள் வீட்டில் ஏற்கனவே ஒருமுறை 2006-இல் சந்தித்திருக்கிறேன்.
என் பிள்ளைக்கு துபாயில் பல நெருங்கிய நண்பர்கள் இருப்பதில் எனக்கும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. அவர்களில் கிரிராஜன், சத்யன், முத்துகிருஷ்ணன் ஆகிய ஒருசிலர் வீடுகளுக்கு மட்டும் நாங்கள் அவர்களின் அழைப்பினை ஏற்று சென்று விருந்து சாப்பிட்டு வந்தோம். நாங்கள் அங்கு தங்கிய குறுகிய காலம் + நேரப்பற்றாக்குறையினால், மற்ற சில குடும்ப நண்பர்களான கேப்டன் சந்திரசேகர், அவரின் மனைவி, அவரின் தாயார்; ஸ்ரீராம் + அவரின் தாயார்; பாலாஜி அவரின் மனைவி+மகன் ஆகியோர் எங்களைப்பார்க்க எங்கள் வீட்டுக்கே வந்து எங்களுடன் சேர்ந்து விருந்து சாப்பிட்டுச் சென்றார்கள்.
2004 இல் நான் துபாய் தமிழ்ச்சங்கத்தில் சந்தித்த மேலும் பல நண்பர்கள் http://gopu1949.blogspot.in/
பயணம் தொடரும்
என் அருமை நண்பரும் திருச்சி பதிவருமான
திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்
[ http://tthamizhelango. blogspot.com/ எனது எண்ணங்கள் ]
இன்று 25.12.2014 என்னை சந்திக்க என் இல்லத்திற்கு
அன்புடன் வருகை தந்திருந்தார்.
2015 புத்தாண்டுக்கான புது டயரி ஒன்று
[என் இஷ்ட தெய்வமான பிள்ளையார்
படம் போட்டது] கொடுத்துச்சென்றார்.
டயரியின் முன்புறம்
டயரியின் பின்புறம்
அவருக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
Very interesting post sir ! Keep updating !
பதிலளிநீக்குSangeetha Nambi December 26, 2014 at 2:20 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//Very interesting post sir ! Keep updating !//
Thanks a Lot Madam. This will continue for another 10 days. Please visit daily.
vgk
துபாய் பயணக் கட்டுரைகளின் ஆரம்பம் இனிதாக இருக்கிறது. தொடருங்கள், தொடர்ந்து வருகிறோம்.
பதிலளிநீக்குபழனி. கந்தசாமி December 26, 2014 at 4:32 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//துபாய் பயணக் கட்டுரைகளின் ஆரம்பம் இனிதாக இருக்கிறது. தொடருங்கள், தொடர்ந்து வருகிறோம்.//
மேலும் 10 நாட்களுக்குத் தொடரும். தினமும் வருகை தாருங்கள், ஐயா.
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் VGK
FLASH NEWS:
பதிலளிநீக்குhttp://jaghamani.blogspot.com/2014/12/blog-post_26.html
மேற்படி தளத்தினில் இன்று 26.12.2014 வெற்றிகரமாக 1500வது பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
பாராட்டுவோம். வாழ்த்துவோம்.
உடனடியாக அவர்கள் தளத்திற்குச்சென்று வெற்றிகரமான அவர்களின் 1500வது பதிவுக்கு வாழ்த்துத்தெரிவித்துள்ள திரு. திண்டுக்கல் தனபாலன் + அன்பின் ஜெயா ஆகிய இருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
நீக்குVGK
திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களின் 1500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் பயண அனுபவம் மன நிறைவை தருகிறது.
திரு. தமிழ் இளங்கோ அவர்கள் அளித்த டயரி அருமை.
கோமதி அரசு December 26, 2014 at 6:15 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களின் 1500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.//
மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.
//உங்கள் பயண அனுபவம் மன நிறைவை தருகிறது.//
தங்களின் மன நிறைவான செய்திகள் மகிழ்விக்கின்றன.
//திரு. தமிழ் இளங்கோ அவர்கள் அளித்த டயரி அருமை.//
அவரே ஓர் அருமையான நண்பர்தான்.
அன்புடன் VGK
அவர்களின் வெற்றிகரமான 1500வது பதிவுக்குச்சென்று பாராட்டி வாழ்த்தியுள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + நன்றிகள், மேடம்.
நீக்குஅன்புடன் கோபு
Very intersting. Like to read more and more.
பதிலளிநீக்குviji
viji December 26, 2014 at 6:46 AM
நீக்குவாங்கோ விஜி, வணக்கம்.
//Very interesting. Like to read more and more. - viji//
மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.
பிரியமுள்ள வீ......ஜீ
நாங்களும் கூடவே பயணத்தை தொடர்கிறோம் ஐயா...
பதிலளிநீக்குமிக்க நன்றி, DD Sir.
நீக்குvgk
தொடருங்கள் ஐயா...
பதிலளிநீக்குநல்ல நட்பையும் அதைத் தொடரும் உறவையும் அறியத் தந்தீர்கள்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
நீக்குகோபு அண்ணா
பதிலளிநீக்குபடிக்கப் படிக்க ரொம்ப, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
‘எண்ணம் நன்னா இருந்தா எல்லாம் நன்னா இருக்கும்’. உங்க எண்ணத்துக்கு எல்லாமே நன்னாதான் நடக்கும்.
//அப்போது நான் பதிவுலகத்தில் இல்லாததால் அவற்றை என்னால் பதிவாக எழுதி வெளியிட இயலவில்லை.//
அதனால என்ன. இப்ப ரெண்டு பயணத்தையும் ஒப்பிட்டு எழுதிடுங்கோ.
மாட்டுப்பொண்ணை குழந்தையா இருக்கும் போதே கொஞ்சற பாக்கியம் யாருக்கு கிடைக்கும்.
//எங்களைப்போன்ற மிகவும் ஒற்றுமையான, ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் உள்ள, ஆத்மார்த்தமான நட்புள்ள சம்பந்திகள் அமைவது மிகவும் அபூர்வமாகும்.//
ஆமாமா. ஊரு கண்ணு படப்போறதேன்னு நான் நீங்க நாலு பேரும் இருக்கற போட்டோக்கு சுத்தி போட்டுட்டென்.
ரொம்பவும் சுவாரசியமாக இருக்கிறது.
மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்
ஜெயந்தி ரமணி
Jayanthi Jaya December 26, 2014 at 4:23 PM
நீக்குஅன்பின் ஜெயா, வாங்கோ, வணக்கம்.
//கோபு அண்ணா, படிக்கப் படிக்க ரொம்ப, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ‘எண்ணம் நன்னா இருந்தா எல்லாம் நன்னா இருக்கும்’. உங்க எண்ணத்துக்கு எல்லாமே நன்னாதான் நடக்கும்.//
ஏதோ ஜெயா சொன்னா எதுவும் சரியாகத்தான் இருக்கும். :) மிகவும் சந்தோஷம் ஜெயா.
**அப்போது நான் பதிவுலகத்தில் இல்லாததால் அவற்றை என்னால் பதிவாக எழுதி வெளியிட இயலவில்லை.**
//அதனால என்ன. இப்ப ரெண்டு பயணத்தையும் ஒப்பிட்டு எழுதிடுங்கோ.//
அடடா, அது சரிப்பட்டு வராது ஜெயா. அந்தப்படங்களையெல்லாம் இப்போத் தேடி இணைப்பது மிகவும் சிரமமான காரியமாகும்.
//மாட்டுப்பொண்ணை குழந்தையா இருக்கும் போதே கொஞ்சற பாக்கியம் யாருக்கு கிடைக்கும். //
எனக்கு அமைந்துள்ள மாட்டுப்பொண் நம்பர் -1 and நம்பர் -3 இருவருமே அதுபோலவே தான். சின்னக்குழந்தையாய் இருக்கும் போது என்னிடம் பலநாட்கள் மிக ஆர்வமாகக் கதை கேட்டவர்களும் கூட. ஏதோ ஈஸ்வர சங்கல்ப்பம் + பிராப்தம் அதுபோல அமைந்துள்ளது. :)))))
**எங்களைப்போன்ற மிகவும் ஒற்றுமையான, ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் உள்ள, ஆத்மார்த்தமான நட்புள்ள சம்பந்திகள் அமைவது மிகவும் அபூர்வமாகும்.**
//ஆமாமா. ஊரு கண்ணு படப்போறதேன்னு நான் நீங்க நாலு பேரும் இருக்கற போட்டோக்கு சுத்தி போட்டுட்டேன்.//
ஆஹா, ஜெயான்னா ஜெயா தான். மன்னிக்கு நாத்தனார் என்றால் இதெல்லாம் அவசியமாச் செய்யத்தானே வேண்டும். :)))))
//ரொம்பவும் சுவாரசியமாக இருக்கிறது.//
உங்களின் வித்யாசமான பின்னூட்டங்கள் படிக்க எனக்கு அதைவிட சுவாரஸ்யமாகவே உள்ளன. :)
//மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன், ஜெயந்தி ரமணி//
அன்பான தொடர் வருகைக்கும், அழகான வேடிக்கையான கருத்துக்களை வித்யாசமாக எடுத்துச்சொல்வதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஜெ.
பிரியமுள்ள கோபு
வேளைப்பளு காரணமாக தொடரை முதலில் இருந்து படிக்க முடியவில்லை! இன்றைய பகுதியை ரசித்து படித்தேன்! தொடர்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குதுபாய் பயண அனுபவம் அருமை.தொடருங்கள்....படித்து ரசிக்கிறேன்!
பதிலளிநீக்குRadha Balu December 26, 2014 at 9:45 PM
நீக்குவாங்கோ ராதாபாலு மேடம், வணக்கம்.
//துபாய் பயண அனுபவம் அருமை.தொடருங்கள்....படித்து ரசிக்கிறேன்!//
புரிகிறது. விருந்தினர் வருகையுடன் இதனையும் அவ்வப்போது படித்து ரசிப்பதாகச்சொல்வது, ஆச்சர்யமாக உள்ளது. உங்களால் மட்டுமே இதெல்லாம் முடியும். :)))))
மிக்க நன்றி.
பிரியமுள்ள கோபு
பயணம் குறித்த பகிர்வு அருமை!//
பதிலளிநீக்கு’சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்துக்குப் போனாப்போலே’ன்னு
ஒரு பழமொழி சொல்வார்கள்.
ஆனால் நாங்கள் சத்திரத்திற்குச் செல்லாமல்
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள
எங்கள் இருவர் வீடுகளிலிருந்தும் புறப்பட்டு
ஒன்றாகச் சேர்ந்தே துபாய் செல்ல நேர்ந்துள்ளது. :)
// உங்கள் முத்திரையும், படங்களும் அருமை ஐயா! தொடருங்கள்! நன்றி!
Seshadri e.s. December 26, 2014 at 9:51 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
// உங்கள் முத்திரையும், படங்களும் அருமை ஐயா! தொடருங்கள்! நன்றி!//
:))))) மிக்க நன்றி, தொடர்ந்து வாருங்கள்.
அன்புடன் VGK
இந்த பதிவிலிருந்து, இப்போதுதான் உங்களுக்கே உரிய நகைச்சுவையோடு துபாய் பயணம் துவங்கி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகாலையிலேயே எப்போதும் போல, இந்த பதிவினைப் படித்து விட்டேன். இருந்தாலும் என்னைப் பற்றியும் சில வரிகள் இந்த பதிவில் எழுதி இருப்பதால் அப்புறம் கருத்துரை எழுதிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். என்னைப் பற்றி எழுதியதற்கு நன்றி.
தி.தமிழ் இளங்கோ December 26, 2014 at 10:05 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இந்த பதிவிலிருந்து, இப்போதுதான் உங்களுக்கே உரிய நகைச்சுவையோடு துபாய் பயணம் துவங்கி இருக்கிறது என்று நினைக்கிறேன்.//
ஆமாம். மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். :)))))
மிக்க நன்றி, ஐயா.
அன்புடன் VGK
Like to read more and more.
பதிலளிநீக்குI am going through old posts from here.
viji
viji December 27, 2014 at 3:08 PM
பதிலளிநீக்குவாங்கோ விஜி. விஜியின் மீண்டும் வருகை என் சந்தோஷத்தை இரட்டிப்பாக ஆக்கி விட்டது. :))
//Like to read more and more.
I am going through old posts from here. -- viji//
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, ரொம்பவும் சந்தோஷம். தங்களின் சந்தோஷமே எனக்கும் சந்தோஷம்மா. தொடர்ந்து இன்னும் 10 நாட்களுக்கு வாங்கோ ப்ளீஸ் [27.12.2014 To 05.01.2015 மட்டும்]
பிரியமுள்ள கோபு
விட்டுப் போனதை எல்லாம் ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன்
பதிலளிநீக்குரிஷபன் December 27, 2014 at 6:40 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//விட்டுப் போனதை எல்லாம் ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி. தாங்களே ரசித்துப் படிக்க நேர்ந்துள்ளது நான் செய்த மிகப்பெரிய பாக்யமாகும்.
இந்த என் பயணத் தொடரினை தினமும் இரவு 10 மணிக்கு ஒரு பதிவு வீதம், மொத்தம் 19 அல்லது 20 பகுதிகளுடன், மிகச்சுருக்கமாக :))))) முடித்துவிட உத்தேசித்துள்ளேன்.
இதுவரை 10 பகுதிகள் வெளியிட்டுள்ளேன். இனி வரும் 9 அல்லது 10 பகுதிகள் பெரும்பாலும் படங்களாகவே தான் இருக்கும்.
பிரியமுள்ள
வீ...............ஜீ
சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த குழந்தை மூத்த மாட்டுப்பெண்ணாக வந்தது அறிந்து மகிழ்ச்சி. சம்பந்திகள் ஒற்றுமையும் ஆச்சரியம்...:) தொடரட்டும் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குADHI VENKAT December 28, 2014 at 7:22 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்த குழந்தை மூத்த மாட்டுப்பெண்ணாக வந்தது அறிந்து மகிழ்ச்சி. சம்பந்திகள் ஒற்றுமையும் ஆச்சரியம்...:) தொடரட்டும் மகிழ்ச்சி.//
மிகவும் சந்தோஷம்.
அது நாங்கள் யாருமே சற்றும் எதிர்பாராமல், பகவத் சங்கல்ப்பம் ஒன்றால் மட்டுமே நிகழ்ந்த இனியதோர் நிகழ்ச்சி. அதனால் எங்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
ஒவ்வொரு மாதமும் அனுஷ நக்ஷத்திரத்தன்று விடியற்காலம் எழுந்திருந்து ஸ்ரீ மஹாபெரியவா பாதுகைகளுக்கு அனுஷ பூஜை செய்துவிட்டு நான் காலை 8 மணிக்கு BHEL Township வீட்டிலிருந்து சாமுராய் பைக்கில் ஆபீஸ் புறப்படுவேன்.
அந்த பூஜை முடிவதற்குள் தவறாமல் இவளும் என் வீட்டுக்கு வந்து நமஸ்கரித்து, பிரஸாதம் எடுத்துக்கொண்டு பிறகு ஸ்கூலுக்குப் புறப்படுவாள். இவள் வீடும் BHEL Qrs. இல் என் வீட்டிலிருந்து ஒரு நாலே நாலு வீடுகள் தள்ளியே அப்போது அமைந்திருந்தது. படிப்பில் மஹா கெட்டிக்காரி.
பொதுவாக சில தமிழ்க் கவிதைகள் + கட்டுரைகள் எழுத வேண்டுமானால் என்னிடம் வந்து உதவி கேட்பாள். நானும் எழுதிக்கொடுத்துள்ளேன்.
+2 ஆண்டுத்தேர்வில் School First வந்த அவளுக்கு நான் அன்றே ஒரு தங்க நாணயம் பரிசாக அளித்துள்ளேன். என் குழந்தையே +2 வில் School First வந்தது போன்ற ஓர் மகிழ்ச்சியை அன்று நான் அடைந்தேன்.
இதைப்பற்றிய மேலும் விபரங்கள் இந்தக்கீழ்க்கண்ட பதிவினில் பச்சை நிறத்தில் எழுதியுள்ளேன்:
http://gopu1949.blogspot.in/2012/03/4.html
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மகிழ்ச்சி நிறைந்த கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
சார் உங்கள் மருமகள் வந்த கதை குறும்படம் பாத்தர்போல இருக்கு .உங்கள் பயணம் நேரடி ஒளிபரப்பு போல உள்ளது
பதிலளிநீக்குthirumathi bs sridhar December 28, 2014 at 9:50 AM
நீக்குவாங்கோ ஆச்சி, வணக்கம் ஆச்சி. தங்களின் அபூர்வ வருகை எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கின்றது, ஆச்சி.
//சார் உங்கள் மருமகள் வந்த கதை குறும்படம் பார்த்தாற்போல இருக்கு.//
அப்படியா ஆச்சி, மிகவும் சந்தோஷம்மா ! :)
//உங்கள் பயணம் நேரடி ஒளிபரப்பு போல உள்ளது/
அடடா, மிக்க மகிழ்ச்சி ஆச்சி.
நான் சற்றும் எதிர்பார்க்காத, மிகவும் பொக்கிஷமான இனிய நினைவலைகளை என்றும் எடுத்துச்சொல்லும் விதமாக, தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு எனக்கு அனுப்பி வைத்துள்ள பரிசுப்பொருளினைப் பார்த்து, அசந்து போனோம், வியந்து போனோம். எங்கள் மீது என்னே ஒரு பேரன்பு தங்களுக்கு !
தங்களின் பேரன்புக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஆச்சி. வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!
பிரியமுள்ள கோபு
ஆஹா... எவ்வளவு அற்புதமான நிகழ்வுகள். நண்பர்களே சம்பந்திகளாவது ஒரு அற்புதம் என்றால் சம்பந்தியான பிறகும் நட்பு நீடிப்பது பெரும் அற்புதம். நல்ல புரிதல் இருந்தால்தான் இப்படிப்பட்ட உறவுகள் நீடிப்பது சாத்தியம். சம்பந்திமார்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். மருமகளை குழந்தையிலேயே கொஞ்சி தூக்கிச் சுமந்த பேறு எத்தனைப் பேருக்கு கிடைத்திருக்கும்? இனிய மலரும் நினைவுகளுடனான நிகழ்வுகளின் விவரிப்பு மிக அருமை. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குகீத மஞ்சரி December 29, 2014 at 5:18 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஆஹா... எவ்வளவு அற்புதமான நிகழ்வுகள். நண்பர்களே சம்பந்திகளாவது ஒரு அற்புதம் என்றால் சம்பந்தியான பிறகும் நட்பு நீடிப்பது பெரும் அற்புதம். நல்ல புரிதல் இருந்தால்தான் இப்படிப்பட்ட உறவுகள் நீடிப்பது சாத்தியம். சம்பந்திமார்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். மருமகளை குழந்தையிலேயே கொஞ்சி தூக்கிச் சுமந்த பேறு எத்தனைப் பேருக்கு கிடைத்திருக்கும்? இனிய மலரும் நினைவுகளுடனான நிகழ்வுகளின் விவரிப்பு மிக அருமை. தொடர்கிறேன்.//
மிகவும் சந்தோஷம். மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
தொடர்ந்து தினமும் வாங்கோ. அநேகமாக ஜனவரி 5ம் தேதிக்குள் இந்தத்தொடர் நிறைவடைந்துவிடும்.
அன்புடன் கோபு
I gone through all your travel experience. Very very nice. I some places i had seen and that gave me malurm neenivikal. Some places i had not visited but seen through your post. Really very good pictures. Very nice narration. Since i read all the posts at a strech, i felt as if i myself travelled. Thanks for sharing with us.
பதிலளிநீக்குHappy newyear. Takecare.
viji December 30, 2014 at 2:54 PM
நீக்குவாங்கோ விஜி, வணக்கம். ’வீஜீ’யின் இந்த ஒரே பதிவுக்கு விஜியின் மூன்றாம் முறை வருகை மும்மடங்கு மகிழ்ச்சியளிக்கிறது. :)))
//I gone through all your travel experience. Very very nice. I some places i had seen and that gave me malurm neenivikal. Some places i had not visited but seen through your post. Really very good pictures. Very nice narration. Since i read all the posts at a strech, i felt as if i myself travelled. Thanks for sharing with us.//
விஜியின் மலரும் நினைவுகளை மறக்காமல் எடுத்துச் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க மகிழ்ச்சி. :)
//Happy new year. Takecare.//
இனிய ஆங்கிலப் புத்தாண்டு + பொங்கல் + கணு நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு
நல்ல நல்ல அனுபவங்கள் ரொம்ப சுவாரசியமான விஷயங்கள. படிக்கும் போதே சந்தோஷமா இருக்கு
பதிலளிநீக்குஆத்மார்த்தமான நட்புள்ளம் கொண்ட புரிதல் உள்ள உறவினர்களுடன் அருமையான பயணம்...
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:59 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஆத்மார்த்தமான நட்புள்ளம் கொண்ட புரிதல் உள்ள உறவினர்களுடன் அருமையான பயணம்...//
ஆத்மார்த்தமான நட்புள்ளத்துடன் புரிந்து சொல்லியுள்ள தங்களின் அருமையான கருத்துக்களுக்கு என் நன்றிகள்.
:))))))))))))
பதிலளிநீக்குபயண தொடர் சூப்பரா போயிட்டு இருக்குது. வெலாவாரியா வெரமா சொல்லி வாரீக. இன்னா ஞாபக சக்தி.
பதிலளிநீக்குபயணத்தொடர் வெரி இண்ட்ரஸ்டிங்க் படிக்க படிக்க அடுத்து எந்த இடம் பற்றி சொல்லப் போறீங்கன்னு எதிர்பார்க்க வைக்கிறது.
பதிலளிநீக்குசம்பந்தியுடன் ஆரம்பத்திலிருந்தே சமபந்தி...சிறுபிள்ளையாய் தூக்கிக் கொஞ்சிய பெண்ணே மறுமகள்...அருமை..மிகவும் மகிழ்ச்சி..மனம் போல வாழ்வு என்பது இதுதான்...ஃப்ளைட்குள்ளாற இப்புடித்தான் இருக்குமா??
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குWell wtitten. Though late it is very interesting to read part 9 of dubai travelogue. All the best. Vaithilingam 22.12.2018
பதிலளிநீக்குThank you very much, Sir. Namaskarams.
நீக்குஅன்புடன் கோபு