என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 ஜனவரி, 2015

அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]

Model of the 
World's Tallest Building
"Burj Khalifa", Dubai
ஒரு மாத துபாய் சுற்றுலா சென்றுவிட்டு 
14.12.2014 திருச்சிக்குத் திரும்பினோம்.
 

24.12.2014 தனுர் மாத உத்திராட நக்ஷத்திரம்  
 வழக்கம்போல விடியற்காலம்
ஆற்றழகிய சிங்கப்பெருமாள் 
கோயிலுக்குப்போய் 
அர்ச்சனை செய்துவிட்டு 
வெண்பொங்கல் பிரஸாதத் தூக்கு சஹிதம் 
எங்கள் வீட்டினை அடைந்தோம்.

அன்று கூரியர் தபாலில் 
ஒரு மிகப்பெரிய பார்ஸல் வந்திருந்தது.

அதன் மேல் FROM ADDRESS இல் எழுதியிருந்த
பெண்மணியின் அழகான பெயர் :
 S. பரமேஸ்வரி ! 
இந்தப்பெயர் சற்றே எனக்குப் பரிச்சயம் இல்லாமல்
மிகவும் புதுமையாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.

பிறகு ஊர் பெயரைப்பார்த்ததும் 
அவர்களாகத்தான் இருக்கணும் என்று 
 உடனே என் நினைவுக்கு  வந்துவிட்டது. 

ஆவலுடன் அந்தப் பார்ஸலைப் 
பிரித்துப்பார்த்தேன் !
பார்த்ததும் பரவஸம் ஆனேன் !!


ஒரு பீங்கான் தேநீர் கோப்பையில் 
{ 3rd July 1972 and 3rd December 2014  }
ஆகிய 42 ஆண்டுகளின் மாற்றத்தை
மேலும் கீழுமாக ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்கள்



அதே கோப்பையின் நடு பாகத்தில் எங்கள் குடும்ப
உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களைக்
காட்டி அசத்தியுள்ளார்கள்.
படத்தில் மேலேயுள்ளது : December 2009
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
படத்தில் கீழேயுள்ளது: 
Left: 2011 and Right: 2014

[10 மாதக் குட்டிப்பேரனைத்தவிர 
All the 11 out of 12 are Covered in the Cup]
{கோப்பைக்குள் அடங்காத குட்டிமுயல் }
குட்டிப்பயல்
DOB: 09.03.2014
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-03-03-third-prize-winner.html


நான் போட்டோ ஏதும் தனியாக அனுப்பாமலேயே
என் பதிவுகளிலிருந்தும் மெயில்களிலிருந்தும் 
அவர்களே எடுத்துக்கொண்டுள்ளார்கள்.

அதே தேநீர்க் கோப்பையின் மற்றொரு புறம்
என் சமீபத்திய துபாய் பயணத்தையும்
காட்டியுள்ளார்கள் !
{ AT DUBAI - NOVEMBER / DECEMBER 2014 } 

மொத்தத்தில் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும்
வெவ்வேறு இனிய நினைவலைகளையும்
ஒரு காலிக் கோப்பைக்குள் கொண்டுவந்து அதில் அன்பினை நிரம்பி வழியச்செய்துள்ளது
மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.

 அவர்களின் கைவேலையில் அட்டையில் 
செய்யப்பட்டுள்ள போட்டோ ஸ்டாண்ட் ஒன்றும் 
Back and Back ஆக இரண்டு  போட்டோக்களுடன் 
அனுப்பியுள்ளார்கள்.


அவர்களின் கைவேலைகளில் மேலும் சில நகைகள் 
[ மிகவும் கலையுணர்வு உள்ளவைகள் ]

-oooooOooooo- 

அன்புள்ளமும், என் மீது தனிப்பிரியமும் ,
ஆத்மார்த்தமான நட்பும், பாசமும் மட்டுமின்றி,
என்னை அவ்வப்போது ஸ்வாதீனமான உரிமையுடன்
கிண்டலும் கேலியும்கூட செய்துவரும் 
என் நலம்விரும்பியான 
பதிவர் ஒருவர் தான் 
இதனை அனுப்பியுள்ளார்கள்.

  


இந்தப் பதிவர் 20.06.2014 அன்று 
என் இல்லத்திற்கே நேரில்
திடீர் வருகை தந்து மகிழ்வித்தவர்கள்.


அவர்கள்தான்  நம்

 ’அன்புள்ள ஆச்சி ’ 


( மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் )
திருமதி thirumathi bs sridhar அவர்கள்

வலைத்தளம்: [1] http://aatchi.blogspot.in/ ஆச்சி ஆச்சி

[2] http://maniamma.blogspot.in/ அம்மாவின் நினைவில்
  

 ஆச்சியின் பேரன்புக்கு 
என் மனம் நிறைந்த 
இனிய நன்றிகள். 



ஆ ச் சி :)


ஆச்சி அனுப்பி வைத்துள்ள 
அழகான  ஆபரணங்களைக் 
கழுத்திலும் காதுகளிலும்
ஏற்றிக்கொண்டுள்ள 
என் பெரிய அக்காவின் 
பேத்திகளில் சிலர்.



 
மேலும் கீழும் உள்ள இருவரும் 
இரட்டையர்கள் [TWINS] 
 


 

இவற்றை முக்கியமானதொரு நாளான
இன்று [05.01.2015] வெளியிடுவதில்
மேலும் எனக்கு மகிழ்ச்சியே.  

 






என்றும் அன்புடன்  தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்



ஞாயிறு, 4 ஜனவரி, 2015

எங்கள் பயணம் [துபாய்-19]

இது என்னுடைய 700வது பதிவாக அமைந்துள்ளதில் மகிழ்ச்சி

 


மகன் வீட்டு பூஜை அறை





மகனின் பெரும்பாலான  நண்பர்கள் வீடுகளிலும்
அழகாக பூஜிக்கப்படும் ஹனுமன் படம்.

 
மகன் வீட்டிலுள்ள தொலைகாட்சிப்பெட்டி

[மகனின் நண்பர் கிரி வீட்டு சோஃபா]
இந்த சோஃபாவில் அமர்ந்து 
கீழேயுள்ள பட்டனைத் தட்டினால் போதும்.

இரண்டு கால்களையும் நீட்டிக்கொள்ளவும், 
பின்புறம் சாய்ந்துகொள்ளவும்
மிகவும் வசதியாக மாறிவிடுகிறது. 

கால்களை முழுவதுமாக நீட்டிக்கொண்டு, 
முதுகையும் ஈஸிசேர் போல சாய்த்துக்கொண்டு
கும்மென்று, ஜிம்மென்று, விஸ்தாரமாகவும்
ஆனந்தமாகவும் தூங்க அருமையானதோர் சோஃபா :)

 
இன்றைய காட்சிப்பொருளாக மாறிவிட்ட
அன்றைய அழகிய தொலைபேசி

கிரி வீட்டில் அவர்கள் குடும்பத்தாருடன் 
12.12.2014 காலையில்


என் மகன் எனக்கு அன்புடன் அளித்த பரிசு.
அனைத்து லேடஸ்ட் தொழில்நுட்பங்களும் உள்ள
SAMSUNG MOBILE PHONE +
அதனுடனான தொப்புள் கொடி போன்ற 
பல்வேறு இணைப்பு சமாசாரங்கள் உள்பட

SAMSUNG MOBILE PHONE  
வாங்கப்பட்ட இடம்

 சமூக சேவையாக மட்டுமே
மருமகள் பயிற்சியளித்து வரும்
குழந்தைகளுக்கான 
ART OF LIVING CLASS 

துபாயிலுள்ள மூத்த மகனின் குடும்பம் 
கிதார் வாசித்து மகிழ்வித்த 
எங்கள் அருமைப் பேத்தி

வெற்றிகரமாக அமெரிக்கப்பயணம்
முடித்துவந்த பேத்தியை வரவேற்கும்
தாத்தாக்கள் + பாட்டிகள்.
[Late Night of 9th December, 2014]


8th December, 2014 .... VGK's English Birth Day
9th December, 2014 .... VGK's Tamil Star Birth Day
[கார்த்திகை மாதப் புனர்பூசம்]
இந்த ஆண்டு துபாயில் கொண்டாடிய 
தாத்தா பேத்திக்கு அளிக்கும் ஸ்வீட்ஸ் டப்பா

பேத்தி, தாத்தாவுக்குக் கொடுத்த
அமெரிக்கப் பரிசுப்பொருள் [BOOK MARK] +
ONE MILLION DOLLAR MILK CREAMY CHOCOLATE BAR 
தன் அன்புத்தம்பிக்கு அமெரிக்காவிலிருந்து வாங்கிவந்த 
வாஷிங்டன் தொப்பியும்
நியூயார்க் டீ ஷர்ட்டும்.  
அமெரிக்க நினைவாக 
வாங்கி வந்த சில நாணயங்கள்
LIBERTY 2014 என பொறித்தது.
பாட்டிகள் இருவருக்கும் ஆளுக்கு ஒன்று வீதம் 
பேத்தி அளித்த
நியூயார்க் நகர சுதந்திரதேவி சிலை
[பின்புறம் காந்தம் வைத்தது]
அமெரிக்கா போய் வெற்றிகரமாகத் திரும்பிய 
அதிர்ஷ்டக்கார அருமைப் பேத்திக்கு 
ஹாரத்தி சுற்றி வரவேற்பு அளித்த
அம்மாவழி + அப்பாவழிப் பாட்டிகள்.

[ Late Night of 9th December, 2014 ]


 


oooooOooooo


 
சம்பந்தி அம்மாள் திருமதி. 
சீதாலக்ஷ்மி 
அவர்கள்.

தாயுள்ளம் கொண்ட எங்கள் அன்புக்குரிய சம்பந்தி அம்மாள் திருமதி சீதாலக்ஷ்மி பாலசுப்ரமணியம் அவர்கள், நாங்கள் அங்கு துபாயில் தங்கியிருந்த நாட்களில், மிகுந்த ஆர்வத்துடன் சமையல் அறையின் முழுப்பொறுப்பினை ஏற்று, வாய்க்கு ருசியாக சம்பந்தி உபசாரம் செய்து அசத்தினார்கள். 

நானும் என் மனைவியும் அவர்கள் போடும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு பாராட்டுவதோடு சரி. :)

சென்றமுறை நாங்கள் துபாய் சென்றிருந்தபோது இரண்டு கைக்குழந்தைகளுடன் எங்கள் மருமகள் ஒண்டியாகவே எல்லா சமையல் வேலைகளையும் செய்து சிரமப்படுகிறாளே என எங்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இந்த முறை அவளின் அம்மா எங்களுடனேயே துபாய்க்கு வந்ததில் எங்களுக்கும் எங்களைவிட எங்கள் மருமகளுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !

தினப்படி வீட்டிலுள்ள எட்டு நபர்களைத்தவிர, அவ்வப்போது வந்து போகும் நண்பர்கள், விருந்தினர்கள் என்றால் சும்மாவா !!!!!

சாதம், நெய், பருப்பு, கறி, கூட்டு, பருப்பு உசிலி / பொடிமாஸ்; அப்பளம், சாம்பார் / மோர்க்குழம்பு / வற்றல் குழம்பு; ரஸம், மோர், ஊறுகாய் முதலிய ரொட்டீன் ஐட்டம்ஸ்கள் ஒருபுறம் இருக்கட்டும். 

இட்லி, தோசை, வெங்காய தோசை, அடை, வெங்காய அடை, புளிச்சமா அடை, ரவா உப்புமா, புளி அவல் உப்புமா, அரிசி உப்புமா, உதிர்த்த இட்லி உப்புமா, பிடி கொழுக்கட்டை, வெண்பொங்கல், தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, பருப்பு சேவை, பூரி மஸால், தேங்காய் சாதம், புளியஞ்சாதம், பொறித்த வடாம், ரவா கேஸரி, உருளைக்கிழங்கு போண்டா, சட்னி, காஃபி என விதவிதமாகச் செய்து போட்டு அசத்திவிட்டார்கள்.

அவர்களுடன் சேர்ந்து ஊரைச்சுற்றப்போகும் போதெல்லாம் சில நாட்கள் மட்டும் ஹோட்டல் சரவணபவனிலேயே அனைவருமாக எங்கள் ஆகாரத்தை முடித்துக்கொண்டு வந்துவிடுவதும் உண்டு. 

பேக்கிங், பயணம், ஷாப்பிங் போன்ற அனைத்திலும் ஆர்வமும், ஆசையும், அனுபவமும், முன் ஜாக்கிரதையும் கொண்டவர்கள் இந்த எங்கள் சம்பந்தியம்மா.  http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html இந்த என் சிறுகதையில்கூட இவர்களைப்பற்றியும் கொஞ்சம் சொல்லியுள்ளேன். நினைவு இருக்கும் என நினைக்கிறேன்.

’கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பதுபோல, சமையல் எக்ஸ்பர்ட் ஆன இவர்களுக்கு துபாய், சிங்கப்பூர், சென்னை, பெங்களூர், மும்பை போன்று எங்கு சென்றாலும் நல்லதொரு வரவேற்பு எப்போதும் காத்திருக்கிறது. 

இவர்களுக்கு துபாயில் இரண்டு குழந்தைகளுடன் மூத்த மகள் [அதாவது எங்கள் மருமகள்]; சிங்கப்பூரில் மூன்று ஆண் குழந்தைகளுடன் இளைய மகள்; சென்னையில் தாய் மாமா மற்றும் சில உறவினர்கள்; பெங்களூரில் ஓர் நாத்தனார் + ஒரு சொந்த தமக்கை; மும்பையில் ஓர் தமக்கை. 

நடுவே அவ்வப்போது சொந்த வீடு உள்ள சொந்த ஊரான எங்கள் திருச்சிக்கும் வந்து போவார்கள். :) எங்களுடன் துபாய்க்குப் புறப்பட்ட இவர்கள் இப்போது இன்னும் துபாயில் தான் இருக்கிறார்கள். அவர்கள் திருச்சி வந்து மீண்டும் சிங்கப்பூர் கிளம்ப மேலும் ஓரிரு மாதங்களாவது ஆகும். :)

இவர்கள் என் பூர்வீகமான திருச்சி ஆங்கரை கிராமத்தில் முன்னொரு காலத்தில் கொடி கட்டிப்பறந்து வந்த மிகப்பெரிய சம்சாரியான ‘மாடி லிங்கம் ஐயர்’ என்பவரின் பிள்ளைவழிப் பேத்தியாகும். திரு. A.L. ராமதாஸ் என்பவரின் கனிஷ்ட புத்ரி ஆகும்.

[சுமார் 100 வருடங்களுக்கு முன்பு ஆங்கரை கிராமத்தில் இவர்கள் தாத்தா வீடு மட்டுமே மாடி வீடாக இருந்துள்ளது. அதனால் இவரின் தாத்தா ’மாடி லிங்கம் ஐயர்’ என அழைக்கப்பட்டுள்ளார்.  இன்றும் அந்த வீடு உள்ளது.
{ ஸ்ரீமான். A.L. சந்திரமெளலி அவர்கள் }

 மாடி லிங்கம் ஐயர் அவர்களின் பிள்ளைகளில் ஒருவரான திருவாளர்: A.L. சந்திரமெளலி என்பவர் .... தற்சமயம் வயது சுமார் 90 இருக்கும் .... அங்கு வாழ்ந்து வருகிறார். இவரும் அபார சம்சாரி ஆவார். இவர் சம்பந்தி மாமியின் சொந்த சித்தப்பா ஆகும்] 

மேற்படி மாடி லிங்கம் ஐயர் அவர்களும் எங்கள் கோத்ரமான ‘சங்கிருதி’ கோத்ரமே ஆகும். அவர்கள் வம்சத்தினர் எனக்கு தாயாதியும் ஆவார்கள் என்பதில் எனக்கு ஓர் தனி சந்தோஷம் எப்போதுமே உண்டு. எல்லாம் இவ்வாறு அமைந்துள்ளது முன்னோர்கள் ஆசீர்வாதமும் பகவத் சங்கல்ப்பமும் மட்டுமே. 

 

அன்னபூரணியாகத் திகழ்ந்து அன்றாடம் வாய்க்கு ருசியாக பலவித சாப்பாடு + டிபன், காஃபி வகையறாக்கள் செய்துகொடுத்து அசத்திய எங்கள் அன்புக்குரிய சம்பந்தியம்மா திருமதி. சீதாலக்ஷ்மி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கள், வயிறு நிறைந்த வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.  

இன்றுபோல், இதே போல் ... மேலும் பல்லாண்டுகள் ஆரோக்யத்துடனும் சுறுசுறுப்புடனும், ஆசைகளுடனும், மன மகிழ்ச்சிகளுடனும் ஊர் ஊராக உலகம் சுற்றி மகிழ்ந்து வாழ்க ! வாழ்க !! வாழ்க !!! என வாழ்த்தி மகிழ்கிறோம்.



 


சுபம்


 

கையில் காசும், 
காலில் தெம்பும், 
உள்ளத்தில் உற்சாகமும்
உள்ளவர்கள்  மட்டும்
விருப்பம் இருந்தால் 
துபாய்க்குச் சுற்றுலா
சென்று வாருங்கள்
எனக்கூறிக்கொண்டு
இந்தத் தொடரினை இத்துடன் 
மிகச்சுருக்கமாக 
முடித்துக்கொள்கிறேன். :)



 

8th December கார்த்திகை மாதம்
5th January - மார்கழி மாதம்.

{ கார்த்திகை + மார்கழி }
சற்றே சூடான நானும், 
குளிர்ச்சியான என்னவளும்
பிறந்த மாதங்கள்

 


நாளை, துபாயுடன் சற்றே தொடர்புள்ள மேலும் 
ஒரேயொரு வித்யாசமான பதிவு மட்டும் வெளியிடப்படும்.
காணத் தவறாதீர்கள்.

 

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்