About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, January 4, 2015

எங்கள் பயணம் [துபாய்-19]

இது என்னுடைய 700வது பதிவாக அமைந்துள்ளதில் மகிழ்ச்சி

 


மகன் வீட்டு பூஜை அறை





மகனின் பெரும்பாலான  நண்பர்கள் வீடுகளிலும்
அழகாக பூஜிக்கப்படும் ஹனுமன் படம்.

 
மகன் வீட்டிலுள்ள தொலைகாட்சிப்பெட்டி

[மகனின் நண்பர் கிரி வீட்டு சோஃபா]
இந்த சோஃபாவில் அமர்ந்து 
கீழேயுள்ள பட்டனைத் தட்டினால் போதும்.

இரண்டு கால்களையும் நீட்டிக்கொள்ளவும், 
பின்புறம் சாய்ந்துகொள்ளவும்
மிகவும் வசதியாக மாறிவிடுகிறது. 

கால்களை முழுவதுமாக நீட்டிக்கொண்டு, 
முதுகையும் ஈஸிசேர் போல சாய்த்துக்கொண்டு
கும்மென்று, ஜிம்மென்று, விஸ்தாரமாகவும்
ஆனந்தமாகவும் தூங்க அருமையானதோர் சோஃபா :)

 
இன்றைய காட்சிப்பொருளாக மாறிவிட்ட
அன்றைய அழகிய தொலைபேசி

கிரி வீட்டில் அவர்கள் குடும்பத்தாருடன் 
12.12.2014 காலையில்


என் மகன் எனக்கு அன்புடன் அளித்த பரிசு.
அனைத்து லேடஸ்ட் தொழில்நுட்பங்களும் உள்ள
SAMSUNG MOBILE PHONE +
அதனுடனான தொப்புள் கொடி போன்ற 
பல்வேறு இணைப்பு சமாசாரங்கள் உள்பட

SAMSUNG MOBILE PHONE  
வாங்கப்பட்ட இடம்

 சமூக சேவையாக மட்டுமே
மருமகள் பயிற்சியளித்து வரும்
குழந்தைகளுக்கான 
ART OF LIVING CLASS 

துபாயிலுள்ள மூத்த மகனின் குடும்பம் 
கிதார் வாசித்து மகிழ்வித்த 
எங்கள் அருமைப் பேத்தி

வெற்றிகரமாக அமெரிக்கப்பயணம்
முடித்துவந்த பேத்தியை வரவேற்கும்
தாத்தாக்கள் + பாட்டிகள்.
[Late Night of 9th December, 2014]


8th December, 2014 .... VGK's English Birth Day
9th December, 2014 .... VGK's Tamil Star Birth Day
[கார்த்திகை மாதப் புனர்பூசம்]
இந்த ஆண்டு துபாயில் கொண்டாடிய 
தாத்தா பேத்திக்கு அளிக்கும் ஸ்வீட்ஸ் டப்பா

பேத்தி, தாத்தாவுக்குக் கொடுத்த
அமெரிக்கப் பரிசுப்பொருள் [BOOK MARK] +
ONE MILLION DOLLAR MILK CREAMY CHOCOLATE BAR 
தன் அன்புத்தம்பிக்கு அமெரிக்காவிலிருந்து வாங்கிவந்த 
வாஷிங்டன் தொப்பியும்
நியூயார்க் டீ ஷர்ட்டும்.  
அமெரிக்க நினைவாக 
வாங்கி வந்த சில நாணயங்கள்
LIBERTY 2014 என பொறித்தது.
பாட்டிகள் இருவருக்கும் ஆளுக்கு ஒன்று வீதம் 
பேத்தி அளித்த
நியூயார்க் நகர சுதந்திரதேவி சிலை
[பின்புறம் காந்தம் வைத்தது]
அமெரிக்கா போய் வெற்றிகரமாகத் திரும்பிய 
அதிர்ஷ்டக்கார அருமைப் பேத்திக்கு 
ஹாரத்தி சுற்றி வரவேற்பு அளித்த
அம்மாவழி + அப்பாவழிப் பாட்டிகள்.

[ Late Night of 9th December, 2014 ]


 


oooooOooooo


 
சம்பந்தி அம்மாள் திருமதி. 
சீதாலக்ஷ்மி 
அவர்கள்.

தாயுள்ளம் கொண்ட எங்கள் அன்புக்குரிய சம்பந்தி அம்மாள் திருமதி சீதாலக்ஷ்மி பாலசுப்ரமணியம் அவர்கள், நாங்கள் அங்கு துபாயில் தங்கியிருந்த நாட்களில், மிகுந்த ஆர்வத்துடன் சமையல் அறையின் முழுப்பொறுப்பினை ஏற்று, வாய்க்கு ருசியாக சம்பந்தி உபசாரம் செய்து அசத்தினார்கள். 

நானும் என் மனைவியும் அவர்கள் போடும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு பாராட்டுவதோடு சரி. :)

சென்றமுறை நாங்கள் துபாய் சென்றிருந்தபோது இரண்டு கைக்குழந்தைகளுடன் எங்கள் மருமகள் ஒண்டியாகவே எல்லா சமையல் வேலைகளையும் செய்து சிரமப்படுகிறாளே என எங்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. இந்த முறை அவளின் அம்மா எங்களுடனேயே துபாய்க்கு வந்ததில் எங்களுக்கும் எங்களைவிட எங்கள் மருமகளுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !

தினப்படி வீட்டிலுள்ள எட்டு நபர்களைத்தவிர, அவ்வப்போது வந்து போகும் நண்பர்கள், விருந்தினர்கள் என்றால் சும்மாவா !!!!!

சாதம், நெய், பருப்பு, கறி, கூட்டு, பருப்பு உசிலி / பொடிமாஸ்; அப்பளம், சாம்பார் / மோர்க்குழம்பு / வற்றல் குழம்பு; ரஸம், மோர், ஊறுகாய் முதலிய ரொட்டீன் ஐட்டம்ஸ்கள் ஒருபுறம் இருக்கட்டும். 

இட்லி, தோசை, வெங்காய தோசை, அடை, வெங்காய அடை, புளிச்சமா அடை, ரவா உப்புமா, புளி அவல் உப்புமா, அரிசி உப்புமா, உதிர்த்த இட்லி உப்புமா, பிடி கொழுக்கட்டை, வெண்பொங்கல், தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை, பருப்பு சேவை, பூரி மஸால், தேங்காய் சாதம், புளியஞ்சாதம், பொறித்த வடாம், ரவா கேஸரி, உருளைக்கிழங்கு போண்டா, சட்னி, காஃபி என விதவிதமாகச் செய்து போட்டு அசத்திவிட்டார்கள்.

அவர்களுடன் சேர்ந்து ஊரைச்சுற்றப்போகும் போதெல்லாம் சில நாட்கள் மட்டும் ஹோட்டல் சரவணபவனிலேயே அனைவருமாக எங்கள் ஆகாரத்தை முடித்துக்கொண்டு வந்துவிடுவதும் உண்டு. 

பேக்கிங், பயணம், ஷாப்பிங் போன்ற அனைத்திலும் ஆர்வமும், ஆசையும், அனுபவமும், முன் ஜாக்கிரதையும் கொண்டவர்கள் இந்த எங்கள் சம்பந்தியம்மா.  http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html இந்த என் சிறுகதையில்கூட இவர்களைப்பற்றியும் கொஞ்சம் சொல்லியுள்ளேன். நினைவு இருக்கும் என நினைக்கிறேன்.

’கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பதுபோல, சமையல் எக்ஸ்பர்ட் ஆன இவர்களுக்கு துபாய், சிங்கப்பூர், சென்னை, பெங்களூர், மும்பை போன்று எங்கு சென்றாலும் நல்லதொரு வரவேற்பு எப்போதும் காத்திருக்கிறது. 

இவர்களுக்கு துபாயில் இரண்டு குழந்தைகளுடன் மூத்த மகள் [அதாவது எங்கள் மருமகள்]; சிங்கப்பூரில் மூன்று ஆண் குழந்தைகளுடன் இளைய மகள்; சென்னையில் தாய் மாமா மற்றும் சில உறவினர்கள்; பெங்களூரில் ஓர் நாத்தனார் + ஒரு சொந்த தமக்கை; மும்பையில் ஓர் தமக்கை. 

நடுவே அவ்வப்போது சொந்த வீடு உள்ள சொந்த ஊரான எங்கள் திருச்சிக்கும் வந்து போவார்கள். :) எங்களுடன் துபாய்க்குப் புறப்பட்ட இவர்கள் இப்போது இன்னும் துபாயில் தான் இருக்கிறார்கள். அவர்கள் திருச்சி வந்து மீண்டும் சிங்கப்பூர் கிளம்ப மேலும் ஓரிரு மாதங்களாவது ஆகும். :)

இவர்கள் என் பூர்வீகமான திருச்சி ஆங்கரை கிராமத்தில் முன்னொரு காலத்தில் கொடி கட்டிப்பறந்து வந்த மிகப்பெரிய சம்சாரியான ‘மாடி லிங்கம் ஐயர்’ என்பவரின் பிள்ளைவழிப் பேத்தியாகும். திரு. A.L. ராமதாஸ் என்பவரின் கனிஷ்ட புத்ரி ஆகும்.

[சுமார் 100 வருடங்களுக்கு முன்பு ஆங்கரை கிராமத்தில் இவர்கள் தாத்தா வீடு மட்டுமே மாடி வீடாக இருந்துள்ளது. அதனால் இவரின் தாத்தா ’மாடி லிங்கம் ஐயர்’ என அழைக்கப்பட்டுள்ளார்.  இன்றும் அந்த வீடு உள்ளது.
{ ஸ்ரீமான். A.L. சந்திரமெளலி அவர்கள் }

 மாடி லிங்கம் ஐயர் அவர்களின் பிள்ளைகளில் ஒருவரான திருவாளர்: A.L. சந்திரமெளலி என்பவர் .... தற்சமயம் வயது சுமார் 90 இருக்கும் .... அங்கு வாழ்ந்து வருகிறார். இவரும் அபார சம்சாரி ஆவார். இவர் சம்பந்தி மாமியின் சொந்த சித்தப்பா ஆகும்] 

மேற்படி மாடி லிங்கம் ஐயர் அவர்களும் எங்கள் கோத்ரமான ‘சங்கிருதி’ கோத்ரமே ஆகும். அவர்கள் வம்சத்தினர் எனக்கு தாயாதியும் ஆவார்கள் என்பதில் எனக்கு ஓர் தனி சந்தோஷம் எப்போதுமே உண்டு. எல்லாம் இவ்வாறு அமைந்துள்ளது முன்னோர்கள் ஆசீர்வாதமும் பகவத் சங்கல்ப்பமும் மட்டுமே. 

 

அன்னபூரணியாகத் திகழ்ந்து அன்றாடம் வாய்க்கு ருசியாக பலவித சாப்பாடு + டிபன், காஃபி வகையறாக்கள் செய்துகொடுத்து அசத்திய எங்கள் அன்புக்குரிய சம்பந்தியம்மா திருமதி. சீதாலக்ஷ்மி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்கள், வயிறு நிறைந்த வாழ்த்துகள், நன்றியோ நன்றிகள்.  

இன்றுபோல், இதே போல் ... மேலும் பல்லாண்டுகள் ஆரோக்யத்துடனும் சுறுசுறுப்புடனும், ஆசைகளுடனும், மன மகிழ்ச்சிகளுடனும் ஊர் ஊராக உலகம் சுற்றி மகிழ்ந்து வாழ்க ! வாழ்க !! வாழ்க !!! என வாழ்த்தி மகிழ்கிறோம்.



 


சுபம்


 

கையில் காசும், 
காலில் தெம்பும், 
உள்ளத்தில் உற்சாகமும்
உள்ளவர்கள்  மட்டும்
விருப்பம் இருந்தால் 
துபாய்க்குச் சுற்றுலா
சென்று வாருங்கள்
எனக்கூறிக்கொண்டு
இந்தத் தொடரினை இத்துடன் 
மிகச்சுருக்கமாக 
முடித்துக்கொள்கிறேன். :)



 

8th December கார்த்திகை மாதம்
5th January - மார்கழி மாதம்.

{ கார்த்திகை + மார்கழி }
சற்றே சூடான நானும், 
குளிர்ச்சியான என்னவளும்
பிறந்த மாதங்கள்

 


நாளை, துபாயுடன் சற்றே தொடர்புள்ள மேலும் 
ஒரேயொரு வித்யாசமான பதிவு மட்டும் வெளியிடப்படும்.
காணத் தவறாதீர்கள்.

 

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

27 comments:

  1. 700 விரைவில் 1000 த்தை தொட எமது அட்வான்ஸ் வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  2. அதானே பார்த்தேன். 20 பதிவு போடறதாச் சொல்லிட்டு 19 லேயே சுபம் போட்டுட்டிங்களேன்னு பார்த்தேன். இன்னுமொரு விருந்து (புளிச்ச மாவு அடை) பாக்கியிருக்குதுன்னு சொல்லுங்க.

    தெம்பிருக்கறப்ப காசு இல்ல, காசு வந்ததுக்கப்பறம் தெம்பு இல்லை. கடவுளுக்கு என்ன ஓரவஞ்சனை பாருங்க?

    ReplyDelete
  3. விதவிதமா வயிற்றுக்கு சமைத்துப் போட்ட சம்பந்தியம்மாள் நீடூழி வாழ்க.

    ReplyDelete
  4. மனதிற்கு நிறைவாய் இருந்தது ஐயா... வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  5. கையில் காசும்,
    காலில் தெம்பும்,
    உள்ளத்தில் உற்சாகமும்
    உள்ளவர்கள் மட்டும்
    விருப்பம் இருந்தால்
    துபாய்க்குச் சுற்றுலா
    சென்று வாருங்கள்/

    ஆனா பாஸ்போர்ட்டும் விசாவும் வேண்டுமே. நான் எப்படி போவது. இன்னும் பாஸ் போர்ட் கூட எடுக்கவில்லை. சரி எடுத்து வைக்கிறேன். ஏதோ உங்கள் ஆசி ஏதாவது வெளி நாட்டுப் பயணம் வாய்க்காதா?

    சம்பந்திமாமியைப் பற்றிய செய்திகள் அருமை.

    உங்கள் மகன், மருமகள், பேரன், பேத்தி எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மனம் நிறைந்து விட்டது.

    வாழ்த்துக்களுடனும்,
    அன்புடனும்

    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  6. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பேத்திக்கு வாழ்த்துக்கள்.
    சம்பந்தி மாமி நலமாக எப்போதும் அன்னபூரணியாக இருக்க இறைவன் அருல்புரிவார்.

    700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மிக அருமையான தொடரை அழகாக திட்டமிட்டு எழுதி நிறைவு செய்யும் தருவாயில் நிறுத்தியுள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுகள் கோபு சார். பரிசுப்பொருட்களின் பின்னணியில் உள்ள அன்புக்கு விலையேது? அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். இறுதியில் அன்னபூரணிக்கு நன்றி சொல்வதுபோல் சுவையாக சமைத்து அசத்திய சம்பந்தி அம்மாவுக்கும் நன்றி சொல்லி சிறப்பாக நிறைவுசெய்துள்ளீர்கள். இந்தப் பயணம் இனிதே நிறைவுபெற்றாலும் இனி வரும் ஆண்டுகளில் மேற்கொள்ளவிருக்கும் அடுத்தடுத்தப் பயணங்களுக்கும் இப்போதே வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. தங்களின் எழுநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் எழுத இறைவன் அருள் புரியட்டும்.

    உங்கள் சுற்றுலாவோடு உங்கள் குடும்பத்தாரையும் பற்றி எழுதி, முக்கியமாக அன்ன பூரணியாக உங்களுக்கு அறுசுவை உணவு படைத்து, உங்களை அருமையாகக் கவனித்துக் கொண்ட உங்கள் சம்பந்தியைப் பற்றி மிக அழகாக, சிறப்பாக எடுத்துக் கூறியது மிக அருமை.

    துபாய்க்கு செல்ல தாங்கள் எழுதியுள்ள விஷயங்கள் இப்போது ஓரளவு இருப்பதால் அடுத்த ட்ரிப் துபாய் போகலாமான்னு யோசிக்கறேன்!

    ReplyDelete
  9. பதிவு முழுவதையும் படங்களுடன் படிக்க
    நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் எனும்
    கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. திரு V.G.K அவர்களின் 700 - ஆவது பதிவிற்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள். இந்த பதிவு முழுக்க உங்கள் குடும்பத்தார் பற்றிய செய்திகளே என்பதனால், மீண்டும் ஒருமுறை, தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இனி உங்கள் உள்ளங் கையில் DIGITAL HOME - அசத்துங்கள்.

    உங்கள் அருமை பேத்திக்கு வாழ்த்துக்கள். பேத்திக்கு ஹாரத்தி சுற்றியதைப் போன்று தாத்தா, பாட்டிமார்களுக்கும் சுற்றி போடவும்.

    // கையில் காசும்,
    காலில் தெம்பும்,
    உள்ளத்தில் உற்சாகமும்
    உள்ளவர்கள் மட்டும்
    விருப்பம் இருந்தால்
    துபாய்க்குச் சுற்றுலா
    சென்று வாருங்கள் //

    மெய்யான வார்த்தைகள். அதுமட்டுமல்ல , உங்கள் குடும்பத்தார் போல செலவழிக்க மனமும் வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  11. 700வது பதிவுக்கு இனிய வாழ்த்துகள் ஐயா. சிறப்பாக அமைந்த துபாய் பயண பதிவு மிக அருமை, அழகு. பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  12. 700வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார். துபாய் தொடர் மிகச்சிறப்பாக இருந்தது. சம்பந்தி மாமி நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்கட்டும்.

    ReplyDelete
  13. எழுநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். துபாய் பயணம் நன்கு முடிந்ததில் மகிழ்ச்சி. உங்கள் சம்பந்தி அம்மாவிற்கு எங்கள் பாராட்டுகள். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்(தாமதமான) பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

    எப்போதும் போல் கரைபுரளும் தங்கள் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது.

    ReplyDelete
  15. எங்கள் தாயாதியும், ஆங்கரை மாடிலிங்கம் ஐயரின் பிள்ளையும், என் பெரிய சம்பந்தி மாமி அவர்களின் சொந்த சித்தப்பாவுமான ஸ்ரீமான். A.L. சந்திரமெளலி அவர்கள் [வயது 87 .... மேலே படத்தினில் காட்டப்பட்டுள்ளவர்] கடந்த வெள்ளிக்கிழமை 13.02.2015 அன்று ஆங்கரையில் உள்ள தனது சொந்த கிரஹத்தில் சிவலோகப்பிராப்தி அடைந்தார் என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

    இவருக்கு மொத்தம் 6 பிள்ளைகள் + 4 பெண்கள்.
    இன்றைய தேதியில் 7 பேரன்கள் + 13 பேத்திகள்.
    7 கொள்ளுப்பேரன்கள் + 2 கொள்ளுப்பேத்திகள்.

    பொதுவாக எங்கள் சங்கிருதி கோத்திரக்காரர்கள் மிகப்பெரிய சம்சாரிகளாகவே இருந்து வந்துள்ளனர்.

    என் தந்தையுடன் பிறந்தவர்கள் இதே போல மொத்தம் 10 பேர்கள். [எனக்கு ஒரு பெரியப்பா + ஒரு சித்தப்பா + ஏழு அத்தைமார்கள். நான் என் பெற்றோருக்குக் கடைசியாகப் பிறந்து விட்டதால், என் அத்தைமார்களில் மூவரை நான் பார்த்ததுகூட இல்லை. இப்போது இந்த 10 பேர்களில் யாருமே இல்லை. :( ]

    என் வாழ்க்கையில் இந்த திரு. A.L. சந்திரமெளலி அவர்களைப் போன்ற ஒரு மிகப்பெரிய சம்சாரியை நான் பார்த்ததே இல்லை.

    மிகவும் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவரின் கல்யாணச்சாவு என்றே இதை நாம் சொல்லலாம்.

    VGK

    ReplyDelete
    Replies
    1. இன்று 06.08.2015 கிடைத்த தகவலின்படி, காலஞ்சென்ற மேற்படி திரு. A.L.சந்திரமெளலி அவர்களின் வயது 91 முடிந்து 92 என்பதாகும். மேலே நான் எழுதியுள்ள அவரின் வயது: 87 என்பது அன்று எனக்குக் கிடைத்த தவறானதோர் தகவலாகும். - VGK

      Delete
  16. 700--வது பதிவுக்கு வாழ்த்துகள் துபாய் பகிர்வு எல்லாமே அமர்க்களமா இருக்கு

    ReplyDelete
  17. அழகாக பூஜிக்கப்படும் ஹனுமன் படம் சிந்தை கவர்ந்தது..

    எழுநூறாவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:57 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அழகாக பூஜிக்கப்படும் ஹனுமன் படம் சிந்தை கவர்ந்தது..
      எழுநூறாவது பதிவுக்கு இனிய வாழ்த்துகள்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete
  18. 700---வது பதிவா வாழ்த்துகள் இந்த பதிவுல ஒங்கட ஒறவுக்காரங்க பத்திலா வெரமும் படங்களும் போட்டிருக்கீங்க. ஒங்கூட்ல அல்லாரும் ஒங்கட பதிவெல்லா படிப்பாய்ங்களா. ரொம்ப சந்தோச படுவாங்கல.

    ReplyDelete
  19. 700---வது பதிவுக்கு வாழ்த்துகள். கூடிய சீக்கிரமே 1000--வது பதிவையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
  20. 700--- வதுபதிவுக்கு வாழ்த்துகள் கூடிய சீக்கிரமே 1000---வது பதிவையும் எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
  21. 700-ஆவது இடுகைக்கு வாழ்த்துகள். பெரிய எண்ணிக்கைதான். 1000 தாண்டுங்க சீக்கிரமே. கிடாரிஸ்ட் பவித்ரா.இளைய நிலா பொழிகிறது..இதயம்வரை நனைகிறது.வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. 700--வது பதிவுக்கு வாழ்த்துகள் சார் ! துபாய் தகவல்கள் எல்லாமே சூப்பர்!

    ReplyDelete
  23. அதிர்ஷ்டகர குடும்பஸ்தர்கள்.கண்படும் பதிவு.வாழ்த்துகள். திருஷ்டி கழிப்பாக பெரியவரின் சிவலோக பதவி செய்தி.

    ReplyDelete
    Replies
    1. ஆச்சி ஸ்ரீதர் May 24, 2017 at 10:20 PM

      வாங்கோ ஆச்சி, வணக்கம் ஆச்சி.

      //அதிர்ஷ்டக்கார குடும்பஸ்தர்கள். கண்படும் பதிவு. வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஆச்சி. இதற்கு அடுத்த பதிவு முழுக்க முழுக்க நம் ஆச்சி பற்றியதாகும். நினைவிருக்கட்டும். :)))))))))))))))))))))

      அன்புடன் கோபு

      Delete