என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 26 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-12 of 16 [71- 80]

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 


 


அனைவருக்கும் இந்திய 
குடியரசுதின நல்வாழ்த்துகள்.


 

  


71. திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் 

{ 10.11.2013 }


// தாழம்பூவைப் பாவாடையாகவும், பவளமல்லியை அர்ச்சனைக்கும் பயன்படுத்தி மற்றவற்றை இணைய தேவதைக்கு மாலையாக்கிவிட்டு ............................

HAPPY இன்று முதல் HAPPY ன்னு பாட்டுப்பாடுங்கோ. ;)
நன்றி வைகோ சார், கொடுத்த கடமையை ஓரளவுக்குத் திருப்தியாகச் செய்த நிறைவு மட்டுமே. நன்றி வாய்ப்பளித்த உங்களுக்கும், சீனா சாருக்கும் மீண்டும் நன்றி..

 

72]   திரு. துரை செல்வராஜூ அவர்கள் 


{19.12.2013}


தூய துறவறம் கொண்டு பரிவினாலும் பண்பினாலும் மனித நேயத்தினாலும் - கண்முன் வாழ்ந்து - இன்னும் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமி அவர்கள்.
காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள் வழங்கிய  அறிவுரைகளையும்
குல தெய்வ வழிபாடு பற்றி காஞ்சி மகான் அளித்த விளக்கமும்
அந்த காலகட்டத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளையும் 
பல இடங்களில் இருந்தும் திரட்டி,  தனது தளத்தில் சிறப்பாகப் பதிவிட்டு வருபவர்  - வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள்.   

73. திருமதி. கோமதி அரசு அவர்கள்.

இப்படிச் சொல்லி  அடை செய்யும் முறையை விரிவாக அழகாய்ச் சொல்கிறார், வை.கோபாலகிருஷ்ணன் சார். 


  

இந்த அடைமாவிலேயே இன்னொரு பலகாரம் செய்யவும் அவர் சொல்லித் தருகிறார். அதன் பெயர் ”குணுக்கு”!


(BACHELORS களுக்குப் பயன்படும் சமையல் குறிப்பு கேட்ட) ’சமையல் அட்டகாசம்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ஜலீலா அவர்கள் நடத்திய சமையல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வாங்கிய குறிப்பு  இந்த அடை. 


மேற்படி போட்டியில் வென்ற 
பரிசுக்கான இணைப்புகள்:


  

 

கதை, கட்டுரை, ஓவியம் என்று வலைத்தளத்தில் வழங்கி வருபவர்.


 
74. திருமதி. ஆதி வெங்கட் அவர்கள் 

{ 06.01.2014 }

அன்பு நட்புகளே! அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக பிறந்திருக்கும் இந்த ஆண்டில் உங்க எல்லாருடைய ஆசைகளும்கனவுகளும்விருப்பங்களும் நிறைவேற எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும்.

புதிதாக பிறந்திருக்கும் இந்த 2014-ஆம் வருடத்தின் முதல் வலைச்சர ஆசிரியராக என்னை அமர்த்திய சீனா ஐயாவுக்கும்என்னை பரிந்துரை செய்த வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் இவ்விடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


 75. திருமதி. ஆதி வெங்கட் அவர்கள் 

{ 12.01.2014 }


இந்த வாய்ப்பை அளித்த சீனா ஐயாவுக்கும், என் மேல் நம்பிக்கை வைத்து பரிந்துரைத்த வை.கோ சாருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்...


 


 


[கீதமஞ்சரி] 

76. திருமதி. கீதாமதிவாணன் அவர்கள் 

{ 20 01 2014 }


கடந்த மார்ச் 2012- இல் அன்புக்குரிய திருவை.கோபாலகிருஷ்ணன் ஐயாவின் பரிந்துரை மற்றும் மதிப்புக்குரிய திருசீனா ஐயாவின் அழைப்பின் பேரில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றேன்ஏற்றுக்கொண்ட பொறுப்பை ஓரளவு சரியாகவே நிறைவேற்றினேன் என்று நம்புகிறேன்

கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் அந்தப் பொறுப்பு என்னைத் தேடிவந்துள்ளதுமீண்டும் என்னை வலைச்சர ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ள திரு.சீனா ஐயா அவர்களுக்கும் என்மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் என் உளமார்ந்த நன்றி. 
 [கீதமஞ்சரி] 

77. திருமதி கீதாமதிவாணன்அவர்கள் 

{ 22 01 2014 }

விமர்சனப் பிரியர்களுக்காகவும் முழுமையான ஈடுபாட்டுடன் வாசிப்பில் ஈடுபடவும் ஊக்கமளிக்கும் வண்ணம் தான் எழுதிய சிறுகதைகளுக்கான விமர்சனப் போட்டியொன்றை இங்கு அறிவித்துள்ளார் திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள். ரூபாய் பன்னிரண்டாயிரம் முதல் ஊக்கப்பரிசுகளை அள்ளிவழங்கத் தயாராய் காத்திருக்கும் அவருடைய வள்ளன்மையையும் பெருந்தன்மையையும் பாராட்டுவதோடு அனைவரும் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற என் வாழ்த்துக்கள்.


 
78.  தளிர் திரு. சுரேஷ் அவர்கள் 

{ 08 02 2014 }


வை கோபாலகிருஷ்ணன் சிறுகதை விமர்சனப்போட்டி நடத்துகிறார். காஞ்சி சங்கராச்சாரியார் குறித்த இவரது பதிவுகள் சிறப்பு. இவரது சிறுகதை  ஜாங்கிரி  சமையல் செய்பவர்களை கொஞ்சமாவது மதித்து நடத்தவேண்டும் அவர்களும் மனிதர்கள்தான் என்று உணர்த்துகிறது.  
 

79. திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்

{ 12 02 2014 }சுறுசுறுப்பும் நகைச்சுவையும் சோம்பலின்மையும் நேரம் தவறாமையும்  இவர் இடும் ஒவ்வொரு பதிவில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். தொடர்ச்சியாக 5 பதிவுகள் இட்டுவிட்டால் சோம்பலோ அயற்சியோ ஏற்பட்டு ஒருப்பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு வேறு வேலை கவனிக்க போய்விடுவேன். ஆனால் கோபு அண்ணாவின் ஒவ்வொரு பதிவும் அவரின் உழைப்பைச்சொல்லுகிறது.  

திடீர்னு ஒரு ஃப்ளையிங் விசிட் கொடுத்தபோதும்  கொஞ்சம் கூட சிரிப்பு மாறாமல் அன்புடன் குடும்பத்தினர் அனைவரும் என்னிடம் பேசினர்.

 


 80. காணாமல் போன கனவுகள் 

திருமதி. ராஜி அவர்கள் 


{ 23 02 2014 }

இருபத்தி நாலும் மணிநேரமும் இணையத்தில் இருப்பாரான்னு தெரியலை. தனபாலன் மாமாக்கு அடுத்தபடியா இவர்தான் அதிக மறுமொழி இட்டிருப்பார்ன்னு நினைக்குறென். ஆன்மீகப் பதிவுல இவரை அதிகம் பார்க்கலாம். 

**நான் அதிகம் மொக்கைப் போடுறதால என் பக்கம்  வர்றதில்லைன்னு நினைக்குறேன் வை.கோபாலகிருஷ்ணன் ஐயா.****வண்ணக்கிளி ....
சொன்ன மொழி ....
என்ன மொழியோ !** 
இவர்கள் அனைவருக்கும் 
என் இனிய அன்பு நன்றிகள்.
தொடரும்

நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்

வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் : ஏழு நபர்கள்
1) திரு. சொக்கன் சுப்ரமணியன் அவர்கள்


2) மணப்பாறை ஆர். பாண்டியன் அவர்கள்

3] திருமதி. ஏஞ்சலின் அவர்கள்


4] திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்


5] திருமதி. இமா அவர்கள்


6] திருமதி. மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்கள்


7] காவியக்கவி திருமதி. இனியா அவர்கள் 

என்றும் அன்புடன் தங்கள்
[வை.கோபாலகிருஷ்ணன்]

22 கருத்துகள்:

 1. பட்சபாதம் இல்லாமல் அனைத்து விமரிசனங்களையும் தொகுத்துள்ள பாணி போற்றுதலுக்குரியது.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சார், வாழ்க வளமுடன் இரண்டாவது முறையும் தோட்டத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி.
  குடியரசுதின நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. இந்த மலர்ச்சரத்தில் மறுபடியும் நான் பின்னப்பட்டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி கோபுசார். தங்களுடைய பதிவுகள் பலரையும் சென்றடையவேண்டுமென்ற ஆவல் நான் உள்ளிட்ட பலருக்கும் உள்ளது என்பது தொடர்ந்துவரும் அறிமுகங்களைப் பார்த்தாலே புலப்படுகிறது. தங்கள் பதிவுகளைக் குறிப்பிட விரும்புவோர்க்கெல்லாம் அவற்றுள் எதைச்சொல்வது எதை விடுவது என்ற குழப்பம் கட்டாயம் எழுந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 5. என்னையும் நினைவில் வைத்துக்கொண்டு சொன்னதுக்கு நன்றி. மற்றபடி மறுபடியும் நினைவூட்டப்பட்டவர்களுக்கும், புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கும் வாழ்த்துகள். எல்லோருமே அருமையாகச் சொல்லி இருக்கின்றனர். :)

  பதிலளிநீக்கு
 6. என்னையும் நினைவில் வைத்துக்கொண்டு சொன்னதுக்கு நன்றி. மற்றபடி மறுபடியும் நினைவூட்டப்பட்டவர்களுக்கும், புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கும் வாழ்த்துகள். எல்லோருமே அருமையாகச் சொல்லி இருக்கின்றனர். :)

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிவு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  தங்களுக்கு குடியரசுதின நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. வலைச்சரம் விவரங்கள் அறிந்தேன்
  மகிழ்ச்சி
  வேதா. இலங்காதிலகம்

  பதிலளிநீக்கு
 9. அன்பின் அண்ணா..

  வாழ்க நலம்.. என்னையும் தங்கள் பதிவினில் நினைவு கூர்ந்து குறித்தமைக்கு நன்றி..

  இனிய குடியரசு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 10. எல்லோருக்கும் எனது இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் ஐயா ! மிக்க நன்றி ! என்பெயரையும் தேர்ந்தெடுத்து தங்கள் பதிவில் இனைத்தமைக்கு மிக்க நன்றி !
  வாழ்க வளமுடன் ....!

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்!

  "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
  ஜெய் ஹிந்த்!

  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

  பதிலளிநீக்கு
 13. வலைத்தள ஜாம்பவானுக்கு வாழ்த்துக்கள்.

  வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
 14. இரண்டாம் முறையாக இந்த சரத்தில் நான் இடம்பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி சார்.

  பதிலளிநீக்கு
 15. சென்ற வருடத்தில் வலைச்சர ஆசிரியராக முதன் முதலில் பொறுப்பேற்றபோது நிறைய பதிவர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் பதிவு, பதிவர்களின் சிறப்பை பற்றி விரிவாக எழுதாமல் சுருக்கமாக எழுதி நிறைய பதிவர்களை ஒரு வாரத்தில் அறிமுகம் செய்தேன்! அச்சமயம் தாங்கள் தொடர்ந்து எழுதி வந்த பரமாச்சார்யாள் பற்றிய கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தன! அதே போல ஜாங்கிரி என்ற அந்த கதை என்னை நெகிழச்செய்த ஒன்று! இதுபோல எண்ணற்ற படைப்புக்களை தாங்கள் தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்! நினைவுகூர்ந்து நன்றி அறிவித்து வரும் தங்களின் முயற்சி தொடரட்டும் 100 ஆயிரம் பல்லாயிரமாக பெருகட்டும்! தனிப்பட்ட முறையில் தகவல் தந்தமைக்கும் மிக்க நன்றி! ஒரு வார காலமாக வீட்டில் சொந்த அலுவல்கள்! மற்றும் நான் பணிபுரியும் கோயிலில் கும்பாபிஷேக வரதந்தி போன்றவை நடைபெற்றமையால் உடனே வந்து கருத்திட முடியவில்லை! நேரம் கிடைக்கையில் மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்! மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 16. மலர்ச்சர மணிமகுடங்களுக்கு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 17. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:42 PM

  //மலர்ச்சர மணிமகுடங்களுக்கு வாழ்த்துக்கள்.//

  வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 18. அல்லாவங்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 19. இவ்வளவு ஸ்டூடன்ட்ஸ்...'வாத்யார்' என்றால் அப்படித்தான். கலக்கல்.

  பதிலளிநீக்கு