என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 29 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-15 of 16 [95-100]

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 


 







95. திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்

18.08.2014



என் மானசீக குரு, கோபு அண்ணா என்று நாம் அன்புடன் அழைக்கும் திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களை வணங்கி இந்த வலைச்சர ஆசிரியர் பணியை தொடங்குகின்றேன்.




குருவே சரணம்
ஏகலைவன் போல் எனக்கு மானசீக குரு திரு வை கோபாலகிருஷ்ணன் சார். 
’குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.’

குருவை ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு இணை என்று சொல்கிறார்கள். 

பதிவுலகில் எழுதத்தொடங்கிய எனக்கு தொடர்ந்து ஊக்கமும்
உற்சாகமும் அளித்து வரும் என் அன்புக்குரிய ’கோபு அண்ணா’ தானே 
எனக்கு ரோல் மாடல் + மானஸீக குருநாதர்

அதனால் என் குருவை வாழ்த்தி, வணங்கி இந்த வலைச்சர ஆசிரியர் பணியைத் தொடங்குகிறேன்.

இந்த ஒரு வாரமும் கோபு அண்ணாவின் வலைப்பூவிலிருந்து எனக்குப் பிடித்த (பிடிக்காத என்று சொல்ல எந்த இழையும் இல்லை), எனக்கு மிகவும் பிடித்த இழையை தினமும் (தொப்பையப்பனை எல்லா நல்ல செயல்களுக்கும் முன் முதலில் வணங்குவது போல்) முதலில் கொடுத்து பிறகு என் பணியைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.


இன்று முதல் நாளாகையால் அவரது பதிவுடன் தொடங்குகிறேன்.

கோபு அண்ணாவின்

அறுபதிலும் ஆசை வரும்’ 

அவசியமாக எல்லோரும் படியுங்கோ.

அதிலுள்ள படங்களை மட்டுமாவது பாருங்கோ.


ஹி, ஹி, ஹி, என்ன ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறீங்க.  நாரோடு சேர்ந்து, பூவும் மணம் பெரும் தானே. அதனால தான் என்னைப் பத்தி அவர் எழுதிய இழையை முதலில் பதிவிட்டேன்.  (இதைப் படிச்சுட்டு கண்டிப்பா கோபு அண்ணா யார் பூ, யார் நாருன்னு கிண்டலா கேப்பாரு.  எல்லாருக்கும் தெரியும், அவரு தான் பூ, நான் தான் நாருன்னு).  ........
ஐ, நான் முந்திக்கிட்டேனே.


 


   




  

96. திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் 

19.08.2014



’மூத்தோர் சொல்லும் முது நெல்லியும்
முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்’
இது பழமொழி.

இன்று நாம் மூத்த குடிமக்களின் (SENIOR CITIZENS) வலைத்தளங்களை அறிமுகப் படுத்தி கௌரவிப்போமா?

என் மானசீக குருநாதர் திரு. வை. கோபாலகிருஷ்ணனும் ஒரு மூத்த குடிமகன் தானே.

அடுத்தவங்கள கௌரவிக்கறதுல கோபு அண்ணாவுக்கு இணை அவரே தான்.   இந்த இழையைப் படித்து தெரிந்து கொள்வோமே. 

ஆரண்ய நிவாஸின் அன்புப் பிடியில் மாட்டியுள்ள
 ‘யாரோ இவர் யாரோ’

 

 




   



97. திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் 


20.08.2014


இவருதான் உண்மையா இத செய்தாரா 
இல்ல இவர் மனைவியார் செய்தாரா என்பதை 
அடுத்த முறை அவங்களை சந்திக்கும் போது 
ரகசியமா கேட்டு உங்களுக்கு சொல்றேன். 
அதுவரைக்கும் பொறுமையா இருங்க.

அடடா என்ன அழகு ! .... அடையைத்தின்னு பழகு !!

0000000

சரி கடைசியாக ஒரு இலவச இணைப்பு:
கோபு அண்ணாவின் அன்புப் பரிசு.
பனை [பண] விசிறி 

  


0000000


 

 






  



98. திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் 


21.08.2014


கோபு அண்ணாவின் பஜ்ஜின்னா பஜ்ஜிதான் சிறுகதை

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

பஜ்ஜீன்னா பஜ்ஜி தான்


   




 


 




 

ஆனந்தக்கண்ணீருடன் .....
 

 திருமதி.  



 ஜெயந்தி ரமணி    


அவர்கள்


23.08.2014

சரி என்னைக் கவர்ந்த (நான் அறிந்த) 
பதிவர்கள் பற்றி சொல்லலாமா?
முதலில் என் குருநாதர் வை.கோபாலகிருஷ்ணன்.

மஹா பெரியவாளைப் பற்றி இவர் எழுத்துக்களைப் படியுங்களேன்.

ஆஞ்சநேயருக்கு ஏன் வடைமாலை ?

( சுத்திச் சுத்தி சாப்பாட்டு மேல தான் வந்து நிக்கறது புத்தி )



அன்னதான மகிமை 


(பகுதி 1 முதல் 3 வரை)


 


 





  1. //முதலில் என் குருநாதர் வை கோபாலகிருஷ்ணன்.
  2. மஹா பெரியவாளைப் பற்றி இவர் எழுத்துக்களைப் படியுங்களேன்.
  3. ஆஞ்சனேயருக்கு ஏன் வடைமாலை 
  4. (சுத்திச் சுத்தி சாப்பாட்டு மேல தான் வந்து நிக்கறது புத்தி )
  5. http://gopu1949.blogspot.in/2014/01/108.html 
  6. அன்னதான மகிமை பகுதி 1 முதல் 3 வரை
  7. http://gopu1949.blogspot.in/2013/12/98-1-of-3.html
  8. http://gopu1949.blogspot.in/2013/12/99-2-of-3.html
http://gopu1949.blogspot.in/2013/12/100-1-2-3-of-3.html //

  1. இன்றைய இனிக்கும் வலைச்சர
  2. அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.. 
  3. பாராட்டுக்கள்.!
  4. -oOo-
  5. பெரும்பாலும், வலைச்சரத்தில் எங்காவது, என்றாவது, யாராலாவது 
  6. என்னைப் பற்றிப் பேசப்பட்டிருந்தால், அதை மேலே உள்ளதுபோல, 
  7. பின்னூட்டம் மூலம் அன்புடன் என் கவனத்திற்குக்கொண்டுவந்து 
  8. உதவியுள்ள திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் தொண்டு 
  9. உள்ளத்திற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளை, இங்கு நான்
  10. பதிவு செய்துகொள்கிறேன். 

கடந்த 40 நாட்களாக [ wef: 21.12.2014 ] இவர்களின் பின்னூட்டங்கள் 

என் பதிவுகளில் இல்லாதது மிகப்பெரிய வெறுமையாக என்னால் 

உணரப்பட்டு, எனக்கு மிகவும் மன வேதனை அளிப்பதாக உள்ளது.



உடல்நிலை முற்றிலுமாக நன்கு தேறி, இவர்கள் ஊக்கத்துடனும், 

உற்சாகத்துடனும் பழைய நிலைமைக்குத் திரும்பி வர, நாம் 

அனைவரும் பிரார்த்தித்துக்கொள்வோம்.













வலைச்சரத்தில் 


’கோபு’(WIN) வின்


நூறாவது அறிமுக விழா !




 
ஜொலிக்கும் தோற்றத்தில்

 
வெற்றிகரமான 100வது 

அறிமுக விழா மேடையில் 


நம் ‘ஜெயந்தி ஜெயா’ 


 

 







100. திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் 



24.08.2014



குரு வந்தனம் –
குருவே சரணம்
குருவின் பதிவுகள் –
கோபு அண்ணாவின் மூன்று கதைகள்.  

ம்ஹூம் இதிலும் சாப்பாடுதானா ஜெயந்தி.  
உப்புச்சீடை, ஆப்பிள், கத்தரிக்காய்.

‘உடம்பெல்லாம் உப்புச்சீடை’

ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்
காதலாவது .... கத்திரிக்காயாவது  ..... !
இறுதியாக ஒரு அருமையான காதல் கதை. 



எழுதியவர் 64 வயது இளம் வாலிபர் திரு கோபு அண்ணா



‘மறக்க மனம் கூடுதில்லையே’
இந்த வாய்ப்பைக் கொடுத்த திரு அன்பின் சீனா அவர்களுக்கும்,
இதற்குக் காரணமான கோபு அண்ணா அவர்களுக்கும்,
மற்றும் ஒரு வாரம் என் அறுவையை அன்புடன் பொறுத்துக் கொண்ட 
அன்புத்தோழர், தோழியர் அனைவருக்கும் என் மனமார்ந்த, 
சிரம் தாழ்ந்த நன்றி, நன்றி, நன்றி.

இந்த ஆறு நாட்களும் இங்கு வருகை தந்து வாழ்த்திய
என் குருநாதர் திரு. வை.கோபாலகிருஷ்ணன்
திருமதி. இராஜராஜேஸ்வரி
மற்றும் சிலருக்கு இந்த ஸ்பெஷல் பூங்கொத்து.

 



 




  

என் அன்புச் சகோதரி



‘ஜெ’  ..... ‘ஜெயா’ ..... ’ஜெயந்தி’ க்கு



என் இனிய ஆசிகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.


 

பிரியமுள்ள 

கோபு அண்ணா








1 முதல் 100 வரை



வலைச்சர அறிமுகங்கள் 



இத்துடன் நிறைவடைகின்றன.





 சுபம் 


  

From 101 to 110 

வலைச்சர அறிமுகங்கள் மட்டும் 
விரைவில் ஓரிரு நாட்கள் இடைவெளியில்
தனிப்பதிவாக வெளியிடப்படும்.






இந்தத் தொடரின் அடுத்த வெளியீடான

'என் வீட்டுத்தோட்டத்தில்.... பகுதி-16 of 16  [101-110]’ 

நிறைவுப் பதிவினில் இடம் பெறப்போகும்

வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் : ஏழு நபர்கள்



1) திரு. Thulasidhararan V Thillaiakathu  அவர்கள்







2) முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்




3) கீதமஞ்சரி திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்





4) திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்



5] திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்




6] திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்






மற்றும்




7] திருமதி. ஞா. கலையரசி அவர்கள் 





என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

28 கருத்துகள்:

  1. 100 வலைச்சர அறிமுகங்களை நமக்குக் கொடுத்த கோபு அவர்க்ள 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. எப்படித்தான் உங்களால் இவ்வளவு நீளமான, கண்கவரும் படங்கள ஏராளமாகப் பூத்து குலுங்கும் வண்ணம், பதிவுகளை எழுத முடிகிறதோ! என் கண்ணே பட்டுவிடும்; மாமியைச் சுற்றிப் போடச் சொல்லுங்கள்! -இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  3. 100 அறிமுகங்கள்! தாங்கள் அதற்கு உரியவர் தகுதியானவரே! அறிமுகப்படுத்துபவர்களையும் கௌரவிக்கும் தங்கள் பண்பை என்னவென்று சொல்லுவது!! இன்று வந்து பார்த்தால் அதில் எங்கள் தளமும்!! பல எழுத்துலக ஜாம்பவான் களின் நடுவில் எங்களையும் இங்கு சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி சார்!

    இன்னும் தங்கள் தளத்தின் அறிமுகம் தொடர வேண்டி பிரார்த்தனைகள்.
    எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! மிக்க மிக்க நன்றி! சார்!

    பதிலளிநீக்கு
  4. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    piramippo piramippu sir,
    jayanthi madam ...sir nadamaadum ganapathi thaan
    anaithu padangalum super

    பதிலளிநீக்கு
  5. thirumathi bs sridhar January 29, 2015 at 9:50 AM

    ஆச்சி, வாம்மா, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா !

    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    //piramippo piramippu sir, பிரமிப்போ பிரமிப்பு சார்//

    ஆஹா, இருக்காதா பின்னே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    //jayanthi madam ...sir nadamaadum ganapathi thaan ஜெயந்தி மேடம், சார் நடமாடும் கணபதி தான்//

    கிண்டலா ! :)

    //(தொப்பையப்பனை எல்லா நல்ல செயல்களுக்கும் முன் முதலில் வணங்குவது போல்)//

    என ஜெயா மேலே எழுதியுள்ளதற்கு இப்படி அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்களே, ஆச்சி. !!!!!!

    ஜெயாவும் ஆச்சியும் என்னை உரிமையுடன் கிண்டல் செய்வதற்காகவே பிறந்துள்ளீர்கள் என நினைத்து மகிழ்கிறேன்.

    ஜெயாவாவது ஒல்லிப்பிச்சான் .... அவங்க சொல்வதை ஓரளவு நியாயமாக எடுத்துக்கொள்ளலாம்.

    ஆனால் நீங்க ................ எனக்குப்பிறந்த மகள் போல அல்லவா நல்ல குண்டா கஷ்கு முஷ்குனு, கொழுமொழுன்னு, உ.உ.கி. யாகவும், ஆ.க. ஆகவும், குஷ்பு போல அல்லவா இருக்கீங்க...... நீங்க போய் என்னை நடமாடும் கணபதியே தான் எனச் சொல்லிட்டிங்களே ....... ஆச்சி :)

    அதனால் என்ன ஆச்சி எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவாங்கோ .... இது ஜெயாவுக்காக எழுதியுள்ளேன். :)

    //anaithu padangalum super//

    அன்பான வருகைக்கும், அழகான வேடிக்கையான, நகைச்சுவையான கருத்துக்களுக்கும், மிக்க நன்றி, ஆச்சி.

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  6. 100 – ஆவது முறையாக வலைச்சரத்தில் அறிமுகம். உங்களுக்கு இணை நீங்கள்தான். அன்புள்ளம் கொண்ட V.G.K அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நூறு முறை அறிமுகம் செய்யப்பட்ட நீங்கள் ஆயிரம் முறைக்கும் மேலே அறிமுகம் ஆக வாழ்த்துகள். இன்றைய அறிமுக நாயகி ஜெயந்தி அவர்களை உங்கள் மூலமே அறிந்திருக்கிறேன். அறிமுகத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நூறாண்டு வாழ்க! நோய் நொடியில்லாமல் தழைக்க!
    பேராண்டிகளுடன் குலாவி பெருமையெலாம் பெறுக!

    பதிலளிநீக்கு
  9. \\ஹி, ஹி, ஹி, என்ன ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறீங்க. நாரோடு சேர்ந்து, பூவும் மணம் பெரும் தானே. அதனால தான் என்னைப் பத்தி அவர் எழுதிய இழையை முதலில் பதிவிட்டேன். (இதைப் படிச்சுட்டு கண்டிப்பா கோபு அண்ணா யார் பூ, யார் நாருன்னு கிண்டலா கேப்பாரு. எல்லாருக்கும் தெரியும், அவரு தான் பூ, நான் தான் நாருன்னு). ........
    ஐ, நான் முந்திக்கிட்டேனே.\\ கலக்கலான எழுத்து. கோபு சாரின் நூறாவது வலைச்சர நாயகியான தங்களுக்கு வாழ்த்துகள் ஜெயந்தி மேடம்.

    பதிலளிநீக்கு
  10. கோபு அண்ணா

    ஆச்சியை உ.உ.கின்னு சொல்லி இருக்கீங்களே. அப்படீன்னா உருட்டி விட்ட உருளைக்கிழங்கு தானே. ஏன் கேக்கறேன்னா நானும் இப்ப அந்த மாதிரி தான் ஆகிண்டு இருக்கேன். ஒல்லிப்பிச்சான் எல்லாம் போன நூற்றாண்டில். இப்ப குண்டுப்பிச்சான் ஆயாச்சு.

    ஆச்சி சரியாதான் சொல்லி இருக்கீங்க. பாருங்க எந்த பொம்மை பக்கத்துல போய் நிக்கறாருன்னு. இனம் இனத்தோடே தானே சேரும்.

    இந்த பதிவைப் பார்த்ததும் எனக்கு FULLஆ BATTERY RECHARGE ஆன மாதிரி இருக்கு.

    இனி தினம், தினம் என் வலைத்தளத்தில் பதிவு தான். உங்க வலைத் தளத்தில் பின்னூட்டம் தான். (ஏய் ரொம்ப வாயாடாதே. விட்டுட்ட அப்புறம் அண்ணா கொட்டு தான் வைப்பார்).

    நன்றி கூற வார்த்தையே இல்லை. நான் எல்லாம் ஆடிக்காத்துல பறக்கற இலவம் பஞ்சு. எனக்கு இப்படி ஒரு கௌரவம் கொடுத்ததற்கு வெறும் வார்த்தையால் நன்றி கூறினால் போறாதுதான். பின்ன வேறென்ன செய்ய. இறைவன் அருளால் விரைவில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும். அதிரசம், முறுக்கு, தேன் குழல் அப்புறம் நிறைய பீட் (லயா பாஷையில ஸ்வீட்) எல்லாம் எடுத்துண்டு வந்து, மன்னி அனுமதி கொடுத்தா உங்களுக்கு கொடுக்கறேன். இல்லேன்னா அத அப்புறம் பார்த்துக்கலாம்.

    நன்றியுடனும்,
    நெகிழ்ச்சியுடனும்,
    வணக்கத்துடனும்,
    வாழ்த்துக்களுடனும்,
    அன்புடனும்

    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  11. //ஆனந்தக் கண்ணீருடன்//

    உண்மையாகவே படித்து முடித்தவுடன் ஆனந்தக் கண்ணீர் கண்ணிலிருந்து என் கன்னத்தில் வழிந்தது.

    கோபு அண்ணா ஆரோக்கியமாக என்றும் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை தினமும் வேண்டுகிறேன்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  12. ஆவ்வ்வ் இம்முறை ஜே மாமியோ.. வாழ்த்துக்கள்!!!... கோபு அண்ணன் உங்களுக்கு வரவர மறதி அதிகமாயிட்டே போகுது:)).. பாருங்கோ ஜே மாமிக்கு தாமரைப்பூவாப் போட்டு வச்சிருக்கிறீங்க:) இப்போ ராஜேஷ்வரி அக்கா வந்து இதைப் பார்த்தால்ல்ல்:) குதியோ குதி எனக் குதிக்கப் போறா:)).. தாமரைப்பூ அவவின் சின்னம் தானே:)).. நான் இதிலெல்லாம் ரொம்ப விபரமாக்கும்:).

    பதிலளிநீக்கு
  13. ஆஹா ஏதும் ஆபத்து வந்திட்டாலும் என ஓடிப்போய் யானைக்குப் பக்கத்தில நிக்கிறீங்க:)... நாங்க அதுக்கெல்லாம் பயந்து பேசாமல் போயிட மாட்டோம்:) கேள்வி கேட்போம்:)..

    பதிலளிநீக்கு
  14. உங்களின் நூறாவது ஜெயந்தி விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடியதற்கு வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  15. நூறாவது அறிமுகம் சிறப்போ சிறப்பு. வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
  16. 100வது வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
    மிக சிறப்பான பதிவு.

    உங்கள் கதைகள், எழுத்துக்கள் வலைச்சரத்தில் இடம் பெற்றுக் கொண்டே தான் இருக்கும்.வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  17. நெஞ்சை விட்டு அகலாதவை தங்களுடைய பதிவுகள்..
    நூறு முறை அறிமுகம் கண்ட அண்ணா அவர்களுக்கு அன்பின் வணக்கம்!..

    அன்னை அபிராமி அனைவருக்கும் நல்லருள் பொழிவாளாக!..

    பதிலளிநீக்கு
  18. அன்பின் வை.கோ

    நூறு முறை அறிமுகப் படுத்தப் பட்ட தங்களை 1000 முறை அறிமுகப் படுத்த சக பதிவர்கள் தயராய் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தயாராகுக.

    பாராட்டுகள் அருமை நண்பர் வை.கோ அவர்களே !
    நல்வாழ்த்துகள் வை கோ அவர்களே !

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  19. அன்பின் வை.கோ

    நூறு முறை அறிமுகப் படுத்தப் பட்ட தங்களை 1000 முறை அறிமுகப் படுத்த சக பதிவர்கள் தயராய் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தயாராகுக.

    பாராட்டுகள் அருமை நண்பர் வை.கோ அவர்களே !
    நல்வாழ்த்துகள் வை கோ அவர்களே !

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  20. நூறு வலைச்சர அறிமுகங்கள்
    நூறு நூறாக அதிகரிக்க வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:35 PM

      //நூறு வலைச்சர அறிமுகங்கள்
      நூறு நூறாக அதிகரிக்க வாழ்த்துகள்..!//

      என் வலைச்சர 100வது அறிமுகம் பற்றிய தகவல் தங்கள் மூலம் எனக்குக் கிடைக்காததில் மிகவும் வருத்தமே :(

      எனினும் தங்களின் இன்றைய வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  21. எப்பூடி ஒரு ஒரு மாசத்துலயும் ஒரு பதிவு சாப்பிட்டு போடுறேன்( மறந்துகிட்டத சொல்லினன்)
    வலைச்சரத்துல 100-- வது அறிமுகமா.. வாழ்த்துகள் இவங்கலா பூக்கடைக்கே வெளம்பரம் செய்துகிட்டிருக்காக. வாசனையே காட்டி கொடுத்து போடும்லா.

    பதிலளிநீக்கு
  22. 100-வது அறிமுகமா. எப்பவுமே என்பின்னூட்டத்துக்கு முன் முருகு வோட பின்னூட்டம்தான் இருக்கு. செம காமெடியா இருக்கு. எல்லாருக்கும் ரிப்ளை கொடுக்குற நீங்க அவங்கள கண்டுக்கவே மாட்றேளே.

    பதிலளிநீக்கு
  23. சீக்கிரமே நூறாவது நூறையும் எட்டிப் பிடிக்க வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  24. நூறாவது அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு