என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-6 of 16 [24-30]

 என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 


  


திருமதி. ஷக்தி ப்ரபா அவர்கள்
{ 19.12.2011 }


 

  


வணக்கம் நண்பர்களே!

இவ்வார ஆசிரியர் பொறுப்புக்கு அழைப்பு விடுத்த சீனா ஐயாவுக்கும் வலைக்குழுவிற்கும் மிக்க நன்றி.

சமீபத்தில் எனக்கு அறிமுகமானவர் வை.கோ சார் அவர்கள். என் மேல் நம்பிக்கை வைத்துஅல்லது என் சிந்தனை / ரசனை / எழுத்து என எதோ ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்து என்னை பரிந்துரை செய்திருக்கிறார்.

அதனை ஏற்று அழைப்பு விடுத்த சீனா ஐயா அவர்களுக்கும்வலைச்சரக்குழுவிற்கும்  ஊக்குவித்த வை.கோ சாருக்கும் மீண்டும்  மனமார்ந்த நன்றி தெரிவித்து தொடர்கிறேன்.


 திருமதி. ஷக்தி ப்ரபா அவர்கள்

{ 23.12.2011 } 

VGK's சிறுகதை விமர்சனப் போட்டியில் 
முதல் கதைக்கே  பரிசுபெற்ற ‘ஜாங்கிரி’  :)
  


ஹாஸ்யம் கலந்த நச் கதை மூலமாத்தான் எனக்கு வை.கோபாலகிருஷ்ணன் அவங்களோட வலைதளம்  அறிமுகமாச்சு.  எழுத்து மூலமா ஒருத்தரை சிரிக்க வெக்கறது எப்படி சிறந்ததோ, அதே மாதிரி நம்பிக்கை தர எழுத்துக்கள் இருந்தாலும் உற்சாகம் பிறக்கும் இல்லையா?!  உன்கிட்ட முன்னமே அவரோட ஒவ்வொரு கதைகளையும் சொல்லி சிலாகிச்சிருக்கேன். பிடிச்ச பல கதைகள் இருக்கு, ஆனாலும் "பூபாலன்" கதை நமக்கு சொல்ற கருத்து பல கோணங்களில கால நேரம் தாண்டி விரிவடைஞ்சுட்டே இருக்குற மாதிரி தோணுது. இளைய தலைமுறையை கூட சென்றடையற மாதிரி சிறுகதை எழுதும் இலக்கணம் இவர்கிட்டேருந்து கத்துகணும்.


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள்பதிவுக்கான இணைப்பு:

பூபாலன்
 

 


திருமதி. ஷக்தி ப்ரபா அவர்கள்

{ 25.12.2011 ]
  


நன்றி சொல்லி விடைபெறும் நேரம். என்னை சிபாரிசு செய்து  தொடர் உற்சாகம் அளித்த வை.கோ. சாருக்கும், அழைத்த சீனா அய்யா, மற்றும் வலைக்குழுவுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.


நீ............ண்ட பதிவுகளை பொறுமையாக படித்து, பின்னூட்டமிட்ட, இடாத அனைத்து  சகோதர சகோதரிகளுக்கும்,  பணிவான நன்றி. வோட் எல்லாம்  வேற போட்டு மகிழ்விச்சிருக்கீங்க. கோடி கோடி நன்றி, தாங்க்ஸ்,  தன்யவாதகளு... உங்களுக்கெல்லாம் இதோ நீல ஓர்சிட்ஸ் மலர்கள்  


திருமதி 
கோமதி அரசு 
அவர்கள் 
{ 02.01.2012 }


 


வலைச்சர வாசகர்களுக்கு வணக்கம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த புது வருடம் எல்லோருக்கும், எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் தரட்டும். 

என்னை வலைச்சர ஆசிரியராக இந்த வாரம் அழைத்து இருக்கும் திரு. சீனா அவர்களுக்கும், அவரிடம் என்னைப் பரிந்துரை செய்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகளும், வணக்கங்களும்.


28. http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_03.html
திருமதி 
கோமதி அரசு 
அவர்கள் 
 { 03.01.2012 }


திருமதி கோமதி அரசு + 
பிரபல ஓவியர் திரு. அரசு அவர்கள்


வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் நல்ல கதை சொல்லி. நல்ல படிப்பினை ஊட்டும் கதைகள், சிரிக்க, சிந்திக்க வைக்கும் கதைகள் எல்லாம் எழுதுவார். நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வரேன் ’என்ற கதை படித்துத் தான் நான் அவருடைய வலைத்தளத்திற்குப் போக ஆரம்பித்தேன். 

உருக்கமான கதை.


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள்பதிவுக்கான இணைப்பு:

’நீ .... முன்னாலே போனா .... நா .... பின்னாலே வாரேன் !’ஏமாற்றாதே ! ... ஏமாறாதேகதை உச்சிப் பிள்ளையாருக்கு 12 தேங்காய்கள் உடைப்பதாய் வேண்டிக் கொண்டவரின் கதை. தெருவோரம் தேங்காய் விற்பவரிடம் எப்படி தேங்காய் வாங்குகிறார் பாருங்கள்.

//அவளுடன் ஏதேதோ பேசிக்கொண்டே ஒவ்வொரு தேங்காய்களையும் தன் காதருகே வைத்து ஆட்டிப்பார்த்தும், கட்டை விரலையும் ஆள்காட்டிவிரலையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு காய்களின் மீது தன் ஆள்காட்டி விரல் நகத்தினால் மிருதங்கம் வாசித்தும், பன்னிரெண்டுக்கு பதிமூன்றாகத் தன் பையில் போட்டுக்கொண்டு, நூறு ரூபாய்த் தாள் ஒன்றை நீட்டியபடி, மீதிப்பணம் கொடு என்றார் அவசரமாக.//

வேண்டிக்கொண்டபடி 12 தேங்காய்களை உச்சி பிள்ளையாருக்கு உடைத்தபின் ஏமாற்றி வாங்கிய 13வது தேங்காயை தன் மனைவியின் சமையலுக்கு கொடுக்கிறார். அது எப்படி இருந்தது என்று சொல்கிறார் பாருங்கள்.

//பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றில் அவர்கள் சொல்லுவது தான் விலை. யாரும் பேரம் பேசுவது கிடையாது. பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்கும். மனைவி கையில் வைத்திருந்த அந்த அழுகல் தேங்காய் மூடிகளை உற்று நோக்கினார். அதில் அந்த ஏழைக் கிழவியின் தளர்வான முகம் அவருக்குக் காட்சியளித்தது.//

காசு கொடுத்து வாங்கிய தேங்காய்கள் பிள்ளையாருக்கு நல்ல வெள்ளையாக உடைந்தது. ஏமாற்றி வாங்கிய காய் என்ன ஆனது பாருங்கள். இறைவன் என்ன நினைக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிறார் பாருங்கள்.

//அனைத்துப் பிள்ளையார்களும் தன்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போலவும் அவருக்குத் தோன்றியது. தான் செய்த தவறுக்கு சரியான தண்டனை கைமேல் கிடைத்து விட்டதாக உணர்ந்தார். //

கதை சொல்லும் நீதி- யாரையும் ஏமாற்றக்கூடாது. தெய்வம் பார்த்துக் கொண்டு இருக்கிறது என்பது தானே!
படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள்பதிவுக்கான இணைப்பு:

ஏமாற்றாதே ! .......... ஏமாறாதே !!

 

 


அடுத்த கதையும் வை.கோபாலகிருஷ்ணனின் கதைதான். கதையின் பெயர் உடம்பெல்லாம் உப்புச்சீடை உருவம் கண்டு எள்ளல் கூடாது என்பதை வலியுறுத்தும் கதை. பலாப்பழம் வெளித் தோற்றத்தில் முட்கள் நிறைந்ததாய்க் காணப்பட்டாலும் உள்ளே உள்ள சுளை மிகவும் இனிப்பானது.

காசி செல்லும் ரெயில் பயணத்தில் சக பயணியாய் வருபவரை எப்படி நினைக்கிறார்கள் என்று சொல்கிறார் பாருங்கள்:
//அவருக்கு சுமார் 75 முதல் 80 வயதுக்குள் இருக்கலாம். உயரமான ஒல்லியான தேகம். சற்று கருத்த உருவம். பின் கழுத்துக்கு மேல் கொஞ்சமாக தொங்கும் நரைத்த முடிக்கற்றைகள். அதன் மேற்புறம் சந்திர பிம்பம் போன்ற வளைவு. முகம், நெற்றி, தலை, கை, கால்கள், விரல்கள் என எல்லா இடங்களிலும் சிறியதும், பெரியதுமான கொப்புளங்கள். உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாக பார்க்கவே அருவருப்பான தோற்றம்.// அழகற்ற அவரைப் பார்க்கவும், பேசவும், பிடிக்காமல் அவரை வார்த்தைகளால் சக பயணி சாடுகிறார். பின் அந்த அழகற்ற அவர், அவர்களுக்கு உதவிய போது, அவர்களுடைய மனதில் அழகிய மனிதராய் உயர்ந்து நிற்கிறார்.

இந்தத் தொடர்கதையைப் படித்து முடிக்கும்போது கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வந்தது உண்மை.//அழகிய உடலோ
அருவருப்பான உடலோ

உயிர் என்ற ஒன்று பிரிந்தபின்

அழுகக்கூடிய, 
நாறக்கூடிய
அப்புறப் படுத்த வேண்டிய 
பொருளாகி விடுகிறது.

அதை எரிக்க வேண்டிய 

அவசரமும், அவசியமும், நிர்பந்தமும் 
ஏற்படுகிறது.

எரிந்த அதன் சாம்பலில்

அழகும் இல்லை
அருவருப்பும் இல்லை.

சாம்பல் கரைக்கப்படும் கங்கையோ

என்றுமே புனிதமாகப் போற்றப்படுகிறது!//


என்று பெரியவர் சொல்வதாய் தோன்றுகிறது சக பயணிக்கு. உயர்ந்த மனிதர் என்ன உதவிசெய்தார் என்பதைப் படித்துப் பாருங்களேன்!


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள்பதிவுக்கான இணைப்பு:

’உடம்பெல்லாம் உப்புச்சீடை’ 

திருமதி 
கோமதி அரசு 
அவர்கள் 
{ 08.01.2012 }


***பொங்கலோ! பொங்கல் 

ஒரு வாரம் வலைச்சரம் மூலம் நான் படித்த வலைப் பதிவர்களின் பதிவிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொண்டேன். நீங்கள் எல்லோரும் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. வலைச்சரப் பொறுப்பாசிரியர் திரு. சீனா அவர்களுக்கும், என்னைப் பரிந்துரை செய்த திரு. வை. 
கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. பின்னூட்டங்கள் மூலம் எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. 

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!


திரு. மதுமதி அவர்கள் 
[09.02.2012]ண்மையிலேயே காதல் என்பது 

மிகவும் விசித்திரமானது.


தன் இலக்கண இலக்கியங்களை 

யாருமே நிர்ணயித்து விட முடியாது. 


காதல் ...


எங்கே, 

எப்படி, 

யாருக்கு, 

யார் மீது, 

எப்போது, 

எதற்காக, 

ஏன் 


ஏற்படும் என்று யாராலும் சரிவர 

கணித்துச் சொல்ல முடியாது.


மேற்கண்டவாறு நான் சொல்லவில்லை தோழர்களே.. 

ஐயா வை.கோபாலகிருஷ்ணன் தான் சொல்கிறார். 

எங்கு சொன்னார் என்று கேட்கிறீர்களா.. 

ஒரு சிறுகதையில சொன்னாரு.. 

என்ன, சிறுகதை எங்க இருக்குன்னு கேட்கறீங்களா ..

அவரோட காதல் வங்கி யில இருக்கு. 

வேகமா போய்ப் பாருங்க.

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள்பதிவுக்கான இணைப்பு:


 ' காதல் வங்கி ' 

காணத்தவறாதீர்கள் !
 ' காதல் வங்கி ' 


  அன்புள்ள 
ஷக்தி, 
திருமதி. கோமதி அரசு  
மற்றும்
திரு. மதுமதி 
இவர்கள் மூவருக்கும் 
என் இனிய அன்பு நன்றிகள்.
தொடரும்


நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்

வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் : 


ஏழு நபர்கள்
1) திரு. விச்சு அவர்கள்


2) திரு. சீனு [கவிதை] அவர்கள்


3) திருமதி. தென்காசித் 


தமிழ்ப் பைங்கிளி அவர்கள்


4)  திருமதி. ஸாதிகா அவர்கள்


5] கீதமஞ்சரி 


திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்


6] செல்வி: நுண்மதி அவர்கள்


7] திருமதி. ஜலீலா கமல் அவர்கள்


என்றும் அன்புடன் தங்கள்
[வை.கோபாலகிருஷ்ணன்]

21 கருத்துகள்:

 1. அன்பின் வை.கோ

  தங்களை அறிமுகம் செய்த பல நண்பர்களை இங்கு சிறு அறிமுகம் செய்து பாராட்டியது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வை.கோ

  தங்களை அறிமுகம் செய்த பல நண்பர்களை இங்கு சிறு அறிமுகம் செய்து பாராட்டியது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. அன்பின் வை.கோ

  தங்களை அறிமுகம் செய்த பல நண்பர்களை இங்கு சிறு அறிமுகம் செய்து பாராட்டியது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 4. அன்பின் வை.கோ

  தங்களை அறிமுகம் செய்தவர்களுக்கு நன்றி பாராட்டி பதிவிடும் நற்செயல் புரிந்து நட்பு வட்டத்தினைப் பெருக்குவது பாராட்டுக்குரிய செயல்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 5. அன்பின் வை.கோ

  தங்களைப் பாராட்டி அறிமுகம் செய்தவர்களை ( வைகோ வினிற்கு அறிமுகமா ) பாராட்டி நன்றி தெரிவிக்கும் நற்செயல் பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
  நான் உங்கள் மூலம் வலைச்சரத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டதே நீங்கள் அளித்த தைரியத்தால் தான்.
  என் கணவரும், என் மகளும் உற்சாகப்படுத்தி பொறுப்பை ஏற்றுக் கொள்ள செய்தார்கள்.
  சீனா சார் அவர்களும் உற்சாக பின்னூட்டம் செய்து மேலும் எழுத ஊக்கமளித்தார்.

  //வருக வருக கோமதி அரசு - அருமையான அறிமுகம். முத்து லெட்சுமி தங்கள் மகளா .... அவர் வலைச்சர நிர்வாகத்தில் இருக்கிறார் ... தெரியுமா தெரியாதா .... மக்ளின் நிர்வாகத்தில் இருக்கும் வலைச்சரத்தில் தாயார் ஆசிரியப் பொறுப்பேற்பது இருவருக்கும் பெருமை தான். சுய அறிமுகத்தில் - தங்களுடைய முதல் பதிவில் தெகா, சென்ஷி உள்ளிட்ட மறுமொழி இட்டவர்களை நினைவு கூறியது நன்று. நல்வாழ்த்துகள் கோமதி அரசு - நட்புடன் சீனா//
  சீனா சாருக்கும் என் நன்றிகள்.


  மேலும் மூன்று முறை வலைச்சராஆசிரியர் பொறுப்பை அளித்தார். .அதற்கு காரணம் நீங்கள் முதலில் எழுத வைத்தது தான்.
  நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்.
  நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்லி சிறப்பு பதிவு போட்டு வாழ்த்துவது மகிழ்ச்சி.

  திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் எடுத்த புகைபடத்தை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
  சாரை பிரபல ஓவியர் என்று அறிமுகபடுத்தியது மகிழ்ச்சி , உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னார்கள் .

  திருமதி .ஷக்திபிரபா, திரு. மதுமதி அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
  இருவரும் வலைச்சர பொறுப்பை முதன் முதலில் ஏற்றுக் கொண்ட போது முதலில் வந்து வாழ்த்தியவர்கள். அவர்களுக்கும் நன்றிகள்.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள். வாழக் வளமுடன்.

  பதிலளிநீக்கு
 7. வலைச்சர பொறுப்பை ஏற்றுக் கொண்டு செய்தவைகளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி சார். எப்போதும் நினைவுகளை அசைபோடுவது சுகமானது தான்.

  பதிலளிநீக்கு
 8. அடை செய்யும் முறையை விரிவாக அழகாய்ச் சொல்கிறார் , வை.கோபாலகிருஷ்ணன் சார். இந்த அடைமாவிலேயே இன்னொரு பலகாரம் செய்யவும் அவர் சொல்லித் தருகிறார். அதன் பெயர் ”குணுக்கு”!
  .
  (BACHELORS களுக்குப் பயன்படும் சமையல் குறிப்பு கேட்ட )’சமையல் அட்டகாசம்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ஜலீலா அவர்கள் நடத்திய சமையல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வாங்கிய குறிப்பு இந்த அடை. கதை, கட்டுரை, ஓவியம் என்று வலைத்தளத்தில் வழங்கி வருபவர்.//

  இரண்டாம் முறை வலைச்சரத்தில் உங்கள் அடை.

  பதிலளிநீக்கு
 9. உங்கள் தகவல் களஞ்சியத்திற்கு பாராட்டுக்கள் ஐயா...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. ஏற்கனவே வலைச்சரத்தில் சந்தித்த பதிவர்களையும், அவர்களது அறிமுகப் பதிவுகளையும், மீண்டும் உங்கள் வலைத்தளத்தில் ஒருசேரப் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. வலைச்சரத்தில் உங்கள் அறிமுகங்கள்.... எத்தனை எத்தனை பேர் உங்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. அறிமுகம் செய்யப்பட்டுள்ள அத்தனைக் கதைகளையும் விமர்சனப் போட்டியின் வாயிலாய் பலமுறை வாசித்து மகிழும் வாய்ப்பு அமைந்தது. அதற்கு தங்களுடைய முன் முயற்சியே காரணம். இப்போதும் வலையுலகில் பல பழகிய மற்றும் பழைய பதிவர்கள் பலரையும் சிலாகித்து நினைவுகூர்வதிலும் முன்னோடியாய் தாங்களே... இனிய பாராட்டுகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 13. கோபு அண்ணா

  அடுத்த முறை நான் வலைச்சர ஆசிரியர் ஆகும் பொழுது ஒவ்வொரு நாளும் உங்கள் ஒருவரை மட்டும்தான் அறிமுகம் செய்யப் போகிறேன். உங்கள் வலைத் தளத்தைத் தாண்டி அடுத்த வலைத் தளத்திற்குச் செல்ல முடியாமல் கட்டிப் போடுகிறது உங்கள் எழுத்து.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
 14. உங்கள் சிறுகதைகளை மறுபடியும் அசை போட ஒரு வாய்ப்பு.

  பதிலளிநீக்கு
 15. பதிஉலகில் நீங்க அறியாதவங்களோ உங்களை அறியாதவங்களோ யாருமே கிடையாது போல இருக்கே.

  பதிலளிநீக்கு
 16. சிறப்பான அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:30 PM

   //சிறப்பான அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.//

   வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 17. ஒங்கள அறிமுகம் செய்தவங்கள இங்க நீங்க எங்களுக்கெல்லா அறிமுகம் செய்யுறீங்க. அதுவும் நல்லாதா இருக்குது. நெறய பதிவர்கள தெரிஞ்சுக்க மிடியிது அவங்க இன்னாலா எளுதி இருக்காகன்னுபிட்டு போயி பாத்துகிட மிடியிது.

  பதிலளிநீக்கு
 18. உங்க அறிமுகம் மூலமாக நிறைய பதிவர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இனிமேலதான் ஒவ்வொருவரின் பக்கமுமா போயி பாக்கணும்.

  பதிலளிநீக்கு
 19. //உங்களை அறிந்த முகங்களுக்கு - அறிமுகங்கள்//

  பதிலளிநீக்கு