பிரமோஷன்
சிறுகதை
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOO-
பஞ்சாமிக்கு காது அவ்வளவாகக் கேட்காது. அதனால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும் சென்ற ஆண்டு கிடைக்க வேண்டிய பிரமோஷன் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டாவது கிடைக்குமா என்பது இன்று அலுவலகம் போய் வந்தால் எப்படியும் தெரிந்துவிடும்.
”இந்த வருஷம் எப்படியும் கட்டாயம் கிடைத்து விடும்” என்று மேனேஜரின் மனைவி சென்ற வெள்ளிக்கிழமை, கோயிலில் பார்த்தபோது சொன்னது சற்றே ஆறுதல் அளிப்பதாக இருந்தது, பஞ்சாமியின் மனைவி அபிராமிக்கு.
தன் கணவர் வரவை பால்கனியிலிருந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அபிராமி. சூடான சேமியா பாயஸம் ஏலம் முந்திரி மணத்துடன் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது.
பஞ்சாமி வழக்கத்திற்கு மாறாக மிகவும் அவசரம் அவசரமாக ஓடி வருவதிலிருந்தே அபிராமிக்கு விஷயம் புரிந்து விட்டது. மகிழ்ச்சியுடன் பாயஸத்தைக் கிளறப்போனாள்.
வேகமாக உள்ளே வந்த பஞ்சாமி வழக்கம்போல் பாத் ரூமுக்குச் சென்றார். கை, கால், முகம் கழுவிவிட்டு வரட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தாள் அபிராமி. பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தவரிடம் “பிரமோஷன் ஆச்சா?” என்று கேட்டாள்.
முகம் முழுவதும் சிரிப்புடன், ஒருவித பூரிப்புடன் தலையை ஆட்டினார் பஞ்சாமி.
சூடான பாயஸத்தை ஆற்றியபடி நீட்டினாள், தன் அன்புக்கணவர் பஞ்சாமிக்கு.
“என்ன விசேஷம்; எதற்குப் பாயஸமெல்லாம்” என்று கேட்டார், பஞ்சாமி.
“பிரமோஷன் ஆச்சா? என்று கேட்டதற்கு பலமாகத் தலையை ஆட்டினீர்களே! அதற்குத்தான் என்றாள் அபிராமி சற்று உரத்த குரலில்.
...........
.......................
.................................
............................................
............................................................
.......................
.................................
............................................
............................................................
.......................................................................
......................................................................................
”இரண்டு நாட்களாகவே மலச்சிக்கலுடன் அவதிப்படுகிறேனே! மோஷன் ஆச்சா என்று கேட்டாயாக்கும் என்றல்லவா நினைத்தேன்” என்றார் மிகவும் அப்பாவியாக, இந்த முறையும் பிரமோஷன் கிடைக்காத பஞ்சாமி.
இவருக்கு பிரமோஷன் கிடைக்காததற்கான உண்மைக் காரணம் அபிராமிக்கும் இப்போது நன்கு புரிந்து போனது.
இவருக்கு பிரமோஷன் கிடைக்காததற்கான உண்மைக் காரணம் அபிராமிக்கும் இப்போது நன்கு புரிந்து போனது.
-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-
நான் ரசித்துப் படித்த தங்களது நகைச்சுவைக் கதைகளில் இதுவும் ஒன்று
பதிலளிநீக்குநல்ல திருப்பம் கொண்ட கதை.
பதிலளிநீக்குசிரிப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.
பதிலளிநீக்குஉங்களின் இயல்பான நகைச்சுவைக்குக் கட்டியம் கூறும் கதைகளில் இதுவும் ஒன்று.
சிரிப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.!! thanks
பதிலளிநீக்குமிக இயல்பா இருக்கு.... ரசித்து படித்தேன்!
பதிலளிநீக்குமீண்டும் ரசித்துப் படித்தேன்... சிரித்தேன்...
பதிலளிநீக்குவல்லவன் கையில் புல்லும் ஆயுதம் என்பது இதுதானே
பதிலளிநீக்குஒரு" புர "என்கிற இரண்டெழுத்தை வைத்து மிகப் பிரமாதமான
கதையை சொன்னது கண்மிகவும் வியந்தேன் டு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4
ஏற்கனவே படித சிறுகதை. மீண்டும் சிரிக்க வைத்தீர்கள்.
பதிலளிநீக்குநம்ம தளத்தில்:
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11
ha ha ha... good one... humour comes in handy for you...:) 4 posts a day? wow...
பதிலளிநீக்குஇவருக்கு பிரமோஷன் கிடைக்காததற்கான உண்மைக் காரணம் அபிராமிக்கும் இப்போது நன்கு புரிந்து போனது.//
பதிலளிநீக்குகாது சற்று கேட்க வில்லையோ!
அதனால் தான் பிரமோஷன் தள்ளி போகிறதோ!
நல்ல நகைச்சுவை கதை.
நல்ல வேடிக்கை. மீண்டும் ரசித்துப்படித்தேன்.
பதிலளிநீக்குதமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். எல்லாவற்றையும் படிக்க ஆசைதான்.ஆனால் முடியவில்லை. அட்லேஈஸ்ட் ஒன்றாவது படிக்க முடிந்ததே. உடனே இல்லாவிட்டாலும் மெது மெதுவாக எல்லாவற்றையும் படித்து விடுவேன். மிக யதார்த்தமான சிறுகதை இது.
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை ரசித்தேன்
பதிலளிநீக்கு//வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
பதிலளிநீக்குதமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். எல்லாவற்றையும் படிக்க ஆசைதான்.ஆனால் முடியவில்லை. அட்லீஸ்ட் ஒன்றாவது படிக்க முடிந்ததே. உடனே இல்லாவிட்டாலும் மெது மெதுவாக எல்லாவற்றையும் படித்து விடுவேன். மிக யதார்த்தமான சிறுகதை இது.//
Most respected Madam,
வணக்கம். தங்களின் இன்றைய வருகையும் வாழ்த்துக்களும், நான் செய்த பெரும் பாக்யமாக நினைக்கிறேன்.
முக்கியமாக காலை 11 மணிக்கு நான் வெளியிட்டு வரும் புதிய பதிவுகளான
1)ஜாங்கிரி 7.11.11
2)முனியம்மா 8.11.11
3)எல்லோருக்கும் பெய்யும் மழை 9th
4)பிரார்த்தனை 10.11.11
5)கார் கடத்தல் 11.11.11
6)நல்ல காலம் பிறக்குது 12.11.11
7)பூபாலன் 13.11.11
ஆகியவற்றை மட்டுமாவது தயவுசெய்து நேர அவகாசம் கிடைக்கும்போது படித்துவிட்டு,
பின்னூட்டத்திலேயோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ, குறை நிறைகளைச் சுட்டிக்காட்டினால், நான் என்னை மேலும் செதுக்கிக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பிரியத்துடன் vgk
e-mail: valambal@gmail.com
ரமணி சார் சொன்னது போல் ‘வல்லவனுக்கு FULLஉம் ஆயுதம் தான்!
பதிலளிநீக்குசிரித்தேன்...இன்னமும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி :))
பதிலளிநீக்குஉண்மையிலேயே non ஸ்டாப் சிரிப்பு சிரிச்சிட்டிருக்கேன்
பதிலளிநீக்குநகைச்சுவை கதை மிக நன்று சார். சிரிப்புதான் வருகிறது.
பதிலளிநீக்கு”இந்த வருஷம் எப்படியும் கட்டாயம் கிடைத்து விடும்” என்று மேனேஜரின் மனைவி சென்ற வெள்ளிக்கிழமை, கோயிலில் பார்த்தபோது சொன்னது சற்றே ஆறுதல் அளிப்பதாக இருந்தது, //
பதிலளிநீக்குஆறுதல்
”பூராடம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
பதிலளிநீக்குசென்று வழிபட வேண்டிய கோயில்:
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர்
திருக்கோயில்
[மங்களாம்பிகை அம்மன்]
very use-full..
எழுத்தாளனுக்கு கருவுக்காக காத்திருப்பார் கதை படைக்க.. ஆனால் இங்கே ஒரே ஒரு வார்த்தை... அதை வைத்து மிக அற்புதமான கதை படைத்திருக்கிறார் கதையாசிரியர்...
பதிலளிநீக்குபிரமோஷன் தள்ளிபோனதற்கு தன்னிடம் இருக்கும் காது மந்தம் காரணமாகிறது. எவ்வளவு வேதனையான விஷயமிது....
பிரமோஷன் எப்படியும் தன் கணவருக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கும் பத்தாம்பசலி அபிராமிக்கு காரணம் தெரியாமல் இருப்பது கொடுமை...
மேனேஜரின் மனைவி எப்படியும் பிரமோஷன்கிடைத்துவிடும் என்று சொன்னது ஆறுதலுக்கு தான் போலிருக்கிறது என்பதை மிக அருமையாக கடைசி ட்விஸ்ட் தெரிந்துவிட்டது...
(பஞ்சாமி எல்லா விஷயங்களுக்கும் சந்தோஷப்படுபவர் போலிருக்கிறது) மலச்சிக்கலில் அவஸ்தைப்படுவோருக்கு தான் தெரியும் அவர் சந்தோஷம் எத்தனை என்று....
மேனேஜர் மனைவி சொன்னதும் உடனே வீட்டுக்கு வந்து சூடான சேமியா பால் பாயாசம் செய்வதும் அதற்கேற்றார்போல் பஞ்சாம் வாயெல்லாம் சிரிப்பாக முகம் எல்லாம் பூரிப்பாக வீட்டுக்குள் நுழைவதும் பிரமோஷன் கிடைச்சுதா என்றதற்கு ஆச்சு ஆச்சு என்று பஞ்சாமி தலையாட்டியதும்... அதன்பின் எதிர்ப்பார்க்காத விதமாக விஷயம் அது இல்லை என்று புரியவைத்த கதையாசிரியருக்கு ஒரு ஷொட்டு.... சூப்பர் ட்விஸ்ட்....
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அருமையான கதை பகிர்வு அண்ணா....
ஒரு சின்ன நிகழ்வு கதையாசிரியர் படைப்பில் கதையாகி எல்லோரையும் ரசிக்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது...
அன்புவாழ்த்துகள் அண்ணா பகிர்வுக்கு.
மஞ்சுபாஷிணி October 13, 2012 1:35 AM
நீக்குவாங்கோ மஞ்சு! உங்களுக்கும் இன்று பிரமோஷன் கிடைத்து விட்டதா? [அதாவது நான் கொடுத்த பிரமோஷன் கதை கிடைத்து விட்டதா ... படிப்பதற்கு என்று கேட்டேன். ;)]
//எழுத்தாளனுக்கு கருவுக்காக காத்திருப்பார் கதை படைக்க.. ஆனால் இங்கே ஒரே ஒரு வார்த்தை... அதை வைத்து மிக அற்புதமான கதை படைத்திருக்கிறார் கதையாசிரியர்...//
கதாசிரியக்கு .... ரொம்பவும் சந்தோஷம் மஞ்சு.
தொடரும்....
To My Dear Manju,
பதிலளிநீக்குகதாசிரியக்கு .... ரொம்பவும் சந்தோஷம் மஞ்சு.
கதாசிரியருக்கு [கதை+ஆசிரியருக்கு] என இருக்க வேண்டும் எழுத்துப்பிழையாகி விட்டது, வருத்தமே.
vgk
VGK to மஞ்சு
பதிலளிநீக்கு//(பஞ்சாமி எல்லா விஷயங்களுக்கும் சந்தோஷப்படுபவர் போலிருக்கிறது) மலச்சிக்கலில் அவஸ்தைப்படுவோருக்கு தான் தெரியும் அவர் சந்தோஷம் எத்தனை என்று....//
கரெக்ட் மஞ்சு. அவருக்குப் பிரமோஷன் கிடைத்திருந்தால் கூட இவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டிருக்கது. அவாஅவாள் பிரச்சனை தீர்ந்தால் அவாஅவாளுக்கு நிம்மதி.
தொடரும்....
VGK to மஞ்சு...
பதிலளிநீக்கு//கரெக்ட் மஞ்சு. அவருக்குப் பிரமோஷன் கிடைத்திருந்தால் கூட இவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டிருக்கது.//
இதிலும் கடைசி வார்த்தையில் தப்பாப்போச்சு மஞ்சு.
‘ஏற்பட்டிருக்காது’ என இருக்க வேண்டும்.
பஞ்சாமியின் காது போல அது ’காது’க்கு பதில் ’கது’ என விழுந்துவிட்டது. ;)))))
[கரண்ட் கட் ஆகிவிடுமோ என்ற கவலையில் வேகமாக அவசரமாக டைப் அடிப்பதால் இதுபோன்ற தொடர்த்தவறுகள் ஏற்பட்டு வருகின்றன.]
தொடரும் [தவறுகள் அல்ல] என் பதில்கள்....
VGK to மஞ்சு....
நீக்கு//மேனேஜர் மனைவி சொன்னதும் உடனே வீட்டுக்கு வந்து சூடான சேமியா பால் பாயாசம் செய்வதும் அதற்கேற்றார்போல் பஞ்சாம் வாயெல்லாம் சிரிப்பாக முகம் எல்லாம் பூரிப்பாக வீட்டுக்குள் நுழைவதும் பிரமோஷன் கிடைச்சுதா என்றதற்கு ஆச்சு ஆச்சு என்று பஞ்சாமி தலையாட்டியதும்... //
சேமியா பாயஸம் போலவே சொட்டுச்சொட்டாக ரொம்பவும் ரஸித்து ருசித்துப் படித்து மகிழ்ந்துள்ள மஞ்சுவுக்கு என் பாராட்டுக்கள்.
//அதன்பின் எதிர்ப்பார்க்காத விதமாக விஷயம் அது இல்லை என்று புரியவைத்த கதையாசிரியருக்கு ஒரு ஷொட்டு.... சூப்பர் ட்விஸ்ட்....//
நல்லவேளை என் அன்புத்தங்கச்சி, எனக்கு நறுக்குன்னு ஒரு குட்டு வைக்காமல், ஷொட்டுக்கொடுத்து, சூப்பர் ட்விஸ்ட் எனச்சொல்லியிருப்பது, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மிகவும் சந்தோஷம்...ம்மா, மஞ்சு.
பிரியமுள்ள
கோபு அண்ணா
Simple people , simple aspirations, and a good wife. A lucky man Panjami!
பதிலளிநீக்குPattu October 17, 2012 2:31 AM
பதிலளிநீக்குSimple people , simple aspirations, and a good wife. A lucky man Panjami!
வாருங்கள் பட்டு, வணக்கம்.
செளக்யமா? நல்லா இருக்கீங்களா?
”எளிமையான மனிதர்கள்”
”எளிமையான அபிலாசைகள்”
”நல்ல மனைவி”
”அதிர்ஷ்டக்கார மனிதர் பஞ்சாமி”
அழகாக பட்டுப்போல நறுக்குன்னு
நாலே நாலு வார்த்தைகளில் சொல்லிட்டீங்க !
என் மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள
கோபு
பட்டுன்னா பட்டு தான் !
இந்த சிறுகதை சிரிப்பான கதை. நன்றி ஐயா
பதிலளிநீக்குவேல் September 24, 2013 at 11:26 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இந்த சிறுகதை சிரிப்பான கதை. நன்றி ஐயா//
என் பலகதைகளில் நகைச்சுவை சற்றே தூக்கலாகத்தான் இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
:))))))))))) மிகவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு .மிக்க
பதிலளிநீக்குநன்றி ஐயா .(மாம்பழ யூஸ் :)))))) )
Ambal adiyal September 29, 2013 at 2:36 PM
நீக்குமாம்பழ ஜூஸின் வருகை மகிழ்வளிக்கிறது + இனிக்கிறது.
வாங்கோ, வணக்கம்.
//:))))))))))) மிகவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு மிக்க நன்றி ஐயா .(மாம்பழ யூஸ் :)))))) )//
தங்களின் அன்பான வருகைக்கும் சிரித்து, சிந்தித்து எழுதியுள்ள அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அட இது கூட நல்லாத்தான் இருக்கு .ஏதோ ஒன்றை நாம் பெறுவதற்கு
பதிலளிநீக்குஓர் உந்து சக்தி தேவை .அந்த உந்து சக்தியாக இப்போது என்னுள்
ஓடுகிறது பல லீற்றர் மாம்பழ யூஸ் (அருமையான ஆக்கங்களை
ரசிக்க வைத்துச் செல்லும் மாம்பழ யூசே வாழிய நீ :))))
Ambal adiyal September 29, 2013 at 2:41 PM
நீக்கு//அட இது கூட நல்லாத்தான் இருக்கு .ஏதோ ஒன்றை நாம் பெறுவதற்கு ஓர் உந்து சக்தி தேவை .அந்த உந்து சக்தியாக இப்போது என்னுள் ஓடுகிறது பல லீற்றர் மாம்பழ யூஸ் (அருமையான ஆக்கங்களை
ரசிக்க வைத்துச் செல்லும் மாம்பழ யூசே வாழிய நீ :))))//
தங்களின் மீண்டும் வருகை மாம்பழ ஜூஸுக்கே மாம்பழ ஜூஸ் கொடுத்தது போல மகிழ்வளிக்கிறது. இனிக்கிறது. மிக்க நன்றி.
:)
பதிலளிநீக்குஏற்கனவே இந்த கதைக்கு பின்னூட்டம் போட்ட நினைவு. கதை நல்லா இருட்கு காது கேட்காதவஙுகளுட்குதானே அந்த கஷ்டம் புரியும்.
பதிலளிநீக்குபூந்தளிர் May 20, 2015 at 11:41 AM
நீக்கு//ஏற்கனவே இந்த கதைக்கு பின்னூட்டம் போட்ட நினைவு. கதை நல்லா இருக்கு.//
ஏற்கனவே போட்டு இருப்பேள், நிச்சயமாகப் போட்டு இருப்பேள் .... தமிழ்மணத்திற்காக இது ஒரு மீள் பதிவு மட்டும்தான்.
//காது கேட்காதவங்களுக்குதானே அந்த கஷ்டம் புரியும்.//
கரெக்ட். இதில் கஷ்டம் அவர்களோடு மட்டும் போகாது. அவர்களிடம் பேச்சுக்கொடுப்போருக்கும் மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். என்ன செய்ய ?
பாவம் அண்ணா பஞ்சாமி. அவருக்கு சீக்கிரம் பிரமோஷன் வாங்கிக் கொடுத்து விடுங்க>
பதிலளிநீக்குரசிக்க வைத்த நகைச்சுவை கதை! மீள்பதிவாக வெளியிட்டதில் படிக்க முடிந்தது! புதிய வாசகர்களுக்கும் படிக்காமல் விட்டவர்களுக்கும் இந்த மீள்பதிவு உதவும். நன்றி!
பதிலளிநீக்குமின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
பிரமோஷன் கதை..... சிரிப்பு வந்தது..... ம்ம்.. சிரித்துக் கொண்டே படுக்கப் போகிறேன். குட்டியூண்டு கதை தான் . மூர்த்தி... சிறிது தான்....
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
அம்மியோட கமண்ட சொல்லுதேன். ஐயோ பாவமே ரண்டு நாளக்கா வெளிக்கிருக்கல. கஸ்டம்தா. இது போல ஒரு பாயசம்லாம் நம்மூட்ல பண்ணிட்டேல்ல. எப்படி செய்யுதுன்னு சொல்லிருக்கானு கேக்குது.
பதிலளிநீக்குmru September 15, 2015 at 10:47 AM
நீக்கு//இது போல ஒரு பாயசம்லாம் நம்மூட்ல பண்ணிட்டேல்ல. எப்படி செய்யுதுன்னு சொல்லிருக்கானு கேக்குது. //
சில வீட்டு அம்மாக்கள் எழுதியுள்ளவைகளைப் பாருங்கோ:
http://sivakamis25.blogspot.com/2013/01/blog-post.html
தேங்காய்ப் பால் பாயஸம்
சேமியா பாயஸம் செய்ய:
http://fourladiesforum.com/2013/07/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/
பாயாச லிங்கு மருக்கா அனுப்பி தாங்க. இப்ப அனுபிச்சது ஓபன் ஆயிட்டில்ல
பதிலளிநீக்கு:)))))
mru October 14, 2015 at 11:58 AM
நீக்கு//பாயாச லிங்கு மருக்கா அனுப்பி தாங்க. இப்ப அனுபிச்சது ஓபன் ஆயிட்டில்ல :)))))//
பாயஸமெல்லாம் மறுக்கா மறுக்கா கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் உங்களுக்கும் ஓபன் ஆகிவிடும். Loose Motion ஆனாலும் கஷ்டமாகிவிடுமே, முருகு. :)
நல்ல பிரமோஷன். பாதி வார்த்தையை மட்டும் காதில் வாங்கிண்டு தலையை ஆட்டினதுக்கே பால பாயசம் கிடுத்ததே. காது கேக்கும் குறைபாடுள்ளவர்கள் நிலமை பரிதாபம்தான்ஃ
பதிலளிநீக்கு;-)))) பிரமோசன் அடுத்த வருஷமாச்சும் கிடைக்கட்டும்...
பதிலளிநீக்குபிரமோசன்,,,,,,, மோசன்,,,, நல்லா சிரிப்பு சிரிப்பா சிந்திக்க வைக்கும் பதிவு,
பதிலளிநீக்குஎன்ன பன்றது வீட்டுக்காரம்மா கவலை அவவுகளுக்கு,,
நல்லா இருக்கு,
mageswari balachandran December 11, 2015 at 2:11 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//பிரமோசன்,,,,,,, மோசன்,,,, நல்லா சிரிப்பு சிரிப்பா சிந்திக்க வைக்கும் பதிவு,//
:)
//என்ன பன்றது வீட்டுக்காரம்மா கவலை அவவுகளுக்கு,,நல்லா இருக்கு,//
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. - VGK
சிரித்து மகிழ்ந்தேன்!
பதிலளிநீக்குஎன்னவாயிருக்கும் என்று கடைசிவரை கண்டுபிடிக்க முடியாத கதை. நகைச்சுவையா இருந்தது.
பதிலளிநீக்குஇதைப் படித்தவுடன், எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வருது. வயசான காலத்துல (75+), அன்னைக்கு பாத்ரூம் போயிட்டு வந்தாலே ஒரு நிம்மதி வந்துடும், அதுவே பெரிய அச்சீவ்மென்ட் என்று தோணிடும்னு எழுதியிருந்தார்.
குட்டிக் (அந்த 'குட்டி' அல்ல. கபர்தார்) கதை. ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க.
நெல்லைத் தமிழன் February 19, 2018 at 11:14 PM
நீக்குவாங்கோ ஸ்வாமி, வணக்கம்.
//என்னவாயிருக்கும் என்று கடைசிவரை கண்டுபிடிக்க முடியாத கதை. நகைச்சுவையா இருந்தது.//
:)))))
//இதைப் படித்தவுடன், எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வருது. வயசான காலத்துல (75+), அன்னைக்கு பாத்ரூம் போயிட்டு வந்தாலே ஒரு நிம்மதி வந்துடும், அதுவே பெரிய அச்சீவ்மென்ட் என்று தோணிடும்னு எழுதியிருந்தார்.//
ஆம். நானும் அதனைப் படித்துள்ளேன். :)
//குட்டிக் (அந்த 'குட்டி' அல்ல. கபர்தார்) கதை. ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)