வரம்
[சிறுகதை]
By வை. கோபாலகிருஷ்ணன்
-ooOoo-
அவர்கள் இருவரும் அறுபது வயதைத் தாண்டிய, ஆனால் ஆரோக்கியமான தம்பதி. அந்த ஜோடி தங்களது நாற்பதாவது திருமண நாளை, ஒரு சிறிய தேனீர் விடுதியில், மிகுந்த அன்புடனும், எளிமையாகவும், சிறப்பாகவும் கொண்டாடியது.
அவர்களின் பாசத்தையும், நேசத்தையும், பிரியத்தையும், காதலையும் உணர்ந்த தேவதை ஒன்று, அவர்கள் முன்பு தோன்றி, திருமண நாள் வாழ்த்துக்கள் கூறி, ஆளுக்கு ஒரு வரம் வீதம் கேட்டால் அளிப்பதாகச் சொன்னது.
இதைக் கேட்டு மனம் மகிழ்ந்த மனைவி, “ஆஹா, நான் என் பிரியமுள்ள கணவருடன் இந்த உலகைச் சுற்றி வர விரும்புகிறேன்” என்றாள்.
உடனே அதற்கான பெரிய பயணத்திட்டம், விமானப் பயண முன் பதிவுக்கான சீட்டுகள், மற்றும் ஆங்காங்கே தங்குவதற்கான ஹோட்டல் முன் பதிவுகள், உணவு வசதிகள், வெவ்வேறு நாட்டு பணக்கட்டுகள், ஒவ்வொரு இடத்திலும் உள்ளூரைச் சுற்றிப் பார்க்க வாடகைக்காருக்கான முன் பதிவுகள், தொலைபேசி எண்கள், புத்தாடைகள் மற்றும் பயணத்திற்கான அனைத்துப் பொருட்களும் அவள் முன், தேவதையால் அளிக்கப் பட்டன. இதைப் பார்த்து வியந்து போனார்கள், அவர்கள் இருவரும்.
உடனே அதற்கான பெரிய பயணத்திட்டம், விமானப் பயண முன் பதிவுக்கான சீட்டுகள், மற்றும் ஆங்காங்கே தங்குவதற்கான ஹோட்டல் முன் பதிவுகள், உணவு வசதிகள், வெவ்வேறு நாட்டு பணக்கட்டுகள், ஒவ்வொரு இடத்திலும் உள்ளூரைச் சுற்றிப் பார்க்க வாடகைக்காருக்கான முன் பதிவுகள், தொலைபேசி எண்கள், புத்தாடைகள் மற்றும் பயணத்திற்கான அனைத்துப் பொருட்களும் அவள் முன், தேவதையால் அளிக்கப் பட்டன. இதைப் பார்த்து வியந்து போனார்கள், அவர்கள் இருவரும்.
இதைக் கண்ட கணவர் ஒரு நொடி சிந்தித்தார் . நல்லதொரு அரிய வாய்ப்பு இது. இதைத் தவற விட்டால் மீண்டும் கிடைக்கக் கூடியது அல்ல, என்று எண்ணினார்.
மனைவியைப் பார்த்து, “நான் கேட்கப் போகும் இந்த வரத்திற்காக என்னை நீ மன்னிக்க வேண்டும்” என்று கூறி விட்டு, தேவதையிடம் ஒரு விசித்திரமான வரம் கேட்கலானார்.
”என் மனைவி, என்னை விட 30 வயது சிறியவளாக இருக்க விரும்புகிறேன். இது தான் எனக்குத் தேவையான வரம்” என்றார்.
இதைக்கேட்டதும், அவர் மனைவி மட்டுமல்லாமல், அந்த தேவதையும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தது.
ஓரளவு வயதாகியும், ஆண்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இது போன்ற சபல புத்தியை எண்ணி வியந்தனர், அவர் மனைவியும் அந்த தேவதையும்.
இருப்பினும், தேவதை தான் ஏற்கனவே வாக்குக் கொடுத்தபடி, உடனே அவரின் வரத்தையும் நிறைவேற்றிக் கொடுத்து விட்டு, மறைந்து விட்டது.
.....
...........
..................
.........................
................................
.......................................
நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.
...
......
.............................
பாவம் ...... அவர், இப்போது 94 வயதுக் குடுகுடுக் கிழவராக தேவதையால் மாற்றப்பட்டிருந்தார்.
.............................
பாவம் ...... அவர், இப்போது 94 வயதுக் குடுகுடுக் கிழவராக தேவதையால் மாற்றப்பட்டிருந்தார்.
-o-o-o-o-o-o-
முற்றும்
11. ”பூரம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
சென்று வழிபட வேண்டிய கோயில்:
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்சென்று வழிபட வேண்டிய கோயில்:
திருக்கோயில்
[பெரிய நாயகி அம்மன்]
இருப்பிடம்: புதுக்கோட்
பட்டுக்கோட்டை செ
7 கி.மீ., சென்
திருவரங்குளம் என்னு
இந்த ஆலயம் உள்ளது.
11/27
பேராசை பெருநஷ்டம் ..அருமையான நீதிக்கதை
பதிலளிநீக்குமீள் பதிவானாலும்...? படிக்கும்போது இண்டெரெஸ்ட் குறையவில்லை.
பதிலளிநீக்குநல்ல படிப்பினை.
பதிலளிநீக்குஅட கஷ்டமே! இப்படியா ஏமாறணும்
பதிலளிநீக்கு94 வயதாகிவிட்டது...., தேவதைகளிடம் வரம் கேட்கும்போது தெளிவாகவும் கேட்க வேண்டும். நல்ல கதை. நன்றி சார்.
பதிலளிநீக்குபேராசை பெரு நஷ்டம்.சிறப்பான கதை ஐயா.
பதிலளிநீக்குஅட...
பதிலளிநீக்குபேராசை பெருநஷ்டம் என்பதற்கு சிறந்த உதாரணம் இச்சிறுகதை....
பதிலளிநீக்குமீண்டும் படித்து ரசித்தேன்...
பேராசை பெருநஷ்டம் என்பதற்கு சிறந்த உதாரணம் இச்சிறுகதை....
பதிலளிநீக்குமீண்டும் படித்து ரசித்தேன்...
ரசிக்கக் கூடிய கதை
பதிலளிநீக்குவடை போச்சே...
பதிலளிநீக்குமோசமாக யோசித்தவர் தேவதையையும்
பதிலளிநீக்குமோசமாக யோசிக்க வைத்துவிட்டாரே
அருமையான கதை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7
பதிலளிநீக்குநன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது./
பதிலளிநீக்குரசிக்க வைக்கும் அருமையான நகைச்சுவைக் கதைக்குப் பாராட்டுக்கள்..
பூரம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
பதிலளிநீக்குசென்று வழிபட வேண்டிய கோயில்:
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர்
திருக்கோயில்
[பெரிய நாயகி அம்மன்]
பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் ஐயா ... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ... மென்மேலும் உங்களின் புகழ் பெருக வேண்டும். வாத்துக்கள்....
பதிலளிநீக்குஅன்பின் விஜி பார்த்திபன் மேடம், வாங்க, வணக்கம். நலமா?
பதிலளிநீக்குஇன்றைய 02 10 2012 வலைச்சரம் மூலம் வருகை தந்துள்ளீர்கள் என நினைக்கிறேன். மிகவும் சந்தோஷம். நன்றிகள்.
ஆனால் வாழ்த்துகளை வாத்துக்கள் ஆக்கியது ஏனோ? ;))))))
வலைச்சர இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
அன்புடன்
கோபு
VGK
தேவதை வந்து வரம் தரும்போது நல்ல வரங்களை கேட்க ஏன் மனம் வருவதில்லை? பொன்னான வாய்ப்பை தவற் விட்டுட்டாரே அந்த மனுஷர்.
பதிலளிநீக்குபூந்தளிர் January 15, 2013 at 8:44 PM
நீக்கு//தேவதை வந்து வரம் தரும்போது நல்ல வரங்களை கேட்க ஏன் மனம் வருவதில்லை?
ஆசை, பேராசை, சில ஆண்களுக்கே உள்ள சபலம்.
//பொன்னான வாய்ப்பை தவற் விட்டுட்டாரே அந்த மனுஷர்.//
அதானே, பாருங்கோ. பொன்னான வாய்ப்பை தவற விட்டு, தானும் கிழமாகி, தன் மனைவியையும் மனம் வருந்தச்செய்து விட்டாரே! மிகவும் மோசமான ஆளாய் இருப்பாரோ? ;)
சரி அதுபோகட்டும், விடுங்கோ ....
இதோ இங்கே இந்தப்பதிவினில் ஒரு தேவதை அதுவும் “தேடி வந்த தேவதை” இருக்கிறாள் பாருங்கோ. அவளை நிச்சயமாக உங்களுக்கு ரொம்ப ரொம்பப்பிடிக்கும் பாருங்கோ.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_14.html
பிரியமுள்ள
VGK
நீதிக்கதை அருமை... இன்றைய பகிர்வில் (21.07.2013) இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் July 21, 2013 at 3:39 AM
பதிலளிநீக்குவாருங்கள், நண்பரே, வணக்கம்.
//நீதிக்கதை அருமை... இன்றைய பகிர்வில் (21.07.2013) இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி ஐயா...//
மிக்க மகிழ்ச்சி; தங்களின் அன்பான வருகைக்கும் ’அருமையான நீதிக்கதை’ என்ற பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிக்ள்.
அருமையான நீதிக்கதை! நன்றி!
பதிலளிநீக்கு//Seshadri e.s.July 21, 2013 at 7:02 AM
பதிலளிநீக்குஅருமையான நீதிக்கதை! நன்றி!//
வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகை + பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி, Sir.
நல்ல கதை! நிறையப் பேர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்!
பதிலளிநீக்கு//Ranjani Narayanan July 21, 2013 at 9:54 AM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//நல்ல கதை! நிறையப் பேர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்!//
நிறையப் பேர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்றால் ’சபலிஸ்ட்’ ஆகவா?
ஆண்கள் மட்டும் தான் இப்படி எந்த வயதிலும் மிகவும் சபலிஸ்ட் ஆக இருப்பவர்கள் என்று நினைக்கிறேன்.
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இது படிச்சிருக்கேன். என்றாலும் பேராசை பெருநஷ்டம் என்பதை உணராமல் போனாரே என நினைக்கச் சிரிப்பு ஒருபக்கம், பரிதாபம் ஒரு பக்கம். குறைந்த பக்ஷமாக இரண்டு பேரையும் வயது குறைவாக மாற்றும்படி கேட்டிருக்கலாமோ! :))))))
பதிலளிநீக்குGeetha Sambasivam July 22, 2013 at 12:20 AM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//இது படிச்சிருக்கேன். என்றாலும் பேராசை பெருநஷ்டம் என்பதை உணராமல் போனாரே என நினைக்கச் சிரிப்பு ஒருபக்கம், பரிதாபம் ஒரு பக்கம். குறைந்த பக்ஷமாக இரண்டு பேரையும் வயது குறைவாக மாற்றும்படி கேட்டிருக்கலாமோ! :))))))//
அவர் என்னைப்போல ஒரு அவசரக்குடுக்கையாக இருப்பார் போலிருக்கு.
கேட்கும் வரம் உடனே நிறைவேறப்போகிறது என்ற பேரெழுச்சியுடன் இருந்தவரை சுத்த வழுவட்டையாக மாற்றி விட்டது அந்த தேவதை.
எழுச்சி என்றால் என்ன? வழுவட்டை என்றால் என்ன? என்பது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஏனென்றால் இதுபற்றி நான் எழுதிய நகைச்சுவைத்தொடரை தாங்கள் இன்னும் படிக்கவே இல்லை.
உடனே படித்து விட்டு ஒவ்வொரு பகுதிக்கும் கருத்து எழுதுங்கோ, படிக்கும் போது மாமாவும் உங்கள் அருகில் இருக்க வேண்டும். ;)))))
இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html
[பலராலும் படித்து மகிழ்ந்து பாராட்டப்பட்டதோர் தொடர்.]
தங்களின் அன்பான வருகக்கும், அழகான கருத்துக்க்ளுக்கும் என் நன்றிகள்..
அன்பின் வை.கோ - அருமையான சிறுகதை - ஏற்கனவே தெரிந்த கதைதான் - இருப்பினும் சுவாரசியமான கதை - நாற்பதாவது திருமண நாளைக் கொண்டாடும் போது தேவதையிடம் இருந்து வாங்கிய வரம் நன்மைக்கா தீமைக்கா ? தம்பதிகள் தீர்மானித்துக் கொள்ளட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குcheena (சீனா) August 17, 2013 at 11:58 PM
பதிலளிநீக்குவாருங்கள் என் அன்பின் திரு சீனா ஐயா அவர்களே, வணக்கம் ஐயா.
//அன்பின் வை.கோ - அருமையான சிறுகதை - ஏற்கனவே தெரிந்த கதைதான் - இருப்பினும் சுவாரசியமான கதை - நாற்பதாவது திருமண நாளைக் கொண்டாடும் போது தேவதையிடம் இருந்து வாங்கிய வரம் நன்மைக்கா தீமைக்கா ? தம்பதிகள் தீர்மானித்துக் கொள்ளட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
லண்டன் மாநகரத்திலிருந்து தங்களின் அன்பான வருகையும், அழகான சோர்வில்லாக் கருத்துக்களும், என்னை மிகவும் மகிழ்விக்கிறது, ஐயா.
நன்றிகள் பல. தங்களின் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணம் வெற்றிகரமாக நிகழ வாழ்த்துகள். அன்புட VGK
:)
பதிலளிநீக்குஇது வரமா சாபமா ? பேராசை பெரு நஷ்டமாச்சூ
பதிலளிநீக்குபூந்தளிர் May 20, 2015 at 10:56 AM
நீக்கு//இது வரமா சாபமா ?//
அதான் தெரியலை.
//பேராசை பெரு நஷ்டமாச்சூ//
கரெக்டூஊஊஊஊ ! :)
எறும்பு நான் கடிச்சு சாகணும்ன்னு வரம் கேட்ட கதையாயிடுத்தே.
பதிலளிநீக்குவரமே கிடைத்தாலும் சரியாக கேட்கத்தெரிய வேண்டும் அல்லவா?
ஆசை அவதிக்கு வழி செய்துவிட்டதே!
பதிலளிநீக்குமின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (04.08.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
'வரம்' தருவது போல இடமறிந்து 'சாபம்' தந்து விட்டதே தேவதை...!
இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி படவில்லை என்றால் இப்படித்தான்...போலும்..!
கதையின் போக்கும் சிந்தனையும் அருமை.
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
அட கெரகமே இந்த மனுசனுக்கு புத்தி இப்பிடியா போகும் 40--க்கு மேல நாய்க் குணம் 60--க்கு மேல புறு புறுப்புனுவாங்க சரிதான் போல. (அம்மி கண்டூடூ)
பதிலளிநீக்குmru September 15, 2015 at 11:00 AM
நீக்கு//அட கெரகமே இந்த மனுசனுக்கு புத்தி இப்பிடியா போகும் 40--க்கு மேல நாய்க் குணம்//
இந்த நாய் குணம் கேள்விப்பட்டுள்ளேன். :)))))
அதுவும் மிகவும் கரெக்டூஊஊ தான். உண்மைதான்.
//60--க்கு மேல புறு புறுப்புனுவாங்க சரிதான் போல.//
அது என்ன புறு புறுப்பு ????? புரியவே இல்லையே )))))
// (அம்மி கண்டூடூ) //
’அம்மி கண்டூடூ’ ன்னா, அம்மா இதைக் கண்டுக்கிட்டு ரசித்துச் சிரித்தாங்கன்னு அர்த்தமோ ? OK OK OK OK .... தங்களின் அன்பு அம்மிக்கும் என் நன்றிகளைச் சொல்லவும்.
ஓ..ஓ.. மொதகவே வந்துபிட்டேனா. மருக்காவும் வந்துபிட்டனே. இப்ப என்னத்த சொல்லுவினம்.:)))
பதிலளிநீக்குmru October 14, 2015 at 11:38 AM
நீக்கு//ஓ..ஓ.. மொதகவே வந்துபிட்டேனா. மருக்காவும் வந்துபிட்டனே. இப்ப என்னத்த சொல்லுவினம்.:)))//
அதனால் பரவாயில்லை. எனக்கும் சந்தோஷமே. இதுபோல ஏற்கனவே பின்னூட்டம் கொடுத்திருந்தால் Just a smily mark [ :) ] மட்டும் பின்னூட்டமாகப் போட்டுவிட்டு, அடுத்த பதிவுக்குத் தாவிச் சென்று விடுங்கோ. போதும். நான் வரிசையாக Check-up செய்யும் போது அதனைப் புரிந்துகொள்வேன். - vgk
நமக்கும் இதுபோல திடீர்னு ஒரு தேவதை வந்து வரம் தரேன் என்றால் ஒரே குழப்பமாகிவிடும் தானே. என்ன கேட்பது என்று புரியாத குழப்பத்தில்தான் அந்த பெர்யவர் அப்படி ஒரு வரத்தைக் கேட்டிருக்க வேண்டும்.
பதிலளிநீக்குநமக்கும் இதுபோல திடீர்னு ஒரு தேவதை வந்து வரம் தரேன் என்றால் ஒரே குழப்பமாகிவிடும் தானே. என்ன கேட்பது என்று புரியாத குழப்பத்தில்தான் அந்த பெர்யவர் அப்படி ஒரு வரத்தைக் கேட்டிருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஏற்கனவே வயசாகி குழப்பத்திலிருந்தவரை மேலும் வயசாளியாக்கிபுடுச்சே அந்த தேவதை....பாவம் அவருக்கு ஒரே வதை..
பதிலளிநீக்குபேராசை! மீள்பதிவை மீண்டும் இரசித்தேன்!
பதிலளிநீக்குஇது தெரிந்த கதைதான். அது என்னிடம் சிந்தனையை உருவாக்கியது. எனக்குச் சொல்லாமல் கொள்ளாமல் தெய்வம் பிரத்யட்சமாகி வரம் கேட்டால், 'என்ன சாப்பிட்டாலும் குண்டாகாமல், ஆரோக்யம் குறையாமல் இருக்கும்படிப் பண்ணு' என்றுதான் நான் கேட்பேன். இந்த வரத்துக்கு என்ன கேட்பேன் என்று இப்பவே யோசித்துவைக்கிறேன். ஒருவேளை ப்ராப்தம் இருந்து தெய்வம் கேட்டுவிட்டால்?
பதிலளிநீக்கு'நெல்லைத் தமிழன் October 18, 2016 at 6:00 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இது தெரிந்த கதைதான். அது என்னிடம் சிந்தனையை உருவாக்கியது. எனக்குச் சொல்லாமல் கொள்ளாமல் தெய்வம் பிரத்யட்சமாகி வரம் கேட்டால், 'என்ன சாப்பிட்டாலும் குண்டாகாமல், ஆரோக்யம் குறையாமல் இருக்கும்படிப் பண்ணு' என்றுதான் நான் கேட்பேன். இந்த வரத்துக்கு என்ன கேட்பேன் என்று இப்பவே யோசித்துவைக்கிறேன். ஒருவேளை ப்ராப்தம் இருந்து தெய்வம் கேட்டுவிட்டால்?//
தாங்கள் பொறுமையாக யோசித்து வைத்துக்கொள்ள இந்த என் பதிவு பயன்பட்டுள்ளதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே. :) வருகைக்கு நன்றி.
ஹா...ஹா...இப்ப. இந்த. குடு..குடு கெளவரு என்ன. பண்ணுவாங்க..??)))
நீக்குshamaine bosco February 22, 2018 at 10:18 AM
நீக்குவாங்கோ ஷம்மு, நமஸ்தே !
//ஹா...ஹா...இப்ப. இந்த. குடு..குடு கெளவரு என்ன. பண்ணுவாங்க..??)))//
தெரியலையே ஷம்மு ! :(
ஒருவேளை ........... நமக்குள், நாம் அவ்வப்போது மெயிலில் மனம் திறந்து பேசிக்கொள்வது போல ஏதேனும், புதுமையாகச் செய்வாரோ என்னவோ ! :)
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஷம்மு.
அன்புடன் கிஷ்ணாஜி