கொஞ்சநாள் பொறு தலைவா ......!
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா !!
சிறுகதை
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
அந்த பரபரப்பான பஜாரில் 15 நிமிடங்களாக டிராபிக் ஜாம். வாகனங்கள் ஏதும் நகர்வதாகவே தெரியவில்லை. கார் ஓட்டி வந்த நந்தினிக்கு கடுப்பாக வந்தது.
கைக்குழந்தையுடன் கடைவீதிக்கு ஏதோ பொருட்கள் வாங்க வந்த மல்லிகா போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டதால் ரோட்டை கிராஸ் செய்துவிடலாம் என்று போகும்போது, தன் அக்கா நந்தினியைக் காரில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் “அக்கா, எப்படியிருக்கீங்க, பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?” என்று ஆசையுடன், பேச வந்தும், நந்தினி கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு, “உனக்கு என்ன வேண்டும், லிஃப்ட் வேண்டுமானால் ஏறிக்கொள், என்னை அக்கா என்றெல்லாம் அழைக்காதே” என்கிறாள்.
மல்லிகா தன் கண்களில் வந்த நீரைத் துடைத்துக் கொள்கிறாள். தன் வீடு மிக அருகிலேயே இருந்தும், லிஃப்ட் எதுவும் கேட்டு தான் அவளை நெருங்கவில்லை என்றாலும், நந்தினியுடன் மனம் விட்டுப்பேச ஒரு வாய்ப்பாகக்கருதி, அந்தக் காருக்குள் ஏறி தன் அக்காவின் இருக்கை அருகிலேயே அமர்ந்து கொள்கிறாள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தாங்கள் மிகவும் பாசமாக, பிரியமாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறாள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தாங்கள் மிகவும் பாசமாக, பிரியமாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறாள்.
தான் உயிருக்குயிராய் காதலித்த ஆனந்த்துக்கே தன்னை பதிவுத்திருமணம் செய்து வைத்தவளும் இதே தன் அக்கா நந்தினி தான் என்பதையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறாள்.
தாயில்லாமல் வளர்ந்த தங்களை பாசத்துடன் பார்த்துப் பார்த்து வளர்த்த தன் தந்தை சம்மதிக்காதபோதும், தனக்காக அவரிடம் பரிந்து பேசி, வாதாடியும் எந்தப் பயனுமில்லாததால் , உடனடியாகப் பதிவுத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி, தனக்கும் ஆனந்துக்கும் ஐடியா கொடுத்தவளும் இதே நந்தினி அக்கா தான்.
அதுமட்டுமல்லாமல் தானே பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து எங்கள் பதிவுத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்து போட்டுச் சென்றவளும் இதே அக்கா நந்தினி தான்.
ஆனால் 2 வயது சிறியவளான தான், அவசரப்பட்டு காதல் வசப்பட்டு, ஜாதி விட்டு ஜாதி மாறி திருமணம் செய்துகொண்டதால், அக்கா நந்தினிக்கு இன்னும் சரியான வரன் அமையவில்லை.
அவள் கோபத்திற்கான காரணம் அதுவல்ல என்பது மல்லிகாவுக்கும் தெரியும். ஒரே ஆதரவாக இருந்து வந்த தங்கள் அப்பாவின் திடீர் மரணத்திற்கு காரணம் தன்னுடைய கலப்புத் திருமணமே என்பதை மட்டும், அக்கா நந்தினியால் தாங்க முடியாமல் உள்ளது என்பதும் மல்லிகாவுக்கும் தெரியும்.

மல்லிகாவிடமிருந்து குழந்தை நந்தினியிடம் தாவி ஸ்டியரிங்கை பிடித்து விஷமம் செய்ய ஆரம்பித்தது. முதன்முதலாக அந்தக் குழந்தையைப் பார்த்ததும், அதன் முகத்தில் தன் அப்பாவின் சாயல் அப்படியே இருப்பதைப் பார்த்த நந்தினி மிகவும் ஆச்சர்யப்பட்டாள்.
”உன் பெயர் என்னடா” என்று அவன் கன்னத்தை லேசாக கிள்ளியபடி கேட்கலானாள்.
“ரா மா னு ஜ ம்” என்றது தன் மழலை மொழியில்.
தன் அப்பாவின் பெயரையும் அந்தக்குழந்தை வாயால் கேட்டதும், குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டாள் நந்தினி.
போக்குவரத்து சரியாகி வண்டிகள் நகரத் தொடங்கின. நந்தினி மல்லிகாவை எங்கே கொண்டுபோய் விடவேண்டும் என்பது போல பார்க்கலானாள்.
நேரே போய் முதல் லெஃப்ட் திரும்பச்சொன்னாள். கார் திரும்பியதும் வலதுபுறம் உள்ள மிகப்பெரிய பச்சைக் கட்டடம் என்றாள்.
நேரே போய் முதல் லெஃப்ட் திரும்பச்சொன்னாள். கார் திரும்பியதும் வலதுபுறம் உள்ள மிகப்பெரிய பச்சைக் கட்டடம் என்றாள்.
கார் நிறுத்தப்பட்டது. நந்தினியை உள்ளே வரச்சொல்லி மல்லிகா கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். குழந்தையும் நந்தினியை கட்டிப் பிடித்துக்கொண்டு காரைவிட்டுக் கீழே இறங்க மறுத்தது. பிறகு நந்தினியே குழந்தையைத் தூக்கிக்கொண்டு மல்லிகா வீட்டின் உள்ளே நுழைந்தாள்.
மல்லிகாவின் கணவரும், அவருடைய சகோதரரும் நந்தினியை வரவேற்று உபசரித்தனர். அங்கிருந்த செல்வச் செழிப்பான சூழ்நிலையும், மனதிற்கு இதமான மனிதாபிமானமிக்க வரவேற்பும், நந்தினியை மனம் மகிழச்செய்தன.
பூஜை அறையில் தன் அப்பா ராமானுஜம் அவர்களின் மிகப்பெரிய படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது கண்டு மகிழவே செய்தாள். குழந்தையை படத்தருகே கொண்டு சென்றாள் நந்தினி. “உம்மாச்சித் தாத்தா” என்றது அந்தக் குழந்தை.

தன் அக்காவுக்கு ஆசை ஆசையாக டிபன் செய்து கொண்டு சூடாகப் பரிமாற வந்தாள், மல்லிகா.
மல்லிகாவின் கணவன் ஆனந்த் நந்தினியை மிகவும் ஸ்பெஷலாக விழுந்து விழுந்து கவனித்து உபசரித்தார்.
தன் தம்பிக்கும் நந்தினிக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை, மெதுவாக சமயம் பார்த்து நந்தினியிடம் பக்குவமாக எடுத்துச்சொல்லி, தன் ஆவலைத் தெரிவித்து , அவள் விருப்பத்திற்காகவும், சம்மதத்திற்காகவும் தாங்கள் எல்லோருமே காத்திருப்பதாகக் கூறினார், ஆனந்த்.
தெருவில் நின்று கொண்டிருந்த தன் தங்கை மல்லிகாவை, தான் வேறு யாரோ போல “லிஃப்ட் வேண்டுமானால் காரில் ஏறிக்கொள், என்னை அக்கா என்று அழைக்க வேண்டாம்” என்று சொன்னதை நினைத்து வருந்தினாள் நந்தினி.
தனது வாழ்க்கை என்ற நீண்ட பயணத்திற்கே லிஃப்ட் தரத் தயாராக இருக்கும் அந்த அன்பு உள்ளங்களிடம், பிரியாவிடை பெற்று புறப்படலானாள், நந்தினி.
தன் தந்தை உருவில் பிறந்துள்ள தன் தங்கை பிள்ளை ராமானுஜத்திற்கு டாட்டா சொல்லி புறப்பட்டாள். அந்தக் குழந்தையை விட்டுப்பிரிய மட்டும் அவள் மனம் மிகவும் சங்கடப்பட்டது.
தனக்குத் திருமணம் ஆகி இந்த வீட்டுக்கே வந்துவிட்டால், தினமும் அவனைக்கொஞ்சி மகிழலாம் என்று அவள் மனம் சொல்லாமல் சொல்லி மகிழ்வித்ததை, அவள் முகத்தில் பிரதிபலித்த சந்தோஷம் காட்டிக் கொடுத்தது.
நந்தினி தன் காரை ஸ்டார்ட் செய்யும் போது, அஸ்தமித்திருந்த நேரமானதால், அந்தத்தெரு விளக்குகள் யாவும் ஒரே நேரத்தில் பிராகாசிக்கத் தொடங்கின, அவளுக்கு அமையப்போகும் புத்தம் புதிய இனிய இல்வாழ்க்கை போலவே.
வழியனுப்ப கார் அருகே குழந்தை ராமானுஜத்துடன் மல்லிகா, ஆனந்த், ஆனந்தின் தம்பி ஆகியோர் சூழ்ந்து நிற்க, “கொஞ்ச நாள் பொறு தலைவா ...... ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா .....’’ என்ற பாடல் யாருடைய செல்போனிலிருந்தோ அழைப்பொலியாக ஒலித்தது, நல்லதொரு சகுனமாக நந்தினி உள்பட அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-
இந்தச்சிறுகதை வல்லமை மின் இதழில்
23.11.2011 அன்று வெளியிடப்பட்டது.
23.11.2011 அன்று வெளியிடப்பட்டது.
நந்தினி தன் காரை ஸ்டார்ட் செய்யும் போது, அஸ்தமித்திருந்த நேரமானதால், அந்தத்தெரு விளக்குகள் யாவும் ஒரே நேரத்தில் பிராகாசிக்கத் தொடங்கின, அவளுக்கு அமையப்போகும் புத்தம் புதிய இனிய இல்வாழ்க்கை போலவே. /
பதிலளிநீக்குவல்லமையில் வெளியான அருமையான கதைக்கு பிரகாசமான வாழ்த்துகள்...
உன் பெயர் என்னடா” என்று அவன் கன்னத்தை லேசாக கிள்ளியபடி கேட்கலானாள்.
பதிலளிநீக்கு“ரா மா னு ஜ ம்” என்றது தன் மழலை மொழியில்.
தன் அப்பாவின் பெயரையும் அந்தக்குழந்தை வாயால் கேட்டதும், குழந்தையை அள்ளி அணைத்துக் கொண்டாள் நந்தினி./
மனம் நிறைக்கும் அருமையான காட்சி!
தனது வாழ்க்கை என்ற நீண்ட பயணத்திற்கே லிஃப்ட் தரத் தயாராக இருக்கும் அந்த அன்பு உள்ளங்களிடம், பிரியாவிடை பெற்று புறப்படலானாள், நந்தினி./
பதிலளிநீக்குஅதிவேக லிப்டில் பயணிப்பதுபோல் ஆனந்தமான அன்பான காட்சி!!
"கொஞ்சநாள் பொறு தலைவா....!
பதிலளிநீக்குஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா!!"
பொருத்தமான இடத்தில் ஆனந்தம் ஆனந்தம் பாடும் அருமையான பாட்டு!!
கதை நன்றாக இருக்கிறது வை.கோ ஸார்
பதிலளிநீக்குகதை நல்லாருக்கு..
பதிலளிநீக்குஅமைதியாக மனதை வருடிய நல்ல கதை. மிகவும் ரசித்தேன். (த.ம.2)
பதிலளிநீக்குதனது வாழ்க்கை என்ற நீண்ட பயணத்திற்கே லிஃப்ட் தரத் தயாராக இருக்கும் அந்த அன்பு உள்ளங்களிடம், பிரியாவிடை பெற்று புறப்படலானாள், நந்தினி.
பதிலளிநீக்குசூப்பர் தலைப்புடன் கதை!
அருமை ஒருமை
பதிலளிநீக்குபாடல் கதையைக் கொடுத்ததா அல்லது கதையுடன் பாடல் அத்தனை
இயல்பாகச் சேர்ந்ததா எனத் தெரியவில்லை
கதையும் தலைப்பும் அத்தனை பொருத்தம்
மனம் கவர்ந்த கதை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4
நல்ல கதை. வல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆகா தலைப்புக்கு பொருத்தமான கதை அதுவும் கடைசியில் முடிவு நச்.
பதிலளிநீக்கு>>http://www.tamilmanam.net/
பதிலளிநீக்குவணக்கம்.. இந்த முகவரியில் போனால் பார்க்கலாம்
டைட்டில் பாடல் லைனா ஹா ஹா
பதிலளிநீக்குவல்லமையான சுவாரசியக் கதை.வல்லமையில் வந்தமைக்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்குசிக்கல்களும் சிடுக்குகளும் இல்லாத சிம்பிள் கதை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅருமை.ஒரு பாடல் வரியை வைத்து அழகான கதையை கொடுத்து விட்டீர்களே!சிறப்பாக இருக்கு.
பதிலளிநீக்குபாட்டை வச்சி ஒரு கதை...
பதிலளிநீக்குநல்லாயிருந்துச்சிங்க...
தலைப்புகேற்ற முடிவா?
பதிலளிநீக்குமுடிவிற்கேற்ற தலைப்பா?
இரண்டும் சரிதான்!
த ம ஓ 7
புலவர் சா இராமாநுசம்
வித்தியாசமான கரு.
பதிலளிநீக்குரொம்ப நன்றாகயிருக்கிறது சார்.
தமிழ்மணம் - 8
இண்ட்லி - 5
கதை மிகவும் நன்றாக இருந்தது .
பதிலளிநீக்குகொஞ்சம் நாட்கள் வலைப்பக்கம் வர மாட்டேன் ..திரும்ப வரும்போது எல்லா கதைகளுக்கும் சேர்த்து பின்னூட்டமிடுவேன் .
கதை மிக அருமை.
பதிலளிநீக்குஉங்கள் கதைகளில் எனக்குப் பிடித்ததே இந்த “பாசிட்டிவ் அப்ரோச்” தான் சார்....
பதிலளிநீக்குபாடலையே தலைப்பாக வைத்து ஒரு நல்ல கதை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி.
Nalla kathai! Vaazhthukkal!
பதிலளிநீக்குNandhini thangaiyagavum mallika akkavaakavum irunthirunthaal, innum sirappaga irunthirukkumo? Just suggestion!
அழகிய பாடலை தலைப்பாக வைத்து மிக அழகாக கதை வடித்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குஎன் அழைப்பினை ஏற்று “மழலைகள் உலகம் மகத்தானது” என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டுள்ள Miss: நுண்மதி அவர்களுக்கு என் மனமார்ந்த ஆசிகளும், நன்றிகளும், வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குபடிக்க விரும்புவோர் கீழ்க்கணட இணைப்புக்குச் செல்லவும்:
http://nunmadhi.wordpress.com/2011/11/25/%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81/
பிரியமுள்ள vgk
கதை அருமை,நல்ல முடிவு.
பதிலளிநீக்குநல்ல மனங்களுக்கிடையேயும் சில சமயங்களில் சரியான புரிதல் இல்லாமல் மனத்தாபங்கள் உண்டாகிவிடுகின்றன. அதை நயம்பட விளக்கித் தீர்வையும் அளித்து முடிவில் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டீர்கள். பாராட்டுகள் சார்.
பதிலளிநீக்குநல்ல கதை வாழ்த்துக்கள் ..
பதிலளிநீக்குகல்லையும் கரைய வைக்கும் குழந்தை உள்ளம். காரை விட்டு இறங்க மறுத்தவரை கல்யாண செய்தி அறியவைத்ததும் இந்த அணைப்பேதான். குழந்தை ஏற்படித்திய சந்தர்ப்பம் என்றே சொல்லலாம் . இக்கதையில் இருந்து தெரிவது என்னவென்றால், யாரையும் எடுத்த மாத்திரத்தில் வெறுக்கக்கூடாது . சேற்றினுள் செந்தாமரை இருக்கும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் . நல்ல கதை தொடருங்கள்
பதிலளிநீக்குநல்ல கதை சார், வல்லைமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசார் தங்களை எனக்குள் நான் என்ற தொடர்பதிவு எழுத அழைப்பு விடுத்திருக்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குநம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு
தலைப்பு கவர்ந்திழுக்க தங்கள் தளத்திற்கு வந்தேன்..கதை அருமை..வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஅருமையான கதை தோழரே..
பதிலளிநீக்குமற்ற கதைகளை போல நெகட்டிவ் முடிவு (இன்று பலர் கதை சொல்கிறேன் என்று இனிமையாக துவங்கி முடிவில் சொதப்பி விடுகின்றனர்) இல்லாமல், அருமையான முடிவு....
பாசிட்டிவ் ஆன கதை..
படித்ததும் எனக்குள்ளும் ஒரு இனிமையான உணர்ச்சி!!!!
middleclassmadhavi said...
பதிலளிநீக்கு//Nalla kathai! Vaazhthukkal!//
மிக்க நன்றி.
//Nandhini thangaiyagavum mallika akkavaakavum irunthirunthaal, innum sirappaga irunthirukkumo?//
இதற்கான என் பதிலை தங்களுக்குத் தனியே அனுப்பிவிட்டேன். அதைத் தொடர்ந்து, ஒருசில Case Study, இன்றைய நாட்டு நடப்பு, கலாச்சார மாற்றம் என்று மேலும் பல விஷய்ங்களை நமக்குள் பகிர்ந்து கொண்டோம்.
கடைசியாக என் கருத்துக்களில் தாங்கள் திருப்தியடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
//Just suggestion!//
தங்களின் மேலான ஆலோசனைகள் என்னால் எப்போதும் வரவேற்கப்படுபவையே. சந்தோஷம்.
vgk
இந்தச்சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்புக்குரிய அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk
பதிலளிநீக்கு=========
இன்று முதன் முதலாக என் வலைப்புவுக்கு புதிய வருகை தந்துள்ள மதுமதி + தமிழ்கிழம் இருவரையும் அன்புடன் வருக வருக வருக என வரவேற்று ம்கிழ்கிறேன்.
vgk
தமிழ்வாசி பிரகாஷ் said...
பதிலளிநீக்கு//சார் தங்களை "எனக்குள் நான்" என்ற தொடர்பதிவு எழுத அழைப்பு விடுத்திருக்கிறேன். நன்றி.//
தாங்கள் விடுத்துள்ள அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி, பிரகாஷ்.
எழுத முயற்சிக்கிறேன்.
அன்புடன் vgk
சி.பி.செந்தில்குமார் said...
பதிலளிநீக்கு//>>http://www.tamilmanam.net/
வணக்கம்.. இந்த முகவரியில் போனால் பார்க்கலாம்//
தகவலுக்கு நன்றி.
ஆனால் தமிழ்மணத்தில் ஒவ்வொரு வாரமும் முதலிடம் பெறுபவர் பற்றிய விபரங்கள், ஞாயிறு ஒரு நாள் மட்டுமே வெளியிடுகிறார்கள்.
நான் நட்சத்திரப்பதிவராக இருந்த வார இறுதி நாளான 13.11.2011 ஞாயிறு அன்று, TOP 20 LIST இல் நான் முதலிடம் வகித்த விபரம் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் என் அறியாமையால் அதை நான் பார்க்கவில்லை. அது மறுநாள் மறைந்து போய் விடுகிறது.
இருப்பினும் நான் முதலிடம் வகித்ததாக அறிவிப்பு வெளியிட்ட அதே நாளில் [13.11.2011 அன்று] TOP 20 LIST இல் அந்த வாரப்பதிவர்களில் எட்டாம் இடமாக வந்திருக்கும் திரு. மோஹன் குமார் என்பவர், அதை SAVE செய்து வைத்திருந்ததால், அதை அப்படியே எனக்கு மெயில் மூலம் அனுப்பி வைத்து உதவியுள்ளார்.
அதே வாரத்தில் தாங்களும் இரண்டாம் இடத்தைப்பிடித்திருப்பதையும் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
திரு மோஹன் குமார் அவர்கள் எனக்கு அனுப்பியுள்ள லிங்க் இதோ:
http://veeduthirumbal.blogspot.com/2011/11/top-20.html
அன்புடன் vgk
வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
பதிலளிநீக்கு//நல்ல கதை. வல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.//
Respected Madam,
வணக்கம். பிரபல எழுத்தாளராகிய தங்களின் அன்பான வருகை என்னை மிகவும் உற்சாகப்படுத்துவதாக உள்ளது.
மிக்க நன்றியுடன் vgk
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். நல்ல கதை. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...நன்றி அய்யா!
பதிலளிநீக்குநம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்கு//வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். நல்ல கதை. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...நன்றி அய்யா!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"//
வணக்கம். வாங்க!
தொடர்ந்து
வருக! வருக!! வருக!!!
முதல் வருகைக்கு மிக்க நன்றி.
அன்புடன்
vgk
alls well that ends well
பதிலளிநீக்குஎனக்குப் பிடிச்சதே இது தான்!! மனசு நிறையுது.
Shakthiprabha said...
பதிலளிநீக்கு//alls well that ends well
எனக்குப் பிடிச்சதே இது தான்!! மனசு நிறையுது.//
மிக்க நன்றி, மேடம்.
கல்கியில் முகமூடி இல்லாத தங்களின் தோற்றத்தைப்பார்த்து வியந்தேன்.
கல்கியில் “மாத்தி யோசியுங்க” என்ற தொடர் போட்டியொன்று பல வாரங்கள் நடத்தினார்கள். அதில் இறுதிச்சுற்று வரை வந்து நானே முதலிடம் பெற்று வெற்றி பெற்றவனாக அறிவித்து இருந்தார்கள்.
அதைக்கூட நான் பதிவாக எழுதியிருந்தேன். லிங்க் இதோ:
http://gopu1949.blogspot.com/2011/04/6_17.html
அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியே இப்போதும் உங்களின் வெற்றியை கல்கியில் கண்டதும் கல்கண்டாக இனித்தது. வாழ்த்துக்கள்.
உங்களின் சிறப்பான சிறுகதை என்னை கவர்கிறது சிறப்பான ஆக்கம்பாராட்டுகள் தொடருங்கள் சிறுகதைகளின் வேடந்தாங்கல் என கூறலாமா ?
பதிலளிநீக்குமாலதி said...
பதிலளிநீக்கு//உங்களின் சிறப்பான சிறுகதை என்னை கவர்கிறது சிறப்பான ஆக்கம்பாராட்டுகள் தொடருங்கள் சிறுகதைகளின் வேடந்தாங்கல் என கூறலாமா ?//
மிக்க நன்றி.
தாங்கள் தங்கள் இஷ்டம் போல என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம்.
வேடந்தாங்கலுக்கு அவ்வப்போது வந்து போகும் பறவை போல விரைவில் ஒரு நாள், இந்த வலைப்பூவிலிருந்தே நான் பறந்து போனாலும் போகலாம்.
அன்புடன் vgk
தங்களின் சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாக இந்த கார் கதையும் அமைந்துவிட்டது.பொருத்தமான சினிமா பாடலின் வரிகளை தலைப்பிலும், முடிவிற்கு பொருத்தியும் கதை அமைத்த விதமும் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குthirumathi bs sridhar said...
பதிலளிநீக்கு//தங்களின் சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாக இந்த கார் கதையும் அமைந்துவிட்டது.பொருத்தமான சினிமா பாடலின் வரிகளை தலைப்பிலும், முடிவிற்கு பொருத்தியும் கதை அமைத்த விதமும் சுவாரஸ்யம்//
ஆஹா! நீண்ட இடைவெளிக்குப்பின் தாங்கள் வந்ததில் இரட்டை மகிழ்ச்சி அடைகிறேன்.
[ஒருவருக்குள் ஒருவர் என்றால் இருவர் தானே!)))))) அதனால் இரட்டை மகிழ்ச்சி எனக்கு]
பாடல் வரியுடன் கதையின் முடிவு அருமை.
பதிலளிநீக்குமாதேவி said...
பதிலளிநீக்கு//பாடல் வரியுடன் கதையின் முடிவு அருமை.//
மிக்க நன்றி. அன்புடன் vgk
எவ்ளோ அழகா ஒரு சின்ன கதைல சொல்லிட்டீங்க... எனக்கெல்லாம் ஒரு நாலு எபிசொட் வேணும் இதை சரியா சொல்ல... :)
பதிலளிநீக்குஅப்பாவி தங்கமணி said...
பதிலளிநீக்கு//எவ்ளோ அழகா ஒரு சின்ன கதைல சொல்லிட்டீங்க... எனக்கெல்லாம் ஒரு நாலு எபிசொட் வேணும் இதை சரியா சொல்ல... :)//
நாலு என்ன நாற்பது எபிசோட் கூட தாங்கள் எழுதலாம். பத்திக்குப்பத்தி, வாக்யத்துக்கு வாக்யம், வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து நகைச் சுவையை அள்ளித்தெளிக்கும் தங்களின் எழுத்துக்களின் பரம ரஸிகன் நான்.
அத்திப்பூத்தாற்போல தங்களின் அபூர்வ வருகைக்கு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நன்றி. ;))))
அன்புடன் vgk
அழகான கதை. சூப்பரா சொல்லியிருக்கிறீங்க.
பதிலளிநீக்குvanathy said...
பதிலளிநீக்கு//அழகான கதை. சூப்பரா சொல்லியிருக்கிறீங்க.//
மிக்க நன்றி. vgk
நான் நட்சத்திரப்பதிவராக இருந்த வார இறுதி நாளான 13.11.2011 ஞாயிறு அன்று, TOP 20 LIST இல் நான் முதலிடம் வகித்த விபரம் வெளியிட்டுள்ளார்கள்.//
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சார்.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//நான் நட்சத்திரப்பதிவராக இருந்த வார இறுதி நாளான 13.11.2011 ஞாயிறு அன்று, TOP 20 LIST இல் நான் முதலிடம் வகித்த விபரம் வெளியிட்டுள்ளார்கள்.//
வாழ்த்துக்கள் சார்.//
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி, மேடம். தங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்களின் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும். ஒரு விஷயம் தங்களுடன் பேச வேண்டியுள்ளது.
என் விலாசம்:
valambal@gmail.com
அன்புடன் vgk
ஒரு நல்ல கதையைப் படித்தால் மனது லேசாகி ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
பதிலளிநீக்குமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
நீக்குஅன்புடையீர்,
வணக்கம்.
31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதுவரை, 2011 ஜனவரி முதல் 2011 நவம்பர் வரையிலான பதினோரு மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன் VGK
தங்களது கதை தான், ஆனால் எனக்குள் ஏகப்பட்ட உணர்வுகள், கடைசி உவமை அருமை. அவள் வாழ்க்கையிலும் தனிமை என்ற இருள் மாறி வெளிச்சம் வருவது சரி,
பதிலளிநீக்குநன்றாக இருந்தது.குழந்தைள் எத்துனை துன்பத்தையும் மாற்றி விடும்.
mageswari balachandran May 4, 2015 at 2:30 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தங்களது கதை தான், ஆனால் எனக்குள் ஏகப்பட்ட உணர்வுகள், கடைசி உவமை அருமை. அவள் வாழ்க்கையிலும் தனிமை என்ற இருள் மாறி வெளிச்சம் வருவது சரி, நன்றாக இருந்தது.குழந்தைகள் எத்துனை துன்பத்தையும் மாற்றி விடும்.//
:) தங்களின் அன்பான வருகைக்கும் அழகான உணர்வுபூர்வமான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். :)
அவளுக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்
பதிலளிநீக்குபூந்தளிர் May 21, 2015 at 10:24 AM
நீக்கு//அவளுக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்//
அப்படியே ஆகட்டும். ததாஸ்து. :)
பிரியமுள்ள பூந்தளிர் அவர்களுக்கு,
நீக்குவணக்கம்மா.
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 நவம்பர் வரை முதல் பதினோரு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் கோபு
அருமையான கதை.
பதிலளிநீக்குஅதெப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணறதோ?
சிகரெட் விளம்பரத்தில் ‘இழுக்க, இழுக்க இன்பம் இறுதி வரை’ன்னு போடுவாங்க.
உங்க கதைகளோ ’படிக்கப் படிக்க இன்பம் என்றென்றும்’
அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
நீக்குஅன்புள்ள ஜெயா,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 நவம்பர் வரை முதல் பதினோரு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.
பிரியமுள்ள நட்புடன் கோபு
அப்பாவின் சம்மதம் இல்லாமல் மல்லிகாவின் திருமணம் நடந்தாலும் அவளின் குழந்தை ராமானுஜம் முலமாக நந்தினியின் தந்தை ராமனுசமே அனைத்தையும் மன்னித்து நந்தினியின் திருமணத்தை முடித்தது போல் கதையை கொண்டு சென்றது மிக அருமை சார்..
பதிலளிநீக்குRadha Rani June 27, 2015 at 8:32 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அப்பாவின் சம்மதம் இல்லாமல் மல்லிகாவின் திருமணம் நடந்தாலும் அவளின் குழந்தை ராமானுஜம் முலமாக நந்தினியின் தந்தை ராமனுசமே அனைத்தையும் மன்னித்து நந்தினியின் திருமணத்தை முடித்தது போல் கதையை கொண்டு சென்றது மிக அருமை சார்..//
தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி, மேடம்.
மின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று முன்தினம் (20.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
சின்னக் கதையில் கூட ஒரு பெரிய மர்மத்தை அடக்கி எழுதி இருக்கீங்க. சுவாரஸ்யமான கதை. ரசித்தேன்.
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
தலப்பு கத ரொம்ப நல்லா இருக்குதுங்க.
பதிலளிநீக்குஅன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
பதிலளிநீக்குஅன்புள்ள (mru) முருகு,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி முதல் 2011 நவம்பர் வரை, முதல் பதினோரு மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு
தலைப்பும் கதையும் ரொம்ப நல்லா இருக்கு. ஒரு குழந்தை அனைவரின் மனசையும் எப்படி மாற்றி சந்தோஷப்படுத்தி விடுகிறது.
பதிலளிநீக்குஅன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
பதிலளிநீக்குவணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 நவம்பர் மாதம் முடிய, என்னால் முதல் 11 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
ஃபோட்டோ டக்கரு...அப்பா பேரோட அவரோட சாயல்ல குழந்தையைப்பார்த்ததும்...ஃப்ளாட்...கதை வஞ்சி-க்கவில்லை...
பதிலளிநீக்குஅன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
பதிலளிநீக்குதிரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 நவம்பர் மாதம் வரை, என்னால் முதல் 11 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
அருமையான முடிவு!
பதிலளிநீக்குஅன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
பதிலளிநீக்குதிரு. E.S. SESHADRI அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 நவம்பர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 11 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK