என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 7 நவம்பர், 2011

தாலி”தாலி”சிறுகதை


By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-”ஏண்டீ, நம்ம பரத்தும், ஷீலாவும் எங்கே?”

“இரண்டு பேரும் காத்தாடா வெளியே வாக்கிங் போயிருக்காங்க!”


”அவங்களுக்கு வர வர துளிர் விட்டுப்போச்சு, வரட்டும் பேசிக் கொள்கிறேன்”


”ஏதோ சின்னஞ்சிறுசுகள், நம்மைப் போல வீட்டிலேயே அடைஞ்சு கிடக்காம, ஜாலியா போயிட்டு வரட்டுமேன்னு நான் தாங்க அனுப்பி வைச்சேன், அதுக்குப் போய் ஏன் இப்படிக் கோபப்படுறீங்க?”


ஏதாவது ஏடாகூடமாக ஆச்சுன்னா, நமக்குத் தானே சங்கடம்.  உஷாராக இருக்க வேண்டிய நீயே இப்படி அவங்களுக்கு சுதந்திரம் கொடுத்து வெளியே அனுப்பலாமா?””உப்புப்பெறாத விஷயத்துக்கு  ஏங்க நீங்க இப்படி டென்ஷன் ஆறீங்க?”“உப்புப் பெறாத விஷயமா?  நாட்டு நடப்பைப் பற்றி உனக்கென்ன தெரியும்?   காலம் கெட்டுக்கெடக்குத் தெரியுமா உனக்கு!”“அப்படியென்னங்க காலம் கெட்டுப் போச்சு; நீங்க எடுத்துச் சொன்னீங்கன்னா நானும் தெரிஞ்சுட்டுப் போறேன்”


”நீ பெரிசா தெரிஞ்சுக்கிட்டும், புரிஞ்சுக்கிட்டும் கிழிச்சே; உனக்கெப்படி இதில் உள்ள சிக்கல்களைப் பற்றியெல்லாம்  நான் புரிய வைக்கப் போறேனோ, எனக்கே ஒரே விசாரமாயிருக்கு;  


”என்னங்க பெரிய விசாரம்” ?


”உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ !   போன வாரம் இவங்க  இரண்டு பேரும் ஜோடியா அந்த லாட்ஜுக்கு போக முயற்சி பண்ணியிருக்காங்க””அய்யய்யோ  அப்படியா!  இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?””அந்த லாட்ஜ் மேனேஜர் என் க்ளாஸ்மேட் தானே, அவர் தான் எனக்குப் போன் பண்ணி சொன்னாரு””என்னன்னு சொன்னாரு?”“கழுத்துல தாலி ஏறாம இப்படி அலய விடாதீங்க; அப்புறம் அது ஆபத்துல போய் முடியும்ன்னு எச்சரிக் செய்தாரு”
….
……….
…………..
……………….
………………….


”இவங்க ரெண்டு பேருக்கும் தாலியா?  நீங்க என்னங்க சொல்றீங்க?  எனக்கு ஒரு எழவும் புரியலையே ! “
…………..
              ………….
                            …………..
                                           …………..
                                                          …………..                                                 
…………..
                                                                                                       …………..
                                                                                        ……………
                                                                           ………….
                                                               …………
………..
………..
………..
………..
………..
”முனிசிபாலிடியில் பணம் கட்டி நாய் வளர்க்க லைசன்ஸ் வாங்கி அதுங்க கழுத்திலே பெல்ட் கட்டணுமாம். அதைத்தான் ’தாலி’ன்னு அவரு சொல்றாரு.  தாலி இல்லாம இப்படி அலய விட்டா, அதுங்களை நாய் வண்டியிலே ஏத்திக்கிட்டுப் போய் விடுவாங்களாம்”
 -o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-3. கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் 


[துங்கபால ஸ்தானாம்பிகை அம்மன்] 


இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 
8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. 


மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., 
சென்றால் கோயிலை டையலாம்
03/27

37 கருத்துகள்:

 1. தமிழ்மன நட்சத்திரத்திற்கு எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. எங்க ஆரம்பிச்சி எங்க முடிங்கிறீங்க..

  எங்கேயோ போயிட்டிங்க சார்...

  பதிலளிநீக்கு
 3. நான் ஏதொ ஆடி மாசத்துக்காக பிரிச்சு வெச்ச தம்பதிகள் பத்தி எழுதறீங்கன்னு நெனச்சா... இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்கலை. அருமை சார்...

  பதிலளிநீக்கு
 4. இந்த கதையின் நாயகன் நாயகி நாலு காலில் நடப்பவன்களா .கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை .

  பதிலளிநீக்கு
 5. :))) அதானே இப்படி விட்டா எப்படி....

  நல்ல மீள்பதிவு....

  பதிலளிநீக்கு
 6. கதை சுவாரசியமா போகுதேன்னுப் பார்த்தா..

  எதிர்ப்பார்க்காத முடிவு..

  ஹா.ஹா..

  பதிலளிநீக்கு
 7. நாய்க்களுக்கானதா? நல்ல கதை சார்.

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வை.கோ - ம்ம்ம் எதிர்பாராடஹ் முடிவு தான். ஆமாம் லாட்ஜா ? இதுகளக்கா ? புரியலியே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 9. //cheena (சீனா) said...
  அன்பின் வை.கோ - ம்ம்ம் எதிர்பாராடஹ் முடிவு தான். ஆமாம் லாட்ஜா ? இதுகளக்கா ? புரியலியே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  அது ஒரு மிகப்பெரிய, பழைய கால லாட்ஜ். எங்கள் ஊர் “மாயவரம் லாட்ஜ்” போல.

  கார்கள் நிறைய வந்து போகவும், பார்க் செய்யவும் பெரிய கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். சரியானபடி காவலாளிகளும் கதவருகே இருக்க மாட்டார்கள்.

  ரொம்ப தூரம் உள்ளே போனதும் ஒரு மேனேஜர் உட்கார்ந்திருப்பார். அவர் தான் அங்கு எல்லாமே. லாட்ஜுக்குள் யார் வந்தாலும் போனாலும் அவர் கண்களுக்குத் தப்பவே முடியாது.

  இந்த ஜோடிகள், தன் லாட்ஜுக்குள் (திறந்த வீட்டுக்குள் ..... நுழைவதைப்போல) நுழைவதைப் பார்த்து விட்டார்.

  அந்த ஜோடிகளின் சொந்தக்காரர் யார் என்று தெரியுமாதலால், உடனே போன் செய்து எச்சரிக்கை கொடுத்துவிட்டார்.

  இப்போது தங்கள் குழப்பம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன், ஐயா.

  அன்பான வருகைக்கும், நல்லதொரு சந்தேகக் கேள்விக்கு நன்றி, ஐயா. vgk

  பதிலளிநீக்கு
 10. நாய்த் தம்பதிக்கும் தாய்ப்பாச்த்துடன் தாலி லைசன்ஸ் வேலி போட துடிக்கும் தம்பதிகள்!

  அருமையான கதை பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 11. 3. கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
  சென்று வழிபட வேண்டிய கோயில்:
  அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்/

  அருமையான் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 12. ஹாஹா... அண்ணா கதையில் எப்பவும் கடைசியில் டிவிஸ்ட் வைப்பதே உங்க தனிச்சிறப்பு....

  கதையில் பெற்றோர் தன் பிள்ளைகளை ஆண் நண்பர்களுடன் பழக விடுவதில்லை.... அதுபோல கதை அமைப்பை கொண்டு போய் இதில் லாட்ஜ் மேனேஜர் என்றெல்லாம் கதையை திருப்பி படிக்கும் வாசகர்களையும் திசைமாற்றி....உங்களுக்கு ஒரு ஷொட்டு அண்ணா...

  மனைவிக்கு புரியாத வண்ணம் தாலி என்றெல்லாம் பேசும்போது வாசகர்களும் புரியாம தவிக்கட்டும்னு விட்டு.... அதன்பின் லைசன்ஸ் தான் தாலி என்று புரியவைத்து கதையை அழகாய் நகர்த்தி சென்றவிதம் சூப்பர் அண்ணா....

  ரசிக்கவைத்த கதைப்பகிர்வு தந்தமைக்கு அன்பு வாழ்த்துகள் அண்ணா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி மஞ்சு, வாருங்கள். வணக்கம்.

   //ஹாஹா... அண்ணா கதையில் எப்பவும் கடைசியில் டிவிஸ்ட் வைப்பதே உங்க தனிச்சிறப்பு....//

   நான் வைத்த டிவிஸ்டைக் கண்டு சிரித்து மகிழ்வதே உங்களின் தனிச்சிறப்பு.

   //உங்களுக்கு ஒரு ஷொட்டு அண்ணா...//

   நல்ல வேளை ’குட்டு’ வைக்காமல் ’ஷொட்டு’ வைத்தீர்களே. சந்தோஷம்.

   அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நீக்கு
 13. கற்பனைக் குதிரை என்னை எங்கேயோ இழுத்துக்கொண்டு ஓடியதே? அத்தனையும் மண்ணாய்ப் போனதே?

  பதிலளிநீக்கு
 14. ஏன் சார் இப்படி? நான் ஒரு நிமிடம் முச்சு விடல. ஆனாலும் ரொம்ப எழுதுதிறிங்க. சரி நாய்க்கு தாலி இப்பதான் தெரியும், அது எப்படி ஜோடியா போச்சு. ஒனர் ஒருத்தரா? உரையாடல் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mageswari balachandran May 6, 2015 at 11:49 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஏன் சார் இப்படி? நான் ஒரு நிமிடம் மூச்சு விடல.//

   அடடா ! என்ன ஆச்சு? :)

   //ஆனாலும் ரொம்ப எழுதுறீங்க.//

   ஏதோ நம் வாசகர்களுக்கு நடுவில் கொஞ்சம் ஜாலியாக இருக்கட்டுமே என்றுதான். :)

   // சரி .... நாய்க்கு தாலி இப்பதான் தெரியும்,//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இது எங்கள் ஊர் MUNICIPAL CORPORATION சட்டதிட்டங்களில் ஒன்று. நாய் வளர்க்க DOG LICENCE வாங்க வேண்டும். ஒரு பெல்ட் போலத் தருவார்கள். அதை வளர்ப்பு நாயின் கழுத்தில் தாலிபோலக் கட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால் தெரு நாய் என நினைத்து பிடித்துக்கொண்டு சென்று விடுவார்கள்.

   //அது எப்படி ஜோடியா போச்சு. ஓனர் ஒருத்தரா? //

   அவைகள் இரண்டும் ஏதோவொரு ஜாலி மூடில் புறப்பட்டுப்போய் இருக்கலாம். :)

   ஓனர் இந்த உரையாடல் நிகழ்த்தும் தம்பதியினரே :)

   //உரையாடல் சூப்பர்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தொடர்ந்து தினமும் வாங்கோ.

   நீக்கு
 15. எப்படில்லாம் யோசிக்கமுடயுது உங்களால. எங்களுக்கு சுவையான கதை கிடைகுகுது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 20, 2015 at 10:14 AM
   //எப்படில்லாம் யோசிக்கமுடியுது உங்களால. எங்களுக்கு சுவையான கதை கிடைக்குது//

   மிகவும் சந்தோஷம். :)

   நீக்கு
 16. தாலி பெண்ணுக்கு வேலி

  சரி, தினசரியில செய்தி வருதே, கடற்கரையில நிச்சயம் ஆகி இன்னும் கல்யாணம் ஆகாத பெண்ணும், ஆணும் போலீசாரால் பிடிபட்டனர் என்று. அது மாதிரி தான் எதோ என்று நினைத்தேன்.

  நன்னா வெச்சேள் சஸ்பென்ஸ் போங்கோ.

  பதிலளிநீக்கு
 17. கடசி பாரா படிக்குர மட்டுக்கும் ஒரு பொண்ணு பையன பத்தி தான் சொல்லுதீகன்னு நெனச்சுபோட்டேன் அப்பாலிக்கதான பிரியுது நாய் கதன்னு. அம்மி கூட அட கெரகமே கடாசில நாயி பத்தியா சொல்லிருக்காகன்னு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru September 15, 2015 at 10:42 AM

   வாங்கோ முருகு .... வணக்கம்மா.

   //கடசி பாரா படிக்குர மட்டுக்கும் ஒரு பொண்ணு பையன பத்தி தான் சொல்லுதீகன்னு நெனச்சுபோட்டேன் அப்பாலிக்கதான பிரியுது நாய் கதன்னு. அம்மி கூட அட கெரகமே கடாசில நாயி பத்தியா சொல்லிருக்காகன்னு//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மிக்க மகிழ்ச்சி.

   தங்களின் அம்மிக்கும் மிக்க நன்றி ! :)

   நீக்கு
 18. ஹாஹா நல்லா கத சொல்லினிங்க. அந்த நாயி போட்டோ படம் நல்லாகீது. நாயெல்லா லாட்ஜுக்குள்ளார வுடுவாங்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 14, 2015 at 10:50 AM

   //ஹாஹா நல்லா கத சொல்லினிங்க. அந்த நாயி போட்டோ படம் நல்லாகீது.//

   மிக்க மகிழ்ச்சி.

   //நாயெல்லா லாட்ஜுக்குள்ளார வுடுவாங்களா//

   ’திறந்த வீட்டிலே நாய் நுழைந்தால் போல’ என ஒரு பழமொழி சொல்லுவாங்க.

   அது போல இவை திறந்திருந்த லாட்ஜ் க்குள்ளே ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டே, அங்குள்ள வாட்ச்மேனுக்குக் கடுக்காய் கொடுத்துவிட்டு, கார்கள் நுழைவது போல நுழைந்திருக்கும். அதை அந்த லாட்ஜ் முதலாளி கவனித்துவிட்டு, பிறகு தன் நண்பரின் நாய்கள் என்பதால், போன் செய்து அவைகளுக்கு உடனடியாகத் ‘தாலி’ கட்டவேண்டிய விஷயத்தை வலியுறுத்திச் சொல்லி இருப்பார். :)

   நீக்கு
 19. நாய் பத்திதான் கதை விட்டுருக்கீங்கன்னு கடைசி வரை புரியவே இல்லை. கடைசில படிச்சதும் சிரிப்புதான்.

  பதிலளிநீக்கு
 20. தாலி எப்பவுமே ஒரு வேலிதான்...அதி இல்லேன்ன இவிங்க காலி..

  பதிலளிநீக்கு
 21. ஹா ஹா இதுபோல ஷார்ட்... ஸ்டோரிஸ் படிச்சு புரிய ஈசியா இருக்குது.. கடைசி பாரா படிக்கும்வரை யூகம் பண்ணவே முடியலை. ரியலி.. இன்ட்ரஸ்டிங்க்...எங்க வீட்லயும் ரெண்டு நாய் வளர்க்கறோம்.. நாய்னு சொன்னாலே பசங்க கோவபடுவாங்க அதோட பெயர்கள் சொல்லிதான் பேசணும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco October 4, 2016 at 12:51 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //ஹா ஹா இதுபோல ஷார்ட்... ஸ்டோரிஸ் படிச்சு புரிய ஈசியா இருக்குது..//

   ஷார்ட் & ஸ்வீட் ஆக இருந்துச்சாஆஆஆஆ :)

   //கடைசி பாரா படிக்கும்வரை யூகம் பண்ணவே முடியலை. ரியலி.. இன்ட்ரஸ்டிங்க்...//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //எங்க வீட்லயும் ரெண்டு நாய் வளர்க்கறோம்.. நாய்னு சொன்னாலே பசங்க கோவபடுவாங்க அதோட பெயர்கள் சொல்லிதான் பேசணும்...//

   அச்சச்சோ .... ’கோவா’ப்பக்கம் போனால் நம் சொந்தக்காரங்க அங்கே இருக்காங்கன்னு மிகவும் ஆசையா என் மனதில் நினைச்சிருந்தேனே.

   நாய்கள் அதுவும் ஒன்றுக்கு இரண்டா வளர்க்கிறீங்களா!!

   நாய் என்றாலே எனக்கென்னமோ மிகவும் பயம் + அலர்ஜி. அதற்கு பல காரணங்கள் உள்ளன.

   அதனால் நான் கோவாவுக்கு வரவே மாட்டேன். கவலைப்படாமல் நிம்மதியா இருங்கோ.

   எனினும் இந்தப் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்க்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   அன்புடன் கிருஷ்ணா(ஜா)ஜி.

   நீக்கு
 22. நாய்க்கு பயப்படுறவங்களா சூப்பரா நாய் பத்தி கதை எழுதறிங்க..)))) பயப்படாதிங்க.. எங்கவீட்டுநாயு குழந்தைக போல உன்பானவைதான். கோவா வந்தா சந்தோஷம்லா படுவேன். ஏன் பயந்துகிடணும். சான்ஸ் கிடைச்சா கண்டிப்பா வாங்க.. நாயை ரூமுல அடைச்சு போடுறோம்..)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. shamaine bosco October 4, 2016 at 1:50 PM

   வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மீண்டும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

   //நாய்க்கு பயப்படுறவங்களா சூப்பரா நாய் பத்தி கதை எழுதறிங்க..))))//

   கதைகளில் நாய், நரி, சிங்கம், சிறுத்தை, புலி, எலி, குரங்கு, கரடி, மீன், மான், மயில், யானை என அனைத்தையும் சூப்பராகவும் தைர்யமாகவும் கொண்டுவரலாம்தான்.

   ஆனால் சுத்த ஐயராகிய என்னால், அவற்றுடன் எப்படி நட்பாக இருக்க முடியும்?

   //பயப்படாதிங்க.. எங்கவீட்டுநாயு குழந்தைக போல அ(உ?)ன்பானவைதான்.//

   ’குரைக்கிற நாய் கடிக்காது’ன்னு சொல்லுவாங்க. அது சொல்லுபவருக்கும் தெரியும், கேட்கும் எனக்கும் தெரியும்.

   ஆனால் அந்த நாய்க்குத் தெரிய வேண்டுமே ..... நாம் இவரைக் கடிக்கக்கூடாது என்று. :)

   //கோவா வந்தா சந்தோஷம்லா படுவேன். ஏன் பயந்துகிடணும். சான்ஸ் கிடைச்சா கண்டிப்பா வாங்க.. நாயை ரூமுல அடைச்சு போடுறோம்..)))//

   பாவம் அந்த வாயில்லா ஜீவன்கள் (குரைக்கவும் கடிக்கவும் மட்டுமே வாயுள்ள ஜீவன்கள்). எனக்காக, என் வருகைக்காக, அதுபோல அவற்றை ரூமுல போட்டு அடைக்க நான் விரும்பவில்லை.

   அதனால் நான் அங்கு வரப்போவது இல்லை. விட்டது விஜாரம் என நினைத்து நிம்மதியா இருங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் :)

   நீக்கு