About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, November 8, 2011

ப வ ழ ம்

                                 ப வ ழ ம்

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்”ஒரிஜினல் நற்பவழம், எங்க அண்ணன் வெளிநாட்டுக்குப் போய் வந்தபோது எனக்காகவே ஆசையாக வாங்கி வந்தது” என ராஜி வழக்கம் போல தன் பிறந்த வீட்டுப் பெருமையை, அக்கம் பக்கத்து வீட்டாரிடன் பீத்திக் கொண்டிருந்தாள்.


யார் போட்ட தூபமோ தெரியவில்லை. தலையணி மந்திரம் ஓதும் வேளையில், அந்தப் பவழத்தில் தங்கம் தோய்த்து, மாலையாக்கி கழுத்தில் போட்டுக் கொண்டால், தோஷங்கள் நிவர்த்தியாகி, ஒரு சில நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்குமாம், என்றாள்.


நானும் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு ஜோரிலோ அல்லது தூக்கக் கலக்கத்திலோ “அப்படியே செய்து விட்டால் போச்சு” என்று சொன்னதாக ஒரு ஸ்வப்ன ஞாபகம் மட்டுமே உள்ளது. மறுநாள் ஆபீஸ் சென்றதும் தான் கவனித்தேன். என் பர்ஸில் ஆயிரம் ரூபாய் குறைந்திருந்தது.


ராஜியைக் கூப்பிட்டுக் கேட்டதற்கு, ”நீங்கள் தான் நேத்து ராத்திரி ஆசையாகச் சொன்னேளே! பவழ மாலைக்கு ஆர்டர் கொடுத்து அட்வான்ஸ் கொடுத்து விட்டேன்” என்றாள். இந்த விஷயத்தில் மட்டும், அவளின் சுறுசுறுப்பு என்னை மிகவும் பிரமிக்கச் செய்தது. 


ஒரு வாரம் ஆனது, நானும் அந்த விஷயத்தை அத்தோடு மறந்து விட்டேன்.


“பவழ மாலை ரெடியாகி விட்டதாம்; கடைக்காரர் போன் செய்து சொன்னார்; ஆபீஸ் விட்டு வரும் போது மறக்காமல் வாங்கி வந்துடுங்க; என் அண்ணாவும் மன்னியும் (அண்ணனும் அண்ணியும்) இன்று இரவு நம் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருக்காங்க; அவர்கள் வந்ததும் அப்படியே அதையும் கழுத்தில் போட்டுக்காட்டி விடலாம்” என்று அன்புக்கட்டளை இட்டாள், என் அருமை ராஜி.


கடைக்குப் போனபின் தான் எனக்குத் தெரியும் - பவழத்தின் மேல் மூனே முக்கால் பவுன் தங்கம் போடப்பட்டுள்ளது என்ற விஷயம். அட்வான்ஸ் பணம் ஆயிரம் போக, தங்கம் விலை, கூலி, சேதாரம், வரி, சேவை வரி அது இது என்று சுளையாக எண்பத்து ஆறாயிரம் ரூபாய் தரணும் என்றார் அந்த நகைக் கடைக்காரர். நல்பவழம் வாங்கி வந்த மச்சானை மனதிற்குள் திட்டித்தீர்த்தேன். 


ரொக்கக் கையிருப்பு, ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என்ற எல்லாவற்றின் மூலமும் நகைக்கடைக்குத் தர வேண்டிய பணத்தைக் கட்டி விட்டு, ஒருவழியாக பவழ மாலையுடன் வீட்டுக்கு விரைந்தேன்.


ஆளுயரக் கண்ணாடி முன் நின்று பவழ மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டு, இப்படியும் அப்படியும் திரும்பித் திரும்பி, தன் உடலை ஒரு ஆட்டு ஆட்டி விட்டு, பிறகு என் தோளில் தன் தோளால் ஒரு இடி இடித்துவிட்டு, அக்கம்பக்கத்தவரிடம் அலட்டிக் கொள்ளப் புறப்பட்டுச் சென்றாள் என்னவள்.


ஆபீஸ் விட்டு வந்ததும், வழக்கமாக எனக்குக் கிடைக்கும் டிபன் காஃபி கிடைக்காத கடுப்பை விட, அவள் மற்றவர்களிடம் போய், இந்தப் பவழ மாலை என் அண்ணன் வெளி நாட்டிலிருந்து, எனக்காகவே ஆசை ஆசையாக வாங்கி வந்தது என்று பெருமையாகச் சொன்னது, சுளையாக எண்பத்து ஆறாயிரம் ரூபாய் கொடுத்த எனக்கு மிகுந்த கடுப்பை ஏற்படுத்தியது.


ooooooooo
முற்றும்
ooooooooo

8. ”பூசம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்: 
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில் 
[அபிவிருத்தி நாயகி அம்மன்]

இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து 
ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை 
சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் 
விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. 
சென்றால் கோயிலை அடையலாம். 

புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி 
வழியாகவும் விளங்குளத்தை அடைய 
வழியிருக்கிறது. 
08/27

38 comments:

 1. எனக்குக் கிடைக்கும் டிபன் காஃபி கிடைக்காத கடுப்பை விட, அவள் மற்றவர்களிடம் போய், இந்தப் பவழ மாலை என் அண்ணன் வெளி நாட்டிலிருந்து, எனக்காகவே ஆசை ஆசையாக வாங்கி வந்தது என்று பெருமையாகச் சொன்னது, சுளையாக எண்பத்து ஆறாயிரம் ரூபாய் கொடுத்த எனக்கு மிகுந்த கடுப்பை ஏற்படுத்தியது.
  ////இப்படியுமா ஒரு பெண் - மனைவி இருப்பாள்?????!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் விஜிகே சார்...

  ReplyDelete
 3. மனித மனங்களின் வினோதத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா!

  ReplyDelete
 4. ரொக்கக் கையிருப்பு, ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என்ற எல்லாவற்றின் மூலமும் நகைக்கடைக்குத் தர வேண்டிய பணத்தைக் கட்டி விட்டு, ஒருவழியாக பவழ மாலையுடன் வீட்டுக்கு விரைந்தேன்.

  நல்பவழம் இப்படி விளையாடிடுச்சே.

  ReplyDelete
 5. பேர் வாங்கவும் கொடுப்பினை இருக்க வேண்டுமே

  ReplyDelete
 6. தமிழ்மணம் நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. பவழம்தான் மூல காரணம் இல்லையோ
  பட்டுத்தான் ஆகணும்
  என்னசெய்வது உபகார சத்ருவாக இப்படி எல்லோருக்கும்
  சிலர் அமைந்த்விடுகிறார்கள்
  அருமையான பதிவு
  த.ம 3

  ReplyDelete
 8. இந்த காலத்தில் இப்படியும் ஒரு அப்பிராணி கணவனா?

  ReplyDelete
 9. இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... குத்துங்க எஜமான் குத்துங்க...

  ReplyDelete
 10. இதுதான் உலகம்?

  ReplyDelete
 11. உண்மைதானே சார், அண்ணன் வாங்கிக் கொடுத்ததைத்தானே சொல்ல முடியும். கணவன் பணம் தன் பணம் அல்லவா?

  ReplyDelete
 12. தித்திக்கும் தேனெடுத்து- வை கோ
  தினந்தோறும் கதைவடித்து
  எத்திக்கும் சென்றடைய-நீர்
  எழுதுகின்றீர் புகழ்சூழ்க!
  நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. எனக்கு இன்னமும் புரியாத விஷயம் இதுதான் ஏன் சிலருக்கு நகை சேப்பதிலும் அதை ஊரெல்லாம் விளம்பரபடுத்தி காட்டுவதிலும் ஆசையென்று .அந்த கணவன் அப்பாவி கணவன் தான் .

  ReplyDelete
 14. ரசித்தேன். "என் அண்ணா வாங்கிய பவழம், என் கணவர் பவுனில் செய்து கொடுத்தார் என்று பக்குவமாக சொன்னால் இன்னொரு பவழ மாலை அல்லது நவரத்தின கூட பண்ணிக் கொள்ளலாம்"

  :))))))))))

  ReplyDelete
 15. ஆபீஸ் விட்டு வந்ததும், வழக்கமாக எனக்குக் கிடைக்கும் டிபன் காஃபி கிடைக்காத கடுப்பை விட, அவள் மற்றவர்களிடம் போய், இந்தப் பவழ மாலை என் அண்ணன் வெளி நாட்டிலிருந்து, எனக்காகவே ஆசை ஆசையாக வாங்கி வந்தது என்று பெருமையாகச் சொன்னது, சுளையாக எண்பத்து ஆறாயிரம் ரூபாய் கொடுத்த எனக்கு மிகுந்த கடுப்பை ஏற்படுத்தியது.

  பவழம் போல் சிவந்து கடுப்பேறிய முகம் ! பாவம் தான் !

  பக்குவம் போதாத பதி விரதை !

  ReplyDelete
 16. ”பூசம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய கோயில்: அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
  [அபிவிருத்தி நாயகி அம்மன்]

  http://jaghamani.blogspot.com/2012/04/blog-post_20.html

  அட்சயதிருதியை அன்று வழிபடவேண்டிய அற்புதத் திருத்தலம்..

  ReplyDelete
 17. இராஜராஜேஸ்வரி said...
  ஆபீஸ் விட்டு வந்ததும், வழக்கமாக எனக்குக் கிடைக்கும் டிபன் காஃபி கிடைக்காத கடுப்பை விட, அவள் மற்றவர்களிடம் போய், இந்தப் பவழ மாலை என் அண்ணன் வெளி நாட்டிலிருந்து, எனக்காகவே ஆசை ஆசையாக வாங்கி வந்தது என்று பெருமையாகச் சொன்னது, சுளையாக எண்பத்து ஆறாயிரம் ரூபாய் கொடுத்த எனக்கு மிகுந்த கடுப்பை ஏற்படுத்தியது.

  //பவழம் போல் சிவந்து கடுப்பேறிய முகம் ! பாவம் தான் ! //

  சிரித்தேன்.

  //பக்குவம் போதாத பதிவிரதை !//

  எல்லோருமே உங்களைப் போலவே பக்குவமாக இருந்து விட்டால், அப்புறம், உலகில் சமத்துக்கும் அசடுக்கும் வித்யாசம் இல்லாமல் போய் விடுமே! ;)))))

  அன்பான வருகை + அழகான கருத்துகளுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 18. இராஜராஜேஸ்வரி said...
  ”பூசம்” நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய கோயில்: அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
  [அபிவிருத்தி நாயகி அம்மன்]

  http://jaghamani.blogspot.com/2012/04/blog-post_20.html

  அட்சயதிருதியை அன்று வழிபடவேண்டிய அற்புதத் திருத்தலம்..//

  ஆஹா....

  அபிவிருத்தி நாயகி அம்மனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஒரு தனி லிங்க் கொடுத்து அசத்தியுள்ளது அருமையோ அருமை.

  நன்றி.

  ReplyDelete
 19. நல்ல கருத்துள்ள சிறுகதை... நன்றி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Mr YAYATHIN Sir.

   Delete
 20. // எனக்கு இன்னமும் புரியாத விஷயம் இதுதான் ஏன் சிலருக்கு நகை சேப்பதிலும் அதை ஊரெல்லாம் விளம்பரபடுத்தி காட்டுவதிலும் ஆசையென்று //

  நானும் சகோதரி angelin அஞ்சு சொல்வதையே சொல்கின்றேன்.
  எப்போது எங்கள் மாதர்குலத்திற்கு இந்த நகை ஆசை விட்டொழியும்???
  அப்போதுதான் குடும்பங்கள் உருப்படும்.

  நகையை (தங்கம், வெள்ளி, வைர வைடூரியங்கள், இதுபோல் இன்னும்...) அடியோடு வெறுப்பவள் நான்.
  புன்னகையை அல்ல:)))

  ReplyDelete
  Replies
  1. அன்பின் இளமதி,

   வாங்கோ வாங்கோ, வணக்கம்.
   எப்படி இருக்கீங்க! நலம் தானே!!

   //நகையை (தங்கம், வெள்ளி, வைர வைடூரியங்கள், இதுபோல் இன்னும்...) அடியோடு வெறுப்பவள் நான்.//

   நீங்கள் ஒரு சராசரிப்பெண் தானா என்ற சந்தேகம் வருகிறது.

   முறைக்காதீர்கள். சந்தேகம் எனக்கல்ல. ஒட்டுமொத்த பெண்கள் சமுதாயத்திற்கு.

   என்னவளும் உங்களைப்போலவே தான்.

   ஒரு நாள் ஆசையாக வைர மூக்குத்தியும், வைரத்தோடும் வாங்கித்தருகிறேன் என்று புறப்பட்டேனே.

   ஆனால் தடுத்து விட்டாளே. அதன் பிறகும் [இந்த வைரத்தோடு விஷயத்தைக்] காதில் போட்டுக்கொண்டால் தானே? ;)))))

   //புன்னகையை அல்ல:)))//

   இந்தப்புன்னகை என்ன விலை .........
   என் இதயம் சொன்ன விலை ..........

   பாடல் தான் என் நினைவுக்கு வருகிறது.

   புன்னகை ஒன்றே எனக்குப் போதும் ... கதை படித்துக் கருத்து அளித்துள்ளதற்கு ... அது விலை மதிப்பற்றது.

   பிரியமுள்ள,
   VGK

   Delete
 21. எங்கியோ நேரில பாத்தா மாதிரி டவுட்டு. இந்த மாதிரி லேடீஸ் இருக்காங்கப்பா!

  பர்ஸ்ட் க்லாஸ் கதை.

  ReplyDelete
  Replies
  1. Pattu Raj October 4, 2012 1:57 AM
   //எங்கியோ நேரில பாத்தா மாதிரி டவுட்டு. இந்த மாதிரி லேடீஸ் இருக்காங்கப்பா!//

   ஆஹா! நீங்க நல்லாப்புரிந்து கொண்டு சொல்லிட்டீங்க, பட்டு.

   //பர்ஸ்ட் க்லாஸ் கதை.//

   என் அன்புப் ’பட்டு’வின் ’லட்டு’ போன்ற வார்த்தைகள்.
   இனிப்போ இனிப்பு ... சுவையோ சுவை. ;))))))

   நன்றியோ நன்றிகள்.

   பிரியமுள்ள
   கோபு

   Delete
 22. நல்ல காமெடி கதை...ஆனால் நான் அணிந்திருக்கும் நகை தங்கம் இல்லை...இதனால் என் கணவருக்கு செலவும் இல்லை..!!

  ReplyDelete
  Replies
  1. Radha Balu March 4, 2014 at 1:31 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நல்ல காமெடி கதை...//

   மிகவும் சந்தோஷம். நன்றி.

   //ஆனால் நான் அணிந்திருக்கும் நகை தங்கம் இல்லை...//

   நானும் தங்கம் என்று சொல்லவில்லை. எனினும் அது பார்க்க எனக்கு மிகவும் ஜோராக ரஸிக்கும்படியாக இருந்தது. அதில் உள்ள மாதுளை முத்துக்கள் போன்ற சிவப்புக்கற்கள், ஜொலித்தன. அதனால் எனக்கு அது மிகவும் பிடித்துப்போனது. பாராட்டினேன். அவ்வளவு தான்.

   //இதனால் என் கணவருக்கு செலவும் இல்லை..!!//

   ஆஹா, உங்காத்து மாமா மிகவும் அதிர்ஷட்க்கார மனுஷ்யர் தான் ;)

   அன்புடன் கோபு [VGK]

   Delete
 23. சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்கால் பணம் என்ற கதையாக ஆகிப்போச்சே? அப்படியும் நல்ல பேர் கிடைக்கலியே, பரிதாபம்.

  ReplyDelete
 24. பெண்களுகுகே பிறந்த வீட்டு ளாசம் அதிகம் தானு. ஆனாலும் இப்படி புருஷனை விட்டுக்கொடுக்கலாமோ?

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 20, 2015 at 10:41 AM

   //பெண்களுக்கே பிறந்த வீட்டு பாசம் அதிகம் தான். ஆனாலும் இப்படி புருஷனை விட்டுக்கொடுக்கலாமோ?//

   அதானே ! பாருங்கோ .... அநியாயமாக உள்ளது. :)

   Delete
 25. அது தான் பெண்ணின் குணம் போலும். ஆனாலும் பாருங்கள் காபி, டிபன் கூட வேண்டாம், தோளில் ஒரு வெட்டுவெட்டினாளே,நீங்க எங்க வாங்கி கொடுத்தீங்க. என் அண்ணன் வாங்கியது என்பது போல் இருக்குமோ,இது அதைவிட கொடுமையடா சாமி. சூப்பர் சார்.

  ReplyDelete
  Replies
  1. mageswari balachandran May 23, 2015 at 7:21 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அது தான் பெண்ணின் குணம் போலும். ஆனாலும் பாருங்கள் காபி, டிபன் கூட வேண்டாம், தோளில் ஒரு வெட்டுவெட்டினாளே, நீங்க எங்க வாங்கி கொடுத்தீங்க. என் அண்ணன் வாங்கியது என்பது போல் இருக்குமோ, இது அதைவிட கொடுமையடா சாமி. சூப்பர் சார்.//

   :) தங்களின் அன்பான வருகைக்கும், ரசித்து எழுதியுள்ள அருமையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. :)

   Delete
 26. ஆஹா.. அருமை.. அக்கம்பக்கத்தில் அப்படி சொன்னாலும் அண்ணா மன்னியிடம் பெருமையாக எங்காத்துக்காரர் செய்துபோட்டதாக்கும் என்று பெருமையாக சொன்னாலும் சொல்வார். பெண்மனம் புதிர் நிறைந்ததல்லவா? :)

  ReplyDelete
 27. இருக்காதே பின்னே.

  சுண்டைக்காய் முக்கா பணம், சுமை கூலி முக்கால் பணம்ங்கற மாதிரி இல்ல இருக்கு.

  இப்படியும் சில பெண்கள்.

  ReplyDelete
 28. நகை மோகம் பெண்களை விடுவதில்லை போல!

  ReplyDelete
 29. பொறந்தவூட்டு பாசம் இருக்க வேண்டியதுதா அதுக்காவ புருசன விட்டுகொடித்திடலாமா. காபி டிபனு கூட கொடுக்காம இருந்துகிடலாமா.

  ReplyDelete
 30. பிறந்த வீட்டு பெருமை பேசாத பெண்களும் இருப்பார்களா. இவர்களிடம் மாட்டிய கணவர்தான் இஞ்சி தின்ன குரங்கு போல ஆகிடுவாங்க.

  ReplyDelete
 31. அண்ணன் எப்பவும் தங்கச்சிக்கு ஒசத்திதான்...அதோட எவ்வளவுதான் தங்கம் சேந்தாலும் அது பவழ மாலைதானே..??

  ReplyDelete
 32. பாவம்! பெயர் வாங்கவும் வரம் வாங்கி வர வேண்டும்!

  ReplyDelete