About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, November 8, 2011

முனியம்மா
முனியம்மா

[ சிறுகதை ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


மூன்று நாட்களாக முனியம்மா வராததால் வீடு சுத்தமின்றி அலங்கோலமாகத் திகழ்ந்தது.கடைசியாக அவளிடம் சற்று கடுமையாகப் பேசிவிட்டது கமலத்திற்கு நினைவுக்கு வந்தது.

“ஒரு மாசமாவது முழுச்சம்பளமாக வாங்காமல் இப்படி வாராவாரம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்யாதே; மாதக்கடைசியும் அதுவுமா ஏது பணம்? கேஸ் சிலிண்டர் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரம் வேறு; அது வந்தால் பணத்துக்கு என்ன செய்வது என்று புரியாமல் நானே சங்கடத்தில் உள்ளேன்” என்று ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லி அன்று அவளுக்கு பணம் ஏதும் தராமல் அனுப்பி விட்டோம் என்ற கோபமாக இருக்குமோ அவளுக்கு என நினைக்கையில், முனியம்மாவும் உள்ளே வந்து விட்டாள்.

முனியம்மாவைக் கண்டதும் கமலத்திற்கு, விடாது பெய்த மழை நின்றது போல நிம்மதியாக இருந்தது.

”வா, முனியம்மா; முதலில் துணிகளையெல்லாம் தோய்த்துப் போட்டுவிடு. மழை காலமாக இருப்பதால் காயவே இரண்டு நாள் ஆகும். அதன் பிறகு இஸ்திரி வேறு போடணும். நீ மூணு நாளா வராமல், துணிமணியெல்லாம் ஜாஸ்தியாச் சேர்ந்து போயிடுத்து. அதன் பிறகு பத்துப்பாத்திரமெல்லாம் தேய்த்துக்கொடுத்துட்டு, பிறகு வீட்டைக்கூட்டி தண்ணீர் ஊற்றி அலம்பி விட்டு, துடைத்துக்கொடுத்துவிடு” என்று வரிசையாக அடுக்கினாள் கமலம்.

அழுக்குத்துணிகளை அமைதியாக அள்ளிக்கொண்டு பாத்ரூம் சென்ற முனியம்மா, அடுத்த இரண்டே நிமிடங்களில், கமலத்திடம் திரும்பி வந்தாள். அய்யாவின் அந்த சிகப்பு சட்டைப் பையிலிருந்த சில ரூபாய் நோட்டுக்களையும், கடையில் சாமான் ஏதோ வாங்கிய பில்லையும் கமலத்திடம் பத்திரமாக ஒப்படைத்து விட்டு, தன் வேலைகளைப் பார்க்க பாத் ரூம் சென்ற முனியம்மாவை நன்றியுடன் நோக்கினாள் கமலம்.

எண்ணிப்பார்த்ததில் ரூபாய் 610 பணமும், ரூபாய் 390 க்கு வி.எஸ்.ஓ.பி. விஸ்கி பாட்டில் வாங்கிய பில்லும் இருந்தன. தன் கணவன் வரவர இந்தப் பாழாய்ப்போன குடிப்பழக்கத்தை நிறுத்தாமலும், காசு பணத்தில் இப்படிப் பொறுப்பில்லாமலும் இருப்பதை எண்ணி கவலைப்பட்டாள், கமலம்.

வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு புறப்பட்ட முனியம்மாவிடம், சூடான சுவையான டிகிரி காஃபியை நீட்டியபடி, ”செலவுக்குப் பணம் ஏதும் வேணுமா முனியம்மா?” என்று அதிசயமாகக் கேட்டாள் கமலம்.

”இன்னிக்கு எதுவும் வேண்டாம்மா; மூணு நாளா தொடர்ச்சியாப்பெய்த மழை வெள்ளத்துல எங்க பகுதி குடிசைகள் எல்லாமே நாசமாப்போச்சும்மா; எங்களையெல்லாம் ஒரு இஸ்கூலிலே தங்கவெச்சு உணவுப் பொட்டலம் எல்லாம் போட்டாங்கம்மா; 

இன்னிக்கு காலையிலேதான் கலெக்டர் அய்யாவும், கட்சிக்காரங்களும் வந்து, அரிசி, கிருஷ்ணாயில், புடவை வேட்டியோட, சுளையா இரண்டாயிரம் ரூபாய் பணமும் கொடுத்துட்டுப் போனாங்கம்மா; 

அதையெல்லாம் பத்திரமா எங்க வெச்சுக் காப்பாத்தறதுண்ணு தெரியாம, அந்த மாடி வீட்டு மங்களத்தம்மா வீட்டுல தான், ஒரு ஓரமா வெச்சிருக்கோம்;  


மேற்கொண்டு மழை ஏதும் பெய்யாமல் வெள்ளம் வடிஞ்சு, நாங்க புதுசா குடிசையைப் போட்டாத்தான் கொஞ்சம் குந்தவாவது இடம் கிடைச்சு நிம்மதியா இருக்கும்” என்றாள் முனியம்மா.  

நேர்மையின் மறு உருவமாகத் தோன்றிய இந்த முனியம்மா, தன்னிடம் அவசரத் தேவை என்று அன்று பணம் கேட்டபோது, அதுவும் அவள் உழைத்த பணத்தின் ஒரு சிறு பகுதியை முன்பணமாகக் கேட்டபோது,  ஆபத்துக்கு உதவாத பாவியாகி விட்டோமே என எண்ணி மிகவும் வெட்கப்பட்டாள், கமலம்.

தன் கணவனிடம் எப்படியாவது பேசி, முனியம்மா புதிதாக எழுப்பப்போகும், குடிசைக்கான முழுச்செலவையும் நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும், என முடிவு செய்தாள், கமலம்.

-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-

5.மிருக சீரிஷம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் [மஹாலிங்கேஸ்வரர்] 
ஹரியும் சிவனும் சேர்ந்து தோன்றும் கோலம்] இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் 
வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. 
இந்த ஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் 
கோயிலை அடையலாம்
05/27

36 comments:

 1. தனக்கென்று ஒரு பாதிப்பு வரும்போது தான் அடுத்தவரின் துன்பங்கள் முழுமையாக புரியும். நெகிழ்வான சிறுகதை!

  ReplyDelete
 2. கதை வழக்கம் போல் அருமை!

  ReplyDelete
 3. அருமையான கதை .. முடிவு அருமை

  ReplyDelete
 4. அடிப்படை உணர்வான மனிதாபிமானத்தின் அவசியம் உணர்த்தும் கதை சிறந்த நடையுடன்

  ReplyDelete
 5. அன்பின் வை.கோ - சிறு கதை -நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 6. வழக்கம்போலவே நெறியிலிருந்து சிறிதும் பிறழாத நல்ல சிறுகதை. நன்றி சார்

  ReplyDelete
 7. வறுமையிலும் செம்மை எனப்து இதுதானே
  அருமையான சிறுகதை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 3

  ReplyDelete
 8. I agree that poor people tend to be honest. This story confirms this.

  ReplyDelete
 9. அருமையான கதை கதையின் முடிவு சிறப்பாக இருக்கின்றது

  ReplyDelete
 10. ஆரம்பமே, எல்லா குடும்ப தலைவிக்கும் ஏற்படும் மன ஓட்டத்துடன் தொடங்கிய விதம் அருமை அய்யா.

  சிறப்பான க(வி)தை

  ReplyDelete
 11. தன் கணவனிடம் எப்படியாவது பேசி, முனியம்மா புதிதாக எழுப்பப்போகும், குடிசைக்கான முழுச்செலவையும் நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும், என முடிவு செய்தாள், கமலம்.///மனோ அக்கா சொவதைப்போல் தனக்கென்று ஒரு பாதிப்பு நேரும்பொழுதுதான் மற்றவர்களின் துன்பம் முழுமையாக புரியும்.நல்ல சிறுகதை ஐயா.

  ReplyDelete
 12. நல்ல குணங்களை படிப்பினையாக கதைகள் மூலமே சொல்லும்பாங்கு அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. நல்ல கதை. இப்பவாது அப்பெண்ணின் கஷ்டம் புரிந்ததே அவருக்கு...

  ReplyDelete
 14. வறுமையில் செம்மை.
  எல்லோரும் புரிந்து கொண்டால் நன்மைதான். அருமை.

  ReplyDelete
 15. படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருந்தது .வறுமையிலும் நேர்மை .

  ReplyDelete
 16. அருமை! அருமை!

  வை கோ விற்குப்
  பெருமை! பெருமை

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. மனிதாபிமானம் அழகாய் வலியுறுத்தப் பட்டிருந்தது.

  ReplyDelete
 18. தன் கணவனிடம் எப்படியாவது பேசி, முனியம்மா புதிதாக எழுப்பப்போகும், குடிசைக்கான முழுச்செலவையும் நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும், என முடிவு செய்தாள், கமலம்.//

  நல்ல முடிவு கதையில்.
  கதை அருமை.

  ReplyDelete
 19. ஒரு குடும்பத்தலைவியின் மன உணர்வுகளை அருமையா படம் பிடிச்சுக் காட்டியிருக்கீங்க..

  அருமையான கதை.

  ReplyDelete
 20. நல்ல கதை. stepping into another's shoes என்பது பல நேரம் கை வராத கலை.

  ReplyDelete
 21. முனியம்மாவைக் கண்டதும் கமலத்திற்கு, விடாது பெய்த மழை நின்றது போல நிம்மதியாக இருந்தது

  முனியம்மா விஜயம் மூன்று நாளுக்குப் பிறகு ! நிம்மதிப் பெருமூச்சு !

  ReplyDelete
 22. .மிருக சீரிஷம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
  சென்று வழிபட வேண்டிய கோயில்:அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் [மஹாலிங்கேஸ்வரர்]
  ஹரியும் சிவனும் சேர்ந்து தோன்றும் கோலம்]

  சீரிய சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 23. இராஜராஜேஸ்வரி said...
  முனியம்மாவைக் கண்டதும் கமலத்திற்கு, விடாது பெய்த மழை நின்றது போல நிம்மதியாக இருந்தது

  முனியம்மா விஜயம் மூன்று நாளுக்குப் பிறகு ! நிம்மதிப் பெருமூச்சு !//

  கமலத்திற்கு மட்டுமல்ல, இரண்டு கமலங்களுடன் இன்று வருகை தந்துள்ள உங்களின் விஜயம் எனக்கும் [198 நாட்களுக்குப் பிறகு] நிம்மதிப் பெருமூச்சே.

  நன்றி! நன்றியோ நன்றி!! vgk

  ReplyDelete
 24. இராஜராஜேஸ்வரி said...
  .மிருக சீரிஷம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
  சென்று வழிபட வேண்டிய கோயில்:அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் [மஹாலிங்கேஸ்வரர்]
  ஹரியும் சிவனும் சேர்ந்து தோன்றும் கோலம்]

  சீரிய சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

  ரொம்ப சந்தோஷம், மேடம். நன்றி.

  ReplyDelete
 25. பெண் புத்தி பின் புத்தின்னு சொல்றது இதானோ..கமலம் கதாபாத்திரத்திற்கு இது சரியா இருக்கு..முனியம்மா மாதிரி இன்னிக்கு வேலைகாரங்க கிடைக்கிறது அபூர்வம்ண்ணே..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அன்புச் சகோதரியே!

   தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.

   என் மனமார்ந்த நன்றிகள் Mrs. ராதா ராணி Madam.

   அன்புடன்,
   VGK

   Delete
 26. உருவத்தை வைத்து மட்டும் ஒருவரை எடை போடக்கூடாது என்பது எவ்வளவு உண்மை பாருங்கள்.

  ReplyDelete
 27. வேலைக்காரன் வேலைக்காரிகளை நம்புவதற்கு இதுபோல ஏதானும் சம்பவங்கள் நடந்தால்தானு நம்பிக்கை வரும் போல???

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 20, 2015 at 10:23 AM

   //வேலைக்காரன் வேலைக்காரிகளை நம்புவதற்கு இதுபோல ஏதேனும் சம்பவங்கள் நடந்தால்தான் நம்பிக்கை வரும் போல???//

   ஆமாம். கரெக்டு .... நீங்க சொல்வது போலத்தான்.

   Delete
 28. வேலைக்காரி, குப்பைக்காரி இவங்க எல்லாம் ஒழுங்கா வேலைக்கு வராட்டா நம்ப பாடு திண்டாட்டம்தான். நல்ல மணவன், நல்ல மனைவி அமைவது போல் நல்ல வேலைக்காரி அமைவதும் ஒரு வரம் தான்.

  அதே போல் நல்ல வேலைக்காரியை புரிந்து கொள்ளும் எசமானியும் வேண்டும்.

  ReplyDelete
 29. வேலக்காரங்க பொளப்பே கஸ்டமான பொளப்புதா. வூட்ல ஏதாச்சும் பொருட்க காணாம போயிடிச்சினா மொதக வேலக்காரங்க மேலதா சம்சய படுவாங்க போல.தொவக்க தணிலசட்ட பாக்கட்டுலந்த பணத்த அவ நேர்மயா கொடுத்ததும் நம்பிக்க வந்திடுமோ.

  ReplyDelete
 30. பல வருடங்களாக நம் வீட்டில வேலை செய்யும் வேலைக்காரிகள் மேல் கூட நம்பிக்கை வருவதில்லை. இதுபோல துவைக்க போட்ட சட்டைப்பையில் இருந்த பணத்தை நேர்மையாக கொடுக்கும்போதுதான் நம்பிக்கை வரும்போல.

  ReplyDelete
 31. நேர்மை....வணங்க வைக்கும்...சிந்திக்க வைக்கும்...

  ReplyDelete