என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 11 நவம்பர், 2011

கார் கடத்தல்
கார் கடத்தல்

[ அனுபவம் ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை.  அந்த ஜன சந்தடி மிக்க பஜாரில் என்னுடைய தக்காளி நிற மாருதி கார், வேறு யாரோ ஒருவரால் ஓட்டிச் செல்லப்படுகிறது. வண்டி நம்பர் என்னுடையதே தான். 

என் வீட்டு வாசலில் கார் நிறுத்த போதிய இடம் இல்லாததால் வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தள்ளியுள்ள அடுக்குமாடி வளாகம் ஒன்றின் அண்டர்கிரெளண்ட் பகுதியில்,  என் காரை நிறுத்த வாடகைக்கு இடம் பிடித்துள்ளேன். 


காரைப் பார்க் செய்து விட்டு, அங்குள்ள என் டூ வீலரில் வீடு திரும்புவது வழக்கம். என் காரோ அல்லது டூ வீலரோ எப்போதும் அந்த அடுக்குமாடியின் சுரங்கப்பகுதியில் நின்று கொண்டிருக்கும். 


வாட்ச்மேன் பாதுகாப்பில் தான் அனைத்து வண்டிகளுமே நிறுத்தப்பட்டிருக்கும். காரின் சாவி என்னிடம் என் பையில் பத்திரமாகவே இருக்கும் போது எப்படி என் கார் கடத்தப்பட்டிருக்கும் என்று எனக்கு மிகவும் வியப்பளித்தது.

அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுக்கலாமா என்று ஒரு நிமிடம் யோசித்தேன். அங்கு சென்று புகார் மனு எழுதி அவர்களிடம் சேர்ப்பித்து அவர்களின் பூர்வாங்க விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடித்து, அவர்கள் என் புகாரைப் பதிவு செய்து முடிப்பதற்குள் பொழுதே முடிந்துவிடும். 


அதன் பிறகு அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க எப்படியும் நீண்ட நேரமாகிவிடும்.  தாமதம் செய்யச்செய்ய வண்டி வெளியூருக்கு எங்காவது கடத்தப்படக்கூடும். 


நம்பர் ப்ளேட் கழட்டப்படக்கூடும். அக்கக்காக அனைத்து பாகங்களும் பிரித்துப் போடப்பட்டு உதிரி பாகங்களாகவே விற்பனை செய்துவிடக்கூடும். முடிவாக என் கைவசம் அப்போது இருந்த டீ.வி.எஸ் 50 யிலேயே, கண் எதிரே கடத்தப்படும் என் காரைப் பின்தொடர்ந்து துரத்தலானேன்.

இங்குமங்கும் பஜாரில் சுற்றிய கார் கடைசியில் நேராக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் அடிப்பகுதியின் கீழ்த்தளத்திற்குள் நுழைந்து நான் வழக்கமாகக் கார் பார்க் செய்து நிறுத்தும் ஸ்லாட்டில் போய் நின்றது.


ஓட்டிவந்த காரிலிருந்து இறங்கிய பெரியவரிடம் “எத்தனை நாளாக இந்தத்திருட்டுப் பழக்கம் நடக்கிறது” என்று பெரியதாகச் சப்தம் போட்டேன். என்னைப் பார்த்து முறைத்த அவர் “நீ யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் மிகச் சாதாரணமாக. 


அவர் கையிலிருந்த கார் சாவியைப் பிடுங்கிக் கொண்டேன். நான் போட்ட சப்தத்தில் அங்கு கும்பல் கூடிவிட்டது. எங்கோ மறைவாக நின்று தம்மடித்துக் கொண்டிருந்த வாட்ச்மேனும், அலறிப்பிடித்து ஓடி வந்து விட்டார்.


பிறகு நடந்த பிரச்சனையைத் தீர விசாரித்ததில் தான் விஷயமே தெரிய வந்தது. என் வண்டியை ஓட்டி வந்த அந்தப்பெரியவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒருவரின் மாமனாராம். வெளியூரிலிருந்து இன்று தான் முதன் முதலாக இந்த ஊருக்கே வந்துள்ளாராம்.


அவர்கள் வீட்டிலும் ஒரு தக்காளி நிற மாருதிக்கார் வைத்துள்ளார்களாம். அவர் தெரியாமல் தவறுதலாக அவர்கள் கார் என்று நினைத்து என் காரைத் திறந்துள்ளாராம். 


அந்த அவர்கள் காரின் சாவியை என் காரில் நுழைத்ததும் எப்படி கதவு திறந்து கொண்டது? எப்படி எஞ்சின் ஸ்டார்ட் ஆனது? என்பது மட்டும் தான் எங்கள் இருவருக்குமே இதுவரைப் புரியாத ஒரு புதிராக உள்ளது.  


சாவியைப் போட்டு, தான் திறக்கும் போதே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்ததாகவும், பிறகு போட்டுக் குடைந்ததில் ஒருவழியாக திறந்து கொண்டதாகவும் அந்தப்பெரியவரும் ஒத்துக்கொண்டார்.


நடந்த செயலுக்கு மிகவும் வெட்கப்பட்ட அந்தப் பெரியவர், என்னிடம் வருத்தம் தெரிவித்ததோடு நில்லாமல், என்னுடைய காரின் லாக்+கீயை அவர் செலவிலேயே புதிதாக மாற்றிக்கொடுத்து, பெருந்தன்மையாக ஒரு ஐந்து லிட்டர் பெட்ரோலுக்கும் பணம் கொடுத்து, என் கையைப்பிடித்து நட்புடன் ஒரு குலுக்குக் குலுக்கியபடி,  பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார்.
-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-


17. "அனுஷம்" நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:

அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் 
திருக்கோயில் 
[உலக நாயகி அம்மன்] 

இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து 
சீர்காழி செல்லும் வழியில் 7 கி.மீ. 
தூரத்தில் திரு நின்றியூர் என்னும் 
ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
17/27

28 கருத்துகள்:

 1. பைக்.. மற்றும் சைக்கிள் போன்ற வற்றில் இப்பிரச்சனை நடந்ததாக அறிந்திருக்கிறேன்...

  காரிலுமா...

  பரவாயில்லை..

  பெரியோரின் பெரும்தன்மைக்கு வாழ்த்துக்கள்...  தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 2. AN INTIMATION TO ALL
  ====================

  Dear All,

  DUE TO TOTAL POWER SHUT DOWN IN OUR AREA, I AM IN A VERY CRITICAL SITUATION.

  ALL THE ALTERNATIVE INSTRUMENTS ARE ALSO NOT COOPERATING WITH ME.

  I AM TYPING THIS, FROM A BROWSING CENTRE, SITUATED IN A FAR OFF PLACE FROM MY HOUSE.

  TODAY I MAY NOT GIVE MY FURTHER 3 STORIES EXACTLY BY 2 PM, 4 PM & 6PM AS PROMISED. THERE MAY BE SOME DELAY.

  HOWEVER, I SHALL TRY MY LEVEL BEST TO KEEP MY COMMITMENT.

  Yours very affectionately,
  VAI. GOPALAKRISHNAN 11.11.2011

  பதிலளிநீக்கு
 3. கார் கிடைத்தது நிம்மதி, மகிழ்ச்சி.

  தெரியாமல் செய்த தவறு மன்னிக்கப்படும்.

  பதிலளிநீக்கு
 4. அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர்
  திருக்கோயில்
  [உலக நாயகி அம்மன்] //

  இந்த கோவில் சென்று இருக்கிறேன்.இந்த தகவல் புதிது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அட கார்ல கூட இந்தப் பிரச்சனை வருதா?

  பதிலளிநீக்கு
 6. தெரியாமல் நிகழ்ந்த தவறுதானே பெரிது படுத்தவேண்டாம்.

  பதிலளிநீக்கு
 7. எல்லா இடங்களிலும் மின்சாரப் பிரச்சனை உள்ளது
  என்வே அனைவருக்கும் உங்கள் சிரமம் புரியும்
  சங்கடப்பட வேண்டாம்
  சில நிமிடங்கள் என்றாலும் நம் கார் நம் கண் எதிரிலேயே
  ஓட்டிச் செல்லப்படும்போது ஏற்படும் அதிர்ச்சி
  உண்மையில் பெரும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்
  அதிர்சிதரும் அனுபவம்தான்
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 4

  பதிலளிநீக்கு
 8. காரில் இப்பிடி பிரச்சனை வரக் கூடுமா?

  பதிலளிநீக்கு
 9. ஒரே கலர் கார்ன்னால அடையாளம் கண்டுக்க முடியலை.. சரி. ஆனா, நம்பரைக் கூடவா பார்க்காம இருப்பாங்க :-))

  பதிலளிநீக்கு
 10. //raji said...
  காரில் இப்பிடி பிரச்சனை வரக் கூடுமா?//

  பிரச்சனை எங்கள் அடுக்குமாடிக் கட்டடத்திலேயே நடந்த்து. அதனால் தான் இந்த உண்மைச் சம்பவத்தை எழுதவும் முடிந்தது.

  இதில் கார் ஷெட் ஓனர் நான்.

  டி.வி.எஸ். பிஃப்டியில் காரைத் துரத்தியவர், என் கார்ஷெட்டின் அன்றைய டெனண்ட்.

  காரைத்தவறுதலாக எடுத்துப்போனவர் எங்கள் தளத்திலேயே குடியிருந்த மற்றொருவரின் மாமனார். ஊருக்குப் புதிதாக வந்தவர். கார் ஓட்டிச்சென்று ஊரைச் சுற்றி விட்டு வருவதில் ஓர் ஆசை அவருக்கு.

  இவர்கள் இருவரின் பிரச்சனைக்கு பஞ்சாயத்துத் தலைவராகச் செல்லும் படி ஆனது என் நிலைமை.

  vgk

  பதிலளிநீக்கு
 11. காரில் வந்த இந்த பிரச்சனை புதிதாக இருக்கிறதா ஐயா எனக்கு..
  இதற்கு தான் நேரம் என்று சொல்வார்களோ.....

  பதிலளிநீக்கு
 12. பெருந்தன்மையாக ஒரு ஐந்து லிட்டர் பெட்ரோலுக்கும் பணம் கொடுத்து, என் கையைப்பிடித்து நட்புடன் ஒரு குலுக்குக் குலுக்கியபடி, பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார்.


  பிரச்சினை முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 13. "அனுஷம்" நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
  சென்று வழிபட வேண்டிய கோயில்:
  அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர்
  திருக்கோயில்
  [உலக நாயகி அம்மன்] /

  பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 14. நல்ல அனுபவம்தான். தவறு செய்து தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பது நல்ல குணம். மன்னிப்பு கேட்டவருக்கு பாராட்டுகள். மன்னித்தவருக்கு அதிகம் பாராட்டுகள். பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. காரிலேரும் இந்த பிரச்சினை இருக்கும் என்று எனக்கு இப்போதுதான் தெரியும். நல்ல பகிர்வு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 16. நானும் ஒரு தடவை இந்த மாதிரி தவறுதலாக ஒரு காரை எடுத்துச் சென்றிருக்கிறேன். என்ன, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நண்பர்களாகப் போய்விட்டபடியால் பிரச்சினை ஒன்றும் ஏற்படவில்லை.

  பதிலளிநீக்கு
 17. ஓ.. கார்ல இப்படி ஒரு சிக்கல் வருமா.. கதையில் புதுத் தகவல்.
  சுபமாய் முடிந்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 18. நல்ல வேளை சுபமாய் முடிந்தது. சுபமாக முடிந்தால் தானே மகிழ்ச்சி....

  பதிலளிநீக்கு
 19. அருமையாக இருந்தது .வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. இப்படியும் கடத்தலா?இனிமே உஷாராதான் இருக்கணும்.

  உஷார்படுத்தினதுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 21. நானும் ஒரு முறை இப்படி ஒரு நண்பரின் காருக்குப் பதிலாக இன்னொரு நண்பரின் காரை எடுத்துப் போய் பெரிய கலாட்டா செய்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. கார் திருட்டுனு சொல்ல முடியல அதனால நல்ல நட்பு கிடைத்ததே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 20, 2015 at 11:28 AM

   //கார் திருட்டுனு சொல்ல முடியல; அதனால நல்ல நட்பு கிடைத்ததே.//

   நல்ல நட்பு கிடைத்ததே ! அதே அதே !! மிக்க நன்றி !!! :)

   நீக்கு
 23. அப்படியே அந்தப் பெரியவர் கதாநாயகனின் நண்பர் ஆகி இருப்பாரே.

  பதிலளிநீக்கு
 24. இதெல்லா வசதிபட்டவங்க வெசயம் மன்னாப்பு கேட்டவரு மன்னாப்பு கொடுத்தவரு நல்ல வரு.

  பதிலளிநீக்கு
 25. அடுக்குமாடி குடி இருப்பில் வசிப்பவர்களுக்குதான் இந்த பிரச்சினையை புரிந்து கொள்ள முடியும். எப்படியோ பிரச்சினை பெரிசாகாம சுமுகமாக தீர்த்துக்கொண்டார்களே.

  பதிலளிநீக்கு
 26. இது உண்மையிலேயே புதுவையில் என்னுடைய நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம்தான்...சுவாரசியமான சிறுகதையாக தந்த விதம் அருமை...

  பதிலளிநீக்கு
 27. சம்பவங்களால் உருவான கதை சிந்திக்க வைத்தது!

  பதிலளிநீக்கு