என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 7 நவம்பர், 2011

ஜா ங் கி ரி





ஜா ங் கி ரி

[ சிறுகதை ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

அந்த ஒண்டிக்குடுத்தனத்தின் பொதுத் திண்ணையில், அடிக்கும் வெய்யிலில். வியர்வை வழிந்தோட, வெகு சுவாரஸ்யமாக சீட்டுக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. 

மொத்தக்குடியிருப்பின் பிரதான வாசலில் யாரோ யாரையோ தேடி வருவது போல தெரிகிறது. நாகராஜன் தன் கைச்சீட்டுக்களைக் கவிழ்த்துப் போட்டுவிட்டு, ”இந்த ஆட்டம் நான் ஸ்கூட்” என்று சொல்லி விட்டு வெளியே வருகிறார். ஜோக்கரும் இல்லை, ரம்மியும் இல்லை. ஏதாவது ஒன்று இருந்தாலும் துணிந்து ஆடித் தோற்றுப் போவார்.

”ஸ்வீட் மாஸ்டர் நாகராஜன் வீடு எது?”  வந்தவர் விசாரிக்கிறார்.

”சொல்லுங்கோ, நான் தான் நாகராஜன்”

“நாளைக்கு விடியற்காலம் சரியா நாலு மணிக்கு இந்த விலாசத்துக்கு வந்துடுங்கோ. சுடச்சுட முறுகலா நல்ல தித்திப்பா நானூறு ஜாங்கிரி பண்ணித் தரணும். என் மாமா வீட்டு கிருஹப் பிரவேஸம். காலை ஏழு மணிக்கெல்லாம் இலை போட்டுப் பரிமாற வேண்டும். இன்று இரவே நீர் அங்கே வந்து படுத்துக்கொண்டாலும் நல்லது” என்றார் வந்தவர்.

”விடியற்காலம் முதல் பஸ்ஸைப்பிடித்து வந்துடறேன். கவலையே படாதீங்கோ” 

பஸ் சார்ஜுக்கு என்று ஒரு பத்து ரூபாய்த்தாளை நீட்டி விட்டு, ”ஜாங்கிரி பிழிந்து தர உமக்கு எவ்வளவு தரணும்” என்றார்.

”ஜாங்கிரியை டேஸ்ட் பார்த்துவிட்டு, நல்லாயிருந்தா ஒரு ஆயிரம் ரூபாய் வாங்கித்தாங்கோ, அது போதும்” என்றார் நாகராஜன்.

”சரி, மாமாவிடம் சொல்லிப்பார்க்கிறேன்; மறக்காம சீக்கரமா வந்து சேருங்கோ” என்று சொல்லிப் புறப்படுகிறார்.

ஒருவாரமாக சரியான வருமானம் இல்லை. ஏதோ நாளைக்கு இந்தப்பணம் வந்தாலாவது, வீட்டு வாடகையைக் கொடுத்து விட்டு, மீதிப்பணத்துக்கு ரேஷன் சாமான்கள் ஏதாவது வாங்கலாம் என நினைத்துக்கொண்டு, சீட்டுக் கச்சேரியிலிருந்து தன்னை சீக்கரமாக விடுவித்துக்கொண்டு, தன் வீட்டுக்குப் போனார்.

வரிசையாக மூன்று பெண் குழந்தைகள், கடைசியில் ஒரு பிள்ளைக் குழந்தை. மிகச்சிறிய ஒரே ஒரு ரூம் மட்டும் உள்ள வீடு. பொதுக்குழாய், பொதுக்கழிப்பிடம். பெரியவளுக்கு 11 வயது சின்னவனுக்கு 4 வயது. 

பொடியன் ஓடி வந்து தன் அப்பாவைக் கட்டிக்கொண்டு, “அப்பா, அப்பா. எனக்கு நாளைக்கு ஹாப்பி பர்த் டேக்கு என்ன வாங்கித்தருவே” என்கிறான்.

”ஜாங்கிரி வாங்கித் தருவேன்” என்கிறார்.

தன் அம்மாவிடமும், அக்காள்களிடமும் ஓடிப்போய் “அப்பா என் ஹாப்பி பர்த் டேக்கு நாளைக்கு ஜாங்கிரி வாங்கித்தரப்போறாளே!” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு, அதே நினைவுடன் விளையாடச் செல்கிறான்.

நாகராஜன் தான் நாளைக்கு சீக்கரம் எழுந்து கொண்டு விடியற்காலமேயே வேலைக்குப் போக வேண்டியதை தன் மனைவியிடம் சொல்லுகிறார். 


கணவனுக்கு இரவுச் சாப்பாடு போட்டுவிட்டு, சீட்டுக்கச்சேரிக்குப் போகாமல் சீக்கரமாகப் படுத்துக்கொள்ளச் சொல்லி சொல்கிறாள், நாகராஜனின் மனைவி.


கொடுக்க வேண்டிய வீட்டுவாடகை பாக்கிகள், இதர குடும்பச்செலவுகள், பெண் குழந்தைகளுக்கு அவசர அவசியமாக வாங்க வேண்டிய பாவாடை சட்டை துணிமணிகள் என எல்லாவற்றையும் மெதுவாக எடுத்துச் சொல்கிறாள். 


“ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்;  அந்த இஞ்சினியர் வீட்டுக்கு தினப்படி சமையலுக்கு ஆள் வேண்டுமாம். நீங்கள் சம்மதித்தால் தினமும் நான் போய் செய்து கொடுத்து விட்டு வருவேன். மாதாமாதம் கணிசமான ஒரு தொகை என் மூலம் உபரியாக வந்தால் நம் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் நல்லது தானே” என்று தன் விருப்பத்தையும், குடும்ப நிதித்தேவைகளையும் எடுத்துக்கூறினாள்.


நாகராஜனுக்குத் தன் மனைவியை வேலைக்கு அனுப்புவதில் கொஞ்சமும் விருப்பம் கிடையாது. குடும்ப சூழ்நிலையை உத்தேசித்து அவள் கூறுவதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்து, பிறகு யோசித்துச் முடிவு சொல்வதாகச் சொல்லி படுக்கச் செல்கிறார்.


தனக்கு சமையல் வேலைகள், ஸ்வீட் செய்தல் போன்றவற்றைக் கற்றுத்தந்த குருநாதரின் பெண்ணான சாருவின் அழகிற்காகவும், அமைதியான நல்ல குணத்திற்காகவும், தானே மிகவும் விரும்பி, மிகவும் எளிமையான முறையில், சாருவைத் திருமணம் செய்து கொண்டவர் தான் நாகராஜன்.


சாருவை மஹாராணிபோல் வைத்துத் தாங்க வேண்டும் என்று தான் நாகராஜனுக்கு ஆசை. என்ன செய்வது? தன்மானம் மிக்க அவருக்கு, வாழ்க்கையில் எவ்வளவோ சோதனைகள். நாம் ஆசைப்படுவதெல்லாம் நடக்க அதிர்ஷ்டமும் சேர்ந்து கை கொடுக்க வேண்டாமா?


ஒரு சிறிய இடத்தைப்பிடித்து, ஓட்டல் நடத்தி நாலு பேர்களுக்கு வேலையும் கொடுத்து, சிறப்பாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். நல்ல மூளை இருந்தும், உழைத்துப் பிழைக்க ஆவல் இருந்தும், முதல் போட மூலதனம் கிடைக்காமல் அவதிப்படுபவர்.


அவரிடம் செல்வம் சேராது போனாலும், சாருவுடன் திருமணம் ஆகி பன்னிரெண்டு ஆண்டுகளுக்குள், அடுத்தடுத்து நாலு அழகான ஆரோக்யமான குழந்தைச் செல்வங்கள் மட்டும் குறைவில்லாமல் கிடைக்கப் பெற்றவர்.


கிரஹப்பிரவேச வீட்டில் அனைவரும் கூட்டமாகக் கூடி குதூகுலமாக உள்ளனர்.  நாகராஜன் அதிகாலை முதல் அடுப்படியில் தன் கடமையே கண்ணாக, ஜாங்கிரியைப் பொறுமையாகப் பிழிந்து, கொதிக்கும் மிகப்பெரிய இரும்புச்சட்டியில், நல்ல பதமாகப் பொன் முறுகலாக எடுத்துப்போட்டு, பரிமாறுபவர்களுக்கு வசதியாக தட்டுகளில் நிரப்பி அனுப்பிய வண்ணம் உள்ளார்.








ஜாங்கிரி சாப்பிட்ட அனைவருமே, அதன் இனிப்புச்சுவையும், முறுகலான பதமும், ஜீராப்பாகுடன் சூடாக சுவையாக இருந்ததையும் பாராட்டிச் சென்றனர். படைப்பாளியான நாகராஜனுக்கு அவர்கள் பாராட்டு புதிய உற்சாகத்தை அளித்தது.


இன்று பிறந்த நாள் காணும் தன் குழந்தை இந்த ஜாங்கிரியைச் சாப்பிடத் தன் அருகில் இல்லையே என வருத்தப்பட்டுக் கொண்டார், நாகராஜன்.


எப்படியும் தான் விடைபெற்றுச் செல்லும் போது தனக்கென்று இரண்டு ஜாங்கிரிகளாவது தரமாட்டார்களா ! என நினைத்துக்கொண்டார்.


பொதுவாக நாகராஜன் எந்த ஸ்வீட் செய்தாலும், தன் வாயில் போட்டு டேஸ்ட் பார்க்க மாட்டார். சொல்லப்போனால் அவருக்கு ஸ்வீட் சாப்பிடுவதில் கொஞ்சமும் விருப்பமே கிடையாது. பிறர் சாப்பிட்டு அதன் சுவையைச் சொல்லி மனதார அவரைப் பாராட்டும் போது தான், அவருக்குத் தானே ஸ்வீட் சாப்பிட்டது போல மகிழ்ச்சி ஏற்படும்.


விடியற்காலம் நாலு மணி முதல் தொடர்ச்சியாக நாலு மணி நேரம் அடுப்படியில் அமர்ந்து, அனலில் வெந்து வேலை செய்தவர், தன் வேலை இன்று நல்லபடியாக முடிந்ததில் திருப்திப் பட்டவராய், எழுந்து கொண்டார். பந்திக்குப் பரிமாறக் கொடுத்த ஜாங்கிரிகள் போக, மீதமிருந்த ஒரு நூறு ஜாங்கிரிகளை பத்திரமாக ஒரு எவர்சில்வர் தூக்கில் போட்டு, எஜமானரிடம் ஒப்படைத்து விட்டுப் புறப்படத் தயாரானார்.


“நீர் கேட்ட ஆயிரம் ரூபாய் ரொம்ப ஜாஸ்திபோலத்தான் எனக்குத் தோன்றியது. என் சம்பந்திகள் உள்பட எல்லோரும் நீர் செய்த ஜாங்கிரி சூப்பராக இருப்பதாக உமக்கு சர்டிஃபிகேட்டே கொடுத்து விட்டார்கள்; இனிமே எங்க வீட்டிலே எந்த ஃபங்ஷன் என்றாலும் உம்மையே தான் கூப்பிடுவோம்” என்று சொல்லி ஆயிரம் ரூபாய்ப் பணத்தை வெற்றிலை பாக்கு வாழைப்பழத்துடன் ஒரு தட்டில் வைத்து நீட்டினார், அந்த எஜமானர்.


ஒரு மரியாதைக்குக்கூட நீர் டிபன் சாப்பிட்டீரா என்று கேட்கவும் இல்லை. டிபன் சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள் என்று சொல்லவும் இல்லை. ஒரு இரண்டு ஜாங்கிரியை நீர் உங்க வீட்டுக்குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கொடுக்கவும் இல்லை.


தானே அங்கு சென்று டிபன் சாப்பிடவோ, அல்லது என் குழந்தைகளுக்கு நாலு ஜாங்கிரிகள் தாங்கோ என்று கேட்கவோ, நாகராஜனின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நாகராஜன் தன் வீட்டுக்குப் புறப்படலானார்.


வழியெங்கும், தான் வாக்குக்கொடுத்தபடி, தன் குழந்தைக்கு ஏமாற்றம் இல்லாமல், தன் குழந்தையின் பிறந்த நாளுக்கு இன்று எப்படியும் ஸ்வீட் கொடுக்க வேண்டுமே என்ற எண்ணமே அவர் மனதில் இருந்தது.


ஸ்வீட் மாஸ்டரான தனக்கு, இன்று காலை தன் கைப்பட செய்த அருமையான ஜாங்கிரிகளில், சிலவற்றைத் தனக்கும் தர வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றாமல் போனது எப்படி? என்று நினைக்க நினைக்க அவர் மனத்தில் வருத்தம் அதிகரித்தது.


என்ன தான் பெரிய பணக்காரர்களாக இருப்பினும், ஸ்வீட் மாஸ்டருக்கும் ஒரு குடும்பம் குழந்தை குட்டிகள் என்று இருக்காதா என்ற எண்ணமும், மனிதாபிமானமும் ஒரு சிலருக்கு இருப்பதில்லை என்று நினைத்துக்கொண்டே,  பஸ்ஸை விட்டு இறங்கியதும், நேராக எதிர்புறம் உள்ள ஸ்வீட் கடையொன்றில் அரைக்கிலோ ஜாங்கிரி வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார், நாகராஜன்.


கடையில் வாங்கி வந்த ஜாங்கிரிப் பொட்டலத்தைத் தன் குழந்தையின் கையில் கொடுத்து அவனுடைய சந்தோஷத்தை வெகுவாக ரஸித்தார்.


”சாப்பிட ஏதாவது பழையசோறோ நீர் ஆகாரமோ இருக்குமா சாரு?” எனக் கேட்டவாறே தரையில் சோர்வாக அமர்ந்தார் நாகராஜன்.


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-








ஓர் ஆன்மீகத்தகவல்


ஆன்மீக நண்பர்களின் நலம் கருதி, ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், உரிய திருத்தலங்களைப்பற்றி இங்கு அடுத்தடுத்து கொடுக்கப்படவுள்ளது. 

இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள ஸ்தலங்கள் அனைத்தும் பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதிபிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. 

எத்தனையோ மஹான்களும் ரிஷிகளும் தேவர்களும் வழிபட்டவை. இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகள் கொண்டு, தரிஸிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.


இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள், சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுடைய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.

மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும், அவரவர் கர்ம வினைகளே, லக்னமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக்கிரங்களாகவும் அமர்ந்து, பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கைத் துணையையும், அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும், வாழ்க்கையையுமே தீர்மானிக்கின்றன.

நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்கு, நம்மை அறியாமலேயே நாம் சென்று வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு நேராகிறது. 

அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்சனைகளும் தீர்ந்து, மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவருக்கு உரிய நட்சத்திர தலத்தை, உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று, ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும். 

உங்களால் முடிந்த வரை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், சாதாரண தினங்களிலேயே கூட இந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வர, உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும் (குறையும்) என்கிறார் ஒரு பிரபல ஜோதிடர்.



[நம்பிக்கை உள்ளவர்களுக்கும், வசதி வாய்ப்புக்கள் உள்ளவர்களுக்கும் பயன்படட்டுமே என்று, எனக்கு சமீபத்தில் கிடைத்த இந்தத் தகவல்களை, உங்களுக்கும் தெரிவித்துள்ளேன். அடியிற்கணட இந்தச் சிறியபகுதி மட்டும் தினமும் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் தொடரும். அன்புடன் vgk] 

1.அஸ்வினி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய கோயில்:- 

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் [பெரிய நாயகி அம்மன்] 


இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப்பூண்டி உள்ளது. திருத்துறைப்பூண்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.




01/27

69 கருத்துகள்:

  1. தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். ஜாங்கிரி சுவைத்தேன்

    பதிலளிநீக்கு
  2. நட்சத்திர வாரத்தில் முதல் நட்சத்திரம்.... அஸ்வினி... ஜாங்கிரியைப் போலவே சுவையாக இருந்தது...

    நல்ல சிறுகதைப் பகிர்விற்கும், நட்சத்திரம் பற்றிய தகவலுக்கும் மிக்க நன்றி...

    தொடர்ந்து ஜொலிக்கும் பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  3. ஜாங்கிரி சாப்பிட்ட அனைவருமே, அதன் இனிப்புச்சுவையும், முறுகலான பதமும், ஜீராப்பாகுடன் சூடாக சுவையாக இருந்ததையும் பாராட்டிச் சென்றனர். படைப்பாளியான நாகராஜனுக்கு அவர்கள் பாராட்டு புதிய உற்சாகத்தை அளித்தது./

    தமிழ்மண நட்சத்திரமாய் இனிப்புடன் உற்சாகமாய் ஜாங்கிரியாய் ஜமாய்க்கும் படைப்பாளிக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
  4. நட்சத்திர வாரத்தை ஜாங்கிரியோடு துவங்கியிருக்கிறீர்கள் ஐயா. இந்த வாரம் முழுவதும் தித்திப்பாய் இனிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மனமார்ந்த வாழ்த்துகள்!

    ----ஜாங்கிரி செய்தவருக்கு ஜாங்கிரி கிடைக்காமல், கடையில் வாங்குவது என்பது மனதை நெகிழ வைக்கிறது. உருக்கம்!

    பதிலளிநீக்கு
  5. நட்ச்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகள் கொண்டு, தரிஸிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை./

    அருமையாய் பயனுள்ள பகிர்வு..

    பதிலளிநீக்கு
  7. சுடுகின்ற யதார்த்தத்தை சுவையாகக் கொடுத்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. என்ன ஒரு அருமையான கதை!

    உழைப்பவனுக்கு அவன் உழைப்பின் பலனை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்காது! அறுவடை செய்த விவசாயி அத்தனை நெல்லையும் மூட்டை கட்டி, டவுனுக்கு வண்டி கட்டிப்போய் மண்டியில் வந்த விலைக்கு மூட்டைகளைப் போட்டு வருகிற காசை வயிற்றுப் பாட்டிற்குத் தேற்றினால் போதும் என்றிருக்கும்! அவன் பொங்கிச் சாப்பிடுவதற்கு குறுணை தான் பாக்கியிருக்கும்.

    வறுமையின் நிறத்தை பளிச்சென்று எடுத்துக் காட்சி சொன்ன கதை!

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. கடையில் வாங்கி வந்த ஜாங்கிரிப் பொட்டலத்தைத் தன் குழந்தையின் கையில் கொடுத்து அவனுடைய சந்தோஷத்தை வெகுவாக ரஸித்தார்./

    காட்சி மனதில் படமாக படர்ந்து லயிக்கவைத்தது..

    பதிலளிநீக்கு
  10. அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் /

    மிகப் பயன்ளிக்கும் அருமையான அருட்தலம்.
    பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  11. என்னதான் தான் மனம் வருந்தினாலும் அதை மறைத்துக்கொண்டு, குழந்தையை மகிழ்விக்கும் ஒரு நல்ல தகப்பனின் மன உணர்வுகளை அழகாகப் படம்பிடித்துக்காட்டிய கதை. பிறரிடம் கையேந்தி தன்மானத்தை இழப்பதைவிடவும் காசு கொடுத்து கடையில் வாங்கித்தருவது நிச்சயம் அவருக்கு மனநிறைவையே தரும்.

    பதிலளிநீக்கு
  12. தமிழ் மண நட்சதிரதிற்கு வாழ்த்துக்களும் வணக்கமும்

    பதிலளிநீக்கு
  13. நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்

    சுவையான ஜாங்கிரி

    பதிலளிநீக்கு
  14. இனிமையான ஆரம்பம். வாழ்த்துக்கள், கோபு மாமா!

    பதிலளிநீக்கு
  15. மினுமினுக்கும் ஜாங்கிரிகள் சுவை கூட்டுகின்றன. கதையின் யதார்த்தமான உணர்வுகள் அழகாக வெளிப்படுகின்றன. ஆன்மிகம் பகுதியில் அக்கரையான விவரங்கள். முதல் பதிவு சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  16. ஐயா!
    ஜாங்கிரி இனிப்பானதே! ஆனால்
    இக்கதையைப் படித்தபின் சாப்பிட்டால்
    இனிக்குமா என்று தோன்றவில்லை

    மேலும் தமிழ் மணத்தின் நட்சத்திர
    மாகிய தங்களுக்கு என் உளங்கனிந்த
    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  17. அழகாக, ஸ்வீட்டின் இனிமையோடு வாரத்தைத் துவங்கியிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜாங்கிரி இனித்தது.

    பதிலளிநீக்கு
  18. வார விருந்தை இனிப்புடன் துவங்கும்
    தங்கள் திறம் கண்டு விய்ந்தேன்
    அருமையான துவக்கம்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 13

    பதிலளிநீக்கு
  19. இனிப்பு கொடுத்து அசத்தலா நட்சத்திர வாரத்தை தொடங்கிடீங்க...ஜாங்கிரி எனக்கு பிடித்த ஸ்வீட்டும் கூட நன்கு சுவைத்தேன்...

    கதை உணர்வு பூர்வமாக இருக்கிறது.

    இனி ஒவ்வொருநாளும் தித்திக்கட்டும், நானும் தவறாம வந்து விடுகிறேன்...

    வாழ்த்துக்கள் + பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  20. சுவையான ஜாங்கிரி.

    பாவம் நாகராஜன் பழையது எதாவது இருக்குமா எனறு கேட்டுவிட்டு தரையில் சோர்வாக அமர்ந்த போது நாம் சோகமாகிவிட்டோம் அவருடைய நிலைமையை பார்த்து.

    அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய கோவில் தகவல் அருமை. தொடருங்கள் ஐயா படிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  21. இனிப்புடன் கதை தொடங்கினாலும் சோகம் கலந்த நெகிழ்வுடன் கதையை முடித்த விதம் அருமை!

    நட்சத்திர வாரம் தொடங்குவதற்கு இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  22. நட்சத்திர வாழ்த்துக்கள்!

    /ஸ்வீட் மாஸ்டருக்கும் ஒரு குடும்பம் குழந்தை குட்டிகள் என்று இருக்காதா என்ற எண்ணமும், மனிதாபிமானமும் ஒரு சிலருக்கு இருப்பதில்லை என்று நினைத்துக்கொண்டே../

    நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  23. தமிழ்மண நடசத்திட வாழ்த்துகள் திரு கோபாலக்ருஷ்ணன்!

    பதிலளிநீக்கு
  24. ஜாங்கிரி இனிப்பு சுவையாய் கரைந்தது .நட்சத்திர வார இனிப்பு

    //ஒரு மரியாதைக்குக்கூட நீர் டிபன் சாப்பிட்டீரா என்று கேட்கவும் இல்லை. டிபன் சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள் என்று சொல்லவும் இல்லை.//
    இப்படியும் சிலர் இருக்கிறார்கள்

    .எங்க வீட்டில் வைபவங்களுக்கு சமைத்தால் முதலில் சமைதவருக்கு பாக் செய்து அனுப்பிவிட்டபின்புதான் மறு வேலை பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  25. மனிதனை மனிதனாக பார்க்காமல் டிரைவர், குக், வேலைக்காரி, பால்காரன், என்று அவர்களையும் ஒரு label போட்டு அடைத்து விடுவதால் இந்த தொல்லை

    பதிலளிநீக்கு
  26. ஜாங்கிரியின் சுவை போலவே கதையின் சுவையும் அருமை.ஏனோ இந்த தொழில் செய்பவர்களின் மதிப்பும் அந்தஸ்தும் எல்லா தரப்பிலும் கூடவில்லை.

    தமிழ்மண நட்சத்திரத்தின், நட்சத்திரங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்கள் பகுதி பயனுள்ளதாக இருக்கும்
    :-))

    பதிலளிநீக்கு
  27. அன்பின் வை.கோ - கதை நல்ல நடையில் செல்கிறது. ஒரு வரிக் கரு தான் - கதை அழகாக வந்துள்ளது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  28. அன்புநிறை வை.கோ ஐயா,
    தங்களின் தமிழ்மண நட்சத்திர ஆரம்பம்
    இனிமையாக ஜாங்கிரியில் ....
    தங்களின் இந்த கதையை படித்ததும்
    பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்
    வரிக்கு வரி மனதில் நிழலாடியது..

    தமிழ்மணம் நட்சத்திரப் பணி சிறப்புற அமைந்திட
    இறைவன் தங்களுக்கு அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  29. ஜாங்கிரி சுவையோ சுவை! நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். சிறுகதைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  31. செய்தவருக்கு ஜாங்கிரி இல்லை என்கிற யதார்த்தம் மனதை சங்கடப் படுத்தியது.
    அருமையான சிறுகதை.

    பதிலளிநீக்கு
  32. என்ன தான் பெரிய பணக்காரர்களாக இருப்பினும், ஸ்வீட் மாஸ்டருக்கும் ஒரு குடும்பம் குழந்தை குட்டிகள் என்று இருக்காதா என்ற எண்ணமும், மனிதாபிமானமும் ஒரு சிலருக்கு இருப்பதில்லை என்று நினைத்துக்கொண்டே, பஸ்ஸை விட்டு இறங்கியதும், நேராக எதிர்புறம் உள்ள ஸ்வீட் கடையொன்றில் அரைக்கிலோ ஜாங்கிரி வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார், நாகராஜன்.//

    மனது கனத்து போனது.

    அவர் நீர் ஆகாரம் கேட்டு குடிப்பது கண்ணில் நீர் வந்து விட்டது.

    நட்சத்திர வாரத்தில் அருமையான கதைகள் .

    தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. நட்சத்திர வாரத்தில் நட்சத்திரங்களூம் அந்த அந்த நட்சத்திரத்திற்கு உரியவர்கள் போக வேண்டிய கோவில்கள் என்ற தகவல்கள் என்று பகிர்வு அருமை.

    தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. ஜாங்கிரி போல் இனிமையான கதை. கொடுக்க மனசில்லாதவங்க கிட்ட, கூனிக் குறுகி நின்னு கேட்டு வாங்கிட்டுப் போயி குழந்தைக்குக் கொடுக்கறதை விட, கடையில் வாங்கினாலும் தன் சம்பாத்தியத்திலிருந்து வாங்கியது அருமை.

    பதிலளிநீக்கு
  35. இதுவரை உங்கள் அத்தனை நட்சத்திர பதிவுக் கதைகளையும் படித்துவிட்டேன்.

    இது தான் முதல் இடம். மிக மிக அருமை. நெகிழ்ச்சி. Fantastic.

    பதிலளிநீக்கு
  36. படைத்தவனுக்கு படைப்பை ருசிக்க முடியவில்லை என்பது மிகவும் சோகமான விஷயம்.
    நல்ல கதை. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  37. இந்த என் சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, பாராட்டி, வாழ்த்தி, உற்சாகப்படுத்தி மகிழ்வித்துள்ள அனைத்துச் சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    பதிலளிநீக்கு
  38. I never send the cook empty hand. I am very careful and particular about their feeding. This story touched my heart.
    Very well written.
    viji

    பதிலளிநீக்கு
  39. WELCOME Mrs. VIJI MADAM. Thanks for your kind visit & valuable comments.

    Please visit my post of today Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

    தயவுசெய்து தங்களுக்கான விருதினை ஏற்றுக்கொள்ள்வும். அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  40. சார், மனசு இளகி போய் விட்டது. நல்ல மனிதர்கள் எப்படியெல்லாம் அலை கழிக்கப் படுகிறார்கள்.

    அவர் செய்த ஸ்வீட்டை சாப்பிட சுதந்திர்ம் இல்லை, கொடுக்க அந்த மனிதர்களுக்கு மனசில்லை.

    யதார்த்த சம்பவங்கள். பல தடவைகள் பிற இடங்களில் பார்த்திருக்கிறேன். தாராள மனசு பிறவிக் குணம் போல்ம். எல்லாருக்கும் இல்லை.

    உண்மை சம்பவம் போல இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  41. அன்புள்ள [சில்க்] பட்டு,

    வாங்கோ! வாங்கோ!! வாங்கோ !!!

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மனம் திறந்த கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

    கொஞ்சம் உண்மை தான். ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட ஒருவர் என்னிடம் மிகச்சுருக்கமாகச் சொன்னது, என் மனதில், என் சிறுவயதில் சுருக்கென்று ஏறிக்கொண்டது. அதன் தாக்கமே இந்தக்கதையின் ஆக்கம்.

    இந்தக் கதையைப் படித்ததும் தாங்களும் சற்றே மனம் வருந்தி எழுதியுள்ளதிலிருந்தே தெரிகிறது, என் பட்டுவின் பட்டுப்போன்ற உள்ளம். வாழ்க வாழ்கவே !

    பட்டுவுக்கு மிக்க நன்றி,

    பிரியமுள்ள
    vgk

    பதிலளிநீக்கு
  42. ஜாங்கிரி தித்திப்போடு கதை ஆரம்பிக்கிறது... நடுத்தர வர்க்க மக்களின் நிலை பரிதாபகரமான நிலை..... திறமை இருக்கிறது நாகராஜுக்கு . ஆனாலும் மூலதனம் இட ஆள் இல்லை.... பரம ஏழையாக ப்ளாட்பாரத்தில் வாழ்க்கை நடத்துவோருக்கு வாழ்க்கை எளிதாகிறது... பணக்கார வர்க்கத்திற்கோ வசதிகள் அதிகமாவதால் சிரமங்கள் இருப்பதில்லை. ஆனால் நடுத்தரவர்க்க மக்களின் பாடு தான் திண்டாட்டமாகிறது. வாடகை பாக்கி, பிள்ளைகள் ஸ்கூல் ஃபீஸ் பாக்கி, பள்ளி உடுப்பு வாங்கனும் இப்படி இதர செலவுகள்....எல்லாத்தையும் மறக்கத்தான் சீட்டுக்கச்சேரி... மற்றவர்கள் போல துன்பங்கள் மறக்க குடி, சிகரெட் என்று போகாமல் நண்பர்களுடன் சீட்டுக்கச்சேரி செல்வதாக கதையாசிரியர் கதை அமைத்தது சிறப்பு....

    குழந்தை ஆசையா தனக்கு பர்த்டேக்கு என்ன வாங்கிண்டு வருவேன்னு கேட்டதற்கு எந்த நம்பிக்கையில் ஜாங்கிரின்னு சொன்னாரோ நாகராஜ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி மஞ்சு ... வாங்கோ, வணக்கம்.

      //.........எல்லாத்தையும் மறக்கத்தான் சீட்டுக்கச்சேரி... மற்றவர்கள் போல துன்பங்கள் மறக்க குடி, சிகரெட் என்று போகாமல் நண்பர்களுடன் சீட்டுக்கச்சேரி செல்வதாக கதையாசிரியர் கதை அமைத்தது சிறப்பு....//

      மற்றவர்கள் போல ஏதோ ‘அருமை’ ’சூப்பர்’ ’படித்தேன்’ ‘ரஸித்தேன்’ ’நல்ல படைப்பு’ என்று ஓரிரு வார்த்தைகளுடன் நிறுத்தாமல், கதையில் வரும் ஒவ்வொரு சம்பவங்களையும், ஜாங்கிரியாக நினைத்து, துளித்துளியாக கடித்து, ருசித்து, ரஸித்து, அதன் சுவையை அந்தப் படைப்பை உருவாக்கியவருக்கு திருப்தி ஏற்படுமாறு பகிர்ந்து அளித்து, மகிழ்விப்பது மஞ்சுவின் தனிச்சிறப்பு. ;)))))

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  43. மனைவி மேல் ப்ரியம்.... தொழில் கற்றுக்கொடுத்த குருநாதரின் மகளை அவளின் நல்ல அமைதியான குணத்தைக்கண்டு தானே விரும்பி கட்டிக்கொள்ளும் நாகராஜ் நினைத்திருந்தால் தகிடுதத்தம் செய்து வாழ்க்கையில் முன்னேறி இருந்திருக்கலாம் தான். ஆனால் அண்ணாவின் கதையில் நேர்மையான நல்லவர் எல்லாம் பிழைக்கத் தெரியாத அப்பாவிகளாச்சே.. நம் ஹீரோவும் அப்படி தான்..... குழந்தைச்செல்வங்க... மூணும் பெண்ணா பொறந்திருச்சேன்னு சலிச்சுக்காம குழந்தைச்செல்வங்கள் என்று சொல்லவைத்த கதையாசிரியருக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்....

    வேலை செய்ய சென்ற இடத்தில் பல பேர் கூடும் இடத்தில் உழைத்துச்செய்த ஜாங்கிரி அருமையான ருசியாக இருந்ததை பாராட்டி, பேசினபடி ஆயிரம் ரூபாய் கொடுக்கும்ப்போது என்னவோ தானம் தருவதைப்போல பேச்சைப்பாருங்க..... ஆயிரம் ரூபாயே அதிகம் தானாம்.. சும்மா வெளியே கிளம்பினால் ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீமுக்கு அசால்டா 1000 ரூபாய் கொடுப்பாங்க. அதே நேர்மையா உழைத்த மனிதருக்கு கொடுக்க ரொம்ப அலுத்துக்கிறாங்க. பிகு பண்றாங்க. ரெண்டு வார்த்தை உழைப்பை பாராட்டி சொல்லி 1000 ரூபாய் கொடுக்க மனசு வருகிறதா பார்த்தீங்களா... கதையாசிரியரின் அருமையான வசனம்....

    நாகராஜ் இத்தனை உழைத்து செய்தும் சாப்பிடுன்னு சொல்ல மனசு வரலையே? எப்படி வரும். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே அதை பார்த்து அறிந்து நடக்காதவர் மனிதரில்லே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK to மஞ்சு

      //....... ஆனால் அண்ணாவின் கதையில் நேர்மையான நல்லவர் எல்லாம் பிழைக்கத் தெரியாத அப்பாவிகளாச்சே.. நம் ஹீரோவும் அப்படி தான்..... குழந்தைச்செல்வங்க... மூணும் பெண்ணா பொறந்திருச்சேன்னு சலிச்சுக்காம குழந்தைச் செல்வங்கள் என்று சொல்லவைத்த கதையாசிரியருக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்....//

      காரசாரமான அரிசி அப்பளத்தின் இருபக்கமும் லேசாக நல்ல நெய் தடவி, சுட்டு வந்து சூடாக புட்டுத்தின்றது போல, மிகவும் ருசியான கமரல் இல்லாத அப்ளாஸ் ... மஞ்சுவின் அப்பளமாச்சே ... சுவையோ சுவை தான். தனிச்சுவை தான். ;)))))

      தொடரும் ... VGK

      நீக்கு
    2. VGK to மஞ்சு ... தொடர்ச்சி ....

      //வேலை செய்ய சென்ற இடத்தில் பல பேர் கூடும் இடத்தில் உழைத்துச்செய்த ஜாங்கிரி அருமையான ருசியாக இருந்ததை பாராட்டி, பேசினபடி ஆயிரம் ரூபாய் கொடுக்கும்ப்போது என்னவோ தானம் தருவதைப்போல பேச்சைப்பாருங்க..... ஆயிரம் ரூபாயே அதிகம் தானாம்.. சும்மா வெளியே கிளம்பினால் ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீமுக்கு அசால்டா 1000 ரூபாய் கொடுப்பாங்க. அதே நேர்மையா உழைத்த மனிதருக்கு கொடுக்க ரொம்ப அலுத்துக்கிறாங்க. பிகு பண்றாங்க. ரெண்டு வார்த்தை உழைப்பை பாராட்டி சொல்லி 1000 ரூபாய் கொடுக்க மனசு வருகிறதா பார்த்தீங்களா... //

      சரியான பாய்ண்டைப் பிடித்து ஐஸ்கிரீம் போல ஒரு உதாரணமும் கொடுத்துள்ள என் தங்கை மஞ்சுவைப் பாராட்டி மகிழ்ந்து ஐஸ்க்ரீம் போலவே உருகிடும் அண்ணா!

      //கதையாசிரியரின் அருமையான வசனம்....//

      மிக்க மகிழ்ச்சி ! ;)))))

      //நாகராஜ் இத்தனை உழைத்து செய்தும் சாப்பிடுன்னு சொல்ல மனசு வரலையே? எப்படி வரும். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே அதை பார்த்து அறிந்து நடக்காதவர் மனிதரில்லே....//

      கையைக்கொடுங்க ... மானஸீகமாக குலுக்கி மகிழ்ந்தேன்.

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  44. பணம் இருக்கும் இடத்தில் சாப்பிடுன்னு சொல்ல மனசு இல்லை பார்த்தீங்களா...

    நாகராஜ் ஆனாலும் தன் கையால் ஆசையா செய்த ஜாங்கிரி குழந்தைக்கு தரமுடியலன்னாலும் கடையில் ஜாங்கிரி வாங்கி கொடுத்து குழந்தையின் முகத்தில் புன்னகை வரவெச்சுட்டார்.... ஏழைகளிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் குழந்தைகளின் சந்தோஷத்தை விரும்பும் நல்ல தாய் தந்தையராக கதையாசிரியர் நாகராஜை சித்தரித்திருப்பது அருமை...


    தொழில் தர்மம் கடைப்பிடிச்சிருக்கும் நாகராஜை பாராட்டவேண்டும்...
    இவ்ளோ சமையல் செய்தாலும் தான் ருசி பார்க்காமல் மற்றவரை ருசி பார்க்கச்செய்து சாப்பிட்டு அவர் நல்லாருக்குன்னு சொன்னால் இவர் மனம் நிறைகிறது....

    கதையாசிரின் ஹீரோ அன்னிக்கு நாலு மணிநேரம் உழைத்து க்ரிஸ்பியா ஜாங்கிரி செய்தாலும் வீட்டுக்க்கு வந்து சாப்பிட்டது நீராகாரம் தான்...

    சினிமா பார்ப்பது போல அருமையான கதை வடிவமைப்பு அண்ணா...

    அசத்தலான தித்திப்பான கதை பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள் அண்ணா...



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. VGK to மஞ்சு

      //ஏழைகளிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் குழந்தைகளின் சந்தோஷத்தை விரும்பும் நல்ல தாய் தந்தையராக கதையாசிரியர் நாகராஜை சித்தரித்திருப்பது அருமை...//

      சித்தரித்த
      சித்திரத்தின்
      சிறப்பினைச்
      சிந்தித்துப்

      பாராட்டியுள்ள மஞ்சுவின் குணம் அதைவிட அருமை.

      தொடரும்.... vgk

      நீக்கு
    2. VGK to மஞ்சு ... தொடர்ச்சி ...

      //இவ்ளோ சமையல் செய்தாலும் தான் ருசி பார்க்காமல் மற்றவரை ருசி பார்க்கச்செய்து சாப்பிட்டு அவர் நல்லாருக்குன்னு சொன்னால் இவர் மனம் நிறைகிறது....//

      இவ்ளோ கதைகள் எழுதினாலும் தான் ருசி பார்க்காமல், மற்றவரை ருசி பார்க்கச்செய்து, அவர்கள் அதனைப் படித்து ரஸித்து, ருசித்து நல்லாயிருக்குன்னு நாலு வரி சொன்னால் தான், கதாசிரியரின் மனமும் நிறைகிறது..... மஞ்சு! ;)

      தொடரும்.... vgk

      நீக்கு
    3. VGK to மஞ்சு ... தொடர்ச்சி ...

      //கதையாசிரியரின் ஹீரோ அன்றைக்கு நாலு மணிநேரம் உழைத்து க்ரிஸ்பியா ஜாங்கிரி செய்தாலும் வீட்டுக்க்கு வந்து சாப்பிட்டது நீராகாரம் தான்...//

      இருப்பினும் அந்த நீராகாரத்தின் சாற்றினை, தன் அன்புக்கரங்களால் அளித்தது அவனின் காதல் மனைவி “சாரு” அல்லவா. அதன் ருசியே தனியல்லவா .. மஞ்சு!

      //சினிமா பார்ப்பது போல அருமையான கதை வடிவமைப்பு அண்ணா...//

      தங்கச்சியின் பாராட்டுக்களுக்கு அன்பு அண்ணாவின் நன்றிகள்.

      //அசத்தலான தித்திப்பான கதை பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள் அண்ணா...//

      மஞ்சுவின் தித்திப்பான பின்னூட்டப் பகிர்வுக்கு அண்ணாவின் அன்பான இனிய நன்றிகள்.

      பிரியமுள்ள,
      VGK

      நீக்கு
  45. பணம் உள்ளவர்களுக்கு மனிதாபிமானம் அற்றுப் போய்விடுமோ?

    பதிலளிநீக்கு
  46. ஜாங்கிரி கசந்து போனது. எத்துனைப் பெரிய மனதிர்கள் அவரிடம் சின்னவர்கள் ஆனார்கள்.தன் குழந்தைக்கு கூட தன் கையால் செய்த ஜாங்கிரி தரமுடியாத அவல நிலை. ஆனாலும் மகிழ்ச்சியாக வைத்துள்ள அவரின் நிலை. தொழில் நேர்த்தியால் அவரின் நிலை மாறும். நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mageswari balachandran May 6, 2015 at 11:28 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஜாங்கிரி கசந்து போனது. எத்துனைப் பெரிய மனிதர்கள் அவரிடம் சின்னவர்கள் ஆனார்கள்.தன் குழந்தைக்கு கூட தன் கையால் செய்த ஜாங்கிரி தரமுடியாத அவல நிலை. ஆனாலும் மகிழ்ச்சியாக வைத்துள்ள அவரின் நிலை. தொழில் நேர்த்தியால் அவரின் நிலை மாறும். நம்புவோம்.//

      காலம் ஒரு நாள் மாறும் ... அவரின் கவலைகள் யாவும் தீரும் .... என நாமும் நம்புவோம். வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  47. பதில்கள்
    1. பூந்தளிர் May 20, 2015 at 10:07 AM
      //என் பின்னூட்டம் வந்ததா?//
      இல்லை. இன்னும் வரவில்லையே ! மீண்டும் அனுப்புங்கோ, ப்ளீஸ்

      நீக்கு
  48. ஊர்ல எல்லூருக்கும் ஸ்வீட் பண்ணிக்கொடுப்பவரால தன் குழந்தைக்கு பண்ணிக் கொடுக்க முடியலியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 20, 2015 at 6:14 PM

      //ஊர்ல எல்லூருக்கும் ஸ்வீட் பண்ணிக்கொடுப்பவரால தன் குழந்தைக்கு பண்ணிக் கொடுக்க முடியலியே.//

      பிராப்தம் இல்லாமல் போச்சே ! :(
      இதில் அவரின் சுய கெளரவமும்
      அதைத் தடுத்து விட்டதே :(
      என்ன செய்வது?
      -=-=-=-

      ஆஹா வந்திடுச்சு ..... சிவகாமியின் ஜாங்கிரி போன்ற பின்னூட்டம். மிக்க மகிழ்ச்சிம்மா.

      நீக்கு
  49. எனக்கே ஜாங்கிரி சாப்பிட்ட மாதிரி இருக்கு உங்க வர்ணனையை படிச்சதும்.

    நல்ல வேளை அந்த குட்டிப் பையனுக்கு கடை ஜாங்கிரியாவது கிடைச்சதே. அதுல எனக்கு சந்தோஷம்.

    பணமும், மனிதாபிமானமும் சேர்ந்து இருப்பது அரிது.

    அடுத்தவங்க வயத்த கவனிக்கற பழக்கத்த சின்ன வயசில இருந்தே நம்ம குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும்.

    வாய் வாழ்த்தாட்டாலும் வயறு வாழ்த்தும். பழமொழி எல்லாம் பெரியவங்க ஒண்ணும் சும்மா சொல்லி வெக்கல. எல்லாம் அனுபவ பூர்வமா சொன்னது தான்.

    பதிலளிநீக்கு
  50. இலவச இணைப்பாக நட்சத்திரக் கோவில் பற்றிய விவரத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  51. சே இன்னா கோராமயா கீது. அல்லாருக்கும் வாய்க்கு ருசியா ஸ்வீட் பண்ணி கொடுக்கறவகளுக்கு வூடு ல பழய சோறு சாப்புடுற நெலமயா.

    பதிலளிநீக்கு
  52. நட்சத்திர கோவில் பற்றிய தகவல்கள் நல்லா இருக்கு. பொதுவாக சமையல் வேலை செய்பவர்கள் சுவையாக சமையல் செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். ஆனா அவர்கள் சாப்பிடுவதோ ஒரு கைப்பிடி மோர்ச்சாதமாகத்தான் இருக்கு. பணம் படைத்தவர்களுக்கு கொடுக்க மனம் வருவதில்லையே. தன் குழந்தைக்கு கடை ஜிலேபி வாங்கி கொடுக்கும்படி ஆனதே. ஜாங்கிரி பற்றியவிவரணை படிக்க படிக்கவாயெல்லாம் இனிப்புச்சுவை.

    பதிலளிநீக்கு
  53. ஜாங்கிரி சுடுற ஜாரணிக் கரண்டி போல நம்ப மாஸ்டரோட நெலமயும்...டேஸ்ட் பாக்க முடியுறதில்லை...கொத்தனார் குடிசை வீட்டில இருக்குறமாதிரிதான்...ஆனா இப்ப கொஞ்சம் நெலம மாறி இருக்குர மாதிரிதான் தெரியுது...யதார்த்தமான கதை...அடுப்புல வேகுற மாஸ்டருக்கு நீராகாரமோ பழைய அமுதோ...உடலக்கு பலன் கொடுக்கக்கூடிய பொருத்தமான உணவுதான்...அதுலயும் வாத்யார் பஞ்ச்...

    பதிலளிநீக்கு
  54. //என்ன தான் பெரிய பணக்காரர்களாக இருப்பினும், ஸ்வீட் மாஸ்டருக்கும் ஒரு குடும்பம் குழந்தை குட்டிகள் என்று இருக்காதா என்ற எண்ணமும், மனிதாபிமானமும் ஒரு சிலருக்கு இருப்பதில்லை என்று நினைத்துக்கொண்டே, பஸ்ஸை விட்டு இறங்கியதும், நேராக எதிர்புறம் உள்ள ஸ்வீட் கடையொன்றில் அரைக்கிலோ ஜாங்கிரி வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார், நாகராஜன்.
    // யதார்த்தம்! செவ்வாழை கதை நினைவுக்கு வந்தது!

    பதிலளிநீக்கு
  55. கொஞ்ச நேரம் கழித்துப் பின்னூட்டம் எழுதுறேன். யாருமே நீங்கள், ஜாங்கிரி (அல்லது மெட்'ராஸ் ஜிலேபி) படத்துக்குப் பதிலாக, வட'நாட்டு, மைதா மாவைப் புளிக்கவைத்துச் செய்யும் ஜிலேபி படத்தைப் போட்டுள்ளீர்களே என்று சொல்லவில்லையே? நீங்களும், ஜாங்கிரி படம் கிடைக்காமல் ஜிலேபி படத்தைப் போட்டீர்களா? பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ, வணக்கம்.

      ஜாங்கிரி வேறு .... ஜிலேபி வேறா ? நான் இரண்டும் ஒன்றல்லவா இதுவரை நினைத்துக்கொண்டுள்ளேன். :)

      நீக்கு