என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 10 நவம்பர், 2011

அமுதைப் பொழியும் நிலவே !








அமுதைப்பொழியும் நிலவே !

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்






என் அலுவலகத்திற்கு மட்டும் அன்று விடுமுறை. காலை சுமார் ஏழு மணி. வீட்டிலே மின் வெட்டு. காற்று வாங்க காலாற நடந்து கொண்டிருந்தேன்.


திருச்சிக்குப் புதியதாக, அரசால் ஒரு சில தொடர் பேருந்துகள் (மிக நீளமான ரயில் பெட்டிகள் போல இணைக்கப்பட்டிருக்கும் இரண்டு பஸ்கள்) விடப்பட்டுள்ளன. அதில் பயணிக்க வேண்டும் என்று எனக்கும் பல நாட்களாக ஒரு ஆசை உண்டு. நேற்று வரை அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. 

அந்தத் தொடர் பேருந்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கென்னவோ விசித்திரமான ஒரு சில நினைவுகள் அடிக்கடி வருவதுண்டு. சிறு வயதில் நான் கண்ட மழைக்கால ‘மரவட்டை’ என்று அழைக்கப்படும் ரெயில் பூச்சியைப் போல அது நீளமாக இருப்பதாக மனதில் தோன்றும். மேலும் என்றோ ஒரு நாள் தெருவில் வால் பக்கமாக இணைந்தபடி இரு பைரவர்கள் என் கண்களில் பட்டனர். அந்த இரு பைரவர்களைப் போலவே இந்த இரண்டு பேருந்துகளையும் மிகவும் கஷ்டப்பட்டு இணைத்துள்ளார்களே என்றும் நினைத்துக் கொள்வதுண்டு.


சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட் அருகே, இன்று ரோட்டில் நடந்து சென்ற என்னை உரசுவது போல என் அருகே தொடர்பேருந்து ஒன்று வந்து நினறது. கும்பல் அதிகமாக இல்லாததால், நானும் அதில் ஏறிக்கொண்டு, ஜன்னல் பக்கமாக ஒரு இருக்கையில் காற்று நன்றாக வரும்படி அமர்ந்து கொண்டேன்.

அந்தப் பேருந்து பொன்மலைப்பட்டியிலிருந்து துவாக்குடி வரை செல்வதாக அறிந்து கொண்டேன். காற்றாட துவாக்குடி வரை போய்விட்டு இதே பேருந்தில் திரும்ப வந்து விட்டால், வீட்டில் மின் தடையும் நீங்கி விடும். பாதி விடுமுறையை பஸ்ஸிலும், மீதியை வீட்டிலும் கழித்து விடலாம் என்று கணக்குப் போட்டு பஸ் டிக்கெட் வாங்கிக் கொண்டேன். 

வெறும் காற்று வாங்க வேண்டி, காசு கொடுத்துப் பயணமா, என நீங்கள் கேட்பது எனக்கும் புரிகிறது. நான் என்ன செய்வது? மின் வெட்டுச் சமயங்களில் சாமான்ய மனிதனின் பிழைப்பும் இன்று நாய்ப் பிழைப்பாகத்தானே உள்ளது. 


வண்டி நகர்ந்த சிறிது நேரத்திலேயே வீசிய காற்று மிகவும் சுகமாக இருந்தது. அடுத்தப் பேருந்து நிறுத்தத்திலேயே இளம் வயதுப் பெண்கள் பலரும் ஏறிக் கொண்டு பேருந்தை கலகலப்பாக்கினர்.


ஒரே மல்லிகை மணம் கமழ ஆரம்பித்தது. எனது பக்கத்து இருக்கையில் ஒரு அழகு தேவதை வந்து அமர்ந்தாள். 





“எக்ஸ்க்யூஸ் மீ, ஸார், இந்த பஸ் பீ.ஹெச்.ஈ.எல். வழியாகத் தானே போகிறது?” 

“ஆமாம், நீங்கள் எங்கே போகணும்?”



“ பீ.ஹெச்.ஈ.எல். இல் உள்ள ‘வெல்டிங் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ க்கு எட்டு மணிக்குள் போய்ச் சேரணும், ஸார்; தயவுசெய்து ஸ்டாப்பிங் வந்ததும் சொல்லுங்கோ ஸார்” என்று குழைந்தாள்.



[குறிக்கோள் ஏதும் இல்லாமல் புறப்பட்ட என் பயணத்தில், பிறருக்கு, அதுவும் ஒரு அழகு தேவதைக்கு, உதவும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியானேன்.


பல்வேறு பில்டிங் காண்ட்ராக்ட் விஷயமாக, பல முறை இவள் போக வேண்டியதாகச் சொல்லும் இடத்திற்கு நான் சென்று வந்துள்ளதால், அது எனக்கு மிகவும் பரிச்சயமான இடமாக இருப்பதும், ஒரு விதத்தில் நல்லதாகப் போய் விட்டது]



“ஓ...கட்டாயமாகச் சொல்கிறேன். நானும் அங்கே தான் போகிறேன். நீங்கள் என்ன வேலையாக அங்கே போகிறீர்கள்?” 

நான் பாலக்காட்டிலிருந்து வந்துள்ளேன். ஐ.டி.ஐ. தொழிற்கல்வி பயின்றுள்ளேன். உலோகப் பற்றவைப்பை சிறப்புப் பாடமாக கற்றுள்ளேன். வெல்டிங் சம்பந்தமாக உலகத்தரம் வாய்ந்த சிறப்புப் பயிற்சி எடுக்கப்போகிறேன். இதோ எனக்கு வந்துள்ள அழைப்புக் கடிதம். இன்று முதல் ஒரு மாதம் அந்த ட்ரைனிங் எடுக்கணும். தினமும் வரணும். இன்று முதன் முதலாகப் போவதால், பஸ் ரூட், வழி முதலியன தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது”. என்றாள் மலையாளம் கலந்த பாலக்காட்டுத் தமிழில். 


அழைப்புக் கடிதத்தை நோட்டமிட்டேன். பெயர்: அமுதா. வயது: 19, கனிந்த பருவம், அழகிய உருவம், அரைத்த சந்தன நிறம், மிடுக்கான உடை, துடுக்கான பார்வை, வெல்டிங் சம்பந்தமாக ட்ரைனிங் எடுக்கப்போகிறாள்.


அவளின் ட்ரைனிங் முடியும் இந்த ஒரு மாத காலத்திற்குள் அவளுடன் என்னையும் நான் வெல்டிங் செய்து கொள்ள வேண்டும். முடியுமா? முயற்சிப்போம். என்னுள் பலவிதமான எண்ணங்கள் அலை மோதி, மனதில் பட்டாம் பூச்சிகள் சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கின.


“இந்த பஸ் நேராக நீங்கள் போக வேண்டிய இடத்துக்குப் போகாது. திருவெறும்பூர் தாண்டியதும் ஒரு மிகப்பெரிய ரவுண்டானா வரும். அதை ‘கணேசா பாயிண்ட்’ என்று சொல்லுவார்கள். அங்கே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து போய்விடலாம்” என்றேன்.

”ஓ. கே. ஸார், ஆட்டோவுக்கு எவ்வளவு பணம் தரும்படியாக இருக்கும்?” என்றாள். 

“நோ ப்ராப்ளம்; நானே ஆட்டோவில் கொண்டு போய் விடுகிறேன். எனக்கும் அந்தப் பக்கம் ஒரு வேலை உள்ளது. நீங்களும் எட்டு மணிக்குள் அங்கு போய்ச் சேர வேண்டுமே! ... அதிருக்கட்டும் ... திருச்சியில் மேலும் ஒரு மாதம் தாங்கள் தங்கி ட்ரைனிங் எடுக்கணுமே, யாராவது சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா? எங்கு தங்கப் போவதாக இருக்கிறீர்கள்?” 

“நேற்று இரவு மட்டும் கல்லுக்குழி என்ற இடத்தில் உள்ள என் சினேகிதியின் வீட்டில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு தங்கிக் கொண்டேன். இன்று மாலை அவளுடனேயே சென்று வேறு எங்காவது லேடீஸ் ஹாஸ்டல் போன்ற நல்ல பாதுகாப்பான செளகர்யமான இடமாகப் பார்க்கணும் என்று இருக்கிறேன்”. என்றாள்.

என்னுடைய விஸிடிங் கார்டு, வீட்டு விலாசம், செல்போன் நம்பர் முதலியன கொடுத்தேன்.

“எந்த உதவி எப்போது தேவைப் பட்டாலும், உடனே தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளலாம்” என்றேன். 

“தாங்க்யூ ஸார்” என்றபடியே அவற்றை தன் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய கைப்பைக்குள் திணித்துக் கொண்டாள்.

என்னையே முழுவதுமாக அவள் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டது போல உணர்ந்து மகிழ்ந்தேன். ஞாபகமாக அந்த அமுதைப் பொழியும் நிலவின் செல்போன் நம்பரையும் வாங்கி என் செல்போனில் பதிவு செய்து, டெஸ்ட் கால் கொடுத்து, தொடர்பு எண்ணை உறுதிப் படுத்திக் கொண்டேன். 

இன்று இரவு அவளை ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் தங்கச் செய்து, அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து, அசத்த வேண்டும் என மனதிற்குள் திட்டம் தீட்டினேன்.



“குமரிப்பெண்ணின் ... உள்ளத்திலே ... குடியிருக்க ... நான் வரவேண்டும் ... குடியிருக்க நான் வருவதென்றால் ... வாடகை என்ன தர வேண்டும்” என்ற அழகான பாடல் பேருந்தில் அப்போது ஒலித்தது, நல்ல சகுனமாக எனக்குத் தோன்றியது.



அவள் மனதில் இடம் பிடித்து அவளை வெல்டிங்கோ அல்லது வெட்டிங்கோ செய்து கொள்ள, அவளிடம் முதலில் என் காதல் நெஞ்சைத் தர வேண்டும் என்று புரிந்து கொண்டேன். என் இந்தக் காதல் முயற்சியில் எனக்கு வெற்றி கிட்டுமா என சிந்திக்கலானேன்.






திடீரென குப்பென்று வியர்த்தது எனக்கு. யாரோ என் தோள்பட்டையைத் தட்டுவது போல உணர்ந்தேன். கண் விழித்துப் பார்த்தேன். எதிரில் பேருந்து நடத்துனர்,

“துவாக்குடி வந்திடுச்சு, சீக்கரம் இறங்குங்க” என்றார். 

பக்கத்து இருக்கையில் பார்த்தேன். என் அமுதாவைக் காணோம். அப்போ நான் கண்டதெல்லாம் பகல் கனவா? 

தொடர் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், நல்ல காற்று வீசியதில் சுகமாகத் தூங்கியுள்ளேன். அருமையான கனவில், அற்புதமான என் அமுதா என்னருகில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறாள். 

கண்களைக் கசக்கிக் கொண்டே, மீண்டும் துவாக்குடியிலிருந்து சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட்டுக்கு ஒரு பஸ் டிக்கெட் வாங்கிக்கொண்டு, என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

\
“அமுதைப் பொழியும் நிலவே ..... நீ அருகில் வராததேனோ....” என்ற பாடல், மிகவும் பொருத்தமாக இப்போது பேருந்தில் ஒலிக்க ஆரம்பித்தது. 

பெரும்பாலும் காலியான இருக்கைகளுடன் இருந்த அந்தத் தொடர்ப் பேருந்தில், அடுத்த இரண்டாவது ஸ்டாப்பிங்கான திருவெறும்பூரில் பலர் முண்டியடித்து ஏறினர். 

“கொஞ்சம் நகர்ந்து உட்காரய்யா ..... சாமி” எனச் சொல்லி ஒரு காய்கறி வியாபாரக் கிழவி, தன் கூடை மற்றும் மூட்டை முடிச்சுக்களுடன் என் அருகில் அமர்ந்து கொண்டாள். 

அந்தக்கிழவி என்னைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தன் தலையை நீட்டி, வாயில் குதப்பிய வெற்றிலை பாக்குச் சாறை, சாலையில் உமிழ்ந்து விட்டு, என்னையும் ஒரு லுக் விட்டுவிட்டு, தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.



 

“அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.


oooooooooo
முற்றும்
oooooooooo












14. சித்திரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 

சென்று வழிபட வேண்டிய கோயில்:-

அருள்மிகு சித்திரரத வல்லபப்பெருமாள்
திருக்கோயில் [வியாழ பகவான்] 

இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., 
தூரத்திலுள்ள குருவித்துறைக்கு 
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 
பஸ் உள்ளது. 

குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. 
தூரத்தில் கோயில் ள்ளது.

வியாழன், பவுர்ணமி தினங்களில்  
கோயில் வரை பஸ்கள் செல்லும். 

மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.








14/27

41 கருத்துகள்:

  1. ஒரே மல்லிகை மணம் கமழ ஆரம்பித்தது. எனது பக்கத்து இருக்கையில் ஒரு அழகு தேவதை வந்து அமர்ந்தாள்.


    கனவைப் பொழிந்த நிலவு!
    அருமையான கதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆகா, என்னை முதல்முதலில் கவர்ந்த உங்கள் பதிவல்லவா? மீள்பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_13.html

    அருளும் குருவும் திருவும்

    என்ற தலைப்பிலான பதிவும் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு துணை புரியும்..

    பதிலளிநீக்கு
  4. சித்திரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்


    சென்று வழிபட வேண்டிய கோயில்:-

    அருள்மிகு சித்திரரத வல்லபப்பெருமாள்
    திருக்கோயில் [வியாழ பகவான்]

    பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. அந்த கடைசிப் பாரா வெல்டிங் - அந்த கனவு அமுதா பெயரை இங்கே கண்முன் கொண்டு வந்து சேர்த்தது, கதைபண்ணும் கற்பனையின் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  6. சற்று முன் கிடைத்த தகவல் படி ......
    பதிவு உலக ..........
    அன்பின் நண்பர்கள் ,
    அன்பின் தோழிகள் ,
    அனைவர்க்கும் ஒரு மகிழ்வான தகவல் .
    உணவு உலகம் திரு .சங்கரலிங்கம் சார் தலைமையில்
    இன்று
    "ஒரு இனிய பதிவர் சந்திப்பு .."
    சிறப்பு விருந்தினர் " துபாய் ராஜா "
    இடம்:ஹோட்டல் ராஜ் திலக் . திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் .
    நேரம் :மாலை 5 மணி .
    வாருங்கள்,வாருங்கள் ! ஒரு சுவையான மகிழ்வான சந்திப்புக்கு ...
    தொடர்புக்கு :-9597666800 ,9442201331 ,8973756566
    வாருங்கள்............வாழ்த்துங்கள் ............
    அன்புடன்
    யானை குட்டி
    http://yanaikutty.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. உங்கள் கனவுக் கன்னி அமுதா தங்களிடம் வந்து சேர்வதற்குள் வயதாகிவிட்டதோ :)))))))) ரசித்தேன் :))

    பதிலளிநீக்கு
  8. முன்பே படித்த நினைவு. கனவைக் கலைத்த அமுதே நீ. நினைவில் வேறான தேனோ.?

    பதிலளிநீக்கு
  9. நல்ல கதை சார். நட்சத்திர கோவில் அறிமுகத்திற்கும் நன்றி. எங்க ஊர் பக்கமாகிவிட்டதே அதனால்.

    பதிலளிநீக்கு
  10. ஏற்கெனவே படித்ததாயினும்
    சுவாரஸ்யம் குறையவில்லை
    த,ம 5

    பதிலளிநீக்கு
  11. சமயத்தில் கனவுகள் சுகமானதுதான்

    பதிலளிநீக்கு
  12. சுவாரஸ்யமாக இருந்தது அருமையான கதை

    பதிலளிநீக்கு
  13. சிறுகதைகளில், தனி முத்திரை பதிக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  14. நினைச்சபடியே அமுதா வந்து சேர்ந்துட்டாங்க.. ஹீரோ என்ன செய்யப் போறார் :-))

    பதிலளிநீக்கு
  15. அமுதைப் பொழியும் நிலவு
    வராது விட்டாலும் பறவாயில்லை.
    வெற்றிலை சாறு பொழியும்
    அமுதம்மாவாவது அருகில் வராதிருந்திருக்கலாமே..

    இன்றைய அமுதாக்களில்
    மல்லிகைப் பூ மணக்கும்.
    நாளைய அமுதாக்களில்
    வெற்றிலை நெடி மணக்கும்.

    ஏனெனில்..
    இன்றைய அமுதாக்கள் தானே..
    நாளைய
    அமுதம்மாக்கள்.

    நன்று.

    தீபிகா.
    http://theepikatamil.blogspot.com/

    பதிலளிநீக்கு
  16. theepika said...
    //அமுதைப் பொழியும் நிலவு
    வராது விட்டாலும் பரவாயில்லை.
    வெற்றிலை சாறு பொழியும்
    அமுதம்மாவாவது அருகில் வராதிருந்திருக்கலாமே..

    இன்றைய அமுதாக்களில்
    மல்லிகைப் பூ மணக்கும்.
    நாளைய அமுதாக்களில்
    வெற்றிலை நெடி மணக்கும்.

    ஏனெனில்..
    இன்றைய அமுதாக்கள் தானே..
    நாளைய
    அமுதம்மாக்கள்.

    நன்று.

    தீபிகா.
    http://theepikatamil.blogspot.com/

    தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேரம் கிடைத்தால் தொடர்ந்து வாருங்கள். கருத்துக்கள் கூறுங்கள். WELCOME vgk

    பதிலளிநீக்கு
  17. மனித மனதின் அல்ப ஆசைகளையும் யதார்த்தையும் அருமையாகச் சொல்லும் கதை

    பதிலளிநீக்கு
  18. சென்னை பித்தன் said...
    //மனித மனதின் அல்ப ஆசைகளையும் யதார்த்தையும் அருமையாகச் சொல்லும் கதை//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்கும் மிக்க நன்றி, ஐயா. அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  19. ஆஹா....

    மின்வெட்டு இருந்தால் உடனே அருகில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அல்லது போத்தீஸ்ல போய் ஏசி காற்று வாங்கிவிட்டு விண்டோ ஷாப்பிங் பண்ணிட்டு வரச்சொல்லி இருக்காங்க அம்மா... அம்மாக்கு இந்த கதை படிச்சு காண்பித்ததும் ஒரே சிரிக்கிறாங்க அம்மா...

    நகைச்சுவை உணர்வு கதை முழுக்க மணக்கிறது அண்ணா....

    பகல் கனவு காணப்போறேன்னு சொல்லிட்டே கண் உறங்கி... காதுல லேசா லேசா அனுமதி இன்றி பொழிந்த அமுதை எனும் நிலவு.... கற்பனையில் அருகில் வந்து உட்கார்ந்து மொத்த டீட்டெயிலும் வாங்கிட்டு தன்னுடையதும் கொடுத்துட்டு... வெல்டிங்கோ வெட்டிங்கோ (இங்கே சொல்லாடல் அருமை )முடிச்சிரனும் என்ற வேகம் பேருந்து நடத்துனர் தோள் தட்டி எழுப்பி காரியத்தையே கெடுத்துவிட்டாரே... அடடா ச்சுச்சு..

    அமுதா வந்து பக்கத்துல உட்காரலேன்னாலும் பரவாயில்ல ஆனா இப்படி பாட்டி அதுவும் வெற்றிலை குதப்பிய பாட்டி கட்டி அணைக்கிறா மாதிரி வந்து வெளியே தலை நீட்டி எச்சில் துப்பிவிட்டு உட்கார்ந்திருக்கவேண்டாம் தான். பாவம் நம் ஹீரோ... ” ஙே “ ந்னு முழிச்சிருப்பாரே...

    அருமையான ரசனை.... அமுதாவைப்பற்றி விவரிக்கும்போது அழகிய ரசிக்கவைத்த வர்ணனை...

    கற்பனைகள் எல்லாம் பகல்கனவானாலும் எங்களுக்கு நகைச்சுவையோடு கதை விருந்து கிடைத்ததே... அதனால் தான் சொல்றேன் கற்பனை எல்லாம் மலரனும்னா பகல் கனவு காணுங்க என்று.....

    கடைசி காட்சி படிக்கும்போது அம்மா அதிகமா சிரித்தார்கள் அண்ணா...

    வீட்டுக்கு போய் தூக்கத்தில் உளறலையே அமுதா அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ என்று... ரசித்து சிரித்தேன் அண்ணா... தலைப்பு எப்பவும் அசத்துறீங்க...

    ரசிக்கவைத்த மனம் விரும்பிய பகிர்வு.... அன்பு வாழ்த்துகள் இதழிலும் பிரசுரமானதற்கு அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி மஞ்சுவே! வாங்கோ, வணக்கம்.

      கதையில் வரும் கனவுக்கன்னி அமுதா போல கருத்துச் சொல்ல வந்துட்டீங்க! என்னவெல்லாம் சொல்லிக் கலக்கப் போறீங்களோ!! ஒரே கவலையா இருக்கு. ;)))))


      //அம்மாக்கு இந்த கதை படிச்சு காண்பித்ததும் ஒரே சிரிக்கிறாங்க அம்மா...//

      நல்லவேளையா எனக்கு உங்க அம்மா பெயர் தெரியும்.
      நீங்க ஏற்கனவே சொல்லியிருக்கீங்க.

      அது அமுதாம்மாவாக இல்லாதது நல்லதாப்போச்சு. ஆகவே
      அம்மாவையே சிரிக்க வைத்த மஞ்சு வாழ்க!

      //நகைச்சுவை உணர்வு கதை முழுக்க மணக்கிறது அண்ணா....//

      பேருந்தைக் கலகலப்பாக ஆக்கிய பெண்களின் தலையில் சூடியிருந்த மல்லிகை மணம் தானே! அது மணக்கத்தான் செய்யும், மஞ்சு ;)))))

      //வெல்டிங்கோ வெட்டிங்கோ(இங்கே சொல்லாடல் அருமை) முடிச்சிரனும் என்ற வேகம் //

      ஆமாம். ரொம்பத்தான் வேகம்.

      தொடரும்..... vgk

      நீக்கு
    2. VGK to மஞ்சு ..... [2]

      //அமுதா வந்து பக்கத்துல உட்காரலேன்னாலும் பரவாயில்ல ஆனா இப்படி பாட்டி அதுவும் வெற்றிலை குதப்பிய பாட்டி கட்டி அணைக்கிறா மாதிரி வந்து வெளியே தலை நீட்டி எச்சில் துப்பிவிட்டு உட்கார்ந்திருக்கவேண்டாம் தான்.//

      அதானே!

      அதைவிட அந்த பாட்டி பெயரும் ’அமுதா’ ன்னு இருந்திருக்க வேண்டாம். கஷ்டம் கஷ்டம் மஹா கஷ்டம்.

      தொடரும்.... vgk

      நீக்கு
    3. VGK to மஞ்சு ..... [3]

      //அருமையான ரசனை.... அமுதாவைப்பற்றி விவரிக்கும்போது அழகிய ரசிக்கவைத்த வர்ணனை...//

      ஆஹா, உங்களுக்கு எப்போதுமே நல்லதொரு ரசனை தான். உங்களையே இந்த வர்ணனைகள் இவ்வளவு தூரம் ரசிக்க வைத்திருக்கும் போது எங்கள் பாடு ரொம்ப கஷ்டமாச்சே! ;)))))

      //கற்பனைகள் எல்லாம் பகல்கனவானாலும் எங்களுக்கு நகைச்சுவையோடு கதை விருந்து கிடைத்ததே...//

      அடடா! என்னவொரு ஆசை [நகைச்சுவைக் கதை] விருந்து சாப்பிட !!

      // அதனால் தான் சொல்றேன் கற்பனை எல்லாம் மலரனும்னா பகல் கனவு காணுங்க என்று.....//

      நீங்கபாட்டுக்கு இது போல ஏதாவது சொல்லிட்டுப் போயிடுங்க .... அவனவன் தலையைப்பிய்ச்சுக்கிட்டு
      அலைவதைப் பார்ப்பதில் ஓர் சந்தோஷமா? ;)))))

      தொடரும் .... vgk

      நீக்கு
    4. VGK to மஞ்சு ..... [4]

      //கடைசி காட்சி படிக்கும்போது அம்மா அதிகமா சிரித்தார்கள் அண்ணா...//

      இதைக் கேட்கவே எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு, மஞ்சு.

      //ரசித்து சிரித்தேன் அண்ணா... தலைப்பு எப்பவும் அசத்துறீங்க...//

      மிக்க நன்றி + மகிழ்ச்சி .... மஞ்சு.

      //ரசிக்கவைத்த மனம் விரும்பிய பகிர்வு.... அன்பு வாழ்த்துகள் இதழிலும் பிரசுரமானதற்கு அண்ணா...//

      மனம் மகிழ்ந்து, மனம் திறந்து பாராட்டி வாழ்த்தியுள்ள தங்களுக்கும், தங்களுடனேயே சிரித்து மகிழ்ந்த தங்கள் தாயாருக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      பிரியமுள்ள
      VGK

      நீக்கு
  20. ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்... என்னா ஒரு கற்பனை:) இது ரொம்ப ஓவர்:).

    //வண்டி நகர்ந்த சிறிது நேரத்திலேயே வீசிய காற்று மிகவும் சுகமாக இருந்தது. அடுத்தப் பேருந்து நிறுத்தத்திலேயே இளம் வயதுப் பெண்கள் பலரும் ஏறிக் கொண்டு பேருந்தை கலகலப்பாக்கினர்.//

    அவ்வ்வ்வ்வ் நீங்களே சொல்லிட்டீங்க... பெண்கள் இருந்தால்தான் கலாஆஆஆஆஆ கலப்பாகும்:)) நான் பஸ் ஐச் சொன்னேன்:).

    சூப்பர் கற்பனை... ஆனா நிஜம்போலவும் இருக்கே:)..

    பஸ் ஐ உவமைப்படுத்திய விதமே அழகுதான்.. அமுதாவும் அழகுதான்.. அதைவிட அழகு அமுதாப் பாட்டி.... மீ எஸ்கேப்ப்ப்ப்:)

    பதிலளிநீக்கு
  21. //athiraOctober 19, 2012 11:34 AM
    //ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்... என்னா ஒரு கற்பனை:) இது ரொம்ப ஓவர்:).//

    சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு? அதுபோலவே கற்பனையும்.

    //அவ்வ்வ்வ்வ் நீங்களே சொல்லிட்டீங்க...
    பெண்கள் இருந்தால்தான் கலாஆஆஆஆஆ கலப்பாகும்:))
    நான் பஸ் ஐச் சொன்னேன்:).//

    கலாஆஆஆஆ கலப்பாகுமா? மகிழ்ச்சி; அது தான் உண்மையும்.
    நானும் கிஸ்ஸைச்சொல்லவில்லை.

    “ஏப்ரில் மேயிலே பசுமையே இல்லை” ன்னு ஒரு சினிமாப்பாட்டே இருக்குதே! அதிரா.

    //சூப்பர் கற்பனை... ஆனா நிஜம்போலவும் இருக்கே:)..//

    அதே அதே சபாபதே ! இல்லை ’அதிரபதே’ ! ;)))))

    //பஸ் ஐ உவமைப்படுத்திய விதமே அழகுதான்..//

    யாரும் துணிந்து பாராட்டாத வரிகள். நன்றியோ நன்றிகள். ;)))))

    //அமுதாவும் அழகுதான்.. அதைவிட அழகு அமுதாப் பாட்டி.... மீ எஸ்கேப்ப்ப்ப்:)//

    அடடா, கனவில் வந்த அமுதா போலவே நீங்களும் எஸ்கேப்ப்பா?

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
  22. அமுதா அமுதை பொழிகிராளா?
    அல்லது அடிமடியில் கை வைக்கிராளா
    என்பது இப்போது தெரியாது

    உங்களை போன்று ஜொள்ளு விட்டவர்கள் எத்தனையோ பேர் எல்லாவற்றையும் இழந்து
    நடுதெருவிற்கு வந்தவர்கள்
    ஏராளம்

    உதவுவதில் தவறில்லை
    அந்த நினைவோடு ஊர் சுற்றுவதும்
    அதை பலநாள் கழித்து கதை எழுதுவதும்
    வம்பை விலைக்கு வாங்கும் செய்கை.

    இது போன்ற நினைவுகளை பஸ்ஸை விட்டு இறங்கும்போதே பயண சீட்டை கசக்கி குப்பை தொட்டியில் தூக்கி எறிவதுபோல் எறிய வேண்டும்.

    ஆசைக்கு தடைபோடுங்கள்
    ஆசைகளே துன்பத்திற்கு காரணம்
    என்பதை மனதில் கொள்ளுங்கள்


    நினைப்புதான்
    பிழைப்பை கெடுக்குதையா......

    நிறைவேறாத ஆசைகளை
    மனம் இப்படிதான் உங்களைப்போல்
    எழுதி தீர்த்துக்கொள்ளும்
    பாட்டை பாடி தீர்த்துக்கொள்ளும்
    படங்களை பார்த்து (தீர்த்துக்கொள்ளாது)
    ஆசைகளை இன்னும் வளர்த்து (கொள்ளும்)கொல்லும்

    இந்த உலகில் எல்லோரும்
    உங்களைப்போன்றுதான்
    இருக்கிறார்கள்.

    அதனால்தான் புதிது புதிதாக
    கதாநாயகிகள்(கதை நாயகிகள் தற்போது கிடையாது)
    (சதை நாயகிகள்தான் உண்டு)
    திரைப்படங்களில் தோன்றி
    கதாநாயகர்களுடன் உருண்டு பிரண்டு
    வலம் வருகிறார்கள்.

    வளம் பெறுகிறார்கள்.

    அதையறியாமல் பார்ப்பவர்கள் பர்ஸ்
    காலியாகி கொண்டிருக்கிறது தினமும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman July 24, 2013 at 5:18 PM

      வாங்கோ அண்ணா, வணக்கம் அண்ணா.

      நான் எழுதியதோ ஓர் சாதா நகைச்சுவைக் கதை !
      உங்களிடம் இப்போ நான் வாங்குவதோ உதை !!

      அண்ணாபார்த்து எது சொன்னாலும் நல்லதுக்குத்தான் இருக்கும்.

      //அமுதா அமுதை பொழிகிறாளா?
      அல்லது அடிமடியில் கை வைக்கிறாளா ?
      என்பது இப்போது தெரியாது //

      அந்த அமுதா அமுதைப் பொழிந்து என்ன பிரயோசனம்?
      அடுத்ததாக நீங்க சொல்லியுள்ளதைச் [அடிமடியில் கை வைப்பதைச்] செய்தால் அல்லவோ ஒருவித கிக் ஏற்படக்கூடும் !

      வேண்டாம், வேண்டாம் ..... இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப்போவது இல்லை.

      ஏனென்றால் என் நாக்கு தான் எனக்கு எதிரி.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான காரசாரமான கருத்துக்களுக்கும், அசத்தலான அறிவுரைகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
    2. kick உங்களின் மதியை
      மயக்கி மக்காக்கும்

      பிறகு உங்களை(sick ) சிக்காக்கும்
      இதெல்லாம் தேவையா?

      வாழ்க்கையை சிக்கலாக்கும்

      அப்புறம் அருணகிரிநாதரை போல்
      சிக்கல் சிங்காரவேலணை
      புகழ்ந்து திருப்புகழ் பாட வேண்டி வரும்.

      இதெல்லாம் தேவையா என்று
      ஒரு கணம் சிந்திப்பது நல்லது

      வருமுன் காத்துக்கொள்வதே
      அறிவுடைமை

      அவ்வாறு செய்யாமல்
      பிறகு வருந்துவது மடமை
      .
      நல்லதை சொல்வது
      என் கடமை.

      அதை ஏற்றுகொள்வதும்
      தவிர்ப்பதும்
      உங்கள் உரிமை. .

      நீக்கு
    3. Pattabi Raman July 24, 2013 at 6:28 PM

      அண்ணா வாங்கோ, வணக்கம்.

      //நல்லதை சொல்வது என் கடமை.
      அதை ஏற்றுகொள்வதும் தவிர்ப்பதும் உங்கள் உரிமை.//

      அண்ணா, என்னைப்பற்றி உங்களுக்கு முழுவதுமாக ஒன்றும் தெரியாது. என்னைப்ப்ற்றி நானே எடுத்துச்சொன்னாலும் அது அவ்வளவாக நல்லா இருக்காது.

      நான் வேறு. என் நகைச்சுவை எழுத்துக்கள் வேறு.

      கடவுள் கிருபையாலும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அனுக்ரஹத்தாலும், நான் [ஒரு ISI முத்திரை பெற்ற] மிகவும் நல்ல குணங்கள் மட்டுமே அமைந்தவன்.

      அதிர்ஷ்டவசமாக, கெட்ட வழிகள் எதுக்கும் இதுவரைப் போகாதவாறு காப்பாற்றப்பட்டுள்ளவன்.

      2005 முதல் 2010 வரை தமிழின் பிரபலமான வார/மாத இதழ்களில் என் நிறைய கதைகள் வெளியாகியுள்ளன.

      அதில் இந்தக்கதையும் ஒன்று. இதுபோன்ற சற்றே கவ்ர்ச்சி மிகுந்த கதைகளைத்தான் உடனடியாக பத்திரிகைக்காரர்கள் வெளியிடுகிறார்கள்.

      வேறு பல மிகநல்ல கதைகளை நிராகரிக்கிறார்கள்.

      இதனால் வெறுப்புற்ற நான், 2010க்குப்பிறகு, எந்தப் பத்திரிக்கைக்கும் எந்த கதைகளும் எழுதி அனுப்புவதே இல்லை.

      2011 முதல் என் வலைத்தளத்தில் மட்டுமே எழுதி வருகிறேன்.

      2005 முதல் 2010 வரை பத்திரிகைகளில் வெளியான் ஒருசில் கதைகளை மட்டும், என் வலைத்தளத்திலும் கொண்டு வந்துள்ளேன்.

      இவையெல்லாம் தங்கள் தகவலுக்காக மட்டுமே.

      என்றும் அன்புடன் உங்கள்
      VGK

      நீக்கு
  23. பேருந்தில் சும்மா போனாலும் எங்களுக்கு ஒரு அருமையான கதை கிடைத்ததே.

    பதிலளிநீக்கு
  24. நிறய கதைகள் பகல் கனவிலேயே தோன்றெயதுதானோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் May 20, 2015 at 11:13 AM

      //நிறைய கதைகள் பகல் கனவிலேயே தோன்றியதுதானோ?//

      ஆமாம். என்ன செய்வது? நம் மனதில் அவ்வப்போது பூக்கும் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் அழகாகச் சொல்லிவிட்டு, எல்லாமே கனவுதான் என்று கடைசியில் சொல்லி தப்பிப்பதும் ஓர் நல்ல டெக்னிக் தானே ! :)

      நீக்கு
  25. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

    இவரு இந்த மாதிரி அழகிய பெண்களை கனவுல பார்க்கறதுக்காகவே இந்தப் பயணங்கள் மேற்கொண்டாரா?

    //“அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.//

    ஒலிக்காதா பின்னே. குயிலை எதிர்பார்த்து பகல் தூக்கத்திலிருந்து எழுந்தால் காக்கையின் குரல் கர்ண கடூரமாகத்தானே ஒலிக்கும்.

    பதிலளிநீக்கு
  26. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    'ஜொள்ளு' வடிய ஆரம்பித்து, அமுதாப் பாட்டியின் 'லொள்ளில்' முடிந்த கதை.

    ரசித்து படிக்க , சிரிக்க, சிந்திக்க வைத்த கதை.

    உங்கள் அக்மார்க் நிறைய பதித்திருக்கிறீர்கள்.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    பதிலளிநீக்கு
  27. ஐயோ பாவம் அமுத பொளிய அமுதா பாட்டி வந்திச்சா.சூப்பரு.

    பதிலளிநீக்கு
  28. வீட்டில் கரண்ட் கட் ஆகும்போது பஸ் பயணம் சுகம்தான் கண்மயங்கி பகல் கனவில் இளமையான அமுதாவையும் ரஸிக்கலாம் நிஜத்தில் அமுதா பாட்டிமா வந்தா எரிச்சலும் அடையலாம்.

    பதிலளிநீக்கு
  29. சேர நன்னாட்டிளம் பளிச் பெண்ணை கனவில பாத்துட்டு...முழிச்சா...பக்கத்துல புளிச்-னு துப்புற கிழவி...ஐயோ பாவம்.

    பதிலளிநீக்கு
  30. //நிலவே என்னிடம் நெருங்காதே! எனும் பாடல் எங்கோ ஒலிக்கிறது!

    பதிலளிநீக்கு