எட்டாக் க[ன்]னிகள்
சிறுகதை
By வை. கோபாலகிருஷ்ணன்
நான் தினமும் பயணிக்கும் அரசுப்பேருந்தில், அது கிளம்பும் இடத்திலேயே ஏறி விடுவதால் அதிக கும்பல் இருக்காது. பாதி பஸ் காலியாகவே இருக்கும். கடந்த ஒரு மாத காலமாக மட்டும் இளம் வயதுப்பெண்கள் ஒரு கூட்டமாக அந்தப்பேருந்தில் ஏறி கலகலப்பை ஏற்படுத்து வருகின்றனர்.
ஏதோ ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் ப்ராஜக்ட் வொர்க்கோ, டிரைனிங்கோ செய்யச்செல்கின்றனர் என்று கேள்வி. எது எப்படியோ மல்லிகை மணத்துடன் பயணம் இப்போது இனிமையாக மாறியுள்ளது எனக்கு.
அந்தக்கூட்டத்தில் ஒருத்தி மட்டும் ஒட்டடைக்குச்சி போல அசாதாரண உயரம். குதிரை முகம். அதில் சோடாபுட்டி மூக்குக்கண்ணாடி வேறு. எலி வால் போன்ற குட்டையான கொஞ்சூண்டு தலைமுடி. மோட்டு நெற்றி.
ஒரே நிதான உயரமுள்ள மற்ற பெண்களுடன் இவள் சேர்ந்திருப்பது, ஏதோ அழகிய வாத்துக்கூட்டங்களின் நடுவே, கொக்கு ஒன்று நிற்பது போலத்தோன்றியது எனக்கு. ஆரம்பத்தில், இப்படியும் ஒரு அழகற்ற படைப்பா! என அவள் மேல் நான் அனுதாபம் கொண்டேன்.
ஆனால் நாளடைவில் அவள் என்னுடன் வலிய வந்து அன்புடன் பேசியதில், எனக்குள் ஏதோ ஒருவித இரசாயன மாற்றம் ஏற்பட்டது. எனக்கு அவளும் ஒரு அழகிய தேவதையாகவே தெரிய ஆரம்பித்து விட்டாள்.
என் உருவத்தைப் பார்த்தால் தெரியாதே தவிர, எனக்கும் விளையாட்டுப்போல முப்பது வயது ஆகி விட்டது. இதுவரை பெண் வாடையே அறியாத ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய சுத்த *பிரும்மச்சாரி* நான். இருந்தும் என் வீட்டில் இன்னும் என் திருமணம் பற்றிய பேச்சே எடுக்காமல் உள்ளனர்.
=================================================
[*பிரும்மச்சாரி* என்றால் இன்னும் திருமணமே ஆகாதவன் என்று பொருள்.
நான், ஒரு இராமாயண உபன்யாசம் கேட்ட போது, இராமாயணக் கதை சொன்னவர் வேடிக்கையாக, நகைச்சுவையாக ஒரு விஷயம் சொன்னார்.
நான், ஒரு இராமாயண உபன்யாசம் கேட்ட போது, இராமாயணக் கதை சொன்னவர் வேடிக்கையாக, நகைச்சுவையாக ஒரு விஷயம் சொன்னார்.
”அதாவது, ஆஞ்சநேயர் (அனுமன்) ஒரு சுத்த பிரும்மச்சாரி.
ஆனால் அவர் ஒரு வானரம் (குரங்கு இனம்).
வானரத்தில் கூட பிரும்மச்சாரி உண்டா? என்று நீங்கள் கேட்கலாம்.
வானரத்திலும் பிரும்மச்சாரிகள் உண்டு.
பிரும்மச்சாரிகளிலும் வானரங்கள் உண்டு” என்றார்.
இதைக்கேட்டதும் அந்த அவையில் கூடியிருந்த நாங்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம்..]
====================================================
”சார், மணி என்ன ஆகுது. என் வாட்ச் ஓடவில்லை. பேட்டரி மாற்றனும் என்று நினைக்கிறேன்” என்றாள் என்னிடம் ஒருநாள்.
”இந்தக்காவிரி நதி நீர் பிரச்சனை கடைசியில் எப்படி சார் போய் முடியும்? நமக்கு தண்ணீர் வருமா வராதா? செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த என் கவனத்தை அவள் பக்கம் திருப்பினாள், ஒரு நாள்.
“பொங்கியெழும் இளமை உணர்ச்சிகளையும், ஓடிவரும் நதி நீரையும் ஒருவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அது கட்டுக்கடங்காமல் வெள்ளமாய்ப் பாய்ந்து வரும். தாகமும் மோகமும் தீர அனுபவிப்பது அனைவரின் பிறப்புரிமையே” என விளக்கினேன்.
எனக்கு அவள் மேல் ஏற்பட்டுள்ள தாகத்தையும் மோகத்தையும் கோடிட்டுக் காட்ட இது தான் சந்தர்ப்பம் என்று விளக்கம் கொடுத்த என்னுள் ஒருவித சந்தோஷமும் பரவசமும் ஏற்பட்டதை உணர்ந்தேன்.
என் விளக்கம் கேட்ட அவளும் ஒருவித வெட்கம் கலந்த சிரிப்புடன் சென்றதாகவே எனக்கு மட்டும் புரிந்தது.
பஸ் சார்ஜுக்கு சரியான சில்லறைக்காசு இல்லாமல், நடத்துனரிடம் பாட்டு வாங்க இருந்த என்னை, தானே சில்லறை கொடுத்து உதவி செய்தாள், மற்றொரு நாள்.
இப்படியாக எங்களின் பஸ் ஸ்நேகிதம் நாளுக்கு நாள் நன்கு வளர்ந்து வந்தது. மிகவும் உயரமான அவள் என் மனதிலும் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டாள் என்றால் அது மிகையாகாது.
என் மனதிலிருந்த ஆசைகளையெல்லாம் கொட்டி, அவளுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டேன், மறுநாள் சந்திக்கும் போது எப்படியும் அவளிடம் கொடுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில்.
திடீரென்று மறுநாள் அந்தப்பெண் மட்டும் அந்த பஸ்ஸில் வரக்காணோம். எனக்கு வாழ்க்கையே சூன்யமாகி விட்டது போல ஒருவித உணர்வு ஏற்பட்டது.
என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவோ, அவள் ஏன் வரவில்லை என்று மற்ற பெண்களிடம் காரணம் கேட்கவோ, எனக்கு ஒருவித தயக்கமாக இருந்தது. அவள் ஃபோன் நம்பர், வீட்டு விலாசம் போன்ற விபரங்கள் கூட, இதுவரை அவளிடம் கேட்டு தெரிந்து கொள்ளாதது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து வேதனைப் பட்டேன்.
நான் அவளுக்கு எழுதிய கடிதத்தை நானே பலமுறை பிரித்துப் பிரித்துப் படித்ததில், அது கசங்க ஆரம்பித்து விட்டது. எப்படியும் நாளை வருவாள் என்ற நம்பிக்கையில், இரவு முழுவதும் கண் விழித்து முத்து முத்தாக மீண்டும் அதே கடிதத்தை, வேறொரு புதிய தாளில் அழகாக எழுதி முடித்து, ஒரு கவரில் போட்டு பத்திரப் படுத்திக் கொண்டேன்.
மறுநாள் பஸ்ஸில் ஏறிய சற்று நேரத்தில் ஒரு சின்னப்பெண் என்னிடம் வந்தாள், “சார், உங்க ஃப்ரண்ட் இதை உங்களிடம் கொடுக்கச்சொன்னா” என்று சொல்லி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.
“தாங்க்யூ வெரிமச்” என்று சொல்லி பலவித சந்தோஷமான கற்பனைகளுடன் அதை வாங்கிய நான், தனிமையில் அமர்ந்து, அந்தக்கவருக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு, அந்தக்கவரை அவசரமாகப் பிரித்துப் படித்தேன். கண் இருட்டி வந்து என் தலை சுற்றுவது போல உணர்ந்தேன்.
அவளுடைய அத்தைப்பையனுடன் அவளுக்கு நாளைய தினம் நிச்சயதார்த்தமாம். இரண்டு மாதங்கள் கழித்துத் திருமணமாம். நாளைய நிச்சயதார்த்தத்திற்கு நானும் கட்டாயம் வர வேண்டுமாம். அழைப்பிதழ் போல அழகாக கையால் எழுதி அனுப்பியிருக்கிறாள்.
அழகில்லாவிட்டாலும், நல்ல உயரமான அவளை மணக்கவும் ஒருவன் முன் வந்துள்ளான். அவள் மேல் ஆசை வைத்த எனக்குத்தான் கொடுப்பினை இல்லை. மன வருத்தம் அடைவதைத்தவிர நான் வேறு என்னதான் செய்ய முடியும்?
..................................
..........................................
..................................................
..........................................................
...................................................................
..............................................................................
.......................................................................................
நான் எழுந்து நின்றால் அவள் முழங்கால் வரை தான் இருப்பேன். முப்பது வயதாகியும் மூன்று அடி மூன்று அங்குல உயரமே வளர்ந்துள்ள என்னை மணக்க எவள் எங்கே பிறந்திருக்கிறாளோ? உங்களில் யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து எனக்குத் தெரிவியுங்களேன்.
-o-o-o-o-o-o-
முற்றும்
வானரத்திலும் பிரும்மச்சாரிகள் உண்டு.
பதிலளிநீக்குபிரும்மச்சாரிகளிலும் வானரங்கள் உண்டு” என்றார்.
இதைக்கேட்டதும் அந்த அவையில் கூடியிருந்த நாங்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம்..]/
அருமையான நகைச்சுவை.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
2. பரணி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று
பதிலளிநீக்குவழிபட வேண்டிய கோயில்:- அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
[சுந்தர நாயகி அம்மன்] இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து (15 கி.மீ.)
நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில்
நல்லாடை என்னும் ஊரில் உள்ளது./
பயனுள்ள பகிர்வு.. நன்றி. வாழ்த்துகள்..
Good suspense.
பதிலளிநீக்குStar Bharani - reminds me of late Actress Bhanumathy's son Bharani (Bharani studio was in his name) who studied with me in Hindu High School, Triplicane, ages back.
மீள் பதிவாயினும் மீண்டும் படிக்க
பதிலளிநீக்குசுவாரஸ்யம் குறையவில்லை
தரணி ஆளைப்பிறந்த பரணி
நட்சத்திரத்திற்கான கோவில் குறித்து படங்களுடன்
பதிவிட்டிருப்பது அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
பதிலளிநீக்குஏற்கனவே படித்திருந்தாலும்,மறுபடியும் படிக்கும் போது அலுக்கவில்லை.
பதிலளிநீக்குஅருமையாக உள்ளது கதை.
பரணி நட்சத்திரதிற்காக கோவில் பற்றிய தகவலுக்கு நன்றி.என் பெரிய பெண் பரணி.
கதையின் தலைப்புதான் எட்டாக்கனி. கருப்பொருள் எட்டிவிட்டது. அருமை. அக்னீஸ்வரை பற்றிய குறிப்பு சிறப்பாக உள்ளது.பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குசஸ்பென்ஸ் ஆக கொண்டு சென்றீர்கள் .அருமை .
பதிலளிநீக்குமீள் பதிவாக இருந்தாலும் சுவையான பகிர்வு....
பதிலளிநீக்குஅடுத்தது பரணி நட்சத்திரம்.... ம்ம்ம்ம்... தொடருங்கள்....
ஏதோ அழகிய வாத்துக்கூட்டங்களின் நடுவே, கொக்கு ஒன்று நிற்பது போலத்தோன்றியது எனக்கு.
பதிலளிநீக்குதிகட்டாத கதை.. நடை.
மீள் பதிவாக இருந்தாலும் சுவையான பகிர்வு....
பதிலளிநீக்குமீண்டும் படித்தாலும் சுவை மிகுந்ததாகவே உள்ளது
பதிலளிநீக்குவித்தியாசமான கரு கொண்ட கதை.
பதிலளிநீக்குஅன்பின் வை,கோ - கதை படிக்கலாம் - முடிவு எதிர்பாராத இரண்டு - ஒன்று நிச்சயதார்த்தம் - இரண்டு மூன்றடி உயரம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குநட்சத்திரப்பதிவர் ஆன பிறகும் "காபி& பேஸ்ட்" பதிவு போடுவதேன்??!!
பதிலளிநீக்கு(இது காபி&பேஸ்ட் பதிவு இல்லைனு சொல்ல முடியுமா)
முதலில் நட்சத்திர வார வாழ்த்துக்கள். கதையின் கடைசி சஸ்பென்ஸ் ரசிக்க வைத்தது. நன்றி
பதிலளிநீக்கு//வவ்வால் said...
பதிலளிநீக்குநட்சத்திரப்பதிவர் ஆன பிறகும் "காபி& பேஸ்ட்" பதிவு போடுவதேன்??!!
(இது காபி&பேஸ்ட் பதிவு இல்லைனு சொல்ல முடியுமா)//
ஐயா,
என்னை நட்சத்திரப்பதிவர் ஆக்கியவர்கள் தினமும் குறைந்தது ஒரு பதிவு தரவும் என்று தான் சொல்லியுள்ளார்கள்.
அதனால் தினமும் ஒரு பதிவு மட்டும் அதாவது காலை 11 மணிக்கு வெளியிடும் முதல் பதிவு மட்டும் புத்தம் புதியதாக வெளியிடுகிறேன்.
அதைத்தவிர தினமும் 3 மீள் பதிவுகள் வெளியிடுகிறேன். அதுவும் இதுவரை படிக்காதவர்கள் படிக்கட்டுமே என்று. இதைப்பற்றி தமிழ்மணத்திற்கும் நான் முன்கூட்டியே தகவல் கொடுத்துள்ளேன். அவர்கள் எந்தவிதமான ஆட்சேபணையும் சொல்லவில்லை.
மேலும் நான் cut & paste போடுவதும் நான் ஏற்கனவே எழுதி ஒருசிலர் படித்து ஒரு சிலர் படிக்காமல் இருக்கும் ஒருசிலவற்றைத் தானே!
பிறரின் படைப்புக்களை அல்லவே!!
பிறகு இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
vgk
கடைசிவரை கொஞ்சம்கூட யூகிக்கமுடியாத சஸ்பென்ஸ்!!!!
பதிலளிநீக்குஇனிய பாராட்டுகளும் தமிழ்மண நட்சத்திரமானதுக்கு என் வாழ்த்துகளும்.
ஏற்கனவே படித்துக் கருத்தும் எழுதியது
பதிலளிநீக்குஇந்தக்கதை. ரசித்தது.
மீள்பதிவு முன்பே படித்து இருந்தாலும் மறுபடியும் படித்தேன் அருமை.
பதிலளிநீக்குமூணு அடி உயரம் இருப்பதால தான் நல்ல உயரத்தை ரசிக்க முடியவில்லை. கொஞ்சம் பொறாமை போலும்!
பதிலளிநீக்குநாம எப்படி இருக்கோம் ன்னு தெரியாம பல பேர் மிச்சவங்களின் அழகை கமெண்ட் அடிப்பது ஆச்சரியமான விஷயம். எனக்கு உங்கள் கதாநாயகனின் திமிர் பிடிக்கவில்லை. ஆனால் கதை பிடித்திருந்தது :))
அட கதையின் தலைப்பே என்னவோ சொல்ல வருகிறதே...
பதிலளிநீக்குஎத்தனையோ ஆண்கள் இருக்கும் இடம் சோபிப்பதில்லை... அதுவே அங்கு ஒரு பெண் வந்துவிட்டால் அந்த இடத்திற்கே ஒரு லட்சுமி கடாக்ஷம் வந்துவிடுகிறது. ஒரு சிறப்பு வந்துவிடுகிறது... ஒரு அழகு வந்துவிடுகிறது... ஒரு மஹாலக்ஷ்மிக்கே இப்படின்னா நம்ம ஹீரோ பஸ்ல பார்த்தது எக்கச்சக்க மஹாலக்ஷ்மிகளாச்சே... அதுவும் மல்லிகை மணக்கமணக்க.... கேட்கணுமா பயணம் முழுக்க பார்வை சங்கேதம்..... பஸ்ல போடும் பாட்டும் அதில் எதுனா நேசமிகு வரிகள் வந்தால் பார்வைகள் பரிமாற்றம்.... ஆகமொத்தம் சுள்ளுனு அடிக்கும் வெயிலில் கூட பஸ் முழுக்க குளு குளுன்னு இருக்குமாமே... எனக்கு தெரியாதுப்பா கதையாசிரியரின் வர்ணனை தான் என்னை இப்படி எல்லாம் எழுத வைத்தது.... அருமையான கதை அமைப்பு....
எல்லாப்பெண்களும் அழகா பிறந்துட்டா அப்புறம் உலக அழகிக்கு வேல்யூ இல்லாமல் போய்ருமே டிஃபரண்டா ஒரு பெண்ணை கொஞ்சம் கூட அழகு துளி கூட இல்லாத அதற்கு பொருத்தமான வர்ணனை மேடு நெற்றி கொக்கு என்ற உவமை சரியான அசத்தல்.... முட்டை கண்ணாடி.... ஆனாலும் அந்த பெண் வலிய வந்து பேச பேச நம்ம முப்பது வயதை தாண்டிய பிரம்மச்சாரி( இடைச்செருகலாக பிரம்மச்சாரிப்பற்றிய விளக்கமும் உபன்யாசத்தில் கேட்ட வானரமாய பிரம்மச்சாரியும் பரம்மச்சாரியான வானரமும் அனுமன் கண்ணை குத்தப்போறார்) ரசிக்க வைத்தது....
கதையின் போக்கை பார்த்து நான் நினைத்தது காதல் அழகை, உயரம் பொறுத்து இல்லை என்றது போல காதலை வாழவைக்க இருவர் மனதிலும் காதல் மலரும் என்று நினைத்தேன். ஆனால் பிறகு தான் நினைவுக்கு வந்தது தலைப்பே எட்டாத கனி என்று குறிப்பிட்டிருந்தாரே கதை ஆசிரியர்...
பொறுத்து படித்துக்கொண்டு போனால்... அட கொக்கு அக்காவுக்கு அத்தைப்பையனோட கல்யாணம் தகைய நம்ம ஹீரோவுக்கு லவ் பிறந்துவிட்டது... லெட்டர் விடு தூது வேற.... ஹூம் என்ன செய்ய அதிர்ஷ்டம் அவ்ளவு தான்னு பார்த்தால் சூப்பர் ட்விஸ்ட்... எழுந்து நின்றால் முழங்கால் அளவு தான் இருப்பாரா??? சரியான சூப்பர் ட்விஸ்ட் அண்ணா...
மனம் கவர்ந்த கதைப்பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள் அண்ணா...
அன்புச் சகோதரி மஞ்சு,
நீக்குவாங்கோ, வாங்கோ, வணக்கம்.
ஆஹா! என் எட்டாக்கனிகளையும் நீங்க இன்னிக்கு எட்டிப்பிடித்து ருசித்து விட்டீர்களா? பேஷ் .. பேஷ்.. ;)
//எத்தனையோ ஆண்கள் இருக்கும் இடம் சோபிப்பதில்லை... அதுவே அங்கு ஒரு பெண் வந்துவிட்டால் அந்த இடத்திற்கே ஒரு லட்சுமி கடாக்ஷம் வந்துவிடுகிறது. ஒரு சிறப்பு வந்துவிடுகிறது... ஒரு அழகு வந்துவிடுகிறது... ஒரு மஹாலக்ஷ்மிக்கே இப்படின்னா நம்ம ஹீரோ பஸ்ல பார்த்தது எக்கச்சக்க மஹாலக்ஷ்மிகளாச்சே... அதுவும் மல்லிகை மணக்கமணக்க.... கேட்கணுமா பயணம் முழுக்க ....
So Sweet Comments ... I like this so much, Manju
தொடரும்.... vgk
VGK to மஞ்சு ...
நீக்கு//எனக்கு தெரியாதுப்பா கதையாசிரியரின் வர்ணனை தான் என்னை இப்படி எல்லாம் எழுத வைத்தது.... அருமையான கதை அமைப்பு....//
அடடா! கதையாசிரியரின் வர்ணனை தான் உங்களை இப்படி எல்லாம் எழுத வைத்ததா? நம்புகிறேன் .... மஞ்சு.
//எல்லாப்பெண்களும் அழகா பிறந்துட்டா அப்புறம் உலக அழகிக்கு வேல்யூ இல்லாமல் போய்ருமே//
உலக அழகிப்போட்டியில் வென்ற அழகிகளை விட மிகுந்த அழகிகள் உலகில் நிறையவே உண்டு. அவர்கள் தங்கள் அழகினை வெளிச்சமிட்டுக் காட்ட ஒருபோதும் விரும்பது இல்லை ... அப்படித்தானே மஞ்சு. நான் சொல்வது சரியா?
// .... ஆனாலும் அந்த பெண் வலிய வந்து பேச பேச நம்ம முப்பது வயதை தாண்டிய பிரம்மச்சாரியின் போக்கு ... ரசிக்க வைத்தது....//
அதானே! ஒரு பெண் நினைத்தால் வலிய வந்து பேசினால் ... அவ்வளவு தான் .... எல்லாமே போச்சு ... ஆண்கள் அவுட் ... அப்படின்னா சொல்றீங்க. எனக்கே இப்போது ரொம்பவும் பயம் ஏற்படுகிறதே! ;)))))
தொடரும்..... vgk
VGK to மஞ்சு .....
நீக்கு//பொறுத்து படித்துக்கொண்டு போனால்... அட கொக்கு அக்காவுக்கு அத்தைப்பையனோட கல்யாணம் தகைய நம்ம ஹீரோவுக்கு லவ் பிறந்துவிட்டது... லெட்டர் விடு தூது வேற.... ஹூம் என்ன செய்ய அதிர்ஷ்டம் அவ்வளவு தான்னு பார்த்தால் சூப்பர் ட்விஸ்ட்... எழுந்து நின்றால் முழங்கால் அளவு தான் இருப்பாரா??? சரியான சூப்பர் ட்விஸ்ட் அண்ணா...
மனம் கவர்ந்த கதைப்பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள் அண்ணா...//
அருமையாக அழகாக நகைச்சுவையுடன் படித்து, படித்ததை ரசித்து, ரசித்ததைப் பகிர்ந்து ... மனம் கவர்ந்ததோர் பின்னூட்டம் அளித்து மகிழ்வித்துள்ளீர்கள்.
நன்றியோ நன்றிகள்.
பிரியமுள்ள
VGK
[*பிரும்மச்சாரி* என்றால் இன்னும் திருமணமே ஆகாதவன் என்று பொருள்.
பதிலளிநீக்குநான், ஒரு இராமாயண உபன்யாசம் கேட்ட போது, இராமாயணக் கதை சொன்னவர் வேடிக்கையாக, நகைச்சுவையாக ஒரு விஷயம் சொன்னார்.
”அதாவது, ஆஞ்சநேயர் (அனுமன்) ஒரு சுத்த பிரும்மச்சாரி.
ஆனால் அவர் ஒரு வானரம் (குரங்கு இனம்).
வானரத்தில் கூட பிரும்மச்சாரி உண்டா? என்று நீங்கள் கேட்கலாம்.
வானரத்திலும் பிரும்மச்சாரிகள் உண்டு.
பிரும்மச்சாரிகளிலும் வானரங்கள் உண்டு” என்றார்.
இதைக்கேட்டதும் அந்த அவையில் கூடியிருந்த நாங்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம்..]////
சிரிக்கவும் சிந்தித்தால் உண்மையென்று தோன்றும் வரிகள் ...
இப்படி பல அருமையான அனுபவங்கல் பெற்ற தாங்கள் எழுத மறுப்பது நியாமா ...நிறைய தங்கங்கள் வேண்டும் பகிர வேண்டுகிறோம் ..உங்கள் முதலாளித்துவம் தவறு ஹி ஹி
என் அன்புக்குரிய திரு. ரியாஸ் அஹமது அவர்களே,
நீக்குவாருங்கள், வணக்கம்.
ரஸித்த பகுதியினை சுட்டிக்காட்டியுள்ளதற்கு சந்தோஷம்.
//சிரிக்கவும் சிந்தித்தால் உண்மையென்று தோன்றும் வரிகள் ... இப்படி பல அருமையான அனுபவங்கள் பெற்ற தாங்கள் எழுத மறுப்பது நியாயமா?//
இது என் அனுபவம் அல்ல. கற்பனை மட்டுமே. எழுத நான் மறுக்கவே இல்லை. சூழ்நிலைகள் சாதகமாக அமையாத்தால் மட்டுமே இந்த இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.
//இப்படி பல அருமையான அனுபவங்கள் பெற்ற தாங்கள் ...நிறைய தங்கங்கள் வேண்டும் .. பகிர வேண்டுகிறோம் ..உங்கள் முதலாளித்துவம் தவறு ஹி ஹி//
நன்றி நண்பரே! நான் முதலாளித்துவம் பேசும்/செயல்படும் முதலாளி அல்ல.
என்றும் என் எழுத்துக்களில் நான் ஒரு அடிமட்டத்தொழிலாளி மட்டுமே.
“கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி”
///ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய சுத்த *பிரும்மச்சாரி* நான். //// முடியலை சிரிப்பை அடக்க முடியவில்லை .. இதற்க்கு அப்புறம் தான் மறக்க மனம் கூடாமல் போனோதோ ...உங்கள் ஐ.எஸ்.ஐ. முத்திரையை மறுபரிசிலனை செய்ய வேண்டுமே
பதிலளிநீக்குரியாஸ் அஹமது January 15, 2013 at 12:58 AM
நீக்கு***ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய சுத்த *பிரும்மச்சாரி* நான்.***
//முடியலை சிரிப்பை அடக்க முடியவில்லை ..//
சிரித்ததற்கு என் நன்றிகள். தாங்கள் அங்கே மலேசியாவில் சிரித்தது, இங்கு திருச்சி மலைக்கோட்டையில் இடித்து, பிரதிபலித்து, என் காதுகளுக்கும் எட்டியது.
//இதற்கு அப்புறம் தான் மறக்க மனம் கூடாமல் போனோதோ//
எப்போதுமே எனக்கு “மறக்க மனம் கூடுதில்லையே” தான் .. மனதளவில்.
இது கதையில் வரும் ஓர் கதாபாத்திரம் சொல்வது ஸ்வாமீ. நான் சொல்வது அல்ல. நானே அந்தக்கதாபாத்திரமும் அல்ல.
//உங்கள் ஐ.எஸ்.ஐ. முத்திரையை மறுபரிசிலனை செய்ய வேண்டுமே//
உடல் வேறு உள்ளம் வேறு அல்லவா?
உடலளவில் நான் எப்போதுமே என் ’ஐ.எஸ்.ஐ.’ முத்திரையை இன்றுவரை தக்க வைத்துக்கொண்டுள்ளேன்.
அதனால் மறுபரிசீலனைக்கு இடமில்லை.
//நான் எழுந்து நின்றால் அவள் முழங்கால் வரை தான் இருப்பேன். முப்பது வயதாகியும் மூன்று அடி மூன்று அங்குல உயரமே வளர்ந்துள்ள என்னை மணக்க எவள் எங்கே பிறந்திருக்கிறாளோ?////
பதிலளிநீக்குதரமான நகைச்சுவையின் மிக சிறந்த உதாரண வரிகள் இவை ....
நம்மை தாழ்த்தி கொண்டு பிறரை சிரிக்க வைத்தால் யார் மனமும் புண்படாது அல்லவா ! அருமையான ஆக்கம் ..நன்றிகள் கோடி நன்றி நன்றி நன்றி .........
ரியாஸ் அஹமது January 15, 2013 at 1:01 AM
நீக்கு***நான் எழுந்து நின்றால் அவள் முழங்கால் வரை தான் இருப்பேன். முப்பது வயதாகியும் மூன்று அடி மூன்று அங்குல உயரமே வளர்ந்துள்ள என்னை மணக்க எவள் எங்கே பிறந்திருக்கிறாளோ?***
//தரமான நகைச்சுவையின் மிக சிறந்த உதாரண வரிகள் இவை ....//
நன்றி நண்பரே!
//நம்மை தாழ்த்தி கொண்டு பிறரை சிரிக்க வைத்தால் யார் மனமும் புண்படாது அல்லவா!//
தாழ்த்திக்கொண்டது என்னை அல்ல. கதையில் வரும் கதாநாயகன் இதனைச் சொல்வதாக மட்டுமே!
என் உயரம் ஆறு அடிகளுக்கு ஒரு அங்குலம் மட்டுமே குறைவு. 5’ 11” ஆகும்.
அப்படியும் இந்த என் படைப்பினால் இந்த உலகினில் சிலர் மனம் புண்பட்டிருக்கலாம். அவர்களிடம் இதன் மூலம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
//அருமையான ஆக்கம் ..நன்றிகள் கோடி நன்றி நன்றி நன்றி .........//
அன்பான வருகைக்கும் அழகான பல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நண்பா.
பிரியமுள்ள
VGK
உலகமே ஒரு நாடகமேடை என்பது எவ்வளவு உண்மை.
பதிலளிநீக்குதாங்கள் போட்டிஎன்று சொன்னதாலோ என்னவே கலந்துக்கொள்ள வேண்டும் மனம் சொன்னதாலோ என்னவோ தெரியல, வந்தேன். வந்ததற்கு நல்லா கிடைத்தது ,,,,,,,,,,,,,,
பதிலளிநீக்குமனதிற்கு, அருமையான கதை. பெண் கிடைத்தா அவருக்கு?
என் நட்சத்திரம் வர காத்து இருக்கிறேன்.
mageswari balachandran May 6, 2015 at 11:44 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தாங்கள் போட்டி என்று சொன்னதாலோ என்னவோ கலந்துகொள்ள வேண்டும் மனம் சொன்னதாலோ என்னவோ தெரியல, வந்தேன். வந்ததற்கு நல்லா கிடைத்தது ,,,,,,,,,,,,,,//
தங்களின் ஆர்வத்திற்கு நன்றி. 2011 ஜனவரி முதல் ’இனி துயரம் இல்லை’ என்பதில் ஆரம்பித்து தொடர்ச்சியாக வரிசையாகக் கலந்துகொள்ளுங்கள். தங்களால் மிகச் சுலபமாக வெற்றிபெற்று பரிசினையும் வெல்ல முடியும். நல்லபல என் படைப்புகளையும், நகைச்சுவைகளையும் ரஸிக்க முடியும். இரட்டிப்பு இலாபமாக இருக்கும். :)
//மனதிற்கு, அருமையான கதை. பெண் கிடைத்தா அவருக்கு?//
தெரியவில்லையே ! :))))))))))
//என் நட்சத்திரம் வர காத்து இருக்கிறேன்.//
கண்டிப்பாக 27 நட்சத்திரங்களுக்கும் 27 படைப்புகள் கொடுத்துள்ளேன். அதனால் கட்டாயமாக அது வரும். அது எதுவோ என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் எனக்கும் உள்ளது. :) மிக்க மகிழ்ச்சி. நன்றி.
உடல் அளவில் தானே குள்ளமானவர். மனதளவில் உயர்ந்தவரா இருக்காரே. அவருக்கும் தகுந்த பெண் கிடைப்பாள்
பதிலளிநீக்குபூந்தளிர் May 20, 2015 at 10:11 AM
நீக்குஉடல் அளவில் தானே குள்ளமானவர். மனதளவில் உயர்ந்தவரா இருக்காரே. அவருக்கும் தகுந்த பெண் கிடைப்பாள்//
சந்தோஷம். தங்கள் வாக்கு சீக்கரம் பலிக்கட்டும். :)
வானரத்திலும் பிரும்மச்சாரிகள் உண்டு.
பதிலளிநீக்குபிரும்மச்சாரிகளிலும் வானரங்கள் உண்டு”
ஹ ஹ ஹ ஹா
எத்தனை முறை படித்தாலும் அலுக்காதவை உங்கள் கதைகள்.
உங்கள் கதாநாயகன் விரைவில் மணநாள் காண வாழ்த்துகிறேன். (அதை வெச்சு இவரு இன்னும் கதையும் எழுதிடுவாரு)
மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
எட்டாக் க(ன்)னிகள் : மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிதெனக் காட்டும் கதை. அழகற்ற பெண்ணை கண்ணுக்குள் கொண்டு தரும் அழகான வர்ணனை.
நவரசத்தில்... இந்தக் கதை ஒரு ..."ஆச்சரியம்"..!
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
சர்க்கஸுல கூட கோமாளி ஆளுக குள்ளமானவங்களாதான் இருப்பாங்கபோல. அவருக்கு செட் ஆகுராப்போல பொண்ண விரும்பி இருக்கோணும்ல.
பதிலளிநீக்குகுள்ளமாக இருப்பது வியாதி ஒன்றுமில்லையே. பாக்குறவங்களுக்கு சர்க்கஸ் பபூன் போல தெரியும். அவனுக்கேத்த பெண் எங்கேயாவது பிறந்திருப்பாள்
பதிலளிநீக்குஹீரோவுக்கேத்த ஹீரோயின் எப்பவோ ஆண்டவன் ஃபிக்ஸ் பண்ணி வச்சிருப்பான்...விரைவில் தட்டுப்படுவாள்...நட்சத்திரப்பதிவுகளும் - சுவாரசியம்...
பதிலளிநீக்குமீள்பதிவு மீண்டும் இனித்தது!
பதிலளிநீக்கு