சிறுகதை
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
கப்பல் போன்ற அந்த ஏ.ஸீ. கார், காட்டுப்பாதையில் தடுத்து நிறுத்தப்பட்டது. தெருவின் குறுக்கே மூன்று மோட்டார் பைக்குகள். காரைச் சுற்றிலும் முகமூடி அணிந்த ஆறு இளைஞர்கள்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித நடமாட்டமோ, வீடுகளோ, வாகனப் போக்குவரத்துக்களோ ஏதுமின்றி சாலை முழுவதும் சுத்தமாக இருந்தது.
ஒருவன் டிரைவரின் கழுத்தருகே கத்தியை நெறுக்கிப்பிடிக்க, மேலும் இருவர், மாலையும் கழுத்துமாக வண்டியின் பின்புறம் அமர்ந்திருந்த புதுமணத் தம்பதியினரின் அனைத்து நகைகளையும் கழட்டச்சொல்லி, கைகளில் பளபளக்கும் கத்திகளுடன் மிரட்டிக் கொண்டிருந்தனர்.
விபரீதத்தின் விளைவை உணர்ந்ததும், மிரண்டு போய் ஒவ்வொன்றாக சுமார் நூறு பவுன் நகைகளையும் கழட்டிக்கொடுத்தனர்.
தாலியில் உள்ள தங்கத்தை மட்டும் தயவு செய்து விட்டுக்கொடுக்கும் படியும், தனக்கோ தன் கணவனுக்கோ எந்தவிதமான காயமும் ஏற்படுத்தாமல் விட்டு விடும்படியும், மன்றாடிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள், அது புது மணப்பெண்.
தாலியில் உள்ள தங்கத்தை மட்டும் தயவு செய்து விட்டுக்கொடுக்கும் படியும், தனக்கோ தன் கணவனுக்கோ எந்தவிதமான காயமும் ஏற்படுத்தாமல் விட்டு விடும்படியும், மன்றாடிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள், அது புது மணப்பெண்.
இந்த மூன்று கொள்ளையர்களின் கூட்டாளிகளான மற்றொரு மூவர், மோட்டார் பைக்கில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்து புறப்படத் தயார் நிலையில் இருந்தனர்.
பின்னால் சற்று தொலைவில் ஒரு லாரியும், ஜீப்பும் வருவதை அறிந்த, அந்தக்கும்பல், இதுவரை பறித்த நகைகளுடன், மோட்டார் பைக்குகளில் ஏறி, வெகு வேகமாகத் தப்பிச்சென்று விட்டது.
மிகுந்த பதட்டத்துடனும், மனக்கவலையுடனும், காரில் பயணத்தைத் தொடர்ந்து, கணவருடன் தன் புகுந்த வீட்டைச் சென்றடைந்தாள் அந்தப் புது மணப்பெண்.
அங்கு ஏற்கனவே நான்கு வேன்களிலிருந்து இறங்கி, பொண்ணு மாப்பிள்ளையாகிய இவர்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர், இரண்டு வீட்டு முக்கியஸ்தர்களும்.
பிரபல நகைக்கடையின் அதிபரும், மணப்பெண்ணின் தந்தையுமாகிய சதாசிவத்திடம், கண் கலங்கிய நிலையில், உடம்பில் ஒரு நகை கூட இல்லாமல், நடுவழியில் நடந்த கொள்ளையைப்பற்றிக் கூறினாள், அந்த புதுமணப்பெண்.
பயங்கரமான ஆயுதங்களுடன் நின்ற ஆறு கொள்ளையர்களை, தான் ஒருவனாக ஏதும் செய்யமுடியாமல் போனதை, மாப்பிள்ளையும் தன் மாமனாரிடம் வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.
“இது நான் எதிர்பார்த்தது தான் மாப்பிள்ளை! கடந்த ஆறு மாதங்களாகவே அந்தக் காட்டுப்பாதையில் இதுபோல அவ்வப்போது முகமூடிக்கொள்ளை நடப்பதாக செய்தித்தாளில் படித்து வருகிறேன். பகல் வேளை தானே, பயமில்லை என்று நினைத்து உங்களைத் தனியாக ஒரு காரில் அனுப்பி விட்டேன்; அதனால் பாவம் உங்களுக்கு இவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டுப் போய் விட்டது.
நல்லவேளையாக என் மகளின் திருமாங்கல்யம் தவிர அனைத்து நகைகளையும் கவரிங் நகைகளாகப் போட்டு அனுப்பி வைத்திருந்தேன். அவைகள் தான் இப்போது கொள்ளை போய் விட்டது. அதனால் கவலைப்படாதீர்கள்.
உங்கள் இருவரின் ஒரிஜினல் நகைகள் பூராவும், இந்தப்பெட்டியில் போட்டு தனியாக பத்திரமாக எடுத்து வந்துள்ளேன்” என்று கூறி, ஒரு பெரிய நகைப்பெட்டியை தன் பொண்ணு மாப்பிள்ளையிடம் ஒப்படைத்தார், அந்த பிரபல நகைக்கடையின் அதிபர்.
மிகவும் உஷார் பேர்வழியான சதாசிவத்தை அவரின் மகள் மட்டுமல்லாமல், சம்பந்தி வீட்டினர் அனைவருமே வெகுவாகப் பாராட்டினர்.
-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-
இந்தச்சிறுகதை வல்லமை மின் இதழில்
31.10.2011 அன்று வெளியிடப்பட்டது
மிகவும் உஷார் பேர்வழியான சதாசிவத்தை அவரின் மகள் மட்டுமல்லாமல், சம்பந்தி வீட்டினர் அனைவருமே வெகுவாகப் பாராட்டினர்./
பதிலளிநீக்குஅருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..
வல்லமையில் வெளியானதற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமையான கதை அய்யா, அதுவும் வழமைக்கு மாறாக நிறைய படங்கள், சகலகலா சதாசிவம் அமர்க்களமான மனிதர்.
பதிலளிநீக்குத ம ஓ 2
புத்திசாலித்தனம்.
பதிலளிநீக்கு-சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறைய சிறுகதைகள் எழுதும் உங்களையும் பிடிக்கும். நகைக் கடைக்காரரின் சாதுர்யத்தை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அருமை...
பதிலளிநீக்குகதையின் கடைசித் திருப்பம் படு திருப்தி
பதிலளிநீக்குஅருமையான பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 4
வணக்கம் ஐயா..
பதிலளிநீக்குதளத்தில் முதல் வருகை..
கதைமூலம் அருமையான கருத்தொன்றை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்..
கண்டிப்பாய் களவு நடக்கும் என்பதை தெரிந்து கொண்டாலும் சதாசிவம் அவர்களின் சமயோசிதம் தலைநிமிர வைக்கிறது
இன்றுமுதல் தங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன்
நன்றியுடன்
சம்பத்குமார்
சமயோசிதமாய் செயல்பட்டிருக்கிறார் பெண்ணின் அப்பா....
பதிலளிநீக்குவல்லமையில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்...
நல்ல கதை.
பதிலளிநீக்குஇறுதியில் எதிர்பாரா திருப்பம் .அருமையான கதை .வல்லமை இதழில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவல்லமையில் வெளிவந்தது மகிழ்ச்சி
பதிலளிநீக்குநாங்களும் நகைக்கடை முதலாளியை பாராட்டுகிறோம்.
பதிலளிநீக்குவல்லமையில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் ஐயா.
அருமையான கதை... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிகவும் இயல்பான அழகிய கதை ஐயா....
பதிலளிநீக்குஇப்படிப்பட்ட சாதுர்யமான செயல் தான்
மனதை மறுபடி இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்...
உங்கள் எழுத்து வல்லமை மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குஅருமையான கதை
பதிலளிநீக்குத.ம-7
யூகிக்க முடியாத நல்ல
பதிலளிநீக்குமுடிவு!
பாராட்டுக்கள்!ஐயா!
புலவர் சா இராமாநுசம்
பெண்ணுக்கு அப்பா பலே உஷார் பேர் வழியாக இருப்பார் போலிருக்கு..!
பதிலளிநீக்குHope Sadhasivam didn't sell 'covering' as gold in his shop! Haha!
பதிலளிநீக்குநகை கடைக்காரர் என்பதால் சரியான முடிவை எடுத்திருக்கிறார் போலும். நல்ல சிறுகதை. நன்றி.
பதிலளிநீக்குநீரோட்டமான நடையில் அழகிய சிறுகதை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநாடு இருக்கிற இருப்பில் எல்லாரும் வித்தியாசமாக யோசிச்சாதான் பிழைக்க முடியும் போல. சிறுகதையின் மின்னிதழ் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமின்னிதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குதாலியை மட்டும் விட்டுவிட சொல்லும்போதே நினைத்தேன்.தாலி மட்டும்தான் உண்மை தங்கமாக இருக்கும்னு.ஆனால் பெரிய ப்ளானுடன் பெண்ணின் அப்பாவின் ஐடியாவா இது.நல்ல கதை.
பதிலளிநீக்குஅருமையான கதை. எதிர்பாராத திருப்பம். பெண்ணின் அப்பா பெரிய உஷார் பேர்வழி தான்!
பதிலளிநீக்குவல்லமையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.
இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குஅன்புடன்
vgk
இது போன்று பலவித நகைகளை விரும்பிக் கேட்கும் சீர் வரிசைக்குப் பதிலடியாய் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது...சமயோசித சதாசிவம் என்கிற தலைப்பு இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும்...!
பதிலளிநீக்கு-பருப்பு ஆசிரியன்
மிகவும் உஷார் பேர்வழியான சதாசிவத்தை அவரின் மகள் மட்டுமல்லாமல், சம்பந்தி வீட்டினர் அனைவருமே வெகுவாகப் பாராட்டினர்./
பதிலளிநீக்குநல்ல கதை. வல்லமையில் வெளி வந்ததற்கு வாழ்த்துக்கள்.
இந்தச்சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்புக்குரிய அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk
பதிலளிநீக்குநல்ல புத்திசாலி மாமனாரின் சமயோஜிதத்தால் நகைகள் தப்பித்தன.
பதிலளிநீக்குமிகவும் உஷார் பேர்வழியான சதாசிவத்தை அவரின் மகள் மட்டுமல்லாமல், சம்பந்தி வீட்டினர் அனைவருமே வெகுவாகப் பாராட்டினர். இது சரிதான். ஒரு பழமொழி சொல்லுவாங்க,
பதிலளிநீக்குஇருக்குறவன் எது போட்டாலும் பவுன். இல்லாதவன் பவுன் போட்டாலும் கவரிங். எப்படி? இது தெரிந்து தான் தன் மகளுக்கு கவரிங் நகைப்போட்டார் போலும்.சூப்பர்.
mageswari balachandran May 6, 2015 at 10:54 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//மிகவும் உஷார் பேர்வழியான சதாசிவத்தை அவரின் மகள் மட்டுமல்லாமல், சம்பந்தி வீட்டினர் அனைவருமே வெகுவாகப் பாராட்டினர். இது சரிதான். ஒரு பழமொழி சொல்லுவாங்க, ’இருக்குறவன் எது போட்டாலும் பவுன். இல்லாதவன் பவுன் போட்டாலும் கவரிங்.’ எப்படி? இது தெரிந்து தான் தன் மகளுக்கு கவரிங் நகைப்போட்டார் போலும்.சூப்பர்.//
தாங்கள் சொல்லும் பழமொழியும் நன்றாக உள்ளது. :)
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நல்ல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
mageswari balachandran May 6, 2015 at 10:54 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//மிகவும் உஷார் பேர்வழியான சதாசிவத்தை அவரின் மகள் மட்டுமல்லாமல், சம்பந்தி வீட்டினர் அனைவருமே வெகுவாகப் பாராட்டினர். இது சரிதான். ஒரு பழமொழி சொல்லுவாங்க, ’இருக்குறவன் எது போட்டாலும் பவுன். இல்லாதவன் பவுன் போட்டாலும் கவரிங்.’ எப்படி? இது தெரிந்து தான் தன் மகளுக்கு கவரிங் நகைப்போட்டார் போலும்.சூப்பர்.//
தாங்கள் சொல்லும் பழமொழியும் நன்றாக உள்ளது. :)
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நல்ல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அந்த வழியில் திருட்டு பயம் இருக்கு என்று தெரிநாதுமு ஏனு அவர்களைத் தனியே அனுப்பணும்? ஆனாலும் கவரிங் நகை பழட்டு அனுளுபியது சரிதான். திருடனுக்கு தெனியுமா அது கவரிங்கா ஒரிஜனலா என்று?
பதிலளிநீக்குபூந்தளிர் May 21, 2015 at 9:58 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அந்த வழியில் திருட்டு பயம் இருக்கு என்று தெரிந்தும்
ஏன் அவர்களைத் தனியே அனுப்பணும்?//
1) வேறு மாற்றுப்பாதையில்லை.
2) பகல் வேளைதானே என்ற தைர்யமாகவும் இருக்கலாம்.
3) ”நாங்க புதுசா.... நாங்க புதுசா ..... கட்டிக்கிட்ட ஜோடி
தானுங்க” என குஜாலாக பாட்டுப்பாடிடும் புதுமண தம்பதியர் அல்லவா அவர்கள் இருவரும். :)
அதனால் தனியே அனுப்பப்பட்டுள்ளார்கள்.
//ஆனாலும் கவரிங் நகையைப்போட்டு அனுப்பியது
சரிதான். //
நீங்க சொன்னா எதுவுமே சரிதானுங்க :)
//திருடனுக்கு தெரியுமா அது கவரிங்கா ஒரிஜனலா என்று?//
அது, அந்தத்திருடர்களைப் போய் நாம் கேட்டால் தான் தெரிய வரும். எப்படியும் பிறகு தெரிந்துகொண்டு இருப்பார்கள். திருடும் வேளையில் ஒரிஜினல் தங்கமா என சாணைக்கல்லில் உரசியாப் பார்க்க முடியும்? :)
உஷாரய்யா உஷாரு!
பதிலளிநீக்குநகைக்கடைக்காரர் அல்லவா? நாலும் தெரிந்து நடந்திருக்கிறார். எப்படியோ அவர்கள் நகைகள் தொலையாமல் இருந்தது மகிழ்ச்சி தான்.
பரவால்லியே சரியான உசாரு ஆளுதா. பத்தாதுக்கு கவரிங்கு நகக போடுடு திருடங்களயும் ஏமாத்திபிட்டாங்களே.
பதிலளிநீக்குசமயோஜிதமாக கவரிங்க் நகைபோட்டது புத்திசாலித்தனம். அது ணற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே.
பதிலளிநீக்குபடங்கள் அழகு...சமயோஜிதம்...சந்தோஷம்...ஆமாம் தலைப்புக்கு ஒரு அர்த்தம் மட்டும்தானா,,,???
பதிலளிநீக்குஉள்ளத்தி கொள்ளை கொண்டது உங்கள் கதை!
பதிலளிநீக்கு