About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, November 9, 2011

யார் முட்டாள்?

யார் முட்டாள் ?


[நகைச்சுவைச் சிறுகதை]


By வை. கோபாலகிருஷ்ணன்


-oOo-
ரமேஷ், சுரேஷ் என்ற மிகப்பெரிய தொழிலதிபர்கள் இருவர் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு தங்கள் வியாபார விஷயமாக தங்களுக்குள் மிகுந்த நட்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் பேச்சு ஒரு கட்டத்தில் தங்கள் பணியாட்களின் [ப்யூன்ஸ்] அறிவற்ற முட்டாள் தனத்தைப்பற்றி திரும்பியது.

“தன்னுடைய ப்யூனைப் போன்ற ஒரு முட்டாளை இந்த உலகத்தில் வலை வீசித்தேடினாலும் எங்கும் கிடைக்கமாட்டான்”  என்று ரமேஷ் சொன்னார்.

இதை ஒத்துக்கொள்ளாத சுரேஷ் “என்னுடைய ப்யூனைப்போன்ற ஒரு வடிகட்டிய முட்டாள் யாருமே இருக்க முடியாது” என்றார்.

அவர்களுக்குள் அதை அப்போதே நிரூபித்துப் பார்க்க விரும்பினார்கள்.

ரமேஷ் காலிங் பெல்லை அழுத்தி தன் ப்யூனை ரூமுக்குள் அழைக்கலானார். 


”யெஸ் சார்” என்ற படி ரமேஷின் ப்யூன் ராசா உள்ளே ஓடி வந்தான்.

அவனிடம் ஒரு பத்து ரூபாய் சலவைத்தாளை எடுத்து நீட்டி “நீ போய் உடனடியாக புத்தம்புதிய மாருதி ஏ.ஸீ. கார் ஒன்று உனக்குப்பிடித்த ஏதாவது ஒரு கலரில் வாங்கிக்கொண்டு சீக்கரமாக வந்துடு” என்றார்.

அவனும் “எஸ். சார்.” என்று கூறி அவர் கொடுத்த பத்தே ரூபாயுடன் ரூமை விட்டு வெளியேறினான்.

இதைப்பார்த்து தனக்குள் லேசாகச் சிரித்துக்கொண்ட சுரேஷ் தன் காலிங் பெல்லை அழுத்தி தன் ப்யூனை ரூமுக்குள் அழைக்கலானார். 


”யெஸ் சார்” என்ற படி சுரேஷின் ப்யூன் மகாராசா உள்ளே ஓடி வந்தான்.

“மகாராசா, இப்போது மணி 10 ஆகப்போகிறது. நான் மிகச்சரியாகப் பத்து மணிக்கு தாஜ் ஹோட்டலில் ஒரு அவசர மீட்டிங்கில் இருக்க வேண்டும். நீ உடனே ஓடிப்போய் தாஜ் ஹோட்டல் மீட்டிங்கில் நான் இருக்கிறேனா என்று பார்த்து விட்டு வந்து என்னிடம் சொல்ல வேண்டும், இது மிகவும் அவசரமான விஷயம், தாமதிக்காமல் உடனே புறப்படு” என்றார்.

மகாராசாவும் “யெஸ் சார்” என்று சொல்லி விட்டு அந்த ரூமை விட்டு வெளியேறினான்.

வெளியே வந்த ராசாவும், மகாராசாவும் ஆற அமர ஒரு மரத்தடியில் நின்று தங்களுக்குள் தங்கள் முதலாளிகளைப்பற்றி பேச ஆரம்பித்தனர். 

“என் முதலாளியை மாதிரி ஒரு முட்டாள் இருக்க முடியாது.  புத்தம் புதிய மாருதி ஏ.ஸி. கார் உடனடியாக வாங்கிவரச் சொல்லியிருக்கிறார். கார் வாங்க 10 ரூபாய் பணத்தையும் கொடுத்து விட்டார். 


இன்று ஞாயிற்றுக்கிழமை, கார் விற்பனைக்கடைகள் எதுவும் திறந்திருக்காது என்று கூடத் தெரியாத முட்டாளாக இருக்கிறார்” என்றான் ராசா, மகாராசாவிடம்.

“உன் முதலாளியாவது பரவாயில்லை. இன்று இல்லாவிட்டாலும் நாளை கார் வாங்கிக்கொள்ளலாம். எங்க ஆளு 10 மணிக்கு தாஜ் ஹோட்டல் மீட்டிங்கில் இருக்கணுமாம். நான் தாஜ் ஹோட்டலுக்குப்போய் அவர் அங்கே இருக்கிறாரா என்று பார்த்து வந்து சொல்லணுமாம். 

சுத்த வடிகட்டின முட்டாளாக இருக்கிறார். தன் டேபிள் மீது டெலிபோன் வைத்திருக்கிறார். 


தாஜ் ஹோட்டலுக்கு டயல் செய்து அவர் அங்கு இருக்கிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதை விட்டுவிட்டு, என்னை இந்த வேகாத வெய்யிலில் அலையவிடுகிறார், பார்” என்றான்.

-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-


12. உத்திரம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:


அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் 
திருக்கோயில் 
[மங்களாம்பிகை அம்மன்] இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்
ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள 
லால்குடி சென்று அங்கிருந்து 
5 கி.மீ. தூரத்திலுள்ள 
இடையாற்று மங்கலம் 
ன்னும் ஊரில் ள்ளது.

12/27

35 comments:

 1. சிறு வயது முட்டாள் முனியன் கதைகளும் டிங்கிள் சுப்பாண்டியும் நினைவுக்கு வருகிறது. நல்ல பதிவு.

  ReplyDelete
 2. பரமார்த்தகுருவின் சீடர்கள் போல அந்த டிரைவர்களா..
  நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா அருமையான நகைசுவை கதை

  ReplyDelete
 4. முட்டாள் பட்டத்தை வழங்குவது பற்றி குழம்பம் மேலிடுகிறது. நகைச்சுவை கதைக்கு மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 5. யப்பா..செம நகைச்சுவை கதை.படித்து ரசித்தேன்.சிரித்தேன்.

  ReplyDelete
 6. வயிறு வலிக்க சிரித்தேன்

  ReplyDelete
 7. இது மீள்பதிவா?இதற்கு முன் நான் படித்திருக்கவில்லையே.தவற விட்டிருக்கிறேன் போல.நகைச்சுவை அடங்கிய கதை ரசிக்கும் வகையில் இருந்தது.

  ReplyDelete
 8. அருமையான முட்டாள்கள் க்தை
  திரும்பப் படிக்க சுவாரஸ்யம் ஏதும் குறையவில்லை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 5

  ReplyDelete
 9. நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
 10. நான் இல்லைப்பா...

  ReplyDelete
 11. நல்ல நகைச்சுவை.

  ReplyDelete
 12. புளிமூட்டை ராமசாமியும் டி ஆர் ராமச்சந்த்ரனும் நினைவுக்கு வந்தார்கள்!

  ReplyDelete
 13. ஐயா
  முட்டாள்கள் வரலாறு
  சொல்லி வயிறு முட்ட சிரிக்க
  வைத்தீர்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 14. சுத்த வடிகட்டின முட்டாளாக இருக்கிறார்.
  யார் முட்டாள்??
  நல்ல பதிவு.

  ReplyDelete
 15. உத்திரம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்
  சென்று வழிபட வேண்டிய கோயில்:


  அருள்மிகு மாங்கல்யேஸ்வரர்
  திருக்கோயில்
  [மங்களாம்பிகை அம்மன்] /

  பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 16. மீள்பதிவாய் வந்த போதும் முதலில் கிடைத்த அதே குலுங்கவைக்கும் சிரிப்புக்கு மீண்டும் உத்தரவாதம்.

  ReplyDelete
 17. அருமை...அருமை..அருமை...
  அட்டகாசமான நகைச்சுவை...

  ReplyDelete
 18. ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்கிற மாதிரி, இவர்களில் யார் முட்டாள் என்று சொல்லவே முடியாது.

  ReplyDelete
 19. இவங்க எல்லாருமே மெண்டல் ஹாஸ்பிடலில் இருந்து தப்பி வந்தவங்களோ???

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 20, 2015 at 10:59 AM

   //இவங்க எல்லாருமே மெண்டல் ஹாஸ்பிடலில் இருந்து தப்பி வந்தவங்களோ???//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இருக்கலாம். இருக்கலாம். :)

   Delete
 20. எத்தனுக்கு எத்தன் உலகில் உண்டு என்பது போல் முட்டாளுக்கு முட்டாளும் உண்டோ?

  தொழிலதிபர்கள் இப்படி இருந்தால் இவங்க செய்யற தொழில் எப்படி இருக்கும்?

  சபாபதி படம்தான் நினைவிற்கு வருகிறது.

  ReplyDelete
 21. இந்த கத படிச்சு சொல்லா காட்டியும் அம்மி மொவத்துல சிரிப்பாணி பொத்துகிட்டுது.

  ReplyDelete
  Replies
  1. mru September 15, 2015 at 10:54 AM


   //இந்தக் கதை படிச்சுச் சொல்லா காட்டியும் அம்மி முகத்திலே சிரிப்பாணி பொத்துகிட்டுது.//

   அது என்ன ’சிரிப்பாணி’யோ. அது எப்படி பொத்துக்கிச்சோ!!!

   எனினும் மிகவும் சிரிப்பாகவே உள்ளது, உங்க கமெண்ட்ஸ் எல்லாமே. மிக்க நன்றி.

   Delete
 22. :)))) இப்பூடி போட்டா போதுமா.

  ReplyDelete
  Replies
  1. mruOctober 14, 2015 at 11:40 AM

   //:)))) இப்பூடி போட்டா போதுமா.//

   ஆஹா, இதுவே போதும் போதும் ! :)

   Delete
 23. யார் முட்டாள். தெரியலயே. யோசிச்சு யோசிச்சு மண்ட காயுது. நல்ல சிரிக்க முடிந்தது.

  ReplyDelete
 24. ஜாடிக்கு ஏத்த மூடிதான்போல...மறுபடியும் நகைதான்...

  ReplyDelete
 25. மீள்பதிவை மீண்டும் இரசித்தேன்!

  ReplyDelete
 26. சின்ன ரெண்டு knot எடுத்துக்கிட்டு, நகைச்சுவையா ஒரு கதையைக் கொடுத்திருக்கீங்க.

  'டேபிள் மிது டெலபோன்' என்ற பகுதில ஒரு இடைவெளி இருக்கறதுனால, இரண்டாவது முட்டாள் சொல்வது உடனே மனசுக்குள்ள போகலை.

  இரு வேலைக்காரர்களும் முட்டாளாகவே இருக்கட்டும். அவங்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகள் 'அடிமுட்டாள்கள்' இல்லையோ?

  மனசை ரிலாக்ஸ் செய்தது

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழன் February 19, 2018 at 11:08 PM

   //சின்ன ரெண்டு knot எடுத்துக்கிட்டு, நகைச்சுவையா ஒரு கதையைக் கொடுத்திருக்கீங்க.

   'டேபிள் மிது டெலபோன்' என்ற பகுதில ஒரு இடைவெளி இருக்கறதுனால, இரண்டாவது முட்டாள் சொல்வது உடனே மனசுக்குள்ள போகலை.

   இரு வேலைக்காரர்களும் முட்டாளாகவே இருக்கட்டும். அவங்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகள் 'அடிமுட்டாள்கள்' இல்லையோ?

   மனசை ரிலாக்ஸ் செய்தது//

   வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete
 27. ஹா..ஹா... முட்டாள் பதவிக்கு போட்டி மிக அதிகமா இருக்கே..)))

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco February 22, 2018 at 10:13 AM

   வாங்கோ ஷம்மு, நமஸ்தே !

   //ஹா..ஹா... முட்டாள் பதவிக்கு போட்டி மிக அதிகமா இருக்கே..)))//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

   பதவி என்றாலே அப்படித்தான் .... போட்டிகள் அதிகமாகவே இருக்கும்.

   நாம் இருவரும் இந்தப் பதவிக்குப் போட்டி போடாமல் எப்போதும் போல நமக்குள் ஜாலியாகவே ‘புத்திசாலி’களாகவே இருப்போம். :)))))

   அன்புடன் கிஷ்ணாஜி

   Delete