About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, December 1, 2011

காதல் வங்கி







காதல் வங்கி

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo- 

ஜானகி அந்தப்பிரபல வங்கியின் காசாளர். பணம் கட்டவோ வாங்கவோ அங்கு பல கெளண்டர்கள் இருப்பினும், வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது ஜானகியின் சேவையை மட்டும்தான்.  

மிகவும் அழகான இளம் வயதுப்பெண் என்பதால் மட்டுமல்ல. தேனீ போன்ற சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பாதவள். தன்னை நாடி வரும் அனைவருக்குமே சிரித்த முகத்துடன், சிறப்பான ஒரு வித வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பும் வரவேற்பும் அளிப்பவள். அனைவருடனும் மிகுந்த வாத்ஸல்யத்துடன் பழகுபவள்.

அடடா! ........... இவள் எவ்வளவு கட்டிச்சமத்தாக இருக்கிறாள்! தங்களுக்கு இதுபோன்ற தன்மையான, மென்மையான, அமைதியான, புத்திசாலியான, அழகான, பழகிட நல்ல கலகலப்பான பெண் ஒருத்தி பிறக்கவில்லையே என்றும் அல்லது மருமகள் ஒருத்தி அமையவில்லையே என்றும் ஏங்குவார்கள் அங்கு வரும், சற்றே வயதான வாடிக்கையாளர்கள்.

கவுண்டருக்கு வரும் இளம் வயது வாலிபர்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். யாரைப் பார்த்தாலும், இளைஞர்களின் கற்பனையே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

மொத்தத்தில் வங்கிக்கு வரும் அனைவரையுமே, ஏதோ ஒரு விதத்தில், மகுடிக்கு மயங்கும் நாகம் போல, வசீகரிக்கும் அல்லது சுண்டியிழுக்கும் தனித்தன்மை வாய்ந்தவள் தான் அந்த ஜானகி.

இப்போது ரகுராமனும் அந்த வங்கியில் ஒரு வாடிக்கையாளர் தான். வங்கியின் சேவைகள், செயல்பாடுகள் பற்றியெல்லாம் எதுவும் அறியாமல் இருந்த ஆசாமி தான், ரகுராமன்.

மற்ற குழந்தைகள் போல பள்ளியில் சேர்ந்து படித்தவர் அல்ல ரகுராமன். அவரைப்பொருத்த வரை வங்கி என்றால் ஜானகிஜானகி என்றால் வங்கி. வேறு எதுவும் வங்கியைப்பற்றித் தெரியாதவர். எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே!

ரகுராமனுக்கு சிறு வயதிலேயே பூணூல் போடப்பட்டு, அழகாக சிகை (குடுமி) வைக்கப்பட்டு, வேதம் படிக்க வேண்டி திருவிடைமருதூர் பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர்கள். பரம்பரையாக வேத அத்யயனம் செய்து வரும் வைதீகக் குடும்பம் அது.

ரகுராமனும் வெகு சிரத்தையாக குருகுலமாகிய வேத பாடசாலையில் வேதம், சாஸ்திரம், சம்ஸ்கிருதம், கிரந்தம் முதலியன நன்கு பயின்று முடித்தவர். 

அது தவிர ஓரளவுக்கு கணித பாடமும், பேச படிக்க எழுதக்கூடிய அளவுக்கு தமிழும் ஆங்கிலமும் கற்றுத்தேர்ந்தவர் தான். வேத சாஸ்திரங்களில் கரை கண்ட அளவுக்கு, லோக விஷயங்களில் அவருக்கு அதிக ஆர்வமோ ருசியோ இல்லை தான்.

இருப்பினும் தான் படித்த வேத சாஸ்திரங்களை அனுசரித்து, நம் முன்னோர்கள் வாழ்ந்த, ஆச்சாரமான எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால், தற்சமயம் கலியுகத்தில் ஜனங்கள் பட்டு வரும், பல்வேறு சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஒரு வடிகாலாக அமையும் என்பதால், தான் செல்லும் இடங்களிலெல்லாம், சந்திக்கும் மக்களுக்கெல்லாம், வேத சாஸ்திர வழிமுறைகளையும், அவற்றை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும், தனக்கே உரித்தான அழகிய பிரவசனங்கள் [ஆன்மீகச் சொற்பொழிவுகள்] மூலம் மக்கள் மனதில் நன்கு பதிய வைத்து வந்தார்.

ஜானகி வீட்டில் நடைபெற்ற ஏதோவொரு சுப வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் தான் இந்த ரகுராமன். ரகுராமன் அவர்களை முதன் முதலாகச் சந்தித்த ஜானகி, அவரின் அழகிற்கும், முகத்தில் தோன்றும் பிரும்ம தேஜஸுக்கும்,  அறிவு வாய்ந்த அவரின் பாண்டித்யத்திற்கும், நல்ல விஷயங்களை, நல்ல விதமாக, நன்கு மனதில் பதியுமாறு எடுத்துச்சொல்லும் நாவன்மைக்கும், லோகம் முழுவதும் உள்ள மனித சமுதாயம் மட்டுமின்றி, சகல ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற அவரின் பிரார்த்தனைகளுக்கும், வியந்து போய் தன் மனதையே அவரிடம் பறிகொடுத்து விட்டாள்.

அவருடன் தனக்கு ஏதாவது ஒரு தொடர்பு ஏற்பட வேண்டுமே என சிந்திக்கலானாள்.  தன் வீட்டு விழாவுக்கு வந்திருந்த பலரும், ரகுராமன் அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதைப் பார்த்தாள் ஜானகி

நேராகச் சென்று தானும் அவர் கால்களில் விழுந்து கும்பிட்டு வணங்கி எழுந்தாள், ஜானகி. தான் ஒரு வங்கியில் பணிபுரிவதாகச் சொன்ன ஜானகி, ”உங்களுக்கு எந்த வங்கியில் வரவு செலவு கணக்கு உள்ளது” என்றும் வினவினாள்.

வில்லை முறித்த ஸ்ரீ இராமபிரான் முதன் முதலாக வெற்றிப்புன்னகையுடன் ஸீதாதேவியை நோக்கிய அதே பரவசத்துடன், தன்னை விழுந்து வணங்கிய ஜானகியின் அழகிலும், அடக்கத்திலும், இனிய குரலிலும் மயங்கி, தன்னை மீறி தன் உடம்பில் ஒருவித மின்சாரம் பாய்வதை உணந்தார், நம் ரகுராமன்.

   
இருவர் உள்ளத்திலும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏதோ ஒருவித காந்தம் போன்ற கவர்ச்சியும், காதலும் கசிந்துருக ஆரம்பித்திருந்தது.

உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது. 

காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. திடீரென இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவருக்கொருவர் பரவசம் ஏற்படுத்துவதே உண்மையான காதலாகுமோ என்னவோ!

அன்றே, அப்போதே, அங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது.  புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க ஜானகியே எல்லா உதவிகளையும் வேக வேகமாகச் செய்து உதவினாள்.


அன்று இரவே, ஜானகியின் அம்மா, தன் மகளின் மனதில் பூத்துள்ள புதுப்புஷ்பத்தின் சுகந்தத்தை அறிந்து கொண்டு,  உண்மையிலேயே தன் மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும், அவளை சற்றே சீண்டிப்பார்த்தாள்.


“ஜானகி, நல்லா யோசனை செய்து பார்த்து நீ எடுத்த முடிவா இது?” என்றாள்.


“இதில் யோசிக்க என்ன இருக்கிறது?” என்றாள் ஜானகி.


“இல்லை, நீ நிறைய படிச்ச பொண்ணு, வேலைக்கும் போகிறாய், கை நிறைய சம்பாதிக்கிறாய். நவ நாகரீகமாக வாழ்க்கைப்பட்டு ஜாலியாக உன் இஷ்டப்படி இருக்க ஆசைப்படலாம்; 


இவரோ வேதம், சாஸ்திரம், புராணம்,  ஆச்சாரம், அனுஷ்டானம், அது இதுன்னு யாருக்குமே லேசில் புரியாத விஷயங்களை, பழைய பஞ்சாங்கம் போல பிரச்சாரம் செய்பவராக இருக்கிறார் ...... அதனால் கேட்டேன்” என்று லேசாக ஊதிவிட்டாள்.


“நான் படிச்ச படிப்பெல்லாம் ஒரு படிப்பாமா? ஏதோ சும்மாதானே வீட்டில் இருக்கிறோம்ன்னு ஒரு பொழுதுபோக்குக்காக இந்த வேலையை ஒத்துக் கொண்டேன். கை நிறைய சம்பளம் யார் தான் இன்று வாங்கவில்லை? நவ நாகரீக வாழ்க்கை என்பதெல்லாம் எத்தனை நாளைக்கு அம்மா வாழமுடியும்? எதுவுமே கொஞ்ச நாளில் சலிப்பு ஏற்படுத்தித்தானே விடும்!; 


அதுவும் கல்யாணம் என்ற ஒன்று ஒருவருடன் எனக்கு ஆகிவிட்டால், என் இஷ்டப்படி எப்படி என்னால் வாழமுடியும்? இப்போ உன்னையே எடுத்துக்கொள்ளேன், நீ உன் இஷ்டப்படியா வாழ முடிகிறது அல்லது ஏதாவது முக்கிய முடிவுகளாவது உன் இஷடப்படித்தான் எடுக்க முடிகிறதா? எல்லாமே அப்பா இஷ்டப்படித்தானே நடக்கிறது! நீயும் அதைத்தானே மகிழ்வுடன் எப்போதும் ஏற்றுக்கொண்டு வருகிறாய்; அதுபோல நானும் இருந்துவிட்டுப்போகிறேனே!! ;


உனக்கு மாப்பிள்ளையா வரப்போகும் இவர் தான் அம்மா, உண்மையில் மனுஷ்யனாகப் பிறந்தவன் என்ன படிக்கணுமோ, அதையெல்லாம் படித்துள்ளார்; எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளணுமோ, அவற்றையெல்லாம் தெரிந்து வைத்துள்ளார்;  


நம் தாத்தா பாட்டி, ஏன் நம் பரம்பரையே ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, நித்யப்படி பூஜை புனஷ்காரங்கள் செய்து ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் தானே! அதனால் தானே நாம இன்னிக்கு சந்தோஷமா செளக்யமா இருக்க முடிகிறது?” என்றாள் ஜானகி.


தன் பெண்ணின் தீர்க்கமான முடிவை எண்ணி வியந்த அவளின் தாயார் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விட்டிருந்தாலும், அவளை மேற்கொண்டு சீண்டுவதிலும் சற்றே ஆசைப்பட்டாள். அருமை மகளும் ஆருயிர்தோழியும் ஒன்றல்லவா! இதுவரை தாயாக இருந்து பேசியவள் இப்போது தோழியாக மாறிப் பேசலானாள்:


”உன் ஆத்துக்காரர் பேண்ட், சட்டை கோட்டு சூட்டுப் போட்டு டைகட்டி டிப்-டாப்பாக உனக்கு இருக்க வேண்டாமா? கட்டுக்குடுமியுடன், கல்யாணம் ஆனதும் பஞ்சக்கச்சம் கட்டிண்டு, காதிலே கடுக்கண்கள் போட்டுண்டு இருந்தால் நோக்குப்பரவாயில்லையா ? “ என்றாள்.


“அம்மா, இந்த டிப்-டாப் ஆசாமிகளைப் பற்றியெல்லாம் நோக்குத்தெரியாதும்மா. கோட்டுச் சூட்டுப்போட்டு வெளியிலே டை கட்டியவன் எல்லாம் உள்ளுக்குள்ளே வேறொருவனுக்கு கைகட்டித்தான் வேலைப்பாக்கணும்; அதிலும் பாதிபேர் குடிச்சுட்டு வராங்க, தம்மடிக்கிறாங்க, ஊரெல்லாம் கடன் வாங்கறாங்க, ஆபீஸுலே எல்லா லோனும் போடுறாங்க, எதை எதையோ தேவையில்லாததை எல்லாம் தேடி அலையறாங்க. கெட்டபழக்கம் ஒண்ணு பாக்கியில்லாம பழகிக்கிறாங்க;


எந்தவொரு ஆச்சார அனுஷ்டானமும் இல்லாமல் கண்ட எடத்துல கண்டதையும் திங்கறாங்க. கடைசியிலே ஆரம்பத்திலே இருக்குற நிம்மதியைப்பறி கொடுத்துட்டு, நடைபிணமாத் திரியறாங்க! இலவச இணைப்பா வியாதியை சம்பாதித்து வந்து பெண்டாட்டி, பிள்ளைகளுக்கும் பரப்பிடறாங்க. உலகத்துல இன்னிக்கு என்னென்ன அநியாயங்கள் நடக்குதுன்னு நாட்டு நடப்பே தெரியாம, நீ ஒரு அப்பாவியா இங்கே இருக்க;

உனக்கு மாப்பிள்ளையா வரப்போற பத்தரை மாத்துத் தங்கத்தையும், கவரிங் நகைபோன்று நாளடைவில் பளபளப்பிழந்து பல்லைக்காட்டக்கூடிய, இந்தப் படாடோபப் பேர்வழிகளான டிப்-டாப் ஆசாமிகளையும், நீ ஒப்பிட்டுப்பேசறதே எனக்குப்பிடிக்கலை; 


வேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் எப்போதுமே தவறான குறுக்கு வழிகளுக்குப் போகவே தயங்குவாங்க! அவங்க மனசாட்சி அதுபோல தப்பெல்லாம் செய்ய ஒரு நாளும் அவர்களை அனுமதிக்காது; 


குடுமி என்னம்மா குடுமி!  ”வெச்சா குடுமி--சரச்சா மொட்டை” ன்னு, அப்பாவும் நீயும் தான் பழமொழி சொல்லுவீங்களே!    அந்தக்ககாலத்துல நம் முன்னோர்களெல்லாம் இதே குடுமிதானே வெச்சிண்டிருந்தா, இப்போ நாகரீகம் பேஷன்னு அடிக்கடி தலை முடியை மட்டும் மாத்திக்கிறா; 


பொம்மனாட்டிகளும் மாறிண்டே வரா; பாவாடை சட்டை தாவணியெல்லாம் போய், மிடி, நைட்டி, சுடிதார், ஜீன்ஸ் பேண்ட், டீ-ஷர்ட்டுனு ஏதேதோ போட ஆரம்பிச்சுட்டா.சுதந்திரம் வேணும்னு சிலபேர் காத்தாட சுதந்திரமாவே உடை அணிய ஆரம்பிசுட்டா. ஆம்பளைகள் மாதிரி தலையையும் பாப் கட்டிங் பண்ணிக்க ஆரம்பிச்சுட்டா; 


ஆம்பளைகளும் அடியோட பொம்மனாட்டி மாதிரி மாறிண்டே வரா; ஸ்கூட்டர் பைக் ஓட்டிப்போவது ஆம்பளையா, பொம்பளையான்னே இப்போ டக்குன்னு கண்டு பிடிக்க முடியலே!;


அதுவும் லேட்டஸ்ட் பேஷன் படி இந்தக்கால பையன்களெல்லாம் பொம்மணாட்டியாட்டம் தலைமுடியை வளர்த்து, அள்ளி முடிஞ்சு ரப்பர் பேண்ட் போட்டுக்க ஆரம்பிச்சாச்சு, காதுலேயும் தோடு போல, கம்மல் போல ஏதேதோ வளையம் போட ஆரம்பிச்சுட்டா.  பழங்கால வழக்கப்படி ஒரு நாள் குடுமியே திரும்ப பேஷன்னு வந்தாலும் வந்துடும், பேஷன்னெல்லாம் எதுவுமே நிரந்தரமானது இல்லையேம்மா;


பேஷன் அடிக்கடி மாறும்மா; ஆனா உனக்கு மாப்பிள்ளையா வரப்போறவர் எப்போதுமே மாறாம அப்படியே நம் சாஸ்திர சம்ப்ரதாயப்படி நல்லவிதமாக நடந்துகொண்டு, அந்த ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தானம்மா இருப்பார். அது தானேம்மா நமக்கு ரொம்பவும் முக்கியம்” என்று பெரிய பிரசங்கமே செய்ய ஆரம்பித்து விட்டாள், ஜானகி.


ஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாள், ஜானகியின் தாயார். 


”எப்படிடீ உனக்கு அவர் இப்படி ஒரு சொக்குப்பொடி போட்டார்?” என்றாள் மேலும் கொஞ்சம் அவளின் அழகான பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்டு மகிழ.


”அம்மா, அவர் சொற்பொழிவுகள் அடங்கிய CD ஒன்று தேடிப்பிடித்து இன்று தான் கடையில் வாங்கி வந்து கேட்டு மகிழ்ந்தேன். ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார், தெரியுமா!;


நாம் எவ்வளவோ பிறவி தாண்டித்தான் இந்த மகத்துவம் வாய்ந்த மனுஷ்யப்பிறவியை அடைகிறோமாம். மனுஷ்யாளாப் பிறப்பதே அரிது என்கிறார்.   பிறவிப்பெருங்கடலைத் தாண்ட மனுஷ்ய ஜன்மா மட்டுமே சுலபமாக வழிவகுக்குமாம்; 


மனுஷ்யாளால் தான் பகவன் நாமாக்கள் சொல்லி வழிபட முடியுமாம். பகவன் நாமா ஒன்று தான் மோட்சத்திற்கு வழிவகுக்குமாம். எவ்வளவு அழகாக மனதில் பதியுமாறு மோட்சத்திற்கான வழிகளைச் சொல்கிறார் தெரியுமா! அவருடைய அபூர்வ விஷயஞானம் மட்டும் தானம்மா அவர் எனக்கு போட்ட ஒரே சொக்குப்பொடி” என்றாள் ஜானகி, தன் முகம் பூராவும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போன்ற ஓர் பொலிவுடனும், பூரிப்புடனும்.


பருவ வயதில் தன் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்னவென்று பெற்ற தாயாருக்குப் புரியாதா என்ன? சிரித்தபடியே ஜானகியை அள்ளிப் பருகி அவள் நெற்றியில் முத்தமிட்டு, தலையைக் கோதிக்கொடுத்து, அவளை அப்படியே கட்டியணைத்துத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள், ஜானகியின் தாயார்.

தினமும் அந்த வங்கியின் வாசலில் ரகுராமன் தனது காரில் வந்து இறங்குவதும், அவர் உள்ளே நுழையும் முன்பே, வந்துவிடும் செல்போன் தகவலால், வழிமேல் விழி வைத்து ஜானகி ஆவலுடன் ஓடிவந்து, அவரை வரவேற்பதும், வாடிக்கையான நிகழ்ச்சியாக இருந்து வந்தது.


ஒரு ஹேண்ட்பேக் நிறைய வழிய வழிய ரூபாய் நோட்டுக்களாகவும், சில்லறை நாணயங்களாகவும் ரகுராமன் ஜானகியிடம் தருவார். ஜானகி கையால் ஒரு டம்ளர் ஜில் வாட்டர் மட்டும் வாங்கி அருந்துவார். முதல் நாள் அவளிடம் பணத்துடன் ஒப்படைத்துச் சென்ற காலிசெய்யப்பட்ட ஹேண்ட்பேக்கை ஞாபகமாக திரும்ப வாங்கிச் செல்வார். இவ்வாறு இவர்களின் காதல் சந்திப்புக்களும், வங்கிக்கணக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தும் வளர்ந்தும் வந்தன.


ரகுராமனின் வங்கிக்கணக்கில் ஜானகியின் கைராசியால் இன்று பல லக்ஷங்கள் சேர்ந்து விட்டன. அவர்கள் இருவரின் ஆசைப்படி, வங்கிக்கணக்கில் ஒரு அரை கோடி ரூபாய் சேர்ந்த பிறகு, ஊரறிய சிறப்பாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுபோல அவர்கள் மனதுக்குள் ஓர் ஒப்பந்த நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்துள்ளது. அந்த அரைக்கோடி ரூபாய் சேமிப்பை எட்டப்போகும் நல்ல நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. 


வங்கியில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தவிர, வங்கிக்கு வந்து போகும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், கடந்த ஒரு மாதமாக ஜானகி தன் திருமண அழைப்பிதழ்களை, தன் வெட்கம் கலந்த புன்னகை முகத்துடன் விநியோகித்து வருகிறாள்.


இரு வீட்டாருக்கும் அறிந்த தெரிந்த சொந்தங்களும், நண்பர்களுமாக அனைவரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி மகிழ, ஜாம் ஜாம் என்று ரகுராமன் ஜானகியின் விவாஹம், சாஸ்திர சம்ப்ரதாய முறைப்படி, நான்கு நாட்கள், இரு வேளைகளும் ஒளபாஸன ஹோமங்களுடன், இனிதே நடைபெற்று முடிந்தது.


ரகுராமன் விருப்பப்படியே ஜானகி தொடர்ந்து தன் வங்கிப்பணிக்குச் சென்று வரலானாள்.


தன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன், இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்க, காதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்ன, காலில் மெட்டிகள் அணிந்து, கைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றைச்சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக்கொண்டு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்க, முகத்திற்கு பசு மஞ்சள் பூசி, நெற்றியிலும், நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக்கொண்டு, தலை நிறைய புஷ்பங்கள் சூடி, வாயில் தாம்பூலம் தரித்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்க, கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போல காட்சியளித்த ஜானகி, வங்கியின் கேஷ் கெளண்டரில் எப்போதும் போல சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்தாள்.


மிகவும் லக்ஷ்மிகரமாகத் தோற்றம் அளிப்பதாக ஒரு சிலர் வாய் விட்டுப் பாராட்டும் போது, கொடி மின்னலென ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொள்வாள் ஜானகி.




அவள் கையால் கொடுக்கும் பணத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு, அந்த தனலக்ஷ்மி அம்பாளே நேரில் வந்து தந்ததாக நினைத்துக்கொண்டனர், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள்.



வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் புதுமையாகத் தோன்றிய ஜானகியைப் பார்ப்பவர்களுக்கு, அது சற்றே அதிசயமாக இருப்பினும், அவளைக் கையெடுத்துக் கும்பிட்டுப் போகணும் என்ற நல்லெண்ணத்தையே ஏற்படுத்தியது.






    


-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-


இதைவிட சற்றே சுருக்கி நான் முதலில் எழுதி அனுப்பிய இதேக்கதை  
’வல்லமை’ மின் இதழில் 30.11.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது.


[ ஜானகிக்கும் அவள் தாய்க்கும் நடைபெறும் சம்பாஷணைகள் 
மட்டும் அதில் இடம்பெறாமல் அனுப்பியிருந்தேன் ]

114 comments:

  1. காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது.

    super story.. I enjoyed it.

    ReplyDelete
  2. ரிஷபன் said...
    //காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது.

    super story.. I enjoyed it.//

    Thank you very much Sir, for your First & Best entry. You have catch hold of the main point.

    That is your speciality, which
    I too enjoyed.

    vgk

    ReplyDelete
  3. அருமையான கதை... கடைசியில் ஸ்ரீதேவி படம் இணைப்பு அருமை...


    எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
    வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

    ReplyDelete
  4. கதை சூப்பர்!

    படத்தைப் பார்த்த பின் கதையை எழுதினா மாதிரி பொருத்தம்!! :-))

    ReplyDelete
  5. அருமை!
    வை கோ எதை எழுதினாலும்
    நான் படிப்பேன் அது எனக்கு மிகவும் பிடிக்கும்!

    ReplyDelete
  6. அருமையான நடையில் செல்கிறது.

    தெளிவாகவும் திடமாகவும் முடிவெடுக்க தொடங்கி விட்டால் எல்லாமே சுகம் என்று உணர்த்தும் அருமையான கதை.

    இன்று சங்கீத உபன்யாசத்தில் கொடி கட்டி பறக்கும் விசாகா ஹரி நினைவுக்கு வருகிறது .

    ReplyDelete
  7. எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே!//

    உண்மைதான் சார் , எல்லோருக்கும் எல்லாவற்றையும் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்.

    உங்கள் கதை அருமை.

    ReplyDelete
  8. நிறைய நல்ல விஷயங்களை உள்ளாடக்கி எழுதியிருக்கிறீர்கள். கானல் நீர் போன்ற தற்கால வாழ்கை எத்தனை நிரந்தரம்! என்று நினைத்தாலே வழி எது என புலப்பட்டு விடும் [b]//நாம் எவ்வளவோ பிறவி தாண்டித்தான் இந்த மகத்துவம் வாய்ந்த மனுஷ்யப்பிறவியை அடைகிறோமாம். மனுஷ்யாளாப் பிறப்பதே அரிது என்கிறார். பிறவிப்பெருங்கடலைத் தாண்ட மனுஷ்ய ஜன்மா மட்டுமே சுலபமாக வழிவகுக்குமாம்; // [/b] உண்மையான வரிகள். பிடித்திருந்தது....

    ReplyDelete
  9. கடைசியில் ஸ்ரீதேவி படம் போட்டு அசத்திவிட்டீர்கள் :))

    ReplyDelete
  10. தலைப்பும் அருமை..கதையும் அருமை

    ReplyDelete
  11. கதை அருமை அதைவிட கடைசியில் ஸ்ரீதேவி படம் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கு

    ReplyDelete
  12. \\பழங்கால வழக்கப்படி ஒரு நாள் குடுமியே திரும்ப பேஷன்னு வந்தாலும் வந்துடும்\\

    நிஜந்தான் சார். அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது உலகம்.

    //உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது.//

    காதலை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மேலும், ரகுராமனுக்கும், ஜானகிக்கும் பெயர்ப் பொருத்தம் கூட அபாரமா இருக்கு. எப்படியோ காதல் வங்கியில் பணம் சேர்ந்து, திருமணத்தில் சுபமாக முடிந்துவிட்டது.

    காதல் கிளிகள் படம் காதல் வங்கிக்கு அழகு சேர்க்கிறது.

    ReplyDelete
  13. ஒரு நாவலுக்கு வேண்டிய விஷயங்களை சிறுகதையாக அடக்கி விடுகிறீர்கள்!

    ReplyDelete
  14. எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே//

    உண்மைதானே!

    கற்றது கையளவு..
    கல்லாதது உலகளவு...

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி December 1, 2011 at 12:15 AM

      வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ, வாங்கோ. வணக்கம் + வந்தனங்கள்.

      *****எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே*****

      //உண்மைதானே! கற்றது கையளவு..கல்லாதது உலகளவு...//

      எதுவுமே நீங்க சொன்னாச் சரியாகத்தான் இருக்கும். மகிழ்ச்சி.

      Delete
  15. "காதல் வங்கி"

    அருமையான கதை!
    பாராட்டு வாங்குகிறது..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி December 1, 2011 at 12:16 AM

      //"காதல் வங்கி"

      அருமையான கதை! பாராட்டு வாங்குகிறது..//

      தங்களின் பாராட்டு என்றும் எனக்கு அருமை. மிக்க நன்றி.

      Delete
  16. தன் பெண்ணின் தீர்க்கமான முடிவை எண்ணி வியந்த அவளின் தாயார் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விட்டிருந்தாலும், /

    இன்றைய இளைய தலைமுறையினரின் தெளிவான சிந்தனையும், செயல்பாடுகளும் மனநிறைவைத் தருகின்றன.. அருமையான மாப்பிள்ளைத்தேர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி December 1, 2011 at 12:19 AM

      ****தன் பெண்ணின் தீர்க்கமான முடிவை எண்ணி வியந்த அவளின் தாயார் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விட்டிருந்தாலும்*****

      //இன்றைய இளைய தலைமுறையினரின் தெளிவான சிந்தனையும், செயல்பாடுகளும் மனநிறைவைத் தருகின்றன.. அருமையான மாப்பிள்ளைத்தேர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

      மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      Delete
  17. உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது. /

    நிதர்சனமான உண்மை!
    அருமையான பகிர்வு!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி December 1, 2011 at 12:20 AM

      *****உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது.*****

      //நிதர்சனமான உண்மை! அருமையான பகிர்வு!//

      மிக்க நன்றி. சந்தோஷம்

      Delete
  18. அந்த ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தானம்மா இருப்பார். அது தானேம்மா நமக்கு ரொம்பவும் முக்கியம்”

    கதை என்றாலும் அருமையான கதை.. அதுதானே மிக முக்கியம்!!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி said...

      வணக்கம்.

      //அந்த ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தானம்மா இருப்பார். அது தானேம்மா நமக்கு ரொம்பவும் முக்கியம்”//

      ////கதை என்றாலும் அருமையான கதை.. அதுதானே மிக முக்கியம்!!////

      பின்னூட்டங்கள் என்ற பொற்றாமரைக் குளத்தின் நடுவே இன்று ஐந்து செந்தாமரைகளை மலரச்செய்துள்ளீர்களே! ;)))))

      அதுதானே எனக்கு மிக முக்கியம்.

      தங்களின் அன்பான வருகையும், பல்வேறு கருத்துக்களும் பதிவுக்குப் பெருமை சேர்த்து விட்டது. மிகவும் சந்தோஷம்.

      பிரியமுள்ள vgk

      Delete
  19. அருமையான கதை.

    //காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. திடீரென இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவருக்கொருவர் பரவசம் ஏற்படுத்துவதே உண்மையான காதலாகுமோ என்னவோ!//

    மிக அழகாக சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
  20. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்பது போல பார்த்ததும் மனதில் பதிந்த காதலை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். இன்றைய சமூகத்தில் மறதிக்குள்ளான சாஸ்திர சம்பிரதாயங்களைப் பேண வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டியது மிக நன்று. நிறையவே ரசித்தேன்...

    ReplyDelete
  21. கதைக்கேற்ற படமும், கதையும் அருமை.

    ReplyDelete
  22. காதலுக்குக் கண் இல்லை கோபு சார். அதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். காதல் வந்த பிறகு அதை நியாயப் படுத்தவும் வெற்றிபெறச் செய்யவும் பல விஷயங்கள் சொல்லலாம். மனசில் பட்டதை சொல்லும் உங்கள் நேர்மை பாராட்டத்தக்கது.

    ReplyDelete
  23. ஜானகியின் தேர்வு அருமை.

    அழகான கதையாக இருந்தது சார்.

    ReplyDelete
  24. அருமை அருமை
    கதை சொல்லிச் செல்லும் விதத்தில்
    நீங்கள் எதையும் ஒப்புக் கொள்ளும்படியாகச்
    செய்துவிடுகிறீர்க்ள்
    அதுவே உங்கள் சிறப்பு
    கடைசியாக மடிசாரில் ஸ்ரீதேவியின் படத்தை
    போட்டிருப்பது கூடுதல் சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 6

    ReplyDelete
  25. நல்ல காதல் கதை... நல்ல தலைப்பு!

    ReplyDelete
  26. காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது.

    ReplyDelete
  27. அன்பின் வை.கோ

    அருமையான கதை. செல்லும் விதம் இயல்பாய் உள்ளது. கரு சிறிதெனினும் வர்ணனைகளும் உரையாடல்களூம் ஒரு முழுக் கதையாக கருவினை மாற்றி இருக்கின்றன. கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. எப்படி ஜானகி ரகுராமனையும் ரகு ராமன் ஜானகியினையும் காதலித்தார்கள் என்பது நன்கு விளக்கப் பட்டிருக்கிறது.

    ஜானகியின் தாயார் மன்ப் பூர்வமாக சம்மதிக்கத் தயாராய் இருந்தும் மகளைச் சீண்டிப் பார்த்து மகிழ்வது நன்று.

    //தன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன், இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்க, காதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்ன, காலில் மெட்டிகள் அணிந்து, கைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றைச்சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக்கொண்டு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்க, முகத்திற்கு பசு மஞ்சள் பூசி, நெற்றியிலும், நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக்கொண்டு, தலை நிறைய புஷ்பங்கள் சூடி, வாயில் தாம்பூலம் தரித்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்க, கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போல காட்சியளித்த ஜானகி, //

    என்ன வர்ணனை - என்ன வர்ணனை - கற்பனை வளம் நன்று. வை.கோ - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  28. தமிழ்வாசி பிரகாஷ் said...
    //அருமையான கதை... கடைசியில் ஸ்ரீதேவி படம் இணைப்பு அருமை...//

    ஸ்ரீ தேவியின் அருளால் கதை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக நான் நினைத்தேன். ’ஸ்ரீதேவி’யின் அருளால் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் போலத்தெரிகிறது.

    எல்லாம் ஒன்று தான். எப்படியோ எல்லோரும் நன்றாகவே பாராட்டி எழுதியுள்ளனர். மிக்க நன்றி. vgk

    ReplyDelete
  29. middleclassmadhavi said...
    //கதை சூப்பர்!

    படத்தைப் பார்த்த பின் கதையை எழுதினா மாதிரி பொருத்தம்!! :-))//

    ரொம்ப சந்தோஷம் மேடம். இந்தக் கதை பிறந்த கதைபற்றி, விபரமாக தங்களுக்கு மட்டும் மெயில் கொடுத்துள்ளேன். படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றியுடன் vgk

    ReplyDelete
  30. புலவர் சா இராமாநுசம் said...
    //அருமை!
    வை கோ எதை எழுதினாலும்
    நான் படிப்பேன் அது எனக்கு மிகவும் பிடிக்கும்!//

    அடடா! .. புலவரின் சொல்லாடல் என்னைப் புல்லரிக்க வைக்குதே!

    மிக்க மகிழ்ச்சி ஐயா! ;))))

    ReplyDelete
  31. கதை மிக அருமை. நான் பயந்து பயந்து படித்தேன் சஸ்பென்ஸ் என்று சொல்லி கடைசியில் அந்த ரகுராமன் ஒரு வேஷதாரி என்று சொல்லிவிடுவிர்களோ அல்லது ஜானகி அவரை மாற்றி விடுவரோ என்று நினைத்தேன் ஆனால் அந்த மாதிரி எந்தவித அபத்தங்களும் இல்லாமல் உங்கள் மனதை போல நல்லவிதமாக முடிந்ததில் மிக சந்தோஷம் .இதை எழுதிய உங்களுக்கு சத்தோஷம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு மிக சந்தோஷமாக இருக்கிறது.மிகவும் நல்ல கதை

    வை.கோ சார் உங்கள் முத்திரையை இந்த கதையில் காண்கிறேன். வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  32. கணேஷ் said...
    //அருமையான நடையில் செல்கிறது.

    தெளிவாகவும் திடமாகவும் முடிவெடுக்க தொடங்கி விட்டால் எல்லாமே சுகம் என்று உணர்த்தும் அருமையான கதை.

    இன்று சங்கீத உபன்யாசத்தில் கொடி கட்டி பறக்கும் விசாகா ஹரி நினைவுக்கு வருகிறது.//

    மிக்க நன்றி கணேஷ்.

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடித்த பிரபல திருமதி விசாகா ஹரி அவர்களை இந்தக் கதையின் நாயகியுடன் ஒப்பிட்டுள்ளது எனக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.

    நான் மனதில் நினைத்து எழுதிய ஒருவரை அப்படியே நீ எழுத்தில் கொண்டுவந்தது என்னை பிரமிக்கச் செய்கிறது.

    மாமாவுக்கு ஏற்ற நல்ல மறுமான் அல்லவா நீ. வாழ்க! வாழ்க!!

    அன்புடன் கோபு மாமா

    ReplyDelete
  33. கோமதி அரசு said...
    //எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே!//

    ////உண்மைதான் சார் , எல்லோருக்கும் எல்லாவற்றையும் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்.

    உங்கள் கதை அருமை.////

    உங்களின் பாராட்டும் அருமை.
    மிக்க நன்றி மேடம். vgk

    ReplyDelete
  34. Shakthiprabha said...
    //நிறைய நல்ல விஷயங்களை உள்ளாடக்கி எழுதியிருக்கிறீர்கள். கானல் நீர் போன்ற தற்கால வாழ்கை எத்தனை நிரந்தரம்! என்று நினைத்தாலே வழி எது என புலப்பட்டு விடும் [b]//நாம் எவ்வளவோ பிறவி தாண்டித்தான் இந்த மகத்துவம் வாய்ந்த மனுஷ்யப்பிறவியை அடைகிறோமாம். மனுஷ்யாளாப் பிறப்பதே அரிது என்கிறார். பிறவிப்பெருங்கடலைத் தாண்ட மனுஷ்ய ஜன்மா மட்டுமே சுலபமாக வழிவகுக்குமாம்; // [/b] உண்மையான வரிகள். பிடித்திருந்தது....//

    அன்புள்ள ஷக்தி,
    தங்களின் பாராட்டுரை எனக்கு புதிய ஷக்தியளிப்பதாக உள்ளது. மிக்க நன்றி. பிரியமுள்ள vgk

    ReplyDelete
  35. Shakthiprabha said...
    //கடைசியில் ஸ்ரீதேவி படம் போட்டு அசத்திவிட்டீர்கள் :))//

    என் முதல் 100 பதிவுகளில் பார்த்தால் ஒரு படம் கூட இணைக்கப்படாமல் [ஏப்ரல் மேயிலே ... பசுமையேயில்லே பாட்டுப்போல இருக்கும்] இருக்கும். அப்போது எனக்கு கணினியில் படங்களை எப்படி இணைப்பது என்றே தெரியாது. பிறரிடம் கேட்கவும் சங்கடமாகவே இருந்தது. பிறகு என் கையூட்டுக் குழந்தை [27 வயது] பெரிய மனது பண்ணி சொல்லிக்கொடுத்தது.

    இன்று பார்த்தீர்களானால், கஷ்டப்பட்டு எழுதிய என் கதையை விட, அந்த ஸ்ரீதேவியின் மடிசார் புடவைக் கவர்ச்சியில் மயங்கி நிறைய பேர்கள் வருகை தந்து உற்சாகப்படுத்தியுள்ளனர் என்பது தெரிகிறது.

    எல்லாம் ஸ்ரீ தேவியின் அருள்!
    அதாவது ஸ்ரீதேவியின் அருள்!! ;)))))

    மீண்டும் வருகை தந்து கருத்துக்கூறியதற்கு மிக்க நன்றி ஷக்தி. பிரியமுள்ள vgk

    ReplyDelete
  36. மதுமதி said...
    //தலைப்பும் அருமை..கதையும் அருமை//

    மிக்க நன்றி, சார். தங்கள் பின்னூட்டமும் அருமை தான். vgk

    ReplyDelete
  37. K.s.s.Rajh said...
    //கதை அருமை அதைவிட கடைசியில் ஸ்ரீதேவி படம் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கு//

    எல்லாம் ஸ்ரீ தேவியின் [ஸ்ரீதேவியின்] அருளே. பொருத்தமான அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி. vgk

    ReplyDelete
  38. nunmadhi said...
    \\பழங்கால வழக்கப்படி ஒரு நாள் குடுமியே திரும்ப பேஷன்னு வந்தாலும் வந்துடும்\\

    நிஜந்தான் சார். அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது உலகம்.

    //உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது.//

    காதலை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மேலும், ரகுராமனுக்கும், ஜானகிக்கும் பெயர்ப் பொருத்தம் கூட அபாரமா இருக்கு. எப்படியோ காதல் வங்கியில் பணம் சேர்ந்து, திருமணத்தில் சுபமாக முடிந்துவிட்டது.

    காதல் கிளிகள் படம் காதல் வங்கிக்கு அழகு சேர்க்கிறது.////

    அன்பு நுண்மதி,

    தங்களின் வித்யாசமான ரசனையும், கருத்துக்களும் என்னை அகமகிழ வைத்துள்ளது.

    மிக்க நன்றி கெளரி லக்ஷ்மி.

    தொடர்ந்து வருகை தாருங்கள் ராணி.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  39. ஸ்ரீராம். said...
    //ஒரு நாவலுக்கு வேண்டிய விஷயங்களை சிறுகதையாக அடக்கி விடுகிறீர்கள்!//

    வாருங்கள்
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!

    தங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    மிக்க நன்றி! அன்புடன் vgk

    ReplyDelete
  40. இராஜராஜேஸ்வரி said...
    //அந்த ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தானம்மா இருப்பார். அது தானேம்மா நமக்கு ரொம்பவும் முக்கியம்”//

    ////கதை என்றாலும் அருமையான கதை.. அதுதானே மிக முக்கியம்!!////

    பின்னூட்டங்கள் என்ற பொற்றாமரைக் குளத்தின் நடுவே இன்று ஐந்து செந்தாமரைகளை மலரச்செய்துள்ளீர்களே! ;)))))

    அதுதானே எனக்கு மிக முக்கியம்.

    தங்களின் அன்பான வருகையும், பல்வேறு கருத்துக்களும் பதிவுக்குப் பெருமை சேர்த்து விட்டது. மிகவும் சந்தோஷம்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  41. RAMVI said...
    //அருமையான கதை.

    //காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. திடீரென இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவருக்கொருவர் பரவசம் ஏற்படுத்துவதே உண்மையான காதலாகுமோ என்னவோ!//

    மிக அழகாக சொல்லியிருக்கீங்க..//

    மதுரகவி வாயால் வந்துள்ள மதுர கீதமான பின்னூட்டமும் அழகாகத்தான் உள்ளது. அன்புடன் vgk

    ReplyDelete
  42. கணேஷ் said...
    //அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்பது போல பார்த்ததும் மனதில் பதிந்த காதலை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். இன்றைய சமூகத்தில் மறதிக்குள்ளான சாஸ்திர சம்பிரதாயங்களைப் பேண வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டியது மிக நன்று. நிறையவே ரசித்தேன்...//

    Dear Sir,

    தங்களின் தொடர் வருகையும், தங்கம் நிறுக்கும் தராசின் முள் போன்ற நடுநிலைமையான,துல்லியமான, பக்குவமான, பாந்தமான, இதமான மற்றும் விரிவான கருத்துக்களும் எனக்கு மிகவும் மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்து வருகின்றன.

    ரொம்பவும் சந்தோஷம்.

    தொடர்ந்து அளித்திடும் தங்கமான தங்களின் ஆதரவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  43. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    கதைக்கேற்ற படமும், கதையும் அருமை.//

    மிக்க நன்றி, நண்பரே! vgk

    ReplyDelete
  44. G.M Balasubramaniam said...
    //காதலுக்குக் கண் இல்லை கோபு சார். அதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். காதல் வந்த பிறகு அதை நியாயப் படுத்தவும் வெற்றிபெறச் செய்யவும் பல விஷயங்கள் சொல்லலாம். மனசில் பட்டதை சொல்லும் உங்கள் நேர்மை பாராட்டத்தக்கது.//

    தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

    அன்புடன் vgk

    ReplyDelete
  45. கோவை2தில்லி said...
    //ஜானகியின் தேர்வு அருமை.

    அழகான கதையாக இருந்தது சார்.//

    ரொம்ப சந்தோஷம், மேடம். vgk

    ReplyDelete
  46. திண்டுக்கல் தனபாலன் said...
    //அழகான அருமையான கதை Sir.//

    அழகான அருமையான கருத்துக்கு மிக்க நன்றி, நண்பரே.

    ReplyDelete
  47. Ramani said...
    //அருமை அருமை
    கதை சொல்லிச் செல்லும் விதத்தில்
    நீங்கள் எதையும் ஒப்புக் கொள்ளும்படியாகச்
    செய்துவிடுகிறீர்க்ள்
    அதுவே உங்கள் சிறப்பு
    கடைசியாக மடிசாரில் ஸ்ரீதேவியின் படத்தை
    போட்டிருப்பது கூடுதல் சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 6//

    சிறப்பாகவும், கூடுதல் சிறப்பாகவும் கொடுத்துள்ள தங்கள் கருத்துரைகள் என்னை உற்சாகப்படுத்துகிறது, சார்.

    மிக்க நன்றி. அன்புடன் vgk

    ReplyDelete
  48. வெங்கட் நாகராஜ் said...
    //நல்ல காதல் கதை...
    நல்ல தலைப்பு!//

    மிக்க நன்றி, வெங்கட்.

    ReplyDelete
  49. Lakshmi said...
    //காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது.//

    அன்புடன் வருகை தந்து கதையில் தங்களுக்கு மிகவும் பிடித்த பகுதியைச் சுட்டிக்காட்டியுள்ளதற்கு, நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  50. cheena (சீனா) said...
    அன்பின் வை.கோ

    அருமையான கதை. செல்லும் விதம் இயல்பாய் உள்ளது. கரு சிறிதெனினும் வர்ணனைகளும் உரையாடல்களூம் ஒரு முழுக் கதையாக கருவினை மாற்றி இருக்கின்றன. கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. எப்படி ஜானகி ரகுராமனையும் ரகு ராமன் ஜானகியினையும் காதலித்தார்கள் என்பது நன்கு விளக்கப் பட்டிருக்கிறது.

    ஜானகியின் தாயார் மன்ப் பூர்வமாக சம்மதிக்கத் தயாராய் இருந்தும் மகளைச் சீண்டிப் பார்த்து மகிழ்வது நன்று.

    //தன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன், இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்க, காதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்ன, காலில் மெட்டிகள் அணிந்து, கைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றைச்சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக்கொண்டு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்க, முகத்திற்கு பசு மஞ்சள் பூசி, நெற்றியிலும், நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக்கொண்டு, தலை நிறைய புஷ்பங்கள் சூடி, வாயில் தாம்பூலம் தரித்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்க, கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போல காட்சியளித்த ஜானகி, //

    ////என்ன வர்ணனை - என்ன வர்ணனை - கற்பனை வளம் நன்று. வை.கோ - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா////

    எனக்கே மிகவும் பிடித்தமான அந்த வர்ணனையை மிகச்சரியாக தாங்கள் மட்டுமே சுட்டிக் காட்டியிருப்பதிலிருந்து, நம் இருவர் எண்ணங்களும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதாகத் தோன்றி என்னை மிகவும் மகிழ்விக்கிறது, ஐயா.

    தங்கள் வாழ்த்துக்கள் பெற இன்று நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன்.
    மிக்க நன்றி. அன்புடன் vgk

    ReplyDelete
  51. //கடைசியிலே ஆரம்பத்திலே இருக்குற நிம்மதியைப்பறி கொடுத்துட்டு, நடைபிணமாத் திரியறாங்க! இலவச இணைப்பா வியாதியை சம்பாதித்து வந்து பெண்டாட்டி, பிள்ளைகளுக்கும் பரப்பிடறாங்க//

    இந்த வரிகள் கவனிக்கவேண்டிய ஒன்று சார்.கதை சுவாரஸ்யமாக சென்றது.நல்ல கதை.

    ReplyDelete
  52. Avargal Unmaigal said...
    //கதை மிக அருமை. நான் பயந்து பயந்து படித்தேன் சஸ்பென்ஸ் என்று சொல்லி கடைசியில் அந்த ரகுராமன் ஒரு வேஷதாரி என்று சொல்லிவிடுவிர்களோ அல்லது ஜானகி அவரை மாற்றி விடுவரோ என்று நினைத்தேன் ஆனால் அந்த மாதிரி எந்தவித அபத்தங்களும் இல்லாமல் உங்கள் மனதை போல நல்லவிதமாக முடிந்ததில் மிக சந்தோஷம்.//

    சந்தோஷமான முடிவைத்தான் அனைவருமே விரும்புகிறார்கள்.


    //இதை எழுதிய உங்களுக்கு சத்தோஷம் இருக்கிறதோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு மிக சந்தோஷமாக இருக்கிறது.மிகவும் நல்ல கதை//

    இதைக்கேட்க எனக்கும் மிகவும் சந்தோஷமாகவே உள்ளது.

    //வை.கோ சார் உங்கள் முத்திரையை இந்த கதையில் காண்கிறேன்.//

    ஆஹா! என்னைப் பாராட்டுவதில் இப்படி ஒரு முத்திரையை பதித்து விட்டீர்களே!

    //வாழ்த்துக்கள் ஐயா.//

    நன்றி, நன்றி, நன்றி.

    ReplyDelete
  53. துரைடேனியல் said...
    Suvaarasyamaana kathai.

    துரைடேனியல் said...
    TM 8.

    தங்களின் அன்பான வருகைக்கும், சுவாரஸ்யமான கருத்துக்கும், ஆதரவான வோட் அளிப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே. அன்புடன் vgk

    ReplyDelete
  54. thirumathi bs sridhar said...
    //கடைசியிலே ஆரம்பத்திலே இருக்குற நிம்மதியைப்பறி கொடுத்துட்டு, நடைபிணமாத் திரியறாங்க! இலவச இணைப்பா வியாதியை சம்பாதித்து வந்து பெண்டாட்டி, பிள்ளைகளுக்கும் பரப்பிடறாங்க//

    ////இந்த வரிகள் கவனிக்கவேண்டிய ஒன்று சார்.கதை சுவாரஸ்யமாக சென்றது.நல்ல கதை.////

    யார் கவனிப்பது? யாரை கவனிப்பது? எப்படி கவனிப்பது? [”திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” அது போலத்தான் இதுவும் மேடம்]

    தங்களின் நல்ல சுவாரஸ்யமான பின்னூட்டத்திற்கு என் நன்றிகள், மேடம். அன்புடன் vgk

    ReplyDelete
  55. தாமதத்திற்கு மன்னிக்கவும் .
    காதலுக்கு கண்ணில்லை எப்போ? எங்கே ?யாரை@ யார்? என்று சொல்லாமல் ஏற்ப்படும் அனுபவம் தான் அது
    .உங்கள் கதைகள் படித்து முடித்தபின் ஒரு சந்தோசம் ஆட்கொள்ளும் .அருமையாக இருந்தது .

    ReplyDelete
  56. angelin said...
    //தாமதத்திற்கு மன்னிக்கவும் .
    காதலுக்கு கண்ணில்லை எப்போ? எங்கே ?யாரை@ யார்? என்று சொல்லாமல் ஏற்ப்படும் அனுபவம் தான் அது
    .உங்கள் கதைகள் படித்து முடித்தபின் ஒரு சந்தோசம் ஆட்கொள்ளும்.அருமையாக இருந்தது.//

    மிகவும் சந்தோஷம். நன்றிகள்.

    தங்களின் மின்னஞ்சல் முகவரியை தாங்கள் விருப்பப்பட்டால் எனக்கு அனுப்பி வைக்கவும்.

    வேறு ஒரு சந்தோஷமான விஷயம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    என் முகவரி: valambal@gmail.com

    அன்புடன் vgk

    ReplyDelete
  57. காதல் எந்த கணத்தில் யாரிடம் எப்போது பூக்கும் என்பதை சொல்ல முடியாத செய்தியை அழகாக சொன்ன விதம் அருமை அய்யா.
    த ம 10

    ReplyDelete
  58. A.R.ராஜகோபாலன் said...
    //காதல் எந்த கணத்தில் யாரிடம் எப்போது பூக்கும் என்பதை சொல்ல முடியாத செய்தியை அழகாக சொன்ன விதம் அருமை அய்யா.
    த ம 10//

    அந்த அபூர்வமாகப்பூக்கும் அழகான காதல் உணர்வுகள் போலவே உணர்ந்தேன் தங்களின் இந்தப்பின்னூட்டத்தைப் பார்த்ததும்.

    “மறக்க மனம் கூடுதில்லையே”

    பிரியமுள்ள,
    vgk

    ReplyDelete
  59. நல்ல சிறுகதை கோபால் சார். முடிவில் இன்றைய பெண்கள் மறந்துவிட்ட நிறைய விஷயங்களை சொல்லியுள்ளீர்கள். ஒரு பெண் தாய்மை வாசனையோடு கடந்து போவது போல் இருந்தது..

    ReplyDelete
  60. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    //அருமையான கதை//

    மிக்க நன்றி, சார்.

    ReplyDelete
  61. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //நல்ல சிறுகதை கோபால் சார். முடிவில் இன்றைய பெண்கள் மறந்துவிட்ட நிறைய விஷயங்களை சொல்லியுள்ளீர்கள்.//

    மிக்க நன்றி, மேடம்.


    //ஒரு பெண் தாய்மை வாசனையோடு கடந்து போவது போல் இருந்தது..//

    ஆஹா! தங்களின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. தாய்மை அடைந்த பெண்களுக்கு ஏற்படும் பூரிப்பை எனக்கு இந்த வரிகளால் உணர்த்தியதில் அதன் வாசனையை என்னாலும் அறிய முடிந்தது. நீங்க நீங்க தான்! ;)))))

    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    [எனக்கு சமீபகாலமாக சில விசித்திரமான பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால்
    அதிகமாக வலைப்பக்கம் வர முடியாமல் உள்ளது. அதனால் நீண்ட நாட்களாக உங்கள் பக்கமும் வரவே இல்லை. தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம். மீண்டும் இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போமாக!]

    ReplyDelete
  62. மிகவும் அருமையான சிறுகதை ஐயா.இடைக்கிடையில் தத்துவமிக்க சொற்பொழிவே ஆற்றிவிட்டீர்கள்.நீங்கள் கறபனையில் உதித்த இந்த கதையினை நான் நேரிலேயே பார்த்திருக்கின்றேன்.

    எங்கள் தெருவிலே வசிக்கும் ஒரு குருக்கள் மகள் படித்து விட்டு இக்கால நாகரீகப்பெண்ணாக நடைமுறையில் இருந்தாள்.

    அவளுக்கு வாய்த்ததோ குருக்கள் மாப்பிள்ளை.சட்டை அணியாத உடம்பும்,கடுக்கணும், முடிந்த கூந்தலுமாக இருக்கும் அவருடன் கைகோர்த்த படி அவள் உலா வந்த பொழுது வீதியே வியந்து பார்க்கும்.இன்று பாஸ்டன் நகரிலுள்ள ஒரு கோவிலுக்கு குருக்களாக பணி புரிய சென்று விட்டாலும் எனக்கு அவர்கள் புரியாத புதிராக இருந்தனர். இன்றோ..தங்களின் இச்சிறுகதை தெளிவு படுத்தி விட்டது.

    ReplyDelete
  63. ஸாதிகா said...
    //மிகவும் அருமையான சிறுகதை ஐயா.இடைக்கிடையில் தத்துவமிக்க சொற்பொழிவே ஆற்றிவிட்டீர்கள்.நீங்கள் கறபனையில் உதித்த இந்த கதையினை நான் நேரிலேயே பார்த்திருக்கின்றேன்.

    எங்கள் தெருவிலே வசிக்கும் ஒரு குருக்கள் மகள் படித்து விட்டு இக்கால நாகரீகப்பெண்ணாக நடைமுறையில் இருந்தாள்.

    அவளுக்கு வாய்த்ததோ குருக்கள் மாப்பிள்ளை.சட்டை அணியாத உடம்பும்,கடுக்கணும், முடிந்த கூந்தலுமாக இருக்கும் அவருடன் கைகோர்த்த படி அவள் உலா வந்த பொழுது வீதியே வியந்து பார்க்கும்.இன்று பாஸ்டன் நகரிலுள்ள ஒரு கோவிலுக்கு குருக்களாக பணி புரிய சென்று விட்டாலும் எனக்கு அவர்கள் புரியாத புதிராக இருந்தனர். இன்றோ..தங்களின் இச்சிறுகதை தெளிவு படுத்தி விட்டது.//

    தங்களின் அன்பான வருகைக்கும், அனுபவ பூர்வமான அருமையான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

    ReplyDelete
  64. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
    //வித்யாசமான கதை.//

    தங்களின் அன்பான வருகைக்கும் ‘வித்யாசமான கதை’ என்ற அரியதொரு கருத்துக்கும் மிக்க நன்றி, மேடம்.

    அன்புள்ள vgk

    ReplyDelete
  65. தாங்கள் பல கதைகள் தந்திருப்பினும் இந்த கதை என் மனதை மிகவும் கவர்ந்து விட்டது.ஒரு முறைக்கு இருமுறை படித்தேன்.லேட்டாக வந்து விட்டோமே என வருத்தமாக இருந்தது.

    கதையில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

    //காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது.//

    மிகச் சரியான கருத்து.

    //நாம் எவ்வளவோ பிறவி தாண்டித்தான் இந்த மகத்துவம் வாய்ந்த மனுஷ்யப்பிறவியை அடைகிறோமாம். மனுஷ்யாளாப் பிறப்பதே அரிது என்கிறார். பிறவிப்பெருங்கடலைத் தாண்ட மனுஷ்ய ஜன்மா மட்டுமே சுலபமாக வழிவகுக்குமாம்; //

    சட்டென மனதுக்குள் புகுந்த வரிகள்.எனினும் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.

    நீண்ட நாட்களுக்குப் பின் நல்லதொரு கதை படித்த திருப்தி.நன்றி சார்

    ReplyDelete
  66. raji said...
    ***தாங்கள் பல கதைகள் தந்திருப்பினும் இந்த கதை என் மனதை மிகவும் கவர்ந்து விட்டது.ஒரு முறைக்கு இருமுறை படித்தேன்.லேட்டாக வந்து விட்டோமே என வருத்தமாக இருந்தது.***

    இந்தக்கதை தங்கள் மனதை மிகவும் கவர்ந்தது என்று, வளர்ந்துவரும் பிரபல எழுத்தாளராகிய தாங்களே சொல்லியுள்ளது, என் மனதையும் கவர்ந்தது. ஒருமுறைக்கு இருமுறை என் நன்றிகள். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாகவே வந்துள்ளீர்கள்.

    தங்களிடமிருந்து மனம் திறந்த, இதுபோன்ற விரிவான பின்னூட்டங்கள் எனக்குக் கிடைத்து எவ்வளவு நாட்கள் இருக்கும் தெரியுமா?

    இப்போது தான் எனக்கும் உங்களுடனான ஆரம்பகால மகிழ்ச்சிகளுடன் கூடிய நட்பு புதுப்பிக்கப்பட்டது போல உணர்கிறேன்.

    நடுவில் மாதக்கணக்காக தாங்கள் என் பதிவுகள் பக்கமே வராமல் எங்கோ வெளியூர் பயணம் போய் விட்டபோது நான் அதற்காக எவ்வளவோ FEEL செய்திருக்கிறேன்.


    ***கதையில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

    காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது.

    மிகச் சரியான கருத்து.***

    எதுவுமே தாங்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்.

    ***நாம் எவ்வளவோ பிறவி தாண்டித்தான் இந்த மகத்துவம் வாய்ந்த மனுஷ்யப்பிறவியை அடைகிறோமாம். மனுஷ்யாளாப் பிறப்பதே அரிது என்கிறார். பிறவிப்பெருங்கடலைத் தாண்ட மனுஷ்ய ஜன்மா மட்டுமே சுலபமாக வழிவகுக்குமாம்;

    சட்டென மனதுக்குள் புகுந்த வரிகள்.எனினும் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.

    நீண்ட நாட்களுக்குப் பின் நல்லதொரு கதை படித்த திருப்தி.நன்றி சார்***


    நீண்ட நாட்களுக்குப்பின் நல்லதொரு நீண்ட பின்னூட்டம் என் அன்புக்குரியவரிடமிருந்து கிடைத்துள்ளதில் எனக்கும் திருப்தியே.

    நன்றி, நன்றி, நன்றி.

    பிரியமுள்ள vgk

    [தாங்கள் இன்று 5.12.2011 அன்று எனக்குச் செய்துள்ள உதவி, காலத்தினால் செய்த உதவி. கண்தெரியாத ஒருவருக்கு கண்ணொளி வழங்கியது போலவே நான் அதை உணர்கிறேன்.

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள்.

    வாழ்க வாழ்கவே!

    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  67. கடவுள் ஒருவரின் தேவையை நிறைவேற்ற இன்னொருவரை கருவியாக கொள்கிறார்.எனவே தங்களுக்கு கிடைத்திருக்கும் பலனின் பெருமை கடவுளையே சேரும்.நன்றி

    ReplyDelete
  68. raji said...
    //கடவுள் ஒருவரின் தேவையை நிறைவேற்ற இன்னொருவரை கருவியாக கொள்கிறார்.எனவே தங்களுக்கு கிடைத்திருக்கும் பலனின் பெருமை கடவுளையே சேரும்.நன்றி//

    இதையும் மிகவும் அழகாகவே சொல்லி விட்டீர்கள்.

    என் அன்பு மகளின் இனிமையான குரலையும், தன்னடக்கத்துடன் கூடிய இந்த அழகான பதிலையும் இன்று ஒருசேர என்னை அனுபவிக்க வைத்த அந்த கடவுளுக்கும், என் அன்பு மகளுக்கும் ஒரு சேர நன்றி கூறிக்கொள்கிறேன்.

    அந்தக்கடவுள் தான் இன்று என் அன்பு மகள் ராஜி ரூபத்தில் வந்து மிகச் சாதாரணமான என் மீது கருணை கொண்டு உதவியிருக்கிறார், என்று
    என் உள்மனது சொல்கிறது.

    Anyway Thank God ! &
    Thanks to Raji !!

    vgk

    ReplyDelete
  69. விரிந்த மனப்பக்குவம் - என்ன ஒரு அற்புதமான தன்மை அது! அனைவரும் இதை புரிந்துக்கொண்டால் பிரச்சனைகளே இல்லை. சூப்பர் கதை சார்.

    ReplyDelete
  70. Shanker Bharadwaj said...
    //விரிந்த மனப்பக்குவம் - என்ன ஒரு அற்புதமான தன்மை அது! அனைவரும் இதை புரிந்துக்கொண்டால் பிரச்சனைகளே இல்லை. சூப்பர் கதை சார்.//

    தங்களின் புதிய வருகையும், ஆதரவான கருத்துக்களும் எனக்கு மிகவும் மன மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி, சார்.

    ReplyDelete
  71. வணக்கம் ஐயா!
    கதையின் போக்கில் வரும் ஜானகி போல மங்கைகள் வாழ்க்கைதுணையாக வந்து விட்டால் பரபர வாழ்வில் பக்குவம் இல்லாது  செய்யும் ஊதாரித்தனங்கள் எல்லாம் போய் விடும் ரகுராம் போல ஆன்மீக நெறியில் தடம் பதித்தால் தர்க்கவியல் வாழ்வில் தத்தளிக்கத் தேவையில்லை என்ற கதை எனக்குப் பிடித்திருக்கு. கதையில் ராமாயணத்தின் வார்த்தைகள் சிலதை இட்டதும் நவயுகமாந்தர்களின் நடிப்பை ஒரு கை பார்த்த விதமும் என்னுள் இந்த காதல் வங்கி இருப்பாகிப் போனது உடனே பின்னூட்டம் இடமறந்தாலும் மீண்டும் மதுமதி என்னை உங்களிடம் சேர்த்துவிட்டார். தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
    நன்றி இப்படியான உணர்வுகளுடன் கூடிய அதிக கதைகளை எதிர் பார்க்கின்றேன்.

    ReplyDelete
  72. தனிமரம் said...
    //வணக்கம் ஐயா!
    கதையின் போக்கில் வரும் ஜானகி போல மங்கைகள் வாழ்க்கைதுணையாக வந்து விட்டால் பரபர வாழ்வில் பக்குவம் இல்லாது செய்யும் ஊதாரித்தனங்கள் எல்லாம் போய் விடும் ரகுராம் போல ஆன்மீக நெறியில் தடம் பதித்தால் தர்க்கவியல் வாழ்வில் தத்தளிக்கத் தேவையில்லை என்ற கதை எனக்குப் பிடித்திருக்கு. கதையில் ராமாயணத்தின் வார்த்தைகள் சிலதை இட்டதும் நவயுகமாந்தர்களின் நடிப்பை ஒரு கை பார்த்த விதமும் என்னுள் இந்த காதல் வங்கி இருப்பாகிப் போனது உடனே பின்னூட்டம் இடமறந்தாலும் மீண்டும் மதுமதி என்னை உங்களிடம் சேர்த்துவிட்டார். தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
    நன்றி இப்படியான உணர்வுகளுடன் கூடிய அதிக கதைகளை எதிர் பார்க்கின்றேன்.//

    தங்களின் புதிய வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

    9.2.2012 வலைச்சரத்தில் இந்த என் கதை பற்றி வலைச்சர ஆசிரியர் திரு. மதுமதி அவர்களால் புகழ்ந்து பேசி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

    தாங்கள் 9.2.2012 அன்று வலைச்சரத்தில் கொடுத்திருந்த பின்னூட்டத்தில்,

    /இந்தக் ”காதல் வங்கி” என்ற கதையைப் படித்துள்ளேன், எனக்கு மிகவும் பிடித்த கதை இது/ என்று வலைச்சர ஆசிரியர் திரு. மதுமதி அவர்களுக்கு எழுதியிருந்தீர்கள்.

    அதைப்படித்த நான்

    ”காதல் வங்கி தங்களுக்கு மிகவும் பிடித்த கதை என்றால் ஏன் அதைப்பற்றி பின்னூட்டம் ஏதும் தாங்கள் தரவில்லை?”

    என நான் கேட்டிருந்தேன்.

    [தாங்கள் அதுபோல எழுதாவிட்டால் நிச்சயம் நான் இது போல கேட்டிருக்கவே மாட்டேன் அல்லவா]

    எது எப்படியோ இப்போது என் கதைக்குத் தாங்கள் கருத்துக்கள் கூறி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி & நன்றி.

    அன்புடன் vgk

    ReplyDelete
  73. ஆஹா....

    அதி அற்புதமான கதை !

    எப்படி விட்டேன் நான் இதை !!

    ReplyDelete
  74. //ஆஹா....
    அதி அற்புதமான கதை !
    எப்படி விட்டேன் நான் இதை !!//

    ஆஹா! அற்புதமான சொல்லாடல் இது.

    கதையில் வரும் ஜானகியின் மொத்த அழகையும் முழுவதுமாகக் கண்டதுபோல எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறதே ! ;)))))

    அன்புடன் vgk

    ReplyDelete
  75. அருமையான கதை. உங்களின் வர்ணிப்பில் ஜானகி எனக்கும அம்பாளாகவே தெரிந்தாள். நாகரீக மாற்றத்தால் மங்கையர்கள் மாறி வருவது. கட்டுக் குடுமி வைப்பதால் கேவலமில்லை, குணம்தான் பெரிது... இப்படி பல விஷயங்களை சிறுகதையின் மூலமாக மனதில் பதிய வைத்து விட்டீங்க ஐயா. பல நல்ல விஷயங்களை மிஸ் பண்றேன்னு இப்ப லேட்டா இதைப் படிச்சது மூலமாத் தெரிஞ்சதுல கொஞ்சம் வருத்தமும், இப்பவாவது படிச்சோம்கறதுல சந்தோஷமும் எனக்கு.

    ReplyDelete
  76. தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வித்தன.

    Ms. நிரஞ்சனா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    என்றும் அன்புடன் vgk

    ReplyDelete
  77. ஜானகியின் அனைவரையும் கவரும் தன்மை மிகவும் அருமை.... மேலும் படித்து கருத்திடுக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ Mrs. VIJIPARTHIBAN Madam, அவர்களே!

      வணக்கம். கதையில் வரும் ஜானகியைப் போன்றே தாங்களும், என் பதிவுகளுக்கு அன்புடன் அவ்வப்போது வருகை தந்து, அழகான பின்னூட்டங்களிட்டு, என்னைக் கவரும் தன்மையும் அருமையோ அருமை தான்.

      மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மனதுக்கு சந்தோஷமாக உள்ளது.

      Delete
  78. ஓ... இதுதான் அம்மாவின் பாசமா ... தன் மகளின் புன்னகை, அழுகை எல்லாவற்றையும் பற்றி அறிந்துகொள்பவள் தான் அம்மா.. ஓ கதை நல்ல இருக்கு .. படித்துக்கொண்டுள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. அம்மா என்பவளும் ஓர் பெண் தானே! மிகவும் கஷ்டப்பட்டு பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, பெற்று, வளர்த்து, சீராட்டி, பாராட்டி, உணவூட்டி, நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து, ஆளாக்கிய தன் மகளின் புன்னகை, அழுகை மட்டுமல்ல, மனத்தினில் நினைப்பது எல்லாவற்றையும் X-Ray & Scan எடுப்பது போல உடனே
      தெரிந்து கொண்டு விடுவாள் தானே! அம்மான்னா அம்மா தான்.

      கதையைப்படித்து வரும் போதே, ஆங்காங்கே பாராட்டி உடனுக்குடன் கருத்து அளித்துள்ளது தங்களின் தனிச்சிறப்பாக என்னால் உணரமுடிகிறது.

      அது என் சந்தோஷத்தின் எல்லையாக உள்ளது.

      அதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.

      Delete
  79. நல்ல கருத்துள்ள "காதல் வங்கி " கதை.... மிகவும் சுவரஷ்சியமாக இருந்தது படிக்க... ஜானகியின் கணக்கு வாழ்க்கையிலும் லட்க்ஷிமிகரமாக அமைந்தது.... கதை அருமை ஐயா...

    நிரஞ்சனா வலைப்பூவில் இருந்த உங்கள் கருத்தின் இணைப்பு மூலமாகதான் இதைப் பார்த்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...

    இணைப்பை அங்கு கொடுத்து என்னை படிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்துள்ள கதை எனவும், அருமையான கதை எனவும், படிக்க நல்ல சுவாரஸ்யமாக இருந்தது எனவும் பாராட்டியுள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது. உற்சாகப் படுத்துவதாகவும் உள்ளது.

      ஜானகியின் கணக்கு அவள் வாழ்க்கையிலும் லக்ஷ்மிகரமாகவே அமைந்துள்ளது எனக்கூறியுள்ள தங்கள் சொற்களும் கேட்க எனக்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது.

      அதையே ஒரு லக்ஷ்மிகரமான சொற்களாக என்னால் உணரவும் முடிகிறது. கதையை ஊன்றிப்படித்து அதனுடன் ஒன்றிப்போனால் தான், இதுபோன்ற அழகான லக்ஷ்மிகரமான கருத்துக்களையும் எடுத்துக்கூற முடியும். அதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      Ms. நிரஞ்சனா அவர்களின் வலைப்பூ மூலமாக இந்த இணைப்பைப் பார்த்து தாங்கள் படிக்க சந்தர்ப்பம் கிடைத்ததாக நன்றி கூறியுள்ளீர்கள். அதற்கும் என் நன்றிகள்.

      தங்களுக்கு சிறுகதைகள் படிப்பதில் இவ்வளவு ஆர்வம் உண்டு என எனக்குத் தெரியாமல் போய்விட்டது.

      2011 ஆண்டில், இதுபோன்ற பல சிறுகதைகள் என் வலைப்பதிவில் வெளியிட்டுள்ளேன். பலரும் பாராட்டியுள்ளனர்.

      அவற்றில் சிலவற்றை தேர்ந்தெடுத்து தங்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.

      நேரம் கிடைக்கும் போது தினமும் ஒன்றாகப் படித்து விட்டு கருத்துக்கூறுங்கள்.

      பிரியமுள்ள,
      vgk

      Delete
  80. அப்படியே ஆகட்டும் ஐயா... என்னை ஜானகியோடு ஒப்பிட்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் ... நன்றி ஐயா ...

    ReplyDelete
  81. மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி. ஜானகி என்பது ஸீதாதேவியின் அழகான பெயர் அல்லவா. அதனால் தங்களை ஜானகியுடன் ஒப்பிட்டு விட்டேன். அதுபோலவே தங்கள் பெயரான விஜி என்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான பெயரே.

    ஆனால் இந்த விஜி / ராஜி என்ற பெயர்களிலேயே எனக்கு என் அலுவலத்திலும், பதிவுலகிலும், குடும்ப உறவினர்களிலும் ப்ல Friends [தோழிகள்] உள்ளனர். எல்லோருமே உங்களைப் போலவே மிகவும் நல்லவர்கள். என்னிடம் தனி பிரியமும், மரியாதையும் கொண்டவர்கள்.

    தங்களின் மகிழ்ச்சியில் நானும் இப்போது பங்கு கொள்கிறேன். மிக்க நன்றி. பிறகு இன்றோ நாளையோ மெயில் அனுப்புகிறேன். பார்ப்போம்.

    Good Night. Bye for now. vgk

    ReplyDelete
  82. எளிமையான ஒரு காதல் கதை. ” காலம் செய்த கோமாளிதனத்தால் உலகம் பிறந்தது. கண்கள் செய்த கோமாளிதனத்தால் காதல் பிறந்தது “ என்ற கண்ணதாசனின் பழைய பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

    ReplyDelete
  83. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாங்க, வணக்கம்.

    தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும், கவியரசு கண்ணதாசன் அவர்களின் பழைய பாடல் வரிகளை நினைவுக்குக் கொண்டு வந்து மகிழ்ந்ததும், எனக்கு சந்தோஷமாக உள்ளன.

    மிக்க நன்றி, ஐயா.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  84. அருமை. அந்த மாதிரியும் அவரவர் விருப்பம் போல வாஃக்கையை அமைத்துக் கொள்ளலாம். பழமையும் புதுமையும் கலந்த கதை.கோபுலு சார் வரைந்த படம்மை எண்ணிக் கோண்டே படித்து முடித்தால், அட! அருமை போங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள பட்டு,

      தங்களின் அன்பான வருகையும், அழகான இனிமையான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வடையச்செய்தன.

      /அட! அருமை போங்கள்/

      என உரிமையுடன் சொல்லியுள்ளதை, என்னைத் தாங்கள் தட்டிக்கொடுத்து [ஷொட்டுக்கொடுத்து] உற்சாகப்படுத்தியது போல உணர்ந்தேன்.

      மிக்க நன்றி.

      அன்புடன்
      vgk

      Delete
  85. வை. கோ சார் இன்று முதல் உங்க ஒவ்வொரு பதிவையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். கதை எழுதும் திறமையை உங்க பதிவின் மூலமாக நானும் வளர்த்துக்கொள்ளலாம்னு தோணுது. வங்கி நடை முறைகளில் ஆரம்பித்து இருவருக்கும் காதல் ஏற்படும் காரணங்களையும் அழகாக விவரித்து, தாய் மகளின் அன்னியோன்னியமிக்க உரையாடல்களை அவ்வளவு தத்ரூபமாக சொல்லி இடை இடையே தகுந்த பழமொழிகள் , பொன் மொழிகளையும் சேர்த்து பின்னிட்டீங்க. பத்திரிகைகளிலும் உங்க கதை வெளி வந்திருப்பது ஆச்சரியமே இல்லே. அதுக்கு முழு தகுதியானவங்க நீங்க. திரும்ப திரும்ப ரெண்டு முறை கதையையும் வர்ணனைகளையும் படிச்சுக்கிட்டே இருந்தேன். தாமதமாக வந்து படிச்சு பின்னூட்டம் போடுகிறேன். கதை ரொம்ப யதார்த்தமாக நன்றாக இருக்கிறது சார். இனிமேலதான் ஒவ்வொரு பதிவுகளும் சென்று பார்த்து படிக்கப்போறேன்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் January 13, 2013 5:47 AM

      வாங்கோ Ms. பூந்தளிர் Madam.

      //வை. கோ சார் இன்று முதல் உங்க ஒவ்வொரு பதிவையும் படிக்க ஆரம்பித்து விட்டேன்.//

      ஹைய்யோ! அப்படியா? மிகவும் சந்தோஷம்.

      அப்ப்டின்னா அடுத்த பொங்கலுக்கு என் எல்லாப்பதிவுகளையும் சுத்தமாகப்படிச்சு முடிச்சுடுவீங்க.

      அதன் பிறகே நான் புதுப்பதிவுகள் கொடுப்பதாக இருக்கிறேன்.

      தினமும் நீங்கள் என் தொடர்பு எல்லைக்குள் இருக்கப் போவதாகச் சொல்வது ..... சூடான சுவையான சர்க்கரைப் பொங்கலில் உருக்கிய நெய்யை நிறைய ஊற்றி, மூக்கைத் துளைக்கும் வறுத்த முந்திரிகள் மிதக்க ஏலக்காய் மணத்துடன் கொதிக்கக்கொதிக்க சாப்பிடும் முன் நாக்கில் நீர் ஊறுமே அதே ஃபீலிங் எனக்கு ஏற்படுகிறது.

      >>>>>>

      Delete
  86. VGK >>>> Ms. பூந்தளிர் [2]

    //கதை எழுதும் திறமையை உங்க பதிவின் மூலமாக நானும் வளர்த்துக்கொள்ளலாம்னு தோணுது.//

    ஆஹா, பேஷா வளர்த்துக்கொள்ளுங்கோ. என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    //வங்கி நடை முறைகளில் ஆரம்பித்து இருவருக்கும் காதல் ஏற்படும் காரணங்களையும் அழகாக விவரித்து, தாய் மகளின் அன்னியோன்னிய மிக்க உரையாடல்களை அவ்வளவு தத்ரூபமாக சொல்லி இடை இடையே தகுந்த பழமொழிகள், பொன் மொழிகளையும் சேர்த்து பின்னிட்டீங்க.//

    தங்களின் இந்த மனம் திறந்த பாராட்டுக்கருத்துக்களை பின்னூட்டமாக எழுதுவதில் நீங்களும் எனக்கு மேல் பின்னிப்பெடல் எடுத்துட்டீங்க தெரியுமா? ;)))))

    ReplyDelete
    Replies
    1. VGK >>>> Ms. பூந்தளிர் [3]

      //பத்திரிகைகளிலும் உங்க கதை வெளி வந்திருப்பது ஆச்சரியமே இல்லே. அதுக்கு முழு தகுதியானவங்க நீங்க.//

      அப்படியெல்லாம் இல்லீங்க. நான் மிகச் சாதாரணமானவன் தான்.

      //திரும்ப திரும்ப ரெண்டு முறை கதையையும் வர்ணனைகளையும் படிச்சுக்கிட்டே இருந்தேன்.//

      எழுதிய நானே அடிக்கடி படிப்பவன் தான் இதுபோன்ற என் கதைகளை. உங்களைப்போலவே நிறைய பேர்கள் சொன்னார்கள், இரண்டுமுறை திரும்பத்திரும்ப வர்ணனைகளைப் படித்த்தாக. சந்தோஷமாக உள்ளது, நீங்களும் இப்போ அதையே திரும்பச் சொன்னது. ;)

      //தாமதமாக வந்து படிச்சு பின்னூட்டம் போடுகிறேன்.//

      தாமதமாக வரும் பின்னூட்டங்களைத்தான் என்னாலும் மிகவும் நிறுத்தி நிதானமாக ரஸித்துப்படித்து, பதில் தர முடிகிறது. அதனால் பரவாயில்லை. தாமதமாகவே வாருங்கள்.

      >>>>>

      Delete
    2. VGK >>>> Ms. பூந்தளிர் [4]

      //கதை ரொம்ப யதார்த்தமாக நன்றாக இருக்கிறது சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நீண்ட, மிகவும் யதார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      //இனிமேலதான் ஒவ்வொரு பதிவுகளும் சென்று பார்த்து படிக்கப்போறேன்.//

      சந்தோஷம். இந்த “காதல் வங்கி”யை முதல் கதையாகத் தேர்ந்தெடுத்துப்படித்துள்ளதில், எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

      சரி மெதுவாக தினமும் ஒவ்வொரு பதிவுகள் வீதம் படியுங்கோ.

      மறக்காமல் கருத்தும் சொல்லுங்கோ .. ப்ளீஸ்.

      பிரியமுள்ள
      VGK

      Delete
  87. Priya Anandakumar August 22, 2013 at 8:10 AM

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //Beautiful love story...//

    Your Comment itself is So Beautiful like you ! ;))))) Thanks a Lot, Madam.

    ReplyDelete
  88. ஒரு வித்தியாசமான, தெளிந்த அமைதியான நீரோட்டம் போன்ற நவீன காதல் ஓவியம். மனதிற்கு இதமாக இருந்தது.

    ReplyDelete
  89. ஆனா பாருங்கோ அந்த முதல் பஞ்ச் சூப்பர், எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
    அப்புறம் அந்த தெளிவான காதல் ,இது உண்மையான காதல். மாய வெளி அலங்கார பகட்டுக்கு உட்படாமல்,,,,,,,,,,
    கடைசியா அவளின் அலங்காரம் எனக்கு இந்த இடம் ரொம்ப பிடித்தது. அழகான மடிசார் மஞ்சள் பூசி முகம், குங்குமம், தலைநிறைய பூ,
    இன்னும்,,,,,,,,,,,,,,,
    நம் பாரம்பரியம் வரும் நாகரீகத்தால் மாறிவிடக்கூடாது என்று நான் எப்போவும் கவலைப்படுவது உண்டு. மொத்தத்தில் எல்லாம் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. mageswari balachandran May 4, 2015 at 11:24 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆனா பாருங்கோ, அந்த முதல் பஞ்ச் சூப்பர், எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.//

      :) மிக்க மகிழ்ச்சி. அதுதானே உண்மையும் கூட :)

      //அப்புறம் அந்த தெளிவான காதல், இது உண்மையான காதல். மாய வெளி அலங்கார பகட்டுக்கு உட்படாமல்....//

      தெளிவாகப் புரிந்துகொண்டு அனுபவித்துச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம்.

      //கடைசியா அவளின் அலங்காரம் எனக்கு இந்த இடம் ரொம்ப பிடித்தது. அழகான மடிசார் மஞ்சள் பூசி முகம், குங்குமம், தலைநிறைய பூ, இன்னும் ....... நம் பாரம்பரியம் வரும் நாகரீகத்தால் மாறிவிடக்கூடாது என்று நான் எப்போவும் கவலைப்படுவது உண்டு.//

      அச்சா, பஹூத் அச்சா ! இதுபோன்று அதிசயமாக நினைப்பவர்களை இன்று விரல்விட்டு நாம் எண்ணிவிடலாம். :)

      //மொத்தத்தில் எல்லாம் சூப்பர்.//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான மிகச்சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  90. பூந்தளிர் May 21, 2015 at 11:40 AM
    :)))))

    பழைய பூந்தளிரின் நீண்ட பின்னூட்டம் இன்று என்னால் மீண்டும் ரசித்து படிக்கப்பட்டது. அந்தப்பூந்தளிர் இப்போ காணாப்போய் விட்டதில் எனக்குக் கொஞ்சம் வருத்தமே.

    ReplyDelete
  91. இதே சாயலில் நானும் ஒரு சிறுகதை எழுதி வைத்திருக்கிறேன்.

    பள்ளிக் காலத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டாம் தாள்களில் கதை எழுத HINT தருவார்களே, அது போல HINTஆக குறித்து வைத்திருக்கிறேன். எப்ப தான் எழுதப் போறேனோ தெரியலை.

    சுவாரசியம் குறையாமல் எழுதுவதில் உங்களுக்கு இணை நீங்களே தான்.

    ReplyDelete
  92. காதலவங்கி ஸ்ரீதேவி போட்டோபடம் சூப்பர் கத. அம்மிகிட்ட அந்த பொண்ணு மனசுதொறந்து பேசுறது நல்லாருக்கு.

    ReplyDelete
  93. நல்ல இயல்பான சம்பாஷணைகள் அம்மா மகளின் நெருக்கமான யன உணர்வுகள் எல்லாமே கதையை சுகமாக நகர்த்தி சென்று சுபமான முடிவையும் தந்தது.

    ReplyDelete
  94. காதல் சேமிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்...பாசாங்குகள் இல்லாத எளிய மனிதர்களை எவருக்கும் பிடித்துவிடும்...சில பெண்களுக்கு காதல் செய்யக்கூட...''காசப்போல காதலும் செலவுக்கில்லட்டி...''

    ReplyDelete
  95. //உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது.

    காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. திடீரென இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவருக்கொருவர் பரவசம் ஏற்படுத்துவதே உண்மையான காதலாகுமோ என்னவோ!
    /காதல் இலக்கணம்! கதை அருமை!

    ReplyDelete