About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, December 10, 2011

என் உயிர்த்தோழி


என் உயிர்த்தோழி

[படக்கதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-01.10.2006 தேதியிட்ட தினமலர் வாரமலரில் பக்கம் எண் 29 இல் மேலே உள்ள படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப்படத்திற்கு தகுந்தபடி ஒரு சிறுகதை எழுதி அனுப்ப வேண்டும் என்பது “படக்கதைப்போட்டி” யின் அறிவிப்பு.

போட்டியின் நிபந்தனைகள்: 

உங்கள் கற்பனைக்கு ஒரு சவால்

கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு தகுந்த சிறுகதை ஒன்றை எழுதி அனுப்புங்கள்

படத்தில் உள்ள காட்சி சிறுகதையின் மையக்கருவாக இருக்க வேண்டும்

சிறுகதை A4 அளவுள்ள தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும். 

தாளின் பின்புறம் உங்களின் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிடுதல் அவசியம்.

படத்தில் உள்ள நட்சத்திரங்களின் பெயரையே கதாபாத்திரங்கள் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

கதைகள் வரும் 05.10.2006 வியாழக்கிழமைக்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வையுங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதை வாரமலர் இதழில் பிரசுரமாகும். 

பரிசு ரூ.1000 [ஒருவருக்கு மட்டுமே]

அனுப்ப வேண்டிய முகவரி: 

படக்கதைப் போட்டி, தினமலர்-வாரமலர், த.பெ.எண்: 7225 சென்னை - 600 008

மேற்படி படக்கதைப் போட்டியில் கலந்து கொண்டதில் என் சிறுகதைக்கு பரிசளிக்கப்பட்டது:

அந்தக்கதை இதோ உங்கள் பார்வைக்கு:

என் உயிர்த்தோழி


கல்யாணம் ஆகி கணவருடன் சிங்கப்பூர் சென்ற உஷா, ஒரு வருடம் சென்ற பின் இப்போது தான், கிராமத்திலுள்ள தன் பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறாள். உள்ளே நுழைந்ததும் அவள் கண்கள் எதையோ பரபரப்பாகத் தேடியது. 

வருடக்கணக்காகக் காத்திருந்தும் கிட்டே நெருங்கி விட்ட சந்தோஷத்தில் ஒரு நொடியைக்கூட மேலும் தாங்கிக்கொள்ள முடியாமல் மனம் தவித்தது.

நேராக சமையலறைக்குள் நுழைந்தாள். அங்கே யாரும் இல்லை. பாத் ரூம் கதவு திறந்து கிடந்தது. கொல்லைப்புறத்துக்கு ஓடினாள். அங்கே கிணற்றடியில் பாட்டி குனிந்து எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.  சத்தம் போடாமல் பின்புறமாக பூனை போல் பதுங்கிச்சென்று, பாட்டியைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். 

முதலில் திடுக்கிட்டாலும், ஒரு நொடிக்குள் யாரென்று யூகித்து விட்டாள் பாட்டி. ஐந்து நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் அப்படியே அணைத்துக் கொண்டாள். பிரிவின் சோகம் பெரு மூச்சாய் வெளிப்பட்டது.

உஷாவுக்கு தன் அப்பா வழிப்பாட்டி என்றால் ரொம்பப்பிரியம். பாட்டி ரொம்பவும் கெட்டிக்காரி. யார் மனசையும் நோகவிட மாட்டா. சுருக்குன்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டா. தவிர தன் பேத்தி உஷா மேல் கட்டுக்கடங்காத பாசம். 

பாட்டிக்கு வயசாகிவிட்டதே தவிர வீட்டில் ஓய்வு ஒழிச்சல் கிடையாது. தாத்தா காலையிலே எழுந்து, ஸ்நானம் பண்ணி, பஞ்சக்கச்சம் கட்டி பூஜை முடித்து, பலகாரம் சாப்பிட்டு, கட்டிலில் போய் காலை நீட்டிப்படுக்கும் வரை, பாட்டி அந்த வீட்டினுள் குறுக்கும் நெடுக்குமாக ஓடித்திரிவாள். பார்த்துப்பார்த்து பணிவிடைகள் செய்வாள். 

பாட்டியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியொரு அழகு. பறங்கிப்பழச்சிவப்பில் கட்டையா குட்டையா மடிசார் புடவையில் ஜொலிப்பாள். 

தாத்தாவின் பூஜை முடியும் முன் நான் பாட்டி அருகே போனால் “எம்மேலே பட்டுடாதேடீ; போய் ஸ்நானம் பண்ணிட்டு வாடீ” என்று தாத்தா காதுக்கு கேட்கும்படி பலமாக உரக்கக் கத்துவாள்.

பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்.


தாத்தா பாட்டியின் இளமைப்பருவம், அவர்களின் கல்யாணம், தாம்பத்யம், அவர்கள் அந்தக்காலத்தில் பார்த்த சினிமா, டிராமாக்கள், கிராமத்துப் பெரிய வீட்டில் தன் மாமியார், மாமனார், கொழுந்தன்கள், நாத்தனார்கள் மட்டுமின்றி கொல்லைப்புறத்தில் அடிக்கடி வந்து போகும் குரங்குகள், காக்கைகள் தொந்தரவுடன் கோட்டை அடுப்பில் தேங்காய் மட்டைகளை வைத்து எரித்து தான் சமையல் செய்தது என தன் அனுபவங்கள் எல்லாவற்றையும் கதைபோல வெகுஅழகாகச் சொல்லுவாள்.  


அடிக்கடி அந்தக்காலத்தையும் இந்தக்காலத்தையும் ஒப்பிட்டுப் பேசுவாள். உஷாவுக்கு பாட்டியின் நகைச்சுவையான பேச்சுக்களைக் கேட்டாலே உற்சாகம் பொங்கும்.


உஷாவின் சின்ன வயதில், மொட்டை மாடியில் பாட்டி வடாம் பிழிந்து கொண்டிருந்த போது, காக்கை வந்து கொத்தாமல் உஷாவைக் காவலுக்கு வைத்துவிட்டு, பாட்டி கீழே இறங்கி பாத் ரூம் போய்விட்டு வருவதற்குள், உஷா காரசாரமான வடாத்து மாவை விரல்களால் எடுத்து, நக்கித் தின்பதைப் பார்த்துவிட்ட பாட்டிக்கு வந்ததே கோபம்! காக்கையை விரட்ட வைத்திருந்த குச்சியை எடுத்து உஷாவைப் பாட்டி துரத்தி அடிக்க வர, உஷா இங்குமங்கும் ஓடி கடைசியில் பிழிந்திருந்த வடாத்திலேயே காலை வைத்து வழிக்கிவிழ, பாட்டி கண்கலங்கிப்போனாளே! தன்னைத்தூக்கிப்போய் நன்றாகத் தேய்த்து வடாத்துமாவு போகக் குளிப்பாட்டினாளே!! அது நினைவுக்கு வரும்போதெல்லாம் உஷாவுக்கு இன்றும் சிரிப்புத்தான் வருகிறது.  


சிங்கப்பூரிலிருந்து திடீர்னு வந்து தன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும், பேத்தியின் அன்பில் திக்கு முக்காடிப் போய்விட்டாள், பாட்டி.


பாட்டி இப்போது ரொம்பத்தான் மாறிப்போய் இருந்தாள். தாத்தாவுக்கு மிகவும் வயதாகி முடியாத்தனம் வந்து விட்டதால், பூஜை ஏதும் செய்கிறேன் என்று தன்னைத்தானே படுத்திக்கொண்டு பாட்டியையும் படுத்தாமல், எப்போதும் கட்டிலே கதி என்று ஓய்வெடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்.   பாட்டியும் மடி ஆசாரம் என்று எதுவும் இப்போது தன்னைத்தானே வருத்திக்கொள்வது இல்லையாம்.


தன் இஷ்டப்படி ஏதோ புடவையைச் சுற்றிக்கொண்டு சதா டீ.வி.யைப் பார்த்துக்கொண்டு, ரிமோட்டும் கையுமாகவே இருக்கிறாள், பாட்டி இப்போது.


வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பேரன் பேத்திகளுடன் செல் போனில் பேசுவதும், வெய்யிலுக்கு கூலிங் க்ளாஸ், ஏ.ஸி. ரூம் என்று ஜாலியாகவே பொழுதைப்போக்கி வருகிறாள்.


பாவம், இளமை காலத்தில் குடும்பத்திற்காகப் பாடுபட்டவள். முதுமையிலாவது சுகப்பட கொடுத்து வைத்திருக்கிறாள். உஷாவுக்குப் பாட்டியை இப்போது பார்க்கும் போதும், பழையவற்றையெல்லாம் நினைக்கும் போதும் மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது.


“என்ன பாட்டி, உன் மடிசார் புடவையெல்லாம் என்ன ஆச்சு? எங்கே போச்சு?” பாட்டியைச் சீண்டினாள் உஷா.


“போதும்டீ, அதையெல்லாம் நனைச்சு, அலசி, பிழிஞ்சு, ஒனத்தி (உலர்த்தி) காயவச்சு, மடிச்சு (மடித்து) கட்டறதுக்குள் (உடம்பில் அணிவதற்குள்) பிராணன் போயிடுது போ; 


அவசரமா பாத்ரூம் போய் வருவதற்குள்ள தலைப்புக் கச்சமெல்லாம் கசங்கி, அவிழ்ந்து, தரையெல்லாம் பெருக்கிண்டு வருதுடீ” என்று சொல்லி பாட்டி அலுத்துக்கொண்டதைக் கேட்டதும் உஷாவுக்குச் சிரிப்பு தாங்க முடியலே.


பாட்டிக்குன்னு ஆசையாத் தான் வாங்கி வந்த இரண்டு ஜோடி வளையல்களை, பாட்டி கையில் போட்டுவிட்டு அழகு பார்த்தாள்.  புது நைட்டி ஒன்றை எடுத்து பாட்டிக்கு மாட்டி விட்டாள். பாட்டியின் முகம் வெட்கத்திலும் சந்தோஷத்திலும் சிவந்து போனது.


நாற்காலியில் பாட்டியை உட்கார வைத்து தன் கேமராவால் விதவிதமான போட்டோக்களாக எடுத்துத்தள்ளினாள்.      


”தாத்தாவைக் கூட்டிவந்து காட்டட்டுமா?” என்று உஷா கேட்க பாட்டியின் முகம் வெட்கத்தில் சிவந்து நெளிந்தபோதும், கொள்ளை அழகாகவே தோன்றினாள்.


“சிங்கப்பூரில் உள்ள எல்லாப் பாட்டிகளும் இதுபோலத்தான் காத்தாட, அவரவர் விருப்பப்படி டிரஸ் போட்டுண்டு, காரில் ஏறி ஊரைச் சுற்றி வராங்க பாட்டி” என்றாள் உஷா.


“சட்டுப்புட்டுனு, நீயும் புள்ளையாண்டு இருக்கேன்னு நல்ல சேதி சொல்லுடீ. எனக்கும் தாத்தாவுக்கும் பாஸ்போர்ட் விசா எல்லாம் இப்போதே ஏற்பாடு பண்ணுடீ. நானும் தாத்தாவும் சிங்கப்பூருக்கு வந்துடறோம். உனக்கு பிரஸவ டயத்துலே கூடமாட ஒத்தாசையா இருந்துட்டு, அப்படியே சிங்கப்பூரையும் சுத்திப்பார்த்துட்டா போதும்டீ, அதன் பிறகு நானும் உன் தாத்தாவும் சேர்ந்தே டிக்கெட் வாங்கிண்டு இந்த உலகத்தை விட்டே கிளம்பிடுவோம்” என்றாள் பாட்டி. 


இதுபோல அவ்வப்போது சொல்லிச்சொல்லியே இதுவரை பதினாறு முறை கொள்ளுப்பேரன் பேத்தி என ஆசைதீரப் பார்த்து விட்டவள்.


இந்தத்தள்ளாத வயதிலும் பாட்டியின் பேச்சினில் இருக்கும் உற்சாகமும், ஆசையும், தைர்யமும் உஷாவை வியப்படைய வைத்தன.


பாட்டியின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்த உஷா, பாட்டி நீட்டிய காலை தன் கைகளால் மெதுவாகப் பிடித்து அமுக்கி விட்டுக்கொண்டிருந்தாள்.


பாட்டி தன்னை மறந்து, சந்தோஷ மிகுதியால் வாய் ஓயாமல் உஷாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.


-o-o-o-o-o-o-
முற்றும்
  -o-o-o-o-o-o-      [இந்தச் சிறுகதை வெளியான இதழின் அட்டைப்படம்]


 இந்தச்சிறுகதை தினமலர் வாரமலர் நடத்திய
 “படக்கதைப்போட்டி” யில் 
கலந்து கொண்டு பரிசு பெற்றது..

22.10.2006 அன்று தினமலர் வாரமலரில் 
பக்கம் எண் 30+31 இல் வெளியானது..


அன்புடன் 
vgk

150 comments:

 1. very nice story. You deserve for this prize

  ReplyDelete
 2. பாட்டி தன்னை மறந்து, சந்தோஷ மிகுதியால் வாய் ஓயாமல் உஷாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.


  மகிழ்ச்சியான பகிர்வுகள்..
  அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

  தினமலரில் மலர்ந்து மணம் பரப்பி
  பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 3. உஷாவுக்கு பாட்டியின் நகைச்சுவையான பேச்சுக்களைக் கேட்டாலே உற்சாகம் பொங்கும்.

  உயிர்த்தோழி"யாய் அமைந்த பாட்டியின் நகைச்சுவை போலவே தங்களின் அருமையான கதைகளும் படிப்பவர் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பரப்புகின்றன்..

  ReplyDelete
 4. சிங்கப்பூரிலிருந்து திடீர்னு வந்து தன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும், பேத்தியின் அன்பில் திக்கு முக்காடிப் போய்விட்டாள், பாட்டி.

  பாசப்பிணைப்புடன் அருமையான நேசம்மிக்க காட்சி..

  ReplyDelete
 5. அருமையான கதை!பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. “சிங்கப்பூரில் உள்ள எல்லாப் பாட்டிகளும் இதுபோலத்தான் காத்தாட, அவரவர் விருப்பப்படி டிரஸ் போட்டுண்டு, காரில் ஏறி ஊரைச் சுற்றி வராங்க பாட்டி” என்றாள் உஷா.

  சௌகர்யமான இனிய காட்சி..

  ReplyDelete
 7. பாட்டி தன்னை மறந்து, சந்தோஷ மிகுதியால் வாய் ஓயாமல் உஷாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

  இதமான கதையை அருமையாய் அளித்து மனம் நிறைவடையச் செய்தமைக்கு நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 8. Varamalaril parisu petrathukku manamaarntha vaalthukkal.

  Unga ezhuthu thiramaikkum oru Salute.

  ReplyDelete
 9. ///அடிக்கடி அந்தக்காலத்தையும் இந்தக்காலத்தையும் ஒப்பிட்டுப் பேசுவாள். உஷாவுக்கு பாட்டியின் நகைச்சுவையான பேச்சுக்களைக் கேட்டாலே உற்சாகம் பொங்கும்.///  வயதானவர்களுக்கு இது வழக்கம் என்றாலும், அப்படி பழமை பேசுகையில்
  அவர்களின் முகத்தின் தோற்றத்தை பார்க்கையில் இன்பமாக இருக்கும்..
  அத்தனை உணர்சிகளையும் கொட்டுவார்கள்..

  அருமையா சொல்லியிருகீங்க ஐயா..
  இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்பதுபோல
  நீங்கள் போட்டியில் வென்றது.. மகிழ்ச்சியான செய்தி.

  ReplyDelete
 10. ””பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்.”””

  பாட்டியின் பேரன்பை பெருமிதமாக சொன்ன கதை அய்யா, அருமை.

  ReplyDelete
 11. கதை மிகவும் அருமையாக இருந்தது .
  பாட்டிக்கும் பேத்திக்கும் இடையிலுள்ள அன்பை அழகாய் சொல்லி சென்றது கதை .

  ReplyDelete
 12. //பாட்டி தன்னை மறந்து, சந்தோஷ மிகுதியால் வாய் ஓயாமல் உஷாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.//

  இதை படிக்கும்போது சில வருடங்களுக்கு முன் மணமான புதிதில் பாட்டியின் பிறந்த நாளுக்கு ம்யுசிகள் வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தேன் .அவர் போவோர் வருவோரிடமெல்லாம் //என் பேத்தி ஜெர்மனிலருந்து அனுப்பினா என்று சொல்லி சொல்லி மகிழ்ந்தாராம் ,நடு இரவில் ம்யுசிக் கேக்குமாம் பார்த்தல் பாட்டி கார்டை திறந்து மூடி ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாராம் .
  பெரியோர்களின் சின்ன சின்ன சந்தோஷங்கள் நமக்கு நிறைந்த ஆசிர்வாதம் தானே .உங்க கதை என் நினைவுகளை மீட்டி கொண்டு வந்து விட்டது

  ReplyDelete
 13. நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 14. கதை படித்தேன்.. ரசித்தேன்..பரிசு பெற்றமைக்கு தாமதமான வாழ்த்துகள்..

  ReplyDelete
 15. அன்பின் வை.கோ

  சிறு கதை நன்று - இயல்பான நடை - எளிமையான் சொற்கள் - விபரமான வர்ணனை. பாசமிகு பாட்டி உயிர்த் தோழியாக பேத்தியுடன் பழகுவது அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

  பறங்கிப்பழச் சிவப்பு - கட்டை - குட்டை - மடிசார் புடவையில் பாட்டி ஜொலிப்பதனை மனக் கண்ணில் நினைத்துப் பார்த்து ..... இரசித்தேன்.

  மாமியார் மாமனார் கொழுந்தனார் நாத்தனார் குரங்கு காக்கை கோட்டை அடுப்பு தேங்காய் மட்டை - மலரும் நினைவுகள் அசை போடுதல் ஆனந்தம்.

  காலையில் எழுந்து ஸ்னாநம் பண்ணி பஞ்ச கச்சம் கட்டி பூஜை முடித்துப் பலகாரம் சாப்பிட்டு கட்டிலில் காலை நீட்டிப் படுத்து ...... ஓய்வு எடுக்கும் தாத்தா

  வடாம் பிழியும் வடாத்து மாவு .....

  வயதான தாத்தா பாட்டி தம்பதியினர் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதும் அதற்குக் காரணம் சொல்வதும் .... அடடா - சூழ்நிலைக்குத் தக்கவாறு மாற்றம்.

  சீக்கிரமே புள்ளயாண்டு நல்ல சேதி சொல்லுடி ......பாட்டியின் வெகு இயல்பான ஆசை ...

  வை.கோ - கதை செல்லும் விதம் - நடை - சொற்கள் - நிக்ழவுகள் - அத்தனையும் அருமை. மிக மிக இரசித்தேன்.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 16. இயல்பான ஒரு பிராமணப் பாட்டியையும், பேத்தியையும் படம் பிடித்துக் காட்டியது உங்கள் சிறுகதை. பரிசுக்கு மிகத் தகுதியான கதைதான். பாட்டியின் பாசம், பேத்தியின் பரிவு, பாட்டியின் ஆதங்கம் எல்லாமே அருமை. நன்றி ஐயா!

  ReplyDelete
 17. மகன் மகளைவிட பெயரனுக்கும் பெயர்த்திக்கும்தானே
  உரிமையும் நேசமும் அதிகம் இருக்க முடியும்
  அதனால்தான் தாத்தா பாட்டி பெயரை பேரனுக்கும் பேத்திக்கும்
  வைக்கும் வழக்கம் வந்திருக்கிறது
  அவர்களது உறவை பாசப் பிணைப்பை மிக அழகாக விளக்கிப் போகும்
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. இந்தத்தள்ளாத வயதிலும் பாட்டியின் பேச்சினில் இருக்கும் உற்சாகமும், ஆசையும், தைர்யமும் உஷாவை வியப்படைய வைத்தன.

  அந்த நாள் மனிதர்களின் துணிவும் தெம்பும் பிரமிப்பு தருபவை. அடித்தளத்தில் மனசாட்சியும் நேர்மையும் இருந்ததால் ஈர்ப்பு சக்தி அதிகம் அவர்களுக்கு.

  பாட்டி + பேத்தி மனசுக்குள் இடம் பிடித்து விட்டார்கள் ஜீவனுள்ள கதை அமைப்பால்.

  ReplyDelete
 19. இதுபோல எல்லார் வீட்டிலும் ஒரு பாட்டி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்குனு நினைக்க வைத்தகதை பரிசு பெற்றதில் அதிசயமே இல்லை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. அன்பின் இனிய வை கோ!
  இக் கதை தினமலர் வார இதழ்
  பரிசுப்போட்டியில் பரிசு பெற்றது வியப்பல்ல
  பெறவில்லை என்றால்தான் வருத்தம்! வியப்பு!
  ஐயா! தங்கள் கதைகளைத்
  தொகுத்து நூலாக வெளியிடலாமே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. இந்தக் கதையை படிப்பவர்கள் அனைவருக்குமே அவர்கள் கடந்த கால பசுமையான நினைவுகள் நினைவுக்கு வரும்.

  நல்ல உயிரோட்டமுள்ள கதை. நீங்கள் அதை தொகுத்து வழங்கிய விதம் படு ஜோர்.

  பரிசுத் தொகை ஆயிரம் என்ன. பத்தாயிரம் கூட கொடுக்கலாம்.

  ReplyDelete
 22. வடாத்து மாவில் வழுக்கி விழுந்ததைத் தவிர எல்லாமே டிட்டோ தான்!
  கதை கன ஜோர்!

  ReplyDelete
 23. உங்கள் படைப்புக்களை எல்லாம் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள்.

  ஒரு படத்தைப் பார்த்து கதை... வெகு அருமை அண்ணா. 'என் உயிர்த்தோழி' இயல்பான கதையோட்டம்; இதமான எழுத்துநடை. நிச்சயம் பரிசுக்குத் தகுதியான கதைதான், பாராட்டுக்கள்.

  ReplyDelete
 24. பாட்டி - பேத்தி கதை அருமை.
  அன்புடன், எம்.ஜெ.ராமன், வாஷி.

  ReplyDelete
 25. இமா said...
  //உங்கள் படைப்புக்களை எல்லாம் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள்.

  ஒரு படத்தைப் பார்த்து கதை... வெகு அருமை அண்ணா. 'என் உயிர்த்தோழி' இயல்பான கதையோட்டம்; இதமான எழுத்துநடை. நிச்சயம் பரிசுக்குத் தகுதியான கதைதான், பாராட்டுக்கள்.//

  என் அன்புள்ள இமா,

  நீண்டநாட்களுக்குப்பின் தாங்கள் வருகை தந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

  மற்ற விஷயங்கள் பற்றி மெயில் கொடுக்கிறேன்.

  அன்புடன்
  அண்ணா
  [vgk]

  ReplyDelete
 26. என் பாட்டியை நினைவுபடுத்திவிட்டது இக்கதை. அவர்களும் இப்படித்தான் எப்போதும் உற்சாகமாய்ப் பேசி வளையவருவார்கள்.

  இக்கதையில் சொல்லப்படுவதுபோல் முதுமைக்காலத்தில் வயதானவர்களை ஒதுக்கிவைக்காமல் அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதும், சிறு சிறு அன்பளிப்புகள் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுமே அவர்களை நோய்நொடியின்றி நீண்டகாலம் நிறைவோடு வாழவைக்கும்.

  பரிசு பெற மிகவும் தகுதியான கதை. பாராட்டுகள் சார்.

  ReplyDelete
 27. அருமையான கதை. பரிசு பெற்றதில் ஆச்சரியமில்லை.

  பாட்டியும், பேத்தியும் மனதில் இடம் பெற்று விட்டார்கள்.
  த.ம - 6
  இண்ட்லி - 4

  ReplyDelete
 28. பூஜை முடியும் முன் ( நான் )? பாட்டி அருகே போனால்

  The story is good. Suddenly there is a first person account ?

  ReplyDelete
 29. நடையும் வர்ணனையும் அருமை.

  //பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்.//

  அதுதான் பாட்டி பாசம்.தன் குழந்தைகளை விட குழந்தைகளின் குழந்தைகள் என்றால் ஒரு படி மேல்தான்.பாலை விட பாலாடை ருசிதானே.

  //பாட்டி தன்னை மறந்து, சந்தோஷ மிகுதியால் வாய் ஓயாமல் உஷாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.//

  வயதானவர்கள் வேறு எதையுமே விரும்புவதில்லை.அவர்களுடன் யாரேனும் நேரம் செல்வழிக்க மாட்டார்களா? பேசமாட்டார்களா? என்றுதான் ஏங்குவார்கள்.அவ்விதம் அமைப்பு இல்லாத சந்தர்ப்பத்தில்தான் அவர்கள் டீவி ரிமோட்டையும் கணினியையும் நாடும்படி ஆகி விடுகிறது.காலம் அப்படி ஆகி விட்டது.

  ReplyDelete
 30. //பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்.//
  நல்ல குணசித்திரம்!

  ReplyDelete
 31. அவர்கள் நிச்சயம் அந்தப் படத்திற்கு இப்படி ஒரு கதையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. வாழ்ந்த வயதில் 'கட்டுபெட்டி'யாக இருந்தாலும், பிற்காலத்தில் காலத்திற்கு ஏற்றமாதிரி தன்னை மாற்றிக் கொண்ட பாட்டியை அவர்களுக்குப் பிடித்து விட்டது போலும்!

  'பாட்டி நீட்டிய காலை தன் கைகளால் மெதுவாகப் பிடித்து அமுக்கி விட்டுக்கொண்டிருந்தாள்'-- நீங்களும் இப்படி ஒரு வரியை இடையில் சேர்த்து, படத்திற்கு உரிய கதையாக்கி அந்த ஒரே ஒரு பரிசையும் பெற்று விட்டீர்களே!

  பாட்டி மறக்க முடியாத பாத்திரப் படைப்பு தான்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 32. அருமையான கதை.பாத்திரங்கள் கண் முன்னே நடமாடுவதைப்போன்ற உயிரோட்டமான எழுத்துநடை..அருமை.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 33. வாடாத்து மாவையும், என் பாட்டியையும் நினைவுறுத்தி விட்டீர்கள். நல்ல கதை, வை.கோ முத்திரையுடன்..

  ReplyDelete
 34. Latha Vijayakumar said...
  //very nice story. You deserve for this prize//

  Respected Madam,

  WELCOME for your new entry to my Blog.

  Thank you very much for your Very First and Best Wishes.

  Why don't you try to write in Tamil in any of your existing 6 Blogs? You may even open a new Blog for writing in Tamil. It is just my request & suggestion only.

  With kind regards & best Wishes,
  vgk

  ReplyDelete
 35. இராஜராஜேஸ்வரி said...
  //பாட்டி தன்னை மறந்து, சந்தோஷ மிகுதியால் வாய் ஓயாமல் உஷாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.


  மகிழ்ச்சியான பகிர்வுகள்..
  அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

  தினமலரில் மலர்ந்து மணம் பரப்பி
  பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்..//

  அழகிய தங்கள் செந்தாமரையை ஐந்து முறைகள் மலரச்செய்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  தங்களின் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பரிசைவிட மணம் பரப்பி மனதை மகிழச்செய்கிறதே!
  ;)))))) vgk

  ReplyDelete
 36. இராஜராஜேஸ்வரி said...
  /உஷாவுக்கு பாட்டியின் நகைச்சுவையான பேச்சுக்களைக் கேட்டாலே உற்சாகம் பொங்கும்./

  //உயிர்த்தோழி"யாய் அமைந்த பாட்டியின் நகைச்சுவை போலவே தங்களின் அருமையான கதைகளும் படிப்பவர் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பரப்புகின்றன்.//

  அப்படியா! மிக்க சந்தோஷம், மேடம்.
  இதைத் தாங்கள் கூறி நான் கேட்க எனக்கும் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஊற்றெடுத்து விடுகிறது.
  நன்றி. vgk

  ReplyDelete
 37. இராஜராஜேஸ்வரி said...
  /சிங்கப்பூரிலிருந்து திடீர்னு வந்து தன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும், பேத்தியின் அன்பில் திக்கு முக்காடிப் போய்விட்டாள், பாட்டி./

  //பாசப்பிணைப்புடன் அருமையான நேசம்மிக்க காட்சி..//

  பாசமும் நேசமும் கூடிய கருத்துக்களுக்கு நன்றிகள். vgk

  ReplyDelete
 38. Yoga.S.FR said...
  //அருமையான கதை!பாராட்டுக்கள்.//

  தாங்கள் இன்று முதல் வருகை தந்து பாராட்டியுள்ளது என் யோகம் தான்.
  நன்றிகள்.

  ReplyDelete
 39. இராஜராஜேஸ்வரி said...
  /“சிங்கப்பூரில் உள்ள எல்லாப் பாட்டிகளும் இதுபோலத்தான் காத்தாட, அவரவர் விருப்பப்படி டிரஸ் போட்டுண்டு, காரில் ஏறி ஊரைச் சுற்றி வராங்க பாட்டி” என்றாள் உஷா./

  //சௌகர்யமான இனிய காட்சி..//

  மகிழ்ச்சி;))))) vgk

  ReplyDelete
 40. இராஜராஜேஸ்வரி said...
  /பாட்டி தன்னை மறந்து, சந்தோஷ மிகுதியால் வாய் ஓயாமல் உஷாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்./

  //இதமான கதையை அருமையாய் அளித்து மனம் நிறைவடையச் செய்தமைக்கு நன்றிகள் ஐயா..//

  அருமையான கருத்துக்களை இதமாக எடுத்துரைத்து என் மனமும் நிறைவடையச் செய்தமைக்கு, என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 41. துரைடேனியல் said...
  //Varamalaril parisu petrathukku manamaarntha vaalthukkal.

  Unga ezhuthu thiramaikkum oru Salute.//

  அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  Salute க்கு என் பதில் Salute உங்களுக்கும்.

  ReplyDelete
 42. மகேந்திரன் said...
  /அடிக்கடி அந்தக்காலத்தையும் இந்தக்காலத்தையும் ஒப்பிட்டுப் பேசுவாள். உஷாவுக்கு பாட்டியின் நகைச்சுவையான பேச்சுக்களைக் கேட்டாலே உற்சாகம் பொங்கும்./

  //வயதானவர்களுக்கு இது வழக்கம் என்றாலும், அப்படி பழமை பேசுகையில் அவர்களின் முகத்தின் தோற்றத்தை பார்க்கையில் இன்பமாக இருக்கும்..

  அத்தனை உணர்சிகளையும் கொட்டுவார்கள்..

  அருமையா சொல்லியிருகீங்க ஐயா..

  இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்பதுபோல நீங்கள் போட்டியில் வென்றது.. மகிழ்ச்சியான செய்தி.//

  தங்களின் அன்பான வருகையும், அழகழகான கருத்துக்களும் எனக்கு மிகுந்த மன நிறைவையும், உற்சாகத்தையும், மன மகிழ்ச்சியையும் அளிப்பதாக உள்ளன. மிக்க நன்றி, சார். அன்புடன் vgk

  ReplyDelete
 43. A.R.ராஜகோபாலன் said...
  /””பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்.”””/

  //பாட்டியின் பேரன்பை பெருமிதமாக சொன்ன கதை அய்யா, அருமை.//

  மிக்க நன்றி, ராஜகோபால் சார்.

  என் வேண்டுகோளுக்கு இணங்க தாங்கள் எழுதிய “மழலைகள் உலகம் மகத்தானது” என்ற கட்டுரை பத்திரிகையொன்றில் அச்சாகி வெளியிடப்பட்டுள்ளது என்று அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. அதற்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
  அன்புடன் vgk

  ReplyDelete
 44. angelin said...
  //கதை மிகவும் அருமையாக இருந்தது.
  பாட்டிக்கும் பேத்திக்கும் இடையிலுள்ள அன்பை அழகாய் சொல்லி சென்றது கதை.//

  தேவதையே வருகை புரிந்து இவ்வாறு சொல்வது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றிகள். அன்புடன் vgk

  ReplyDelete
 45. angelin said...
  /பாட்டி தன்னை மறந்து, சந்தோஷ மிகுதியால் வாய் ஓயாமல் உஷாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்./

  //இதை படிக்கும்போது சில வருடங்களுக்கு முன் மணமான புதிதில் பாட்டியின் பிறந்த நாளுக்கு ம்யுசிகள் வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தேன் .அவர் போவோர் வருவோரிடமெல்லாம் //என் பேத்தி ஜெர்மனிலருந்து அனுப்பினா என்று சொல்லி சொல்லி மகிழ்ந்தாராம் ,நடு இரவில் ம்யுசிக் கேக்குமாம் பார்த்தல் பாட்டி கார்டை திறந்து மூடி ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாராம் .
  பெரியோர்களின் சின்ன சின்ன சந்தோஷங்கள் நமக்கு நிறைந்த ஆசிர்வாதம் தானே .உங்க கதை என் நினைவுகளை மீட்டி கொண்டு வந்து விட்டது//

  மீண்டும் தேவதை என்முன் தோன்றி, தன் அழகான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றிகள். அன்புடன் vgk

  ReplyDelete
 46. DrPKandaswamyPhD said...
  //நன்றாக இருக்கிறது.//
  மிக்க நன்றி, டாக்டர் சார்.

  ReplyDelete
 47. மதுமதி said...
  //கதை படித்தேன்.. ரசித்தேன்..பரிசு பெற்றமைக்கு தாமதமான வாழ்த்துகள்..//

  தங்களின் தொடர் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

  அன்பான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், நன்றி, சார். vgk

  ReplyDelete
 48. கணேஷ் said...
  //இயல்பான ஒரு பிராமணப் பாட்டியையும், பேத்தியையும் படம் பிடித்துக் காட்டியது உங்கள் சிறுகதை. பரிசுக்கு மிகத் தகுதியான கதைதான். பாட்டியின் பாசம், பேத்தியின் பரிவு, பாட்டியின் ஆதங்கம் எல்லாமே அருமை. நன்றி ஐயா!//


  தங்களின் தொடர் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
  உற்சாகம் அளிக்கிறது

  தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், நன்றி, சார். vgk

  ReplyDelete
 49. Ramani said...
  //மகன் மகளைவிட பெயரனுக்கும் பெயர்த்திக்கும்தானே
  உரிமையும் நேசமும் அதிகம் இருக்க முடியும்
  அதனால்தான் தாத்தா பாட்டி பெயரை பேரனுக்கும் பேத்திக்கும்
  வைக்கும் வழக்கம் வந்திருக்கிறது
  அவர்களது உறவை பாசப் பிணைப்பை மிக அழகாக விளக்கிப் போகும்
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்//

  உன்னதமாகத் தொடரும் உறவுகள் பற்றிச் சொல்லியுள்ள தங்களின் அழகான கருத்துக்களுக்கு
  மிக்க நன்றிகள் ரமணி சார்.
  அன்புடன் vgk

  ReplyDelete
 50. ரிஷபன் said...
  /இந்தத்தள்ளாத வயதிலும் பாட்டியின் பேச்சினில் இருக்கும் உற்சாகமும், ஆசையும், தைர்யமும் உஷாவை வியப்படைய வைத்தன./

  //அந்த நாள் மனிதர்களின் துணிவும் தெம்பும் பிரமிப்பு தருபவை. அடித்தளத்தில் மனசாட்சியும் நேர்மையும் இருந்ததால் ஈர்ப்பு சக்தி அதிகம் அவர்களுக்கு.

  பாட்டி + பேத்தி மனசுக்குள் இடம் பிடித்து விட்டார்கள் ஜீவனுள்ள கதை அமைப்பால்.//

  வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள், சார். தங்கள் மனதுக்குள் இடம் பிடித்துவிட்டதில், பாட்டி+பேத்தி மட்டுமா? நானும் உண்டு தானே!))

  மிக்க நன்றி, சார்.
  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 51. Lakshmi said...
  //இதுபோல எல்லார் வீட்டிலும் ஒரு பாட்டி இருந்தால் எவ்வளவு நல்லா இருக்குனு நினைக்க வைத்தகதை பரிசு பெற்றதில் அதிசயமே இல்லை வாழ்த்துக்கள்.//

  வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள், மேடம். இதே போல வீட்டுக்கு ஒரு பாட்டி அவசியம் தேவை தான்.

  மிக்க நன்றி!

  ReplyDelete
 52. புலவர் சா இராமாநுசம் said...
  //அன்பின் இனிய வை கோ!
  இக் கதை தினமலர் வார இதழ்
  பரிசுப்போட்டியில் பரிசு பெற்றது வியப்பல்ல
  பெறவில்லை என்றால்தான் வருத்தம்! வியப்பு!//

  ஆஹா! வியக்க வைக்கும் தங்கள் கருத்துகளுக்கு நன்றி, ஐயா!

  //ஐயா! தங்கள் கதைகளைத்
  தொகுத்து நூலாக வெளியிடலாமே!
  புலவர் சா இராமாநுசம்//

  என்னுடைய, இதற்கு முந்தியன் பதிவான “தாயுமானவள் - சிறுகதை - நிறைவுப்பகுதியில், தயவுசெய்து போய் பாருங்கள், ஐயா.

  அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களையும் அதற்கான என் பதில்களையும் கூட பாருங்கள், ஐயா.

  நூல் வெளியீடு பற்றி பல தகவல்கள் கொடுத்துள்ளேன்.

  தற்சமயம் கவிதை நூல் வெளியிடும் முயற்சியில் உள்ள தங்களுக்கும், அது உதவியாக இருக்கக்கூடும்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 53. கணேஷ் said...
  //இந்தக் கதையை படிப்பவர்கள் அனைவருக்குமே அவர்கள் கடந்த கால பசுமையான நினைவுகள் நினைவுக்கு வரும்.

  நல்ல உயிரோட்டமுள்ள கதை. நீங்கள் அதை தொகுத்து வழங்கிய விதம் படு ஜோர்.//

  சந்தோஷம். மிக்க நன்றி கணேஷ்.

  //பரிசுத் தொகை ஆயிரம் என்ன. பத்தாயிரம் கூட கொடுக்கலாம்.//

  ஆஹா! எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டாய்! ;)))))

  பரிசுத்தொகை முக்கியமல்ல கணேஷ்.

  இதுபோல படக்கதைப்போட்டி வைப்பதால், படத்தைப்பார்த்த பலருக்கும் பலவித கற்பனைகள் தோன்றி, அதன் மூலம் பல கதைகள் பலரால் எழுதப்படும்.

  இந்த நோக்கம் மிகச்சிறந்தது.

  இதை 2 அல்லது 3 நாட்களுக்குள் எழுதி உடனடியாக அனுப்ப வேண்டும் என்ற வேகமும் ஏற்படும்.

  பரிசு யாரோ ஒருவருக்கே என்றாலும், அவரவர்கள் கற்பனைக்கு இது நல்ல விருந்து. பல புதிய படைப்புகள் வெளிவர ஒரு வாய்ப்பாக அமையும்.

  இதில் வேடிக்கை என்னவென்றால் தொடர்ந்து 14 வாரங்கள் படங்கள் வெளியிட்டிருந்தார்கள். 14 வாரமும் நான் 14 கதைகளை உடனுக்குடன் சளைக்காமல் எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன்.

  ஆனால் ஒரே ஒரு முறை தான் எனக்குப் பரிசளிக்கப்பட்டது.

  இருப்பினும், இதனால் எனக்கு என் கற்பனையில் 14 கதைகள் எழுத முடிந்தது.

  அவற்றை என் ஸ்டாக்கில் ஏற்றி வைத்துக்கொள்ளவும் முடிந்தது. அது மிகப்பெரிய இலாபம் தானே.

  இது போல ஒரு போட்டி அறிவிப்பு மட்டும் வராமல் இருந்தால் அந்த 3 மாதங்களுக்குள் நான் 14 கதைகள் சுறுசுறுப்பாக எழுதியிருக்க மாட்டேன் அல்லவா!

  அதனால் இது போன்ற போட்டிகளில் பரிசு கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் சமமாக பாதித்து, கலந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆவல்.

  பரிசு கிடைத்தால் பரிசுடன் கதை. பரிசு கிடைக்காவிட்டாலும் கதை நம் ஸ்டாக்கில் சேர்வதால் பிறகு அதை வேறு முறையில் நாம் பயன் படுத்திக்கொள்ளலாம்.

  உதாரணமாக நான் சமீபத்தில் வெளியிட்ட “கொஞ்ச நாள் பொறு தலைவா! ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா!! என்பது கூட வேறு ஒரு பத்திரிகையின் படக்கதைப் போட்டிக்காக நான் எழுதிய கதை தான்.

  அதற்கு பரிசு கிடைக்காவிட்டால் என்ன? எவ்வளவு பேர் பாராட்டி எழுதியுள்ளனர். அதைவிடப் பரிசா நமக்கு முக்கியம்?

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 54. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  //வடாத்து மாவில் வழுக்கி விழுந்ததைத் தவிர எல்லாமே டிட்டோ தான்!

  கதை கன ஜோர்!//

  கன ஜோரான கருத்துகளுக்கு நன்றி, சார்.

  ReplyDelete
 55. Manakkal said...
  //பாட்டி - பேத்தி கதை அருமை.
  அன்புடன், எம்.ஜெ.ராமன், வாஷி.//

  தமிழில் அடிக்க நேற்று இரவு தான் கற்றுக் கொடுத்தேன். உடனே இன்று தமிழில் அடித்து விட்டீர்களே! சபாஷ்.

  ’ஜே’ என்று அடிக்க jee யும்
  ‘ஜெ’ என்று அடிக்க je யும்
  தட்டவும். போகப்போக உங்களுக்கே நன்றாகப் பழகிப்போய்விடும்.

  கருத்துக்களுக்கு நன்றிகள்.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 56. கீதா said...
  //என் பாட்டியை நினைவுபடுத்திவிட்டது இக்கதை. அவர்களும் இப்படித்தான் எப்போதும் உற்சாகமாய்ப் பேசி வளையவருவார்கள்.//

  மிக்க சந்தோஷம், மேடம்.

  //இக்கதையில் சொல்லப்படுவதுபோல் முதுமைக்காலத்தில் வயதானவர்களை ஒதுக்கிவைக்காமல் அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதும், சிறு சிறு அன்பளிப்புகள் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுமே அவர்களை நோய்நொடியின்றி நீண்டகாலம் நிறைவோடு வாழவைக்கும்.//

  மிகச்சரியாக மிகஅழகாகச் சொல்லியுள்ளீர்கள், மேடம்.

  //பரிசு பெற மிகவும் தகுதியான கதை. பாராட்டுகள் சார்.//

  தங்களின் தொடர் வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 57. கோவை2தில்லி said...
  //அருமையான கதை. பரிசு பெற்றதில் ஆச்சரியமில்லை.

  பாட்டியும், பேத்தியும் மனதில் இடம் பெற்று விட்டார்கள்.
  த.ம - 6
  இண்ட்லி - 4//

  அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வோட் அளிட்ததற்கும் மிக்க நன்றி, மேடம்.

  நாளை 12/12/2011 அன்று இரவு 7 மணிக்கு திரு. வெங்கட் அவர்களுக்கு எங்கள் வீட்டில் வரவேற்பு அளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  [பதிவர் மீட்டிங் எங்கள் ஆத்தில் என்று முடிவு செய்துள்ளோம்; மற்றவர்களும் என் வீட்டுக்கே வந்து விட இருக்கிறார்கள் - தாங்களும் ரோஷ்ணியும் வராதது மட்டுமே ஒரு பெரிய குறை - சரி பிறகு பார்ப்போம் - தங்கள் மெயிலும் கிடைத்தது - சந்தோஷம்]

  ReplyDelete
 58. G.M Balasubramaniam said...
  //பூஜை முடியும் முன் ( நான் )? பாட்டி அருகே போனால்

  The story is good. Suddenly there is a first person account ?//

  ஞாயிறு படம் வெளியிடுகிறார்கள். உடனே ஒரு கதை தயாரித்து, செவ்வாய்க்கிழமை தபாலில் சேர்த்தாக வேண்டும். அப்போது தான் அது வியாழக்கிழமைக்குள் (Before last date) அவர்களுக்குப் போய்ச்சேரும்.
  அந்த அவசரத்தில் எழுதுவதால் ஒரு சில தவறுகள் இருக்கக்கூடும். அதை பதிவிடும் போது மாற்ற, நான் விரும்பவில்லை.

  சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்.
  vgk

  ReplyDelete
 59. raji said...
  //நடையும் வர்ணனையும் அருமை.//

  மிகவும் சந்தோஷம். நன்றிகள்.

  /பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்./

  //அதுதான் பாட்டி பாசம்.தன் குழந்தைகளை விட குழந்தைகளின் குழந்தைகள் என்றால் ஒரு படி மேல்தான்.பாலை விட பாலாடை ருசிதானே.//

  ஆஹா! பாலாடை போன்ற ருசியான கருத்துக்கள்.

  [உங்கள் எழுத்துக்களைப் பற்றி நானும் திரு. ரிஷபன் சாரும், மிகவும் பாராட்டி வெகு நேரம் இன்று பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு எழுத்துலகில் நல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்]

  /பாட்டி தன்னை மறந்து, சந்தோஷ மிகுதியால் வாய் ஓயாமல் உஷாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்./

  //வயதானவர்கள் வேறு எதையுமே விரும்புவதில்லை.அவர்களுடன் யாரேனும் நேரம் செல்வழிக்க மாட்டார்களா? பேசமாட்டார்களா? என்றுதான் ஏங்குவார்கள்.அவ்விதம் அமைப்பு இல்லாத சந்தர்ப்பத்தில்தான் அவர்கள் டீவி ரிமோட்டையும் கணினியையும் நாடும்படி ஆகி விடுகிறது.காலம் அப்படி ஆகி விட்டது.//

  ஆமாம்.ரொம்பவும் அழகாகச் சொல்லி விட்டீர்கள்.

  இன்றும் சற்றே, மனம் திறந்து நீண்ட பின்னூட்டமாகக் கொடுத்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 60. கே. பி. ஜனா... said...
  /பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்./

  //நல்ல குணசித்திரம்!//

  அன்பான வருகைக்கும், நல்ல குணச்சித்திரம் போன்ற கருத்துக்கும்
  மிக்க நன்றி, சார். அன்புடன் vgk

  ReplyDelete
 61. ஜீவி said...
  //அவர்கள் நிச்சயம் அந்தப் படத்திற்கு இப்படி ஒரு கதையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. வாழ்ந்த வயதில் 'கட்டுபெட்டி'யாக இருந்தாலும், பிற்காலத்தில் காலத்திற்கு ஏற்றமாதிரி தன்னை மாற்றிக் கொண்ட பாட்டியை அவர்களுக்குப் பிடித்து விட்டது போலும்!//

  இருக்கலாம் ஐயா.

  //'பாட்டி நீட்டிய காலை தன் கைகளால் மெதுவாகப் பிடித்து அமுக்கி விட்டுக்கொண்டிருந்தாள்'-- நீங்களும் இப்படி ஒரு வரியை இடையில் சேர்த்து, படத்திற்கு உரிய கதையாக்கி அந்த ஒரே ஒரு பரிசையும் பெற்று விட்டீர்களே!//

  ஆமாம். காலை அமுக்கிவிடுவது + கையில் வளை அணிவித்தது + நைட்டி அணிவித்தது என்று ஏதோ சில சமாசாரங்களை மட்டும் படத்திற்குத்தகுந்தாற்போலக் கொண்டு வந்திருந்தேன் ஐயா. எதை எப்படி சிறப்பாகப் பொருத்தமாக எடுத்துக் கொண்டு தேர்ந்தெடுத்தார்களோ! மற்றபடி ஏதோ அன்பு பாசம் என்ற குடும்ப செண்டிமெண்ட்ஸ், ஒரு சில நகைச்சுவை சம்பவங்கள் அவ்வளவு தான் நான் எழுதியவை.

  //பாட்டி மறக்க முடியாத பாத்திரப் படைப்பு தான்! வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி. சந்தோஷம், சார்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 62. ஸாதிகா said...
  //அருமையான கதை.பாத்திரங்கள் கண் முன்னே நடமாடுவதைப்போன்ற உயிரோட்டமான எழுத்துநடை..அருமை.வாழ்த்துக்கள்!//

  அன்பான தங்களின் தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 63. மோகன்ஜி said...
  //வடாத்து மாவையும், என் பாட்டியையும் நினைவுறுத்தி விட்டீர்கள்.//

  காரச்சாரமான ருசியுடன், எலுமிச்சை மணத்துடன் வடாத்துமாவு சாப்பிடுவதே ஒரு நல்ல ருசிதானே! நாக்கில் ஜலம் ஊறுகிறது, எனக்கு இப்போது.

  அதுவும் அக்கம்பக்கத்தில் பிள்ளைத்தாச்சிப் பெண்கள் இருந்தால், கட்டாயமாக அந்த வடாத்து மாவை எடுத்துக்கொண்டு, அவர்களைத் தேடிப்பிடித்து கொடுத்து தின்னச் செய்வார்கள்.

  என்னவொரு வாத்சல்யம் அவர்கள் மேல் என்றும், அடடா நாம் பிள்ளைத்தாச்சி பொம்பளையாக இல்லாமல் போய் விட்டோமே என்றும் நினைக்கத் தோன்றும்.

  வடாம் வருஷம் முழுவதும் கிடைக்கும். கடையில் கூட கிடைக்கும்.

  ஆனால் இந்த வடாத்து மாவு, வீட்டில் தெம்புடன் பாட்டிகள் இருந்தால் மட்டுமே எப்போதாவது கிடைக்கக்கூடியது.

  அடிக்கும் வெய்யிலை வீணாககக்கூடாது என்றே சில பாட்டிகள் வடாத்துக்கு மாவுக்கு ரெடி செய்துவிடுவார்கள். சோலார் எனெர்ஜியை அன்றே உணர்ந்தவர்கள்.

  சேவைவடாம் பிழியும் சேவை நாழியும் கையுமாகவே இருப்பார்கள்.

  அதுபோலவே அப்பளக்குழவி, அப்பளத்து மாவு உருண்டைகள், பிரண்டை ஜலம் என்று ஏதேதோ வைத்துக்கொண்டு, என் மாமியார் அந்த நாளில் ஒரு பெரிய ஃபாக்டரி போல வீடு பூராவும் பரத்திக்கொண்டு, நியூஸ் பேப்பரை விரித்து வைத்துக் கொண்டு அப்பளம் இடுவார்கள்.

  அதில் வழுவட்டையான உளுந்து அப்பளமும், எனக்குப்பிடித்த காரசாரமான [நிறைய பச்சை மிளகாய் போட்ட] அரிசி அப்பளமும் என்று 2 வகையறாக்கள் உண்டு.

  கடையில் வாங்கலாமே என்றால் அதில் ஆச்சாரம் இல்லை, அதை வாங்கினால் நாங்கள் எப்படி சாப்பிடுவது? என்பார்க்ள்.

  அதாவது சுத்தமான முறையில், சுகாதாரமாக அவை செய்யப்பட்டவை அல்ல என்பார்கள்.

  [அதில் எவ்வளவோ விஷயங்கள் அடங்கி உள்ளன என்பதையும் மறுக்க முடியாது தான் - பிறகு விபரமாகக் கேட்டு அறிந்து கொண்டேன்]

  அதெல்லாம் ஒரு காலம், சார்.

  இப்போதெல்லாம் எதையும் கடையில் வாங்கி மனையில் வைக்கும் காலம்.

  அப்பளம் வடாம் இதெல்லாம் யார் இப்போ வீட்டில் செய்கிறார்கள்?

  //நல்ல கதை, வை.கோ முத்திரையுடன்..//

  நன்றி, சார். அன்புடன் vgk

  ReplyDelete
 64. வை.கோபாலகிருஷ்ணன் said...
  cheena (சீனா) said...
  //அன்பின் வை.கோ

  சிறு கதை நன்று - இயல்பான நடை - எளிமையான் சொற்கள் - விபரமான வர்ணனை. பாசமிகு பாட்டி உயிர்த் தோழியாக பேத்தியுடன் பழகுவது அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

  பறங்கிப்பழச் சிவப்பு - கட்டை - குட்டை - மடிசார் புடவையில் பாட்டி ஜொலிப்பதனை மனக் கண்ணில் நினைத்துப் பார்த்து ..... இரசித்தேன்.

  மாமியார் மாமனார் கொழுந்தனார் நாத்தனார் குரங்கு காக்கை கோட்டை அடுப்பு தேங்காய் மட்டை - மலரும் நினைவுகள் அசை போடுதல் ஆனந்தம்.

  காலையில் எழுந்து ஸ்னாநம் பண்ணி பஞ்ச கச்சம் கட்டி பூஜை முடித்துப் பலகாரம் சாப்பிட்டு கட்டிலில் காலை நீட்டிப் படுத்து ...... ஓய்வு எடுக்கும் தாத்தா

  வடாம் பிழியும் வடாத்து மாவு .....

  வயதான தாத்தா பாட்டி தம்பதியினர் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதும் அதற்குக் காரணம் சொல்வதும் .... அடடா - சூழ்நிலைக்குத் தக்கவாறு மாற்றம்.

  சீக்கிரமே புள்ளயாண்டு நல்ல சேதி சொல்லுடி ......பாட்டியின் வெகு இயல்பான ஆசை ...

  வை.கோ - கதை செல்லும் விதம் - நடை - சொற்கள் - நிக்ழவுகள் - அத்தனையும் அருமை. மிக மிக இரசித்தேன்.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //

  தங்களின் அன்பான வருகை + கதையின் ஒவ்வொரு வரிகளையும் ரஸித்து, அனுபவித்து பாராட்டி எழுதியுள்ள கருத்துக்கள் + என்னிடம் தாங்கள் காட்டிவரும் தனி பிரியம் எல்லாவற்றிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், ஐயா.

  ஐயா அவர்களிடம்
  அதிகப்பிரியமுள்ள
  vgk

  ReplyDelete
 65. அற்புதமான கதை, குடும்ப உறவுகளின் பாசத்தை நம் கண் முன் கொண்டுவருகின்றது. வடகம் காயப்போடுவது, தாத்தாவுக்கு கேட்கும் அள்விற்கு சொல்லிவிட்டு பேத்தியிடம் தனியாகச் சொல்லுவது......
  ம்ம்ம்ம்ம்ம்ம்....இப்படி பழகிப் பார்க்க என் தாத்தா பாட்டி இல்லையே என்று நினைத்து கவலைப்படும் படி செய்துவிட்டீர்கள்.

  ReplyDelete
 66. MOHAMED YASIR ARAFATH said...
  //அற்புதமான கதை, குடும்ப உறவுகளின் பாசத்தை நம் கண் முன் கொண்டுவருகின்றது. வடகம் காயப்போடுவது, தாத்தாவுக்கு கேட்கும் அள்விற்கு சொல்லிவிட்டு பேத்தியிடம் தனியாகச் சொல்லுவது......
  ம்ம்ம்ம்ம்ம்ம்....இப்படி பழகிப் பார்க்க என் தாத்தா பாட்டி இல்லையே என்று நினைத்து கவலைப்படும் படி செய்துவிட்டீர்கள்.//

  தங்களின் அன்பான [முதல்?] வருகைக்கும், மனதைத்தொட்டிடும், அருமையான கருத்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

  ReplyDelete
 67. //[உங்கள் எழுத்துக்களைப் பற்றி நானும் திரு. ரிஷபன் சாரும், மிகவும் பாராட்டி வெகு நேரம் இன்று பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு எழுத்துலகில் நல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்]//

  குடத்தில் சரஸ்வதி அமுதம் பெற்றவர்கள் ஸ்பூனில் பெற்றவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாலே குட அமுதம் பெற்றார்போல்தான்.பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 68. வை கோபாலகிருஷ்ணன் said...

  //இதில் வேடிக்கை என்னவென்றால் தொடர்ந்து 14 வாரங்கள் படங்கள் வெளியிட்டிருந்தார்கள். 14 வாரமும் நான் 14 கதைகளை உடனுக்குடன் சளைக்காமல் எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன்.//

  மற்ற கதைகளையும் பதிவில் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 69. வர்ணனைகள் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகின்றன.

  ReplyDelete
 70. முதலில் தாமததிற்கு மன்னிக்கவும்.

  அடுத்து பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

  மிக அருமையான கதை.ஒரு சிறு விஷயத்தை அழக்காக கதையாக்குவதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை சார்.சிறப்பான படைப்பு.

  //இதில் வேடிக்கை என்னவென்றால் தொடர்ந்து 14 வாரங்கள் படங்கள் வெளியிட்டிருந்தார்கள். 14 வாரமும் நான் 14 கதைகளை உடனுக்குடன் சளைக்காமல் எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன்.//

  மீதி கதைகளை புத்தமாக வெளியிடுங்களேன்.

  ReplyDelete
 71. raji said...
  /[உங்கள் எழுத்துக்களைப் பற்றி நானும் திரு. ரிஷபன் சாரும், மிகவும் பாராட்டி வெகு நேரம் இன்று பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு எழுத்துலகில் நல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்]/

  //குடத்தில் சரஸ்வதி அமுதம் பெற்றவர்கள் ஸ்பூனில் பெற்றவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாலே குட அமுதம் பெற்றார்போல்தான்.பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.//

  உங்கள் எழுத்துக்களில் உள்ள கம்பீரம், அதில் நாளுக்கு நாள் தோன்றும் நல்ல முதிர்ச்சி, தங்கள் குரலில் உள்ள குயிலின் இனிமை, பிறருக்கு உதவ வேண்டும் என்ற தங்கமான குணம், எல்லாவற்றையும் விட அதிமுக்கியமாக ஒருவருக்கு இருக்க வேண்டிய தன்னடக்கம் எல்லாமே ஒருசேர இருப்பதை, நான் இப்போது உணர்ந்துள்ளேன்.

  அதனால் இந்த நல்ல குணங்களெல்லாம் ஒன்றாகச் சேரும் போது, சற்றே உங்கள் முயற்சியும், கடின தொடர் உழைப்பும், அதிர்ஷ்டமும் எங்களின் மனப்பூர்வ ஆசிகளும் சேரும் போது, சரஸ்வதி தேவியின் அருள் அண்டா அண்டாவாக பலத்த மழைபோல கொட்டிவிடும்.

  கவலை வேண்டாம். எடுத்தவுடனேயே கொட்டிவிட்டால் சின்னக் குழந்தைக்கு மூச்சுத் திணறிவிடும் அல்லவா!

  அதனால் தான் சற்றே தாமதம் ஆகியுள்ளது. இப்போது தான் பக்குவமான பருவம் உங்களுக்கு பலத்த பாராட்டு மழைகளில் நனைய! ;)))) அன்பான வாழ்த்துக்கள்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 72. raji said...
  வை கோபாலகிருஷ்ணன் said...

  /இதில் வேடிக்கை என்னவென்றால் தொடர்ந்து 14 வாரங்கள் படங்கள் வெளியிட்டிருந்தார்கள். 14 வாரமும் நான் 14 கதைகளை உடனுக்குடன் சளைக்காமல் எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன்./

  //மற்ற கதைகளையும் பதிவில் எதிர்பார்க்கிறோம்.//

  ஒரு போட்டி அறிவிக்கும் போது ஒருவருக்கே மீண்டும் மீண்டும் பரிசு தர மாட்டார்கள் என்பதும் முக்கியமான விஷ்யம். இருப்பினும் பரிசுக்காக இல்லாவிட்டாலும், ஒரு ஆர்வத்தில் தான் தொடர்ந்து ஒவ்வொருவாரமும் கலந்து கொண்டேன்.


  மற்ற கதைகளையும் சற்றே மாற்றி அவ்வப்போது என் பதிவுகளில் கொடுத்துக்கொண்டு தான் வருகிறேன்.

  ஒருசில இனிமேல் தான் கொடுக்க வேண்டியுள்ளது.

  ஆனால் அவற்றிற்கான படங்களையெல்லாம் கொஞ்ச நாட்கள் மட்டுமே பாதுகாத்து விட்டு பிறகு அடசல் என்பதால் வீட்டை விட்டுத் துரத்தி விட்டதால், என்னால் அவற்றைப் படத்துடன் காட்ட முடிவதில்லை.

  மேலும் படக்கதைக்காக எழுதப்பட்ட அவசரக் கதைகளை மேலும் சற்றே மெருகூட்டி, காது மூக்கு வைத்து, சற்றே விஸ்தாரமாக வேறு தலைப்பு கொடுத்து பதிவில் எழுதி விடுவதும் உண்டு.

  தங்கள் ஆர்வத்திற்கு நன்றிகள்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 73. ஸ்ரீராம். said...
  //வர்ணனைகள் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகின்றன.//

  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!

  வாங்கோ .. ஸ்ரீராம்.
  ரசித்து எழுதியதற்கு நன்றியும் மகிழ்ச்சிகளும், உங்களுக்கு.

  ReplyDelete
 74. பாட்டியின் பேரன்பை சொன்ன கதை ...அருமை.அருமையான கதை!பாராட்டுக்கள்.

  ReplyDelete
 75. Your short but sweet story reminds me of my young days. My step-grandma (stepmother's mother) used to be very strict about 'aacharam', 'madi' etc. Later, I met her again in Bombay when she was in her eighties. She was wearing a nightie! People have to adapt and change, though the message of cleanliness (through 'aacharam' and 'madi')still mattered.

  ReplyDelete
 76. ஒவ்வொரு பத்தியும் ரசிக்கும்படியும் கண்முன்னே நிகழ்வது போலவும் அருமையாக இருந்தது.பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 77. RAMVI said...
  //முதலில் தாமததிற்கு மன்னிக்கவும்.//

  எப்படியோ ஒரேயடியாக வராமலேயே இருந்து விடாமல் தாமதமாகவாவது வந்தீர்களே! அது தான் முக்கியம் எனக்கு. ரொம்ப சந்தோஷம். மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் வேண்டாமே ப்ளீஸ்.

  ஆமாம் நீங்க என்ன,உங்க படத்தை அடியோடு இப்படி மாற்றிவிட்டீர்கள்?

  யாரோ என்னவோ என்று நினைத்து திக்குமுக்காடி விட்டேன், நான்.

  ஏற்கனவே அந்த இரட்டையரில் யார் நம் ரமாரவி என்று எனக்கு ஒரு குழப்பம் உண்டு.

  இப்போது இதில் குழப்பத்திற்கே வழியில்லை. சுத்தம்! போங்க...

  //அடுத்து பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.//

  மதுரகவியின் மதுரமான வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி, மேடம்.

  //மிக அருமையான கதை.ஒரு சிறு விஷயத்தை அழக்காக கதையாக்குவதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை சார்.சிறப்பான படைப்பு.//

  நீங்கள் வைத்துள்ள இந்த மிகப்பெரிய ஐஸில், வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு, நான் அப்படியே ஜில்லிட்டுப்போய் விட்டேன். ஒரேயடியாகக் குளிருது. கம்பளியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ; ))))))
  இருப்பினும் மகிழ்ச்சியே!

  /இதில் வேடிக்கை என்னவென்றால் தொடர்ந்து 14 வாரங்கள் படங்கள் வெளியிட்டிருந்தார்கள். 14 வாரமும் நான் 14 கதைகளை உடனுக்குடன் சளைக்காமல் எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன்./

  //மீதி கதைகளை புத்தமாக வெளியிடுங்களேன்.//

  ஆகட்டும். அது மிகச்சுலபமானதொரு வேலை தான். உடனே செய்திடுவோம்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 78. மாலதி said...
  //பாட்டியின் பேரன்பை சொன்ன கதை ...அருமை.அருமையான கதை!பாராட்டுக்கள்.//

  அன்பான வருகை + அருமையான கருத்துக்களுக்கு, என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  ReplyDelete
 79. D. Chandramouli said...
  //Your short but sweet story reminds me of my young days. My step-grandma (stepmother's mother) used to be very strict about 'aacharam', 'madi' etc. Later, I met her again in Bombay when she was in her eighties. She was wearing a nightie! People have to adapt and change, though the message of cleanliness (through 'aacharam' and 'madi')still mattered.//

  ஆமாம் சார், இப்போது காலம் மிகவும் மாறிக்கொண்டே வருகிறது.

  மடியாவது விழுப்பாவது அப்படின்னா என்ன என்று கேட்கிறார்கள், நம் குழந்தைகளே!

  துணியை விழுத்துப்போட்டால் விழுப்பு, விழுத்த அதையே மடித்து வைத்தால் மடி என்று ஒரு நாள் கடுப்பில் நானே சொன்னேன்.

  இருப்பினும் மடி, ஆச்சாரமெல்லாம் எங்கோ இன்றும் ஒருசிலர் அனுஷ்டித்துத்தான் வருகிறார்கள்.

  வரும் தலைமுறைகளில் இது எவ்வளவு தூரம் தொடருமோ! தெரியவில்லை.

  நான் நினைப்பது என்னவென்றால், ஒரு விதத்தில் பெண்களுக்கு, இந்த நைட்டியும், மேலே ஒரு அங்கவஸ்திரம் போன்ற துப்பட்டாவும் இருந்தாலே போதும்.

  அது அவர்களுக்கு மிக செளகர்யமாக, சற்றே காற்றோட்டமாக, அதே சமயம் முழுப்பாதுகாப்பு தருவதாக இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். அதில் ஒன்றும் தப்பில்லை தான்.

  மேலும் உடை அணிவது அவரவர்கள் இஷ்டம். செளகர்யம்.

  எது யாருக்கு அணிந்தால் பாந்தமாக அழகாக இருக்குமோ அதை அவர்கள் சுதந்திரமாக அணியலாம்.

  கெளன் அழகு குழந்தைகளுக்கு.

  பாவாடை, சட்டையும் அழகு அடுத்த நிலைக் குழந்தைகளுக்கு

  பாவாடை, சட்டை, தாவணியும் அல்லது சுடிதாரும் அழகு தான் பருவத்திலே.

  புடவையும் நல்ல அழகே, கட்டுவோர் கட்ட வேண்டிய முறைப்படி கட்டினால்;

  [ஜவுளிக்கடை வாசலில் உள்ள பெண் பொம்மைகள் எப்படி ஜோராக புடவை அணிந்து ஆடாமல், அசையாமல், கசங்காமல் சூப்பராகக் கட்டிக்கொண்டு எப்போதும் மலர்ச்சியுடன் நின்று, நமக்கு மகிழ்ச்சியைத்தருகின்றன! ]

  அதுபோல இந்த மடிசார் புடவை என்பதும், நல்லதொரு அழகையும் கையெடுத்துக் கும்பிடணும் போல மரியாதையையும் அளிப்பதே ...

  அதையும் ஒழுங்காகக் கட்டத் தெரியணும், இல்லாவிட்டால் பின்புறம் முழங்காலுக்குக்கீழே
  அடிக்கடி இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு இருக்கணும்.

  அதை பிறர் பார்த்து எடுத்துச்சொல்லணும்!
  கஷ்டம், மஹா கஷ்டம்!

  மொத்தத்தில் அனைத்துமே அழகு தான். பெண்ணாய்ப் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளே தான்.

  பெருமூச்சுடன்
  vgk

  ReplyDelete
 80. thirumathi bs sridhar said...
  //பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் சார்.//

  வாங்கோ, வாங்கோ!
  வாழ்த்துக்களுக்கு ம்க்க நன்றி, மேடம்.

  //ஒவ்வொரு பத்தியும் ரசிக்கும்படியும் கண்முன்னே நிகழ்வது போலவும் அருமையாக இருந்தது.//

  இருக்கும், இருக்கும்!

  இப்போது கொஞ்சநாட்களுக்கு அப்படித்தான் இருக்கும்.

  மாங்காய் இனிக்கும்.
  சாம்பல் புளிக்கும்.

  வாழ்க, வாழ்கவே!

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 81. அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்.
  தினமலரில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 82. அன்புடன் மலிக்கா said...
  //அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்.
  தினமலரில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்...//

  தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,மேடம்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 83. நல்ல கதை. விரும்பிப் படித்தேன்.
  பகிர்விற்கு நன்றி Sir!

  சிந்திக்க :
  "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

  ReplyDelete
 84. திண்டுக்கல் தனபாலன் said...
  //நல்ல கதை. விரும்பிப் படித்தேன்.
  பகிர்விற்கு நன்றி Sir! //

  மிக்க நன்றி, சார்.

  ReplyDelete
 85. பாட்டி பேத்தி அன்பு மழையில் நாமும் குளிர் காய்ந்தோம். எப்படித்தான் இருந்தாலும் பாட்டி உறவு என்பது மேலானது. ஒரு நிமிடம் பெறக் குழந்தைகளைக் காணாது அவர்கள் துடிக்கும் துடிப்பு . உண்மையிலேயே அன்புக்கு உள்ள வலிமையை அந்த உறவிலே நாம் காணலாம். என்னை விட்டு மறைந்த எனது பாட்டியை இக்கதை நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது.வழமை போல் நேரில் நடப்பது போல் சம்பவங்களைக் கொண்டுவந்து பாத்திரங்களுக்கு உயிரூட்டி இருக்கின்றீர்கள். அதனாலேயே உங்கள் கதைகள் பலரின் பாராட்டுகளைப் பெறுகின்றது. பரிசுகளையும் தட்டிச் செல்கின்றது. தொடருங்கள். உங்கள் கதைகளில் இருக்கும் ரசத்தை நாமும் பருகுகின்றோம்

  ReplyDelete
 86. சந்திரகௌரி said...
  //பாட்டி பேத்தி அன்பு மழையில் நாமும் குளிர் காய்ந்தோம். எப்படித்தான் இருந்தாலும் பாட்டி உறவு என்பது மேலானது. ஒரு நிமிடம் பெறக் குழந்தைகளைக் காணாது அவர்கள் துடிக்கும் துடிப்பு . உண்மையிலேயே அன்புக்கு உள்ள வலிமையை அந்த உறவிலே நாம் காணலாம். என்னை விட்டு மறைந்த எனது பாட்டியை இக்கதை நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது.//

  ஆஹா! கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.


  //வழமை போல் நேரில் நடப்பது போல் சம்பவங்களைக் கொண்டுவந்து பாத்திரங்களுக்கு உயிரூட்டி இருக்கின்றீர்கள். அதனாலேயே உங்கள் கதைகள் பலரின் பாராட்டுகளைப் பெறுகின்றது. பரிசுகளையும் தட்டிச் செல்கின்றது. தொடருங்கள். உங்கள் கதைகளில் இருக்கும் ரசத்தை நாமும் பருகுகின்றோம்//

  தங்களின் சமீபத்திய அன்பான தொடர் வருகையும், ஆதரவான கருத்துக்களும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்றன. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 87. அம்மாவிடமும், பிறந்த பெண்ணிடத்திலும் வளர்வதே சாஸ்வதமாய் நிலைத்திருக்கிற தோழமையாய் உருவெடுக்கிறது. இங்கே இன்னும் ஒரு ஜெனெரேஷன் முன்னே போய் பாட்டியின் ஸ்னேகம் இதமாய் இருக்கிறது. "பூவே பூச்சூடவா" பாடல் நினைவுக்கு வருகிறது. முக்கியமாக, பாட்டி தாத்தாவை ஆரோக்கியமாக வைத்திருந்து வதைக்காமல் எம் புன்சிரிப்பை மறையாதிருக்க செய்ததற்கு அனேக நன்றி :)))
  பிரசுரத்திற்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 88. Shakthiprabha said...
  //அம்மாவிடமும், பிறந்த பெண்ணிடத்திலும் வளர்வதே சாஸ்வதமாய் நிலைத்திருக்கிற தோழமையாய் உருவெடுக்கிறது.

  இங்கே இன்னும் ஒரு ஜெனெரேஷன் முன்னே போய் பாட்டியின் ஸ்னேகம் இதமாய் இருக்கிறது.

  "பூவே பூச்சூடவா" பாடல் நினைவுக்கு வருகிறது.

  முக்கியமாக, பாட்டி தாத்தாவை ஆரோக்கியமாக வைத்திருந்து வதைக்காமல் எம் புன்சிரிப்பை மறையாதிருக்க செய்ததற்கு அனேக நன்றி :)))

  பிரசுரத்திற்கு பாராட்டுக்கள்!//

  தங்களின் அன்பான வருகையும், அருமையான கருத்துக்களும், மிகவும் உற்சாகமூட்டுவதாக உள்ளன, ஷக்தி.

  மிக்க நன்றி. பிரியமுள்ள vgk

  ReplyDelete
 89. ரொம்ப சந்தோசம் ..பரிசு எனக்கே கிடைத்தது போல் பெருமை அடைகிறேன்.. அருமையாய் எழுதி இருக்கீங்க மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 90. Kalidoss Murugaiya said...
  //ரொம்ப சந்தோசம் ..பரிசு எனக்கே கிடைத்தது போல் பெருமை அடைகிறேன்.. அருமையாய் எழுதி இருக்கீங்க மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...//

  Kalidoss Murugaiya said...
  //ரொம்ப சந்தோசம் ..பரிசு எனக்கே கிடைத்தது போல் பெருமை அடைகிறேன்.. அருமையாய் எழுதி இருக்கீங்க மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...//

  Very Glad. Thank you very much Sir.
  vgk

  ReplyDelete
 91. பாட்டி-பேத்தி உறவுமுறையில் பாசத்தைத் தாண்டிய ஆழத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். பறங்கிப்பழச்சிவப்பு இப்போது தான் கேள்விப்படுகிறேன். நல்ல பிரயோகம்.

  ReplyDelete
 92. படத்தில் தெரியும் கையெழுத்து அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
 93. அப்பாதுரை said...
  //பாட்டி-பேத்தி உறவுமுறையில் பாசத்தைத் தாண்டிய ஆழத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். பறங்கிப்பழச்சிவப்பு இப்போது தான் கேள்விப்படுகிறேன். நல்ல பிரயோகம்.//

  ஐயா, வணக்கம், வாங்கோ!

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உற்சாகம் அளித்திடும் [பறங்கிப்பழ சிவப்பு - பிரயோகம் போன்ற] கருத்துக்களைப் பிரயோகித்து பாராட்டியுள்ளதற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், ஐயா.

  அன்புடன் vgk

  ReplyDelete
 94. அப்பாதுரை said...
  //படத்தில் தெரியும் கையெழுத்து அருமையாக இருக்கிறது.//

  பச்சை வர்ணத்தில் எழுதியுள்ளது தானே!

  அது சாக்ஷாத் என்னுடையது தான்.

  இப்போது எழுதும் வேலைகளே குறைந்து விட்டதால் டச் விட்டுப்போய் விட்டது.

  எவ்வளவோ பக்கம் பக்கமாக அடித்தல் திருத்தல் ஏதும் இன்றி, அச்சடித்த்து போல அழகாக, முன்பெல்லாம் நான் எழுதுவதுண்டு. இதைப்பார்த்தவர்களில் சிலர் அதை வாங்கி, கண்ணில் ஒற்றிக்கொண்டதும் உண்டு தான்.

  பள்ளியில் தமிழ் + ஆங்கில கையெழுத்துப்போட்டிகள், ஓவியப்போட்டி போன்றவற்றில் பரிசுகளும் நிறையமுறை பெற்றதுண்டு.

  ஆனால் ஒன்று ஐயா, கையெழுத்து நன்றாக அமைந்தவர்களுக்கு, தலையெழுத்து நன்றாக அமைவதில்லை என்பார்கள்.

  அதுவும் உண்மையோ என்று நினைக்கும்படியான சம்பவங்களையும் என் வாழ்க்கையில் அவ்வபோது நான் சந்தித்து வருகிறேன்.

  குறிப்பிட்ட என் வாழ்க்கையை விட்டுவிட்டு பொதுவான லோக சமாஜாரங்களுக்கு வந்து இதை நோக்கினாலும், சோதித்தாலும் கூட உண்மையென்றே தெரிகிறது.

  ஊரில் உள்ள பிரபல டாக்டர்களை சந்திக்கப் போகிறோம். மணிக்கணக்காகக் காத்திருக்கிறோம்.

  பிறகு நமக்கு ஏதோ மருந்துச்சீட்டு ஒன்று எழுதிக்கொடுக்கிறார். அதில் ஒரே கிறுக்கலாக உள்ளது. ஒன்றுமே நம்மால் படிக்க முடிவதில்லை.

  கையெழுத்து நன்றாக இருப்பதில்லை அந்த டாக்டர்களுக்கு. இருந்தாலும், தலையெழுத்து சூப்பராக உள்ளதே!
  கும்பலான கும்பல். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது, அல்லவா!

  ஆகையால் கையெழுத்தை விட தலையெழுத்து நன்றாக அமைய வேண்டும் என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மை தான்.

  இருப்பினும், என் கையெழுத்தைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி, ஐயா.

  அன்புள்ள vgk

  ReplyDelete
 95. என் மாமியாரின் குணநலன்களை சொல்வது போல் கதை உள்ளது.

  என் மாமியார் தன் பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் தொலைபேசியில், அலைபேசியில் பேசிக் கொண்டு இருப்பார்கள்.

  மகிழ்ச்சியாய் பேரன் பேத்திகளுக்காக தன் ஆசாரங்களை தளர்த்திக் கொண்டு குழந்தைகளுடன் குழந்தைகளாய் அவர்கள் விரும்பிப் பார்க்கும் கிரிக்கட் மற்றும் மற்ற விஷயங்களை பேசிக் கொண்டு இருப்பார்கள்.

  கதையை தாமதமாய் படிக்கிறேன் நான் ஊருக்கு போய் விட்டதால் இப்போது தான் படிக்க முடிந்தது.

  கதை ஒவ்வொருவருக்கும் தன் பாட்டியை நினைவு படுத்தும்.

  அன்பு நிறைந்த பாட்டிக்கு பேத்தி உயிர் தோழிதான். அன்பு நிறைந்த பேத்திக்கு பாட்டி உயிர் தோழி தான்.

  தினமலரில் உங்கள் கதை பரிசு பெற்றது அறிந்து மகிழச்சி.

  ReplyDelete
 96. கோமதி அரசு said...
  //என் மாமியாரின் குணநலன்களை சொல்வது போல் கதை உள்ளது.

  என் மாமியார் தன் பேரக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் தொலைபேசியில், அலைபேசியில் பேசிக் கொண்டு இருப்பார்கள்.

  மகிழ்ச்சியாய் பேரன் பேத்திகளுக்காக தன் ஆசாரங்களை தளர்த்திக் கொண்டு குழந்தைகளுடன் குழந்தைகளாய் அவர்கள் விரும்பிப் பார்க்கும் கிரிக்கட் மற்றும் மற்ற விஷயங்களை பேசிக் கொண்டு இருப்பார்கள்.//

  தங்களின் அன்பான வருகையும், தங்களின் மாமியாருடன் கதையில் வரும் பாட்டியை ஒப்பிட்டுச் சொல்லியதும், கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  //கதையை தாமதமாய் படிக்கிறேன் நான் ஊருக்கு போய் விட்டதால் இப்போது தான் படிக்க முடிந்தது.//

  அதனால் பரவாயில்லை, மேடம்.

  //கதை ஒவ்வொருவருக்கும் தன் பாட்டியை நினைவு படுத்தும்.//

  ஆமாம். நிச்சயமாக பலருக்கும் அப்படித்தான்.

  //அன்பு நிறைந்த பாட்டிக்கு பேத்தி உயிர் தோழிதான். அன்பு நிறைந்த பேத்திக்கு பாட்டி உயிர் தோழி தான்.//

  அழகாகச் சொல்லியுள்ளீர்கள், அன்பு தான் இதில் முக்கியம் என்று.

  //தினமலரில் உங்கள் கதை பரிசு பெற்றது அறிந்து மகிழச்சி.//

  தங்கள் கருத்துக்கள் எனக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது, மேடம்.
  நன்றிகள். vgk

  ReplyDelete
 97. நல்ல கதை.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 98. Rathnavel said...
  //நல்ல கதை.
  நன்றி ஐயா.//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, ஐயா. vgk

  ReplyDelete
 99. கதை என்னுடைய பாட்டியை அப்படியே நினைவுக்குள் கொண்டுவந்து நிறுத்தியது சார்.

  உணர்வுகளை எழுத்துக்களாகப் பதிப்பது உங்களைப் போன்ற திறமையாளர்களுக்கே உரிய பெருமை.

  - நுண்மதி

  ReplyDelete
 100. nunmadhi said...
  //கதை என்னுடைய பாட்டியை அப்படியே நினைவுக்குள் கொண்டுவந்து நிறுத்தியது சார்.//

  ரொம்ப சந்தோஷம்
  கெளரி ;)))


  //உணர்வுகளை எழுத்துக்களாகப் பதிப்பது உங்களைப் போன்ற திறமையாளர்களுக்கே உரிய பெருமை.
  - நுண்மதி//

  அடடா! என்ன இப்படி ஒரேயடியாக
  புகழ ஆரம்பித்து விட்டீர்கள்! எனக்குக் கூச்சமாக உள்ளது, ராணி.

  நீங்கள் மட்டுமென்ன! அடிக்கடி உங்கள் கவிதைகளில் கொண்டுவரும் உணர்வுகள் கொஞ்சமா நஞ்சமா! நான் அவைகளை மிகவும் ரஸித்திப் படிக்கிறேனே, நுண்மதி.;)))))

  என் அன்புக்குரிய தாங்கள் சொல்வதால், தாங்கள் எதைச்சொன்னாலும், பாசத்தால் நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். OK OK லக்ஷ்மி.

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஆனந்தி.


  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 101. இன்று வலைச்சரத்தில் தங்களின் படைப்பு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html
  காணவாருங்கள். தங்கள் கருத்தினையும் வாக்கினையும் பதியுங்கள்.

  ReplyDelete
 102. //விச்சு said...
  இன்று வலைச்சரத்தில் தங்களின் படைப்பு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html
  காணவாருங்கள். தங்கள் கருத்தினையும் வாக்கினையும் பதியுங்கள்./

  மிக்க நன்றி நண்பரே!

  இதோ வருகிறேன். அன்புடன் vgk

  ReplyDelete
 103. ஆமாம், இந்த மாதிரி ரியலிஸ்டிக்கா, கதை எழுதினாக்க, பரிசு குடுக்காம என்ன பண்ணமுடியும்?
  லதா மங்கேஷ்கர் , போட்டிலே கலந்துக்க மாட்டேன்னு சொன்னா மாதிரி , நீங்களும் செஞ்சாதான், மத்தவாளுக்கு சான்ஸ் கிடைக்கும்.

  அதுக்கு முன்னாடி, இன்னும் , பல கதைகளை எழுதி , தள்ளுங்க! நாங்களும் படிச்சு மகிழ சௌகர்யமா இருக்கும்.

  ஆமா, தெரியாமத்தான் கேக்கரேன், எப்படி இந்த அய்டியா எல்லாம் தோணுது? எத்தன மண்ட ஒடைச்சிண்டாலும் எனக்கு ம்ஹூம்..!

  லேசா பொறாமையா இருக்கு.

  ;-)))


  Superb, you sent me back to my childhood, when my Patti was not so demonstrative, but she had her own way of doing things. Fell bad that I did not do enough for her.

  Touching.

  ReplyDelete
  Replies
  1. //Pattu August 29, 2012 2:42 AM

   ஆமாம், இந்த மாதிரி ரியலிஸ்டிக்கா, கதை எழுதினாக்க, பரிசு குடுக்காம என்ன பண்ணமுடியும்?//

   அடடா! ரியலாத்தான் சொல்றீங்களா, பட்டு?

   பட்டுவின் பட்டுப்போன்ற இந்த வார்த்தைக்குமுன் நான் வாங்கிய பரிசு எனக்கொன்றும் பெரிசாகத்தெரியவில்லை.

   //லதா மங்கேஷ்கர், போட்டிலே கலந்துக்க மாட்டேன்னு சொன்னா மாதிரி, நீங்களும் செஞ்சாதான்,மத்தவாளுக்கு சான்ஸ் கிடைக்கும்.//

   ஆஹா! லதா மங்கேஷ்கர் எப்பேர்ப்பட்ட பாடகி!!
   தேனிலும் இனிமையான குரல் கொண்ட லதாவுடன் போய் என்னை ஒப்பிட்டு பேசிவிட்டீர்களே! This is too much.

   எனினும் என் இனிய நன்றிகள், பட்டுவுக்கு.

   தொடரும்.....

   Delete
  2. தொடர்ச்சி [2]

   Pattu August 29, 2012 2:42 AM

   //அதுக்கு முன்னாடி, இன்னும், பல கதைகளை எழுதி, தள்ளுங்க! நாங்களும் படிச்சு மகிழ சௌகர்யமா இருக்கும்.//

   நான் எழுதி இதுவரை என் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அத்தனை கதைகளுக்கும் என் பட்டுவிடமிருந்து கருத்துக்கள் வந்து சேரணும். அதன் பிறகே நான் மேலும் பல கதைகள் எழுதி என் வலையினில் வெளியிட ஆரம்பிப்பேன். அதுவரை கம்ப்ளீட் ரெஸ்டு தான், எனக்கு.

   [இணைப்புகள் சிலவற்றை தங்களுக்குத் தனியே மெயிலில் பிறகு, அனுப்பி வைக்கிறேன்]

   தொடரும்.....

   Delete

  3. தொடர்ச்சி [3]

   Pattu August 29, 2012 2:42 AM

   //ஆமா, தெரியாமத்தான் கேக்கறேன், எப்படி இந்த ஐடியா எல்லாம் தோணுது? //

   தெரியாமல் என்ன? சும்மா தெரிஞ்சே கேளுங்கோ! நானும் எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.

   “தாயுமானவள்” என்ற தலைப்பில் நான் முதன் முதலாக எழுதிய சிறுகதை பிறந்த கதையை அதன் மூன்றாம் பகுதியின் கடைசியில் விபரமாக எழுதியுள்ளேன். முதலில் அந்த மூன்று பகுதிகளையும் பொறுமையாகப்படித்து விட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தங்கள் கருத்தினைக்கூறுங்கள்.

   பகுதி-1 இணைப்பு http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html
   பகுதி-2 இணைப்பு
   http://gopu1949.blogspot.in/2011/12/2-of-3.html
   பகுதி-3 இணைப்பு
   http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html

   //எத்தனை தான் மண்டையை ஒடைச்சிண்டாலும் எனக்கு ம்ஹூம்..!//

   ஆஹா, பட்டுப்போன்ற தங்கள் மண்டையை உடைத்துக் கொள்ளாதீர்கள். சற்றே சிந்தித்து எழுத முயற்சி செய்யுங்கள். எழுத எழுதத்தான் எழுத்தும் நன்றாக மெருகேறி வர ஆரம்பிக்கும்.

   //லேசா பொறாமையா இருக்கு.//

   எனக்குக்கூடத்தான் உங்களின் போட்டோவைப் பார்த்ததும் பொறாமையாக இருந்தது. அழகோ அழகாக இந்தக்கதையில் வரும் பாட்டிபோல பறங்கிப்பழச்சிவப்பில் .... ;)))))

   சிறு வயதில் எடுக்கப்பட்ட போட்டோவோ அது?
   அது சம்பந்தமான பதில் மெயிலே நீங்கள் இன்னும் தரவில்லையே? ஏன்? என்னாச்சு?

   //;-)))//
   ;))))))))))))))))))))))))))))))))))))))

   தொடரும் .....

   Delete
  4. தொடர்ச்சி [4]
   Pattu August 29, 2012 2:42 AM

   //Superb, you sent me back to my childhood, when my Patti was not so demonstrative, but she had her own way of doing things. Fell bad that I did not do enough for her.

   Touching.//

   நான் தங்களை தங்களின் குழந்தைப்பருவத்திற்குக் கூட்டிச்சென்றதாகச் சொல்வது கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

   [அப்போது ஜோராக பட்டுக்குட்டி போல, பட்டுக்குஞ்சலம் வைத்து நீண்ட சடையுடன் இருந்திருப்பீர்களே? ;)))) ]

   உங்கள் பாட்டி உடல்நிலை மிகவும் முடியாமல் இருந்தபோதும் எப்படியோ தட்டுத்தடுமாறி தன் கார்யங்களைத் தானே செய்து கொண்டு இருந்திருக்கிறர்கள், பாருங்கோ.

   என் அன்புக்குரிய தாயாரும் அப்படியே. 87 வயது வரை தன் காரியங்களைத்தானே பார்த்துக்கொண்டார்கள். கடைசிவரை ஏதோ எங்களுக்கு உதவியாகத்தான் இருந்தார்கள். கடைசி 1 மாதம் மட்டும் படுத்து விட்டர்கள். அந்தக்கால மனுஷ்யாள் அப்படித்தான்.

   நீங்கள் மட்டுமல்ல,நம்மில் பலருக்கும் வயதானவர்களுக்கு, அவர்களின் கடைசி காலத்திலாவது, உதவியாக, அன்பாக, அனுசரணையாக இருக்க முடியாமல் தான் போய் விடுகிறது. பிறகு தான் அதை நாம் உணர்கிறோம், அதுவும் நமக்கு அது போல ஒரு நிலமை வந்துவிடுமோ என அஞ்சும் போது தான் உணர்கிறோம்.

   ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரின் அருமை பெருமைகள் நமக்குத்தெரிய வராது. அவர்கள் போனபின் தான் எவ்வளவு வேலைகளை இதுவரை பொறுப்பாக கவனித்து வந்துள்ளார்கள் என்பதே நமக்குத் தெரியவரும்.

   ”இழந்த பொருள் தான் மிகச்சிறந்த பொருள்” என்பார்கள். அதுபோலவே இதுவும்.

   OK பட்டு, பார்ப்போம். இத்துடன் விடைபெறுகிறேன்.
   மிக்க நன்றி. வேறு ஏதும் விட்டுப்போய் இருந்தால் மெயிலில் தெரிவிப்பேன்.

   பிரியமுள்ள,
   கோபு

   Delete
 104. பாட்டி - பேத்தியின் ஸ்நேகமும் அவர்களுக்கே உரிய கொஞ்சல், கெஞ்சல், மிரட்டல், சம்பாஷனை எல்லாமே சிறப்பு.

  என்னையும் என் பாட்டியின் நினைவலைகளில் நீந்த வைத்துவிட்டீர்கள்.
  படத்துகேற்ற முத்தாய்ப்பு. பரிசுக்கு உகந்த படக்கதை.

  உங்களுக்கே உரித்தான, காட்சிகளை எம் கண்ணெதிரே கொண்டுவரும் வசன நடை.
  அபாரம். அற்புதம். வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. அன்பின் இளமதி,

   வாங்கோ, வணக்கம். எப்படி இருக்கீங்க? நலம் தானே!

   //பாட்டி - பேத்தியின் ஸ்நேகமும் அவர்களுக்கே உரிய கொஞ்சல், கெஞ்சல், மிரட்டல், சம்பாஷனை எல்லாமே சிறப்பு.//

   ஆஹா! தங்களின் இந்தப் பாராட்டுக்களிலும் இவை அனைத்தும் இருப்பதாக அறிகிறேன். மகிழ்ச்சி ;)))))

   //என்னையும் என் பாட்டியின் நினைவலைகளில் நீந்த வைத்துவிட்டீர்கள்.//

   உங்களுக்கு நீச்சல் தெரியுமா? எனக்குத் தெரியாதுங்க! ;(

   //படத்துகேற்ற முத்தாய்ப்பு. பரிசுக்கு உகந்த படக்கதை.//

   இளமதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாதும்மா. ஏதோ எழுதி அனுப்பினேன். பரிசு கிடைத்தது. எப்போது எது எப்படிக் கிடைக்கும் என்றே தெரியாத உலகம். [எழுத்துலகம்].

   //உங்களுக்கே உரித்தான, காட்சிகளை எம் கண்ணெதிரே கொண்டுவரும் வசன நடை. அபாரம். அற்புதம்.//

   ஏதேதோ சொல்லுகிறீர்கள். OK மிக்க நன்றிகள்.

   //வாழ்த்துக்கள் ஐயா!//

   அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் மகிழ்வளிப்பதாக உள்ளன. வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

   அன்புடன்
   VGK

   Delete
 105. அன்பின் அண்ணா,

  இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்ல தான் உங்க கமெண்ட் பாக்ஸ் என்னால் காண இயல்கிறது. அதில் தான் இப்ப கமெண்ட் போடுகிறேன் அண்ணா...

  வாரமலரில் என்னுயிர்த்தோழி கதை பிரசுரம் ஆனதற்கும் அனுப்பப்பட்ட அனைத்து கதைகளிலும் முதன்மையாக ஒரே பரிசு அதுவும் அண்ணா உங்களின் கதையே பரிசு பெற்றமைக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்..

  அருமையான தலைப்பு… ” என்னுயிர்த்தோழி “ அதற்கு பொருத்தமான அழகிய படம்… இந்த படம் நேற்று தான் டிவியில் பார்த்தேன்… நவ்யாநாயர் கவியூர் பொன்னம்மா நடித்தப்படம்… இந்த படத்தின் ஒரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் ஏழையான இந்த பெண்ணுக்கு க்ருஷ்ணபகவான் மானிடனாக வந்து பக்கத்து வீட்டுக்காரன் போல் இவள் முன் பிரசன்னமாகி எல்லா உதவிகளையும் அற்புதங்களையும் செய்து இவளுக்கு நல்வாழ்க்கை அளித்துவிட்டு பின் குருவாயூரில் போய் குருவாயூரப்பனாய் மறைந்துவிடுவான்…

  இந்த அற்புதமான படத்தில் இருந்து ஒரே ஒரு படம் எடுத்துப்போட்டு கதை தாங்க என்று கேட்டால்… கதைகளுக்கே மன்னனாச்சே கதையாசிரியர்… கேட்கவேண்டுமா? அசத்தலான வித்தியாசமான கதைகளம்….

  ReplyDelete
  Replies
  1. மஞ்சுபாஷிணி October 20, 2012 12:15 AM
   //அன்பின் அண்ணா,

   இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்ல தான் உங்க கமெண்ட் பாக்ஸ் என்னால் காண இயல்கிறது. அதில் தான் இப்ப கமெண்ட் போடுகிறேன் அண்ணா...//

   ரொம்பவும் நன்றிம்மா .. மஞ்சு. என்னால் உங்களுக்கு எவ்வளவு சிரமம் பாருங்கோ.

   //வாரமலரில் என்னுயிர்த்தோழி கதை பிரசுரம் ஆனதற்கும் அனுப்பப்பட்ட அனைத்து கதைகளிலும் முதன்மையாக ஒரே பரிசு அதுவும் அண்ணா உங்களின் கதையே பரிசு பெற்றமைக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்..//

   என் அன்புத்தங்கை மஞ்சுவின் இந்த பெரு மகிழ்ச்சிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் முன்னால் ’ஒரே பரிசு’ அண்ணா பெற்றது என்பது ஒன்றுமே இல்லையம்மா... ;)))))

   //கதைகளுக்கே மன்னனாச்சே கதையாசிரியர்… கேட்கவேண்டுமா? அசத்தலான வித்தியாசமான கதைகளம்….//

   அதே அதே சபாபதே .... ததாஸ்து .... மஞ்சூஊஊஊஊ !

   பிரியமுள்ள
   கோபு அண்ணா

   Delete
 106. மடி ஆச்சாரம் என்று பார்க்கும் பாட்டி தாத்தா….

  பாசப்பிணைப்புடன் இருக்கும் பேத்தி… தாத்தாவின் அடாவடி மடி ஆச்சாரம் பார்ப்பதால் அடிக்கடி பேத்தி பாட்டியை தொடும்போது என்னை தொடாதேடி… போ போ ஸ்நானம் செய் என்று தாத்தா எதிரில் கத்திவிட்டு ரகசியமாக பாத்ரூம் அருகே சென்று குளிர் அதிகமா இருக்கு.. வெறும் முகம் அலம்பிண்டு வந்துரு என்று சொல்வதில் இருந்து ஆரம்பிக்கிறது அன்பும் பாசமும் இழையோடும் பாட்டியின் மன உணர்வுகளைச்சொல்லி செல்லும் கதையாக….

  ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் உயிர் கொடுத்து கண்முன் நடமாட விட்டு ரசிக்க வைத்துவிட்டீர்கள் அண்ணா…


  தாத்தாவின் மடியும், பாட்டியின் ஒன்பது கெஜம் மடிச்சாரப்புடவையும் தாத்தாவுக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து செய்யும் அருமையான பாரியாளாக…. அன்பும் குறும்பும் நிறைந்த பேத்தியை சமாளிக்க பாட்டி திணறுவதை வடாத்து மாவை சித்த பார்த்துக்கோடி என்று சொல்லிவிட்டு கீழே போய் வருமுன் பேத்தி வடாத்து மாவின் உப்பும் உறைப்பும் ருசியில் மெய்மறந்து ருசிக்க ஆரம்பிக்க அதை பார்த்துவிட்ட பாட்டி காக்காவை விரட்டும் குச்சி எடுத்து பேத்தியை விரட்ட, போக்கு காட்டி அங்கும் இங்கும் ஓடிய பேத்தி சடார்னு பிழிந்து வைத்த வடாத்து மாவிலேயே வழுக்கி விழ, அவ்ளவு தான் பாட்டிக்கு பதறிவிடுகிறது…. அந்த பாசம் கதையின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது… கடைசி வரி வரை பாசத்தின் இழை பின்னியே இருக்கிறது கதையில்… கதையாசிரியரின் அசத்தலான இன்னொரு விஷயம்…

  ReplyDelete
  Replies
  1. VGK To மஞ்சு

   //அந்த பாசம் கதையின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது… கடைசி வரி வரை பாசத்தின் இழை பின்னியே இருக்கிறது கதையில்… கதையாசிரியரின் அசத்தலான இன்னொரு விஷயம்…//

   ஆஹா, மஞ்சுவின் கிளிகொஞ்சும் மொழிகளில் என்னை நான் மறந்து போனேன்ம்பா...

   பிரியமுள்ள VGK அண்ணா

   Delete
 107. நம்மை அந்த காலத்துக்கே அழைத்துச்செல்லும் லாவகம் பாட்டியின் அனுபவங்கள் என்று சொல்லி அந்த காலத்தில் பெரும் குடும்பமாக கூட்டுக்குடித்தனமாக அதிகமானவர்கள் இருக்கும் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை மிக எதார்த்தமாக எடுத்துச்சொன்ன நேர்த்தி அட்டகாசம் அண்ணா…

  வயது ஆக ஆக…. தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மனசும் உடம்பும் தளர ஆரம்பிக்க… கூட்டுக்குடித்தனமாய் இருந்த ஒவ்வொருவரும் குழந்தை தன் குடும்பம் என்று வெளியூரில் செட்டில் ஆகிவிட….

  இருவரும் இப்போது ஒருவருக்கு ஒருவர் துணையாக மிஞ்சிவிட…. அப்புறம் எங்கிருந்து மடியும் ஆச்சாரமும்? மடிசாரும்? அதை பாட்டியின் வாய் வழியாகவே சொன்னவிதம் மிக மிக தத்ரூபம் அண்ணா…

  ReplyDelete
  Replies
  1. VGK To மஞ்சு

   //நம்மை அந்த காலத்துக்கே அழைத்துச்செல்லும் லாவகம்//

   //குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை மிக எதார்த்தமாக எடுத்துச்சொன்ன நேர்த்தி அட்டகாசம் அண்ணா…//

   //கூட்டுக்குடித்தனமாய் இருந்த ஒவ்வொருவரும் குழந்தை தன் குடும்பம் என்று வெளியூரில் செட்டில் ஆகிவிட….

   இருவரும் இப்போது ஒருவருக்கு ஒருவர் துணையாக மிஞ்சிவிட…. அப்புறம் எங்கிருந்து மடியும் ஆச்சாரமும்? மடிசாரும்? அதை பாட்டியின் வாய் வழியாகவே சொன்னவிதம் மிக மிக தத்ரூபம் அண்ணா…//

   ஒவ்வொன்றையும் ஊன்றிப்படித்து அற்புதமாக விமர்சனம் செய்திருப்பது, மிகுந்த மகிழ்ச்சியளிக்குதுப்பா .. மஞ்சு.;)))

   Delete
 108. வயதானவர்கள் பேச்சுத்துணைக்கு அருகே யாருமில்லாதபோது இருக்கும் ஒரே அற்புதமருந்தாக தொலைக்காட்சியும் ரிமோட்டுமாக இருப்பதை மிக அழகாக சொல்லிவிட்டார்

  அண்ணா… உண்மையே அண்ணா… இன்றைய நிலை வயதானவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதையும்…
  என்றோ ஒரு நாள் வெளியூரில் இருந்து வந்து எட்டிப்பார்த்து ஓடிவிடும் சொந்தங்களுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் முதியோரின் நிலையை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா…

  ReplyDelete
  Replies
  1. VGK to மஞ்சு

   //வயதானவர்கள் பேச்சுத்துணைக்கு அருகே யாருமில்லாதபோது இருக்கும் ஒரே அற்புதமருந்தாக தொலைக்காட்சியும் ரிமோட்டுமாக இருப்பதை மிக அழகாக சொல்லிவிட்டார்//

   ஆமாம். இதை நாம் யாருமே ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். TV + Remote ஓர் வரப்ப்ரஸாதமே, தனிமையில் இருப்போருக்கு.

   //என்றோ ஒரு நாள் வெளியூரில் இருந்து வந்து எட்டிப்பார்த்து ஓடிவிடும் சொந்தங்களுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் முதியோரின் நிலையை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா…//

   ஆமாம்ப்பா ... எங்கேயோ குவைத்திலிருந்தால் எப்படிப் பார்ப்பது பேசுவது?

   ஏதோ கைபேசியும், பின்னூட்டப்பெட்டியும், மின்னஞ்சலும், சுட்டிகளும், வீடியோ கேமராவும் இருப்பதால் நேரில் சந்திப்பதை வித ஆறுதல் பெற முடிகிறது என்பதே உண்மையோ உண்மை.

   வாழ்க இன்றைய இந்த விஞ்ஞான முன்னேற்ற கண்டுபிடிப்புகளும் சாதனங்களும். ;))))))))))))))

   பிரியமுள்ள
   கோபு அண்ணா.

   Delete
 109. அவர்கள் இருக்கும் வரை வீடு ஒரே விழாக்கூட்டமாய் சந்தோஷமாய் இருப்பதும் பக்ஷணமும் சிரிப்பும் பிள்ளைகளின் ஓட்டமும் அங்கும் இங்கும்…. அதை ரசித்துக்கொண்டிருப்பதையும்…..

  திடிரென்று அவர்கள் திரும்பிச்செல்லும் நாள் வரும்போது வயதானவரின் நிலை… அவர்களின் மன உணர்வுகள்…. எப்படி துடிக்கும் என்பதையும் நுணுக்கமாய் சொல்லிச்சென்ற விதம் மிக மிக சிறப்பு அண்ணா…

  ReplyDelete
  Replies
  1. VGK to மஞ்சு

   //திடிரென்று அவர்கள் திரும்பிச்செல்லும் நாள் வரும்போது வயதானவரின் நிலை… அவர்களின் மன உணர்வுகள்…. எப்படி துடிக்கும் என்பதையும் நுணுக்கமாய் சொல்லிச்சென்ற விதம் மிக மிக சிறப்பு அண்ணா…//

   ஓரிரு நாட்கள் வரை அந்த வலிகள் இருக்கத்தானே செய்கிறது?

   என்ன செய்வது? இன்று அதுபோலவே அவரவர்கள் பிழைப்பு மாறித்தான் போய் விட்டது.

   இருப்பினும் பரந்து விரிந்துள்ள உலகமே இன்று, தகவல் தொடர்பு சாதனங்களால் சுருங்கி விட்டதில் மகிழ்ச்சியே.

   VGK

   Delete
 110. பேத்தி சிங்கப்பூரில் இருந்து பலவருடம் கழித்து பாட்டித்தாத்தாவை பார்க்க வருவதும்…. பாட்டியை வீடு முழுக்கத்தேடிவிட்டு பாட்டியை கண்டதும் பின்னிருந்து அணைக்கும்போது பேத்தியின் பாசத்தை பாட்டி அனுபவிப்பதை மிக துல்லியமாக தெளிவாக வரிகளில் சொன்னவிதம் அருமை அண்ணா….

  ReplyDelete
  Replies
  1. VGK To மஞ்சு

   //பாட்டியை வீடு முழுக்கத்தேடிவிட்டு பாட்டியை கண்டதும் பின்னிருந்து அணைக்கும்போது பேத்தியின் பாசத்தை பாட்டி அனுபவிப்பதை மிக துல்லியமாக தெளிவாக வரிகளில் சொன்னவிதம் அருமை அண்ணா….//

   ;))))) சந்தோஷம்ம்மா மஞ்சு.

   Delete
 111. பேத்தியிடம் இப்போதை மடியும் ஆச்சாரமும் மடிசாரும் வழுக்கிண்டு போறதைச்சொல்லி அலுத்துக்கொண்டபோது ரசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.. அப்ளாஸ் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை அண்ணா…. வயதானவர்களைப்பற்றி சொல்லும்போது அவர்களின் உணர்வுகளை மன தள்ளாட்டங்களை சொல்ல கதையில் தவறவில்லை கதையாசிரியர்….

  அதேபோல் பேத்தியைப்பற்றி சொல்லும்போதோ அப்டேட்டடாக மார்னாக பேத்தியின் சிரிப்பும் சந்தோஷமும் அட்டகாசமும் பேத்தியாகவே மாறி வாசிப்போரையும் ரசிக்கவைக்கும்படி சொன்னவிதம் எத்தனை சிறப்பு….

  ReplyDelete
  Replies
  1. VGK To மஞ்சு

   //பேத்தியிடம் இப்போதை மடியும் ஆச்சாரமும் மடிசாரும் வழுக்கிண்டு போறதைச்சொல்லி அலுத்துக்கொண்டபோது ரசிக்காமல் இருக்கவும் முடியவில்லை.. அப்ளாஸ் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை அண்ணா….//

   வெகு அழகான சொல்லாடல்களில் அமைந்த மஞ்சுவின் பாராட்டுக்கள்.... மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

   //வயதானவர்களைப்பற்றி சொல்லும்போது அவர்களின் உணர்வுகளை மன தள்ளாட்டங்களை சொல்ல கதையில் தவறவில்லை கதையாசிரியர்….//

   இருக்கலாம். இருப்பினும் அவர் [கதாசிரியர்]தவறவிட்ட தங்கங்கள் உலகில் [பதிவுலகில்]ஏராளம் உள்ளனவே, மஞ்சு.

   //அதேபோல் பேத்தியைப்பற்றி சொல்லும்போதோ அப்டேட்டடாக மார்னாக பேத்தியின் சிரிப்பும் சந்தோஷமும் அட்டகாசமும் பேத்தியாகவே மாறி வாசிப்போரையும் ரசிக்கவைக்கும்படி சொன்னவிதம் எத்தனை சிறப்பு….//

   மஞ்சுவுடனான நட்பு ஏற்படும் முன்பாகவே, இந்தக்கதை எழுதப்பட்டிருப்பினும், இன்று என் கண்முன் காட்சியளிக்கும் ஓர் மஞ்சுவை அன்றே நான் கற்பனை செய்துள்ளேன், கவனிதீர்களா .. மஞ்சு.

   பிரியமுள்ள
   கோபு அண்ணா

   Delete
 112. தங்களின் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது என்றால் கண்டிப்பாக யூ டிசர்வ்ட் அண்ணா….

  கதாப்பாத்திரங்களின் மன உணர்வுகளையும் செயல்களையும் வார்த்தைகளின் சொல்லாடலையும் ரசித்து படைத்த கதைக்கு ஹாட்ஸ் ஆஃப் அண்ணா….

  இதேபோல் தினமும் ஒவ்வொரு படத்துக்கும் 14 கதைகள் எழுதி அனுப்பினதையும் நீங்க போட்டிருப்பதையும் படித்தேன்.


  இறைவனின் அனுக்ரஹம் இத்தனை நேர்த்தியாக நீங்கள் எழுதுவது.. வாசிப்போரும் ரசித்து வாசிக்கும்படி படைத்ததும் மிக சிறப்பு அண்ணா..

  மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அண்ணா..

  என்னுயிர்த்தோழியாக பேத்தி பாட்டியைச்சொல்வது அட்டகாசமான வித்தியாசமான கதைக்கரு… அதைவெச்சு இத்தனை அழகாக கதை அமைத்த விதம் சிறப்பு அண்ணா..

  ReplyDelete
  Replies
  1. VGK To மஞ்சு

   //தங்களின் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது என்றால் கண்டிப்பாக யூ டிசர்வ்ட் அண்ணா….//

   மகிழ்ச்சி ;)

   //கதாப்பாத்திரங்களின் மன உணர்வுகளையும் செயல்களையும் வார்த்தைகளின் சொல்லாடலையும் ரசித்து படைத்த கதைக்கு ஹாட்ஸ் ஆஃப் அண்ணா….//

   சந்தோஷம். ;))

   //இதேபோல் தினமும் ஒவ்வொரு படத்துக்கும் 14 கதைகள் எழுதி அனுப்பினதையும் நீங்க போட்டிருப்பதையும் படித்தேன்.//

   அடடா, மிகவும் மகிழ்ச்சியே.

   //இறைவனின் அனுக்ரஹம் இத்தனை நேர்த்தியாக நீங்கள் எழுதுவது.. வாசிப்போரும் ரசித்து வாசிக்கும்படி படைத்ததும் மிக சிறப்பு அண்ணா..//

   ஆம் .. இறைவன் அருள் தான். அம்பாள் அருள் தான். !;)

   //மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அண்ணா..//

   மனமார்ந்த ஆசிகள், மஞ்சு.

   தொடரும் ....

   Delete
  2. VGK To மஞ்சு ... [தொடர்ச்சி]

   //என்னுயிர்த்தோழியாக பேத்தி பாட்டியைச்சொல்வது அட்டகாசமான வித்தியாசமான கதைக்கரு… அதைவெச்சு இத்தனை அழகாக கதை அமைத்த விதம் சிறப்பு அண்ணா..//

   அன்பின் மஞ்சு.

   இன்று என்னுயிர்த்தோழியாக மாறியுள்ளீர்கள், நீங்கள்.

   இதுபோல வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு நபர்கள்

   எனக்குத் தோழியாகவும்,

   நல்ல வழிகாட்டியாகவும்,

   என் நலம் விரும்பியாகவும்,

   நல்ல ஆலோசகராகவும்,

   ஜன்ம ஜன்மமாகத் தொடர்ந்து வரும்
   ஏதோவொரு நெருங்கிய உறவு போலவும்,

   ஏன் நான் பக்திசெலுத்தி வந்த அம்பாளாகவுமே

   இருந்துள்ளார்கள்

   இப்போதும் இருக்கிறார்கள்

   இனியும் இருப்பார்கள்.

   நான் எழுதியுள்ள இந்த சிறுகதைக்கு மேல் மிகவும் நீ...ண்....ட தொரு கருத்துரையும், வாழ்த்துரையும், மறுமொழியும் கொடுத்துள்ளீர்கள்.

   இதனால் என் அன்புத்தங்கை [இன்றைய ”என் உயிர்த்தோழி”] மஞ்சுவின் பிஞ்சு விரல்கள் வலிக்காதாப்ப்பா?

   அன்பினைப் பகிர, தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள, தங்களின் இந்த சற்றே மாறுபட்ட, வழிமுறை அண்ணாவுக்கு மிகுந்த அச்சத்தைத் தருகிறதம்மா... மஞ்சு.

   Please take care of your health & try to reduce your Comments [That is the Number of Lines] to a minimum possible extent, please.

   பிரியமுள்ள
   கோபு அண்ணா

   Delete
 113. //////////பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்//////

  “போதும்டீ, அதையெல்லாம் நனைச்சு, அலசி, பிழிஞ்சு, ஒனத்தி (உலர்த்தி) காயவச்சு, மடிச்சு (மடித்து) கட்டறதுக்குள் (உடம்பில் அணிவதற்குள்) பிராணன் போயிடுது போ;


  அவசரமா பாத்ரூம் போய் வருவதற்குள்ள தலைப்புக் கச்சமெல்லாம் கசங்கி, அவிழ்ந்து, தரையெல்லாம் பெருக்கிண்டு வருதுடீ” என்று சொல்லி பாட்டி அலுத்துக்கொண்டதைக் கேட்டதும் உஷாவுக்குச் சிரிப்பு தாங்க முடியலே.//////////////
  ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து எழுதுவதே கடினம் ,நீங்கள் வயதான பாட்டியின் நிலையில் கதாபாத்திரம் படைத்தது எழுதி இருப்பது அருமை அருமை ...அருமை .... உங்களுக்கு பரிசு தந்து தினமலர் பிறவி பயன் அடைந்துவிட்டது என்றே சொல்ல தோணுது ..நன்றி ஐயா

  ReplyDelete
 114. //////////பிறகு பூனை மாதிரி பாத்ரூம் பக்கம் வந்து, ரகசியமாக “மூஞ்சியை மட்டும் பளிச்சுனு அலம்பிண்டு வாடீ; ரொம்பக் குளிருது; உடம்புக்கு ஏதும் வந்துடப்போகுது; அப்புறமா நல்ல வெய்யில் வந்ததும் வெந்நீர் போட்டுக் குளிச்சுக்கலாம்” என்பாள் மிகவும் கரிசனத்துடன்//////

  “போதும்டீ, அதையெல்லாம் நனைச்சு, அலசி, பிழிஞ்சு, ஒனத்தி (உலர்த்தி) காயவச்சு, மடிச்சு (மடித்து) கட்டறதுக்குள் (உடம்பில் அணிவதற்குள்) பிராணன் போயிடுது போ;


  அவசரமா பாத்ரூம் போய் வருவதற்குள்ள தலைப்புக் கச்சமெல்லாம் கசங்கி, அவிழ்ந்து, தரையெல்லாம் பெருக்கிண்டு வருதுடீ” என்று சொல்லி பாட்டி அலுத்துக்கொண்டதைக் கேட்டதும் உஷாவுக்குச் சிரிப்பு தாங்க முடியலே.//////////////
  ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து எழுதுவதே கடினம் ,நீங்கள் வயதான பாட்டியின் நிலையில் கதாபாத்திரம் படைத்தது எழுதி இருப்பது அருமை அருமை ...அருமை .... உங்களுக்கு பரிசு தந்து தினமலர் பிறவி பயன் அடைந்துவிட்டது என்றே சொல்ல தோணுது ..நன்றி ஐயா

  ReplyDelete
 115. ரியாஸ் அஹமது January 11, 2013 8:45 AM

  வாருங்கள் நண்பரே! வணக்கம்.

  //ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து எழுதுவதே கடினம் , நீங்கள் வயதான பாட்டியின் நிலையில் கதாபாத்திரம் படைத்தது எழுதி இருப்பது அருமை அருமை ...அருமை .... உங்களுக்கு பரிசு தந்து தினமலர் பிறவி பயன் அடைந்துவிட்டது என்றே
  சொல்ல தோணுது .. நன்றி ஐயா//

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான உற்சாகம் அளிக்கும் அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 116. பாட்டி- பேத்தியின் அருமையான உணர்வுகளை அழகாக வடித்து விட்டீர்கள். உங்களுக்கு கமெண்ட் கொடுக்கனும்னா திருப்பதியில் க்யூல நின்னு தரிசனம் பண்ற மாதிரி.. கமெண்ட் பாக்சை தரிசனம் பண்ண ரொம்ப நேரமா க்யூல நகர்ந்து வர வேண்டியிருந்துச்சி ... சீக்கிரம் லட்டை கொடுங்க சாமி.. இன்னும் பின்னாடி நிறைய பேர் நிக்க்கிறாங்க.

  ReplyDelete
  Replies
  1. உஷா அன்பரசு January 11, 2013 9:20 PM

   வாங்கோ என் அன்புக்குரிய உஷா டீச்சர் ! உங்களின் இன்றைய வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

   இப்போது தான் இன்றைய 12.01.2013 “பெண்கள் மலர்” முதல் பக்கத்தில் பொறுப்பாசிரியர் ”ஸ்ரீ” அவர்கள், தங்களைப்பற்றி பாராட்டி, தங்கள் கவிதையையும் வெளியிட்டுள்ளார்கள்.

   படித்து விட்டு மகிழ்ச்சியில் அந்தப்பக்கத்தை என் கண்களில் ஒத்திக்கொண்டேன்.

   இது போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த தங்களின் வருகை என்னை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

   மேலும் இன்று மார்கழி உத்திராட நக்ஷத்திரம். என் மனைவியின் ஸ்டார் பர்த் டே.

   வழக்கம் போல இரவு முழுவதும் தூங்காமல் இன்று அதிகாலை 4 மணிக்கே குளித்து விட்டு, திருச்சி காவிரிக்கரையில் அமைந்திருக்கும் “ஆற்றழகிய சிங்கப்பெருமாள்” கோயிலுக்குச் சென்று வந்தேன்.

   இது தொடர்ச்சியாக 11 ஆவது வருட சிறப்புப் பிரார்த்தனை.

   சென்ற ஆண்டு பத்தாம் ஆண்டு பிரார்த்தனை நிறைவை ஒட்டி பதிவு ஒன்றும் கொடுத்திருந்தேன்.

   இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html

   தலைப்பு:

   ”காவேரிக்கரை இருக்கு! கரைமேலே ____ இருக்கு!!”

   மனம் மகிழ்ச்சியில் இருக்கும்போது, தங்களின் இன்றைய “நான் மனைவியானவள்” என்ற இந்தக்கவிதையையும் படித்ததும் என் மனம் ஜில்லிட்டுத்தான் போனது.

   >>>>>>>

   Delete
 117. கோபு >>>> திருமதி உஷா அன்பரசு அவர்கள் ... [2]

  //பாட்டி- பேத்தியின் அருமையான உணர்வுகளை அழகாக வடித்து விட்டீர்கள்.//

  பாராட்டுகளுக்கு மிக்க நன்றி, டீச்சர்.

  //உங்களுக்கு கமெண்ட் கொடுக்கனும்னா திருப்பதியில் க்யூல நின்னு தரிசனம் பண்ற மாதிரி.. கமெண்ட் பாக்சை தரிசனம் பண்ண ரொம்ப நேரமா க்யூல நகர்ந்து வர வேண்டியிருந்துச்சி ...//

  உங்களைப்போன்று என்னிடம் பாசமழை பொழிந்தவர்கள் + இன்றும் பொழிபவர்கள் மிகவும் அதிகம் தான். நான் என்ன செய்ய? சொல்லுங்கோ டீச்சர்.

  என் அன்புக்குரிய,பாசத்திற்கு உரிய டீச்சரைப்போய் க்யூவில் நிற்க வைத்ததற்கு, பனிஷ்மெண்ட் ஆக, என் காதைப் பிடித்துத் திருகி, பெஞ்சு மேல் ஏற்றி, பிரம்படி கொடுங்கோ ஆனால் தயவுசெய்து கோச்சுக்காதீங்கோ ... ப்ளீஸ் டீச்சர்.

  //சீக்கிரம் லட்டை கொடுங்க சாமி.. இன்னும் பின்னாடி நிறைய பேர் நிக்க்கிறாங்க.//

  திருப்பதி “லட்டு” என்ன, “அடை” என்ன, ”வடை” என்ன எது கேட்டாலும் என் டீச்சருக்காக குரு தக்ஷிணையாக உடனே கொடுக்க சித்தமாய் உள்ளான் உங்கள் மாணவன் கோபாலகிருஷ்ணன். ;)))))

  நன்றியோ நன்றிகள் ... டீச்சர். அன்பான வருகைக்கும், நகைச்சுவையான கருத்துக்களுக்கும்.

  பிரியமுள்ள
  கோபு

  ReplyDelete
 118. எங்கபாட்டி, எங்கம்மா, நான், எம்பொண்ணுன்னு நாலு பாட்டி,ஆனவர்களின் மாருதல்கள் பார்த்ததில் எல்லாருமே ஒரு விதத்தில் மாறிதான் யிருக்கிறார்கள். பாசம் ஒரே விதமாகத்தான்
  இருக்கிறது. நடை,உடை, பாவனை மாறியிருந்தாலும், பாசத்துக்குறிய
  அன்பில் ஒரேமாதிரி வெளிக்காட்டல்தான்.
  உஷா உண்டாகி விட்டால்,பாட்டி பத்து பசை பார்க்காமல், தளிவடாமும்,மருந்துப்பொடியும், மூட்டை கட்டிக்கொண்டு,சிங்கப்பூர்
  ஏர்லைனில் பிரஸவம் பார்க்கக் கிளம்பி விடுவாள். உங்கள் அழகான கதையைத் தொடர்ந்து என் மனம் இப்படிச் சிந்தித்தது.
  பாட்டி,பேத்தி அழகான பாசப் பிணைப்பு.

  ReplyDelete
  Replies
  1. Kamatchi January 17, 2013 at 2:28 AM

   வாங்கோ காமாக்ஷி மாமி, நமஸ்காரங்கள்.

   //எங்கபாட்டி, எங்கம்மா, நான், எம்பொண்ணுன்னு நாலு பாட்டி, ஆனவர்களின் மாறுதல்கள் பார்த்ததில் எல்லாருமே ஒரு விதத்தில் மாறிதான் இருக்கிறார்கள். பாசம் ஒரே விதமாகத்தான் இருக்கிறது. நடை, உடை, பாவனை மாறியிருந்தாலும், பாசத்துக்குறிய அன்பில் ஒரேமாதிரி வெளிக்காட்டல்தான்.//

   மிகச்சரியாகவே சொல்லிவிட்டீர்கள். மிகவும் சந்தோஷம்.

   //உஷா உண்டாகி விட்டால்,பாட்டி பத்து பசை பார்க்காமல், தளிவடாமும், மருந்துப்பொடியும், மூட்டை கட்டிக்கொண்டு, சிங்கப்பூர் ஏர்லைனில் பிரஸவம் பார்க்கக் கிளம்பி விடுவாள்.//

   ஆமாம். என் பெரிய அக்காவும் [உங்கள் வயது அவளுக்கு] இதேபோல, இதே காரணத்திற்காக சமீபத்தில் இரண்டுமுறை சிங்கப்பூர் சென்று வந்து விட்டாள்.

   //உங்கள் அழகான கதையைத் தொடர்ந்து என் மனம் இப்படிச் சிந்தித்தது. பாட்டி,பேத்தி அழகான பாசப் பிணைப்பு.//

   தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   இதே போல, ஆனால் இதற்கு முற்றிலும் நேர் மாறாக, இன்றைய நவநாகரீகமான அழகான சமத்தான பெண் ஒருத்தி, பழமையை விரும்பிச்செல்கிறாள், என் மற்றொரு கதை ஒன்றில். நீங்கள் அதையும் அவசியமாகப் படித்துவிட்டு, தங்கள் கருத்தினைச் சொல்ல வேண்டும்.

   தலைப்பு: ”காதல் வங்கி”

   இணைப்பு:
   http://gopu1949.blogspot.in/2011_11_01_archive.html

   பிரியமுள்ள
   கோபாலகிருஷ்ணன்

   Delete
 119. பாட்டி, பேத்தியின் அன்னியோன்னியம் இதைவிட யாராலும் சொல்லி விட முடியாது.ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் பாட்டியின் பாசமும் அன்பும் வெளிப்படும் விதமாக வர்ணனை, பேத்திக்கும் பட்டிமேல் உள்ள அன்பு பாசம் நல்லா சொல்லி இருக்கீங்க. உங்க பல கதை படிச்ச பிறகுதான் எனக்கு தெளிவா பாரா பிரிச்சு எழுதணுன்னே தோனித்து. என்பக்கம் கொஞ்சம் சரி பண்ணிட்டேன்.போதுமான இடை வெளி விட்டும் எழுதணும்னும் புரிந்து கொண்டேன். அப்போதானே படிக்கவருகிறவர்களுக்கு ஈசியா புரிந்து கொள்ளும் படி இருக்கும்? நன்றி நன்றி.

  ReplyDelete
 120. பூந்தளிர் January 18, 2013 at 6:27 AM

  வாங்கோ பூந்தளிர், வாங்கோ, வணக்கம்.

  //பாட்டி, பேத்தியின் அன்னியோன்னியம் இதைவிட யாராலும் சொல்லி விட முடியாது.ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் பாட்டியின் பாசமும் அன்பும் வெளிப்படும் விதமாக வர்ணனை, பேத்திக்கும் ’பா ட் டி’ மேல் உள்ள அன்பு பாசம் நல்லா சொல்லி இருக்கீங்க.//

  தங்கள் வருகையும் கருத்துக்களும் மிகவும் மகிழ்வளிக்கிறது.

  ஏனோ பாட்டியின் காலைக்கண்டால் அதை ஒடித்து விட வேண்டும் என்று நீங்கள் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளீர்கள்.

  பாட்டி = சரி [’பட்டி’க்கு வேறு அர்த்தம்]

  //உங்க பல கதை படிச்ச பிறகுதான் எனக்கு தெளிவா பாரா பிரிச்சு எழுதணும்ன்னே தோனித்து.//

  அப்படியா சந்தோஷம்மா.

  //என்பக்கம் கொஞ்சம் சரி பண்ணிட்டேன்.போதுமான இடைவெளி விட்டும் எழுதணும்னும் புரிந்து கொண்டேன். அப்போதானே படிக்கவருகிறவர்களுக்கு ஈசியா புரிந்து கொள்ளும் படி இருக்கும்?//

  புரிதலுக்கு நன்றி. நானும் மேலும் ஒருசில விஷயங்கள் விரிவாகச் சொல்லி, உங்களுக்கு மெயில் கொடுக்கணும்ன்னு தான் நினைக்கிறேன்.

  அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. மாத்தி மாத்தி உங்களுக்கு பதில் கொடுக்கவே தான் நேரம் உள்ளதூஊஊ.

  //நன்றி நன்றி.//

  அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ... பூந்தளிருக்கு.

  பிரியமுள்ள
  கோபு

  ReplyDelete
 121. ஆவ்வ்வ்வ் மீயும் படித்துவிட்டேன்ன் .. சிம்பிள் அண்ட் சூப்பர். அதுசரி அந்த 1000 ரூபாயை என்ன பண்ணினனீங்க கோபு அண்ணன்?:).

  ReplyDelete
  Replies
  1. athira August 18, 2013 at 11:48 AM

   வாங்கோ அதிராஆஆஆஆ .......... வணக்கம்.

   //ஆவ்வ்வ்வ் மீயும் படித்துவிட்டேன்ன் .. சிம்பிள் அண்ட் சூப்பர்.//

   ஆஆஆஆஆஆ அதிராவின் பராட்டுக்களில் அப்படியே மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.

   //அதுசரி அந்த 1000 ரூபாயை என்ன பண்ணினனீங்க கோபு அண்ணன்?:)//

   பத்திரமாகத்தான் நேற்றுவரை பாதுகாத்து தனியே வைத்திருந்தேன் அதுவும் அதிராவுக்குக் கொடுப்பதற்காகவே. ;)

   நான் அதிராவின் பாராட்டுக்களில் மயங்கி விழுந்திருந்த போது, அந்தப்பணத்தை யாரோ களவாடிச்சென்றுள்ளனர். ;(

   நிச்சயம் அது நம் அதிராவாகத்தான் இருக்கோணும். ;)))))

   அப்படியிருந்தால் எனக்கும் OK தான்.

   அன்புடன் கோபு

   Delete
 122. என் உயிர்த்தோழி - உயிருக்கு உயிரான பாட்டி பேத்தி கதை.
  அழகாகவும் அருமையாகவும் அமைத்து அமர்கள படுத்திவிட்டீர்கள் ! ! !

  உங்கள் கதை மட்டுமல்ல உங்கள் கமெண்ட்ஸ் மேலும் மெருகூட்டுகிறது

  //காரச்சாரமான ருசியுடன், எலுமிச்சை மணத்துடன் வடாத்துமாவு சாப்பிடுவதே ஒரு நல்ல ருசிதானே! நாக்கில் ஜலம் ஊறுகிறது, எனக்கு இப்போது.

  அதுவும் அக்கம்பக்கத்தில் பிள்ளைத்தாச்சிப் பெண்கள் இருந்தால், கட்டாயமாக அந்த வடாத்து மாவை எடுத்துக்கொண்டு, அவர்களைத் தேடிப்பிடித்து கொடுத்து தின்னச் செய்வார்கள்.

  என்னவொரு வாத்சல்யம் அவர்கள் மேல் என்றும், அடடா நாம் பிள்ளைத்தாச்சி பொம்பளையாக இல்லாமல் போய் விட்டோமே என்றும் நினைக்கத் தோன்றும்//

  அடடா

  //அடிக்கும் வெய்யிலை வீணாககக்கூடாது என்றே சில பாட்டிகள் வடாத்துக்கு மாவுக்கு ரெடி செய்துவிடுவார்கள். சோலார் எனெர்ஜியை அன்றே உணர்ந்தவர்கள்//

  ஆகா


  //அதுபோலவே அப்பளக்குழவி, அப்பளத்து மாவு உருண்டைகள், பிரண்டை ஜலம் என்று ஏதேதோ வைத்துக்கொண்டு, என் மாமியார் அந்த நாளில் ஒரு பெரிய ஃபாக்டரி போல வீடு பூராவும் பரத்திக்கொண்டு, நியூஸ் பேப்பரை விரித்து வைத்துக் கொண்டு அப்பளம் இடுவார்கள்//

  ஃபாக்டரி யா யா
  மலரும் நினைவுகள் அருமை

  //தினமலர் வார இதழ்
  பரிசுப்போட்டியில் பரிசு பெற்றது//

  வாழ்த்துகள். நன்றி ஐயா.

  ReplyDelete
 123. வேல்September 24, 2013 at 8:32 AM

  வாருங்கள், வணக்கம்.

  //என் உயிர்த்தோழி - உயிருக்கு உயிரான பாட்டி பேத்தி கதை.
  அழகாகவும் அருமையாகவும் அமைத்து அமர்கள படுத்திவிட்டீர்கள் ! ! !//

  கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளதுங்க ! மிக்க நன்றி.

  //உங்கள் கதை மட்டுமல்ல உங்கள் கமெண்ட்ஸ் மேலும் மெருகூட்டுகிறது//

  நான் எழுதும் படைப்புகளைப் படிப்பவர்களை விட நான் பிறரின் பதிவுகளுக்கு எழுதும் கமெண்ட்ஸை ரஸிப்பவர்களும், அதுபோல எனக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு நான் கொடுக்கும்
  பதிலைப்படித்து ரஸிப்பர்வர்களும் அதிகம். அதுபோன்ற என் தீவிர ரஸிகர்களைப்பற்றி வெளியுலகுக்குத் தெரியாது அவர்களில் பெரும்பாலானோர் மெயில் மூலம் அல்லது தொலைபேசி என்னிடம் கலந்துரையாடல்கள் செய்பவர்கள். அவர்களை பின்னூட்டப்பகுதியில் நீங்கள் அடையாளம் காண்பது மிகவும் சிரமம். அங்கு ஏதோ சிம்பிளாக மட்டும் ஒரு கருத்து சொல்லியிருப்பார்கள்.

  *****காரச்சாரமான ருசியுடன், எலுமிச்சை மணத்துடன் வடாத்துமாவு சாப்பிடுவதே ஒரு நல்ல ருசிதானே! நாக்கில் ஜலம் ஊறுகிறது, எனக்கு இப்போது. அதுவும் அக்கம்பக்கத்தில் பிள்ளைத்தாச்சிப் பெண்கள் இருந்தால், கட்டாயமாக அந்த வடாத்து மாவை எடுத்துக்கொண்டு, அவர்களைத் தேடிப்பிடித்து கொடுத்து தின்னச் செய்வார்கள்.

  என்னவொரு வாத்சல்யம் அவர்கள் மேல் என்றும், அடடா நாம் பிள்ளைத்தாச்சி பொம்பளையாக இல்லாமல் போய் விட்டோமே என்றும் நினைக்கத் தோன்றும்*****

  //அடடா// ;)

  *****அடிக்கும் வெய்யிலை வீணாககக்கூடாது என்றே சில பாட்டிகள் வடாத்துக்கு மாவுக்கு ரெடி செய்துவிடுவார்கள். சோலார் எனெர்ஜியை அன்றே உணர்ந்தவர்கள்*****

  //ஆகா// ;)

  *****அதுபோலவே அப்பளக்குழவி, அப்பளத்து மாவு உருண்டைகள், பிரண்டை ஜலம் என்று ஏதேதோ வைத்துக்கொண்டு, என் மாமியார் அந்த நாளில் ஒரு பெரிய ஃபாக்டரி போல வீடு பூராவும் பரத்திக்கொண்டு, நியூஸ் பேப்பரை விரித்து வைத்துக் கொண்டு அப்பளம் இடுவார்கள்*****

  //ஃபாக்டரி யா யா - மலரும் நினைவுகள் அருமை// ;))

  நான் திரு. மோஹன்ஜி அவர்களின் பின்னூட்டத்திற்குக் கொடுத்துள்ள பதிலை மிகவும் ரஸித்துப்படித்துள்ளீர்கள். சந்தோஷமாக உள்ளது.

  *****தினமலர் வார இதழ் பரிசுப்போட்டியில் பரிசு பெற்றது*****

  //வாழ்த்துகள். நன்றி ஐயா.//

  ரொக்கப்பரிசினை விட நான் எப்போதுமே பெரிதாக நினைப்பது + மதிப்பது, உங்களைப்போன்ற வாசகர்களின் மனம் திறந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள், விமர்சங்கள், பின்னூட்டக் கருத்துக்கள் முதலியவற்றை மட்டுமே. மிக்க நன்றி.

  என்றோ எனக்குக்கிடைத்த ரொக்கப்பணம் ரூ. 1000/- அது எங்கோ போய்விட்டது. ஆனால் இங்குள்ள 140 பின்னூட்டங்கள் என்றும் மறையாமல் திரும்பத் திரும்பப் படிக்கப் படிக்க இன்பம் தரக்கூடியவை. பரிசுத்தொகையைப்போல ஆயிரம் மடங்கு மதிப்பு வாய்ந்த பொக்கிஷங்கள் என்பது எனது எண்ணம்.

  தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  ReplyDelete
 124. இந்த பாட்டியின் பாசம் இப்போ எங்கே குழங்தைகளுக்கு கிடைக்கிறது. அருமையான சிநேகிதி. முதுமையில் ஓய்வு என்பது உடம்பிற்கு தான்,,,, மனதிற்கு இல்லை.
  பெரியவர்களின் பாசம் அவசியம் இந்த தலைமுறையினருக்கு தேவை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. mageswari balachandran May 4, 2015 at 12:18 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இந்த பாட்டியின் பாசம் இப்போ எங்கே குழங்தைகளுக்கு கிடைக்கிறது. அருமையான சிநேகிதி. முதுமையில் ஓய்வு என்பது உடம்பிற்கு தான்,,,, மனதிற்கு இல்லை. பெரியவர்களின் பாசம் அவசியம் இந்த தலைமுறையினருக்கு தேவை. நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான இனிமையான நல்ல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 125. பாட்டி, பேத்தியின் நடுவில் இழையோடும் நல் உறவை அழகாக எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.

  எனக்கு என் பாட்டியுடனான நிகழ்வுகள் அப்படியே கண் முன் தோன்றுகிறது. நம் பிள்ளைகளை விட நம் பேரப் பிள்ளைகளின் அருகாமை அருமையான ஒரு விஷயம்.

  பரிசு பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
 126. இந்த கதையை படித்த உடன் ஜீன்ஸ் பட பாடல் வாராயோ தோழி வயசான தோழி...பாட்டு ஞாபகம் வருது சார்.. வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. @Radha Rani

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, மேடம். :)

   Delete
 127. உஸாவங்களுக்கு கெடச்சாப்ல வப்பாத்தா கெடச்சா நல்லாதாருக்கும். இன்னா அளகா கொஞ்சிகிடுதாக.

  ReplyDelete
  Replies
  1. பாட்டி பேத்தியின் நெருக்கம் அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. கூட்டூக்குடித்தன வாழ்க்கை முறை எவ்வளவு இனிமையாக சொல்லப்பட்டிருக்கு. பக்கத்தில் பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாத பெரியவங்களுக்கு டி.வி.யும் ரிமோட் கண்ட்ரோலும் பெரிய துணைதான். மாடர்ன் பாட்டிதான் மடிசார கட்டிண்டு யாரு அவஸ்தைப்படறது. பேத்தியும் ஆசை ஆசையா பலவித போஸ்களில் பாட்டியை போட்டோ எடுத்ததுமில்லாமல் தாத்தாவைக்கூப்பிடவான்னு பாட்டி முகத்தில் வெட்கச்சிரிப்பையும் வர வைக்கிறாளே.

   Delete
 128. பாட்டியின் TRANSITION பேத்தி-பாட்டி WONDERFUL TIE UP அருமையாக சித்தரித்துள்ளீர்கள்...ரசித்தேன்...

  ReplyDelete
 129. படத்துக்குக் கதை கன கச்சிதப் பொருத்தம்தான்...

  ReplyDelete
 130. //முதலில் திடுக்கிட்டாலும், ஒரு நொடிக்குள் யாரென்று யூகித்து விட்டாள் பாட்டி. ஐந்து நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் அப்படியே அணைத்துக் கொண்டாள். பிரிவின் சோகம் பெரு மூச்சாய் வெளிப்பட்டது.// அற்புதமான உணர்வுபூர்வமான வரிகள்! பின் குறிப்பிட்ட சம்பவங்கள் அதை ஞாயப்படுத்தின! தலைப்பும் கதையும் மிக அருமை! பாட்டியையும் வடாமையும் ஞாபகப் படுத்திவிட்டீர்கள்!

  ReplyDelete