About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, January 3, 2015

எங்கள் பயணம் [துபாய்-18]


ஹோட்டல் சரவணபவன்


அடிக்கடி காரில் ஊரைச் சுற்றினாலும், பசியும் களைப்பும் ஏற்படத்தானே செய்யும் ! ஆங்காங்கே உள்ள நமது தென்னிந்திய சைவ உணவகமாகிய சரவண பவன் செல்லத் தவறுவதுவதே இல்லை. 

இட்லி, வடை, ப்ளைன் தோசை, ஆனியன் மஸால் தோசை, ரவா தோசை, ஆனியன் ரவா, வெங்காய ஊத்தப்பம், பூரி மஸால் என நம் ஊர் போலவே அனைத்தும் ருசியோ ருசியாகக் கிடைக்கின்றன. 


  

 


விலையும் கிட்டத்தட்ட நம்ம ஊர் போலவே தான். ஒரு எட்டு பேர்கள் சேர்ந்துபோய் வயிறுமுட்ட அவரவர்களுக்கு வேண்டியதைச் சாப்பிட்டால் வெறும் 1200 திர்ஹாம் மட்டுமே செலவாகிறது. இங்கு நம்ம ஊரிலும் தலைக்கு 150 ரூபாய் வீதம் அதே ரூ. 1200 மட்டுமே தான் செலவாகும். 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் துபாயின் 1200 திர்ஹாம் என்பது நம் இந்திய ரூபாய் 20,400 க்குச் சமமாகும் என்பது மட்டுமே. :)

அதேபோல நம் வீட்டிலிருந்து ஃபோன் செய்து ஆர்டர் கொடுத்தால் போதும். அடுத்த அரை மணி நேரத்தில், நம் வீடு தேடி, சுடச்சுட டிபன்கள், சுவையான பலவித சட்னிகள் + சாம்பாருடன் ப்ளாஸ்டிக் டப்பாக்களில் வெகு அழகாக பேக் செய்து, டோர் டெலிவெரி செய்து விடுகிறார்கள். இவ்வாறான டோர் டெலிவெரிக்கு மட்டும் சர்வீஸ் சார்ஜ் என உபரியாக கொஞ்சம் வசூலித்துக்கொள்கிறார்கள்.

துபாயில் மட்டும் ஏழு இடங்களிலும், ஷார்ஜாவில் மூன்று இடங்களிலும், அபுதாபியில் ஓரிடத்திலுமாக UAE யில் மொத்தம் 11 இடங்களில் இந்த சரவண பவனுக்குக் கிளைகள் உள்ளதில் நமக்கும் மகிழ்ச்சியே.
சென்ற முறை சென்றபோதே ஹோட்டல் சரவண பவன் எங்கள் மகன் அப்போது குடியிருந்த வீட்டருகிலேயே இருந்தது. ஹோட்டல் சரவண பவன் தவிர, சென்ற முறை பார்த்த இடங்களுக்கு இந்தமுறை நாங்கள் அதிகமாகச் செல்லவில்லை. புதிய இடங்களில் சிலவற்றை மட்டுமே இந்தமுறை கண்டு களித்து வந்தோம்.

கடந்த பத்தாண்டுகளில் துபாயில் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  குறிப்பாக உலகப்புகழ்பெற்ற புர்ஜ் கலிபா கட்டடம், துபாய் மால் + செயற்கை நீரூற்றுகள் [FOUNTAIN], பாம் ஐலண்டு, பகுதி-12 இல் http://gopu1949.blogspot.in/2014/12/12.html  காட்டியுள்ள செயற்கைப்பனிமலை + சறுக்கு விளையாட்டுகள், துபாயில் இன்று ஓட்டப்படும் மெட்ரோ ரயில் போன்றவையெல்லாமே  கடந்த சில ஆண்டுகளுக்குள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2004-இல் நாங்கள் சென்றபோது இதெல்லாம் அங்கு கிடையாது. இதற்கான திட்டங்கள் மட்டும் அன்று வரைபடத்தில் காட்டி வந்தார்கள். 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மொத்தம் ஏழு பகுதிகளில் துபாயில் மட்டுமே இன்று மெட்ரோ ரயில் ஓட்டப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில் ஸ்டேஷன்களுக்கு மட்டும் 
இதுபோல ஸ்டைலாக கூரை போடப்பட்டுள்ளன.
09.09.2009 அன்று இரவு 9 மணி 9 நிமிடங்கள் 9 வினாடி என்ற நேரத்தில் துபாயின் முதல் மெட்ரோ ரயில் பயணம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

ரெட் லைன் என்று அழைக்கப்பட்ட இந்த முதல்கட்ட முயற்சியில் அன்று பத்தே பத்து ஸ்டேஷன்கள் மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தன. 

09.09.2009 முதல் 09.02.2010 க்குள் ... முதல் ஐந்து மாத காலத்தில் ... ஒரு லட்சத்துப் பத்தாயிரம் மக்கள் இந்தப்புதிய மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இது அந்த நாட்டின் மொத்த ஜனத்தொகையில் சுமார் 10 சதவீதமாகும். 

இப்போது மேற்படி மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கைகளும் கூடுதல் ஸ்டேஷன்களும் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

 

இப்போது நாங்கள் சென்றபோது 
என் மகன் வீடு அமைந்திருந்த 
குடியிருப்பு கட்டடத்தின் முகப்புப்பகுதி எங்களைப் 
பளிச்சென்ற கோலத்துடன் வரவேற்றதில் 
எங்களுக்கோர் தனி மகிழ்ச்சியாக இருந்தது.

 


oooooOooooo

”உதட்டில் புண்  ! 
அதனால் 
மாடு கறக்க முடியவில்லையாம் !!”  
என்றோர் பழமொழி சொல்லுவார்கள். 

இது எவ்வளவு உண்மை என்று துபாயில் சென்று நான் உணர்ந்து கொண்டேன். உதட்டில் புண் உள்ளவர் மாடு கறக்கச்செல்லும் போது, உதட்டில் உள்ள புண்ணில் ஒருவேளை அந்த மாடு உதைந்துவிட்டால், மேலும் ரணமாகிப்போகும் அல்லவா ! அதனால் இந்தப்பழமொழி ஏற்பட்டிருக்கலாம் என முன்பெல்லாம் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். 

துபாய் சென்ற இருவாரங்களில் எனக்கு கீழ் உதட்டில் தோல் உரிந்து, புண்ணாகி என் உதடே வீங்கிப்போய் விட்டது.   கீழே இடது புறமாக சிறிய கொப்பளம் போல, முகமும் வைத்திருந்தது. ஆனால் அது உடையவே இல்லை. விண்விண் என ஒரு வலி ... அதனால் ஜுரமும் வந்து விட்டது.

வாயைத்திறந்து என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை. ரஸம் + மோரில் கரைத்த சாதமாகவும் ஜூஸ் போன்ற சமாசாரங்களும் மட்டுமே [Only Liquid Items] சாப்பிட்டு வந்தேன்.   

பிறகு அங்குள்ள டாக்டரிடம் சென்று, சிகிச்சை எடுத்துக்கொண்டு, நிறைய ஆண்டிபயாடிக் சலைன் மூலம் ஏற்றிக்கொண்டு, ஒரு வாரத்திற்கு ஏராளமான மாத்திரைகள் சாப்பிட்டு ஒருவழியாக என் கீழ் உதட்டினை பழைய நிலைமைக்குக் கொண்டு வர முடிந்தது. 
பொதுவாக அந்த நாட்டில் [துபாயில்] 
 [1] வீட்டு வாடகை 
[2] குழந்தைகளைப் படிக்க வைக்க ஆகும் பள்ளிச்செலவுகள் 
[3] மருத்துவச்செலவுகள் 
ஆகியவை மிகவும் அதிகம் என்பது எனக்குத் தெரியும். கேள்விப்பட்டுள்ளேன். 

இப்போது அதில் ஒன்றை நேரில் அனுபவித்து அறிய ஓர் நல்ல வாய்ப்பாக அமைந்தது இந்த என் பயணமும், உதட்டுப்புண்ணும். :)

என் உதடு மீண்டும் பழைய உதடாக  மாற DOCTOR CONSULTING FEES, LAB BLOOD TEST. INJECTIONS, MEDICINES, TABLETS, CAPSULES என ஓர் 1000 திர்ஹாம் மட்டுமே செலவானது. 

நம் இந்திய ரூபாயில் அதன் மதிப்பு சுமார் Rs. 17,000 மட்டுமே. 


”பணம் போனால் போகிறது. 
பணம் இன்று போகும் ....
நாளை வரும் .... 
இப்போ சுலபமாக மாடு கறக்க முடிகிறதே !” 

என்கிறீர்களா ? 

அதுவும் சரிதான். :) 


  


-oooooOooooo-

காய்ந்த உதடுகளுக்கும், உரியும் உதடுகளுக்கும் தடவ நம்மூர் மருந்துக்கடைகளில் LIP GUARD என்ற ஒன்று [விக்ஸ் இன்ஹேலர் வடிவில்] விற்கும். அது வெவ்வேறு ருசிகளில் சற்றே தித்திப்பாக வழுவட்டையாக இருக்கும். 

அதெல்லாம் தடவியும் ஒன்றும் எனக்குச் சரிப்பட்டு வரவில்லை.துபாயை விட்டுப் புறப்படும்போது என் மகன் வேறொன்று புதிதாக வாங்கிக் கொடுத்தார். மஞ்ச நிறத்தில் பச்சைக்கலர் மூடி போட்டது. அது மூலிகை மருந்துபோல நல்ல விறுவிறுப்பாக பேரெழுச்சியுடன் இருந்தது. வடாத்துமாவு போன்று காரசாரமாகவும் இருந்தது. அது அங்குள்ள விமான நிலையங்களில் மட்டுமே விற்கப்படுவதாகும். வெளியே கடைகளில் கிடைக்காதாம். அது நல்ல EFFECTIVE ஆக இருந்தது. மேலும் கொஞ்சம் அதையே AIRPORT பக்கம் போகும்போது வாங்கி அனுப்பச் சொல்லியுள்ளேன். 

அதன் மாடல்தான் இங்கு மேலும் கீழும் காட்டியுள்ளேன். அதன் வயிற்றுப்பகுதியில் உண்டியல் போல ஒரு துவாரம் இருக்கும். அதில் உள்ள சின்னதொரு பட்டனை மேல் நோக்கி உயர்த்தினால் உள்ளேயுள்ள மருந்து மேலே எழும்பி வரும்.  உதட்டில் தடவிய பிறகு அந்த பட்டனை கீழ் நோக்கி இறக்கினால் மருந்து உள் நோக்கிச் சென்றுவிடும். 
பயணம் தொடரும் 29 comments:

 1. நிறைய தகவல்கள் நான் பலமுறை காரில் போய் வருவதால் இதுவரை மெட்ரோவில் போனதில்லை ஐயா... எனக்கும் அந்த ஆசை இருக்கிறது....

  ReplyDelete
 2. துபாய் பயணங்கள் சிறப்பாய் பயணிக்கிறது ஐயா...

  ReplyDelete
 3. துபாய் பயண தகவல்கள் அருமை ஐயா, படங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி

  ReplyDelete
 4. சரவணபவன் ஓட்டல் நன்றாக ஓடும் என்று நினைக்கிறேன். வெளிநாட்டில் நமக்குப் பழகிய உணவு வகைகள் கிடைத்தால் சந்தோஷமே.

  ReplyDelete
 5. சரவணபவன் தோசை படத்தைப்போட்டு பசியை உண்டாக்கிவிட்டீர்கள். பயண அனுபவங்களும் சுவராஸ்யம்.

  ReplyDelete
 6. இந்திய மதிப்பில் எவ்வளவு ரூபாய் என்பதை நினைக்காமல் இருக்க வேண்டும்...!

  ReplyDelete
 7. எத்தனை எத்தனை விவரங்கள்!
  அழகான படங்கள்,
  உடல்நலக்குறை ஏற்பட்டு விரைவில் குணபடுத்தப்பட்டது அறிந்து மகிழ்ச்சி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. hotel,metro,kudiyiruppu entrance,hospital anaithu viparangalum arumai

  ReplyDelete
  Replies
  1. thirumathi bs sridhar January 3, 2015 at 12:32 PM

   ஆஹா, வாங்கோ ஆச்சி ! வணக்கம். நீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் ஆச்சியின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது. நலம் தானே ஆச்சி ?

   //hotel,metro,kudiyiruppu entrance,hospital anaithu viparangalum arumai ஹோட்டல், மெட்ரோ, குடியுருப்பு நுழைவாயில், ஆஸ்பத்தரி அனைத்து விபரங்களும் அருமை//

   அன்புள்ள ஆச்சியின் கருத்துக்களும் மிகவும் விபரமானவைகளே !! :))))) மிக்க நன்றி, ஆச்சி.

   பிரியமுள்ள கோபு

   Delete
 9. துபாயில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வியக்க வைக்கின்றன. புகைப்படங்கள் அழகு!
  வெளிநாட்டு கரன்சியில் செய்யும் செலவை நம்மூர் மதிப்புக்கு மாற்றிப்பார்த்தால் மலைப்பாகத் தான் இருக்கும். நான் லண்டன் சென்றிருந்த போது முதல் நாள் என் பையன் சொன்ன அட்வைஸ் இது தான்.
  செலவு செய்தவுடனே அதை நம்மூர் பணத்துக்கு மாற்றிப்பார்த்துக் கொண்டே இருந்தீர்களென்றால், சுற்றுலா மகிழ்ச்சியே கெட்டு விடும். அந்தப் பழக்கத்தை முதலில் கைவிடுங்கள் என்று சொன்னான். அது முழுக்க முழுக்க உண்மை என்பதை என் அனுபவத்தில் கண்டுகொண்டேன்.
  உதட்டில் புண் அதனால் மாடு கறக்க முடியவில்லையாம் என்ற பழமொழியை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அதன் உண்மையான அர்த்தம் என்ன? உதட்டில் புண் இருப்பதற்கும் மாடு கறப்பதற்கும் என்ன சம்பந்தம்? வேலை செய்வதற்கு ஏதாவது நொண்டிச்சாக்கு சொல்பவர்களை இப்பழமொழி கிண்டல் செய்கிறதோ என எனக்குச் சந்தேகம்.

  ReplyDelete
  Replies
  1. Kalayarassy G January 3, 2015 at 3:59 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //துபாயில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வியக்க வைக்கின்றன. புகைப்படங்கள் அழகு!//

   மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

   //வெளிநாட்டு கரன்சியில் செய்யும் செலவை நம்மூர் மதிப்புக்கு மாற்றிப்பார்த்தால் மலைப்பாகத் தான் இருக்கும்..//

   ஆம். அவ்வாறு நாம் செய்வது முற்றிலும் தவறும் கூட.
   அங்குள்ள வருமானத்திற்குத் தகுந்தாற்போல செலவுகளும் அமைந்துள்ளன என்பதுதான் இதில் உள்ள உண்மை.

   இருப்பினும் இங்கிருந்து செல்லும் நம்மால் எதையும்
   ஓரளவு கணக்குப் பார்க்காமலும் ஒப்பிட்டுப் பார்க்காமலும்
   இருக்க முடிவது இல்லை. அது நமது ரத்தத்தில் ஊறிய
   வழக்கமாகப் போய்விட்டது.:)

   //நான் லண்டன் சென்றிருந்த போது முதல் நாள் என் பையன் சொன்ன அட்வைஸ் இது தான். செலவு செய்தவுடனே அதை நம்மூர் பணத்துக்கு மாற்றிப்பார்த்துக் கொண்டே இருந்தீர்களென்றால், சுற்றுலா மகிழ்ச்சியே கெட்டு விடும். அந்தப் பழக்கத்தை முதலில் கைவிடுங்கள் என்று சொன்னான். அது முழுக்க முழுக்க உண்மை என்பதை என் அனுபவத்தில் கண்டுகொண்டேன்.//

   தாங்கள் சொல்வது மிகவும் சரியே. என் பிள்ளையும் அதுபோலவே தான் சொல்லுவான். அவனிடம் எதன் விலையைக்கேட்டாலும் பெரும்பாலும் அவனுக்கே சொல்லத் தெரியாமல் இருக்கும். தனக்கு வேண்டிய
   தரமான பொருட்களை மட்டும், லேடஸ்டு டெக்னாலஜி
   உள்ள பொருட்களை மட்டும் கடையில் வாங்குவான்.

   பேங்க் கார்டு மூலம் மட்டுமே பேமண்ட் செய்வான். எந்தப்
   பொருளின் விலையையும் மனதில் வைத்துக்கொள்ளவும்
   மாட்டான். ஏதாவது அவனிடம் கேட்டால் என் மீது
   அவனுக்கு சமயத்தில் கோபம்கூட வந்துவிடும்.

   நான் அவனுக்கே தெரியாமல் மட்டுமே, ஆங்காங்கே
   விற்கப்படும் சில விலைகளை SMELL செய்துகொண்டு வந்துள்ளேன். அதுவும் பயணக்கட்டுரை பதிவுகளில் எழுதுவதற்காக மட்டுமே. :)

   //உதட்டில் புண் அதனால் மாடு கறக்க முடியவில்லையாம் என்ற பழமொழியை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அதன் உண்மையான அர்த்தம் என்ன? உதட்டில் புண் இருப்பதற்கும் மாடு கறப்பதற்கும் என்ன சம்பந்தம்? வேலை செய்வதற்கு ஏதாவது நொண்டிச்சாக்கு சொல்பவர்களை இப்பழமொழி கிண்டல் செய்கிறதோ என எனக்குச் சந்தேகம்.//

   You assumption is exactly 100% correct. :)

   உதட்டுப்புண்ணுக்கும் மாடு கறப்பதற்கும் எந்த சம்பந்தமும்
   இல்லை. தினமும் மாடு கறக்க வருபவன் [வேலையாள்]
   லீவு போட்டதற்கு நொண்டிச் சாக்கு சொல்கிறான் என்பதே
   இதன் உண்மையான பொருளாகும்.

   நான் சும்மா ஓர் நகைச்சுவைக்காக இங்கு இந்தப்பழமொழியைக் கையாண்டுள்ளேன்.

   தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், விரிவான
   கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு
   நன்றிகள், மேடம்.

   நன்றியுடன் கோபு

   Delete
 10. சிறப்பான படங்களுடன் பயண அனுபவம் சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 11. அட எந்த ஊருக்குப் போனா என்ன? நம்ம ஊர் இட்லி, தோசை, பூரி, வடை எல்லாம் இல்லாம இருக்க முடியுமா? ஒரு காலத்தில வெளி நாடுகள்ல நம்ப ஊர் சாப்பாடு கிடைக்கறது கஷ்டமா இருந்திருக்கும். ஆனா இப்ப எது வேணா எங்க வேணா கிடைக்கறது. நினைச்சா சிரிப்பா இருக்கு நம்ப சின்ன வயசில டெல்லியில இருந்து ’மோடா’ வை வாங்கிண்டு வர சொல்லி, அதை பெருமையா நம்ப கிட்ட காட்டுவா. ஆனா இப்ப எல்லாம் எல்லா இடத்துலயும் சிரிப்பா சிரிக்குது. எல்லாப் புகழும் மனிதன் மனிதனுக்கே. ஆனா ஏதோ நம்மால முடிஞ்சது எதுக்குமே (பணம் உட்பட) மதிப்பே இல்லாம செஞ்சுட்டோம்.

  அந்த வீங்கிப் போன உதட்டையும் போட்டோ எடுத்து போட்டு, இதெல்லாம் உங்க ஒருத்தரால்தான் முடியும் அண்ணா.

  அருமையான படங்களுக்கும், தகவல்களுக்கும் நன்றியோ நன்றி.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
 12. பத்து வருடங்களில் துபாயின் வளர்ச்சியும் சுற்றுலாப் பயணிகளைக் கவர அவர்கள் செய்திருக்கும் முயற்சிகளும் வியக்கவைக்கின்றன. சென்ற இடத்தில் சுற்றத்தோடு கூடிக்குலாவ முடியாமல் பேசவும் இயலாமல் உதட்டில் புண் வந்தது வருத்தம் என்றாலும் இவ்வளவு சிகிச்சைக்குப் பிறகு நல்லபடியாக குணமானதே என்று அறிய மகிழ்ச்சி.

  ReplyDelete
 13. அய்யா VGK அவர்களுக்கு வணக்கம்.

  துபாய்க்குப் போனாலும் நம்மால் இட்லி, தோசை, பூரியை விட முடியாது என்பதற்கு உங்கள் பதிவே சாட்சி. படங்களைப் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற உணர்வு உண்டாகிறது.

  மெட்ரொ ரெயில் பற்றிய தகவல்களும், படங்களும் சுவாரஸ்யம் அளிக்கின்றன.

  உதட்டில் புண், ஒரு கண் திருஷ்டியாய் வந்து போனது போல் தெரிகிறது.

  ReplyDelete
 14. சரவணபவன், மெட்ரோ ரயில் என அனைத்து தகவல்களும் சுவையாக இருந்தன.

  டாக்டருக்கு 17000!!!

  ReplyDelete
 15. படங்களும், தகவல்களும் புதிதாக துபாய் செல்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். துபாயில் வீட்டின் முகப்பில் கோலத்தோடு பார்த்தது நிச்சயமாய் அதிசயமான ஒன்றே. அங்கெல்லாம் கோலம் போடமுடியாது என்றே நினைத்திருந்தேன்.

  ReplyDelete
 16. ஐயா... 8 பேருக்கு 1200 திர்ஹாம் ஆகாது. 120 திர்ஹாமாக இருக்கும். அங்க மதிய ஃபுல் சாப்பாடு 16 திர்ஹாம் என்று நினைவு. டிபன் எல்லாம் 7 திர்ஹாம் இருக்கும் (ஒரு தோசை அல்லது பரோட்டா போன்றவை). உணவு விஷயத்தில் எனக்குத் தெரிந்து மத்தியக் கிழக்கு நாடுகளில் (சைவத்துக்கு) சென்னையைவிடக் குறைவுதான் ஆகும்.

  ReplyDelete
 17. saravana bhavan menu lam padam potu pasiya kelapuringle.

  ReplyDelete
 18. துபாயின் 1200 திர்ஹாம் என்பது நம் இந்திய ரூபாய் 20,400 க்குச் சமமாகும் என்பது மட்டுமே. :)

  கடைக்காரரே சொல்லிவிடுவார்... அம்மா நீங்கள் ரூபாயில் டாலரை மாற்றிப்பார்த்தால் ஒன்றுமே வாங்க முடியாது..
  தேவையானதை கவலைப்படாமல் வாங்குங்கள்..
  பணம் மகன் கொடுத்துவிடுவார்.. என்பார்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 6:05 PM

   வாங்கோ, வணக்கம்.

   //துபாயின் 1200 திர்ஹாம் என்பது நம் இந்திய ரூபாய் 20,400 க்குச் சமமாகும் என்பது மட்டுமே. :)

   கடைக்காரரே சொல்லிவிடுவார்... அம்மா நீங்கள் ரூபாயில் டாலரை மாற்றிப்பார்த்தால் ஒன்றுமே வாங்க முடியாது..
   தேவையானதை கவலைப்படாமல் வாங்குங்கள்..
   பணம் மகன் கொடுத்துவிடுவார்.. என்பார்..//

   கரெக்ட். :) எப்படியும் எல்லாவற்றிற்கும் நம் மகன்கள் தான் Payment கொடுக்கப்போகிறார்கள்.

   இருப்பினும் நமக்கு குறிப்பாக சில பொருட்களின் விலைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என ஒரு Curiosity ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

   அதற்குக் காரணம் சில பொருட்களை நாம் பிறருக்காக [பிறரின் அன்புத்தொல்லைகளுக்காக] அங்கிருந்து வாங்கிவர வேண்டியுள்ளது. அவர்களிடம் நாம் அந்தப்பொருட்களுக்காக எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டும் எனத்தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் அல்லவா ! :)

   தங்களின் அன்பான வருகைக்கும் நியாயமான + அனுபவ பூர்வமான சில கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   Delete
 19. இந்த பதிவு ரொம்ப புடிச்சிச்சி. ஏன் தெரியுமுல்ல. நாலு வித தோச, இட்டளி, பூரி மசால் சட்டினிக. பசிக்குதே. நீங்கல்லா நல்லா சாப்புட்டு போட்டீகளா? அச்சச்சோ ஒதட்டுல புண்ணு வந்திச்சா? ஒங்கட வூட்டம்மா நல்ல மருந்து தருவாங்களே. . ரயிலு ஸ்டேசன் ரயிலுகுள்ளார அல்லாமே நல்லா இருந்திச்சி.

  ReplyDelete
 20. mru November 4, 2015 at 10:45 AM

  //அச்சச்சோ ஒதட்டுல புண்ணு வந்திச்சா? ஒங்கட வூட்டம்மா நல்ல மருந்து தருவாங்களே.//

  ஏய் ........ சும்மாயிரு ......... பிச்சுப்புடுவேன் பிச்சு ........ :)

  ReplyDelete
 21. படங்கள் பகிர்வுகளுடன் ரசனையான பின்னூட்டங்களும் அசத்தலா இருக்கு.

  ReplyDelete
 22. //09.09.2009 அன்று இரவு 9 மணி 9 நிமிடங்கள் 9 வினாடி என்ற நேரத்தில் துபாயின் முதல் மெட்ரோ ரயில் பயணம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.// அதுலயும் ஃபேன்ஸி நம்பரா??விட்டமின் எம் எக்கச்சக்கமா இருந்தாதான் கத ஆகும்போல இருக்கு. தொட்டதெல்லாம் திராம்தான்...

  ReplyDelete
 23. உதட்டுப்புண் சிகிச்சை செலவு வாய் பிளக்க வைத்தது! படங்களும் தகவல்களும் மலைப்பாக இருந்ததன! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. December 20, 2015 at 5:45 PM

   //உதட்டுப்புண் சிகிச்சை செலவு வாய் பிளக்க வைத்தது!//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ரஸித்தேன்.

   //படங்களும் தகவல்களும் மலைப்பாக இருந்ததன! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete