About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, January 25, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-11 of 16 [61-70]என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 

அழகிய மலர்களும் ....
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
 அன்புக்கரங்களும் ....

 61. திரு. ரியாஸ் அஹமத் அவர்கள் 

{ 08.01.2013 }

சூரியனுக்கு எதுக்கு டார்ச் லைட் ?


இன்றைய தலைப்பு ஐயாவுக்கு மிக மிக பொருத்தம். பல்சுவை வித்தகர் இவர். சமையல் குறிப்பு எழுதினால் கூட அதில் தனித்துவம் இருக்கும்.


இது 4 பகுதிகளாக வெளியான காதல் கதை. 
கற்பனைக்கும் நிஜத்திற்கும் ஒரு கல்யாணமே 
நடத்தி இருந்தார் எங்கள் அன்பு ஐயா... 
விருந்துக்கு இன்னும் கிளம்பலையா ....

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:மறக்க மனம் கூடுதில்லையே

 
 
 

  

 
62. ரியாஸ் அஹமத் அவர்கள் 


{ 10/1/2013  }இன்று இந்த பக்கத்தில் கண்டு ரசித்த ஓவியங்கள் 
அனைத்தையும் வரைந்தது நம்ம அன்பு ஐயா வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள். 
அவரின் ஓவியங்களை அனுமதியின்றி 
உரிமையுடன் பகிர்ந்து பெருமை கொள்கிறேன்.  
நன்றி ஐயா !
 

  திருமதி 


மனோ சாமிநாதன் 


அவர்கள் 


[19.01.2013]


வைரம் போன்று 

மின்னும் பதிவர்கள் ....!!!


நகைச்சுவையாய் எழுதுவதில் முத்திரை பதிப்பவர் இவர். ஆனால் சமையலைப்பற்றிய இவரது பதிவுகள் மற்ற இவரது பதிவுகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும். 

ஏதோ இரண்டு வரிகள் சிறப்பாக எழுதினால் போதும் என்றில்லாமல் வரிக்கு வரி ரசித்து மற்றவர்களுக்கு பின்னூட்டம் போடுவதிலும் பதிவர்களை உற்சாகப்படுத்துவதிலும் இவருக்கு நிகர் இவரே! 

சமீபத்திய பதிவான அடையின் ருசி இன்னும் நாக்கிலிருந்தும் மனதிலிருந்தும் போகவில்லை! 


பிற அழுத்தங்கள் காரணமாக சமீப காலமாக இவர் பதிவுகள் போடுவதில்லை. அந்த மோன நிலையை விடுத்து, மாதம் இரு பதிவுகளாகவாவது போட வேண்டுமென்று நான் இங்கே சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.


 

64. http://blogintamil.blogspot.in/2013/02/1.htmlதிருச்சி 


திருமழபாடி 


திரு.  தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்


{ 18.02.2013 }

அனைவருக்கும் வணக்கம்! கல்லூரி ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவில்தான் நான் இருந்தேன்.  ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாக கிடைத்த வேலையை விட்டுவிடக் கூடாது என்பதற்காக வங்கிப் பணியில் சேர்ந்தேன். இப்போது வலைச்சரம் ஆசிரியர் பணி எனது கனவை நிறைவு செய்துள்ளது. வலைச்சரத்தின் ஒருவார கால ஆசிரியர் பணி தந்த வலைச்சரம் அன்பின் சீனா” அவர்களுக்குமவலைச்சரம் பொறுப்புக் குழுவில் இருக்கும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும், 

எனக்காக பரிந்துரை செய்த திரு.  V G K
(வை.கோபால கிருஷ்ணன் ) அவர்களுக்கும் எனது நன்றி!


பதிவரின் + பதிவின் பெயர்

வை.கோபாலகிருஷ்ணன் 

என்னால் VGK என்று அன்புடன் அழைக்கப்படும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி வலைப்பதிவில் அறிமுகம் செய்வது என்பது “கொல்லர் தெருவில் ஊசி விற்பதுபோன்றது. 

திரு VGK அவர்களுக்கென்று ஒரு வாசகர்கள் பட்டாளமே இருக்கிறது. அவரும் சளைக்காமல் தனது வாசகர்களுக்காக அவர்களது பதிவில் சென்று ஊக்கமும் கருத்துரைகளும் மற்றும் தனது பதிவுகளில் பதிலும் தருகிறார். வாசகர்கள் இவருக்கு விருதுகள் தர, இவர் அந்த விருதுகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க ஒரே அமர்க்களம்தான். 


இந்த அளவுக்கு அவர் பதிவுலக ஹீரோவாக வலம் வருவதற்கு காரணம் அவர் பதிவுகளில் உள்ள நகைச்சுவையும் எளிமையான நடையும் மற்றும் எல்லா பதிவர்களிடமும் காட்டும் அன்பும்தான் என்று நினைக்கிறேன். நானே அவர் பதிவுகளில் கிறங்கி ’திருச்சியும் பதிவர் வை.கோபாலகிருஷ்ணனும்’  என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன். 

அவருடைய பதிவுகளில் எல்லாமே எனக்குப் பிடிக்கும். இருந்தாலும் எடுத்துக் காட்டாக சில பதிவுகள்.
”மறக்க மனம் கூடுதில்லையே!”

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

மறக்க மனம் கூடுதில்லையே


 
 ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா 

 


 

                   

 
 “ மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொடர் பதிவு) ”

 

 

 

 

 


  
தனிமரம் - திரு. தியாகராஜா சிவநேசன்


அவர்கள்{ 14.04.2013 }வாங்கோ படிக்கலாம் என்றால் இந்த வலைப்பதிவு 


எனக்கு ஏனோ ஓரே துள்ளல் காட்டுகின்றது. 


தொழில்களம் மூலம் படிக்கலாம். 


அம்மா வலைப்பதிவை இன்னும் திருத்தணும். 


இல்லை தனிமரம் கனணியை மாற்றவேண்டும்! ஹீ! 
அது கடந்தால் இந்த ஐயா ! 


கதை சமையல் எல்லாம் கலக்கும் தளம் வாங்கோ! 
நான் ஏறி வந்த 

ஏணி .. தோணி .. கோணி !

 ‘இந்த வருடத்தில் நான் - 2011’ 

[By வை. கோபாலகிருஷ்ணன்]

 


      திருமதி புவனா
அப்பாவி  தங்கமணி 


அவர்கள் 

{ 19.04.2013 }"அடியேயேயேயேயேயேயேயே... நல்லா வாய்ல வந்துருமாமா" என அனன்யா அங்காளபரமேஸ்வரி அவதாரம் எடுக்க....

"அயகிரி நந்தினி நந்தித மேதினி விஷ்ணு வினோதினி நந்தனுதே" என சமயோசிதமாய் பாடி சாமியை மலை ஏற்றினாள் அப்பாவி

கீதா மாமி : 
எனக்கென்னமோ திருச்சில ப்ளாக்கர் மீட் வெக்கறது தான் சரினு தோணுது. ஏன்னா இங்க கோபாலகிருஷ்ணன்ரிஷபன்ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, நம்ம ஆதிவெங்கட் இப்படி பிரபலமான நெறய ப்ளாக்கர்ஸ் இருக்காங்க

  
67. திருமதி கவிநயா அவர்கள். 

ஆன்மீகம் சம்பந்தமான தன் சொந்த அனுபவங்களையும், திருவிழாக்கள் பற்றிய கட்டுரைகளையும், ஸ்ரீ மஹா பெரியவா சம்பந்தமான கட்டுரைகளையும், வித்தியாசமான, வாசிக்கத் தூண்டும் தலைப்புகளுடன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருகிறார், வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.


நானும் என் அம்பாளும் - அதிசய நிகழ்வு

http://gopu1949.blogspot.in/2013/04/9.html
 

68. திருமதி ஆசியா உமர் அவர்கள் { 19.06.2013 }


இந்த எட்டுப் பகுதிகளும் விறுவிறுப்பு குறையாமல் தந்திருக்கிறார் கதாசிரியர். வாசித்து முடித்த பின்பு தான் நம்மால் வெளியேற முடியும். ஐயாவின் வலைப்பூவில் குவிந்து கிடக்கும் கதைகள், அனுபவங்கள் மத்தியில் நான் வாசித்து என் மனதைக்  கவர்ந்த நெடுங்கதை இது.படங்களுடன் கூடிய மேற்படி கதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

உடம்பெல்லாம் உப்புச்சீடை


 


  
திருமதி 


அம்பாள் அடியாள் அவர்கள் { 23.07.2013 } 

அதே பக்தி தரும் மற்றுமொரு முத்து .http://gopu1949.blogspot.ch/ 
வை .கோபாலகிருஷ்ணன் ஐயாவின் வலைத் தளம். 
இங்கே குறிப்பிட்டுச் சொல்லத் தேவை இல்லை. 
கண் பார்க்க மனம் நாடும் நற் கருத்து நிறைந்த இவரது தளம் .
புதிவர்கள் அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும் 
என்பதே எனது நோக்கம்.
தெய்வம் இருப்பது எங்கே ?.......உடனே ஆச்சார்யாள், 
“ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு காமாக்ஷியம்மன் கோயிலுக்குப் போ. ரெண்டு பேருமா சேந்து, ’எட்டு பவுன்ல ரெட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்…. நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு’ பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.

இப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ… ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாக்ஷி நடத்தி வெப்பா” என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரஹித்தார்.

நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாக்ஷி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே. அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாக்ஷி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.

உடனே மஹா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.

அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ, அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே” எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.


Further .... to read this Miracle Real Story Please Visit : 
                                                http://gopu1949.blogspot.ch/2013/04/11_24.html


‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’

 

 

 சிட்டுக்குருவி 

திரு ‘விமலன்’ அவர்கள். 
{ 13.09.2013 }


http://gopu1949.blogspot.in/2013/09/48.html

வை கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைத்தளத்திலிருந்து...


                                                        

உறுதியான சங்கற்பம் இருந்தால் காலம் 

கிடைக்காமல் போகாதுஅநாவசிய வம்பிலும்

நியூஸ்பேப்பர் விமர்சனத்திலும் செலவாகிற 

காலத்தை மட்டுப்படுத்தினால் நித்திய 

சிரேயஸைத் தருகிற 


தியானத்திற்கு


வேண்டிய அவகாசம் நிச்சயம்  கிடைக்கும்.தான் இன்னொருவரைக்காட்டிலும்

உயர்ந்தவன் என்று நினைக்கிறதே பாபம்”  என்று சாஸ்திரங்களில் 

சொல்லியிருக்கிறது

இவர்கள் அனைவருக்கும் 
என் இனிய அன்பு நன்றிகள். 
தொடரும்
நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்


வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம்: எட்டு நபர்கள்திருவாளர்கள்:


1) துரை செல்வராஜ் அவர்கள்


2) தளிர் சுரேஷ் அவர்கள்திருமதிகள்:


3) கீதா சாம்பசிவம் அவர்கள்


4) கோமதி அரசு அவர்கள்


5) ஆதி வெங்கட் அவர்கள்


6) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்


7) மஞ்சு பாஷிணி அவர்கள்


8)  [காணாமல் போன கனவுகள்] ராஜி அவர்கள் என்றும் அன்புடன் தங்கள்
 
[வை.கோபாலகிருஷ்ணன்]


23 comments:

 1. இணையம் துறந்து ஆன்மீகத்தேடல் முடிந்து இன்றுதான் நாடு இன்றுதான் பாரிஸ் வந்தேன் வந்ததும் உங்களின் மடல்கண்டு சந்தோஸம் ஐயா! தாங்கள் வலையில் பலருக்கு குரு போல அதே வழியில் என்னையும் அன்பிள் வழி நடத்தும் ஒருவர் என் பணிக்காலத்தில் அறிமுகம் செய்த என் பாக்கியம் அதையும் நன்றிகூறிய தங்களின் பெருந்தன்மைக்கு நன்றிகள். விரைவில் வலையில் சந்திப்போம்

  ReplyDelete
 2. மிகுந்த முயற்சி எடுத்து தொகுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். இன்றைய உங்கள் பதிவினைப் படித்தவுடன் அன்றைய வலைச்சரப் பொறுப்பேற்பதற்கு முன்னர் நீங்கள் எனக்குச் சொன்ன ஆலோசனைகள் கண் முன்னே வந்து நிற்கின்றன.

  மற்றும் உங்கள் வலைத்தளம் எனக்கு தற்செயலாக கூகிளில் அறிமுகமானது, உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஆர்வத்துடன் தொடர்ந்து படித்தது, முக்கியமாக நீங்கள் படித்த திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியைப் பற்றிய அனுபவங்கள் யாவும் சுகமான சிந்தனைகளாக மனத்திரையில் வந்து நிழலாடின.

  வலையில் எழுதிட உற்சாகம் தரும் பின்னூட்டங்களையும் மற்றும் நீங்கள் மற்றவர்களுக்கும் எனக்கும் தந்த விருதுகளை மறக்க முடியுமா? அந்த விருதுகள் பலருடைய தளங்களில் இன்றும் மிளிர்கின்றன.

  ReplyDelete
 4. உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
  அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
  பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. மனோ சாமிநாதன் January 25, 2015 at 7:32 AM

   வாங்கோ, வணக்கம்.

   //உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
   அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/ //

   மீண்டுமா !!!!! அன்பான தகவலுக்கு மிக்க நன்றி !

   அன்புடன் VGK

   Delete
 5. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

  இணைத்த படங்களை வீட்டில் ரசித்துக் கொண்டே இருந்தோம்...

  ReplyDelete
 6. பகிர்வுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா.
  என்னால் தொடர்ந்து நட்பு வலைத்தளங்கலுக்குகூட தற்சமயம்.செல்ல முடியவில்லை.தொடர்ந்து நெட்டில் இருந்து வந்தால் கைவலி,கழுத்து வலி.அதனால் சும்மா என் ப்ளாக், ஃபேஸ்புக் பேஜ் மட்டும் அப்ப வந்து செல்கிறேன்.
  மீண்டும் மனமார்ந்த நன்றி.மகிழ்ச்சி.

  ReplyDelete
 7. கலைஞான வித்தகர் ஐயா - தாங்கள்!..

  தங்களின் பதிவுகள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எல்லாவற்றுக்கும் முன்னோடியானவை.

  எனது பெயரையும் இங்கே நினைவு கூர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

  நாளைய பதிவுக்காக காத்திருக்கின்றேன்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
 8. பகிர்வுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா.
  என்னால் தொடர்ந்து நட்பு வலைத்தளங்கலுக்குகூட தற்சமயம்.செல்ல முடியவில்லை. ஃபேஸ்புக் பேஜ் மட்டும் அப்ப அப்ப வந்து செல்கிறேன். tq very much

  ReplyDelete
 9. ஒருவர் விடாமல் நினைவு வைத்திருந்து அறிமுகம் செய்வதில் சளைக்காமல் இருக்கிறீர்கள். இந்த மனோநிலை எல்லோருக்கும் வராது. எனக்கு உங்கள் "அடடா, அடை" பதிவு தான் முதலில் அறிமுகம் ஆனது. அதன் மூலமே உங்கள் எழுத்துக்களை அறிந்தேன். மீண்டும் மீண்டும் வாழ்த்துகள். வித்தியாசமான உங்கள் முயற்சி முழு வெற்றி அடைந்திருக்கிறது.

  ReplyDelete
 10. எங்களுக்கு நினைவூட்டி அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்று பாட வைத்து விட்டீர்கள்

  ReplyDelete
 11. நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா !சுவை மிகுந்த மாங்கனிச் சாற்றைத் தந்து மகிழ்வித்தீர்கள் .அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் சொந்தங்களே .

  ReplyDelete
 12. கோபு அண்ணா,

  மீண்டும் ஒரு முறை வலைச்சர ஆசிரியர் ஆகும் ஆசையை தூண்டி விட்டுவிட்டீர்கள். ஆனால் அதற்கு நான் நிறைய HOME WORK செய்ய வேண்டும்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
 13. மிக அழகான அறிமுகங்கள்... அதை மிக அழகாக தொகுத்தளித்த தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் கோபு சார்.

  ReplyDelete
 14. வலைச்சரத்தில் அறிமுகம் செய்தவர்களை நினைவுகூர்ந்து நன்றி பாராட்டுவது அதுவும் அத்தனை பேரையும் தொகுப்பது என்பது பெரும் சிரமம். அதை சவாலாக எடுத்து சிறப்பாக நன்றி கூறி வரும் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 15. அனைவருக்கும் வாழ்த்துகள் படங்கள் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு

  ReplyDelete
 16. வைரம் போல் மின்னிடும் வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:43 PM

   //வைரம் போல் மின்னிடும் வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்../

   வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

   Delete
 17. எப்பூடி இவ்ளோ பொறுமயா விசயங்க தொகுத்து போடுறீங்க. அதிக சுறு சுறுப்புதா போல.

  ReplyDelete
 18. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. வண்ண வண்ணப்பூக்கள் செய்த வலைச்-சர அறிமுகங்கள்...எண்ணம் நிறை(க்)கிறது..

  ReplyDelete
 20. அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete