என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 24 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-10 of 16 [51-60]

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் ....    














51. செல்வி. 


யுவராணி 



தமிழரசன் அவர்கள் 


{ 19.11.2012 }


http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_19.html





என் மீது நம்பிக்கை வைத்து பரிந்துரைத்து வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த திரு. வை.கோபாலகிருஷ்ணன்  ஐயா அவர்களுக்கும், வாய்ப்பளித்த திரு.சீனா ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

 

 


52. செல்வி.


யுவராணி 



தமிழரசன் அவர்கள் 


{ 25.11.2012 }


வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தது மட்டுமின்றி தினம் வலைச்சரம் வந்து என்னை ஊக்கப்படுத்தியும், சில சொந்த வேலை காரணமாக முடியாத நேரத்தில் கேட்டவுடன் நான் அறிமுகப்படுத்திய பதிவர்களின் அண்மைய பதிவினிற்கு சென்று தகவல் கொடுத்துதவிய,  
திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், 

இத்தகைய நான் எதிர்பார்க்காத வாய்ப்பினை எமக்களித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், அவ்வப்போது எனது பதிவுகளை சிரமம் பார்க்காமல் தமிழ்மணத்தில் இணைத்துக்கொடுத்த திரு.திண்டுக்கல் தனபாலன் அண்ணா அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்!

ஒரு சிறு சிறப்பு அறிமுகம்! அதை ஏற்றுக்கொள்ளும்படி அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
  1. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் - சிரித்து மகிழுங்கள்! - யார் முட்டாள்?
 





53.  திரு. ரிஷபன் 
ஸ்ரீநிவாஸன்  அவர்கள் 

{ 26.11.2012 }

http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_545.html



எனக்குக் கொஞ்சம் தயக்கம் தான். ஆனால் முன் மொழிந்த திரு. வை.கோ. என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.. என்மேல் நான் வைத்திருப்பதை விட அதிகம் !

திரு. வை.கோ.வின் பேரன்பிற்கு நன்றி.

திரு. சீனா ஸாருக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிப் போக முடியாது. கடைசி நாள் அவர் சொல்லப் போகும் வார்த்தைகளுக்கான டென்ஷன் கவுண்ட் டவுன் இப்போதே ஸ்டார்ட் எனக்குள்.










54. திரு. ரிஷபன் 
ஸ்ரீநிவாஸன்  அவர்கள் 

{ 28.11.2012 }

http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html




வை.கோவின் எந்தப் பதிவு என்று குறிப்பிட்டு சொல்வது....  அவரது திறமைக்கு அவர் எப்போதோ பத்திரிகைகளில் கொடி கட்டிப் பறந்திருக்க வேண்டும். உடம்பெல்லாம் உப்புச் சீடை அவரது மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.  


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

உடம்பெல்லாம் உப்புச்சீடை

   

 

இவரது எளிய, இனிய பழகும் தன்மையினால் பலர் இவரது அன்புக் கோட்டைக்குள் குடி புகுந்து விட்டார்கள். இவரது எழுத்துதிறன் எனக்கு எப்போதும் உற்சாகம் தரும். சோர்வு வந்தால் இவரை நினைத்தால் போதும்.. சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போகும்.  அவரது அன்பில் திளைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம்.



 


 

55.  காரஞ்சன் சேஷ் 
E S சேஷாத்ரி அவர்கள் 

 17.12.2012  




17-12-2012 முதல் 23-12-2012 வரை  வலைச்சர ஆசிரியர்பணிக்கு என்னை அழைத்து இந்த அரிய வாய்ப்பை நல்கிய சீனா ஐயாவுக்கும், என்மீது நம்பிக்கை வைத்துஎன்னைப் பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நெகிழ்வோடு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்


 


 

56. காரஞ்சன் சேஷ் 
E S சேஷாத்ரி அவர்கள்

 18.12.2012  


http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_23.html


1. தனக்கே உரித்தான பாணியில் கதையாகட்டும், நகைச்சுவையாகட்டும்  பகிர்வதில்  தனித்திறம் கொண்ட திரு வைகோ அவர்களின் வலைப்பூவில் நகைச்சுவையாக, சுவையான அடை செய்வது எப்படி? என விவரிக்கிறார். படித்து இன்புறுங்கள்! 


 



 




 

57. காரஞ்சன் சேஷ் 
E S சேஷாத்ரி அவர்கள் 

 17. 12. 2012 





என்னைப் பரிந்துரைத்த திரு வைகோ அவர்களுக்கும், அவரின் பரிந்துரையை ஏற்று எனக்கு வாய்ப்பளித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள்!

 







 



திருமதி. உஷா அன்பரசு அவர்கள்
வேலூர். 

{ 24.12.2012 }



வகுப்பில் ஆசிரியர் வர தாமதமானால்,  ஒரு மாணவரை அவர் வரும் வரை பார்த்து கொள்ள சொல்லியிருப்பார். அது போல் தான் நான் இன்று ஒரு மாணவியாக வலைச்சரத்தில் ஒரு வாரம் வரை ஆசிரியர் பொறுப்பை பார்த்து கொள்ள போகிறேன்.
இந்த மாணவியிடம் பொறுப்பை ஒப்படைக்க  தேர்வு செய்து பரிந்துரைத்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், நம்பி என்னிடம் ஒப்படைத்த அன்பின்.சீனா ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி!


 





திருமதி. உஷா அன்பரசு அவர்கள் 
வேலூர். 


{ 25.12.2012 }


1) இராஜராஜேஸ்வரி
      
      வலைத்தளம்: “மணிராஜ்” தினம் ஒரு பதிவுக்குக் குறையாமல் மிகச்சிறந்த படங்களுடன் ஆன்மிக விஷயங்களை அள்ளித்தரும் பதிவர் 705 நாட்களுக்குள் 768 பதிவுகளுக்கு மேல் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.
      இவரின் பெரும்பாலான பதிவுகளில்  நம் பதிவுலகின் பின்னூட்டப்புயலான வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் ஏராளமான கருத்துக்களை தாராளமாகக் காணமுடிகிறது.  ஏற்கனவே தங்கமாக ஜொலிக்கும் இந்தப் பதிவரின் பதிவுகள்,   வை.கோ ஐயாவின்  பல்வேறு கருத்துக்களால் வைரமாக ஜொலிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.

 4)   ரிஷபன்
         
  இவருக்கு அறிமுகமே தேவையில்லை. இவரை அறியாத பதிவர்களே யாரும் இருக்க முடியாது.

பொதுவாக நாம் படைப்புகளைத்தான் உருவாக்குவோம். ஆனால் திரு ரிஷபன் அவர்கள்  தன் பல படைப்புகளுடன் மட்டுமல்லாமல்பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளவர்" என தனது பதிவு ஒன்றில் திரு கோபாலகிருஷ்ணன் ஐயாஇவரை மிகவும் பாராட்டிப்பேசியுள்ளார். 

இவரின் ஒரு சில பதிவுகள்:

 




திருமதி. உஷா அன்பரசு அவர்கள் 
வேலூர். 

{ 30. 12. 2012 }

1)  வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக எழுதுவது ஒரு வரம். பதிவுலகில் நகைச்சுவைக்கு ஒரு இலக்கணமா இருப்பவர் நம்ம வை.கோபால கிருஷ்ணன் ஐயா அவர்கள். 


   


 




படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா ?

 

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

’எலி’ஸபத் டவர்ஸ்
 
 

 


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

வாய் விட்டுச் சிரித்தால்
 

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

அமுதைப்பொழியும் நிலவே

 

சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]
http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html

 

இவை ஒரு சாம்பிளுக்குதான்.  வை.கோ சார் வலைப்பக்கம் போனிங்கன்னா தாராளமாய் சிரிக்க ஏராளமாய் கொட்டி கிடக்கு!

  ***************

வை.கோபால கிருஷ்ணன் ஐயா, அன்பின் சீனா ஐயா உங்களுக்கு என் பணிவான வணக்கங்களும் , நன்றியும்!
  ***************

நேத்து ஒரு சர்ப்ரைஸ்னு சொன்னேன் அல்லவா அதுக்கு வர்றேன்!
  
 ஒரு நாள் கூட லீவ் எடுக்காம தொடர்ந்து வகுப்புக்கு வந்து சிறப்பித்த இவங்களுக்கு

 PUNCTUALITY  AWARD

1) வை.கோபாலகிருஷ்ணன்

 *****************

பின்னூட்டத்தில் போட்டி போட்டுக்கொண்டு 

பேசிய இவர்களுக்கு


சிறந்த விமர்சகர் அவார்டு


1) வை.கோபால கிருஷ்ணன்

2) ஜெயந்தி ரமணி



******************* 

 வை.கோ ஐயா, அன்பின் சீனா ஐயா! 

அவர்களுக்கு மீண்டும் மிகப்பெரிய நன்றி.



Thank you Usha Teacher !

All are requested 
to kindly go through the Comment Box of 
http://blogintamil.blogspot.in/2012/12/6.html

- Old Student .... Gopalakrishnan

 



 


இவர்கள் அனைவருக்கும் 
என் இனிய அன்பு நன்றிகள்.
தொடரும்





நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்

வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் : ஒன்பது நபர்கள்




1) திரு. ரியாஸ் அஹமது அவர்கள்


2) திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்


3) தனிமரம் திரு. தியாகராஜா சிவநேசன் அவர்கள்


4)  சிட்டுக்குருவி திரு. விமலன் அவர்கள்


5] திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்


6] திருமதி. அப்பாவி தங்கமணி அவர்கள்


7] திருமதி. கவிநயா அவர்கள்


8] திருமதி. ஆசியா உமர் அவர்கள்


9] திருமதி. அம்பாள் அடியாள் அவர்கள் 





என்றும் அன்புடன் தங்கள்
[வை.கோபாலகிருஷ்ணன்]

21 கருத்துகள்:

  1. தங்கள் உழைப்பிற்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. உஷா அன்பரசுவுக்கும், ரிஷபன் சாருக்கும் அறிமுகமே தேவையில்லை. அவர்களின் வலைச்சரப் பதிவுகளைப் படித்த நினைவு. மற்றவர்களுக்கும் என் வாழ்த்துகள். தொடர்ந்து சலிக்காமல் அறிமுகம் செய்து வரும் உங்களுக்கும் வாழ்த்துகள். மிக வித்தியாசமான முறையில் சிந்தித்துச் செயலாற்றி வருகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. இன்று தோட்டத்தில் பூத்த அழகான அருமையான மலர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பிரமிக்க வைப்பது உங்களின் வித்தியாசமான அணுகுமுறை தான்.. எப்படியெல்லாம் யோசித்து தொகுக்கிறீர்கள்.. ஹேட்ஸ் ஆஃப் டூ யூ ஸார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழி மொழிகிறேன். மிகவும் அருமை ஐயா. அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளும், உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும்.

      நீக்கு
  5. வாழ்க்கையின் ஓட்டத்தில் நம்மை சோர்வுறாமலும், சலிப்படையாமலும் வைத்திருப்பது அழகான எண்ணங்களே.. எழுத்தும் , வாசிப்பும் கூட இதில் அடங்கும். வை.கோ சார் பணி ஓய்விற்கு பிறகு எழுத்தின் மூலம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கி கொண்டு நேரங்களை இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் செலவிட்டு கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. தங்கள் பயணம் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்...

    மிக்க நன்றி சார்........

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வித்யாசமான சிந்தனை வியப்பளிக்கிறது! தங்களின் தோட்டத்து நறுமணமலர்களின் தொகுப்பு அருமை! நானும் இடம்பெற்றது என் பாக்யம்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  7. இந்தப்பதிவின் படங்களில் ஒருசில புதிய மாற்றங்கள் இப்போது செய்யப்பட்டுள்ளன. இது, இதுவரை பின்னூட்டமிட்ட மேற்படி ஏழு நபர்களின் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  8. தங்கள் தோட்டத்தில் பூத்த அழகு மலர்களைத் தொடுத்த அன்பான கைகளுக்கு தாங்கள் நன்றி கூறும் பாங்கு அருமை....

    பதிலளிநீக்கு
  9. அடடா நீண்ட நாட்களாகப் போகிறது போலிருக்கே இத்தொடர்... மிக அருமை... வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை வலைச்சரத்தில்.

    ஊசிக்குறிப்பு:
    படங்கள் பார்த்து, கோபு அண்ணன் இப்போ ஏதோ மொடலிங் கிளாஸ் ஆரம்பிச்சுட்டாரோ என நினைச்சுட்டேன் அவசரத்தில்:).

    பதிலளிநீக்கு
  10. இந்த பதிவினில் வந்துள்ள எல்லோரும் எனக்கு அறிமுகமான பதிவர்களே. அனைவருக்கும் வாழ்த்துக்கள். யுவராணி தமிழரசன் இப்போது வலைப்பதிவில் எழுதுவதை ஏனோ நிறுத்தி விட்டார்.

    அதிரா அவர்களின் பின் (ஊசிக்) குறிப்பு நகைச்சுவையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. மிக அழகான அருமையான தொகுப்பு. வலைச்சர ஆசிரியர் என்பதே ஒரு பெரிய அங்கீகாரம். அந்த அங்கீகாரத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த தனி ஆவர்த்தனம். மிக அருமை. பாராட்டுகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  12. ////சிறந்த விமர்சகர் அவார்டு


    1) வை.கோபால கிருஷ்ணன்

    2) ஜெயந்தி ரமணி////

    என்னை வெச்சு காமெடி, கீமெடி ஒண்ணும் பண்ணலயே.

    எழுத்துப் பணியை நிறுத்தியவர்களை எல்லாம் மீண்டும் எழுத வைக்கும் அருமையான தொகுப்பு ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ பதிவுகள்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. கலகலப்பான வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:46 PM

      //கலகலப்பான வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..//

      வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  15. நெறய பதிவர்கள அவங்க எளுத்துகள பாக்க நெனக்கேன் பொரவால போயிகிடுதேன். இப்பத்தக்கு ரொம்ப பிஸி ஐயாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் நிறைய பதிவுகள் படிக்க நினைப்பு இருக்கு. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  16. வாத்யாரே உங்களுக்கு பங்சுவாலிட்டி அவார்ட் அவ்வளவு பொருத்தமில்லை...'பிஃபோர் த டைம்' அவார்ட்தான் கனப்பொருத்தம் என்பேன் நான்.

    பதிலளிநீக்கு