என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 5 ஜனவரி, 2015

அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]

Model of the 
World's Tallest Building
"Burj Khalifa", Dubai
ஒரு மாத துபாய் சுற்றுலா சென்றுவிட்டு 
14.12.2014 திருச்சிக்குத் திரும்பினோம்.
 

24.12.2014 தனுர் மாத உத்திராட நக்ஷத்திரம்  
 வழக்கம்போல விடியற்காலம்
ஆற்றழகிய சிங்கப்பெருமாள் 
கோயிலுக்குப்போய் 
அர்ச்சனை செய்துவிட்டு 
வெண்பொங்கல் பிரஸாதத் தூக்கு சஹிதம் 
எங்கள் வீட்டினை அடைந்தோம்.

அன்று கூரியர் தபாலில் 
ஒரு மிகப்பெரிய பார்ஸல் வந்திருந்தது.

அதன் மேல் FROM ADDRESS இல் எழுதியிருந்த
பெண்மணியின் அழகான பெயர் :
 S. பரமேஸ்வரி ! 
இந்தப்பெயர் சற்றே எனக்குப் பரிச்சயம் இல்லாமல்
மிகவும் புதுமையாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.

பிறகு ஊர் பெயரைப்பார்த்ததும் 
அவர்களாகத்தான் இருக்கணும் என்று 
 உடனே என் நினைவுக்கு  வந்துவிட்டது. 

ஆவலுடன் அந்தப் பார்ஸலைப் 
பிரித்துப்பார்த்தேன் !
பார்த்ததும் பரவஸம் ஆனேன் !!


ஒரு பீங்கான் தேநீர் கோப்பையில் 
{ 3rd July 1972 and 3rd December 2014  }
ஆகிய 42 ஆண்டுகளின் மாற்றத்தை
மேலும் கீழுமாக ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்கள்அதே கோப்பையின் நடு பாகத்தில் எங்கள் குடும்ப
உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களைக்
காட்டி அசத்தியுள்ளார்கள்.
படத்தில் மேலேயுள்ளது : December 2009
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
படத்தில் கீழேயுள்ளது: 
Left: 2011 and Right: 2014

[10 மாதக் குட்டிப்பேரனைத்தவிர 
All the 11 out of 12 are Covered in the Cup]
{கோப்பைக்குள் அடங்காத குட்டிமுயல் }
குட்டிப்பயல்
DOB: 09.03.2014
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-03-03-third-prize-winner.html


நான் போட்டோ ஏதும் தனியாக அனுப்பாமலேயே
என் பதிவுகளிலிருந்தும் மெயில்களிலிருந்தும் 
அவர்களே எடுத்துக்கொண்டுள்ளார்கள்.

அதே தேநீர்க் கோப்பையின் மற்றொரு புறம்
என் சமீபத்திய துபாய் பயணத்தையும்
காட்டியுள்ளார்கள் !
{ AT DUBAI - NOVEMBER / DECEMBER 2014 } 

மொத்தத்தில் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும்
வெவ்வேறு இனிய நினைவலைகளையும்
ஒரு காலிக் கோப்பைக்குள் கொண்டுவந்து அதில் அன்பினை நிரம்பி வழியச்செய்துள்ளது
மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.

 அவர்களின் கைவேலையில் அட்டையில் 
செய்யப்பட்டுள்ள போட்டோ ஸ்டாண்ட் ஒன்றும் 
Back and Back ஆக இரண்டு  போட்டோக்களுடன் 
அனுப்பியுள்ளார்கள்.


அவர்களின் கைவேலைகளில் மேலும் சில நகைகள் 
[ மிகவும் கலையுணர்வு உள்ளவைகள் ]

-oooooOooooo- 

அன்புள்ளமும், என் மீது தனிப்பிரியமும் ,
ஆத்மார்த்தமான நட்பும், பாசமும் மட்டுமின்றி,
என்னை அவ்வப்போது ஸ்வாதீனமான உரிமையுடன்
கிண்டலும் கேலியும்கூட செய்துவரும் 
என் நலம்விரும்பியான 
பதிவர் ஒருவர் தான் 
இதனை அனுப்பியுள்ளார்கள்.

  


இந்தப் பதிவர் 20.06.2014 அன்று 
என் இல்லத்திற்கே நேரில்
திடீர் வருகை தந்து மகிழ்வித்தவர்கள்.


அவர்கள்தான்  நம்

 ’அன்புள்ள ஆச்சி ’ 


( மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் )
திருமதி thirumathi bs sridhar அவர்கள்

வலைத்தளம்: [1] http://aatchi.blogspot.in/ ஆச்சி ஆச்சி

[2] http://maniamma.blogspot.in/ அம்மாவின் நினைவில்
  

 ஆச்சியின் பேரன்புக்கு 
என் மனம் நிறைந்த 
இனிய நன்றிகள். ஆ ச் சி :)


ஆச்சி அனுப்பி வைத்துள்ள 
அழகான  ஆபரணங்களைக் 
கழுத்திலும் காதுகளிலும்
ஏற்றிக்கொண்டுள்ள 
என் பெரிய அக்காவின் 
பேத்திகளில் சிலர். 
மேலும் கீழும் உள்ள இருவரும் 
இரட்டையர்கள் [TWINS] 
 


 

இவற்றை முக்கியமானதொரு நாளான
இன்று [05.01.2015] வெளியிடுவதில்
மேலும் எனக்கு மகிழ்ச்சியே.  

 


என்றும் அன்புடன்  தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்56 கருத்துகள்:

 1. ஆச்சி அவர்களின் அன்பும் கைவண்ணமும் தங்கள் குடும்பத்தினரைக் கோப்பைக்குள் அடக்கிய விதமும் மிகவும் பாராட்டுக்குரியது. அவரது அன்புள்ளத்தைக் கவர்ந்துள்ள தாங்களும் பாராட்டுக்குரியவரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழனி. கந்தசாமி January 5, 2015 at 2:44 AM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

   //ஆச்சி அவர்களின் அன்பும் கைவண்ணமும் தங்கள் குடும்பத்தினரைக் கோப்பைக்குள் அடக்கிய விதமும் மிகவும் பாராட்டுக்குரியது. அவரது அன்புள்ளத்தைக் கவர்ந்துள்ள தாங்களும் பாராட்டுக்குரியவரே.//

   என் துபாய்ப்பயணக்கட்டுரைகளின் அனைத்து இருபது பகுதிகளுக்கும் தாங்கள் அன்புடன் வருகை தந்து அழகாகப் பல கருத்துக்கள் சொல்லி, அசத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.

   நமது இனிய சந்திப்பினிலும் இதே அன்பினை நாம் பகிர்ந்துகொண்டது என் நினைவுகளில் பசுமையாக உள்ளது ஐயா. இணைப்பு இதோ:

   http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html

   ” சந்தித்த வேளையில் .... சிந்திக்கவே இல்லை .... தந்துவிட்டேன் என்னை! ” :)

   அன்புடன் VGK

   நீக்கு
 2. காலையில் உங்கள் பதிவைத் திறந்ததும் ஸ்ரீ ஆற்றழகிய சிங்க பெருமாள் கோயில் கோபுர தரிசனம். இந்த கோயிலுக்கு நான் மாணவனாக இருந்த காலத்தில் சென்று இருக்கிறேன். ஏற்கனவே இந்த கோயிலைப் பற்றிய உங்கள் பதிவினைப் படித்து இருக்கிறேன். இங்கே இந்த கோயிலின் முகப்பைப் பார்த்தவுடன் மறுபடியும் போக வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது.

  “அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை” - ஆச்சி கொடுத்த பரிசுக்கு கவிதை நடையினில் ஒரு அருமையான தலைப்பு. தங்களைக் காணவேண்டும் என்பதற்காகவே, மதுரைக்குச் செல்லும் வழியில் தங்கள் வீட்டிற்கு வந்து தங்களைச் சந்திக்க வந்தது பற்றிய பதிவினை மீண்டும் படித்தேன். அன்பு பரிசினை அனுப்பி வைத்த சகோதரி பரமேஸ்வரிக்கு வாழ்த்துக்கள்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ January 5, 2015 at 6:01 AM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //காலையில் உங்கள் பதிவைத் திறந்ததும் ஸ்ரீ ஆற்றழகிய சிங்க பெருமாள் கோயில் கோபுர தரிசனம். இந்த கோயிலுக்கு நான் மாணவனாக இருந்த காலத்தில் சென்று இருக்கிறேன். ஏற்கனவே இந்த கோயிலைப் பற்றிய உங்கள் பதிவினைப் படித்து இருக்கிறேன். இங்கே இந்த கோயிலின் முகப்பைப் பார்த்தவுடன் மறுபடியும் போக வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது.//

   மிகவும் சந்தோஷம். கோயிலுக்குப் போய் வாருங்கள் ஐயா.

   நரசிம்ஹ பெருமாளுக்கு, உடனே உதித்த உத்தமன்’ என்று
   ஓர் பெயர் உண்டு. அதாவது பக்தனாகிய பிரஹலாதன்
   நினைத்த மாத்திரத்தில் உடனே உதித்தவர் .... உடனே
   ஆஜரானவர்.

   அதே போன்றே இன்று தாங்களும் எனக்கு. நான் நினைத்த
   மாத்திரத்தில் தங்களை உடனுக்குடன் நேரில் சந்திக்க
   முடிகிறது. அதனால் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

   //“அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை” - ஆச்சி கொடுத்த பரிசுக்கு கவிதை நடையினில் ஒரு அருமையான தலைப்பு. //

   தலைப்பினை ரசித்துப் பாராட்டியுள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி.

   //தங்களைக் காணவேண்டும் என்பதற்காகவே, மதுரைக்குச் செல்லும் வழியில் தங்கள் வீட்டிற்கு வந்து தங்களைச் சந்திக்க வந்தது பற்றிய பதிவினை மீண்டும் படித்தேன்//

   ஆம் ஐயா, எனக்கே அவர்களின் அந்த அன்பான செயல்
   மிகுந்த வியப்பளித்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது.

   //அன்பு பரிசினை அனுப்பி வைத்த சகோதரி பரமேஸ்வரிக்கு வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
   அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் மிக்க நன்றி, ஐயா.

   தங்களின் அன்பினை மறக்க முடியாத பதிவுகளை
   மீண்டும் நினைவு படுத்திக்கொண்டேன்.

   http://tthamizhelango.blogspot.com/2014/11/vgk.html

   http://tthamizhelango.blogspot.com/2014/09/blog-post_30.html

   http://tthamizhelango.blogspot.com/2014/08/blog-post_15.html

   http://tthamizhelango.blogspot.com/2013/10/blog-post_7.html

   http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_10.html

   http://tthamizhelango.blogspot.com/2013/07/gmb.html

   http://tthamizhelango.blogspot.com/2013/02/vgk.html

   http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html

   http://tthamizhelango.blogspot.com/2012/08/fabulous-blog-ribbon-award.html

   http://tthamizhelango.blogspot.com/2012/08/liebstar-award.html

   http://tthamizhelango.blogspot.com/2012/08/sunshine-blogger-award.html

   அன்புடன் VGK
   நீக்கு
 3. காலி கோப்பை எப்படி நிரம்பி வழியும்?
  தலைப்பை பார்த்ததும் ஆச்சரியம்.
  பதிவை பார்த்ததும் தான் தெரிந்தது எப்படி நிரம்பியது என்ன்று.
  மிக நல்ல அன்பு பரிசு.
  கொடுத்தவருக்கும் மகிழ்ச்சி பெறுபவருக்கும் மகிழ்ச்சி.
  பதிவை படித்த எங்களுக்கும் மகிழ்ச்சி.
  விஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. viji January 5, 2015 at 6:26 AM

   வாங்கோ விஜி, வணக்கம்மா.

   //காலி கோப்பை எப்படி நிரம்பி வழியும்?//

   அதானே ! :)

   வீஜீ என்கிற காலிக்கோப்பையில் ஆச்சி, விஜி
   போன்றவர்களின் அன்பினை நிரம்பி மட்டுமே
   அதனை வழிய வைக்க முடியும்.

   //தலைப்பை பார்த்ததும் ஆச்சரியம்.//

   ஹைய்யோ ! எனக்கும் இப்போது ஒரு ஆச்சர்யம். வெளியூர் பயணத்தில் உள்ளீர்கள். ஏற்கனவே துபாய்த் தொடரின் பகுதி-15, 17, 18, 19 ஆகியவற்றிற்கு கருத்தளிக்கவில்லை.

   ஆனால் இந்த [அன்புப்] பதிவுக்கு மட்டும் அவசரமாக வருகை தந்துள்ளீர்கள். சபாஷ் ! தங்கள் அன்புக்கு நன்றி, விஜி.

   //பதிவை பார்த்ததும் தான் தெரிந்தது எப்படி நிரம்பியது
   என்று. மிக நல்ல அன்பு பரிசு.//

   ஆமாம் விஜி. மிக நல்ல அன்புப் பரிசே தான்.

   //கொடுத்தவருக்கும் மகிழ்ச்சி, பெறுபவருக்கும் மகிழ்ச்சி.
   பதிவை படித்த எங்களுக்கும் மகிழ்ச்சி. - விஜி//

   அச்சா, பஹூத் அச்சா ! வரவர இப்போதெல்லாம் சூப்பராக மிகவும் சுவையாக தமிழில் கோர்வையாக எழுதுகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, விஜி. :)

   பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

   பிரியமுள்ள வீ....ஜீ

   நீக்கு
 4. ஆம் அன்பு நிரம்பி வழியும்
  அழகிய அற்புதக் கோப்பைதான்
  (காலிக் கோப்பை என்கிற சொல்லைத் தவிர்த்திருக்கலாமோ
  எனத் தோன்றியது )
  அனபினை அற்புதமாக வெளிப்படுத்தத் தெரிந்த
  ஸ்ரீதர் தம்பதிகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ramani S January 5, 2015 at 6:38 AM

   வாங்கோ, ரமணி சார், வணக்கம்.

   //ஆம் அன்பு நிரம்பி வழியும் அழகிய அற்புதக்
   கோப்பைதான்//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //(காலிக் கோப்பை என்கிற சொல்லைத்
   தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றியது )//

   அது என்னை நானே சொல்லிக்கொண்டது என்று
   வைத்துக்கொள்ளுங்கள், ப்ளீஸ்.

   அதில் ஆச்சி கையால் சூடாக சுவையாக ஏலக்காய் போட்ட
   தேநீர் ஊற்றி, அனுப்பியிருக்கலாம். :) அதுபோல அனுப்பி
   இருந்தால் நானும் இதுபோல தலைப்பு வைத்திருக்க
   மாட்டேன். :)

   //அன்பினை அற்புதமாக வெளிப்படுத்தத் தெரிந்த
   ஸ்ரீதர் தம்பதிகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//

   ஸ்ரீதர் தம்பதியினர் சார்பிலும் என் சார்பிலும் தங்களின்
   அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க
   நன்றி, சார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 5. வாழ்த்துக்கள் ஐயா...

  ஆச்சி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன் January 5, 2015 at 7:05 AM

   வாங்கோ My Dear DD Sir, வணக்கம்.

   //வாழ்த்துக்கள் ஐயா... ஆச்சி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...//

   அன்புள்ளம் ஆச்சி அவர்கள் சார்பிலும் என் சார்பிலும், தங்கள் வருகை + வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி Sir.

   அன்புடன் VGK

   நீக்கு
 6. எனது அருமை நண்பரும் திருச்சி பதிவருமான திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் நியாயமானதோர் சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் விதமாக மேலும் ஒருசில படங்களை இந்தப்பதிவின் இறுதிப்பகுதியில் இப்போது புதிதாகச் சேர்த்துள்ளேன்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 7. 'ஒரு கோப்பையிலேயே அன்பின் குடியிறுப்பு' தகவலும் படங்களும் பார்த்து அசந்து போய் இருக்கிறேன். எவ்வளவு ஆர்வமும் பிரியமும் இருந்தால் அந்த சகோதரி இவ்வளவு மெனக்கெட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கையில்
  இந்தப் பதிவுலகில் நாம் சம்பாதித்து மிஞ்சப் போகும் விலைமதிப்பில்லாதது இந்த அன்பு ஒன்று தான் என்று உணர்கிறேன்.

  நீங்கள் ஒரு வருட அயராத உழைப்போடு நடத்திக் காட்டிய விமரிசனப் போட்டிக்கு இறைவனே மனம் மகிழ்ந்து பாராட்டிய கெளரவமாக இதை நினைக்கிறேன். ஆச்சி அவர்கள் மூலமாக அது நடந்திருக்கிறது.

  அன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது. அந்த அன்பைப் புரிந்து கொண்டு மரியாதை செலுத்தவும் கூட அந்த அன்பினால் தான் முடியும். அதற்கு முழுத் தகுதி உடைய அன்புச் சுரங்கம் நீங்கள்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி January 5, 2015 at 12:21 PM

   வாங்கோ, நமஸ்காரங்கள் + வணக்கம்.

   //'ஒரு கோப்பையிலேயே அன்பின் குடியிருப்பு' தகவலும் படங்களும் பார்த்து அசந்து போய் இருக்கிறேன். எவ்வளவு ஆர்வமும் பிரியமும் இருந்தால் அந்த சகோதரி இவ்வளவு மெனக்கெட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கையில் இந்தப் பதிவுலகில் நாம் சம்பாதித்து மிஞ்சப் போகும் விலைமதிப்பில்லாதது இந்த அன்பு ஒன்று தான் என்று உணர்கிறேன்.//

   தாங்களே இங்கு அன்புடன் வருகை தந்து அழகாகக் கருத்தளிப்பதும் விலைமதிப்பில்லாதது என்பதை நான் உணர்கிறேன்.

   மிக்க மகிழ்ச்சி ! :)

   //நீங்கள் ஒரு வருட அயராத உழைப்போடு நடத்திக் காட்டிய விமரிசனப் போட்டிக்கு இறைவனே மனம் மகிழ்ந்து பாராட்டிய கெளரவமாக இதை நினைக்கிறேன். ஆச்சி அவர்கள் மூலமாக அது நடந்திருக்கிறது.//

   இதனை, அந்த என் போட்டிகளுக்கு நடுவர் பொறுப்பு வகித்த தாங்கள் குறிப்பிட்டுச்சொல்வது எனக்கும் ஓர்
   பெருமிதமாகவும் கெளரவமாகவும் உள்ளது.

   எல்லாம் கடவுள் செயலே ! தாங்கள் சொல்வது போல
   ஆச்சியை இதற்கு ஓர் கருவியாக்கி அவன் இதனை
   இவ்வாறு நிகழ்த்தியிருக்கலாம்.

   //அன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது. அந்த அன்பைப் புரிந்து கொண்டு மரியாதை செலுத்தவும் கூட அந்த அன்பினால் தான் முடியும்.//

   வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். :) மிக்க மகிழ்ச்சி.

   //அதற்கு முழுத் தகுதி உடைய அன்புச் சுரங்கம் நீங்கள்.
   வாழ்த்துகள். //

   தன்யனானேன்.

   தங்களின் பேரன்புக்கும் வாழ்த்துகளுக்கும்
   என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு [VGK]

   நீக்கு
 8. அன்பு ஆறு போல் பெருகி வழியும் ஆச்சியின் கோப்பையை காலிக் கோப்பை என்று சொல்லிவிட்டீர்களே! தங்கள் மேலுள்ள அன்பை மிக அழகாக வெளிப் படுத்தியுள்ளார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Radha Balu January 5, 2015 at 12:47 PM

   அன்புள்ள ராதாபாலு மேடம், வாங்கோ, வணக்கம்.

   //ஆச்சியின் கோப்பையை காலிக் கோப்பை என்று
   சொல்லிவிட்டீர்களே!//

   கோப்பை எனக்கு அனுப்பப்பட்டு விட்டதாலும், அதில் என்
   படங்கள் காட்டப்பட்டுள்ளதாலும், அது என்னைப்போலவே
   [EMPTY VESSEL] காலிக்கோப்பை என மிகச் சாதாரணமானவனான என்னால் சித்தரிக்கப்பட்டுள்ளது :)

   அது இப்போது ஆச்சியின் கோப்பை அல்ல அல்லவா !

   அதில் நிரம்பி வழியும் அன்பு மட்டுமே ஆச்சி உடையதாக்கும். :)

   //அன்பு ஆறு போல் பெருகி வழியும் ஆச்சியின்
   கோப்பையை ....... //

   தங்களின் அன்பைவிடவா ! :)

   அன்பினில் தாங்களும் ஆச்சியும் ஒருவருக்கொருவர்
   சளைத்தவர்களே இல்லையே ! :)

   // தங்கள் மேலுள்ள அன்பை மிக அழகாக வெளிப்
   படுத்தியுள்ளார்கள்.//

   தங்களின் அன்பு இதோ இந்தப்பதிவின் இறுதியில்
   என்னால் கொஞ்சூண்டு மட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது ! :) http://gopu1949.blogspot.in/2014/10/7.html

   தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் கோப்பை [மனம்] நிறைந்த அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 9. sorry for the late coming sir

  அன்பு மிகுந்த பெருந்தன்மை மிக்கவர் வைகோ சார் அவர்கள்.பரிசை பதிவினில் தெரிவித்து என்னையும் ஆச்சர்யப்பட வைக்கின்றார் .தங்கள் எண்ணங்களை தெரிவித்துள்ள பதிவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

  பெரும்பாலான பதிவர்களை கவர்ந்தவர் எழுத ஊக்கம் தருபவர் நான் பதிவுகள் எழுதிய வருடங்களில் தவறாமல் வருகை தந்து கருத்திட்டு நிறை குறைகளை தெரிவிப்பார் .

  உலகத்தின் எல்லா இடங்களிலும் இவருக்கு நட்பு இருப்பதும் அவர் நல்ல முறயில் maintain பன்வதும் வியப்பு

  மீண்டும் வருவேன் ........

  பதிலளிநீக்கு
 10. ஆச்சி அவர்களின் அன்பு நிறைந்து வழியும் கோப்பையில் தங்களின் படங்கள்... அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. -'பரிவை' சே.குமார் January 5, 2015 at 8:20 PM

   வணக்கம்.

   //ஆச்சி அவர்களின் அன்பு நிறைந்து வழியும் கோப்பையில் தங்களின் படங்கள்... அருமை ஐயா...//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - VGK

   நீக்கு
 11. ஒரு கோப்பையில் உங்கள் குடும்பத்தையே ஒட்டிவைத்து அழகாக கைவண்ணம் காட்டியுள்ளார்கள்! அழகான கைவினை! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 5/01/2011 அன்றுதான் ஆச்சி ஆச்சி வலைதளத்தில் முதல் பதிவிட்டேன் .(naan kadantha 2 varudangalaaka blog eluthavillai )இந்த வருடம் அதே நாளில் சார் இப்படியொரு பரிசு தந்திருக்கின்றார் .

   ஓய்வு எடுத்து மீண்டும் எழுத்துப் பணியை தொடருங்கள் சார்

   நீக்கு
 12. ஹாஆ :) ..அழகான அன்பு நிரம்பிய கோப்பைகள் ..

  பதிலளிநீக்கு
 13. //மீண்டும் எழுத்துப் பணியை தொடருங்கள்// madam this is for you also :)

  பதிலளிநீக்கு
 14. கோப்பைக்குள் அடங்காத குட்டி முயல்....... வர்ணனை அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. gsanthanam1610 January 6, 2015 at 9:24 AM

   அன்புள்ள சந்தானம், வாப்பா, வணக்கம்.

   //கோப்பைக்குள் அடங்காத குட்டி முயல்....... வர்ணனை அருமை//

   நம் குடும்பத்தாரால் மட்டுமே இந்த இனிய வரிகளை ரசிக்க முடியும். இதை .... இதை .... இதைத்தான் நானும் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன்.

   மிக்க மகிழ்ச்சி சந்தானம். வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

   பிரியமுள்ள கோபு மாமா

   நீக்கு
 15. கோபு அண்ணா வணக்கம்

  காலிக் கோப்பையா?
  இல்லை இல்லை. அதில் SYMBOLIC ஆக உங்கள் அன்பும், ஆச்சியின் அன்பும் போட்டி போட்டுக் கொண்டு நிரம்பி வழிகிறதே.//

  //கோப்பைக்குள் அடங்காத குட்டி முயல்...//
  அது எப்படி அடங்கும். அது தான் குட்டி முயலாயிற்றே. பரமார்த்த குரு கதையில் வரும் முயல் போல.

  மொத்தத்தில் உங்கள் துபாய் பயணம் உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக அமைந்து விட்டது.

  பதிவர் கொடுத்த பரிசுகளை உடனே அக்கா பேத்திகளுக்குக் கொடுத்து, அவற்றை அணிய வைத்து, புகைப்படங்களும் எடுத்துப் போட்டு .............. இந்த அன்பு உள்ளம் தான் அந்தக் கோப்பை நிரம்பி வழியக் காரணம்.

  அன்புடனும்,
  நெகிழ்வுடனும்

  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya January 6, 2015 at 6:58 PM

   //கோபு அண்ணா வணக்கம்//

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா ! என் துபாய்ப்பதிவுகள்
   முழுவதும் 20 out of 20 வருகை தந்துள்ளது, என்னுடன்
   கூடவே துபாய்க்கு தாங்களும் வருகை தந்ததுபோல
   என் மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. :)

   //காலிக் கோப்பையா? இல்லை இல்லை. அதில் SYMBOLIC ஆக உங்கள் அன்பும், ஆச்சியின் அன்பும் போட்டி போட்டுக் கொண்டு நிரம்பி வழிகிறதே.//

   நம் அன்பைப்போலவே தான் ஆச்சியின் அன்பும். அது
   போட்டி போட்டிக்கொண்டு நிரம்பி வழியத்தான் செய்யும். :)
   அதில் ஆச்சர்யமே ஒன்றும் இல்லை, ஜெ.

   ஜெயா, இந்த ஆச்சியும் தங்களைப்போலவே மிகவும்
   நகைச்சுவை உணர்வுகள் மிக்கவர். என்னை ஸ்வாதீனமாக
   உரிமையுடன் கேலி + கிண்டல்கள் செய்வதிலும் உங்களுக்கு சளைத்தவர்களே இல்லை. அதுவே நம் நட்புக்கு மிகச்சிறந்ததோர் பாலமாக அமைந்துபோகிறது. :)

   நம் அன்பினை நினைத்துப்பார்த்து மகிழும் சில பதிவுகள்
   இதோ கீழே பட்டியலிட்டுள்ளேன்:

   http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html

   http://gopu1949.blogspot.in/2014/02/blog-post.html

   http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html

   http://gopu1949.blogspot.in/2014/10/9.html இந்தப்பதிவினை நீங்களே இன்னும் பார்த்ததாகத் தெரியவில்லை ‘ஜெ’ - நினைவு இருக்கட்டும். உடனே அந்தப்பதிவுக்கு வாங்கோ.

   **கோப்பைக்குள் அடங்காத குட்டி முயல்.**
   //அது எப்படி அடங்கும். அது தான் குட்டி முயலாயிற்றே. பரமார்த்த குரு கதையில் வரும் முயல் போல.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அதே அதே !! :)))))

   //மொத்தத்தில் உங்கள் துபாய் பயணம் உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக அமைந்து விட்டது. //

   மிகவும் சந்தோஷம், ஜெயா. :)

   //பதிவர் கொடுத்த பரிசுகளை உடனே அக்கா பேத்திகளுக்குக் கொடுத்து, அவற்றை அணிய வைத்து, புகைப்படங்களும் எடுத்துப் போட்டு .............. இந்த அன்பு உள்ளம் தான் அந்தக் கோப்பை நிரம்பி வழியக் காரணம்.//

   எங்காத்தில் இங்கு தற்சமயம் பெண் குழந்தைகள் யாரும்
   இல்லையே ’ஜெ’ ! :) அதனாலும், என் பெரிய அக்கா
   அவர்களை, ஆச்சி என் இல்லத்திற்கு வந்திருந்தபோது
   நேரில் சந்தித்துப் பேசியுள்ளதாலும், நான் இது
   போலச்செய்தேன். இதனால் இரு தரப்பினருக்கும்
   மகிழ்ச்சியே. எனக்கும் மகிழ்ச்சியே. எப்படியோ கோப்பை
   அன்புள்ளங்களால் நிரம்பி வழிந்த வரை சந்தோஷமே :)

   //அன்புடனும், நெகிழ்வுடனும் ஜெயந்தி ரமணி//

   மிக்க நன்றி, ஜெயா. வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 16. அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை .............wow super...
  வாழ்த்துக்கள் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Anuradha Prem January 7, 2015 at 11:37 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை .............wow super...
   வாழ்த்துக்கள் ..//

   தங்களின் அன்பான வருகைக்கும் ’வாவ் .... சூப்பர்’ ஆன வாழ்த்துகளுக்கும் நன்றி. - VGK

   நீக்கு
 17. ஆச்சியின் அன்புப்பரிசு மிகவும் அழகாக உள்ளது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ADHI VENKAT January 7, 2015 at 8:37 PM
   //ஆச்சியின் அன்புப்பரிசு மிகவும் அழகாக உள்ளது. பாராட்டுகள்.//

   வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கள் + பாராட்டுக்களுக்கும் என் சார்பிலும், ஆச்சி சார்பிலும் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   நீக்கு
 18. ஆஹா.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் தேனீர் கப்புக்கு வாழ்த்துக்கள். ஆச்சி நல்ல ஐடியாவாக கப் க்பரிசளித்திருக்கிறார் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira January 9, 2015 at 1:24 AM

   வாங்கோ அதிரா ! வணக்கம்.

   //ஆஹா.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் தேனீர் கப்புக்கு வாழ்த்துக்கள். ஆச்சி நல்ல ஐடியாவாக கப் பரிசளித்திருக்கிறார் சூப்பர்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் சார்பிலும், ஆச்சி சார்பிலும் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு அண்ணன்

   நீக்கு
 19. அன்புப் பரிசுக்கும் அதை அளித்தவருக்கும் வாழ்த்துகள். பெற்றுக்கொண்டு அதைப் பாராட்டிய உங்கள் பெரிய மனதுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam January 11, 2015 at 1:45 PM

   //அன்புப் பரிசுக்கும் அதை அளித்தவருக்கும் வாழ்த்துகள். பெற்றுக்கொண்டு அதைப் பாராட்டிய உங்கள் பெரிய மனதுக்கும் வாழ்த்துகள்.//

   வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்கள் + பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் சார்பிலும், ஆச்சி சார்பிலும் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 20. அந்த கோப்பை அன்பால் நிரம்பி உள்ளது.
  அழகான கோப்பை. அழகான கைவேலையில் செய்த ஆபரணங்கள்.
  வாழ்த்துக்கள் ஆச்சிக்கு.
  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
  நான் 5ம் தேதி ஆன்மீக சுற்றுலா சென்று விட்டேன். 10 தேதிதான் வந்தேன். அதனால் பதிவை இப்போது தான் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு January 14, 2015 at 12:07 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அந்த கோப்பை அன்பால் நிரம்பி உள்ளது.
   அழகான கோப்பை. அழகான கைவேலையில் செய்த ஆபரணங்கள். வாழ்த்துக்கள் ஆச்சிக்கு. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   மிகவும் சந்தோஷம். ஆச்சியின் சார்பிலும் என் சார்பிலும் தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   //நான் 5ம் தேதி ஆன்மீக சுற்றுலா சென்று விட்டேன். 10 தேதிதான் வந்தேன். அதனால் பதிவை இப்போது தான் பார்த்தேன்.//

   அதனால் பரவாயில்லை. எனக்கும் முன்புபோல கணினி பக்கம் அதிகமாக வர முடியாதபடி இங்கு அடுத்தடுத்துப் பல்வேறு சோதனைகளாகத்தான் உள்ளன. பிறர் பதிவுகள் பக்கமும் அதிகமாக முன்புபோலெல்லாம் என்னால் செல்ல இயலவில்லை.

   ஏற்கனவே COMPOSE செய்து தயாராக வைத்துள்ள ஓர் தொடர் பதிவினை மட்டும் நாளை முதல் தினமும் ஒரு பகுதியாக அடுத்த 16 நாட்களுக்கு வெளியிட உள்ளேன்.
   செளகர்யப்பட்டபோது முடிந்தால் பாருங்கோ / வாங்கோ.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
 21. கோப்பை அன்பால் நிறைந்து இருக்கிறது. உங்கள் குடும்ப படம் அதில் இடம்பெற்று இருப்பது பார்த்து மகிழ்ச்சி.
  ஆச்சியின் கைவண்ணத்தில் உருவாகிய நகைகள் அருமை, அழகு.
  10 மாதம் ஆன பேரனுக்கு வாழ்த்துக்கள், ஆச்சியின் அன்புக்கு வாழ்த்துக்கள்.
  உங்களுக்கு வாழ்த்துக்கள்.
  5ம் தேதியில் ஆன்மீக சுற்றுலா சென்று இருந்தேன்.
  10 தேதிதான் திரும்பி வந்தேன்.
  இப்போதுதான் பதிவை படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு January 14, 2015 at 12:11 PM

   வாங்கோ, மீண்டும் வருகைக்கு நன்றிகள்.

   //10 மாதம் ஆன பேரனுக்கு வாழ்த்துக்கள்//

   சந்தோஷம். மிகவும் சந்தோஷம். என் பேரனுக்கான தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   VGK

   நீக்கு
 22. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. -'பரிவை' சே.குமார் January 14, 2015 at 7:24 PM
   தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா.//

   தங்களின் மீண்டும் வருகைக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

   நீக்கு
 23. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்! தங்களின் புதிய பதிவுகளை விரைவில் முழுமையாகப் படித்து கருத்துரை இடுகிறேன்! பணிச்சுமை காரணமாக வலைப்பக்கம் வர இயலவில்லை! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Seshadri e.s. January 14, 2015 at 11:00 PM

   //தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களது உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்! //

   மிக்க நன்றி.

   //தங்களின் புதிய பதிவுகளை விரைவில் முழுமையாகப் படித்து கருத்துரை இடுகிறேன்! பணிச்சுமை காரணமாக வலைப்பக்கம் வர இயலவில்லை! நன்றி ஐயா!//

   அதனால் பரவாயில்லை.

   இந்தத் துபாய்த் தொடரின் 20 பகுதிகளில் இதனுடன் சேர்த்து ஏழு [1-3, 9, 14, 15 and 20] பகுதிகளுக்குக் கருத்தளித்துள்ளீர்கள். 7 out of 20 !

   தங்களின் பணிச்சுமைகளுக்கு இடையே அதுவே மிகப்பெரிய விஷயம்தான்.

   நானும் இந்த துபாய் பயணக்கட்டுரைத் தொடரும், அதற்கு அடுத்த வலைச்சர ஆசிரியர்கள் பற்றிய தொடரும், பிறர் கருத்தளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வெளியிடவில்லை.

   இவைகள் எனக்கு என்றும் ஓர் இனிய நினைவலைகளாகவும், அரிய பொக்கிஷம் போன்ற ஆவணங்களாகவும் இருக்கட்டுமே என்பதால் மட்டுமே வெளியிட்டு வருகிறேன்.

   இவற்றையெல்லாம் பார்ப்பதோ, படிப்பதோ, கருத்தளிப்பதோ அவரவர்களின் விருப்பம் + நேர அவகாசம், அதிலுள்ள ஆர்வம், அதனால் ஏற்படக்கூடிய ஆதாயம் போன்றவற்றைப் பொறுத்தது மட்டுமே.

   மனம் நிறைந்த வாழ்த்துகள் !

   VGK

   நீக்கு
 24. ஆச்சியின் அன்பைக்கண்டு அதிசயிக்கிறேன். எவ்வளவு அன்பும் கலைநயமும் கொண்டு அந்த அழகிய கோப்பையை உருவாக்கியிருக்கிறார்கள். அத்தோடு அழகிய கைவேலைப்பாட்டுடனான பரிசுப்பொருட்களும். இருவரது அன்பும் நட்பும் தொடர்ந்து நீடிக்க என் வாழ்த்துகள் இருவருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி January 16, 2015 at 6:22 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆச்சியின் அன்பைக்கண்டு அதிசயிக்கிறேன். எவ்வளவு
   அன்பும் கலைநயமும் கொண்டு அந்த அழகிய கோப்பையை உருவாக்கியிருக்கிறார்கள். அத்தோடு அழகிய கைவேலைப்பாட்டுடனான பரிசுப்பொருட்களும். இருவரது அன்பும் நட்பும் தொடர்ந்து நீடிக்க என் வாழ்த்துகள் இருவருக்கும்.//

   இந்த என் துபாய் பயணக்கட்டுரையின் எல்லா இருபது
   பகுதிகளுக்கும் [20 out of 20 = 100%] தங்களின் அன்பான
   வருகைக்கும், அழகான *வித்யாசமான கருத்துக்களுக்கும்*
   ஆச்சி சார்பிலும் என் சார்பிலும் மனம் நிறைந்த இனிய
   அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   { *வித்யாசமான கருத்துக்களுக்கும்* = மற்ற சிலர் போல
   வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள், பொங்கல்
   வாழ்த்துகள் என பதிவுக்கு எந்தவிதமான சம்மந்தமுமே
   இல்லாமல் கருத்தளித்து வெறுப்பேற்றாமல் இருத்தல். }

   :))))) VGK

   நீக்கு
 25. அன்பு நிறைந்து வழிகிறது தான்..ஐயா...ஆச்சியின் அன்பு கோப்பையில் பொங்கி வழிகிறது...அவர்களின் கைவேலைப்பாடு அருமை.

  தங்கள் குடும்பத்தார்களின் அன்பும் கரை புரண்டோடுகிறது ஐயா.
  மிக்க மகிழ்ச்சி. அன்பு இன்று போல் என்றும் ஆனந்தமாக தொடரட்டும் . வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. R.Umayal Gayathri February 9, 2015 at 1:01 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அன்பு நிறைந்து வழிகிறது தான்..ஐயா...ஆச்சியின் அன்பு கோப்பையில் பொங்கி வழிகிறது...அவர்களின் கைவேலைப்பாடு அருமை. தங்கள் குடும்பத்தார்களின் அன்பும் கரை புரண்டோடுகிறது ஐயா. மிக்க மகிழ்ச்சி. அன்பு இன்று போல் என்றும் ஆனந்தமாக தொடரட்டும் . வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆனந்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் ஆச்சியின் சார்பிலும் என் சார்பிலும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். என்றும் அன்புடன் VGK

   நீக்கு
 26. அன்பை எவ்வளவு சூப்பராக வெளிப்படுத்தி இருக்காங்க. ரொம்ப நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 27. அட்சயபாத்திரமாய்
  அன்பு ததும்பும் கோப்பை
  மனம் கவர்ந்தது.. வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:52 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அட்சயபாத்திரமாய் அன்பு ததும்பும் கோப்பை மனம் கவர்ந்தது.. வாழ்த்துகள்..//

   அன்பான வருகைக்கும் அக்ஷயமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 28. ஒரு கோப்பயிலே என்குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு. பளய பாட்டு கேட்டிருக்கீக தானே. அங்க பாட்டுக்கு அர்த்தமே வேர.இங்கன ஒங்க அல்லாரயும் கோப்பைக்குள்ளார குடியிருக்க வச்சுகிட்டாங்கல.

  பதிலளிநீக்கு
 29. நல்ல அழகான பரிசு. கோப்பையில் அவர்களின் அன்பை நிறப்பியிருக்காங்க.

  பதிலளிநீக்கு
 30. வாத்யாரே இது ஆச்சியின் அன்புக்குப்பாத்திரமானதால் கிடைத்த வெற்றிக்கோப்பை என்பது இன்னும் பொருந்துமென எண்ணுகிறேன். எங்க ஊர்ல 'கோப்பை' - காலி!!!!

  பதிலளிநீக்கு
 31. கோப்பை படங்களுடன் அழகாக இருக்கு. நான் இதனைப்போல் பிரிண்ட் பண்ணுவதை வாங்குவதில்லை (முதல்ல என் பசங்களுக்குக் கொடுக்கலாமான்னு 10 வருஷத்துக்கு முன்னால் யோசிச்சேன். அப்புறம் கைதவறி உடைந்துவிட்டால் மனது மிகவும் சஞ்சலம் அடைந்துவிடும்னு அந்த ஐடியாவையே செயல்படுத்தலை)

  உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  "அர்ச்சனை செய்துவிட்டு வெண்பொங்கல் பிரஸாதத் தூக்கு சஹிதம் " - ஆஹா... இதை முன்னமேயே சொல்லவில்லையே. கோவிலுக்குப் போனால் ப்ரசாதம் தூக்கிலேயே வாங்கலாமா? (:) )

  சென்றமுறை தாயுமானவர் கோவிலுக்குச் சென்றபோது அர்ச்சகர், முதல்ல பிரசாதம் வாங்கிக்கோங்கோ (பக்கத்தில் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்), தீர்ந்துவிடப் போகிறது என்று சொன்னார்கள். அருமையான வெண்பொங்கல். இப்போது அதன் நினைவு வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 32. நெல்லைத் தமிழன் October 25, 2017 at 4:22 PM

  வாங்கோ, வணக்கம்.

  //கோப்பை படங்களுடன் அழகாக இருக்கு.//

  ஆம். அழகாகத்தான் இருக்குது.

  //நான் இதனைப்போல் பிரிண்ட் பண்ணுவதை வாங்குவதில்லை (முதல்ல என் பசங்களுக்குக் கொடுக்கலாமான்னு 10 வருஷத்துக்கு முன்னால் யோசிச்சேன். அப்புறம் கைதவறி உடைந்துவிட்டால் மனது மிகவும் சஞ்சலம் அடைந்துவிடும்னு அந்த ஐடியாவையே செயல்படுத்தலை)//

  ஆமாம். இந்தக்கோப்பையும் கொரியர் பார்ஸலில் ஹரியானா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டு திருச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடையாமல் வந்துள்ளதே எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அன்புடனும் சிரத்தையுடனும் உடையாமல் அழகாக பேக்கிங் செய்திருப்பார்கள் போலிருக்குது. நான் இப்போதும் அதை யாரும் தொட்டுப்பார்த்து, உடைத்துவிடாமல் இருக்க, ஷோ கேஸில் சற்றே உள் அடங்கி வைத்துள்ளேன்.

  //உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.//

  மிக்க மகிழ்ச்சி.

  //"அர்ச்சனை செய்துவிட்டு வெண்பொங்கல் பிரஸாதத் தூக்கு சஹிதம் " - ஆஹா... இதை முன்னமேயே சொல்லவில்லையே. கோவிலுக்குப் போனால் ப்ரசாதம் தூக்கிலேயே வாங்கலாமா? (:) ) //

  ஜன்ம நக்ஷத்திரத்திற்காக, முன்கூட்டியே சொல்லி வைத்து வெண்பொங்கலுக்கும், அர்ச்சனைப் பொருட்களுக்குமாக மொத்தமாக பணம் கட்டிவிடணும். அர்ச்சனை செய்யும் பட்டருக்கும், மடப்பள்ளி ஆசாமிக்கு தனியாக சம்பாவனை (காணிக்கை) கொடுத்து விடுவதும் உண்டு. போகவர ஆட்டோ உள்பட இப்போதெல்லாம் ரூ. 500 வரை ஆகி வருகிறது. நாம் கொண்டுசெல்லும் தூக்கில் ஒரு அரை தூக்கோ அல்லது கால் தூக்கோ (சுமார் 10 கரண்டிகளுக்குக் குறையாமல் தருவார்கள். ஏனோ இப்போதெல்லாம் நெய் மணமாக இருப்பது இல்லை. ஆத்துக்கு வந்ததும் பொங்கலில் கொஞ்சம் சூடு இருக்கும்போதே நாம் நம் ஆத்து நெய்யை விட்டுக்கொண்டு ‘கோவிந்தா ..... கோவிந்தா’ எனச் சொல்லி சாப்பிட்டு விட வேண்டும். :)

  //சென்றமுறை தாயுமானவர் கோவிலுக்குச் சென்றபோது அர்ச்சகர், முதல்ல பிரசாதம் வாங்கிக்கோங்கோ (பக்கத்தில் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்), தீர்ந்துவிடப் போகிறது என்று சொன்னார்கள். அருமையான வெண்பொங்கல். இப்போது அதன் நினைவு வந்துவிட்டது.//

  அப்படியா ! சில சமயங்களில் சில கோயில்களில் மட்டும், அந்தப் பிரஸாதங்கள் தேவாமிர்தம் போல ருசியாக இருப்பதும் உண்டு.

  தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு