என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 22 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/2 of 16 [41/1] SPECIAL !

 என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 
 


 
திருமதி 

 மஞ்சு பாஷிணி 

அவர்கள் 

{ 02.10.2012 }
வலைச்சர வரலாற்றிலேயே 


ஓர் மாபெரும் புதுமை + சாதனை !ஒரு நாள் முழுவதும் ஒரேயொரு 


பதிவர் பற்றிய அறிமுகம் மட்டுமே !! [ Total No. of Comments:  131 ]


அறுசுவை - கதம்ப உணர்வுகள் (இரண்டாம் நாள்)

அன்பு நண்பர்களே எல்லோரும் சௌக்கியமாப்பா? நேற்று முழுக்க எனக்கு ஊக்கம் தந்து, வரவேற்று, என் வலைப்பூவுக்கும் சென்று அன்புடன் எனக்கு ஆதரவு தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் அன்பு நன்றிகள். இன்றுமுதல் என் மனம் கவர் பதிவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன்.


 முதல் அறிமுகம் 


என்னால் அண்ணா என அன்புடன் அழைக்கப்பட்டுவருபவரும்மற்ற சிலரால்  ”VGK” என்றும்வேறு சிலரால் பதிவுலக வை.கோஎன்றும்ஒரு சிலரால் செல்லமாக கோபு” என்றும் அழைக்கப்பட்டுவரும் பதிவர்  வை. கோபாலகிருஷ்ணன் அவர்களை வலையுலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது.  

வை. கோபாலகிருஷ்ணன்
வை.கோ *
கோபு *
* VGK *
இவர் பல்வேறு தனித்திறமைகளைத் தன்னிடத்திலே வளர்த்துக்கொண்டுகுடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்து கொண்டுஅன்பு,  அடக்கம்அமைதிஅனுபவம் என்ற மிகச்சிறப்பான குணங்களைத் தன்னகத்தே தக்க வைத்துக்கொண்டுஎப்போதும் தன்னை மிகச் சாதாரணமானவன் தான் ஆனாலும் ஏதாவது சாதிக்க நினைப்பவன் என்று சொல்லி வருகிறார்.

இவர் இதுவரை செய்துள்ள சாதனைகளே,  ஏராளமாகவும்,  தாராளமாகவும் உள்ளன.

தற்சமயம் குவைத்திலிருக்கும் நான்இந்தியாவில் தமிழ்நாட்டில்  திருச்சியிலிருக்கும் என் அண்ணா திரு. வை. கோபாலகிருஷ்ணனுடன்சமீபத்தில்  தொலைபேசியில் பேசி இருக்கிறேன். அவரின் பலவிதமான சாதனைகளை ஆச்சர்யத்துடன் கேட்டிருக்கிறேன் 

இவரைப்போன்ற ஒரு நல்ல மனம் படைத்தவரைநல்லதை மட்டுமே நினைப்பவரைபல்வேறு திறமைகள் கொண்டவரைநகைச்சுவை உணர்வுகள் நிரம்பியவரை நான் இதுவரைப் பார்த்ததே இல்லை. 

எழுத்தினில் எழுதி எடுத்துரைத்துப் புரிய வைக்க முடியாத பல்வேறு நல்ல விஷயங்கள் நான் இவரிடம் பேசியதில் என்னால் நன்கு அறிய முடிந்தது. பிராப்தம் இருந்தால் நான் இவரை நேரில் சந்திப்பேன்.

இவரின் பதிவுலக எழுத்துக்களில் இவர் தொடாத தலைப்புக்களே இல்லை என்றும் சொல்லலாம்.  

நட்புமனிதநேயம்அனுபவம்காதல்மனித உணர்வுகள்மனிதாபிமானம்வாழ்வியல் யதார்த்தங்கள்உண்மைநேர்மைகுடும்ப உறவுகள் போன்ற அனைத்து அம்சங்களும்  இவரின் பல்வேறு படைப்புகளில் இவர் கையாண்டுள்ளார். 

மேலும் இவரின் படைப்புகள்  எல்லாவற்றிலும் நகைச்சுவை கலந்து கொடுப்பதிலும்சொல்லுவதை மிகத் தெளிவாக தகுந்த உதாரணங்களுடன் சொல்லுவதிலும் இவர் வல்லவராகவே உள்ளார். 

என் பேட்டியில் முக்கியமாக அவரின் படைப்புகளைப்பற்றி பேசியபோது நான் சேகரித்த சில விஷயங்களைப்பற்றி மட்டும் இங்கு இன்று விஸ்தாரமாக எடுத்துரைத்து அறிமுகப்படுத்த விரும்புகிறேன். 

oooooooooooooo

தாயுமானவள்” பகுதி 1 / 3

அன்புக்குரிய கோபு அண்ணா எழுதிய முதல் சிறுகதை இது.

முதல் சிறுகதையே பிரபல பத்திரிகையின் சிறுகதைப் போட்டியொன்றில் பரிசுக்கு தேர்வாகியுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். 

முதல் சந்திப்புமுதல் பார்வைமுதல் நட்புமுதல் உரையாடல்முதல் காதல்முதல் குழந்தை போன்றவற்றில் தானே ஒரு THRILLING  ஆன அனுபவமும்சுகமும்பேரானந்தமும்பரவஸமும்  இருக்க முடியும்?

அதுபோலவே தான் இந்த என் முதல் கதையும்அது முதன் முதலாக ஒரு பிரபல பத்திரிகையில் அச்சேறிபிரசுரம் ஆனபோதுஎனக்கு மட்டில்லா மகிழ்ச்சியையும்பரிசுத் தொகையையும்என்னுடன் அன்று மிகப்பெரிய தொழிற்சாலையில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்களையும்புதிய எழுத்துலக நண்பர்களையும் பெற்றுத்தந்தது என்பதே என் சிறுகதையின் மூலம் நான் பெற்ற மிகச்சிறப்பானமகிழ்ச்சிகரமானதோர் அனுபவம்.

அந்த என் முதல் அனுபவம் மிகவும் 
THRILLING! THRILLING!! THRILLING!!! தான் !”  

என்கிறார்என் அன்புக்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் அண்ணா. 

[சுனாமி என்ற இயற்கையின் சீற்றத்தால் தன் பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற அனாதையான ஓர் சிறுமியைப் பற்றிய கதைஇது. நெஞ்சை உருக்கும் சம்பவங்களை மிகவும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் ]

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

' தாயுமானவள் '

                   


    

 ========================================================

உடம்பெல்லாம் உப்புச்சீடை

மிகவும் அருமையானதோர் காவியம்.  

தமிழின் பிரபல  மாத பத்திரிகையான மங்கையர் மலர்” மட்டுமின்றி இந்தக்கதைதமிழ் மொழியும்  தெரிந்த  கன்னட எழுத்தாளர் ஒருவரால் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுபெங்களூரிலிருந்து வெளிவரும் பிரபல கன்னடப் பத்திரிகையான கஸ்தூரி யிலும் வெளியாகியுள்ளது. 

அந்த கன்னட மொழியாக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தக்கதையின் தலைப்பு: ”மையெல்லாக் கண்டு” 

இரயில் பயணத்தில் துவங்கும் இந்தக்கதைஒவ்வொரு பகுதியிலும் நம்மையும் சுகமாக தாலாட்டி அதே ரயில் வண்டியில்  கூட்டிச் செல்கிறது. 

கதையில் எக்ஸ்ப்ரஸ் வேகம். நல்ல விறுவிறுப்பு. 

கதாசிரியரின் முழுத்திறமையும் ஒவ்வொரு வரிகளிலும் மிளிர்கின்றனஒளிர்கின்றன. 

மிகச் சிறந்ததோர் படைப்பு. அனைவராலும் ஒருமனதாகப் பாராட்டப்பட்டுள்ளது. 

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

'உடம்பெல்லாம் உப்புச்சீடை'

 ======================================   

அஞ்சலை”  பகுதி 1 / 6

உலகளாவிய தமிழ் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்ட இந்தக்கதைக்கு லண்டனிலிருந்து வெளிவரும் புதினம்” என்ற பத்திரிகையால் பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது. 

கதையென்றால் இதுவல்லவோ கதை’ என்று சொல்லும் அளவுக்கு நல்ல விறுவிறுப்பான நடையுடன்மனித உணர்வுகளைப் பற்றிச் சொல்லும்மிக  அற்புதமான கதை இது.

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

'அஞ்சலை'

  

=======================================================

என் உயிர்த்தோழி

ஒரு பிரபல தமிழ் வாரப் பத்திரிகை நடத்திய  படக்கதை” க்கான  போட்டியில் ஒருவருக்கே பரிசு என்ற நிபந்தனையில்அந்தப்பரிசினை தனக்கே தட்டிச்சென்ற கதை இது.

இதில் அன்புபாசம்பிரியம்உறவு போன்றவை வெகு அழகாக விளக்கப்பட்டுள்ளன.


 


===========================================

இனி துயரம் இல்லை

தமிழ் மாதச் சிற்றிதழ் ஒன்று நடத்திய போட்டியொன்றில் முதல் பரிசு பெற்ற கதை இது.

முதியோரின் மன உணர்வுகளை அருமையாக அற்புதமாக இளைஞர்கள் அறிந்து கொள்ளுமாறு செய்த மிகச்சிறந்த கதை.

 


======================================================

ப வ ழ ம்

நிலாச்சாரல்’ என்ற மின் இதழில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான  கதைகளிலுமே மிகச்சிறப்பானது இந்தக் கதை என தெர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது இந்தச் சிறுகதை.
=================================================================================

தீபாவளி நேரத்தில் பத்தாயிரம் வாலா பட்டாசு என சர வெடி வெடிக்கும் .......  பார்த்திருப்பீர்கள் தானே!

அதே போன்ற சரவெடியாகதாங்களும் வாய்விட்டுச்  சிரித்துக்கொண்டே இருக்க விருப்பமா

இதோ என் கோபு அண்ணாவின் இந்த மூன்று கதைகளையும் வாசியுங்கோ .... 

சிரித்துச் சிரித்து வயிற்றுவலி ஏற்பட்டால் மஞ்சுவாகிய நான் பொறுப்பல்ல! ;)))))  

==============

எலிஸபத் டவர்ஸ் [பகுதி 1 / 8]

அடுக்குமாடிக் குடிருப்பில் வீடாம். வீட்டினில் ஓர் எலி புகுந்து விட்டதாம். அந்த வீட்டில் உள்ளவர்கள் படும் பாட்டை முழு நீள நகைச்சுவையாகத் தந்திருக்கிறார் ...... நம் கோபு அண்ணா. 

இதில் வேடிக்கை என்னவென்றால் முதல் ஏழு பகுதிகள் வரை எலி எதையும் நம் கண்ணில் காட்டாமலேயே மிக ரகசியமாகவே ஓட விட்டுள்ளார் கதாசிரியர். 

சிரிப்போ சிரிப்பு தான். திகில் கதை போலஅதே சமயம் நகைச்சுவை குறையாமல்மிக  அற்புதமாக எழுதியுள்ளார்..

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

’எ லி’ஸபத் டவர்ஸ்

 
  

===================

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?”  பகுதி-1 / 2

தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் மட்டுமே தெரியும் என்பார்கள். 

அப்போ பல் வலி வந்தால் மட்டும் பக்கத்து வீட்டுக்காரனுக்கா தெரியும்எனக்கேட்டு கதையை ஆரம்பித்துள்ளார் என் அண்ணா VGK. 

படித்துச் சிரித்ததில் என் பல்லெல்லாம் சுளுக்கிக் கொண்டு விட்டது.  அவ்வளவு நகைச்சுவை.  தனக்கே உரித்தான வெகு சரளமான நடையில்  எழுதியுள்ளார்.

கடைசியில் இவரால் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சில அறிவுரைகளோ ...  
அடடா .. அக்ஷர லக்ஷம் பெறும்.  

இந்த அருமையான கதையை எழுதிய கோபு அண்ணா பல்லாண்டு வாழ்க !!!

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

’பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா ?’

 =============

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ.! 
புதிய கட்சி மூ.பொ.போ.மு.க.” உதயம்: பகுதி 1 / 8

சென்ற ஆண்டு 2011 ஆரம்பத்தில்தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு  சற்று முன் இந்தக் கதையைக் கொடுத்துள்ளது,  அண்ணா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் தனிச்சிறப்பு.

அருமையானதோர் நகைச்சுவை சரவெடியினை கொளுத்திவிட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார். 

அரசியல் மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களைச் சேர்த்துச் சமைத்த ஓர் ருசியான அவியல் இது.

தமிழக அரசியலில் ஏற்கனவே உலா வரும் முன்னேற்றக் கழகங்கள் போதாதென்று இவர் ஓர் மூ.பொ.போ.மு.க என்று  ஓர் புதிய கட்சி உதயம் என்கிறார். 

அலுவலகத்தில்அலுவலக நேரத்தில்வேலை செய்கிறார்களோ இல்லையோவெட்டி அரட்டை அடிப்பதே சிலரின் வழக்கம். அந்தக் கருவினை அழகாகக் கையில் எடுத்துக்கொண்டு,  மிக மிக சுவைபட எழுதி அசத்தியுள்ளார்,  நம் கோபு அண்ணா. 

முதல் பகுதியை படிக்க ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடிக்காமல் யாரும் அங்கே இங்கே செல்லவே முடியாதபடி, தன் கதைகளை நகைச்சுவையாக நகர்த்திச் சொல்வதில், என் கோபு அண்ணா அவர்களுக்கு நிகர் அவரே தான் என்பேன்.

படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

முழு நீள மீள் பதிவுக்கான இணைப்பு:

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! 
புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !! 

 

  
 


என் வீட்டுத் தோட்டத்தில் .... 
மஞ்சு’s ஸ்பெஷல் 
பகுதி 8/3 of 16 [41/2]
இன்று மதியம் வெளியிடப்படும்.

காணத்தவறாதீர்கள் !


என்றும் அன்புடன் தங்கள்
{வை. கோபாலகிருஷ்ணன்}

17 கருத்துகள்:

 1. மஞ்சுபாஷிணி உங்கள் கதைகளை அருமையாகத் தொகுத்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுகளும் உங்களுக்கு வாழ்த்துக்களும் அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. திருமதி. மஞ்சுவின் கதை விமர்சனங்கள் மிக அருமை.
  மஞ்சுவுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. என் வீட்டுத் தோட்டத்தில் அழகிய மலர் தோட்டம். கண்ணுக்கு மட்டும் அல்ல விருந்து, மனதிற்கும், மூளைக்கும் படைக்கின்றது விருந்து. குடத்திலிட்ட விளக்கு என்று சொல்லுவதை விட குன்றின் மீதிட்ட விளக்கு என்று சொல்லலாமோ வைகோ அவர்களை!!!

  தொடர்கின்றோம்....

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள்! தங்களது படைப்புகளை ஒவ்வொன்றாக வாசிக்கின்றோம்....

  பதிலளிநீக்கு
 5. அன்பு வணக்கங்கள் அண்ணா..

  தங்களின் தோட்டத்தில்..... அற்புதமான அன்பு மலர்களோடு இணைத்தது மிக அழகு...

  வாழிய பல்லாண்டு !!!! மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !!

  பதிலளிநீக்கு
 6. விமரிசனங்களுக்கும், நீங்கள் வாங்கிய பரிசுகளுக்கும் வாழ்த்துகள். அருமையாக எழுதி இருக்கிறார் மஞ்சுபாஷிணி. அவருக்கும் என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. அருமையான தொகுப்பு. தொடர்கிறேன்....

  பதிலளிநீக்கு
 8. அறிமுகப் பதிவுகளையே இவ்வளவு அழகாக சிறப்பித்துள்ள மஞ்சு மட்டும் விமர்சனப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தால் நிச்சயமாக அவர்தான் முதல் பரிசுகளை அள்ளிச்சென்றிருப்பார். அவ்வளவு நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் விமர்சிக்கும் தன்மை அவரிடம் உண்டு. அவருக்கிருக்கும் நேர நெருக்கடி காரணமாகவே முன்போல் வலையுலகில் இயங்கமுடியவில்லை என்று புரிகிறது. மீண்டும் முன்போல் பழைய பொலிவுடன் பதிவுலகில் வலம் வர இனிய வாழ்த்துகள் மஞ்சு.

  பதிலளிநீக்கு
 9. ஒரு நாள் முழுவதும் ஒரேயொரு


  பதிவர் பற்றிய அறிமுகம் மட்டுமே !!

  ஒரு வாரம் முழுக்க உங்கள் வலைத்தள அறிமுகம் இனி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
 10. உங்களுக்கும் மஞ்சு அவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  பதிலளிநீக்கு
 11. மணக்கும் வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:09 PM

   //மணக்கும் வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..//

   வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 12. படங்கலா ரொம்ப நல்லாகீது வலைச்சர அறிமுகங்களுக்கு எத்தினி வாட்டி பாராட்டு வாழ்த்து சொல்லுது

  பதிலளிநீக்கு
 13. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 14. வலைச்சர அறிமுகங்கள்...மீண்டும்..மீண்டும்!!!

  பதிலளிநீக்கு
 15. //அறிமுகப் பதிவுகளையே இவ்வளவு அழகாக சிறப்பித்துள்ள மஞ்சு மட்டும் விமர்சனப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தால் நிச்சயமாக அவர்தான் முதல் பரிசுகளை அள்ளிச்சென்றிருப்பார். அவ்வளவு நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் விமர்சிக்கும் தன்மை அவரிடம் உண்டு.//
  உணமைதான்!

  பதிலளிநீக்கு