என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-9 of 16 [43-50]

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 




 




 


43. திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் 


{ 08.10.2012 }



வலைச்சரம் பல வலைபதிவுலக பிரம்மாக்களால் கோர்க்கப்பட்டு, அவர்களது படைப்புக்களாலும்,  அவர்களது அறிமுகங்களின் படைப்புகளாலும்  சரம்சரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், என்னைப்போல வலைபதிவுலகக் கடைசிப் படியில் நிற்கும் கற்றுக் குட்டிகளும் ஆசிரியர் பொறுப்பேற்பது என்பதை நினைக்கும்போது


‘யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்.... அம்மா..

என்ற எனக்கு மிகவும் பிடித்த ‘மகா கவி காளிதாஸ்’ படப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

திரு ‘அன்பின்’ சீனா ஐயா அவர்களாலும், என்னைப் பரிந்துரைத்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களாலும் மட்டுமே இந்த மாதிரி ஒரு ‘RISK’ சாத்தியம். இவர்களிருவருக்கும் ‘தலையல்லால் கைம்மாறிலேன்’.


 

 


44. திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் 


{ 14.10.2012 }


திரு வை.கோ. அவர்கள் ‘கொஞ்சம் தண்ணீர் விடுங்கோ’ என்று கேட்டுக்கொண்டார்.

இந்த முறை பெங்களூரில் மழை ரொம்பவும் கம்மி என்பது வருத்தப்பட வேண்டிய நிஜம். என்ன செய்வது?
 





45. ஆரண்யநிவாஸ் திரு. ஆர்.ராமமூர்த்தி அவர்கள் 

{ 15.10.2012 }




அன்பின் சீனா சார் அவர்களுக்கும், அவர்தம் வலைச்சரம் ஆசிரியர் குழுவிற்கும் நெஞ்சார்ந்த வணக்கம் ! அறிமுகப் படுத்திய அன்பின் வைகோ சாருக்கு அடியேனின் பணிவான வணக்கம் !

 


 


46. ஆரண்யநிவாஸ் திரு. ஆர்.ராமமூர்த்தி அவர்கள் 


{ 16.10.2012 }




நம்மாளு : முக்கியமான நபரை விட்டுட்டியே..
       

நான்   : வைக்கோலை மாடு மறந்தாலும், 

நம்ம வை.கோ.வை நாம மறப்போமா?

                
அவரோடபூக்களை விட அந்த பூக்காரி நல்ல அழகு ’

என்று கன  ஜோராக ஆரம்பிக்கும் கதையை மறக்க முடியுமா?


படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் 

மீள் பதிவுக்கான இணைப்பு:

ஜாதிப்பூ







47. ஆரண்யநிவாஸ் திரு. ஆர்.ராமமூர்த்தி அவர்கள் 

{ 21.10.2012 }



நான்          : நம்மாளு ..வா ....எங்க  கொட்ற மழையில ஜுட்
                    அடிச்சிடுவியோன்னு  பயந்துட்டேன் !

நம்மாளு :  ஆமா....வரல்லைன்னா ஏன் வரலைங்க வேண்டியது !
                    வந்தா டேரா போடறான்னு பிரண்ட்ஸ்கிட்ட சொல்ல         
                    வேண்டியது ....

நான்         :  இந்த மழையில இவ்ளவ் சூடா இருக்கியே ?
                     என்ன விஷயம் ?

நம்மாளு :   அது சரி வைகோ சார் கிட்ட என்ன சொன்னே ?
நான்          :   அவ்ளாவ் தூரம் சிகாகோ போனீங்களே ! முன்னாடியே
                       சொன்னா வடுமாங்கா, புளியோதரை மிக்ஸ் , அரிசி
                       அப்பளம் கட்டு கொடுத்து அனுப்புவேன்னு சொன்னேன் !

நம்மாளு  :   அதை விட்டுத் தள்ளு ..என்னவோ வியட்னாம் வீடு ...டே பை டே ..
                      என்ன விளையாட்டு இது ?

நான்          :  அட..அதைப் போய் நீ பெரிசா எடுத்துக் கிட்டு ? சும்மா ஜோக்குக்கு
                      சொன்னது இது ? நீ யாரு ..நீ வேற ..நான் வேறயா ...கோச்சுக்காத
                      கண்ணா ..இந்த கொட்ற மழையில யாரும் கமென்ட் போட
                      வரல்லேங்க்கிற வருத்தத்தில இருக்கேன்..நீ வேற நம்மள
                      ரூட்ல விட்டானா, அவ்ளவ் தான் கதை கந்தல் ஆயிடும் !

நம்மாளு  :   சரி..சரி...உன்னை கோபித்துக் கொள்ளவே முடியல ..ஏன்னா
                      நீ நம்மாளா போயிட்ட ..ஆனா ..ஒரு கண்டிஷன் ..

 நான்          : என்ன ?
நம்மாளு   : இது முடிஞ்சதும் நான் என் ஊரைப் பார்க்க கிளம்பிடறேன் ..
                     சரின்னா உட்காருகிறேன் !

நான்           : கோபம் கொள்ளாதே ..மானே தாபம் கொள்ளாதே !!


 


 


48. K.G.கெளதமன் அவர்கள் 


[எங்கள் ப்ளாக்] 



{ 30.10.2012 }


        
வை கோபாலகிருஷ்ணன் பல்கலை வல்லுநர். இவர் வலைப்பூவில் விருது மழை. தான் பெற்றவற்றை இதுவரை யாரும் செய்யாத அளவில் 108*3=324 பதிவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த வள்ளல்! 



சிறுகதை, நீண்ட கதை எழுதுவார். ஓவியங்கள் வரைவார். திருமணம், விழாக்களுக்குப் பரிசளிக்க தானே புதுவிதமாக யோசித்துப் பரிசுகள் தயார் செய்வார். ஆன்மீகப் பதிவுகள் இடுவார். சாப்பாட்டு ரசிகர். பிரமிக்க வைப்பவர். 

இவரின் இந்த உப்பு சீடைக் கதை சம்திங் ஸ்பெஷல்!    

படங்களுடன் கூடிய மேற்படி கதையின் 

முழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:

உடம்பெல்லாம் உப்புச்சீடை


  



 

                  
 

 

49. முனைவர் திரு. இரா. குணசீலன் அவர்கள்

உண்மையான பாராட்டு ஒரு பதிவரை உயரத்துக்கு அழைத்துச்செல்லும்
பொய்யான பாராட்டு ஒரு பதிவரை  தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் 
என்னும் சிந்தனையை முன்வைத்து..

மறுமொழியிட்டு ஊக்குவிக்கும் பதிவர்களை ஊக்குவிக்கும் சிறப்புப்பதிவாக இன்றைய தொகுப்பை வெளியிடுகிறேன்.

நான் கண்டவரை பின்வரும் பதிவர்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு.

இவர்கள் யாரும் தன் வலைப்பதிவுக்கு மறுமொழி அதிகமாக வரவேண்டும் என்பதால் பலபதிவுகளுக்கும் சென்று மறுமொழியிடுவதில்லை.

எங்கு சிறந்த பதிவு கண்களுக்குத் தென்பட்டாலும் மனம் திறந்து பாராட்டும் பண்புடையவர்கள். அதனால் இன்றைய பதிவு இவர்களுக்காக..

வை.கோபால கிருஷ்ணன்  அவர்களின் சிரித்து வாழவேண்டும் என்ற இடுகை நகைச்சுவையை வாரி வாரி வழங்குகிறது.

 

 


50. Ms. மாலதி Madam அவர்கள் 




{ 18.11.2012 }


நாம் எல்லோரும்  அரசியலில்   வை . கோ  என்று சொன்னாலே  மிகசிறந்த  மேடைப் பேச்சாளர்  ஈழ விடுதலையில்  நாடகம்  ஆடாதவர்  என கூறுவார்கள் அதேபோல வலைப்பதிவில் ஒரு வை. கோ  பாருங்க.  உண்மையில்  மனிதர் எப்போதும்  கணினியின் பக்கத்தில்  இருப்பாரோன்னு  தோணுது.  உண்மையான ஈடுபாட்டுடன்  கருத்தியலோ அல்லது  பொருளியலோ  நீண்ட இடுகை இருக்கும்.  எல்லா இடுகைக்கும்  சென்று வாசித்ததை  அழகாக  பதிவு  செய்து இருப்பார். அவரை பிரபல  ஏடுகள்தான்   அறிமுகப் படுத்த வேண்டுமா  என்ன நாமும் அறிமுகப் படுத்துவோம்  உண்மையில்  இவருக்கு    தனியாக அறிமுகம் தேவையா என்ன? இங்கே போய் பாருங்க  http://gopu1949.blogspot.in/2012/11/blog-post_3.html



 






இவர்கள் அனைவருக்கும் 
என் இனிய அன்பு நன்றிகள்.
தொடரும்





நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்

வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் : நால்வர்




1) திரு. ரிஷபன் அவர்கள்


2) திரு. E S சேஷாத்ரி அவர்கள்


3] செல்வி. யுவராணி தமிழரசன் அவர்கள்


4] திருமதி. உஷா அன்பரசு அவர்கள்





என்றும் அன்புடன் தங்கள்
[வை.கோபாலகிருஷ்ணன்]

20 கருத்துகள்:

  1. இன்று உங்கள் வீட்டுத்தோட்டத்தில் பூத்த மலர்கள் திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் ,ஆரண்யநிவாஸ் திரு. ஆர்.ராமமூர்த்தி அவர்கள்
    K.G.கெளதமன் அவர்கள்
    முனைவர் திரு. இரா. குணசீலன் அவர்கள்
    மாலதி அவர்கள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    அனைவரும் உங்களைப்பற்றி அருமையாக சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
  2. முனைவர் ஐயா சொன்னது போல் அனைவரும் சிறப்பித்து உள்ளார்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. நல்ல தொகுப்பு. தேர்ந்தெடுத்த புகைப்படங்கள் அனைத்துமே அருமை.

    பதிலளிநீக்கு
  4. யாரையும் எப்போதும் மறவாமல் முன் வந்து பாரட்டும் தங்களின் நற் பண்பை கண்டு வியக்கிறேன்.. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. அனைவருமே மிக அருமையாகத் தொகுத்திருக்கின்றனர். அனைத்துமே எனக்குப் புதியவை. நபர்களைத் தெரியும். ஆனால் வலைச்சர ஆசிரியப் பணி செய்ததும், உங்கள் பதிவுகளைத் தொகுத்ததும் இன்றே அறிந்தேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் சக பதிவ்ரகளே

    கோமதி அரசின் மறுமொழியினை அப்படியே மொழிகிறேன். அருமையான பதிவுகள். பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ----------------------------------------------------

    இன்று உங்கள் வீட்டுத்தோட்டத்தில் பூத்த மலர்கள் திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் ,ஆரண்யநிவாஸ் திரு. ஆர்.ராமமூர்த்தி அவர்கள்
    K.G.கெளதமன் அவர்கள்
    முனைவர் திரு. இரா. குணசீலன் அவர்கள்
    மாலதி அவர்கள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    அனைவரும் உங்களைப்பற்றி அருமையாக சொன்னார்கள்.

    Reply

    பதிலளிநீக்கு
  7. அரை சதம் பேரால் அறிமுகம். அறிமுகம்ன்னு எப்படி சொல்வது? பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை தானே.

    உங்களை அறிமுகப் படுத்துவதன் மூலம் நாங்கள் சிறப்படைகிறோம்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  8. தங்கள் பதிவுகளை அறிமுகப்படுத்தியவர்களை இதைவிட எப்படி சிறப்பிக்க இயலும்? மேலும் இதுவரை வாசித்திராதவர்களுக்கு பதிவுகளை வாசிக்கவும் ஒரு அரிய வாய்ப்பு. பிரமாதம். பாராட்டுகள் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. உங்களின் சிபாரிசினால் கிடைத்தது இந்தப் பதவி. அதற்கு என்றென்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன். நன்றி ஸார்!

    பதிலளிநீக்கு
  10. படங்களுடன் சிறந்த தொகுப்புக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  11. அழகுமலர்க்கூட்டங்களாக வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:48 PM

      //அழகுமலர்க்கூட்டங்களாக வலைச்சர அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..//

      வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  12. பாராட்டுகளுடன் வாழ்த்துகளும் அல்லாவங்களுக்கும. பதிவு பக்கம் வந்தா காட்டியும் மொதக போட்டோ படம்லாதா பாத்துகிடுவேன். பொரவாலதா பதிவ படச்சிகிடுவேன்.

    பதிலளிநீக்கு
  13. அழகான படங்களுடன் பகிர்வுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. சிலரைத்தவிர மற்ற பதிவர்களை அறிந்ததுண்டு. சென்று படிக்கவேண்டு. நாகலிங்கப்பூ படம் அருமை.

    பதிலளிநீக்கு
  15. எனக்கும் ஒரு இடமுண்டு என அறிவதில் மட்டற்ற மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு