About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, January 15, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-1 of 16 [1]
 
அனைவருக்கும் 
இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துகள் !


 


 


 

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் ....  அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

அடியேன் 02.01.2011 அன்றுதான் வலைப்பதிவினில் முதன் முதலாக எழுதி பதிவிடத்தொடங்கினேன். 01.01.2015 உடன் என் வலையுலக வாழ்க்கையில் நான்கு வருடங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. 

இன்றுடன் 702 பதிவுகள் என்னால் கொடுக்க முடிந்துள்ளதில் மகிழ்ச்சி.


Blog Followers : 372  
Total Pageviews : 2,87,937 
(சுமார் 3 லட்சங்களை நெருங்க உள்ளது.)
Google+ இல் 381 Followers என்றும் 
பார்வையாளர்கள் எண்ணிக்கை 
28 லட்சங்களைத் தாண்டியுள்ளதும் 
காண மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நான்கு ஆண்டுகளுக்குள் என் பெயரும், என் வலைத்தளமும், என் பதிவுகளும் சுமார் 100 முறைகளுக்கு மேல் வலைச்சரத்தில், பல்வேறு வலைச்சர ஆசிரியர்களால், பல வாரங்களில், அறிமுகம் செய்யப்பட்டு, மிகவும் பாராட்டிப் புகழ்ந்து பேசப்பட்டுள்ளன. 

சராசரியாக ஒவ்வொரு மாதமும் இரண்டு வாரங்கள் வீதம் வலைச்சரத்தில் என் வலைத்தளம், பல வலைச்சர ஆசிரியர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் திரும்பிப்பார்க்க நினைக்கிறேன். அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன். 

நான் இதுவரை குறித்து / சேமித்து வைத்துள்ள புள்ளிவிபரங்களைத் தவிரவும், என்னைப்பற்றிய சில வலைச்சர அறிமுகங்கள் என் கவனத்திற்கே வராமலும் இருந்திருக்கக்கூடும். இடையில் அவ்வாறு ஏதேனும் விட்டுப்போய் இருப்பின் அந்த வலைச்சர ஆசிரியர்கள் என்னை மன்னிப்பார்களாக ! 

அந்த சம்பந்தப்பட்ட வலைச்சர ஆசிரியரோ அல்லது மற்ற யாரோ அவ்வாறு விட்டுப்போனவற்றை என் கவனத்திற்கு இப்போது கொண்டுவந்தாலும்கூட இந்தத்தொடர் பதிவினில் நான் அவற்றையும் சேர்த்து விடுவேன் என்பதை மட்டும் இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

என்னை முதன் முதலாக 
வலைச்சரத்தினில் அறிமுகம் செய்தவர் 
 எல்.கே. என அன்புடன் அழைக்கப்படும்  
திரு.   கார்த்திக்   அவர்கள். 

http://bhageerathi.in 

  
                                          
முதன் முதலாக என்னை வலைச்சரத்தில்
அறிமுகம் செய்தவர்
01.  திரு. எல்.கே [கார்த்திக்] அவர்கள் 
அறிமுகம் செய்த நாள்: 20.01.2011
வலைச்சர இணைப்பு:
http://blogintamil.blogspot.in/2011/01/blog-post_20.html

வலைச்சரத்தில் அன்று அவர் குறிப்பிட்டுள்ளது:

”அப்படியே நம்ம கோபாலகிருஷ்ணன் சாரோட 

இந்தக் கதையும் படி. இதை படிச்சாவது வெறும் 

பகல் கனவு காணாம உருப்படற வழியைப் 

பாரு.”

-=-=-=-=-=-

பின்னூட்டம் மூலம் எனக்கு வந்த முதல் தகவல்:

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_20.html-=-=-=-=-=-


என்னை முதன் முதலாக வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தேதி: 20.01.2011. 
அதாவது நான் வலைத்தளத்தினில் எழுத ஆரம்பித்த 19ம் நாள்.

இந்தக் குறிப்பிட்ட, அறிமுகப் படுத்தப்பட்ட 

பதிவினை [கதையை] 
நான் எழுதி வெளியிட்ட ஏழாம் நாளே வலைச்சரத்தில் 

முதன் முதலாக, அது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 

என்பதும் குறிப்பிடத்தக்கது.படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின் மீள்பதிவுக்கான இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html
’அமுதைப் பொழியும் நிலவே !’


அன்றைய வலைச்சர ஆசிரியர் திரு. கார்த்திக் [L.K.] அவர்களுக்கு 


 என் இனிய அன்பு நன்றிகள்.   
சென்ற ஆண்டு இதே பொங்கல் திருநாளில் 
என்னால் ஆரம்பிக்கப்பட்டு 
தொடர்ச்சியாக 40 வாரங்கள் தொய்வின்றி
வெற்றிகரமாக நடைபெற்று, 
தீபாவளித் திருநாளில் நிறைவுற்ற 
                                     http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
‘சிறுகதை விமர்சனப் போட்டி’களை
எண்ணிப்பார்த்து மகிழ்கின்றேன்.

 


கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து
எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்துள்ள
வாசகர்கள் மற்றும் அனைத்துப் பதிவர்களுக்கும்
என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Total No. of Comments Appearing As on Date: 26,300

இதன் தொடர்ச்சியாக 
மற்ற வலைச்சர ஆசிரியர்கள் 
அனைவரின் அறிமுகங்களும் 
அடுத்த ஒருசில தினங்களுக்கு மட்டும்
தினமும் ஒரு பதிவு வீதம் வெளியிடப்படும்.


நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்
வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் ஐவர்.

1) திருமதி. அன்புடன் மலிக்கா அவர்கள்
2) பச்சைத்தமிழன் திரு. பாரி தாண்டவமூர்த்தி அவர்கள்
3) தமிழ்வாசி திரு. பிரகாஷ் அவர்கள்
4) வேடந்தாங்கல் திரு. கருண் அவர்கள்
5) திருமதி. லக்ஷ்மி அம்மாள் அவர்கள்


 

என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]


30 comments:

 1. நான்கு வருடங்கள் நிறைவுக்கும், நிறைவான பதிவுகளுக்கும் வாழ்த்துகள் ஸார்.

  திருமதி லக்ஷ்மி அம்மாள் இப்போதெல்லாம் பதிவு எழுதுவது இல்லை இல்லை?

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. வலைச்சர அறிமுகங்களையும் இத்தனை சிரத்தையாய் சேமித்து வைத்திருப்பது ஆச்சரியம் தான். நான் சிலவற்றை மட்டும் சேமித்தேன். பிறகு விட்டுப் போயிற்று! :)

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. சரம் அழகு ஐயா...

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. மிக அருமையான தொகுப்பு... நினைவில் வைத்து தொகுப்பது என்பது பெரிய விஷயம் !! ஆச்சர்யமாக இருக்கிறது.

  உங்களுக்கும் மற்ற பதிவுலக உறவுகளுக்கும் எனது அன்பான பொங்கல் வாழ்த்துகள்

  ReplyDelete


 7. கோபு அண்ணா
  உங்களுக்கும், மன்னிக்கும், உங்கள் குடும்பத்தின் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். அப்படியே உங்கள் வலைத்தள ரசிகர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  அதாவது நான் வலைத்தளத்தினில் எழுத ஆரம்பித்த 19ம் நாள்.
  நான் எழுதி வெளியிட்ட ஏழாம் நாளே வலைச்சரத்தில்

  முதன் முதலாக, அது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

  என்பதும் குறிப்பிடத்தக்கது.

  அதனாலதான் உங்க கை மோதிரக் கை. அப்படியே அங்க இருந்தே லேசா ஒரு கொட்டு வைங்கோ என் தலையில.

  //100 முறைக்கு மேல் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டேன்//
  இதெல்லாம் ஒரு அதிசயமா? அப்படி அறிமுகப் படுத்தப்படாவிட்டால்தான் அதிசயம்.

  // கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து
  எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்துள்ள
  வாசகர்கள் மற்றும் அனைத்துப் பதிவர்களுக்கும்
  என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பின்னூட்டப் புயலாக நீங்க எல்லாருடைய வலைத் தளங்களுக்கும் வருகை தந்து அளித்த ஊக்கம், உற்சாகத்துல இருந்து தம்மாத்தூண்டு நாங்க உங்களுக்கு திருப்பி கொடுத்திருக்கோம். நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.
  அது எப்படி அண்ணா உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி அருமையான தலைப்புகள் அத்துடன் எழுத விஷயங்கள் கிடைக்கிறது.
  //என் வீட்டுத் தோட்டத்தில் //
  உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூக்கப் போகும் எல்லா பூக்களும் அருமையான மணம் வீசி அனைவரின் மனதையும் கவர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
  அன்புடனும்,
  வணக்கத்துடனும்,
  வாழ்த்துக்களுடனும்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
 8. அன்பான பொங்கல் வாழ்த்துக்கள், கோபு சார்!

  பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், ஒன்றைப் படித்தவுடன் புதிதாய்த் தோன்றும் உணர்வு சார்ந்த எண்ணங்களை மற்றைய பதிவுகளுக்கான பின்னூட்டங்களிலும்
  முறைப்படுத்தி நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அப்படிச் செய்தால் பழசு-புதுசு இரண்டிலும் உங்கள் சிந்தனைகளை நிரவிக் கொள்ள வசதி ஏற்படும். ஓர் ஆலோசனை தான்.

  ReplyDelete
 9. அடுத்த தொடர் பதிவு ஆரம்பித்து விட்டீர்கள். மகிழ்ச்சி. ஆனால் தங்கள் கண் அறுவை சிகிச்சை முடிந்து அதற்குள் எழுத ஆரம்பித்து விட்டீர்களே? கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொண்டு எழுதலாமே.

  தலைப்பு அருமை..உங்கள் வீட்டுத் தோட்டத்து மலர்களுக்கெல்லாம் தனிப்பட்ட வாசம் உண்டு. வரப்போகும் உங்கள் பதிவுகளில் அவை அருமையான வாசத்தை அள்ளி வீசும் என்பதை சொல்ல வேண்டுமா? இருப்பினும் உங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளவும்.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!
  தங்களின் வலைத்தளம் ஆரம்பித்து நாங்கு ஆண்ஃடுகள் நிறைந்து ஐந்தாம் ஆண்டு வெற்றிகரமாகத் தொடங்கியிருப்பதற்கும் தொடர்ந்து அருமையான பதிவுகள் தந்து மகிழ்விக்க இருப்பதற்கும் இனிய வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 11. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. என் பெயரும், என் வலைத்தளமும், என் பதிவுகளும் சுமார் 100 ///முறைகளுக்கு மேல் வலைச்சரத்தில், பல்வேறு வலைச்சர ஆசிரியர்களால், பல வாரங்களில், அறிமுகம் செய்யப்பட்டு, மிகவும் பாராட்டிப் புகழ்ந்து பேசப்பட்டுள்ளன. ///

  வாழ்த்துக்கள் :)வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. நந்தவனம் அழகு மலர்கள் அழகோ அழகு ..உங்க வீட்டு தோட்டமாச்சே :)
  பூஸார் தான் காவலாளியா ? ஒழுங்கா வேலை செய்கிறாரா குண்டு பூனை :)

  ReplyDelete
 14. ஆர்ப்பாட்டமின்றி அசுர சாதனையாற்றும் அரிய மனிதர் தாங்கள். தங்களுடைய படைப்புகள் வலைச்சரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவற்றை முறையாக தேதிவாரியாகத் தொகுத்து வைத்திருக்கும் செயல் ஆச்சர்யத்தை அளிக்கிறது. இந்தமுறையும் தங்களது திட்டமிடலையும் செய்நேர்த்தியையும் பிற பதிவர்களை சிறப்பிக்கும் பாங்கையும் எண்ணி வியக்கிறேன். அப்போது தங்களை அறிமுகப்படுத்திய சிலர் இப்போது வலையுலகில் முன்போல் மும்முரமாக இயங்காதவர்கள். அவர்களை மறுபடியும் இயங்கச்செய்யும் இதுபோன்ற சிறப்பான ஊக்குவிப்புகள். அழகான ஒரு முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் கோபு சார். தங்கள் கையால் பெருமைபெறப்போகும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. எதைச் செய்தாலும் புதுமையாகவும் நிறைவாகவும்
  செய்யும் தங்கள் பாணி
  தொடர்வது கண்டு மிக்க மகிழ்ச்சி
  உங்கள் வீட்டுத் (மனத் ) தோட்டத்தில்
  பூத்து இருக்க்கும் பாக்கியவான்களை அறிய
  ஆவலாக உள்ளோம்

  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. வலைச்சரத்தில் 100 முறைக்கு மேல் அறிமுகபடுத்த பட்டது மகிழ்ச்சி.
  வாழ்த்துக்கள் சார்.
  அருமையான தலைப்பில் பதிவு.
  தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. எல்கே வலைச்சர ஆசிரியராக இருந்ததே இப்போத் தான் தெரியும். நான்கு ஆண்டுகள் முடிவுக்கும் நூறு முறை அறிமுகத்துக்கும் வாழ்த்துகள். யார் யாரோ அறிமுகம் செய்திருக்கின்றனர் என்றாலும் என்னால் யாரையும் நினைவு வைத்துக் கொண்டு சொல்ல முடியவில்லை. குறித்தெல்லாம் வைத்துக் கொள்ளவும் இல்லை. :)))) உங்கள் உழைப்பு அதிசயிக்க வைக்கிறது.

  ReplyDelete
 18. அன்பின் அருமை நண்பர் வை.கோ அவர்களே

  தங்களின் பதிவுகள் அனைத்துமே பலரால் பாராட்டப் பட்ட பதிவுகள் தான். வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கும் பலரும் மனதின் அடித் தளத்தில் இருந்து அறிமுகம் மற்றும் வாழ்த்துகள் வழங்கி வலைச்சரத்தில் எழுதுவார்கள். உதட்டின் நுனியில் இருந்து வரும் வாழ்த்தல்ல - இதயத்தின் ஆத்ம பூர்வமான பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் நிறைந்த அறிமுகங்கள்.

  தாங்கள் கொடுத்து வைத்தவர்.


  தாங்கள் உள்ளிட்ட, வலைச்சர ஆசிரியர்கள், மறுமொழி அளித்தவர்கள் அனைவருக்கும் எங்களது மனங்கனிந்த பொங்கல் தின நல்வாழ்த்துகள்.

  நட்புடன் சீனா

  ReplyDelete
 19. அன்பின் அருமை நண்பர் வை.கோ அவர்களே !

  தங்களீன் பதிவுகள் அனைத்தும் பலரால் பாராட்டப் பட்ட பதிவுகள் தான். வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கும் பலரும் மனதின் அடித் தளத்தில் இருந்து அறிமுகம் மற்றும் வாழ்த்துகள் வழங்கி வலைச்சரத்தில் எழுதுவார்கள். உதட்டின் நுனியில் இருந்து வரும் வாழ்த்தல்ல. இதயத்தின் ஆத்ம பூர்வமான பாராட்டுகளூம் நல்வாழ்த்துகளூம் நிறைந்த அறிமுகங்கள். தாங்கள் கொடுத்து வைத்தவர்.

  தாங்கள் உள்ளீட்ட , வலைச்சர ஆசிரியர்கள், மறுமொழி அளித்தவர்கள், அனைவருக்கும் எங்களது மனக்கவர்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

  ReplyDelete
 20. வெளி வேலைகள் காரணமாக ஒரே அலைச்சல். அசதி. இன்றுதான் அதுவும் இந்த நள்ளிரவில்தான் இந்த தொடரை ஆழ்ந்து படிக்க நேரம் கிடைத்தது. மீதி உள்ள பதிவுகளையும் படித்து விடுவேன்.

  அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தாலும் உங்களுக்குள்ள வீட்டுத் தோட்ட ஆசையை உங்கள் பதிவிலுள்ள அந்த வண்ண மலர்கள் காட்டிவிட்டன.

  உங்களைப் பற்றிய வலைச்சர அறிமுகம், ஒரு மீள் பார்வை செய்ய உங்கள் தொடர் ஒரு வாய்ப்பு.

  ReplyDelete
 21. ஐந்தாவது பதிவு வாசித்த பின்னர்தான் மற்ற பதிவுகளை வாசிக்கிறேன்...
  நல்லதொரு தொடர் ஐயா... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. aha....
  paratta pavendiyar than.
  men melum thorattum ungal eluthu pani.
  vij

  ReplyDelete
 23. வலையுலகில் பெரிய சாதனை புரிந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 24. உங்களைப்போல யாருமே இப்படி குறிப்பெல்லாம் திட்டமிட்டு தொகுத்து சிறப்பாக வழங்கி இருக்க முடியாதுதான்

  ReplyDelete
 25. வீட்டுத்தோட்டத்தில் மணக்கும் சுவையான பொங்கலும்,
  அழகான மலர்களும் அருமை..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:48 PM

   //வீட்டுத்தோட்டத்தில் மணக்கும் சுவையான பொங்கலும்,
   அழகான மலர்களும் அருமை..//

   வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

   Delete
 26. எப்பூடி இப்பூடில்லா தேடி தேடி நெனப்புல வச்சி பதிவு போடுரீங்க. மொத காரணம் ஒங்கட ஆர்வம் உற்சாகம் சுறுசுறப்புனுகிட்டு காரணங்க சொல்லிகினே போலா தா. அதைல்லா நடமுறைல பண்ணிகிட்டு வாரது நீங்க மட்டுதா. அளகான தலைப்பு பொறுத்தமா படங்களயும் இணச்சு பதிவ கலர் ஃபுல்லாக்கிடுரீங்க.நல்லா இருக்குது.

  ReplyDelete
 27. உங்களின் அர்ப்பணிப்பு அசாதாரணமானதுதான்

  ReplyDelete
 28. 19ம் நாளிலேயே வலைச்சர அறிமுகமா??? அருமை. வாழ்த்து வண்ணமயம்.

  ReplyDelete
 29. சாதனையாளர் சார் நீங்கள்!

  ReplyDelete