2
ஸ்ரீராமஜயம்
[ 29.12.2013 ஞாயிறு
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
20வது ஆராதனை. ]
பஞ்சாக்ஷரம்:
நம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம்.
அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது.
நாலு வேதங்களில் இரண்டாவது ’யஜுஸ்’. அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ்.
இந்த யஜுர் வேதம், சுக்ல யஜுர், கிருஷ்ண யஜுர் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும், ரிக், சுக்ல யஜுஸ், கிருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வனம் என்கிற ஐந்து பகுதிகளின் மத்தியில் வருவது ‘கிருஷ்ண யஜுஸ்’
இந்த கிருஷ்ண யஜுர் வேதத்தின் மத்ய பாகம் என்பது, அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம். இங்கே தான் வருகிறது ஸ்ரீருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வய அக்ஷரமான ‘சிவ’.
உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்பொருள் என்கிறர்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை, திருவள்ளுவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார்.
வேதங்களையெல்லாம் ஒரு சரீரமாக மெய்யாக வைத்துக்கொண்டால், அதில் உயிராக மெய்ப்பொருளாக இருப்பது, சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால், அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்:
”வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாத[ன்] நாமம் நமசிவாயவே ”
அவ்வைப்பாட்டி செய்த ‘நல்வழி’ என்னும் நூலில், ’சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்[கு] அவாயம் [அபாயம்] ஒரு நாளும் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்.
சிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயிணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயிணி தான் பிராணத்தியாகம் செய்யும் சந்தவேசத்தில் ‘த்வயக்ஷரம் நாம கிரா’ என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, ‘சிவ’ என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும், என்கிறாள்.
‘சிவ சிவ என்கிலர் தீவினையாளர்’ என்று திருமூலரும் திருமந்திரத்தில் சொல்வதும் இதைத்தான்.
oooooOooooo
[ 1 ]
மிட்னாப்பூர் சிறையிலிருந்த
சுதந்திரப் போராட்டத்
தியாகிகளுக்கு அருளியது
1935 அக்டோபர் 27 ஆம் தேதி அமாவசை, கல்கத்தாவுக்கு தென்மேற்கில் சுமார் அறுபது மைல் தூரத்தில் உள்ள மிட்னாபூருக்கு விஜயமானார்கள்.
அப்போது அவ்வூரில் பயங்கர இயக்கங்கள் தோன்றி வந்தன.
மிட்னாபூர் மக்கள் எவ்வகையிலும் தங்கள் ஊருக்கும் ஸ்வாமிகளை அழைத்து வர வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
ஒரு வரவேற்பு கமிட்டி நியமிக்கப்பட்டது.
அப்போது அவ்வூரில் கடும் ஊரடங்கு உத்தரவு. இரவு ஒன்பது மணிக்கு மேல் வீதிகளில் எவரும் நடமாடக்கூடாது என்பது சர்க்கார் உத்தரவு.
ஸ்வாமிகள் அவ்வூர் சென்று மக்களை ஆசீர்வதிக்க, அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
ஸ்வாமிகள் அவ்வூருக்கு விஜயம் செய்த அன்றைய தினம் மட்டும் ஊரடங்கு சட்டத்தின் சில ஷரத்துகளை ஜில்லா அதிகாரிகள் தளர்த்தி மக்களை மகிழ்விக்க செய்தனர்.
பல நாட்களாய் கிடைக்காத சுதந்திரம், ஒரு சுதந்திர திருநாளாகவே கொண்டாடினர், அவ்வூர் மக்கள்.
ஊரெங்கும் ஒரே தோரணம், பந்தல் மயம், புஷ்பாலங்காரம்.
1935 அக்டோபர் 27 காலை, ஸ்வாமிகள் அவ்வூர் விஜயம்.
முக்கிய வீதிகளில் பட்டண பிரவேஸ.
பன்னிரண்டு இடங்களில் கோலாஹலமான வரவேற்பு.
சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் பதிலளித்து ஸ்வாமிகள் தர்மம், பக்தி பற்றி உபதேசம் செய்தார்கள். அதன் பின், பூஜை, தீர்த்த பிரஸாத விநியோகம்.
அவ்வூரிலுள்ள சிறைக்கும் செய்தி பரவியது. நாட்டின் சுதந்திரத்திற்கு தங்கள் வாழ்வையே அர்ப்பணம் செய்த தேச பக்தர்கள் பலர் அச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது. கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், இப்படி பற்பல தொழில் புரிவோர். அவர்கள் அனைவரும் தேச விடுதலைக்கு தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள். அவர்களில் சிலருக்கு ஸ்வாமிகளை தரிஸிக்க வேண்டும் என்னும் பேரவா.
சிறை அதிகாரி ஓர் ஆங்கிலேயர். அவரிடம் தங்கள் எண்ணத்தை விண்ணப்பித்தனர். அவருக்கும் தெரிந்திருந்தது, மதத்தலைவர் ஒருவர் அவ்வூர் விஜயம் செய்திருந்தது.
அக்கைதிகளின் மத உணர்ச்சியை மதித்து சில நிபந்தனைகள் பேரில், அவர்களை அவ்வதிகாரி வெளியில் சென்று வர அனுமதித்தார்.
கூட்டு கிளிகள் வெளியேறியவுடன் பறந்து விடாமால் இருக்க, அவர்களை கண்காணிக்க கையில் துப்பாக்கி ஏந்திய காவல் வீரர்கள் அவர்களை தொடர்ந்து வந்தனர்.
மாலை ஆறு மணிக்குள் சிறைக்குள் திரும்ப வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு இளைஞர்களான சில காவல் கைதிகள் ஸ்வாமிகள் முகாம் வந்து சேர்ந்தனர்.
மாலை மணி ஐந்தரை, சிறிது போதுக்கு முன் தான், ஸ்வாமிகள் ஒரு தனிமையான இடத்துக்கு நித்திய பூஜை முடிந்து சற்றே ஓய்வெடுக்க சென்றிந்தார்கள்.
அச்சமயம் ஸ்வாமிகளுக்கு சிரமம் கொடுக்க மடத்தின் அதிகாரிகள் விரும்பவில்லை. ஆயினும் எதிர்பார்த்திருந்தனர்.
அதுவரை காத்திருக்கும் படி, கைதிகளிடம் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறுமணிக்குள் சிறை திரும்ப வேண்டும், இல்லையெனில் பிரத்யேக தண்டனை கிடைக்கும் என்று கூறி, மிகுந்த ஏமாற்றத்துடன் சிறை நோக்கி திரும்பினர்.
சில நிமிடங்களில் ஸ்வாமிகள் தாமாகவே, வெளியில் வந்தார். மடத்தின் அதிகாரி, சற்று முன் கைதிகள் தரிஸசனத்துக்கு வந்த விஷயமும், சற்று முன் தான் திரும்பினர் என்றும், சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
ஸ்வாமிகள் உடனே அவர்களை திரும்ப அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார்.
அவர்கள் வந்தவுடன், ஸ்வாமிகளை வணங்கி, நாடு சுதந்திரம் அடைந்து மக்கள் யாவரும் துன்பம் நீங்கியவர்களாகி இன்பமுற வாழ வேண்டும் என ஸ்வாமிகள் அனுக்கிரகம் புரிய வேண்டும் எனவும் அதுவே அவர்கள் கோரிக்கை என்று கூறி ஸ்வாமிகளை வணங்கி விரைவில் சிறை திரும்பினர், ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்ற மகிழ்ச்சியுடன்.
ஸ்வாமிகள் அந்த கைதிகளின் தேச பக்தியை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றார்கள்.
இப்போது சொல்லுங்கள் பக்த அன்பர்களே ......
நமஸ்காரங்கள் யாருக்கெல்லாம்?
ஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு… இல்லையா?
oooooOooooo
[ 2 ]
நீ கைங்கர்யம் பண்றது
அந்த பரமேஸ்வரனுக்கே தான்
இன்னொரு சம்பவம். சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் அருளிய உரை…
மிட்னாப்பூர் பெரியவா
மிட்னாப்பூரில் ஒரு துறவி பெரியவாளை தரிஸிசித்தார்.
”மறு தரிஸனம் எப்போது?” என்று அந்த துறவி உள்ளம் உருகி கேட்ட பொழுது, ”தக்ஷண தேசத்தில் இன்னும் பதினைந்து வருஷங்கள் கழித்து வந்து என்னைப் பார் ” என்றது அந்த பரம்பொருள்.
அந்த துறவியும் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டே இருந்தார்…எப்பொழுது பதினைந்து வருஷங்கள் முடியும் என்று…
அந்த நாளும் வந்தது…
விழுப்புரம் அருகில், முகாம். அன்று ஐயன் வடவாம்பலம் சென்றிருந்தார்.
இந்த துறவி வந்து ஐயனைக் காணாது தாம் தூம் என்று குதித்து, ”என்னை வரச் சொல்லிவிட்டு இங்கே இல்லை என்றால் எப்படி…நான் போகிறேன்…” என்று குதி குதி என்று குதித்தார்.
ஐயனுக்கு பணிவிடை செய்யும் அன்பர் ஒருவர், ”நீங்கள் துறவி, சற்று காத்திருங்கள். இதோ, இப்போது வந்து விடுவார். நீங்கள் கோபம் காட்டலாமா என்று கூறி இருக்கிறார். நீங்கள் என்ன கொக்கா?” என்றும் விசனப் பட்டிருக்கிறார்.
இதற்கு இடையே, ஐயன் வெகு வேகமாக வேகு வேகு என்று வயல் வரப்புகள், கரும்புக் காடுகள் வழியாக மிக வேகமாக நடந்து வந்து முகாம் அடைந்தார்.
அந்த துறவிக்கு அத்தனை சந்தோஷம். எங்கேயோ, எப்போதோ, கொடுத்த வாக்கை காப்பாற்ற இன்று இத்தனை சிரமப்பட்டுக் கொண்டு வந்து தனக்கு தரிசனம் கொடுக்கும் மஹா பிரபுவிடம் தர்சனம் பெற்று திரும்பப் போகிறார்.
எந்த அடியார் சற்று முன் இந்த மிட்னாப்பூர் துறவியிடம் கோபம் கொண்டாரோ, அவரையே அழைத்து, ஐயன், ”நீ இவருக்கு வழியிலே ஏதாவது வயித்துக்கு வாங்கிக் கொடுத்து, சேந்தனூர் ரயிலடியிலே வண்டி ஏத்தி விட்டுடு” என்று கூறி அனுப்பி வைத்தார்.
வழியில் அந்த மிட்னாப்பூர் துறவி கேட்டார், நம் அடியாரிடம்…
”நீ யாருக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே தெரியுமா? மத்தவாளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா கிடைக்காத பாக்கியம். நீ பக்கத்தில் இருந்து கைங்கர்யம் பண்றே. நான் பதினைந்து வருஷம் கழிச்சு இந்த தர்சனதுக்கு ஏங்கி இன்னிக்கு கிடைச்சுது.
நீ கைங்கர்யம் பண்றது அந்த பரமேஸ்வரனுக்கே தான்.”
[Thanks to Mr. MAHESH - Sage of Kanchi 27.10.2013]
oooooOooooo
[ 3 ]
மஹாபெரியவாளின் தபஸ் மஹிமை
எப்போ யாத்ரா போனாலும் பெரியவா வழியிலே இருக்கிற எதாவது சின்ன கிராமத்திலே தான் தங்குவா.
குண்டக்கல் வழி போகும்போது ஒருதடவை ’ஹகரி’ என்கிற கிராமத்திலே தங்கினா. அந்த இடதிலேருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தூரத்திலே தான் ஒரு சிவன் கோவில் இருந்தது.
கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆறு வறண்டு போய் இருந்தது. கரையிலே ஒரு பிரம்மாண்ட ஆல மரம். ரம்யமா இருந்த அந்த இடம் பெரியவாளுக்கு பிடிச்சுது. இங்கேயே தங்கலாம் என்று முடிவு எடுத்தா.
அந்த ஊர் ஒரு பொட்டல் காடு. அங்கே ஆத்திலே தண்ணி இருந்த காலத்திலே கரும்பு விளைந்தது. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. அந்தக் கம்பனி இழுத்து பறிச்சுண்டு இருந்தது.
அதன் ஜெனரல் மேனேஜர் நம்மூர் ஆள். தஞ்சாவூர்காரர். பெரியவா வந்திருக்கா என்று தெரிந்ததும் மனிஷன் ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.
“நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? ” என்று தெய்வம் அவரை கேட்டது.
ஜெனரல் மேனேஜர் ஆடி போயிட்டார். ” அபசாரம். இது நாங்கள் செஞ்ச புண்யம். கட்டளை இடுங்கோ. என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்றோம்”
உடனே மூங்கில் கழிகள் தென்னை ஓலை எல்லாம் லாரி லாரியா வந்து இறங்கித்து. ஒரு ஆயிரம் பேர் கொள்ள பெரிய கொட்டகை தயார் ஆயிற்று.
வேலை நடக்கும்போது இரவெல்லாம் பெரியவா தூங்கவே இல்லை. சிவன் கோயில் அழகும் ரம்யமான சூழ்நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வானம் பொய்த்து வருஷ கணக்கா பூமியும் ஆறும் வறண்டு கிடக்கிறதே என்று பெரியவாளின் மனம் உடைந்து போயிருந்தது.
ராத்திரி பூரா தூங்காம இருந்து மறுநாள் பெரியவா யாரோடும் பேசவில்லை. அவர் பார்வை பூரா அந்த வறண்ட ஆற்றின் மீது தான் இருந்தது. சாப்பிடவும் இல்லை.
சாயந்திரம் திடீர் என்று எழுந்து அந்த வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார்.
அருகில் இருந்தவர்களிடம் ” நான் சந்தியா ஜபம் பண்ணபோறேன். யாரவது பார்க்க வந்தா நாளைக்கு வர சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டு ஜபம் தொடங்கினார். இருட்டி விட்டதால் எங்கிருந்தோ பெட்ரோமாக்ஸ் ஹரிக்கன் விளக்கெல்லாம் கொண்டு வைத்தார்கள்.
அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது.
நான் ஓடிசென்று ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவை தள்ளிக்கொண்டு பெரியவா கிட்ட போய் நிறுத்தி அதில் அமரச்செய்தேன். ஒரு குடை கொண்டுவந்து பெரியவாளுக்கு தலைக்கு மேல் பிடித்துகொண்டு நின்றேன். விடிகாலை 1 . 30 வரை விடாது பெய்தது.
ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார்.
அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.
Thanks to Varagooran Narayanan and
Mr M J Raman [Manakkal]
for sharing this on 22.12.2013
ஒரு வரவேற்பு கமிட்டி நியமிக்கப்பட்டது.
அப்போது அவ்வூரில் கடும் ஊரடங்கு உத்தரவு. இரவு ஒன்பது மணிக்கு மேல் வீதிகளில் எவரும் நடமாடக்கூடாது என்பது சர்க்கார் உத்தரவு.
ஸ்வாமிகள் அவ்வூருக்கு விஜயம் செய்த அன்றைய தினம் மட்டும் ஊரடங்கு சட்டத்தின் சில ஷரத்துகளை ஜில்லா அதிகாரிகள் தளர்த்தி மக்களை மகிழ்விக்க செய்தனர்.
பல நாட்களாய் கிடைக்காத சுதந்திரம், ஒரு சுதந்திர திருநாளாகவே கொண்டாடினர், அவ்வூர் மக்கள்.
முக்கிய வீதிகளில் பட்டண பிரவேஸ.
பன்னிரண்டு இடங்களில் கோலாஹலமான வரவேற்பு.
சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் பதிலளித்து ஸ்வாமிகள் தர்மம், பக்தி பற்றி உபதேசம் செய்தார்கள். அதன் பின், பூஜை, தீர்த்த பிரஸாத விநியோகம்.
அக்கைதிகளின் மத உணர்ச்சியை மதித்து சில நிபந்தனைகள் பேரில், அவர்களை அவ்வதிகாரி வெளியில் சென்று வர அனுமதித்தார்.
மாலை ஆறு மணிக்குள் சிறைக்குள் திரும்ப வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு இளைஞர்களான சில காவல் கைதிகள் ஸ்வாமிகள் முகாம் வந்து சேர்ந்தனர்.
அச்சமயம் ஸ்வாமிகளுக்கு சிரமம் கொடுக்க மடத்தின் அதிகாரிகள் விரும்பவில்லை. ஆயினும் எதிர்பார்த்திருந்தனர்.
அதுவரை காத்திருக்கும் படி, கைதிகளிடம் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில நிமிடங்களில் ஸ்வாமிகள் தாமாகவே, வெளியில் வந்தார். மடத்தின் அதிகாரி, சற்று முன் கைதிகள் தரிஸசனத்துக்கு வந்த விஷயமும், சற்று முன் தான் திரும்பினர் என்றும், சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
ஸ்வாமிகள் உடனே அவர்களை திரும்ப அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார்.
நமஸ்காரங்கள் யாருக்கெல்லாம்?
ஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு… இல்லையா?
oooooOooooo
[ 2 ]
நீ கைங்கர்யம் பண்றது
அந்த பரமேஸ்வரனுக்கே தான்
”மறு தரிஸனம் எப்போது?” என்று அந்த துறவி உள்ளம் உருகி கேட்ட பொழுது, ”தக்ஷண தேசத்தில் இன்னும் பதினைந்து வருஷங்கள் கழித்து வந்து என்னைப் பார் ” என்றது அந்த பரம்பொருள்.
இந்த துறவி வந்து ஐயனைக் காணாது தாம் தூம் என்று குதித்து, ”என்னை வரச் சொல்லிவிட்டு இங்கே இல்லை என்றால் எப்படி…நான் போகிறேன்…” என்று குதி குதி என்று குதித்தார்.
”நீ யாருக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே தெரியுமா? மத்தவாளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா கிடைக்காத பாக்கியம். நீ பக்கத்தில் இருந்து கைங்கர்யம் பண்றே. நான் பதினைந்து வருஷம் கழிச்சு இந்த தர்சனதுக்கு ஏங்கி இன்னிக்கு கிடைச்சுது.
oooooOooooo
[ 3 ]
மஹாபெரியவாளின் தபஸ் மஹிமை
எப்போ யாத்ரா போனாலும் பெரியவா வழியிலே இருக்கிற எதாவது சின்ன கிராமத்திலே தான் தங்குவா.
குண்டக்கல் வழி போகும்போது ஒருதடவை ’ஹகரி’ என்கிற கிராமத்திலே தங்கினா. அந்த இடதிலேருந்து ஒரு 10 கிலோ மீட்டர் தூரத்திலே தான் ஒரு சிவன் கோவில் இருந்தது.
கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆறு வறண்டு போய் இருந்தது. கரையிலே ஒரு பிரம்மாண்ட ஆல மரம். ரம்யமா இருந்த அந்த இடம் பெரியவாளுக்கு பிடிச்சுது. இங்கேயே தங்கலாம் என்று முடிவு எடுத்தா.
அந்த ஊர் ஒரு பொட்டல் காடு. அங்கே ஆத்திலே தண்ணி இருந்த காலத்திலே கரும்பு விளைந்தது. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. அந்தக் கம்பனி இழுத்து பறிச்சுண்டு இருந்தது.
அதன் ஜெனரல் மேனேஜர் நம்மூர் ஆள். தஞ்சாவூர்காரர். பெரியவா வந்திருக்கா என்று தெரிந்ததும் மனிஷன் ஓடி வந்து நமஸ்காரம் பண்ணினார்.
“நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? ” என்று தெய்வம் அவரை கேட்டது.
ஜெனரல் மேனேஜர் ஆடி போயிட்டார். ” அபசாரம். இது நாங்கள் செஞ்ச புண்யம். கட்டளை இடுங்கோ. என்ன செய்யணுமோ ஏற்பாடு பண்றோம்”
உடனே மூங்கில் கழிகள் தென்னை ஓலை எல்லாம் லாரி லாரியா வந்து இறங்கித்து. ஒரு ஆயிரம் பேர் கொள்ள பெரிய கொட்டகை தயார் ஆயிற்று.
வேலை நடக்கும்போது இரவெல்லாம் பெரியவா தூங்கவே இல்லை. சிவன் கோயில் அழகும் ரம்யமான சூழ்நிலையும் மனதை கொள்ளை கொண்டாலும் வானம் பொய்த்து வருஷ கணக்கா பூமியும் ஆறும் வறண்டு கிடக்கிறதே என்று பெரியவாளின் மனம் உடைந்து போயிருந்தது.
ராத்திரி பூரா தூங்காம இருந்து மறுநாள் பெரியவா யாரோடும் பேசவில்லை. அவர் பார்வை பூரா அந்த வறண்ட ஆற்றின் மீது தான் இருந்தது. சாப்பிடவும் இல்லை.
சாயந்திரம் திடீர் என்று எழுந்து அந்த வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார்.
அருகில் இருந்தவர்களிடம் ” நான் சந்தியா ஜபம் பண்ணபோறேன். யாரவது பார்க்க வந்தா நாளைக்கு வர சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டு ஜபம் தொடங்கினார். இருட்டி விட்டதால் எங்கிருந்தோ பெட்ரோமாக்ஸ் ஹரிக்கன் விளக்கெல்லாம் கொண்டு வைத்தார்கள்.
அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது.
நான் ஓடிசென்று ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவை தள்ளிக்கொண்டு பெரியவா கிட்ட போய் நிறுத்தி அதில் அமரச்செய்தேன். ஒரு குடை கொண்டுவந்து பெரியவாளுக்கு தலைக்கு மேல் பிடித்துகொண்டு நின்றேன். விடிகாலை 1 . 30 வரை விடாது பெய்தது.
ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார்.
அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.
Thanks to Varagooran Narayanan and
Mr M J Raman [Manakkal]
for sharing this on 22.12.2013
|
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி
மிகச்சிறிய இடைவேளைக்குப்பின்
03.01.2014 வெள்ளிக்கிழமை வெளியாகும்.
01.01.2014 ஆங்கிலப் புத்தாண்டுக்காக
வேறொரு பதிவு வெளியாக உள்ளது
காணத்தவறாதீர்கள்.
03.01.2014 வெள்ளிக்கிழமை வெளியாகும்.
01.01.2014 ஆங்கிலப் புத்தாண்டுக்காக
வேறொரு பதிவு வெளியாக உள்ளது
காணத்தவறாதீர்கள்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
எல்லாமே அருமை...
பதிலளிநீக்குபுதிய பதிவா... காத்திருக்கிறோம்...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு. மழையை வரவழைத்து அப்பூமியை குளிரவைப்பதற்காகவே அங்கு தங்கினாரோ...
பதிலளிநீக்குபாரதம், ஸ்ரீமஹாபெரியவா போன்ற தபஸ்விகளாலேயே புனிதமுற்று வாழ்கிறது!!. இறைவனின் அம்சமாகத் தோன்றி, நம்மையெல்லாம் காக்கும் அந்த மஹானின் கருணையை என்ன சொல்ல?!!'பெருங்கருணைப் பேராறு' என்று இறைவனைப் புகழ்வதும் இதனாலன்றோ!!.. அருமையான பகிர்வுக்கு நன்றி ஐயா!!
பதிலளிநீக்குஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு… இல்லையா?//
பதிலளிநீக்குநமஸ்காரம் செய்ய வேண்டியவர்கள் தான். நமஸ்காரங்கள் பலமுறை சொல்ல வேண்டும்.
//நீ கைங்கர்யம் பண்றது அந்த பரமேஸ்வரனுக்கே தான்.”//
நல்ல கொடுப்பினை.
//வறண்ட ஆற்றின் நடுவே சுடும் மண்ணில் நின்றுகொண்டார். என்ன நினைத்தாரோ. ஆற்றின் கரையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் மண்ணில் நடந்துவிட்டு திரும்பினார்.//
மஹானின் பொற்பாதம் நடந்த ஆற்றுமண் !
//ஆற்றில் நீர் ஓடியது. மறுநாள் காட்டு தீ போல செய்தி பரவி ஊர் மக்கள் அனைவரும் பெரியவாளுடைய மந்திர சக்தியை வியந்து அலைமோதினர். பெரியவாளும் பேசாமல் சந்தோஷத்தோடு வியாச பூஜா பண்ணி முடித்தார்.//
மஹாபெரியவா வியாச பூஜா, அவர் கருணை இரண்டும் சேர்ந்து கருணை மழை பெய்து ஊருக்கு நலம் சேர்த்தது.
வறண்ட பூமி மகிழ்ந்தது.
நல்ல அருமையான பகிர்வு.
வாழ்த்துக்கள்.
நன்றி.
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குபஞ்சாகஷ்ரம் பதிவு அருமை - சிவாய நம - ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பஞ்சாக்ஷரம் விளக்கம் மிகவும் அருமை... மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவங்கள்... வறண்ட ஊருக்கு மழைக்காகவே தங்கியது சிறப்பு... நன்றி ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
அன்பின் வை.கோ - சிறைக் கைதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளைச் சந்திக்க விரும்பியதும், சிறை அதிகாரி அனுமதி அளித்தத்தும், அவர்கள் வந்த போது - தரிசனம் கிட்டாததும் - மறுபடி பெரியவா அழைத்துப் பேசியதும் ...... 1935ல் - ஆங்கிலேயர் ஆட்சியில் இதெல்லாம் நடந்திருக்கின்றன.
பதிலளிநீக்கு//
நமஸ்காரங்கள் யாருக்கெல்லாம்?
ஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு… இல்லையா?
//
நல்வாழ்த்துகள் வை.கோ
நட்புடன் சீனா
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குகைங்கர்யம் பண்றது பரமேஸ்வரனுக்கே - அருமையான் சிந்தனை - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணுவது பரமேஸ்வரனுக்குப் பண்ணுவது போலாகும். அருமை அருமை
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்ப்ன் வை.கோ
பதிலளிநீக்கு//
அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.
// ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா மகாப் பெரியவாதான் - வறண்ட ஆற்றின் நடுவே சுடு மணலில் நின்று தவம் செய்து மழையைக் கொண்டு வந்த அவரின் செயலை என்ன வென்று கூறுவது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பஞ்சாக்ஷரம்:
பதிலளிநீக்குசிவா நாமத்தின் மகிமைகளை அழகாக தொகுத்து தந்துள்ளார் பெரியவா
படித்து இன்புறுவோம். நாமத்தை சொல்லி கடைத்தேருவோம்.
மஹாபெரியவாளின் தபஸ் மஹிமை
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற வள்ளுவனின் வாக்கை மெய்ப்பித்த பெரியவா புகழ் இவ்வையகம் உள்ளமட்டும் வாழி வாழி
நீ கைங்கர்யம் பண்றது
அந்த பரமேஸ்வரனுக்கே தான்
பாம்பின் கால் பாம்பறியும்.
ஒரு ஞானியின் பெருமையை ஒரு ஞானியே அறியமுடியும்
மிட்னாப்பூர் சிறையிலிருந்த
சுதந்திரப் போராட்டத்
தியாகிகளுக்கு அருளியது
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபடுபவர்கள் தேசபக்தர்கள்
நம் அனைவரின் ஆன்ம விடுதலைக்காக பாடுபட்டவர் பெரியவா
இதுவரை அறியாத வரலாறு!..
பதிலளிநீக்குஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு…
மீண்டும் ஒரு நமஸ்காரம்!..
very nice post and good informations :)
பதிலளிநீக்குhttp://eezy-kitchen.blogspot.com/
வேதங்களையெல்லாம் ஒரு சரீரமாக மெய்யாக வைத்துக்கொண்டால், அதில் உயிராக மெய்ப்பொருளாக இருப்பது, சிவநாமா
பதிலளிநீக்குசிவநாம மகிமையை சிறப்பாக விளக்கிய
அருமையான பகிர்வுகள்..!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா. தாங்கள் தரும் அருமையான நல்ல செய்திகளுக்கு நன்றி பல.
பதிலளிநீக்குஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு… இல்லையா?
பதிலளிநீக்குநமஸ்கார சாம்ராஜ்ஜியம் நடத்தி உணர்த்திய
நடமாடும் தெய்வம்..!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா. தாங்கள் தரும் அருமையான நல்ல செய்திகளுக்கு நன்றி பல.
பதிலளிநீக்கு“நான் வியாசபூஜா பண்ணலாம்னு நினைக்கிறன். கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா? ” என்று தெய்வம் அவரை கேட்டது.
பதிலளிநீக்குகருணையை மழையாகப் பொழிந்த
கருணாமூர்த்தியின் பிரமிக்கவைக்கும் சக்தி..!
அந்த வறண்ட ஊருக்கு மழைக்காகவே பெரியவா அங்கு தங்க முடிவெடுத்து வியாச பூஜா ஜபம் பண்ணி தன் தபஸ் மகிமையால் அதை நிறைவேற்றினார்.
பதிலளிநீக்குமகிமைமிக்க அமுத மழை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!
சிறைச்சாலை கைதிகளுக்கு தரிசனம் கொடுத்ததும், மழையை வரவழைக்க கடும் வெய்யிலில் நடந்துபோய்விட்டு வந்து ஜபம் செய்ததும் அவரது உன்னதத்தைக் காட்டுகிறது.
பதிலளிநீக்குமிட்னாபூர் சிறை, மிட்னாபூர் துறவி, ககரி கிராமத்தில் மழையும் வறண்ட ஆற்றில் தண்ணீரும் என்று பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஎவ்வளவுதெய்வ சக்தி இருந்தால் மழையை வருவிக்க முடியும்.அவரின் மஹிமையே அலாதிதான்.
பதிலளிநீக்குசிவ பஞ்சாக்ஷரத்தின் மகிமை நாராயணா என்னும் நாவென்ன நாவே! நமசிவாயா என்னும் நாவென்ன நாவே.
ஒம் நமசிவாயா.இன்னும் பல அறிய விஷயங்கள் அடங்கிய பதிவை படித்து மகிழ்ந்தேன். அன்புடன்
Very great post.Thanks for sharing such wonderful explanations
பதிலளிநீக்குமனதை நெகிழ்விக்கும் நினைவுக்குறிப்புகள். படித்துக்கொண்டே இருக்கவேண்டும்போல் இருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபஞ்சாக்ஷரத்தின் மகிமையும் அருள் வாக்குகளும் மிக அருமை. தொடர்ந்து சந்திப்போம்.....
பதிலளிநீக்குபஞ்சாக்ஷர மஹிமை மஹாபெரியவாளின் அருமையான விளக்கம்.மிட்னாப்பூர் சிறைஅதிகாரி தியாகிகளுக்காக தரிஸனம்’,துறவிக்குபலவருஷங்கள்கழித்து,தரிசனம்,வரண்டநதியில்,நீர்ப்பெருக்கு,உலகநன்மைக்காகவே வாழ்ந்த நம் மனதில் வாழுகின்ற மஹாபெரியவாள் திருவடி போற்றி. நன்றி
பதிலளிநீக்குமஹாபெரியவாளின் அருட்கண் பார்வை பட்டால் பட்ட மரமும் துளிர்க்காதோ? அற்புதங்கள் நிகழ்த்திய மஹான் அவர்! அரிய தகவல்கள் அடங்கிய பதிவு! பகிர்விற்கு நன்றி ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்! நன்றி ஐயா!
பதிலளிநீக்குபஞ்சாக்ஷரம் விளக்கம் மிகவும் அருமை.
பதிலளிநீக்குஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!.
அருள் மழையில் நனைகிறோம்..
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள். நல்ல உள்ளம் வாழ்க!
பதிலளிநீக்குHappy New Year Sir...
பதிலளிநீக்குதெரியாத புதிய செய்திகள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபெரியவர் வாழ்க்கை நிகழ்வுகளை ஒரு டைஜெஸ்ட் போல் வெளியிடுவது பாராட்டத்தக்கது.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபஞ்சாஷரம் பற்றிய விளக்கம் அருமை..புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!!
பதிலளிநீக்குசிறைக் கைதிகளுக்கு விடுதலைப் போராட்ட சமயத்தில் தரினம் தந்த்து தாகிகளுக்கு பெருமகிழ்ச்சியளித்திருக்கும்.
பதிலளிநீக்குமஹா பெரியவரின் அருள் மழையாகப் பொழிந்து வரும் உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்..
எவ்வித பேதமும் பாராமல் அனைவருக்கும் அருளிய பெரியவாளின் மஹிமை..... சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள்!!
பதிலளிநீக்குஆஹா,
பதிலளிநீக்குஎன்னே பெரியவாளின் காருண்யம்.
நன்றி ஐயா நல்ல பதிவுக்கு
நல்லவா நெனச்சா அது உடனே நடக்கும்.
பதிலளிநீக்குமுனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:
நீக்குஅன்புடையீர்,
வணக்கம்.
31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 டிஸம்பர் வரையிலான முதல் மூன்று வருடங்களில் [முதல் 36 மாதங்களில்] என்னால் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் { 200+116+142=458 } தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. ஐயா.
இந்த என் புதிய போட்டி ஆரம்பித்து இரண்டே மாதங்கள் முடிவதற்குள் தாங்கள் பேரெழுச்சியுடன் என்னுடைய மூன்று வருட [36 மாத] பதிவுகள் அனைத்தையும் படித்து, பின்னூட்டமிட்டுள்ளது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.
இதே ஸ்பீடில் தாங்கள் போனால் மேலும் ஓரிரு மாதங்களிலேயே என் அனைத்து 750 பதிவுகளிலும் தங்கள் பின்னூட்டங்கள் இடம்பெற்று விடக்கூடும்.
முற்றிலும் தாங்கள் சீக்கரமாக முடித்துவிட்டால் அதன்பிறகு தங்களுக்கும் எனக்கும் படு போர் அடித்துவிடக்கூடிய ஆபத்தும் இதில் உள்ளது ஐயா. :)
தினமும் நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு எல்லைக்குள் இருந்து வர வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் ஐயா.
போட்டி முடிய இன்னும் முழுசாக ஏழு மாத கால அவகாசம் உள்ளது ஐயா. அதனால் சற்றே பொறுமையாக தினமும் கொஞ்சம் கொஞ்சமாக ஊன்றிப்படித்து விட்டு, மேலும் ஒரு நான்கு வார்த்தைகளாவது சேர்த்து, :) பின்னூட்டங்கள் கொடுங்கள், ஐயா.
போட்டியில் கலந்துகொண்டுவரும் பதிவர்களில் தாங்களே இன்றைய தேதியில் முன்னணி வேட்பாளராகத் திகழ்ந்து வருகிறீர்கள். :)
பேரெழுச்சி மிக்க தாங்கள் இறுதி வெற்றியும், பரிசுத்தொகையும் பெறப்போவது சர்வ நிச்சயம் என என்னால் இப்போதே அடித்துச் சொல்ல முடியும். அதற்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன், சற்றே பொறுமையாக தினமும் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள மற்ற 15 மாதப்பதிவுகளுக்கும் (2014 full + 2015 upto March) கொஞ்சம் விரிவாகக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
===================================
மேலும் ஒரு அன்பான வேண்டுகோள்:
===================================
வரும் 01.06.2015 முதல் 05.07.2015 வரை தொடர்ச்சியாக ஓர் 35 நாட்களுக்கு [அதாவது ஐந்து வாரங்களுக்கு] வலைச்சர ஆசிரியராக அடியேன் நியமிக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அதுபற்றி உறுதியானதும் இந்தமாத இறுதி நாளில் தங்களுக்கு என்னிடமிருந்து தகவல் வரும். அவ்வாறாயின் தினமும் அந்த 35 நாட்களுக்கும் மறக்காமல், அங்கு வலைச்சரப் பக்கமும் வருகை தந்து கருத்தளித்து மகிழ்விக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதில் ஒருநாள் தங்கள் வலைத்தளத்தினைப்பற்றிய சிறப்புச் செய்திகளும் நிச்சயமாக இடம் பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன் VGK
கண்டிப்பாக வருகிறேன். வந்து உங்கள் வலைச்சர அலசல்களை ரசித்துப் புசித்து பின்னேப்பங்களைப் /பின்னூட்டங்களைப் போடுகிறேன்.
நீக்குபழனி. கந்தசாமி May 20, 2015 at 6:40 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//கண்டிப்பாக வருகிறேன். வந்து உங்கள் வலைச்சர அலசல்களை ரசித்துப் புசித்து பின்னேப்பங்களைப் /பின்னூட்டங்களைப் போடுகிறேன்.//
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, சார்.
கையோடு கோயம்புத்தூர் பதிவர்கள் எல்லோரையும் உங்களுடன் கூடவே அழைச்சுட்டு வந்துடுங்க, ப்ளீஸ். :)
பஞ்சாடஷர மகிமை பெரியவா அற்புதமா சொல்லிட்டா
பதிலளிநீக்குபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,
நீக்குவணக்கம்மா.
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 டிஸம்பர் வரை முதல் மூன்று வருடப் [36 மாதப்] பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
அறிவிக்கப்பட்டுள்ள 51 மாதங்களில் இன்னும் 15 மாதங்கள் மட்டுமே பாக்கியுள்ளன. மொத்தப்பதிவுகளான 750ல் 458 பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் அளித்து முடித்து விட்டீர்கள். இன்னும் மிகச்சுலபமான ஜஸ்ட் 292 பதிவுகள் மட்டுமே பாக்கியுள்ளன.
மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் கோபு
// ‘சிவ சிவ என்கிலர் தீவினையாளர்’ என்று திருமூலரும் திருமந்திரத்தில் சொல்வதும் இதைத்தான்.//
பதிலளிநீக்குதென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
//
ஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு… இல்லையா?//
ஆமாம், ஆமாம், ஆமாம் ஐயா
// ”நீ யாருக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே தெரியுமா? மத்தவாளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா கிடைக்காத பாக்கியம். நீ பக்கத்தில் இருந்து கைங்கர்யம் பண்றே. நான் பதினைந்து வருஷம் கழிச்சு இந்த தர்சனதுக்கு ஏங்கி இன்னிக்கு கிடைச்சுது.
நீ கைங்கர்யம் பண்றது அந்த பரமேஸ்வரனுக்கே தான்.”//
ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர
Jayanthi Jaya September 24, 2015 at 5:15 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.
பிரியமுள்ள கோபு அண்ணா
அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
பதிலளிநீக்குஅன்புள்ள ஜெயா,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 டிஸம்பர் மாதம் வரை முதல் மூன்று வருட - 36 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.
பிரியமுள்ள நட்புடன் கோபு
பின்னூட்ட போட்டில கலந்துகிட்டவங்களுக்கு கன்பர்மேஷன் சர்டிபிகேட் இங்கினயே பாத்தேன்
பதிலளிநீக்குஅவங்கல்லா கெலிச்சுபிட்டாங்கல
அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:
பதிலளிநீக்குஅன்புள்ள (mru) முருகு,
வணக்கம்மா !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 டிஸம்பர் மாதம் வரை, முதல் (மூன்று ஆண்டுகளில்) 36 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
இந்தப்போட்டியில் இன்னும் 15 மாதப் பதிவுகள் மட்டுமே தாங்கள் பின்னூட்டமிட பாக்கியுள்ளன. :)
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு
பஞ்சாட்ஷர விளக்கம் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
பதிலளிநீக்குஅன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
பதிலளிநீக்குதிரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 டிஸம்பர் மாதம் முடிய, என்னால் முதல் மூன்று வருடங்களில் (அதாவது 36 மாதங்களில்) வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
As on date, at this moment, you have secured 458 out of 750 Marks, that too within 16 Days (15.11.2015 to 30.11.2015).
A very Great Achievement ! :)
Out of 51, 36 Months are already over & Only 15 more Interesting Months are there for you to offer your Comments ! :)
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
பஞ்சாக்ஷரம் மகிமை உணர்ந்தோம்..மகிழ்ந்தோம்.
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
பதிலளிநீக்குSo far your Completion Status:
2011, 2012, 2013 ....
Three full years Completed :)
C O N G R A T U L A T I O N S !
458 out of 750 (61.06%) that too within
12 Days from 26th Nov. 2015.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 டிஸம்பர் மாதம் வரை, என்னால் முதல் மூன்று ஆண்டுகளில் (36 மாதங்களில்) வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
பதிலளிநீக்குSo far your Completion Status:
458 out of 750 (61.06%)
2011, 2012 & 2013
FIRST THREE FULL YEARS
SUCCESSFULLY OVER !
CONGRATULATIONS !!
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:
வணக்கம் !
31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 டிஸம்பர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 36 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள நட்புடன் VGK
"அன்று இரவு சுமார் 10 மணிக்கு சில்லென்று காற்று வீசியது. தொடர்ந்து ஒரு சில மழை துளிகள் விழுந்தது. பிறகு மெதுவாக மழை ஆரம்பித்தது. அதுவே பெரு மழையாக மாறியது." - கருணாமூர்த்திக்கு கருணாமூர்த்தி கடாக்ஷமளித்ததில் வியப்பென்ன. அதன் சக்தியை மானுடர்கள் தெரிந்துகொள்ளவேண்டியே தன்னை வெளிப்படுத்தியது.
பதிலளிநீக்கு'நெல்லைத் தமிழன் September 27, 2016 at 7:27 PM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம். தங்கள் அன்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.