2
ஸ்ரீராமஜயம்
பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து
முறைகள், குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார்.
மின்னல் வேக தரிஸனம் இல்லை.
ஓரிரு நாட்கள் தங்கி பெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக
அனுபவித்து விட்டுத்தான் போவார்.
"இந்தப் பையனுக்கு ஒன்பது வயதாயிடுத்து, உபநயனம் நடத்தணும்"
என்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை.
"செய்யேன்..."
"பையனின் கோத்திரம்...சூத்திரம் தெரியல்லே..."
பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்.
"உன்னோட....பையன்தானே?"
இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார்
சிவலோகம் போய்ச் சேர்ந்தார்.
இரண்டு மாதக் குழந்தையை விட்டு விட்டு தாயாரும்
போய்ச் சேர்ந்து விட்டாள்.
கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்?"
"நாங்கள் குழந்தையை எடுத்துண்டு வந்தோம்.
ஊர்,பெயர், பந்து, ஜனங்கள் தெரியலை,
திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி..."
பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை.
அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம்,
"பாரு.... ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து,வளர்த்து,
பூணூல் போடப்போறார் ! என்ன மனஸ், இவருக்கு..
கண்ணன் சொன்னார், “அவரோட..சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும்
நினைத்துக் கொண்டிருந்தோம்!"
பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக் கொண்டு
சொன்னார்கள்:
மிருதங்க இசைக்குத் தோல் தேவைதான்.
அன்று இரவு அவருக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை.
ஓரிரு நாட்களுக்குப் பின் கச்சேரி ஒன்றுக்காக சென்னை வந்த மணி ஐயர் ,
சந்திப்பும் நிகழ்ந்தது.
பூஜை முடிந்து எல்லோருக்கும் ப்ரஸாதம் வழங்கினார்கள்.
மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்த மஹா பெரியவா,
மணி ஐயர் “ஆமாம்” என்று தலையசைத்தார்.
”அவரது வேலை மத்தளம் (மிருதங்கம்) வாசிப்பது.
"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ?.... அதை பத்த வை ! ஸ்வாமி நைவேத்யத்தை அதுல பண்ணு..."
கோட்டை அடுப்புப் பக்கம் யாரும் போகவேயில்லை.
மனது என்பதிலிருந்து ஆத்மா விடுபட்ட நிலையே மோட்சம்.
அது இங்கேயே இப்போதே சித்தித்தாலும் சித்திக்கும்.
ஆகையால் செத்துப்போன அப்புறம்தான் மோட்சம் என்றில்லாமல் சரீரத்தில் உயிர் இருக்கும் போதே முத்தனாகலாம்.
ஆத்மா விஷயமாக ஒருவன் ஈடுபட வேண்டுமானால், அதற்கு அடிப்படையாக இருக்க வேண்டியது என்ன?
”அந்த ஆத்மா ஒன்றுதான் நிலையானது, மற்றதெல்லாம் நிலையற்றது” என்ற அறிவுதான்.
நிலையானது, நிலையற்றது எது? என்று பகுத்தறிந்து சீர்தூக்கிப் பார்ப்பதுதான் ஆத்ம சாதனையின் முதல்படி.
இதற்குமேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச்செய்யாத நிலையான இன்பமே மோட்சம். இது தான் வீடு.
oooooOooooo
[ 1 ]
ஜென்மா எடுத்ததன் பயன்
ஸ்ரீ மஹாபெரியவா அருள் மொழிகள்.
என்றும் மாறாமல் இருக்கிற ஒரே வஸ்துவான பரமாத்மாவிடமான அன்பைப் பூரணமாக வைத்துவிட வேண்டும். பரமாத்மா நம்மைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும், பிரிகிற உயிர் பரமாத்மாவிடமிருந்து பிரியாமல் அவரிடமே கலந்து விடும். அவரிடம் வைக்கிற அன்பே சாசுவதமாக இருக்க முடியும்.
அழியாத பரமாத்மாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றால் வேறு யாரிடமும் அன்பாக இருக்கக்கூடாதா, மற்ற எல்லோரும் என்றோ ஒருநாள் நசிப்பவர்கள்தானே என்ற கேள்வி எழலாம்.
பரமாத்மாவிடம் அன்பை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டால் அவருக்கு வேறாக யாருமே இல்லை என்று தெரியும். மரணமடைகிற மனிதர்களாக எண்ணி, அதுவரை யாரிடமெல்லாம் துக்க ஹேதுவான அன்பை வைத்திருக்கிறோமோ, அவர்களும்கூட இப்போது அழியாத பரமாத்மா ஸ்வரூபமாகவே பார்த்து அன்பு செலுத்த வேண்டும்.
அப்போது நம் அன்பு ஒரு நாளும் துக்கத்துக்கு மூலமாக ஆகாமலே இருக்கும்.எல்லோரையும் பரமாத்ம ஸ்வரூபமாகப் பார்த்து அன்பு செலுத்த முடியாவிட்டாலும், ஆத்ம குணம் நிறைந்த பெரியவர்கள், நல்ல ஞானமும் அருளும் நிறைந்த ஸத்குரு ஆகியோரைப் பரமாத்மாவாகக் கருதி, அன்பு செலுத்துவது சுலபமாக முடிகிறது.
அப்படிப்பட்டவர்களிடம் அன்பு வைத்து ஆத்மார்ப்பணம் செய்துவிட்டால் போதும். அவர்கள் மூலமாக பரமாத்மா நமக்கு அநுக்கிரகம் பண்ணி விடுவார். நம் அன்புக்கும் பாத்திரமானவர் மரணமடைந்தாலும்கூட, பரமாத்மா வேஷமாகப் போட்டுக் கொண்ட ஒரு சரீரத்துக்குத் தான் அழிவு உண்டாயிற்று. இப்போது சரீரி பரமாத்மாவோடு ஒன்றாகிவிட்டார் என்ற ஞானத்தோடு பிரிவுத் துன்பத்துக்கு ஆளாகமலே இருப்போம்.
நம் அன்பு கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே எந்நாளும் நிற்கும். ஈச்வரனிடம், ஸாதுகளிடம் இந்த அன்பை அப்யசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும். அதுவே ஜன்மா எடுத்ததன் பயன்.
[எங்கோ எதிலோ நான் படித்தது]
oooooOooooo
[ 2 ]
உபநயனம்
(Poonool for an orphan boy…)
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி,
இரண்டு பையன்கள், ஒரு பெண்.
மஹாஸ்வாமிகளிடம் அபார பக்தி.
பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து
முறைகள், குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார்.
மின்னல் வேக தரிஸனம் இல்லை.
ஓரிரு நாட்கள் தங்கி பெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக
அனுபவித்து விட்டுத்தான் போவார்.
"இந்தப் பையனுக்கு ஒன்பது வயதாயிடுத்து, உபநயனம் நடத்தணும்"
என்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை.
"செய்யேன்..."
"பையனின் கோத்திரம்...சூத்திரம் தெரியல்லே..."
பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்.
"உன்னோட....பையன்தானே?"
இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார்
சிவலோகம் போய்ச் சேர்ந்தார்.
இரண்டு மாதக் குழந்தையை விட்டு விட்டு தாயாரும்
போய்ச் சேர்ந்து விட்டாள்.
கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்?"
"நாங்கள் குழந்தையை எடுத்துண்டு வந்தோம்.
ஊர்,பெயர், பந்து, ஜனங்கள் தெரியலை,
திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி..."
பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை.
அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம்,
"பாரு.... ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து,வளர்த்து,
பூணூல் போடப்போறார் ! என்ன மனஸ், இவருக்கு..
கண்ணன் சொன்னார், “அவரோட..சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும்
நினைத்துக் கொண்டிருந்தோம்!"
பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக் கொண்டு
சொன்னார்கள்:
"கோத்திரம் தெரியாவதர்களுக்கு, காசியப கோத்திரம்;
ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்
என்று கேள்விப்பட்டிருக்கேன்.
அது மாதிரி சொல்லி, பூணூல் போடு,
ஆனா,குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே. உன் பையன்தான்."
பிரசாதம் பெற்றுக்கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்.
ஆனா,குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே. உன் பையன்தான்."
பிரசாதம் பெற்றுக்கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்.
[எங்கோ எதிலோ நான் படித்தது]
oooooOooooo
[ 3 ]
கலியுக நந்தி
”நீ மிருதங்கம் வாசிக்காமல் இருந்தால் தான்
மகா பாவம். உனக்கு ஒரு பாவமும் வராது."
[பாலக்காடு மணி ஐயர் வாழ்வில் நடந்த சம்பவம்]
கர்நாடக இசை மேதை பாலக்காடு மணி ஐயர் வாழ்வில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது.
பாலக்காட்டில் தனது வீட்டில் அமர்ந்து மிருதங்கங்களை வாசித்துப் பார்த்தார் மணி ஐயர்.
அவற்றில் சிலவற்றுக்குத் தோல் மாற்ற வேண்டியிருந்தது.
எனவே கடைவீதிக்குச் சென்றார்.
கடைக்காரர் அவரிடம்,
கடைக்காரர் அவரிடம்,
“தற்சமயம் தோல் ஸ்டாக்கில் இல்லை. அடிமாடுகள் வந்துள்ளன. தோலை உரித்துப் பதப்படுத்தி ஒரு வாரத்தில் தருகிறேன்” என்றார்.
மிருதங்க இசைக்குத் தோல் தேவைதான்.
இருந்தாலும் இந்த முறை மணி ஐயரின் மனம் ஏனோ வேதனைப்பட்டது.
”ஒரு ஜீவனை ஹிம்சைப் படுத்தி இந்தத் தொழிலைத் தொடரத்தான் வேண்டுமா?” என்கிற சஞ்சலமான மனதுடன் வீடு திரும்பினார்.
உண்ணாமலே படுத்து விட்டார்.
மூன்று மாத காலத்திற்கு கச்சேரிகளை அவர் ஒப்புக் கொண்டிருந்தார்.
எனவே அவற்றை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு மேற்கொண்டு புதுக் கச்சேரிகளை ஒப்புக் கொள்ளாமல் தவிர்ப்பது என்று தீர்மானித்தார்.
மஹாபெரியவரைத் தரிசிக்கக் காஞ்சி ஸ்ரீமடத்திற்குச் சென்றார்.
அப்போது மஹாபெரியவர் அங்கு இல்லை.
காஞ்சியில் இருந்து 50 கி.மீ.தொலைவில் ஒரு கிராமத்தில் முகாமிட்டிருப்பதாக சொன்னார்கள்.
”மஹா பெரியவாளை எப்படியும் பார்த்து விடுவது” என்று தீர்மானித்த மணி ஐயர், அந்தக் கிராமத்தை அடைந்த போது மாலை மணி ஐந்து.
மஹா பெரியவர், “மணி, நீ இன்று இரவு தங்கு…. நாளை காலை போகலாம். உன் தனி ஆவர்த்தனம் கேட்டு ரொம்ப நாளாச்சு!” என்று கூறிப் பூஜைக்குச் சென்றார்.
இரவு எட்டு மணிக்கு மடத்து சிஷ்யர் ஒருவர் மணி ஐயரிடம் வந்து, “ பெரியவா வந்து பார்க்கச் சொன்னார்!” என்றார்.
மணி ஐயர் மஹா பெரியவருடைய குடிசைக்குச் சென்றார்.
மணி ஐயர் மஹா பெரியவருடைய குடிசைக்குச் சென்றார்.
ஒரு ஹரிக்கேன் விளக்கு மட்டும் இருந்தது.
சிஷ்யர் அதைத் தூண்டி விட்டார்.
மஹா பெரியவா, ”என்ன மணி, உடம்பு அசௌகரியமோ? ஏன் வாட்டமா இருக்கே? கவலையா?” என்று அன்புடன் வினவினார்.
மணி ஐயர் கண்கள் கலங்க தன் வேதனையை விவரித்தார்.
மணி ஐயர் கண்கள் கலங்க தன் வேதனையை விவரித்தார்.
அந்தப் பேச்சின் முடிவாக, ”இதுவரை நடந்தது போதும் பெரியவா. இனி ஜீவஹிம்சை செய்து அதன் மூலம் கச்சேரி செய்யப் போவதில்லை. அதனால் வரும் வருமானம் ஒரு சல்லிக்காசு கூட எனக்கு வேண்டாம்” என்றார் குரலில் உறுதியாக.
”மணி, நீ சிவன் கோவில்ல நந்திகேஸ்வரரை தரிசனம் செஞ்சிருக்கியோ?” என்று கேட்டார்.
”அவரது வேலை மத்தளம் (மிருதங்கம்) வாசிப்பது.
நீயோ கலியுக நந்தி.
இனிமேல் நீ மிருதங்கம் வாசிக்காமல் இருந்தால் தான் மகா பாவம்.
உனக்கு ஒரு பாவமும் வராது.
மனசைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே.
போய் வேலையைப் பார்.
இன்னிக்கு ரொம்ப நாழி ஆயிடுத்து. படுத்துத் தூங்கு.
நாளைக்குப் பிரசாதம் வாங்கிண்டு கிளம்பு.
உன்னுடைய தனி ஆவர்த்தனத்தைக் கேக்கணும்னு ஆசையா இருக்கு.
நாளைக்கு ஒரு அரை மணி நேரம் வாசிச்சுட்டுக் கிளம்பலாம்!” என்று கூறி அனுப்பினார்.
மறு நாள் பூஜைக்குப் பிறகு கச்சேரி செய்து விட்டு மஹா பெரியவரிடம் பிரசாதமும் பெற்றுக் கொண்டு மனநிறைவுடன் வீடு திரும்பினார் மணி ஐயர்.
இந்த அரிய தகவலைக் கூறியவர் மணி ஐயரின் மருமகன் பதஞ்சலி!
[நன்றி : அமிர்த வாஹினி 12.12.13]
oooooOooooo
[ 4 ]
இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......
வெந்நீர் வேணாம்..
உச்சநீதி மன்றத்தின் ஆணை
கார்த்திகை மாதம் !
ஓரளவு குளிர் ஆரம்பித்து விட்டிருந்தது. பெரியவா விடியும்முன் ஸ்நானம் பண்ணுவதால், கோட்டை அடுப்பை மூட்டி, வெந்நீர் போடவேண்டும்.
ஓரளவு குளிர் ஆரம்பித்து விட்டிருந்தது. பெரியவா விடியும்முன் ஸ்நானம் பண்ணுவதால், கோட்டை அடுப்பை மூட்டி, வெந்நீர் போடவேண்டும்.
ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்பை மூட்ட எழுந்தார்.
"டொக்"கென்று ஒரு சொடக்கு சத்தம் அவரை நிறுத்தியது!
தாழ்வார அரைகுறை வெளிச்சத்தில் பெரியவாளின் அற்புத திருமேனி தெரிந்தது.
"இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்...... வெந்நீர் வேணாம்...."
வெந்நீர் போடாமல் இருக்கலாம். ஆனால், அடுப்பு மூட்டாவிட்டால், நைவேத்யம் தயார் பண்ண முடியாதே !
"வெங்கட்ராமனை கூப்டு!.."
திருவாரூர் வெங்கட்ராமையர் என்ற சமையல் கார்யஸ்தர் வந்தார்.
கோட்டை அடுப்புப் பக்கம் யாரும் போகவேயில்லை.
கொஞ்சம் தள்ளி உக்ராண அறை வாசலில் இரும்பு அடுப்பு பத்த வைக்கப்பட்டு சமையல் நடந்து கொண்டிருந்தது.
காலை சுமார் ஏழு மணி இருக்கும்....."மியாவ்" என்று மெல்லிசாக குரல் கேட்டது.
காலை சுமார் ஏழு மணி இருக்கும்....."மியாவ்" என்று மெல்லிசாக குரல் கேட்டது.
"அடேய்! பூனை எங்கேடா வந்துது? நைவேத்யத்துல வாயை வெச்சுடப் போறது!
ஷ்ஷ்ஷூ....ஷூ...!!!
குத்து மதிப்பாக விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், பூனை ஓடும் சலசலப்பு எதுவும் இல்லை!
பூனை எங்கே?
பூனை எங்கே?
ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்புப் பக்கம் போய் பார்த்தார்..
அதற்குள் ஒரு தாய்ப்பூனை.
அதன் மேல், தாயின் உடல் கதகதப்பும், கோட்டை அடுப்பின் கதகதப்பும் சேர, தாயின் ஏறி இறங்கும் வயிற்றின் மேல் நாலு பூனைக்குட்டிகள் !!!
இன்னும் கண்கூடத் திறக்காமல் !!
ஆஹா ! "கோட்டை அடுப்பு இன்னிக்கு மூட்ட வேணாம்...." என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணையின் அர்த்தம் இப்போதல்லவா புரிந்தது!
குளிர் தாங்காமல் தன் குட்டிகளோடு லோக ஜனனியின் திருவடி நிழலுக்கு வந்துவிட்டாள் அந்த அம்மாப் பூனை!
அவளை விரட்டிவிட்டு, தனக்கு குளிருக்கு வெந்நீர் போட்டுக் கொள்ளுவாரா என்ன?
பூனைகள் நன்னா தூங்கட்டும்.... எனக்கு வெந்நீர் வேணாம்!!
ஏகம் ஸத் ! நமக்கெல்லாம் வெறும் மேல் பூச்சாக சொல்லும் வார்த்தை !
பெரியவாளுக்கு?
அவரே அதன் பொருள் !
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
[Thanks to Amritha Vahini - 10.12.2013]
oooooOooooo
இதன் தொடர்ச்சி
பகுதி-95 / 2 / 2
”வண்ணக்கிளி ....
சொன்ன மொழி ....
என்ன மொழியோ ?”
என்ற தலைப்பில்
இன்று இப்போதே தனிப்பதிவாக
வெளியிடப்பட்டுள்ளது.
காணத்தவறாதீர்கள்.
பகுதி-95 / 2 / 2
”வண்ணக்கிளி ....
சொன்ன மொழி ....
என்ன மொழியோ ?”
என்ற தலைப்பில்
இன்று இப்போதே தனிப்பதிவாக
வெளியிடப்பட்டுள்ளது.
காணத்தவறாதீர்கள்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
செத்துப்போன அப்புறம்தான் மோட்சம் என்றில்லாமல் சரீரத்தில் உயிர் இருக்கும் போதே முத்தனாகலாம்.
பதிலளிநீக்குஜீவன் முக்தி நிலையை
ஜீவனுடன் எடுத்துரைத்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
பூனைகள் நன்னா தூங்கட்டும்.... எனக்கு வெந்நீர் வேணாம்!!
பதிலளிநீக்குஏகம் ஸத் ! நமக்கெல்லாம் வெறும் மேல் பூச்சாக சொல்லும் வார்த்தை !பெரியவாளுக்கு? அவரே அதன் பொருள் ! //
யானை யானாலும் பூனையானாலும் ஏகம் ஸத் -
ஸத்தான வரிகள்..!
கலியுக நந்தி
பதிலளிநீக்கு”நீ மிருதங்கம் வாசிக்காமல் இருந்தால் தான்
மகா பாவம். உனக்கு ஒரு பாவமும் வராது."
[பாலக்காடு மணி ஐயர் வாழ்வில் நடந்த சம்பவம்]
பாவங்களுக்கு அப்பாற்பட்ட பரமசிவத்திடமே
பரமானந்த வாக்கு பெற்றவர் பாலக்காடு மணி ஐயர் ..!
கோத்திரம் தெரியாவதர்களுக்கு, காசியப கோத்திரம்;
பதிலளிநீக்குஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்
என்று கேள்விப்பட்டிருக்கேன்.
மன நிறைவான அனுக்ரஹம் ..!
பதிலளிநீக்குநம் அன்பு கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே எந்நாளும் நிற்கும். ஈச்வரனிடம், ஸாதுகளிடம் இந்த அன்பை அப்யசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும். அதுவே ஜன்மா எடுத்ததன் பயன்.
அமுத மழையாய் வர்ஷித்த பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
நிலையற்ற இவ்வுலகில் ஆன்மா தான் நிலையான
பதிலளிநீக்குஒன்று என விளம்புவது உண்மையே.
ஆன்மா சுத்தமானால் எழும் எண்ணங்களும்
சுத்தமாகும்.
விளம்பிய சம்பவங்கள் அனைத்தும்
நெஞ்சம் நிறைத்தது ஐயா..
யானைக்கு அருள் செய்ததை படித்தேன்
பதிலளிநீக்குஇங்கே பூனைக்கு அருள்.
தெய்வத்தின் குரல்.
மகானுபவம்
தங்களின் வெற்றிகரமான 450வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு வாழ்த்துகள்
பதிலளிநீக்குபெரியவா பற்றி மிக மிக அற்புதமான மெய் சிலிர்க்க கூடிய
அனேக விஷயங்களை 450 பதிவுகள் மூலம் எங்கலுக்கு கொடுத்ததற்கு மிக நன்றி..
தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும்
ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர.
தங்களின் வெற்றிகரமான 450வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅத்வைதசாரம் உபதேசம் அருமை.கோத்திரம் சூத்ரம் மாற்றுயோசனை வழங்கியது பூனைக்காக கருணை காட்டியது,பாலக்காடு மணிஐயரின் மனக்கிலேசத்தை போக்கியதுஎல்லாமே அருமையான விஷயங்கள் நன்றி
பதிலளிநீக்குசம்பவங்கள் அனைத்தும் மனதை கவர்ந்தன ஐயா... நன்றிகள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
// கோத்திரம் தெரியாவதர்களுக்கு, காசியப கோத்திரம்;
பதிலளிநீக்குஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்
என்று கேள்விப்பட்டிருக்கேன். //
ஒரு புதிய விளக்கம் தெரிந்து கொண்டேன்.
//"கோத்திரம் தெரியாவதர்களுக்கு, காசியப கோத்திரம்;
பதிலளிநீக்குஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்// நெஞ்சை தொட்ட வரிகள்.
450 வது பதிவிற்கு வாழ்த்துகள்.
கோத்திரம் மற்றும் ஸூத்திரம் அறியாதவர்களுக்கு
பதிலளிநீக்குஇப்படி ஒரு முறை இருக்கிறது என்பது தங்கள்
பதிவின் மூலமே அறிந்தேன்
அற்புதமான 450 பதிவுகள் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
அது ஆயிரம் ஆயிரமாய்த் தொடர
அருளும்படி அன்னை மீனாட்சியை
வேண்டிக் கொள்கிறேன்
அற்புதமான அநுக்ரஹம். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபூனை அனுக்கிரகமும்
பதிலளிநீக்குமிருதங்கத் தோலும் வாசித்தேன் மிக நன்று.
இனிய வாழ்த்து
வேதா. இலங்காதிலகம்.
ஆத்மா ஒன்றுதான் நிலையானது.மற்றதெல்லாம் நிலையற்றது என்ற அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். எவ்வலவு அருமையான வாக்கியம்?
பதிலளிநீக்குபூனைக்கு அருள் புரிந்தது, வளர்ப்புப் பிள்ளைக்கு கோத்திரம் சொல்லி அருள் பாலித்தது, மிருதங்க வித்வானுக்கு நந்தியை மேற்கோள் காட்டியது என எல்லா விஷயங்களும் எவ்வளவு அர்த்தம் பொதிந்ததாக உள்ளது.
உங்கள் 450 ஆவது பதிவிற்கு என்னுடைய வாழ்த்துகள்.
அன்புடன்
ஆத்மா பற்றி அற்புதமான பதிவு. தங்களுடைய 450 வது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பூனைக்கு அருள் புரிந்த அவர் வள்ளல் தன்மை அற்புதம்! அனைத்து சம்பவங்களும் உள்ளம் நிறைத்தது. அருமை.
பதிலளிநீக்குஅன்புடன்
பவள சங்கரி
அன்பு ஐயாவிற்கு வணக்கம்
பதிலளிநீக்கு//மனது என்பதிலிருந்து ஆத்மா விடுபட்ட நிலையே மோட்சம்.// ஆன்மா பற்றிய விவரங்கள் அனைத்தும் மிக அருமை ஐயா. பெரியவாளின் ஆன்மீக பணிக்கு ஈடுஇணையேது. அவரின் அருள் வாக்கை கேட்டலே எல்லா மோட்சங்களும் நம்மை நாடி வரும். அப்படிப்பட்ட அருள்வாக்குகளையும், அற்புதங்களையும் பகிரும் தங்கள் பணிக்கு எனது வாழ்த்துகள் அல்ல வணங்குகிறேன் ஐயா. பகிர்வுக்கு நன்றி...
அன்பின் வை.கோ - 450வது பதிவினிற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - ஆத்ம சாதனையின் முதல் படி - பதிவு அருமை. ஆத்ம சாதனை மற்றும் மோட்சம் - விளக்கம் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - ஜென்மா எடுத்ததன் பயன் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் அருள் மொழிகள் - அருமை - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - அன்பு எங்கே வைக்க வேண்டும் - பரமாத்மாவிடம் அன்பைப் பூரணமாக வைத்து விட வேண்டும் - பிரியும் உயிர் அவரிடமே கலந்துவிடும். அருமையான அறிவுரை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - படித்ததில் பிடித்த உபநயனம் அருமை. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - காசியப கோத்திரம்; போதாயன ஸூத்திரம் - கோத்திரம் மற்றும் ஸுத்திரம் தெரியாதவர்களுக்குப் பயன்படும் கோத்திரமும் ஸூத்திரமும் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் அறிவுரை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - கலியுக நந்தி - மணி ஐயரின் மருமகன் பதஞ்சலி கூறிய தகவல் பகிர்வினிற்கு நன்றி - தகவலும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - மனம் சஞ்சலப்பட்ட மணி ஐயருக்கு ஆறுதல் கூறி தொடர்ந்து மிருதங்கம் வாசிக்க அறிவுறுத்திய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் கருணையே கருணை.நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - வெந்நீர் வேண்டாம் - உச்ச நீதி மன்றத்தின் ஆணை. அருமையான தகவல் - அனைத்தும் அறிந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் தீர்க்க தரிசனம் - குட்டிகளைக் காப்பாற்றியது. நன்று நன்று - தகவல் பகிர்வினிற்கு நன்றி வை.கோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - 450வது பதிவு அருமை - அரும்பணியைனைத் தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குcheena (சீனா) December 15, 2013 at 6:52 AM
பதிலளிநீக்கு//அன்பின் வை.கோ - 450வது பதிவு அருமை - அரும்பணியைனைத் தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
வாருங்கள் என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம்.
சற்றே தாமதமாக வந்திருப்பினும் திரும்பத்திரும்ப பத்துமுறை வருகை தந்து அசத்தி விட்டீர்கள்.
ஒருவர் 5 தாங்கள் 10 என்பதை நான் பார்த்ததும், ஆரம்பத்தில் வருகை தந்துள்ள யாருடனோ தாங்கள் போட்டி போடுவது போலத் தோன்றியது. ;)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))).
எனினும் மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களின் நல்வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.
குளிர் தாங்காமல் தன் குட்டிகளோடு - லோக ஜனனியின் திருவடி நிழலுக்கு வந்துவிட்டாள் அந்த அம்மாப் பூனை!
பதிலளிநீக்குஅவளை விரட்டிவிட்டு, தனக்கு குளிருக்கு வெந்நீர் போட்டுக் கொள்ளுவாரா என்ன?
ஞான வள்ளல் - ஸ்ரீபரமாச்சார்ய ஸ்வாமிகள்!..
நல்ல செய்திகளுடன் கூடிய பதிவு!..
450 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு//ஆஹா ! "கோட்டை அடுப்பு இன்னிக்கு மூட்ட வேணாம்...." என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணையின் அர்த்தம் இப்போதல்லவா புரிந்தது!//
தாயின் கருணை மிகுந்தவர் அல்லவா!
வாழ்த்துக்கள், நன்றி.
உங்களின் 450வது பதிவிற்கு வாழ்த்துக்கள். பாலக்காடு மணி ஐயரின் மண் நிம்மதி கொடுத்தது சிறப்பு.. தி தந்தையற்ற பையனின் கோத்திரம் சொன்னது, பூனைக் குட்டியின் தாய்மைக்கு மதிப்பளித்தது எல்லாமே அவரின் கருணையைக் காட்டுகிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்......
அனைத்து உயிரிடத்தும் கருணை.... என்னே அவரது அன்பு....
பதிலளிநீக்குஅமுத மொழிகளும் அற்புத நிகழ்வுகளும் தொடர்ந்து படித்து ரசித்தேன்.
பதிலளிநீக்குஏகம் ஸத் ! நமக்கெல்லாம் வெறும் மேல் பூச்சாக சொல்லும் வார்த்தை !பெரியவாளுக்கு?
அவரே அதன் பொருள் !//
மனம் நெகிழச் செய்த பதிவு! நன்றி ஐயா!
இதற்குமேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச்செய்யாத நிலையான இன்பமே மோட்சம். இது தான் வீடு.
பதிலளிநீக்குவிளக்கம் அருமை.
விளக்கம் எளிமை
அதுதான் மகான்களின் வாக்கு.
மற்றவர்களின் பேச்செல்லாம் வெறும் ஜோக்கு
அவ்வளவுதான்VGK
450-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குயானைக்கு அருளியதைச் சென்ற பதிவில் படித்த நான், இங்கு பூனைக்கு அருளியதையும் படித்து மகிழ்ந்தேன்!!
பூனைக்குடும்பம் - அனைத்தும் அறிந்த பெரியவாள்.
பதிலளிநீக்குபூனையின் மீது அவர் காட்டிய இரக்கம்... நெஞ்சை தொட்டது..
பதிலளிநீக்கு450வது பதிவிற்கு வாழ்த்துகள்...
450 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா,மெலும் தொடரட்டும்..
பதிலளிநீக்குபூனைக்கு பெரியவர் அருளியதை படிக்கும்போது மகிழ்ச்சியா இருக்கு!!
பெரியவாளின் கருணை மழையில் நனைந்தேன்! அருமை! நன்றி!
பதிலளிநீக்குஎந்தப் பிரச்சினைக்கும் பெரியவா கிட்டத் தீர்வு உண்டு.
பதிலளிநீக்குபடித்ததில் பிடித்தது நல்லா இருக்கு எந்த பிரச்சினைகளுக்கும் பெரியவாளிடம் தீர்வு கிடைத்து விடும்
பதிலளிநீக்கு// ஆகையால் செத்துப்போன அப்புறம்தான் மோட்சம் என்றில்லாமல் சரீரத்தில் உயிர் இருக்கும் போதே முத்தனாகலாம்.//
பதிலளிநீக்குஅந்தப் பெரிய பேறு கிடைச்சால் ............
// அழியாத பரமாத்மாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றால் வேறு யாரிடமும் அன்பாக இருக்கக்கூடாதா, மற்ற எல்லோரும் என்றோ ஒருநாள் நசிப்பவர்கள்தானே என்ற கேள்வி எழலாம். //
பதிலளிநீக்குபரமாத்மாவிடம் அன்பு வைத்தால் தானாகவே மற்றவர்களிடம் அன்பு வந்து விடாதா?
//"பாரு.... ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து,வளர்த்து,
பூணூல் போடப்போறார் ! என்ன மனஸ், இவருக்கு..//
ஒருத்தரோட நல்ல செயல என்னமா சிலாகிக்கறார் மகா பெரியவா.
// "கோத்திரம் தெரியாவதர்களுக்கு, காசியப கோத்திரம்;
ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்
என்று கேள்விப்பட்டிருக்கேன்.
அது மாதிரி சொல்லி, பூணூல் போடு,
ஆனா,குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே. உன் பையன்தான்." //
அவரிடம் சென்றால் எதற்கும் ஒரு தீர்வு உண்டு.
// ”மணி, நீ சிவன் கோவில்ல நந்திகேஸ்வரரை தரிசனம் செஞ்சிருக்கியோ?” என்று கேட்டார். //
பதிலளிநீக்குபாமரனுக்கும் புரியும்படி என்ன அழகா சொல்லறார்.
அடுப்பில் குடும்பத்தோடு வந்து குடியேறிய பூனைக்கும் அருளுவதை என்னவென்று சொல்ல.
Jayanthi Jaya September 22, 2015 at 8:46 PM
பதிலளிநீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//அந்தப் பெரிய பேறு கிடைச்சால் ............//
ஆனந்தம் ..... ஆனந்தம் ..... ஆனந்தமே !
//பரமாத்மாவிடம் அன்பு வைத்தால் தானாகவே மற்றவர்களிடம் அன்பு வந்து விடாதா?//
ஆம். வந்துவிடும். அன்பினால் அனைவருமே பரமாத்ம ஸ்வரூபமாகவே நமக்குத் தோன்றக்கூடும்
//ஒருத்தரோட நல்ல செயல என்னமா சிலாகிக்கறார் மகா பெரியவா.//
அவர் செய்துள்ளதும் சாதாரண செயல் அல்லவே, ஜெயா. பொதுவாக யாராவது இதுபோல துணிந்து செய்வார்களா ? :)
//அவரிடம் சென்றால் எதற்கும் ஒரு தீர்வு உண்டு.//
ஆமாம். நிச்சயமாக !
//பாமரனுக்கும் புரியும்படி என்ன அழகா சொல்லறார்.//
அழகோ அழகு ! [அய்ய்கோ அய்ய்கு - அதிரா பாஷையில் :) ]
//அடுப்பில் குடும்பத்தோடு வந்து குடியேறிய பூனைக்கும் அருளுவதை என்னவென்று சொல்ல.//
பூனை என்றதும் அதிரா (பூஸார்) நினைவுக்கு வந்தாச்சு :)
தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.
பிரியமுள்ள கோபு அண்ணா
அந்த அடுப்புக்குள்ளார பூன குட்டியோட இருக்குது இவுகளுக்க் எப்பூடி தெரிஞ்சிச்சி
பதிலளிநீக்குகோத்திரம் தெரியாதவாளுக்கு காசியப கோத்திரம் ஸூத்ரம் தெரியாதவாளுக்கு போதாயன ஸூத்ரம். கோத்ரம் பத்தி தெரியும் ஸூத்ரம்னா தெரியலயே.
பதிலளிநீக்குசரணாகதி. November 30, 2015 at 3:16 PM
நீக்கு//கோத்திரம் தெரியாதவாளுக்கு காசியப கோத்திரம் ஸூத்ரம் தெரியாதவாளுக்கு போதாயன ஸூத்ரம். கோத்ரம் பத்தி தெரியும் ஸூத்ரம்னா தெரியலயே.//
கோத்ரம் என்றால், பரம்பரை பரம்பரையாக, எந்தெந்த மஹரிஷிகளின் பரம்பரையில் நாம் தோன்றி வந்துள்ளோம், என்பதைக் குறிப்பதாகும்.
நமஸ்கரித்து ’அபிவாதயே’ சொல்லும்போது முதலில் நம்மால் சொல்லப்படும் ஐந்து மஹரிஷிகளின் பெயர்கள் இவை.
ஸூத்ரம் என்பது நம் முன்னோர்களால் இதுவரை கற்கப்பட்டுவந்த வேத பாட முறைகளின் முக்கியமான பிரிவினைக் குறிப்பதாகும்.
பொதுவாக எனக்குத்தெரிந்து ‘ஆபஸ்தம்ப ஸூத்ரம்’ என்று ஒன்றும் ‘போதாயன ஸூத்ரம்’ என்று ஒன்றும் உள்ளது. எனக்குத்தெரிந்த பலரும், பெரும்பாலும் இந்த இரண்டு மேஜர் ஸூத்ரங்களுக்குள் ஏதோ ஒன்றுக்குள்ளேயே அடங்கிவிடுகிறார்கள்.
ஒழுங்காக முறைப்படி ஆபஸ்தம்ப ஸ்ராத்த ஹோமம் செய்ய ஒரு மணியோ அல்லது ஒன்றரை மணியோ ஆகும் என்றால், மிகவும் சிரத்தையாக போதாயன ஸ்ராத்தம் செய்ய குறைந்தது 2 அல்லது 3 மணி நேரமாவது ஆகும்.
இதுபற்றி மேலும் சில விபரங்கள் அறிய, இதே தொடரின், இதோ இந்தப்பதிவின் பின்னூட்டங்களில் படித்துப்பார்க்கவும்.
http://gopu1949.blogspot.in/2013/07/31.html
குறிப்பாக அதிலுள்ள திருமதி. நிலாமகள் அவர்களின் அனைத்துப் பின்னூட்டங்களையும் ஒன்றுவிடாமல் தயவுசெய்து படிக்கவும்.
பூனைக்குட்டிகளுக்காக அடுப்பையே பற்றவைக்கவேண்டாமென்று சொல்லிய பெருந்தன்மை...உயிர்களெல்லாம் சமம் என சொல்லாமல் சொல்கிறது.
பதிலளிநீக்குஇதில் உள்ள ஒரு பகுதி மட்டும் நம் அன்புள்ள ஆச்சி அவர்களால் தனது FACE BOOK பக்கத்தில் இன்று பகிரப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:
https://www.facebook.com/groups/396189224217111/permalink/597484274087604/
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
இதன் ஒரு பகுதி மட்டும் நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால் இன்று (18.03.2019) தனது FACE BOOK பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:
பதிலளிநீக்குhttps://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=598682453967786
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு
பதிலளிநீக்குஇந்தப் பதிவின் ஒரு பகுதி அன்புள்ள ஆச்சி அவர்களால் 18.05.2019 FACE BOOK இல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு:
https://www.facebook.com/groups/396189224217111/permalink/635969053572459
இதன் ஒரு பகுதி மட்டும், நம் ஆச்சி அவர்களால் தனது FACE BOOK பக்கத்தில், இன்று 02.06.2019 வெளியிடப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:
https://www.facebook.com/groups/396189224217111/permalink/645200589315972/