என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

91] சித்தம் குளிர இப்போ ........ !

2
ஸ்ரீராமஜயம்




தூய்மையான உணவுப் பொருட்களை சமைக்கும்போது, இறைவன் நினைப்பால் உண்டான தூய்மையும் சேர்ந்து, ஆகாரத்தை இறைவனுக்குப் படைத்து, அதை இன்னமும் சுத்தமானதாக்க வேண்டும். 

”பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பு பேசுவதில் சுகமிருந்தாலும் மெளனத்தைக் கடைப்பிடி; கண்ணை இழுத்துக்கொண்டு போனாலும் தூங்குவது இல்லை என்று தீர்மானம் செய்து, இரவு முழுவதும் விழித்துக்கொண்டு, ஈஸ்வர சம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு. 

இப்படியெல்லாம் பழகப்பழக உடல் இச்சைக்கான புத்தி போய்விடும். சரீரம் எப்படியானாலும், சித்தம் பரமாத்மாவிடம் நிற்கும்”  என்று தான் சாஸ்திரங்கள் விரதம், உபவாசங்கள் என விதித்திருக்கின்றன.

-oOo-

பாப சிந்தனைகளைப் போக்குகின்ற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம். 

oooooOooooo

[ 1 ]

"தெய்வம் பேசுமா?"  

தனியார் ஆபீஸில் தன்னுடைய பதினெட்டாவது வயஸில், shorthand, typewriting, SSLC certificates உடன் வேலைக்கு சேர்ந்து, ஐம்பத்தெட்டாவது வயஸில் retire ஆகி வீட்டில் உட்கார்ந்தார் ஒரு பக்தர். 

அவர் வஹித்த பதவி, அவருக்கு ஏகப்பட்ட பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் குடுத்திருந்தாலும், அவருடைய உள் மனஸில் வெறும் சூன்யமாகவே இருந்தது. வேலை, வேலை என்று உயிரைக் குடுத்து உத்யோகம் பார்த்ததில், "நான் யார்?" என்று அரை நிமிஷம் கூட சிந்திக்காமல் விட்டுவிட்டார். 

அதன் பலன்? retire ஆனதும், அத்தனை நாள் மாங்கு மாங்கென்று எந்தக் கம்பெனிக்காக உழைத்தாரோ, அந்த routine, நண்பர்கள்,எல்லாமே ஒரு நொடியில், ஒரு பிரிவுபசார பார்ட்டியோடு அவரை விட்டுத் தள்ளிப் போய்விட்டன! 

பெற்ற பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் கல்கத்தாவில் இருந்தார்கள். அங்கேயெல்லாம் போனால், போய் இறங்கின அன்று இருக்கும் மரியாதையும் உபசரிப்பும், நாலு நாளைக்கு மேல் நீடித்தால், அது அவர் செய்த பாக்யம்! 

பிள்ளை நல்ல உத்தியோகம்; ரொம்ப நல்லவன்; ஆனால், என்ன ப்ரயோஜனம்? மாட்டுப்பெண்ணும் நல்லவள்தான்.... யாருக்கு? பிள்ளைக்கு! 

பெற்றவர்களை ஒதுக்கி விட்டு, பிள்ளையை மட்டும் தன்னுடைய குடும்பமாக நினைப்பவள்; பிறந்த வீட்டார் மேல் அபரிமிதமான கரிசனம். 

இப்படி இருக்கும் வீட்டில் தான் போய் அதிக நாட்கள் தங்கினால், இப்போதிருக்கும் பேச்சு வார்த்தை கூட அறுந்து போய்விடும் என்று தயங்கினார். 

யார் வழி காட்டுவார்கள்? "நீனே அநாத பந்து" என்று பெரியவாளுடைய திருவடியில் வந்து விழுந்தார். 

மனசுக்குள், எங்கே போவது? யாருடன் தங்குவது? ஜன்மாவை கடைத்தேற்றிக் கொள்ளாமல் ஐம்பத்தெட்டு வருஷம் கோட்டை விட்டாச்சு !.... என்று ஒரே குழப்பம். 

எதுவுமே பேசாமல் நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு ஓரமாக நின்றார். பெரியவா அவரைப் பார்த்தார்..... உடனே அருகில் வந்து மிகவும் பவ்யமாக, "பெரியவா அநுக்ரஹத்ல அனேகமா எல்லா க்ஷேத்ரங்களும் தர்ஸனம் பண்ணிட்டோம். போனவாரம் தலைக்காவேரி போயிட்டு, அப்டியே காவேரிப்பூம்பட்டிணம் போய்ட்டு வந்தோம்..." 

"காவேரி உற்பத்தி ஸ்தானத்லயும், சங்கமத்துலேயும் ரொம்ப குறுகலாத்தானே இருக்கு?" 

"ஆமா....." 

"காவேரி, ரொம்ம்...ம்ப அகலமா இருக்கற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?" 

"அகண்ட காவேரி" 

"அது எங்க இருக்கு?" 

"திருச்சி பக்கத்ல ..." 

"அந்த ப்ரதேசத்துக்கு என்ன பேரு?" 

பக்தர் முழித்தார்!..... 

"மழநாடு...ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?" 

"எங்க தாத்தா சொல்லுவார்" 

"காவேரி தீரம்தான் மழநாடு; ரொம்ப ஆசாரக்காரா இருந்த நாடு; ஒன்னோட தாத்தா இருந்த எடம்" 

பக்தருக்கு இதெல்லாம் எதுவுமே தெரியவில்லை. நெளிந்தார்.

ஆஹா! அடுத்து பெரியவா, இவர் எதுவும் சொல்லாமலேயே, இவருடைய குழப்பத்தை தீர்த்து வைத்தார்! 

"திருச்சில ஜாகை வெச்சுக்கோ! 

தெனமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்.... இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!" 

"தெய்வம் பேசுமா?"...என்று சந்தேஹம் வருபவர்களுக்கு, இதோ! தெய்வம் பேசுகிறது! என்று உண்மையான மஹான்கள் முன்னால் கொண்டு போய் நிறுத்தி விடலாம். 

கண்களில் நன்றிக் கண்ணீரோடு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவா சொன்னபடி திருச்சியில் ஜாகை பார்க்கச் சென்றார். 

மலைக்கோட்டை தெருவில் அம்சமான வீடும் கிடைத்தது! 

பெரியவா சொன்னபடி தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டபடியால் கட்டாயம் "வீடு பேறும்" கிடைக்கும்.


Thanks to Mr. M.J.Raman [Manakkal] for sharing this incident ]


oooooOooooo

[ 2 ]

“கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்”


ஒருநாள் விடியக்காலம் ஞான பானுவை தன்னுள் கொண்ட காஞ்சி மடம் மெல்ல விழித்துக்கொண்டிருந்தது. ரம்யமான அதி தெய்வீகமான சூழல். பெரியவாளுடைய விஸ்வரூப தர்சனம் முடிந்து அவரவர் அனுஷ்டானங்களில் மூழ்கி இருந்தனர். தன்னுடைய அணுக்கத் தொண்டர்களிடம் அந்த நேரம் பெரியவா விஸ்ராந்தியாக பேசிக்கொள்ளுவது உண்டு. அன்றும் அப்படியே பொழுது விடிந்தது ……



“ஏண்டா……நம்மூர்ல எத்தனையோ ஆயிரக்கணக்கான கோவில் இருக்கு. ஆனா, அந்தக் கோவில்ல இருக்கற அர்ச்சகா எல்லாரும் மூணு வேளை நிம்மதியா சாப்டறாளோ? …. மதுரைவீரனுக்கு ஏதோ கெடச்சதை வெச்சு நைவேத்யம் பண்ற கிராமத்துப் பூஜாரில்லாம் சந்தோஷமா இருக்காளோ? பெருமாளுக்கு பொங்கலையும் புளியோதரையையும் நைவேத்யம் பண்ற பட்டாச்சார்யார் குடும்பமெல்லாம் வயத்துக்கு மூணுவேளை சாப்ட்டுண்டு இருக்காளோ?… இதையெல்லாம் யாராவுது அப்பப்போ விஜாரிக்கறேளோ?..”



பெரியவா இதுபோல் ஏதாவது விஷயத்தை பீடிகையுடன் ஆரம்பித்தால், அதில் ஆயிரம் விஷயங்கள், அர்த்தங்கள் இருக்கும். எனவே எல்லாரும் “நிச்சயமாக தங்களுக்கு இதெல்லாம் தோன்றியதே இல்லை” என்ற உண்மையை ஒத்துக்கொள்வது போல், பேசாமல் முழித்தார்கள்.



“……ஏன் கேக்கறேன்னா….ஏதோ மூணு நாலு கோவில்ல இருக்கற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறாது. பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும்னு யோசிங்கோ!..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ராமலிங்க பட் என்ற குஜராத்தி ப்ராம்மணர் வந்து நமஸ்கரித்தார். 


பெரியவாளிடம் மிக மிக ஆழ்ந்த பக்தி கொண்டவர், ஆசாரம் அனுஷ்டானம் கடைப்பிடிப்பவர்கள் லிஸ்டில் இவருடைய பெயர் இருக்கும். 


சென்னை IIT யில் ப்ரொபஸராக இருப்பவர். நமஸ்காரம் பண்ணியபின் மெதுவாக ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கலாம் என்று திரும்பி நடந்தவரை, வலக்கையின் நடுவிரலையும், கட்டைவிரலையும் சேர்த்து போடும் “டொக்” கென்ற பெரியவாளுக்கே உரித்தான சொடக்கு சத்தம் திரும்பிப் பார்க்கவைத்தது. 

ஆள் காட்டி விரலால் “இங்கே வா” என்று சைகை பண்ணினார். 

விடியக்காலை தர்ஸனத்திலேயே ஒருமாதிரி ஆனந்த மயக்கத்தில் இருந்த ராமலிங்க பட், பெரியவா தன்னை அழைத்ததும் திக்குமுக்காடிப் போனார். பவ்யமாக அருகில் வந்து நின்றார்.



“ஒன்னோட ஒருமாச சம்பளத்த எனக்கு குடுப்பியா?…..” குழந்தை மாதிரி கேட்டதும், நெக்குருகிப் போனார் பட். 



மோக்ஷத்தையே அனாயாஸமாக பிக்ஷையாகப் போடும் தெய்வம், ஒரு மாச சம்பளத்தை கேட்கிறதே! என்று அதிர்ந்து பேச நா எழாமல் நின்றார்.



“என்ன….. யோசிக்கறே போலருக்கு?…… ஏதோ, இன்னிக்கு காலங்கார்த்தால ஒன்னை பாத்தேன்னோல்லியோ…கேக்கணும்னு தோணித்து. கேட்டுட்டேன். குடுப்பியா?…..” மறுபடியும் குழந்தை ஸ்வாமி கேட்டது. 


வேரறுந்த மரம் மாதிரி பாதத்தில் விழுந்தார் பட்.

“பெரியவா ஆக்ஞை! எங்கிட்டேர்ந்து என்ன வேணுன்னாலும் எடுத்துக்கலாம். இந்த ஜன்மால எனக்கு இதைத் தவிர வேறென்ன ஸந்தோஷம் நிலைக்கப் போறது?…” 

உடனேயே நாலாயிரம் ரூபாயை பெரியவாளின் திருவடியில் சமர்ப்பித்தார். 

அவரிடமிருந்த வந்த பணத்தை கொண்டுதான் “கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்” துவங்கப்பட்டு, வருமானம் குறைந்த அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இன்றுவரை உதவி செய்துகொண்டு வருகிறது.



டிரஸ்ட் துவங்கியதும் வேதமூர்த்தி என்பவர் ” ஹிந்து” பேப்பரில் விரிவான செய்தியாக எழுதியிருந்தார். பெரியவா அதைப் படித்துப்பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார். 

அப்போது அங்கே வந்த ராகவன் என்ற ஆடிட்டரிடம் “இந்த ஹிந்து பேப்பர்ல வந்திருக்கே…. இதை எனக்கு ஆயிரம் காப்பி ஜெராக்ஸ் மெட்ராஸ்ல எடுத்துத் தருவியா?…” குழந்தை ஸ்வாமி கேட்டார். 

ராகவனுக்கோ சந்தோஷம் தலைகால் புரியவில்லை. உடனே ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு வந்து குடுத்தார்.



“ஜெராக்ஸ் எடுத்ததுக்கு பில் எடுத்துண்டு வந்தியோ?….”



“இல்லே பெரியவா…..  ஆத்துல இருக்கும்”



“மெட்ராஸ்ல IIT ல ராமலிங்க பட்…ன்னு ஒர்த்தன் இருப்பான்… அவன்ட்ட அந்த பில்லைக் குடுத்துட்டு காசு வாங்கிக்கோ! ஜெராக்ஸ் போட்டுக் குடுத்ததே நீ பண்ணின பெரிய கைங்கர்யம்…” சிரித்துக்கொண்டே ஆசிர்வதித்தார்.

[Thanks to Amritha Vahini 28.10.2013]


oooooOooooo

[ 3 ]


மஹா பெரியவாளைப்பத்தி  எண்ணிலடங்கா  விஷயம்  நம்மை வந்தடைகிறது. ஸ்ரீ   சி. ஆர். சுவாமிநாதன் -  மத்திய அரசில் பெரும் பதவி வகித்தவர்  .... அவர் ஒரு விஷயம் சொன்னதிலிருந்து: 

                                         எங்கே படிச்சே ?                                           

நம்ம சென்னை  ஸம்ஸ்க்ருத கல்லூரியிலே 1956-57லே  மஹா பெரியவா சில நாள்  தங்கி, சாயந்திரம்  தினமும்  பிரசங்கம்  நடைபெறும். கேக்கணுமா.  பெரியவா பேச்சை கேக்க  கூட்டம்  அலைமோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு  மஹாபெரியவா முடிவு பண்ணலை.  பக்கத்திலே  ப்ரொபசர் சங்கரநாராயணன் நிக்கறதை பெரியவா பாத்து  அவரை பக்கத்திலே கூப்பிட்டா.

அவர் கிட்டே  ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி  அதிலே முதல் ரெண்டு வரியை மட்டும் சொன்னார்கள்.

''உனக்கு  அடுத்த  ரெண்டு  வரி  இருக்கே,  அது தெரியுமா? .

''பெரியவா க்ஷமிக்கணும். எனக்கு தெரியலை''

இப்படி  பெரியவா  ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது  மைக்லே எல்லோருக்கும்  கேட்டுடுத்து.

கூட்டத்திலே ஒருத்தருக்கு  அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக  மேடைக்கு அருகே  வந்து ப்ரொபசர் சங்கரநாராயணன் கிட்டே '' சார்,  பெரியவா  கேட்ட  அந்த  பாக்கி  ரெண்டு  அடி எனக்கு தெரியும் அது  இதுதான்”  என்று  அவரிடம் சொன்னார்.

அதை  ப்ரொபசர்  சந்தோஷமா  மேடையிலேறி  பெரியவா கிட்ட  
''பெரியவா  அந்த மீதி ரெண்டு வரி  இது தான்” என்று  சொன்னவுடன் 

''நான் கேட்ட போது  தெரியாதுன்னியே''

''ஆமாம்  பெரியவா. கூட்டத்திலே  யாரோ ஒருவருக்கு  தெரியும்னு  வந்து எங்கிட்ட சொன்னதைத்தான் பெரியவா கிட்ட சொன்னேன். ''

''அவரை இங்கே  அழைச்சிண்டு வா''

இந்த நிகழ்ச்சியை சொன்ன  சி.ஆர். சுவாமிநாதனை மேடையில் தன்  கிட்ட கூப்பிட்டு பெரியவா 

''நீ  தான்  அந்த  ரெண்டு  வரியை சொன்னதா?''

''ஆமாம் பெரியவா''

''எங்க படிச்சே?''

''மெட்ராஸ்லே  பிரெசிடென்சி காலேஜ்லே''

''நான்  அதைக் கேக்கலே.  இந்த ஸ்லோகத்தை எங்கே படிச்சே?''  

''எங்க  தாத்தா சொல்லிகொடுத்தது சின்ன வயசுலே''

''எந்த வூர்  நீ,  உங்க தாத்தா யார்?''

சுவாமிநாதன்  விருத்தாந்தம் எல்லாம்  சொன்னார்.  

ஸ்ரீ மஹா பெரியவா சுவாமிநாதன்  பேசினது  அத்தனையும்  மைக் வழியா  சகல  ஜனங்களும் கேட்டிண்டு இருந்தா.

பெரியவா சொன்ன  ஸ்லோகம்  இது தான் 

  அர்த்தாதுரணாம்  ந குருர் ந பந்து ,
  க்ஷுதாதுராணாம் ந ருசிக்கி  ந பக்வம் ,
  வித்யாதுராணாம் , ந சுகம்  ந  நித்ரா ,
  காமாதுராணாம் ந பயம்  ந லஜ்ஜா 

பணமே  லக்ஷியம்  என்று  தேடுபவனுக்கு  குரு ஏது  பந்துக்கள் ஏது?

பசி காதடைக்கிறவனுக்கு  ருசியோ, பக்குவமோ அவசியமா?

படித்து முன்னேற முனைபவனுக்கு வசதியோ  தூக்கமோ ரெண்டாம் பக்ஷம்  தானே?

காமாந்தகாரனுக்கு  பயமேது  வெட்கமேது?

தான்  பிறகு  பேசும்போது பெரியவா  கேநோபநிஷத்திலிருந்து மேற்கோள்கள் காட்டினார்.  எப்படி  பார்வதி தேவி தேவர்களுக்கு பிரம்மத்தை உபதேசித்தாள் என்றெல்லாம்  விளக்கிவிட்டு .......

இப்போ பேசுறதுக்கு முன்னாலே  ஒருத்தரை மேடைகிட்ட  கூப்பிட்டு  ஒரு ஸ்லோகத்தின்  முதல் ரெண்டு அடிகளை சொல்லி பாக்கி  தெரியுமா என்றதற்கு தெரியும் என்றார்.  

எங்கே தெரிஞ்சுண்டே என்று கேட்டதற்கு, சின்ன வயசிலே  தாத்தா வீட்டிலே சொல்லிக்கொடுத்தார் என்றார். எனக்கு அவா குடும்பத்தை தெரியும். 

+++

இந்த  நிகழ்ச்சியிலிருந்து என்ன  தெரிகிறது?

நான்  எதுக்கு இதை பெரிசா எடுத்து சொல்றேன்னா,  இதெல்லாம் வீட்டிலே  பெரியவா கிட்டே தெரிஞ்சிக்கணும். 

இதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயோ,  காலேஜ்லேயோ சொல்லித்தரமாட்டா.   

சேர்ந்து ஒண்ணா  வாழற  குடும்ப  வாழ்க்கையிலே  இது  ஒரு பெரிய  லாபம் என்பதைப்புரிந்து கொள்ள உதவும்.

தாத்தா   பாட்டிகள்  ஒரு  பொக்கிஷம். நிறைய  விஷயங்களை அவா கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கலாம். 


சின்ன வயசிலேயே  சொல்லிக்கொடுக்க தாத்தா  பாட்டியை விட  வேறே சிறந்த  குரு  யாரும் கிடையாது.  மனதில்  நன்றாக  படியும் .  அது  தான் பசுமரத்தாணி என்கிறது.


[Thanks to Mr. Sivan Krishnan Sir 
who brought this to my notice today  06.12.2013]



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி

நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

58 கருத்துகள்:

  1. பெரியவா சொன்ன ஸ்லோகம் மிகவும் சிறப்பு ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. மூன்று நிகழ்வுகளும் முத்தான நிகழ்வுகள்...
    அமுத மழை அருமையாய் பொழிகிறது ஐயா...

    பதிலளிநீக்கு
  3. உண்மை தான் எமது வீட்டில் உள்ள பெரிவர்களே சிறந்த பொக்கிஷங்கள் வாழ்வின் மகத்துவத்தை எந்நாளும் சொல்லித் தருவதில் .எனக்கு இன்னமும் ஒன்று ஞாபகத்தில் உள்ளது எனது பாட்டி அடிக்கடி ஏதோ ஒன்றைப்பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார் .அந்த ஏதோ ஒன்று தான் இன்றும் எம் வாழ்வு சிறப்பாக அமையக் காரணமாக இருக்கின்றது .புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்க வர்களுக்கு வீடில் உள்ள பெரியவர்களே விலை மதிப்பற்ற பொக்கிசங்கள் .அருமையான பகிர்வு ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  4. இப்போதெல்லாம் நியூக்கிளியஸ் குடும்பங்கள்தானே இருக்கிறது. மேலும் வயதில் மூத்தவர்கள் சொல்படி கேடக வேண்டும் என்பது அவசியமில்லை என்று எண்ணும் காலமிது. அமுத மழை யில் நனைவது நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. பாப சிந்தனைகளைப் போக்குகின்ற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம்.

    புண்ணிய சிந்தனைகளின் பயன்களை சிறப்பாக எடுத்துரைத்த அருமையான ப்பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  6. பெரியவா சொன்னபடி தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டபடியால் கட்டாயம் "வீடு பேறும்" கிடைக்கும்.

    [ Thanks to Mr. M.J.Raman [Manakkal] for sharing this incident ]

    தெய்வத்தின் குரல்...!

    பதிலளிநீக்கு
  7. “கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்” “துவங்கப்பட்டு, வருமானம் குறைந்த அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இன்றுவரை உதவி செய்துகொண்டு வருகிறது.

    கைங்கர்யம் பற்றி பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  8. தாத்தா பாட்டிகள் ஒரு பொக்கிஷம். நிறைய விஷயங்களை அவா கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கலாம்
    சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுக்க தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது. மனதில் நன்றாக படியும் . அது தான் பசுமரத்தாணி என்கிறது.

    இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து அல்லவா..!

    பதிலளிநீக்கு
  9. தூய்மையான உணவை சமைக்கும்போது தூய்மையான பக்தியுடன் பகவன் நாமாவை சொல்லிக்கொண்டேசமைக்கனும் இன்றும் வீட்டுக் காரியங்களை செய்துகொண்டே பக்தியுடன் ஸ்லோகங்கள் சொல்கிறார்கள் நல்லது உபவாஸம் இருப்பது சிரமமாக இருந்தாலும் பழக்கிகொள்ளவேண்டும் முயற்சிப்போம் பணிஒய்வுக்குப்பிறகு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக செய்ய அரிய யோசனை

    பதிலளிநீக்கு
  10. //”பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பு பேசுவதில் சுகமிருந்தாலும் மெளனத்தைக் கடைப்பிடி; கண்ணை இழுத்துக்கொண்டு போனாலும் தூங்குவது இல்லை என்று தீர்மானம் செய்து, இரவு முழுவதும் விழித்துக்கொண்டு, ஈஸ்வர சம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு.




    இப்படியெல்லாம் பழகப்பழக உடல் இச்சைக்கான புத்தி போய்விடும். சரீரம் எப்படியானாலும், சித்தம் பரமாத்மாவிடம் நிற்கும்” என்று தான் சாஸ்திரங்கள் விரதம், உபவாசங்கள் என விதித்திருக்கின்றன.//
    அற்புத வரிகள்!

    பதிலளிநீக்கு
  11. அர்ச்சகர்களுக்கான ட்ரஸ்ட் , குழம்பி நிற்கும் பக்தருக்கு அவருடைய இருப்பிடத்தைக் காட்டியது , திரு. சுவாமிநாதனுக்கு அருளுவது போல் பொதுவாக அருளியது என்று ஆன்மிகம் கமழும் பதிவு.

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளின் வாக்கை - கடைப்பிடித்தால் "வீடும் நிச்சயம்!.. வீடு பேறும் நிச்சயம்!..".

    பதிலளிநீக்கு
  13. //”பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பு பேசுவதில் சுகமிருந்தாலும் மெளனத்தைக் கடைப்பிடி; கண்ணை இழுத்துக்கொண்டு போனாலும் தூங்குவது இல்லை என்று தீர்மானம் செய்து, இரவு முழுவதும் விழித்துக்கொண்டு, ஈஸ்வர சம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு. //

    ஆஹா மிக அருமையான தத்துவங்கள்.. ஆனா இந்த தூங்காமல் இருப்பது மட்டும் முடியாது:)

    பதிலளிநீக்கு
  14. நீ எனக்கொரு ட்ரெஸ் வாங்கி கொடுப்பியா?

    எங்கே படிச்சே..
    இரண்டு சம்பவங்களும் அருமையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. நம்பிக்கையுடனும் உள்ளத்தில் உறுதியுடனும்
    கொண்ட கொள்கை மாறாது பிடிப்புடன் இருந்தால்
    இலக்கினை எட்டிவிடலாம் என்று உணர்த்தும்
    சொற்கள் மனதில் நின்றன ஐயா..

    பதிலளிநீக்கு
  16. சிறப்பான ஸ்லோகம்... அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
  17. அற்புதமான விஷயங்கள்
    ஏதோ புண்ணியம் எங்களையும்
    அறியாமல் செய்திருக்கிறோம்
    அதனால்தான் தங்கள் மூலம் அனைத்தும்
    அறியக் கிடைக்கிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  18. மனதில் உறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வரிகள்... சிறப்பான பதிவு...

    பதிலளிநீக்கு
  19. கச்சிமுதுர் அர்ச்சகா அறக்கட்டளை உருவாக்கிய விதமும் சி.ஆர்.ஸ்வாமினாதன் அவர்களுக்கு சொல்கிறார்போல் நம் அனைவருக்கும் அருளுரை உண்மையில் புத்தகங்களில் இல்லாத அனுபவபூர்வமான ஸ்லோகங்கள் நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி வந்திருக்கிறார்கள் தற்போது குறைந்து வருவது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது பதிவுக்கு நன்றி நாளைகாணஇருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. மூன்று நிகழ்வுகளும் மனதைத் தொட்டன....

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. ரிடையர் ஆன எல்லோருக்கும் சேர்த்து பெரியவா சொல்லிவிட்டார். கடவுளுக்கு பூஜை பண்றவாளும் மூணு வேளை சாப்பிடணும் என்ன கருணை!
    தாத்தா பாட்டிகள் பொக்கிஷம் - அற்புதமான வார்த்தைகள்!

    பதிலளிநீக்கு
  22. அந்தஸ்லோகம் இருக்கே.அழகாகவும்,அருமையாகவும்,இருக்கிரது. மனதைவிட்டு அகலவேயில்லை.மற்ற எல்லாமும் மனதில் பதிவதாக அமைந்திருக்கிரது. நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  23. //திருச்சில ஜாகை வெச்சுக்கோ!

    தெனமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்.... இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!" //

    எங்களுக்குனு சொன்னாப்போல் இருக்கு. அருமையான பதிவு.

    தாத்தா, பாட்டிகள் பொக்கிஷம் தான். குழந்தைகளுக்குத் தெரியும். :))))

    பதிலளிநீக்கு
  24. கச்சி மூதூர் ட்ரஸ்ட் வந்த கதை இன்னிக்குத் தான் படிச்சேன். :)

    பதிலளிநீக்கு
  25. ஒரு நிகழ்வு முழுவதும் நடந்ததும் தான் புரிகிறது.. அதன் உண்மையான தாத்பர்யம்..

    பதிலளிநீக்கு
  26. அருமையான 3 படிப்பினைகள்.
    பெரியவர்களை உதறும் காலத்தில் நல்ல பாடங்கள்.
    மிக்க நன்றி ஐயா.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  27. அன்பின் வை.கோ

    சித்தம் குளிர இப்போ - பதிவு அருமை.

    உணவுப் பொருட்களின் தூய்மையுடன் மனத் தூயமையைனையும் சேர்த்து இறைவனுக்குப் படைக்க வேண்டும் - படைப்பது மேன் மேலும் தூய்மை அடையும். - அருமையான சிந்தனை.

    பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழக வேண்டும் - வம்பு பேசுவதில் சுகமிருந்தாலும் மௌனத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். - தூக்கம் கண்ணைச் சுற்றினாலும் விழித்திருந்து இறை சம்பந்தப்பட்ட ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    இப்படி எல்லாம் பழகினால் உடல் இச்சைக்கான புத்தி போய் விடும். - இறை சிந்தனை மேலோங்கி நிற்கும் - சாஸ்திரங்கள் கூறும் விரதம் உபவாசம் எனபதெல்லாம் இவை தான்.

    அருமையான சிந்தனையில் விளைந்த பதிவு - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  28. அன்பின் வை.கோ

    தெய்வம் பேசுமா - பேசும் - பேசி வழி காட்டும்

    // "திருச்சில ஜாகை வெச்சுக்கோ!

    தெனமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்.... இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!" //

    என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பும் பக்தருக்கு அருமையான ஆலோசனை கூறும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா மகாப்பெரியவா தான்.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  29. அன்பின் வை.கோ

    கச்சிமுதூர் அரச்சக ட்ரஸ்ட் - துவக்கப் பட்ட விதம் விவரிக்கப் பட்டிருக்கிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  30. அன்பின் வை.கோ

    அருமையான பதிவு

    // சேர்ந்து ஒண்ணா வாழற குடும்ப வாழ்க்கையிலே இது ஒரு பெரிய லாபம் என்பதைப்புரிந்து கொள்ள உதவும்.

    தாத்தா பாட்டிகள் ஒரு பொக்கிஷம். நிறைய விஷயங்களை அவா கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கலாம்.

    சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுக்க தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது. மனதில் நன்றாக படியும் . அது தான் பசுமரத்தாணி என்கிறது. //

    கூட்டுக் குடும்பங்களில் வசிப்பவருக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்கின்றன - விளக்கிய விதம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  31. //பாப சிந்தனைகளைப் போக்குகின்ற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம். ///
    எளிமையான வரிகளில் ஆழமான சிந்தனைகளை வழங்கியமைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  32. //தாத்தா பாட்டிகள் ஒரு பொக்கிஷம். நிறைய விஷயங்களை அவா கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கலாம்.



    சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுக்க தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது. மனதில் நன்றாக படியும் . அது தான் பசுமரத்தாணி என்கிறது.
    // அருமை ஐயா! பகிர்விற்கு மிக்க நன்றி!//

    பதிலளிநீக்கு
  33. தெனமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்.... இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!" //
    ethu enakkave chona mathiri irrukku.
    Chennail ulla kovilukku than poikonduirrukkem
    n.

    பதிலளிநீக்கு
  34. அனைத்துக் கோவில் அர்ச்சகர்களும் மூன்றுவேளை வயிறார உணவுண்டார்களா என்று அறிந்து அதற்கான முயற்சியை மேற்கொண்ட பெரியவரின் செயல் வியக்கவைக்கிறது. குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு இளையவர்கள் மதிப்பளிக்கவேண்டுமென்பதையும் அவர்களது சொல்லைக் கடைப்பிடிக்கவேண்டுமென்பதையும் அவர் விளக்கியவிதம் அருமை. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  35. தெய்வத்தின் பேச்சும் கருணையும் அறிவுரையையும் படித்து சித்தம் குளிர்ந்தது!! நன்றி

    பதிலளிநீக்கு
  36. மனதை அடக்கும் மார்க்கத்தை எளிதாக
    புரியவைத்துவிட்டார் மாஹனுபாவர் !

    ஒவ்வொரு நாளும் வலையில்
    வாழ்க்கைக்கு தேவையான
    உபதேசங்கள் மகானின் வாயிலாக
    அறிந்கின்றோம்
    அறிந்து தெளிகின்றோம் .
    இந்த அருமையான வாய்ப்பை அளிக்கும்
    VGK வுக்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  37. // "திருச்சில ஜாகை வெச்சுக்கோ!

    தெனமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்.... இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!" //

    இங்கே பெரியவர் குறிப்பிட்ட எல்லா கோயில்களுக்கும் சென்று இருக்கிறேன். இது தவிர திருச்சியில் உள்ள போகாத எல்லா கோயில்களுக்கும் போய் வரவேண்டும் .

    பதிலளிநீக்கு
  38. அன்பு ஐயாவிற்கு வணக்கம்!
    //மாட்டுப்பெண்ணும் நல்லவள்தான்.... யாருக்கு? பிள்ளைக்கு! // இன்றைக்கு எல்லா இடங்களிலும் நடக்கும் உண்மையை அழகாக சொன்னீர்கள். பெரியாவாளின் வழிகாட்டுதல் பக்தர்களுக்கு அற்புதமான வீடுபேற்றை அளிப்பது எவ்வளவு மகிழ்வாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  39. //உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்.... //
    திருச்சியில் உள்ள அனைத்து கோவில்களின் பெயர்களையும் சொல்லிய பெரியவாவின் ஆலோசனையை என்னவென்று சொல்வது.

    பதிலளிநீக்கு
  40. 3 நிகழ்வுகளும் படிக்கும்போது நெகிழ்ச்சியா இருக்கு..நன்றி ஐயா!!

    பதிலளிநீக்கு
  41. திருச்சில ஜாகை வெச்சுக்கோ!

    தெனமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்.... இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!" //

    அருமையான தெய்வ வாக்கு.
    திருச்சியில் இருப்பவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.

    //பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும்னு யோசிங்கோ!..” //

    அருமையான தெய்வ வாக்கு.

    தாத்தா பாட்டிகள் ஒரு பொக்கிஷம். நிறைய விஷயங்களை அவா கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கலாம். //
    ,
    ஆமாம் தாத்தா, பாட்டிகள் பொக்கிஷம் தான்.
    அமுத வாக்கு அற்புதம். பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  42. பெரியவா சொன்ன ஸ்லோகமும் விளக்கமும் அருமை! மூன்று நிகழ்வுகளும் பிரம்மிக்கவும் ரசிக்கவும் வைத்தது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  43. வம்பு பேசி சுகம் அனுபவிப்பதுதான் பாவத்திலும் மகா பாவம்.

    பதிலளிநீக்கு
  44. மூன்று முத்துக்களும் மனதை தொட்டன.

    பதிலளிநீக்கு
  45. // ”பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பு பேசுவதில் சுகமிருந்தாலும் மெளனத்தைக் கடைப்பிடி; கண்ணை இழுத்துக்கொண்டு போனாலும் தூங்குவது இல்லை என்று தீர்மானம் செய்து, இரவு முழுவதும் விழித்துக்கொண்டு, ஈஸ்வர சம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு. //

    இது போன்ற வரிகளை தினமும் படித்துக்கொண்டிருந்தால்தான் என் போன்ற சாதாரணமானவர்களுக்கு புத்தியில் உரைக்கும்.

    // யார் வழி காட்டுவார்கள்? "நீனே அநாத பந்து" என்று பெரியவாளுடைய திருவடியில் வந்து விழுந்தார். //

    அப்புறம் என்ன. அவர் திருவடியை நினைத்தாலே அருள் பாலிப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 21, 2015 at 3:57 PM

      //இது போன்ற வரிகளை தினமும் படித்துக்கொண்டிருந்தால்தான் என் போன்ற சாதாரணமானவர்களுக்கு புத்தியில் உரைக்கும்.//

      ’என் போன்ற’ அல்ல. நம் போன்ற எனச்சொல்லுங்கோ ஜெயா. நானும் மிகச் சாதாராணமானவன் மட்டுமே.

      //அப்புறம் என்ன. அவர் திருவடியை நினைத்தாலே அருள் பாலிப்பார்.//

      நிச்சயமாக. சந்தோஷம், ஜெயா.

      >>>>>

      நீக்கு
  46. // உடனேயே நாலாயிரம் ரூபாயை பெரியவாளின் திருவடியில் சமர்ப்பித்தார்.
    அவரிடமிருந்த வந்த பணத்தை கொண்டுதான் “கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்” துவங்கப்பட்டு, வருமானம் குறைந்த அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இன்றுவரை உதவி செய்துகொண்டு வருகிறது.//

    திரு ராமலிங்க பட் அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட கொடுப்பினை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 21, 2015 at 4:00 PM

      //திரு ராமலிங்க பட் அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட கொடுப்பினை. //

      ஆமாம். மிகவும் கொடுத்துவைத்தவர்தான் !

      நீக்கு
  47. // சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுக்க தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது. மனதில் நன்றாக படியும் . அது தான் பசுமரத்தாணி என்கிறது.//

    மகா பெரியவா வாக்குப்படி ஏதோ எங்களுக்குத் தெரிந்த விஷயங்களை லயாக்குட்டிக்கு சொல்லிக்கொடுக்கற பாக்கியம் எங்களுக்கு கிடைச்சிருக்கு.

    ஹர ஹர சங்கர, ஜெய, ஜெய சங்கர

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 21, 2015 at 4:01 PM


      //மகா பெரியவா வாக்குப்படி ஏதோ எங்களுக்குத் தெரிந்த விஷயங்களை லயாக்குட்டிக்கு சொல்லிக்கொடுக்கற பாக்கியம் எங்களுக்கு கிடைச்சிருக்கு. //

      லயாக்குட்டி மிகவும் அதிர்ஷ்டக்காரி ...... அவளின் அப்பாவழிப் பாட்டி போலவே ...... சமத்தோ சமத்து. :)

      நீக்கு
  48. எங்கூட்லலா பாட்டன் வப்பத்தாலா இல்லியே அம்மிகிட்டந்துதா கத்துகிடுதோம் நல்ல வெசயம்லா

    பதிலளிநீக்கு
  49. கூட்டுக்குடும்ப முறை இப்பல்லாம் எங்க பாக்க முடியறது. கணவன் மனைவி சேர்ந்து வாழ்வதே இன்று கூட்டுக்குடும்பம் என்று ஆகிவிட்டது ஒரு குழந்தை இருந்தாலும் படிப்பு என்று காரணம் சொல்லி ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறார்கள். பிறகு தாத்தா பாட்டிக்கு எங்க போக.

    பதிலளிநீக்கு
  50. சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுக்க தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது. மனதில் நன்றாக படியும் . அது தான் பசுமரத்தாணி என்கிறது.// ஆஹா..எனது முதல் குரு என் தாத்தாதான்.

    பதிலளிநீக்கு
  51. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (02.10.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=503787993457233

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  52. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (05.10.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=505384993297533

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  53. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (10.10.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=508000723035960

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு