2
ஸ்ரீராமஜயம்
[ 4 ]
Periyava enquired "How are you?" in Mouna..
ஆசையினாலோ வெறுப்பினாலோ செய்கிற காரியங்கள்தான் ஒருவரைப் பாவத்தில் தள்ளுகின்றன.
ஆசையும் வெறுப்பும் இல்லாமல் உலக நன்மைக்காக செய்கிற காரியங்கள் எத்தனை கொடுமையான செயலாகத் தோன்றினாலும் அவையெல்லாம் புண்ணியமானவைதான். இதுதான் கீதை தருகிற பதில்.
மிருகமாகத் தெரிகிற பசு, உயிரற்றதாகத் தெரிகிற பூமி, ஆகியவற்றில், உயிருள்ளதும் அன்பே உருவானதுமான தாய்த்தத்துவம் இருப்பதைக் கண்டுகொண்டு நம்முன்னோர்கள் “கோமாதா” - “பூமாதா” என்றும் சொன்னார்கள்.
சத்தியத்தைச்சொல். பிரியமானதைச்சொல்.
மெளனம் என்பது ஞான வரம்பு.
“மெளனேன போக்தவ்யம்” என்பது சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதாகும்.
oooooOooooo
[ 1 ]
திருவானைக்கோயில் பற்றி
பிள்ளையாருடைய மனஸ் எத்தனை நல்லது என்பதற்கு ஒன்று சொல்லிவிட்டால் போதும். ஒருத்தரின் கிட்டேயே கோபம் நெருங்க முடியாது; மகா கோபிஷ்டர் கூட அவருக்கு முன்னால் தானாகவே சாந்தமாகி விடுவார் என்றால், அப்படிப்பட்டவர் வெகு நல்ல மனம், உயர்ந்த அன்புள்ளம் படைத்தவ ராகத்தானே இருக்க வேண்டும். இப்படி ஒரு உதாரணம் பிள்ளையார் விஷயமாக இருக்கிறது.
நம் எல்லோரிடமும், ஈ எறும்பில் இருந்து ஆரம்பித்து அனைத்து ஜீவராசிகளிடமும் பரம கிருபையோடு இருக்கக்கூடியவர் யார்? ஸாக்ஷாத் அம்பாள்தான்.
இத்தனை ஜீவராசி களுக்கும் தாயாக இருக்கப்பட்ட அகிலாண்ட ஜனனி அவள்தானே? அப்படிப்பட்ட அந்த அகிலாண்டேஸ்வரியே ஒரு ஸமயம் உக்ர ரூபம் கொண்டிருந்தாள். ஜம்புகேஷ்வரத்தில் (திருவானைக்காவில்) இருக்கப்பட்ட அகிலாண்டேஸ்வரி, கலிகாலத்தில் ஜனங்கள் போகிற போக்கைப் பார்த்து இப்படி உக்கிர கோலமாக ஆகிவிட்டாள்.
ஸகல சக்தியும் அவள்தான் ஆகையால் அன்பில் பரம ஸெளம்யமான லலிதாம்பாளாக இருக்கப்பட்ட அவளே கோபம் வந்தால் அதன் உச்சியில் காளியாயிருப்பாள். இப்போது அப்படித்தான் ஆகியிருந்தாள்.
கலியைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அவதாரம் செய்திருந்த நம்முடைய ஆச்சார்யாள் [ஆதி சங்கரர்] அங்கே வந்தார். பரமேஷ்வர அவதாரம் ஆனதால், அவரால் உக்ர கோலத்திலிருக்கிற அம்பாளிடமும் போக முடியும்.
ஆனாலும் அவர் இந்த ஸந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிள்ளையாரின் அன்பு மனப் பெருமையை உலகத்துக்குத் தெரிவிக்க நினைத்தார். அதனால் அம்பாளுக்கு நேர் எதிரே, கோயில் முடிந்து மதில் வந்துவிடுகிற அவ்வளவு தூரத்திலே, பெரிசாக ஒரு பிள்ளையாரை பிரதிஷ்டை பண்ணிவிட்டார்.
அவ்வளவுதான் செல்லப்பிள்ளை எதிரே இருக்கிறான் என்றதும் அம்பாளுடைய அத்தனை உக்கிரமும் போன இடம் தெரியாமல் போய் விட்டது!
அப்போது அம்பாளைவிட்டு போயிருந்த கோபம் மறுபடியும் ஒருபோதும் அவளிடம் திரும்பிவிடக் கூடாதென்று, நினைத்தார் ஆச்சார்யாள். அதனால் அந்த உக்ர கலைகளை இரண்டு தாடங்கங்களில் ஆகர்ஷித்து சமனம் செய்தார் (அடக்கினார்).
அந்த தாடங்கங்களை அம்பாளின் காதுகளிலேயே அணிவித்தார்.
ஜம்புகேஷ்வரம், திரு ஆனைக்கா இரண்டு பெயர்களிலுமே பிள்ளையார் சம்பந்தமிருக்கிறது.
ஜம்பு என்பது நாவல் மரம். பிள்ளையாருக்கு ரொம்பப் பிடித்தது நாவல் பழம்.
திருஆனைக்கா என்றபோதும் அதில் ஆனை வந்து உட்கார்ந்து கொண்டு கஜானன மூர்த்தியை ஞாபகப்படுத்துகிறது.
- மகா பெரியவா (தெய்வத்தின் குரலிலிருந்து)
oooooOooooo
[ 2 ]
திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள்னு பெரிய மஹான் இருந்தார். அவர் வாழ்ந்த இடத்தைத் ‘தபோவனம்’னு சொல்லுவா.
முக்காலமும் உணர்ந்த மஹான் அவர்; உட்கார்ந்த இடத்திலிருந்தே எத்தனையோ பக்தர்களைக் காப்பாத்தி அருள்பாலிச்சிருக்கார்!
எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பார்; தெய்வாம்சம் உள்ள ஞானி.
இன்னிக்குப் பிரபலமா இருக்கிற நாம சங்கீர்த்தனத்துக்கு மூல காரணம், அவர்தான்!
ஒருமுறை, அவரைத் தரிசனம் பண்ண வந்த ஜனங்களும், அங்கேயே இருக்கிறவங்களும் கவலைப்பட ஆரம்பிச்சுட்டா.
ஏன்னா… சுவாமிகள் ஒரே இடத்துல உக்கார்ந்துண்டு, ஆடாம அசையாம அப்படியே ஸ்தம்பிச்சு இருந்தார்.
அதைப் பார்த்து என்னமோ, ஏதோன்னு பதறிப்போயிட்டா.
அதுவும், சிலை மாதிரி அஞ்சாறு நாள் அசைவில்லாம உட்கார்ந்திருந்தா, பார்க்கிறவாளுக்குப் பதற்றம் வரத்தானே செய்யும்?!
அதுவும், சிலை மாதிரி அஞ்சாறு நாள் அசைவில்லாம உட்கார்ந்திருந்தா, பார்க்கிறவாளுக்குப் பதற்றம் வரத்தானே செய்யும்?!
யார்கிட்ட போய், என்னன்னு கேக்கறதுன்னு தெரியலை பக்தர்களுக்கு!
அதே நேரம், சுவாமிகளை அந்த நிலையில் பார்க்கிறதுக்கும் மனசு சங்கடப்பட்டுது.
அப்ப யாரோ சிலர், ‘எல்லாரும் உடனே காஞ்சிபுரம் போய், பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, என்ன பண்றதுன்னு கேளுங்கோ’ன்னு யோசனை சொல்ல… பக்தர்கள் சில பேர் கிளம்பி, பெரியவாகிட்ட வந்து, ஞானானந்தகிரி சுவாமிகள் பத்தி விவரம் சொன்னா.
எல்லாத்தையும் கேட்டுண்ட பெரியவா, ‘கவலைப்படாதீங்கோ! அவருக்கு ஒண்ணும் ஆகலை.
அவர் சமாதி நிலைல இருக்கார்; சாம்பிராணிப் புகை போடுங்கோ. அது ஒருவித ஆராதனை; சமாதி நிலையிலேர்ந்து எழுந்துடுவார்’னு சொன்னார்.
பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்.
‘சுவாமிக்கு ஒண்ணும் ஆகலே’ங்கிற மகிழ்ச்சியோடு திருக்கோவிலூருக்கு ஓடினா.
பெரியவா சொன்னபடி, சாம்பிராணி புகை காட்டி, ஆராதனை பண்ணினா.
அதன் பிறகு, ஞானானந்தகிரி சுவாமிகள் சமாதி நிலைலேருந்து மீண்டு வந்தார்.
[அமிர்த வாஹிணியில் 18.07.2013 ராம்]
வந்தவுடன் சொன்னார் "அங்கே இளையாத்தங்குடியில் ஆச்சார்யாள் பெரிய பூஜை பண்றாங்க. அதுக்கு ஸ்வாமியை கூப்பிட்டு இருந்தாங்க. போய் வர நேரம் ஆகிவிட்டது".
சந்தேகப்பட்ட நபர்கள் ஊர் திரும்பி செல்ல உத்தரவு வேண்டி நின்றனர்.
ஸ்வாமி அவர்களை "இருந்து விட்டு நாளை போகலாம்" என்று கூற அவர்களும் ஸ்வாமியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தங்கிவிட்டனர்.
தலை குனிந்தனர்.
oooooOooooo
[ 3 ]
காஞ்சி மஹானை சந்தித்த
ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்
மஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது. ஆனால் அவர்களை வழிபடுபவர்களின் மனப்பக்குவத்தில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது. ஒரு குருநாதரை ஏற்று கொண்டு மற்றவரை வெறுக்காமல், மஹானுக்கு மஹான் வித்தியாசம் என்ற நிலை மேற்கொள்ளாமல் அனைவரும் சமம் என்று வணங்கவேண்டும் .
ஒரு சமயம் தபோவனத்தில் பகல் வேளையில் குருநாதர் (ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்) முன்னிலையில் அமர்ந்து பாடி கொண்டிருந்தோம். திடீரென்று எழுந்த ஸ்வாமிகள் உள்ளே சென்று பின் வெகு நேரமாகியும் வெளி வரவில்லை. நாங்கள் தொடர்ந்து பாடிகொண்டிருந்தோம். சுமார் 2 மணி நேரம் கழித்து அப்போது தான் குளித்துவிட்டு வந்தது போன்ற தோற்றத்துடன் வெளியே வந்தார்.
வந்தவுடன் சொன்னார் "அங்கே இளையாத்தங்குடியில் ஆச்சார்யாள் பெரிய பூஜை பண்றாங்க. அதுக்கு ஸ்வாமியை கூப்பிட்டு இருந்தாங்க. போய் வர நேரம் ஆகிவிட்டது".
பலருக்கு அது ஸ்வாமியின் பல ஆச்சரிய லீலைகளில் ஒன்று என தோன்றினாலும் ஒரு சிலருக்கு மட்டும் சுவாமியின் வார்த்தைகளில் சந்தேகம் வந்தது. சிறிது நேரத்திற்கேல்லாம் பஜனை முடிந்தது.
சந்தேகப்பட்ட நபர்கள் ஊர் திரும்பி செல்ல உத்தரவு வேண்டி நின்றனர்.
ஸ்வாமி அவர்களை "இருந்து விட்டு நாளை போகலாம்" என்று கூற அவர்களும் ஸ்வாமியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தங்கிவிட்டனர்.
மறுநாள் காலையில் தினசரி வழிபாட்டுக்கு ஒரு புதிய தம்பதியர் வந்தனர்.
ஸ்வாமி அவர்களை பார்த்து "நாம் எங்கிருந்து வருகிறது" என்று கேட்க அவர்கள்
" இளையாத்தங்குடியிலிருந்து வருகிறோம்" என்றனர்.
அதற்கு ஸ்வாமி "அப்படியா! அங்கு என்ன விசேஷம்" என்று கேட்க அவர்கள் சொன்னார்கள்: " நேற்று மஹா பெரியவர்கள் விசேஷ பூஜை பண்ணினார்கள். நைவேத்யம் செய்யும் சமயம் ஒரு ஆடு வந்தது. பெரியவாள் அந்த நைவேத்தியத்தை அதனிடம் காண்பிக்க அந்த ஆடு சிலவற்றை சாப்பிட்டவுடன் பெரியவாள் தீபாரதனை பண்ணினார்கள். பிறகு அந்த ஆடு அங்கிருந்து போய் விட்டது.
அப்போது மஹாபெரியவாள் "இன்றைய பூஜைக்கு தபோவனம் பெரியவாளை கூப்பிட்டுருந்தேன். அவர்கள் தான் இப்போது வந்து சென்றார்கள்" என்று சொன்னவுடன், நாங்கள் ஊருக்கு கிளம்பும் சமயம் அவரிடம் தபோவனம் பெரியவாள் யார் ஸ்வாமி என்று கேட்க அவர் தங்களை பற்றி சொல்லி, அவசியம் தரிசித்து வரவும் என்று ஆசிர்வதித்து அனுப்பினார்" என்றனர்.
உடன் இருந்த அந்த சந்தேகப்பட்ட நபர்கள் நால்வரும் வெட்கி
தலை குனிந்தனர்.
oooooOooooo
[ 4 ]
Puncturing the Ego
I witnessed an incident some 4 decades back in Kalavai, when I went to have a darshan of Paramacharya on His Jayanthi day.. There was as usual a huge crowd. My wife and me were waiting when suddenly He appeared from another side.. all the crowd started moving towards Him.. There was a 50 year old Man with Gold Chains adorning the neck and his wife prostrated before Him.. Periyavaa was in Mouna.. HE looked a very well placed Businessman..
Periyava enquired "How are you?" in Mouna..
This man and his wife gave a pamphlet showing that he conducted for 4 days 'Samashti Upanayanm' for poor Brahmins in KK Nagar (Free Upanayanams with all cost born by him..)
Periyava looked at the pamphlet.. There was silence..
HE asked him "How much did you spend..?"
He said "a few lacs.."
Silence..
Periyavaa asked him in Mouna, about a boy called "Dakshinamurthy of Tirunelveli.
This man got a shock of his life time.. Periyava disappeared. .!
This man started weeping uncontrollably. His wife tried to pacify and a few Journalists present asked him: " Sir what happened.... ..Why are you crying "
He went on repeating " I am a criminal.. I am a criminal."
Then he explained :
"I had a widowed sister years back and her son's name is Dakshinamurthy. I took care of them but she also passed away.. I didn't like to keep that boy in my house and drove him away and I don't know where he is.. Periyava 'indirectly' asks me today 'You do Samashti Upanayanm' for all but you have forgotten your own sister's son! Now I have to somehow find him and make him a man.."
[Thanks to my Dear G.Ganesh (Soudi Arabia)
for sharing this message on 24.11.2013]
oooooOooooo
for sharing this message on 24.11.2013]
oooooOooooo
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
நூற்றாண்டு கண்ட மாபெரும் ஞானி அவர். கண்டார்க்குக் கண்டவுடனே சாந்தி தரும் அற்புத சக்தி அவரிடம் இருந்தது. இறுதிநாட்களில் ஒருமுறை அவரைத் தரிசிக்கும் பேறுபெற்றேன். இனிய பதிவு!
பதிலளிநீக்குமெளனம் என்பது ஞான வரம்பு எனபது உண்மை தான் ஐயா...
பதிலளிநீக்குநாம் எங்கிருந்து வருகிறது என்பதிலேயே பல அர்த்தங்கள் உள்ளது ஐயா...
நல்லது... நன்றி... வாழ்த்துக்கள்...
நான் எழுதிய மறுமொழி கிடைத்ததல்லவா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ
பதிலளிநீக்குநான் எழுதிய மறூமொழி வந்ததா எனத் தெரியவில்லை.
எனவே நினைவில் இருந்து மறுபடியும் எழுதுகிறேன்.
அன்பின் வை.கோ
கோமாதா பூமாதா பதிவு அருமை
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காபெரியவாளின் படங்கள் அருமையிலும் அருமை - தங்கள் பதிவுகளில் வரும் படங்களை எல்லாம் தரவிரக்கம் செய்து வைத்திருகிறேன்.
பாவத்தின் அடிப்படை நாம் ஆசையினாலும் வெறுப்பினாலும் செய்யும் செயல்கள் தான். மற்றவற்றால் விளையும் செயல்கள் புண்ணியத்த்னைத் தரும் செயல்கள்
கீதையின் அடிப்படை இது
கோமாதா பூமாதா - பெயர்க் காரணம் விளக்கமாகக் கூறப்பட்டிருப்பது அருமை.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குதிருவானைக் கோவில் பற்றிய பதிவு நன்று.
அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக இருப்பவர் சாட்சாத் அம்பாள் தான். அமைதியின் சொரூபம் - அப்படிப்பட்ட அம்பாள் கலிகாலத்தில் ஜனங்கள் போகிற போக்கைப் பார்த்து கடுங்கோபம் கொண்டு உக்கிர கோலம் கொண்டுவிட்டார்.காளியாய் விட்டார்.
கலியைக் கட்டுப் படுத்த பரமேஷ்வர அவதாரத்தில் ஆதி சங்கரர் அவதரித்து அம்பாளின் எதிரே ஒரு பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து விட்டார்.
அம்பாளின் செல்லப் பிள்ளியினால் அம்பாளின் கோபம் தணிந்தது.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குதிருக்கோவிலூர் ஞானானந்த சுவாமிகள் ஒரு சமயம் ஆடாமல் அசையாமல் இருந்தார். கண்டு பயந்த பக்தர்கள் எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளைச் சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறிய போது - பெரியவா பயப்பட வே\ண்டாம் எனத் தைரியம் ஊட்டி - சாம்பிராணிப் புகை போட்டும் படிக்கூற - பக்தர்களும் அப்படியே செய்ய - சுவாமிகளும் சமாதி நிலையில் இருந்து மீண்டு வந்தார்.
அரிய தகவல்கள் பகிர்வு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளைச் சந்தித்த ஞானானந்த ஸ்வாமிகள் - பதிவு அருமை. இளையாத்தங்குடியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா பூஜை செய்யும் போது ஆடு வடிவத்தில் சுவாமிகள் வந்து கலந்து கொண்ட அற்புத நிகழ்வு அருமை அருமை.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மிருகமாகத் தெரிகிற பசு, உயிரற்றதாகத் தெரிகிற பூமி, ஆகியவற்றில், உயிருள்ளதும் அன்பே உருவானதுமான தாய்த்தத்துவம் இருப்பதைக் கண்டுகொண்டு நம்முன்னோர்கள் “கோமாதா” - “பூமாதா” என்றும் சொன்னார்கள்.
பதிலளிநீக்குஆதமார்த்தமாக அழைத்திருக்கிறார்கள்..!
பெரியவரின் அற்புதங்களை படிக்கத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குகோமாதா,பூமாதா பெயர் விளக்கம் நன்றாக உள்ளது. அகிலாண்டேசுவரிக்கு,கோபமடங்கிய விஷயம், பிள்ளையாரை ஸ்தாபித்தது எல்லாம் மிகவும் அருமையான விஷயங்கள்.
பதிலளிநீக்குஞானாநந்தஸ்வாமிகள் விஷயம் மெய் சிலிர்க்கிரது.
நல்லநல்ல விஷயங்கள். படிக்க ன்றாக உள்ளது. அன்புடன்
எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பார்; தெய்வாம்சம் உள்ள ஞானி.
பதிலளிநீக்குசிறுவயதில் பலமுறை தரிசனம் செய்திருக்கிறோம்..!
ஒரு குருநாதரை ஏற்று கொண்டு மற்றவரை வெறுக்காமல், மஹானுக்கு மஹான் வித்தியாசம் என்ற நிலை மேற்கொள்ளாமல் அனைவரும் சமம் என்று வணங்கவேண்டும் .
பதிலளிநீக்குஅருமையான கருத்துகள்..!
திருஆனைக்கா என்றபோதும் அதில் ஆனை வந்து உட்கார்ந்து கொண்டு கஜானன மூர்த்தியை ஞாபகப்படுத்துகிறது.
பதிலளிநீக்குகஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன்
என்றுதானே ஆனைமுகனை அனுதினமும் வணங்குகிறோம்...!!
தாடங்கங்களை அம்பாளின் காதுகளிலேயே அணிவித்த நிகழ்ச்சியை உணர்வுப்பூர்வமாக விவரித்த அருமையான
பதிலளிநீக்குகாட்சி சிறப்பு.!
ஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளின் பூஜையில் ஆடு வடிவத்தில் ஸ்ரீஞானானந்தகிரி ஸ்வாமிகள் கலந்து கொண்ட அற்புத நிகழ்வினை எப்போதோ படித்த நினைவு!..
பதிலளிநீக்குஅதனை - மீண்டும் தங்கள் பதிவின் வாயிலாகப் படிக்கும் போது மனம் மகிழ்கின்றது. இனிய பதிவினுக்கு நன்றி!..
அகிலாண்டேஸ்வரி, கலிகாலத்தில் ஜனங்கள் போகிற போக்கைப் பார்த்து இப்படி உக்கிர கோலமாக ஆகிவிட்டாள்.
பதிலளிநீக்குசௌம்யமான அம்பிகையே உக்ரஹமாக மாற்றும் கலிகாலம் மற்றவர்களை என்னதான் செய்யாது ..!!
ஆசையும் வெறுப்பும் இல்லாமல் உலக நன்மைக்காக செய்கிற காரியங்கள் எத்தனை கொடுமையான செயலாகத் தோன்றினாலும் அவையெல்லாம் புண்ணியமானவைதான். இதுதான் கீதை தருகிற பதில்.
பதிலளிநீக்குகீதையின் பதில் மனதில் கொள்ளவேண்டியவை..!
கூடப் பிறந்த சகோதரி மகனை
பதிலளிநீக்குஅனாதையாக விட்டுவிட்டு
லட்சக்கணக்கில் செலவு செய்து
சமஷ்டி உபநயனம் செய்த கனவான் தன்னை
பெரியவா பாராட்டுவார் என்று நினைத்தார் போலும்!
ஆனால் அனைத்தையும் அறிந்தவர் முன்னால்
அந்த கனவான் துண்டைக் காணோம் துணியக்காணோம் என்று ஓடியது ஒன்றே போதும் பெரியவாவின் ஞான திரிஷ்டிக்கு சான்று
படிக்க மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு .
பாராட்டுக்கள் VGK .
காமதேனுவின் சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் கோமாதாவைக் குறித்த உங்கள் பதிவு. மற்ற சம்பவங்கள் படித்திருந்தாலும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டேன். நன்றி.
பதிலளிநீக்குVery interesting and lovely post sir, each day is a new day and we learn new things reading your post sir...thanks a lot...
பதிலளிநீக்குமௌனம் பெரியதவம் ,கோமாதா பூமாதா அழகான விளக்கம் அகிலாண்டேஸ்வரி அம்மனின் உக்ரத்தை குறைக்க முன் புறம் கணபதியையும் பின் புறம் முருகனையும் அமைத்து நமக்கெல்லாம் அருளியிருக்கிறார்கள் தன் சகோதரி மகனை விரட்டிவிட்டு ஸமஷ்டிஉபனயனம் பெருமைக்காக செய்தவரை உணரவைத்த மகிமை ஞானானந்தரின் மகத்துவம் படிக்க படிக்க பரவசம் நன்றி
பதிலளிநீக்குஅன்பின் அய்யாவிற்கு வணக்கம்
பதிலளிநீக்கு//மிருகமாகத் தெரிகிற பசு, உயிரற்றதாகத் தெரிகிற பூமி, ஆகியவற்றில், உயிருள்ளதும் அன்பே உருவானதுமான தாய்த்தத்துவம் இருப்பதைக் கண்டுகொண்டு நம்முன்னோர்கள் “கோமாதா” - “பூமாதா” என்றும் சொன்னார்கள்.// மிக அற்புதமான விளக்கம். தங்கள் மூலம் நிறைய ஆன்மீக தகவல்களைத் தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி..
திருவானைக்காவல் அம்மன் பற்றிய தகவல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. //ஜம்புகேஷ்வரம், திரு ஆனைக்கா இரண்டு பெயர்களிலுமே பிள்ளையார் சம்பந்தமிருக்கிறது. // சிறப்பான காரணம் அய்யா. சீனா அய்யா அவர்களின் கருத்துரையின் மூலம் புராணக்கதையை அறிய முடிந்தது. இருவருக்கும் நன்றி..
பதிலளிநீக்குதிருக்கோவிலூர் அருகில் தான் நான் ஆசிரியர் பயிற்சி படித்தேன். தபோவனம் பற்றி அறிந்தேன் ஆனால் செல்வதற்கான வாய்ப்பு கிட்டவேயில்லை. தங்கள் பதிவின் மூலம் இருபெரும் மகான்களின் சந்திப்பை அறிந்து கொள்ள முடிந்தது. என்ன ஒரு சந்திப்பு மகான்களின் லீலையே லீலை.
பதிலளிநீக்குகோமாதாவின் பெருமையின் திருவானைக்கா கோவில் வரலாறும், தபோவன சுவாமிகளின் திருவிளையாடலும் அருமை! சிறப்பான பகிர்வு! தொடருங்கள்! நன்றி!
பதிலளிநீக்கு//" I am a criminal.. I am a criminal."// what a hearty touching incident. periyava was genious. He living in many human hearts now days also because of unmeasureful job to our world.. thanking you for charing.
பதிலளிநீக்கு==============
பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டியில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கிறேன்.
தபோவனம் ஸ்வாமி பற்றிய நிகழ்வு சிலிர்க்க வைத்தது
பதிலளிநீக்குநமது திருச்சி – திருவானைக் கோவில் அகிலாண்டேஸ்வரி , பிள்ளையார் பற்றி நான் ஏற்கனவே அறிந்த செய்திகளை, மீண்டும் படிக்க உங்கள் பதிவு ஒரு வாய்ப்பு தந்தது. பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅமுதமொழி அருமை! அரிய தகவல்கள் தபோவனம் பற்றி! இன்று திருக்கோயிலூர் சென்று திரும்பும்போது தற்செயலாகக் கண்ணில் பட்டது சாலையோரத்தில் பெயர்ப்பலகை! வந்தவுடன் தங்கள் பதிவைப் படித்தேன்! அதில் அந்த தபோவனம் குறித்த தகவல்! ஆச்சர்யமடைந்தேன்! நன்றி ஐயா!
பதிலளிநீக்குநீங்கள் சொல்லும் ஞானியும், ஹரிதாஸ் சுவாமிகள் தானே! இல்லை இது வேறொருவரா?
பதிலளிநீக்கும்ஹாபெரியவரின் அமுத மொழிகள் படிக்க படிக்க அவர் மேலிருக்கும் பக்தி பன்மடங்காகிறது.
செல்லப் பிள்ளையார் பற்றியா செய்தி,ஞானி ஆடாக போனது ,
தொழிலதிபருக்கு அவர் தவற்றை சுட்டிக் காட்டியது என்று உங்கள் பதிவு ஒரு சுரங்கமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.....தொடருங்கள்....
rajalakshmi paramasivamDecember 2, 2013 at 9:45 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//நீங்கள் சொல்லும் ஞானியும், ஹரிதாஸ் சுவாமிகள் தானே! இல்லை இது வேறொருவரா? //
இல்லை இவர் வேறு அவர் வேறு என்று நினைக்கிறேன். நான் இருவரையுமே பார்த்தது இல்லை. இவர்களைப்பற்றியெல்லாம் படித்தது மட்டுமே.
மேலே ஒருவர் //சிறுவயதில் பலமுறை தரிசனம் செய்திருக்கிறோம்..!// என எழுதியிருக்கிறார்கள்.
ஒருவேளை, அவர் இவரைப்பற்றி தன் பதிவுகளிலும் ஆங்காங்கே வெளியிட்டு இருக்ககூடும். அப்படி இருந்தால் இணைப்பு தருவார்கள் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.
//மஹாபெரியவரின் அமுத மொழிகள் படிக்க படிக்க அவர் மேலிருக்கும் பக்தி பன்மடங்காகிறது.//
சந்தோஷம்.
//செல்லப் பிள்ளையார் பற்றியா செய்தி,ஞானி ஆடாக போனது ,
தொழிலதிபருக்கு அவர் தவற்றை சுட்டிக் காட்டியது என்று உங்கள் பதிவு ஒரு சுரங்கமாக இருக்கிறது. //
மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.
//வாழ்த்துக்கள்.....தொடருங்கள்....//
ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அனுக்ரஹத்துடன், வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்குள், இந்தத்தொடர் முடிந்து விடும் என நினைக்கிறேன். மொத்தம் 108 பகுதிகள் மட்டுமே.
தொடர்ந்து வாங்கோ. இதுவரை 89/89 Full Attendance List இல் இருக்கிறீர்கள். சந்தோஷம். ;)
http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_24.html
நீக்குஞானப் பேரொளி ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் ......
என்கிற பதிவு சுவாமிகளைப் பற்றி ...!
ஞானானந்த கிரி சுவாமிகளின் சீடர் ஹரிதாஸ் சுவாமிகள் ...!
இராஜராஜேஸ்வரி December 3, 2013 at 10:57 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_24.html
ஞானப் பேரொளி ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் ......
என்கிற பதிவு சுவாமிகளைப் பற்றி ...!
ஞானானந்த கிரி சுவாமிகளின் சீடர் ஹரிதாஸ் சுவாமிகள் //
தங்களின் அன்பான மீள் வருகைக்கும், அழகான சந்தேக விளக்கங்களுக்கான தங்கள் பதிவின் இணைப்பினைக் கொடுத்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
இதை சந்தேகம் கேட்டுள்ளவர்களுக்கும் நான் மெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளேன். இது தங்க:ள் தகவலுக்காக மட்டுமே.
மீண்டும் நன்றிகள்.
இப்படிக்கு நன்றியுடன் VGK
சத்தியத்தைச்சொல். பிரியமானதைச்சொல்.நன்றி ஐயா
பதிலளிநீக்குGreat.. thanks for sharing..
பதிலளிநீக்குதிருவானைக்காவல் பற்றிய விள்க்கத்தை தெரிந்துக் கொண்டேன்,நன்றி ஐயா!!
பதிலளிநீக்குஅகிலாண்டேஸ்வரியைப் பற்றியும், ஞானானந்த சுவாமிகள் பற்றியும் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. சிறப்பான பகிர்வு...
பதிலளிநீக்குthiruvanaika patriya pudhiya thagavalai arindhu konden. sapidum podhu pesudhal mattumalla, TV parpadhum koodathu. Annam ulle sellumbodhu adhanai nandrai kadithu thevayana umizh neerudan anupavendum. fuelling th ebody is an important task. It is also a way of respect shown to annapoorneshwari. one shoudl realise what they eat. Gopur sir, one rquest. In between i saw two portions in a very small letter which is very very straining my eyes, hence could not read it completely. could you post all in same big letter size please.
பதிலளிநீக்குஅன்புள்ள மீரா, வாங்கோ, வணக்கம்.
நீக்கு//thiruvanaika patriya pudhiya thagavalai arindhu konden. sapidum podhu pesudhal mattumalla, TV parpadhum koodathu. Annam ulle sellumbodhu adhanai nandrai kadithu thevayana umizh neerudan anupavendum. fuelling th ebody is an important task. It is also a way of respect shown to annapoorneshwari. one should realise what they eat. //
ஆமாம், மிகச்சரியாகவே விஞ்ஞான, மருத்துவ ரீதியாகவே புரிந்துகொண்டு சொல்லியுள்ளீர்கள். நமது சாஸ்திரங்களும் அவற்றையே தான் சொல்லியுள்ளன.
//Gopu sir, one request. In between i saw two portions in a very small letter which is very very straining my eyes, hence could not read it completely. could you post all in same big letter size please.//
Hereafter I shall try to give in Big Bold Letters. But one thing Mira, as I already mentioned in some of my recent releases ................
அவ்வாறு பொடிப்பொடியாக உள்ள பகுதியில் கிரசரை வைத்து விட்டு, கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள CONTROL + PLUS ஆகிய இரு பித்தான்களையும் ஒரே சமயத்தில் அழுத்துங்கோ. எழுத்துகள் பெரியதாகிவிடும். மீண்டும் அதே போல அழுத்தினால் மீண்டும் மிகப்பெரியதாக ஆகிவிடும். படித்து முடித்ததும் CONTROL + MINUS பித்தான்களை ஒரே நேரத்தில் சேர்ந்து அழுத்தினால் பழையபடி நார்மல் சைஸ்ஸுக்கு அவை வந்துவிடும்.
இதுபோல செய்து பார்த்து விட்டு, எனக்கு FEEDBACK பதில் கொடுக்கவும்.
இதைப்பற்றி நான் அடிக்கடி என் பதிவுகளில் எழுதியுள்ளேன். தாங்கள் என் எல்லாப்பதிவுகளையும் படிப்பது இல்லை. அதனால் தங்களுக்கு இது தெரியவும் இல்லை.
அன்புடன் கோபு
அவ்வளவுதான் செல்லப்பிள்ளை எதிரே இருக்கிறான் என்றதும் அம்பாளுடைய அத்தனை உக்கிரமும் போன இடம் தெரியாமல் போய் விட்டது! //
பதிலளிநீக்குதாயின் பெருமை அது தானே!
அகிலாண்டேஸ்வரி பெருமைகள் எல்லாம் அருமை.
//மஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது. ஆனால் அவர்களை வழிபடுபவர்களின் மனப்பக்குவத்தில் தான் வித்தியாசம் ஏற்படுகிறது. ஒரு குருநாதரை ஏற்று கொண்டு மற்றவரை வெறுக்காமல், மஹானுக்கு மஹான் வித்தியாசம் என்ற நிலை மேற்கொள்ளாமல் அனைவரும் சமம் என்று
வணங்கவேண்டும் .//
அழகாய் சொன்னார்கள் .
மகான்கள் எல்லாம் அற்புதமானவர்கள்.
பகிர்வு மிகவும் நன்றாக இருக்கிறது.
நன்றி.
வாழ்த்துக்கள்.
திருவானைக்கா தகவல் முன்பே படித்த நினைவு.....
பதிலளிநீக்குஞானாநந்தர் பற்றிய தகவலுக்கும் அருமையான அமுத மொழி பகிர்வுக்கும் நன்றி.
திருவானைக்கா பற்றிய தகவல்கள் அருமை. ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகளைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். மகான்கள் எல்லோரும் ஒரே போலத்தான்.
பதிலளிநீக்குதங்கை மகனை விட்டுவிட்டு, ஊரில் உள்ள சிறுவர்களுக்கு உபநயனம் செய்து, அதை பெருமையாக வேறு சொல்லிக் கொண்டவருக்கு மஹா பெரியவா கொடுத்த நோஸ்-கட் அருமை.
''..மிருகமாகத் தெரிகிற பசு, உயிரற்றதாகத் தெரிகிற பூமி, ஆகியவற்றில், உயிருள்ளதும் அன்பே உருவானதுமான தாய்த்தத்துவம் இருப்பதைக் கண்டுகொண்டு நம்முன்னோர்கள் “கோமாதா” - “பூமாதா” என்றும் சொன்னார்கள்....'''
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
''..மிருகமாகத் தெரிகிற பசு, உயிரற்றதாகத் தெரிகிற பூமி, ஆகியவற்றில், உயிருள்ளதும் அன்பே உருவானதுமான தாய்த்தத்துவம் இருப்பதைக் கண்டுகொண்டு நம்முன்னோர்கள் “கோமாதா” - “பூமாதா” என்றும் சொன்னார்கள்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
(எனது கருத்துகள் விழுகிறதா எனும் பதில் ஆட்டோமாட்டிக்காக, உதாரணமாக - பார்த்த பின் ஏற்றுக் கொள்ளப் படும் எனும் பதில் வருவதில்லையே)
பதிலளிநீக்குஆசையினாலோ வெறுப்பினாலோ செய்கிற காரியங்கள்தான் ஒருவரைப் பாவத்தில் தள்ளுகின்றன.
//அழகிய வரிகள்.
மெளனேன போக்தவ்யம்” என்பது சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதாகும்.
பதிலளிநீக்குஇதை கடை பிடித்தாலே அனவஷ்ய வாக்கு வாதங்கள் தவிர்க்கபடும்.
திருக்கோவிலூர் ஞானானந்த சுவாமிகள் அவர்கள் மேற்பார்வையில் அவர் மடியில் வளர்த்த திவ்விய பெண்மணி தான் எங்கள் பாட்டுமாமி .எந்த பிரதிபலனும் எதிர்
பார்க்காமல் எங்களுக்கு பாட்டு சொல்லி தருபவர். ஞானானந்த சுவாமிகள் பற்றி நிறைய விஷயங்கள் கேட்கும் பாக்கியம் பெற்றுஇருக்கிறோம்.மீண்டும் படிக்க சந்தோஷமே.
கோமாதாவின் பெருமை திருவானைக்கா கோவில் என விளக்கமான பகிர்வு .
பதிலளிநீக்குசாப்பிடும்போது பேசக்கூடாதா??.. எனக்கு பேசக்கூடாதென்பது தெரியாது, ஆனா சாப்பிடும்போது பேச மாட்டேன்:) பேசும்போது சாப்பிட மாட்டேன்ன்:))..
பதிலளிநீக்குதிருவானைக் கோயில் நல்லா இருக்கு.
மிருகமாகத் தெரிகிற பசு, உயிரற்றதாகத் தெரிகிற பூமி, ஆகியவற்றில், உயிருள்ளதும் அன்பே உருவானதுமான தாய்த்தத்துவம் இருப்பதைக் கண்டுகொண்டு நம்முன்னோர்கள் “கோமாதா” - “பூமாதா” என்றும் சொன்னார்கள்.// அருமை!!
பதிலளிநீக்குஅன்பைப் பொழிய வேண்டிய இடத்தில் பொழிந்தும், தவறைச் சுட்டிக் காட்ட வேண்டிய இடத்திலும் அதை தானே உணருமாறு செய்வதிலும் பெரியவா, மஹா பெரியவா!!!
கோமாதா பூமாதா விளக்கம் சிறப்பு திருவானைக்கா கோவில் நல்லா இருக்கு
பதிலளிநீக்குபூந்தளிர் August 23, 2015 at 5:49 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//கோமாதா பூமாதா விளக்கம் சிறப்பு//
மிக்க மகிழ்ச்சி.
//திருவானைக்கா கோவில் நல்லா இருக்கு//
வரும் அக்டோபர் மாதம் திருச்சிக்கு வரும்போது, தாங்கள் அவசியம் பார்க்க வேண்டிய கோயில்கள்
(1) திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், தாயுமானவர், கீழேயுள்ள மாணிக்க விநாயகர்
(2) ஸ்ரீரங்கம் பள்ளிக்கொண்ட பெருமாள் + தாயார் மற்றும் பல்வேறு சந்நதிகள் ... மிகப்பெரிய கோயில் ... முழுவதும் சுற்றி தரிஸிக்க 3-4 மணி நேரங்கள் ஆகும். கால் அசந்து போகும்.
(3) திருவானைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஸமேத ஸ்ரீ ஜம்புநாத ஸ்வாமி கோயில் ... இது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று. பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாசம் ஆகிய ஐந்தில் நீர் அதாவது ஜலத்துக்கான சிவன் கோயில் இது. இந்தக்கோயிலில் பகல் 11.30 முதல் 12.30 வரை ஸ்வாமி சந்நதிக்கு வெளியே ஒரு சிறு கும்பல் இருக்கும். அந்த நேரத்தில் அங்கு இருந்தால் நல்லது. குருக்கள் அவர்கள் புடவை அணிந்து ஸ்வாமி சந்நதியில் பிரத்யக்ஷ கோபூஜை செய்வார்கள். பசு மாட்டுக்கு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளே நேரில் வந்து ஸ்வாமி சந்நதியில் கோபூஜை செய்வதாக ஐதீகம்.
தங்கள் பயணத்திட்டத்தில் இவை மூன்றுக்கும் மட்டும் தனியாக ஓரிரு நாட்கள் ஒதுக்கிக்கொண்டால் மிகவும் நல்லது.
தாங்கள் விரும்பினால், நானும் தாங்கள் திருச்சிக்கு வரும் தினங்களில் ஒருவேளை Free ஆக இருந்தால், நானே வழிகாட்டியாக இருந்து காரில் இந்த மூன்று கோயில்களுக்கும் தங்களைக் கூட்டிச் சென்று தரிஸனம் செய்து வைப்பேன். இல்லாவிட்டாலும் மாற்று ஏற்பாடுகள் செய்துகொடுத்து உதவுவேன்.
இவை மூன்று கோயில்களுமே காரில் செல்வதானால் அரை மணி நேர இடைவெளி மட்டுமே உள்ள தூரம்தான். ஆனால் ஒவ்வொரு கோயிலுக்குள்ளும் சென்றால் வெளியே வர எப்படியும் 2-3 Hours ஆகக்கூடும்.
மலைக்கோட்டை நுழைவாயில் அருகேதான் திருச்சியின் மிகப்பிரபலமான ‘சாரதாஸ்’ ஜவுளிக்கடல் உள்ளது. அங்கு உள்ளே போனால் சுற்றிப்பார்த்து மகிழவும், துணிமணிகள் எடுத்துவரவும் தனியாக குறைந்தபக்ஷம் 2-3 Hours ஆகும். :)
//“மெளனேன போக்தவ்யம்” என்பது சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதாகும்.//
பதிலளிநீக்குஇதெல்லாம் அம்மா சொல்லிக் கொடுத்தது. அம்மாவுக்கு நம்ம மகாபெரியவா தான் சொல்லிக் கொடுத்திருப்பா அவா அம்மா மூலமா. ஆனா இன்றைய அம்மா எல்லாம் இதெல்லாம் சொல்லித்தராளான்னு தெரியலை. ஆனா இன்றைய குழந்தைகள் சாப்பிடும் போது ஒண்ணு தொலைக்காட்சி, இல்லைன்னா கணினியி பாட்டு, ஆட்டம், இத்யாதிகள். ம்ம்ம்.
திருவானைக்கா ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தது. அம்மாவையும், பிள்ளையையும் பார்க்க ஆவல் அதிகமா ஆயிடுத்து. உங்க பதிவைப் படித்தது.
//தாங்கள் விரும்பினால், நானும் தாங்கள் திருச்சிக்கு வரும் தினங்களில் ஒருவேளை Free ஆக இருந்தால், நானே வழிகாட்டியாக இருந்து காரில் இந்த மூன்று கோயில்களுக்கும் தங்களைக் கூட்டிச் சென்று தரிஸனம் செய்து வைப்பேன். //
கோபு அண்ணா அப்படியே நானும், அவரும் வரும் போதும்
Jayanthi Jaya September 21, 2015 at 2:43 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
**“மெளனேன போக்தவ்யம்” என்பது சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதாகும்.**
//இதெல்லாம் அம்மா சொல்லிக் கொடுத்தது. அம்மாவுக்கு நம்ம மகாபெரியவா தான் சொல்லிக் கொடுத்திருப்பா அவா அம்மா மூலமா.//
நீங்க சொல்வது கரெக்ட். :)
//ஆனா இன்றைய அம்மா எல்லாம் இதெல்லாம் சொல்லித்தராளான்னு தெரியலை.//
எங்காவது நூற்றுக்கோ ஆயிரத்துக்கோ ஒரு அம்மா இன்றும் சொல்லித்தந்தாலும் தரலாம் என நினைக்கிறேன்.
//ஆனா இன்றைய குழந்தைகள் சாப்பிடும் போது ஒண்ணு தொலைக்காட்சி, இல்லைன்னா கணினியில் பாட்டு, ஆட்டம், இத்யாதிகள். ம்ம்ம்.//
அதே .... அதே .... சபாபதே ! :)
சாப்பாடு ஊட்டிவிடும் போது, அது சமத்தாகச் சாப்பிடவேண்டி, இந்தக்கால தாயாரானவள், தன் சின்னக்குழந்தையின் கையில் இப்போது ஸ்மார்ட் ஃபோனும்கூடவே கொடுக்க வேண்டியதாக உள்ளது !
//திருவானைக்கா ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடி பார்த்தது. அம்மாவையும், பிள்ளையையும் பார்க்க ஆவல் அதிகமா ஆயிடுத்து. உங்க பதிவைப் படித்தது. //
மிகச் சுலபமாகப் பார்த்து விடலாம் ஜெயா. நம் ஆத்திலிருந்து அரை மணி நேரம் மட்டுமே, கார் அல்லது ஆட்டோவில்.
>>>>>
கோபு >>>>> ஜெயா [2]
நீக்கு**தாங்கள் விரும்பினால், நானும் தாங்கள் திருச்சிக்கு வரும் தினங்களில் ஒருவேளை Free ஆக இருந்தால், நானே வழிகாட்டியாக இருந்து காரில் இந்த மூன்று கோயில்களுக்கும் தங்களைக் கூட்டிச் சென்று தரிஸனம் செய்து வைப்பேன்.** ----- கோபு >>>>> பூந்தளிர்.
//கோபு அண்ணா அப்படியே நானும், அவரும் வரும் போதும்//
திருச்சியில் சொந்த கோபு அண்ணா இருக்க பயமேன் ?
நிச்சயமாக ஜெயா .... No problem at all.
நம் ஆத்துக்குப்பக்கத்திலேயே ‘மாயவரம் லாட்ஜ்’ என்று ஒன்று உள்ளது. 100 வருஷ பாரம்பர்யம் மிக்கது. மிகவும் Decent ஆன Lodge. ரூம்ஸ்கள் காலியாகவே இருந்தாலும் பூட்டியே வைப்பார்களே தவிர, முன்பின் அறிமுகம் இல்லாத கச்சடா ஆசாமிகளுக்கு தரவே மாட்டார்கள்.
AC Room Double Bed / Non AC Room Double Bed என எல்லாம் TV + Western Toilet உடன் மிகவும் வசதியாகவே உள்ளன.
அங்கு ஒரு 3 நாட்கள், தம்பதி ஸமேதராய் நீங்கள் ஜாலியாகவும், நிம்மதியாகவும் தங்கினால் போதும். திருச்சியின் பல இடங்களையும் முக்கியமான கோயில்களையும் தரிஸித்து வர செளகர்யமாக இருக்கும்.
என் மூன்றாம் பிள்ளை கல்யாணத்தின் போது, ஆத்தில் எல்லோரும் கூடிவிட்டதால், நானும் மன்னியும் ஒரு 40 நாட்கள் தொடர்ச்சியாக அங்கு AC Room இல் தங்கினோம். எங்களுடன் பேரன் பேத்திகள் மட்டும் பெரும்பாலும் அங்கேயே இருந்தார்கள். 5 வருஷம் முன்பு 40 நாட்கள் அங்கு நாங்கள் இருவரும் தங்க ரூ 40000 ஆச்சு. இப்போ கொஞ்சம் கூடவே இருக்கும்.
ஆத்தில் எல்லோருக்கும் படுக்க கட்டில் வேண்டியுள்ளது. பிரைவசியும் வேண்டியதாக உள்ளது. மேலும் பாத் ரூம் பிரச்சனை மிகப்பெரிய பூதாகாரப் பிரச்சனையாகி விடுகிறது. :))))))
மாயவரம் லாட்ஜிலிருந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ 5-10 நிமிடங்களில் திருச்சி மலைக்கோட்டை கீழ் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று விடலாம். அவரை தரிஸித்துவிட்டு மேலே [சுமார் 200 படி ஏறி] ஸ்ரீ சுகந்தி குந்தலாம்பாள் ஸமேத ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரரையும், அதற்கும் மேலே [ஒரு 50 படிகள் ஏறி] உச்சிப்பிள்ளையாரையும் ஆனந்தமாக தரிஸித்து விட்டு வரலாம்.
உச்சிப்பிள்ளையார் உள்ள இடம் மிகவும் குளுமையாகவும் காற்றோட்டமாகவும் இருக்கும். அங்கிருந்து பார்த்தால் காவிரி நதி முதல் ஸ்ரீரங்கம் வரை திருச்சியின் பெரும்பாலான இடங்கள் அனைத்தையும் ஜாலியாகப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எல்லாமே பொடிப்பொடியாக தீப்பெட்டி போல காட்சியளிக்கும். இதற்கு மாலை 4 மணி முதல் 7 மணி வரை, வெயில் இல்லாத வேளை மிகவும் பொருத்தமாக இருக்கும்.
கும்பல் அதிகம் இருக்காது. மொத்தமாக இவற்றையெல்லாம் பார்த்து முடிக்க குறைந்தபக்ஷம் 2-3 மணி நேரம்தான் ஆகும்.
மலைக்கோட்டை கீழ் பிள்ளையார் நுழைவாயிலின் அருகேதான் The Famous SARATHAS ஜவுளிக்கடல் உள்ளது. FULL AC மிகப்பெரிய கடை. அதனுள் ஏதும் வாங்காமல் ROUND அடிக்க மட்டும் 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஏதேனும் வாங்க ஆசைப்பட்டால் வாங்கிக்கொள்ளலாம். அதற்கு இன்னும் சற்று நேரம் ஆகலாம்.
இந்த மலைக்கோட்டை நுழைவாயிலுக்கும், சாரதாஸ் கடைக்கும் இடையே ‘சூர்யா ரெஸ்டாரண்ட்’ என்று ஒன்று உள்ளது. டிபன் காஃபி, ஐஸ்க்ரீம், ஜூஸ் என நாம் வாய்க்கு ருசியாகச் சாப்பிட இன்னும் சில பெரிய பெரிய ஹோட்டல்களும் அங்கேயே அருகிலேயே உள்ளன.
>>>>>
கோபு >>>>> ஜெயா [3]
நீக்குதிருச்சியில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய மற்ற சில பிரபல கோயில்கள்: (2) குணசீலம் பெருமாள், (3) உத்தமர் கோயில் - மும்மூர்த்தி ஸ்தலம்.(4) சமயபுரம் மஹாமாயீ, (5) திருவானைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீ ஜம்புநாதர் ஆலயம். [சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களின் ஒன்று. ஜலத்துக்கான ஸ்வாமி.] (6) ஸ்ரீ ரெங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் அதாவது ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் கோயில் + அங்குள்ள மிகப்பெரிய கருடாழ்வார், தனியாக உள்ள தாயார் சந்நதி, சக்கரத்தாழ்வார், தன்வந்தரி, கோதண்டராமர் போன்ற ஏராளமான இதர சந்நதிகள்.
(1) மலைக்கோட்டை ..... என்றைக்கு வேண்டுமானாலும் மாலை வேளையில் செல்லலாம்.
(2) குணசீலம்: சனிக்கிழமை + ஏகாதஸி போன்ற சில விசேஷ நாட்களில் மட்டும் சற்றே கும்பலாக இருக்கும். மற்ற நாட்களில் காலையிலோ, மாலையிலோ போகலாம். கும்பல் இருக்காது.
(3) குணசீலம் போய் வரும்போதே இந்த உத்தமர் கோயிலை தரிஸித்து விடலாம். On the way only. வியாழக்கிழமை மட்டும் ஏராளமான கூட்டம் உள்ள கோயில் இது. மற்ற நாட்களில் கும்பல் இருக்காது.
(4) சமயபுரம் - எப்போதுமே கும்பல் உள்ள கோயில். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, மற்ற விடுமுறை நாட்களில் கும்பல் எக்கச்சக்கமாக இருக்கும். மற்ற நாட்களில் ஓரளவு மட்டுமே கும்பல் இருக்கும். காலை / மாலை எப்போது வேண்டுமானாலும் அம்பாளை தரிஸிக்கலாம். ஸ்பெஷல் டிக்கெட் எடுத்து விட்டால், க்யூவில் நிற்காமல் சற்றே சீக்கரமாக தரிஸனம் கிடைத்துவிடும்.
(5) திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில் மதியம் 11.30 முதல் 12.30 வரை ஸ்வாமி சந்நதிக்கு முன்பு இருந்தால் அங்கு தினமும் உச்சிக்காலத்தில் நடைபெறும் கோ [பசு] பூஜையையும் நாம் பார்த்துவிடலாம்.
(6) ஸ்ரீரங்கம் .... பள்ளிகொண்ட பெருமாள் + தாயார் + கருடாழ்வார் + சக்கரத்தாழ்வார் ஆகியவை அவசியம் பார்க்க வேண்டியவை. பெருமாளுக்கு மட்டும் எப்போது நடை சாத்துவார்கள் ... எப்போது திறப்பார்கள் என்பதே சொல்ல முடியாததோர் அதிசயமான கோயில் இது. கோயிலில் உள்ள அனைத்து சந்நதிகளையும் முழுவதுமாகப் பொறுமையாகப் பார்த்துவர ஒரு அரை நாளுக்கு மேல் ஆகிவிடும். நம் காலும் அசந்து போகும்.
நீங்கள் இருவரும் சுறுசுறுப்பானவர்களாக இருப்பதால், மேலே உள்ள அனைத்து இடங்களையும் இரண்டே நாட்களில் கூட, முடித்துவிடுவீர்கள். என்னுடன் சேர்ந்தால் சரிப்பட்டு வராது. ஆமையும் முயலும் கதையாகிவிடும்.
எனக்கு என் உடம்பைத்தூக்கிக்கொண்டு அரை மணி நேரம் எங்காவது சுற்றினால், அடுத்த ஆறு மணி நேரத்திற்கு AC Room இல் ரெஸ்ட் வேண்டும். அவ்வாறு ஒரு சுகவாசி + சோம்பேறி. :)
உங்களுக்கேகூட மூன்று நாட்கள் என்றால் ஓரளவு சரியாக இருக்கும். நான் Guide போல உடன் வந்து அந்தந்த கோயில் வாசலில் காருடன் நின்று கொள்வேன். நீங்கள் வேக வேகமாய்ப் போய் தரிஸித்து விட்டு வந்துவிடலாம்.
CALL TAXI PACKAGE என்று எடுத்துக்கொள்ளலாம். 4 மணிநேர பேக்கேஜுக்கு ரூ. 500-600, 5 மணிநேர பேக்கேஜ் என்றால் ரூ 600-700 என ஏதேதோ கணக்குச் சொல்வார்கள். நாம் எடுத்துச்செல்லும் வண்டியைப் பொறுத்து அந்த ரேட் நிர்ணயிப்பார்கள். இதிலும் AC / NON AC என்றெல்லாம் உண்டு. AC ஐ விட NON AC யே நல்லது. இயற்கைக் காற்றுடன் வெளியே வேடிக்கை பார்த்தபடி ஜாலியாகப் பயணிக்கலாம்.
அதெல்லாம் இங்கு ஒன்றும் பிரச்சனையே இல்லை. நமக்குள் நம் செளகர்யப்படி கார் பேசிக்கொள்ளலாம். புறப்பட ஒரு மணி நேரம் முன்பு ஃபோன் செய்து சொன்னால் போதும். மாயவரம் லாட்ஜுக்குள்ளேயே வண்டி வந்து சேர்ந்துவிடும். :)
>>>>>
கோபு >>>>> ஜெயா [4]
நீக்குமாயவரம் லாட்ஜ் >>>>> சமயபுரம் (வடக்கு நோக்கி)
காரில் அதிகபக்ஷம் 1 மணி நேரப்பயணம்
மாயவரம் லாட்ஜ்>>>>> குணசீலம் (வட மேற்கு நோக்கி)
காரில் அதிகபக்ஷம் 1 மணி நேரப்பயணம் மட்டுமே
மாயவரம் லாட்ஜ் >>>>> ஸ்ரீரங்கம்
அல்லது திருவானைக்கா (வடக்கு நோக்கிப்போய் பிறகு ஓரிடத்தில் ஸ்ரீரங்கத்திற்கு இடமாகவும், திருவானைக்காவுக்கு வலமாகவும் திரும்ப வேண்டும்)
இரண்டுக்குமே காரில் போனால் அதிகபக்ஷம் அரை மணி நேரப்பயணம் மட்டுமே. இதெல்லாம் ஒரு தகவலுக்காக மட்டுமே. WELCOME !
பிரியமுள்ள கோபு அண்ணா
ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளின் குரு அவரது கனவில் வந்து பண்டரிபுரம் செல்ல சொல்கிறார்.அதன்படி அங்கு சென்ற சுவாமிகளுக்கு பண்டரிபுரம் கோவில் பூசாரி பாண்டுரெங்கன்-ரகுமாயி சிலைகளை கொடுத்துவிட்டு குரு ஞானாந்த சுவாமிகள் அவரின் கனவில் வந்து ஹரிதாஸ் சுவாமிகளிடம் குடுக்க சொன்னார் என்று சொல்கிறார்.அப்போது தான் ஹரிதாஸ் சுவாமிகளுக்கு பாண்டுரங்கன் ஆலயம் எழுப்பும் யோசனை வருகிறது.அந்த சிலைகளை உற்சவர்களாக கொண்டு பெரிய மூல ஸ்தான சிலைகள் அமைக்கபட்டு பாண்டுரங்கன் ஆலயத்தை ஹரிதாஸ் சுவாமிகள் எழுப்பினார்.
பதிலளிநீக்குJayanthi Jaya September 21, 2015 at 3:02 PM
நீக்கு//ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளின் குரு அவரது கனவில் வந்து பண்டரிபுரம் செல்ல சொல்கிறார்.அதன்படி அங்கு சென்ற சுவாமிகளுக்கு பண்டரிபுரம் கோவில் பூசாரி பாண்டுரெங்கன்-ரகுமாயி சிலைகளை கொடுத்துவிட்டு குரு ஞானாந்த சுவாமிகள் அவரின் கனவில் வந்து ஹரிதாஸ் சுவாமிகளிடம் குடுக்க சொன்னார் என்று சொல்கிறார்.அப்போது தான் ஹரிதாஸ் சுவாமிகளுக்கு பாண்டுரங்கன் ஆலயம் எழுப்பும் யோசனை வருகிறது.அந்த சிலைகளை உற்சவர்களாக கொண்டு பெரிய மூல ஸ்தான சிலைகள் அமைக்கபட்டு பாண்டுரங்கன் ஆலயத்தை ஹரிதாஸ் சுவாமிகள் எழுப்பினார்.//
ஆஹா, மிகவும் அருமையான வரலாறு. தங்கள் மூலமே இதனை இன்று நான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி, ஜெயா.
>>>>>
// He went on repeating " I am a criminal.. I am a criminal." //
பதிலளிநீக்குபுரியாதவர்க்கு புரிய வைப்பதில் மகா பெரியவா, மகா பெரியவா.
Jayanthi Jaya September 21, 2015 at 3:03 PM
நீக்கு** ”He went on repeating " “I am a criminal.. I am a criminal." **
//புரியாதவர்க்கு புரிய வைப்பதில் மகா பெரியவா, மகா பெரியவா.//
ஆமாம் ஜெயா, மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
கோமாதா பூமாதா பெயரு வெவரம் நல்லா இருக்குது
பதிலளிநீக்குகோமாதா பூமாதா பெயர் விளக்கம் ரொம்ப நல்ஸா இருக்கிறது. திருவானைக்கா அழகு.
பதிலளிநீக்குஞானானந்த சுவாமிகள் பதிவு சுவாரஸ்யம்..தபோவனம் சென்று மனஅமைதி அனுபவித்தது உண்டு..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (18.09.2018) பகிரப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு:-
https://www.facebook.com/groups/396189224217111/permalink/497344184101614/
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு
இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (20.09.2018) பகிரப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:-
https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=498214724014560
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு
இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (21.09.2018) பகிரப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:-
https://www.facebook.com/groups/396189224217111/permalink/499043773931655/
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு