என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 16 டிசம்பர், 2013

96 ] நாஸ்திகமும் ஆஸ்திகமும் !

2
ஸ்ரீராமஜயம்





நாஸ்திகனே மேல். 

தெய்வபரமான சிந்தனையோ, ஆத்மாவைப்பற்றிய நினைப்போ இல்லாமல், அதே ஸமயத்தில் எந்த விதமான அறிவு விசாரணையும் செய்யாமல், வெறுமே நின்று கொண்டும், தூங்கிக் கொண்டும், சோம்பேறியாக இருப்பதைவிட, புத்தியைக்கொண்டு ஆராய்ந்து, ”ஈஸ்வரன் இல்லை; நாஸ்திகம் தான் சரியானது”  என்ற முடிவுக்கு வந்தால்கூட தேவலை என்பேன்.

ஸத்ய தத்வத்தைத் தெரிந்துகொள்ள ஒரு முயற்சியும் பண்ணாத சோம்பேறியைவிட, தன் மூளையைச் செலவழித்து சிரமப்பட்டு ஒருவன் நாஸ்திகமான முடிவுக்கு வந்திருக்கிறான் என்றால், இந்தச் சோம்பேறியைவிட அந்த நாஸ்திகன் உயர்ந்தவன்தான் என்பேன். 

அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் புத்தித்தெளிவு [ஊடயசவைல] பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டு விடவும் வழி பிறக்கும். 

ஆனால் இந்த சோம்பேறிக்குத்தான் ஒரு வழியும் இல்லை.


oooooOooooo

[ 1 ]

இது துவைக்கற கல் இல்லே… 

சிவலிங்கம்! 


clip_image001

சென்னை மீனம்பாக்கம் பகுதிக்கு வரும்போதெல்லாம், பழவந்தாங்கலில் தான் முகாமிடுவார் காஞ்சி மஹாபெரியவா. 

அப்படித் தங்குகிறபோது, அந்த ஊரின் மையத்தில் உள்ள குளத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள்… அதிகாலைப் பொழுதில், குளத்தில் ஸ்நானம் செய்வதற்கு மஹாபெரியவா வந்தபோது, அங்கே சிலர் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். 

அவர்களில் ஒருவர், அங்கேயிருந்த கல்லில் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட காஞ்சி மஹான் நெக்குருகியவராய், ‘இது துவைக்கற கல் இல்லே; லிங்கம்… சிவ லிங்கம். இதுல துவைக்காதீங்கோ’ என்று சொன்னார்.

அவ்வளவுதான்… குளத்தைச் சுற்றியிருந்தவர்கள் தபதபவெனக் கூடினர்; சிவலிங்கத் திருமேனியைச் சுற்றி நின்றனர். 

இதையறிந்த ஊர் மக்கள் பலரும் விழுந்தடித்துக்கொண்டு, குளக்கரைக்கு வந்தனர். 

அடுத்து காஞ்சி மஹான் என்ன சொல்லப்போகிறார் என்று அவரையே மிகுந்த பவ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மெள்ளக் கண்மூடியபடி இருந்த மஹாபெரியவா, விறுவிறுவெனக் குளத்தில் இறங்கிக் குளித்தார். 

அங்கேயே ஜபத்தில் ஈடுபட்டார். பிறகு கரைக்கு வந்தவர், சிவலிங்கத்துக்கு அருகில் வந்தார். 

”இது அர்த்த நாரீஸ்வர சொரூபம். சின்னதா கோயில் கட்டி, அபிஷேகம் பண்ணி, புஷ்பத்தால அர்ச்சனை பண்ணுங்கோ! இந்த ஊர் இன்னும் செழிக்கப் போறது” என்று கைதூக்கி ஆசீர்வதித்துச் சென்றார்.

clip_image002
clip_image003 

பெரியவாளின் திருவுளப்படி, குளத்துக்கு அருகில் சின்னதாகக் குடிசை அமைத்து, சிவலிங்க பூஜை செய்யப்பட்டது. பிறகு கோயில் வளர வளர… ஊரும் வளர்ந்தது. 

பழவந்தாங்கலின் ஒரு பகுதி, இன்னொரு ஊராயிற்று. அந்த ஊர் நங்கைநல்லூர் எனப்பட்டு, தற்போது நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது.

சென்னை, பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். 

காஞ்சி மஹாபெரியவாள் சுட்டிக்காட்டிய இடத்தில் அற்புதமாக அமைந்திருக்கிறது ஆலயம். 

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, பெரியவா அருளியதால் உருவான இந்தக் கோயில், இன்றைக்கு ஸ்ரீநடராஜர் சந்நிதி, பட்டீஸ்வரத்தைப் போலவே அமைந்துள்ள ஸ்ரீதுர்க்கை, அர்த்த நாரீஸ்வர மூர்த்தத்துக்கு இணையாக, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரி திருவிக்கிரகம் எனச் சிறப்புற அமைந்துள்ளது.

பிரதோஷம், சிவராத்திரியில் நவக்கிரக ஹோமம், புஷ்ப ஊஞ்சல், சுமங்கலிகளுக்கு மஞ்சள் சரடு, வஸந்த நவராத்திரி விழா, சிறப்பு ஹோமங்கள், விஜயதஸமியில் சண்டி ஹோமம் என ஆலயத்தில் கொண்டாட்டங்களுக்கும் வைபவங்களுக்கும் குறைவில்லை! 

இன்னொரு சிறப்பு… மஹாபெரியவாளின் திருநட்சத்திரமான அனுஷ நட்சத்திர நாளில் (மாதந்தோறும்) சிறப்பு பஜனைகள், ஜயந்தியின் போது பிரமாண்ட பூஜை மற்றும் பஜனைகள் ஆகியன விமரிசையாக நடைபெறுகின்றன. 

நங்கநல்லூருக்கு வந்து ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வணங்குங்கள்; 

குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்!



[ நன்றி:  சக்தி விகடன் ]


oooooOooooo

[ 2 ]

தெய்வீகப்பதிவர் !


மேற்படி இணைப்பினில் 

”ஹர ஹர சங்கர 
ஜய ஜய சங்கர”

என்ற தலைப்பில் ஓர் பதிவு வெளியிட்டுள்ளர்கள்.

அதில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
அபூர்வமானப் படங்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன.

04.06.2012 அன்றே வெளியிடப்பட்டுள்ள 
இந்தப்பதிவினையும் அதற்கு 
அடியேன் அளித்துள்ள பல பின்னூட்டங்களையும்
நேற்று மீண்டும் படிக்க நேர்ந்தது, 
எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.

விருப்பமுள்ளவர்கள், 
அவசியம் போய்க் கண்டு களியுங்கள்.


oooooOooooo

[ 3 ]


குஞ்சிதபாதம்

ஸ்ரீ குருப்யோ நம:
பற்பல மாதங்களாக பல்வேறு வழிகளில் ஸ்ரீசரணரின் இந்த அற்புத படத்தின் ஹை ரிசொல்யூஷன் இமேஜ் வேண்டி தவமிருந்தேன். 
இது குறித்து முகநூல் நட்புகளிடமும் வேண்டியிருந்தேன்.
ஒவ்வொரு நாளும் ஸ்ரீ மஹா பெரியவாளிடம் வேண்டுவேன். 
அவரது கருணையில் கிட்டியது எந்தன் பாக்கியம். 
அதே போல் இந்தத் திருவுருவப் படத்தினை ப்ரிண்ட் செய்து பக்த கோடிகளுக்கு வழங்கிடவும் அவர் உதவி பண்ணுவார்னு நம்பறேன்.
இந்தத் திருவுருவப் படத்தின் பின்னனியில் ஒரு ஆச்சர்யம் உள்ளது. 
ஆம்! அந்த நிகழ்வு நடந்தது ஸ்ரீ மஹாஸ்வாமி ப்ருந்தாவனப் ப்ரவேசம் செய்வதற்கு ஒரு வருடம் முன்பு தான்.
ஒரு நாள் ஸ்ரீசரணர் உடல் தளர்ச்சியாக இருந்த மாலைப் பொழுதில் தன் சிஷ்யர்களிடம், தாம் சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானையும், அவரது பூஜையில் சார்த்தப்படும் பல வேர்களால் கோத்தெடுக்கப்பட்ட ஸ்ரீகுஞ்சிதபாதத்தையும் தரிசனம் செய்ய வேணுமாய் தெரிவித்தார். 
சிஷ்யர்கள் அனைவருக்கும் கலக்கம். இந்த நிலையில் ஸ்ரீபெரியவாளை எப்படி சிதம்பரம் அழைத்துச் செல்வதென வழி புரியாமல் தவித்தனர்.
என்ன ஆச்சர்யம்! மறு நாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக, சிதம்பரம் சன்னிதானத்திலிருந்து காஞ்சிமடம் வந்த சில தீட்சிதர்கள் ஸ்ரீசரணரை தரிசித்து அவருக்கு ஸ்ரீ நடராஜரின் பிரசாதம் தரவேண்டி வந்தமையாக சிஷ்யர்களிடம் தெரிவித்தனர்.
திகைத்துப் போன சிஷ்யர்கள், சர்வக்ஞரான ஸ்ரீமஹாபெரியவாளிடம் விபரம் தெரிவிக்க, அவரும் தீட்சிதர்களை அருகே வருமாறு கையசைத்து அழைத்து, அவர்கள் கொண்டுவந்திருந்த பிரசாதத் தட்டிலிருந்து ஸ்ரீகுஞ்சிதபாதத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டார். 
அதுமட்டுமா… அதனை தன் தலையில் வைத்துக்கொண்டார்.
 

சம்போ மஹாதேவா! குஞ்சிதபாத தரிஸனமே கோடிபுண்ணியம் தருமே! 
அதுவும் சாக்ஷாத் பரமேஸ்வர ஸ்வரூபியான ஸ்ரீசரணரின் தலைமேல் குஞ்சிதபாதமென்றால்… மாலவன் தரும் அதிமருந்தை மகேசன் பூண்டதை தரிசனம் செய்த பாக்கியமல்லவா! 
தன்வந்த்ரி ஸ்வரூபமல்லவா!
ஆம்! அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்டதொரு படம் தான் இது! 
இதனை ஸ்ரீபெரியவாளின் பக்தர்களுக்கு வழங்கும் மஹாபாக்கியம் பெறவேண்டி நான் செய்த தவத்திற்கு ஸ்ரீசரணர் செவிசாய்த்துவிட்டார். 
பாக்கெட் காலண்டர் அளவில் இதனை ஒருபக்கம் பெரியவா படமும், மறுபக்கம் மேற்கண்ட நிகழ்வின் விளக்கமும் ப்ரிண்ட் செய்து வழங்கிட விழைகிறேன்.
அடியவர்கள் அனைவரும் ஒருங்கே நின்று எந்தன் ஆத்மார்த்த நமஸ்காரத்தினை ஏற்று ஆசி கூறுங்கள். 
இதற்கு எவ்வளவு தொகை செலவாகும்; எப்படி உசிதமாகும் என்பதை ஸ்ரீசரணர் பார்த்துப்பார்னு மனசு சொல்றது.
நான் தமிழ் படித்தவனல்ல. தமிழை எனக்கு மிகவும் பிடிக்கும். அவ்வளவே! எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. ஸ்லோகங்கள் தமிழெழுத்தில் இருந்தால் படிப்பேன். பெரியவர்களிடம் அர்த்தம் தெரிந்து கொள்ள முயல்வேன். 
என் மனதில் தோன்றியவைகளையே தமிழ் வரிகளில் எழுதுகிறேன். அவ்வண்ணமே இந்தத் திருவுருவிற்கும் தமிழ் பாடலொன்றை எழுதியிருக்கிறேன்.
இந்தப் பாடலை எழுதி முடிக்கும் தருவாயில் எந்தன் காதுகளில் நான் கேட்டதொரு வார்த்தைகள் தாம் “குஞ்சித சங்கர த்யானம் ஸர்வ ரோஹ நிவாரணம்” என்பது. 
அது எந்தன் மனம் கூறியதன் வெளிப்பாடா.. அல்லது சர்வேஸ்வரரான எந்தன் உம்மாச்சி தாத்தாவான, ஸ்ரீமஹாஸ்வாமியே சொன்னாரா… தெரியாது.
பரம்பொருள் அகிலலோக ஜீவிதத்திற்கும் பொதுவானவர்! அகிலலோக ஜீவர்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டவர். எனவே இவை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவை என்பதால் உங்கள் மூலமாக அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
ஸ்ரீசரணரிடம் பக்திகொண்ட அடியவர்களான நீங்கள் யாவரும் எந்தன் மேலும் அன்புகொண்டு எந்தன் ப்ரார்த்தனையை ஏற்று அனைவரிடமும் இதனைப் பகிர்ந்துகொண்டு, அனைவருக்கும் ஸ்ரீமஹாபெரியவாளின் க்ருபைதனை பெற்ற பாக்கியத்தைத் தரவேணுமாய் நமஸ்கரித்து வேண்டுகிறேன்.
குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோஹ நிவாரணம். இவ்வுல ஜீவர்கள் அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ ப்ரார்த்திகின்றேன். ஸ்ரீ மஹா பெரியவா சரணம்!!
ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே 

சாந்த ரூபாய தீமஹி |
தன்னோ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||

நமஸ்காரங்களுடன்,
உடையாளூர் சாணு புத்திரன்.

[Thanks to Sage of Kanchi 14.12.2013]

oooooOooooo


 

01.10.2013 அன்று வெளியிட்டிருந்த என்
மேற்படி பதிவினில் 

மகிழ்ச்சிப்பகிர்வு !
சமீபத்திய சாதனைக்கிளி

என ஓர் பெண் பதிவரைப்பற்றி 
பல தகவல்கள் சொல்லியிருந்தேன்.



பரிசுக்குத் தேர்வான 
“பிரம்மாக்கள்” என்ற சிறுகதை 
நேற்று 15.12.2013 ஞாயிறு  
தினமலர் வாரமலர்  இதழில் பக்கம் எண்: 6 - 10 இல்
வெளியாகியுள்ளது என்பதை 
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புக்குரிய அந்த 
சாதனைக் ‘கிளி’க்கு
  
 மீண்டும்  நம்  
பாராட்டுக்கள் + வாழ்த்துகள்


oooooOooooo




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

52 கருத்துகள்:

  1. படத்தை நாங்களும் தரிசிக்க பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா...
    நங்கநல்லூர் பற்றி அறியத் தந்தீர்கள்...
    உஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா

    நாஸ்திகமும் ஆஸ்திகமும் பற்றி மிக விரிவான விளக்கம் பல தகவல்கள் அறியக்கிடைத்துள்ளது .. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வை.கோ

    நாஸ்திகமும் ஆஸ்திகமும்- பதிவு அருமை.

    புத்தியைக் கொண்டு ஆராய்ந்து கடவுள் என்று ஒருவன் இல்லை - நாத்திகமே நன்று என ஒரு முடிவு எடுத்தால் அதுவே அவனைப் பொறுத்த வகையில் சிறந்த முடிவு.

    இறைவனை அறிய ஒரு முயற்சியும் எடுக்காமல் சோம்பேறியாக இருப்பவனை விட மூளையைப் பயன்படுத்தி நாத்திகத்தில் இறங்குபவன் உயர்ந்தவன்.

    இந்த நாத்திகன் மேன் மேலும் சிந்தித்து புத்தித் தெளிவு பெற்று நாத்திகத்தை விட்டு விடுவான். ஆனால் அந்த சோம்பேறி சோம்பேறியாகவே இருப்பான்.

    நல்லதொரு சிந்தனை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வை.கோ - துவைக்கற கல் இல்ல - சிவலிங்கம் - பதிவு அருமை. சென்னை ப்ழவந்தாங்கலில் உள்ள குளக்கரையில் துணி துவைக்கப் பயன படுத்திய கல்லினை ஆராய்ந்து இது வெறும் கல்லல்ல - இது அர்த்த நாரீஸ்வரர் எனக் கண்டறிந்து கூறீய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளீன் தீர்க்க தரிசனம் இன்றைய நங்கநல்லூராகி - ஆலயம் உருவானது.

    இன்னொரு சிறப்பு… ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாப்பெரியவாளின் திருநட்சத்திரமான அனுஷ நட்சத்திர நாளில் (மாதந்தோறும்) சிறப்பு பஜனைகள், ஜயந்தியின் போது பிரமாண்ட பூஜை மற்றும் பஜனைகள் ஆகியன விமரிசையாக நடைபெறுகின்றன.

    தகவல் பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வை.கோ

    இராஜ இராஜேஸ்வரியின் தெய்வீகப் பதிவர் பதிவினைப் பகிர்ந்தது நன்று.

    அங்கு சென்று படித்து மகிழ்ந்து - தங்களீன் அருமையான 13 மறுமொழிகளையும் கண்டு மகிழ்ந்து வந்தேன்.

    அபூர்வப் படங்கள் அத்த்னையும் அருமை.

    ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர - தலைப்பு அருமை.

    இப்பதிவினை இங்கு அறிமுகப் படுத்தியது நன்று.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வை.கோ

    குஞ்சித பாதம் - பதிவு பகிர்ந்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வை.கோ - சாதனைக் கிளி பதிவு அருமை - நேற்றைய தினமலர் ஆன்மீக இதழில் உஷா அன்பரசின் பிரம்மாக்கள் என்ற சிறுகதை வெளீயானதை இன்று அதி காலை 12:01 மணிக்கு அறிவித்து - பராட்டி - வாழ்த்திய நற்செயல் நன்று.

    நல்வாழ்த்துகள் உஷா அன்பரசு

    நல்வாழ்த்துகள் வை.கோ

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் குறிப்பிட்ட சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவைப் படித்தேன். பெரியவர் மீது நீங்கள் கொண்ட அதீத அன்பை அந்த பதிவினுள் தாங்கள் இட்ட கருத்துரைகள் மூலம் அறிய முடிந்தது. அந்த பதிவில் நான் இட்ட கருத்துரை இது.

    // மூத்த பதிவர் VGK அவர்களின் கருத்துரைகளே ஒரு சிறிய பதிவாக, இலவச இணைப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி! //

    அந்த பின்னூட்டங்களைத் தொகுத்து விரிவாக்கி, பெரியவர் மறைந்தநாள் படங்களோடு ஒரு பதிவை எழுதவும். மீண்டும் வருவேன்.

    பதிலளிநீக்கு
  9. கேள்வி கேட்பவனைத்தான் ஆசிரியர்/ குரு விரும்புவார் என்பார்கள். அதுபோல, நாஸ்திகர்தான் கடவுளுக்கு அருகே நெருங்குவார் போலும்.

    அர்த்தநாரீஸ்வரர் கோவில் பற்றி தெரிந்துகொண்டேன்.

    திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கு 'எங்கள்' வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  10. துவைக்கற கல் இல்ல - சிவலிங்கம் - பதிவு அருமை... நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    உஷா அன்பரசு அவர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. நங்கநல்லூர் பற்றிய செய்திகள் நன்று. இதுவரை அறிந்திராத தகவல்.

    படம் மிக அருமை.....

    பதிலளிநீக்கு
  12. அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் புத்தித்தெளிவு [ஊடயசவைல] பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டு விடவும் வழி பிறக்கும்.

    ஆனால் இந்த சோம்பேறிக்குத்தான் ஒரு வழியும் இல்லை.

    புத்தி தெளிந்து ஆன்மீகத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை சிறப்பாக எடுத்துரைத்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  13. ‘இது துவைக்கற கல் இல்லே; லிங்கம்… சிவ லிங்கம். இதுல துவைக்காதீங்கோ’ என்று சொன்னார்.

    தீர்க்கதரிசனமாய் அருமையான கோவில் எழுப்ப ஆவன செய்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவாளுக்கு நமஸ்காரங்கள்..!

    பதிலளிநீக்கு
  14. ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர” பதிவின் இணைப்பினைதந்து தங்கள் அபூர்வ அனுபவங்களையும் சிறப்பாக பகிர்ந்துகொண்டதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  15. அதுவும் சாக்ஷாத் பரமேஸ்வர ஸ்வரூபியான ஸ்ரீசரணரின் தலைமேல் குஞ்சிதபாதமென்றால்… மாலவன் தரும் அதிமருந்தை மகேசன் பூண்டதை தரிசனம் செய்த பாக்கியமல்லவா!
    தன்வந்த்ரி ஸ்வரூபமல்லவா!

    ஸ்லோகத்துடன் அருமையான பயனுள்ள பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  16. வாரமலர் இதழில் பளிச்சிட்ட
    சாதனைக்கிளிக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  17. அன்புடையீர்..
    நாஸ்திகனும் ஆஸ்திகனும் - பற்றிய பதிவு அருமை.

    ஹர ஹர சங்கர!.. ஜய ஜய சங்கர!..

    பதிலளிநீக்கு
  18. அருமையான பதிவு! நங்கைநல்லூர் பற்றிய தகவல்கள் இப்போதுதான் அறிந்தோம்! படமும் அருமை! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  19. எல்லோரையும் தேடி வந்து பாராட்டுவது வை.கோ சாரின் பண்பு.. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  20. நங்கநல்லூர் பற்றி தெரிந்துக்கொண்டேன் ஐயா!! உஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  21. சிறப்பாக எடுத்துரைத்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.
    Vetha.,Elangathilakam

    பதிலளிநீக்கு
  22. நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும்
    உள்ள அடிப்படை வேறுபாட்டை
    மிக அருமையாக விளக்கியுள்ளார் பெரியவா

    உண்மையில் ஸ்ரீமான் நாராயணன் த்வாரபாலகர்கள் முனிவர்களிடம் சாபம்பெற்றதும் அவர்களின் சாபம் நீங்க இரண்டு உபாயங்களை கூறினார்.ஒன்று மூன்றே பிறவிகளில் தன்னை தூற்றிக்கொண்டும் எதிர்த்துக்கொண்டும் இருந்து அவர் கையால் மடிந்து வைகுண்டம் வரவா அல்லது பல பிறவிகள் அவரை போற்றி செய்து வைகுண்டம் வரவா என்று அவர்களிடம் கேட்கிறார்.

    இதிலிருந்து இறைவனை தூற்றுவதும் அவரை நினைப்பதற்கு சமானம் என்றும் அவர்களுக்கு இறைவனின் அருள் விரைவில் கிட்டுமேன்பதும் நிரூபணமாகிறது.

    ஆகையால் இறைவனை தூஷிப்பவர்களிடம் நாம் த்வேஷம் காட்டுவது தேவையற்றது.

    அவர்களைப் போன்று இறைபக்தியில் மன ஒருமைப்பாடும் உறுதியும்தாம் நாம் கடைபிடிக்கவேண்டியது.

    பதிலளிநீக்கு
  23. பெரியவாளின் திருவுருவப் படம் பலரது இல்லங்களிலும் உங்கள் எண்ணம் போல் சென்றடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன் வணங்குகின்றேன் ஐயா .பெருமை கொள்ள வைக்கும் இப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் .

    பதிலளிநீக்கு
  24. அர்த்தநாரீஸ்வரர் கோயில்-நங்கைநல்லூர் பற்றித் தெரிந்து கொண்டேன்!
    உஷா அன்பரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்! ஒரு நல்லாசிரியரின் மனம் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது!! அருமையான கதை!

    பதிலளிநீக்கு
  25. படித்து ரசித்தேன் பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  26. பிரசாதத் தட்டிலிருந்து ஸ்ரீகுஞ்சிதபாதத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டார்.
    அதுமட்டுமா… அதனை தன் தலையில் வைத்துக்கொண்டார்//

    பெரியவாளின் திருவுருவப் படமும், பாடலும் அற்புதம்
    பகிர்வுக்கு நன்றி.
    உஷா அன்பரசுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. எங்களுக்கும் தரிசன பாக்கியத்தை
    வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  28. உஷா அன்பரசுவுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி. ஶ்ரீசரணர் குறித்த அனைத்துத் தகவல்களுக்கும் நன்றி. உண்மையில் நாத்திகர்களே இறைவனின் அருகில் நிற்பவர்கள் என்பதில் எனக்கும் ஐயம் ஏதும் இல்லை. :))))

    பதிலளிநீக்கு
  29. குஞ்சித பாத தரிசனம் மகிழ்வான பதிவு. உஷா அன்பரசுவிற்கு பாராட்டுகள். கதையும் படித்து ,ஒரு வரி எழுதிவிட்டும் வந்தேன்.
    நங்க நல்லூர் சித்தர்கள் வாழ்ந்த இடம் என்றும் சொல்கிரார்கள்.
    தரசிக்க வேண்டும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  30. seekkirame Nanganallur Arththa nareeshwararai darisikka pogiren.

    Periyavaalaip paththina nigazhchchigal yezhudiyadarkku nandrigal! Periyavaa padam, paadal irandukkum, nandrigal!

    பதிலளிநீக்கு
  31. நங்க நல்லூர் பற்றிய ரகசியம் விளங்கியதஉ. நன்றி.
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  32. "அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் புத்தித்தெளிவ] பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டு விடவும் வழி பிறக்கும்"

    அற்புத தரிசனம்!

    .

    பதிலளிநீக்கு
  33. நாஸ்திகமும் ஆஸ்திகமும் பற்றி மிக விரிவான விளக்கும் பல தகவல்கள்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  34. நங்கநல்லூர் அர்த்த நாரீஸ்வரர் பற்றி அற்புதமான தகவல்கள்..

    உஷா அன்பரசு அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  35. நங்கநல்லூர் ஆன்மீக மயமாக திகழும் காரணம் இப்பொதுதான் தெரிகிறது.எத்தனை ஸத்ஸ,ங்கங்கள்,கோவில்கள் .நல்ல பதிவு நன்றி

    பதிலளிநீக்கு
  36. குஞ்சித பாத தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்! நங்கநல்லூர் சிவாலயம் உருவான வரலாறு அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  37. குஞ்சித பாத தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்
    எத்தனையோ முறை நங்கநல்லூர் போயிருக்கிறேன்
    இப்போதுதான் மகிமை தெரிந்தது.
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  38. நாஸ்திகர்களும் கடவுளைத்தான் சதா சர்வ காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  39. ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றி சிறப்பான பகிர்வு

    பதிலளிநீக்கு
  40. // அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் புத்தித்தெளிவு [ஊடயசவைல] பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டு விடவும் வழி பிறக்கும். //

    கடைசியில இங்கதானே வந்தாகணும்.

    அர்த்தநாரீஸ்வரர் கோவில் வாசல் வரை சென்றிருக்கிறேன். ஆனால் உள்ளே போனதில்லை. இந்த உங்கள் பதிவை படித்த பாக்கியம் கோவில் உள்ளே செல்ல மகா பெரியவாளின் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    // குஞ்சித சங்கர த்யானம் சர்வ ரோஹ நிவாரணம். இவ்வுல ஜீவர்கள் அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ ப்ரார்த்திகின்றேன். ஸ்ரீ மஹா பெரியவா சரணம்!!//


    ஹர ஹர சங்கர, ஜெய, ஜெய சங்கர

    பதிலளிநீக்கு
  41. திருகதி ராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கும் உஷா அன்பரசு அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 22, 2015 at 2:43 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  42. சாக்லெட்டு எடுத்துகிட்டேனே.

    பதிலளிநீக்கு
  43. ஆஸ்திகம் நாஸ்திகம் பற்றிய பதிவு அவசியமான ஒன்றுதான். ஆஸ்திகரைவிட நாஸ்திகரதான் நாள் பூரா பகவானை நினைத்துக்கொண்டிருப்பதாக சொல்வார்கள். கடவுள் இல்லை அதெல்லாம் வெறும் மூட நம்பிக்கை என்று தங்கள் கருத்தை நிரீபிக்க பல பக்தி புக்ஸ் படிப்பார்களாம்.

    பதிலளிநீக்கு
  44. //சோம்பேறிகளைவிட நாஸ்தீகனே மேல்// நெத்தியடி...

    பதிலளிநீக்கு
  45. PLEASE REFER 'FACE BOOK' OF OUR ஆச்சி ஆச்சி ..... 10.06.2019

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/651357705366927/

    பதிலளிநீக்கு
  46. PLEASE REFER 'FACE BOOK' OF OUR ஆச்சி ஆச்சி ..... 14.06.2019

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=654246211744743

    பதிலளிநீக்கு