என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 20 டிசம்பர், 2014

உலகைக் கவரும் உன்னதமான துபாய் -4

வர்த்தகத்தொடர்பு:

அப்போது பாரசீக நாட்டு வணிகர்களும், ஈரான் நாட்டு வியாபாரிகளும் துபாயுடன் அதிக அளவு வர்த்தகத் தொடர்புகள் வைத்திருந்ததால், துபாய் ஓரளவு வருவாய் ஈட்டக்கூடிய பகுதியாய் விளங்கியது.  

அந்தக்காலக் கட்டத்தில் துபாயின் முக்கிய வர்த்தகம் முத்து வியாபாரம் தான். துபாயில் கிடைக்கும் அற்புதமான முத்துக்களுக்கு பல நாடுகளிலும் நல்ல மவுசு இருந்தது. துபாய்த் துறைமுகத்திலிருந்து அதிக அளவு முத்துக்கள் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது துபாயின் முக்கிய வருவாயாக இருந்தது. ஆனால் அதற்கும் மிகப்பெரிய இடைஞ்சல் உருவானது. 

1930-ம் ஆண்டு பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. அதே நேரம் உலகின் பல இடங்களிலும் செயற்கை முத்துக்கள் உருவாக்கும் தொழில் உச்சம் பெற்றது. செயற்கை முத்துக்கள் விலை மலிவானவை என்பதால் , துபாய் முத்துக்களுக்கான கிராக்கி  அடியோடு போய்விட்டது.

தொலை நோக்குப்பார்வை:

முத்து வணிகத்தில் ஈடுபட்ட பலரும் மேற்கொண்டு வாழ்க்கை நடத்த முடியாமல், பாரசீக வளைகுடா பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையேயும், துபாயின் ஆட்சியாளர் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தும், 1948-ம் ஆண்டு வர்த்தகத்தின் மூலம் கிடைத்த வருவாயைக்கொண்டு, தொலை நோக்குப்பார்வையுடன், மின்சாரம், தொலைத்தொடர்பு, விமான நிலையம் போன்ற அடிப்படை கட்டமைப்புத்தேவைகளை  நிறைவேற்றினார்.

1959-ம் ஆண்டு, ஏர்லைன்ஸ் என்ற முதல் ஹோட்டல் கட்டப்பட்டது.   1968-ம் ஆண்டு அம்பாசடர் ஹோட்டல் மற்றும் கார்ல்டன் ஹோட்டல்கள் கட்டப்பட்டன.  இதைத்தொடர்ந்து துபாய்ச் சரித்திரத்தின் மிக முக்கிய நிகழ்வான கச்சா எண்ணெய்க் கண்டு பிடிப்பு நிகழ்த்தப்பட்டது.

1966-ம் ஆண்டு முதன்முறையாக துபாய்க் கடல் அருகே கச்சா எண்ணெய் பெரும் அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போதைய தொழில்நுட்ப வசதி மூலம் சிறிதளவே எண்ணெய் எடுக்கப்பட்டது. முதலாவதாக அமைக்கப்பட்ட எண்ணெய்க் கிணற்றுக்கு ’நல்ல அதிர்ஷ்டம்’ என்ற பொருள்படும்படி ‘பதே’ என்ற பெயர் சூட்டப்பட்டது.    

1969-ம் ஆண்டு முதன்முதலாக கப்பல் மூலம் கச்சா எண்ணெய் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 




வருவாய் குவிந்தது:

பின்னர் வெளிநாட்டு நிறுவனங்களுடன் எண்ணெய் கிணறுகள் தோண்ட ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் மூலம் அதிக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு துபாய்க்கு வருவாய் குவிந்தது.

எண்ணெய் எடுக்கும் தொழிலில் ஈடுபட குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் துபாய்க்கு வந்தனர். 

கச்சா எண்ணெய் மூலம் கிடைத்த வருவாயில் பெரும் பகுதி துபாயின் அடிப்படை ஆதார வசதிகளை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டது. இதன் ஒரு அங்கமாக 1970-ம் ஆண்டு துபாயில் நவீன வசதிகளுடன் கூடிய விமான நிலையக் கட்டடங்கள் கட்டப்பட்டதுடன் வரியில்லா ஷாப் முதன் முதலாகத் திறந்து வைக்கப்பட்டது. 

ஏற்றுமதியைக் கருத்தில் கொண்டு 1979-ம் ஆண்டு வரியில்லா ஜெபல் அலி துறைமுக வளாகம் அறிமுகப்படுத்தபட்டது. இதுபோன்ற முன்னேற்றத் திட்டங்களால் அந்தப்பகுதியில் துபாயின் கை ஓங்கியது. 

ஐக்கிய அரபு அமீரகம் [UNITED ARAB EMIRATES] U.A.E., :

1971-ம் ஆண்டுக்கு முன்னதாக துபாய் மற்றும் அதன் அருகேயுள்ள அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், புஜேரா ஆகியவை தனி அமைப்புகளாக இருந்தன. இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க அபுதாபி மன்னர் ஷேக் ஜாயித் முயற்சித்தார். இந்த முயற்சிக்கு துபாய் முழு ஒத்துழைப்பு வழங்கியது. இதன் பயனாக 1971-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து ‘ஐக்கிய அரபு அமீரகம்’ [யுனைடெட் அரப் எமிரேட்ஸ்]  U.A.E., என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 



02.12.2014 அன்று ஊரெங்கும் 
கொடி கட்டிப் பறக்க விட்டிருந்தார்கள் 

 



இவற்றுடன் ராசல் கைமா 7-வது எமிரேட் ஆக 1972 பிப்ரவரி 10-ம் தேதி இணைந்து கொண்டது.

பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு என்று ஒரே நாணயமாக, ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம் [ AED ] என்ற நாணயம் உருவாக்கப்பட்டது.


 

 


ஷேக் மக்தும் பின் ரஷீத் அல் மக்தும் மறைவுக்குப்பின்னர், 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி, ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் துபாயின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இவரது திறமையான வழிகாட்டுதல்கள் மூலம், துபாயில் தொடர்ந்து நடைபெற்ற முன்னேற்றத்திட்டங்களால் உருவான மிகப்பிரும்மாண்ட கட்டடங்கள் இப்போது உலகையே வியக்க வைக்கின்றன.



 

 

 



 



 





இதிலுள்ள பெரும்பாலான தகவல்கள்
துபாயில் முதன்முதலாக 10.12.2014 அன்று வெளியிடப்பட்ட
’தினத்தந்தி’ தமிழ் செய்தித்தாளின் 
தொடக்கவிழா சிறப்பு மலரிலிருந்து
எடுத்துப் பகிரப்பட்டுள்ளன





 இந்தக்கட்டுரை மேலும் தொடரும் 



World's Tallest Building - Height 2766 feet
’At the Top - Burj Khalifa - Dubai’

27 கருத்துகள்:

  1. அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் போது பார்த்த கட்டிடங்களை படத்தில் பார்க்கும் போது இன்னும் அழகாய் தெரிகிறது ஐயா...

    பதிலளிநீக்கு
  2. உலகைக் கவரும்
    உன்னதமான துபாய் கட்டுரை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி December 21, 2014 at 3:43 AM

      //உலகைக் கவரும் உன்னதமான துபாய் கட்டுரை அருமை//

      அடுத்து தாங்கள் வெளியிட இருக்கும் தங்களின் வெற்றிகரமான 1500 வது பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். VGK

      நீக்கு
  3. அருமையான கட்டிடங்கள் மற்றும் அருமையான விளக்கங்கள். பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கச்சா எண்ணைய் உற்பத்திதான் துபாயின் பலம் என்று நினைத்திருந்த எனக்கு துபாய் அதற்கு முன்பே முத்து உற்பத்தியில் பிரசித்தம் என்பது புதிய தகவல். ஐக்கிய அரபு அமீரகம் உருவான வரலாறும் அறிந்தேன். இங்கு புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள நாணயங்கள் என்னுடைய நாணயச் சேகரிப்பில் இடம்பெற்றுள்ளன. எப்படி யாரால் வந்துசேர்ந்தது என்ற விவரம் தெரியவில்லை. சிறப்பான தகவல் பகிர்வுக்கு மிகவும் நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  5. அருமை ஐயா அருமை
    வின்னைத் தொடும் அற்புதக் கட்டிடங்களைக் கண்டு ரசித்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. இந்தக் கட்டுரை மூலம் பலவற்றை அறிய முடிகிறது ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  7. யு.எஸ். போறச்சேயும், திரும்பி வரச்சேயும் துபாயில் விமானம் மாறுவதற்காக இறங்கி ஏறுவது தான். விமான நிலையம் மட்டும் பார்த்திருக்கேன். :))) இத்தனை தகவல்களை அள்ளித் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல்கள். படங்கள் பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. துபாய் பற்றி விரிவான தகவல், மிக அருமை.
    படங்கள் அழகு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அடேயப்பா....துபாயைப் பற்றி எவ்வளவு சிறப்புகள்! மிகப் பொறுமையாக இவற்றைப் பற்றி தொகுத்து எழுதியதற்கு நன்றி சார். கட்டிடங்களின் அழகு கண்களுக்கு விருந்து!

    பதிலளிநீக்கு
  11. இனிமே யாராவது முதல் முறையா துபாய் போறேன்னு சொன்னா, உங்க பதிவுகளை அவங்கள பார்க்க சொல்லிடலாம்.

    தலை நன்னா இருந்தா எல்லாமே நன்னா இருக்கும்.

    ஷேக் ஷேக் ஆகாம இருக்கா போல இருக்கு.

    எப்படியோ நன்னா இருந்தா சரி.

    தகவல்களுக்கும், புகைப்படங்களுக்கும், பகிர்விற்கும் நன்றியோ நன்றி.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  12. நவம்பர் 23ந்தேதி தான் நான் தமிழ்நாடு வந்தேன். முக்கிய வேலைகள் சிலவற்றை சென்னையில் முடித்துக்கொண்டு தஞ்சை வந்த பின் உங்கள் தளத்தைத் திறந்து பார்க்கையில் ஒரு மாதமாக எந்தப்பதிவும் இல்லையென்று புரிந்ததும் உங்களைப்பற்றிய கவலையில் உங்கள் இல்லத்திற்கு ஃபோன் செய்தேன். நீங்களும் உங்கள் இல்லத்தரசியாரும் வெளியே சென்றிருப்பதாக தொலைபேசியை எடுத்தவர் சொன்னார். உங்கள் உடல் நலம் நல்லவிதமாகவே இருக்கின்ற திருப்தியில் பிறகு அழைப்பதாகக் கூறி ஃபோனை வைத்து விட்டேன்.

    ஆனால் நீங்கள் துபாய்க்கு வந்து ஒரு மாதம் தங்கியும் கூட தொலைபேசியில் அழைத்துப் பேசாதது எனக்கு ஆச்சரியத்தை மட்டுமில்லை, மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. நீங்கள் வந்திருக்கும் விபரம் தெரிந்திருந்தால் நானாவது அழைத்துப்பேசியிருப்பேன். எங்கள் வளாகத்திற்கு வந்து குறைந்த பட்சம் ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யாதது வியப்பாகவே இருக்கிறது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் December 21, 2014 at 7:10 PM

      வாங்கோ, வணக்கம்.

      Detailed Reply Mail sent immediately on 21st & Personally Discussed over Phone on 23rd Dec, 2014.

      அன்புடன் VGK

      நீக்கு
  13. அனைத்துத் தகவல்களும்
    இதுவரை அறியாதவையே
    படங்க்களுடன் பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. அருமை.. டுபாயை கலக்கி குடித்து எழுதுறீங்க:).

    பதிலளிநீக்கு
  15. தகவல்களும், கட்டிடங்களும் பிரமிப்பை உண்டு பண்ணுகின்றன.

    பதிலளிநீக்கு
  16. முதல் மூன்றினைப் போலவே, நான்காவது பகுதியைப் படிக்கும் போதும் சுவாரஸ்யம்தான். அமீரகம் என்பதற்கும், U.A.E உருவான வரலாற்றினையும் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. சரிவில் இருந்து மீண்ட துபாய் சரித்திரம் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  18. துபாய் பற்றி இவ்வளவு விஷயங்களை யாராலயுமே இவ்வளவு தெளிவாக தரமுடியாது நீங்க பிரபல எழுத்தாளர் ஆயிற்றே. உங்களை விட வேறு யாரால்தான் இவ்வளவு சிறப்பாக சொல்ல முடியும்???

    பதிலளிநீக்கு
  19. பில்டிங்கெல்லா தலய ஒசத்தி ஒசத்தி பாத்துபிட்டனாகாட்டி களுத்து சுளுக்கிகிச்சே. அங்கின போயிகூட தகவல் சொரங்கத்துள்ளார போயிகிட்டீகளே.

    பதிலளிநீக்கு
  20. நேரில் போயிருந்தால் கூட இவ்வளவு விவரங்கள் தெரிந்து கொண்டிருக்க முடியாதுதான். உங்க பதிவு மூலமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அழகான படங்களின் இணைப்பு கூடுதல் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  21. துபாயின் வளர்ச்சி படிப்படியாக அறியத்தந்திருக்கிறீர்கள். முறுக்கிப் புழிஞ்ச துண்டு ஷேப்லயெல்லாம் பில்டிங் கட்டி பின்றாங்க.படங்கள் அழகு..

    பதிலளிநீக்கு