About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, December 23, 2014

உலகைக் கவரும் உன்னதமான துபாய்-7

துபாய் புர்ஜ் கலிபா கட்டடத்திற்கு 
ஏழு கின்னஸ் சாதனை விருதுகள். 





உலகிலேயே உயரமான துபாய் புர்ஜ் கலிபா கட்டடம் ஏழு கின்னஸ் சாதனை விருதுகளைப் பெற்றுள்ளது.

உயரமான கட்டடம்:

உலகிலேயே உயரமான கட்டடமான துபாய் புர்ஜ் கலிபா கட்டிட முகப்புப் பகுதியில் மட்டும் 24 ஆயிரம் கண்ணாடிப் பேனல்கள் உள்ளன. இதை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த 12000 வேலையாட்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இவற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய மட்டும் மூன்று மாதங்கள் ஆகும். 

இவ்வாறு பல்வேறு சிறப்புக்களைப்பெற்ற இந்தக்கட்டடம் ஏழு கின்னஸ் சாதனை விருதுகளைப் பெற்றுள்ளது. அதன் விபரம் வருமாறு:

1. உலகின் மிக உயர்ந்த கோபுரம் [829.8 மீட்டர்]

2. அதிக தளங்களைக்கொண்ட கட்டடம் [மொத்தம் 160 தளங்கள்]

3. உயர்ந்த தங்கும் வீடுகள் கொண்ட குடியிருப்பு [385 மீட்டர்]

4. உலகிலே உயரமான மின்தூக்கிகள் [504 மீட்டர்]

5. தரையிலிருந்து உயர்ந்த இடத்தில் உணவகம் [ 441 மீட்டர்]

6. மனிதனால் உருவாக்கப்பட்ட உயர்ந்த அமைப்பு [ 829.8 மீட்டர்]

7. உயர்ந்த கவனிப்புக்கான டெக்னாலஜி



இதிலுள்ள தகவல்கள் துபாயில் முதன்முதலாக 10.12.2014 அன்று 
வெளியிடப்பட்ட ’தினத்தந்தி’ தமிழ் செய்தித்தாளின் 
தொடக்கவிழா சிறப்பு மலரிலிருந்து
எடுத்துப் பகிரப்பட்டுள்ளன


  

துபாயிலிருந்து வெளிவரும் 
’சிகரம்’ தமிழ் மாத இதழிலிருந்து சில செய்திகள்: 


உலகில் காணவேண்டிய மிகச்சிறந்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் முதலிடம் பிடித்துள்ளது. 

சுற்றுலா செல்பவர்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் உலகின் மிகப்பெரிய இணையதளமான ”ட்ரிப் அட்வைசர்”   2014-ம் ஆண்டுக்கான “ட்ராவலர்ஸ் சாய்ஸ்” விருதுக்காக உலகின் மிகச்சிறந்த 25 இடங்களை பல்வேறு அளவுகோல்களைக்கொண்டு பட்டியலிட்டுள்ளது. அதில் துபாய் முதலிடம் பிடித்துள்ளது. மக்கள் கண்டுகளிக்க துபாயில் 646 பொழுதுபோக்கு அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சுமார் ஒரு வருடமாக உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளின் எண்ணிக்கைகள், தரம் ஆகியவற்றைப்பற்றிய விமர்சனங்களை அடிப்படையாகக்கொண்டு 25 மிகச்சிறந்த இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

”25 மிகச்சிறந்த இடங்களில் முதலாவதாக எங்களைத்தேர்வு செய்திருப்பதன் மூலம் நாங்கள் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறோம்” என்கிறார் துபாயின் சுற்றுலா மற்றும் வணிகக்கழகத்தின் முதன்மை செயல் அலுவலர். இந்த ஆண்டு துபாயில் மாபெரும் உணவுத் திருவிழா நடைபெற்றது. உலக அளவிலான இசை, கலாச்சாரம், விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெற உள்ளன என்று காஸிம் தெரிவித்தார்.

- “சிகரம்’ மே 2014 இதழ் - பக்கம் எண்: 3    


துபாயின் மிகப்பெரிய ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தக நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.

2013-ம் ஆண்டின் இந்தியா, துபாய் இடையேயான வர்த்தகம் 37 பில்லியன் டாலர் [இரண்டே கால் லட்சம் கோடி - ரூ. 225000,00,00,000] ஆகும். உலக நாடுகளுடன் துபாயின் மொத்த வர்த்தகத்தில் இந்தியாவின் இந்தப்பங்கு மட்டும் 10 சதவீதமாகும்.

சீனா, அமெரிக்கா நாடுகள் 2-ம் மற்றும் 3-ம் இடத்தைப்பிடித்துள்ளன. சீனா-துபாயிடையே வர்த்தகம் 36.7 பில்லியன் டாலர். இதுவும் துபாயின் மொத்த வர்த்தகத்தின் ஏறக்குறைய 10 சதவீதமாகும்.

அமெரிக்காவுடனான வர்த்தகம் 23.4 பில்லியன் டாலர். இது 6% ஆகும். 4-வது 5-வது இடத்திலுள்ள சவுதி அரேபியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிடையேயான வர்த்தகம் முறையே 23 பில்லியன் டாலர் மற்றும் 15 பில்லியன் டாலர் ஆகும்.

துபாயின் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்திலும், துருக்கி 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 3-வது  இடத்திலும் உள்ளன.  துபாயின் மறு ஏற்றுமதியில் சவுதி அரேபியா முதலிடத்திலும், இந்தியா 2-ம் இடத்திலும், ஈராக் 3-ம் இடத்திலும் உள்ளன. 

துபாய் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா 2-ம் இடத்திலும், இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளன. 

துபாயின் இறக்குமதி 2012-ஐ விட 20 பில்லியன் டாலர் அதிகரித்து 2013-ம் ஆண்டில் 220 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

2013-இல் 18700 புதிய ட்ரேட் லைசன்ஸ்கள் [Trade Licence] துபாயில் கொடுக்கப்பட்டுள்ளன. இது 2012-ஐ விட 12% அதிகமாகும். ரியல் எஸ்டேட் துறையில் 64 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகப் பரிமாற்றம் நடந்துள்ளது.

சென்ற வருடம் துபாய் விமான நிலையத்தை 66.4 மில்லியன் பயணிகள் உபயோகப்படுத்தியுள்ளார்கள் என்று துபாய் துறைமுகம் மற்றும் சுங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

- “சிகரம்’ ஏப்ரில் 2014 இதழ் - பக்கம் எண்: 8 


ஐரோப்பிய கண்டத்தின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற சிறப்பிடத்தைப் பெற்றுள்ள பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ”ஹீத்ரு” விமான நிலையத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதலிடத்தைப்பிடிக்க, துபாய் விமான நிலையம் முன்னேறி வருவதாக மேலை நாட்டு ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

ப்ளாஸ்டிக்கினாலான பளபளக்கும் செயற்கைப் பனை மரங்கள், மணிக்கணக்கிலான விமானப்பயணத்தினால் சோர்ந்து வந்து தரை இறங்கும் பயணிகளின் முகங்களில் பூமழை தூவும் செயற்கைப்பனித்துளி என காண்போரின் கண்ணையும், கருத்தையும் கவந்து வரும் துபாய் விமான நிலையம் கலையழகில் மட்டுமல்ல ... கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கையாண்ட பயணிகளின் எண்ணிக்கையிலும் ஹீத்ருவையே மிஞ்சி விட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2 மாத காலத்தில் மட்டும் 20 லட்சம் சர்வதேசப் பயணிகளை கையாண்டுள்ள துபாய் விமான நிலையத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் மட்டும் தரையிறங்கி புறப்பட்டுச் செல்லும் வகையில் 17 லட்சத்து 13 ஆயிரம் சதுர அடியில் மூன்றாவது முனையம் புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. 

இந்த மூன்றாவது முனையத்தை மேற்கோள் காட்டும் அந்த ஊடகங்கள் விரைவில் இது திறக்கப்பட்டால், ஆண்டொன்றுக்கு 6 கோடி முதல் 9 கோடி இடையிலான சர்வதேசப்பயணிகளை கையாளக்கூடிய திறன் கொண்டதாக துபாய் விமான நிலையம் இன்னும் 4 ஆண்டுகளில் மாறிவிடும் என்று கருத்துத் தெரிவித்துள்ளன.  


 இந்தக்கட்டுரை மேலும் தொடரும் 



World's Tallest Building - Height 2766 feet
’At the Top - Burj Khalifa - Dubai’

22 comments:

  1. துபாய் பற்றிய, சுவையான தகவல்களை பரிமாறிய அன்பின் அய்யா V.G.K அவர்களுக்கு நன்றி


    ReplyDelete
  2. எப்படியோ, என்னை துபாய்க்கு அனுப்ப முடிவு செய்து விட்டீர்கள் !

    ReplyDelete
  3. மிகவும் சிறப்பான தகவல்கள். துபாயின் வர்த்தகத்தில் இந்தியா முதலிடம் பிடித்திருப்பதில் வியப்பில்லை. அதன்பின்னே எவ்வளவு இந்தியர்களின் உழைப்பு இருக்கிறது. புர்ஜ் கலிபா கட்டடத்தின் கின்னஸ் சாதனைகளை அறிய வியப்பு. ஆக மொத்தம் இங்கு துபாய் பற்றித் தாங்கள் பகிரும் தகவல்கள் அனைத்துமே எனக்குப் புதியவை. மிக்க நன்றி கோபு சார்.

    ReplyDelete
  4. அருமையான செய்திகள்
    அழகானப் படங்கள்
    நன்றி ஐயா

    ReplyDelete
  5. தகவல்கள் மலைக்க வைக்கிறது ஐயா...

    ReplyDelete
  6. ///ஐரோப்பிய கண்டத்தின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற சிறப்பிடத்தைப் பெற்றுள்ள பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ”ஹீத்ரு” விமான நிலையத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதலிடத்தைப்பிடிக்க, துபாய் விமான நிலையம் முன்னேறி வருவதாக மேலை நாட்டு ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.//// karrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr:)

    ReplyDelete
  7. இந்தியாவை.. ஏன் திருச்சியைப்பற்றிக்கூட இவ்ளோ விஷயம் தெரியுமோ தெரியல்ல கோபு அண்ணனுக்கு:) ஆனா டுபாய் பற்றி அக்குவேறு ஆறி வேறா சொல்லுறீங்க:).

    ReplyDelete
    Replies
    1. athira December 24, 2014 at 5:01 PM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //இந்தியாவை.. ஏன் திருச்சியைப்பற்றிக்கூட இவ்ளோ விஷயம் தெரியுமோ தெரியல்ல கோபு அண்ணனுக்கு:) //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அஞ்சுவுக்காக நான் திருச்சியைப்பற்றி எழுதின பதிவினைப் பார்க்கலையோ நீங்க !!!!!! இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

      //ஆனா டுபாய் பற்றி அக்குவேறு ஆறி வேறா சொல்லுறீங்க:).//

      இதுவரை எழுதியுள்ள இதெல்லாம் பத்திரிகையிலிருந்து திரட்டிய செய்திகளாக்கும். இனி நாளை முதல் எழுச்சியுடன் தரப்போவது ’எங்கள் பயணம்’ பற்றிய விறுவிறுப்பான படங்களும் சுறுசுறுப்பான செய்திகளும் மட்டுமே ..... அதிரா.

      எனவே தினமும் காணத்தவறாதீர்கள் ... கருத்தளிக்க மறவாதீர்கள் ! :)

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
  8. வியக்க வைத்த கின்னஸ் சாதனைகள். இந்தியாவும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் முதலிடம் பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  9. கோபு அண்ணா

    எல்லார் மனதிலும் துபாய்க்கு வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆசையை விதைத்து விட்டீர்கள்.

    நிறைய பேர்களின் மனதில் அந்த ஆசையை விதைத்ததற்கான விருது உங்களுக்கே தான்.

    செய்திகளும், புகைப்படங்களும் அருமையோ, அருமை.

    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  10. சுவையான தகவல்கள்.

    ReplyDelete
  11. ஆஹா.......
    துபாயை சுர்ர்டி பார்பதற்கு முன் எத்தனை எத்தனை விஷயங்கள் தெரிந்துகொண்டு எங்களுக்கும் தெரிவிகேர்கள்..
    மிக சுவாரசியமான செய்திகள்.

    ReplyDelete
  12. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு

    http://blogintamil.blogspot.in/2015/01/ch.html

    முடிந்த போது வந்து கருத்திடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. ADHI VENKAT January 2, 2015 at 6:18 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு
      http://blogintamil.blogspot.in/2015/01/ch.html முடிந்த போது வந்து கருத்திடுங்களேன்.//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி. தங்கமான தகவலுக்கு மிக்க நன்றி.

      //வை.கோ சார் அவர்களை பற்றி பதிவுலகில் அறியாதார் இல்லை. இவரின் சிறுகதை விமர்சனப் போட்டிகள் மிகவும் பிரபலமானது. தற்போது உலகைக் கவரும் உன்னதமான துபாய் பற்றியத் தொடரை படித்தீர்களா?//

      ஆஹா, இந்த 2015ம் புத்தாண்டில் என்னையும் என் வலைத்தளத்தினைப்பற்றியும், முதன் முதலாக தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

      தங்கள் அன்புக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  13. அறிந்திராத பல தகவல்களை அளித்த அருமையான பதிவு! நன்றி ஐயா!

    ReplyDelete
  14. இதுவரை தெரிந்திராத பல விழயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  15. கின்னஸ் சாதனை படைத்த துபாய் கட்டிடங்கள் பற்றியும்,விமான நிலையம் பற்றியும் தகவல்கள் வியக்கவைத்தன.

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 7:06 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கின்னஸ் சாதனை படைத்த துபாய் கட்டிடங்கள் பற்றியும்,விமான நிலையம் பற்றியும் தகவல்கள் வியக்கவைத்தன. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete
  16. துபாயி பாகலைகாட்டியும் ஒங்கட பதிவு படிச்சி நெறய வெவரங்க தெரிஞ்சுக்க மிடியிது.

    ReplyDelete
  17. கின்னஸில7--சாதனை விருதுகளுக்கு தகுதியான துதான்.எவ்வளவு வசதிகளை உள்ளேயும் வெளியேயும் பண்ணியிருக்காங்க.

    ReplyDelete
  18. //பல்வேறு சிறப்புக்களைப்பெற்ற இந்தக்கட்டடம் ஏழு கின்னஸ் சாதனை விருதுகளைப் பெற்றுள்ளது. // பணம் கொழித்தாலும் அள்ளித் தெளிக்கிறாங்கல்ல. அங்கதான் நிக்கிறாங்க..

    ReplyDelete