என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

புதிய வேர்கள் - மின்னூல் - மதிப்புரை

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். 

சமீபத்தில் ‘ஊஞ்சல் வலைப்பதிவர்’ திருமதி. ஞா. கலையரசி அவர்கள் 
எனக்கு இரு சிறுகதைத்தொகுப்பு மின்னூல்களை [1. புதிய வேர்கள், 2. புதைக்கப்படும் உண்மைகள்] அன்பளிப்பாக அனுப்பிவைத்து, எனக்கு அவற்றைப் படிக்க வாய்ப்பு அளித்துள்ளார்கள்.  

 


 


இவ்வாறு தன் மின்னூல்களை எனக்கு அன்பளிப்பாக அளித்து படிக்க வாய்ப்பளித்துள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு முதற்கண் என் அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

என் பார்வையில் 

புதிய வேர்கள் - மின்னூல்


இதில் மொத்தம் பத்து சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. (1) அம்மாவின் ஆசை (2) உண்மை சுடும் (3) ஒரு பல்லின் கதை (4) திருப்பு முனை (5) கொலுசு (6) சாதுர்யம் (7) நாய்க்கடி (8) புதிய வேர்கள் (9) பெண் பார்க்கும் படலம் (10) மூன்று விரல்.


அம்மாவின் ஆசை:

2010 ஜூன் மாதம், தமிழ்மன்ற சிறுகதைப்போட்டியில் முதல் பரிசுக்குத் தேர்வாகியுள்ள மிகவும் அற்புதமான கதை இது. 

வாழ்க்கையில் ஒரு ஸ்டேஜில், நம்மைப்போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் நியாயமான ஆசைகளை மிகவும் இயல்பாகவும், யதார்த்தமாகவும், அருமையாகவும், அழகாகவும் எழுதியுள்ளார்கள்.


அந்த அம்மாவின் ஆசைதான் என்ன? கடைசியில் அது நிறைவேறியதா? என்பதை மின்னூலை வாங்கி வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கோ, ப்ளீஸ்.
உண்மை சுடும்:

20.07.2008 தினமணி கதிரில் வெளியாகியுள்ள அருமையான கதை இது. 

கணவர்மார்களில் பெரும்பாலானவர்களுக்குத் தன் மனைவியின் அருமை பெருமைகள் தெரிவதே இல்லை. 


பொதுவாகவே ஒருவர் அருகில் கூடவே நம்முடன் இருக்கும்போது அவரின் அருமை பெருமைகள் நமக்குத் தெரியவே தெரியாது. அவர்கள் நம்முடன் இல்லாதபோது மட்டுமே அதனை நம்மால் நன்கு உணர முடியும் என்பதை மிக அழகாக உணர்த்தி எழுதியுள்ளார்கள்.
ஒரு பல்லின் கதை:

நிலாச்சாரலில் வெளிவந்துள்ள கதை இது. 

படாதபாடு படுத்திய ‘பல்’ ஒன்று பற்றியும், அதற்காக மேற்கொண்ட பல் வைத்தியம் பற்றியும், படிக்கும் போதே பல் கூச்சம் எடுப்பது போல எழுதி அசத்தியுள்ளார்கள்.  
திருப்பு முனை:

தினமணி கதிரில் வெளியாகியுள்ள கதை இது. 

என்னதான் பழைய / பரம விரோதியாக இருப்பினும், அவருக்கு வயதான காலத்தில் நம் வீடு தேடி வந்து ஓர் உதவி என்று கேட்டு நம்மிடம் சரணாகதி அடையும்போது ..... ’இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்மையும் செய்து விடல்’ ..... என்பதைச் சொல்லும் அழகான கதை.
கொலுசு:

30.11.2008 தினமணி கதிரில் வெளிவந்துள்ள கதை இது. 

தன் சொந்த வாழ்க்கையில் நடந்துள்ள ஓர் உண்மைச் சம்பவத்தையே கதையாக்கி இருப்பார்கள் போலிருக்குது. அதனால் இந்தக் கதையினில் நல்லதோர் உயிரோட்டம் என்னால் உணரப்படுகிறது.

ஒரு பெண் தன் கால்களில், புதுசாகக் கொலுசு அணிந்து பள்ளிக்குச் சென்றால் அது ஒரு தனி அழகாக இருப்பதுடன், அதன் இனிய ஒலி பிறரின் கவனத்தைக் கவர்ந்து பாராட்டுக்களைப் பெற்றுத்தரும். 

அதே பெண் தன் ஒரு காலில் கொலுசு இல்லாமல் பள்ளியிலிருந்து வீடு திரும்பினால், ஆசையுடன் புது கொலுசு வாங்கிக்கொடுத்துள்ள பெற்றோர்களின் கவனத்தைக் கவர்ந்து திட்டோ அல்லது அடியோ பெற்றுத்தரும்.  

பழி ஓரிடம் ... பாவம் ஓரிடமாக இந்தக்கதையின் போக்கு சற்றே வித்யாசமாக போகிறது. 

தொலைந்து போன அந்த ஒற்றை கொலுசு எங்கே? 

இந்த மின்னூலை வாங்கிப்படித்தால் நீங்களும் தெரிந்துகொள்ளலாமே!    


சாதுர்யம்:

5.10.2008 தினமணி கதிரில் வெளியாகியுள்ள கதை இது.  


ஒரு சர்வாதிகாரியான மாமியார். அவளுக்கு அடுத்தடுத்து பல மருமகள்கள். கடைசியாக வந்து சேர்கிறாள் ஒரு அல்ட்ரா மாடர்ன் மருமகள். இந்தக் கதையின் சுவாரஸ்யத்திற்குக் கேட்கவும் வேண்டுமோ !  நீங்களே படித்துப் பாருங்கோ, ப்ளீஸ்.நாய்க்கடி:

இது நிலாச்சாரலில் வெளியாகியுள்ள கதை. 

கதையில் நகைச்சுவை தூக்கலாக உள்ளது. அந்த நாயை (நாய்க் கதையை) இன்னும் கொஞ்சம் ஓட விட்டிருக்கலாமோ என நம்மை நினைக்க வைக்கும் சிரிப்பான கதை. 
புதிய வேர்கள்:

இந்தக்கதையின் தலைப்புத் தேர்வு மிகவும் அருமை. நூலுக்கும் இதனையே தலைப்பாகக் கொடுத்துள்ளது தனிச்சிறப்பாக உள்ளது. 

நவரசங்களும் ஒருங்கே அமைந்துள்ள மிக அழகான + இயல்பான + யதார்த்தமான குடும்பக்கதை இது, 

நன்கு முன்னேறிய வெளிநாட்டு வழுக்கும் சாலைகளில், மிக ஒஸ்தியான காரில், அலுங்காமல் குலுங்காமல் சுகமான பயணம் மேற்கொள்வது போல உள்ளது .... இந்த ஒரு கதையை வாசிக்கும் போது.

கதாநாயகி சொல்லும் கதையின் நிறைவு வரிகளான ‘எனவே இன்றைய தினத்தை நான் மகிழ்ச்சியாகக் கழிப்பேன்’ என்பது நம் அனைவரையும் சிந்திக்க வைப்பதாகும். 
பெண் பார்க்கும் படலம்:

6.7.2009 நிலாச்சாரலில் வெளி வந்துள்ள கதை இது. 

வரிக்கு வரி நகைச்சுவை மிகவும் தூக்கலாக இருப்பதால் எனக்கு மிகவும் பிடித்துப்போனது இந்தக்கதை. 

கோதுமை மாவில் அசோகா என்ற பெயரில் பெண் வீட்டார் செய்து சாப்பிடக் கொடுத்திருந்த ஸ்வீட் தன் வாயின் மேல் அன்னத்தில் ஈஷிக்கொண்டிருக்க, அத்துடனேயே மிகவும் கஷ்டப்பட்டு “உங்கள் பெண்ணுக்கு ஆடத்தெரியுமா? பாடத்தெரியுமா? சமைக்கத்தெரியுமா?” என பிள்ளையின் அம்மா கேட்க, பெண்ணின் அப்பா சொன்ன அதிரடியான பதில்களைப் படித்த எனக்கு, சிரித்த சிரிப்பில் என் விலா எலும்புகள் சுளுக்கிக்கொண்டு விட்டன.மூன்று விரல்:

உயிரோசை இணைய இதழில் வெளியாகியுள்ள கதை இது. 

இந்தக் கதையும் நல்ல நகைச்சுவையாகவும், த்ரில்லிங்காகவும், சஸ்பென்ஸ் ஆகவும் எழுதப்பட்டுள்ளது. மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் இந்தக் கதை அமைந்துள்ளது. உறவுகளின் போக்கினையும், உலக யதார்த்தங்களை அப்படியே புட்டுப்புட்டு வைக்கும் இந்தக்கதை, படிக்கும் நமக்கும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

 இந்த மின் நூல் கண்டு ஆகிய கற்கண்டை முழுவதும் ரஸித்து ருசித்துப் படிக்க விரும்புவோர் இதோ இந்த http://www.pustaka.co.in/home/ebook/tamil/pudhiya-vergal   இணைப்புக்குப்போய் அதில் உள்ள 'BUY NOW' என்பதைக் கிளிக் செய்தால் போதும். மின்னல் வேகத்தில் உங்களைத்தேடி அந்த மின்னூல் வந்து சேரும். 

தொடரும்

என்றும் அன்புடன் தங்கள்,

64 கருத்துகள்:

 1. சந்தா மாதம் நூறு ரூபாயில் நிறைய புத்தகங்கள் படிக்கலாம்! கலையரசி மேடத்துக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். April 21, 2017 at 6:37 AM

   வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

   //சந்தா மாதம் நூறு ரூபாயில் நிறைய புத்தகங்கள் படிக்கலாம்!//

   மாதச் சந்தா ரூ. 99 மட்டுமே எனச் சொன்னார்களே! அதற்குள் இப்படி ஒரு ரூபாயை அநியாயமாக ஏற்றி விட்டீர்களே ஸ்வாமீ!

   //கலையரசி மேடத்துக்கு வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.

   நீக்கு
  2. வாங்க ஸ்ரீராம்! மிக்க மகிழ்ச்சி! தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

   நீக்கு
 2. அருமையான விமர்சனம்.
  மதிப்புரை வழங்கிய உங்களுக்கும், நூல் ஆசிரியர் கலையரசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு April 21, 2017 at 9:56 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அருமையான விமர்சனம். மதிப்புரை வழங்கிய உங்களுக்கும், நூல் ஆசிரியர் கலையரசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   அருமையான விமர்சனம் என்ற அருமையான கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
  2. வாங்க கோமதி! தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி+ மிகவும் மகிழ்ச்சி!

   நீக்கு
 3. தகவலும் தங்களது மதிப்புரையும்,சுவாரஸ்யம்.கோதுமை அசோகா மட்டும் நன்றாக மனதில் பதிந்துபோனது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆச்சி ஸ்ரீதர் April 21, 2017 at 12:02 PM

   வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா?

   //தகவலும் தங்களது மதிப்புரையும், சுவாரஸ்யம்.//

   நான் தகவல் கொடுக்க நேர்ந்தது எனக்கு ஒரு சுவாரஸ்யம் என்றால், தங்களின் எதிர்பாராத இந்த வருகை அதைவிட சுவாரஸ்யமாகி விட்டது எனக்கு. நம்ம ஆச்சிதானா என்று என்னால் நம்பவே முடியவில்லை. கனவா நனவா என்பதில் இன்னும் எனக்கு சந்தேகமே! :)

   //கோதுமை அசோகா மட்டும் நன்றாக மனதில் பதிந்துபோனது.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சந்தோஷம் ஆச்சி.

   தங்களின் அன்பான வருகைக்கும், மனதில் பதிந்து போனதாகச் சொல்லும், அந்த கோதுமை அசோகா போன்ற, கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஆச்சி.

   நீக்கு
  2. வாங்க ஆச்சி! வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி! கோதுமை அசோகா மட்டும் மனதில் பதிந்து போனது அறிந்து மகிழ்ச்சி!

   நீக்கு
 4. அருமையான விமரிசனங்கள் ..வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  ஹாஹாஆ எனக்கும் கோதுமை அசோகா சிரிப்பை வரவழைத்தது ..பெண் பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளை வீட்டார் வாய் திறக்க கூடாதுன்னே இப்படி பட்சணங்களை கொடுக்கிறார்களோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Angelin April 21, 2017 at 1:49 PM

   வாங்கோ அஞ்சு, வணக்கம்.

   //அருமையான விமரிசனங்கள் ..வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //ஹாஹாஆ எனக்கும் கோதுமை அசோகா சிரிப்பை வரவழைத்தது ..//

   மிகவும் சந்தோஷம். :)

   //பெண் பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளை வீட்டார் வாய் திறக்க கூடாதுன்னே இப்படி பட்சணங்களை கொடுக்கிறார்களோ :) //

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா. அப்படியும் இருக்கலாம். :)

   தங்களின் அன்பான வருகைக்கும், சிரிப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு
  2. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அஞ்சு!
   அசோகா பற்றிய கருத்தைப் படித்து ரசித்துச் சிரித்தமையறிந்து, மிகவும் மகிழ்ச்சி!
   80 களில் பெண் பார்க்கும் படலத்தில் கண்டிப்பாக இந்த அசோகா இருக்கும். அதைச் சரியாகச் செய்யவில்லையென்றால், கோந்து போல மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்.
   இப்போது அதை யாரும் செய்கிறார்களா எனத் தெரியவில்லை.

   நீக்கு
 5. இந்த நூல்களுக்கான ஒட்டுமொத்த முகவுரையாக வாத்யாரின் அறிமுகம் அமைந்துள்ளது. சக பதிவர் சகோதரி ஞா. கலையரசி அவர்களின் மின்நூல் வெளியானது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள். ஆர்வத்தைத் தூண்டும் அறிமுகம். மேலும் படிக்கத்தூண்டி வை.கோ. வாத்தியார் சொல்வது...ரூ.100.00 வை.கோ த்ரூ. என்பது. நன்றி. என்றும் அன்புடன். உங்கள் எம்.ஜி.ஆர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI April 21, 2017 at 2:30 PM

   வாங்கோ சின்ன வாத்யாரே ! வணக்கம்.

   //இந்த நூல்களுக்கான ஒட்டுமொத்த முகவுரையாக வாத்யாரின் அறிமுகம் அமைந்துள்ளது.//

   மிக்க மகிழ்ச்சி.

   //சக பதிவர் சகோதரி ஞா. கலையரசி அவர்களின் மின்நூல் வெளியானது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள். ஆர்வத்தைத் தூண்டும் அறிமுகம்.//

   மகிழ்ச்சியான வாழ்த்துகளும், ஆர்வத்தைத் தூண்டும் அறிமுகம் என்ற கருத்துக்களும் எங்களை மென்மேலும் எழுதத் தூண்டுமோ என்னவோ :) ... மிக்க நன்றி, ஸ்வாமீ.

   //மேலும் படிக்கத்தூண்டி வை.கோ. வாத்தியார் சொல்வது...ரூ.100.00 வை.கோ த்ரூ. என்பது. நன்றி. என்றும் அன்புடன். உங்கள் எம்.ஜி.ஆர்.//

   தங்களின் இந்த எழுத்து ஸ்லேடை நன்கு ரஸிக்க முடிகிறது. :))))) மிக்க நன்றி, வாத்யாரே.

   நீக்கு
  2. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரவிஜி!

   நீக்கு
  3. விமர்சனப் போட்டிகளில் ....தாங்கள் வாத்யாரோட ''காசாளரும்'' அல்லவா...? வாரித்தரும் வாத்தியாருக்கு...வலது கரம் போல இருந்துள்ளீர்கள்...! எனவே இரட்டிப்பு மகிழ்ச்சி...!! வாய் வாழ்த்த மறந்தாலும்...வயிறு வாழ்த்தி விடும்...!!!

   நீக்கு
  4. சின்ன வாத்யாரின் வாய்க்கும் வயிறுக்கும் இரட்டிப்பு நன்றிகள். :) :)

   நீக்கு
 6. கோபு அண்ணா
  பகிர்விற்கு மிக்க நன்றி.

  கதைச் சுருக்கங்களே அருமையாக இருக்கின்றஜ.

  வாழ்த்துக்கள் திருமதி கலையரசி அவர்களே.

  கோபு அண்ணா, இந்த pustaka.co.in பற்றி கொஞ்சம் விவரமாக ஒரு பதிவு போடுங்களேன். என்னைப் போல் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya April 21, 2017 at 2:36 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //கோபு அண்ணா பகிர்விற்கு மிக்க நன்றி. //

   சரி.

   //கதைச் சுருக்கங்களே அருமையாக இருக்கின்றன.//

   என்னவோ நீங்களும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளீர்கள். அதுவும் அருமையாக இருப்பதாக நான் சொல்லவே மாட்டேனாக்கும். :)

   //வாழ்த்துக்கள் திருமதி கலையரசி அவர்களே. //

   மிக்க மகிழ்ச்சி, ஜெயா.

   //கோபு அண்ணா, இந்த pustaka.co.in பற்றி கொஞ்சம் விவரமாக ஒரு பதிவு போடுங்களேன். என்னைப் போல் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள.//

   இதற்கு முந்திய பதிவின் https://gopu1949.blogspot.in/2017/03/blog-post_30.html பின்னூட்டப்பகுதியில், முதல் பின்னூட்டம் கொடுத்துள்ள, ‘சிப்பிக்குள் முத்து’ என்ற பதிவருக்கான என் பதில்களிலேயே அனைத்து விபரங்களையும் எழுதியுள்ளேன், ஜெயா. நீங்கள் அதனைப் படிக்கவில்லை போலிருக்குது. சரி பரவாயில்லை.

   என் தூண்டுதலால் அடுத்து தங்கள் படைப்புக்களை மின்னூலாக கொண்டுவந்து மின்னூல் உலகில் ஜொலிக்கப்போவது எங்கட ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களும், ஜெயந்தி ஜெயா அவர்களும் மட்டுமே என்பதை எங்கட ’அதிரடி அதிரா’வின் தலையில் அடித்துச்சொல்லி, அனைவருக்கும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

   என் வழிகாட்டுதலின்படி, மின்னல் வேகத்தில் செயல்பட்டு, இந்நேரம் புஸ்தகா நிறுவனத்தாரின் ஒப்பந்தப்பத்திரத்தில் கொயொப்பமிட்டு அனுப்பி இருப்பீர்கள் என்று நம்புகிறேன், ஜெயா!

   அதன் பிறகு உங்களிடமிருந்து ஒரு தகவலையும் காணுமே ...... கர்ர்ர்ர்ர் !

   நீக்கு
  2. வாங்க ஜெயா! வணக்கம்.
   கதை சுருக்கங்களே அருமையாக இருக்கின்றன என்ற உங்கள் கருத்து கண்டு மகிழ்ந்தேன்.
   கோபு சாரும் ஒரு படைப்பாளி என்பதால், கதை சுருக்கத்தை ரசிக்கும் விதத்தில் அவரால் கொடுக்க முடிந்திருக்கிறது. அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி!
   உங்கள் வாழ்த்துக்கு என் நன்றி!

   நீக்கு
 7. புஸ்தாகாவில் 'Rent a book' திட்டத்தில் ரூபாய் 99 செலுத்தி இணைந்துள்ளேன். இதுவரை இருபது புத்தகங்கள் வாசித்துவிட்டேன். கலையரசி அவர்களின் நூல்களும் இறக்கிவைத்துள்ளேன். நடுவில்வி ஒரு வாரம்ரை நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டதால் நேரம் இல்லாமல் போய்விட்டது. எனது மதிப்புரையை விரைவில்எ ழுதுவேன். தாங்களும் தொடருங்கள். (தங்கள் நூல்கள் அனைத்தையும் படித்துமுடித்துவிட்டேன்.) - இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Chellappa Yagyaswamy April 21, 2017 at 4:46 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //புஸ்தாகாவில் 'Rent a book' திட்டத்தில் ரூபாய் 99 செலுத்தி இணைந்துள்ளேன்.//

   அடடா, நல்லதொரு காரியம் செய்துள்ளீர்கள்.

   //இதுவரை இருபது புத்தகங்கள் வாசித்துவிட்டேன்.//

   அச்சா .... பஹூத் அச்சா ! உங்களின் தனித்திறமைக்கும், மின்னல் வேக வாசிப்பு அனுபவங்களுக்கும் என் ’ராயல் சல்யூட்’ ஸார்.

   //கலையரசி அவர்களின் நூல்களும் இறக்கிவைத்துள்ளேன்.//

   அப்படியா மிகவும் சந்தோஷம், ஸார். மிகவும் கனமான அந்த அவர்களின் நூல்களை இறக்கி வைக்க, ஒருவேளை உங்களுக்கு இந்த வயசான காலத்தில் ஏதும் கஷ்டமாக இருந்ததா, ஸார்?

   //நடுவில் ஒரு வாரம்வரை நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டதால் நேரம் இல்லாமல் போய்விட்டது.//

   நடுவில் இது வேறா? ஹனிமூனா? வெரிகுட் :)

   //எனது மதிப்புரையை விரைவில் எழுதுவேன்.//

   ஆஹா, இதனைக் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. [ஒருவேளை தாங்கள் இவ்வாறு சொன்னபடியே, எழுதியும் விட்டால் சந்தோஷம் இன்னும் தாங்கவே முடியாமல் இரட்டிப்பாகிவிடும்.:) ]

   //தாங்களும் தொடருங்கள்.//

   சரி, ஸார்.

   //(தங்கள் நூல்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டேன்.)//

   இதனை என்னால் நம்பவே முடியவில்லை. இருப்பினும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனெனில் எனக்கு ராயல்டியாக இதுவரை ரூ. 20 ஒதுக்கீடு செய்துள்ளார்கள். உலகில் யாரோ ஒரு அப்பாவி பாவம் ... நம் மின்னூல்களையும் காசு கொடுத்தோ, வாடகைக்கு எடுத்தோ படித்துள்ளார்களே என நினைத்து வியந்துபோய் மயக்கமே போட்டு விழுந்து விட்டேன் நான். அந்த அப்பாவி நீங்களாகவும் ஒருவேளை இருக்கலாம் என இப்போது எனக்குத் தோன்றுகிறது. :)))))

   இந்த ரூ. 20 (ரூபாய் இருபது மட்டுமே) எழுத்துலகில் எனக்குக் கிடைத்துள்ள முதல் வருமானமாகும். என்னைப் பொறுத்தவரை இதன் மதிப்பு இருபது கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும். :)

   //இராய செல்லப்பா நியூஜெர்சி//

   அன்புடன் கோபு

   நீக்கு
  2. @ Chellappa Yagyaswamy வாங்க சார்! வணக்கம்.
   என் மின்னூல்களையும் வாடகைக்கு எடுத்துள்ளீர்கள் என்றறிய மிகவும் மகிழ்ச்சி! படித்துவிட்டு மதிப்புரை எழுதப்போகிறேன் என்பதைப் படித்து இரட்டிப்பு மகிழ்ச்சி!
   உங்கள் மதிப்புரையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆக்கப்பூர்வ விமர்சனம் என் எழுத்தை மேலும் செம்மைப்படுத்தும். மிகவும் நன்றி!
   @ கோபு சார் - வணக்கம் கோபு சார்!
   என்னைப் பொறுத்தவரை நீங்கள் பெற்றிருக்கும் ராயல்டி இருபது ரூபாயின் மதிப்பு, இருபது கோடிக்கு மேல் என்று நீங்கள் சொல்லியிருப்பதை, நானும் மனப்பூர்வமாக ஆமோதிக்கிறேன்.
   பணத்துக்காக நாம் எழுதவில்லை; நம் ஆத்ம திருப்திக்காகத் தான் எழுதுகிறோம். யாராவது நம் நூலை காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள் என்பதே நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி தான். படித்துவிட்டு அது பற்றிய மதிப்புரையை நமக்காக நேரமொதுக்கி அவர்கள் எழுதுகிறார்கள் என்றால் அதைவிட மகிழ்ச்சி தரும் விஷயம் வேறொன்றில்லை.
   உங்கள் நேரத்தையொதுக்கி நீங்கள் எழுதியிருக்கும் இந்த மதிப்புரை என்னைப் பொறுத்தவரை விலை மதிப்பற்றது என்பேன்.
   அதற்காக மீண்டும் என் நன்றி!

   நீக்கு
 8. கோபு சார்... எப்போதும்போல் நல்லாவே புத்தகவிமரிசனம் எழுதியிருக்கீங்க.

  பத்திரிகைகளில் ஏற்கனவே வெளியான கதைகளின் தொகுப்பா? அப்போ தரத்துக்குக் கேட்பானேன்.

  நகைச்சுவை கதைகளென்றால் உங்களுக்கு இன்னும் விருப்பம் என்பது விமரிசனத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

  ஆசிரியர் கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  இராய செல்லப்பா அவர்கள் அதுக்குள்ள 20 புத்தகம் படிச்சுட்டாரா. செம வேகம்தான் (இதுலவேற இடைல சுற்றுப்பயணம்)
  அசோகா அல்வாக்கும் கோதுமைக்கும் சம்பந்தமிருக்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழன் April 21, 2017 at 8:26 PM

   வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

   //கோபு சார்... எப்போதும்போல் நல்லாவே புத்தக விமரிசனம் எழுதியிருக்கீங்க.//

   அப்படியா! ஏதோ எனக்குத் தெரிந்தவரை பூசி மெழுகி சுருக்கமாக மட்டுமே எழுதியுள்ளேன். முழுக்கதையையும் அப்படியே சொல்லக்கூடாது அல்லவா!!

   //பத்திரிகைகளில் ஏற்கனவே வெளியான கதைகளின் தொகுப்பா? அப்போ தரத்துக்குக் கேட்பானேன்.//

   எப்போதுமே ’தரத்தினில் தங்கம்’ ஆகவே உள்ளார்கள் இந்த நூலாசிரியர். :)

   //நகைச்சுவை கதைகளென்றால் உங்களுக்கு இன்னும் விருப்பம் என்பது விமரிசனத்தைப் பார்த்தாலே தெரிகிறது.//

   நகைச்சுவையாகவும், ஆங்காங்கே கண்ணுக்குக் குளிர்ச்சியான படங்களை இணைத்தும், ஒவ்வொரு பத்தியிலும் நான்கு வாக்கியங்களுக்கு மேல் இல்லாமலும், படிக்க சுவாரஸ்யமாக கொடுக்கப்படும் பதிவுகளை மட்டுமே நான் வாசிக்க விரும்புவது வழக்கம். மீதியெல்லாம் என்னைப் பொறுத்தவரை சுத்த வழுவட்டைகள் மட்டுமே.

   ஜனரஞ்சகமாக இல்லாமலும், நகைச்சுவை உணர்வே சுத்தமாக இல்லாமலும், மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறோம் என்பது எழுதுபவருக்கே புரியாமலும், சாணியில் கெட்டியாக விராட்டி தட்டியதுபோல, வளவளன்னு, சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் பக்கம் பக்கமாக ஏதாவது எழுதியே தீர்வது என்று சங்கல்ப்பம் மேற்கொண்டு, இடைவெளியே இல்லாமல் அடைதட்டியது போல எழுதிக்கொண்டே போவோரின் எழுத்துக்களைப் படிக்க, மஹா மஹா எரிச்சலாகி விடுகிறது எனக்கு.

   ஒவ்வொருவரின் டேஸ்ட்டும் ஒவ்வொரு விதம் அல்லவா. அது போல என் டேஸ்ட்டும் இவ்வாறு தனித்தன்மை வாய்ந்ததாகும் என மட்டும் இங்கு நான் சொல்லிக்கொள்கிறேன்.

   //ஆசிரியர் கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //இராய செல்லப்பா அவர்கள் அதுக்குள்ள 20 புத்தகம் படிச்சுட்டாரா. செம வேகம்தான். (இதுலவேற இடைல சுற்றுப்பயணம்)//

   அவர் தற்சமயம் நியூ ஜெர்ஸியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதாகக் கேள்வி. ’ஜெர்ஸி காளை’ என்பார்களே .... அதுபோன்ற வேகமும் பேரெழுச்சியும் ஏற்பட்டு இருக்குமோ என்னவோ. :)

   //அசோகா அல்வாக்கும் கோதுமைக்கும் சம்பந்தமிருக்கா?//

   இதுபற்றி ஆக்சுவலாக எனக்கும் ஒன்றும் தெரியாது ஸ்வாமீ. எனக்கு சாப்பிட விருப்பமில்லாவிட்டாலும் அசோகா / அல்வா போன்றவற்றை மிகவும் ரேர் ஆக, சில கல்யாணங்களில், வேறு வழியே இல்லாமல் நான் சாப்பிட்டது மட்டும் உண்டு. எதில் எதைக்கலந்து எப்படி அல்வா அல்லது அசோகா செய்கிறார்கள் என்ற சமையல் பக்குவமெல்லாம் எனக்குத்தெரியாது, ஸ்வாமீ.

   சமையலில் தான் மிகவும் எக்ஸ்பர்ட் எனச் சொல்லி அடிக்கடி தன் பதிவுகளில் அல்டிக்கொண்டு அலம்பல் செய்துவரும் ’அதிரடி அதிரா’ அவர்களிடம் எதற்கும் கேட்டுக்கொள்ளவும். உம்மை நன்கு குழப்பி விடுவாள். அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் ...... ஒரேயடியாக நீர் குய்ய்யம்பிப் போகப் போவதற்கு :)) ஆஹ்ஹாஹ்ஹா!

   நீக்கு
  2. வாங்க நெல்லை தமிழன்!
   உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!
   அசோகாவுக்கும், கோதுமைக்கும் சம்பந்தம் உண்டு. கோதுமை மாவில் செய்வது தான் அப்பலகாரம். சரியான பக்குவத்தில் செய்யவில்லையென்றால் சரியான கோந்து!
   மீண்டும் நன்றி!

   நீக்கு
 9. கலையரசி அக்காவுக்கு வாழ்த்துக்கள்.. இலவச புத்தகங்கள் கிடைக்கப்பெற்ற கோபு அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.. இப்படி இன்னும் பல புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கோணும் எனவும் முருகனை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 21, 2017 at 9:00 PM

   அடேடே வாங்கோ அதிரா, வாங்கோ ... வணக்கம். இப்போத்தான் மேலே நான் உங்களை நினைத்தேன்.

   நினைத்தேன் வந்தாய் ..... (போனது போக) நூறு வயது :)

   //கலையரசி அக்காவுக்கு வாழ்த்துக்கள்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அதிரா. [’அக்கா’வை வாழ்த்தும் ’கொக்கா’ ஆயிட்டீங்கோ :) ]

   //இலவச புத்தகங்கள் கிடைக்கப்பெற்ற கோபு அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்..//

   ஆஹா, அது ஏதோ என் பாக்யம் ஆக்கும். பொறாமைப் படக்கூடாஆஆஆ சொல்லிட்டேன்.

   //இப்படி இன்னும் பல புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கோணும் எனவும் முருகனை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்..//

   அது யாரு .... அந்தப்பையன் ..... முருகன்? இதற்கெல்லாம் நீங்க போய் மன்றாடிக் கேட்டுக் கொள்வதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை .... ஏனெனில் நீங்க பிரித்தானிய மஹாராணியாரின் ஓரே வாரிசு .... ஸ்வீட் சிக்ஸ்டீன். [அடிக்கடி இதை நான் உங்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டியுள்ளது ..... கர்ர்ர்ர்ர்ர்]

   நீக்கு
  2. தங்கை அதிராவுக்கு வணக்கம். வாழ்த்துக்கு மிகவும் நன்றி!
   அக்காவை வாழ்த்தும் கொக்கா ஆயிட்டீங்கோ என்ற கோபு சாரின் காமெண்டை மிகவும் ரசித்தேன்.
   நீங்கள் பிரித்தானிய மகாராணியின் ஒரே வாரிசு என்பதையும், என்றென்றும் ஸ்வீட் சிக்ஸ்டீன் என்பதையும் கோபு சார் மூலம் இன்று தான் தெரிந்து கொண்டேன். மிகவும் மகிழ்ச்சி!

   நீக்கு
 10. //அந்த அம்மாவின் ஆசைதான் என்ன? கடைசியில் அது நிறைவேறியதா? என்பதை மின்னூலை வாங்கி வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கோ, ப்ளீஸ்.///

  ஆஹா என் சினிமா விமர்சனம் போல முடிச்சிருக்கிறீங்களே...

  ஆஹா பத்துக் கதையும் படிச்சு பத்துக்கும் விமர்சனமோ.. நீங்க எங்கயோ இருக்க வேண்டியவர் கோபு அண்ணன்.. தெரியாமல் எங்களிடம் மாட்டுப்பட்டு முழிக்கிறீங்க... சரி சரி நான் டிசுரேப்பு பண்ணல்ல.. நீங்க மற்றதையும் படிச்சு முடிங்கோ..

  ஊசிக் குறிப்பு:
  நானும் கதை படிக்கப் போறேனாக்கும்:) என்னையும் ஆரும் டிசுரேப்பு பண்ணக்குடா.. அதேநேரம் என்ன கதை யாருடைய கதை எண்டெல்லாம் கேய்க்கவும்பூடா சொல்லிட்டேன்ன்ன்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 21, 2017 at 9:04 PM

   **அந்த அம்மாவின் ஆசைதான் என்ன? கடைசியில் அது நிறைவேறியதா? என்பதை மின்னூலை வாங்கி வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கோ, ப்ளீஸ்.**

   //ஆஹா என் சினிமா விமர்சனம் போல முடிச்சிருக்கிறீங்களே...//

   ’மற்றவற்றை வெள்ளித்திரையில் காண்க’ என்பது போலச் சொன்னால்தான் ஷார்ட் & ஸ்வீட் ஆக இருக்கும். பதிவுகளில் நாம் வளவளன்னு போர் அடிக்கக்கூடாது. பின்னூட்டப்பகுதியில் தான் நாம் வளவளன்னு கும்மி அடித்துக் கோலாட்டம் போட்டுக்கொண்டே இருக்கலாம். :)

   //ஆஹா பத்துக் கதையும் படிச்சு பத்துக்கும் விமர்சனமோ.. நீங்க எங்கயோ இருக்க வேண்டியவர் கோபு அண்ணன்..//

   ஆமாம் நான் லண்டனில் எங்கட அதிரா வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருக்க வேண்டியவன் மட்டுமே. உடனடியாக ஒரு விஸா வாங்கி அனுப்புங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

   //தெரியாமல் எங்களிடம் மாட்டுப்பட்டு முழிக்கிறீங்க...//

   அதே ..... அதே ..... சபாபதே ..... அதிரபதே !

   //சரி சரி நான் டிசுரேப்பு பண்ணல்ல..//

   அது என்ன ரேப்பு? .... எனக்கு ஒரே பயமாக்கீதூஊஊஊ.

   ஒருவேளை DISTURB ஆக இருக்குமோ என்னவோ? சரி அ(த்)தை விடுவோம்.

   //நீங்க மற்றதையும் படிச்சு முடிங்கோ..//

   மற்றதையும் படிச்சு முடிச்சு பதிவும் போட்டாச்சு :)

   //ஊசிக் குறிப்பு://

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   ’ஊசிக்குறிப்பு’ என்றால் அதிரா பாஷையில் ’பின்குறிப்பு’ (இது மற்றவர்களுக்காக மட்டுமே)

   //நானும் கதை படிக்கப் போறேனாக்கும்:)//

   ஏதாவது இதுபோலக் கதை விட்டுக்கிட்டே இருங்கோ.

   //என்னையும் ஆரும் டிசுரேப்பு பண்ணக்குடா..//

   சேச்சே ..... யாரும் அப்படியெல்லாம் _ _ரேப்பு பண்ண மாட்டார்கள். கவலையே படாதீங்கோ.

   //அதேநேரம் என்ன கதை யாருடைய கதை எண்டெல்லாம் கேய்க்கவும்பூடா சொல்லிட்டேன்ன்ன்:)..//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எங்கட அதிரடி அதிராவுக்கும் யாரோ தெரியாத்தனமா இலவச மின்னூல் FREE GIFT ஆக அனுப்பிவைத்து வசமாக மாட்டிக்கொண்டு இருப்பார்கள் என்பது போலத் தெரிகிறது இதன் மூலம்.

   யார் அந்த அப்பாவியோ .... அவனை இனி அந்த ஆண்டவன்தான் காப்பாற்றணும். :)

   நீக்கு
  2. அதிராவின் பின்னூட்டத்தையும், அதற்குக் கோபு சார் கொடுத்திருக்கும் பதிலையும் படித்து ரசித்துச் சிரித்தேன். அதிராவுக்கு மின்னூல் அனுப்பிய அந்த அப்பாவி யார் என்ர உண்மை எனக்கு இப்போதே தெரிஞ்சாகணும்! இல்லையேல் என் மண்டை வெடித்துவிடும்!

   நீக்கு
  3. ஞா. கலையரசி April 23, 2017 at 8:39 PM

   //அதிராவின் பின்னூட்டத்தையும், அதற்குக் கோபு சார் கொடுத்திருக்கும் பதிலையும் படித்து ரசித்துச் சிரித்தேன்.//

   :) மிக்க மகிழ்ச்சி, மேடம். :)

   //அதிராவுக்கு மின்னூல் அனுப்பிய அந்த அப்பாவி யார் என்கிற உண்மை எனக்கு இப்போதே தெரிஞ்சாகணும்! இல்லையேல் என் மண்டை வெடித்துவிடும்!//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! தங்கள் மண்டை வெடிப்பதற்குள் இதோ இங்கே போய்ப் பார்த்திடுங்கோ
   http://gokisha.blogspot.com/2017/04/blog-post_23.html
   அந்த அப்பாவி யார் என்கிற உண்மை தெரிந்துவிடும்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 11. டெல்ல மறந்திட்டேன்ன்.. 10 கதையையும் அழகாகப் படிச்சு.. அழகாக விமர்சனமும் செய்திட்டீங்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira April 21, 2017 at 9:05 PM

   //டெல்ல மறந்திட்டேன்ன்..//

   ஆஹா, தூய தமிழ் ... அப்படியே என்னைப் புல்லரிக்க வைக்குது.

   //10 கதையையும் அழகாகப் படிச்சு.. அழகாக விமர்சனமும் செய்திட்டீங்க வாழ்த்துக்கள்.//

   மேலும் என்னென்ன டெல்லப்போறீங்களோ என நான் ஒரேயடியா பயந்தேபூட்டேன். நல்லவேளையாகத் தப்பித்தேன் .... பிழைத்தேன்.

   தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, அதிரா. :)

   நீக்கு
  2. “மேலும் என்னென்ன டெல்லப்போறீங்களோ என நான் ஒரேயடியா பயந்தேபூட்டேன். நல்லவேளையாகத் தப்பித்தேன் .... பிழைத்தேன்”
   ஹா ஹா ஹா - ரசித்துச் சிரித்து மகிழ்ந்தேன்..

   நீக்கு
 12. படித்துச் சுவைக்கத் தூண்டும்
  அருமையான நூலறிமுகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //படித்துச் சுவைக்கத் தூண்டும் அருமையான நூலறிமுகம் - JYK//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
  2. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!

   நீக்கு
 13. பெரிப்பா நமஸ்காரம்.உங்க விமரிசனம் படிச்சாலே கதய பூரா படிச்சு மாதிரியே இருக்கு.இன்னமும் உங்களோடு மின்னூல் எதுவுமே படிக்கமுடியல. அதுக்க்கெல்லாம் கதை சுருக்கம் கேக்க கூடாது. ஏற்கனவே நீங்க பதிவாக போட்டிருக்கும் கதைகள்தானே மின்னூலில் இருக்கும். கலையரசி மேடத்துக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy April 22, 2017 at 10:05 AM

   வாம்மா மை டியர் கொழுகொழுக் குழந்தாய் ஹாப்பி, வணக்கம்.

   //பெரிப்பா நமஸ்காரம். உங்க விமரிசனம் படிச்சாலே கதய பூரா படிச்சு மாதிரியே இருக்கு. //

   அப்படியாம்மா! மிகவும் சந்தோஷம்....டா ஹாப்பி.

   //இன்னமும் உங்களோடு மின்னூல் எதுவுமே படிக்கமுடியல.//

   உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. நீ இன்னும் உன் ஆத்துக்காரர் மூலம் லேப்-டாப் வாங்கலை. அதனால் உன்னால் இன்னும் எதுவுமே படிக்க முடியல .... தெரியும்.

   //அதுக்கெல்லாம் கதை சுருக்கம் கேக்க கூடாது.//

   கரெக்ட்.

   //ஏற்கனவே நீங்க பதிவாக போட்டிருக்கும் கதைகள்தானே மின்னூலில் இருக்கும்.//

   நீ சொல்வதும் சரிதான். ஆனால் என் பதிவினில் போட்டிருக்கும் அவை எல்லாமே மின்னூலில் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஒருசில கதைகள் இதுவரை வெளியாகியுள்ள மின்னூல்களில் விடுபட்டுப் போயும் உள்ளன.

   //கலையரசி மேடத்துக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி......டா ஹாப்பி. இதன் தொடர்ச்சி இன்று தனிப்பதிவாக வெளியாகியுள்ளது. நீ ஏனோ அங்கு இன்னும் இதுவரை வரவேக் காணும். :(

   ஆத்தில் + ஊரில் [ஆடு மாடுகள், நாய்கள் உள்பட] எல்லோரும் செளக்யமா? :)

   உன் பிரியமுள்ள பெரிப்பா

   நீக்கு
  2. தங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!

   நீக்கு
 14. விமரிசனங்களே இவ்வளவு சுவாரசியமா இருக்குதே... முழு கதைகளும் எவ்வளவு நல்லா இருக்கும்.. கோபூஜி... உங்களுக்கு படிக்க நிறைய புக்ஸும்...படிக்க வாய்ப்பும்..நிறயவே கிடைக்குது. அதான் திறமையான எழுத்தாளராக இருக்கிங்க.. கலையரசி மேடத்துக்கும்...எங்கட கோபூஜி அவங்களுக்கும் வாழ்த்துகள்...பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிப்பிக்குள் முத்து. April 22, 2017 at 10:27 AM

   வாம்மா, மீனா. வணக்கம். நல்லா இருக்கீங்களா?
   முன்புபோல நாட்டு நடப்பே இப்போதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியமாட்டேங்குது. ஏதாவது சொன்னால் தானே? கர்ர்ர்ர் :(

   //விமரிசனங்களே இவ்வளவு சுவாரசியமா இருக்குதே... முழு கதைகளும் எவ்வளவு நல்லா இருக்கும்..//

   தெரியலை. எங்கட மீனா தானே படித்துப்பார்த்து சொன்னால் தான் நானும் தெரிந்துகொள்வேன். :)

   //கோபூஜி... உங்களுக்கு படிக்க நிறைய புக்ஸும்... படிக்க வாய்ப்பும்.. நிறயவே கிடைக்குது.//

   அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மீனா. நான் ஒரு பொழுது போகாத வெட்டி ஆசாமி என்பதனால் சிலர் எனக்கு புக்ஸ் அனுப்புகிறார்கள். வேறுசிலர் தங்களின் சொந்தக்கதை சோகக்கதைகளைச் சொல்லி மெயில் அனுப்பி என் பதில்களால் சற்றே மன ஆறுதல் அடைகிறார்கள். ஏதோ எனக்கும் இது ஒரு சின்ன பொழுதுபோக்கு + புண்ணியம் மட்டுமே.

   ’அன்புடன் அந்தரங்கம்’ பகுதிபோல மட்டுமே.

   //அதான் திறமையான எழுத்தாளராக இருக்கிங்க..//

   அதெல்லாம் ஒன்றும் இல்லை மீனா. நான் மிகவும் சாதாரணமானவன் மட்டுமே. திறமையாவது வெங்காயமாவது. எனக்குத் தெரிந்த எதையோ கொஞ்சம் கிறுக்கிக்கொண்டே இருப்பேன். அத்தோடு சரி.

   //கலையரசி மேடத்துக்கும்...எங்கட கோபூஜி அவங்களுக்கும் வாழ்த்துகள்...பாராட்டுகள்...//

   வாழ்த்துகளும் பாராட்டுகளும் சொல்லியுள்ள எங்கட மீனாக்குட்டிக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபூஜி

   நீக்கு
  2. வாங்க மீனா! தங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி!
   @ கோபு சார்
   வணக்கம் கோபு சார்! தாங்கள் வெட்டி ஆசாமி என்பதற்காக நான் நூல் பரிசளிக்கவில்லை.
   தாங்களும் மிகச் சிறந்த படைப்பாளி என்பதால், என் எழுத்து பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்பியே பரிசளித்தேன். ஆனால் வெகு சீக்கிரத்தில் நீங்கள் படித்து, மதிப்புரை எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.
   இது எனக்கோர் இன்ப அதிர்ச்சியே!
   மீண்டும் என் நன்றி!

   நீக்கு
  3. ஞா. கலையரசிApril 23, 2017 at 9:02 PM

   @ கோபு சார்
   //வணக்கம் கோபு சார்! தாங்கள் வெட்டி ஆசாமி என்பதற்காக நான் நூல் பரிசளிக்கவில்லை.//

   தெரியும் .... தெரியும். தயவுசெய்து கோச்சுக்காதீங்கோ, மேடம்.

   நான் இவ்வாறு இங்கு எழுதியுள்ளது எங்கள் வெட்டி அரட்டை க்ரூப்பின் ஓர் மெம்பரான மீனாவுக்காக மட்டுமே. அந்த எங்கள் வெட்டி அரட்டை க்ரூப்பில் As on Date என்னைத்தவிர சுமார் 12 பேர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதிலும் சிலர் உடனே பின்னூட்டமிட வருவார்கள். சிலர் எப்போதாவது அதிசயமாக வருவார்கள். மற்றபடி ஒருவருக்கொருவர் மெயில் தொடர்புகள் அல்லது வாட்ஸ் அப் தொடர்புகளில்தான் இருப்போம். நினைவில் உள்ள அந்த 2+10=12 உறுப்பினர்களைப் பற்றி கீழே அடுத்த பின்னூட்டத்திற்கு என் பதிலாகக் கொடுத்துள்ளேன், பாருங்கோ.

   ஒரு காலக்கட்டத்தில் ’முன்னா பார்க்’ என்ற இடத்தில் நாங்கள் எல்லோரும் தினமும் சந்தித்து, தினமும் எங்களுக்குள் மிகவும் வேடிக்கையாக கமெண்ட்ஸ்கள் கொடுத்து + கலாய்த்து மகிழ்வது உண்டு.

   //தாங்களும் மிகச் சிறந்த படைப்பாளி என்பதால், என் எழுத்து பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்பியே பரிசளித்தேன். ஆனால் வெகு சீக்கிரத்தில் நீங்கள் படித்து, மதிப்புரை எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கோர் இன்ப அதிர்ச்சியே! மீண்டும் என் நன்றி!//

   மிகவும் சந்தோஷம் மேடம். :)

   நீக்கு
 15. வணக்கம் கோபு சார்,
  என் மின்னூலில் உள்ள ஒவ்வொரு கதையையும் படித்தவுடன் அதுபற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்த போதே பெரிதும் மகிழ்வுற்றேன். தற்போது நூலின் முழுமையான உங்கள் பார்வை குறித்து எழுதிய பதிவு கண்டு இன்ப அதிர்ச்சியுற்றேன். இந்த நாள் இனிய நாள்! என் மின்னூலின் முதல் மதிப்புரை, உங்களிடமிருந்து என்பது மிகவும் இனிக்கும் செய்தி!
  இதைவிட எழுதுபவருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வேறொன்றுண்டா? உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியதன் மூலம், என் எழுத்துக்குப் பரவலாக வெளிச்சம் கிடைக்க வழிசெய்திருக்கிறீர்கள்.
  உங்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிப்பதில் அகம் மிக மகிழ்கின்றேன். இங்குக் கருத்தும், வாழ்த்தும் தெரிவித்திருக்கும் அனைத்து நல் இதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
  தங்களுக்கு மீண்டும் என் நன்றி, நன்றி…நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி April 22, 2017 at 3:09 PM

   வணக்கம் கோபு சார்,

   வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

   //என் மின்னூலில் உள்ள ஒவ்வொரு கதையையும் படித்தவுடன் அதுபற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்த போதே பெரிதும் மகிழ்வுற்றேன். தற்போது நூலின் முழுமையான உங்கள் பார்வை குறித்து எழுதிய பதிவு கண்டு இன்ப அதிர்ச்சியுற்றேன். இந்த நாள் இனிய நாள்! என் மின்னூலின் முதல் மதிப்புரை, உங்களிடமிருந்து என்பது மிகவும் இனிக்கும் செய்தி!//

   வாழ்க்கையில் இதெல்லாம் சில சந்தோஷமான தருணங்கள் மேடம். வாய்ப்புக்கிடைக்கும் போது, அதையெல்லாம் நாமே நமக்குள் இதுபோலக் கொண்டாடி மகிழத்தான் வேண்டும். ஏதோ இதுபோன்ற ஒரு வாய்ப்புக்கிடைத்ததில் எனக்கும் உங்களைப்போல மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது, மேடம்.

   //இதைவிட எழுதுபவருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வேறொன்றுண்டா? உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியதன் மூலம், என் எழுத்துக்குப் பரவலாக வெளிச்சம் கிடைக்க வழிசெய்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிப்பதில் அகம் மிக மகிழ்கின்றேன்.//

   மின்னூல் என்றால் என்னவென்றே தெரியாமலும், அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமில்லாமலும் மிகவும் அலட்சியமாகத்தான், வலையுலகிலிருந்தே சற்றே விலகி, ஓர் இருட்டு அறையில் என்னை நானே முடக்கிக்கொண்டு இருந்து வந்தேன்.

   மனதளவில் உற்சாகமில்லாமல் மிகவும் நான் துவண்டு போயிருந்த அந்த நேரத்தில் மிகச்சரியாக, அந்த மின்னூல் என்றதோர் புதிய வெளிச்சத்தை, மின்னல் போல என் மீது படரச்செய்ய தாங்கள்தான் ஏதோ ஒரு வகையில் காரணமாகவும் இருந்துள்ளீர்கள். [Please refer My Comments & Your Valuable and Encouraging Reply for my comments in your Post: http://unjal.blogspot.com/2017/02/1.html ]. இதனால் சற்றே என் மனச் சோர்வு நீங்கி நானும் புத்துணர்ச்சி பெற்றுள்ளேன் என்பதை நானும் தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   நமக்குள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் இவ்வாறு நன்றி கூறிக்கொண்டு மகிழ்வோம், மேடம்.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> ஞா. கலையரசி (2)

   //இங்குக் கருத்தும், வாழ்த்தும் தெரிவித்திருக்கும் அனைத்து நல் இதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! தங்களுக்கு மீண்டும் என் நன்றி, நன்றி…நன்றி!//

   தாங்கள் சிரமம் பாராமல் இங்கு கருத்துச்சொல்லியுள்ள அனைவருக்குமே தனித்தனியாக பதிலும் அளித்து, இந்த என் பதிவினை மேலும் சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   இங்கு வருகை தருவோரில் பலரும் என் மீது அதிக உரிமை எடுத்துக்கொண்டு, சொந்த உறவினர்கள் போல மிகவும் பாசமாகப் பழகி வருபவர்கள்.

   அவர்களின் பின்னூட்ட எழுத்துக்களும், அவர்களுக்கான என் பதில்களும் தங்களுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கக்கூடும்.

   இதில் (1) லண்டனில் உள்ள எங்கட அதிராவும் (2) மஸ்கட்டில் உள்ள மின்னல்-முருகு என்பவளும் தமிழ் மொழியில் (அதுவும் கொச்சையான பேச்சுத்தமிழில்) பல டாக்டரேட் பட்டம் வாங்கியுள்ளவர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரிய எனக்கே பல ஆண்டுகள் ஆனது. அதனால் நீங்களும் மிரண்டு விடக்கூடாது எனக்கேட்டுக்கொள்கிறேன். :))))))

   முருகு பற்றி அறிய இதோ என் பதிவு: https://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html

   அடுத்து என் மீது மிகவும் உரிமை எடுத்துக்கொண்டு, ப்ரேம பக்தியுடன் பாச மழை பொழிபவர்கள் (1) ’பூந்தளிர்’-ராஜாத்தி-ரோஜாப்பூ (2) ’ப்ராப்தம்’-சாரூஊஊஊ (3) ’ஹாப்பி’க்குட்டி காயத்ரி (4) ஷாமைன் பாஸ்கோ மேடம் (5) ’சிப்பிக்குள் முத்து’-முன்னா-மீனா-மெஹர் மாமி (6) ஜெயந்தி ஜெயா (7) ஜெயஸ்ரீ ஷங்கர் (8) ஆச்சி (9) அஞ்சூஊஊஊ (10) மஞ்சூஊஊ போன்றவர்கள். இதில் மேலும் பலர் பெயர்கள் அவசரத்தில் என்னால் இங்கு குறிப்பிட்டுச்சொல்ல விடுபட்டிருக்கலாம். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக !

   நீக்கு
 16. சினிமாவுக்கு கதை சொல்ல முயலுகையில்
  முதலில் ஒரு வரிக் கதையைச் சொல்லச்
  சொல்வார்கள்.அது அவர்களுக்குப் பிடித்தமானதாக
  இருந்தால்தான் தொடர்ந்து கதை கேட்பார்கள்

  ஆகையால் கதை சொல்ல முயலுகிறவர்கள் எல்லாம்
  அந்த ஒரு வரிக் கதையை மிக மிக அழகாக ,
  நேர்த்தியாக சொல்லும் கலையில் மிகவும்
  தேர்ச்சிப் பெற்றவர்களாக இருப்பார்கள்

  உங்கள் சுருக்கமான ஆயினும் மிகச் சிறப்பான
  கதை விமர்சனம் படிக்கையில் இந்த ஞாபகம்தான
  வந்தது

  அருமையான பதிவு
  நிச்சயம் வாங்கிப் படித்து விடுவேன்

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ramani S April 22, 2017 at 7:58 PM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம் ஸார்.

   //சினிமாவுக்கு கதை சொல்ல முயலுகையில் முதலில் ஒரு வரிக் கதையைச் சொல்லச் சொல்வார்கள். அது அவர்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால்தான் தொடர்ந்து கதை கேட்பார்கள். ஆகையால் கதை சொல்ல முயலுகிறவர்கள் எல்லாம் அந்த ஒரு வரிக் கதையை மிக மிக அழகாக, நேர்த்தியாக சொல்லும் கலையில் மிகவும் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருப்பார்கள். உங்கள் சுருக்கமான ஆயினும் மிகச் சிறப்பான கதை விமர்சனம் படிக்கையில் இந்த ஞாபகம்தான் வந்தது.//

   ஆஹா, நல்லதொரு உதாரணத்தை எடுத்து தங்களின் தனிப்பாணியில் நயம்படச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார்.

   //அருமையான பதிவு. நிச்சயம் வாங்கிப் படித்து விடுவேன். பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
  2. வாங்க ரமணி சார்! நீங்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். ஒரு வரியில் சுவையாக கதை சொல்லத் தனித்திறமை வேண்டும். அது நம் கோபு சாருக்கு வாய்த்திருக்கிறது. நிச்சயம் வாங்கிப்படிப்பேன் என்ற உங்கள் கருத்து கண்டு மகிழ்ந்தேன். தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!

   நீக்கு
 17. சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘புதிய வேர்கள்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு மின்னூலில் உள்ள கதைகளின் சுருக்கமான திறனாய்வை படித்தேன்.

  வழக்கமான பாணியில் விரிவாக சொல்லாமல் மற்றவைகளை ‘வெள்ளித் திரையில் காண்க’ என சொல்வது போல் கதைகளை முழுக்க சொல்லாமல் கோடிட்டுக்காட்டி மின்னூலை படிக்க சொல்லிவிட்டீர்கள்.

  சிறுகதைகள் தொகுப்பு மின்னூலை திறனாய்வு செய்து எங்களைப் படிக்கத்தூண்டிய தங்களுக்கு வாழ்த்துகள்! நூலாசிரியர் சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வே.நடனசபாபதி April 23, 2017 at 4:34 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘புதிய வேர்கள்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு மின்னூலில் உள்ள கதைகளின் சுருக்கமான திறனாய்வை படித்தேன்.//

   மிக்க மகிழ்ச்சி, ஸார்.

   //வழக்கமான பாணியில் விரிவாக சொல்லாமல் மற்றவைகளை ‘வெள்ளித் திரையில் காண்க’ என சொல்வது போல் கதைகளை முழுக்க சொல்லாமல் கோடிட்டுக்காட்டி மின்னூலை படிக்க சொல்லிவிட்டீர்கள்.//

   அதுதானே ஸார் நியாயமாகவும் இருக்க முடியும்? தங்களின் இந்தப் புரிதலுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார். :)

   //சிறுகதைகள் தொகுப்பு மின்னூலை திறனாய்வு செய்து எங்களைப் படிக்கத்தூண்டிய தங்களுக்கு வாழ்த்துகள்! நூலாசிரியர் சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு பாராட்டுகள்! //

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   நீக்கு
  2. தங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறை நன்றி சார்!

   நீக்கு
 18. ஓர் முக்கிய அறிவிப்பு:

  http://gokisha.blogspot.com/2017/04/blog-post_23.html

  மேற்படி இணைப்பினில்

  ‘கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும் :)’

  என்ற தலைப்பினில் எங்கட

  அதிரடி
  அந்தர்பல்டி
  அழும்பு
  அட்டகாச
  அழிச்சாட்டிய
  அதிரஸ

  அதிரா அவர்கள்

  அதாவது பிரத்தானிய மஹாராணியாரின் ஒரே வாரிசும், என்றும் ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ மட்டுமே என கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லித்திரியும் அதிரா அவர்கள்

  என்னுடைய இரு மின்னூல்களை விமர்சனம் செய்து சுடச்சுட வெளியிட்டுள்ளார்கள். அவை சூடு ஆறும் முன்பு போய்ப்பார்த்து ஏதேனும் கமெண்ட்ஸ் போட்டு விட்டு வாருங்கள். :)

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 19. உங்களுடைய விமரிசனம் பார்த்ததும் படிக்க வேண்டும் போல உள்ளது. கலையரசியும் நன்றாக எழுதுபவர். படிக்க வேண்டும். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமாட்சி April 24, 2017 at 5:46 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //உங்களுடைய விமரிசனம் பார்த்ததும் படிக்க வேண்டும் போல உள்ளது. கலையரசியும் நன்றாக எழுதுபவர். படிக்க வேண்டும். அன்புடன்//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
  2. தங்கள் வருகைக்கும், நன்றாக எழுதுவேன் என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி காமாட்சி அவர்களே!

   நீக்கு
 20. கலையரசி அக்காவின் கதைகளை ஏற்கனவே வாசித்திருந்தாலும் இங்கே உங்களுடைய விமர்சன வரிகளில் வாசிக்கும்போது மீண்டும் வாசிக்கும் ஆவல் வருகிறது. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைச் சம்பவங்கள்... நம் இயல்பு வாழ்க்கையோடு ஒப்பிடக்கூடிய அற்புதமான கதைக்கருக்கள்.. இங்கே அவற்றை சுருக்கமாகவும் அதே சமயம் சுவையாகவும் பகிர்ந்திருப்பதற்கு நன்றி கோபு சார். கலையரசி அக்காவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி April 26, 2017 at 4:13 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //கலையரசி அக்காவின் கதைகளை ஏற்கனவே வாசித்திருந்தாலும் இங்கே உங்களுடைய விமர்சன வரிகளில் வாசிக்கும்போது மீண்டும் வாசிக்கும் ஆவல் வருகிறது. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைச் சம்பவங்கள்... நம் இயல்பு வாழ்க்கையோடு ஒப்பிடக்கூடிய அற்புதமான கதைக்கருக்கள்.. இங்கே அவற்றை சுருக்கமாகவும் அதே சமயம் சுவையாகவும் பகிர்ந்திருப்பதற்கு நன்றி கோபு சார். கலையரசி அக்காவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு
  2. உன் வருகைக்கும், கதைகள் குறித்த பாராட்டுக்கும் மிகவும் நன்றி கீதா!

   நீக்கு
 21. ஒற்றைக் கொலுசுவின் கதியைத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்படுகிறது. இதும் சிறப்பான தொகுப்பாக இருக்கும் போல! வாழ்த்துகள். விமரிசனம் "நச்" சென்று செய்திருக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam April 27, 2017 at 6:59 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //ஒற்றைக் கொலுசுவின் கதியைத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்படுகிறது.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதுபோல ஒரு ஆவல் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதே இந்த என் பதிவின் வெற்றியாகும். :)

   //இதும் சிறப்பான தொகுப்பாக இருக்கும் போல!//

   ஆம். இது சிறப்பான தொகுப்பாக இருந்ததால்தான் மதிப்புரை எழுதும் ஆர்வமே எனக்கு ஏற்பட்டது. :)

   //வாழ்த்துகள். விமரிசனம் "நச்" சென்று செய்திருக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், ’நச்’ என்ற வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   நீக்கு