மின்னூல் ஆசிரியர்
திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள்
இவரைப்பற்றி நாம் அறிவது
Jayasree Shanker
About the author
1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு. பேரை. சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய் திருமதி. சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.
1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.
2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து, கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம், சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.
என் பார்வையில்
’தணியாத தாகங்கள்’
மின்னூல்
இது ஒரு மிக அழகான குடும்பக்கதை. ஒரேயொரு கதை. நான்கு அத்யாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ஓர் நெடுங்கதை. தலைப்புத் தேர்வு வெகு அருமை. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரின் தேவைகளும் தாகங்கள் போலவே ..... என்றும் தணியாதவை + முடிவே இல்லாதவை என்பதை வெகு அழகாக இந்தக்கதையின் மூலம் உணர்த்தியுள்ளார்கள்.
ஒரு கதைக்கான கருவினை கையில் எடுத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் எப்படி எப்படி வேண்டுமானாலும் கதையை வடிவமைத்துக்கொண்டு செல்ல முடியும். ஆனால் இவரைப்போன்ற ஒரு தேர்ந்த எழுத்தாளரால் மட்டும் தான், இவ்வளவு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கதையை நகர்த்திச் செல்ல முடிகிறது என்பதில்தான் என் வியப்பே அடங்கியுள்ளது.
வெண்ணெய் போன்ற வழவழப்பான வெளிநாட்டுச் சாலைகளில், மிக உயர்தரமான காரினில், மிக வேகமாக அலுங்காமல் குலுங்காமல் வழுக்கி செல்வது போன்ற சுகானுபவம் கதையினைப் படிக்கும்போதே நமக்குக் கிட்டிவிடுகிறது.
கதையில் தேர்ந்த நடையழகுடன் கச்சிதமான வார்த்தை பிரயோகங்கள் மனதுக்கு இதமாக உள்ளன.
கதையில் தேர்ந்த நடையழகுடன் கச்சிதமான வார்த்தை பிரயோகங்கள் மனதுக்கு இதமாக உள்ளன.
கதையின் ஆரம்பமே நமக்குள் மாபெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி, அடுத்து என்ன ...... அதற்கு அடுத்து என்ன ...... என கதையினிலேயே நம் மனதை ஒன்றச்செய்து, முழுக்கதையையும் வாசித்து முடிக்காமல் அங்கு இங்கு என எங்கும் நகரச் செய்யாமல் கட்டிப்போட்டுவிடுகிறது.
கதைச்சுருக்கம்:
Copy and Paste செய்யவே முடியாத அந்த மின்னூலின், 9ம் பக்கத்தில் உள்ள சில வரிகள் .... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல .... என்னால் மிகவும் கஷ்டப்பட்டு டைப் செய்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய செய்தித்தாளின் வந்திருந்த அபுதாபி வேலை வாய்ப்பு விளம்பரம் அவனது நம்பிக்கைக்கு கலங்கரை விளக்கம் போல ஒளிர்ந்தது.
’பணம்....! இந்தச் சமுதாயத்தில் சீரும் சிறப்புமாக வாழவைக்கும் அச்சாணி பணம். இந்தியாவில் என்னதான் கஷ்டப்பட்டு மாடாய் உழைத்துச் சம்பாதித்தாலும், ரெண்டு தங்கைகளுக்குக் கல்யாணத்தைக் கனவில்தான் செய்து பார்க்க முடியும். திட்டம் போட்டு வரவு செலவுகள் எழுதி எழுதி, தினமும் கணக்கு உதைத்து நிம்மதியாகத் தூங்கமுடியாமல், நாளைக்கு அம்மாவுக்கு மருந்து வாங்கணும், தங்கைக்கு காலேஜ் ஃபீஸ் கட்டணும்...
ஒரு இருபதாயிரம் இருந்தால் போதும்.... இந்த வேலைக்கு அப்ளை பண்ணிட்டு,
கைச்செலவுக்குக் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துட்டுப்போனால் ..... அபுதாபி பணம்....! இந்தப்பஞ்சத்தைப் பஞ்சர் ஒட்டிவிடும்’ என்றெல்லாம் கனவு கண்டு....
கல்யாணியிடம் சொன்னதும்,
கல்யாணியின் கை வளையல்கள் சேட்டுக்கடைக்குப்போக, ரவி அபுதாபிக்குப் போகத்தயாரானான்.
இன்னும் இரண்டே நாள்தான்.... இன்னும் ஒரே நாள்தான்.... இதோ இன்னிக்கு....
ஆச்சு இன்னும் இரண்டே மணி நேரத்தில் புறப்படணும்.... என்று காலத்தைக் கணக்குப்போட்டு நெஞ்சு திக் திக் என்று அடித்துக்கொண்டது.
நாளைக்காலைப் பொழுது அண்ணாவுக்கு அபுதாபியில் விடியுமாக்கும்.... !
தங்கைகள் ஆளுக்கொரு ஆசையாக அடுக்கிக்கொண்டே போனார்கள்.
கதைச்சுருக்கம்:
ஒரு கதாநாயகன் .... பெயர் ரவி. அவனுக்கு அப்பா, அம்மா, ஒரு காதலி .... கல்யாணி, படிக்கும் பருவ வயதினில் திருமணத்திற்கும் தயாரான இரண்டு சகோதரிகள் .... மைதிலி+வைதேஹி. இவர்களே மெயினான அந்தக் குடும்பத்தின் கதா பாத்திரங்கள்.
இஞ்சினீரிங் படித்து வேலை தேடி அலைந்துவரும் ரவி, ஒரு நாள் தான் காதலித்து வந்த சொந்த தாய் மாமன் மகள் கல்யாணியை, சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக, அவசர அவசரமாகக் கோயிலில் கல்யாணம் செய்துகொண்டு தன் வீட்டுக்குக் கூட்டி வந்துவிடுகிறான்.
இஞ்சினீரிங் படித்து வேலை தேடி அலைந்துவரும் ரவி, ஒரு நாள் தான் காதலித்து வந்த சொந்த தாய் மாமன் மகள் கல்யாணியை, சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக, அவசர அவசரமாகக் கோயிலில் கல்யாணம் செய்துகொண்டு தன் வீட்டுக்குக் கூட்டி வந்துவிடுகிறான்.
ஏற்கனவே தன் மைத்துனர் மேல் கடும் கோபத்தில் இருக்கும், ஹார்ட் பேஷண்ட் ஆன ரவியின் அப்பா இதைக்கேள்விப்பட்ட உடனேயே, படபடப்புடன் கத்திவிட்டு, ஹார்ட்-அட்டாக்கில் இறந்து விடுகிறார்.
குடும்பப்பொறுப்பு முழுவதையும் ரவியே ஏற்றுக்கொள்ளும் நிலைமை அவனே சற்றும் எதிர்பாராமல் நேர்ந்துவிடுகிறது. மருமகள் வந்த வேளை மாமியார் மூலையில் அமர வேண்டிய துர்பாக்யம்.
இருப்பினும் தன் சொந்த அண்ணன் மகள் கல்யாணியே தனக்கு மருமகளாக வந்திருக்கிறாள் என்பதால் ரவியின் அம்மாவுக்கும், தன் சொந்த அத்தையே தன் மாமியாராக அமைந்து இருக்கிறார்கள் என்பதால் கல்யாணிக்கும் மனதுக்குள் மிகவும் சந்தோஷமே. அதனால் இந்த மாமியார்-மருமகள் ஜோடி, சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி கடைசிவரை, இந்தக்கதையில் வெகு அழகாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதில் என் மனதுக்கு மிகவும் திருப்தியே.
குடும்பப்பொறுப்பு முழுவதையும் ரவியே ஏற்றுக்கொள்ளும் நிலைமை அவனே சற்றும் எதிர்பாராமல் நேர்ந்துவிடுகிறது. மருமகள் வந்த வேளை மாமியார் மூலையில் அமர வேண்டிய துர்பாக்யம்.
இருப்பினும் தன் சொந்த அண்ணன் மகள் கல்யாணியே தனக்கு மருமகளாக வந்திருக்கிறாள் என்பதால் ரவியின் அம்மாவுக்கும், தன் சொந்த அத்தையே தன் மாமியாராக அமைந்து இருக்கிறார்கள் என்பதால் கல்யாணிக்கும் மனதுக்குள் மிகவும் சந்தோஷமே. அதனால் இந்த மாமியார்-மருமகள் ஜோடி, சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி கடைசிவரை, இந்தக்கதையில் வெகு அழகாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதில் என் மனதுக்கு மிகவும் திருப்தியே.
நாத்தனார்களான மைதிலி + வைதேஹி ஆகிய இருவரின் படுத்தல்கள் அவ்வப்போது இருக்கத்தான் செய்கிறது. குடும்பத்தேவைகளையும், கடன்களையும் உணர்ந்த கதாநாயகன் உள் நாட்டில் வேலை தேடியும் கிடைக்காமல், தன் மனைவி கையிலிருந்த தங்க வளையல்களை அடமானம் வைத்து, வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறான். அங்கு மிகக்கடுமையாக உழைக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான். தன் காதல் திருமணம் தன் அப்பாவின் உயிரையே பறித்துவிட்ட, குற்ற உணர்வினில், தன் குடும்ப முன்னேற்றத்திற்காக, தன் மனைவியின் நிர்வாகத்தின் மூலமாகவே நிறைய செலவழிக்கிறான்.
அவன் மனைவி கல்யாணி தவிர, குடும்பத்தார் அனைவரும், அவரவர்கள் தாகத்தை அவரவர்கள் வெகு சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி அவன் மூலமும் அவன் மனைவி மூலமும் தணித்துக் கொள்கின்றனர்.
என்ன இருந்து என்ன பயன்? காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவளுடன் நிம்மதியாக சேர்த்து தன் வாழ்க்கையை அவனால் அனுபவிக்க முடியாமல் பல்வேறு தடங்கல்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன. கல்யாணமாகியும்கூட மொபைல் போனிலும், ஸ்கைப்பிலும் அவர்கள் இன்னும் காதலித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
என்ன இருந்து என்ன பயன்? காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவளுடன் நிம்மதியாக சேர்த்து தன் வாழ்க்கையை அவனால் அனுபவிக்க முடியாமல் பல்வேறு தடங்கல்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன. கல்யாணமாகியும்கூட மொபைல் போனிலும், ஸ்கைப்பிலும் அவர்கள் இன்னும் காதலித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
எப்படியோ சில ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, தன் மனைவியுடன் அவ்வப்போது வந்து சில நாட்களாவது ரவியால் சேர முடிந்ததில் அவனுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்து விடுகிறது. அதை உடனடியாக நேரில் வந்து பார்க்கக்கூட முடியாத பணிச்சுமையில் அவன் மூழ்க நேரிடுகிறது. வெளிநாட்டு வேலையில் அமர்ந்துள்ள கதாநாயகன் ரவி, அந்த தன் சொந்தக் குழந்தையையும் ஸ்கைப்பில் மட்டுமே தினமும் கொஞ்சி மகிழ்கிறான்.
பெரும் பணச்செலவில் கல்யாணம் கட்டிக்கொடுத்த தங்கைகளுக்கு தலை தீபாவளி, வளைகாப்பு-சீமந்தம், பிரஸவம் என அடுத்தடுத்து ஏதேதோ செலவுகளும், தாய்க்கு மிகப்பெரியதொரு மருத்துவமனையில், ராஜ வைத்தியம் செய்ததில் எதிர்பாராத மருத்துவச் செலவுகளும் ஏற்படுகிறது. எப்படியோ கஷ்டப்பட்டு, எதிர் நீச்சல்போட்டு, வெளிநாட்டு வருமானத்தால் இவற்றையெல்லாம் ஓரளவு சமாளித்தும் விடுகிறான்.
எல்லாம் ஒருவழியாக இனிதே முடிந்ததும், இனியும் வெளிநாட்டு வாழ்க்கை கூடவே கூடாது என முடிவெடுத்து, தன் தலை முழுவதும் நரைப்பதற்குள்ளும், முடிகள் கொட்டி முழு வழுக்கையாவதற்கு முன்பும், தன் காதல் மனைவியிடம் இதுபற்றி, அவன் சந்தோஷமாகச் சொல்ல வரும்போது, அவளின் தாகமும், அவளின் பெண் குழந்தை பார்க்கவியின் தாகமும் இப்போது சேர்ந்து அவன் எடுக்கும் முடிவு தவறு என்று சுட்டிக்காட்டி அவனை மீண்டும் ஹிம்சிக்கிறது.
இவ்வாறாக ஒரு நடுத்தர குடும்பத்தில் உள்ளோரின் பல்வேறு மனித உணர்வுகளை நன்கு பின்னிப் பிசைந்து கதையில் எந்தவிதமான விரசமும் இல்லாமல் ஓர் தெய்வீகக் காதல் கதையாகவே கடைசிவரை மிளிரச் செய்துள்ளது உண்மையிலேயே பாராட்ட வேண்டியதாக உள்ளது.
என்னதான் இந்தக்கதையைப் பற்றிய கதைச்சுருக்கம் + சிறப்பம்சங்களை இங்கு மேலே மேலோட்டமாக நான் கூறியிருப்பினும் அந்த முழுக்கதையையும் நம் ஜெயஸ்ரீ அவர்களின் எழுத்துநடையில் படித்தால் மட்டுமே தாங்களும் அந்த சுகானுபவத்தை முற்றிலுமாக அடையக்கூடும்.
என்னதான் இந்தக்கதையைப் பற்றிய கதைச்சுருக்கம் + சிறப்பம்சங்களை இங்கு மேலே மேலோட்டமாக நான் கூறியிருப்பினும் அந்த முழுக்கதையையும் நம் ஜெயஸ்ரீ அவர்களின் எழுத்துநடையில் படித்தால் மட்டுமே தாங்களும் அந்த சுகானுபவத்தை முற்றிலுமாக அடையக்கூடும்.
மிக நல்லதொரு கதையாக அமைந்துள்ள இந்த மின்னூலின் விலை மிகவும் மலிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரோட்டோரக்கடையில் ஒரேயொரு இட்லியும், ஒரு கப் காஃபியும் சாப்பிடக்கூடிய விலை மட்டும்தான்.
விருப்பமுள்ளோர் உடனடியாக வாங்கிப்படிக்க http://www.pustaka.co.in/home/ author/jayasree-shankar என்ற இணைப்புக்குச் சென்று ’Buy Now’ என்பதை க்ளிக் செய்யுங்கோ, போதும். உங்களைத்தேடி மின்னல் வேகத்தில் இந்த மின்னூல் வந்து சேரும் .
திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் இந்த மின்னூலை வாங்கிப்படித்து முடித்து விட்டால், எங்கட வீட்டுக்கல்யாணங்களில் படா-கானா விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சியும் மயக்கமும் உண்டாகிவிடும். ஆஹ்ஹாஹ்ஹா!
விருப்பமுள்ளோர் உடனடியாக வாங்கிப்படிக்க http://www.pustaka.co.in/home/
என்றும் அன்புடன் தங்கள்,
அடடா இரண்டாவது புத்தகம், ஜெயஸ்ரீ அக்காவுக்கு வாழ்த்துக்கள். புத்தகத் தலைப்பே, வாங்கிப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது, மிக அருமையாக இருக்கு தலைப்பு. ஆனா அந்த முகப்புப் படம் ஒரு மாதிரி இருக்கே... ஒருவேளை கதைக்கு ஏற்றதாக இருக்கலாம்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
athira April 30, 2017 at 12:04 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அடடா இரண்டாவது புத்தகம், ஜெயஸ்ரீ அக்காவுக்கு வாழ்த்துக்கள்.//
இது இரண்டாவது புத்தகம் அல்ல. முதல் மின்னூல் புத்தகம் மட்டுமே. ஏற்கனவே என்னால் வெளியிடப் பட்டுள்ளது மின்னூல் ஆசிரியர் பற்றியதோர் அறிமுகம் மட்டுமே.
இந்தப்பதிவு அந்த அவர்களின் முதல் மின்னூல் பற்றியதோர் ஆழமான, அகலமான, விரிவான அலசல் ஆகும்.
//புத்தகத் தலைப்பே, வாங்கிப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது, மிக அருமையாக இருக்கு தலைப்பு.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
//ஆனா அந்த முகப்புப் படம் ஒரு மாதிரி இருக்கே... ஒருவேளை கதைக்கு ஏற்றதாக இருக்கலாம்...//
பலரின் தாகங்களைத் தணிக்க தண்ணீர் நிறையக் கொட்டுவதுபோல உள்ளதே, அந்த முகப்புப்படத்தில்.
குடிக்க எல்லோருக்கும் தண்ணீர் மட்டுமே வேண்டும். தண்ணீர் எப்படி, எங்கிருந்து, யார் யார் கண்ணீர் சிந்தியதால் கிடைக்கிறது என்ற அதன் ரிஷி மூலம் நதி மூலம் யாரும் பார்ப்பது இல்லை என்பதையும் அந்த முகப்புப்படம் வலியுறுத்துவதாக எனக்குத் தோன்றியது.
//வாழ்த்துக்கள்.//
இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
அன்பின் ஆதிரா அவர்களுக்கு,\
நீக்குதங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. இது எனது முதலாவது மின்னூல்.கதையின் கருவில்
நடையில், குறையிருப்பின் அவசியம் கூறுங்கள்.
நன்றிகள்,
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
மிக்க நன்றி கோபு ஸார் .
நீக்குநல்ல விளக்கமான விமரிசனம். கதை பிளாட்டையும் நன்றாகவே விவரித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன் April 30, 2017 at 1:01 PM
நீக்குவாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.
//நல்ல விளக்கமான விமரிசனம்.//
மிக்க மகிழ்ச்சி. :)
//கதை பிளாட்டையும் நன்றாகவே விவரித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.//
நான் சொல்லியுள்ளவைகளைவிட சொல்லாமல் விட்டுள்ளவை ஏராளம்.
அந்த நான் ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை .... விலையேதும் இல்லை ....’ :)
தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸ்வாமீ.
அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு,
நீக்குமனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
அன்பின் கோபு ஸார் அவர்களுக்கு,
மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
கதைச் சுருக்கமே அருமை. வாழ்த்துக்கள் திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர்.
பதிலளிநீக்குகோபு அண்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அன்பின் ஜெ.ஜெ.
நீக்குமிக்க நன்றிகள்,
அன்புடன்
ஜெ
Jayanthi Jaya April 30, 2017 at 3:07 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//கதைச் சுருக்கமே அருமை.//
இப்படிச் சுருக்கமாகச் சொல்லிப்போனால் எப்பூடீஈஈஈ அது அருமையாக இருக்க முடியும்? :(
//வாழ்த்துக்கள் திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர்.//
மிக்க மகிழ்ச்சி, ஜெயா.
//கோபு அண்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//
எனக்கு உங்க வாழ்த்தெல்லாம் வேண்டாம். அந்த நெய்யில் செய்த, மிருதுவான, உதுரு உதுரான சீர் அதிரஸமும், மிகப்பெரிய முரட்டு சீர் லாடும், வாயில் போட்டால் கரையக்கூடிய ஐந்து சுற்று சீர் முறுக்கும் - தலா இரு டஜன் மட்டும் அனுப்பி வைக்கவும். போதும். :)
கமிட் செய்து மூன்று வருஷங்களுக்கு மேல் ஆச்சு .... தெரியுமோ?
http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html
கதைச்சுருக்கமே கதையை ஈசியாக புரிந்து கொள்ளும்படியாக இருக்கிறது.. ஜெயஸ்ரீ..அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஆல் இஸ் வெல்....... April 30, 2017 at 5:22 PM
நீக்குவாங்கோ அமைதிப்புறாவே, வணக்கம்.
//கதைச்சுருக்கமே கதையை ஈசியாக புரிந்து கொள்ளும்படியாக இருக்கிறது.. ஜெயஸ்ரீ.. அவர்களுக்கு வாழ்த்துகள்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
அன்பின் ஆல் இஸ் வெல் அவர்களுக்கு,
நீக்குதங்களின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
தட்டச்சில் தவறு ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
தினத்துகக்கும் ஒரு...ஒரு..பதிவா... கதை சுருக்கமும் போட்டுட்டிங்க. நல்லா இருக்குது... ஜெயஸ்ரீ மேடம்...வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅன்பின் சிப்பிக்குள் முத்து,
நீக்குதங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களும் எனது மனமார்ந்த நன்றிகள் .
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
சிப்பிக்குள் முத்து. April 30, 2017 at 5:54 PM
நீக்குவாங்கோ முன்னா-மீனா-மெஹர்-மாமீஈஈஈஈஈ, வணக்கம்மா.
//தினத்துக்கும் ஒரு... ஒரு... பதிவா...//
அப்படியெல்லாம் இல்லை. எங்கள் கல்யாணங்களில் முதல் நாள் இரவு போலவே மறுநாள் இரவும் ஜோடனைகள் செய்து மகிழ்வது + மகிழ்விப்பது வழக்கமாகும். உனக்காகவே 29.04.2017 முதல் பதிவும் 30.04.2017 இரண்டாம் பதிவும் வெளியிட்டுள்ளேனாக்கும். எங்கள் வழக்கமெல்லாம் உனக்கு எப்போ எப்படித் தெரியப்போகிறதோ? :)))))
//கதை சுருக்கமும் போட்டுட்டிங்க. நல்லா இருக்குது...//
நீ இன்னும் உன் கதைச் சுருக்கமே எனக்குச் சொல்லாமலேயே, கமுக்கமாக எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு விட்டாய்? முன்னா பார்க் ஆசாமிகளையெல்லாம் அழைத்து, ஓரிடத்தில் கூட்டி, கல்யாண விருந்தாவது வைக்கக்கூடாதோ?
//ஜெயஸ்ரீ மேடம்...வாழ்த்துகள்..//
மிகவும் பிஸியோ பிஸியான நாட்களில் இங்கு வருகை தந்து சிறப்பித்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, முன்னா-மீனா-மெஹர்-மாமி. :)))))
என்றும் அன்புடன் கோபூஜி
எப்போதுமே ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும் கதைக்கருவாக அமைந்திருப்பதால் கதையை மிக நேர்த்தியாகவும், அழகாகவும் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன். இவரை ஏற்கெனவே அறிந்திருப்பேனோ என்றும் சந்தேகம்! மற்றபடி புத்தகங்களில் படித்த நினைவு இல்லை. ஒருவேளை படித்த கதைகள் இவர் எழுதியது என்பதை அறிந்திருக்க மாட்டேன்! உங்கள் விமரிசனம் படிக்கத் தூண்டுகிறது. அறிமுகம் செய்த உங்களுக்கும் சிறப்பாகக் கதை எழுதிய ஜெயஶ்ரீ சங்கருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பின் கீதாம்மா,
நீக்குதங்களின் அளவுக்கு எனக்கு எழுதும் திறமை இல்லை
என்பது நான் அறிந்ததே. தங்களின் பல அனுபவ எழுத்துக்களை
அதிகம் படித்து (அந்தக் காலத்துச் சூழலை....அடுப்பு முதற்கொண்டு ,
கற்சட்டி, வாணலி, பல்லாங்குழி...என்று எழுத்தின் மூலம் மனக்கண்ணில்
கொண்டு வரச் செய்பவர் நீங்கள் .- அதில் உங்கள் திருமண நாட்களின் நிகழ்வுகள் கூட
இன்றும் நினைத்தால் - மனத்துள் நீங்காத இடம் பெற்றிருக்கும் எழுத்துக்கள்..)
ஆச்சரிய பட்டதுண்டு. தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. பல ஆண்டுகள்
முன்பு குழுமத்தில் இணைந்திருந்தோம். நீங்கள், தாயுமானவர், விசாலம் ராமன் அவர்கள்,
காயத்ரி, தமிழ்த்தேனீ ஐயா, கல்பட்டு நடராஜன் அவர்கள்..., மோஹனரங்கன் அவர்கள்,
.(இப்போது நினைவிற்கு வருகிறதா?) மிக்க நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
Geetha Sambasivam April 30, 2017 at 11:31 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//எப்போதுமே ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும் கதைக்கருவாக அமைந்திருப்பதால் கதையை மிக நேர்த்தியாகவும், அழகாகவும் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன். //
ஆம். அதே .... அதே ..... அப்படியே தான் .. மிக நேர்த்தியாகவும், வெகு அழகாகவும் சொல்லி இருக்கிறார்.
//இவரை ஏற்கெனவே அறிந்திருப்பேனோ என்றும் சந்தேகம்!//
மிகவும் சீனியர் பதிவரான நீங்கள் அறியாத பதிவரும் இந்த பதிவுலகினில் உண்டோ? நிச்சயம் அறிந்துதான் உள்ளீர்கள்.
//மற்றபடி புத்தகங்களில் படித்த நினைவு இல்லை. ஒருவேளை படித்த கதைகள் இவர் எழுதியது என்பதை அறிந்திருக்க மாட்டேன்!//
கரெக்ட். இப்படியும் அப்படியும் இருக்கலாம்தான். இதெல்லாம் மிகவும் சகஜம்தானே! இன்று காலையில் என்ன சாப்பிட்டோம் என்றே மறந்து விடுகிறதே. எல்லாக்கதைகளையும், எல்லோராலும், எல்லா நாட்களும் நினைவில் வைத்திருக்க முடியாதே. ஆனால் இவர்கள் எழுதியுள்ள ஒரு குறிப்பிட்ட சில கதைகளும், அதில் வரும் கதாபாத்திரங்களும் என் மனதில், மறக்கவே முடியாமல், மிக ஆழமாகப் பதிந்தே போய் விட்டன. :)))))
//உங்கள் விமரிசனம் படிக்கத் தூண்டுகிறது.//
மிகவும் சந்தோஷம். ’படிக்கத் தூண்டுகிறது’ என்று தாங்களே சொல்லியுள்ளதை என் பதிவுக்கான வெற்றியாக நான் எடுத்துக்கொண்டு மகிழ்கிறேன்.
//அறிமுகம் செய்த உங்களுக்கும் சிறப்பாகக் கதை எழுதிய ஜெயஶ்ரீ சங்கருக்கும் வாழ்த்துகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
நல்லதோர் அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் திரு வெங்கட் அவர்களுக்கு,
நீக்குமனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
வெங்கட் நாகராஜ் May 1, 2017 at 10:04 AM
நீக்குவாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.
//நல்லதோர் அறிமுகம். நன்றி.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி.
அருமையான மதிப்புரை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் .
ஜெயஸ்ரீ சங்க்கருக்கு வாழ்த்துக்கள். கதை நன்றாக இருக்கிறது. தன் குடும்பத்தின் நன்மைக்காக மீண்டும் பயணம் செய்வார் போல !
அன்பின் கோமதி அரசு அவர்களுக்கு,
நீக்குதங்களின் வரவிற்கு நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
கோமதி அரசு May 1, 2017 at 4:53 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//அருமையான மதிப்புரை. வாழ்த்துக்கள்.//
மிக்க மகிழ்ச்சி, மேடம்.
//ஜெயஸ்ரீ சங்க்கருக்கு வாழ்த்துக்கள். கதை நன்றாக இருக்கிறது.//
மிகவும் சந்தோஷம் மேடம்.
//தன் குடும்பத்தின் நன்மைக்காக மீண்டும் பயணம் செய்வார் போல!//
இருக்கலாம். முழுக்கதையையும் படித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். யார் யாருக்கோ இதுவரை தாகம் தணித்தே பழக்கமாகிவிட்ட அவர் தன் காதல் மனைவிக்காகவும், தன் சொந்தக்குழந்தைக்காகவும் தாகம் தணிக்க மாட்டாரா என நானும் எனக்குள் நினைத்துக்கொண்டேதான் படித்து முடித்தேன்.
பணம் பத்தும் செய்யுமே. இன்றைய இளமையையும், இன்று இங்கு காணவேண்டிய அன்றாட சந்தோஷங்களையும் அந்தப்பணத்தால் இனி எப்படி
அவரால் வாங்க முடியும்?
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
இவர் மட்டுமின்றி இவர் தந்தையும் தேர்ந்த எழுத்தாளர் என்று தெரிந்து கொண்டேன். தணியாத தாகங்கள் குறித்து எழுதப்பட்ட கதைச்சுருக்கத்தைப் படித்தவுடன் கதையை முழுவதுமாக வாசிக்க வேண்டும் என்ற் ஆர்வம் ஏற்பட்டது, நேரங்கிடைக்கும் போது அவசியம் வாசிப்பேன். நூலாசிரியருக்குப் பாராட்டுகள்! நல்லதொரு நூல் விமர்சனத்துக்குக் கோபு சார் அவர்களுக்குப் பாராட்டுகள்!
பதிலளிநீக்குஅன்பின் ஞா.கலையரசி அவர்களுக்கு,
நீக்குதங்களின் பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
ஞா. கலையரசி May 1, 2017 at 4:53 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//இவர் மட்டுமின்றி இவர் தந்தையும் தேர்ந்த எழுத்தாளர் என்று தெரிந்து கொண்டேன். //
இது விஷயத்தில் தங்களைப்போலவே தான் போலிருக்கு இவரும் என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். :)
//தணியாத தாகங்கள் குறித்து எழுதப்பட்ட கதைச்சுருக்கத்தைப் படித்தவுடன் கதையை முழுவதுமாக வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது, நேரங்கிடைக்கும் போது அவசியம் வாசிப்பேன்.//
தங்களின் ‘புதிய வேர்கள்’ கதை போலவே இந்த இவரின் இந்தக் கதையும் சிக்கல்-சிடுக்கு ஏதும் இல்லாமல் மென்மையாகவும் மேன்மையாகவும் கொண்டு செல்லப்பட்டுள்ள ஓர் இனிய குடும்பக்கதையாக உள்ளதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. நேரங்கிடைக்கும் போது தாங்கள் அவசியம் இதனை வாசிப்பீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
//நூலாசிரியருக்குப் பாராட்டுகள்! நல்லதொரு நூல் விமர்சனத்துக்குக் கோபு சார் அவர்களுக்குப் பாராட்டுகள்!//
தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
நன்றியுடன் கோபு
‘தணியாத தாகங்கள்’ என்ற மின்னூலுக்கான தங்களின் திறனாய்வை படித்தேன்.
பதிலளிநீக்கு//வெண்ணெய் போன்ற வழவழப்பான வெளிநாட்டுச் சாலைகளில், மிக உயர்தரமான காரினில், மிக வேகமாக அலுங்காமல் குலுங்காமல் வழுக்கி செல்வது போன்ற சுகானுபவம் கதையினைப் படிக்கும்போதே நமக்குக் கிட்டிவிடுகிறது. // என்று நீங்கள் ஆரம்பிக்கும்போதே இந்த கதையின் நடை எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது.
திரைகடலோடி திரவியம் தேடுபவனை, எப்படி குடும்பத்தினர் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை இந்த கதை சொல்கிறது எனத் தெரிகிறது.
நீங்கள் கூறியிருப்பதுபோல் என்னதான் இந்தக்கதையைப் பற்றிய கதைச்சுருக்கம் மற்றும் சிறப்ப அம்சங்களை நீங்கள் சொல்லியிருந்தாலும், அந்த முழுக்கதையையும் கதாசிரியையின் எழுத்து நடையில் படித்தால் மட்டுமே அந்த சுகானுபவத்தை முற்றிலுமாக அடையக்கூடும். என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
திருமதி ஜெயஸ்ரீ சங்கர் அவர்களின் ‘தணியாத தாகங்கள்’ என்ற மின்னூலுக்கான தங்களின் மதிப்புரை உண்மையில் அந்த நூலுக்கு மேலும் மதிப்பைக் கூட்டுகிறது என்பது உண்மை
கண்டிப்பாக இந்த கதையை புஸ்தகாவில் வாசிப்பேன். அருமையான திறனாய்வுக்கு பாராட்டுகள்!
வே.நடனசபாபதி May 1, 2017 at 5:26 PM
நீக்குவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.
//‘தணியாத தாகங்கள்’ என்ற மின்னூலுக்கான தங்களின் திறனாய்வை படித்தேன். //
மிக்க மகிழ்ச்சி, ஸார்.
//**வெண்ணெய் போன்ற வழவழப்பான வெளிநாட்டுச் சாலைகளில், மிக உயர்தரமான காரினில், மிக வேகமாக அலுங்காமல் குலுங்காமல் வழுக்கி செல்வது போன்ற சுகானுபவம் கதையினைப் படிக்கும்போதே நமக்குக் கிட்டிவிடுகிறது.** என்று நீங்கள் ஆரம்பிக்கும்போதே இந்த கதையின் நடை எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. //
மிகவும் சந்தோஷம், ஸார்.
//திரைகடலோடி திரவியம் தேடுபவனை, எப்படி குடும்பத்தினர் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை இந்த கதை சொல்கிறது எனத் தெரிகிறது. //
ஆமாம், ஸார். பல வீடுகளிலும் இன்று நடக்கும் உலக யதார்த்தங்களே, உன்னதமான கதையாக, செதுக்கிய சிலைபோல வடிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது, ஸார்.
//நீங்கள் கூறியிருப்பதுபோல் என்னதான் இந்தக்கதையைப் பற்றிய கதைச்சுருக்கம் மற்றும் சிறப்ப அம்சங்களை நீங்கள் சொல்லியிருந்தாலும், அந்த முழுக்கதையையும் கதாசிரியையின் எழுத்து நடையில் படித்தால் மட்டுமே அந்த சுகானுபவத்தை முற்றிலுமாக அடையக்கூடும். என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. //
தங்களின் இந்தப் புரிதலுக்கு மிக்க நன்றி, ஸார்.
//திருமதி ஜெயஸ்ரீ சங்கர் அவர்களின் ‘தணியாத தாகங்கள்’ என்ற மின்னூலுக்கான தங்களின் மதிப்புரை உண்மையில் அந்த நூலுக்கு மேலும் மதிப்பைக் கூட்டுகிறது என்பது உண்மை.//
ஆஹா ..... VALUE ADDED CONCEPT என நிர்வாக இயலில் தற்சமயம், மிகப் பரவலாகப் பேசி வருவதுபோன்ற தங்களின் இந்த ஒருசில வரிகளில் நான் தன்யனானேன், ஸார்.
//கண்டிப்பாக இந்த கதையை புஸ்தகாவில் வாசிப்பேன்.//
தாங்கள் சொன்னதை சொன்னபடி செய்யக்கூடியவர் என்பதை நானும் நன்கு அறிவேன், ஸார். மிக்க நன்றி ஸார்.
//அருமையான திறனாய்வுக்கு பாராட்டுகள்! //
தங்களின் அன்பான வருகைக்கும், என் திறனாய்வையே நன்கு திறனாய்வு செய்து, மிக அருமையான + பொறுமையான + ஆத்மார்த்தமான + விரிவான கருத்துக்களைச் சொல்லி பாராட்டியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
அன்பின் வே.நடனசபாபதி, அவர்களுக்கு,
நீக்குதங்களின் கருத்த்துக்களுக்கும், பாராட்டி விமர்சனம் செய்ததற்கும் மனமார்ந்த நன்றிகள்.
கோபு ஸார் அவர்களுக்கும் இதன்மூலம் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளக் கடமை பட்டுள்ளேன்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
கதை நாயகன்வெளிநாட்டில் குடும்பத்தினர் சந்தோஷத்துக்காக இளமையை தொலைத்து தன் சந்தோஷத்தை தொலைத்து பின்பு தேட முயற்சிக்கும் கதை முன்னுரை அருமை பகிர்வுக்கு நன்றி .ஜெயஸ்ரீ அவர்களுக்கு பாராட்டுக்களும் பகிர்ந்த உங்களுக்கு நன்றிகளும்
பதிலளிநீக்குAngelin May 1, 2017 at 6:53 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//கதை நாயகன் வெளிநாட்டில் குடும்பத்தினர் சந்தோஷத்துக்காக, இளமையை தொலைத்து, தன் சந்தோஷத்தை தொலைத்து, பின்பு தேட முயற்சிக்கும் கதை முன்னுரை அருமை. பகிர்வுக்கு நன்றி.//
மிக அழகாக ரத்தினச்சுருக்கமாகச் சொல்லி அசத்தி விட்டீர்கள். புரிதலுக்கு நன்றி.
//ஜெயஸ்ரீ அவர்களுக்கு பாராட்டுக்களும், பகிர்ந்த உங்களுக்கு நன்றிகளும்//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்பின் ஏஞ்சலின் அவர்களுக்கு,
நீக்குதங்களின் பாராட்டுதலுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
கதையின் யதார்த்தமான ஓட்டத்தையும்,அழகிய பாணியையும் சிறப்பாக விளக்கிப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள்.மின்னூலுக்கு நான் புதியவன்.பார்க்கிறேன்
பதிலளிநீக்குசென்னை பித்தன் May 2, 2017 at 1:20 PM
நீக்குவாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.
//கதையின் யதார்த்தமான ஓட்டத்தையும், அழகிய பாணியையும் சிறப்பாக விளக்கிப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள். மின்னூலுக்கு நான் புதியவன். பார்க்கிறேன்.//
தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
அன்பின் சென்னை பித்தன் அவர்களுக்கு,
நீக்குதங்களின் மேலான பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
தணியாத தாகங்கள் கதைச்சுருக்கமே பல நிஜ கதைகளை ஞாபகப்படுத்துகிறது. பெற்றோர்கள்,உடன்பிறந்தவர்கள் எல்லோரின் தாகங்கள் ,பின் தனது குடும்ப சூழ்நிலை என்று கதை பயணிக்கும் என நினைக்கிறேன். உங்களின் விமரிசனம் படித்த பின் முழுக்கதையும் படிக்க மிக்க ஆவல். பாராட்டுகள் கதாசிரியை அவர்களுக்கு. உங்களுக்கும். அன்புடன்
பதிலளிநீக்குகாமாட்சி May 2, 2017 at 3:57 PM
நீக்குவாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.
//தணியாத தாகங்கள் கதைச்சுருக்கமே பல நிஜ கதைகளை ஞாபகப்படுத்துகிறது. பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் எல்லோரின் தாகங்கள், பின் தனது குடும்ப சூழ்நிலை என்று கதை பயணிக்கும் என நினைக்கிறேன். உங்களின் விமரிசனம் படித்த பின் முழுக்கதையும் படிக்க மிக்க ஆவல். பாராட்டுகள் கதாசிரியை அவர்களுக்கு. உங்களுக்கும். அன்புடன்//
தங்களின் அன்பான வருகைக்கும், அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த கருத்துக்களுக்கும், முழுக்கதையையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதாகச் சொல்லியுள்ளதற்கும், இருவருக்குமான தங்களின் தங்கமான பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி.
அன்பான காமாட்சி அவர்களுக்கு,
நீக்குநமஸ்காரங்கள். தங்களின் நிறைந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
நமக்கு நன்கு பழகிய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட கதையாகத் தெரிகிறது. விரைவில் படிப்பேன். கருத்திடுவேன்.
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா நியூஜெர்சி
Chellappa Yagyaswamy May 2, 2017 at 9:31 PM
நீக்குவாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.
//நமக்கு நன்கு பழகிய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட கதையாகத் தெரிகிறது. விரைவில் படிப்பேன். கருத்திடுவேன். - -இராய செல்லப்பா நியூஜெர்சி//
வெரி குட். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.
அன்பின் இராய செல்லப்பா அவர்களுக்கு,
நீக்குதங்களின் மேலான கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த
பாராட்டுக்கள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
வெண்ணெய் போன்ற வழவழப்பான வெளிநாட்டுச் சாலைகளில், மிக உயர்தரமான காரினில், மிக வேகமாக அலுங்காமல் குலுங்காமல் வழுக்கி செல்வது போன்ற சுகானுபவம் கதையினைப் படிக்கும்போதே நமக்குக் கிட்டிவிடுகிறது. //
பதிலளிநீக்குமிக நல்லதொரு கதையாக அமைந்துள்ள இந்த மின்னூலின் விலை மிகவும் மலிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரோட்டோரக்கடையில் ஒரேயொரு இட்லியும், ஒரு கப் காஃபியும் சாப்பிடக்கூடிய விலை மட்டும்தான்.
திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் இந்த மின்னூலை வாங்கிப்படித்து முடித்து விட்டால், எங்கட வீட்டுக்கல்யாணங்களில் படா-கானா விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சியும் மயக்கமும் உண்டாகிவிடும். ஆஹ்ஹாஹ்ஹா!//
பாயாசம் ஒட்டுமொத்தமாக
மிக மிக ருசியாக இருந்தாலும்
சில வேளைகளில் அதில் உள்ள
நெய்யில் வறுத்த முந்திரியைத்
தனியாக சுவைத்துப் பார்ப்பதில்
உள்ள சுகம் மற்றும் சுவை
ருசித்துப் பார்த்தால்தான் தெரியும்
அந்த வகையில் மிகச் சிறப்பான
விமர்சனப்பதிவில்,கதையைப் படிக்கப்
பெறும் சுகானுபவம், அதுவும்
ஆகச் சிறந்த விலையில், கூடுதல்
மதிப்பில் எனச் சொல்லிப்போனவிதம்
அருமையிலும் அருமை
(நெட் பாங்கிங் பயன்படுத்தாததால்
இப்போது அமெரிக்காவில் இருந்து
வாங்கிப் படிக்க இயலாத சூழல்
இந்தியா திரும்பியதும் வாங்கிப்படிக்க
வேண்டிய நூல்களின் பட்டியலில்
நீங்கள் விமர்சனம் செய்துள்ள நூல்கள்
ஏற்கெனவே இடம்பெற்றுவிட்டன )
அற்புதமான விமர்சனத்திற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Ramani S May 27, 2017 at 5:41 PM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
**வெண்ணெய் போன்ற வழவழப்பான வெளிநாட்டுச் சாலைகளில், மிக உயர்தரமான காரினில், மிக வேகமாக அலுங்காமல் குலுங்காமல் வழுக்கி செல்வது போன்ற சுகானுபவம் கதையினைப் படிக்கும்போதே நமக்குக் கிட்டிவிடுகிறது.**
**மிக நல்லதொரு கதையாக அமைந்துள்ள இந்த மின்னூலின் விலை மிகவும் மலிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரோட்டோரக்கடையில் ஒரேயொரு இட்லியும், ஒரு கப் காஃபியும் சாப்பிடக்கூடிய விலை மட்டும்தான்.**
**திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் இந்த மின்னூலை வாங்கிப்படித்து முடித்து விட்டால், எங்கட வீட்டுக்கல்யாணங்களில் படா-கானா விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சியும் மயக்கமும் உண்டாகிவிடும். ஆஹ்ஹாஹ்ஹா!**
//பாயாசம் ஒட்டுமொத்தமாக, மிக மிக ருசியாக இருந்தாலும், சில வேளைகளில் அதில் உள்ள நெய்யில் வறுத்த முந்திரியைத் தனியாக சுவைத்துப் பார்ப்பதில் உள்ள சுகம் மற்றும் சுவை ருசித்துப் பார்த்தால்தான் தெரியும். அந்த வகையில் மிகச் சிறப்பான விமர்சனப்பதிவில்,கதையைப் படிக்கப்பெறும் சுகானுபவம், அதுவும் ஆகச் சிறந்த விலையில், கூடுதல் மதிப்பில் எனச் சொல்லிப்போனவிதம் அருமையிலும் அருமை.//
மிக்க மகிழ்ச்சி, ஸார்.
(நெட் பாங்கிங் பயன்படுத்தாததால் இப்போது அமெரிக்காவில் இருந்து வாங்கிப் படிக்க இயலாத சூழல் இந்தியா திரும்பியதும் வாங்கிப்படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் நீங்கள் விமர்சனம் செய்துள்ள நூல்கள் ஏற்கெனவே இடம்பெற்றுவிட்டன )
மிகவும் சந்தோஷம், ஸார்.
//அற்புதமான விமர்சனத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//
இந்த என் மிகச் சிறிய தொடர் பதிவுகள் ஏழுக்கும் தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஆழ்ந்த கருத்துக்களை அளித்து, ஊக்கமும் உற்சாகவும் கொடுத்து மகிழ்வித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். - அன்புடன் VGK