அன்புடையீர்,
இப்போது
உறவுகள்
செயல் வீரன்
தண்டனை
படிக்க, வேடிக்கையாகவும் தமாஷாகவும் உள்ளது.
அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
சமீபத்தில் ‘ஊஞ்சல் வலைப்பதிவர்’ திருமதி. ஞா. கலையரசி அவர்கள்
எனக்கு இரு சிறுகதைத்தொகுப்பு மின்னூல்களை [1. புதைக்கப்படும் உண்மைகள், 2. புதிய வேர்கள். ] அன்பளிப்பாக அனுப்பிவைத்து, எனக்கு அவற்றைப் படிக்க வாய்ப்பு அளித்துள்ளார்கள்.
11.10.2015 புதுக்கோட்டையில் நடந்த
வலைப்பதிவர் திருவிழா மேடையில்
பரிசு பெறும் வலைப்பதிவர்
திருமதி. ஞா. கலையரசி அவர்கள்
இவ்வாறு தன் மின்னூல்களை எனக்கு அன்பளிப்பாக அளித்து படிக்க வாய்ப்பளித்துள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு முதற்கண் என் அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
’புதிய வேர்கள்’
மின்னூல் பற்றி என்னுடைய கருத்துக்களை
ஏற்கனவே சென்ற பதிவினில் வெளியிட்டிருந்தேன்.
அதற்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/ 2017/04/blog-post_21.html
மின்னூல் பற்றி என்னுடைய கருத்துக்களை
ஏற்கனவே சென்ற பதிவினில் வெளியிட்டிருந்தேன்.
அதற்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/
இப்போது
என் பார்வையில்
’புதைக்கப்படும் உண்மைகள்’
மின்னூல்
இதிலும் மொத்தம் பத்து கதைகள் இடம் பெற்றுள்ளன. (1) அன்னையர் தினம் (2) உண்ணாவிரதம் (3) உறவுகள் (4) ஒரு சொட்டுக் கண்ணீர் (5) செயல் வீரன் (6) தண்டனை (7) தீபாவளி உடை - தலைமுறை இடைவெளி (8) நம்பிக்கை (9) புதைக்கப்படும் உண்மைகள் (10) பெண்ணெனும் இயந்திரம்.
10.12.2012 வல்லமையில் வெளிவந்துள்ளது.
அன்னையர் தினம்:
10.12.2012 வல்லமையில் வெளிவந்துள்ளது.
அன்னையர் தினம் என்பது இதன் தலைப்பாகினும், இதில் வரும் தந்தையர் கதாபாத்திரம் படிக்கும் நம் நெஞ்சில் நிற்பதாக உள்ளது.
உண்ணாவிரதம்
23.11.2009 தமிழ் மன்றத்தில் எழுதியுள்ள கதை இது.
நகைச்சுவை நையாண்டிகளுடன், அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன.
ரஸித்துச் சிரித்து மகிழ வேண்டிய கதை. வரிக்கு வரி நகைச்சுவையும் அரசியல் கோமாளித்தனங்களும் தூக்கலாக அமைந்துள்ளன.
உறவுகள்
நெருங்கிய உறவுகள் என்று சொல்லிக்கொண்டும், நினைத்துக்கொண்டு இருப்பவர்கள், உண்மையில் ஏதேனும் ஒரு நெருக்கடி நிலை அல்லது ஆபத்து என்றால் ஓடி வந்து உதவிடுவார்களா அல்லது ஓடி ஒளிந்து தப்பித்து விடுவார்களா என்பதை உணர்வு பூர்வமாகச் சொல்லிச்செல்லும் கதை இது.
படிக்கும்போதே மிகவும் உருக்கமாகவும், மனதுக்கு வருத்தமாகவும் உள்ளது. உலக யதார்த்தங்களை மிகவும் அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.
படிக்கும்போதே மிகவும் உருக்கமாகவும், மனதுக்கு வருத்தமாகவும் உள்ளது. உலக யதார்த்தங்களை மிகவும் அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.
‘ஒரு சொட்டுக் கண்ணீர்’ கதையின் இறுதி வரிகளைப் படிக்கும்போது நம் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீரை வரவழைத்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை. பல பெண்களில் வாழ்க்கை இந்தக் கதையின் கதாநாயகி போலவே அர்த்தமில்லாமல் போய் விடுகிறது.
அவரவரவர் மனசாட்சிக்கு மட்டுமே எது நியாயம், எது அநியாயம் என்பது தெரியும்.
வதந்திகளைப் பரப்புவதும், அதனை பத்திரிகையில் செய்தியாகப் போடுவதும் சம்பந்தப்பட்ட பெண்ணை எப்படியெல்லாம் அழ வைக்கும் என்பதை உணர முடிகிறது. ஊர் வாயை நாம் எப்படி மூடுவது?
வதந்திகளைப் பரப்புவதும், அதனை பத்திரிகையில் செய்தியாகப் போடுவதும் சம்பந்தப்பட்ட பெண்ணை எப்படியெல்லாம் அழ வைக்கும் என்பதை உணர முடிகிறது. ஊர் வாயை நாம் எப்படி மூடுவது?
இதுபோன்று கொடுமையான ஒரு கணவர் இருப்பதற்கு இல்லாமலேயே இருக்கலாம்தான்.
’செத்தும் கெடுத்தான் சீதக்காதி’ என்பதற்கு உதாரணமாக கதாநாயகனை வடிவமைத்துள்ளார்கள்.
’செத்தும் கெடுத்தான் சீதக்காதி’ என்பதற்கு உதாரணமாக கதாநாயகனை வடிவமைத்துள்ளார்கள்.
செயல் வீரன்
சமுதாய சிந்தனையுடன் வெகு அழகாகவும் கச்சிதமாகவும் எழுதப்பட்டுள்ள கதை இது.
தண்டனை
ஜனவரி 2012 உயிரோசையில் எழுதப்பட்டுள்ள கதை இது.
படிப்போர் மனதை மிகவும் கலங்க வைக்கும் கதை.
ஜாதி வெறிகள் அடங்கி, திருட்டு-கொலை-கொள்ளை-வன்முறை- கற்பழிப்புகள் இல்லாத நல்லதொரு சமுதாயம் வளர வேண்டும். மனிதமனங்கள் மாற வேண்டும்.
எங்கும் மனிதாபிமானம் வளர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தாயுள்ளங்களின் தவிப்பும், மன்னித்தல் என்ற மாண்பும் கதையில் மிகவும் ஆழமாகச் சொல்லப்பட்டுள்ளன.
தீபாவளி உடை
தலைமுறை இடைவெளிகளைப் பற்றி மிகவும் யோசித்து வெகு அருமையாக எழுதப்பட்டுள்ள கதை இது. படிக்க நகைச்சுவையாகவும் உள்ளது.
தற்கால இளம் வயதினர் தங்கள் உடைகளுக்குக் கொடுத்து வரும் முக்கியத்துவம், பொறுப்பில்லாமல் இருப்பதாக, மிகவும் பொறுப்புடன் சொல்லியுள்ளார்கள்.
படிக்க, வேடிக்கையாகவும் தமாஷாகவும் உள்ளது.
நம்பிக்கை
நம்பிக்கை என்ற இந்த சிறுகதை, தன்னம்பிக்கையில்லாத சில இளைஞர்களுக்கு நிச்சயமாக தன்னபிக்கையூட்டும் வகையில் தகுந்த சிறு உதாரணங்களுடன் எழுதப்பட்டுள்ளது. அனைவரையும் சிந்திக்கவும் யோசிக்கவும் வைப்பதாக உள்ளது.
புதைக்கப்படும் உண்மைகள்
அக்டோபர் 2011 உயிரோசையில் வெளிவந்துள்ள மிகச்சிறப்பான கதை இது. தலைப்புத் தேர்வும் ... நூலுக்கு இதையே தலைப்பாகக் கொடுத்துள்ளதும் மிகவும் பொருத்தமாகவே உள்ளன.
உலகில் ஏழைகள் படும் எண்ணற்ற வேதனைகளையும், பசிக் கொடுமைகளையும், அரசியல்வாதிகள் செய்யும் அராஜகங்களையும் படிப்போர் மனதினை உருக்கும் விதமாக எழுதியுள்ளார்கள். படிக்கவே மிகவும் சோகமாகவும் வேதனையாகவும் உள்ளது.
இன்றைய பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்சனைகள். அனைத்துக் கஷ்டங்களையும், தன் மனதில் சுமந்துகொண்டு, பெரும்பாலானோர் இயந்திரமாகத்தான் செயல் பட்டு வருகிறார்கள். படிக்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.
இவளை வேலைக்குப் போகச்சொல்லி நிர்பந்தப்படுத்தியுள்ள கணவனே, இவளின் கஷ்டங்களை உணராமல் இருப்பது கொஞ்சமும் நியாயம் இல்லாமல் படிக்கும் நமக்கே எரிச்சலூட்டுவதாக உள்ளது.
தனியே இரவினில் வெளியே வேலைக்குச் சென்று வரும் அவள், காலையில் தன்னிடம் என்ன சொல்ல வருகிறாள் என்பதைக்கூட பொறுமையாகக் கேட்டுக்கொள்ள முடியாத கணவன் கதாபாத்திரம் ஆண் என்ற அகம்பாவத்தையும், பொறுப்பின்மையையும், ஆணாதிக்கத்தையும் காட்டுவதாக படைக்கப்பட்டுள்ளது.
இயற்கையாகவே பெண்களுக்கு பலவித ஆபத்துகள் உள்ளன. அதுவும் வெளியே இரவு வேளையில், வேலை நிமித்தமாகவும், சம்பாத்யம் நிமித்தமாகவும், தனியாகக் கிளம்ப வேண்டியுள்ளது மிகவும் கொடுமை. குழந்தையை வீட்டில் பொறுப்பற்ற கணவனின் பாதுகாப்பினில் விட்டு விட்டுச் செல்வது மேலும் சோகம். கணவன்-மனைவிக்குள் அனுசரிப்பு இல்லாத வாழ்க்கை நிச்சயமாக வெறுத்தே போய்விடும்தான்.
இந்த மேற்படி மின்னூலை முழுவதும் ரஸித்து ருசித்துப் படிக்க விரும்புவோர் இதோ இந்த http://www.pustaka.co.in/home/ ebook/tamil/pudhaikapadum- unmaigal இணைப்புக்குப்போய் அதில் உள்ள BUY NOW என்பதைக் கிளிக் செய்தால் போதும். மின்னல் வேகத்தில் உங்களை அந்த மின்னூல் வந்தடையும்.
வாசிப்பது என்பது சுவாசிப்பது!
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!!
இன்று ஏப்ரல் 23
உலக புத்தக தினம்
வாசிக்க மறந்துடாதீங்கோ!
என்றும் அன்புடன் தங்கள்,
மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:).. அஞ்சுவைப்போல இம்முறை முடிவிலிருந்து முகவுரைக்கு படம் மட்டும் பார்த்தேன்ன்.. என் கிரேட் குரு பேப்பர் படிக்கிறார்.. சரி இருங்கோ நானும் படிச்சிட்டு வாறேன்:).
பதிலளிநீக்குathira April 23, 2017 at 1:03 AM
நீக்குவாங்கோ அதிரா, வாங்கோ, வணக்கம். தங்கள் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
//மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)..//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.
//அஞ்சுவைப்போல//
அனுமனாகிய ஆஞ்சநேயருக்கு ‘அஞ்சு’ என்ற செல்லப்பெயரும் உண்டுதான். :)
நியாயமாக புதிய வேர்கள் கீழே இருக்கணும். குரங்கார் மேலே மரத்தின் உச்சியில் இருக்கணும். ஆனாலும் புதைக்கப்படும் உண்மைகளாக, இவை தலைகீழாக மாறிப்போய், புதிய வேர்கள் உச்சிக்குப் போனதுடன், நியூஸ் பேப்பர் படிக்க வேண்டி, அந்தக் குரங்கார் கீழே இறங்கி வந்து ஒரு ஸ்டூலில் அமர்ந்துள்ளார். :)
//இம்முறை முடிவிலிருந்து முகவுரைக்கு படம் மட்டும் பார்த்தேன்ன்.. என் கிரேட் குரு பேப்பர் படிக்கிறார்..//
கிரேட் குருவின் வாலைப்பிடித்துக்கொண்டு பூசார் மேலே முகவுரைக்குத் ஏறித் தாவிச் சென்றிருப்பார் போலிருக்குது. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! வெரி குட்.
//சரி இருங்கோ நானும் படிச்சிட்டு வாறேன் :).//
விடிய விடிய நான் காத்திருந்தும், பூனை நள்ளிரவு 1.10க்குப் பிறகு வரவே இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
ஆஹா இம்முறையும் பத்துக் கதைகளையும் படிச்சு அழகாக விமர்சித்து விட்டீங்கள் வாழ்த்துக்கள்... ஓ எங்களுக்கு நாளைதான் 23.. உலக புத்தக தினமோ.. அப்போ படிக்க வேண்டிய பாக்கி எல்லாம் படிச்சு முடிச்சிடோணும்.. படித்து பதிவும் உடனுக்குடன் போட்டு விட்டீங்கள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குathira April 23, 2017 at 1:09 AM
நீக்கு//ஆஹா இம்முறையும் பத்துக் கதைகளையும் படிச்சு அழகாக விமர்சித்து விட்டீங்கள் வாழ்த்துக்கள்... ஓ எங்களுக்கு நாளைதான் 23.. உலக புத்தக தினமோ.. அப்போ படிக்க வேண்டிய பாக்கி எல்லாம் படிச்சு முடிச்சிடோணும்.. படித்து பதிவும் உடனுக்குடன் போட்டு விட்டீங்கள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான உடனடி வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், அதிரா.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி அதிரா!
நீக்கு///இந்த மேற்படி மின்னூலை முழுவதும் ரஸித்து ருசித்துப் படிக்க விரும்புவோர்//
பதிலளிநீக்குரசிக்கலாம்.. ருஸிக்கவும் முடியுமோ?:).. ஒருவேளை கோபு அண்ணன் சாப்பிட்டுப் பார்த்திருப்பாரோ புத்தகத்தை?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).
athira April 23, 2017 at 1:10 AM
நீக்கு**இந்த மேற்படி மின்னூலை முழுவதும் ரஸித்து ருசித்துப் படிக்க விரும்புவோர்**
//ரசிக்கலாம்.. ருஸிக்கவும் முடியுமோ?:).. ஒருவேளை கோபு அண்ணன் சாப்பிட்டுப் பார்த்திருப்பாரோ புத்தகத்தை?:)//
ரஸிப்பது என்பது நூலின் ஒரு பக்கமோ, ஒரு வரியோ, ஒரு வார்த்தையோ, ஒரு எழுத்தோ விடாமல் முழுவதுமாகப் படிப்பது. ருசிப்பது என்பது படித்த அவற்றை மனதிலும் மண்டையிலும் (உங்கள் பாஷையில் கிட்னியிலும்) அப்படியே ஏற்றிக்கொள்வது
//சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).//
நீங்க என்ன சொல்ல வந்தீங்கோன்னு எனக்கும் தெரியுது. அண்ணன் அப்படி என்றால் தங்கச்சி மட்டும் என்னவாம்?
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எங்கிட்டயேவா !!
புத்தகத் தினத்திற்கான
பதிலளிநீக்குசிறப்புப் பதிவாக
ஒரு சிறந்த புத்தகத்தை
மிகச் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Ramani S April 23, 2017 at 4:43 AM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
//புத்தகத் தினத்திற்கான சிறப்புப் பதிவாக ஒரு சிறந்த புத்தகத்தை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//
தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த அழகான சிறப்பான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்!
நீக்குவழக்கம் போல, ஆழமான அகலமான விமர்சனம் அளித்துள்ளீர்கள். ஞா.கலையரசி அவர்கள் மேலும் பல நூல்களை எழுதிப் புகழ் பெறட்டும்!
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா நியூஜெர்சி
Chellappa Yagyaswamy April 23, 2017 at 4:53 AM
நீக்குவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.
//வழக்கம் போல, ஆழமான அகலமான விமர்சனம் அளித்துள்ளீர்கள்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸார்.
//ஞா.கலையரசி அவர்கள் மேலும் பல நூல்களை எழுதிப் புகழ் பெறட்டும்!//
ததாஸ்து ! :)
இன்னும் பல நூல்கள் எழுதிப் புகழ் பெறட்டும் என்ற உங்கள் பாராட்டு கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றி சார்!
நீக்குநல்ல விமரிசனம். கலையரசி மேடம் கதைகளை அவர் தளத்தில் படித்திருப்பேன். வாழ்த்துகளும், . ஸார். கடைசியில் ஒரு குரங்கு செய்தித்தாள் படிப்பது போல உள்ள படத்தை ரசித்தேன்.
பதிலளிநீக்குஸ்ரீராம். April 23, 2017 at 6:11 AM
நீக்குவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.
//நல்ல விமரிசனம்.//
சந்தோஷம்.
//கலையரசி மேடம் கதைகளை அவர் தளத்தில் படித்திருப்பேன்.//
இருக்கலாம். நானும் சில கதைகளை மின்னூலில் படிக்கும்போது அவர்களின் வலைத்தளத்தினில் படித்த நினைவு எனக்கும் வந்தது.
//வாழ்த்துகளும், ஸார்.//
:) சந்தோஷம் ஸ்ரீராம் :)
//கடைசியில் ஒரு குரங்கு செய்தித்தாள் படிப்பது போல உள்ள படத்தை ரசித்தேன்.//
அதனை நேற்று 22.04.2017 மதியம் தான் என் மூன்றாவது மருமகள் என்னுடன் வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்து கொண்டிருந்தாள். இதுபோன்ற சில விசித்திரப்படங்களை மட்டும், நானும் மிகவும் ரஸித்து, என்றைக்காவது எதற்காவது பயன்படும் என்று, நான் என்னிடம் எங்காவது சேமித்து வைத்துக்கொள்வது வழக்கம்.
23/04/2017 உலக புத்தக நாள் என்று கேள்விப்பட்டதும், இந்த என் பதிவினிலேயே சூட்டோடு சூடாக இணைத்து விட்டேன். :) தாங்களும் அதனை ரஸித்ததாகச் சொன்னதில் எனக்கும் சந்தோஷம், ஸ்ரீராம்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்!
நீக்குபடங்கள் அருமை. விமர்சனம் மிக அருமை.
பதிலளிநீக்குகலையரசி அவர்களுக்கும், உங்களுக்கும்
வாழ்த்துக்கள்.
கோமதி அரசு April 23, 2017 at 9:13 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம் மேடம்.
//படங்கள் அருமை. விமர்சனம் மிக அருமை.//
ஆஹா .... அருமையான, மிக அருமையான பின்னூட்டமாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.
//கலையரசி அவர்களுக்கும், உங்களுக்கும்
வாழ்த்துக்கள்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதி அரசு!
நீக்குஆஹா
பதிலளிநீக்குசிறுகதைகளுக்கான ரத்தினச் சுருக்க விமர்சனங்கள் அருமை.
மிக்க நன்றி அண்ணா
இந்த பதிவை எல்லாம் படித்தால்தான் நிறுத்தி வைத்த எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்று தோன்றுகிறது.
திருமதி கலையரசி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
ஜெயந்தி ரமணி
Jayanthi Jaya April 23, 2017 at 12:06 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//ஆஹா .. சிறுகதைகளுக்கான ரத்தினச் சுருக்க விமர்சனங்கள் அருமை.மிக்க நன்றி அண்ணா//
மிகவும் சந்தோஷம் ஜெ :)
//இந்த பதிவை எல்லாம் படித்தால்தான் நிறுத்தி வைத்த எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்று தோன்றுகிறது.//
இனி நீங்கள் தொடருங்கோ .... நான் கொஞ்சம் நிறுத்திக் கொள்கிறேன். :)
//திருமதி கலையரசி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். நன்றியுடன் ஜெயந்தி ரமணி//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜெயா!
நீக்குநன்றாக புத்தக விமரிசனம் செய்துள்ளீர்கள். போற போக்குல, இன்னும் நிறைய புத்தகங்கள் உங்கள் விமரிசனத்துக்கு வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.
பதிலளிநீக்குஅதேபோல, நல்ல படங்களையும் கோர்த்து வெளியிட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
நெல்லைத் தமிழன் April 23, 2017 at 12:54 PM
நீக்குவாங்கோ ஸார், வணக்கம்.
//நன்றாக புத்தக விமரிசனம் செய்துள்ளீர்கள்.//
மிக்க மகிழ்ச்சி. :)
//போற போக்குல, இன்னும் நிறைய புத்தகங்கள் உங்கள் விமரிசனத்துக்கு வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.//
ஏன் ஸ்வாமீ ..... இப்படி எதையாவது சொல்லி என்னை கதிகலங்கச் செய்கிறீர்கள்? எனக்கே அந்த பயம் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது. ஏற்கனவே எங்காளு இருவரை மின்னூல் பதிவராக ஆக்க நானே நன்கு அவர்களின் திரியைத் தூண்டிவிட்டுள்ளேன். இப்போது புகைந்துகொண்டுள்ளது. அவை நன்கு பற்றிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். :))))))
//அதேபோல, நல்ல படங்களையும் கோர்த்து வெளியிட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி நெல்லை தமிழன்! "இப்போது புகைந்துகொண்டுள்ளது. அவை நன்கு பற்றிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். :)))))) என்ற கோபு சார் எழுதியிருப்பதைப் படித்து ரசித்துச் சிரித்தேன்.
நீக்குஎன்னால் நன்கு தூண்டிவிடப்பட்டு, புகைந்துகொண்டிருந்த ஒரு திரி இன்று (28.04.2017) நன்கு பற்றிக்கொண்டு வெடித்தே விட்டது.
நீக்குபலத்த சப்தத்துடன் இன்று ஒரே நாளில் மும்முறை வெடித்துச் சிதறியுள்ளது.
http://www.pustaka.co.in/home/author/jayasree-shankar
மின்னூல்கள் பட்டியலில் இன்றைய முதன்மை முன்னணி AUTHOR : திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்கள். இன்று ஒரே நாளில் வெளியாகியுள்ள மின்னூல்கள்:
1) தணியாத தாகங்கள்
2) பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்
3) தொலைத்ததும் ... கிடைத்ததும் ... !
:) :) :)
அழகான கதைகளுக்கு சுருக்கமான விமர்சனங்கள். நம்மையும் மின்னூலை படிக்கவேண்டும் என்று எண்ணம்
பதிலளிநீக்குதே ான்ற வைத்து விட்டது.
Mohamed Nizamudeen April 23, 2017 at 2:17 PM
நீக்குவாங்கோ பிரதர். வணக்கம். நலம்தானே. உங்களைப் பார்த்து பலநாட்கள் ஆச்சு. தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அழகான கதைகளுக்கு சுருக்கமான விமர்சனங்கள். நம்மையும் மின்னூலை படிக்கவேண்டும் என்று எண்ணம் தோன்ற வைத்து விட்டது.//
இறை நாட்டத்தில் தங்களுக்கு இவ்வாறு தோன்றியுள்ளது மிகவும் நல்லதொரு எண்ணமே.
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
நீக்குஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளான (World Book and Copyright Day) இன்று சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘புதைக்கப்படும் உண்மைகள்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு மின்னூலில் உள்ள கதைகளுக்கான தங்களின் இரத்தின சுருக்கத் திறனாய்வை இரசித்துப் படிக்க வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குநூலாசிரியர் ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு பிரச்சினைகளை கருப்பொருளை எடுத்து கையாண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவசியம் அவைகளைப் படிப்பேன்.
மின்னூலை திறனாய்வு செய்து தங்களுக்கு வாழ்த்துகள்! நூலாசிரியர் சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு பாராட்டுகள்
வே.நடனசபாபதி April 23, 2017 at 4:51 PM
நீக்குவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.
//உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளான (World Book and Copyright Day) இன்று//
ஆஹா, எதைச்சொன்னாலும், முழுமையாக, அழகாக, அழுத்தம் திருத்தமாக, நல்ல அத்தாரிடியாக, அதுவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லி அசத்துகிறீர்கள், ஸார். :)
//சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘புதைக்கப்படும் உண்மைகள்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு மின்னூலில் உள்ள கதைகளுக்கான தங்களின் இரத்தின சுருக்கத் திறனாய்வை இரசித்துப் படிக்க வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி!//
மிக்க மகிழ்ச்சி, ஸார்.
//நூலாசிரியர் ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு பிரச்சினைகளை கருப்பொருளை எடுத்து கையாண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவசியம் அவைகளைப் படிப்பேன். //
மிகவும் சந்தோஷம், ஸார். நீங்கள் நிச்சயமாகச் செய்வீர்கள் என்பது எனக்குத்தெரியும்.
//மின்னூலை திறனாய்வு செய்து தங்களுக்கு வாழ்த்துகள்! நூலாசிரியர் சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு பாராட்டுகள்//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
அவசியம் அவைகளைப் படிப்பேன் என்ற உங்கள் கருத்து கண்டு மகிழ்ந்தேன். உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி சார்!
நீக்குவணக்கம் கோபு சார்,
பதிலளிநீக்குஎன் இரண்டாவது மின்னூலைப் பற்றிய மதிப்புரை மிகவும் அருமை. ஒவ்வொரு கதையின் கருவைப் பற்றியும் சில வரிகளில் சிறப்பாக எடுத்துச் சொல்லி, விமர்சனத்தைப் படிப்பவர்களைப் படிக்கத்தூண்டும் விதமாய் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.
கதைகளுக்குத் தேர்ந்தெடுத்துள்ள படங்களும் மிகவும் பொருத்தம். தீபாவளி உடை தலைமுறை இடைவெளிக்கு எடுத்துப் போட்டுள்ள படங்கள், பொருத்தமோ பொருத்தம்!
ஒரு பெண்ணின் கண்ணிலிருந்து வழியும் ஒரு சொட்டுக்கண்ணீர் படமும் சிறப்பு! பட்த்தைப் பார்த்த போது என் கதாநாயகி அழுவது போலவே உணர்ந்தேன்.
அஷ்டவதானி போல நாலாப்பக்கங்களிலும் ஒரு பெண் வேலை செய்வதைப் பெண்ணெனும் இயந்திரம் என்ற கதைக்குத் தேர்ந்தெடுத்துப் போட்டுள்ளமைக்கு ஒரு ஓ போடலாம்! கதையின் சாரத்தை இந்தப் படம் அருமையாக வெளிப்படுத்துகின்றது.
உலக புத்தக தினத்தில் வாசிப்பை வலியுறுத்தும் விதமாக, என் மின்னூல் பற்றிய மதிப்புரை வெளியிட்டிருப்பதற்கு ஸ்பெஷல் நன்றி! 100% target தாண்டி இப்போது அடுத்த கட்டமாக குரங்கு படிப்பது போன்ற படத்தினை மிகவும் ரசித்தேன்.
தாங்கள் வாசித்ததோடு, உடனே அது பற்றிய மதிப்புரையையும் வெளியிட்டு என் எழுத்தைப் பெருமை படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
இங்கு வாழ்த்தும், பாராட்டும் சொல்லியிருக்கும் எல்லாச் சகோதர, சகோதரிகளுக்குக் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.
மீண்டும் நன்றி!
ஞா. கலையரசி April 23, 2017 at 7:31 PM
நீக்கு//வணக்கம் கோபு சார்,//
வாங்கோ மேடம். வணக்கம் மேடம்.
//என் இரண்டாவது மின்னூலைப் பற்றிய மதிப்புரை மிகவும் அருமை. ஒவ்வொரு கதையின் கருவைப் பற்றியும் சில வரிகளில் சிறப்பாக எடுத்துச் சொல்லி, விமர்சனத்தைப் படிப்பவர்களைப் படிக்கத்தூண்டும் விதமாய் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.//
நான் கொடுத்துள்ள மின்னூல் மதிப்புரைகள் சிறப்பாக அமைந்து, தங்களுக்கும் இவை திருப்தியாகியுள்ளதில் எனக்கும் மிகவும் சந்தோஷம், மேடம்.
//கதைகளுக்குத் தேர்ந்தெடுத்துள்ள படங்களும் மிகவும் பொருத்தம். தீபாவளி உடை தலைமுறை இடைவெளிக்கு எடுத்துப் போட்டுள்ள படங்கள், பொருத்தமோ பொருத்தம்! ஒரு பெண்ணின் கண்ணிலிருந்து வழியும் ஒரு சொட்டுக்கண்ணீர் படமும் சிறப்பு! படத்தைப் பார்த்த போது என் கதாநாயகி அழுவது போலவே உணர்ந்தேன். அஷ்டவதானி போல நாலாப்பக்கங்களிலும் ஒரு பெண் வேலை செய்வதைப் பெண்ணெனும் இயந்திரம் என்ற கதைக்குத் தேர்ந்தெடுத்துப் போட்டுள்ளமைக்கு ஒரு ஓ போடலாம்! கதையின் சாரத்தை இந்தப் படம் அருமையாக வெளிப்படுத்துகின்றது.//
ஓரளவு பொருத்தமான படங்களைத் தேர்ந்தெடுத்து ஆங்காங்கே போட்டால் தான் பதிவினைப் பார்க்கவே ஒரு பாந்தமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும் உள்ளது மேடம். 100 வார்த்தைகளில் எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதை, ஒரு படமே மிகச்சுலபமாகச் சொல்லிவிடும் அல்லவா மேடம். ஒவ்வொரு படத்தையும் குறிப்பிட்டுத் தாங்கள் பாராட்டிச் சொல்லியுள்ளது, என் தேடலுக்கும், எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.
//உலக புத்தக தினத்தில் வாசிப்பை வலியுறுத்தும் விதமாக, என் மின்னூல் பற்றிய மதிப்புரை வெளியிட்டிருப்பதற்கு ஸ்பெஷல் நன்றி!//
ஏதோ அதுபோல தானாகவே அமைந்துள்ளது மேடம். நான் ஏதும் திட்டமிட்டுச் செய்யவில்லை. உலக புத்தக தினம் என்பதே நான் இந்தப்பதிவினை நான் வெளியிடப்போகும் சில மணி நேரங்களுக்கு முன்பே எனக்கு அகஸ்மாத்தாகத் தெரியவந்தது.
//100% target தாண்டி இப்போது அடுத்த கட்டமாக குரங்கு படிப்பது போன்ற படத்தினை மிகவும் ரசித்தேன்.//
மிகப்பொருத்தமாக, மிகச்சரியான நேரத்தில், அந்தக் குரங்கார் என்னிடம் ஒரே தாவாகத் தாவி வந்து மாட்டிக்கொண்டதுதான் என் அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும். என்னைப்போலவே தாங்களும் அதனை மிகவும் ரசித்துள்ளீர்கள். எனக்கும் மிக்க மகிழ்ச்சி மேடம். :)))))
//தாங்கள் வாசித்ததோடு, உடனே அது பற்றிய மதிப்புரையையும் வெளியிட்டு என் எழுத்தைப் பெருமை படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி! இங்கு வாழ்த்தும், பாராட்டும் சொல்லியிருக்கும் எல்லாச் சகோதர, சகோதரிகளுக்குக் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் நன்றி! //
தங்களின் அன்பான வருகைக்கும், மனம் திறந்து மணம் பரப்பிச் சொல்லியுள்ள ஆத்மார்த்தக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.
என்றும் நன்றியுடன் கோபு
/வாசிப்பது என்பது சுவாசிப்பது!
பதிலளிநீக்குவாசிப்பவர்களே //
Rajeswari அக்கா அவர்கள் வலையில் அடிக்கடி பார்க்கும் வாசகம் ..உலக புத்தக தினத்துக்கு பொருத்தம் .அருமையான பத்து முத்தாந விமரிசனம் ..குடும்ப தலைவி பல கைகளுடன் உள்ள படம் அருமை
Angelin April 23, 2017 at 8:01 PM
நீக்குவாங்கோ அஞ்சூஊஊஊ, வணக்கம்.
//வாசிப்பது என்பது சுவாசிப்பது! வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!! Rajeswari அக்கா அவர்கள் வலையில் அடிக்கடி பார்க்கும் வாசகம் .. உலக புத்தக தினத்துக்கு பொருத்தம்.//
ஆமாம் அஞ்சு ! தங்களின் இந்த இனிய நினைவுகளுக்கு மிக்க நன்றி.
//அருமையான பத்து முத்தான விமரிசனம் .. //
மிக்க மகிழ்ச்சி.
//குடும்ப தலைவி பல கைகளுடன் உள்ள படம் அருமை//
மொத்தம் 10 கைகளில் ஒரு குழந்தை உள்பட பத்து விதமான பொருட்கள் + ஆயுதங்கள். அதைத்தவிர தன் வலது காலில் வாக்கூம் க்ளீனரையும் ஆபரேட் செய்கிறாள் என நினைக்கிறேன்.
மிகவும் கில்லாடியான லேடிதான். அஞ்சுவையும் அதிராவையும் சேர்த்து அஞ்சால் பெருக்கினது போல திறமையோ திறமைதான். :)))))
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அஞ்சு!
நீக்குவாசிப்பு - அது
பதிலளிநீக்குசுவாசிப்பு!
என விழித்து
சிறந்த நூல் ஆய்வு
தந்தீர்கள்
நன்றி!
//வாசிப்பு - அது சுவாசிப்பு! என விழித்து சிறந்த நூல் ஆய்வு தந்தீர்கள். நன்றி! - JYK //
நீக்குமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
@ Jeevalingam Yarlpavanan Kasirajalingam தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா!
நீக்குஓர் முக்கிய அறிவிப்பு:
பதிலளிநீக்குhttp://gokisha.blogspot.com/2017/04/blog-post_23.html
மேற்படி இணைப்பினில்
‘கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும் :)’
என்ற தலைப்பினில் எங்கட
அதிரடி
அந்தர்பல்டி
அழும்பு
அட்டகாச
அழிச்சாட்டிய
அதிரஸ
அதிரா அவர்கள்
அதாவது பிரத்தானிய மஹாராணியாரின் ஒரே வாரிசும், என்றும் ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ மட்டுமே என கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லித்திரியும் அதிரா அவர்கள்
என்னுடைய இரு மின்னூல்களை விமர்சனம் செய்து சுடச்சுட வெளியிட்டுள்ளார்கள். அவை சூடு ஆறும் முன்பு போய்ப்பார்த்து ஏதேனும் கமெண்ட்ஸ் போட்டு விட்டு வாருங்கள். :)
அன்புடன் கோபு
உங்கள் எழுத்தில் பொருட் பிழை இருக்கிறது கோபு அண்ணன்:).
நீக்குஉங்களுக்கு சந்தோசத்தில மூக்கு, காதே தெரியாமல்:) என் அம்மம்மாவின் வயசைப் போட்டிட்டீங்கோ:)...
/// 46 ஆண்டுகளுக்கு////
அதாவது என் அம்மம்மாவுக்கு 15 வயசில என் அம்மா பிறந்தா:) அம்மாவுக்கு 15 வயசில மீ பிறந்தேன்ன்:) இப்போ மீக்கு சுவீட் 16:).. அப்போ முழுவதையும் கூட்டுங்கோ... அம்மம்மாட வயசு வருகுதெல்லோ?.. எப்பூடி என் கணக்கு?:) அதிராவோ கொக்கோ:) எனக்கு கணக்கிலயும் டி ஆக்கும்:)..
athira April 24, 2017 at 8:11 PM
நீக்கு//உங்கள் எழுத்தில் பொருட் பிழை இருக்கிறது கோபு அண்ணன்:).//
அப்படியா? கோச்சுக்காதீங்கோ அதிரா. இதில் எத்தனை பிழைகள் உள்ளனவோ அத்தனை மின்னூல்களை ஃப்ரீ கிஃப்ட் ஆக நான் உங்களுக்கு அனுப்பி வைத்து விடுகிறேன். நீங்களும் அவை ஒவ்வொன்றையும் ஒரு விமர்சனமாக எழுதி பதிவு போட்டுக்கொள்ளலாம். :)
//உங்களுக்கு சந்தோசத்தில மூக்கு, காதே தெரியாமல்:)//
Mirror முன் நின்று சந்தோஷமாகப் பார்த்துட்டேன். என் மூக்கும், காதுகளும் அதனதன் இடத்தில் மட்டுமே மிகவும் அழகாக உள்ளன. :)
//என் அம்மம்மாவின் வயசைப் போட்டிட்டீங்கோ:)... ---- 46 ஆண்டுகளுக்கு ---- //
அப்போ உங்கள் அம்மம்மா உங்களை விட மிகவும் இளமையாக அழகாக இருப்பாங்களோ என்னவோ? எங்கேயோ என்னவோ எனக்கும் என் கணக்கு கழுதைபோல உதைக்குது. சரி நானும் இப்போது மீண்டும் யோசிக்கிறேன்.
//அதாவது என் அம்மம்மாவுக்கு 15 வயசில என் அம்மா பிறந்தா:) அம்மாவுக்கு 15 வயசில மீ பிறந்தேன்ன்:) இப்போ மீக்கு சுவீட் 16:).. அப்போ முழுவதையும் கூட்டுங்கோ...//
மஹாராணியார் உத்தரவுப்படி எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்துட்டேன். ஒரே கொயப்பமா இருக்குது. இதனால் உங்கட வயது மிகவும் ஏறிப்போச்சுது.
15+15+16 + 15+16 + 16 = 93 அப்போ உங்க வயசு இப்போ 93 ஆஆஆஆஆ ??????????????????????
இதை என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது அதிரா ! ஏன்னா நீங்க என்னைவிட கொஞ்சம் சின்னப்பொண்ணாத்தான் இருக்கணும் என்பது என் எண்ணம். [எண்ணங்கள் அழகானால் .......]
//அம்மம்மாட வயசு வருகுதெல்லோ?..//
உங்க அம்மம்மா வயசு பதினாறு என்று மட்டுமே கரெக்டாக எனக்கும் வருகுது.
//எப்பூடி என் கணக்கு?:) அதிராவோ கொக்கோ:) எனக்கு கணக்கிலயும் டி ஆக்கும்:)..//
உங்க கணக்கு எனக்குப் புரியலே. ஒரே கொயப்பமா இருக்குது. உங்களுக்கு 93 வயது இருக்கவே முடியாது என உறுதியாக நான் நம்புகிறேன்.
எதற்கும் எங்கட அஞ்சு வரட்டும். இந்த நம் கணக்குப் பஞ்சாயத்துக்குத் தீர்ப்பு சொல்லட்டும்.
அஞ்சூஊஊஊ உடனே ஓடியாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)
///நீங்களும் அவை ஒவ்வொன்றையும் ஒரு விமர்சனமாக எழுதி பதிவு போட்டுக்கொள்ளலாம். :)//
நீக்குhttps://pbs.twimg.com/media/C6PkpoBXEAAMlWy.jpg
///அஞ்சூஊஊஊ உடனே ஓடியாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பூடிக் கூப்பிட்டால்.. அஞ்சு தடக்கி விழுந்திட்டால்?? பிறகு என்னை எல்லோ போலீஸ் பிடிக்கும்:) சாட்சிக்கு:)..
https://pbs.twimg.com/media/C6PkpoBXEAAMlWy.jpg
நீக்குஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... பூனை தன் தலை தப்பினால் போதும் என தலைதெறிக்க ஓடுது, அதிரா. நல்ல பொருத்தமான படம்தான். கர்ர்ர்ர்ர்ர்
**அஞ்சூஊஊஊ உடனே ஓடியாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)**
நீக்கு//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பூடிக் கூப்பிட்டால்.. அஞ்சு தடக்கி விழுந்திட்டால்?? பிறகு என்னை எல்லோ போலீஸ் பிடிக்கும்:) சாட்சிக்கு:)..//
அஞ்சூ வெயிட் வெறும் 57 கிலோ மட்டுமே என்றும், அதிரா போல பொதபொதன்னு இல்லாமல் படு ஸ்லிம்மாக உடம்பை மெயிண்டைன் பண்ணி வருவதாகவும், ஏதோ போலியோ அட்டாக் .. ஸாரி .. டங் ஸ்லிப் .. பேலியோ பயணம் என்ற தீர்த்த யாத்திரை செல்வதாகவும் இன்று ஒரு பதிவு http://kaagidhapookal.blogspot.com/2017/04/blog-post_24.html போட்டிருக்காங்களே .... அப்போ அதெல்லாம் சுத்த ஹம்பக் + பொய் என்று சொல்றீங்களா?
எனக்குத் தெரிந்து எங்கட அஞ்சு ஒருபோதும் பொய் சொல்லவே மாட்டாங்கோ. மிகவும் நல்லவங்களாக்கும்.
இத்தொகுப்பில் உள்ள கதைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.. அன்னையர் தினம் கதையில் வரும் தந்தை கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டிருப்பதிலேயே தங்களுடைய தேர்ந்த வாசிப்பும் நுண்ணிய கவனிப்பும் தெரிகிறது. அக்கதையின் ஆணிவேரே தந்தை கதாபாத்திரம்தான். மிகவும் கவர்ந்த கதை ஒரு சொட்டுக்கண்ணீர்.. இங்கே படத்துடன் அதைக் குறித்த விமர்சனம் மனந்தொடுகிறது. தீபாவளி உடை குறித்த கலையரசி அக்காவின் கதை ஒருபுறம் அசத்தல் என்றால் அதற்கான தங்கள் படங்கள் தெரிவு இன்னொருபுறம் அசத்தல். சிறப்பான விமர்சனப் பதிவுக்குப் பாராட்டுகள் கோபு சார். கலையரசி அக்காவுக்கு அன்பான வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகீத மஞ்சரி April 26, 2017 at 4:31 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//இத்தொகுப்பில் உள்ள கதைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.. அன்னையர் தினம் கதையில் வரும் தந்தை கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டிருப்பதிலேயே தங்களுடைய தேர்ந்த வாசிப்பும் நுண்ணிய கவனிப்பும் தெரிகிறது. அக்கதையின் ஆணிவேரே தந்தை கதாபாத்திரம்தான். மிகவும் கவர்ந்த கதை ஒரு சொட்டுக்கண்ணீர்.. இங்கே படத்துடன் அதைக் குறித்த விமர்சனம் மனந்தொடுகிறது. தீபாவளி உடை குறித்த கலையரசி அக்காவின் கதை ஒருபுறம் அசத்தல் என்றால் அதற்கான தங்கள் படங்கள் தெரிவு இன்னொருபுறம் அசத்தல். சிறப்பான விமர்சனப் பதிவுக்குப் பாராட்டுகள் கோபு சார். கலையரசி அக்காவுக்கு அன்பான வாழ்த்துகள்.//
தங்களின் வருகையினால் மட்டுமே இந்த என் பதிவு
ஓர் பூர்ணத்துவம் அடைந்துள்ளதுபோல எண்ணி மகிழ்கிறேன். :)
தங்களின் அன்பான வருகைக்கும், நுண்ணிய + ஆழமான + ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
அன்புடன் கோபு
வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி கீதா!
நீக்குபுத்தக தினத்துக்கான சிறப்புப் பகிர்வு மிக சிறப்பு ஐயா...
பதிலளிநீக்குஇளைஞர்களின் உடை...
கேரளாவில் 100% எழுத்தறிவு...
பெண் என்னும் இயந்திரம்...
உறவுகள்...
ஒரு சொட்டுக் கண்ணீர் என மிகச் சிறப்பான பார்வை.
பரிவை சே.குமார் April 27, 2017 at 8:32 AM
நீக்கு//புத்தக தினத்துக்கான சிறப்புப் பகிர்வு மிக சிறப்பு ஐயா... இளைஞர்களின் உடை... கேரளாவில் 100% எழுத்தறிவு... பெண் என்னும் இயந்திரம்... உறவுகள்..
ஒரு சொட்டுக் கண்ணீர் என மிகச் சிறப்பான பார்வை.//
இந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்புப் பார்வையுடன் கூடிய அழகான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். மிக்க மகிழ்ச்சி :)
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி குமார்!
நீக்குபுத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமரிசனம். தேர்ந்த எழுத்தாளர்கள் எழுதுவது எப்போதுமே படிக்கப் படிக்க இன்பம் தான்.
பதிலளிநீக்குGeetha Sambasivam April 27, 2017 at 6:58 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமரிசனம்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
//தேர்ந்த எழுத்தாளர்கள் எழுதுவது எப்போதுமே படிக்கப் படிக்க இன்பம் தான்.//
கரெக்ட். இந்த நூலாசிரியர் ஒரு தேர்ந்த எழுத்தாளர் மட்டுமே. :)
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி கீதா!
நீக்குகலையாசியின் இரு மின்னூல் கதைகளுக்கும் பொருத்தமான விமர்சனம் செய்திருக்கிறீர்கள் ; சிரமம் பாராமல் படங்களைத் தேடிப்பிடித்து வெளியிட்டிருக்கிறீர்கள் . பாராட்டுகிறேன் .
பதிலளிநீக்குசொ.ஞானசம்பந்தன் April 28, 2017 at 11:46 AM
நீக்குவாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.
//கலையரசியின் இரு மின்னூல் கதைகளுக்கும் பொருத்தமான விமர்சனம் செய்திருக்கிறீர்கள்;//
மிக்க மகிழ்ச்சி, ஸார். தங்களின் இந்தச் சொல்லினால் தன்யனானேன்.
//சிரமம் பாராமல் படங்களைத் தேடிப்பிடித்து வெளியிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.//
பொருத்தமான படங்களுடன் வெளியிட்டால் மட்டுமே பதிவு கவர்ச்சியுடன் ஜொலிப்பதாகவும், படிப்போரை மகிழ்விக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
தங்களின் குறிப்பிட்ட இந்தப்பாராட்டுக்கும், அன்பான வருகைக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார்.
தங்கள் வருகைக்கும், விமர்சனத்தைப் பாராட்டியதற்கும் மிகவும் நன்றி!
நீக்கு