திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்கள்
ஹைதராபாத்தில் வசித்துவரும் திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் என்ற தமிழ் வலைப்பதிவரை தங்களில் ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம்.
அவர்களின் வலைத்தளங்கள்:
- பாவை விளக்கு!
- இவர்களையும் இவர்களின் வலைத்தளங்களையும் பற்றி நான் ஏற்கனவே http://gopu1949.blogspot.in/
2015/07/35.html ’நினைவில் நிற்போர் - 35ம் திருநாள்’ என்ற என் பதிவினில் பாராட்டி அறிமுகம் செய்திருந்ததும், தங்களில் சிலருக்கு நினைவில் இருக்கலாம். - இந்த ஜெயஸ்ரீ மேடம் மிகவும் அருமையான, பொறுமையான, திறமையான மற்றும் மிகச்சிறப்பான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் ஆவார். எப்படியோ நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எங்களின் எழுத்துக்களின் மூலம் கடந்த 3-4 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறோம்.என் பதிவுகள் பக்கம்கூட இவர்களின் பின்னூட்டங்களைக் காண்பது மிகவும் அரிதாகும். தான் படித்தவற்றைப் பற்றி என்னுடன் தனியே மின்னஞ்சல் மூலம் மட்டும் விரிவாகப் பாராட்டி சிலாகித்துச் சொல்லிவிட்டுப் போவார். அதுபோல இவர் எழுதியுள்ள மிகச் சிறப்பான கதைகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்து என் கருத்துக்களைக் கேட்டு மகிழ்வார். இவர் எழுதியுள்ள பல மிகச்சிறப்பான ஆக்கங்களை ரஸித்துப்படித்து நான் சொக்கிப்போனதும் உண்டு. என்றும் என் நெஞ்சை விட்டு நீங்காத அருமையான ஆக்கங்கங்கள் அவை.நேற்று 28.04.2017 வெள்ளிக்கிழமை இவரின் மூன்று மின்னூல்கள், முதன்முதலாக நம் புஸ்தகா மின்னூல் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளன.அதில் ஒன்றான ‘தணியாத தாகங்கள்’ என்ற மின்னூலை எனக்கு நேற்று இரவே, ஓர் சோதனை முயற்சியாகவும், அன்பளிப்பாகவும் ஜெயஸ்ரீ மேடம் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள். மொத்தம் நான்கு அத்யாயங்கள் மட்டுமே உள்ள அந்த மின்னூலை, எனக்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப்பிறகு, நேற்று நள்ளிரவே ஒரே மூச்சில், ஒரு மணி நேரத்தில் நான் ரஸித்துப் படித்து முடித்து இன்புற்றேன்.இவர்களின் இந்த மின்னூல்கள் ஒவ்வொன்றையும் பற்றிய எனது ‘நூல் ஆய்வு + மதிப்புரை’யை தொடர்ச்சியாக இதன் அடுத்த பகுதிகளில் சிலாகித்துச் சொல்லலாம் என நினைத்துள்ளேன்.‘தணியாத தாகங்கள்’ என்ற தனது மின்னூலை அன்பளிப்பாக எனக்கு அனுப்பி வைத்து வாசிப்பினில் எனக்குள்ள தாகத்தினை ஓரளவுக்குத் தணித்து வைத்துள்ள, திருமதி. ஜெயஸ்ரீ மேடம் அவர்களுக்கு என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.· ’எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பதை இந்த ஜெயஸ்ரீ மேடம் எழுதியுள்ள சில ஆக்கங்களைப் படித்த பின்னரே நானும் நன்கு உணர்ந்துகொண்டுள்ளேன்.·· ’அக்ஷய திருதியை’ என்ற புண்ணிய தினமான இந்த நாளில் என்னால் இங்கு புதிய மின்னூல் ஆசிரியராக அறிமுகப்படுத்தப்படும் திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் ஆக்கங்கள் அக்ஷயமாக மேலும் மேலும் பெருகி, அவை மென்மேலும் ஏராளமான மின்னூல்களாக வெளிவர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.’அக்ஷய திருதியை’ என்ற இன்றைய விசேஷங்கள் பற்றி ஏற்கனவே என் பதிவு ஒன்றில் விரிவாகக் கூறியுள்ளேன். காணத்தவறாதீர்கள். இதோ அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/
2012/04/24042012.html - தொடரும்
- என்றும் அன்புடன் தங்கள்,
-
எமது வாழ்த்துகளும்...
பதிலளிநீக்குதங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நீக்குஅன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
KILLERGEE Devakottai April 29, 2017 at 7:59 AM
நீக்கு//எமது வாழ்த்துகளும்...//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
புதிய மின்னூல் மற்றும் ஆசிரியர அறிமுகம். உங்கள் பழைய இடுகையையும் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவந்த புத்தகத்தை உடனுக்குடன் வாசித்து விமரிசனம் எழுத ஆரம்பித்துவிட்டீர்களே. ரொம்ப சுறுசுறுப்புதான்.
கோபு ஸார் அவர்களின் சுறுசுறுப்பையும், தன்னலமற்ற குணத்தையும்
நீக்குஉணரும் பொழுது எனக்கும் ஆச்சரியமாகவே உள்ளது. நன்றி. அதற்கான
தனிப்பதிவை நான் எதிர்பார்க்கவே இல்லை. புஸ்தகா வில் இவரது
கதைகளை படித்ததும், அவர்களை தொடர்பு கொண்ட ஒரே மாதத்தில்
எனது புத்தகம் வெளியிட்டு விட்டார்கள். அதை இவருக்கு அனுப்பி வைத்தேன்.
அனுப்பும் போது மனத்துள் ஒரு எண்ணம் .இவரது கதைகள் பல அங்கே
புத்தகமாய் மின்னிக் கொண்டிருக்கையில், எனது இந்தக் கதையை இவர்
படிப்பார் என்று கூட நினைக்கவில்லை.இணையத்தில் இவர் தனி
வானம். நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
நெல்லைத் தமிழன் April 29, 2017 at 7:59 AM
நீக்குவாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.
//புதிய மின்னூல் மற்றும் ஆசிரியர் அறிமுகம். உங்கள் பழைய இடுகையையும் பார்க்கிறேன்.//
பாருங்கோ .... பாருங்கோ .... மிக்க மகிழ்ச்சி.
//வந்த புத்தகத்தை உடனுக்குடன் வாசித்து விமரிசனம் எழுத ஆரம்பித்துவிட்டீர்களே. ரொம்ப சுறுசுறுப்புதான்.//
உலக மஹா சோம்பேறியான என்னையே அந்த அளவுக்கு பேரெழுச்சி கொடுத்து எழுப்பி விட்டுள்ளது நம் பிரபல எழுத்தாளர் ஜெயஸ்ரீ அவர்களின் மிக அருமையான எழுத்துக்கள்.
ஆரம்ப முதல்பக்க எழுத்துக்களிலேயே, சும்மா நிறைய சொக்குப்பொடி தூவி, GOOD START கொடுத்து மயக்கியுள்ளார்கள். :)
34 years aa. ee yappa. aacharyama irukku :) vaazththukal iruvarukkum. iruvarin min noolgalum perum pugalum pera vaazththukal.
பதிலளிநீக்குen laptop il online il tamil adithal etho font maruthu. so tanglish il adithulen mannikavum VGK sir :)
கோபு ஸார் அவர்களின் சுறுசுறுப்பையும், தன்னலமற்ற குணத்தையும்
நீக்குஉணரும் பொழுது எனக்கும் ஆச்சரியமாகவே உள்ளது. நன்றி. அதற்கான
தனிப்பதிவை நான் எதிர்பார்க்கவே இல்லை. புஸ்தகா வில் இவரது
கதைகளை படித்ததும், அவர்களை தொடர்பு கொண்ட ஒரே மாதத்தில்
எனது புத்தகம் வெளியிட்டு விட்டார்கள். அதை இவருக்கு அனுப்பி வைத்தேன்.
அனுப்பும் போது மனத்துள் ஒரு எண்ணம் .இவரது கதைகள் பல அங்கே
புத்தகமாய் மின்னிக் கொண்டிருக்கையில், எனது இந்தக் கதையை இவர்
படிப்பார் என்று கூட நினைக்கவில்லை.இணையத்தில் இவர் தனி
வானம். நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
Thenammai Lakshmanan April 29, 2017 at 9:27 AM
நீக்குவாங்கோ ஹனி மேடம், வணக்கம். என் காட்டில் இன்று இங்கு தேன் மழை பொழிந்துள்ளதை என் பாக்யமாக நினைத்து மகிழ்கிறேன்.
//34 years aa. ee yappa. aacharyama irukku :) vaazththukal iruvarukkum. iruvarin min noolgalum perum pugalum pera vaazththukal. 34 வருஷங்களா - அடேங்கப்பா .. ஆச்சர்யமா இருக்கு .. வாழ்த்துகள் இருவருக்கும். இருவரின் மின்னூல்களும் பேரும் புகழும் பெற வாழ்த்துகள்.//
அடடா, 34 வருடங்கள் எல்லாம் இல்லை ஹனி மேடம். கடந்த மூன்று நான்கு வருடங்கள் மட்டுமே.
[எங்களுக்கு இன்னும் வயசே 34 ஆகவில்லையாக்கும் .... :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா :) ]
//en laptop il online il tamil adithal etho font maruthu. so tanglish il adithulen mannikavum VGK sir :) என் லாப்டாப்பில் ஆன்லைனில் தமிழ் அடித்தால் ஏதேதோ ஃபாண்ட் மாறுது. அதனால் தங்க்லீஷில் அடித்துள்ளேன் .. மன்னிக்கவும் விஜிகே சார்//
ஆண் லைனில் அடிக்காமல், ஒரு பெண்ணாக லக்ஷணமாக பெண் லைனில் அடித்துப்பாருங்கோ. சரியாக வரும்.
அதெல்லாம் மன்னிக்கவெல்லாம் முடியாதாக்கும். மீண்டும் ஆன்லைன் இல்லாமல் பெண் லைனில் முயற்சிசெய்து தமிழ்ப் பின்னூட்டத்துடன் வாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
ஆஹ்ஹாஹ்ஹா ! :) மிக்க நன்றி, ஹனி மேடம்.
haha inum sariya varala sir. en pasangka veetuku varumpothu time kidaithal enakkaaga periya manasu panni sari seithu kodupangka. athuvarai ithey imsaithan ugnkalukku haahaahaa. :)
நீக்குOK ..... OK ..... Honey Madam. No problem at all.
நீக்குDon't worry & Be Happy !
பெரிப்பா திறமையானவர்களை பாராட்டுவதுடன் நாங்க எல்லாருமே அவர்களைத் தெரிந்து கொள்ள பதிவாகவே போடுறீங்களே. ரொம்ப நன்னா இருக்கு...
பதிலளிநீக்குஎனக்கு ஆச்சரியம் தான். அவரது எண்ணம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.
நீக்குநன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
happy April 29, 2017 at 9:29 AM
நீக்குவாடா ... என் செல்லக்குழந்தாய் ... ஹாப்பி. உன்னைப் பார்த்தால் மட்டுமே என் மனசுக்கு ரொம்பவும் ஹாப்பியாக உள்ளது. :)
//பெரிப்பா திறமையானவர்களை பாராட்டுவதுடன் நாங்க எல்லாருமே அவர்களைத் தெரிந்து கொள்ள பதிவாகவே போடுறீங்களே. ரொம்ப நன்னா இருக்கு...//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி....டா, ஹாப்பி.
பிரியமுள்ள பெரிப்பா
கோபூஜி உங்க சுறுசுறுப்ப பாத்தா பொறாமையா இருக்குது.. நானும் உங்களுக்கு மெயில் அனுப்புணமென்னு பத்துநாளா ட்ரை பண்ணுறேன்.. எங்க.. வேலை விட்டு வந்தா ஒரே சோம்பேறி தனம் வந்துடுதே. அதிரா மேடம் பதிவுலயே என்னை ஒருவழி பண்ணிட்டிங்க.. இங்கயும் நானு எதயாவது சொல்ல போக நீங்க வரிசையா அர்ச்சனை பண்ணுவிங்க.... கொழுப்பெடுத்த குந்தாணி...வெலமோருல வெண்ண எடுக்கறவ... எக்ஸட்ரா....எக்ஸட்ரா....)))))
பதிலளிநீக்குநிஜம்மா.....பதிலுக்கு பதில் போடுவதே சோம்பேறித் தனத்தை கொஞ்சம் தள்ளி
நீக்குவைத்து விட்டு, நேரம் ஒதுக்குவது பெரும் பாடாக இருக்கிறது. கோபு ஸார் அநேகமா
பதிவுகளுக்கு வரும் பின்னூட்டம் அதற்கு அவர் பதில் என்று அசத்துவார்...நம்மால்
முடியாதுப்பா....இப்பவே கொட்டாவி வரது . நீங்களும் ஹாஸ்யமா எழுதிருக்கேள்...!!
நன்றி.
சிப்பிக்குள் முத்து. April 29, 2017 at 9:35 AM
நீக்குவாம்மா .... கொ.எ.கு. & வி.மோ.வெ.எடுப்பவளே .... வணக்கம்மா.
//கோபூஜி உங்க சுறுசுறுப்ப பாத்தா பொறாமையா இருக்குது..//
உன் சோம்பேறித்தனத்தையும், சுதந்திரப்பறவையாக (FREE BIRD) நீ படு குஷியாக இருப்பதையும் பார்த்தால் எனக்கும்தான் உன் மீது மிகவும் பொறாமையாகத்தான் உள்ளது.
//நானும் உங்களுக்கு மெயில் அனுப்புணமென்னு பத்துநாளா ட்ரை பண்ணுறேன்..//
இதை நான் அப்படியே நம்பிட்டேனாக்கும்.
//எங்க.. வேலை விட்டு வந்தா ஒரே சோம்பேறி தனம் வந்துடுதே.//
அதனால் பரவாயில்லை. எப்படியோ நானும் உன்னிடமிருந்து தப்பித்துப் பிழைத்துள்ளேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)
//அதிரா மேடம் பதிவுலயே என்னை ஒருவழி பண்ணிட்டிங்க..//
அது யாரு அந்தப் புதிய மேடம் ??????
//இங்கயும் நானு எதயாவது சொல்ல போக நீங்க வரிசையா அர்ச்சனை பண்ணுவிங்க.... கொழுப்பெடுத்த குந்தாணி... வெலமோருல வெண்ண எடுக்கறவ... எக்ஸட்ரா.... எக்ஸட்ரா....)))))//
நான் என் அம்பாளாக (நம்பாளாக) நினைப்பவர்களுக்கெல்லாம் அடிக்கடி அர்ச்சனை செய்வது என் வழக்கமாகும்.
அது போகட்டும். உன்னை ’நம்பாளு’ ஒருத்தங்க கடுங்கோபத்துடன் வலை வீசித் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். வேறு எதற்கு? தன் கூரிய இரு கொம்புகளால் கொந்தி எறிய மட்டுமே.
எனவே நீயும் எதற்கும் மிகவும் ஜாக்கிரதையா இருந்துகொள்.
அன்புடன் கோபூஜி
சிப்பிக்குள் முத்து. April 29, 2017 at 9:35 AM
நீக்குஅன்புள்ள முன்னா-மீனா-மெஹர்-மாமி!
இந்த நாள் (29.04.2017) உன் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஓர் இனிய நாள் ஆகும்.
அப்படியிருந்தும் நீ இங்கு ஏதோவொரு சந்தோஷ மிகுதியில் ஓட்டமாக ஓடிவந்து பின்னூட்டமிட்டிருப்பது எனக்கு மிகவும் வியப்போ வியப்பாக உள்ளது.
உனக்கும் உங்காளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நல்லாசிகள். நீங்கள் இருவரும் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ ஆசீர்வதிக்கிறேன்.
MY HEARTIEST CONGRATULATIONS TO BOTH OF YOU !
பிரியமுள்ள கோபூஜி :)
//திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் ஆக்கங்கள் அக்ஷயமாக மேலும் மேலும் பெருகி, அவை மென்மேலும் ஏராளமான மின்னூல்களாக வெளிவர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//
பதிலளிநீக்குநாங்களும், உங்களுடன் வாழ்த்துகிறோம்,
வாழ்த்துக்கள்.
திரு.கோமதிஅரசு, அவர்களுக்கு,
நீக்குதங்களின் வாழ்த்துக்களுக்கு மனம் நிறை நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
கோமதி அரசு April 29, 2017 at 10:15 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
**திருமதி. ஜெயஸ்ரீ அவர்களின் ஆக்கங்கள் அக்ஷயமாக மேலும் மேலும் பெருகி, அவை மென்மேலும் ஏராளமான மின்னூல்களாக வெளிவர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.**
//நாங்களும், உங்களுடன் வாழ்த்துகிறோம்,
வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
பதிலளிநீக்குதிருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களையும் அவரது புதிய மின்னூலான ‘தணியாத தாகங்களையும் ‘அக்ஷய திருதியை’ யில் அறிமுகப்படுதியதற்கு நன்றி. திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் அவரது படைப்புகள் மின்னூல்களாக வெளிவர வாழ்த்துகள்!
எப்போது எங்கள் தாகத்தை தணிக்க இருக்கிறீர்கள்?
தங்களின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நீக்குஅன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
வே.நடனசபாபதி April 29, 2017 at 11:40 AM
நீக்குவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.
//திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களையும் அவரது புதிய மின்னூலான ‘தணியாத தாகங்களையும் ‘அக்ஷய திருதியை’ யில் அறிமுகப்படுதியதற்கு நன்றி.//
மிகவும் சந்தோஷம், ஸார்.
//திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் அவரது படைப்புகள் மின்னூல்களாக வெளிவர வாழ்த்துகள்!//
பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சி ஸார். வாழ்த்துகளுடன் சொல்லியுள்ள வரிகளுக்கு நானும் “ததாஸ்து” என்று உங்களுடன் சேர்ந்து சொல்லிக்கொள்கிறேன், ஸார்.
//எப்போது எங்கள் தாகத்தை தணிக்க இருக்கிறீர்கள்? //
எதற்காக இந்தக் கேள்வியை என்னிடம் இப்போது இங்கு கேட்டுள்ளீர்கள் என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை. இருப்பினும் தங்களின் ஆக்கங்கள் அனைத்தும் என் விருப்பப்படி மின்னூலாக முதலில் வெளிவரட்டும். பிறகு குவார்ட்டரோ, ஹாஃபோ அல்லது ஃபுல்லோ தங்கள் விருப்பப்படி கொடுத்து தாகம் தணித்திடுவோம். :)
தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.
நீக்குஐயா! எனது கேள்வியை தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். நான் ஒரு Teetotaler. நான் கேட்டதன் பொருள். எப்போது திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களின் ‘தணியாத தாகங்கள்’ என்ற நூலின் திறனாய்வை வெளியிடப் போகிறீர்கள் என்பதுதான்! பாருங்கள் இப்போது தண்ணீர் வேண்டும் என்றால் கூட தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
வே.நடனசபாபதி May 1, 2017 at 7:40 AM
நீக்குவாங்கோ ஸார். வணக்கம். மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி, ஸார். எனக்கு கடந்த 30 மணி நேரங்களாக நெட் கனெக்ஷன் கிடைக்கவில்லை. இப்போதுதான் BSNL Line man வருகை தந்து சரிசெய்து கொடுத்துவிட்டுப்போனார். அதனால் என் பதிலில் சற்றே தாமதமாகி விட்டது.
//ஐயா! எனது கேள்வியை தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்.//
மன்னித்துக்கொள்ளவும்.
//நான் ஒரு Teetotaler.//
மிக்க மகிழ்ச்சி. நானும் தங்களைப் போலவே தான்.
//நான் கேட்டதன் பொருள். எப்போது திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களின் ‘தணியாத தாகங்கள்’ என்ற நூலின் திறனாய்வை வெளியிடப் போகிறீர்கள் என்பதுதான்!//
ஆஹா, அப்படியா! நல்லவேளையாக அதனையும் நான் நேற்று காலையிலேயே வெளியிட்டு விட்டேன்.
அதன்பிறகே நெட் கிடைக்காமல் போய்விட்டது.
//பாருங்கள் இப்போது தண்ணீர் வேண்டும் என்றால் கூட தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.//
இதுபோன்றதொரு சூழலில் நாம் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.
அதனை சும்மா ஒரு விளையாட்டுக்காக மட்டுமே நான் எழுதியிருந்தேன். தயவுசெய்து தாங்கள் என்னைத் தவறாக ஏதும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அன்புடன் VGK
அனைவருக்கும் ‘அக்ஷய திருதியை’ வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
இப்பதான் ரொம்ப வருத்தமா இருக்கு. இப்படி பெண்ணா பிறந்துவிட்டோமே என்று. அடுப்படியை மருமகளிடம் கொடுத்து விட்டாலும் இந்த வடாம் போடுவது, ரெண்டு வால்களைப் பார்த்துக் கொள்வது இதிலேயே நேரம் போய் விடுகிறது. எங்கள் வீட்டுக் கணினியே என்னிடம் கோபித்துக் கொள்கிறது. என்னை ஏன் நீ சீண்டுவதே இல்லை என்று.
என்னா பேச்சுப் பேசுறீங்க ஜே மாமி?? நான் என்னைப் பெண்ணாகப் படைத்ததை நினைத்து பெருமைப்படாத நாளே இல்லை. சத்தியமாகத்தான் சொல்கிறேன், பெண்ணாக இருப்பதில் இருக்கும் மகிழ்ச்சி வேறெதிலும் இல்லை.
நீக்குச்ச்ச்ச்ச்ச்சும்மா இப்படி புலம்புவதை விட்டுவிட்டு கொம்பியூட்டரை தூசு தட்டி களம் இறங்குங்கள்.... இரவு 9-10 மணிவரை கொம்பியூட்டர் நேரம் என ஒதுக்கி வைத்து ஆரம்பியுங்கோ... ரைம் மனேஜ்மெண்ட்டைக் கடைப்பிடியுங்கோ.... உங்களால் முடியும்.
குழந்தைகளை எப்படி வளர்ப்பது, வடகம் எப்படி தட்டுவது இவற்றை எல்லாம் ரசிச்சு ரசிச்சு எழுதுங்கோ... போனால் திரும்ப வராத காலங்கள் இவை அதனால சலித்துக் கொள்ள வேண்டாம்.
விரைவில் ஜே மாமியின் மின்னூலை எதிர்பார்க்கிறோம்ம்ம்.
அன்பின் ஜெயந்தி அவர்களே,
நீக்குஆதிரா சொல்வது சரி. நேரத்தோடு போராடத் தான் வேண்டியிருக்கிறது.
என்ன செய்ய? தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
அன்பின் ஜெயந்தி அவர்களே,
நீக்குஆதிரா சொல்வது சரி. நேரத்தோடு போராடத் தான் வேண்டியிருக்கிறது.
என்ன செய்ய? தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள். விரைவில் தங்களின்
மின்னூலையும் எதிர்பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
Jayanthi Jaya April 29, 2017 at 12:30 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்.
//அனைவருக்கும் ‘அக்ஷய திருதியை’ வாழ்த்துக்கள். //
அடாடா, ஜெயமளிக்கும் அக்ஷயமான வாழ்த்துகள் அனைவருக்குமே எங்கட ஜெயாவிடமிருந்து. :)
லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து !
//திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//
மனமார்ந்த நல்வாழ்த்துகள் கூறியுள்ளவர் பெயரும், நல்வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்பவர் பெயரும் இங்கு ’ஜெய’ என்று ஆரம்பித்திருப்பதில் எனக்கோர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் உங்கள் இருவர் மட்டுமல்லாமல் எங்கள் அனைவருக்குமே ஜெயம் உண்டாகட்டும். :)
//இப்பதான் ரொம்ப வருத்தமா இருக்கு. இப்படி பெண்ணா பிறந்துவிட்டோமே என்று.//
”மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” என்ற மஹாகவி பாரதியாரின் வரிகளை, நினைத்து ஆணாய்ப் பிறந்துள்ள நான் தினமும் எனக்குள் ரொம்பவும் வருந்துவது உண்டு.
//அடுப்படியை மருமகளிடம் கொடுத்து விட்டாலும் இந்த வடாம் போடுவது, ரெண்டு வால்களைப் பார்த்துக் கொள்வது இதிலேயே நேரம் போய் விடுகிறது.//
கொடுத்து வைத்துள்ள மகராஜி நீங்கள் என்பதை என்றும் எப்போதும் மறக்க வேண்டாம், ஜெயா. இதுபோன்ற இனியதொரு கொடுப்பிணைக்காக ஏங்குபவர்கள் உலகில் மிகவும் அதிகமாக்கும்.
//எங்கள் வீட்டுக் கணினியே என்னிடம் கோபித்துக் கொள்கிறது. என்னை ஏன் நீ சீண்டுவதே இல்லை என்று.//
சீண்டவே சரிவர ஒத்துழைக்கும் ஆள் இல்லாதவர்கள்தான் (என்னைப்போல), இந்தப் பாழாய்போன கணினியைக் கட்டிக்கொண்டு சீண்ட வேண்டியதாக உள்ளது. :(
ஜெயாவுக்கு அந்தக்கவலையே இல்லாததில் எனக்கும் மகிழ்ச்சியே. :)
அன்புடன் கோபு அண்ணா
அதிரா
நீக்குஜெயஸ்ரீ ஷங்கர்
இருவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் ஊக்குவிக்கும் சொற்கள் என்னை கண்னியின் முன் இழுத்துக் கொண்டு வந்து விட்டது.
அதிரா என் வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. மீண்டும், மீண்டும் வாருங்கள்.
தோழி ஜெயஸ்ரீ ஷங்கர்
நீங்களும் தயவு செய்து என் தளத்திற்கு வாருங்கள்.
கோபு அண்ணா
உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.
என் படைப்புகளூக்கு நீங்களும் ஒரு முக்கிய காரணகர்த்தா. உங்கள் ஆதரவு என்றும் எனக்கு உண்டு.
நன்றியுடன்
ஜெயந்தி ரமணி
அன்பின் ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,
நீக்குதங்களின் வலைதளத்தில் தாங்கள் எழுதிய சில கதைகளைப் படித்தேன்.
அருமையான நடையில் மிகவும் யதார்த்தமாக எழுதி இருக்கிறீர்கள்.
குறிப்பாக, "பிளாஸ்டிக்" உபயோகத்தின் விளைவு...மனதுக்குள் ஒரு
நெகிழ்ச்சியைத் தந்தது. அருமை.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மின்னூலில் இன்னொரு பதிவர் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.
பதிலளிநீக்குஅவர் 3 புளொக்ஸ் வைத்து நடத்துகிறாரா அதுக்கும் வாழ்த்துக்கள்.
ஜெயஸ்ரீஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்... வலைப்பதிவு எழுதுறவங்க ஒவ்வொருவரா மின்னூல் பக்கம்போறாங்களே...
நீக்குஅன்பின் ஆதிரா அவர்களுக்கு,
நீக்குஎனது நெஞ்சம் நிறை நன்றிகள். முன்பொரு காலத்தில் பிளாக்ஸ் ஆரம்பிக்கத்
தெரியாத நேரத்தில் ஆரம்பித்த பிளாக்ஸ்...நானே மறந்து விட்டேன். பதிவுகள்
இல்லாத காலி பிளாட்...அவை...:),
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
அன்பின் ஷமாலின் பாஸ்கோ அவர்களுக்கு.
எப்பவும் அடுத்தது என்ன..? என்று தேடும் போது பரணில் கிடப்பதை கொண்டு என்ன செய்வது?
போன்ற கேள்வியின் விடை தான் மின்னூல். ஆதார வேர் என்றும் அப்படியே நித்தம்
உபயோகத்தில் இருக்கும். மிக்க நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
athira April 29, 2017 at 12:59 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//
தங்களின் இந்த வாழ்த்துகளுக்கு என் நன்றிகளும்.
//மின்னூலில் இன்னொரு பதிவர் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது.//
அனைவருக்கும் மகிழ்ச்சியே.
//அவர் 3 புளொக்ஸ் வைத்து நடத்துகிறாரா அதுக்கும் வாழ்த்துக்கள்.//
அபாரமான எழுத்துத் திறமைகள் வாய்ந்த அவர் மூன்று என்ன .... முப்பது வலைத்தளங்கள் கூட வைத்துக் கொள்ளலாம்தான். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
shamaine bosco April 29, 2017 at 1:45 PM
நீக்குவாங்கோ ஷாமைன்ஜி, வணக்கம்.
//ஜெயஸ்ரீஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்...//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
//வலைப்பதிவு எழுதுறவங்க ஒவ்வொருவரா மின்னூல் பக்கம்போறாங்களே...//
இந்த சீஸன் அதுபோல. வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஏதோவொரு போதையும் மயக்கமும் ஏற்படுத்தி வருகிறது இந்த மின்னூல் என்பது.
இதனால் வலையுலகமும், வலைப்பதிகளும் எந்தவிதத்திலும் பாதிக்காது. அனைவருக்கும் ஆணி வேர் அது மட்டுமே.
தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றிகள்.
அன்புடன் கிஷ்ணா(ஜா)ஜி
பதிவரின் அறிமுகத்துக்கு நன்றி ..மற்றும் திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர்அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குAngelin April 29, 2017 at 1:48 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//பதிவரின் அறிமுகத்துக்கு நன்றி ..மற்றும் திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅறிமுகங்கள் தொடரட்டும்
திரு.மது அவர்களுக்கு,
நீக்குதங்களின் வாழ்த்துக்களுக்கு மனம் நிறை நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
Mathu S April 29, 2017 at 2:32 PM
நீக்கு//ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
அறிமுகங்கள் தொடரட்டும்//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
Congrats!!
பதிலளிநீக்குஅன்பின் மிடில்கிளாஸ்மாதவி,
நீக்குபெயரில் ஒரு அழகு...! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
middleclassmadhavi April 29, 2017 at 2:44 PM
நீக்குவாங்கோ ... MCM Madam, வணக்கம்.
பெயரிலேயே ஒரு அழகுள்ளவராம் நீங்கள். அதற்கு என் முதற்கண் பாராட்டுகள் + வாழ்த்துகள்.
//Congrats!!//
Thanks a Lot, Madam ! :)
இன்னா குருஜி.....கதைவேணுமா உதைவேணுமான்னு கேட்டுபிட்டு கடய இளுத்து மூடிபோட்டீளே.... யாராச்சும் ஒங்கட கதைய படிச்சு போட்டு ஒதைஅ வந்துபிட்டாளா.... (இந்த பொண்ணோட அஅகுறும்பு தாங்இகிட ஏலலேல்லா).....))))
பதிலளிநீக்குபதிலே குறும்பு தான்.
நீக்குமிக்க நன்றிகள்..mru !
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
mru April 29, 2017 at 5:53 PM
நீக்குவாம்மா .... முருகு. வணக்கம்மா.
//இன்னா குருஜி..... கதைவேணுமா உதைவேணுமான்னு கேட்டுபிட்டு கடய இளுத்து மூடிபோட்டீளே.... யாராச்சும் ஒங்கட கதைய படிச்சு போட்டு ஒதைஅ வந்துபிட்டாளா....//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! அது ஏனோ
நம் மின்னலு-முருகு போலத் தானாகவே தோன்றி தானாகவே கொடி மின்னலு போல மறைந்துவிட்டது முருகு.
//(இந்த பொண்ணோட அஅகுறும்பு தாங்இகிட ஏலலேல்லா).....))))//
ஆமாம். இந்தப்பதிவுக்குச் சற்றும் சம்மந்தமே இல்லாத கருத்துச் சொல்லியுள்ள உன் அக்குறும்பு தாங்கிக்கிட ஏலலைதான். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! எனினும் உன் வருகைக்கு என் நன்றிகள்.
அன்புடன் குருஜி கோபு
ஜெயஸ்ரீஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.....
பதிலளிநீக்குஅன்பின் பிராப்தம் அவர்களுக்கு,
நீக்குதங்களின் மேலான வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களும் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
ப்ராப்தம் April 29, 2017 at 6:50 PM
நீக்குவாம்மா சாரூஊஊஊஊ, வணக்கம்மா.
//ஜெயஸ்ரீஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.....//
உன் அன்பான வருகைக்கும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சாரூஊஊஊ. :)
அன்புடன் கோபால்ஜி
இவருடைய பதிவுகளை நானும்
பதிலளிநீக்குவிரும்பிப் படிப்பதுண்டு
இவருடைய படைப்புகள் நூலாக
வந்திருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது
தங்கள் விமர்சனப்பதிவை
ஆவலுடன் எதிர்பார்த்து...
வாழ்த்துக்களுடன்...
அன்பின் திரு.ரமணி அவர்களுக்கு,
நீக்குதங்களின் மேலான பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
Ramani S April 29, 2017 at 11:23 PM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
//இவருடைய பதிவுகளை நானும் விரும்பிப் படிப்பதுண்டு. இவருடைய படைப்புகள் நூலாக
வந்திருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது. தங்கள் விமர்சனப்பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
வாழ்த்துக்களுடன்...//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான, ஆதரவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
மிக்க நன்றி..திரு கந்தசாமி அவர்களே,
பதிலளிநீக்குஅன்புடன்,
ஜெயஸ்ரீ ஷங்கர்
இதுவும் திறமையான எழுத்தாளர்களுக்கு ஒரு வாய்ப்புதான் பாராட்டுகளும்...வாழ்த்துகளும்..
பதிலளிநீக்குஆல் இஸ் வெல்....... April 30, 2017 at 5:26 PM
நீக்குவாங்கோ அமைதிப்புறாவே, வணக்கம்.
//இதுவும் திறமையான எழுத்தாளர்களுக்கு ஒரு வாய்ப்புதான் பாராட்டுகளும்...வாழ்த்துகளும்..//
மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
அன்பின் ஆள் ஈஸ் வெல்,
நீக்குதங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
அன்பின் ஆல் இஸ் வெல் ,
நீக்குதவறுதலாக தட்டச்சியதற்கு மன்னிக்கவும்.
நிறுத்திவிட்டேன். தங்களின் வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
ஹைதராபாத் வாசியா இவர்? எனக்குத் தெரிந்த ஜெயஶ்ரீ சிதம்பரத்தில் இருந்ததாக நினைவு. நான்கு, ஐந்து ஆண்டுகள் ஆகின்றன, இப்போது அவரை இணையத்தில் பார்ப்பதே இல்லை.
பதிலளிநீக்குGeetha Sambasivam April 30, 2017 at 11:33 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//ஹைதராபாத் வாசியா இவர்?//
தற்சமயம் ஹைதராபாத் வாசியாவார்.
//எனக்குத் தெரிந்த ஜெயஶ்ரீ சிதம்பரத்தில் இருந்ததாக நினைவு.//
தங்கள் நினைவாற்றல் என்னையும் வியக்க வைக்கிறது. அவரும் இவரும் ஒருவராகவே இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என நானும் நினைக்கிறேன். என்னிடமும் இதுபோல அவர்கள் எப்போதோ சொல்லியுள்ள நினைவு எனக்கும் வருகிறது. மேலும் இவர்களின் சில கதைகளில் சிதம்பரமும் அதன் சுற்று வட்டாரங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
அவரே வருகை தந்து தங்களின் இந்த சந்தேகத்தைப் போக்குவார் என நானும் நம்புகிறேன்.
இவ்விடம் தங்களின் அன்பான + அபூர்வ வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
//நான்கு, ஐந்து ஆண்டுகள் ஆகின்றன, இப்போது அவரை இணையத்தில் பார்ப்பதே இல்லை.//
ஆம். எப்போதாவது ஆடிக்கொருநாள் அமாவாசைக்கு ஒருநாள் மட்டுமே தன் வலைப்பதிவினில் கொஞ்சூண்டு காட்சியளிக்கிறார்கள். :)
அன்பின் கீதாம்மா,
நீக்குநீங்கள் சொல்லும் நானே...தான்..! என்ன ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. இங்கு திடீர் பிரவேசம். அகஸ்மாத்தாக
கோபு ஸார் பிள்ளையார் சுழி போட்டு அவரது வலைப்பூங்காவில் நடக்க விட்டிருக்கார். மற்றபடி, நீங்கள் எழுதிய நான் வியந்து பாராட்டிய
தங்களின் சிதம்பரம் கோயில் ஸ்தல புராணங்களை படித்துப் பாராட்டிய நினைவுகள் இன்றும் நெஞ்சோடு உள்ளது. தங்களின்
யோகா புத்தகம் ஒரு முறை ஸமார்ட் ஃ போனில் கையேடாக அப்பில் வந்தது...ஆஹா என்று நினைத்துக் கொண்டேன். தங்களின்
சாதனைகள் அபாரம். பாராட்டுக்கள்.
நன்றி
அன்போடு
ஜெயஸ்ரீ ஷங்கர்.
வாழ்த்துகள்....
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் May 1, 2017 at 11:23 AM
நீக்குவாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.
//வாழ்த்துகள்....//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
அன்பின் வெங்கட் ஜி,
நீக்குமிக்க நன்றிகள்
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
ப.கந்தசாமி April 29, 2017 at 12:46 PM
பதிலளிநீக்குவாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.
//ரசித்தேன்.//
’ரசித்தேன்’ என்ற தங்களின் ரத்தின சுருக்கமான ஒரு வார்த்தையை நானும் மிகவும் ரசித்தேன். :)
புதிய மின்னூல் ஆசிரியர் ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு பாராட்டுகள்! தொடர்ந்து பல மின்னூல்கள் அவர் வெளியிட வேண்டும் என வாழ்த்துகிறேன்! ஆண் லைனில் அடிக்காமல், ஒரு பெண்ணாக லக்ஷணமாக பெண் லைனில் அடித்துப்பாருங்கோ. சரியாக வரும். என்று தேனம்மையின் கருத்துக்குப் பதிலளித்துள்ள கோபு சாரின் காமெண்டை வெகுவாக ரசித்தேன்!
பதிலளிநீக்குஞா. கலையரசி May 1, 2017 at 4:47 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//புதிய மின்னூல் ஆசிரியர் ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு பாராட்டுகள்!//
தங்களின் தங்கமான பாராட்டுகளுக்கு மிக்க மகிழ்ச்சி மேடம்.
//தொடர்ந்து பல மின்னூல்கள் அவர் வெளியிட வேண்டும் என வாழ்த்துகிறேன்!//
ஆஹா தங்களின் இந்த வாழ்த்துகள் ஒருபுறம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் மறுபுறம் சற்றே அச்சமூட்டுவதாகவும் உள்ளது. :)
ஒவ்வொன்றையும் ஊன்றிப்படித்து நான் மதிப்புரை வழங்க வேண்டியிருக்கும் அல்லவா ! :))))))
//ஆன் லைனில் அடிக்காமல், ஒரு பெண்ணாக லக்ஷணமாக பெண் லைனில் அடித்துப்பாருங்கோ. சரியாக வரும். என்று தேனம்மையின் கருத்துக்குப் பதிலளித்துள்ள கோபு சாரின் காமெண்டை வெகுவாக ரசித்தேன்!//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எப்போதும் மிகவும் பிஸியோ பிஸியாக உள்ள நம் ஹனி மேடம் இதனைப் படித்தே இருக்க மாட்டார்கள். தாங்களாவது இதனை வெகுவாக ரசித்ததாகச் சொல்லியுள்ளது கேட்க சந்தோஷமாக உள்ளது, மேடம். மிக்க நன்றி மேடம்.
தங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
நன்றியுடன் கோபு
அன்பின் கலையரசி அவர்களே,
பதிலளிநீக்குதங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
ஜெயஸ்ரீ சங்கருக்குப் பாராட்டுகள். புத்தகங்கள் யாவையையும் படிக்க ஆசை. இன்னும் மின்னூலுக்கு சந்தா கட்டி யாவைகளையும் படிக்க ஆவன செய்ய வேண்டும். அன்புடன்
பதிலளிநீக்குகாமாட்சி May 2, 2017 at 3:44 PM
நீக்குவாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.
//ஜெயஸ்ரீ சங்கருக்குப் பாராட்டுகள். புத்தகங்கள் யாவையையும் படிக்க ஆசை. இன்னும் மின்னூலுக்கு சந்தா கட்டி யாவைகளையும் படிக்க ஆவன செய்ய வேண்டும். அன்புடன்//
தங்களின் அன்பான வருகைக்கும், படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் கூறியுள்ள கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி.
அன்புள்ள காமாட்சி மாமி அவர்களுக்கு,
நீக்குவணக்கங்கள்.
தங்களின் கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் எனது
மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
புத்தகத்தை வாங்கிப் படிக்கும் விதமாக சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவணக்கங்கள்.
நீக்குதங்களின் வாழ்த்துதலுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
வெண்ணிற புரவியில் வந்தவன்
நீக்குMay 3, 2017 at 2:07 AM
//புத்தகத்தை வாங்கிப் படிக்கும் விதமாக சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள். எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்//
வெள்ளைக்குதிரையில் ஏறி முதன் முதலாக என் வலைத்தளத்திற்கு வருகை தந்து, இந்த என் பதிவுக்குப் பின்னூட்டமிட்டு வாழ்த்தியுள்ள தங்களுக்கு என் நன்றிகள்.