About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, March 18, 2017

சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன், 81+ வயது இளைஞர்

14.03.2017 செவ்வாய்க்கிழமை மாசி+பங்குனி கூடும்
காரடையான நோன்பு விரத தினமாக நேரிட்டதாலும்
அன்று பகல் முழுவதும் பட்டினியுடன் விரதமிருந்து
மாசி மாதம் இருக்கும் போதே, அதாவது 
பிற்பகல் 4.30க்கு மேல் 4.45 மணிக்குள் 
பூஜையில் கொழுக்கட்டைகள் நைவேத்யம் செய்து, 
என் வீட்டுப் பெண்கள் கழுத்தில் சரடு கட்டிக்கொள்ள 
வேண்டியிருந்ததாலும், மறுநாள் மிகவும் டயர்ட் ஆகிவிட்டனர்.
 அதனால் மறுநாள் 15.03.2017 வருகை தந்திருந்த முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களை, மதிய உணவுக்காக, என் வீட்டின் மிக அருகே உள்ள மதுரா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்தளிக்க நேர்ந்தது. இருப்பினும், அன்றைய தினம் அங்கு அளிக்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு, தினமும் சாப்பிடும் என் வீட்டு சாப்பாட்டையும் விட மிகவும் அருமையாகவும் ருசியாகவும் இருந்ததாக என்னால் உணர முடிந்தது.

இந்த மேற்படி காரடையான் நோன்பு என்பது பற்றி மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் படங்களுடன் கூடிய என் பழைய பதிவான ‘தீர்க்க சுமங்கலி பவ!’ என்பதைக் கண்டு களிக்கவும். இதோ அதற்கான இணைப்பு:  http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_9400.html

சென்ற பதிவின் இறுதியில் நான் கொடுத்துள்ள சில கேள்விகள் இதோ:

முனைவர் பழனி கந்தசாமி ஐயா 15.03.2017 திடீரென்று
திருச்சிக்கு எதற்காக வருகை தந்திருந்தார்?

மாலை 6 மணிக்கு 
சில்க் ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன்  
மாப்பிள்ளை போல ட்ரெஸ் செய்துகொண்டு
என்னுடன் எங்கு புறப்பட்டார்?

அங்கு வந்திருந்த இதர பதிவர்கள் 
யார் யாரை இவர் சந்தித்தார்?

அங்கு மேற்கொண்டு என்னதான் நடந்தது?

போன்ற மற்ற சுவையான விபரங்களுக்கு
இப்போது நாம் விடை காண்போம்.

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு
கலைஞர் அறிவாலயம் தாண்டி எதிர்புறமாக 
அமைந்துள்ளது ’தாஜ் திருமண மஹால்’

15.03.2017 புதன்கிழமை 
மாலை 6.30 முதல் அங்கு
ஓர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 
+
மல்லடி சகோதரர்கள் குழுவினரின் 
கர்நாடக இசைக் கச்சேரிகள்  
+
இரவு டின்னர்

16.03.2017 வியாழக்கிழமை 
காலை 8 to 9 திருமணம்


மணமகள்: 
செளபாக்யவதி. 
நித்யா ராமமூர்த்தி
[நம் ’ஆரண்ய நிவாஸ்’ வலைப் பதிவர்
திரு. R. ராமமூர்த்தி அவர்களின் பெண்]
மணமகன்:
சிரஞ்சீவி: விக்னேஷ் ஸ்வாமிநாதன்

[பொண்ணு மாப்பிள்ளை மேடைக்கு வந்ததும்
 ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்து 
மகிழும் போது எடுக்கப்பட்ட படம் இது]


-oOo-

என் வீட்டிலிருந்து முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களை ஓர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அன்று மாலை 6.10 க்குப் புறப்பட்டேன். அடுத்த 10  நிமிடங்களில் திருமண மண்டபத்தை நாங்கள் அடைந்தோம்.

எங்களை அன்புடன் வரவேற்ற 
ஆரண்யநிவாஸ் தம்பதியினருடன்
முனைவர் ஐயாவும் அடியேனும்
மேடையில் மணமக்களுடன் சில BHEL நண்பர்கள் 
மண்டபத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள 
ஒரு சில கலை நுட்பமானப் பொருட்கள்
பார்வையாளர்களின் ஓர் பகுதி
பதிவர் திரு. தமிழ் இளங்கோ அவர்களுடன் 
முனைவர் கந்தசாமி ஐயா அவர்கள்
கம்பீரமான நம் முனைவர் ஐயா அவர்களின் வலது காது !

மேளம் + நாயன கோஷ்டியினர்
VGK + முனைவர் ஐயா + பால கணேஷ்
15.03.2017 இரவு டின்னர் (பஃபே சிஸ்டம்)

மேற்படி படங்களில் சிலவற்றை தன் கேமராவில் எடுத்து
எனக்கு அனுப்பி வைத்து உதவிய என் அருமை நண்பர்
திருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் நன்றிகள்.


அங்கிருந்த ஓரிரு மணி நேரங்களுக்குள், பதிவர்களும், பத்திரிகை எழுத்தாளர்களுமாக ஒரு சிலரை ஒருவருக்கொருவர் சந்திக்கவும், அறிமுகப்படுத்திக்கொள்ளவும், பேசி மகிழவும் முடிந்தது.  

அவர்களில் இப்போது என் நினைவுக்கு வருவோர்  (1) திரு. ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன் அவர்கள் (2) ஆரண்ய நிவாஸ் திரு. R. ராமமூர்த்தி (3) எல்லென் எனப்படும் திரு. R. லக்ஷ்மி நாராயணன் (4) திரு. பாஸ்கர் என்னும் கிருஷ்ணா (5) திரு. தி. தமிழ் இளங்கோ (6) திரு. பால கணேஷ் (7) வஸந்தமுல்லை திரு. ரவி  (8) அஷ்டாவதானி திருவாளர் மஹாலிங்கம் ஸார் அவர்கள் (9) முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் (10) அடியேன் VGK 

பதிவர்களும் எழுத்தாளர்களுமாகிய நாங்கள் அனைவரும் ஒன்றாக திருமண மேடையில் ஏறி தம்பதியினரை வாழ்த்தி ஆசீர்வதித்த புகைப்படம் இன்னும் எனக்கு வந்துசேரவில்லை. அதனால் அதனை இங்கு இப்போது காட்சிப்படுத்த என்னால் இயலவில்லை.

BHEL இல் என்னுடன் ஒரே இலாகாவில் வேலை பார்த்த பல்வேறு தோழர்களையும் தோழிகளையும், நீண்ட இடைவேளைக்குப்பின்  அன்று என்னால் சந்தித்துப் பேச முடிந்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். 

திரு. ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியின் மூத்த பெண் திருமணமும் இதே திருமண மண்டபத்தில் தான் 12.06.2013 அன்று நடைபெற்றது. அதைப்பற்றி நான் ஏற்கனவே என் பதிவினில் எழுதி வெளியிட்டிருந்தேன். அதற்கான இணைப்பு இதோ:  http://gopu1949.blogspot.in/2013/06/9.html

’ஆரண்யநிவாஸ்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மற்றும் பலரையும் படத்தில் காண இதோ மற்றொரு இணைப்பு:  http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html

நாங்கள் அவ்விடம் இரவு விருந்து சாப்பிட்டு முடிய 8.15 மணி ஆனது. பஃபேயில் ஏதேதோ பல உணவுப்பொருட்கள் இருப்பினும், நான் எனக்குப் பிடித்தமான பூரிகளையும், தயிர் சாதம் + வறுத்த மோர் மிளகாயையும் மட்டும் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தேன்.  

பிறகு 8.30க்கு என் ஆஸ்தான ஆட்டோக்காரர் ஏழுமலை அவர்களை என் மொபைலில் அழைத்து வரவழைத்தேன்.  அதில் முனைவர் அவர்களை ஏற்றிக்கொண்டு, திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில், கும்பல் அதிகம் இல்லாததோர் டவுன் பஸ்ஸில் அவரை அமரச்செய்து, அவரிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு, அதே ஆட்டோவில் நான் என் வீட்டுக்கு இரவு ஒன்பது மணிக்குள் வந்து சேர்ந்து விட்டேன்.

இரவு 10.30 மணிக்கு முனைவர் ஐயா அவர்களுடன் மொபைலில் பேசி, அவர் திருச்சி ஜங்ஷனிலிருந்து, செளகர்யமாக கோவை செல்ல வேண்டிய ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டாரா என்பதை உறுதி செய்துகொண்டேன். மறுநாள் 16.03.2017 அதிகாலை 10 மணிக்குள் நான் மிகவும் சீக்கரமாகவே  எழுந்துகொண்டு, லேண்ட் லைன் போனில் முனைவர் ஐயா அவர்களின் சம்சாரத்துடன் பேசி, அவர் செளக்யமாக வீடு வந்து சேர்ந்து விட்டாரா என்பதையும் கேட்டு  உறுதி செய்துகொண்டேன். (அவர் நன்கு அசந்து தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்)

81+ வயதான இந்த இளைஞர், பேரெழுச்சியுடன் கோவையிலிருந்து தனியாகப் புறப்பட்டு, ஒரே நாளில்  6+6 = 12 மணி நேரங்கள் பயணம் செய்துள்ளார். அவரை நினைக்க எனக்கு மிகவும் வியப்பாகவும் பொறாமையாகவும் உள்ளது. அவரின் அன்பும், பண்பும், பழுத்த அனுபவங்களும், நகைச்சுவை உணர்வுகளும், மிகவும் வெளிப்படையான பேச்சுக்களும், ஓரளவு ஆரோக்யமான உடல்நிலையும் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பு ஏதும் இல்லை தானே !

நல்ல மனம் கொண்ட நம் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மேலும் பல்லாண்டுகள் இதேபோல பேரெழுச்சியுடன் திகழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கொள்கிறேன்.  


   

புதிதாக இன்று (28.05.2017) இணைக்கப்பட்டுள்ள படங்கள்:


திருமண மேடையில் இடதுமிருந்து வலமாக
1) திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்
2) திரு. அஷ்டாவதானி மஹாலிங்கம் அவர்கள்
3) அடியேன் கோபு
4) மணமகள் செள. நித்யா அவர்கள்
5) மாப்பிள்ளை சிரஞ்சீவி. விக்னேஷ் ஸ்வாமிநாதன் அவர்கள்
6) முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
7) திரு. பால கணேஷ் அவர்கள்
8) ஆரண்யநிவாஸ் திரு. இராமமூர்த்தி அவர்கள்

என்றும் அன்புடன் தங்கள்,

 

(வை. கோபாலகிருஷ்ணன்)

104 comments:

 1. ஆஹா ஆஹா அத்தனையும் அருமை.. இட்லிச் சட்டியில் வடை அவித்திருப்பதும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. they are not vadas they are karadaiyan nonbu adais ..steamed vrat recipes specially made for this auspicious day

   Delete
  2. athira March 18, 2017 at 2:30 AM

   //ஆஹா ஆஹா அத்தனையும் அருமை.. இட்லிச் சட்டியில் வடை அவித்திருப்பதும் அருமை.//

   ஹைய்யோ .... ஹைய்யோ .... ஹைய்யோ .... அது வடை இல்லை அதிரா.

   இந்த நோன்புக்காக மட்டுமே, வெல்லம் போட்டு செய்த இனிப்புக் கொழுக்கட்டை என இதனைச் சொல்லுவார்கள்.

   அது பார்க்க பொத்தலுடன் கூடிய மெதுவடை ஷேப்பில் தான் இருக்கும். :)

   இந்த ஸ்பெஷல் வெல்லக்கொழுக்கட்டையும் வெண்ணெயும் நோன்பு ஸ்வாமி நைவேத்யத்திற்கு அவசியமாக வேண்டும்.

   Delete
  3. Angelin March 18, 2017 at 3:42 AM

   they are not vadas they are karadaiyan nonbu adais .. steamed vrat recipes specially made for this auspicious day.//

   எங்கட அஞ்சு ஓர் ஐயர் பொண்ணு போல எவ்ளோ அழகாத் தெளிவாப் புத்திசாலித்தனமாச் சொல்லியிருக்கா பாருங்கோ அதிரா !

   என்ன இருந்தாலும் அஞ்சு அஞ்சுதான் ! :)))))

   ’அதிரா வெறும் அதிரடி ... தடாலடி மட்டும் தான்’ என்று நான் சொல்லவே மாட்டேன்.

   ஏனென்றால் அஞ்சுவும் அதிராவும் நமக்கு இரு கண்கள் போல அல்லவோ ! :)))))

   Delete
  4. அஞ்சூஊஊஊஊஉ மேடைக்கு வரவும்.. இப்பவே என் டவுட்டைக் கிளியர் பண்ணுங்கோ:).. நீங்க வலது ஐ ஆ? இடது ஐ ஆஆஆஆஆஆஆஆஆஆ?:)

   Delete
 2. இரு திருமணப் படங்களும் அழகு.. இரு தம்பதிகளும் வாழ்க பல்லாண்டு..

  ஒரு டவுட்டூ.. அந்த முனைவர் ஐயாவின் (வைர)தோடு இல்லாத காதை எதுக்குப் படமெடுத்தீங்க???:)

  ReplyDelete
  Replies
  1. athira March 18, 2017 at 2:32 AM

   //இரு திருமணப் படங்களும் அழகு.. இரு தம்பதிகளும் வாழ்க பல்லாண்டு..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அதிரா.

   //ஒரு டவுட்டூ.. அந்த முனைவர் ஐயாவின் (வைர)தோடு இல்லாத காதை எதுக்குப் படமெடுத்தீங்க???:)//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! குட் கொஸ்ட்சன்.

   அவரும் என்னைப்போலவே ஆறடி உயரமாக உள்ளார். குளோஸ்-அப்பில் அவரைப் படம் எடுத்திருக்கும் போது அவரின் காதுமட்டும் சுமார் ஒரு அடி உயரத்துக்கு இருப்பது போல எனக்கு ஒரு எழுச்சியும் மகிழ்ச்சியும் கொடுத்துள்ளது.

   நீண்ட முழுமையான வாழைக்காய் பஜ்ஜியைப் பார்த்தது போலவும் ஓர் எண்ணம் என் மனதில் ஏற்பட்டுவிட்டது.

   அந்த நீண்ட வாழைக்காய் பஜ்ஜிப்படம் இதோ இந்தப்பதிவினில் மேலாகக் காட்டப்பட்டுள்ளது .... பாருங்கோ: http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34-01-03-first-prize-winners.html

   தான் போட்டிருந்த வைரத்தோடுகளைக் கழட்டி அதிராவுக்கு (ஏதோ ஒரு நேர்த்திக்கடனுக்காக) கொடுத்து விட்டதாகச் சொன்னாரே என்னிடம் அந்த முனைவர் ஐயா. பிறகு அது எப்படி அந்தப்படத்தில் இருக்க முடியும்? :)

   இதைப்படித்ததும் சுக்கு நூறாகக் கிழித்து தேம்ஸ் நதியில் விட்டெறிந்து விடுங்கோ, அதிரா. அவர் உங்களுக்கு அன்புடன் வைரத் தோடுகள் அன்பளிப்பாக அளித்த விஷயம் அந்த அவரின் மாமிக்குத் தெரிந்தால் மிகப்பெரிய வம்பாகிவிடும். நமக்கு எதற்கு அநாவஸ்ய ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் !

   Delete
  2. இல்ல இல்ல நான் ஒளிச்சு மறைச்செல்லாம் நடக்கவே மாட்டேன்ன்ன்... ஒரு பேத்திக்கு வைரத்தோடு பரிசளிப்பதைப் பார்த்து.. அந்தாத்து மாமி இன்னும் சந்தோசம்தான் படுவா:).. உங்களுக்குத்தான் இதில் பொறாமை:) அதிராவிடம் கொடுத்திட்டாரே அந்த வைரத் தோட்டை., இது பக்கம் பக்கமா எல்லாம் நிக்க விட்டுப் படமெடுத்தனே எனக்கு தந்திருக்கலாமே என:).. ஹையோ எனக்கும் எதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:).

   Delete
  3. athira March 19, 2017 at 9:44 PM

   //இல்ல இல்ல நான் ஒளிச்சு மறைச்செல்லாம் நடக்கவே மாட்டேன்ன்ன்... ஒரு பேத்திக்கு வைரத்தோடு பரிசளிப்பதைப் பார்த்து.. அந்தாத்து மாமி இன்னும் சந்தோசம்தான் படுவா:).. உங்களுக்குத்தான் இதில் பொறாமை:) //

   நோ...நோ... இதில் எனக்கென்ன பொறாமை. நான் ஏற்கனவே அதிராவுக்காக ஆசை ஆசையாக வைரத்தோடு, வைர மூக்குத்தி, வைர நெக்லஸ், வைர மோதிரம், வைர வளையல்கள், வைர ஒட்டியாணம் முதலியன எல்லாமே சப்ஜாடா வாங்கி அனுப்புவதாக இருந்தேன். நீங்க தான் உங்க சைஸ் என்னவென்று எனக்குக் கடைசிவரைச் சொல்லவே இல்லை. மறந்துட்டீங்களா?

   Delete
  4. அதிரா என்ன இது சொல்லவே இல்லை!! வைகோ சாருடன் இப்படி ஒரு டீல் வேறா ஆஹா!!! சார் அவங்கதான் அவங்க கதை எழுதினப்ப ஒரு ஃபோட்டோ இருந்துதே எங்கள் ப்ளாக்ல...அந்த சைஸ் தான் ....அதிரா உங்க சைஸ் வைகோ சார்கிட்ட சொல்லியாச்சு....ஹிஹீ

   கீதா

   Delete
  5. திருமண நிகழ்வில் நம் பதிவர்கள் பலரது சந்திப்பு இனிய மகிழ்ச்சி அல்லவா...!! இனிய சந்திப்பு ஆம் இனிப்புகளுடனான சந்திப்பும் ஆச்சே!!!

   Delete
  6. அதிரா என்ன இது சொல்லவே இல்லை!! வைகோ சாருடன் இப்படி ஒரு டீல் வேறா ஆஹா!!! சார் அவங்கதான் அவங்க கதை எழுதினப்ப ஒரு ஃபோட்டோ இருந்துதே எங்கள் ப்ளாக்ல...அந்த சைஸ் தான் ....
   அதிரா உங்க சைஸ் வைகோ சார்கிட்ட சொல்லியாச்சு....ஹிஹீ

   கீதா

   Delete
  7. Mr.Thulasidharan V Thillaiakathu & Mrs. Geetha

   ஆம் எல்லாம் ஒரே இனிப்பு தான்.

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 3. அசத்தி விட்டீர்கள், திரு வைகோ. மிக்க நன்றி. நம் நட்பும் என்றும் இளமையாக இருக்க உச்சிப்பிள்ளையார் அருள் புரியட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ப.கந்தசாமி March 18, 2017 at 3:24 AM

   நமஸ்காரங்கள் + வணக்கங்கள்.

   //அசத்தி விட்டீர்கள், திரு வைகோ. மிக்க நன்றி. நம் நட்பும் என்றும் இளமையாக இருக்க உச்சிப்பிள்ளையார் அருள் புரியட்டும்.//

   ALL THE WAY FROM COIMBATORE >>>>> TO MY HOUSE AT TIRUCHI, THAT TOO LONELY .... தங்களின் வருகை மிகவும் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அளித்தது.

   தாங்கள் அன்புடன் அளித்துச்சென்ற மைசூர்ப்பா, A1 சிப்ஸ் + பிஸ்கட்ஸ் எல்லாமே மிகவும் ருசியாக இருந்தன. இங்கு அனைவரும் அவற்றை ருசித்து மகிழ்ந்தோம். :)

   தங்களின் பேரன்புக்கும் மற்ற அனைத்துக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   அன்புடன் VGK

   Delete
 4. வாழ்க மணமக்கள். பல்லாண்டு வாழ்க, திரு ஆர் ஆர் ஆர் எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். என்னால்தான் வரமுடியாமல் போனது. பழனி கந்தசாமி ஸாரின் சுறுசுறுப்பு எனக்கெல்லாம் ஒரு பாடம். அவருக்குச் சுற்றி போடச் சொல்லவேண்டும். பதிவுலக நண்பர்களையும், உங்கள் பழைய அலுவலக நண்பர்ளையும் சந்தித்து மகிழ்ந்தீர்கள் என்பது எங்களுக்கும் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம். March 18, 2017 at 5:22 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

   //வாழ்க மணமக்கள். பல்லாண்டு வாழ்க,//

   மிக்க மகிழ்ச்சி, ஸ்ரீராம்.

   //திரு ஆர் ஆர் ஆர் எனக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். என்னால்தான் வரமுடியாமல் போனது.//

   ஆஹா, சந்தோஷம். அடடா .... நீங்களும் வந்திருக்கலாம், ஸ்ரீராம்.

   //பழனி கந்தசாமி ஸாரின் சுறுசுறுப்பு எனக்கெல்லாம் ஒரு பாடம்.//

   பழனி கந்தசாமி ஸாரின் சுறுசுறுப்பு, உலக மஹா சோம்பேறியான எனக்கும்கூட ஒரு மிகப்பெரிய பாடமேதான்.

   //அவருக்குச் சுற்றி போடச் சொல்லவேண்டும்.//

   கரெக்டூஊஊஊஊ. :)

   //பதிவுலக நண்பர்களையும், உங்கள் பழைய அலுவலக நண்பர்ளையும் சந்தித்து மகிழ்ந்தீர்கள் என்பது எங்களுக்கும் மகிழ்ச்சி.//

   பதிவுலக நண்பர்களில் ஓர் 7-8 பேர்களை மட்டுமே என்னால் நான் போன நேரத்தில் அங்கு சந்திக்க முடிந்தது.

   அலுவலகத் தோழர்களையும் தோழிகளையும் தான் அதுவும் நூற்றுக்கணக்கானவர்களை என்னால் சந்தித்துப் பேசி மகிழ முடிந்தது. அதிலும் அதில் பாதிபேர் என்னைப் போலவே ஓய்வு பெற்றவர்கள். அவர்களையெல்லாம் ஒரே இடத்தில் சந்தித்து நலம் விசாரிக்க இது ஓர் மிக நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.

   அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது. :)

   Delete
 5. முனைவர் ஐயாவின் வேகமும், விவேகமும், உழைப்பும் நாம் கடைபிடிக்கவேண்டியன. நண்பர்களுடனான சந்திப்பையும் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. Dr B Jambulingam March 18, 2017 at 7:25 AM

   வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

   //முனைவர் ஐயாவின் வேகமும், விவேகமும், உழைப்பும் நாம் கடைபிடிக்கவேண்டியன.//

   மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

   ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பது போல, அந்த முனைவர் ஐயாவின் வேகமும், விவேகமும், உழைப்பும் இந்த முனைவர் ஐயாவால் மட்டுமே நன்கு அறிய முடிந்துள்ளது. :)

   //நண்பர்களுடனான சந்திப்பையும் பகிர்ந்தமைக்கு நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், முனைவர் ஐயா.

   Delete
 6. அருமையான நிகழ்வு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. KILLERGEE Devakottai March 18, 2017 at 7:26 AM

   //அருமையான நிகழ்வு வாழ்த்துகள்//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 7. அனைவருக்கும் வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் March 18, 2017 at 8:33 AM

   //அனைவருக்கும் வாழ்த்துகள்...//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 8. டாக்டர் கந்த சாமியை ஒரு முறை அவரது இல்லத்தில் சந்தித்து இருக்கிறேன் இரண்டு முறை அவர் என் இல்லத்துக்கு வந்திருக்கிறார் ஒரு முறை தர்ம பத்தினியுடன் உங்களையும் திருச்சியில் சந்தித்த நினைவுகள் மடை திறந்து வருகிறது வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. G.M Balasubramaniam March 18, 2017 at 3:19 PM

   வாங்கோ, வணக்கம்.

   //டாக்டர் கந்த சாமியை ஒரு முறை அவரது இல்லத்தில் சந்தித்து இருக்கிறேன். இரண்டு முறை அவர் என் இல்லத்துக்கு வந்திருக்கிறார்.//

   வெரி குட். மிக்க மகிழ்ச்சி.

   //ஒரு முறை தர்ம பத்தினியுடன் உங்களையும் திருச்சியில் சந்தித்த நினைவுகள் மடை திறந்து வருகிறது. வாழ்த்துகள்.//

   ஒருமுறை அல்ல. இருமுறைகள். :))

   03.07.2013 and 10.10.2015

   http://gopu1949.blogspot.in/2015/02/4-of-6.html

   http://gopu1949.blogspot.in/2015/10/2015-via.html

   தங்களின் அன்பான வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   Delete
 9. //அவர்களின் சம்சாரத்துடன் பேசி, அவர் செளக்யமாக வீடு வந்து சேர்ந்து விட்டாரா என்பதையும் கேட்டு உறுதி செய்துகொண்டேன்//

  நேற்றே பதிவை வாசித்துவிட்டேன் .கலைநயமிக்க படங்கள் உணவு எல்லாவற்றிலும் மிக பிடித்தது இந்த வரிகள் தான்
  மிக அன்போடு பஸ் நிலையம் வரை சென்று வழியனுப்பி பின்பு அவர் வீட்டாரிடமும் விசாரித்ததில் உங்கள் இருவரின் நட்பின் வலிமையும் நீங்க அவர்மேல் கொண்ட பேரன்பும் தெரிகிறது ..நட்பும் அன்பும் வாழ்க

  ReplyDelete
  Replies
  1. Angelin March 18, 2017 at 4:44 PM

   வாங்கோ அஞ்சு, வணக்கம்.

   **அவர்களின் சம்சாரத்துடன் பேசி, அவர் செளக்யமாக வீடு வந்து சேர்ந்து விட்டாரா என்பதையும் கேட்டு உறுதி செய்துகொண்டேன்.**

   //நேற்றே பதிவை வாசித்துவிட்டேன்.//

   ஆஹா, சந்தோஷம்.

   //கலைநயமிக்க படங்கள் உணவு எல்லாவற்றிலும் மிக பிடித்தது இந்த வரிகள் தான்.//

   :) எங்கட அஞ்சு என்னைப்போலவே மனிதாபிமானம் மிக்கவர் என்பதை இதனால் நானும் உணர்ந்து கொண்டேன். :)

   //மிக அன்போடு பஸ் நிலையம் வரை சென்று வழியனுப்பி பின்பு அவர் வீட்டாரிடமும் விசாரித்ததில் உங்கள் இருவரின் நட்பின் வலிமையும் நீங்க அவர்மேல் கொண்ட பேரன்பும் தெரிகிறது .. நட்பும் அன்பும் வாழ்க.//

   திருச்சியில் அவர் கலந்துகொண்ட கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியைவிட, என்னை மீண்டும் என் வீட்டில் சந்திக்கலாம் என்ற ஒரே சந்தோஷத்தில் மட்டுமே, கோயம்பத்தூரிலிருந்து தனியாளாக எந்தத் துணையும் இல்லாமல் இந்த வயதில் ஆசையுடன் புறப்பட்டு, இரயிலில் சுமார் ஆறு மணி நேரங்கள் பயணித்து, அதன்பின் திருச்சி ஜங்ஷனில் இறங்கி, அங்கிருந்து டவுன் பஸ்ஸில் ஏறி, மெயின் கார்டு கேட்டில் இறங்கிக்கொண்டு, என் வீடு வரை பொடி நடையாகவே வந்துள்ளார்.

   சென்ற முறைபோல, நான் ரெயில்வே ஸ்டேஷனுக்கோ, பஸ் ஸ்டாண்டுக்கோ, அவரை வரவேற்க ஆட்டோவில் புறப்பட்டு வர வேண்டாம் என அன்புக்கட்டளையும் பிறப்பித்தும் விட்டார்.

   அவர் தான் எங்களிடம் சொல்லியிருந்த டயமான மதியம் 12 மணிக்கு, டாண் என்று என் வீட்டு வாசலில் காலிங் பெல்லை அடித்ததும், உலக மஹா சோம்பேறிகளான எனக்கும் என் மனைவிக்கும் இதில் மிகவும் வியப்பான வியப்பு. !!!!!

   அதனால் அவர் நல்லபடியாக தனியாக ரயில் ஏறி, கோவையில் உள்ள தன் வீட்டுக்கு நல்லபடியாகப் போய்ச் சேர்ந்தாரா என நானும் என் மனைவியும் விசாரப்பட்டு போன் செய்து தெரிந்து கொண்டோம். பிறகுதான் எங்களுக்கும் மனதுக்கு மிகவும் நிம்மதியானது.

   நம்மை விட மிகவும் வயதானவர் என்னும்போது ஆட்டோமேடிக் ஆக அவர்கள் மேல், எங்களுக்கு ஓர் தனி அக்கறை வந்து விடுகிறது.

   தங்களின் அன்பான வருகைக்கும், இதனைக் குறிப்பிட்டு இங்கு சொல்லியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அஞ்சு.

   Delete
 10. மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ..கணேஷ் அண்ணா இளங்கோ அண்ணா அனைவரும் வருகைதந்துள்ளார்களா !அனைவரையும் ஒருசேர பார்த்ததில் உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்பது கலகலவென்றிருக்கும் உங்க முக புன்னகையிலிருந்து தெரிகிறது .மடியில் அமர்ந்திருப்பது அனிருத் தானே

  ReplyDelete
  Replies
  1. Angelin March 18, 2017 at 4:47 PM

   வாங்கோ அஞ்சு, தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

   //மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..//

   மிக்க மகிழ்ச்சி.

   //கணேஷ் அண்ணா இளங்கோ அண்ணா அனைவரும் வருகைதந்துள்ளார்களா !//

   ஆமாம். இன்னும் உங்களின் பல அண்ணாக்கள்கூட வந்திருந்திருப்பார்கள். நாங்கள் அங்கு இருந்ததே மிகவும் சொற்ப நேரம் [6.30 PM to 8.30 PM - not more than 2 hours] மட்டுமே.

   //அனைவரையும் ஒருசேர பார்த்ததில் உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்பது கலகலவென்றிருக்கும் உங்க முக புன்னகையிலிருந்து தெரிகிறது.//

   அன்று நான் சந்திக்க நேர்ந்த பதிவர்கள் ஒருசிலரை விட, என்னுடன் ஒரே அலுவலகத்தில் அன்று பணியாற்றியவர்கள் + என்னைப்போலவே பணி ஓய்வு பெற்றவர்கள் + இன்னும் அங்கேயே பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் என நூற்றுக்கணக்கான தோழர்கள் + தோழிகளை ஒரே இடத்தில் சந்திக்கவும், நலம் விசாரிக்கவும், முடிந்ததில்தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

   அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது !

   //மடியில் அமர்ந்திருப்பது அனிருத் தானே//

   ஆமாம் கரெக்ட். அவனையும் நான் அன்று அங்கு சந்திப்பேன் என நினைக்கவே இல்லை. அது மேலும் ஒரு ஆச்சர்யம் + அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

   அநிருத்தின் அப்பாவும் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்களும் இன்றும் ஒரே அலுவலகத்தில், ஒரே டிபார்ட்மெண்டில் (வெவ்வேறு பிரிவுகளில்) பணியாற்றி வருகிறார்கள். அவரின் அழைப்பினை ஏற்று அநிருத்தின் அப்பா நான் அங்கு போன ஒரு மணி நேரம் கழித்து, அவனை மட்டும் தன்னுடன் கூட்டிக்கொண்டு காரில் அங்கு வந்திருந்தார்.

   அவர்கள் BHEL Township என்ற இடத்தில் Quarters இல் தனியாக இருக்கிறார்கள். எப்போதாவது மாதம் ஒருமுறை இங்கு நம் வீட்டுக்கு வந்து போவார்கள். நான் இருக்கும் வீடும் அவர்கள் இருக்கும் வீடும் சுமார் 15-20 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

   குழந்தை சற்று உயரமாகி, ஒல்லியாகி இளைத்துப் போய் இருக்கிறான். புதிதாக SPECS அணியும் நிலைக்கும் வந்துள்ளான். நானும் அவனைப் பார்த்து மாதக்கணக்காக ஆகிவிட்டது. அன்று அங்கு என்னைக்கண்டதும் ஒரே ஓட்டமாக ஓடிவந்து என் மடியில் வந்து ஒட்டிக்கொண்டு விட்டான். :)

   மிகவும் சந்தோஷமாக இருந்தது.

   Delete
 11. அகமும் முகமும் மகிழ, மூத்த பதிவர்கள் காட்சிதருவது நெஞ்சை நிறைவாக்குகிறது.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. Chellappa Yagyaswamy March 18, 2017 at 6:36 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //அகமும் முகமும் மகிழ, மூத்த பதிவர்கள் காட்சிதருவது நெஞ்சை நிறைவாக்குகிறது.
   - இராய செல்லப்பா நியூஜெர்சி//

   ஆஹா, தங்களின் அன்பான வருகைக்கும், என் அகமும் முகமும் மகிழ வைத்து, என் நெஞ்சையும் நிறைவாக்க வைக்கும் கருத்துக்களை அள்ளித்தெளித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   Delete
 12. அன்பும், பாசமும் கலந்த சந்திப்பு.
  நண்பர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.
  மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

  படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு March 18, 2017 at 7:21 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அன்பும், பாசமும் கலந்த சந்திப்பு. நண்பர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். மணமக்களுக்கு வாழ்த்துக்கள். படங்கள் எல்லாம் அருமை.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 13. காரடையான் குழக்கட்டைகள் நன்றாக இருக்கு. அதைவிட குழக்கட்டைகள் தயார் செய்வதற்குரிய பாத்திரம் (அடுப்பில் உள்ளது) ரொம்பப் பிடிச்சிருந்தது. அங்கு வரும்போது வாங்கவேண்டும்.

  விசேஷத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த தட்டுக்களும் அவற்றில் அழகுற வைக்கப்பட்டிருந்த பொருட்களும் ரசிக்கும்படியாக இருந்தது. (இதெல்லாம் சரியா படமெடுத்துச் சேர்த்ததற்குப் பாராட்டுகள்).

  பதிவர்கள் ஆரண்யநிவாஸ்.., பாலகணேஷ், இளங்கோ போன்ற சீனியர்களைப் படமெடுத்துப்போட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி.

  கந்தசாமி சார், இரயிலில் சௌகரியமாக அமர்ந்துவிட்டாரா என்றும் வீட்டுக்குச் சென்று சேர்ந்துவிட்டாரா என்றும் கேட்டுத் தெரிந்துகொண்டது எல்லோரும் பின்பற்றவேண்டிய பண்பு. (நீங்களும் அதற்காக, அதிசயமாக காலை 10 மணிக்கு முன்பே எழுந்துவிட்டீர்கள் என்பதையும் பதிவுசெய்துவிட்டீர்கள்)

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. 'நெல்லைத் தமிழன் March 19, 2017 at 11:05 AM

   வாங்கோ ஸார். வணக்கம் ஸார்.

   //காரடையான் குழக்கட்டைகள் நன்றாக இருக்கு. //

   ’கொழுக்கட்டை’களை தாங்கள் ’குழக்கட்டை’களாக ஆக்கியுள்ளது எனக்கு சிரிப்பாக உள்ளது. குழந்தைபோல குட்டைக் கட்டையாக ஆக்கிவிட்டீர்களோ என்னவோ.

   >>>>>

   Delete
  2. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

   //அதைவிட குழக்கட்டைகள் தயார் செய்வதற்குரிய பாத்திரம் (அடுப்பில் உள்ளது) ரொம்பப் பிடிச்சிருந்தது. அங்கு வரும்போது வாங்கவேண்டும்.//

   இங்கே திருச்சியில் மலைவாசல் சமீபமாக உள்ள மிகப்பிரபலமான ‘சாரதாஸ்’ ஜவுளிக்கடைக்கு (ஜவுளிக் கடலுக்கு) எதிர்புறம் கொஞ்சம் உள்ளடங்கிய சந்துக்குள் மங்கள் & மங்கள் என்றதோர் மிகப்பெரிய பாத்திரக்கடை (பாத்திரக்கடல்) உள்ளது.

   அங்கு கிடைக்காத பொருட்கள் இந்த உலகத்தில் எங்குமே கிடைக்க முடியாது.

   தங்கம், வெள்ளி, ப்ளாட்டினம், எவர்சில்வர், காப்பர், பித்தளை, செம்பு, வெங்கலம், அலுமினியம் போன்ற அனைத்து உலோகங்களில் அமைந்த அனைத்துப் பாத்திரங்களும், மற்ற அனைத்து ப்ளாஸ்டிக் சாமான்கள், கிஃப்ட் பொருட்கள், ஃபர்னிச்சர்கள், டீ.வி., ஃபேன் போன்ற எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுடன் .... பனை ஓலை விசிறியிலிருந்து, வீடு பெருக்கும் விளக்கமாறு வரை சப்ஜாடாக எல்லாமே கொட்டிக்கிடக்கின்றன.

   ஹோல் சேல் + ரீடைல் வியாபரங்களில் கொடி கட்டிப் பறந்து வருகிறார்கள்.

   கோயில் கும்பாபிஷேகம் செய்ய 108 வெள்ளிக்குடங்களோ அல்லது 108 பித்தளைக் குடங்களோ வேண்டுமா .... அங்கு போனால் உடனடியாகக் கிடைக்கும்.

   ஆள் உயர முரட்டு வெங்கல விளக்கு வேண்டுமா, கோயிலில் மாட்டும் மிகப் பெரிய வெங்கல கிண்டாமணி வேண்டுமா ... அதுவும் கிடைக்கும்.

   அங்கு கிடைக்காததே எதுவும் கிடையாது. கடையின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று பொறுமையாக நீங்கள் நோட்டமிட்டால் போதும் .... கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு நீங்கள் அனைத்தையும் வாங்கிச்செல்லலாம். அவர்களே வண்டியில் ஏற்றி டோர் டெலிவெரியும் செய்து விடுவார்கள்.

   கடை முழுவதும் சுற்றிப்பார்த்து கண்டுகளிக்க உங்களுக்கு ஒரு 2-3 நாட்களாவது ஆகும். அவ்வளவு பெரிய மஹா முரட்டுக் கடை. அவ்வளவு வரைட்டி ஆஃப் சாமான்கள் அங்கே உள்ளன. :)

   >>>>>

   Delete
  3. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)

   //விசேஷத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த தட்டுக்களும் அவற்றில் அழகுற வைக்கப்பட்டிருந்த பொருட்களும் ரசிக்கும்படியாக இருந்தது. (இதெல்லாம் சரியா படமெடுத்துச் சேர்த்ததற்குப் பாராட்டுகள்).//

   அதனை நான் மிகவும் ரஸித்து ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். என் நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோவும் எனக்கு அவர் கேமராவில் எடுக்கப்பட்ட அதே போட்டோவை அனுப்பியிருந்தார். அதனால் அதனை இருமுறை காட்டியுள்ளேன். இவையெல்லாம் இது போன்ற இடங்களிலோ அல்லது கடைகளிலோ பார்க்கத்தான் பளபளன்னு புதுசா ஜோராக இருக்கும். வீட்டுக்கு வாங்கி வந்தால் போச்சு ..... குப்பைதான் .... ஒரே அடசல்தான் .... என்பது என் சொந்த அனுபவமாகும். :)

   >>>>>

   Delete
  4. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)

   //பதிவர்கள் ஆரண்யநிவாஸ், பாலகணேஷ், இளங்கோ போன்ற சீனியர்களைப் படமெடுத்துப்போட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி.//

   ஆம். நான் ஏதேதோ சிலவற்றைக் குறிப்பாகப் படமெடுக்க நினைத்துக் குறிவைத்த போது அவர்களும் அங்கு இருந்திருப்பார்கள் போலிருக்குது. அதனால் அவர்களும் போட்டோவிலும் சிக்கி விட்டனர் போலிருக்குது. :)

   மணமக்களுடன், மண மேடையில் நாங்கள் எல்லோரும், சேர்ந்து நின்றிருந்த போட்டோ, Professional Photographer ஆல் எடுக்கப்பட்டிருக்கும்.

   அதுதான் பார்க்க நன்றாகவும் இருக்கும். அதை அந்த ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்கள் எனக்கு அனுப்பினால் இந்தப்பதிவினில் அதையும் நான் சேர்த்து விடுவேன்.

   அவர் அதனை எனக்கு அனுப்புவாரோ மாட்டாரோ? எதற்கும் அவரிடம் நான் ரிக்வெஸ்ட் செய்து, அதனை அனுப்பும்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

   அவர் அதனை எனக்கு அனுப்பி வைப்பதற்குள் இந்தப் புதுமண தம்பதியினருக்கு குழந்தை பிறந்து புண்ணியாஹாவாசனம் .... ஆயுஷ்ஹோமம் முதலியன நடந்தாலும் நடந்துவிடக்கூடும் எனவும் எனக்குத் தோன்றுகிறது. :)))))

   >>>>>

   Delete
  5. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (5)

   //கந்தசாமி சார், இரயிலில் சௌகரியமாக அமர்ந்துவிட்டாரா என்றும் வீட்டுக்குச் சென்று சேர்ந்துவிட்டாரா என்றும் கேட்டுத் தெரிந்துகொண்டது எல்லோரும் பின்பற்றவேண்டிய பண்பு.//

   ஆமாம். பாவம் அவர். இந்த வயதான காலத்தில், ஏதோவொரு ஆவலில், பேரெழுச்சியுடன் தனியாகவே புறப்பட்டு வந்து உடனடியாக அதே நாளில் தனியாகவே திரும்பச் செல்கிறாரே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது.

   நல்லபடியாக அவர், அவரின் வீட்டுக்குப் போய் சேரணுமே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.

   அவரிடமிருந்து எனக்கு ஃபோன் காலோ மெஸ்ஸேஜோ ஏதும் வராததால் என் கவலை எனக்கு மிகவும் அதிகரித்து விட்டது.

   //(நீங்களும் அதற்காக, அதிசயமாக காலை 10 மணிக்கு முன்பே எழுந்துவிட்டீர்கள் என்பதையும் பதிவுசெய்துவிட்டீர்கள்)//

   ஆமாம். நான் பொதுவாக அதிகாலை 3 மணிக்குத்தான் தூங்க ஆரம்பிப்பது வழக்கம்.

   அவர் இரவு 9 மணிக்கெல்லாம் படுத்துத் தூங்கிவிட்டு, அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்திருக்கும் மிக நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளவர்.

   பிறகு பகலில் 10-11 மணிக்குச் சாப்பிட்டதும் ஒரு தூக்கம் போடுவாராம். நான் அப்படி அல்ல.

   நான் தூங்கும் போது என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று அவரும், அவர் தூங்கும் போது அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என நானும் அன்று மிகவும் உஷாராகவே இருந்துள்ளோம்.

   இருப்பினும் நான் அன்று 16.03.2017 அதிசயமாக அதிகாலை 10 மணிக்கே ஒருமுறை எழுந்து, அவர்கள் வீட்டு மாமிக்கு லேண்ட் லைனில் பேசிவிட்டு அவர் Safely Reached there என்பதைத் தெரிந்துகொண்டு, மீண்டும் ஒரு மணி நேரம், நடுவில் டிஸ்டர்ப் ஆன என் தூக்கத்தைத் தொடர்ந்தேன். :) என்ன செய்வது? இதுபோல சில நாட்கள் அட்ஜஸ்ட் செய்துகொள்ளத்தான் வேண்டியுள்ளது. :)

   //அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸார்.

   Delete
 14. வலைப்பதிவர் ஆரண்ய நிவாஸ் திரு ராமமூர்த்தி அவர்களின் மகளின் திருமண வரவேற்புக்கு சென்றதை ஒரு அழகிய பதிவாக்கிவிட்டீர்கள். பாராட்டுகள்! மேலும் இந்த திருமண விழா வலைப்பதிவாளர்களின் சிறிய சந்திப்பு போலவும் ஆகிவிட்டதென நினைக்கிறேன்.
  முனைவர் ஐயா மிடுக்காக இருக்கிறார் என்றால் தாங்கள் கம்பீரமாக இருக்கிறீர்கள். பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது.
  ஐயா அவர்களை கோவைக்கு அனுப்பிவிட்டு மறுநாள் அவரது இல்லத்திற்கு தொலைபேசியில் அவர் சௌகரியமாய் சேர்ந்துவிட்டாரா என விசாரித்த தங்களின் அக்கறை ஆத்மார்ந்த நட்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி March 19, 2017 at 3:48 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //வலைப்பதிவர் ஆரண்ய நிவாஸ் திரு ராமமூர்த்தி அவர்களின் மகளின் திருமண வரவேற்புக்கு சென்றதை ஒரு அழகிய பதிவாக்கிவிட்டீர்கள். பாராட்டுகள்!//

   மிக்க மகிழ்ச்சி, ஸார்.

   //மேலும் இந்த திருமண விழா வலைப்பதிவாளர்களின் சிறிய சந்திப்பு போலவும் ஆகிவிட்டதென நினைக்கிறேன்.//

   வலைப்பதிவர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் என்றால் இதுபோன்ற சந்திப்புகள் மிகவும் சகஜமாக நடப்பதுதான்.

   நிச்சயதார்த்தம், வரவேற்பு, திருமணம் என்று பிரித்துப் பிரித்து வெவ்வேறு இரு நாட்களில், வெவ்வேறு நேரங்களில் ஃபங்ஷன் வைப்பதாலும், அவரவர் செளகர்யப்படி ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஒரு மணி நேரம் மட்டும் கலந்துகொண்டுவிட்டு வரவேண்டியிருப்பதாலும், ஒவ்வொரு பதிவரும் மற்ற எல்லாப்பதிவர்களையும் சந்தித்திருப்பார்கள் எனச் சொல்லவும் முடியாது.

   //முனைவர் ஐயா மிடுக்காக இருக்கிறார் என்றால் தாங்கள் கம்பீரமாக இருக்கிறீர்கள். பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது.//

   ஆஹா, அப்படியா? மிக்க நன்றி, ஸார்.

   உள்ளூர் தானே, எல்லோரும் நமக்குத் தெரிந்த ஆசாமிகள் தானே என்று நான் மிகச்சாதாரணமாகவே நினைத்து, சும்மா கேஷுவல் ட்ரெஸ்ஸில்தான், நான் அங்கு அன்று போய் வந்தேன். நான் ஒரு அயர்ன் செய்த ஷர்ட் கூடப் போட்டுக்கொள்ளவில்லை.

   முனைவர் ஐயாவுக்கு மட்டும், ஃபேஸ் பவுடர், விபூதி ஆகியவைகளைக் கொடுத்து, அவரின் சில்க் ஜிப்பாவின் பின்புறம் அவருக்குத் தெரியாமல் செண்ட் ஸ்ப்ரேய் செய்து விட்டேன். ஸ்மெல் வந்தபின் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டார். :)

   //ஐயா அவர்களை கோவைக்கு அனுப்பிவிட்டு மறுநாள் அவரது இல்லத்திற்கு தொலைபேசியில் அவர் சௌகரியமாய் சேர்ந்துவிட்டாரா என விசாரித்த தங்களின் அக்கறை ஆத்மார்ந்த நட்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. பாராட்டுகள்! //

   இதனை அக்கறையுடன் தாங்களும் உணர்ந்து இங்கு சொல்லியுள்ளது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   Delete
  2. புதிதாய் இணைக்கப்பட்டுள்ள இரண்டு படங்களுமே அழகு. அவைகள் நீங்கள் சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டன!

   Delete
 15. அருமை… அருமை … இந்த ஒரே பதிவில் பழைய புதிய அனைத்து நிகழ்வுகளையும் மலரும் நினைவுகளாக சொல்லி மகிழ்ச்சி அடைய செய்து விட்டீர்கள். அடியேனின் பெயரையும் சுட்டி காட்டியமைக்கு நன்றி. இந்த பதிவிற்கு வந்துள்ள அனைத்து பின்னூட்டங்களையும், அவற்றிற்கான உங்களது அன்பான மறுமொழிகளையும் நின்று நிதானமாக படித்து ரசித்தேன். இதுபோல இனிய சந்திப்புகள் அடிக்கடி நிகழ வேண்டும். மீண்டும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ March 19, 2017 at 8:01 PM

   வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

   //அருமை… அருமை … இந்த ஒரே பதிவில் பழைய புதிய அனைத்து நிகழ்வுகளையும் மலரும் நினைவுகளாக சொல்லி மகிழ்ச்சி அடைய செய்து விட்டீர்கள். அடியேனின் பெயரையும் சுட்டி காட்டியமைக்கு நன்றி.//

   தாங்கள் அனுப்பி உதவிய ஒருசில படங்களால்தான் இந்த என் பதிவினை என்னால் வெளியிட்டு ஒப்பேத்தி ஒரு வழியாக முடிக்க முடிந்தது. தங்களுக்குத்தான் நான் நிறையவே நன்றிகள் சொல்ல வேண்டும்.

   //இந்த பதிவிற்கு வந்துள்ள அனைத்து பின்னூட்டங்களையும், அவற்றிற்கான உங்களது அன்பான மறுமொழிகளையும் நின்று நிதானமாக படித்து ரசித்தேன்.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அது எப்போதுமே ஒருவித கிளுகிளுப்புடன் ‘கிக்’ ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும்.

   //இதுபோல இனிய சந்திப்புகள் அடிக்கடி நிகழ வேண்டும். மீண்டும் நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இந்தப்பதிவினை நான் வெற்றிகரமாக வெளியிட தாங்கள் செய்துள்ள அனைத்து உதவிகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   என்றும் அன்புடன் VGK

   Delete
 16. உள்ளது உள்ளபடி பதிவர் ஸந்திப்பும், நண்பர்களின் ஸந்திப்பும்,விவாக ஆசிகளுமாக மிகவும் அருமையாக எழுதி அசத்திவிட்டீர்கள். மறுமொழிகளும், எல்லாமாகச் சேர்ந்து படிக்கவும் விருந்துதான். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. காமாட்சி March 19, 2017 at 9:14 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //உள்ளது உள்ளபடி பதிவர் ஸந்திப்பும், நண்பர்களின் ஸந்திப்பும், விவாக ஆசிகளுமாக மிகவும் அருமையாக எழுதி அசத்திவிட்டீர்கள்.//

   மிகவும் சந்தோஷம், மாமி.

   //மறுமொழிகளும், எல்லாமாகச் சேர்ந்து படிக்கவும் விருந்துதான். அன்புடன்//

   தங்களின் அன்பான வருகைக்கும் அசத்தலான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள், மாமி.

   Delete
 17. பெரிப்பா நமஸ்காரம்..ரொம்ப சுறு சுறுப்பா வந்துட்டேன்..))))..பதிவர்சந்திப்பு போட்டோக்கள் எல்லாமே ரொம்ப நன்னா இருக்கு. அந்த மாமா உங்கள விட சின்ன வரா தெரியறா..)))) சாப்பாடெல்லாம் பெரிம்மா ஆத்துலயே கஷ்டப்பட்டு பண்ணினாளோன்னு நெனச்சேன்..அப்பறம்தான் அது ஹோட்டல் சாப்பாடுனு புரிஞ்சிண்டேன். பெரிப்பூ... எப்பவுமே ரொம்ப அனுசரணைதான் ஆத்து பொம்மனாட்டிகளுக்கு வீணாக சிரமம் கொடுக்கவே மாட்டா. அதுவும் இல்லாம உங்காத்துக்கு கிட்டத்துலயே நல்ல ஹோட்டல்லாம் இருக்கே....நல்ல ஐடியாதான்...

  ReplyDelete
  Replies
  1. happy March 20, 2017 at 2:21 PM

   வாம்மா ..... ஹாப்பி. உன் ஒருத்தியின் வருகைதான் எனக்கும் மிகவும் ஹாப்பியாகத் தெரிகிறது. அதற்காக மற்றவர்களின் வருகையெல்லாம் UNHAPPY என்று அர்த்தமில்லை. உன் ஒருத்தியின் பெயரில்தான் ஹாப்பியே நிரந்தரமாக உள்ளது. :)

   //பெரிப்பா நமஸ்காரம்..//

   ஹாப்பி பெண் குட்டிக்கு அநேக ஆசீர்வாதங்கள்.

   //ரொம்ப சுறு சுறுப்பா வந்துட்டேன்..))))//

   உன் இந்த சுறுசுறுப்பும் சுட்டித்தனமும் சுட்டுப்போட்டாலும் யாருக்கும் வராது...டா.

   //பதிவர்சந்திப்பு போட்டோக்கள் எல்லாமே ரொம்ப நன்னா இருக்கு.//

   அப்படியாம்மா. மிக்க மகிழ்ச்சி.

   //அந்த மாமா உங்கள விட சின்ன வரா தெரியறா..))))//

   கிண்டலா! நீயும் நானும் வஞ்சகமில்லாத உடம்புடன் உரல் போல சற்றே தடியானவர்கள் என்றால், அவர் உலக்கை போன்று கொஞ்சம் மெலிந்தவராக இருப்பதால், ஒருவேளை உனக்கு அவர் என்னைவிடச் சின்னவராத் தெரிகிறாரோ என்னவோ! :))))

   //சாப்பாடெல்லாம் பெரிம்மா ஆத்துலயே கஷ்டப்பட்டு பண்ணினாளோன்னு நெனச்சேன்..//

   நன்னா நெனச்ச போ. உன் வயதில் அவளும், உன்னைப்போலவே .. ஏன் .. உனக்கு மேலேயும்கூட சமையலில் சக்கை போடு போட்டவள்தான். இப்போ கொஞ்சம் சரீர சிரமங்கள். அதனால் நானும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போய் விடுகிறேன். அவளும் படுத்துவிட்டால், எனக்குத்தானே இன்னும் சிரமமாகிவிடும். அப்புறம் தினமும் நாங்கள் இருவரும் சேர்ந்து ’ஹனிமூன்’ போக நேரிடும் அல்லவா!

   //அப்பறம்தான் அது ஹோட்டல் சாப்பாடுனு புரிஞ்சிண்டேன்.//

   நல்லவேளையாகப் புரிஞ்சு கொண்டாயே.

   //பெரிப்பூ... எப்பவுமே ரொம்ப அனுசரணைதான். ஆத்து பொம்மனாட்டிகளுக்கு வீணாக சிரமம் கொடுக்கவே மாட்டா.//

   ஆத்துப் பொம்மனாட்டிகளையும் சேர்த்தே அன்று ஹோட்டலுக்கு நான் அழைத்துச் செல்ல முயற்சித்தேன். மறுத்து விட்டனர். பிறகு அவாளுக்கும் சேர்த்து அங்கிருந்தே சாப்பாடு வாங்கி வரத்தான் நினைத்து மிகப்பெரிய டிபன் கேரியரைக் கேட்டேன். அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் வேண்டாம் எனச் சொல்லி விட்டார்கள். [முதல் நாள் கொழுக்கட்டை மாவு ஏராளமாக மிஞ்சி இருக்கும் .. அந்த தைர்யம்தான் இவர்களுக்கு .. என எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன்]

   //அதுவும் இல்லாம உங்காத்துக்கு கிட்டத்துலயே நல்ல ஹோட்டல்லாம் இருக்கே....நல்ல ஐடியாதான்...//

   அதற்கெல்லாம் இங்கு பஞ்சமே இல்லை. எங்காத்திலிருந்து மிகப்பக்கமாக ‘மதுரா ஹோட்டல்’ என்ற பெயரில் ஒரு சாப்பாடு ஹோட்டலும், ’ராமா கஃபே’ என்ற பெயரில் ஒரு டிஃபன் ஹோட்டலும், ‘மாயவரம் லாட்ஜ்’ என்ற பெயரில் ஒரு சாப்பாடு + டிபன் ஹோட்டலும் உள்ளன. நாம் போகும் நாள் + நேரத்தில், இவைகளில் ஏதேனும் ஒன்று விடுமுறை அல்லது இடைவேளை இல்லாமல் ஆகாரம் கிடைக்கக்கூடிய நேரமாக இருக்கணும். மற்றபடி இங்கு எங்கள் ஆஹம் அமைந்துள்ள இடத்தில் எதற்குமே கவலையே இல்லை. அதைப்பற்றி மேலும் அறிய நீ இந்தப்பதிவுகளை அவசியம் படிக்கணும்:

   1) http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

   2) http://gopu1949.blogspot.in/2013/02/2.html

   3) http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html

   Delete
 18. உங்க திவுக்கு நான் தாமதமாட வர காரணமே எல்லா பின்னூட்டங்கள்+ உங்க ரிப்ளை எல்லாத்தையும் படிச்சு ரசிக்கவே...நல்ல தீனி கிடைக்குது..))))

  ReplyDelete
  Replies
  1. ஆல் இஸ் வெல்..... March 20, 2017 at 2:40 PM

   வாங்கோ, வணக்கம்.

   உங்க பதிவுக்கு நான் தாமதமாக வரக் காரணமே எல்லா பின்னூட்டங்கள் + உங்க ரிப்ளை எல்லாத்தையும் படிச்சு ரசிக்கவே...நல்ல தீனி கிடைக்குது..))))

   அப்படியா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 19. முதல்நாள் விரதமிருந்து மறுநாள் ஓய்விலிருக்கும் வீட்டுப்பெண்களின் சிரமம் உணர்ந்து மதிய உணவை வெளியில் முடித்துக்கொண்டது பாராட்டுக்குரியது. எல்லா ஆண்களும் இப்படி பெண்களின் நிலையுணர்ந்து நடந்துகொண்டால் பல வீடுகளில் பிரச்சனையே வராது. திருமணத்தில் பதிவர்கள் சந்திப்பு கூடுதல் மகிழ்ச்சி. மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள். ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி சாரை நினைத்தாலே அவர் வீட்டுத் தோட்டம்தான் முதலில் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு அவர் வீட்டுத் தோட்டம் பிரசித்தம். :))) சில்க் ஜிப்பாவில் முனைவர் ஐயா அசத்துகிறார்..

  ReplyDelete
  Replies
  1. கீத மஞ்சரி March 20, 2017 at 2:45 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //முதல்நாள் விரதமிருந்து மறுநாள் ஓய்விலிருக்கும் வீட்டுப்பெண்களின் சிரமம் உணர்ந்து மதிய உணவை வெளியில் முடித்துக்கொண்டது பாராட்டுக்குரியது. எல்லா ஆண்களும் இப்படி பெண்களின் நிலையுணர்ந்து நடந்துகொண்டால் பல வீடுகளில் பிரச்சனையே வராது.//

   ஆமாம் மேடம். பதிவர் என்ற முறையில் யார் யாரோ அடிக்கடி என்னைத்தேடி வரும்போது, வீட்டிலுள்ள பெண்மணிகளை எதற்காக நாம் தேவையில்லாமல் சிரமப்படுத்த வேண்டும்?

   யார் எப்போது வந்தாலும் எங்கள் வீட்டில் நல்ல தரமான ஃபில்டர் காஃபி மட்டுமே கட்டாயமாகக் கிடைக்கும். குறிப்பாக சிலர் காஃபி சாப்பிடுவது இல்லை என்று சொன்னால், சூடான பால் மட்டுமோ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்றவைகளோ அல்லது வெயில் வேளைக்கு நல்ல கெட்டியான மோரோ வருவோர் விருப்பப்படி அளிக்க முயற்சிப்போம். எதுவும் கொடுக்காமல் யாரையும் அனுப்பிவிட மாட்டோம்.

   முன் கூட்டியே சொல்லி விட்டு வருபவர்களுக்கு ஃப்ரூட் ஜூஸ், ஸ்வீட்ஸ், காரம் (ஸ்நாக்ஸ்) போன்றவை தயாராக வாங்கி ஸ்டாக்கில் வைத்திருப்போம். மற்றபடி என் வீட்டுக்கு வரும்போது சாப்பிடாமல் வந்துள்ளவர்களுக்கும், டிஃபன் அல்லது சாப்பாடு தேவைப்படுவோருக்கும், அவர்களின் குறிப்பறிந்து, அருகே உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விடுவதையே நான் என் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

   இது மட்டுமே எனக்கும், வருவோருக்கும், வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கும் தர்ம சங்கடம் ஏதும் இல்லாததோர் மிகச்சுலபமான வழியாகும். இதில் ஒன்றும் தப்பே இல்லை என்பது என் எண்ணமாகும்.

   முன்கூட்டியே சொல்லிவிட்டு வருகை தருவோரிடம், இவையெல்லாம் பற்றி, நான் கிளீனாக ஓபனாக எடுத்துச் சொல்லி பேசிக் கொண்டுவிடுவதும் உண்டு.

   //திருமணத்தில் பதிவர்கள் சந்திப்பு கூடுதல் மகிழ்ச்சி. மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள். ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி சாரை நினைத்தாலே அவர் வீட்டுத் தோட்டம்தான் முதலில் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு அவர் வீட்டுத் தோட்டம் பிரசித்தம். :))) சில்க் ஜிப்பாவில் முனைவர் ஐயா அசத்துகிறார்..//

   மிக்க மகிழ்ச்சி மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 20. காரடையான் நோம்படை படங்கள் எல்லாமே நல்லாருக்கு. இட்லிபானைல இனிப்பு வடைன்னு ஒருத்தங்க எழுதியிருந்தத படிச்சதுமே சிரிள்பாணி பொத்துகிச்சு...

  ReplyDelete
  Replies
  1. happy March 20, 2017 at 2:48 PM

   ஹாப்பியின் மீண்டும் வருகை எனக்கு மீண்டும் மகிழ்வளிக்கிறது.

   //காரடையான் நோம்படை படங்கள் எல்லாமே நல்லாருக்கு.//

   அப்படியா, மிக்க மகிழ்ச்சி.

   //இட்லிபானைல இனிப்பு வடைன்னு ஒருத்தங்க எழுதியிருந்தத படிச்சதுமே சிரிப்பாணி பொத்துகிச்சு...//

   இட்லிப்பானையில் இனிப்பு வடைன்னுகூட சொல்லவில்லை.

   இட்லிச் சட்டியில் வடை அவித்திருப்பது என்றே சொல்லியிருக்காங்க.

   எனக்கும் அதைப்படித்ததும் சிரிப்பாணி பொத்துக்கிச்சு. :)

   Delete
 21. இந்தள்ளதிவும் படங்களும் அமர்க்களமா இருக்கு.. மணமகள் பெயர் என்னவோ.???

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... March 20, 2017 at 2:52 PM

   வாங்கோ, வணக்கம்.

   //இந்தப் பதிவும் படங்களும் அமர்க்களமா இருக்கு..//

   மிக்க மகிழ்ச்சி.

   //மணமகள் பெயர் என்னவோ.???//

   மணமகள் + மணமகன் படங்களுக்கு மேலேயும் கீழேயும் அவர்களின் பெயர்கள் என்னால் கொடுக்கப்பட்டுள்ளதே.

   சரியாக கவனித்துப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

   Delete
 22. இது நார்த் ஸைடு மேரேஜா.படங்கள பாத்தா அப்படி தோணுது.. டின்னர் மெனு என்ன...

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco March 20, 2017 at 2:58 PM

   வாங்கோ ஷாமைன் மேடம், வணக்கம்.

   //இது நார்த் ஸைடு மேரேஜா. படங்கள பாத்தா அப்படி தோணுது..//

   இல்லை. தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின் சுத்தமான ஐயர் குடும்ப மேரேஜ் மட்டுமே. இருப்பினும் கல்யாணப்பெண்ணும், மாப்பிள்ளையும் தற்சமயம் அமெரிக்காவில் பணி புரிபவர்கள். அதனால் படங்களில் மேக்-அப் இல் மாடர்ன் டிரெஸ்ஸில் அவ்வாறு மாறுதலாகத் தங்களுக்குத் தெரிகிறார்கள்.

   //டின்னர் மெனு என்ன...//

   அங்கு வரிசையாக ஏதேதோ பெரிய பெரிய பாத்திரங்களில் மூடி போட்டு வைத்திருந்தார்கள். அவற்றின் மேலே என்ன ஐட்டம்ஸ் என்று போர்டு தொங்க விட்டிருந்தார்கள். அவற்றில் என் பார்வையில் பட்டு நினைவில் உள்ளவைகளை மட்டும் உங்களுக்கு இங்கு கூறுகிறேன்:

   (A) ரெளண்ட் ஷேப்பில் வாழையிலைக் கட் செய்து போட்ட பீங்கான் தட்டுகள் (B) டிஷ்யூ பேப்பர்ஸ் (C) குடி நீர் பாட்டில்கள் ஆகியவை ஸ்டாண்டர்ட் ஆக ஓர் இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

   01) கப்பில் ஏதோவொரு வெஜிடபுள் சூப்

   02) ஏதோவொரு சின்ன மில்க் ஸ்வீட் + மிகச்சிறிய ஸ்வீட் பாக்கெட்

   03) வெஜிடபிள் கட்லெட் + ஜாம்

   04) வெஜிடபிள் பிரியாணி + வெங்காய தயிர் பச்சடி

   05) பரோட்டா + குருமா

   06) சோளா பூரி + சென்னா

   07) சாம்பார் சாதம் + கட்டை வடாம்

   08) தயிர் சாதம் + மோர் மிளகாய் + பச்சை நிறத்தில் ஏதோவொரு காரச் சட்னி

   09) ஐஸ் கிரீம் + மெல்லிய வேபர் பிஸ்கட்களுடன்

   10) வெற்றிலை பாக்கு .... பீடா போல மடித்தது

   இவற்றில் (6) இல் உள்ள பூரிகள் சென்னா இல்லாமல் + (8) இல் உள்ள தயிர்சாதம் + ஊறுகாய்கள் மட்டும் நான் எனக்காக வாங்கிக்கொண்டேன்.

   பிறகு கை கழுவிக்கொண்டு (9) ஐஸ் க்ரீம் கொஞ்சூண்டு எடுத்துக்கொண்டேன் (10) குமட்டல் இல்லாமல் இருக்க ஒரே ஒரு வெற்றிலையை பீடா போல மடித்து வாங்கிக்கொண்டேன்.

   வெளியேறும் போது தேங்காய், வெற்றிலை-பாக்கு போட்ட முஹூர்த்தப்பை ஒன்று கொடுத்தார்கள். அதில் ஒரு குட்டியூண்டு புத்தகமும், ஒரு சின்ன லாடும் + ஒரு சின்ன மிக்சர் பாக்கெட்டும் இருந்தன.

   Delete
 23. போன பதிவுல ஏற்கனவே கமெண்ட் போட்டிருந்தேன். மறந்துபோயி மறுபடி வந்துட்டேன்.. பரவால்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..)

  இந்த பதிவும் படங்களும் நல்லா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் March 20, 2017 at 3:08 PM

   வாங்கோ ரோஜா, வணக்கம்மா.

   //போன பதிவுல ஏற்கனவே கமெண்ட் போட்டிருந்தேன். மறந்துபோயி மறுபடி வந்துட்டேன்.. பரவால்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..)//

   நீ முன்பெல்லாம் சிரத்தையாகவும் ஆசை ஆசையாகவும் என் ஒரே பதிவுக்கு 25-30 கமெண்ட்ஸ் எல்லாம் கொடுத்தது உண்டு. உதாரணமாக இதோ இந்தப்பதிவு:

   http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

   இப்போது மிகவும் கஞ்சத்தனமாக ஓரிரண்டு கமெண்ட்ஸ் மட்டும் அதுவும் ஏனோ தானோ என்று கொடுத்துவிட்டு, அதுவும் ரிப்பீட்டாக இரண்டாம் முறை கொடுத்துவிட்டதாகவும், அதனை நான் அட்ஜஸ்ட் செய்துகொள்ளணும் எனச் சொல்லி என்னை நீ வெறுப்பேற்றுகிறாய். இது நியாயமா ராஜாத்தி?

   //இந்த பதிவும் படங்களும் நல்லா இருக்கு.//

   எனினும் உன் வருகையும் ஷார்ட் & ஸ்வீட் கமெண்டும் எனக்கு அந்த ’போளி’ போல நல்லாத்தான் இருக்குது. :)

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிகள்.....ப்பா.

   Delete
 24. முத படம் பாத்து நானுகூட அப்படித்தான் நெனச்சுபிட்டேன்..இரவு டின்னர் மெனு என்ன ????

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. March 20, 2017 at 3:19 PM

   வாம்மா .... மீனா .... வணக்கம்.

   //முத படம் பாத்து நானுகூட அப்படித்தான் நெனச்சுபிட்டேன்..//

   எதைப்பார்த்து என்ன நினைத்தாயோ! எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனினும் எனக்கு மகிழ்ச்சியே.

   [’வடையை எண்ணச் சொன்னால் துளையை எண்ணக்கூடாது’ என்று ஒரு பழமொழி உண்டு. அதனால் நானும் இதனைப் பற்றி மேலும் ஏதும் உன்னிடம் கிளற விரும்பவில்லை]

   //இரவு டின்னர் மெனு என்ன ????//

   அதுபற்றி மேலே நம் ‘போளி’ பதிவருக்கான என் பதிலில் எழுதியுள்ளேன். அதையே நீயும் படிச்சு தெரிஞ்சுக்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

   நீண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் இங்கு உன் அபூர்வ வருகைக்கு, என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் .... மீனாக்குட்டி.

   Delete
 25. ஆஹா இங்கூட்டு எங்கட சோட்டுகாரிகல்லா வந்திருக்காஹ.....

  எங்கட குருஜிக்குதா எம்பூட்டு சோட்டுகாராக.. அல்லா பேத்துக்கும் அளகா பதிலு கமெண்டு போடுறாக.

  குருஜி மொதக படத்துல இட்டளி பானையில ஓட்டவடை இருக்குதுல்லா. அத பொறவால எண்ணையில ஃப்ரை பண்ணுவாகளா..கல்யாண வூட்டாண்ட இன்னா சாப்புட்டுபிட்டிங்க ஒங்கட தட்டுல எதுமே இல்லியே..

  ReplyDelete
  Replies
  1. mru March 20, 2017 at 6:18 PM

   வாம்மா ...... முருகு. வணக்கம்மா.

   //ஆஹா இங்கூட்டு எங்கட சோட்டுகாரிகல்லா வந்திருக்காஹ.....//

   சோட்டுக்காரிகளா? அப்படின்னா என்ன முருகு? எல்லோரையும் நீ சகட்டு மேனிக்குத் திட்டுவது போல இருக்குது எனக்கு. :)

   //எங்கட குருஜிக்குதா எம்பூட்டு சோட்டுகாராக..//

   அடடா ..... மேலே ’சோட்டுக்காரிகள்’. இங்கே ’சோட்டுகாராக’ ! ஒன்றுமே என்னால் வெளங்கிட ஏலலையே முருகு.

   //அல்லா பேத்துக்கும் அளகா பதிலு கமெண்டு போடுறாக. //

   அல்லா .... அல்லா .... அல்லா ....
   நீ இல்லாத இடமே இல்லை ....
   நீ தானே .... உலகில் எல்லை ....
   அல்லா .... அல்லா .... அல்லா !

   பாடல் ஞாபகத்துக்கு வருகிறது.

   அல்லாவின் அருளால் மட்டுமே என்னால் அல்லா பேத்துக்கும் அளகா பதிலு கமெண்டு போட முடிந்துள்ளது முருகு. :)

   //குருஜி மொதக படத்துல இட்டளி பானையில ஓட்டவடை இருக்குதுல்லா. அத பொறவால எண்ணையில ஃப்ரை பண்ணுவாகளா..//

   இந்த ஓட்டவடை சமாசாரங்களை நான் மிகவும் ரஸித்து, ருஸித்து டேஸ்ட் செய்து சாப்பிட்டு, அடிக்கடி எஞ்ஜாய் செய்வதோடு சரி முருகு. அது எப்படிப் பக்குவம் அடைந்து இவ்வளவு ஒரு ருசியாக ஆகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சிகள் செய்தது இல்லை .... முருகு. இதெல்லாம் பொம்பளைங்க சமாஜாரம் என விட்டு விடுவேன். :)

   //கல்யாண வூட்டாண்ட இன்னா சாப்புட்டுபிட்டிங்க ஒங்கட தட்டுல எதுமே இல்லியே..//

   நான் பூரிகள் + தயிர் சாதம் + ஊறுகாய் + கொஞ்சூண்டு ஐஸ் கிரீம் மட்டும் எடுத்துக்கொண்டு சப்பிட்டேன் .... ஸாரி ..... சாப்பிட்டேன். மற்றபடி அங்கு என்னென்ன சாப்பாடுகள் இருந்தன என்பதைப்பற்றி மேலே திருமதி. ஷாமைன் பாஸ்கோ மேடத்துக்கான என் பதிலில் எழுதியுள்ளேன். அதைப் படிச்சு நீயும் தெரிஞ்சுக்கோ முருகு.

   அப்புறம் நம் ஷாமைன் பாஸ்கோ மேடம் ’போளி’ செய்வது பற்றி ஒரு வீடியோ பதிவு கொடுத்திருக்காங்கோ. அது எனக்கு மட்டும் இன்னும் ஏனோ ஓபன் ஆகவே இல்லை. அதில் நம் சோட்டுக்காரிகள் நிறைய பேரு வந்து கமெண்ட்ஸ் கொடுத்துக் கலக்கி இருக்காங்கோ. நீயும் போய் மேலும் கலக்கி விட்டு வா .... முருகு. இதோ அதன் இணைப்பு:

   http://htppeace.blogspot.in/2017/03/blog-post_7.html

   அன்புடன் குருஜி :)

   Delete
 26. முனைவர் பழனி கந்தசாமி ஐயா வந்ததன் நோக்கம், அறிந்து கொண்டேன். திருமண மண்டபத்தில் வலைப்பதிவர்கள் சந்தித்த விபரமும் அறிந்தேன். முனைவர் ஐயா அவர்கள் இன்று போல் என்றும் எழுச்சியுடனும், உடல் நலத்துடனும் திகழ நானும் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஞா. கலையரசி March 20, 2017 at 8:49 PM

   வாங்கோ மேடம். வணக்கம் மேடம்.

   //முனைவர் பழனி கந்தசாமி ஐயா வந்ததன் நோக்கம், அறிந்து கொண்டேன். திருமண மண்டபத்தில் வலைப்பதிவர்கள் சந்தித்த விபரமும் அறிந்தேன். முனைவர் ஐயா அவர்கள் இன்று போல் என்றும் எழுச்சியுடனும், உடல் நலத்துடனும் திகழ நானும் வாழ்த்துகிறேன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், தெளிவான நல்ல பல கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   Delete
 27. மகிழ்ச்சியான தருணங்களை எங்களுக்கும் காண கொடுத்தமைக்கு மிகவும் நன்றி..


  ReplyDelete
  Replies
  1. Anuradha Premkumar March 21, 2017 at 10:22 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மகிழ்ச்சியான தருணங்களை எங்களுக்கும் காண கொடுத்தமைக்கு மிகவும் நன்றி..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 28. இரு தம்பதிகளும் வாழ்க பல்லாண்டு..
  மிகவும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. mohamed althaf March 21, 2017 at 12:24 PM

   //இரு தம்பதிகளும் வாழ்க பல்லாண்டு.. மிகவும் நன்றி//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   Delete
 29. ஒரு எழுத்தாளர் - அதுவும் வலைப்பதிவர் - அதிலும் மூத்த பதிவர் - இடுகைக்கு கேட்கவேண்டுமா? அதுவும் என்.எஸ்.கே. அவர்கள் ஒரு பாடலில் பாடியதைப்போல ஜிலு ஜிலு ஜிப்பா அணிந்த ஒரு யூத் கூட போய்...'வாத்யார்' வந்தாலே சபை 'நெறஞ்சிடுமே'...சக வலைப்பதிவர்களுடன் சந்திப்பு...பூரி, தயிர் சாதத்துடன் மோர்மிளகாய்...பஸ் ஏத்திவிட்டதுடன்...வீடு போய் சேரும் வரை ஒரு சரிபார்ப்பு...அதான் விஜிகே ஸ்டைல்...ஏதோ நானும் கூடவே வந்து பாத்தாப்ல இருக்குது...ஆரண்ய நிவாஸ் புதுத்தம்பதிகளுக்கு எங்களின் நல் வாழ்த்துகள்...!!! தம்பதிகளுக்கு தந்த பிரசன்டேஷனைவிடவும் இந்த ப்ரசன்டேஷன் சூப்பர்போலயே!!! அஸ் யூஷுவல்...கலக்கல்...!!!;-)))

  ReplyDelete
  Replies
  1. RAVIJI RAVI March 21, 2017 at 2:07 PM

   வாங்கோ சின்ன வாத்யாரே .... வணக்கம்.

   //ஒரு எழுத்தாளர் - அதுவும் வலைப்பதிவர் - அதிலும் மூத்த பதிவர் - இடுகைக்கு கேட்கவேண்டுமா?//

   அடா... அடா... அடா... அடடா ! :)

   //அதுவும் என்.எஸ்.கே. அவர்கள் ஒரு பாடலில் பாடியதைப்போல ஜிலு ஜிலு ஜிப்பா அணிந்த ஒரு யூத் கூட போய்...'வாத்யார்' வந்தாலே சபை 'நெறஞ்சிடுமே'... சக வலைப்பதிவர்களுடன் சந்திப்பு... பூரி, தயிர் சாதத்துடன் மோர்மிளகாய்...பஸ் ஏத்திவிட்டதுடன்...வீடு போய் சேரும் வரை ஒரு சரிபார்ப்பு...அதான் விஜிகே ஸ்டைல்... ஏதோ நானும் கூடவே வந்து பாத்தாப்ல இருக்குது...//

   மிகவும் சந்தோஷம்.

   //ஆரண்ய நிவாஸ் புதுத்தம்பதிகளுக்கு எங்களின் நல் வாழ்த்துகள்...!!!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   //தம்பதிகளுக்கு தந்த பிரசன்டேஷனைவிடவும் இந்த ப்ரசன்டேஷன் சூப்பர்போலயே!!! அஸ் யூஷுவல்...கலக்கல்...!!!;-)))//

   தங்களின் அபூர்வ வருகைக்கும், ஆஸ் யூஷுவலான கலக்கலான கல கலாக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 30. திருமண நிகழ்வினை நேரடியாகக்
  கண்ட மகிழ்ச்சி
  படங்களுடன் பகிர்ந்த விதம்
  ஆங்காங்கே இணைப்பினைக் கொடுத்துச்
  சென்றவிதம்
  மிக மிக அருமை
  (இங்கு இந்தச் சூழலுக்கு இன்னும் மிகச் சரியாகச்
  செட் ஆகவில்லை
  பனிப்பொழிவு அதிகம் உள்ளது )
  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
  Replies
  1. Ramani S March 22, 2017 at 3:42 PM

   வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

   //திருமண நிகழ்வினை நேரடியாகக் கண்ட மகிழ்ச்சி
   படங்களுடன் பகிர்ந்த விதம் ஆங்காங்கே இணைப்பினைக் கொடுத்துச் சென்றவிதம் மிக மிக அருமை. வாழ்த்துக்களுடன்....//

   தங்களின் அன்பான வருகைக்கும், இனிமையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   //(இங்கு இந்தச் சூழலுக்கு இன்னும் மிகச் சரியாகச்
   செட் ஆகவில்லை. பனிப்பொழிவு அதிகம் உள்ளது)//

   Please take care Sir.

   இங்கு வழக்கம்போல் வெயில் கொளுத்தி வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு மிக அதிகமாகும் சூழ்நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் எல்லோரிடமுமே ஏற்பட்டுள்ளது. நல்லவேளையாக நீங்கள் தப்பித்து தற்சமயம் அங்கு போய் ஜில்லென்று பனிப்பொழிவில் அமர்ந்துள்ளீர்கள். :))))) வாழ்த்துகள்.

   Delete
 31. எல்லோருக்கும் இனிய வாழ்த்துகள்

  மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  ReplyDelete
 32. நிறைவான தகவல்களுடன் விவரித்திருக்கிறீர்கள் . நானும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுபோல் உணர்கிறேன் . உங்களுக்கு நன்றி . ஐயா நலமாய்ப் போய்ச்சேர்ந்தாரா என்று எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டுள்ளீர்கள் ! பாராட்டுகிறேன் .

  ReplyDelete
  Replies
  1. சொ.ஞானசம்பந்தன் March 24, 2017 at 3:29 PM

   வாங்கோ ஐயா, நமஸ்காரங்கள் + வணக்கங்கள் ஐயா.

   //நிறைவான தகவல்களுடன் விவரித்திருக்கிறீர்கள். நானும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுபோல் உணர்கிறேன். உங்களுக்கு நன்றி.//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா.

   //ஐயா நலமாய்ப் போய்ச்சேர்ந்தாரா என்று எவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டுள்ளீர்கள் ! பாராட்டுகிறேன்.//

   எனக்கு எப்போதுமே ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமும், எழுபது வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடமும் ஓர் தனி பாசமும், அன்பும், அக்கறையும் உண்டு.

   இவர்கள் இரு சாராரும் இந்த உலகைப் பார்க்கும் பார்வையே தனி அழகாக இருக்கும். இவர்களிடம் நாம் கற்க வேண்டியது ஏராளம் ஏராளம் என எனக்குள் நினைத்துக்கொள்வேன். :)

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   Delete
 33. பதிவும் புகைப்படங்களும் வழக்கம் போல அருமை + அற்புதம் விஜிகே சார். கலந்துகொண்ட உணர்வை ஏற்படுத்தியது. திரு ஆர் ஆர் ஆர் அவர்களின் புதல்விக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. Thenammai Lakshmanan March 26, 2017 at 3:26 PM

   வாங்கோ ஹனி மேடம், வணக்கம். செளக்யமா?

   //பதிவும் புகைப்படங்களும் வழக்கம் போல அருமை + அற்புதம் விஜிகே சார். கலந்துகொண்ட உணர்வை ஏற்படுத்தியது.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //திரு ஆர் ஆர் ஆர் அவர்களின் புதல்விக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//

   மிகவும் சந்தோஷம்.

   நீங்கள் எல்லோரும் அடிக்கடி முகநூல் பக்கம் தாவிச் செல்வது போல நான் இப்போது மின்னூல் பக்கம் தாவிச் சென்றுள்ளேன். என்னுடைய படைப்புக்களையெல்லாம் மின்னூல் வடிவில் கொண்டு வருவதில், மிகத் தீவிரமாக இறங்கியுள்ளேன்.

   இதுவரை இந்த மாதம் கடந்த ஒரே வாரத்திற்குள் (17.03.2017 முதல் 23.03.2017 வரை) என்னுடைய எட்டு மின்னூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுபற்றி இதோ இந்த இணைப்பினில் போய் தலையோடு காலாகப் பார்த்தால் உணரலாம்.

   http://www.pustaka.co.in/home/author/v-gopalakrishnan

   இன்னும் மேலும் என்னுடைய ஏராளமான மின்னூல்கள் (e-books) வெளிவரவும் உள்ளன.

   இதே வேலைகளில் மிகத் தீவிரமாக நான் மூழ்கியிருப்பதால், மற்ற சில பதிவர்களின் பக்கம் போய் பதிவுகளைப் படிக்கவும், பின்னூட்டங்கள் இடவும் தற்சமயம் எனக்கு நேரமில்லாமல் உள்ளன. இதே நிலைமை மேலும் ஓரிரு மாதங்களுக்கு நீடிக்கலாம். தயவுசெய்து பொறுத்துக்கொள்ளவும்.

   இந்த என் பக்கம் தங்களின் அபூர்வ வருகைக்கும், ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   என்றும் அன்புடன் VGK

   Delete
 34. //அங்கு அளிக்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு, தினமும் சாப்பிடும் என் வீட்டு சாப்பாட்டையும் விட மிகவும் அருமையாகவும் ருசியாகவும் இருந்ததாக என்னால் உணர முடிந்தது.//

  இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மன்னியின் சமையலை சாப்பிட்டு, சாப்பிட்டு தான் இந்த தொப்பை என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. //இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மன்னியின் சமையலை சாப்பிட்டு, சாப்பிட்டு தான் இந்த தொப்பை என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! எனக்கும் ஜெயா மாதிரி ஸ்லிம்மா இருக்கணும்னுதான் ஆசை. என்ன செய்வது?

   சூதுவாது இல்லாதவனாக நான் உள்ளதால், ஒருவேளை இதுபோல ஆயிட்டேனோ என்னவோ :)

   ’தொப்பை’ யின் பயன்கள் இதோ இதில் உள்ளது பாருங்கோ:

   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html
   கவிதை ....... ’உனக்கே உனக்காக’

   Delete
 35. //நல்ல மனம் கொண்ட நம் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மேலும் பல்லாண்டுகள் இதேபோல பேரெழுச்சியுடன் திகழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கொள்கிறேன்.
  //
  அவரை வணங்கி வாழ்த்துவதில் நானும் இணைந்து கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   Delete
 36. //ஒரு கலையுமே நம்மை எட்டவோ, நாம் அந்தக் கலையைப்பற்றி அறியவோ, அதில் கொஞ்சம் தேர்ச்சி பெற்று, அதில் நமக்கு வெற்றி வாய்ப்புக் கிட்டவோ, ஒரு நல்ல காலம், ஒரு நல்ல நேரம், நமக்கான அதிர்ஷ்டம், கொடுப்பிணை, ’கலையரசி’யாம் சரஸ்வதி கடாக்ஷம் போன்றவைக் கூடி வந்து கைகொடுத்து உதவ வேண்டும்.//

  ஸார் ஸரஸ்வதி தன் கடாஷத்தை உங்களுக்கு தாராளமாகவே வழங்கி இருக்காங்க. மின்னூல் பத்தி தெரியாதவங்களுக்கு கூட உங்க தெளிவான விளக்கங்கள்மூலம் தெரிந்து கொள்ள முடியும்..... வாழ்த்துகளும்..பாராட்டுகளையும்... ஸார்..

  ReplyDelete
 37. இந்த என் பதிவின் கடைசியில், இன்று 28.05.2017 ஞாயிறு புதிதாக இரண்டு படங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இது இங்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 38. ரெண்டு புதிய படத்தையும் பார்த்துட்டோம். அஷ்டாவதானி அவர்களைத் தவிர மற்றவர்களைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. (ஆரண்யநிவாஸ் மட்டும் கண்டுபிடித்திருக்க முடிந்திருக்காது).

  படத்தைப் பார்க்க இடுகைக்கு வந்தால், மேலே கொழுக்கட்டைகள். இன்னைக்குத்தான் ரமலான் நோன்பு 2ம் நாள் (எங்கயும் இரவு 6.30க்கு மேல்தான், சாப்பிடும் கடைகள் திறந்திருக்கும். வெளில தண்ணி கூட குடிக்கக்கூடாது. தவறினால், நிச்சயம் ஜெயில்தான். விதிவிலக்கு, குட்டிக் குழந்தைகளுக்கு). கொழுக்கட்டைகள் பார்த்தால் பசி வருது. எப்பயோ எடுத்த படம்னாலும், கொழுக்கட்டை சூடாவும் சுவையாகவும் பார்க்கத் தெரிகிறது.

  ம்.ம்... உங்களுக்கென்ன. ஃபேக்டரி வீட்டிலேயே இருக்கு. வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழன் May 28, 2017 at 3:34 PM

   வாங்கோ ஸ்வாமீ. வணக்கம்.

   //ரெண்டு புதிய படத்தையும் பார்த்துட்டோம். அஷ்டாவதானி அவர்களைத் தவிர மற்றவர்களைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. (ஆரண்யநிவாஸ் மட்டும் கண்டுபிடித்திருக்க முடிந்திருக்காது).//

   மிக்க மகிழ்ச்சி.

   //படத்தைப் பார்க்க இடுகைக்கு வந்தால், மேலே கொழுக்கட்டைகள். இன்னைக்குத்தான் ரமலான் நோன்பு 2ம் நாள் (எங்கயும் இரவு 6.30க்கு மேல்தான், சாப்பிடும் கடைகள் திறந்திருக்கும். வெளில தண்ணி கூட குடிக்கக்கூடாது. தவறினால், நிச்சயம் ஜெயில்தான். விதிவிலக்கு, குட்டிக் குழந்தைகளுக்கு).//

   தெரியும் ஸ்வாமீ. நாடு நாடாக தினமும் விமானத்தில் சுற்றும் என் ஸீமந்த புத்ரனும் தங்களைப் போலவேதான் இந்த ரமலான் நோன்பு விரதத்தை பல வருஷங்களாக அனுஷ்டித்து வருகிறான். :)

   //கொழுக்கட்டைகள் பார்த்தால் பசி வருது.//

   உங்கள் பாடு பரவாயில்லை ஸ்வாமீ. எதையும் நினைத்தால் வக்கணையாக செய்து சாப்பிட்டுவிடும் திறமைகள் உள்ளவராக இருக்கிறீர்கள். ஒவ்வொரு ஸோமவாரமும் ‘எங்கள் ப்ளாக்’கில்தான் பார்த்து வருகிறேனே. :)

   //எப்பயோ எடுத்த படம்னாலும், கொழுக்கட்டை சூடாவும் சுவையாகவும் பார்க்கத் தெரிகிறது.//

   அது படத்தில் இருப்பதால் அப்படித்தான் இருக்கும். இல்லாதுபோனால் இதோ https://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html இந்தப்பதிவினில் பகுதி-5 இல் நான் எழுதியுள்ளதுபோல ஆகியிருக்கும்.

   //ம்.ம்... உங்களுக்கென்ன. ஃபேக்டரி வீட்டிலேயே இருக்கு. வாழ்க.//

   ஏதோ நான் செய்துள்ளதோர் அதிர்ஷ்டம் .... அன்று என் தாயாரால், நடுவில் என் தாரத்தால் இப்போது என் மருமகளால் என, என் வண்டி இன்றுவரை மிகவும் ஸ்மூத் ஆகவே ஓடிக்கொண்டு உள்ளது. சாப்பிட்ட தொந்தி அனைவரையும் வாழ்த்தி வருகிறது.

   தொந்தி என்றதும் நான் எழுதியதோர் கவிதை நினைவுக்கு வந்துவிட்டது. http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html அதில் உள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள் (தற்சமயம்): 106

   அன்புடன் கோபு

   Delete
 39. Replies
  1. சற்றே தாமதமானாலும், நாம் எல்லோரும் உள்ள இந்தப் படத்தினை எனக்கு அனுப்பிக்கொடுத்ததற்கு என் நன்றிகள், ஸ்வாமீ.

   Delete
 40. புதிதாக இணைத்த படங்களை பார்த்து விட்டேன்.

  ReplyDelete
 41. புதிய படங்களையும் பார்த்து விட்டோம் சார்.....சூப்பர்...

  ReplyDelete
 42. ஆஹா புதிய படங்களை எதுக்குப் பழைய போஸ்ட்டில் இணைச்சீங்க கோபு அண்ணன்... இன்னொரு போஸ்ட் எழுதி அதில் இணைச்சு, இந்த லிங்குடன் லிங் பண்ணியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்:)..

  இதுக்குத்தான் எந்த ஒரு விசயத்துக்கும் அதிராட்ட ஐடியாக் கேட்கோணும் எனச் சொல்லுவினம்:).. ஆர் சொல்லுவினம் எனக் கேய்க்கப்பூடாது:)..

  இப்போ பலபேர் இப்படங்களைப் பார்க்கப் போவதில்லை எல்லோ...

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira May 28, 2017 at 8:26 PM

   //ஆஹா புதிய படங்களை எதுக்குப் பழைய போஸ்ட்டில் இணைச்சீங்க கோபு அண்ணன்... இன்னொரு போஸ்ட் எழுதி அதில் இணைச்சு, இந்த லிங்குடன் லிங் பண்ணியிருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்:)..

   இதுக்குத்தான் எந்த ஒரு விசயத்துக்கும் அதிராட்ட ஐடியாக் கேட்கோணும் எனச் சொல்லுவினம்:).. ஆர் சொல்லுவினம் எனக் கேய்க்கப்பூடாது:)..

   இப்போ பலபேர் இப்படங்களைப் பார்க்கப் போவதில்லை எல்லோ...//

   யார் பார்த்தால் என்ன .... பார்க்காது போனால் என்ன .... எங்கட அதிரா பார்த்தாலே அனைவரும் பார்த்தது போல ஓர் அலம்பல் உள்ளதே! அது ஒன்றே போதும் எனக்கு.

   ’வெங்கலக்கடையில் யானை புகுந்ததுபோல’ என ஓர் பழமொழி சொல்லுவாங்கோ.

   ’பின்னூட்டப்பகுதியில் பூனை புகுந்ததுபோல’ என இனி அதனை மாற்றிச் சொல்லணும் போலிருக்குது. :)

   Delete
 43. அதுசரி இணைத்ததுதானே புதுசு, படம் அன்றே எடுத்ததுதானே? ஆனா எப்படி கோபு அண்ணன் புதுசா இணைச்சதில் மட்டும் குண்டாக இருக்கிறார்????.. ................... என்று நான் கேட்கப்போவதில்லை எனச் சொல்ல வந்தேன்ன்:)..

  படங்கள் அயகு:).. இப்போ அந்தத் தம்பதிகளுக்குக் குழந்தையும் கிடைச்சிருக்கும்.. இப்பபோய் பழசில படம் இணைச்சுக்கொண்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்:)..

  சரி சரி என் நாரதர் கலகம் இத்தோடு முடிகிறது மீண்டும் சந்திக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. asha bhosle athira May 28, 2017 at 8:29 PM

   //அதுசரி இணைத்ததுதானே புதுசு, படம் அன்றே எடுத்ததுதானே? ஆனா எப்படி கோபு அண்ணன் புதுசா இணைச்சதில் மட்டும் குண்டாக இருக்கிறார்????.. ................... என்று நான் கேட்கப்போவதில்லை எனச் சொல்ல வந்தேன்ன்:)..//

   மிகவும் ஸ்லிம்மாக உள்ள என்னை அநியாயமாக இப்படி குண்டாக ஆக்கிக் காட்டியுள்ளார் அந்த வழுவட்டையான கேமரா மேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

   //படங்கள் அயகு:)..//

   உங்கள் பின்னூட்டமும் அய்ய்ய்ய்ய்கோ அய்கூஊஊஊஊஊதான். :)

   //இப்போ அந்தத் தம்பதிகளுக்குக் குழந்தையும் கிடைச்சிருக்கும்.. இப்பபோய் பழசில படம் இணைச்சுக்கொண்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்:)..//

   இன்னும் கல்யாணம் ஆகி 90 நாட்கள்கூட ஆகவில்லை. அதற்குள் குழந்தை கிடைச்சிருக்குமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஒருவேளை அந்தப்பொண்ணு ஸ்நானம் பண்ணாமல் (அதாவது தலை முழுகாமல்) இருக்குமோ என்னவோ. :)))))

   //சரி சரி என் நாரதர் கலகம் இத்தோடு முடிகிறது மீண்டும் சந்திக்கலாம்.//

   ’நாரதர் கலகம் எப்போதும் நன்மையிலே மட்டுமே முடியும்’ என்பார்கள்.

   மீண்டும் எப்போது எங்கு சந்திக்கலாம்ன்னு சொல்றீங்கோ????? நேக்கு ஒரே பயமாக்கீதூஊஊஊஊ.

   இன்று நள்ளிரவு 12.05 க்கு, ஒரு புதிய கச்சேரி உள்ளது. மறந்துடாதீங்கோ. :)

   Delete
 44. புதிதாக இணைத்துள்ள படங்கள் தெளிவாக இருக்கு ..அனைவரையும் ஒருசேர பார்ப்பது மகிழ்ச்சி ..

  ReplyDelete
  Replies
  1. Angelin May 29, 2017 at 1:53 AM

   //புதிதாக இணைத்துள்ள படங்கள் தெளிவாக இருக்கு .. அனைவரையும் ஒருசேர பார்ப்பது மகிழ்ச்சி ..//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

   Delete
 45. நம் பதிவர் இல்லத் திருமண விழாவில்
  பதிவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை
  படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை

  சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து
  கலந்து கொண்ட கணேசன் அவர்களுக்கும்
  முனைவர் ஐயா அவர்களுக்கும்
  பதிவர்கள் சார்பில் நல்வாழ்த்துக்கள்

  முன்பெல்லாம் ஒரு ஊர் குறித்த
  பேச்சு வந்தால் அந்த ஊரின் சிறப்புக் குறித்த
  நினைவுகள் வரும்

  இப்போதெல்லாம் அந்த ஊரில் உள்ள
  பதிவர்களே நினைவுக்கு வருகிறார்கள்

  இது எனக்கு மட்டும்தானா எனத் தெரியவில்லை

  படங்களுடன் பகிர்ந்த விதம், மிகக் குறிப்பாக
  முனைவர் பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தது வரை
  அக்கறை கொண்ட விதம் மனம் கவர்ந்தது

  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. Ramani S May 29, 2017 at 5:30 AM

   நம் பதிவர் இல்லத் திருமண விழாவில் பதிவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை. .......... ......... .......... ...

   படங்களுடன் பகிர்ந்த விதம், மிகக் குறிப்பாக முனைவர் பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தது வரை அக்கறை கொண்ட விதம் மனம் கவர்ந்தது.
   வாழ்த்துக்களுடன்...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   Delete
 46. மிக அருமை. நாங்கள் இங்கேயே இருந்திருந்தால் கட்டாயமாய்க் கலந்து கொண்டிருப்போம். இன்று தான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன். ஆனால் கணேஷ் பாலா மூலமாக முகநூலில் திருமணம் நடந்தது குறித்து அறிந்து கொண்டேன். :)

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam May 29, 2017 at 6:33 AM

   மிக அருமை.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete