About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, January 3, 2019

யஜுர் வேத பர்வதம் .. YOU-TUBE AUDIO BY 'GOPU'

'யஜூர் வேத பர்வதம்'
ஆங்கரை ப்ரும்மஸ்ரீ. 
A.M. வைத்யநாத கனபாடிகள்


அன்புடையீர்,

அனைவருக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்.

'EXPERIENCE WITH MAHA PERIYAVA' என்ற தலைப்பில் யூ-ட்யூப்பில் பலரையும் பேட்டி எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டவர்களின் பேட்டிகள் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.

இதுவிஷயம், நம் அன்புக்குரிய வலைப்பதிவர் ’ஆச்சி ஆச்சி’ மூலம் அடியேன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதுடன், அடியேனும் ஒரு பேட்டி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம், கடந்த ஓராண்டாக, ஆச்சி அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். 

அதேபோல பேட்டி எடுக்கும் இரு தோழர்களையும் மாற்றிமாற்றி, ஆச்சியே தொடர்புகொண்டு, அடியேனை நேரில் சென்று, பேட்டி காணவேண்டும் என  தனது நீண்ட நாள் ஆவலை அவர்களிடம், நிர்பந்தப் ப...டு...த்...தி, கேட்டுக்கொண்டிருப்பார்கள் போலிருக்குது. 



’ஆச்சி’ பற்றி மேலும் அறிய இதோ சில இணைப்புகள்:

அன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது!

அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]

சந்தித்த வேளையில் ..... பகுதி 5 of 6



’ஆச்சி’ போட்ட அதிரடி + அவசர உத்தரவால் அரண்டுபோன, பேட்டி காண்போர், திருச்சிக்கு வருகை தந்து என்னை நேரில் சந்தித்து, நேரடியாகப் பேட்டி காண, கால-நேர-சூழ்நிலைகள் ஒத்து வராததால், என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆடியோவாக பேசி பதிவு செய்து அனுப்பி வைத்துவிடுமாறு, வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டார்கள்.

அதன்படி அடியேன் 12.12.2018 புதன்கிழமை, நல்ல முஹூர்த்த நாளில், திருச்சியில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்கோயில் கும்பாபிஷேகத்தன்று, திருவானைக்கோயில் சங்கர மடத்திற்கு வருகை தந்து சிறப்பித்திருந்த, ஸ்ரீ காஞ்சி சங்கரமடத்தின் தற்போதைய பீடாதிபதி, ஸ்ரீ சங்கர விஜேயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் மூன்று கால பூஜைகளையும் திவ்ய தரிஸனம் செய்துவிட்டு, அவர்களை நமஸ்கரித்துவிட்டு, அவர்களின் திருக்கரங்களால் அனுக்கிரஹிக்கப்பட்ட பிரஸாதங்களும் கிடைக்கப்பெற்று, அவர்களின் பரிபூர்ண அனுக்கிரஹத்துடன், மூன்று தனித்தனிப் பதிவுகளாகப் பேசி அனுப்பியுள்ள செய்தித் தொகுப்புக்களின், முதல் பாகத்தை யூ-ட்யூப்பில் 14.12.2018 அன்று வெளியிட்டுள்ளார்கள். அதற்கான இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.


ஆடியோ வெளியீட்டாளர் திரு. பரத் சுப்ரமணியன் அவர்களுக்கும், அன்புக்குரிய ஆச்சி அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் பதிவினை இன்று, பிரதோஷ தினத்தில், அனுஷ நக்ஷத்திரம் சேர்ந்த குருவாரம் (வியாழக்கிழமை) வெளியிடுவதில் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன்.

 நினைத்துப் பார்க்கிறேன் 

[ http://gopu1949.blogspot.com/2011/07/3.htmlஜாம்ஷெட்பூரில் 03.02.2007 அன்று நடந்த நிகழ்ச்சியொன்றில், அகில இந்திய அளவில் முதல் பரிசும், தேசிய விருதும் (National Award with Gold Medal and First Prize in an All India Level Competition) அடியேன் பெற்றபோது, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் என்னை நேரிடையாக பேட்டி கண்டு  ஒலிபரப்பு செய்தது மலரும் நினைவுகளாக இப்போதும் என்னை மகிழ்விக்கிறது. இந்த You-Tube Audio Recording எனது இரண்டாவது மகன் சிரஞ்சீவி. G. SHANKAR அவர்களால், MOBILE SMART PHONE இல் பதிவு செய்யப்பட்டது. அவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ]




என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


26 comments:

  1. வாழ்த்துகள். ஒரே ஆடியோதானே வந்திருக்கிறது? நான் அதை நீங்கள் லிங்க் அனுப்பிய அன்றே கேட்டு விட்டேன். அருமையான அனுபவங்கள். கொடுத்து வைத்தவர் நீங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். January 4, 2019 at 5:31 AM

      வாங்கோ ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

      //வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //ஒரே ஆடியோதானே வந்திருக்கிறது? நான் அதை நீங்கள் லிங்க் அனுப்பிய அன்றே கேட்டு விட்டேன்.//

      யூ-ட்யூப்பில் மூன்று ஆடியோக்களையும் அடுத்தடுத்து சில நாட்கள் மட்டும் இடைவெளி கொடுத்து வெளியிட்டு விட்டார்கள். ஒவ்வொரு ஆடியோ பதிவுக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் பல்லாயிரக்கணக்கில் தினமும் எகிறிக்கொண்டே வந்துள்ளன.

      நூற்றுக்கும் மேற்பட்டோர் மெயில் மூலமும் தொலைபேசி மூலமும் என்னைத் தொடர்புகொண்டு, தொடர்ந்து என்னுடன், பாராட்டிப் பேசி வருகின்றனர்.

      லோக்கல் ஆசாமிகளில் சிலர் நேரிலேயே புறப்பட்டும் வந்து போய் விட்டனர்.

      இது எனக்கு முற்றிலும் ஓர் புது அனுபவம். எழுதும் அளவுக்கு என்னால் பேச இயலாமல் இருப்பது உண்டு. இருப்பினும் நானே பொறுமையாக, ஓரளவுக்குப் புரியும் படியாக, அதிகம் படபடப்பு இல்லாமல் நிதானமாக பேசியுள்ளேன். எனக்கே மிகவும் ஆச்சர்யமாகத்தான் உள்ளது. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாதான் என்னை இவ்வாறு, இப்போது பேசவும் வைத்துள்ளார் என நினைத்து எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்.

      //அருமையான அனுபவங்கள். கொடுத்து வைத்தவர் நீங்கள்.//

      மிகச் சாதாரணமானவனான அடியேனைப்பற்றியும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா மஹிமைகளைப் பற்றியும் நன்கு அருமையாக, அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள தாங்கள், முதன் முதலாக இங்கு இந்தப் பதிவுக்கு வருகை தந்து இவ்வாறு கூறியிருப்பதைக் கேட்க உண்மையிலேயே நான் கொடுத்துத்தான் வைத்திருக்கிறேன்.

      பின்னூட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்லாமல் நான் எனக்கு ஒரு FUTURE REFERENCE ஆக இருக்கட்டுமே என்று மட்டுமே, இதனை ஓர் தனிப்பதிவாக வெளியிட்டுள்ளேன். இதையடுத்து, பல்வேறு ஆச்சர்யமான செய்திகளுடனும், அபூர்வமான படங்களுடனும் மேலும் இரு பதிவுகள் வெளியிட உள்ளேன்.

      மூன்று பதிவுகளையும் முழுவதுமாகவும், கவனமாகவும் கேட்கவும், மனதில் கிரஹித்துக்கொள்ளவும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் கருணையும், அனுக்கிரஹமும், கேட்போருக்கு ஓர் கொடுப்பிணையும் இருக்க வேண்டும்.

      அன்பு நன்றிகளுடன் கோபு

      Delete
  2. பாராட்டுகள். முதல் ஆடியோ கேட்டாச்சு. மற்றவற்றையும் கேட்கணும். பிறகு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் January 4, 2019 at 7:44 AM

      வாங்கோ, ஸ்வாமீ, வணக்கம்.

      //பாராட்டுகள்.//

      மிக்க நன்றி.

      //முதல் ஆடியோ கேட்டாச்சு.//

      அப்படியா? நம்ப முடியவில்லையே ஸ்வாமீ. தங்கள் பாணியிலான, தனித்தன்மை வாய்ந்த கருத்துக்கள் என்னை இன்னும் வந்தடையவே இல்லையே, ஸ்வாமீ.

      //மற்றவற்றையும் கேட்கணும்.//

      கேளுங்கோ.... கேளுங்கோ....

      //பிறகு வருகிறேன்.//

      வரும் போது அந்த... அந்த... அந்தத் ’திரட்டுப்பால்’ நினைவிருக்கட்டும். :)

      அன்புடன் கோபு

      Delete
  3. கோபு அண்ணனின் யூ ரியூப் கதை. பெருங்கதையாக இருக்கும்போல இருக்கே.. நானும் ஒவ்வொரு வீடியோவிலும் கொஞ்சம் கொஞ்சம் கேட்டேன்ன்ன். எனக்கு கோபு அண்ணனின் உச்சரிப்பு சரியாகப் புரியுதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
    Replies
    1. அப்பாவி:) அதிரா January 4, 2019 at 10:21 AM

      வாங்கோ அதிரா, வணக்கம்.

      //கோபு அண்ணனின் யூ ரியூப் கதை. பெருங்கதையாக இருக்கும்போல இருக்கே..//

      நான் பேசியுள்ளதெல்லாம் கதைகளோ கற்பனைகளோ அல்ல. 100% உண்மை நிகழ்ச்சிகள் மட்டுமே. உண்மை. உண்மை, உண்மையைத்தவிர மிகையூட்டல் துளியும் கிடையாது.

      //நானும் ஒவ்வொரு வீடியோவிலும் கொஞ்சம் கொஞ்சம் கேட்டேன்ன்ன்.//

      ஒருவேளை அவ்வாறு கொஞ்சம் கொஞ்சம் கேட்டிருப்பீர்கள். அதிராவும் உண்மையை மட்டுமே பேசுவாங்கோ என்பது எனக்கும் தெரியும்.

      //எனக்கு கோபு அண்ணனின் உச்சரிப்பு சரியாகப் புரியுதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

      என் உச்சரிப்பு உங்களுக்குச் சரியாக புரியாமல் இருக்கலாம் என்பதை நானும் நன்கு புரிந்து கொண்டேன். நான் எங்கள் பக்க உச்சரிப்பில் கொஞ்சம் தமிழும் கலந்து பேசியுள்ளேன்.

      ஆனால் உங்கள் தமிழே தனித்தமிழ் ஆச்சே ..... உங்கள் தமிழில் பலவற்றை அஞ்சு முதலியவர்களிடம் நான் கேட்டு விளக்கம் பெற வேண்டியுள்ளதே ..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
  4. நெட் புத்தக வெளியீட்டைப் பாதியில விட்டுவிட்டு, இப்போ யூ ரியூப்புக்கு போயிட்டீங்க போல இருக்கே.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... புத்தாண்டில் இன்னும் பல வீடியோக்கள் உங்கள் குரலில் வெளிவரட்டும்.. ஆனா தனிய சாமி வீடியோவாக இல்லாமல்.. நகைச்சுவைக் கதைகளும் சொன்னால் எல்லோரும் ஆர்வமாகக் கேட்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாவி:) அதிரா January 4, 2019 at 10:22 AM

      //நெட் புத்தக வெளியீட்டைப் பாதியில விட்டுவிட்டு, இப்போ யூ ரியூப்புக்கு போயிட்டீங்க போல இருக்கே.. //

      பாதியில் விட்டுவிட்டது நான் அல்ல. நம்ம தனித் திறமைகளுக்கும், அள்ளிஅள்ளித் தந்துள்ள ஏராளமான ஆர்டிக்கில்ஸ் களுக்கும், ஈடுகொடுக்க முடியாமல் வெளியீட்டாளர்களே எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு விட்டார்கள். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! எல்லாம் ஒரு சீஸன் போலிருக்குது.

      ஈ-புக் ஆக 100 புத்தகங்கள் உடனடியாக வெளியிடுமாறு லாரி லாரியாக சரக்குகள் அனுப்பியிருந்தேன். பத்தே பத்து புக்குகள் மட்டும் வெளியிட்டுவிட்டு, எஸ்கேப் ஆகியுள்ளனர். மொத்தத்தில் எனது அருமை முழுமையாகத் தெரிய அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை.

      http://gopu1949.blogspot.com/2017/03/blog-post_30.html
      மின்னல் வேகத்தில் என் மின்னூல்கள்.

      //வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... புத்தாண்டில் இன்னும் பல வீடியோக்கள் உங்கள் குரலில் வெளிவரட்டும்..//

      ஆச்சி என்னிடம் வீடியோ என்று சொல்லி கடைசியில் அதுவும் ஆடியோ ஆகிவிட்டது. ஏதோ ஒன்று ..... சரித்தான் என நானும் விட்டுவிட்டேன். வேறு என்ன செய்ய? :))))

      //ஆனா தனியா சாமி வீடியோவாக இல்லாமல்.. நகைச்சுவைக் கதைகளும் சொன்னால் எல்லோரும் ஆர்வமாகக் கேட்பார்கள்.//

      ’சாமி’யைப் பற்றியல்லவா யூ-ட்யூப்பில் என்னைப் பேசச்சொல்லி விட்டார்கள். ’ஆசாமி’களைப் பற்றி இல்லையே.

      இருப்பினும் ‘சாமி’யைப் பற்றியும், சாமியார்களைப் பற்றியுமான இந்த ஆடியோக்கள் வெளியிடப்பட்டு ஓரிரு வாரங்களே ஆகியிருக்கும் நிலையில், இந்த மூன்று ஆடியோக்களையும் சேர்த்து, இதுவரை (2936+ 3673+ 4504) 11,113 நபர்கள்வரை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துள்ளார்கள். அதில் படிக்குப் பாதி பேர்களாவது முழுமையாகக் கேட்டு மகிழ்ந்திருப்பார்கள். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மெயில் மூலம் எனக்குப் பாராட்டுத்தெரிவித்துள்ளனர். சுமார் 20 நபர்கள் என்னுடன் தொலைபேசியில் உரையாடி மகிழ்ந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மூன்று பேர்கள் என்னை நேரில் சந்தித்து விட்டுப் போய் உள்ளனர். நம் வலையுலகைத் தாண்டி இது ஓர் தனி உலகாக என்னால் உணர முடிகிறது.

      எனது கதைகளை மிகுந்த நகைச்சுவையாகச் சொல்ல நான் ரெடி. அவற்றைப் பேட்டி எடுத்து வெளியிட நீங்கள் ரெடியா ... ’அதிரடி அதிரா’? :))

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
  5. இந்நிகழ்விற்கான வாய்ப்பும் பாக்கியமும் எனக்கும் அமைந்ததில் மகிழ்ச்சி சார்.நேர்காணல் வீடியோவும் அமைந்தால் திருப்தியாகும்.அதுவும் நடைபெற மஹா பெரியவா அருள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆச்சி ஸ்ரீதர் January 4, 2019 at 12:18 PM

      வாங்கோ ஆச்சி, வணக்கம்.

      //இந்நிகழ்விற்கான வாய்ப்பும் பாக்கியமும் எனக்கும் அமைந்ததில் மகிழ்ச்சி சார்.//

      நான் முதன் முதலாக 2011 ஜனவரி மாதம் வலையுலகில் எழுத ஆரம்பித்த போது, நீங்கள்தான் என் பதிவுகளையெல்லாம் ‘தமிழ்மணம்’ + ’இண்ட்லி’யில் இணைத்துக் கொடுத்து உதவினீர்கள். http://gopu1949.blogspot.com/2011/02/5-8_28.html

      அதன் பிறகு 2011 டிஸம்பருடன் அந்தத் தமிழ்மணம் + இண்ட்லி இணைப்புகள், என் பதிவுகளிலிருந்து தானே மறைந்து போய் விட்டன. அவை ஒரு 7-8 மாதங்கள் மட்டும் என் வலைத்தளத்தினில் இணைந்திருந்ததால் எனக்கு ஒருவித மகிழ்ச்சியோ, அவை மறைந்ததால் எனக்கு ஒருவித துக்கமோ ஏதும் அன்று எனக்கு ஏற்படவில்லை. ஏனெனில் அடியேன் தமிழ்மணம் + இண்ட்லி வோட்டுக்களை என்றுமே மதிப்பவனே அல்ல.

      பிறர் கொடுக்கும் உற்சாக பானம் போன்ற பின்னூட்டங்களை மட்டுமே ரஸித்துப் படித்துப் பொக்கிஷமாக நினைப்பவன் நான்.

      பதிவைப் படிக்காமல், பதிவுக்கு ஒழுங்காக சரிவர பின்னூட்டம் போடாமல் ’த.ம. 7’ என போட்டுச் செல்பவர்களை கண்டால் எனக்கு மிகுந்த வெறுப்பாகவும் எரிச்சலாகவுமே, அந்த நாட்களில் இருந்து வந்தது.

      இப்போதும் யூ-ட்யூப்பில் பேச வேண்டும் என்ற ஆர்வம், ஒருசில குறிப்பிட்ட காரணங்களால், எனக்கு இருக்கவே இல்லை. தாங்கள் தான், நான் சொல்லியும் கேட்காமல், மிகவும் சிரமப்பட்டு இதனை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளீர்கள். அதற்கு என் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

      //நேர்காணல் வீடியோவும் அமைந்தால் திருப்தியாகும். அதுவும் நடைபெற மஹா பெரியவா அருள வேண்டும்.//

      எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் திருவிளையாடல்கள். எது எது, எப்போ எப்போ, எப்படி எப்படி, யார் யார் மூலம் நடக்கணும் என அவர் விரும்புகிறாரோ, அது அது, அப்போ அப்போ, அப்படி அப்படி, அவர் அவர்கள் மூலம் நடந்தே தீரும்.

      ஆட்டிவைப்பவன் அவன். நாமெல்லாம் சும்மா ஒரு பொம்மலாட்ட பொம்மைகள் போல மட்டுமே, ஆச்சி.

      அன்புடன் + நன்றியுடன் கோபு

      Delete
  6. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
    கேட்டு மகிழ்ந்தேன்.
    உங்கள் குரல் நன்றாக இருக்கிறது.

    பெற்றோர்கள் மேல் பக்தி, குரு பக்தி உள்ளவர்களுக்கு வாழ்வில் உயர்வு நிச்சயம்.

    அது உண்மை என்பதை உங்கள் வாழ்க்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் நல்ல விஷயங்களை இப்படி பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு January 4, 2019 at 4:04 PM

      //வணக்கம் சார், வாழ்க வளமுடன்.//

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //கேட்டு மகிழ்ந்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //உங்கள் குரல் நன்றாக இருக்கிறது.//

      ஆஹா, என் வாழ்க்கையில், என் குரலையும் நன்றாக இருக்கிறது எனச் சொல்லியுள்ள ஒரே முதல் நபர், தாங்கள் மட்டுமே. அதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      //பெற்றோர்கள் மேல் பக்தி, குரு பக்தி உள்ளவர்களுக்கு வாழ்வில் உயர்வு நிச்சயம். அது உண்மை என்பதை உங்கள் வாழ்க்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்.//

      என் ஆடியோ பேச்சுக்களை நன்கு ஆழமாகப் புரிந்துகொண்டு, முழுவதுமாகக் கேட்டுள்ளீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மிக்க மகிழ்ச்சி, மேடம்.

      //மேலும் நல்ல விஷயங்களை இப்படி பகிர்ந்து கொள்ளுங்கள்.//

      ப்ராப்தம் இருந்து வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் செய்ய முயற்சிக்கிறேன்.

      அன்புடன் + நன்றியுடன் கோபு

      Delete
  7. இத்தனைக்கும் காரணம் எனது தங்கை ஆச்சி என்பதில் மிகவும் பெருமிதம் அன்ட் சந்தோஷமா இருக்கு ...முதலில் ஆச்சி க்கு நன்றிஸ் :)

    ReplyDelete
    Replies
    1. Angel January 4, 2019 at 6:38 PM

      //இத்தனைக்கும் காரணம் எனது தங்கை ஆச்சி என்பதில் மிகவும் பெருமிதம் அன்ட் சந்தோஷமா இருக்கு ...முதலில் ஆச்சி க்கு நன்றிஸ் :)//

      ”அனைத்துப் புகழும் ’ஆ-ச்-சி’ க்கே”
      :))))))))))))))))))))))))))))))))))))

      Delete
    2. எவ்ளோ சொதப்பினேன் இன்ட்லி,தமிழ்மணத்தில் சார்&ராஜேஸ்வரி மேம் வலைப்பூக்களை இணைக்க என்பதுதான் நினைவிற்கு வருகின்றது.இவர் வேற 2100 வரை இதை பெருந்தன்மை என்ற பெயரில் சொல்லி சொல்லி என்னை திகலாக்குகின்றார்.

      Delete
  8. காணொளி பார்த்தேன் ,மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. Angel January 4, 2019 at 6:41 PM

      வாங்கோ, வணக்கம்.

      //காணொளி பார்த்தேன், மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      அன்புடன் கோபு அண்ணா

      Delete
  9. மிக மகிழ்ச்சி ...
    நானும் கேட்டு பார்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. Anuradha Premkumar January 4, 2019 at 6:55 PM

      வாங்கோ, மேடம். வணக்கம்.

      //மிக மகிழ்ச்சி ...//

      சந்தோஷம்.

      //நானும் கேட்டு பார்கிறேன் ...//

      தாங்கள்தான் இதனை அவசியமாகக் கேட்க முடியும். தங்கள் பெயர் ராசி அப்படி.

      நான் ஏற்கனவே இதனைப் பற்றி தங்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளேன். மீண்டும் இங்கு மற்றவர்களுக்காகச் சொல்கிறேன்.

      ’அநுராதா’ என்பது அழகானதொரு வடமொழிச் சொல். (வடமொழி = சம்ஸ்கிருதம்). 27 நக்ஷத்திரங்களில் இன்று மிகச்சிறப்பாகச் சொல்லப்படும் + உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நக்ஷத்திரம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் அவதரித்த நக்ஷத்திரமான ’அனுஷம்’ இந்த அனுஷம் என்பதே வடமொழியில் ’அநுராதா’ என அழைக்கபடுவது ஆகும்.

      தங்களின் பின்னூட்டம் எனக்குக் கிடைக்கும் போதெல்லாம் நான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை நினைத்துக்கொள்வதும், மனதுக்குள் மகிழ்வதும் உண்டு.

      அன்புடன் கோபு

      Delete
  10. ஆஹா.. தங்கள் தந்தையார் ஆங்கரை ப்ரும்மஸ்ரீ வைத்தியநாத கணபாடி அவர்களா?.. ரொம்ப சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி January 4, 2019 at 8:05 PM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //ஆஹா.. தங்கள் தந்தையார் ஆங்கரை ப்ரும்மஸ்ரீ வைத்தியநாத கனபாடி அவர்களா?.. ரொம்ப சந்தோஷம்.??//

      ஆமாம் ஸார். அவருக்கு மேல் உள்ள சுமார் 10 தலைமுறைகளும் வேதாத்யயனம் செய்த வைதீகப் பரம்பரை மட்டுமே. 10-15 தலைமுறை தாத்தாக்கள் பெயர்களுடன் மிகப்பெரிய FAMILY CHART தாயாதி/பங்காளி LIST ஆங்கரையில் ஒருவரிடம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. மெத்தை போல சுருட்டி வைத்துள்ளார்கள் அவற்றை அடிக்கடி Update செய்துகொண்டும் வருகிறார்கள். எனது பேரன்கள் வரை அதில் பெயர்கள் சேர்த்து விட்டோம். :)

      Delete
  11. படம் போட்டு அதற்கான குறிப்பு எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். மஹா பெரியவா படம் போட்டு, 'பரிபூர்ண ஆசிர்வாதம்.. ஷேமமா இருங்கோ' என்ற வார்த்தைகள் மனசுக்கு இதமா இருந்தது. மிகவும் நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி January 4, 2019 at 8:08 PM

      //படம் போட்டு அதற்கான குறிப்பு எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். மஹா பெரியவா படம் போட்டு, 'பரிபூர்ண ஆசிர்வாதம்.. க்ஷேமமா இருங்கோ' என்ற வார்த்தைகள் மனசுக்கு இதமா இருந்தது. மிகவும் நன்றி சார்.//

      சமீபத்தில் யாரோ ஒரு நண்பர் எனக்கு வாட்ஸ்-அப் பில் அனுப்பியிருந்தார். சேமித்துக்கொண்டு இங்கு அதனை நான் பயன்படுத்திக்கொண்டேன். ஆம். அவை நம் மனதுக்கு மிகவும் இதமான வார்த்தைகள் தான்.

      Delete
  12. தங்கள் ஆடியோ உரை எவ்வலவு தான் ஒலி அளவைக் கூட வைத்தாலும் ஒலி மிகவும் குறைச்சலாக உள்ளது. சரிவர கேட்க
    வேறு விதங்களில் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி January 4, 2019 at 8:12 PM
      //தங்கள் ஆடியோ உரை எவ்வளவு தான் ஒலி அளவைக் கூட வைத்தாலும் ஒலி மிகவும் குறைச்சலாக உள்ளது. சரிவர கேட்க வேறு விதங்களில் முயற்சிக்கிறேன்.//

      அது நம்மிடம் உள்ள Instrument fault ஆக இருக்கக்கூடும் ஸார். ஸ்பீக்கரில் கோளாறாக இருக்கலாம். வால்யூம் அட்ஜஸ்ட்மெண்ட் சரியில்லாமல் இருக்கலாம். எனக்கும் இதே பிரச்சனைகள் இருந்து வந்தன. சமீபத்தில் என் பெரிய பிள்ளை இங்கு வந்தபோது, இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்து விட்டான்.

      அதாவது SMART-B9 MODEL: ISB9 PORTABLE ACTIVE BLUETOOTH MUSIC PLAYER என்ற ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளான். கருப்புக்கலரில் சுமார் 13 அங்குல நீளமும், 2.5 அங்குல அகலமும், 2 அங்குல உயரமும் உள்ளது. நம் மொபைல் போனிலிருந்தோ அல்லது கம்ப்யூட்டரிலிருந்தோ BLUE TOOTH மூலம் இதனை இணைத்து விட்டால் போதும். WIRELESS இணைப்பு மட்டுமே. சும்மா, அந்தக்கால டீக்கடை ரேடியோ போல அலறுகிறது. நாம் படுத்துக்கொண்டே ஜாலியாக, மணிக்கணக்காக கேட்டு மகிழலாம். அத்தனை சவுண்டு நமக்குத் தேவையில்லை என்றால் குறைத்துக்கொள்ளலாம்.

      இப்போதெல்லாம் தினமும் நான் பலமணி நேரம் இதில் தான், யூ-ட்யூப்பில் வெளியாகும் பலரின் உபன்யாசங்கள் போன்றவற்றை கேட்டு மகிழ்கிறேன். அதுபோல வாட்ஸ்-அப்பில் சிலர் பேசி அனுப்புவது நமக்குப் புரியாமல் இருக்கும். அதையும் இதில் போட்டுக் கேட்டால் சூப்பராக தெளிவாக காதில் விழுகிறது.

      அன்புடன் கோபு

      Delete
  13. https://youtu.be/fiSRFKMQ2ec

    சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல், (1965-1994) ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு நேரிடையாக கைங்கர்யம் செய்யும் பாக்யம் கிடைக்கப்பெற்ற, திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அண்ணா அவர்கள் 24.02.2002 அன்று காஞ்சீபுரம் காமாக்ஷி அம்மன் ஆலய திருக்குளத்தில் சந்நியாஸம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்டுள்ள சில அபூர்வப்படங்கள் நேற்று யூ-ட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ளன. https://youtu.be/fiSRFKMQ2ec

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete