தாயுமானவள்
சிறுகதை [பகுதி 2 of 3]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
முன்கதை முடிந்த இடம்:
பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண்குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.
அடுத்த பகுதி தொடர்கிறது ...................
”கொஞ்சம் பொறுத்துக்கும்மா, இப்போ அப்பா வந்துடுவாரு” என்றான் முனியாண்டி.
”அப்பாவும் அம்மாவும் தான் செத்துப்போய்ட்டாங்களாமே! எப்படி இப்போ வருவாங்க? என்றது அந்தப்பெண்குழந்தை.
அதைக்கேட்ட முனியாண்டிக்குத் தலை சுற்றியது.
”உங்க வீடு எங்கம்மா இருக்கு” என்றான்.
”நாகப்பத்திணம். (நாகைப்பட்டிணம் என்பதை மழலையில் சொல்கிறது) நான் ஸ்கூல் விட்டு ஆட்டோவில் திரும்ப வீட்டுக்கு வருவதற்குள் அப்பாவையும் அம்மாவையும் சுனாமின்னு ஒரு Sea Water [கடல் தண்ணீ ] வந்து அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க” குழந்தை கண்கலங்கியவாறு சொல்லியது.
”இப்போது கூட்டியாந்த மாமா யாரும்மா” முனியாண்டி அவள் கண்களை தன் வேட்டித் தலைப்பால் துடைத்து விட்டு, பரிவுடன் வினவினான்.
”அவரு யாருன்னு எனக்குத்தெரியாது அங்கிள்; அவரு தான் எங்க ஊர்லேந்து என்னை பஸ்ஸிலே கூட்டியாந்து இங்கே உங்கள்ட்டே விட்டுட்டுப் போய்ட்டாரு. ராத்திரி பஸ்ஸிலே வரும்போதே பசிக்குதுன்னு சொன்னேன். சாப்பிட எதுவுமே வாங்கித்தராம பயமுறுத்திக்கிட்டே வந்தாரு. அவரு வெரி வெரி பேடு [BAD] அங்கிள்” என்றது அந்தப்பெண் குழந்தை.
சுமார் மூன்று வயதுக்குழந்தை பசியால் அழுதது முனியாண்டியின் வயிற்றைப் பிசைந்தது.
தேர் நின்றுகொண்டிருந்த முச்சந்தியில் இருந்த “ராமா கஃபே” என்ற ஹோட்டலுக்குக் குழந்தையைக் கூட்டிச்சென்றான்.
சுற்றிமுற்றிப்பார்த்தும், அந்தத் தேர்த்திருவிழாக் கும்பலில் அந்தக் கைலிக்காரனை முனியாண்டியால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
சூடான சுவையான இரண்டு இட்லிகளை மட்டும் சாம்பார் சட்னியில் தோய்த்து சாப்பிட்டுத் தண்ணீர் குடித்த குழந்தையின் முகத்தில் ஓர் புதுப்பொலிவு.
“பலூன் அங்கிள்! யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள்!! தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.
முனியாண்டிக்கு இது ஒரு இனம் புரியாத பேரின்பத்தையும், அதே நேரம் இந்தக் குழந்தையை நான் என்ன செய்வது? என்ற கவலையையும் அளித்தது.
அம்மனின் தேர் அந்த முச்சந்தியையும், அந்த ”ராமா கஃபே” ஹோட்டலையும் தாண்டி நகரத்தொடங்கியதில், அந்தப்பகுதியில் சற்றே கூட்டம் குறைந்திருந்தது.
குழந்தையை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தேர் சென்ற திக்கிலேயே, தேரின் பின்புறமாகச் சற்று தள்ளி, தன் வியாபாரத்தையும் கவனித்துக்கொண்டு, அந்தக் கைலிக்காரனையும் தன் கண்களால் தேடிக்கொண்டு, கிரிவலமாகப் புறப்பட்டான் முனியாண்டி.
தன் வயிற்றுப்பசிக்கு, ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இலவச தண்ணீர்ப் பந்தல்களில் கிடைத்த நீர்மோர், கஞ்சி, குடிநீர் போன்ற ஏதோவொன்றை வாங்கிக்குடித்து வந்தான் முனியாண்டி.
ஆசையுடன் தன் கையில் பெரிய பலூன் ஒன்றை இறுக்கிப்பிடித்து நடந்து வந்த குழந்தைக்கு, நல்லதொரு ஸ்வீட்டான ”பலூன்அங்கிள்’ கிடைத்து விட்டதில் மட்டில்லா மகிழ்ச்சி.
ஊரு பேரு நாகப்பட்டிணம். தன் பெயரு விஜி, அப்பா பெயரு கோபால், அம்மா பெயரு ராஜி, தாங்க்யூ வெரி மச், வெரி குட், வெரி பேட், ஐ லவ் யூ சோ மச், வெரி ஸ்வீட் முதலியவை தவிர வேறு எந்தத் தகவலும் சொல்லத்தெரியாத மழலையாக இருந்தது அந்தக்குழந்தை.
மதியம் மூன்று மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிறது. அம்மன் தேர், உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலைத் தாண்டி, “சாரதாஸ்” ஜவுளிக்கடலுக்கும், “மங்கள் மங்கள்” நகைக்கடலுக்கும் இடையே, ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது.
உச்சிப்பிள்ளையார் மலைக்கோயிலின் பிரதான நுழைவாயிலில் புகுந்து, குழந்தையுடன் மாணிக்க விநாயகர் சந்நதியை அடைந்தான், முனியாண்டி.
மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள பெரிய மண்டப நிழலில் சந்தோஷி மாதா படத்தருகே சற்றே அமர்ந்தான். வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மிகக்குளுமையாகவே இருந்தது.
அங்குள்ள குருக்கள் ஐயா ஒருவர் சர்க்கரைப்பொங்கல் விநியோகம் செய்து கொண்டிருந்தார். தானும் வாங்கிக்கொண்டு, அந்தக்குழந்தைக்கும் வாங்கிக் கொடுத்தான். பலூன்கள் அனைத்தும் அநேகமாக விற்றுத்தீர்ந்திருந்தன.
தன் தலைப்பாகைத் துண்டை உதறி விரித்து, குழந்தையை ஒரு தூண் ஓரமாகப்படுக்க வைத்தான். தானும் தன் வியாபாரப்பொருட்களை ஒரு ஓரமாக வைத்து விட்டு அந்தக் குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.
குழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது. அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான்.
தொடரும்
[இந்தச் சிறுகதையின் இறுதிப்பகுதி 09.12.2011
வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்படும்]
வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்படும்]
[ இந்தச் சிறுகதை சுனாமி என்ற இயற்கைப் பேரிடர்
தமிழகத்துக்கு வந்து மனித சமுதாயத்தையே
உலுக்கிவிட்டுச்சென்ற பின்பு
2005 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்டது.
இந்தக்கதை பற்றிய மேலும் சுவையான விபரங்கள் சிலவற்றை
இதன் அடுத்த பகுதியில் விரிவாகத்தந்துள்ளேன் ]
காணத்தவறாதீர்கள்
அன்புடன்
vgk
தமிழகத்துக்கு வந்து மனித சமுதாயத்தையே
உலுக்கிவிட்டுச்சென்ற பின்பு
2005 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்டது.
இந்தக்கதை பற்றிய மேலும் சுவையான விபரங்கள் சிலவற்றை
இதன் அடுத்த பகுதியில் விரிவாகத்தந்துள்ளேன் ]
காணத்தவறாதீர்கள்
அன்புடன்
vgk
அன்புடையீர்,
பதிலளிநீக்கு04.12.2011 காலை முதல் 05.12.2011 இரவு வரை என் கணினியில் ஒரு விசித்திரமான பிரச்சனை ஏற்பட்டிருந்தது. அதாவது மின்னஞ்சல் தொடர்பு உள்ளது. ஆனால் என் வலைப்பூவினுள் என்னால் செல்ல முடியவில்லை. பிறர் வலைப்பூக்களுக்கும் என்னால் செல்ல முடியவில்லை.
Google Chrome மூலமும் Internet Explorer மூலமும் போய் என் வலைப்பூவுக்குச்செல்ல gopu1949.blogspot.com என்று அடித்து enter தட்டினால் கீழ்க்கண்ட
தகவலே வந்து கொண்டிருந்தது.
அது போல பிறரின் வலைப்பூவுக்குச் சென்றாலும், அதே போலவே சொல்லி வந்தது.
===========================
Oops! Google Chrome could not connect to gopu1949.blogspot.com
Try reloading: gopu1949.blogspot.com
Additional suggestions:
Access a cached copy of gopu1949.blogspot.com
Go to blogspot.com
Search on Google:
Google Chrome Help - Why am I seeing this page?
©2011 Google - Google Home
============================
நான் மிகவும் வெறுத்துப்போய் விட்டேன். ஆனால் மேலே வந்துள்ள தகவலில் ”Go to Blogspot.com" என்பதை கிளிக் செய்தால் என்னுடைய Dash Board க்கு மட்டும் செல்ல முடிகிறது. பிறரால் கொடுக்கப்பட்டுள்ள பின்னூட்டங்களை மட்டும் Dash Board இல் காண்பிக்கப்படும் ”கருத்துரைகளைப்பார்க்க” என்ற பகுதி மூலம் சென்று படிக்க முடிகிறது.
ஆனால் என் வலைப்பக்கத்தையோ, பிற பதிவர்களின் வலைப்பக்கங்களையோ பார்க்க முடியாமல், நானும் பிறருக்கு பின்னூட்டம் இடமுடியாமல் கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தேன்.
இதை என் மெயில் தகவல் மூலம் அறிந்த என் அன்புக்குரிய [கற்றலும் கேட்டலும்] திருமதி ராஜி அவர்கள், எனக்காக அவர்களின் பொன்னான நேரத்தைச் செலவிட்டு, என்னை பலமுறை மெயில் மூலம் தொடர்புகொண்டு, ”மன்ம் தளர வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும்” என்று ஆறுதல் அளித்து வந்தார்கள்.
எவ்வளவோ முயற்சிகள் நான் மேற்கொண்டும் ஒன்றும் சரிவராமல் போகவே சலிப்படைந்து கணினியை Switch Off செய்துவிட்டு வேறு வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன்.
பிறகு என் தொலைபேசி எண்ணை வேறொரு பதிவரிடமிருந்து பெற்று, என்னை முதன் முதலாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு,
மிகவும் பொறுமையாக, அழகாக, ஒரு நல்ல அன்பான டீச்சரம்மா, ஒரு சிறிய LKG படிக்கும் குழந்தைக்கு புரியும்படியாக பாடம் சொல்லித்தருவது போல, என்னை விட்டே கம்ப்யூட்டரில் மாற்றி மாற்றி ஏதேதோ செய்யச்சொல்லி, கடைசியில் வெற்றிகரமாக என் பிரச்சனைகளை தீர்த்து வைத்து மிகப் பெரிய உதவி செய்துவிட்டார்கள்.
அவ்ர்களின் இந்த ”காலத்தினால் செய்த உதவி” யாலேயே என்னுடைய கணினியிலிருந்தே, இப்போது இந்தப்பதிவை, நான் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 6.12.2011 அன்று வெளியிட முடிந்துள்ளது.
வலையுலகத்துடன் கடந்த ஓராண்டாக தினமும் தொடர்ந்து பழகிவிட்டதால், அதன் தொடர்பு எல்லைக்கு அப்பால் நாம் மட்டும் தனியே தள்ளப்படும் போது, அது ஏனோ சகித்துக்கொள்ளவே முடியாத கஷ்டமாகி விடுகிறது.
அந்த அளவுக்கு, அதற்கு இப்படி நாம் அடிமையாகி விட்டமோ என நினைத்தால் மிகவும் வியப்பாகத்தான் உள்ளது.
எப்படியோ என்னுடைய இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, என்னை மகிழ்வித்த,
என் பேரன்புக்குரிய திருமதி ராஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கு முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
vgk
I'm writing this after listening to the wonderful song on YouTube 'Ramanukku Mannar Mudi' on Hindolam raga, the lyrics beautifully explained by Kunnakudi, relayed earlier on Jaya TV.
பதிலளிநீக்குObviously, with this frame of mind, reading your story touches my heart. Glad that the little girl is in safe hands. There are many role model 'Muniyandis' around us - we just fail to notice them.
Yes, without computer and a broad band internet connection, our voyage into space is hampered severely, particularly for senior citizens. With this god-sent facility, we are never alone, like I can connect with you oceans away!
உங்கள் பிரச்னை ராஜி அவர்களால் தீர்ந்தது குறித்து சந்தோஷம். புத்தகமாக வெளியிட்டுள்ளீர்கள் என்று தெரிகிறது. அதை எப்படி மூன்று பதிவுகளில் சுருக்குகிறீர்கள்? அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குமுடிவை எதிர்பார்க்கிறேன்..
பதிலளிநீக்குஉங்கள் கணினி பிரச்சனை ராஜி மூலம் தீர்ந்தது குறித்து மகிழ்ச்சி.4 ஆம் தேதி அன்று வெளியிட்ட என் பதிவிற்கு வழக்கமாக வரும் தங்களின் பின்னூட்டம் மட்டும் வராதது கண்டு என்ன காரணமோ என்று குழப்பிக் கொண்டிருந்தேன். காரணம் தெரிந்ததில் தெளிவுற்றேன் சார்.
பதிலளிநீக்குஇன்று தங்களின் பதிவிற்கு என்னால் பதிவிட்ட உடனேயே பதிலிட முடிந்ததில் மகிழ்ச்சி.
சுனாமி என்ற பேரழிவால் சொந்த பந்தங்களையும் வீடு வாசலையும் இழந்த ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சோகக் கதை உள்ளது.இது போன்ற மழலைகளின் நிலை பரிதாபமே.
பதிலளிநீக்குமனதை தொடும் விதத்தில் கதை அமைந்துள்ளது.அடுத்த பகுதியில் குழந்தை முனியாண்டியின் சொந்த பெண்ணாக மாறி அவனுக்கு தாயுமானவாளாக ஆவதை அறியக் காத்திருக்கிறேன்
அந்த குழந்தையை நினைத்தால் பாவமாக உள்ளது. சுனாமியால் அழிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை...
பதிலளிநீக்குபுத்தகமாக வெளியானதில் மகிழ்ச்சி சார்.
த.ம 3
இண்ட்லி 4
தங்களுக்கு ஏற்பட்ட கணினி பிரச்சனையை ஒருவர் இல்லாவிட்டாலும் மற்றொருவர் தீர்த்திருக்கப் போகிறார்.
பதிலளிநீக்குஎனினும் தங்கள் நன்றிக்கு என் வணக்கங்கள் :)
த ம 5
பதிலளிநீக்குஇன்ட்லி 5
தொடர்ந்து வருகிறேன்.
பதிலளிநீக்குகற்றலும் கேட்டலும் பேருதவி செய்து மீட்டெடுத்த பகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்குதங்களால் உதவி கோர முடிகிறது..
எனது லேப்டாப்பில் ஏதோ பிரச்சினை..
அம்மாவுக்கு கணிணி சரியாக உபயோகிக்கத்தெரியவில்லை என்று சிரிக்கிறார்கள்..
நேரம் கிடைக்கும் போது சரி செய்து தருவார்கள்..
அதுவரை கிடைக்கும் நேரத்தில் அலுவலக் கணிணியை உபயோகிக்க வேண்டி இருக்கிறது..
அப்பாவையும் அம்மாவையும் சுனாமின்னு ஒரு Sea Water [கடல் தண்ணீ ] வந்து அடிச்சுட்டுப் போய்ட்டதாச் சொன்னாங்க” குழந்தை கண்கலங்கியவாறு சொல்லியது.
பதிலளிநீக்குசுனாமி என்கிற வார்த்தையில் அறம் விழுந்திருக்கும்..
மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள பெரிய மண்டப நிழலில் சந்தோஷி மாதா படத்தருகே சற்றே அமர்ந்தான். வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மிகக்குளுமையாகவே இருந்தது.
பதிலளிநீக்குநிறைய முறை சந்தோஷி மாதா படத்தருகே அமர்ந்து எங்கிருந்து அந்த குளுமை வந்திருக்கிறது என்று வியந்ததுண்டு....
மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது.
பதிலளிநீக்குசிம்பாலிக் ஆக உணர்த்தியுள்ள அருமையான கதை..
இந்தக்கதை பற்றிய மேலும் சுவையான விபரங்கள் சிலவற்றை
பதிலளிநீக்குஇதன் அடுத்த பகுதியில் விரிவாகத்தந்துள்ளேன்
வானதி பதிப்பகதில் வெளியான அருமையான அட்டைப்படத்துடன் புத்தகத்திற்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
தலைப்பூம் கதையும்
பதிலளிநீக்குபூவும் மணமும் போல
ஒன்றிப் போகிறது!
நன்று!
த ம ஓ 6
பதிலளிநீக்குபுலவர் சா இராமாநுசம்
கதையின் இறுதிப் பகுதியை எதிர்நோக்கி தொடருகிறேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகுழந்தை விஜிக்கு பலூன் அங்கிள் கிடைத்து விட்டதில் எனக்கும் மகிழ்ச்சி தான்....
பதிலளிநீக்குநல்ல கதை.. அடுத்த பகுதியில் கதையின் போக்கு எப்படி என்று தெரிந்து விடும் - அதற்குக் காத்திருக்கிறேன்...
கதையின் முடிவுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.வானதி பதிப்பகத்தில் வெளி வந்ததற்கு மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குசிறப்பான கதை
பதிலளிநீக்குத.ம-8
//மாணிக்க விநாயகர் சந்நதிக்கு எதிர்புறம் அமைந்துள்ள பெரிய மண்டப நிழலில் சந்தோஷி மாதா படத்தருகே சற்றே அமர்ந்தான். வெளியே அடிக்கும் வெய்யிலுக்கு அந்த இடம் குளிரூட்டப்பட்ட அறை போல மிகக்குளுமையாகவே இருந்தது//
பதிலளிநீக்குமன நிம்மதிக்காக வருபவர்களுக்கு கிடைத்த அருமையான இடம் .
உங்கள் கதையின் விறுவிறுப்பு தேரோட்டம் அல்ல. காரோட்டம் .
தொடருங்கள் . துரத்துகிறோம் .
கதை மிக விருவிருப்பாக செல்கிறது.ஒரு புத்தகத்தையா மூன்று பகுதிகளில் கொடுக்கிரீர்கள்.சுருக்காமல் தொடந்து எழுதுங்களேன்.
பதிலளிநீக்குஅடுத்த படுதிக்கு இன்னும் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டுமா?
முதல் பகுதியிலேயே கதை குழந்தையை சுற்றி வரும் என நினைத்தேன்; இறுதியில் "தாயுமானவர்" யார்? குழந்தையின் பெற்றோர் சுனாமியில் இருந்து தப்பி வருவார்கள் தானே?
பதிலளிநீக்குஉங்கள் ’தாயுமானவள்’ கதை வானதி பதிப்பகத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள் சார்.
பதிலளிநீக்குமுனியாண்டிக்கு குழந்தை பிரச்சினை தீர்ந்தது என நினைக்கிறேன். முனியாண்டி குழந்தையை வீட்டுக்கு கூட்டி சென்றால் அவர் மனைவி மகிழ்ச்சி அடைவார்.
சுனாமியில் இப்படி பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என எத்தனை எத்தனை சோகக் கதைகள்! அந்த நாளை மறக்க முடியுமா!
கதை அருமை சார்.
உங்கள் கணினி பிரச்சினை ராஜி அவர்களால் சரியானது மகிழ்ச்சி.
குழந்தை விஜிக்கு பலூன்!
பதிலளிநீக்குதங்களுக்கு மறுபடியும் டெம்ப்ளேட்!
விஜியும்..வைஜியும் ஒன்று தான் போல...
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
raji said...
பதிலளிநீக்கு//தங்களுக்கு ஏற்பட்ட கணினி பிரச்சனையை ஒருவர் இல்லாவிட்டாலும் மற்றொருவர் தீர்த்திருக்கப் போகிறார்.
எனினும் தங்கள் நன்றிக்கு என் வணக்கங்கள் :)//
இது தங்களின் தன்னடக்கத்தையே காட்டுகிறது. அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
பிறரின் பிரச்சனைகளை தனது பிரச்சனைபோல நினைத்து, எப்படியாவது உதவ வேண்டும் என்று உண்மையாக மனதில் நினைத்து, உதவிட முன்வர வேண்டுமானால், உதவி பெறுபவர் மேல் உதவி செய்பவருக்கு மிகுந்த நட்பும், அன்பும், பாசமும் பொங்கி வழிந்திட வேண்டும்.
அத்தகைய ஒரு பாசம் மிகுந்த நபராகிய தங்களுடன் நான் நட்பு கொண்டுள்ளது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்.
மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும், மனமார்ந்த ஆசிகளும் உங்களுக்கு!
தாங்கள் சீரும் சிறப்புமாக என்றும் எல்லா இன்பங்களும் பெற்று நீடூழி வாழ்க! என வாழ்த்தி மகிழ்கிறேன்.
பிரியமுள்ள vgk
தாயுமானவளாய் காலத்தே உதவி செய்த நட்புக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇதே போல ஒரு வாரம் நானும் சிரமப்பட்டேன்.. அப்புறம் அதுவாகவே சரியானது.
தொடரவேண்டிய கதை
பதிலளிநீக்குதொடருங்கள்
தொடர்கிறோம்
நன்றி
த ம 9
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
பதிலளிநீக்குவிழுமம் துடைத்தவர் நட்பு. - இந்த குறள் தான் எனக்கு நினைவிற்கு வந்தது. பகிர்விற்கு நன்றி ஐயா!
நம்ம தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
ஐந்து தினங்களாக ஊரில் இல்லை
பதிலளிநீக்குஇன்றுதான் வந்து ஒவ்வொரு பதிவாகப் பார்க்கிறேன்
எனவே கால தாமதம்
கதை வழக்கம்போல மிகச் சிறப்பாக நகர்கிறது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 10
குழந்தை அந்தக் கைலிக்காரன் கையிலிருந்து இளகிய மனம் படைத்த முனியாண்டியின் கைகளில் வந்துசேர்ந்தது பெரும் நிம்மதியைக் கொடுக்கிறது. அப்பா அம்மாவின் மரணம் பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும் இன்னும் சரிவர அறிந்திராத மழலையின் நிலைகண்டு பரிதவிப்பும் பரிதாபமும் எழுகிறது. கூடவே முனியண்டி இருப்பதால் மெல்லிய மனநிறைவும். மேற்கொண்டு கதையின் போக்கை அனுமானிக்க இயலவில்லை. காற்று போன பலூனாய் ஆகிவிடக்கூடாதே முனியாண்டியின் மகிழ்வு என்ற கவலையுடன் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குபலூன் விற்கும் மனிதரிடம் தாயுமானவரின் அன்பு அழகாய் வெளிப்படுகிறது . முதல் பகுதியை அன்றே படித்து விட்டேன் .
பதிலளிநீக்குமுடிவு என்னவாக இருக்குமோ என்று எதிர்பார்ப்புடன் செல்கிறது .
ஃஃஃஃ
பதிலளிநீக்குசுமார் மூன்று வயதுக்குழந்தை பசியால் அழுதது முனியாண்டியின் வயிற்றைப் பிசைந்தது. ஃஃஃஃ
யாருக்குத் தான் பிசையாமல் விடுமுங்க... அருமையாக வரைந்துள்ளீர்கள் நன்றி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)
நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record
சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்
புத்தக அட்டையிலேயே பதிப்பகத்தார் 'சிறுகதைத் தொகுப்பு' என்று போட்டிருக்கலாம்.
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ
பதிலளிநீக்குஇரண்டாம் பகுதி அருமையாகச் சென்றிருக்கிறது.
//“பலூன் அங்கிள்! யூ ஆர் வெரி குட் ஸ்வீட் அங்கிள்!! தாங்க்யூ வெரி மச்; ஐ லவ் யூ சோ மச்” என்று கூறி அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு, கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.//
இவ்வரிகள் பயங்கர எதிர்பார்ப்பினை ஏற்படுத்துகிறது. பார்க்கலாம் அடுத்த பகுதியில்.
சுனாமியின் தாக்கம் தங்களைக் கதை எழுத வைத்தமை நன்று. பாதிக்கப்பட்ட மனம் சிந்திக்கும் பொழுது கதை நன்றாக வரும்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அம்மன் அருள் என்பது இதுதானா? வனம் பிழந்து மழை பொழிந்தது போல் மகிழ்ச்சியை அவர் பெற்றிருக்கின்றார் அல்லவா. தாயுமானவன் என்ற பெயரில் தான் ஒரு கலக்கம் வருகின்றது. முனியாண்டி தந்தையாகத் தானே இருக்க வேண்டும். அவர் மனைவி தாயாக இருக்கலாம் தானே. அடுத்த பதிவில் ஏதோ மனச் சங்கடம் வரப் போகின்றது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது. மனிதனால் ஏற்படுகின்ற எதனிலும் சிக்கல்கள் இருக்கவே செய்யும். ஆனால் மனம் தளராவிட்டால் தீர்த்து வைக்க வழியும் கிடைக்கும். ராஜி செய்த பேருதவியினால் இப்பதிவை குறிப்பிட்ட நேரத்தில் தரக்கூடியதாக இருந்தமையை நீங்கள் கூறிய விதம் உங்கள் ஆர்வத்தைக் காட்டுகின்றது. தொடர்ந்து கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குஇரண்டாம் பகுதி அதற்குள் முடிந்துவிட்டதே,அடுத்து குழந்தையை விட்டுப்போனவர் வந்திரமாட்டார்னு நினைக்கவைத்தது.இதோ அடுத்த பகுதிக்கு போகிறேன்.
பதிலளிநீக்குஇப்படி ஒரு திருப்பமா? மனசு குழைஞ்சு போச்சு முனியாண்டியின் செயலால்.
பதிலளிநீக்குபடிக்கையில் மனது நெகிழ்ந்து போகிறது. முடிவு என்னவாக இருக்கும் என அறியும் ஆவலோடு இறுதிப் பகுதிக்குப் போகிறேன்.
பதிலளிநீக்குதிருமதி ராஜிக்கு நன்றியும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குமனதைத் தொடும் நல்ல கதை.
நன்றி ஐயா.
ஐயா,
பதிலளிநீக்குதங்களின் முதல் கதை இனி வருங்காலத்தில் உங்களுடைய பிற படைப்புகள் அனைத்திற்கும் தாயானது!
தனித்துவம் மிக்கது!
"வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த அம்மனுக்கே வெளிச்சம்".
எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வரிகள்!
அற்புதமான படைப்பு! வாழ்த்துக்கள்!நன்றி!
காரஞ்சன்(சேஷ்)
ஐயா,
பதிலளிநீக்குதங்களின் முதல் கதை இனி வருங்காலத்தில் உங்களுடைய பிற படைப்புகள் அனைத்திற்கும் தாயானது!
தனித்துவம் மிக்கது!
"வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த அம்மனுக்கே வெளிச்சம்".
எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வரிகள்!
அற்புதமான படைப்பு! வாழ்த்துக்கள்!நன்றி!
காரஞ்சன்(சேஷ்)
இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, என்னைப் பாராட்டி வாழ்த்தியுள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்கு//இந்தச் சிறுகதை சுனாமி என்ற இயற்கைப் பேரிடர்
பதிலளிநீக்குதமிழகத்துக்கு வந்து மனித சமுதாயத்தையே
உலுக்கிவிட்டுச் சென்ற பின்பு 2005 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்டது //
பலூன்காரர் மற்றும் அந்தக் குழந்தையோடு திருச்சி கடைவீதியை.ஒரு சுற்று வந்தாகிவிட்டது. சுனாமி தந்த சோகம் யாராலும் மறக்க முடியாது.
அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.
நீக்குதங்களின் அன்பான வருகைக்கும்,
[சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகக் கிடைத்த பலூன் வியாபாரி முனியாண்டி போல], ஆறுதலான அழகான தங்களின் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
vgk
அண்ணா..ரொம்ப நெகிழ்ச்சியா கதை போயிட்டிருக்கு..முடிவு என்னான்னு படிச்சிடறேன்.
பதிலளிநீக்குஅன்புச் சகோதரி, Mrs. ராதா ராணி Madam,
பதிலளிநீக்குதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இன்று ஒரு நாள் முழுவதும் எனக்காகவே ஒதுக்கி விட்டீர்களா? உங்களின் கமெண்ட்களுக்கு பதில் எழுதவே நேரம் இல்லாமல் போனது, எனக்கு. அவ்வளவு கமெண்ட்கள் வரிசையாக வந்துள்ளன. மிகவும் சந்தோஷம்.
தங்களுக்கு மீண்டும் நன்றி.
அன்புடன்
vgk
இந்த கதை முதல் பாகம் படித்தபோது இருந்த மன கனம் இப்போது அதிகரித்துவிட்டது....
பதிலளிநீக்குகுழந்தையின் அம்மா அப்பா சுனாமியில் :( இறந்துவிட்டார்களா :( சொந்தங்கள் எல்லோருமே கைவிட்டு விட எப்படி மனம் வந்தது? கருணை துளியும் இல்லாத மனம் கொண்ட கைலிக்காரர் குழந்தையை கொண்டு வந்து நல்லவேளை கருணை மனமுள்ள முனியாண்டியிடம் சேர்த்தது நல்லதாயிற்று.... அம்பாளுக்கு தெரியும்.. தெய்வத்திற்கு தெரியும்.. இருப்பதை எடுத்து இல்லாதவருக்கு பகிர....
நல்லவரிடமே குழந்தை சேர்ந்திருக்கிறது, குழந்தையின் வயிற்றுப்பசி கூட தீர்க்க மனமில்லாது போயிற்றே கைலிக்காரருக்கு. ஹூம் மனிதம் மரித்ததோன்னு நினைக்கும்போது முனியாண்டி தினப்படி கிடைக்கும் காசில் வாழ்க்கையை தள்ளுபவன் மனம் நிறைய மனிதம் இருப்பதால் தான் மழை கூட பெய்கிறது போல...
குழந்தையின் வயிற்றுப்பசியை ராமா கஃபே இரண்டு இட்லியும் சூடான சாம்பாரும் தீர்க்க, முனியாண்டி மட்டும் இலவச தண்ணீர் பந்தலில் தரும் நீர்மோர், நீர் குடித்து தன் வயிற்றுப்பசி போக்கி...
கதையாசிரியர் மிக உன்னதமான ஒரு கருணைக்கொண்ட மனிதரின் குணாதிசயங்களை விவரித்திருக்கிறார் தெளிந்த நீரோடையாய் கதையை.... தாயுமானவர் என்ற தலைப்பு மிகப்பொருத்தம் கதைக்கு....
சந்தோஷிமாதாவிடம் சென்று அங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் இருவரும் உண்டு உறங்க ஆரம்பிக்க குழந்தை மட்டும் தன்னை கவசமாய் காக்கும் முனியாண்டியிடம் பெற்ற அடைக்கலத்தில் சௌக்கியமாய் இருக்கிறாள்.... இருக்கவும் போகிறாள். கதையின் போக்கு ஓரளவு இப்படித்தான் இருக்கும்னு யூகிக்க முடிகிறது....
அடுத்து என்னாகுமோ?
தொடர்கிறேன் அண்ணா...
மனித மனங்களில் கருணை உள்ளோரும் உண்டு கருணையை மனதில் குழிப்புதைப்போரும் உண்டு என்று மிக அருமையாக வரிகளில் உணர்த்தியது சிறப்பு அண்ணா....
இந்த கதை வானதி பதிப்பகத்தில் புத்தகமாய் பிரசுரித்தமைக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அண்ணா....
மஞ்சுபாஷிணி October 16, 2012 3:38 AM
நீக்குஇந்த கதை முதல் பாகம் படித்தபோது இருந்த மன கனம் இப்போது அதிகரித்துவிட்டது....//
வாருங்கள் மஞ்சு. அடடா மஞ்சுவின் மனம் கனம் அதிகரித்து விட்டதா?
அடுத்தபகுதியாவது மஞ்சுவின் மனதை பஞ்சு போல ஆக்கிடக்கடவது. [ ததாஸ்து;) ]
//குழந்தையின் அம்மா அப்பா சுனாமியில் :( இறந்து விட்டார்களா :( சொந்தங்கள் எல்லோருமே கைவிட்டு விட எப்படி மனம் வந்தது? //
நாகைப்பட்டிணத்தில் சுனாமி கடல்கொந்தளிப்பு நடந்த நேரமல்லாவா அது! அதில் சொந்தமாவது பந்தமாவது மஞ்சு.
//நல்லவேளை கருணை மனமுள்ள முனியாண்டியிடம் சேர்த்தது நல்லதாயிற்று.... //
கிட்டத்தட்ட இதே நிலையில் தான் மஞ்சு, நான் உங்களிடம் சேர்க்கப்பட்டேன் ... 2012 செப்டெம்பர் முதல் வாரத்தில். கருணை மனமுள்ள மஞ்சுவால் எனக்கு ஆறுதல் கிடைத்தது.
//அம்பாளுக்கு தெரியும்.. தெய்வத்திற்கு தெரியும்.. இருப்பதை எடுத்து இல்லாதவருக்கு பகிர....//
அப்படியா சந்தோஷம். அம்பாளுக்குத் தெரிந்தால் சரி.
தொடரும்.....
//தினப்படி கிடைக்கும் காசில் வாழ்க்கையை தள்ளுபவன் மனம் நிறைய மனிதம் இருப்பதால் தான் மழை கூட பெய்கிறது போல...//
நீக்குமிகச்சரியாகவே சொல்லிவிட்டீர்கள்.
//கதையாசிரியர் மிக உன்னதமான ஒரு கருணைக்கொண்ட மனிதரின் குணாதிசயங்களை விவரித்திருக்கிறார் தெளிந்த நீரோடையாய் கதையை.... ”தா யு மா ன வ ள்” என்ற தலைப்பு மிகப்பொருத்தம் கதைக்கு....//
மிக்க மகிழ்ச்சி, மஞ்சு.
//அடுத்து என்னாகுமோ?
தொடர்கிறேன் அண்ணா...
மனித மனங்களில் கருணை உள்ளோரும் உண்டு கருணையை மனதில் குழிப்புதைப்போரும் உண்டு
என்று மிக அருமையாக வரிகளில் உணர்த்தியது
சிறப்பு அண்ணா....//
மிகச்சிறந்த மனம்திறந்த கருணை உள்ளத்தோடு கொடுத்துள்ள மஞ்சுவின் கருத்துக்கள் எனக்கும்
மகிழ்ச்சியைத்தருகிறது.
//இந்த கதை வானதி பதிப்பகத்தில் புத்தகமாய் பிரசுரித்தமைக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அண்ணா....//
அது என் சிறுகதைகளின் தொகுப்பு நூல் மஞ்சு. இதைப் போன்ற பல சிறுகதைகள் அதில் உள்ளன.
அந்த சிறுகதைத் தொகுப்பு நூலின், தலைப்பு மட்டும் அதில் இடம்பெறும் முதல் கதையான “தாயுமானவள்” என்றே இருக்கட்டும் என வைத்து விட்டேன்.
அதன் பிறகு மேலும் இரு சிறுகதைத்தொகுப்பு நூல்களும் வெளியிட்டுள்ளேன்.
அவைபற்றிய விபரங்கள் [படங்கள்] இதோ இங்கே:
http://gopu1949.blogspot.in/2011/07/4.html
நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள்
பிரியமுள்ள,
கோபு அண்ணா
பசித்த குழந்தைக்கு ஆகாரம் வாங்கி கொடுத்த முனியாண்டி தன் பசிக்கு நீர் மோரையும் கஞ்சியயும்,குடி நீரையுமே குடித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.சுனாமி யாருக்கெல்லாம் என்னென்ன துன்பமெல்லாம் விளைவிச்சிருக்கு? சின்னக்குழந்தைகள் முதல் ,பெரியவர்கள் வரை யாரையுமே விட்டு வைக்கவில்லை போல இருக்கு., திருச்சி பற்றியும் விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது. பாக்கப்போனால் நான் தமிழ் நாட்டு பக்கம்லாம் வந்ததே இல்லே. உங்க கதை மூலமே திருச்சியை சுத்திப்பாத்துட்டேன். அந்தக்குழந்தைக்கு முனியாண்டி போல ஒரு நல்லவனின் அறிமுக கிடைத்தது நல்ல விஷயம். அடுத்த பகுதிக்கு போகிறேன்.
பதிலளிநீக்குபூந்தளிர்January 13, 2013 at 9:08 PM
பதிலளிநீக்கு//பசித்த குழந்தைக்கு ஆகாரம் வாங்கி கொடுத்த முனியாண்டி தன் பசிக்கு நீர் மோரையும் கஞ்சியயும்,குடி நீரையுமே குடித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.//
நெகிழ்ச்சியான தங்கள் கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
//சுனாமி யாருக்கெல்லாம் என்னென்ன துன்பமெல்லாம் விளைவிச்சிருக்கு? சின்னக்குழந்தைகள் முதல் ,பெரியவர்கள் வரை யாரையுமே விட்டு வைக்கவில்லை போல இருக்கு//
ஆமாம்மா, மனித சமுதாயத்திற்கு அது ஒரு கொடுமையான நிகழ்வு தான்.
//திருச்சி பற்றியும் விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது. பாக்கப்போனால் நான் தமிழ் நாட்டு பக்கம் எல்லாம் வந்ததே இல்லே. உங்க கதை மூலமே திருச்சியை சுத்திப்பாத்துட்டேன்.//
என்னது தமிழ்நாட்டுப்பக்கமே வந்தது இல்லையா? பிறகு தமிழில் அழகாக எழுதுகிறீர்களே! அது எப்படி? ;)))))
சரி அது போகட்டும். திருச்சி பற்றி இந்தப்பதிவின் மூலம் விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது என்று நீங்கள் சொலவது சரியில்லை.
திருச்சியைப்பற்றி ஓரளவு அறிய வேண்டுமானால் நான் எழுதியுள்ள “ஊரைச் சொல்லவா - பேரைச்சொல்லவா” என்ற அழகான விரிவான பதிவினை தாங்கள் அவசியமாகப் படிக்க வேண்டும்.
இணைப்பு இதோ உங்களுக்கு மட்டுமே:
http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html
ஊரைச் சொல்லவா! பேரைச் சொல்லவா!!
[ திருச்சியைப் பற்றிய விரிவான கட்டுரை - படங்களுடன் ]
//அந்தக்குழந்தைக்கு முனியாண்டி போல ஒரு நல்லவனின் அறிமுக கிடைத்தது நல்ல விஷயம்.//
ஆம். எனக்கு நீங்களும், உங்களுக்கு நானும் இப்போது கிடைத்துள்ளது போலவே.
// அடுத்த பகுதிக்கு போகிறேன்.//
செல்லுங்கோ ... டாட்டா ... பை..பை !
அன்புடன்
VGK
திருச்சி டவுன் வாணப்பட்டரை மாரியம்மன் தேர்த்திருவிழா இன்று 21.04.2015 செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
பதிலளிநீக்குமதியம் 1 மணி சுமாருக்கு என் குடியிருப்புப் பகுதி வாசலுக்கு வாணப்பட்டரை மாரியம்மன் அழகுத்தேரில் மெல்ல நகர்ந்து பவனி வந்து அருள் பாலித்தாள்.
அப்போது என் வீட்டு பால்கனி ஜன்னல் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில இதோ http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html இந்தப்பதிவினில் இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் VGK
:)
பதிலளிநீக்குஏனோ அந்த குழந்தை அவரோடே இருக்கனும் என்று மனம் ஆசைப்பட்டது. தானாக விளையாடும் பலூன்,,,,,,,,,,,
பதிலளிநீக்குஏதோ ஒரு பாதுகாப்பில் மன நிம்மதியுடன் குழந்தை தூங்கியிருப்பாளோ,,,,,,,,,,,
:)))))
பதிலளிநீக்குபூந்தளிர்May 21, 2015 at 11:45 AM
பதிலளிநீக்கு// :))))) //
பழைய பூந்தளிரின் நீண்ட பின்னூட்டம் இன்று என்னால் மீண்டும் ரசித்து படிக்கப்பட்டது. அந்தப்பூந்தளிர் இப்போ காணாமல் போய் விட்டதில் எனக்குக் கொஞ்சம் வருத்தமே.
enakku ungalidamirunthu perappatta book ethu.
பதிலளிநீக்குMiga pathiramaga vaithirikiren.
viji
viji June 6, 2015 at 2:19 AM
நீக்கு//enakku ungalidamirunthu perappatta book ethu.
Miga pathiramaga vaithirikiren. viji எனக்கு உங்களிடமிருந்து பெறப்பட்ட புத்தகம் இது. மிக பத்திரமாக வைத்திருக்கிறேன். விஜி//
எனக்கும் அதனைத்தங்களுக்கு 2013 ஆரம்பத்தில் அனுப்பி வைத்த நினைவுள்ளது. இங்கு அதனை நினைவூட்டியுள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.
பிரியமுள்ள கோபு
உயிரோட்டம் உள்ள கதை.
பதிலளிநீக்குஎந்த ஒரு சின்ன விஷயத்தையும் நுணுக்கமாகப் பார்த்து அதை அழகாக கதையில் விவரிப்பது உங்கள் தனித் திறமை.
//அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. //
என்ன ஒரு வர்ணனை.
முனியாண்டியவங்களுக்கு கொள்ந்தயா இருக்கதா அந்த பச்சபுள்ள அங்கிட்டு வந்திச்சோ.
பதிலளிநீக்குபடமும் நீங்க வரைந்ததா.ரொம்ப நல்லா வந்திருக்கு. அந்தக்குழந்தையை என்ன செய்றதுன்னு முனியாண்டியைப்போலவே நாங்களும் நினைக்கிறோம்.
பதிலளிநீக்குகுழந்தை கண் அசந்து தூங்கத்தொடங்கியது. ஆனால் அதன் பிஞ்சு விரல்கள் மட்டும் முனியாண்டியின் சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தது. அதன் மற்றொரு கையில் வைத்திருந்த மிகப்பெரிய பலூன் கைநழுவி அந்த மிகப்பெரிய கோயில் மண்டபத்தினுள் அடித்த காற்றில், இங்குமங்கும் பறந்து, தனக்குத்தானே விளையாடிக் கொண்டிருந்தது. முனியாண்டியும் உட்கார்ந்திருந்த நிலையிலேயே கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தான். //நெகிழச் செய்கிறது...இரண்டாம் முறையாக...
பதிலளிநீக்கு:)))
பதிலளிநீக்குபத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில் ஒன்றான இதனை என்னிடம் கேட்டு வாங்கி, எங்கள் BLOG என்ற வலைத்தளத்தில், 02.02.2016 அன்று படங்களுடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:
http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் VGK