About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, December 28, 2011

காவேரிக்கரை இருக்கு! கரைமேலே ____ இருக்கு!!காவேரிக்கரை இருக்கு! 
கரைமேலே ___ இருக்கு!![ கட்டுரை - ஆன்மிகம் ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் 


தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் கடவுள் ”ஸ்ரீமந் நாராயணன்” என்பதை தன் தந்தையாகிய ஹிரண்யகசிபுவுக்கு, தன் பக்தியால் நிரூபித்துக் காட்டியவர் பிரகலாதன். குழந்தையாகிய பிரகலாதனின் தீவிர பக்திக்கும், திட நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டு திருமால் எடுத்த அவதாரமே ’ஸ்ரீ நரஸிம்ஹா அவதாரம்’ என்பது நாம் அனைவரும் அறிந்ததோர் புராணமாகும். 

இந்த ஸ்ரீ நரஸிம்ஹருக்கு பல ஊர்களில் பல பெயர்களில் கோயில்கள் உள்ளன. திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மிகப்பிரபலமான காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.

இதே திருச்சியில் காவிரி நதியின் தென்கரை ஓரமாக, காவிரி நதியை ஒட்டி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயிலைப்பற்றி இந்தப்பதிவில் பார்ப்போமா! கோயிலின் முகப்புத்தோற்றம்


 ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயில்

உற்சவர்: ஸ்ரீ பூமிநீளா ஸமேதஸ்ய ஸ்ரீ ரெங்கநாதர்
கருடசேவை லெக்ஷ்மி நரசிம்மர்

ஓடத்துறை, கீழச்சிந்தாமணி, திருச்சி-2

ooooOooooவற்றாத ஜீவ நதியாம் காவிரி கரைபுரண்டு ஓடுவதைப்பார்ப்பதே அழகு, இந்த அழகிய ஸ்ரீ நரசிம்ஹரைப் பார்ப்பதும் அழகு. இந்தக் கரைபுரண்டு ஓடும் காவிரியையும் இந்த அழகிய ஸ்ரீ நரசிமஹரையும் ஒன்றாகச் சேர்த்துப்பார்த்து மகிழும் ஒரே இடம் தான் இந்த ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயில். 


கோயிலின் பின்புறக்கதவைத் திறந்து ஒரு ஐந்து படி இறங்கினால் போதும், பெருமகிழ்ச்சியுடன் பொங்கிப் பெருகிவரும் காவிரியில் நாம் இறங்கிப் புனித நீராடிட முடியும். 


அவ்வளவு ஒரு நெருக்கம் இந்தக்காவிரி ஆற்றுக்கும் இந்தக்கோயிலுக்கும். 
கோயிலின் உள்ளிருந்து பார்த்தாலே காட்சிதரும் காவிரித்தாய்
காவிரி ஆற்றினால் இந்த ஸ்ரீ நரசிம்ஹர் அழகாகத் தெரிகிறாரா அல்லது இந்த நரசிம்ஹரின் அழகினால் காவிரி ஆறு அழகாகத் தோன்றுகிறதா என நினைக்க வைக்கும் விதமாக உள்ளதால், இவர் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் என்ற திருநாமத்துடன் இங்கு கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

கோயிலின் பிரதான நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது. பின்புற வடக்கு வாயிலைத் திறந்தால் காவிரியைக் கண்டு களிக்க முடிகிறது.

நம்பிக்கையுடன் கோயிலின் உள்ளே நுழையும் நம்மை முதலில் வரவேற்பவர்
கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் ”தும்பிக்கை ஆழ்வார்” எனப்படும் ’விநாயகர்’ 

அடுத்து, 
சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் எனப்போற்றப்படும் 
ஸ்ரீ ஆண்டாள் சந்நதி 
[அதுவும் கிழக்கு பார்த்தே அமைந்துள்ளது]

சுவர்க்கத்தின் வாசல் போன்ற கோயிலின் 
பிரதான நுழைவாயிலுக்குள் செல்லும் நமக்கு 
இடதுபுறம் கருடனும், வலது புறம் ஹனுமனும் காட்சியளிக்கிறார்கள்.மூலவர் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள்
தன் மடியினில் அம்பாளை அமர்த்திக்கொண்டு 
கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார்.மூலவர் ஸ்ரீ ஆற்றழகிய 
சிங்கப்பெருமாள் சந்நதி
[முழுத்தோற்றம்]பெருமாளுக்கு எதிர்புறம் 
மேற்கு நோக்கியபடி 
அமர்ந்திருக்கும் கருடாழ்வார்
கருடாழ்வார் 
[சற்றே பெரியதாக]


ஸ்ரீ நம்மாழ்வார், 
பெருமாள் ஸ்ரீ ரங்கநாதர்,  
ஸ்ரீ இராமானுஜர்+மணவாள மாமுனி சந்நதிகள்


பெருமாள் ஸ்ரீ ரங்கநாதர் [தனியே] 


நம்மாழ்வார் [தனியே]

  
ஸ்ரீராமானுஜர் + மணவாள மாமுனி [தனியே]


வரும் 05,01.2012 நடைபெற உள்ள 
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருவிழா பற்றிய அறிவிப்புப் பலகைஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மூலமந்திரம் + ஸ்தோத்ரம்கோயிலில் வைத்துள்ள ஓர் யானைப்படம் 

வியாதிகள் போன்ற சத்ருக்களிடமிருந்து 
சுதர்ஸனச் சக்ரத்தால் காத்து 
நம்மை ரக்ஷிக்க வேண்டி 
ஓர் ஸ்லோகம் கோயிலில் எழுதி வைக்கப்பட்டுள்ள்து. 
ஆஞ்சநேய வைபவம் பற்றி கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஓர் அறிவிப்புவிசேஷ நாட்களில் நடைபெறும் திருமஞ்சனம் 
பற்றிய ஓர் நிரந்தர அறிவிப்பு கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.மூலவரை பிரதக்ஷணமாகச் சுற்றி வரும் பாதையில் பல்வேறு ஊர்களில் உள்ள 
ஸ்ரீ நரசிம்ஹரை பெரிய பெரிய படங்களாக வைத்துள்ளனர்:


சோளிங்கர்


நாமக்கல்


நாமக்கல்


ஓடத்துறை


ஒத்தக்கடை, ஆனைமலை, மதுரை
ஸ்ரீயோக நரசிம்ஹர்


சிங்கிரிக்குடி


ஸ்ரீகாட்டழகிய சிங்கர்


பரிக்கல்தாடிக்கொம்பு [திண்டுக்கல்]ஸ்ரீ பிரஹலாத நரசிம்மர் - பெங்களூரூ


ஸ்ரீசுந்தரலக்ஷ்மி நரசிம்ஹர் - ஸ்ரீரங்கம்ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமாள்நெற்றிக்கண் ஆஞ்சநேயர் - ஓடத்துறைசிறிய கோயிலின் சிறந்த சுற்றுப்பாதை


கோயிலில் வைத்துள்ள வேறுசில படங்கள்

சரணாகதி ஸ்லோகம் 


1. மாதா நிருஸிம்ஹ: பிதா நிருஸிம்ஹ
2. ப்ராதா நிருஸிம்ஹ: ஸகா நிருஸிம்ஹ
3. வித்யா நிருஸிம்ஹ: த்ரவிணம் நிருஸிம்ஹ
4. ஸ்வாமி நிருஸிம்ஹ: ஸகலம் நிருஸிம்ஹ
5. இதோ நிருஸிம்ஹ: பரதோ நிருஸிம்ஹ
6. யதோ யதோ யாஹி; ததோ நிருஸிம்ஹ
7. நிருஸிம்ஹ தேவாத் ந பரஞ்ச கிஞ்சித்
8. தஸ்மான் நிருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே! 


அதன் தமிழாக்கம்.... இதோ இங்கே


1. நரசிம்மனே தாய். நரசிம்மனே தந்தை
2. சகோதரனும் நரசிம்மனே தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே செல்வமும் நரசிம்மனே
4. எஜமானும் நரசிம்மனே எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே 
    பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக்காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை
8. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்!


அனுதினமும் காலை, மாலை விளக்கேற்றி, 
இந்த திவ்ய சக்தி வாய்ந்த ஸ்லோகத்தை பதினாறு முறை படித்துவர மிக்க நற்பலன்கள் உண்டாகும். 
நம் பிரார்த்தனைகள் கட்டாயம் நிறைவேறும் 
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.’ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’
போன்ற அழகான ஆண்டாள் பாசுரங்களைப் பாடி மகிழ்விக்கும்
திரு. C. அனந்தகிருஷ்ணன் அவர்கள் 


தொடர்புக்கு:


ஸ்ரீ C. அனந்தகிருஷ்ணன் அவர்கள்
அறங்காவலர்
செல்போன்: 98651 42307
ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயில்
ஓடத்துறை, 
கீழச்சிந்தாமணி
திருச்சி 620 002


 

Dr. M. SANKARAN 
Retd. HOD [ENGLISH DEPARTMENT] 
NATIONAL COLLEGE, TIRUCHI
இவர் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் 
பரம்பரையில் பிறந்துள்ளவர்.
1975 முதல் தொடர்ச்சியாக 
மேற்படி கோயிலுக்கு தனுர்மாத 
திருப்பள்ளியெழுச்சி உபயபூஜா கைங்கர்யங்கள் 
மிகவும் சிரத்தையுடன் செய்து வருபவர்.
தொடர்புக்கு
2E, SIVASHAKTHI TOWERS
5, NORTH ANDAR STREET
TIRUCHIRAPALLI-620 002
கைபேசி: 8903232796 


இந்தக் கோயிலுக்குச்செல்லும் வழி:


திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து
10 நிமிட நடைபயணத்தில் தான் இந்தக் கோயில் உள்ளது.


திருச்சி சிந்தாமணி அண்ணாசிலையிலிருந்து, 
ஸ்ரீரங்கம் + திருவானைக்கா நோக்கி 
ண்டிகளில் பயணம் செய்வோர், 
காவிரி புதுப்பாலத்தின் மேல் ஏறாமல்
அதற்கு சற்று முன்பே, 
வலதுபுறமாக கீழிறங்கிச் திரும்பிச்செல்லும் 
தனிவழிபாதையில் சென்றால் 
உடனடியாக வரும் 
ரெயில்வே லெவல் கிராஸிங்குக்கு முன்பு 
இந்தக்கோயில் வந்துவிடும்.-[ சுபம் ]-
2002 முதல் ஒவ்வொரு மார்கழி மாத உத்திராட நக்ஷத்திரத்தன்றும் 
விடியற்காலம் 5 மணிக்கு இந்தக்கோயிலுக்குச்சென்று 
சிறப்புப்பிரார்த்தனைகள் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்

அதன்படி நேற்று 26.12.2011 அன்று சென்று வந்தபோது, 
என் தொடர்ச்சியான பெருமாள் தரிஸனத்தின் பத்தாம் ஆண்டு நிறைவுக்காக 
இதுபோன்ற ஒரு பதிவை எழுதி வெளியிட வேண்டும் 
என்று எனக்கு மனதில் தோன்றச்செய்ததும் அந்த 
ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாளே!

ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே!


-oOo-

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
27th December, 2011

82 comments:

 1. அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வு தங்களின் சிரத்தையான உழைப்புக்கு சான்று பகர்கின்றன்.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. "காவேரிக்கரை இருக்கு! கரைமேலே _ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் அருளும் அழகிய கோவில்___ இருக்கு!!"

  ReplyDelete
 3. மாதா நிருஸிம்ஹ: பிதா நிருஸிம்ஹ2. ப்ராதா நிருஸிம்ஹ: ஸகா நிருஸிம்ஹ3. வித்யா நிருஸிம்ஹ: த்ரவிணம் நிருஸிம்ஹ4. ஸ்வாமி நிருஸிம்ஹ: ஸகலம் நிருஸிம்ஹ5. இதோ நிருஸிம்ஹ: பரதோ நிருஸிம்ஹ6. யதோ யதோ யாஹி; ததோ நிருஸிம்ஹ7. நிருஸிம்ஹ தேவாத் ந பரஞ்ச கிஞ்சித்8. தஸ்மான் நிருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!


  பயன் தரு அருமையான
  ஸ்தோத்ரம்.. நன்றிகள்..

  ReplyDelete
 4. கோயிலின் பின்புறக்கதவைத் திறந்து ஒரு ஐந்து படி இறங்கினால் போதும், பெருமகிழ்ச்சியுடன் பொங்கிப் பெருகிவரும் காவிரியில் நாம் இறங்கிப் புனித நீராடிட முடியும்.

  மகிழ்ச்சி பொங்கும் பகிர்வு..

  காவிரி போற்றுதும்..
  காவிரி போற்றுதும்..

  ReplyDelete
 5. சுவர்க்கத்தின் வாசல் போன்ற கோயிலின்
  பிரதான நுழைவாயிலுக்குள் செல்லும் நமக்கு
  இடதுபுறம் கருடனும், வலது புறம் ஹனுமனும் காட்சியளிக்கிறார்கள்./

  இந்த கோவிலுக்கு நிறைய முறை சென்று பிரவகித்து ஓடும் காவிரியைப்பார்த்து அமர்ந்திருந்த அருமையான இனிய காட்சி மலரும் நினைவுகளாய் மலர்ந்து மணம் பரப்பி மகிழ்விக்கின்றன்..

  ReplyDelete
 6. தொடர்ச்சியான பெருமாள் தரிஸனத்தின் பத்தாம் ஆண்டு நிறைவுக்காக
  ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே!
  மனதில் தோன்றச்செய்த
  ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாளே!

  நம்ஸ்காரங்கள்..

  ReplyDelete
 7. Amazing facts; In my younger days (when I was 6/7 years old) I have visited this temple after taking bath in Cauvery. But only at this age, I come to realise the greatness of such temples. Gopu, you have taken sincere efforts to gather so much of info on this temple and we are all benefited and now longing to visit the temple, during next visit to Trichy/Cauvery. Thanks once again.

  ReplyDelete
 8. தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் கடவுள் ”ஸ்ரீமந் நாராயணன்”

  இந்தபதிவின் ஒவ்வொரு எழுத்துகளிலும் உழைப்பிலும் ஊடுருவி உடனே உதித்த உத்தமருக்கு நமஸ்காரங்கள்..

  ReplyDelete
 9. கரைபுரண்டு ஓடும் காவிரியையும் இந்த அழகிய ஸ்ரீ நரசிமஹரையும் ஒன்றாகச் சேர்த்துப்பார்த்து மகிழும் வாய்ப்பளித்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா.

  ReplyDelete
 10. நரசிம்மனின் அழகிய திருக்கோலம் கண்டு மிக்க நெகிழ்ச்சி.
  எத்தனை படங்கள். மனங்கவர்ந்த பதிவு.

  ReplyDelete
 11. அருமையான படங்களுடன், தகவல்களுடன், நல்ல பகிர்வு...

  அடுத்த பயணத்தின் போது செல்ல முயல்கிறேன்....

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. ஜெய் பஜ்ரங் பலி கீ..:)

  தேவதா கார்ய சித்யர்த்தம்..:)

  மிக்க நன்றி கோபால் சார். எனக்கு பிடித்த சக்தி மிகுந்த இரு தெய்வங்கள்.. பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 13. ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயில்

  பற்றிய அனைத்து விசயங்களையும் தெரியாதவர்களுக்கு தெரிய வைத்து விட்டீர்கள்..

  த.ம 3


  அன்போடு அழைக்கிறேன்..

  வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்

  ReplyDelete
 14. அன்பின் வை.கோ மற்றும் இராஜ இராஜேஸ்வரி - இதென்ன வழக்கத்திற்கு மாறாக - பதிவு இவரும் மறுமொழிகள் அவருமாக மாறியிருக்கிறது. 10ம் ஆண்டு நிறைவாக இப்பதிவு இட்டமை நன்று. அத்த்னை புகைப் படங்களூம் அருமை. அவரை மிஞ்சி விட்டீர்கள் வை.கோ - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 15. படங்களே பல கதைகள் சொல்லுது ஐயா..

  ReplyDelete
 16. மிகவும் சிரத்தை எடுத்து படங்கள் அனைத்தும் பதிவில் பதிய வைத்து நேரில் சென்று பார்த்த ஒரு உணர்வைத் தந்துள்ள இக்கட்டுரைக்கு மிக்க வாழ்த்துகள். கட்டடக் கலையின் மகத்துவம் இவ்வாறான கோயில்கள் மூலம் அந்நிய நாட்டவர்கள் புரிந்து கொள்ளுகின்றார்கள்.

  ReplyDelete
 17. அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள்.
  அருமையான விளக்கங்கள்.
  ஸ்தோத்திரங்கள், அதன் விளக்கங்கள்.
  எங்களுக்கு அருமையான தரிசனம்.
  மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 18. மனம் கவரும் படங்களுடனான ஒரு தெய்வீகப்பதிவு. மனம் நிறைக்கிறது. மிகவும் நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 19. I think it is quite rare to have a bathing ghat to Cauvery river from inside a temple. Nice feeling to see such a photo, particularly with the river brimming with water.

  ReplyDelete
 20. ’சரணாகதி ஸ்லோகம் ’

  மிகவும் நன்றாக இருக்கிறது தினம் பாடி இறைவன் அருள் பெறலாம்.

  அருமையான படங்கள்.
  ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் அருளும் எங்களுக்கு கிடைத்தது.
  திருச்சி வரும் போது தரிசிக்க குறித்து வைத்துக் கொண்டேன்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 21. காலையில் திவ்யமாய் தரிசித்து, ஸ்தோத்ரம் சொல்ல ஏதுவாய் இருந்தது உங்கள் பதிவு. I feel elated. கோடி கோடி நன்றி....
  பதிவில் உள்ள ஸ்லோகங்களளெல்லாம் படித்தேன். blessed day. நன்றி :) .....

  ReplyDelete
 22. காவேரிக் கரை இருக்கு
  கரைமேலே கோயிலிருக்கு
  கோயிலிலே தெய்வமிருக்கு
  தெய்வத்திற்குத் தான் சக்தி இருக்கு.

  ReplyDelete
 23. ஜீவி said...
  //காவேரிக் கரை இருக்கு
  கரைமேலே கோயிலிருக்கு
  கோயிலிலே தெய்வமிருக்கு
  தெய்வத்திற்குத் தான் சக்தி இருக்கு.//

  எனக்கு மிகவும் பிடித்தமான இனிமையான திரைப்படப் பாடலான


  காவேரிக்கரை இருக்கு!

  கரைமேலே ’பூ’ விருக்கு!!

  ‘பூ’ ப்போலே பெண் இருக்கு!!!

  புரிந்து கொண்டால் உறவிருக்கு!!!!  என்ற பாடல்வரிகளையே

  அழகாக மாற்றி எழுதியுள்ள தங்கள் கருத்துரைக்கு, மிக்க நன்றி, ஐயா!

  அந்தக்ககால திரைப்படப் பாடல்களில் தான் எத்தனை அழகழகான அர்த்தம் உள்ள வரிகள்! நினைத்தாலே
  ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!

  அன்புடன் vgk

  ReplyDelete
 24. இது என்ன வைகோ சாரிடமிருந்து ஒரு
  ( ஒன்றுதானா.?) ஆன்மீகப் பதிவு என்று படித்தால், கலக்கி விட்டீர்கள். இதற்கெல்லாம் நிறைய உழைக்க வேண்டும் அல்லவா.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 25. //2002 முதல் ஒவ்வொரு மார்கழி மாத உத்திராட நக்ஷத்திரத்தன்றும்
  விடியற்காலம் 5 மணிக்கு இந்தக்கோயிலுக்குச்சென்று
  சிறப்புப்பிரார்த்தனைகள் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்//

  நல்ல விஷயம்...

  ReplyDelete
 26. ஒரு தல வரலாற்றை பதிவு அழகாக படம் பிடித்துள்ளது..

  ReplyDelete
 27. நிறைய படங்களை போட்டு அசத்தி இருக்கீங்க..

  ReplyDelete
 28. மொத்தத்தில் தல வரலாற்றுக் கட்டுரை, படங்கள், மந்திரங்கள் ஆகியன இந்தக் கோவிலுக்கு மீண்டும் ஒரு முறை சென்று வர வேண்டும் என்கிற எண்ணத்தை தருகிறது. வாழ்த்துகள்...

  ReplyDelete
 29. அருமையான பதிவு அய்யா, உங்களின் பதிவுகளில் அதிக படங்களுடன் வந்த பதிவு இதுவாகத்தான் இருக்கும். அந்த
  சரணாகதி ஸ்லோகம் படத்தில் சரியாக தெரியவில்லையே, படிக்க முடியலையே என்று நினைத்த மாத்திரத்தில்லேயே உடனே நீங்கள் பதிவிட்டிருந்தது அபாரம்.
  பல முறை படித்து சரணாகதி அடைதலின் தத்துவம் அறிந்தேன். நன்றி அய்யா.

  ReplyDelete
 30. படங்களும் பகிர்வும் ரொம்பவும் அருமை.. இதே மாதிரி திருச்சிக்கு சுற்றுப்புறங்கள்ல இருக்கற நீங்க போயிட்டு வந்த கோயில்களைப் பத்தி அடிக்கடி எழுதலாமே..

  ReplyDelete
 31. அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வு

  ReplyDelete
 32. நரசிம்மனின் அழகிய திருக்கோலம் கண்டு மிக்க நெகிழ்ச்சி.
  எத்தனை படங்கள். மனங்கவர்ந்த பதிவு.

  ReplyDelete
 33. திருச்சிலயே இருந்திருந்த நான் நரசிம்மரைப்பார்த்ததே இல்லை... உங்க பதிவு படமெல்லாம் பார்த்ததும் கண்டிப்பா அடுத்ததடவை ஓடிப்போய் பார்த்துடமாடேனா?!

  ReplyDelete
 34. thanks for the informative article. We are planning to go to Tiruchi and other places in the month of April. This article has come as a boon at the right time. Iduvum anda narayananin arul endru thaan naan nambugiren. thanx a lot once again, Sir
  Prema

  ReplyDelete
 35. அருமையான விளக்கப்படங்களுடன் எழுதப்பட்ட கட்டுரை. எதை செய்தாலும் நேர்த்தியாக செய்கிறீர்கள். தொடர்ந்த உங்கள் பதிவு வாசிப்பில் இதைக் குறிப்பிடுகிறேன். காரணம் சிறுகதையாக இருந்தாலும் சரி..கட்டுரையாக இருந்தாலும் அதன் புறக்கட்டமைப்பு அதாவது தலைப்பு, உட்தலைப்பு, அது என்ன பொருண்மை இவற்றில், அதற்கான எழுத்து அளவில்..அப்புறம் அதனதன் பொருண்மை தளத்தில் ஒரு பொறுப்புமிக்க பதிவாளராக உங்களைப் பார்க்கிறேன். இது இன்றைய இளைஞர்களுக்கு மிகத் தேவையான ஒன்றாகும. இதுபோன்ற திட்டமிடல்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் வாழ்வில் உயர்ந்துவிடலாம். நினைத்த வெற்றியையும் அடையலாம். எத்தனைப் படங்கள். அதற்கான செலவு, நேரம், பொறுமை, அக்கறை, ஈடுபாடு, ஆர்வம் எல்லாவற்றிற்கும் தலைவணஙகிப் பாராட்டுகிறேன். ஏனோதானோவென்று பதிவிடுவதில்லை. பதிவிடுதலைவிட என்ன பதிவிடுகிறோம் என்பது முக்கியம். அருமை சார். மனம் நிறைவாக இருக்கிறது. தரிசனம் மட்டுமல்ல உங்களின் பதிவுக் கரிசனமும்கூட. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் பயனான பதிவிற்காக.

  ReplyDelete
 36. Thanks a lot for the informative article. We are planning to go to Tiruchi and other places on a pilgrimage in the month of April 2012. This has come as a boon at the right time. iduvum anda narayananin arul endre nambugiren. Thanx a lot once again

  Prema

  ReplyDelete
 37. இராஜராஜேஸ்வரி said...
  //கரைபுரண்டு ஓடும் காவிரியையும் இந்த அழகிய ஸ்ரீ நரசிமஹரையும் ஒன்றாகச் சேர்த்துப்பார்த்து மகிழும் வாய்ப்பளித்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா.//

  ஸ்ரீ நரசிம்ஹருக்காக எட்டு அழகிய செந்தாமரைகளால் அர்சித்துள்ள தங்கள் பாராட்டுகளால் என் மனமும் அந்த காவிரியைப்போலவே மகிழ்ச்சியில் கரைபுரண்டு ஓடுகிறது.

  தங்களின் அன்றாட அழகழகான ஆன்மிகப்பதிவுகளுக்கு முன்னால்,
  இது ஸ்ரீராமனுக்கு உதவிய அணில்குட்டி போல மட்டுமே!

  vgk

  ReplyDelete
 38. அன்புடன் வருகை தந்து அழகழகான கருத்துக்கள் கூறி, இந்த என் புதிய முயற்சிக்கு ஆதரவு அளித்து, பாராட்டுக்கள் தெரிவித்துள்ள

  திருவாளர்கள்:

  ரிஷபன் அவர்கள்
  வெங்கட் நாகராஜ் அவர்கள்
  மதுமதி அவர்கள்
  சீனா ஐயா அவர்கள்
  மகேந்திரன் அவர்கள்
  ரத்னவேல் ஐயா அவர்கள்
  D. சந்திரமெளலி அவர்கள்
  GMB Sir அவர்கள்
  Advocate P.R.Jayarajan அவர்கள்
  A.R.ராஜகோபாலன் அவர்கள்
  R.ரவிச்சந்திரன் அவர்கள்
  சாம்பசிவன் ஐயர் அவர்கள்

  திருமதிகள்:

  தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
  சந்திரகெளரி அவர்கள்
  கீதா அவர்கள்
  கோமதி அரசு அவர்கள்
  ஷக்திப்ரபா அவர்கள்
  அமைதிச்சாரல் அவர்கள்
  சசிகலா அவர்கள்
  லக்ஷ்மி அவர்கள்
  ஷைலஜா அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 39. ஹ ர ணி said...
  //அருமையான விளக்கப்படங்களுடன் எழுதப்பட்ட கட்டுரை. எதை செய்தாலும் நேர்த்தியாக செய்கிறீர்கள். தொடர்ந்த உங்கள் பதிவு வாசிப்பில் இதைக் குறிப்பிடுகிறேன். காரணம் சிறுகதையாக இருந்தாலும் சரி..கட்டுரையாக இருந்தாலும் அதன் புறக்கட்டமைப்பு அதாவது தலைப்பு, உட்தலைப்பு, அது என்ன பொருண்மை இவற்றில், அதற்கான எழுத்து அளவில்..அப்புறம் அதனதன் பொருண்மை தளத்தில் ஒரு பொறுப்புமிக்க பதிவாளராக உங்களைப் பார்க்கிறேன். இது இன்றைய இளைஞர்களுக்கு மிகத் தேவையான ஒன்றாகும.//

  என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தங்களின் அபூர்வ வருகை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

  தங்களின் வருகைக்கு, முதற்கண் என் நன்றிகள், ஐயா.

  என் படைப்புகளை தாங்கள் தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள் என்பதைக் கேட்கவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, ஐயா.

  //இதுபோன்ற திட்டமிடல்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் வாழ்வில் உயர்ந்துவிடலாம். நினைத்த வெற்றியையும் அடையலாம்.//

  நான் எந்த காரியம் செய்வதாய் இருந்தாலும், திட்டமிடுவதற்கே நிறைய நேரம் செல்வழிப்பது வழக்கம், ஐயா.

  நன்கு முதலிலேயே மனதுக்குள் நாம் செய்ய வேண்டியதை அழகாக ஒரு படம் போல வரைந்து கொண்டு, திட்டமிட்டுக்கொண்டால், வேலை சுலபமாக முடியும்.

  நம் மனதுக்கும் ஒரு நிறைவாக, முழுத்திருப்தியாக அது அமையக்கூடும் அல்லவா!

  கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பே நான், ஒரு கம்ப்யூட்டர் போலவே எதனையும் மிக அழகாக, மிகச் சுலபமாக பிறருக்கு புரிந்து கொள்ளும் விதமாக, மிக நேர்த்தியாக, மிக விரைவாக, பிழைகள் ஏதும் இல்லாமல் எழுதி / பட்டியலிட்டு, CHART PREPARATION செய்து ”MY WAY OF PRESENTATION” னுக்காக, எவ்வளவோ உயர் அதிகாரிகளிடம், எவ்வளவோ முறை பாராட்டுக்கள் வாங்கியுள்ளேன், என்பதை மலரும் நினைவுகளாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன், ஐயா.

  அதெல்லாம் ஒரு காலம்; சொன்னால் இப்போது யாருமே நம்பவே மாட்டார்கள்; ஏதோ பழங்கதை சொல்கிறார் என்பார்கள்.

  காலம் மிகவும் மாறிவிட்டது. சிலரை அது இன்று மிகவும் சோம்பேரிகளாக மாற்றி விட்டது. வசதி வாய்ப்புகள் குறைவான அந்தக்காலத்தையும் நவீன வசதிகள் யாவும் உள்ள இந்தக்காலத்தையும், வாழ்க்கையில் ஒன்றாக சேர்த்து அனுபவிக்கக் கொடுத்து வைத்துள்ளதால், இதை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

  // எத்தனைப் படங்கள். அதற்கான செலவு, நேரம், பொறுமை, அக்கறை, ஈடுபாடு, ஆர்வம் எல்லாவற்றிற்கும் தலைவணஙகிப் பாராட்டுகிறேன்.//

  எல்லாம் இறைவன் அளித்த வரம் தான்.

  மிகவும் சுறுசுறுப்பாக இவற்றை அனுதினமும் செய்பவர்களுடன் நம்மை ஒப்பிடும் போது, இதெல்லாம் மிகப் பெரிய சாதனை என்றெல்லாம் நான் ஒருபோதும் நினைப்பதே இல்லை.

  இந்தப்பதிவுக்கு முதல் பின்னூட்டம் கொடுத்துள்ள பதிவரின் வலைப்பூவுக்குச் சென்று பாருங்கள்.
  உங்களுக்கே நான் சொல்ல வருவது என்னவென்று புரியும்! ;)

  //ஏனோதானோவென்று பதிவிடுவதில்லை. பதிவிடுதலைவிட என்ன பதிவிடுகிறோம் என்பது முக்கியம்.//

  மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள், ஐயா.

  //அருமை சார். மனம் நிறைவாக இருக்கிறது. தரிசனம் மட்டுமல்ல உங்களின் பதிவுக் கரிசனமும்கூட. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் பயனான பதிவிற்காக.//

  தங்களின் மன நிறைவான வாழ்த்துகளும், பாராட்டுகளுக்கும்,
  ரொம்பவும் சந்தோஷம், ஐயா.

  நாளை 31.12.2011 அன்று வெளியிடுவதாக உள்ள என் பதிவையும் தயவுசெய்து படித்து விட்டு கருத்துக்கூறுங்கள், ஐயா.

  அது இந்த ஆண்டின், என் கடைசி பதிவு.

  அது மட்டுமல்ல அது என் 200 ஆவது பதிவும் கூட.

  அன்புடன் vgk

  ReplyDelete
 40. அழகான படங்களுடன் அருமையான விளக்கங்களுடன்
  பதிவைப் படிக்க நேரடியாக கோவிலில் இருப்பதைப் போன்ற
  பிரமையை ஏற்படுத்தியது
  அருமையான பதிவு
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 41. Ramani said...
  //அழகான படங்களுடன் அருமையான விளக்கங்களுடன்
  பதிவைப் படிக்க நேரடியாக கோவிலில் இருப்பதைப் போன்ற
  பிரமையை ஏற்படுத்தியது
  அருமையான பதிவு
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்//

  மிக்க சந்தோஷம் + நன்றி,
  ரமணி, சார்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 42. அருமையான தகவல்களுடன் பயனுள்ள பதிவு!
  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 43. எழுத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் தங்கள் சிரத்தை நன்றாகத் தெரிகிறது....

  வாழ்த்துக்களுடன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 44. திரு. கே.பி. ஜனா Sir
  திரு. ”ஆரண்ய நிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி Sir

  தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 45. நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை. 'பிரஹலாதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்' என்றவுடன் சகல துரும்புகளிலும் குடிகொண்டவன்.

  'அழகன்தானே அரியுருவத்தானே' என்று திருமங்கையும் அவன் திருவு ள்ளத்து அழகைப் பாடியுள்ளார்

  ஆற்றழகிய சிங்கரைச் சேவித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பதிவிற்கும் படங்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 46. Gopi Ramamoorthy said...
  //நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை. 'பிரஹலாதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்' என்றவுடன் சகல துரும்புகளிலும் குடிகொண்டவன்.

  'அழகன்தானே அரியுருவத்தானே' என்று திருமங்கையும் அவன் திருவு ள்ளத்து அழகைப் பாடியுள்ளார்

  ஆற்றழகிய சிங்கரைச் சேவித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பதிவிற்கும் படங்களுக்கும் மிக்க நன்றி.//

  வாங்க மிஸ்டர் கோபி, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.

  அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. vgk

  ReplyDelete
 47. இந்தப்பதிவுக்கு முதல் பின்னூட்டம் கொடுத்துள்ள பதிவரின் வலைப்பூவுக்குச் சென்று பாருங்கள்.
  உங்களுக்கே நான் சொல்ல வருவது என்னவென்று புரியும்! ;)


  தங்களின் ஆழ்ந்த அனுபவச்செறிவுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 48. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 49. காட்டழகிய சிங்கர் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். இந்த கோவிலுக்கு அடுத்த முறை செல்ல வேண்டும்.

  திருச்சியில் பார்க்காத கோவில்களில் ஐயப்பன் கோவில், இந்த கோவில், வெக்காளி அம்மன் என்று பட்டியல் நீள்கிறது.

  ReplyDelete
 50. படங்களும், செய்தியும் ஒரு புறம் அழகு என்றால் தங்களின் எழுத்து நடை ஒரு புறம் அழகு சேர்க்கிறது இக்கட்டுரைக்கு.

  காவிரித்தாயும், மூலவர் ஸ்ரீ காட்டழகிய சிங்கப் பெருமாளும் மனதை கொள்ளை கொள்கின்றனர்.

  யோக நரசிம்ஹரையும் வெகுவாக ரசித்தேன். சரணாகதி ஸ்லோகத்தை தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளது நல்ல முயற்சி.

  கோயிலுக்குச் செல்லும் வழியையும் குறிப்பிட்டுள்ளது பயன் தரும் விடயம்.

  மொத்தத்தில் மேலோட்டமாக இல்லாமல், இந்தக் கட்டுரைக்குத் தாங்கள் ரொம்பவே மெனக்கெட்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றுகிறது.

  - நுண்மதி

  ReplyDelete
 51. இராஜராஜேஸ்வரி said...
  இந்தப்பதிவுக்கு முதல் பின்னூட்டம் கொடுத்துள்ள பதிவரின் வலைப்பூவுக்குச் சென்று பாருங்கள்.
  உங்களுக்கே நான் சொல்ல வருவது என்னவென்று புரியும்! ;)


  //தங்களின் ஆழ்ந்த அனுபவச்செறிவுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..//

  தாங்கள் தினம் ஒரு அருமையான பதிவினை, அழகழகான உயிரூட்டமுள்ள தெய்வப்படங்களுடன் தந்து எங்களை மகிழ்விக்க, எவ்வளவு ஒரு கடுமையான உழைப்பு உழைக்கிறீர்கள் என்பது எனக்கு மிக நன்றாகத் தெரிகிறது. அதை நான் பிறருடன் பகிர்ந்து கொள்ள இது ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்தது, மேடம்.

  தாங்கள் மீண்டும் வருகை தந்துள்ளது என்னை மீண்டும் மகிழ்ச்செய்கிறது.
  நன்றி மேடம்.

  ReplyDelete
 52. மாலதி said...
  //மனம் நிறைந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 53. கோவை2தில்லி said...
  //காட்டழகிய சிங்கர் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். இந்த கோவிலுக்கு அடுத்த முறை செல்ல வேண்டும்.

  திருச்சியில் பார்க்காத கோவில்களில் ஐயப்பன் கோவில், இந்த கோவில், வெக்காளி அம்மன் என்று பட்டியல் நீள்கிறது.//

  திருச்சி தஞ்சை மார்க்கத்தில் திருச்சியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எறும்பீஸ்வரர் மலைக்கோயிலுக்கும், அதிலிருந்து 2 கிலோமீட்டர் தூரமே உள்ள ஜெய்நகர் சந்தோஷிமாதா கோயிலுக்கும் கூட சென்று வாருங்கள்.

  திருச்சி கோர்ட் அருகே உள்ள ஐயப்பன் கோயில், உறையூர் அருகே உள்ள வெக்காளியம்மன் கோயில் அவசியம் போய் வாருங்கள். அவசியம் பார்க்க வேண்டிய அருமையான கோயில்களே!

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 54. nunmadhi said...
  //படங்களும், செய்தியும் ஒரு புறம் அழகு என்றால் தங்களின் எழுத்து நடை ஒரு புறம் அழகு சேர்க்கிறது இக்கட்டுரைக்கு.

  காவிரித்தாயும், மூலவர் ஸ்ரீ காட்டழகிய சிங்கப் பெருமாளும் மனதை கொள்ளை கொள்கின்றனர்.

  யோக நரசிம்ஹரையும் வெகுவாக ரசித்தேன். சரணாகதி ஸ்லோகத்தை தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளது நல்ல முயற்சி.

  கோயிலுக்குச் செல்லும் வழியையும் குறிப்பிட்டுள்ளது பயன் தரும் விடயம்.

  மொத்தத்தில் மேலோட்டமாக இல்லாமல், இந்தக் கட்டுரைக்குத் தாங்கள் ரொம்பவே மெனக்கெட்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றுகிறது.

  - நுண்மதி//

  தங்கள் வருகைக்கும், அழகான, அன்பான, விரிவான, ஆறுதலான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, நுண்மதி.

  ReplyDelete
 55. ஐயா! இப்படி ஒரு அருமையான் பதிவிற்கு மிகவும் நன்றி! காடழகியசிங்கரை ஸேவித்துள்ளேன்! அடுத்து திருச்சி வரும்போது இந்தக் கோயிலுக்குச் செல்ல விழைகிறேன்! படங்களும் ஸ்லோகங்களும் அருமை! நன்றி நன்றி!

  ReplyDelete
 56. Seshadri e.s. November 10, 2012 6:29 AM
  ஐயா! இப்படி ஒரு அருமையான் பதிவிற்கு மிகவும் நன்றி! காடழகியசிங்கரை ஸேவித்துள்ளேன்! அடுத்து திருச்சி வரும்போது இந்தக் கோயிலுக்குச் செல்ல விழைகிறேன்! படங்களும் ஸ்லோகங்களும் அருமை! நன்றி நன்றி!

  வாருங்கள் திரு. சேஷாத்ரி சார். தங்களின் 100 ஆவது பதிவினை இன்று வெளியிடுள்ளீர்கள் என எனக்குத் தகவல் கிடைத்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். அங்கு வருகை தந்துப்பார்த்தால் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹரை படமாகக் காட்டி அழகாக கவிதையாக எழுதியுள்ளீர்கள்.

  அதனாலேயே உங்களை இந்த என் பதிவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

  என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகளும்......

  என்றும் அன்புடன் தங்கள்,
  VGK

  ReplyDelete
 57. காட்டழகிய சிங்கரை சேவித்து இருக்கிறேன். இந்தப் பெருமாளை அறிமுகப்படுத்தியதற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

  அடுத்தமுறை இவரையும், இவரை பற்றி புகைப்படங்களுடன் பதிவு போட்ட உங்களையும் மறக்காமல் சேவித்துவிட்டு வரவேண்டும்.

  அத்தனை நரசிம்ஹ பெருமாளையும் உங்கள் ஒரே பதிவில் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தத்தற்கு நன்றி!

  ReplyDelete
 58. Ranjani Narayanan November 17, 2012 3:56 AM
  //காட்டழகிய சிங்கரை சேவித்து இருக்கிறேன். இந்தப் பெருமாளை அறிமுகப்படுத்தியதற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.//

  வாருங்கள் திருமதி ரஞ்ஜனி மேடம். சந்தோஷம்.

  காவிரி நதியின் வடக்குக்கரைக்கும் கொள்ளிடம் ஆற்றின் தெற்குக்கரைக்கும் இடைப்பட்டிருக்கும் ஸ்ரீரங்கம் என்ற மிகப்பெரிய திவ்ய க்ஷேத்ரத்திலேயே தனியாக ஒரு காட்டுப் பகுதியில் கோயில் கொண்டிருப்பவர் தான் காட்டழகிய சிங்கர்.

  அதே காவிரி நதியின் தென் கரையில் கரையை ஒட்டியே கோயில் கொண்டிருப்பவர் இந்த “ஆற்றழகிய சிங்கர்” ஆவார்.

  //அடுத்தமுறை இவரையும், இவரை பற்றி புகைப்படங்களுடன் பதிவு போட்ட உங்களையும் மறக்காமல் சேவித்துவிட்டு வரவேண்டும்.//

  ஆஹா ... பேஷாக வந்து பெருமாளை மட்டும் சேவியுங்கோ போதும். தேவைப்பட்டால் நானே இந்தப் பெருமாள் கோயிலுக்கு தங்களைக் கூட்டிச்செல்கிறேன். நாம் இருவரும் சேர்ந்தே போய் சேவித்துவிட்டு வருவோம்.

  நான் மிகவும் சாதாரணமானவன் தான். என்னை சேவித்து என்றெல்லாம் தாங்கள் சொல்லவேகூடாது. O K யா?

  //அத்தனை நரசிம்ஹ பெருமாளையும் உங்கள் ஒரே பதிவில் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தத்தற்கு நன்றி!//

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ரஞ்ஜு மேடம்.

  அன்புடன்
  VGK

  [Some other details will reach you shortly by e-mail]

  ReplyDelete
 59. ரஞ்சனியின் பதிவிலிருந்து நூல் பிடித்து இங்கே வந்துவிட்டேன். என்ன ஒரு அற்புதமான சேவை. எங்கள் ந்ருசிம்ஹன்,காவிரிக்கரையில் அமர்ந்திருக்கிறானா.
  அதிசயங்களுக்கு அளவே இல்லை.
  பதிவுகள் முழுவதும் ஸ்ரீநிருசிம்ஹ சப்தம்.படங்கள் நேரே பேசுகின்றன. மனம் நிறைந்த நன்றி திரு.கோபாலகிருஷ்ணன்.

  ReplyDelete
  Replies
  1. வல்லிசிம்ஹன் November 17, 2012 7:02 AM
   //ரஞ்சனியின் பதிவிலிருந்து நூல் பிடித்து இங்கே வந்துவிட்டேன்.//

   வாருங்கள் திருமதி. வல்லிசிம்ஹன் மேடம். சந்தோஷம்.

   தங்கள் பெயரிலேயே [ந்ரு]சிம்ஹன் இருக்கிறார். தாங்கள் நினைத்தால் தூணிலிருந்தும் துரும்பிலிருந்தும் எழுந்தருளி தமிழ்நாட்டின் தற்போதைய இருளைப்போக்கி, 24 மணிநேரமும் ஒளியைத்தர முடியும். [மின் ஒளியை].

   ஆனால் தாங்களே தட்டுத்தடுமாறி, திருமதி ரஞ்ஜனியம்மாவின் பட்டுப்புடவையின் நூல் பிடித்து இங்கு வந்துள்ளதாகச் சொல்லி என்னை ஆச்சர்யப்படுத்தி விட்டீர்கள். ;))))) எப்படியோ வந்து சேர்ந்ததில் எனக்கு சந்தோஷமே.

   // என்ன ஒரு அற்புதமான சேவை. எங்கள் ந்ருசிம்ஹன்,காவிரிக்கரையில் அமர்ந்திருக்கிறானா.
   அதிசயங்களுக்கு அளவே இல்லை.

   பதிவுகள் முழுவதும் ஸ்ரீநிருசிம்ஹ சப்தம்.
   படங்கள் நேரே பேசுகின்றன.//

   ஆமாம் மேடம். அழகானதோர் சிறிய கோயில். காவிரிக்கரையில். மிகப்பழமை வாய்ந்தது எனச்சொல்லுகிறார்கள்.

   திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை தெரியுமல்லவா!
   அதன் அருகே E.R. High School Entrance உள்ளதல்லவா!!

   அந்த ஈ.ஆர்.மேல் நிலைப்பள்ளியின் வாசலிலிருந்து [ஓயாமாரி ROUTE என்பார்கள்] JUST ஒரு 5 நிமிட நடை பயணத்தில் தான் இந்தக்கோயில் அமைந்துள்ளது.

   கோயில் இருக்கும் இடத்தின் பெயர்: ஓடத்துறை

   இந்தக்கோயில் அருகே தான் இப்போது ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் வேலைகள் ஆரம்பித்து அதுவும் அரைகுறையாக நிற்கிறது.

   மிகவும் அழகான கோயில். அமைதியான கோயில். சாதாரண நாட்களில் கூட்டமோ கும்பலோ இருக்காது. சனிக்கிழமை, ஏகாதஸி, பிரதோஷம் போன்ற நாட்களிலும், மார்கழி மாதம் முழுவதும், ஓரளவு ஜனங்கள் வந்து போவார்கள்.

   நாம் நிம்மதியாக ஸேவித்து வரலாம்.

   -o-o-o-o-o-o-o-

   நான் 2012 பிப்ரவரி + மார்ச் மாதங்களில் நிறைய ஆன்மிகப் பதிவுகள் வெளியிட்டுள்ளேன். முதல் இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2012/02/blog-post.html

   அதுபோலவே 2012 ஏப்ரில் மாதத்தில் “ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” என்ற நாடகம் மிகச்சிறிய 18 பகுதிகளாக, படங்களுடன் வெளியிட்டிருந்தேன்.

   முதல் பகுதிக்கான இணைப்பு:
   http://gopu1949.blogspot.in/2012/04/1.html

   விருப்பமானால் போய்ப் பார்த்து படித்து மகிழுங்கள். ஆங்காங்கே முடிந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கோ.

   -o-o-o-o-o-o-o-o-

   //மனம் நிறைந்த நன்றி திரு.கோபாலகிருஷ்ணன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   அன்புடன் தங்கள்
   கோபாலகிருஷ்ணன்

   Delete
 60. நல்ல விவரமான பதிவு
  படங்களும் தகவல்களும் அருமை
  பாராட்டுக்கள் (தமிழ்நாடு சுற்றுலா துறையினர் இந்த பதிவில் உள்ள தகவல்களை பயன்படுத்திக்கொள்ளலாம்)

  ReplyDelete
  Replies
  1. Pattabi Raman May 23, 2013 at 11:43 PM

   வாங்கோ அண்ணா, வணக்கம். நமஸ்காரம்.

   //நல்ல விவரமான பதிவு. படங்களும் தகவல்களும் அருமை. பாராட்டுக்கள் (தமிழ்நாடு சுற்றுலா துறையினர் இந்த பதிவில் உள்ள தகவல்களை பயன்படுத்திக்கொள்ளலாம்)//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், ஆத்மார்த்தமான பாராட்டுக்களுக்கும் அடியேனின் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   Delete
 61. அருமையான கோவில். தரிசித்தவர்கள் பாக்கியசாலிகள். நானும் தரிசித்து விட்டேன்.

  ReplyDelete
 62. காவேரிக் கரை இருக்கு,
  கரைமேலே கோயில் இருக்கு,
  கோயில் மேல் தங்கள் சிந்தையிருக்கு,
  அது இந்த பதிவில் இருக்கு,
  எப்படி நம்ம பதில்?
  அழகு, அருமை, அத்துனையும் இருக்கு. நன்றி.

  ReplyDelete
 63. mageswari balachandran April 30, 2015 at 6:57 PM

  வாங்கோ, வணக்கம்.

  //காவேரிக் கரை இருக்கு,
  கரைமேலே கோயில் இருக்கு,
  கோயில் மேல் தங்கள் சிந்தையிருக்கு,
  அது இந்த பதிவில் இருக்கு,
  எப்படி நம்ம பதில்?//

  Superb !

  //அழகு, அருமை, அத்துனையும் இருக்கு. நன்றி.//

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  தங்களால் முடியுமானால் ஜனவரி 2011 முதல் நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும், வரிசையாக வருகை தந்து, ஒரு 15 வார்த்தைகளுக்குக் குறையாமல் பின்னூட்டமிட்டு, என் புதுப்போட்டியில் கலந்துகொண்டு ரொக்கப் பரிசினை வெல்லுங்கள்.

  போட்டி முடிய இன்னும் மிகச்சரியாக எட்டே எட்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. இப்போதே ஆரம்பித்து தினமும் சராசரியாக ஒரு ஐந்து பதிவுகளுக்காவது வருகைதந்து பின்னூட்டமிட்டு, வெற்றிவாகை சூடுங்கள். தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 64. படங்களும் தகவல்களும் அருமை! தரிசித்ததுண்டு.

  ReplyDelete
 65. Thulasidharan V Thillaiakathu May 16, 2015 at 8:19 PM

  வாங்கோ, வணக்கம்.

  //படங்களும் தகவல்களும் அருமை! தரிசித்ததுண்டு.//

  மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  ReplyDelete

 66. //வற்றாத ஜீவ நதியாம் காவிரி கரைபுரண்டு ஓடுவதைப்பார்ப்பதே அழகு, இந்த அழகிய ஸ்ரீ நரசிம்ஹரைப் பார்ப்பதும் அழகு. இந்தக் கரைபுரண்டு ஓடும் காவிரியையும் இந்த அழகிய ஸ்ரீ ////நரசிமஹரையும் ஒன்றாகச் சேர்த்துப்பார்த்து மகிழும் ஒரே இடம் தான் இந்த ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயில். //

  கண்ணுக்கு நிறைவான படங்கள் மனதுக்கு நிறைவான தகவல்களுடன் பதிவு அற்புதம். நன்றீ

  ReplyDelete
 67. பூந்தளிர் May 27, 2015 at 6:10 PM

  வாங்கோ, வணக்கம்மா.

  **வற்றாத ஜீவ நதியாம் காவிரி கரைபுரண்டு ஓடுவதைப்பார்ப்பதே அழகு, இந்த அழகிய ஸ்ரீ நரசிம்ஹரைப் பார்ப்பதும் அழகு. இந்தக் கரைபுரண்டு ஓடும் காவிரியையும் இந்த அழகிய ஸ்ரீ நரசிம்ஹரையும் ஒன்றாகச் சேர்த்துப்பார்த்து மகிழும் ஒரே இடம் தான் இந்த ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயில்.**

  //கண்ணுக்கு நிறைவான படங்கள் + மனதுக்கு நிறைவான தகவல்களுடன் பதிவு அற்புதம். நன்றீ//

  தங்களின் அன்பான வருகைக்கும், என் கண்களுக்கும் மனதுக்கும் நிறைவான பின்னூட்டத்திற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  HEARTIEST CONGRATULATIONS TO YOU !

  தாங்கள் இத்துடன், நான் 2011ம் ஆண்டு வெளியிட்டுள்ள அனைத்து 200 பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்.

  மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. நன்றியோ நன்றிகள். தொடர்ந்து வாருங்கள். பரிசினை வெல்லுங்கள். என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நன்றியுடன்
  கோபு

  ReplyDelete
 68. //வற்றாத ஜீவ நதியாம் காவிரி கரைபுரண்டு ஓடுவதைப்பார்ப்பதே அழகு, //

  இப்ப காவிரியில் தண்ணி இருக்கா.

  மீண்டும் எனக்கு திருச்சிக்கு வர வேண்டும் என்று ஆவல் அதிகரித்து விட்டது. வரும்போது கண்டிப்பாக இந்த நரசிம்மரையும் தரிசிக்க வேண்டும்.

  அருமையான தகவல்கள், படங்கள், துதிகள்.


  ReplyDelete
 69. குருஜி இதுபோல பதிவுல நா இன்னாமாதிரி கமண்டு போட ஏலும். வெளங்கலியே. ஸாரிங்க.

  ReplyDelete
  Replies
  1. mru October 14, 2015 at 3:04 PM

   //குருஜி இதுபோல பதிவுல நா இன்னாமாதிரி கமண்டு போட ஏலும். வெளங்கலியே.//

   ஏற்கனவே உங்களுக்கு ஒன்றும் சரியாக விளங்குவது இல்லை. அதுவும் இந்தப்பதிவு .... எப்படி விளங்கும்?

   //ஸாரிங்க.//

   சரீங்க ! :)

   Delete
  2. ’படமெல்லாம் ஜோராக்கீது. தலைப்பு ஜோராக்கீது. காவிரி ஆத்துலே இறங்கி குளிக்கணும் போல ஆசையாக்கீது’ என ஏதாவது எழுதக்கூடாதா?

   Delete
 70. படங்கள் எல்லாம் ரொம்ப நன்னாஇருக்கு தகவல்களும் இதுவரை தெரிஞ்சிருக்கலை நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிகிறது

  ReplyDelete
 71. அருமை வாத்யாரே...மிகவும் முழுமையான நிறைவான ஒரு இடுகை...படங்களும் உன்னதம். நேரில் பார்த்த உணர்வு...மிகவும் நன்றி

  ReplyDelete
 72. அருமையான ஆன்மிகப் பதிவு! மனமகிழ்ந்தேன்!

  ReplyDelete
 73. Mail message received at 16.43 Hours today (on 09.05.2017):

  அன்பின் கோபு ஸார் ,

  ராஜேஸ்வரி மேடத்தின் வலைப்பூவிலும் நிறைய கோவில்கள், விடயங்கள், பக்திப் பரவசமூட்டும் பதிவுகள் அடங்கியிருக்கும். அழகோ அழகு தாமரை. இப்போது அவர்களின் பின்னூட்டம் படிக்கும் பொழுதும் காவிரியின் அழகைக் கண்ட மலரும் நினைவைப் படிக்கும் பொழுதும் கண்களின் நீர் ததும்புகிறது. அற்புதமான பதிவர்.

  ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோயில் பற்றிய அழகிய படங்கள், மற்றும் காவிரியின் அழகு, ஆண்டாளின் அழகு, தங்கள் மனையாளின் அழகு, கோபுர அழகு, மந்திரத்தின் மகிமை, மேலும் பல நரசிம்ஹ மூர்த்தியின் படங்கள், யோகா நரசிம்ஹர் மதுரை, சிங்கிரிக்குடி, பரிக்கல், கண்டு களித்திருக்கிறேன் .

  இவரை தங்கள் பதிவில் தரிசித்த பாக்கியம் உங்களுக்குக் கிட்டிவிடும்.

  சரணாகதி ஸ்தோத்திரம் எழுதிக் கொண்டேன். காலத்தால் அழிக்க முடியாத பதிவு.

  எத்தனை பேர்கள் வந்து கண்டு ரசித்து வேண்டிக் கொண்டு.... நன்றி சொல்லியிருக்கிறார்கள். களை கட்டும் பதிவு. இன்று எனக்கும் காணக் கிடைத்து.

  மிக்க நன்றிகள்.

  இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
  பரம ரஸிகை

  ReplyDelete
 74. ஆற்றழகிய சிங்கப் பெருமாள் சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து அருகில்தான் இருக்கிறாரா? அடுத்த முறை நிச்சயமாக சேவிக்கணும் (அவன் அருள் புரியணும்)

  'சமைக்கறவாளை சாப்பிடுன்னு' சொல்ல ஆளில்லாததுபோலவே, போட்டோ எடுப்பவரை, நீங்க நில்லுங்கோ, ஒரு போட்டோ எடுக்கறேன்னு யாரும் சொல்லலைபோலிருக்கு. உங்களைக் காணோம், உங்கள் துணைவியைக் கண்டோம்.

  எல்லா நரசிம்மப்பெருமாள் படங்களையும் இணைத்துள்ளது அட்டஹாசம்.

  ஒரு பதிவில், கூடிய வரையில் எல்லா விஷயங்களையும் ஒன்றுவிடாமல் கொண்டுவருகின்ற உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது (கோவில் எத்தனை மணிக்கு திறந்திருக்கும், என்ன என்ன சன்னிதி, யார் கைங்கர்யம் போன்ற பல விஷயங்கள்).

  இப்படி ஒரு இடுகை வரப்போறதுன்னு முன்னாலேயே தெரிஞ்சிருந்தால், ஆந்திராவில் சேவித்த பல நரசிம்மர்களின் படங்களை அனுப்பியிருப்பேன் (மட்டபள்ளி, வாடபள்ளி போன்ற பல க்ஷேத்திரங்கள்)

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழன் October 25, 2017 at 3:20 PM

   வாங்கோ ஸ்வாமீ ..... வணக்கம்.

   //ஆற்றழகிய சிங்கப் பெருமாள் சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து அருகில்தான் இருக்கிறாரா? அடுத்த முறை நிச்சயமாக சேவிக்கணும் (அவன் அருள் புரியணும்)

   ஆம். அவனருளால் அவனைத் தாங்கள் நிச்சயமாக சேவிப்பீர்கள். அதற்கு என் நல் வாழ்த்துகள்.

   //'சமைக்கறவாளை சாப்பிடுன்னு' சொல்ல ஆளில்லாததுபோலவே, போட்டோ எடுப்பவரை, நீங்க நில்லுங்கோ, ஒரு போட்டோ எடுக்கறேன்னு யாரும் சொல்லலைபோலிருக்கு. உங்களைக் காணோம், உங்கள் துணைவியைக் கண்டோம்.//

   ஸ்ரீ பகவானுக்கு அந்தப் பரம ப்ரேம பக்திகொண்ட பக்தையான ஆண்டாளிடம் ’கிக்’ ஏற்பட்டது போல, ஆண்டாள் சந்நதிக்கு என் ஆம்படையாள் போனதும், எனக்கும் ஏதோ ஒரு எழுச்சி + பேரெழுச்சி ஏற்பட்டு, என் கேமராவில் க்ளிக் செய்துகொண்டுள்ளேன், என்றொரு நினைவு மட்டும் உள்ளது.

   பகவான் பக்தவத்சலன் ஆச்சே !

   ஆண்டாள், மீரா, ராதா, பத்ராசலம் இராமதாஸர், துக்காராம், பிரகலாதன், உத்தவர், அக்ரூரர், சுதாமா என்கிற குசேலர், துருவன், மஹாபலிச் சக்ரவர்த்தி, சீனப்ப நாயக்கர் என்கிற புரந்தரதாஸர் போன்ற அனைத்து பக்தர்களையும் தடுத்தாட் கொண்டவன் அல்லவா !

   //எல்லா நரசிம்மப்பெருமாள் படங்களையும் இணைத்துள்ளது அட்டஹாசம்.//

   ஏதோ பகவத் சங்கல்ப்பம் அதுபோல அன்று எனக்கு சாதகமாக அமைந்தது.

   //ஒரு பதிவில், கூடிய வரையில் எல்லா விஷயங்களையும் ஒன்றுவிடாமல் கொண்டுவருகின்ற உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது (கோவில் எத்தனை மணிக்கு திறந்திருக்கும், என்ன என்ன சன்னிதி, யார் கைங்கர்யம் போன்ற பல விஷயங்கள்).//

   மிக்க மகிழ்ச்சி. இதையெல்லாம், தன் இதுபோன்ற வீர/தீரச் செயல்களால் எனக்கு மிகவும் பக்குவமாகச் சொல்லிக்கொடுத்த வழிகாட்டியானவர் என்
   பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய மற்றொரு பதிவராகும்.

   //இப்படி ஒரு இடுகை வரப்போறதுன்னு முன்னாலேயே தெரிஞ்சிருந்தால், ஆந்திராவில் சேவித்த பல நரசிம்மர்களின் படங்களை அனுப்பியிருப்பேன் (மட்டபள்ளி, வாடபள்ளி போன்ற பல க்ஷேத்திரங்கள்)//

   இந்தப்பதிவே ஹனுமன் வால் போல மிகவும் நீண்டு போய் விட்டது. மேலும் இவையெல்லாம் அந்தக் குறிப்பிட்ட கோயிலில் இடம் பெற்றுள்ள படங்கள் மட்டுமே. அங்கு இல்லாததை இங்கு இந்தப்பதிவினில் சேர்ப்பது நல்லதல்ல.

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   Delete
 75. இந்தப்பதிவுடன் தொடர்புடைய மற்றொரு பதிவு:

  http://gopu1949.blogspot.in/2015/01/20.html

  ReplyDelete