என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 3 டிசம்பர், 2011

தா யு மா ன வ ள் [ பகுதி 1 of 3 ]



தாயுமானவள்


சிறுகதை [பகுதி 1 of 3]
By
வை. கோபாலகிருஷ்ணன்
-ooOoo-






திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத்தெரு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மலையைச்சுற்றியுள்ள நான்கு பெரிய வீதிகளிலும், மழை பெய்ததுபோல, வாடகைக்கு எடுத்த முனிசிபல் லாரிகள் மூலம் காவிரி நீர் பீச்சப்பட்டு, கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன.   


ஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப்பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக்கலவை என ஏதேதோ பக்தர்களுக்கும், பசித்துக்களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

வடக்கு ஆண்டார் தெருவின் மேற்கு மூலையில், தெருவோரமாக உள்ள பிள்ளையார் கோயில் வாசலில், பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டான்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டு ஏழைபாழைகளுக்கு அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வேப்பிலைக்கொத்துடன் தீச்சட்டிகளைக் கையில் ஏந்தி, மஞ்சள் நிற ஆடையணிந்து மாலையணிந்த மங்கையர்க் கூட்டத்துடன், மேள தாளங்கள்,கரகாட்டம், காவடியாட்டம், வாண வேடிக்கைகள் என அந்தப்பகுதியே கோலாகலமாக உள்ளது. எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக! 

முனியாண்டி தன் தொழிலில் மும்முரமாக இருக்கும் நேரம். அவனைச்சுற்றி ஒரே மழலைக்கூட்டம். கையில் நீண்ட மூங்கில் பட்டைக் கிளைகளுடன், கூடிய பெரியதொரு குச்சி. அதில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டுள்ள கலர் கலர் பலூன்கள். கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள், விசில்கள், நீர் நிரம்பிய பலூன் பந்துகள், ஊதினால் மகுடிபோல் ஆகி குழந்தை அழுவதுபோல சப்தமெழுப்பி பிறகு ஓயும் பலூன்கள், ஆப்பிள், பறங்கி, பூசணி, புடலங்காய் போன்ற பல்வேறு வடிவங்களில் பலவிதமான கலர்களில் பலூன்கள் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் விதமாக. அவனைச் சுற்றி நின்ற குழந்தைகளுக்கோ ஒரே குதூகலம்.

முனியாண்டியின் உள்ளத்தில் ஓர் உவகை.    இன்று எப்படியும் மாரியம்மன் அருளால் முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆக வேண்டும். டாக்டர் சொன்ன தொகை மூவாயிரத்துக்கு இந்த முன்னூறு மட்டுமே பாக்கி. கடந்த மூன்று வருடங்களாக நினைத்து ஏங்கிய ஒரு காரியம் நிறைவேறப்போகிறது. மனைவி மரகதத்தை எப்படியும் மகிழ்விக்க வேண்டியது அவன் கடமை.


காலையிலிருந்து நாஸ்தா செய்யக்கூட நேரமில்லை முனியாண்டிக்கு. நாக்கு வரண்டு விட்டது.  நீர் மோரை ஒரு தகரக்குவளையில் வாங்கி ஒரே மடக்காகக் குடித்துவிட்டு, பலூன்களை ஊதுவதும், ஊதியவற்றைக்கயிறு போட்டுக்கட்டுவதும், கேட்பவர்களுக்குக் கேட்பவற்றை எடுத்துக்கொடுத்து வியாபாரம் செய்வதும், காசை வாங்கி ஜோல்னாப்பையில் போடுவதும் என அவனின் பத்து விரல்களும் பத்துவிதமான பணிகள் செய்து வந்தன.


இத்தகைய தேர்திருவிழாக்களில்,முனியாண்டியைச்ச்சுற்றி எப்போதும் குழந்தைகளின் கூட்டம்.  ஆனாலும் தனக்கென இதுவரை ஒரு வாரிசு உருவாகவில்லையே என்ற ஏக்கம் உண்டு முனியாண்டிக்கு. திருமணம் ஆகி விளையாட்டுப்போல ஏழு ஆண்டுகள் உருண்டோடிப்போய் விட்டன.


மரகதமும் தன்னால் முடிந்த கூலி வேலைகளுக்குப்போய், சம்பாதித்து வரும் அன்பான அனுசரணையான மனைவி தான்.  முனியாண்டியும் மரகதமும் மனம் ஒத்த மகிழ்வான தம்பதிகளே. கஞ்சியோ கூழோ இன்பமாகப் பகிர்ந்துண்டு, கடன் ஏதும் இல்லாமல் காலம் தள்ளிவரும் ஜோடிகளே. காவிரிக்கரையோரம் ரயில்வே லைனை ஒட்டிய ஒரு சற்றே பெரிய குடிசை வீடு, அதுவே அவர்கள் இன்பமுடன் இல்லறம் நடத்தி வரும் அரண்மனை.  


திடீரென்று அடுத்தடுத்து பெரிய வேட்டுச்சத்தங்கள். குழந்தைகள் அனைவரும், தங்கள் காதைப்பொத்திக்கொண்டு, பலூன்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இங்கும் அங்கும் ஓடுகிறார்கள்.


போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நடுரோட்டில் யாரும் நிற்காதபடி கூட்டத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர். முனியாண்டியும் ரோட்டின் ஒரு ஓரத்திற்குத் தள்ளப்படுகிறான். கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று பலூன்கள் பட்பட்டென வெடித்துச் சிதறுகின்றன. 


தேரில் அம்மன் தெருமுனைக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண்களும் பெண்களும் போட்டிபோட்டுக்கொண்டு தேர் வடத்தை எப்படியாவது தொட்டுக்கும்பிட முண்டியடித்து வருகின்றனர். 


அர்ச்சனை சாமான்களுடன் அலைமோதும் பக்தர்கள் முன்னுரிமை எடுத்துக்கொண்டு தேரின் நடுவே நெருங்க, கையில் அதை அப்படியே வாங்கி தேங்காயை மட்டும் தன் கை அரிவாளால் ஒரே போடு போட்டு குருக்கள் அவர்களிடம் எம்பியபடி அனுப்பி வைக்க ஒருசிலர் தேரில் தொங்கியபடியே.  கட்டிக்கட்டியாக சூடம் அம்மனுக்குக் கொளுத்திய வண்ணமாக. மிக முக்கியமான தெரு முனையானதால் தேர் நகரவே மிகவும் தாமதம் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. 


வியர்த்துக்கொட்டும் மேனியுடன் தேர் இழுக்கும் ஆட்களில் சிலர், கும்பலாக வீடுகளுக்குள் புகுந்து, தண்ணீர் வாங்கியும், ஆங்காங்கே உள்ள ஒரு சில கிணறுகளில் தண்ணீர் இழுத்து மொண்டும், தங்கள் தலைகளில் ஊற்றிக்கொண்டு, வெளிச்சூட்டைத் தணித்துக்கொள்கின்றனர். வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த அம்மனுக்கே வெளிச்சம்.  

”பலூன்காரரே! இந்தப்பாப்பாவைக்கொஞ்சம் பார்த்துக்கோ! பத்தே நிமிடத்தில் தேரிலுள்ள அம்மனைச்சற்று அருகில் சென்று கும்பிட்டுவிட்டு ஓடியாறேன்” என்று மின்னல் வேகத்தில் சொல்லிச்சென்ற கைலிக்காரனின் முகம் கூட மனதில் சரியாகப்பதியவில்லை முனியாண்டிக்கு.

குழந்தை முகம் மட்டும் பளிச்சென்று, அந்த அம்மனே தேரிலிருந்து இறங்கி நேரில் வந்தது போல இருந்தது.

நல்ல அழுக்கேறிய பாவாடை சட்டை. கையில் மட்டும் ஒருசில ரப்பர் வளைகள். காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள். காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக பலநாட்களாக எண்ணெயே பார்த்திராத தலைமுடி. இரட்டைப்பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.

பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண் குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.

தொடரும்





இந்தச் சிறுகதையின் தொடர்ச்சி 06.12.2011 
செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்படும் 
vgk

58 கருத்துகள்:

  1. தேர்படத்துடன் அருமையான ஆரம்பம்.
    அழ்கான தலைப்பு "தா யு மா ன வ ள்.

    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. கையில் நீண்ட மூங்கில் பட்டைக் கிளைகளுடன், கூடிய பெரியதொரு குச்சி. அதில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டுள்ள கலர் கலர் பலூன்கள். கூலிங் க்ளாஸ் கண்ணாடிகள், விசில்கள், நீர் நிரம்பிய பலூன் பந்துகள், ஊதினால் மகுடிபோல் ஆகி குழந்தை அழுவதுபோல சப்தமெழுப்பி பிறகு ஓயும் பலூன்கள், ஆப்பிள், பறங்கி, பூசணி, படலங்காய் போன்ற பல்வேறு வடிவங்களில் பலவிதமான கலர்களில் பலூன்கள் பார்ப்பவரைப் பரவசப்படுத்தும் விதமாக. அவனைச் சுற்றி நின்ற குழந்தைகளுக்கோ ஒரே குதூகலம்./

    மழலையாக மாறி மழ்லைகளுடன் பரவசமாக நிற்கவைத்த அருமையான வர்ணனை!

    பதிலளிநீக்கு
  3. பத்து விரல்களும் பத்துவிதமான பணிகள் செய்து வந்தன.


    வெறும் கை என்பது மூடத்தனமல்லவா?
    விரல்கள் பத்தும் மூலதனம்
    என்று நிதர்சன வரிகள்!!

    பதிலளிநீக்கு
  4. பத்து விரல்களும் பத்துவிதமான பணிகள் செய்து வந்தன.


    வெறும் கை என்பது மூடத்தனமல்லவா?
    விரல்கள் பத்தும் மூலதனம்
    என்று நிதர்சன வரிகள்!!

    பதிலளிநீக்கு
  5. Opening lines were electric for me, since they brought me to my old and gold student days in my hostel at vanapattarai street, from where I have witnessed the same festival for about 7 years. Thank you Gopu, for making me happy with old memories. The story as usual is fine and look forward to next instalment on 6th.

    M.J.Raman

    பதிலளிநீக்கு
  6. அன்பான அனுசரணையான மனைவி
    பெரிய குடிசை வீடு, இன்பமுடன் இல்லறம் நடத்தி அரண்மனையாக்கிய அருமையான தம்பதிகளுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. வறுமைப்பிடியிலுள்ள கடும் உழைப்பாளிகளான அவர்களின் மனதில் உள்ள உள்சூடு எப்போது தான் தணியுமோ? அது அந்த அம்மனுக்கே வெளிச்சம்.

    பதிலளிநீக்கு
  8. காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள். காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள்.

    கதையின் முடிச்சை யூகிக்கவைக்கும் வரிகள்????

    பதிலளிநீக்கு
  9. தாயுமானவள் என்றதும் திருச்சி தாயமானவர் நினைவுக்கு வந்தார், அருமையான வர்ணனைகளுடம், உறவின் உயர்வை சொன்ன கதை அருமை அய்யா
    த ம 2

    பதிலளிநீக்கு
  10. மிக சரளம்.. அடுத்த இடுகைக்கு வெயிட்டிங்..:)

    பதிலளிநீக்கு
  11. KaNNukku neere thErum kathai maadharum ulaa vantha nEraththil thideernu thodarum pottu indha ulagukku kooti vanthuteengaLe!!

    பதிலளிநீக்கு
  12. நல்ல கதை.
    தொடருங்கள்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  13. தொடக்கமே அருமை வை கோ!
    தொடருங்கள் காத்திருக்கிறோம்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  14. நல்ல அழுக்கேறிய பாவாடை சட்டை. கையில் மட்டும் ஒருசில ரப்பர் வளைகள். காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள். காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக பலநாட்களாக எண்ணெயே பார்த்திராத தலைமுடி. இரட்டைப்பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.

    பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண் குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.//

    வசதியாய் வாழ்ந்த குழந்தை என தெரிகிறது.

    குழந்தைக்கு ஒரு கதை இருக்கிறது, அறிய ஆவல்.

    தேர் திருவிழாவை அழகாய் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. தேர்த் திருவிழாவினை கண் முன்னே நிறுத்தியது உங்கள் வர்ணனை...

    தாயுமானவள் - அடுத்த பகுதிகளுக்காய் காத்திருப்புடன் நாங்களும்....

    பதிலளிநீக்கு
  16. அவனின் உள்சூடு குறைய அவனின் கர்ம வினைதான் உதவி புரிய வேண்டும். அம்மன் என்ன செய்வாள் பாவம்!! அது போகட்டும், முனியாண்டியின் குறை தீர்ந்து விட்டது போலேருக்கே....குழந்தை கிடைத்து விட்டதே..!!

    பதிலளிநீக்கு
  17. வர்ணனையும் வார்த்தைக் கோர்வையும் அழகு. தொடருங்கள் :)

    பதிலளிநீக்கு
  18. தாயுமானவர் சன்னதி தெரியும்; தாயுமானவனும் தெரியும். தந்தையுமானவளும் தெரியும்; கணவர் காலமான பின் பொறுப்பாக குடும்ப பாரத்தைச் சுமந்த அப்படியான தாய்மார்களையும் பார்த்திருக்கிறேன்.
    தாயுள்ளம் பெண்களுக்கேச் சொந்தமான பொழுது, இதுவென்ன 'தாயுமானவள்' என்று பார்த்தேன். பெற்றெடுக்காத தாயில்லா குழந்தைக்கு தாயுமானவளாய் ஆன ஒரு பெண்ணின் கதை போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

    படக்காட்சி போன்ற வர்ணனைகளில் நீங்கள் திளைக்கும் பொழுது படிப்பவர் உள்ளம் தித்திக்கிறது.வர்ணனைகளின் நடுவே அவரவரைப் படம் பிடித்துக் காட்டி விடுவதும் உங்களின் தனியான சிறப்பு தான். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  19. அன்பான அனுசரணையான மனைவி
    பெரிய குடிசை வீடு, இன்பமுடன் இல்லறம் நடத்தி அரண்மனையாக்கிய அருமையான தம்பதிகளுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  20. மலைக்கோட்டையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் வர்ணித்த அழகு, மலைக்கோட்டையைத் தரிசித்தபடியே நான் படித்த கல்லூரிக் காலங்களை நினைவுபடுத்தி நெஞ்சந்துள்ளவைத்தது.

    ஆனால் அடுத்துவந்த முனியாண்டியின் வறிய நிலையும், அவனது மனவருத்தமும் கதையில் மனம் பதியவைக்க, சிறுமியின் அறிமுகம் அவளைப் பற்றிய பதைபதைப்பை உண்டாக்கி மேலும் படிக்கத் தூண்டுகிறது. ஆர்வத்துடன் அடுத்தப் பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. அருமையாகப் போகுது கதை. நல்ல சஸ்பென்ஸ் கொடுத்து கதையை நிறுத்தியுள்ளீர்கள். யூகங்களைக் கொடுத்து அதைக் கெடுக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
  22. மாரியம்மன் கோயில் தேர் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டன .

    இந்தக் கதை மூலம் அதை என் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தியமைக்கு நன்றி .

    தேரோட்டம் கூடிய கதையோட்டம் மிகப்பொருத்தம் .

    ஒவ்வொரு வார்த்தையிலும் உங்கள் ரசனையும் அனுபவமும் மின்னுகின்றன .

    பதிலளிநீக்கு
  23. தொடர் கதையா..ஜாமாயுங்கள்.அழகான சூழ்நிலையில் இதமாக கொண்டு செல்கின்றீர்கள்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. உங்கள் கதையின் சிறப்பே கதாபாத்திரங்களையும் சூழலையும் வர்ணிக்கும் விதம்தான். நான் சில நாட்கள் பயணத்தில் இருப்பேன் . முடிந்தவரை தொடர முயல்வேன். இல்லாவிட்டால் கதை முடிந்ததும் முழுவதுமாய் படிப்பேன். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  25. நல்ல அழுக்கேறிய பாவாடை சட்டை. கையில் மட்டும் ஒருசில ரப்பர் வளைகள். காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள். காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக பலநாட்களாக எண்ணெயே பார்த்திராத தலைமுடி. இரட்டைப்பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.


    கதையில் சூழல், கதாபாத்திரம் இவற்றை வர்ணிக்கும்/கண் முன்னே காட்டும் உங்கள் எழுத்து நடைக்கு இந்த பாண்டிய நாடே அடிமை.

    பதிலளிநீக்கு
  26. கதை அமர்க்களமாக தேர் போல் கிளம்பியுள்ளது.

    சிறுமியின் வர்ணனைகள் கதையின் போக்கை ஊகத்திற்கு கொண்டு செல்கிறது.

    அடடா!தொடர்ச்சி செவ்வாய்க்கிழமைதானா?

    பதிலளிநீக்கு
  27. உங்கள் நடை சுகமாக உள்ளது. முழுவதும் படித்துவிட்டு எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. தேர்படம் அருமையான ஆரம்பம்....

    பாராட்டுக்கள்.

    www.rishvan.com

    பதிலளிநீக்கு
  29. சித்திரைத் திருவிழா பற்றி எத்தனை அழகான வர்ணனை! அப்படியே நேரில் பார்ப்பது போல இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  30. அருமையான நடை சார். தேர்த்திருவிழாவை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது தங்கள் எழுத்து .குழந்தைக்கு ஏதோ கதை இருக்கிறது. நாளை வரை காத்திருக்கிறேன் .......

    பதிலளிநீக்கு
  31. திருவிழா கூட்டத்திற்குள் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.பலூன்காரரிடம் கிடைத்துள்ள குழந்தை வளர்ப்பு மகளாகப்போகிறாளோ?...

    பதிலளிநீக்கு
  32. ஆஹா..அருமையான ஆரம்பம்.அடுத்த பகுதியையும் படித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  33. அன்பின் வை.கோ

    வழக்கம் போல வர்ணனைகள் அதிகம் கொடுத்து கதையினை நகர்த்திச் செல்லும் திறமை நன்று. அங்கிள் - குழந்தையின் பின்புலம் அடுத்தடுத்த பகுதிகளீல் வெளி வரும் அல்லவா .... சஸ்பென்ஸ் ..... - கதை மிக அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  34. கோயில் திருவிழாக் காட்சியை கண்முன் கொண்டுவந்து நிருத்தியிருக்கின்றீர்கள். ஒரு வார்த்தையில் அடுத்து வரப் போகின்றது என்ன என்பதை ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றது. வை கோ சார் உங்கள் கதை சொல்லும் பாங்கே தனித்துவமானது . தொடரப் போவதைப்பார்ப்போம் .

    பதிலளிநீக்கு
  35. கோயில் திருவிழாக் காட்சியை கண்முன் கொண்டுவந்து நிருத்தியிருக்கின்றீர்கள். ஒரு வார்த்தையில் அடுத்து வரப் போகின்றது என்ன என்பதை ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றது. வை கோ சார் உங்கள் கதை சொல்லும் பாங்கே தனித்துவமானது . தொடரப் போவதைப்பார்ப்போம் .

    பதிலளிநீக்கு
  36. படித்தாயிற்று, அடுத்த பகுதிக்குப் போகிறேன். :-)

    பதிலளிநீக்கு
  37. மெருகேறி கொண்டே வரும் கதை சொல்லும் பாங்கு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  38. இந்தச் சிறுகதையின் முதல் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, என்னைப் பாராட்டி வாழ்த்தியுள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  39. திருச்சி வாணப்பட்டறை மாரியம்மன் தேர். நெரிசலான தெருவில் நடக்கும் திருவிழா.

    தேரோட்டத்தின்போது கட்டைகளைப் போட்டு கொஞ்ச நேரம் தேரை நிறுத்தி வைப்பார்கள். உங்கள் கதையென்னும் தேர் இப்போது முனியாண்டியிடம் நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  40. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும், தேர் போன்ற அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்,
    vgk

    பதிலளிநீக்கு
  41. திருவிழா கூட்டத்தில தொலைந்த குழந்தையோ...அக் குழந்தையின் ஆடையும் ,பேச்சும் சம்பந்தா சம்பந்தம்மில்லாததா தெரியுது.வசதியான குழந்தையை கடத்திட்டானா..அடுத்த பதிவை படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புச் சகோதரி, Mrs. ராதா ராணி Madam,

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இன்று ஒரு நாள் முழுவதும் எனக்காகவே ஒதுக்கி விட்டீர்களா? உங்களின் கமெண்ட்களுக்கு பதில் எழுதவே நேரம் இல்லாமல் போனது, எனக்கு. அவ்வளவு கமெண்ட்கள் வரிசையாக வந்துள்ளன. மிகவும் சந்தோஷம்.

      தங்களுக்கு மீண்டும் நன்றி.

      அன்புடன்
      vgk

      நீக்கு
  42. கதையின் ஆரம்பமே மிக அட்டகாசமாக மாரியம்மன் தேர்த்திருவிழாவுக்கு கூட்டிச்சென்று கூட்டத்தின் நடுவே எங்களையும் விட்டது போன்றதோர் பிரமை.... அத்தனை தத்ரூபம் வர்ணனை...

    அம்பாளின் தேர் நகர ஆரம்பித்ததும் வாணவேடிக்கை வேட்டு எல்லாம் அதிர தேர் நகர்கறது. நாங்களும் தான்....

    தேர்வடம் எப்படியாவது தொட்டு கும்பிட்டுவிடவேண்டும் என்று எல்லோரும் முண்டியடித்து முன்னேறுவது....

    முனியாண்டிக்கு ஏதோ ஒரு கனமான ஃப்ளாஷ்பேக் இருக்கும்னு காத்திருந்தால்.. காத்திருப்பு அவசியமில்லை அப்டின்னு சொல்லி அவர்களுக்கு குழந்தை இல்லை என்று எழுதியதை படித்தபோது மனம் கனத்தது....

    குழந்தையையும் அம்பாளை சேவிக்க அழைத்துச்செல்லாமல் யாரோ முகம் தெரியாத ஒரு முனியாண்டியிடம் குழந்தையை விட்டுச்செல்லும் அவசியம் என்ன?

    எங்கோ இடிக்கிறதே... என்னவோ தவறு நடக்கப்போகிறதுன்னு மனசு சொல்றது...

    அருமையான கதை நடை அண்ணா... திருவிழா வர்ணனை அப்டியே காட்சி கண்முன்னாடி நடப்பது போல் அத்தனை தத்ரூபம்.....

    தொடர்கிறேன் அடுத்த பாகம்....

    அன்பு வாழ்த்துகள் அண்ணா..

    என்னவோ தெரியலை எனக்கு சப்ஸ்க்ரைப் வேலை செய்யலை அண்ணா. ஏன்னே தெரியலை...


    பதிலளிநீக்கு
  43. மஞ்சுபாஷிணி October 16, 2012 3:24 AM
    //கதையின் ஆரம்பமே மிக அட்டகாசமாக மாரியம்மன் தேர்த்திருவிழாவுக்கு கூட்டிச்சென்று கூட்டத்தின் நடுவே எங்களையும் விட்டது போன்றதோர் பிரமை.... அத்தனை தத்ரூபம் வர்ணனை...

    அம்பாளின் தேர் நகர ஆரம்பித்ததும் வாணவேடிக்கை வேட்டு எல்லாம் அதிர தேர் நகர்கறது. நாங்களும் தான்....

    தேர்வடம் எப்படியாவது தொட்டு கும்பிட்டுவிடவேண்டும் என்று எல்லோரும் முண்டியடித்து முன்னேறுவது....

    அருமையான கதை நடை அண்ணா... திருவிழா வர்ணனை அப்டியே காட்சி கண்முன்னாடி நடப்பது போல் அத்தனை தத்ரூபம்.....

    தொடர்கிறேன் அடுத்த பாகம்....

    அன்பு வாழ்த்துகள் அண்ணா..//

    அன்பின் மஞ்சு, வாருங்கோ, வணக்கம்.

    அடுத்ததாக நாம் இந்தத் தேர்திருவிழாவில் சந்திப்போம் என நான் நினைக்கவே இல்லை. மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    முனியாண்டியிடம் ஓர் மிகப்பெரிய பலூனை வாங்கி என் குழந்தை மஞ்சுவின் கையினில் கொடுத்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டதம்மா;)

    அன்பான வருகையும் அழகான கோர்வையான கருத்துக்களும் மிகவும் சந்தோஷப்படுத்தியது..ப்பா.

    //என்னவோ தெரியலை எனக்கு சப்ஸ்க்ரைப் வேலை செய்யலை அண்ணா. ஏன்னே தெரியலை...//

    எனக்கு இதுபற்றிய சரியான தொழில்நுட்பம் தெரியாதும்மா. எனினும் நான் இருவரின் மின்னஞ்சல் முகவரி அனுப்பி வைக்கிறேன். மெயில் மூலம் அவர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனைபெற்று, முடிந்தால் சரிசெய்து கொள்ளுங்கோ.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
  44. இன்று தாயுமாவள் முதல் பகுதி படித்துக்கொண்டிருக்கிறேன் அந்த தேரோட்டத்திருவிழா நடுவில் நானும் நின்று கொண்டு இருக்கிறேன். ஹா ஹா ஹா, அப்படி ஒரு வர்ணனைகள்.,கூடவே முனியாண்டியின் பலூன் விற்கும் உத்யோகம், அவரின் பணத்தேவை பற்றிய விவரிப்பு,முனியாண்டி, மரகதத்தின் அன்னியோன்னிய குடும்ப வாழ்வு,தேர் இழுப்பவகளின் வியர்வை பொங்கும் முகங்கள், தீபாராதனைக்கு முண்டி அடிக்கும் பக்தர்களின் அவசரம், தேரிலிருந்து அம்மனே இறங்கி வந்தது போல அந்தக்குழந்தையின் முகம் முனியாண்டிக்கு மட்டுமில்லே எங்க கண்களுக்குமுன்னாடியும் தெரிகிறது. அங்கிள் பசிக்குதுன்னு அந்தக்குழந்தை சொல்லும் போது உடனே ஏதானும் சாப்பிடக்கொடுக்கணும் என்று தோன்று கிறது., அடுத்த பகுதிக்கு போய் வருகிறேன்.ஒரு விஷயமும் விடாம கதை சொல்லும் பாங்கு உங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கிறது.படிக்கப்படிக்க எனக்கு இப்படில்லாம் எப்போ எழுத வருமோன்னு ஒரே ஏக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் January 13, 2013 9:00 PM

      வாங்கோ Ms. பூந்தளிர் Madam,

      வணக்கம்.

      உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      //இன்று தாயுமாவள் முதல் பகுதி படித்துக் கொண்டிருக்கிறேன்.//

      ஆஹா, இதைக் கேட்கவே
      “இன்பத்தேன் வந்து பாயுது என் காதினிலே!”

      //அந்த தேரோட்டத்திருவிழா நடுவில் நானும் நின்று கொண்டு இருக்கிறேன். ஹா ஹா ஹா, அப்படி ஒரு வர்ணனைகள். கூடவே முனியாண்டியின் பலூன் விற்கும் உத்யோகம், அவரின் பணத்தேவை பற்றிய விவரிப்பு,முனியாண்டி, மரகதத்தின் அன்னியோன்னிய குடும்ப வாழ்வு,தேர் இழுப்பவகளின் வியர்வை பொங்கும் முகங்கள், தீபாராதனைக்கு முண்டி அடிக்கும் பக்தர்களின் அவசரம், தேரிலிருந்து அம்மனே இறங்கி வந்தது போல அந்தக்குழந்தையின் முகம் முனியாண்டிக்கு மட்டுமில்லே எங்க கண்களுக்குமுன்னாடியும் தெரிகிறது. அங்கிள் பசிக்குதுன்னு அந்தக்குழந்தை சொல்லும் போது உடனே ஏதானும் சாப்பிடக்கொடுக்கணும் என்று தோன்றுகிறது.//

      உங்களின் வாசிப்புத்திறமையும், விமர்சனம் செய்து பாராட்டும் தனித்தன்மையும், கருணை உள்ளமும் ஒருங்கே தெரிகிறது எனக்கும். மிக்க மகிழ்ச்சியம்மா.

      //அடுத்த பகுதிக்கு போய் வருகிறேன்.//

      ஆஹா, ஒவ்வொரு பகுதிக்கான பின்னூட்டங்களுக்கும் நான் பொறுமையான ஆனால் சற்றே தாமதமாக, நிச்சயமாக பதில் அளிப்பேன். இன்று மற்ற வேலைகளில் நான் கொஞ்சம் பிஸியாக்கும்.

      //ஒரு விஷயமும் விடாம கதை சொல்லும் பாங்கு உங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கிறது.//

      மிக்க நன்றி.

      //படிக்கப்படிக்க எனக்கு இப்படில்லாம் எப்போ எழுத வருமோன்னு ஒரே ஏக்கமாக இருக்கிறது.//

      வாசிப்பு அனுபவமே பலரை எழுத வைப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் எனக்கு அது போல நிச்சயமாக இல்லை.

      எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

      வாசிக்க வாசிக்க உங்களுக்கும் எப்படி எழுதப் பழக வேண்டும் என ஓர் ஐடியா கிடைக்கலாம். நீங்களும் நன்றாகத்தான் எழுத ஆரம்பித்துள்ளீர்கள். ஏக்கம் ஏதும் வேண்டாம்.

      விரைவில் எழுத்துலகில் நீங்கள் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள்.

      நீக்கு
  45. திருச்சி டவுன் வாணப்பட்டரை மாரியம்மன் தேர்த்திருவிழா இன்று 21.04.2015 செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

    மதியம் 1 மணி சுமாருக்கு என் குடியிருப்புப் பகுதி வாசலுக்கு வாணப்பட்டரை மாரியம்மன் அழகுத்தேரில் மெல்ல நகர்ந்து பவனி வந்து அருள் பாலித்தாள்.

    அப்போது என் வீட்டு பால்கனி ஜன்னல் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில இதோ http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html இந்தப்பதிவினில் இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  46. முனியான்டி எவ்வளவு சம்பாதித்தான் என்பதைவிட அவன் கண்டிப்பாக 300 சம்பாதிக்க வேண்டுமே என்று மனம் ஆசைப்படுகிறது.
    பாருங்கள் விழாக்கள் என்றால் இன்மும் இந்த பலூன் பஞ்சு மிட்டாய் சர்பத் மாறல,
    தேர் வடம் எப்படியாவது தொட்டுவிட துடிக்கும் மனசு. நான் கூட நூற்றாண்டுக்கு பிறகு தஞ்சை தேர் வடம் தொட்டே வந்தேன். சரி முடினயான்டி என்ன செய்தார் பார்க்கப் போகிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  47. பதில்கள்
    1. பூந்தளிர் May 21, 2015 at 11:43 AM
      // :)))) //

      பழைய பூந்தளிரின் நீண்ட பின்னூட்டம் இன்று என்னால் மீண்டும் ரசித்து படிக்கப்பட்டது. அந்தப்பூந்தளிர் இப்போ காணாமல் போய் விட்டதில் எனக்குக் கொஞ்சம் வருத்தமே.

      நீக்கு
  48. ஆரம்பமே அட்டகாசம்.
    அப்படியே ஒரு 40 வருடங்கள் பின்னோக்கிச் சென்று நான் ரசித்த மயிலை தேரோட்ட நாட்களுக்குச் சென்று விட்டேன்.

    பிள்ளை இல்லாதவனுக்குப் பிள்ளையாய் வந்தவளோ?

    விவரம் தெரிய அடுத்த பகுதிக்குப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனியாண்டி அந்த புள்ளக்கு சாப்பிட ஏதாச்சிம் வாங்கி யாந்தாகளா.

      நீக்கு
  49. இங்க இன்னும் இன்னாலா அதிநயம் நடக்கபோவுதோ. மனியாண்டி அந்த பச்ச புள்ளக்கு சாப்பிட ஏதாச்சிம் வாங்கியாந்தானா.

    பதிலளிநீக்கு
  50. திருவிழா நடக்கும் இடத்தின் சுவாரசியமான வர்ணனை பலூன்காரரின் கம்பு அதில் இருக்கும் சாமான்கள் என்று ஒன்று விடாமல் எப்படி நினைவில் கொண்டு வந்து சொல்ல முடிகிறது. அந்தக்குழந்தை யாரு என்ன?? அடுத்த பதிவிலா.


    பதிலளிநீக்கு
  51. பெரிய பலூன் ஒன்றை ஊதி அந்தப்பெண் குழந்தையின் கையில் கொடுத்தான் முனியாண்டி. சிறிய புன்னகையுடன் “தாங்க்யூ அங்கிள்” என்று சொன்ன அந்தக்குழந்தை, ”ரொம்பவும் பசிக்குது அங்கிள்” என்றது.// கதை சுருக்கம்போல இருக்கின்றது...தேர்த்திருவிழா காட்சி அமைப்பு உன்னதம்...

    பதிலளிநீக்கு
  52. //குழந்தை முகம் மட்டும் பளிச்சென்று, அந்த அம்மனே தேரிலிருந்து இறங்கி நேரில் வந்தது போல இருந்தது.

    நல்ல அழுக்கேறிய பாவாடை சட்டை. கையில் மட்டும் ஒருசில ரப்பர் வளைகள். காதுகளிலிருந்து தொங்கட்டான்கள் கழட்டப்பட்டதற்கு அடையாளம் போல வெறும் ஓட்டைகள். காலில் மிகவும் அழுக்கேறிய செருப்புகள். கொலுசுகள் முன்பு ஒரு நாள் போடப்பட்டிருக்கும் என்பதை யூகம் செய்ய ஒருசில சுவடுகள். சிடுக்கும் சிக்குமாக பலநாட்களாக எண்ணெயே பார்த்திராத தலைமுடி. இரட்டைப்பின்னல் இட்டதற்கான அறிகுறிகள்.// அருமையான வர்ணனை! பாத்திரங்களைக் கண்முன் நிறுத்தும் விதம் அழகு! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  53. பத்திரிகையில் அச்சிடப்பட்டு பிரசுரமான என் கதைகளில் ஒன்றான இதனை என்னிடம் கேட்டு வாங்கி, எங்கள் BLOG என்ற வலைத்தளத்தில், 02.02.2016 அன்று படங்களுடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அதற்கான இணைப்பு:
    http://engalblog.blogspot.com/2016/02/blog-post.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு