About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, December 19, 2011

தேடி வந்த தேவதை [சிறுகதை பகுதி 3 of 5]
தேடி வந்த தேவதை

[சிறுகதை பகுதி 3 of  5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


முன்கதை முடிந்த இடம்:
“அவரைப்பெற்ற தாயாராகிய உங்கள் வாயால் அப்படியெல்லாம் தயவுசெய்து சொல்லாதீர்கள் .... அம்மா! நாம் யாருமே இந்த உலகில் நம் விருப்பதிற்காக, நாம் விருப்பப்பட்ட பெற்றோர்களுக்கு, நாம் விருப்பபட்ட ஊரில்,  நாம் விருப்பபட்ட நாளில் பிறந்து விடவில்லை;


அதுபோலவே நாம் நினைத்தாலும் கூட இந்த உலகத்தை விட்டு நம் விருப்பப்படி உடனடியாகப் போய் விடவும் முடிவதில்லை;  


மொத்தத்தில் பிறப்போ அல்லது இறப்போ நம் கையில் எதுவுமே இல்லை; 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட, நாம் வாழ வாய்ப்பு கிடைத்துள்ள, இந்த மிகக்குறுகிய காலத்தில், நாம் நம்மால் பிறருக்கு என்ன உதவிகள் செய்திட முடியும் என்பதையே எப்போதும் சிந்திப்பவள் நான்;  


இந்த யதார்த்தத்திலேயே தினமும் எங்கள் மருத்துவ மனைக்கு வரும் பல நோயாளிகளுக்கு என்னால் முடிந்த மருத்துவ சேவைகள் செய்து வருகிறேன்” என்றாள் சுமதி.


தன் ஒவ்வொரு கேள்விகளுக்கும், சுமதி அளித்து வரும் பதில்களால் சற்றே ஸ்தம்பித்துப்போனாள், மரகதம்.


==============================

தொடர்ச்சி இப்போது இங்கே ...........

’இந்தச்சின்ன வயதில் இவளுக்கு இவ்வளவு பக்குவமா?’ ஓரளவுக்குத் திருப்தியடைந்த மரகதம், சுமதியுடன் தன் மகனும் தனிமையில் ஏதாவது பேச வேண்டியிருக்குமே என்பதை இங்கிதமாக உணர்ந்துகொண்டு, ”நீங்க ரெண்டு பேரும் ஏதாவது பேசிக்கொண்டு இருங்கோ ... ஒரு பத்து நிமிஷத்தில் நானும் திரும்பி வந்துடறேன்” என்று சொல்லியபடி, மரகதம் எழுந்து சமையல் அறைக்குள் நுழைந்தாள்.


கூட்டிக்கழித்துப்பார்த்ததில், இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சுமதியே தன் மகன் சுந்தருக்குப் பொருத்தமானவளாக இருக்கக்கூடும் என்று தன் ஒரு மனது சமாதானம் கூறினாலும், அவளின் மறுமனது அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.


அவள் தன் ஒரே மகன் சுந்தர் கல்யாண விஷயமாக எவ்வளவு கற்பனைகள் செய்து வைத்திருந்தாள்? அவை கொஞ்சமா .... நஞ்சமாக அடடா எல்லாம் இப்படி அவன் கொடுத்துள்ள ஒரே ஒரு விளம்பரத்தால் தவிடுபொடியாகும் என்று அவள் நினைத்தே பார்க்கவில்லையே!     

சிறிது நேரம் கழித்து மூவருக்குமான சிற்றுண்டித் தட்டுகளுடன் மீண்டும் வந்து அமர்ந்தாள், மரகதம். 

டிபன் ஏதும் தனக்கு வேண்டாமே என்று தவிர்க்க நினைத்த, சுமதியை, சுந்தரும் அவன் தாய் மரகதமும் வற்புருத்தி தங்கள் வீட்டுச் சிற்றுண்டியைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்; இல்லாவிட்டால் நாங்களும் சாப்பிட மாட்டோம்; சூடும் ஆறிவிடும்; என்று சொல்லி சாப்பிட வைத்தனர்.  
  
  

 
உடுத்தி வந்த ஆடையும் கசங்காமல், கீழே சிந்தாமல் சிதறாமல் அவள் டிபன் தட்டை தன் கழுத்தருகே நெருக்கிப் பிடித்தபடி வைத்துக்கொண்டு, சாப்பிடும் அழகையும், காஃபியை இரண்டு ஆற்றுஆற்றி விட்டு சொட்டுச்சொட்டாக ரஸித்துக் குடித்த நளினத்தையும், மரகதமும் அவள் மகன் சுந்தரும் மிகவும் வியப்பாக நோக்கினர்.  

“அப்புறம் உங்களுக்குள் தனியாகப்பேசியதில் என்ன முடிவு எடுத்தீர்கள்?” சுமதியையும், மகன் சுந்தரையும் பார்த்துக் கேட்டாள், மரகதம்.

”அம்மா! சுமதியை உங்களுக்குப் பிடித்திருந்தால், அவர்கள் வீட்டுக்குப்போய், அவள் பெற்றோரிடம் முறைப்படி பெண் கேட்டுப் பார்ப்போமே” சுந்தர் சற்றும் தாமதிக்காமல் பதில் அளித்தான்.

“சுமதிக்கு எந்தக்குறைச்சலும் இல்லை தான் ....... ஆனால் .......... “ என்று இழுத்து நிறுத்தினாள் மரகதம்.

“புரியுதும்மா, சுமதி வீட்டில் வசதி போதாது. நீ எதிர்பார்க்கும் அளவில் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது. உன் அந்தஸ்துக்கும், அவர்கள் அந்தஸ்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று தானே சொல்ல நினைக்கிறாய்? சற்று எரிச்சலுடன் சுந்தர் எதிர்க்கேள்வி கேட்க, [அதுவும் சுமதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே] மரகதம் மிகவும் மிரண்டு போனாள்.  

“எப்போதும்மா, உங்க வீட்டுக்கு கல்யாண சம்பந்தமாப் பேச வரலாம்?” என்று சுமதியிடம் மரகதம் கேட்டாள்.

“நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக போன் செய்துவிட்டு வந்தால், நானும் உங்களை வரவேற்க செளகர்யமாக இருக்கும்”என்று சொல்லி தன் ஹேண்ட்பேக்கைத் திறந்து, பேப்பர் பேனா எடுத்து, தன் வீட்டு விலாசத்தையும், போன் நம்பரையும் முத்துமுத்தாக அவளைப் போன்றே அழகாக, எழுதிக் கொடுத்தாள்.        

அவள் எழுதிக்கொடுத்த பேப்பரை, அம்மாவும் பிள்ளையும் ஆசையுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே, டிபன் சாப்பிட்ட எல்லோருடைய தட்டுக்களையும், காஃபி சாப்பிட்ட எல்லா டவரா டம்ளர்களையும், சேர்த்து அழகாக எடுத்துக்கொண்டுபோய், சமையல் அறையில் அவற்றைக் கையோடு கழுவி, அங்கிருந்த மேடையில் கவிழ்த்து வைத்து விட்டு, தன் கை விரல்களில் படிந்த ஈரத்தை, அழகான பூப்போட்டப் புது கர்சீப் ஒன்றினால், ஒத்தியபடி வந்த சுமதியின் செயல், மரகதத்தை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  

அடுத்தடுத்து காரியங்களிலேயே கவனமாக சுறுசுறுப்பாக இருக்கும், குடும்பப் பொறுப்புள்ள இவள் தனக்கு மருமகளாக வரப்போகிறாள்; தனக்கும் தன் மகன் சுந்தருக்கும் இனி எப்போதுமே எதற்குமே கவலையில்லை! என்ற சிந்தனைகள் மரகதத்தின் மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சுமதி விடைபெற்றுச்செல்லத் தயாராகி எழுந்து நின்று கொண்டாள். 

மரகதம் எழுந்து அருகே இருந்த பூஜை ரூமுக்குள் சுமதியையும் கூட்டிப்போய், ஸ்வாமி விளக்கை ஏற்றினாள். வெற்றிலை-பாக்கு, தேங்காய், ஆப்பிள்பழம், ஜாதிப்பூச்சரம், பட்டுரோஜா, மஞ்சள் கிழங்குகள், ஒஸ்தியான ரவிக்கைத்துணி ஆகியவற்றுடன் ஒரு நூறு ரூபாய் சலவைத்தாளையும் அதில் மடித்து, ட்ரேய் ஒன்றில் வைத்து குங்குமச்சிமிழுடன், மரகதம் சுமதியிடம் நீட்டினாள்.     

மரகத்தின் காலில் விழுந்து கும்பிட்டு விட்டு, அவற்றை கையில் வாங்கிக் கண்களில் ஒத்திக்கொண்டாள், சுமதி. 


ரெடியாக சுந்தர் ஒரு அழகிய காலியான கைப்பையை எடுத்து, சுமதியிடம் நீட்ட, ”ரொம்ப தாங்க்ஸ், டைம்லி ஹெல்ப்” என்று சொல்லி அதைத் தன் கையில் வாங்கி, மரகதம் கொடுத்த பொருட்களை அதில் போட்டுக்கொண்டாள்.  


ஜாதிப்பூச்சரத்தைத் தன் தலையில் சூடிக்கொண்டாள்.  பட்டுரோஜாவையும் அதன் நடுவில் பதித்துக்கொண்டாள். 


மிகவும் அழகானப்பெண்ணான சுமதியின் நீண்ட கருமையான கூந்தலில் ஏறிய பிறகு தான் அந்தப்பூக்களுக்கும், மேலும் ஒரு தனியழகு ஏற்பட்டுள்ளது என்று மரகதம் தன் மனதுக்குள் நினைத்து மகிழ்ந்து கொண்டாள்.

“டேய் சுந்தர், இவளுடன் தெரு முனை வரை நீயும் போய், பத்திரமாக வழியனுப்பிவிட்டு வா” என்று மரகதம் சொல்ல, வெற்றிக்களிப்புடன் சுமதியுடன் பேசிக்கொண்டே சென்றான் சுந்தர்.

சுந்தரின் குடும்ப டாக்டர் எதிரே வந்தார். அவரை சுமதிக்கு அறிமுகம் செய்துவிட்டு, இதுவரை நடந்த விஷயங்களை டாக்டரிடம் சுருக்கமாக எடுத்துரைத்தான் சுந்தர்.  


”இவள் தான் சார், என் வுட் பீ [WOULD BE] பெயர் சுமதி” என்றான் மிகவும் சந்தோஷமாக!

இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறிய டாக்டர், “சுமதி! யூ ஆர் ரியலி .... ய வெரி வெரி ...... லக்கி கேர்ள்”  எனக்கூறிச்சென்றார். 

டாக்டர் சொல்வதன் பொருள் விளங்காத குழப்பத்தில் சுமதி, சுந்தரை ஒரு மாதிரியாக நோக்கினாள்.

“இந்த டாக்டர் எப்போதுமே இப்படித்தான். மிகவும் தமாஷாகப் பேசக்கூடியவர்” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் சுந்தர். 


“தயவுசெய்து தனிமையில் பிரித்துப்படிக்கவும்” என்று எழுதிய கவர் ஒன்றை சுமதி கையில் கொடுத்து விட்டு, அவளை ஆட்டோ ஒன்றில் ஏறச் செய்துவிட்டு, தன் வீடு நோக்கித் திரும்பி வந்தான்.


தன் வீட்டுக்கு வந்து அந்தக் கவரைப் பிரித்து முதல் பத்தியைப் [Paragraph] படித்ததும், சிறு குழந்தையின் கையில் மிகப்பெரிய பலூன் ஒன்றைக் கொடுத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது, சுமதிக்கு. 


ஆனால் அடுத்தடுத்து எழுதப்பட்டிருந்த விஷயங்களைப் படித்ததும், அதே பலூன் பட்டென்று உடைந்து போனால், அந்தக் குழந்தைக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படுமோ அதே வருத்தத்தையும் அளித்தது. 


மொத்தத்தில் அந்தக்கடிதம் தந்த அதிர்ச்சியால், அவள் மனம் மிகவும் வேதனை தான் அடைந்தது.

தொடரும்

  
[ இந்தச் சிறுகதையின் அடுத்த பகுதி வரும் 22.12.2011 வியாழக்கிழமை வெளியிடப்படும். ]

70 comments:

 1. ஆஹா .. கடைசியில் ஒரு" க் "வைத்து
  அடுத்த பதிவுக்கு ஏங்கும்படி செய்துவிடீர்களே
  கதை பிரமாத மாகப் போகிறது
  தொடர வாழ்த்துக்கள்
  (முறுகல் தோசையும் சட்னியையும் காப்பியையும் பார்க்க
  ஒரு முறையேனும் திருச்சி ஏழைப்பிள்ளையார்
  கோவில் தெருவில் உள்ள உங்கள் வீட்டிற்கு வந்து மாமி கையால்
  ஒரு தோசையாவது உண்ணவேண்டும் என்கிற
  ஆசை வந்தது நிஜம் )
  த.ம2

  ReplyDelete
 2. பின்னே.... நல்ல பெண்ணை செலெக்ட் செய்ய என்று இப்படிஎல்லாம் பொய் சொல்லி டெஸ்ட் வைத்தால் சுமதி போன்ற பெண்களுக்குப் பிடிக்குமா....சம்பந்தத்தை நாசூக்காக மறுத்து விடுவதுதான் முறை!

  :)))

  ReplyDelete
 3. அன்பின் வை.கோ - சஸ்பென்ஸ் தாங்க இயலவில்லை - சுந்தர் கொடுத்த கடிதத்தில் ஸ்ரீராம் மறுமொழியில் கூறியபடி ஏதாவது இருக்கிறதா என்ன ...... பொறுத்திருந்து பார்க்கலாம் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. சூடான தோசை, சுவையான காபி படங்கள் அருமை. நீங்கள் குடியிருக்கும் ஆண்டார் தெரு ராமா கபே நினைவுக்கு வருகிரது.
  அடுத்து வரும் பதிவுக்கு காத்திருக்கிரேன்.

  ReplyDelete
 5. தயவுசெய்து தனிமையில் பிரித்துப்படிக்கவும்” என்று எழுதிய கவர் ஒன்றை சுமதி கையில் கொடுத்து விட்டு, அவளை ஆட்டோ ஒன்றில் ஏறச் செய்துவிட்டு, தன் வீடு நோக்கித் திரும்பி வந்தான்.//

  நான் உடல் நலமாய் இருக்கிறேன், சும்மா சொன்னேன்ன் என்று எழுதி இருக்குமோ அந்த கடிதத்தில் !

  ReplyDelete
 6. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட, நாம் வாழ வாய்ப்பு கிடைத்துள்ள, இந்த மிகக்குறுகிய காலத்தில், நாம் நம்மால் பிறருக்கு என்ன உதவிகள் செய்திட முடியும் என்பதையே எப்போதும் சிந்திப்பவள் நான்; //

  எயிட்ஸ் நோயாளிக்கு தான் உதவ போவதாய் நினைத்து மகிழந்தவளுக்கு
  அவன் எயிட்ஸ் நோயாளி இல்லை என்று தெரிந்து இருக்கும் அதனலால்
  அவளுக்கு ஏமாற்றம். அப்படித்தானே சார்.

  ReplyDelete
 7. அடுத்து என்னன்னு எதிர்பார்க்கவைக்கும் தொடர்.

  ReplyDelete
 8. ஆஹா... கதையில் இன்னுமொரு சஸ்பென்ஸ் முடிச்சு... முடிச்சு அவிழ காத்திருக்க வேண்டும் என்பதுதான் கவலையே... அடுத்த பகுதி எப்போது?

  ReplyDelete
 9. முதலிலேயே கதை முழுவதும் எழுதிவிட்டு, பாகம் பாகமாகப் பதிவிடுகிறீர்களா, இல்லை பாகம் பாகமாக எழுதி பதிவிடுகிறீர்களா.?பின்னதில் நிறைய பேரின் யூகத்தை மாற்றலாம் அல்லவா. நான் எதையும் யூகிக்க வில்லை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. அடுத்தடுத்து காரியங்களிலேயே கவனமாக சுறுசுறுப்பாக இருக்கும், குடும்பப் பொறுப்புள்ள இவள் தனக்கு மருமகளாக வரப்போகிறாள்; தனக்கும் தன் மகன் சுந்தருக்கும் இனி எப்போதுமே எதற்குமே கவலையில்லை! என்ற சிந்தனைகள் மரகதத்தின் மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

  தேடி வந்தது தேவதை அல்லவா??

  ReplyDelete
 11. படங்கள் பதிவுக்குச்சுவை கூட்டுகின்றன..

  ReplyDelete
 12. மிகவும் அழகான பெண்ணான சுமதியின் நீண்ட கருமையான கூந்தலில் ஏறிய பிறகு தான் அந்தப்பூக்களுக்கும், மேலும் ஒரு தனியழகு ஏற்பட்டுள்ளது என்று மரகதம் தன் மனதுக்குள் நினைத்து மகிழ்ந்து கொண்டாள்./

  தனிதன்மையான ரசனைமிகுந்த வரிகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 13. மொத்தத்தில் அந்தக்கடிதம் தந்த அதிர்ச்சியால், அவள் மனம் மிகவும் வேதனை தான் அடைந்தது

  மதில்மேல்பூனை மாதிரி அவள்முடிவு யூகிக்கமுடியாமல் கதாசிரியரின் கைகளில் வைத்துகொண்டிருக்கும் சாமர்த்தியமான வரிகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 14. எப்போதும்மா, உங்க வீட்டுக்கு கல்யாண சம்பந்தமாப் பேச வரலாம்?” என்று சுமதியிடம் மரகதம் கேட்டாள்.

  சட் என்று நேரடியாக கேட்டுவிட்டார்களே சுமதியிடம் மரகதம் சுற்றி வளைக்காமல்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 15. கூட்டிக்கழித்துப்பார்த்ததில், இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சுமதியே தன் மகன் சுந்தருக்குப் பொருத்தமானவளாக இருக்கக்கூடும்

  சந்தேகமில்லாமல் பொருத்தமான ஜோடிதான்..

  ReplyDelete
 16. வரப்போகும் மருமகளின் குணங்களை கவனிக்கும் விதமாக உங்களது வர்ணனை ரசிக்கும்படியாய் இருந்தது.மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் இல்லனுதான் நானும் நினைக்கிறேன்.அந்த தோசை,காபி எல்லாம் உங்கவீட்டில் கிளிக்கியதுதானே.

  ReplyDelete
 17. என்ன சார் இப்படி நிறுத்திட்டீங்க. எனக்கு என்னன்னவோ எல்லாம் நினைக்க வருகின்றது. நீங்கள் கதை சொல்லும் விதம் சிறப்பு. அதிலும் எதிர்பார்ப்பை வைப்பீர்களே..... ஒரே திரில் ஆக இருக்கும். பொறுமை.....பொறுமை....

  ReplyDelete
 18. நான் யூகித்த முடிவாக இருக்குமோ ..... வேண்டாம் பொறுத்திருந்து
  என் பின்னூட்டத்தை தருகிறேன் .

  காப்பியும் தோசை சட்னியும் சூப்பர் காம்பினேஷன்

  ReplyDelete
 19. எல்லோரது ஊக சக்திக்கும் வேலை தரும் விதமாக சுவாரஸ்‌யமாக நகர்த்திச் செல்கிறீர்கள். அவன் என்ன எழுதியிருப்பான் என நான் யூகித்தது சரிதானா என்று அடுத்த பகுதியைப் பார்த்து தெரிந்து கொள்கிறேன்... நன்றி! (த.ம.6)

  ReplyDelete
 20. அடுத்தடுத்து எழுதப்பட்டிருந்த விஷயங்களைப் படித்ததும், அதே பலூன் பட்டென்று உடைந்து போனால், அந்தக் குழந்தைக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படுமோ அதே வருத்தத்தையும் அளித்தது.

  நல்ல உதாரணம்.
  கதையின் போக்கில் அப்படியே நாங்களும்

  ReplyDelete
 21. சுவாரஸ்யமாக இருக்கு தொடருங்கள்\

  த.ம-7

  ReplyDelete
 22. உடைந்த பலூன் போல எங்கள் உள்ளமும் தான் உடைந்தது!
  காரணம் தேவையா..?
  உமக்கே பரியும்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 23. //மரகதம் எழுந்து அருகே இருந்த பூஜை ரூமுக்குள் சுமதியையும் கூட்டிப்போய், ஸ்வாமி விளக்கை ஏற்றினாள். வெற்றிலை-பாக்கு, தேங்காய், ஆப்பிள்பழம், ஜாதிப்பூச்சரம், பட்டுரோஜா, மஞ்சள் கிழங்குகள், ஒஸ்தியான ரவிக்கைத்துணி ஆகியவற்றுடன் ஒரு நூறு ரூபாய் சலவைத்தாளையும் அதில் மடித்து, ட்ரேய் ஒன்றில் வைத்து குங்குமச்சிமிழுடன், மரகதம் சுமதியிடம் நீட்டினாள். //

  விரும்பத் தக்க ஒருவர் வீட்டிற்கு வந்தால் எப்படி உபசரிக்க வேண்டும் என்பதற்கு சிறந்த வழி காட்டி இந்த கதை பகுதி. படிக்கப் படிக்க சுவை கூடுகிறது. முறுகல் தோசை ,சட்னி ,காபி சாப்பிட்டு விட்டு அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்,

  ReplyDelete
 24. தோசைக்கு மட்டும் வெள்ளி தட்டு !

  அடுத்த முறை சுமதி வரும் சமயம் காபிக்கும் வெள்ளி டபரா, டம்ளர் கொடுத்து அசத்தி விடுவார் மரகதம்.

  ReplyDelete
 25. ஹை! நான் நினைத்த மாதிரி தான் கதை சென்று கொண்டிருப்பது போல் இருந்தது....ஆனால் கடைசியில்
  சஸ்பென்ஸ்....ஹ்ம்ம்...என் யூகம் சரியா தவறான்னு பார்க்கணம்.

  கதைக்கு ஈடு கொடுத்து நீங்கள் இடம் புகைப்படங்கள் இருக்கே! ஆஹா! "coffee" பெரிதும் தேவைப்படாத
  சிலர் தோசை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். மரகதம் மாமி பேசும் போதே சிரித்த முகத்துடன்
  "நளினி" மனதில் வந்து போகிறார். எனக்கு சுமதியை விட மரகதம் மாமி ரொம்ப புடிச்சு போச்சு.
  மல்லி என்றாலே ஜாதி-மல்லி தான் அழகு. அழகான அன்பான குடும்பத்தின் துவக்கம் சிறப்பா இருக்கு.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 26. ////அம்மாவும் பிள்ளையும் ஆசையுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே, டிபன் சாப்பிட்ட எல்லோருடைய தட்டுக்களையும், காஃபி சாப்பிட்ட எல்லா டவரா டம்ளர்களையும், சேர்த்து அழகாக எடுத்துக்கொண்டுபோய், சமையல் அறையில் அவற்றைக் கையோடு கழுவி, அங்கிருந்த மேடையில் கவிழ்த்து வைத்து விட்டு,///


  இதையெல்லாம் செய்யலைன்னா எங்க வீட்டுல அம்மா பாட்டி எல்லாம் கோவிச்சுப்பாங்க. அந்த தொல்லை தாங்காமயே நாங்க எல்லாம் செஞ்சுடுவோம். அப்படி ய்யலைன்னா "அவள பார் இவள பார், எப்படி அழகா காரியம் செய்யறாங்க" ன்னு வேற
  திட்டு விழும்.

  grrr எனக்கு இந்த வரி புடிக்கல :)))))) (சும்ம lighter tones :) )

  ReplyDelete
 27. நான் நேற்றே என் பின்னூட்டத்தில் சொன்னது போல் நல்ல பெண்ணை தேர்ந்தெடுப்பதற்கு தான் இந்த எய்ட்ஸோ....அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தது......
  இப்படி தொடரும் போட்டுட்டீங்களே சார்....
  த.ம - 9
  இண்ட்லி - 3

  ReplyDelete
 28. Ramani said...
  //ஆஹா .. கடைசியில் ஒரு" க் "வைத்து
  அடுத்த பதிவுக்கு ஏங்கும்படி செய்துவிடீர்களே
  கதை பிரமாத மாகப் போகிறது
  தொடர வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி, ரமணி சார்.

  //முறுகல் தோசையும் சட்னியையும் காப்பியையும் பார்க்க
  ஒரு முறையேனும் திருச்சி ஏழைப்பிள்ளையார்
  கோவில் தெருவில் உள்ள உங்கள் வீட்டிற்கு வந்து மாமி கையால்
  ஒரு தோசையாவது உண்ணவேண்டும் என்கிற
  ஆசை வந்தது நிஜம்.//

  அவசியம் வாங்கோ சார். இதென்ன பிரமாதம். நீங்கள் எத்தகைய டிபன் வகைகள் வேண்டுமானாலும் இங்கு என் வீட்டுக்கு வந்து உரிமையுடன் கேட்கலாம்.

  அடுத்த 5 ஆவது நிமிடம் அதைத் தங்களுக்கு, தாங்கள் கேட்ட விரும்பிய மெனுவை கிடைக்கச் செய்யும் வசதி வாய்ப்புக்கள் உள்ள இடத்தில் தான் நானே குடியிருக்கிறேன்.

  WELCOME!

  அன்புடன் vgk

  ReplyDelete
 29. @ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
  @ திரு சீனா ஐயா அவர்கள்
  @ திரு மணக்கால் அவ்ர்கள்
  @ திருமதி கோமதி அரசு [2]
  @ திருமதி லக்ஷ்மி அவர்கள்
  @ வெங்கட் நாகராஜ்
  @ திரு GMB Sir அவர்கள்
  @ திருமதி ஏஞ்சலின் அவர்கள்
  @ திரு. கணேஷ் அவர்கள்
  @ திரு Kss Rajh அவர்கள்
  @ புலவர் திரு சா. இராமநுசம் ஐயா
  அவர்கள்
  @ திரு D. Chandramouli Sir

  ஆகிய அனைவரின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் [ஒரு சிலரின் ஆதரவான பொன்னான வாக்குகளுக்கும்]என் நெஞ்சார்ந்த நன்றிகள். பலரின் யூகங்கள் எனக்கும் ஒருவித பரபரப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளன.

  அடுத்த பகுதியில் சந்திப்போம்.
  அன்புடன் vgk

  ReplyDelete
 30. இராஜராஜேஸ்வரி said...

  //தேடி வந்தது தேவதை அல்லவா??//

  ஆமாம். தேவதையே தான். ;)))))

  //படங்கள் பதிவுக்குச்சுவை கூட்டுகின்றன..//

  தங்களின் வருகை போலவே! ;)))))

  ***மிகவும் அழகான பெண்ணான சுமதியின் நீண்ட கருமையான கூந்தலில் ஏறிய பிறகு தான் அந்தப்பூக்களுக்கும், மேலும் ஒரு தனியழகு ஏற்பட்டுள்ளது என்று மரகதம் தன் மனதுக்குள் நினைத்து மகிழ்ந்து கொண்டாள்.***

  //தனிதன்மையான ரசனைமிகுந்த வரிகளுக்குப் பாராட்டுக்கள்..//

  கடைசியாக 11th hour இல் ஏதோ மனதில் தோன்றியது, சேர்த்தேன்.

  அந்தப்பூக்கள் சுமதியின் அழகிய கூந்தலில் ஏறிய பிறகே அழகானது போல, தனித்தன்மை வாய்ந்த தங்களின் ரசனை மிகுந்த பாராட்டுக்களைப் பெற்ற பின்பே,
  என் எழுத்துக்கள் இப்போது எனக்கே அழகாகத் தெரிகின்றன. ;)))))

  //மதில்மேல்பூனை மாதிரி அவள்முடிவு யூகிக்கமுடியாமல் கதாசிரியரின் கைகளில் வைத்துகொண்டிருக்கும் சாமர்த்தியமான வரிகள்.. பாராட்டுக்கள்..//

  சாமர்த்தியமான பாராட்டுக்களுக்கு சாதாரணமானவனின் நன்றிகள். ;)))

  //சட் என்று நேரடியாக கேட்டுவிட்டார்களே சுமதியிடம் மரகதம் சுற்றி வளைக்காமல்.. பாராட்டுக்கள்..//

  தோளுக்கு மேல் வளந்து தோழனாகி, கல்யாண வயதில் இருக்கும், மகன்கள் மிரட்டினால் நாம் பயந்து விடுவது இயற்கை தானே! ;)))))

  //சந்தேகமில்லாமல் பொருத்தமான ஜோடிதான்..//

  ஜோடி சேர்ந்து விடுவார்களா!
  தங்கள் வாக்கு தேவதையின் வாக்கு அல்லவா ..... கடைசியில் என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம்.
  ;))))))

  பின்னூட்டப்பட்டியல் என்ற குளத்தின் நடுவே ஆறு முறை செந்தாமரைகளை மலரச்செய்து அசத்தியுள்ளது, அழகோ அழகாக, மன மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

  நன்றி! நன்றி!! நன்றி!!!
  நன்றி! நன்றி!! நன்றி!!!

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 31. thirumathi bs sridhar said...
  //வரப்போகும் மருமகளின் குணங்களை கவனிக்கும் விதமாக உங்களது வர்ணனை ரசிக்கும்படியாய் இருந்தது.//

  அப்படியா! மிகவும் சந்தோஷம்.

  எனது வர்ணனைகளைக்கூட ரசிக்க ஆங்காங்கே உங்களைப்போல ஒரு சிலர். மகிழ்ச்சி. ;)))

  //மாப்பிள்ளைக்கு எய்ட்ஸ் இல்லனுதான் நானும் நினைக்கிறேன்.//

  எதை எப்படி வேண்டுமானாலும் நினைக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு, மேடம்.

  //அந்த தோசை,காபி எல்லாம் உங்கவீட்டில் கிளிக்கியதுதானே.//

  இல்லை. யார் வீட்டிலோ யாரோ கிளிக்கியதை நான் பயன் கொண்டதோடு சரி.

  [ஆனால் எங்க வீட்டு மேலிடம் நினைத்தால் இதைவிட சூப்பர் தோசையும் + நுரை பொங்கும் சூப்பர் ஃபில்டர் டிகிரி காஃபியும், செய்து கொடுத்து அசத்தி விடுவாளாக்கும்! என்பதைத் தாங்கள் அறியவும். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருவதால் என் வயிறு வாழ்த்தி இதை எழுத வைத்துள்ளதாக்கும்! ;)))))) ]

  அன்புள்ள vgk

  ReplyDelete
 32. சந்திரகௌரி said...
  //என்ன சார் இப்படி நிறுத்திட்டீங்க. எனக்கு என்னன்னவோ எல்லாம் நினைக்க வருகின்றது.//

  அடடா, ஒன்றும் பெரிதாக நினைக்காதீர்கள். கதை தானே. அதன் போக்கில் அது போய் எங்கோ, எப்படியோ முடிந்துவிடும்.

  //நீங்கள் கதை சொல்லும் விதம் சிறப்பு. அதிலும் எதிர்பார்ப்பை வைப்பீர்களே..... ஒரே திரில் ஆக இருக்கும்.//

  இப்போதாவது உணர்ந்து கொண்டீர்களே! மகிழ்ச்சி.
  உங்களுக்காகவே [முதல் பகுதிக்கு நீங்க கொடுத்த பின்னூட்டத்திற்காகவே] உடனுக்குடன் ஓரிரு நாட்கள் இடைவெளி கொடுத்து, அவசர அவசரமாக. இதன் அடுத்த்டுத்த பகுதிகளை வெளியிட்டு வருகிறேன்.


  //பொறுமை.....பொறுமை....//

  யாருக்கு?
  படிக்கும் உங்களுக்கா?
  எழுதும் எனக்கா?

  மிக்க நன்றி! மேடம்.

  ReplyDelete
 33. ரிஷபன் said...
  ****அடுத்தடுத்து எழுதப்பட்டிருந்த விஷயங்களைப் படித்ததும், அதே பலூன் பட்டென்று உடைந்து போனால், அந்தக் குழந்தைக்கு எவ்வளவு வருத்தம் ஏற்படுமோ அதே வருத்தத்தையும் அளித்தது****.

  //நல்ல உதாரணம்.
  கதையின் போக்கில் அப்படியே நாங்களும்//

  தங்களின் அன்பான வருகைக்கும், உற்சாகப்படுத்தும் விதமாக எழுதும் கருத்துக்களுக்கும், மிக்க நன்றி, சார்.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 34. கணேஷ் said...
  ****மரகதம் எழுந்து அருகே இருந்த பூஜை ரூமுக்குள் சுமதியையும் கூட்டிப்போய், ஸ்வாமி விளக்கை ஏற்றினாள். வெற்றிலை-பாக்கு, தேங்காய், ஆப்பிள்பழம், ஜாதிப்பூச்சரம், பட்டுரோஜா, மஞ்சள் கிழங்குகள், ஒஸ்தியான ரவிக்கைத்துணி ஆகியவற்றுடன் ஒரு நூறு ரூபாய் சலவைத்தாளையும் அதில் மடித்து, ட்ரேய் ஒன்றில் வைத்து குங்குமச்சிமிழுடன், மரகதம் சுமதியிடம் நீட்டினாள்.****

  //விரும்பத் தக்க ஒருவர் வீட்டிற்கு வந்தால் எப்படி உபசரிக்க வேண்டும் என்பதற்கு சிறந்த வழி காட்டி இந்த கதை பகுதி. படிக்கப் படிக்க சுவை கூடுகிறது. முறுகல் தோசை,சட்னி,காபி சாப்பிட்டு விட்டு அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்//

  மிகவ்ம் சந்தோஷம் .... கணேஷ்.

  ரசனைகளில், உன்னுடையதும் என்னுடையதும், பல நேரங்களில் ஒத்துப்போகின்றன. சொந்த மாமாவும் மறுமானும் என்றால் சும்மாவா ! பின்னே.

  சரியானதொரு இடத்தைச் சுட்டிக்காட்டியுள்ளதற்கு நன்றி.

  அன்புடன் கோபு மாமா

  ReplyDelete
 35. கணேஷ் said...
  //தோசைக்கு மட்டும் வெள்ளி தட்டு !

  அடுத்த முறை சுமதி வரும் சமயம் காபிக்கும் வெள்ளி டபரா, டம்ளர் கொடுத்து அசத்தி விடுவார் மரகதம்.//

  என் அன்புள்ள அக்கா [உன் அம்மா] நான் சாதாரணமாக உங்க ஆத்துக்குப் போனாலே வெள்ளி டம்ளர்+டவரா வில் தான், எனக்கு ஸ்பெஷலாக காஃபி கலந்து தருகிறார்கள்.

  கதையில் வரும் கோடீஸ்வரி மரகதம் செய்தாலும் செய்வாள், தங்கத்திலேயே கூட.

  மீண்டும் வருகை+கருத்து க்கு நன்றி.
  vgk

  ReplyDelete
 36. Shakthiprabha said...
  //ஹை! நான் நினைத்த மாதிரி தான் கதை சென்று கொண்டிருப்பது போல் இருந்தது....ஆனால் கடைசியில்
  சஸ்பென்ஸ்....ஹ்ம்ம்...என் யூகம் சரியா தவறான்னு பார்க்கணும்.//

  நீங்க என்ன சாதாரண ஆளா?
  “நான் பள்ளிக்கூடம் போக மாட்டேன்” என்ற தலைப்பில் 2009 இல் நீங்கள் எழுதிய [தங்களின் கன்னி முயற்சியான] முதல் சிறுகதையை நேற்று தான் படித்துவிட்டு, பின்னூட்டம் இட்டேன்.

  போதாக்குறைக்கு நீங்க இந்த வார வலைச்சர ஆசிரியர் வேறு!
  கேட்கவா வேண்டும்! ;)))))

  //கதைக்கு ஈடு கொடுத்து நீங்கள் இடும் புகைப்படங்கள் இருக்கே! ஆஹா! "coffee" பெரிதும் தேவைப்படாத சிலர் தோசை மட்டும் எடுத்துக் கொள்கிறோம்.//

  ஆஹா, உங்கள் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கோங்கோ!

  கதை ருசி தெரிந்த உங்களுக்கு காஃபி ருசி தெரியாதது ஏனோ!

  எனக்கு தினமும் குறைந்தபக்ஷம் நான்கு முறையாவது காஃபி தேவைப்படுகிறது.

  நள்ளிரவு கூட காஃபி குடிப்பதுண்டு. உடம்பில் ஓடுவது காஃபியா ரத்தமா என சந்தேகமே வந்துவிடும் எனக்கு.

  //மரகதம் மாமி பேசும் போதே சிரித்த முகத்துடன் "நளினி" மனதில் வந்து போகிறார். எனக்கு சுமதியை விட மரகதம் மாமி ரொம்ப புடிச்சு போச்சு.//

  நீங்களும் நானும் இது போன்ற ரசனைகளில் ஒன்று தான் போலிருக்கு! ;)))))

  //மல்லி என்றாலே ஜாதி-மல்லி தான் அழகு.//

  ஆமாம். அழகுமட்டுமல்ல ‘கும்’ மென்ற அதன் வாசனையிலும் கூட.

  ‘கும்’ என்றாலே இனி உங்கள் ஞாபகம் தான் எனக்கு வரும்.

  சென்ற பகுதி பின்னூட்டத்தில் நீங்கள் என்னைப் பாராட்டி எழுதியுள்ளதைச் சொல்கிறேன்.

  //அழகான அன்பான குடும்பத்தின் துவக்கம் சிறப்பா இருக்கு.

  தொடர்கிறேன்//

  இந்த வாரம் தங்களுக்குள்ள கூடுதல் பொறுப்புக்களுக்கு இடையே, எனக்காக இந்தப்பகுதிக்கு வருகை தந்து சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள், ஷக்தி.

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 37. Shakthiprabha said...
  ****அம்மாவும் பிள்ளையும் ஆசையுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே, டிபன் சாப்பிட்ட எல்லோருடைய தட்டுக்களையும், காஃபி சாப்பிட்ட எல்லா டவரா டம்ளர்களையும், சேர்த்து அழகாக எடுத்துக்கொண்டுபோய், சமையல் அறையில் அவற்றைக் கையோடு கழுவி, அங்கிருந்த மேடையில் கவிழ்த்து வைத்து விட்டு,****


  //இதையெல்லாம் செய்யலைன்னா எங்க வீட்டுல அம்மா பாட்டி எல்லாம் கோவிச்சுப்பாங்க. அந்த தொல்லை தாங்காமயே நாங்க எல்லாம் செஞ்சுடுவோம். அப்படி ய்யலைன்னா "அவள பார் இவள பார், எப்படி அழகா காரியம் செய்யறாங்க" ன்னு வேற திட்டு விழும்.

  grrr எனக்கு இந்த வரி புடிக்கல :)))))) (சும்மா lighter tones :) )
  //

  உங்களைப்போன்ற சிலருக்கு, பெரியவர்கள் நம்மைப் பிறருடன் ஒப்பிட்டுபேசுவது பிடிக்காது என்பது இயற்கையே.

  இந்தக்கதையில் வரும் சுமதியின் கதா பாத்திரம், அவள் பெரிய குடும்பம் ஒன்றில், மூத்த பெண்குழந்தையாகப் பிறந்தவளாக இருப்பதால், குடும்பப்பெண்ணுக்கு உண்டான பொறுப்புகளும்,சுறுசுறுப்பும் அவளிடம் நிறையவே இயற்கையாக அமைந்துவிட்டது என்பதைக் காட்டவும், அதுவே மிகக்குறுகிய நேரத்தில், மரகதம் (நளினி) போன்றவர்கள், ஒரு பெண்ணின் குணநலன்களை எடைபோடும் காரணியாக இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டவும், கதையில் கொண்டுவந்துள்ளேன்.

  மற்றபடி என் வீட்டில், இன்றும் நான் சாப்பிட்ட தட்டையும், நான் குடித்த காஃபி டம்ளர்+டவராவையும், உடனடியாக நானே என் கையால் தான் தேய்த்து அலம்பி வைப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  குடும்பத்தாருக்கு (மேலிடத்திற்கு) ஏதோ நம்மால் ஆன ஒரு மிகச்சிறிய உதவிதானே! இதில் என்ன பெரிய கெளரவப்பிரச்சனை!! என்பது என் எண்ணம்.

  மீண்டும் வருகை தந்ததற்கு என் அன்பான நன்றிகள்.
  vgk

  ReplyDelete
 38. கோவை2தில்லி said...
  //நான் நேற்றே என் பின்னூட்டத்தில் சொன்னது போல் நல்ல பெண்ணை தேர்ந்தெடுப்பதற்கு தான் இந்த எய்ட்ஸோ....அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தது......
  இப்படி தொடரும் போட்டுட்டீங்களே சார்....
  த.ம - 9
  இண்ட்லி - 3//

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

  வோட் அளித்ததற்கும் நன்றி.

  நீங்கள் ஏதேதோ சொல்ல வருகிறீர்கள். இருந்தாலும் உங்களை நீங்களே கட்டுப் படுத்திக் கொள்கிறீர்கள். அதற்கு என் நன்றிகள்.

  எனக்கு எல்லாமே சுலபமாகவும் புரிந்து கொள்ள முடிகிறது.

  தங்கள் கணவரும் நானும் சென்ற வாரம் நேரில் சந்தித்துக்கொண்டதன் விளைவு இது என்பதும் புரிகிறது.

  மிக்க மகிழ்ச்சி.vgk

  ReplyDelete
 39. கதை பிரமாதமாக நகர்கிறது. சந்தோஷம்,வருத்தம்,அதிர்ச்சி என்று சொல்லி சஸ்பன்ஸ்ல விட்டுட்டீங்களே?
  அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.
  படத்துல தொசையும் காபியும் !!!ஆஹான்னு இருக்கு.

  ReplyDelete
 40. RAMVI said...
  //கதை பிரமாதமாக நகர்கிறது. சந்தோஷம்,வருத்தம்,அதிர்ச்சி என்று சொல்லி சஸ்பன்ஸ்ல விட்டுட்டீங்களே?//

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

  //அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.//

  நாளை நள்ளிரவுக்குள் வெளியாகிவிடும்.

  //படத்துல தோசையும் காபியும் !!!ஆஹான்னு இருக்கு.//

  அப்படியா! எடுத்து டேஸ்ட் பார்த்துச் சொல்லுங்களேன்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 41. இரண்டாவது, மூன்றாவது பாகங்களை இப்போதுதான் படித்தேன். இரண்டாவது பாகத்தில் சுமதி தன் தரப்பு நியாயத்தை வருங்கால மாமியார் மனம் கோணாதவாறும் அதே சமயம் அவர் இவளை சரிவரப் புரிந்துகொள்ளுமாறும் அழகாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைத்தது சிறப்பு.


  மூன்றாவது பகுதியில் சுமதியின் நளினம், நடத்தை, நாசுக்கு போன்றவற்றை எடுத்துக்காட்டி அவளை விஞ்சிய நல்ல மருமகள் எவரும் கிடைக்கமாட்டாளென்று மரகத்தின் மனத்தில் மகிழ்ச்சி நிலைகொள்ளச் செய்துவிட்டீர்கள்.

  விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் தொடர்வதற்குப் பாராட்டுகள் வை.கோ. சார்.

  ReplyDelete
 42. கீதா said...
  //இரண்டாவது, மூன்றாவது பாகங்களை இப்போதுதான் படித்தேன்.//

  சந்தோஷம், மேடம். சென்ற பகுதிக்கு தாங்கள் வரக்காணோமே என்று நினைத்துக் கொண்டேன்.

  //இரண்டாவது பாகத்தில் சுமதி தன் தரப்பு நியாயத்தை வருங்கால மாமியார் மனம் கோணாதவாறும் அதே சமயம் அவர் இவளை சரிவரப் புரிந்துகொள்ளுமாறும் அழகாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைத்தது சிறப்பு.//

  தங்களின் சிறப்பான கருத்துக்களுக்கு மிகவும் நன்றி, மேடம்.

  //மூன்றாவது பகுதியில் சுமதியின் நளினம், நடத்தை, நாசுக்கு போன்றவற்றை எடுத்துக்காட்டி அவளை விஞ்சிய நல்ல மருமகள் எவரும் கிடைக்கமாட்டாளென்று மரகத்தின் மனத்தில் மகிழ்ச்சி நிலைகொள்ளச் செய்துவிட்டீர்கள்.//

  தங்களின் ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் நன்கு புரிகிறது. நன்கு திறனாய்வு செய்து நச்சென்று பாய்ண்ட் பாய்ண்ட் ஆக எழுதுகிறீர்கள்.

  //விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் தொடர்வதற்குப் பாராட்டுகள் வை.கோ. சார்.//

  மிக்க நன்றி, மேடம். தொடர்ந்து அடுத்த பகுதிகளுக்கும் வந்து கருத்துக் கூறுங்கள். 22nd & 24th Release.

  அன்புடன் vgk

  ReplyDelete
 43. எதிர்ப்பார்ப்பை உண்டாக்கும் சிறந்த தொடர் இடுக்கைக்கு பாரட்டுகள் தொடர்க.....

  ReplyDelete
 44. ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 45. @ மாலதி

  @ ரத்னவேல் ஐயா

  தங்கள் இருவரின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். vgk

  ReplyDelete
 46. தேவதை ....பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் :))

  ReplyDelete
 47. மாதேவி said...
  தேவதை ....பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் :))//


  தங்களின் அன்பான வருகைக்கும்
  கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. vgk

  ReplyDelete
 48. சஸ்பென்ஸ் பெருசா இருக்கு. :) இதோ அடுத்த பகுதியையும் படிக்கிறேன்.

  ReplyDelete
 49. இமா said...
  //சஸ்பென்ஸ் பெருசா இருக்கு. :) இதோ அடுத்த பகுதியையும் படிக்கிறேன்.//

  எல்லாப்பகுதியும் வெளியிட்டபின் படிக்கும் இமாவுக்கு, சஸ்பென்ஸ் அதிக நேரம் நீடிக்க வாய்ப்பே இல்லை.

  சஸ்பென்ஸ் நீடித்து மண்டை காயாமல் மளமளவென்று அடுத்தடுத்த பகுதிகளையும் படிக்க, மிகவும் கொடுத்து வைத்தவர் எங்கள் இமா.;)

  ReplyDelete
 50. கதையில் ஏற்கனவே ஒரு சஸ்பென்ஸ். மறுபடியும் ஒரு சஸ்பென்ஸ். கதை தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

   மிக்க நன்றி, ஐயா.

   [ஒருவித சஸ்பென்ஸ் கொடுத்து ‘தொடரும்’ போட்டு நிறுத்தினால் தான் அவை வாசகர்களை கவர்வதாக உள்ளது]

   அன்புடன்
   vgk

   Delete
 51. சுமதியின் அமைதியான பாங்கும் அடக்கமும் சிந்தாமல் சாப்பிடும் அழகும், போதாத குறைக்கு தோசை சட்னி குருமா காஃபி என்று படங்களும் இட்டு அசத்திட்டீங்க அண்ணா..

  மரகதத்திற்கு சுமதியின் குணம் பிடித்திருந்தாலும் சுமதி வீட்டில் கோலாகலமாக தான் நினைத்தபடி தட்சணையும் வாங்கமுடியாது ஏழ்மை இருக்கும் வீட்டில் எப்படி தன் பிள்ளைக்கு பெண் எடுப்பது என்ற மரகதத்தின் எண்ண ஓட்டங்களை வாசிக்கும் வாசகர்கள் உணரும்படி எழுதியது சிறப்பு அண்ணா..

  சுமதி தேவதையாக சுந்தரின் வாழ்க்கையில் இடறியது அவனுடைய பாக்கியம் என்று நினைத்திருக்க... டாக்டர் என்னடான்னா வழியில் பார்த்து சுமதியை லக்கி கர்ள்னு சொல்லிட்டு செல்கிறாரே...

  சஸ்பென்ஸ் தொடர்கிறதே......

  தொடரட்டும் தொடரட்டும்....

  ReplyDelete
  Replies
  1. மஞ்சுபாஷிணி November 24, 2012 3:03 AM
   //சுமதியின் அமைதியான பாங்கும் அடக்கமும் சிந்தாமல் சாப்பிடும் அழகும், போதாத குறைக்கு தோசை சட்னி குருமா காஃபி என்று படங்களும் இட்டு அசத்திட்டீங்க அண்ணா..//

   வாங்கோ மஞ்சூஊஊஊஊ, வணக்கம்.

   கதையில் வரும் சுமதியின் அமைதியும் அடக்கமும் அழகும் ஒருபுறம் இருக்கட்டும். தோசை சட்னி காஃபி சாப்பிட நீங்களும் இங்கே வந்து இதைப்படித்து விட்டு கருத்துச் சொன்னது தான் அண்ணாவுக்கு மிகவும் அசத்தலாக இருக்குது.

   >>>>>>>>>

   Delete
  2. VGK To மஞ்சு [2]

   //மரகதத்திற்கு சுமதியின் குணம் பிடித்திருந்தாலும் சுமதி வீட்டில் கோலாகலமாக தான் நினைத்தபடி தட்சணையும் வாங்கமுடியாது ஏழ்மை இருக்கும் வீட்டில் எப்படி தன் பிள்ளைக்கு பெண் எடுப்பது என்ற மரகதத்தின் எண்ண ஓட்டங்களை வாசிக்கும் வாசகர்கள் உணரும்படி எழுதியது சிறப்பு அண்ணா..//

   வாசகர்கள் சார்பில் உணர்ந்து தாங்கள் எழுதியுள்ள கருத்துக்களும் மிகச் சிறப்பாக்வே உள்ளது மஞ்சு. மிக்க மகிழ்ச்சிம்மா.

   >>>>>>>>>

   Delete
  3. VGK To மஞ்சு [3]

   //சுமதி தேவதையாக சுந்தரின் வாழ்க்கையில் இடறியது அவனுடைய பாக்கியம் என்று நினைத்திருக்க... டாக்டர் என்னடான்னா வழியில் பார்த்து சுமதியை லக்கி கர்ள்னு சொல்லிட்டு செல்கிறாரே...

   சஸ்பென்ஸ் தொடர்கிறதே........//

   அதே... அதே... சபாபதே !

   // தொடரட்டும் தொடரட்டும்..... //

   ”ஆகட்டும் தாயே அது போலே .......
   நாம நினைச்சது நடக்கும் மனம்போலே !”

   பாடல் வரிகள் தான் ஞாபகம் வருதூஊஊஊஊ.;)))))

   அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த சந்தோஷங்கள் மஞ்சு.

   அன்புடன்
   கோபு அண்ணா   Delete
 52. பேசாம நீங்க ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம்.

  ஒரு சிறுகதைக்கு ஒரு பெண் படம் (மாமியார் தானே)

  அப்புறம் தோசை, மசால், சட்னி, காபி - பொண் பார்க்க வந்தா மாதிரி.

  முடிவு என்ன தெரியுமா அந்தப் பையனுக்கு எய்ட்சும் இல்ல கிய்ட்சும் இல்ல. சும்மா டெஸ்ட் பண்ண சொல்லி இருக்கான் (முந்திரிக்கொட்டை - என்னைச் சொன்னேன்).

  சரி அடுத்த பகுதியை படிக்கப் போறேன்.

  ReplyDelete
 53. JAYANTHI RAMANI January 4, 2013 1:55 AM

  வாங்கோ மேடம். வணக்கம்.

  //பேசாம நீங்க ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம்.//

  ஆரம்பிக்கலாம் தான். பிறகு நீங்கள் சொல்லியதுபோல நான் பேசாமல் போய்விடக்கூடுமே. ;)

  தாங்கள் பணி ஓய்வு பெற்றபின் பத்திரிகை ஆரம்பிக்கலாம். அதன் ஆசிரியரும் ஆகலாம். அதற்கான அனைத்துத் தகுதிகளும், திறமைகளும் உங்களிடம் உள்ளன.

  நான் அதே பத்திரிகை அலுவலகத்தில் உங்களுக்கு ஓர் உதவியாளராகவும் வந்து சேரலாம்..

  நீங்கள் என்னை ஒருநாள் ’டிஸ்மிஸ்’ கூடச் செய்யலாம்.

  “டிஸ்மிஸ்” என்ற என்னுடைய குட்டியூண்டு கதையினைப் படித்துப்பாருங்கோ, ப்ளீஸ்.

  இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_3914.html

  அதனுடன் போனஸாக [ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போல] மற்றொரு குட்டியூண்டு கதை ”தாலி”.

  சுந்தர் சுமதிக்கு ஒருவேளை தாலி கட்டினாலும் கட்டலாம் தானே [உங்கள் யூகப்படி]

  அதனால் இணைப்பு இதோ: “தாலி” மிகவும் குட்டியூண்டு கதை.

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4903.html

  ஒருவேளை அப்படி இல்லாமல் சுமதி, சுந்தருக்கு எட்டாமல் [கிடைக்காமல்] போகவும் கூடும் அல்லவா. கதையின் முடிவு எப்படியும் இருக்கக்கூடுமே!

  அதனால் இதோ இன்னொரு குட்டியூண்டு சுவையான கதை

  “எட்டாக்க[ன்]னிகள்” .

  அதன் இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html

  >>>>>>>

  [அப்பாடா, நிம்மதி. நாளைக்கு 3 கதைகளுக்காவது பின்னூட்டம் கிடைத்து விடும் எனக்கு. ;)))))

  ஜாங்கிரிக்குத்தான் ஜாங்கிரி தராமல் ஏமாற்றி விட்டீர்கள். ;(

  மலரும் நினைவுகள் ஆறுக்கும் அப்படியே ;( ]

  >>>>>>>>

  ReplyDelete
  Replies
  1. கோபு >>>>> திருமதி ஜயந்தி [2]

   //ஒரு சிறுகதைக்கு ஒரு பெண் படம் (மாமியார் தானே)
   அப்புறம் தோசை, மசால், சட்னி, காபி - பொண் பார்க்க
   வந்தா மாதிரி.//

   பொண் பார்க்கப்போனால் கேஸரி, பஜ்ஜி, காஃபி கிடைக்கும் அதுவும் அந்தக் காலத்தில்.

   [எனக்கு அதுவும் கிடைக்கவில்லை, அது ஒரு தனிக்கதை; அப்புறமா உங்களுக்கு மட்டும் தனியாகச் சொல்கிறேன்]

   இங்கு பெண் மாப்பிள்ளை வீட்டுக்குச்சென்றிருக்கிறார்,
   ”தேடி வந்த தேவதை”யாக. அதனால் அவளுக்கு தோசை, மஸால், சட்னி, காஃபி என நல்ல ராஜ உபசாரம்.

   >>>>>>>>>>

   Delete
  2. கோபு >>>> திருமதி ஜயந்தி [3]

   //முடிவு என்ன தெரியுமா அந்தப் பையனுக்கு எய்ட்சும் இல்ல கிய்ட்சும் இல்ல. சும்மா டெஸ்ட் பண்ண சொல்லி இருக்கான்//

   ”முழுக்கதையையும் படித்து விட்டு இந்தப் பகுதிக்கு இப்போ பின்னூட்டமா?” என நான் கேட்க மாட்டேன்.

   *****ஏன் தெரியுமா?*****

   //(முந்திரிக்கொட்டை - என்னைச் சொன்னேன்).//

   *****நீங்க முந்திரிக்கொட்டையே தான்.*****

   என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

   ஆனாலும் எனக்கு நன்றாகத் தேறிய முந்திரிப்பருப்புகளை லேஸாக நெய்யில் வறுத்து, காரம் போட்டுக் கொடுத்தால் கிலோ கணக்காக கணக்கில்லாமல் தின்னப்பிடிக்கும்.

   அதனால் முந்திரிக்கொட்டையாகிய தங்களையும் எனக்குப்பிடிக்கும். ;))

   //சரி அடுத்த பகுதியை படிக்கப் போறேன்.//

   ஆஹா, நம்புகிறேன் தாயே ! நம்புகிறேன்.

   பிரியமுள்ள
   கோபு

   Delete
 54. கூட்டிக்கழித்துப்பார்த்ததில், இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சுமதியே தன் மகன் சுந்தருக்குப் பொருத்தமானவளாக இருக்கக்கூடும் என்று தன் ஒரு மனது சமாதானம் கூறினாலும், அவளின் மறுமனது அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

  அவளின் பணக்கார மனது அத அவ்வளவு ஈசியாக ஏற்றுக்கொள்ளுமா?”

  அம்மாவை நல்லாவே புரிந்து கொண்டிருக்கும் மகந்தான்.

  தன் வீட்டுக்கு வந்து அந்தக் கவரைப் பிரித்து முதல் பத்தியைப் [Paragraph] படித்ததும், சிறு குழந்தையின் கையில் மிகப்பெரிய பலூன் ஒன்றைக் கொடுத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது, சுமதிக்கு.
  சுமதி அவ்வளவு சந்தோஷப்படும்படி அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தது?

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் January 18, 2013 at 6:51 AM

   **கூட்டிக்கழித்துப்பார்த்ததில், இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் சுமதியே தன் மகன் சுந்தருக்குப் பொருத்தமானவளாக இருக்கக்கூடும் என்று தன் ஒரு மனது சமாதானம் கூறினாலும், அவளின் மறுமனது அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.**

   //அவளின் பணக்கார மனது அதை அவ்வளவு ஈசியாக ஏற்றுக்கொள்ளுமா?//

   அதானே, ஏற்றுக்கொள்ளுமான்னு தெரியலையே, பூந்தளிர்.

   //அம்மாவை நல்லாவே புரிந்து கொண்டிருக்கும் மகன் தான்.//

   பின்னே, அவன் பெயர் சுந்தர் அல்லவோ! அவன் முழுப்பெயர் ஒருவேளை சிவகாமசுந்தராக இருக்குமோ? ;)

   **தன் வீட்டுக்கு வந்து அந்தக் கவரைப் பிரித்து முதல் பத்தியைப் [Paragraph] படித்ததும், சிறு குழந்தையின் கையில் மிகப்பெரிய பலூன் ஒன்றைக் கொடுத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது, சுமதிக்கு.**

   //சுமதி அவ்வளவு சந்தோஷப்படும்படி அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தது?//

   அது ஏதோ ‘லவ் லெட்டர்’ ன்னு சொல்லுவாங்களே, அதுவாக இருக்குமோ என்னவோ.

   அதனால் அதைப்பற்றி எனக்கு ஒண்ணும் தெரியாதூஊஊஊ. நான் ரொம்பவும் நல்ல பையானாக்கும்.

   பிரியமுள்ள
   கோபு

   Delete
 55. சிவ பூஜையில் கரடி நுழைந்தாற்போல் என்று சொல்வார்கள். அது போல கதையை பெரிய சஸ்பென்ஸில் நிறுத்திவிட்டீர்களே?

  அது எப்படி அனைத்து பின்னூட்டங்களுக்கும் ஒரு பதிவு நீளத்திற்கு பதில் எழுதுகிறீர்கள்? என்னால் முடியாது.

  ReplyDelete
 56. நான் இரண்டு விதமாக முடிவு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் மனசு சுமதி என்ன முடிவு எடுப்பாள் என்று பக் பக் என்று இருக்கு,
  அப்புறம் அந்த டிபன் சூப்பர், தோசை காபி காபி தோசை தோசை காபி
  சூப்பர் செட்
  இருவர் ஒரு பக்கம் ஒருவர் மறுபுறம்
  சாப்பிட தூண்டுகிறது.

  ReplyDelete
 57. அப்பூடி இன்னாதா இருந்திச்சி அந்த கடதாசில.

  ReplyDelete
 58. தன் மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்தத்தான் எந்த தாயுமே விரும்புவார்கள். மரகதமும் அந்த நியாயமான ஆசையைத்தானே பட்டாள். மகனுக்கு இப்படி ஒரு வியாதி இருப்பதை தெரிந்து கொண்ட பின்பு தானே சுமதி போன்ற நடத்தர வர்க்கத்துப் பெண்ணை சந்திக்க ஒப்புக்கொள்கிறாள. சுமதியிடமும் அவளால் எந்தக்குறையும் காணமுடியலியே. டாக்டர் ஏன் சுமதியிடம் வெரி லக்கி சொல்றார் சுந்தர் கடிதத்தில் என்ன எழுதி இருந்தான் ஒரே எதிர்பார்ப்பு எகிறுது.

  ReplyDelete
 59. மொத்தத்தில் அந்தக்கடிதம் தந்த அதிர்ச்சியால், அவள் மனம் மிகவும் வேதனை தான் அடைந்தது.// twist before climax மாதிரி இருக்கு...

  ReplyDelete
 60. கடிதம் கொடுத்து அதிர்ச்சி என்றவுடன் கதையில் திருப்பம் என்பது புரிந்து என்ன நடந்ததோ என அறிய ஆவல் மேலிடுகிறது! தொடர்கிறேன்

  ReplyDelete